ஸ்ரீகோமளவல்லீ ஸுப்ரபாதம்–ஸ்ரீ ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமிகள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள்–

ஸ்ரீகோமளவல்லீ ஸுப்ரபாதம்

ஹேமாபகா தடவிபூஷண கும்பகோணே
ஹேமாபிதான முனிநாத தப: ப்ரபாவாத்
ஹேமாப்ஜினீ கனக பங்கஜ மத்யஜாதே
ஹே மாதர் ஆஸ்ரித ஹிதே தவ ஸுப்ரபாதம்–1-

ஹேமாபகா –பொன்னி -காவேரிக்கே
தட விபூஷண கும்பகோணே-அணிகலனாக உள்ள திவ்ய தேசம்
ஹேமாபிதான முனிநாத தப: ப்ரபாவாத்–ஹேம ரிஷியின் தபஸ்ஸூ பலனாக -இவரே பிருகு முனிவராக இருந்தார்
ஹேமாப்ஜினீ கனக பங்கஜ மத்யஜாதே–பொற்றாமரைக் குளத்தில் தங்கத் தாமரையில் திரு அவதாரம்
ஹே மாதர் ஆஸ்ரித ஹிதே தவ ஸுப்ரபாதம்–தாயே -சகல புவன மாதா -ஆஸ்ரிதர்களுக்கு ஸமஸ்த ஹிதங்களையும் அருளுகிறீர்
உனக்கு ஸூப்ரபாதம் –

———————

நாதோ நதௌக நயனாம்ருததாம் கதோயம்
ஆதௌ த்வதீய முக பத்ம விலோகனாய
பத்தாதர: பணிபதௌ நனு மீலிதாக்ஷ:
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–2-

நாதோ நதௌக நயனாம்ருததாம் கதோயம்-காண்பவர்களுக்கு தித்திக்கும் ஆராவமுது -அச்சோ ஒருவர் அழகிய வா
ஆதௌ த்வதீய முக பத்ம விலோகனாய—முதல் முதலில் உம் திரு முகம் பார்க்கவே ஆசை கொண்டு
பத்தாதர: பணிபதௌ நனு மீலிதாக்ஷ:—ஆதிசேஷன் மேல் உறங்குவான் போல் யோகு செய்து -மென் துயில் கொண்டு
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்—ஸ்ரீ சார்ங்க பாணியின் திவ்ய மஹிஷியே உனக்கு நல் விடிவு –

—————–

மாதா தவாம்ப சுப சீதல மந்தவாதை:
ஆச்லிஷ்ட சீகர கணாக்ருதிராதரேண
த்வாராந்திகம் கில கவேரஸுதா ப்ரபன்னா
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–3-

மாதா தவாம்ப சுப சீதல மந்தவாதை:-நதிகள் கடல் அரசன் மனைவி -திருப்பாற் கடல் தந்தை -நதிகள் தாய் ஸ்தானம்
இவளே அகில புவன தாய் தழ விட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்கிறாள் கருணையால் –
உனது கோயில் வாசல் வரை வந்து காத்து இருக்கிறாள் -இனிமையான காற்றினால்
ஆச்லிஷ்ட சீகர கணாக்ருதிராதரேண—ஆதரத்துடன் அணைத்துக் கொள்ளப்பட்ட நீர்த்துளிகள்
த்வாராந்திகம் கில கவேர ஸுதா ப்ரபன்னா–காவேரனின் மக்கள் -கோயில் வாசலுக்கு அருகில் வந்து தொண்டு செய்ய வந்து இருக்க
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்-அவளுக்காக நல் விடிவு –

—————-

ஸ்ரீகும்பகோண நகரீம் தவ மாதரேனாம்
த்வன்மாதுரேவ ஸரஸாம்ருத ஸம்வ்ருதாங்கீம்
ஸா ப்ரஹ்மபூரியம் இஹேதி பரம் விதந்தி
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–4-

ஸ்ரீகும்பகோண நகரீம் தவ மாதரேனாம்-உன்னுடைய திருத்தலத்தில் உன்னுடைய தாயான காவேரி
த்வன் மாதுரேவ ஸரஸாம்ருத ஸம்வ்ருதாங்கீம்-ரஸத்துடன் அம்ருதம் போல் நீரால் சூழ்ந்து –
அரசலாறு என்ற ஒரு பிரிவும் காவேரியும் சூழ்ந்த திவ்ய தேசம்
ஸா ப்ரஹ்மபூரியம் இஹேதி பரம் விதந்தி-ப்ரஹ்ம புரம் என்றும் திரு நாமம் உண்டே
வேதம் சொல்லும் அமுதத்தால் சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டம் -விராஜா நதி -இங்கு காவேரி சூழ
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–உனக்கு நல் விடிவு ஆகட்டும் —

—————-

ஸ்ரீகும்பகோண நகரீம் அம்ருதம் வஹந்தீம்
த்வத் வீக்ஷயா அதிமதுரம் விபுதா: பரீதா:
போக்தும் ஸமாஹித தியச் சுசயோ வஸந்தி
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–5-

ஸ்ரீகும்பகோண நகரீம் அம்ருதம் வஹந்தீம்–ஆராவமுத ஆழ்வான் தாங்கி உள்ள திவ்ய தேசம்
த்வத் வீக்ஷயா அதிமதுரம் விபுதா: பரீதா:-உமது அமுத மயமான கடாக்ஷத்தாலே மேலும் இனிமை -அமுதில் வரும் பெண்ணமுது அன்றோ –
போக்தும் ஸமாஹித தியச் சுசயோ வஸந்தி-தேவர்கள் சூழ்ந்து -33-தேவர்களும் கருவறையில் சேவை உண்டே -காண ஆசை கொண்டு
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–நல் விடுவாகட்டும் -திருப்பள்ளி எழுந்து அருளாய் –

———–

புஷ்பாணி நைக வித வர்ண மநோஹராணி
த்வத் பாத பங்கஜ ஸமாகம லோலுபானி
ஆதாய பக்தநிவஹா: ஸுமுபாகதாஸ்தே
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–6-

புஷ்பாணி நைக வித வர்ண மநோஹராணி-அடியார்களும் பூக்களும் -பலவித வர்ணங்கள் -மனத்தைக் கவறுபவையாக இருந்து
த்வத் பாத பங்கஜ ஸமாகம லோலுபானி-உமது திருவடித் தாமரை சேர காத்து இருக்க
ஆதாய பக்தநிவஹா: ஸுமுபாகதாஸ்தே-பக்தர்களுக்கு அனுக்ரஹம் பண்ணி அருள
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்-திருப்பள்ளி எழுந்து அருளாய் –

————–

ஸ்ரீகோமளாம்ப கனகாம்புஜ ஜாதமூர்த்தே
ஸ்ரீகும்பகோண நகரீ திலகாயமானே
ஸ்ரீஹேம யோகி வர புண்ய க்ருதாவதாரே
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–7-

ஸ்ரீகோமளாம்ப கனகாம்புஜ ஜாதமூர்த்தே–பொற்றாமரையில் தோன்றிய தாயே
ஸ்ரீகும்பகோண நகரீ திலகாயமானே-திலகம் போல் அணிகலனாக
ஸ்ரீஹேம யோகி வர புண்ய க்ருதாவதாரே–ஸ்ரீ ஹேம ரிஷியின் தபஸ்ஸாகிற புண்யம் அடியாக திரு அவதரித்து அருளியவளே
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–திருப்பள்ளி எழுந்து அருளாய் –

———–

மாதர் மதோரபி ரிபோர் மதுரே நிதாந்தம்
மான்யே மநோஹர முகாம்புஜ ஸேவனீயே
மாராரி மௌலித்ருத பாத ஸரோஜ யுக்மே
மானாதிலங்கி விபவே தவ ஸுப்ரபாதம்–8-

மாதர் மதோரபி ரிபோர் மதுரே நிதாந்தம்–ஆராவமுத -மது நிரஸனம் -தேனுக்கும் எதிரி -அதுக்கும் பொறாமை
அவனை விட நீர் இனியவளாக –
மான்யே மநோஹர முகாம்புஜ ஸேவனீயே-எல்லாராலும் கொண்டாடப்பட்டு -சேர்ந்து எழுந்து அருளி -திரு முக சோபை –
மாராரி மௌலித்ருத பாத ஸரோஜ யுக்மே-மன்மதனை -எரித்த ருத்ரனும் உன்னை ஆஸ்ரயித்து
மானாதிலங்கி விபவே தவ ஸுப்ரபாதம்–உமக்கு நல் விடிவு
மா மஹா லஷ்மி எழுத்து கொண்டே இந்த ஸ்லோகம் -கீழ் ஸ்ரீ கொண்டே ஸ்லோகம் –

————

ப்ராக் த்வாரதச்ச பகவான் அத பச்சிமாச்ச
த்வாராந்நிஜேன நயனேன திவாகரேண
ஆலோகதே தவ வபூ ரஜனீகரேண
ஸ்ரீசார்ங்கபாணி தயிதே தவ ஸுப்ரபாதம்–9-

சசி ஸூர்ய நேத்ரம் -தீய சக்திகளைப்போக்கி அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
கிழக்கு வாசலில் ஸூர்ய உதயம்
மேற்கு வாசலில் சந்த்ர உதயம்
இவன் திருக் கண்களை நிறுத்தி உன்னைக் காணவே
இவ்வாறு செய்கிறான் என்று கவி நயத்துடன் இந்த ஸ்லோகம் –

————-

ஸ்ரீஹர்ஷ க்ருத் ஸ்யாம் இதி நாத க்லுப்த
ஸ்ரீபுஷ்ப வர்ஷேண விராஜமானே
ஸாமர்ஷ ப்ருங்காகுல கேசபாசே
ஹேமர்ஷி கன்யே தவ ஸுப்ரபாதம்–10-

ஸ்ரீஹர்ஷ க்ருத் ஸ்யாம் இதி நாத க்லுப்த–அவளுக்கு மகிழ்ச்சிக்காக பூ மாரி பொழிந்து
ஸ்ரீபுஷ்ப வர்ஷேண விராஜமானே-இதனால் அழகாக
ஸாமர்ஷ ப்ருங்காகுல கேசபாசே-இதில் உள்ள தேனைப்பருக வண்டுகள் மொய்க்கும் கூந்தல் உடைய
ஹேமர்ஷி கன்யே தவ ஸுப்ரபாதம்-ஸ்ரீ ஹேம ரிஷிக்கு திருப் புத்திரியான உனக்கு திருப்பள்ளி எழுச்சி —

————-

ஸுதாம்புதி ஸமுத்திதே ஸுமஸமூஹ ஸம்மண்டிதே
ஸுதாகர ஸஹோதிதே ஸுமசரஸ்ய மாதா ரமே
ஸுதாபித ஸஹஸ்திதே ஸுதனுஸங்க ரத்னாயிதே
ஸுராஸுர நமஸ்க்ருதே ஸுகபதம் குருஷ்வானதம்–11-

ஸுதாம்புதி ஸமுத்திதே -திருப்பாற்கடலில் திரு அவதரித்தவள்
ஸுமஸமூஹ ஸம்மண்டிதே–கூட்டமாக பூக்களால் அலங்கரிக்கப்பற்று
ஸுதாகர ஸஹோதிதே -அமுதை பொழியும் சந்திரனின் சகோதரி
ஸுமசரஸ்ய மாதா ரமே-மன்மதனுக்குத் தாயாக
ஸுதாபித ஸஹஸ்திதே -ஆராவமுத ஆழ்வானுக்கு தர்ம பத்னி
ஸுதனுஸங்க ரத்னாயிதே-ரத்னமயமான ஆபரணங்களை அழகு கொடுப்பவள்
ஸுராஸுர நமஸ்க்ருதே -தேவர் அசுரர்கள் ஆஸ்ரயிக்கும் படி எளிமை
ஸுகபதம் குருஷ்வானதம்–மகிழ்ச்சிக்கு இருப்பிடமாக இருக்க பிரார்திக்கிறார் –

—————

கோமளம் கோமளாம்பாயாஸ் ஸுப்ரபாதம் ப்ரபான்விதம்
படந்த: ஸ்ரீநிதேர் ஜாதம் பவந்தி ஸ்ரீத்ருசாம் பதம்

கோமளம் கோமளாம்பாயாஸ் ஸுப்ரபாதம் ப்ரபான்விதம்
ஆராவமு தாழ்வானைச் சூழ்ந்த அழகான கொடி போல் பிராட்டி பற்றிய ஸூ ப்ரபாதம்
இதுவும் அழகாக அமைந்துள்ளது -தேஜஸ்ஸூ மிக்கு உள்ளது
படந்த: ஸ்ரீநிதேர் ஜாதம் பவந்தி ஸ்ரீத்ருசாம் பதம்-ஸ்ரீ நிதி ஆசு கவி அருளிச் செய்தது
அருள் பார்வைக்கு நிச்சயமாக இலக்காவார்கள் -உஎன்று பல ஸ்ருதி அருளிச் செய்கிறார் –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: