ஸ்ரீ அஷ்ட லஷ்மி சதகம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள் –ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள்–/ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரங்கள் —

ஸ்ரீ வைஷ்ணவ நவராத்ரி உத்சவம்
முதல் எட்டு நாள்கள் –ஸ்ரீ அஷ்ட லஷ்மி ஆராதனம்
ஒன்பதாம் நாள் -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் ஆராதனம்
பத்தாம் நாள்- ஸ்ரீ சீதா ராம விஜயம்

————

முதல் நாள் -ஸ்ரீ தான்ய லஷ்மி த்யான ஸ்லோகம் –

தான்ய குச்ச ஸுபுஷ்டாங்கம்
இக்ஷு தண்டம் ச பிப்ரதீ
லக்ஷ்மீ: மஹாபாகா
பாது மன்மானஸே ஸதா

தான்ய லஷ்மி பச்சை பசேல் வஸ்திரம்
எட்டுத் திருக்கரங்கள்
தாமரை மலர் கதை நெற்பயிர் கரும்பு வாழை
செழுமை பசுமை அளிப்பவள்
தீங்கின்றி –மும்மாரி –ஓங்கு வளரும் —
நீர் வளம் நில வளம் பால் வளம் பெருகி நீங்காத செல்வம் நிறைந்து
ஒப்பிலி அப்பன் பூமா தேவியாக சேவை இவள் வஸூமதி

———-

இரண்டாம் நாள் – ஸ்ரீ தைர்ய லஷ்மீ த்யான ஸ்லோகம் –

ஸிம்ஹாஸனே ஸமாஸீனா
ஸர்வாயுத ஸமன்விதா
தைர்யலக்ஷ்‌‌‌மீ: உதாராங்கா
கரோது விஹ்‌‌‌ருதிம் ஹ்ருதி

கம்பீரமாக ஸிம்ஹாஸநத்தில் வீற்று
சிவந்த ஆடை அணிந்து
எட்டு நீண்ட திருக்கரங்கள் -அனைத்து வித திவ்யாயுதங்கள் தரித்து
அபயம் -வள்ளல் தன்மை-
ப்ரஹ்லாதன்- பெற்ற மனவலிமை அருளுபவள் -ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன்
ஆவாரார் துணை -பெரும் தேவி தாயார் தேவாதி ராஜ பெருமாள் -ராமானுஜருக்கு வழி காட்டி ரஷித்தார்களே

——–

மூன்றாம் நாள் -ஸ்ரீ கஜ லஷ்மி த்யான ஸ்லோகம் –

அபிஷிக்தாம் கஜேந்த்ராப்யாம்
அம்போஜ ரசிதாஸனாம்
அம்ஹோ மம ஹரந்தீம் தாம்
அந்த: குர்வே ஸதா ரமாம்

திருச்சேறை சாரநாயாகித் தாயார் சேவை சாதிக்கிறாள்
தாமரையில் வீற்று இருந்து
சிவந்த ஆடை அணிந்து
இரு புறமும் யானைகள் தங்கச் சொம்பில் பன்னீராலே அபிஷேகம் செய்ய
நான்கு திருக் கரங்கள் உடன் திகழ்ந்து
அத்தனை பாபங்களையும் போக்க வல்லவள்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் இவளே –

——

நான்காம் நாள் –ஸ்ரீ சந்தான லஷ்மி த்யான ஸ்லோகம்

ஸந்தான பூஷித ஸ்வாங்கா
கலச த்வய ஸம்யுதா
அதிசித்ராஸன ஆஸீனாம்
மம சித்தே விபாது ஸா–4-

மடியில் குழந்தையை அமர்த்திக்கொண்டு அனைத்துக் கொண்டு
அபயஹஸ்தம் ‘
பூர்ண கும்பங்கள் கத்தி கேடயம் -இப்படி ஆறு திருக்கரங்கள்
அழகான ஆசனம்
மஞ்சள் அல்லது சிகப்பு நிற வஸ்திரம் சாத்திக்கொண்டு
குழந்தை வரம் -தானே மகளாக வந்து
பொங்கும் பரிவு காட்டிய பெரியாழ்வாருக்கு ஆண்டாள்
சாஷாத் கமலா ஷாமா -தேசிகன் -அவதரித்தது போல்
நம் மனங்களை ஆண்டாள் அரங்கனை ஆண்டாள் தமிழை
ஆண்டாள்
கோபாலன் அல்லால் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன்

———

ஐந்தாம் நாள் -ஸ்ரீ விஜய லஷ்மி த்யான ஸ்லோகம்

ஸிம்ஹாஸன ஸமாஸீனா
ஸிந்தூர பரிமண்டிதா
விஜயாதிபதா லக்ஷ்மீ:
விஜயம் விதனோது ந–5-

சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி
சிந்தூர செம்பொடி சாத்தி அருளி
சிவந்த வஸ்திரம் சாத்தி அருளி
எட்டு திருக்கரங்கள்
அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம்
சங்கு சக்கரம் பாசம் வாள் கேடயம்
வெற்றி அருளி -முயற்சிக்கு திரு கிட்ட இவள் அருள்
ஸ்ரீ வஞ்சுள வல்லி தாயார்
ஸ்ரத்தா தேவி சுருதி கொண்டாடிய நம்பிக்கை நாச்சியார்
நம்பிக்கை அளிக்கும் -நம்பியையே கையில் கொண்டவள்
கோ செங்கண்ணான் தெய்வ வாள் கொடுத்து விஜயம் அருளியவள்

———-

ஆறாம் நாள் -ஸ்ரீ வித்யா லஷ்மீ த்யான ஸ்லோகம்

வித்யா லக்ஷ்மீர் விபாத்வக்ரே
வீத ப்ருஷ்டாஸன ஸ்திதா
வித்வத் குல சிரோ லால்யா
விபூஷித விபூஷணா–6-

நேராக தாமரையில் கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் எழுந்து அருளி
நான்கு திருக் கரங்கள் அபாய வரத ஹஸ்தம் தாமரைகள் இரண்டிலும்
ஸ்ரீ செங்கமல தாயார் இடம் சேவிக்கலாம்
ப்ரஹ்ம வித்யை -32-உபநிஷத் -ஸ்ரீ வித்யை ஸ்ரீ ராஜகோபாலன்
கும்பகோணம் கடைவீதியிலும் இந்த தாயார் சேவை
நடாதூர் அம்மாளுக்கு அருளி ஸ்ருத பிரகாசம் அருளிச் செய்ய அனுக்ரஹம்

———

ஏழாம் நாள் -ஸ்ரீ தன லஷ்மீ த்யான ஸ்லோகம்

கிரந்தீ ஹஸ்த பத்மேன
கிங்கரேப்யோ தனம் பஹு
கிம் கிம் இஷ்டம் இதி ஸ்ம்ருத்வா
கில்பிஷம் ஹரது ஸ்வயம்–7-

திருக்கரம் இருந்து செல்வம் பொற்காசு -பொன் மழை -பொழியுமே
கனகதாரா ஸ்லோகம் ஆதி சங்கரர்
குவியும் படி அனுக்ரஹம் செய்து அருளுகிறாள்
குபேரன் இல்லம் வானம் தங்கம் அனைத்தும் பீறிட்டுக் கொண்டு பொழியும்
வேறே அபேக்ஷித்ங்களையும் குறை வில்லாமல் அருளுபவள்
தோஷங்களைப் போக்கி அருளுபவள்
சிவந்த ஆடை
சங்கு சக்கரம் வில் அம்பு அம்ருதக்குடம் ஏந்தி சேவை
பெரிய பிராட்டியார் -ஸ்ரீ ரெங்கம் –ஐஸ்வர்யம் அக்ஷர கதி கைவல்யம் -மோக்ஷம் முதலானவை
அருளியும் லஜ்ஜையால் -அஞ்சலிக்கு ஒத்த பலன் தரவில்லையே –

——-

எட்டாம் நாள் -ஸ்ரீ ஆதி லஷ்மி த்யான ஸ்லோகம்

அரவிந்த ஆஸன ஆஸீநாம்
அபேக்ஷித பல ப்ரதாம்
ஆனந்த குல சந்தாத்ரீம்
ஆதி லஷ்மீம் உபாஸ்மஹே–8–

ஸ்ரீ ஆதி லஷ்மீ -பிருகு மகரிஷி க்யாதி -திருமகள்
மஹா லஷ்மி ஜகன்மாதாவை பெற ஆசைப்பட்டார் பிருகு மகரிஷி
வருணர் இவர் ஆச்சார்யர்
ஸ்ரீ நீளா ஸூக்தம் கொண்டு ஸ்துதித்து பயத்தம் பருப்பு சமர்ப்பித்து திரு ஆராதனம் செய்து திருமகளாகப் பெற்றார்
பார்கவி -ஆதி அவதாரம்
கடல் அரசன் திருமகள் அடுத்து
தாமரை ஆசனம் -மென்மையானவள்
வேண்டிய வரங்களை அளித்து அபீஷ்ட பல ப்ரதை ஆகிறாள்
அபயஹஸ்தம் -வரத ஹஸ்தம் -தாமரை -கொடி -ஏந்தி–நான்கு திருக்கரங்கள்
ஆனந்த பரம்பரை அருளி -பேர் ஆனந்தம் -வாழை அடி வாழை -நீங்காத செல்வம் நிறைந்து பெருகிக் கொண்டே இருக்கும்
கருணையே வடிவு எடுத்தவள் -ஆயுதங்கள் ஆபரணமாகவும் இல்லை
அனுக்ரஹம் மட்டுமே அருள்பவள்
கருணை மழையிலே நனைந்து நீங்காத செல்வம் பெறுவோம்
ஸ்ரீ கோமள வல்லித் தாயார் இரண்டு திருக்கரங்களில் தாமரை மொட்டுக்களை ஏந்தி
நமக்கு சேவை சாதித்து அருளுகிறாள் –

————-

ஒன்பதாம் நாள் மஹா நவமி த்யான ஸ்லோகம் -பல ஸ்ருதி

அஷ்ட லக்ஷ்மீ ப்‌‌‌ரஸாதேன
நஷ்ட ஸர்வாபதோ வயம்
த்ருஷ்டாத்‌‌‌ருஷ்ட ஸூ ப ப்ராப்‌‌‌தி
புஷ்டாஸ் துஷ்டா ந ஸம்சய:–8-

ஸ்ரீ அஷ்ட லஷ்மீயின் அனுக்ரஹங்கள் கிட்டும்
அனைத்து ஆபத்துக்களும் நீங்கும்
ஐஹிக கண்ணுக்குத் தெரியும் சரீரத்துக்கு வேண்டிய நன்மைகளும் பெற்று
ஆன்மிக நன்மைகளும் -ஆத்மாவுக்கு -ஆமுஷ்மிக -பரம புருஷார்த்தமும் பெற்று
சந்தேகம் இல்லாமல் எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவோம்

—————————————————–

ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஆதி³லக்ஷ்மீ

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸஹொதரி ஹேமமயே
முனிகண வந்தித மோக்ஷப்ரதாயனி, மஞ்ஜுல பாஷிணி வேதனுதே |
பந்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாந்தியுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 1 ||

———

ஸ்ரீ தா⁴ன்யலக்ஷ்மீ

அயிகலி கல்மஷ நாஶினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி, மந்த்ரனிவாஸினி மந்த்ரனுதே |
மங்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 ||

———–

ஸ்ரீ தை⁴ர்யலக்ஷ்மீ

ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே |
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் || 3

————-

ஸ்ரீ க³ஜலக்ஷ்மீ

ஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மமந்டித லோகனுதே |
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||

—————

ஸ்ரீ ஸந்தானலக்ஷ்மீ

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸந்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5||

————–

ஸ்ரீ விஜயலக்ஷ்மீ

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||

————–

ஸ்ரீ வித்³யாலக்ஷ்மீ

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாந்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
நவநிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||

———–

ஸ்ரீ த⁴னலக்ஷ்மீ

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, ஶம்க நிநாத ஸுவாத்யனுதே |
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் || 8 ||

—————–

சுக்கிரன்
அசுவினியில் இருந்தால் வித்யா லஷ்மியாகவும்,
பரணியில் இருந்தால் அன்ன லஷ்மியாகவும்,
கிருத்திகையில் ஜோதி லஷ்மியாகவும்,
ரோஹிணியில் தனலஷ்மியாகவும்,
மிருக சீரிடத்தில் முத்து லஷ்மியாகவும்,
திரு வாதிரையில் வீர லஷ்மியாகவும்,
புனர் பூசத்தில் ராம லஷ்மியாகவும்,
பூசத்தில் குரு லஷ்மியாகவும்,
ஆயில்யத்தில் நாக லஷ்மியாகவும்,
மகத்தில் தான்ய லஷ்மியாகவும்,
பூரத்தில் சந்தான லஷ்மியாகவும்,
உத்திரத்தில் சீதா லஷ்மியாகவும்,
ஹஸ்தத்தில் கான லஷ்மியாகவும்,
சித்திரையில் சுப லஷ்மியாகவும்,
சுவாதியில் தீப லஷ்மியாகவும்,
விசாகத்தில் சுப்பு லஷ்மியாகவும்,
அனுஷத்தில் ஆனந்த லஷ்மியாகவும்,
கேட்டையில் யோக லஷ்மியாகவும்,
மூலத்தில் வசந்த லஷ்மியாகவும்,
உத்திராடத்தில் ராஜ லஷ்மியாகவும்,
திரு வோணத்தில் மகா லஷ்மியாகவும்,
அவிட்டத்தில் அஷ்ட லஷ்மியாகவும்,
சதயத்தில் விஜய லஷ்மியாகவும்,
பூரட்டாதியில் பாக்கிய லஷ்மியாகவும்,
உத்திரட்டாதியில் வேங்கட லஷ்மியாகவும்,
ரேவதியில் கஜ லஷ்மியாகவும்

———

1.மஹாலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள
ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ
அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில்
உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயை யுருவில்
உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும்
துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.
நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6.தனலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில்
உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீரலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும்
தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும்
பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

———-

ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்ரம்.

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வாம் ஸூஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீஹ் சலா பூதிர் ஹரிப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சைஹ் பத்ம தாரிணீ ||

———-

ஓம் அன்புலட்சுமி போற்றி
ஓம் அன்னலட்சுமி போற்றி
ஓம் அமிர்தலட்சுமி போற்றி
ஓம் அம்சலட்சுமி போற்றி
ஓம் அருள்லட்சுமி போற்றி
ஓம் அஷ்டலட்சுமி போற்றி 6

ஓம் அழகுலட்சுமி போற்றி
ஓம் ஆனந்தலட்சுமி போற்றி
ஓம் ஆகமலட்சுமி போற்றி
ஓம் ஆதிலட்சுமி போற்றி
ஓம் ஆத்மலட்சுமி போற்றி
ஓம் ஆளும்லட்சுமி போற்றி 12

ஓம் இஷ்டலட்சுமி போற்றி
ஓம் இதயலட்சுமி போற்றி
ஓம் இன்பலட்சுமி போற்றி
ஓம் ஈகைலட்சுமி போற்றி
ஓம் உலகலட்சுமி போற்றி
ஓம் உத்தமலட்சுமி போற்றி 18

ஓம் எளியலட்சுமி போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஒளிலட்சுமி போற்றி
ஓம் ஓங்காராலட்சுமி போற்றி
ஓம் கருணைலட்சுமி போற்றி
ஓம் கனகலட்சுமி போற்றி 24

ஓம் கஜலட்சுமி போற்றி
ஓம் கானலட்சுமி போற்றி
ஓம் கிரகலட்சுமி போற்றி
ஓம் குணலட்சுமி போற்றி
ஓம் குங்குமலட்சுமி போற்றி
ஓம் குடும்பலட்சுமி போற்றி 30

ஓம் குளிர்லட்சுமி போற்றி
ஓம் கம்பீரலட்சுமி போற்றி
ஓம் கேசவலட்சுமி போற்றி
ஓம் கோவில் லட்சுமி போற்றி
ஓம் கோவிந்தலட்சுமி போற்றி
ஓம் கோமாதாலட்சுமி போற்றி 36

ஓம் சர்வலட்சுமி போற்றி
ஓம் சக்திலட்சுமி போற்றி
ஓம் சக்ரலட்சுமி போற்றி
ஓம் சத்தியலட்சுமி போற்றி
ஓம் சங்குலட்சுமி போற்றி
ஓம் சந்தானலட்சுமி போற்றி 42

ஓம் சந்நிதிலட்சுமி போற்றி
ஓம் சாந்தலட்சுமி போற்றி
ஓம் சிங்காரலட்சுமி போற்றி
ஓம் சீவலட்சுமி போற்றி
ஓம் சீதாலட்சுமி போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி 48

ஓம் சுந்தரலட்சுமி போற்றி
ஓம் சூர்யலட்சுமி போற்றி
ஓம் செல்வலட்சுமி போற்றி
ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி
ஓம் சொர்ணலட்சுமி போற்றி
ஓம் சொருபலட்சுமி போற்றி 54

ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி
ஓம் ஞானலட்சுமி போற்றி
ஓம் தங்கலட்சுமி போற்றி
ஓம் தனலட்சுமி போற்றி
ஓம் தான்யலட்சுமி போற்றி
ஓம் திரிபுரலட்சுமி போற்றி 60

ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி
ஓம் திலகலட்சுமி போற்றி
ஓம் தீபலட்சுமி போற்றி
ஓம் துளசிலட்சுமி போற்றி
ஓம் துர்காலட்சுமி போற்றி
ஓம் தூயலட்சுமி போற்றி 66

ஓம் தெய்வலட்சுமி போற்றி
ஓம் தேவலட்சுமி போற்றி
ஓம் தைரியலட்சுமி போற்றி
ஓம் பங்கயலட்சுமி போற்றி
ஓம் பாக்யலட்சுமி போற்றி
ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி 72

ஓம் புண்ணியலட்சுமி போற்றி
ஓம் பொருள்லட்சுமி போற்றி
ஓம் பொன்னிறலட்சுமி போற்றி
ஓம் போகலட்சுமி போற்றி
ஓம் மங்களலட்சுமி போற்றி
ஓம் மகாலட்சுமி போற்றி 78

ஓம் மாதவலட்சுமி போற்றி
ஓம் மாதாலட்சுமி போற்றி
ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி
ஓம் மாசிலாலட்சுமி போற்றி
ஓம் முக்திலட்சுமி போற்றி
ஓம் முத்துலட்சுமி போற்றி 84

ஓம் மோகனலட்சுமி போற்றி
ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி
ஓம் வரலட்சுமி போற்றி
ஓம் வாழும்லட்சுமி போற்றி
ஓம் விளக்குலட்சுமி போற்றி
ஓம் விஜயலட்சுமி போற்றி 90

ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி
ஓம் வீட்டுலட்சுமி போற்றி
ஓம் வீரலட்சுமி போற்றி
ஓம் வெற்றிலட்சுமி போற்றி
ஓம் வேங்கடலட்சுமி போற்றி
ஓம் வைரலட்சுமி போற்றி 96

ஓம் வைகுண்டலட்சுமி போற்றி
ஓம் நாராயணலட்சுமி போற்றி
ஓம் நாகலட்சுமி போற்றி
ஓம் நித்தியலட்சுமி போற்றி
ஓம் நீங்காதலட்சுமி போற்றி
ஓம் ராமலட்சுமி போற்றி 102

ஓம் ராஜலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி
ஓம் ஜெயலட்சுமி போற்றி
ஓம் ஜீவலட்சுமி போற்றி
ஓம் ஜோதிலட்சுமி போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி … 108

போற்றி … போற்றி
போற்றி … போற்றி
போற்றி…. போற்றி .

———-

அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா

ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

———–

கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதி |
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் ||

கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். கைகளின் மத்ய பாகத்தில் ஸரஸ்வதி வஸிக்கிறாள்
மற்றும் கைகளின் அடி பாகத்தில் கோவிந்தன் உள்ளான்.
அதனால் விடியற்காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தரிசனம் செய்ய வேண்டும்.

லக்ஷ்மியின் மஹத்துவம்
கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். அதனால் வெளிப்புற உலகரீதியான பகுதி லக்ஷ்மி ரூபமாக உள்ளது.
அதாவது உலகியலுக்கு (செல்வம் அல்ல, மாறாக பஞ்சமஹாபூதம், அன்னம், வஸ்திரம் போன்றவை) லக்ஷ்மி மிகவும் அவசியம்.
ஸரஸ்வதியின் மஹத்துவம்
செல்வம் மற்றும் லக்ஷ்மியை அடையும்போது ஞானமும் விவேகமும் இல்லாவிட்டால் அந்த லக்ஷ்மியே
அலக்ஷ்மியாக மாறி நம் அழிவிற்கு காரணமாவாள். அதனால் ஸரஸ்வதி மிகவும் அவசியம்.
ஸர்வம் கோவிந்த மயம்
மத்ய பாகத்தில் ஸரஸ்வதியாகவும் நுனி பாகத்தில் லக்ஷ்மியாகவும் வீற்றிருப்பவன் கோவிந்தனே.
அடி, மத்ய மற்றும் நுனி மூன்றும் வெவ்வேறாகத் தெரிந்தாலும் கோவிந்தனே விசேஷ ரூபத்தில் அங்கு செயல்படுகிறார்.
பெரும்பாலும் எல்லா காரியங்களுமே விரல்களின் நுனி பாகத்தால் செய்யப்படுகிறது. அதனால் அங்கு லக்ஷ்மி வாஸம் செய்கிறாள்.
ஆனால் அனுபவத்தின் மூலம் பெருகும் ஞான ப்ரவாஹம் அந்த விரல்களுக்கு செல்லாவிட்டால் கைகளால் எந்தக் காரியமும் செய்ய முடியாது.

உள்ளர்த்தம்
செல்வச் செழிப்பும், மனதை சுண்டியிழுத்து மோஹத்தில் ஆட்படுத்தும் வெளிப்பட்ட மாயா ஸ்வரூபமான லக்ஷ்மியும்
மூல வெளிப்படாத ஸ்வரூபமான கோவிந்தனும் வெவ்வேறானவர் அல்ல; மாறாக இருவரும் ஒன்றே.
இந்த ஞானத்தை வழங்குபவளே கல்யாணமயி, ஞானதாயினியான ஸரஸ்வதி.

லக்ஷ்மி கர்மாவையும், ஸரஸ்வதி ஞானத்தையும் கோவிந்தன் பக்தியையும் குறிக்கின்றனர்.
இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலமே ஈச்வரனோடு ஒன்ற முடியும்.

ஞானத்தோடு கூடிய பக்திபூர்வமான கர்மாக்களை செய்வதன் மூலமே ப்ரவ்ருத்தி மார்க்கத்தையும் நிவ்ருத்தி மார்க்கத்தையும்
ஸமநிலையில் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் சாதுர்வர்ணாஸ்ரம தர்மப்படி வாழ்க்கையை
மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கொண்டு செலுத்தி இறுதியில் ஈச்வரனை அடைய முடியும்.

இத்தகைய ஜீவன் நிஷ்காம கர்மயோகியாகிறான். (கர்மயோகம் பயிலும் தன்னலமற்ற ஜீவன்)

குருக்ருபாயோகப்படியான ஸாதனை என்ற ஸாதனா மார்க்கத்தில் இவ்விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் இந்த வழிப்படி ஸாதனை செய்பவருக்கு, மற்ற வழிகளில் செய்பவரைக் காட்டிலும் விரைவாக ஞானம் கிடைக்கிறது.
அத்தகைய ஜீவனுக்கு விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.

ஸுஷும்னா நாடி செயல்பட ஆரம்பிக்கிறது
கைகளை ஒன்றாக குவிக்கும் இந்த ப்ரம்ம முத்திரையால் உடலின் ஸுஷும்னா நாடி செயல்பட்டு,
இரவு முழுவதும் தங்கியதால் உடலில் ஏற்பட்ட தமோ குணத் தன்மையை நீக்குகிறது :
கைகளைக் குவித்து அதில் மனதைப் பதிய வைத்து ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி… ‘ என்ற ஸ்லோகத்தை உச்சரிப்பதால்
ப்ரம்மாண்டத்திலுள்ள தெய்வீக அதிர்வலைகள் கைகளை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன.
இந்த அதிர்வலைகள் கைகளில் திரள்கின்றன. குவிந்த கைகளிலுள்ள வெற்றிடத்தில்
ஆகாய தத்துவத்தை, வ்யாபகத்தன்மையை க்ரஹித்து அங்கேயே நிறையும்படி செய்கின்றன.
கைகளைக் குவிப்பதால் ஏற்படும் ப்ரம்ம முத்திரையின் மூலம் ஸுஷும்னா நாடி செயல்பட ஆரம்பிக்கிறது.
இந்த நாடி ஜீவனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
இரவு முழுவதும் தூங்கியதால் உடலில் தமோகுணம் சேர்ந்திருந்தால், செயல்பாட்டிலிருக்கும் ஸுஷும்னா நாடி அதை நீக்குவதில் உதவுகிறது.

மற்ற பயன்கள
ஜீவன் உள்முகமாதல், பகவானோடு உரையாடுதல் மற்றும் ஜீவனின் கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் தூர விலகுதல்
இரவு முழுவதும் உறங்குவதால் ஜீவனின் உடலில் அடர்த்தியான தமோகுண அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன.
அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி…’ ஸ்லோகத்தைச் சொல்வதால் ஜீவன் உள்முகமாகிறது.
அதனால் அவரின் உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் தூர விலகி, பகவானோடு உரையாடுவது ஆரம்பமாகிறது.
அன்று முழுவதும் அதே நிலையில் ஜீவனால் இருக்க முடிகிறது.

அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி…’ ஸ்லோகத்தை சொல்வது என்பது நமக்குள் பகவானை தரிசிப்பதாகும்
ஹிந்து தர்மத்தில் ‘அயம் ஆத்மா ப்ரம்ம:’ என்பதன் மூலம் ஆத்மாவே ப்ரம்மம் என்பது கற்றுத் தரப்படுகிறது.
‘கராக்ரே வஸதே லக்ஷ்மி..’ என்ற ஸ்லோகம் இதற்கு உதாரணமாக விளங்குகிறது.
அதனால் அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து ஸ்லோகம் சொல்வதன் மூலம் நமக்குள்ளேயே ஈச்வர தரிசனத்தைப் பெற முடிகிறது.
ஹிந்து தர்மம் வெளித் தூய்மையைக் காட்டிலும் ஆழ்மனத் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

நம்மையறியாமல் நாம் அயோக்ய கர்மாக்களை செய்ய முற்படும்போது நம் ஆழ்மனம் அதை உணர்வித்து செய்யாமல் தடுக்கிறது
மனிதனின் கைகள் மூலமாக அநேக காரியங்கள் தினமும் நடக்கின்றன.
இந்த யோக்ய அல்லது அயோக்ய கர்மாக்கள் ஜீவனின் பாவ-புண்ணியங்களை நிர்ணயிக்கின்றன.
ஜீவன் அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி..’ ஸ்லோகத்தை சொல்வதால்
தன்னையறியாமல் அயோக்ய கர்மாக்களைத் தான் செய்யும்போது ஆழ்மனம் அதை உணர்வித்து செய்யாமல் தடுக்கிறது.

ஜீவனுள் இருக்கும் ஆன்மீக உணர்விற்கேற்ப கரங்களின் நுனிபாகத்தில் லக்ஷ்மி தத்துவமும்
மத்ய பாகத்தில் ஸரஸ்வதி தத்துவமும் அடி பாகத்தில் கோவிந்த தத்துவமும் ஆகர்ஷிக்கப்படுகிறது.

இந்த ஸ்லோகம் ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால், தேவமொழியான ஸம்ஸ்க்ருதத்தின் சைதன்யமும்
அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது.

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: