ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்துதி -தமிழாக்கம்: ஸ்ரீ கேசவ ஐயங்கார்

ஸ்ரீமாந்வேங்கடநாதார்ய:கவிதார்க்கிககேஸரீ,
வேதாந்தாசார்யவர்யோமேஸந்நிதத்தாம்ஸதாஹ்ருதி.

உத்தம ஞானச் செல்வ னுயர் மறை முடிகளுக்கு
வித்தகப் பொருளுணர்த்து மேன்மையன் வேங்கடேசன்
எத்திறக் கவிஞருக்கு மேதுவாதியர்க்கு மேறு
நித்தமு மிடைவிடா தெனெஞ்சினிற் றிகழ்க நின்றே.

உத்தம ஞான ஸம்பத்தையுடைய வரும், வேதாந்தங்களுக்குப் பொருளுரைப்பதில் பிரஸித்தி பெற்றவரும்,
திருவேங்கடநாதன் என்னும் திருநாமத்தை வகிப்பவரும், கவனம் பண்ணுபவர், ஹேதுவாதம் செய்பவர்
இவர்கள் எத்திறமையோராயினும் அவர்களுக்கெல்லாம் சிங்கம்போன்றவருமான
நம் தூப்புல் வேதாந்த தேசிகன் அடியேன் மனத்திலே எப்பொழுதும் வீற்றிருக்கக் கடவர்

——–

மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களா நாம்
வக்ஷ:பீடீம் மது விஜயிநோ பூஷயந்தீம் ஸ்வ காந்த்யா,
ப்ரத்யக்ஷாநுச்ரவிக மஹிம ப்ரார்த்தீநீநாம் ப்ரஜாநாம்
ச்ரேயோ மூர்த்திம் ச்ரியமசரணஸ த்வாம் சரண்யாம் ப்ரபத்யே. .1.

மாணப் பெரு மாட்சித் திரு மா மங்கல முதனீ
ஆணப்பன தாகும் திரு மார்வம் தெளி யொளியோன்
காணப் பெறு கேள்வித் திரு வாழ்வுற்றருள் பெறுவார்
பேணப் புக ழன்னைத் திரு வுன்னைச் சரண் புகுவேன். 1.

அசரண:அஹம்—— புகலொன்றில்லாவடியேன்;
மாந அதீத— பிரமாணங்களால் அளக்க முடியாத;
ப்ரதித விபவாம்— பேர் படைத்த மகிமை பொருந்தியவளும்;
மங்களாநாம் மங்களம்— மங்களமான வஸ்துக்களுக்கும் மங்களத்தை அளிப்பவளும்;
மது விஜயிந:– மது என்னும் அசுரனை ஜயித்தவராகிய ஸ்ரீமந் நாராயணனுடைய;
வக்ஷபீடீம்–திருமார்பாகிற பீடத்தை;
ஸ்வ காந்த்யா— தன் திருமேனி சோபையால்;
பூஷயந்தீம்–அலங்கரித்துக் கொண்டிருப்பபவளும்;
ப்ரத்யக்ஷ — இந்திரியகோசரமான இகலோகத்திற்கேற்றதும்;
ஆநுச்ரவிக— வேதங்களிற் சொல்லப்பெற்ற பரலோகத்திற்கேற்றதுமான;
மஹிம–மகிமையை;
ப்ரார்த்தி நீநாம்–விரும்புகிற;
ப்ரஜாநாம்— ஜனங்களுக்கு;
ச்ரேயா மூர்த்திம்— நன்மையே வடிவு கொண்டது போன்றவளும்;
சரண்யாம்— அனைவராலும் சரணம் அடையத் தக்கவளுமான;
ச்ரியம் — ‘ ஸ்ரீ ‘ என்ற திருநாமம் கொண்டவளுமாகிய;
த்வாம்— தேவரீரை;
ப்ரபத்யே–சரணம் அடைகிறேன்.

வேறு ஒரு கதியும் இல்லாத அடியேன் எண்ணிறந்த மஹிமையை யுடையவளும்,
சுபகரமான வஸ்துக்களுக்கும் சுபத்தைச் செய்யுமவளும்,
மதுசூதனனுடைய திருமார்புக்கு அலங்காரமானவளும்,
இக பர சுகங்களை வேண்டுமவர்கட்கு அளிப்பவளும்,
சரணடையத் தகுந்தவளும்,
அடியார் வினைதீர்க்கும் அவளுமான ஸ்ரீதேவியைச் சரணம் அடைகிறேன்.

———–

ஆவிர்ப்பாவ: கலச ஜலதௌ அத்வரே வாபி யஸ்யா:
ஸ்தாநம் யஸ்யாஸ் ஸரஸிஜவநம் விஷ்ணு வக்ஷஸ் ஸ்தலம் வா,
பூமா யஸ்யா புவநமகிலம் தேவி திவ்யம் பதம் வா
ஸ்தோக ப்ரஜ்ஞை ரநவதிகுணா ஸ்தூயஸே ஸா கதம் த்வம்.– 2.

நீ யுற்பவ மொப்பும் நிறை யப்பும் மக நற்பும்
கோயில் மகி ழெண்டாமரை கொண்டா யரிமார்பும்
தேயம் திரு மா வீடோடு தேவுன் னுல கெல்லாம்
தாயுன் தகை யாயும் வகை யாரே யறி வாரே.– 2.

[தேவி !: தாயே!;
யஸ்யா:- எந்த தேவரீருடைய;
ஆவிர்ப்பாவ:- அவதாரமானது;
கலச ஜலதௌ:- திருப்பாற்கடலில் தானோ!;
அத்வரே வாபி:- அல்லது யாக பூமியில் தானோ!;
யஸ்யா:- யாதொரு தேவியினுடைய;
ஸ்தாநம்:- இருப்பிடம்;
ஸரஸிஜ வநம்:- தாமரைக் காடு தானோ!;
வா விஷ்ணு வக்ஷ ஸ்தலம் :- அல்லது பகவானுடைய திருமார்புதானோ!;
(என்று சொல்லப் பெறுகிறதோ);
யஸ்யா:- யாதொரு தேவியினுடைய;
பூமா:– விபூதி;
அகிலம் புவநம்:- முழு லீலா விபூதியும்;
வா திவ்யம் பதம்:– அல்லது பரம பதமும் (ஆகவிருக்கிறதோ);
ஸா:- அந்த;
அநவதி குணா த்வம்:–அளவிறந்த குணவதியான தேவரீர் ;
ஸ்தோகப்ரஜ்ஞை:- மிகச் சிற்றறிவுள்ளவர்களால் ;
கதம்:- எப்படி;
ஸ்தூயஸே:- ஸ்துதிக்கப் பெறுவீர்?

தேவீ ! திருப்பாற்கடலிலும், யாக பூமியிலும் அவதரித்தவளும்,
தாமரையிலும் விஷ்ணுவின் திருமார்பிலும் வஸிப்பவளும்,
அகில லோகங்களையும் நித்ய விபூதியையும் விபூதியாகக் கொண்டவளும்,
எண் பெருக்கந்நலத்து ஒண்பொருளீறில வண்புகழ் என்றபடி எல்லை காண முடியாத குணங்களை யுடையவளுமான
தேவரீரை அற்பஜ்ஞான வடியோங்கள் எப்படி உள்ளபடியே துதிக்க முடியும்?
துதிக்க முடியாது என்றபடி.

—————-

ஸ்தோதவ்யத்வம் திசதி பவதீ தேஹிபி: ஸ்தூயமாநா
தாமேவ த்வாம் அநிதரகதி: ஸ்தோது மாசம்ஸமாந:
ஸித்தாரம்ப:ஸகல புவந ச்லோக நீயோ பவேயம்
ஸேவாபேக்ஷா தவ சரணயோ: ச்ரேயஸே கஸ்ய ந ஸ்யாத்.–3-

கன்னல் துதி யன்னக் கவி மன்னர்க் கருள் தேவே
உன்னைத் துதி பண்ணிப் புக ழெண்ணப் புகலில்லா
என்னைப் புவி கொள்ளப் புக ழுள்ளக் கவி சொல்வாய்
நின்னிற் பெரு நின் தாட் பணி யெண்ணும் திரு வீதே.–3-

[பவதி–தேவரீர்;
தேஹிபி–சரீரம் படைத்தவர்களால்;
ஸ்தூயமாநா–துதிக்கப் பெற்றவளாய்க் கொண்டு;
ஸ்தோதவ்யத்வம்– அவர்களுக்கு மற்றவர்களால் துதிக்கப் பெறும் நிலைமையை (அதாவது ஐச்வர்யாதி களை);
திசதி — கொடுக்கிறீர்;
தாம் த்வாமேவ-அப்படி ஔதார்ய குணமுள்ள தேவரீரையே;
அநிதரகதி — வேறு கதியற்ற வடியேன்;
ஸ்தோதும் — துதிக்க;
ஆசம்ஸமாந — முயன்றவனாய்க் கொண்டு;
ஸித்தாரம்ப –கை கூடிய ஆரம்பத்தை யுடையவனாகவும்;
ஸகல புவந — அனைத்துலகத்தாராலும்;
ச்லாக நீய –கொண்டாடத் தகுந்தவனாக;
பவேயம் — ஆவேன்;
தவ சரணயோ — தேவரீர் திருவடிகளில்;
ஸேவாபேக்ஷா — கைங்கர்யம் செய்யவேணும் என்ற விருப்பமானது;
கஸ்ய— எவனுக்குத் தான்;
ச்ரேயஸே–க்ஷேமத்தின் பொருட்டு;
நஸ்யாத்–ஆகாது?

சரீரத்தைப் பெற்றவன் எவனாயினும் அவன் தேவரீரைத் துதித்தால் தேவரீர் அவனுக்கு
இதரர்கள் அவனைத் துதிக்கக் கூடிய நிலைமையை அளிக்கிறீர்.
ஆகையால் அவ்விதம் மிகுந்த கருணாநிதியான தேவரீரையே கதியாகப் பற்றிய அடியேன்
தேவரீரைத் துதிக்க எண்ணிய பொழுதே ஸித்தியைப் பெற்று எல்லா உலகத்தாராலும் துதிக்கக் கூடியவனாவேன்
தேவரீருடைய திருவடிகளில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற ஆசையே
மனிதர்களுக்கு அகில நன்மைகளையும் அளிக்கும் அல்லவ

——————-

யத் ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்ய மீஷாம்
ஜந்ம ஸ்தேம ப்ரளய ரசநா ஜங்கமா ஜங்கமாநாம்,
தத் கல்யாணம் கிமபி யமிநாம் ஏக லக்ஷ்யம் ஸமாதௌ
பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீ பாதலாக்ஷா ரஸாங்கம். (4)

யவனுளம் கருத வையம் யவனுடம் பென்ன யாவும்
யவனிடைத் தோன்றி யூன்றி யொடுங்குமா லவனு முன்தான்
சவி யுமிழ் குழம்பு சாரும் குறி யினுக் குரியனாயே
தவமெழுந் திரு விழிக்கோர் தனி யிலக் காவான் சோதி. (4)

[கமலே: ஸ்ரீமஹாலக்ஷ்மியே! ;
யத்ர தேஹிநி –உலகிலுள்ள வஸ்துக்கள் அனைத்தையும் தனக்குச் சரீரமாகவுடைய எந்தப் பகவானிடத்தில்;
யத் ஸங்கல்பாத் – எந்தப் பரமாத்மாவினுடைய ஸங்கல்பத்தினால்;
அமீஷாம்—இந்த;
ஜங்கமா ஜங்கமாநாம் – சராசரங்களுடைய ;
ஜந்ம ஸ்தேம ப்ரளய ரசநா – சிருட்டி, திதி, ஸங்காரம் இவற்றை அமைத்தல்;
பவதி—உண்டாகின்றதோ;
தத்—அப்படிப்பட்டதாயும்;
கல்யாணம்—மங்களகரமானதும்;
கிமபி—வாக்குக்கு நிலமல்லாததும்;
யமிநாம் – யோகிகளுடைய;
ஸமாதௌ—தியானத்திற்கு;
ஏக லக்ஷ்யம் – ஒரே இலக்கானதும்:
பூர்ணம் – எங்கும் நிறைந்துள்ளதும்;
தேஜ:—ஒளி பொருந்திய திருமேனியை யுடையவருமான பகவான்;
பவதீ—தேவரீருடைய;
பாதலாக்ஷாரஸ – திருவடிகளில் அணிந்து கொள்ளப் பெற்ற செம் பஞ்சிக் குழம்பை;
அங்கம்—அடையாளம் உடையதாய்க் கொண்டு;
ஸ்புரதி – பிரகாசிக்கிறது.

லக்ஷ்மி தேவியே! எந்தப் பகவானுடைய திருவுள்ளப்படி ஆக்கல், அளித்தல், அழித்தல்
முதலியவை நடைபெறுகின்றனவோ,
சுபாச்ரயமானதும், வாசா மகோசரமானதும், யோகிகளின் தியானத்தில் ஒரே லக்ஷ்யமானதும்,
பூர்ணமான தேஜஸ்ஸானதுமான அப் பகவானும் தேவரீருடைய ஸம்பந்தத்தினாலேயே பிரகாசிக்கிறார்.]

————

நிஷ்ப்ரத்யூஹ ப்ரணயகடிதம் தேவி நித்யாநபாயம்
விஷ்ணுஸ்த்வம் சேத்யநவதி குணம் த்வந்த்வ நமந்யோந்ய லக்ஷ்யம்,
சேஷச்சித்தம் விமல மநஸாம் மௌளயச்ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே விஹரண விதௌ யஸ்ய சய்யா விசேஷா: (5)

தடையுறாத் தகைமைசாலும் தலைமைசா லரியும்நீயும்
இடையறா வருமைநோக்கின் னிருமைகொள் ளொருமைபூக்கும்
படிவமாம் படிகட்கெல்லாம் பணியுமே துஞ்சார்நெஞ்சம்
முடிகளார் மறைகடாமும் திருவுலா மஞ்சமாமே. (5).

[தேவி!—தாயே!;
நிஷ்ப்ரத்யூஹ — இடையூறிராத;
ப்ரணய கடிதம் – அன்பு பூண்டதும்;
நித்ய — எக்காலத்திலும்;
அநபாயம் — அழிவற்றதும், பிரியாததும்;
அநவதி குணம் – அளவில்லாத குணம் உடையதுமான;
அந்யோந்ய லக்ஷ்யம் – ஒன்றையிட்டு ஒன்று நிரூபிக்கத்தக்கதும், ஒன்றுக்கொன்று நிகரானதும்;
விஷ்ணும் – பெருமாளும்;
த்வம்சேதி — தேவரீரும் என்றிப்படி;
த்வந்த்வம் — ஸ்த்ரீ புருஷ ரூபமான இரட்டை;
யஸ்ய – எந்த மிதுனத்திற்கு;
விஹரண விதௌ — விளையாடுவதற்கு;
சேஷ – ஆதிசேடனும்;
விமல மநஸாம் – களங்கமற்ற யோகிகளுடைய; சித்தம் — மனதும்;
ச்ருதீநாம் மௌளயச்ச – வேதாந்தங்களும்;
சய்யா விசேஷா – சிறந்த படுக்கைகளாக ;
ஸம்பத்யந்தே –ஆகின்றன;

தாயே! தேவரீரும் பகவானும் தடங்கல் இல்லாத விச்வாசத்தினால் ஒன்று சேர்ந்த் ஒரு பொழுதும்
எல்லையில்லாத குணங்களுடையதும், ஒருவரின் சம்பந்த்த்தினால் மற்றொருவருக்குப் பெருமை உண்டாக்கும்
தம்பதிகள் நீங்கள் விளையாடுவதற்கு ஆதிசேடனும், பரிசுத்தர்களின் மனதும், வேதாந்தங்களும் படுக்கையாக ஆகின்றன]

——————-

உத்தேச் யத்வம் ஜநநி பஜதோ உஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ஏக சேஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ் தவ ச நிகமை: நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:–6-

அன்னையே அரியும் நீயும் மருவியே யுரிமை கொள்ளும்
தன்மை சாலாவி யென்னும் அவி தரும் வேள்வி தன்னில்
பின்னையும் மறைகளோரும் மகிமையின் மிகைமை தேறும்
நன்மையே கொள்ளுமுள்ளக் களி நடம் புரிவர் நாமே. — (6)

[ஜநநி! அன்னையே! ;
பத்மே! – இலக்குமியே!;
ப்ரத்யக் ரூப – ஜீவாத்மாவாகிற;
ஹவிஷி – ஹோமம் செய்யப் பெறும் த்ரவ்யத்தில், ஆத்ம ஸமர்ப்பண யக்ஞத்தில்;
உஜ்ஜிதோபாதிகந்தம் – மற்றொரு வஸ்துவை இடையிடாமல் , நேராகவே;
உத்தேச் யத்வம் – ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ளுகிறபடியை;
பஜதோ – அடையா நின்ற;
யுவயோ – தேவரீர்கள் இருவருடைய;
ஏக சேஷித்வ யோகாத் – ஒரே சேஷியாயிருக்குந் தன்மை கொண்டு;
பத்யு: — தேவரீருடைய பர்த்தாவினுடையவும், பகவானுடையவும்;
தவச: — தேவரீருடையவும்;
நித்யம் – எப்பொழுதும்;
நிகமை –வேதங்களால்;
அந்விஷ்யமாண — தேடும்படிக்குள்ள;
மஹிமா – பெருமையானது;
ந: அடியோங்களுடைய;
மாநஸம் – மநத்தை;
நர்த்தயந் – ஆச்சர்யத்தால் ஆடச் செய்து கொண்டு;
அவச்சேதம் – இவ்வளவு என்று அளவிடப்படும் தன்மையை, பிரிவை, எல்லையை;
ந பஜதி – அடைகிறதில்லை.

தாயே! லக்ஷ்மியே! தேவரீரும் பகவானும் ஜீவாத்மாவாகிற ஹவிஸ்ஸைக் குறித்து ஒரே சேஷியாதலால்
காரண சேஷமேயில்லாமல் நேராக உத்தேச்யம் ஆகிறீர்கள்.
வேதாந்தங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றதும்,
எங்கள் மனத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றதுமான தேவரீருடைய பெருமைக்கு எல்லையே இல்லை.]

——

பச்யந்தீஷு ச்ருதிஷு பரித: ஸூரிப்ருந்தேந ஸார்த்தம்
மத்யே க்ருத்ய த்ரிகுண பலகம் நிர்மித ஸ்தாந பேதம்
விச்வாதீச ப்ரணயிநி ஸதா விப்ரம த்யூத வ்ருத்தௌ
ப்ரும்மேசாத்யா த்த்தி யுவயோ: அக்ஷசார ப்ரசாரம் –(7)

சுருதிகள் கருதி நோக்கச் சூரியர் பரிதி சூழத்
திரி குணப் பலகை யூடே நிலைகளாம் பல வகுத்தே
அரி யுயிர்த் துணைவி நீவி ராடுமா மாயச் சூதில்
அரனயன் முதலோ ரவ்வச் சாரிகைச் சரிதை யேற்பார்.–7-

[விச்வாதீச ப்ரணயிநி!– ஸர்வ லோக நாதனுடைய உயிர்த்துணைவியே !;
ச்ருதிஷு – வேதங்கள்;
ஸூரி ப்ருந்தேந ஸார்த்தம் – நித்திய ஸூரித் திரளுடன்;
பரித : — நாற்புறத்திலும்;
பச்யந்தீஷு – பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ;
நிர்மித ஸ்தாந பேதம் – கருவி வைக்கும் இடக்குறிப்புள்ள , ஸத்யலோகம் முதலான ஸ்தானங்களையுடையதான ;
த்ரிகுண பலகம் – சத்வ ரஜஸ் தமோ குணங்களால் அமைந்த ப்ரக்ருதியாகிய சூதாட்டப் பலகையை ;
மத்யே க்ருத்ய – நடுவில் வைத்து ;
ஸதா – எக்காலத்தும் ;
யுவயோ –தேவரீர்கள் இருவருடையவும் ;
விப்ரமத் யூத வ்ருத்தௌ – விளையாட்டுக்காக ஆடும் சொக்கட்டான் ஆட்டத்தில் ;
ப்ரும்மேசாத்யா : — அயன் அரன் முதலியோர்;
அக்ஷசார ப்ரசாரம் — சூதாட்டப் பாச்சைகளின் நடையை ;
தததி – தரிக்கின்றார்கள்.

ஸர்வேச்வரனுடைய இன்னுயிர்த் தேவியே! தேவரீருடைய துணைவரான ஸ்ரீமந் நாராயணனும் தேவரீரும்
லீலார்த்தமாக ஜகத் ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய சொக்கட்டான் ஆட்டத்தை ஆடுகிறீர்கள்.
அதற்குப் பல வர்ணங்களை யுடைய பலகை பல குணங்களை யுடைய மூலப்ரக்ருதி, ஸத்ய லோகமே கட்டம் ,
பிரமாதிகள் சொக்கட்டான் காய்கள்,
அக்காய் களைத் தள்ளுவது போன்றது பிரமன் முதலானோரைச் செலுத்துவது,
சுருதிகளும், ஸூரிகளுமே சுற்றிலும் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பவர்.
இங்ஙனம் இருவரும் லீலாவிபூதி வ்ருத்தி செய்து மிகவும் உவக்கின்றனர்.]

—————-

அஸ்யேசாநா த்வமஸி ஜகத: ஸம்ச்ரயந்தீ முகுந்தம்
லக்ஷ்மீ: பத்மா ஜலதி தநயா விஷ்ணு பத்நீந்திரேதி,
யந் நாமாநி ச்ருதி பரிபணாந் யேவமாவர்த்த யந்தோ
நாவர்த்தந்தே துரித பவந ப்ரேரிதே ஜந்ம சக்ரே.–(8)

உலகினுக் கிறைவி நீயாம் முகுந்தனை யணைந்ததாயே
இலக்குமி பதுமை யாழி யுதித்தவள் விண்டுவில்லாள்
நிலவுமிந் திரை யென்றோதும் நாமமே நாத் தழும்பும்
வலி யெழப் பிறவி யாழிச் சுழலிடை யுழலாரம்மா.–(8)

[அஸ்ய ஜகத: இந்த உலகத்துக்கு ;
த்வம் – தேவரீர்;
முகுந்தம் – வரந்தருமவனான நாயகனை ;
ஸம்ச்ரயந்தீ ஸதீ — அணைந்தவளாய்க்கொண்டு ;
ஈசாநா – நாயகியாக;
அஸி – இருக்கிறீர்;
லக்ஷ்மீ –இலக்குமி என்றும்;
பத்மா – பத்மை என்றும்;
ஜலதி தநயா –கடல் மகள் என்றும்;
விஷ்ணு பத்நீ – எங்கும் நிறைந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தர்மபத்நி என்றும்;
இந்திரா – இந்திரை என்றும்;
இதி – இவ்வாறு;
ச்ருதி பரிபணாநி – வேதத்துக்கு மூலதநங்களான;
யந்நாமாநி – யாதொரு தேவரீர் திருநாமங்களை ;
ஏவம் – முன் கூறிய படியே;
ஆவர்த்தயந்த — ஜபிக்குமவர்கள்;
துரித பவந – பாபம் என்னும் காற்றினால் ;
ப்ரேரிதே – சுழற்றப் பெற்ற ;
ஜந்ம சக்ரே – பிறவிச் சுழலில்;
நாவர்த்தந்தே – சுழல்வதில்லை.

பத்நீ என்பதால் தேவரீர் பகவானுக்குச் சேஷமாயிருந்த போதிலும் மற்ற ஸகல ஜகத்திற்கும்
தேவரீர் சேஷியாதலால் லக்ஷ்மீ, பத்மை, ஜலதிதநயை, விஷ்ணுபத்நி, இந்திரை
என்றிப்படிச் சொல்லப் பெற்ற தேவரீருடைய திருநாமங்களை ஆவ்ருத்தி செய்பவர்கள்
பாபத்தின் பலமாகிய பிறவியை அடைய மாட்டார்கள்.]

——————–

த்வாமே வாஹு: கதிசிதபரே த்வத் ப்ரியம் லோகநாதம்
கிம் தைரந்த: கலஹ மலிநை: கிஞ்சிதுத்தீர்ய மக்நை:
த்வத் ஸம் ப்ரீத்யை விஹரதி ஹரௌ ஸம் முகீநாம் ச்ருதீ நாம்
பாவா ரூடௌ பகவதி யுவாம் தைவதம் தம்பதீ ந:–(9)

உன்னதே யாட்சியென்பார் உன்பதிக் கேயதென்பார்
என்னிதா முள்ளப்பூச லேறியே வீழ்வார்வாழ்வு
உன்னுளக் களியினாட்சி யுவந்துல காக்குமாலென்
றுன்னுமா மறையினுள்ளப் பொருளெமக் கிரட்டைநீவிர். (9)

[ஹே பகவதி ! — ஞாநம், சக்தி, ஐசுவரியம் முதலான ஆறு குணங்கள் நிறைந்த தேவியே !;
கதிசித் –சிலர் ;
த்வாமேவ — தேவரீரையே ;
லோக நாதம் —அகில உலகங்களுக்கும் ஸ்வாமியாக ;
ஆஹு –சொல்லுகின்றார்கள் ;
அபரே – வேறு சிலர் ;
த்வத் ப்ரியமேவ – தேவரீர் பதியையே (உலக நாதனாக);
ஆஹு – சொல்லுகின்றனர்;
அந்த : கலஹ மலிநை : ஒருவர்க்கொருவர் கலகத்தால் கலக்கமுற்ற
(அதாவது ஸித்தாந்தம் இன்னதென்று கண்டு பிடிக்காமல் தயங்கிக் கொண்டிருக்கிற) ;
கிஞ்சித் உத்திர்ய – (ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர் போல்) சிறிது மேற் கிளம்பி ;
மக்நை—மறுபடியும் பிரவாஹத்தில் முழுகிப் போனவருமான (அவர்களுக்குச் சமானமான) ;
தை –அவர்களைக் கொண்டு ;
கிம் – என்ன பயன் ;
த்வத் ஸம்ப்ரீத்யை : — தேவரீரது உகப்புக்காக ;
விஹரதி – விளையாடுகிற ;
ஹரௌ — பகவானிடத்தில் ;
ஸம்முகீநாம் – பொருள் கொண்ட (அதாவது பகவானைப் பற்றிச் சொல்லுகிற );
ச்ருதீநாம் –வேதங்களினுடைய;
பாவாரூடௌ — அகப் பொருளாகக் கொள்ளப் பெற்ற
(அந்தரங்கமான அபிப்பிராயம் இது என்று ஒப்புக் கொள்ளப் பெற்ற) ;
யுவாம் தம்பதீ — தேவரீர்கள் பார்யாபதிகளாகவே ;
ந : அடியோங்களுக்கு ;
தைவதம் —பரதேவதை.

பகவானைப் போலவே ஆறு குணங்களும் நிறைந்த தாயே !
சிலர் தேவரீரையே உலக நாயகனாகச் சொல்லுகின்றனர்.
வேறு சிலர் உமது பதியையே அங்ஙனம் கூறுகின்றனர்.
அப்படி அவர்கள் சொல்லுவதற்குக் காரணம் தமோ குணத்தினால் மலினமான புத்தியேயாகும்.
ஆதலால் அவர்கள் வார்த்தை அங்கீகரிக்கத்தக்கதல்ல.
தேவரீரது ப்ரீதிக்காகவே விளையாடுகிற பகவானையே பரதேவதை என்று வேதங்கள் பிரதி பாதிக்கிறபடியினால்
தேவரீர்கள் இருவருமே எங்களுக்குப் பர தேவதை .]

—————

ஆபந் நார்த்தி ப்ரசம நவிதௌ பத்த தீக்ஷஸ்ய விஷ்ணோ:
ஆசக்யுஸ் த்வாம் ப்ரிய ஸஹ சரீம் ஐகமத்யோபபந்தாம்,
ப்ராதுர்ப் பாவைரபி ஸமதநு: ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோத்க்ஷிப்தை ரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை: –10.

வருந்துவார் துயரந்தீர்க்கும் விரதமே பூண்டமாலார்
பொருந்துமார் வெழில்பொதிந்த வொருமனத் திருவாயன்னான்
வருந்தொறு மவனோடொக்க வருந்திரை யெழுந்தாலன்ன
மருந்தினுள் ளிரதமேபோல் நீயுமே வருவாய் தாயே.– 10.

[ஆபந்நார்த்தி –அடியவர்களின் வினையை ;
ப்ரசமந விதௌ — போக்குவதில் ;
பத்த தீக்ஷஸ்ய — கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற;
விஷ்ணோ –பகவானுக்கு ;
த்வாம் – தேவரீரை ;
ஐகமத்யோபபந்தாம் – ஒரே அபிப்பிராயத்தை அடைந்த ;
ப்ரிய ஸஹ சரீம் — அன்பு வாய்ந்த தர்ம பத்நியாக;
ஆசக்ய — சொல்லுகிறார்கள்;
தூரோத்க்ஷிப்தை — வெகு தூரத்திற் சிதறப் பெற்ற;
துக்தராசே: — திருப் பாற் கடலின்;
தரங்கை– அலைகளால்;
மதுரதா இவ — இனிப்புப் போல;
ப்ராதுர் பாவைரபி — பகவானுடைய அவதாரங்களாலும்;
ஸமதநு — அந்தந்த அவதாரங்களுக்கு ஏற்றவாறு உருவம் எடுத்துக் கொண்டு;
த்வம் — தேவரீர்;
ப்ராத்வம் –அநுகூலமாக;
அந்வீயஸே –கூட வருகிறீர்.

ஆச்ரிதர்களுடைய ஆபத்தைத் தீர்ப்பதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற பகவானுக்கு
ஒரே அபிப்பிராயத்தை யுடைய தர்ம பத்நியாக தேவரீரைச் சொல்லுகிறார்கள்.
பகவானுடைய திருவவதாரங்கள் தோறும் அந்தந்த அவதாரங்களுக்குத் தகுந்தபடி அவதரித்திருக்கிற தேவரீர்
திருப்பாற்கடலின் அலைகள் வெகு தூரம் விலகி வந்த போதிலும் தேவரீருக்கு
அஸாதாரணமான இனிமையை விடாதிருப்பதைப்போல பகவானால் விடப்படுவதில்லை.]

————–

தத்தே சோபாம் ஹரி மரதகே தாவகீ மூர்த்திராத்யா
தந்வீ துங்க ஸ்தநபரந்தா தப்த ஜாம்பூநதாபா,
யஸ்யாம் கச்சந்த்யுதய விலயை நித்யமாநந்த ஸிந்தௌ
இச்சா வேகோல் லஸிதலஹரீ விப்ரமம் வ்யக்தயஸ்தே. –.11.

அரியேனும் மரதகத்தோ ராதியா முன்தன்மூர்த்தி
தருமெழில் சுட்டபொன்னின் திருவெமக் கம்மமூட்டும்
திருவுனா தீறிலின்ப வெள்ளமா மூர்த்திதன்னில்
கருதுமுன் னவதாரங்கள் தரங்கமா யெழுந்தொடுங்கும். .11.

தந்வீ — சிறுத்த இடையுடையவும்;
துங்க — உந்நதமான;
ஸ்தநபர — தனபாரத்தினால்;
நதா — வணங்கினவும்;
தப்த — உருக்கி ஓடவிடப்பட்ட;
ஜாம்பூநத — உயர்ந்த தங்கத்திற்கொப்பான;
ஆபா — சோபையையுடையவும்;
ஆத்யா — எல்லா அவதாரங்களுக்கும் முதற்கிழங்கானவும்;
தாவகீ — தேவரீருடைய;
மூர்த்தி — திருமேனியானது;
ஹரிமரதகே — மரகதப் பச்சை போன்ற பெருமாள் திருமேனியில்;
சோபாம் — அழகை;
தத்தே — உண்டாக்குகிறது;
நித்யம் — எக்காலத்திலும்;
ஆநந்த ஸிந்தௌ — ஆநந்தக் கடலாகிய;
யஸ்யாம் — எந்த ரூபத்தில்;
தே — தேவரீருடைய;
வ்யக்தய– அவதாரங்கள்;
உதய — தோன்றுவதினாலும்;
விலயை — உள்ளே ஒடுங்குவதினாலும்;
இச்சா — ஸங்கல்பத்தினுடைய;
வேக — வேகத்தினால்;
உல்லஸித — உண்டாகிய;
லஹரீ — அலைகளுடைய;
விப்ரமம் — முறையை;
கச்சந்தி — அடைகின்றன.

மெலிந்ததும் பருத்ததுமான தன பாரத்தினால் சிறிது வளைந்ததும்
உருக்கி ஓடவிடப் பட்ட தங்கத்தைப் போல் ஒளியை உடையதுமான தேவரீருடைய
ஆதி உருவம் மரகதம் போன்ற நீல வர்ணத்தையுடைய பகவானது திருமேனியில் அழகை உண்டாக்குகிறது.
ஆநந்த சாகரமாகிய அந்த மூல உருவத்திலிருந்து தேவரீருடைய மற்ற அவதாரத் திருமேனிகள் உண்டாகி
அதலேயே சேர்ந்து விடுவதால் ஸங்கல்பத்தினால் உண்டாகிய அலைகளின் கிரமத்தை அடைகின்றன.

————–

ஆஸம்ஸாரம் விததமகிலம் வாங்மயம் யத் விபூதி:
யத் ப்ரூபங்காத் குஸும தநுஷ: கிங்கரோ மேரு தந்வா,
யஸ்யாம் நித்யம் நயந சதகை: ஏகலக்ஷ்யோ மஹேந்த்ர:
பத்மே தாஸாம் பரிணதிரஸௌ பாவலேசைஸ் த்வதீயை: –.12.

யவளுடைச் செல்வமாமோ அளப்பரும் படைப்பிற் சொற்கள்
யவள்புரு குடியால் மேரு வில்லியை வெல்வான் வில்லி
யவளுரு வொன்றே காண்பான் ஆயிர நயனத் தேவன்
அவருயர் நிலைகள் யாவும் நிகழ்வதுன் கருத்தின் கண்ணே.–.12.

[ ஆஸம்ஸாரம் –சிருஷ்டி முதல்;
விததம் –எங்கும் பரவிய;
அகிலம் வாங்மயம் –ஸம்பூர்ணமான வாக்கு ரூபமும்;
யத் விபூதி – எந்த ஸரஸ்வதியின் ஸம்பத்தோ;
மேரு தந்வா – மகா மேரு பர்வதத்தை வில்லாகப் பிடித்த சிவபிரானும்;
யத் ப்ரூபங்காத் — யாதொரு பார்வதியின் புருவங்களின் அசைவதைக் காரணமாகக் கொண்டு;
குஸும தநுஷ – புஷ்ப பாணனான மன்மதனுக்கு;
கிங்கர: – இட்ட வேலை செய்பவனாக, பரவசனாக, ஆய்விட்டானோ;
மஹேந்த்ர – தேவேந்திரனும்;
யஸ்யா – எந்த இந்திராணியிடத்தில்;
நயந சதகை – ஆயிரங்கண்களாலும்;
நித்யம் ஏக லக்ஷ்ய – எப்பொழுதும் ஒரே நோக்குடையவனோ;
பத்மே! – ஏ தேவியே;
தாஸாம் — அந்தக் கலைமகள், மலைமகள், இந்த்ராணிகளுடைய;
அஸௌ பரிணதி — இந்தப்படி புருஷனை வசம் பண்ணும்படிக்குள்ள மேன்மையும்;
த்வதீயை: — தேவரீருடைய;
பாவ லேசை: – மிகச் சிறிய ஸங்கல்பங்களால் வந்தவை;

லக்ஷ்மீ! ஸரஸ்வதி வார்த்தையாக உலகமெங்கும் வியாபரித்து நிற்பதும்,
பார்வதி உருத்திரனை மன்மதனுக்கு அடிமை யாக்கினதும்,
இந்திராணி தேவேந்திரனைத் தன் வசமாக்கியதும் ஆகிய இப்பெருமைகள்
அவர்களுக்குத் தேவரீர் ஸங்கற்பத்தின் லேசத்தினால் உண்டானது.]

———

அக்ரே பர்த்துஸ் ஸரஸிஜ மயே பத்ர பீடே நிஷண்ணாம்
அம்போ ராசே ரதி கத ஸுதா ஸம் ப்லவாதுத்திதாம் த்வாம்,
புஷ்பாஸார ஸ்தகித புவநை: புஷ்கலா வர்த்த காத்யை:
க்ல்ப்தாரம்பா: கநக கலசை அப்ய ஷிஞ்சந் கஜேந்த்ரா:–13

அலை கடல் மலை கலக்க அமுதென உதித்த வேதத்
தலைவி யென் றுன்னை யாங்கோர் தாமரைத் தவிசு தாங்க
வலி கொளுன் வலவன் முன்னே புட்கலா வர்த்த மாரி
மனிதருங் கரிகள் பொன்னார் மங்கலக் கலசமாட்டும்.–13

[ அதிகத – அடையப்பட்ட;
ஸுதா ஸம்ப்லவாத் –அமிருதத்தினுடைய பிரவாஹத்தோடு கூடிய;
அம்போராசே – திருப்பாற்கடலில் நின்றும்;
உத்திதாம் — அவதரித்தவளாயும்;
பர்த்து: — பதியான பகவானுடைய:
அக்ரே – முன்புறத்தில்( எதிரில்);
ஸரஸிஜ மயே – தாமரைப் பூவாகிய ;
பத்ர பீடே –மங்கள சிங்காதனத்தில்;
நிஷண்ணாம் – வீற்றிருப்பவளுமான;
த்வாம் – தேவரீரை;
கஜேந்த்ரா: – திக்கஜங்கள்;
புஷ்பஸார – மலர் மாரியினால்;
ஸ்தகித – மறைக்கப் பெற்ற;
புவநை: — உலகங்களை உடையதான;
புஷ்கலாவர்த்த காத்யை: புஷ்கலாவர்த்தம் என்று பெயருடைய மேகம் முதலியவைகளாலே;
க்ல்ப்தாரம்பா: – சரியான தொடக்கம் செய்ததாய்க் கொண்டு;
கநக கலசை – பொற்குடங்களால்;
அப்யஷிஞ்சந் — அபிஷேகம் செய்வித்தன.

அமிருதமயமான பெருக்கை யுடைய திருப்பாற் கடலிலிருந்து தேவரீர் அவதரித்துப்
பகவானுக்கு எதிரில் தாமரைப் புஷ்பத்தில் வீற்றிருப்பதைக் கண்டு புஷ்கலாவர்த்தம் முதலிய
ஏழு மேகங்களும் பூமாரி சொரிந்தன.
அப்பொழுது திக் கஜங்கள் தங்கக் குடங்களில் அந்த மலர் மாரியை மொண்டு
தேவரீருக்குத் திருமஞ்சனம் செய்தன.]

————-

ஆலோக்ய த்வாம் அம்ருத ஸஹஜே விஷ்ணு வக்ஷ:ஸ்தலஸ்தாம்
சாபாக்ராந்தா: சரணமகமந் ஸாவரோதா: ஸுரேந்த்ரா:
லப்த்வா பூயஸ்த்ரி புவநமிதம் லக்ஷிதம் த்வத் கடாக்ஷை:
ஸர்வாகார ஸ்திர ஸமுதயாம் ஸம்பதம் நிர்விசந்தி. –.14.

அமுதமே பொதியத் தோன்றி அரியுரத் துறையக் கண்டே
அமரர்தங் குமரியோடே யன்னையுன் னபயமென்னத்
தமர்களென் றவர்கள் சாபம் தீரநீ போரநோக்க
அமைதியே யவர்களெய்தி யகிலமும் மகிழப்பெற்றார். –.14.

[அம்ருத ஸஹஜே – அமுதத்துடன் பிறந்த திருமகளே!
சாபக்ராந்தா – சாபத்தினால் பீடிக்கப்பட்டவர்களும்;
ஸாவரோதா – பத்நிகளுடன் கூடியவர்களுமான;
ஸுரேந்த்ரா: – தேவ கணங்களுக்குத் தலைமை வகித்த இந்திராதிகள்;
விஷ்ணு வக்ஷ ஸ்தலா: – அமுதிற் பிறந்து பெருமாள் திருமார்பில் வீற்றிருந்த;
த்வாம் – தேவரீரை;
ஆலோக்ய – ஸேவித்துக் கொண்டு;
சரணம் அகமந் –சரணம் அடைந்தார்கள்;
த்வத் கடாக்ஷை: – தேவரீரது கடாக்ஷ வீக்ஷணங்களால்:
லக்ஷிதம் – குறிப்பிடப் பெற்று ஸம்ருத்தமான:
இதம் த்ரிபுவநம் – இந்த மூன்று உலங்களையும்;
பூய – மறுபடியும்;
லப்த்வா – அடைந்து;
ஸர்வாகார –எல்லாவற்றிலும்;
ஸ்திரஸமுதயாம் – அழிவில்லாத வளருதலை யுடையதான;
ஸம்பதம் – ஐசுவரியத்தை;
நிர்விசந்தி – அனுபவிக்கிறார்கள்.

தேவரீர் திருப்பாற்கடலில் அவதரித்துப் பகவானுடைய திருமார்பை அடைந்த பிறகு
துர்வாஸ முனிவரின் சாபத்தினால் மூவுலகங்களையும் இழந்த தேவர்களும் அவர்களுடைய பத்தினிகளும்
தேவரீரைச் சரணமாக அடைந்தார்கள். பின்பு தேவரீர் தேவரீருடைய திருக்கண்களால் கடாக்ஷிக்க
அதனால் மக்களைப் பெற்ற மூன்று உலகங்களையும் மீண்டும் அடைந்தனர்.
அம் மட்டோடு நிற்காமல் இனி ஒருபொழுதும் அழிவில்லாதபடி அந்த ஐசுவரியத்தை அநுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ]

————-

ஆர்த்த த்ராண வ்ரதி பிரம்ருதா ஸார நீலாம்பு வாஹை:
அம்போஜாநாமுஷஸி மிஷதாம் அந்தரங்கைரபாங்கை;,
யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா
தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம் தந்வதே ஸம்பதோகா:– .15.

ஆதூர்க் கமுத மாரி பொழியுமுன் மழையின் வண்ணப்
போதவிழ் பதுமச் செவ்வி யுமிழ் தரு மமிழ்த நோக்கொன்
றேதுமே நடனமாடும் திசை திசைச் செல்வம் யாவும்
மோதியான் முந்தியானென் றோடியே வந்து நாடும். –.15.

[ஆர்த்த — ஆபத்தை அடைந்து வருந்தியவர்களை;
த்ராண — ரக்ஷிப்பதையே;
வ்ரதிபி — விரதமாகக் கொண்டனவும்;
அம்ருத — அமிருத மயமான;
ஆஸார — மழையைப் பொழிகிற;
நீலாம்புவாஹை: — கருமேகம் போன்றனவும்;
உஷஸி — விடியற்காலையில்;
மிஷஸாம் — மலருகின்ற;
அம்போ ஜாநாம் — தாமரைப் பூக்களுக்கு;
அந்தரங்கை — தோழமை பூண்டவையுமான;
அபாங்கை — கடைக் கண்களால்;
யஸ்யாம் யஸ்யாம் — எந்த எந்த;
திசி — திக்கில்;
த்வதீயா த்ருஷ்டி —தேவரீருடைய பார்வை;
விஹரதே — விளையாடுகிறதோ, அதாவது உலாவுகிறதோ;
தஸ்யாம் தஸ்யாம் திசி — அந்தந்தத் திக்கில்;
ஸம்பதோகா: — ஐச்வர்ய ப்ரவாஹங்கள்;
அஹமஹமிகாம் —- நான் முன்பு நான் முன்பு போவேன் என்பதனை;
தந்வதே — செய்கின்றன.

தேவியே! கஷ்டப்படுகிறவர்களைக் காப்பாற்றுவதிலே தீக்ஷித்துக் கொண்டதும்,
அமிருதம் போல் குளிர்ச்சியையும், இன்பத்தையும், அழியாமையையும் கொடுப்பவைகளும்,
அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலர்களைப் போன்றவைகளுமான தேவரீரது திருக்கண்களினால்
கடாக்ஷிக்கப் பெற்ற திக்கை நோக்கி ஸம்பத்துக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றன.]

—————–

யோகாரம்ப த்வரித மநஸோ யுஷ்மதைகாந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹ யே தாரயந்தே தநாயாம்
தேஷாம் பூமேர் தநபதி க்ருஹாத் அம்பரா தம்புதேர் வா
தாரா நிர்யாந்த்யதிகமதிகம் வாஞ்சிதாநாம் வஸூநாம்.– .16.

தம் பதி யென்ற நீவிர் தம்பதி யென்றே தேறும்
தம் பெரும் தருமம் காக்கத் தமர்களே கருதும் செல்வம்
அம்புவி யளகை யாழி யம்பரம் யாவு மொன்றிப்
பம்பியே செல்வ வெள்ளம் கருத்தையும் கடந்து பெய்யும்.–.16.

[யே – யாதொரு தனார்த்திகள்;
யோக ஆரம்ப –கர்மாநுஷ்டானம் தொடங்குவதில்’;
த்வரித மநஸ—ஊக்கமுள்ள மனம் உடையவர்களாய்க் கொண்டு;
யுஷ்மத் – தேவரீரும் பெருமாளும் ஆகிற தேவரீர்களையே;
ஐகாந்த்ய யுக்தம் – அடைவது என்று உறுதி உடைய;
தர்மம் – கர்மாநுஷ்டானத்தை;
ப்ரதமம் – முதலில்;
ப்ராப்தம் – அடைவதற்கு;
தநாயாம் –தனத்தில் ஆசையை;
தாரயந்தே – கொள்ளுகிறார்களோ;
தேஷாம் – அவர்களுக்கு;
பூமேர்வா – பூமியினின்றாவது;
தநபதி க்ருஹாத்வா – குபேரன் வீட்டினின்றாவது;
அம்பராத்வா – ஆகாயத்தினின்றாவது;
அம்புதேர்வா — கடலினின்றாவது;
வாஞ்சிதாநாம் – வேண்டப் பெற்ற;
வஸூநாம் – த்ரவ்யங்களுடைய;
தாரா – ப்ரவாஹங்கள்;
அதிகமதிகம் – அவரவர் விரும்பின அளவினும் அதிகமாக;
நிர்யாந்தி — வெளிவருகின்றன.

யோகாப்யாஸம் செய்வதில் மிகுந்த ஊக்கத்துடன் அதற்கு முன் தேவரீர்களையே குறித்து
தர்மம் செய்யவெண்ணி எவர்கள் அதற்குப் பொருள் வேண்டும் என்று விரும்புகிறார்களோ
அவர்களுக்குப் பூமி, குபேரனுடைய பொருட்சாலை, ஆகாசம், கடல் முதலிய இடங்களிலிருந்து
பொருள் தாரை தாரையாய் வேண்டியதற்கு மேல் கிட்டுகிறது.]

————————

ஸ்ரேயஸ்காமா: கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்
சூடா பீடம் தவ பத யுகம் சேதஸா தாரயந்த:
சத்ரத் சாயா ஸுபக சிரஸ: சாமர ஸ்மேர பார்ச்வா:
ச்லாகா கோஷ ச்ரவணமுதிதா: ஸ்ரக்விணஸ் ஸஞ்சரந்தி.– .17.

மா மறை முடியின் மாட்சி மலர்த்துமுன் பதும பாதம்
தூ மனத் தூணே பற்றித் தாபதர் சென்னி தாங்க
ஆமவர்க் கரசு வீசும் கவரியும் குடையும் மாலைச்
சேம வாய் மொழியும் யாவும் செல்வி நின் னருளினாலே.–.17

[ கமலநிலயே! – செந்தாமரை மலரில் வஸிக்கின்ற தேவியே!;
ச்ரேயஸ்காமா: — ஸம்பத்தையும் மேன்மையையும் விரும்புவோர்;
ஆம்நாயவாசாம் – வேத வாக்குகளுக்கு;
சித்ரம் – அழகு பொருந்தின;
சூடாபீடம் – தலை யலங்காரம் போன்ற;
தவ பத யுகம் — தேவரீருடைய திருவடி யிணைகளை;
சேதஸா – மனத்தினால்;
தாரயந்த: – தரித்தவர்களாய்க் கொண்டு;
சத்ரச் சாயா – வெண்குடை நிழலினால்;
ஸுபக சிரஸ:– விளங்கின முடியினரும்;
சாமர ஸ்மேர பார்ச்வா:—இரு புறமும் வெண் சாமரம் வீசப் பெற்றவரும்;
ச்லாகா கோஷ ச்ரவண – ஸ்துதி வாக்கியங்களைக் கேட்டு;
முதிதா: – மனமகிழ்ந்தவரும்;
ஸ்ரக்விண: – நற் பூமாலை யணிந்தவரும்;
ஸஞ்சரந்தி – யானை குதிரை மேல் ஏறித் திரிகிறார்கள்.

ஹே கமலையே! வேதாந்தங்களில் சொல்லப் பெற்ற தேவரீரது திருவடிகளை மனத்தில் தியாநம் செய்யும்
இவ்வுலக இன்பத்தில் இச்சையுடைய ஜனங்கள் வெண்குடை போட, இருமருங்கும் வெண்தாமரை வீச,
வந்திகள் பிருதுகள் கூற, தம்மைத் தாமே மதித்துக் குஞ்சரம் ஊரும் சக்கரவர்த்திகளாக விளங்குகிறார்கள்,]

பொதுவாக ச்ரேயஸ்காமா: என்பதற்கு இவ்வுலக இன்பங்களான
லௌகிக ஸம்பத்து, செல்வாக்கு, ராஜ்ய பரிபாலனம், ஆகியவற்றையே குறித்தாலும்,
அந்தப் பொருளிலேயே பெரும்பாலும் இந்த ச்லோகத்துக்கு உரைகள் அமைந்திருந்தாலும்,
புதுக்கோட்டை அ.ஸ்ரீநிவாசராகவாச்சாரியார் ஸ்வாமி மட்டும்,
மோக்ஷ ஸம்பத்தை வேண்டி திருமாமகளைத் துதித்தோருக்கு இந்த ஐஸ்வர்யங்களை
முன்னதாகவே கொடுத்து அனுக்ரஹிக்கிறாள் என்று விசேஷ அர்த்தம் கொண்டு ரசிக்கிறார்.

———————

ஊரிகர்த்தும் குசலமகிலம் ஜேதுமாதீநராதீந்
தூரி கர்த்தும் துரித நிவஹம் த்யக்துமாத்யாம் அவித்யாம்,
அம்ப ஸ்தம்பாவதிக ஜநந க்ராம ஸீமாந்தரேகாம்
ஆலம்பந்தே விமல மநஸோ விஷ்ணுகாந்தே தயாம் தே.–.18.

மாசறு மனத்தர் கொள்ள உள்ளுமங் கலங்கள் மன்னப்
பாசமும் கழற முற்றும் பாறு பாறாகப் பாவம்
வாசனை யவிச்சை யோடே யோடவே பிறவிப் பன்மை
யோசனை கடத்த வல்ல உன்னருள் பற்றுவாரே.–.18.

[அம்ப ! — தாயே!;
விஷ்ணுகாந்தே! – விஷ்ணுவுக்குப் பிரியமுள்ள பத்நியே!;
விமல மநஸ: – அகங்காரமமகாரம் முதலான அழுக்கற்ற பரிசுத்தமான மனத்தை யுடையவர்கள்;
அகிலம் குசலம் – எல்லா நன்மைகளையும்;
ஊரிகர்த்தும் – அடைவதற்கும்;
ஆதீந் அராதீந் – அநாதி நித்ய சத்துருக்களான காம க்ரோத லோப மோஹ மத மாத்ஸர்யங்களை;
ஜேதும் – ஜயிப்பதற்கும்;
துரித நிவஹம் –மோஷவிரோதியான பாபத் திரளை;
தூரிகர்த்தும்—விலக்குவதற்கும்;
ஆத்யாம் அவித்யாம் – அநாதியான மூல ப்ரக்ருதியை;
த்யக்தும் –விடுவதற்கும்;
ஸ்தம்ப அவதிக—ஸ்தம்பம் என்கிற புழுவரையிலுள்ள;
ஜநந க்ராம ஸீமாந்தரேகாம் – பிறவியாகிய ஊர் எல்லைக்கு அப்புறம் வழிகாட்டும் ஒற்றை வழி போன்ற;
தே தயாம் – தேவரீருடைய கருணையை;
ஆலம் பந்தே – உபாயமாகப் பற்றுகிறார்கள்.

தாயே! லக்ஷ்மீ! அகில நன்மைகளையும் அடையவும்,
ஆதி காலந்தொட்டுத் தொடர்ந்து வருகிற அநிஷ்ட்ட வர்க்கங்களை அடக்கவும்,
எல்லாப் பாபங்களையும் போக்கவும்,
அநாதியான அவித்யையை அகற்றவும்,
பரிசுத்தமான மனத்தை உடையவர்கள்
பிரமன் முதல் புழு வரையிலாக உள்ள பிறவிகளுக்கு எல்லையாகிய
தேவரீருடைய தயையைக் கதியாகப் பற்றுகிறார்கள்.]

——————-

ஜாதா காங்க்ஷா ஜநநி யுவயோ: ஏக ஸேவாதி காரே
மாயாலீடம் விபவமகிலம் மந்யமாநாஸ் த்ருணாய,
ப்ரீத்யை விஷ்ணோஸ் தவ ச க்ருதிந: ப்ரீதிமந்தோ பஜந்தே
வேலா பங்க ப்ரசமந பலம் வைதிகம் தர்ம ஸேதும். .19.

அன்னையே யுங்கட்கே யாம் கொண்டதே கண்டவாவிப்
புன்மையா மாயை மூளும் பொருளெலாம் புறக்கணித்தே
நன்மையா நும் போலன்பே நாடி நான் மறை வகுக்கும்
பொன்னடிக் கடவா துங்கள் பேரருள் பெறுவார் போற்றி. .19.

[ஜநநி – தாயே!;
யுவயோ: – தேவரீர்கள் இருவருடைய;
ஏக ஸேவாதிகாரே – சேர்த்தியில் ஸேவித்துக் கொள்ளுகையில்;
ஜாதா காங்க்ஷா – விருப்பம் உடையவர்;
மாயாலீடம் – பகவானுடைய மாயையால் மொய்த்த;
அகிலம் விபவம் – ஸகல ஐசுவரியத்தையும்;
த்ருணாய – புல்லுக்கொப்பாக, அற்பமாக;
மந்ய மாநா: – நினைத்தவரான;
க்ருதிந: – பாக்கியசாலிகள், புண்ணியவான்கள், பிரபந்நர்கள்;
தவ விஷ்ணோச்ச – தேவரீருடையவும் பெருமாளுடையவும்;
ப்ரீத்யை – உவப்பின் பொருட்டு;
வைதிகம் – வேதங்களில் விதிக்கப் பெற்ற;
தர்ம ஸேதும் – ஸமயாசாரமாகிற அணையை;
வேலா பங்க ப்ரசமந பலம் – எல்லை கடத்தலில்லாமையையே பலமாக;
பஜந்தே – அடைகிறார்கள்.

பெருமாள் பிராட்டியாகிய திவ்யதம்பதிகள் இருவருடைய சேர்த்தியிலும் கைங்கர்யம் செய்ய விரும்பிய
பாக்கியசாலிகள் மாயையினால் வியாபிக்கப்பட்ட கைவல்யம் வரையில் உள்ள எல்லா ஐசுவரியங்களையும்
அற்பமாக மதித்து அவர்களுடைய பிரீதிக்காக மாத்திரமே வைதிக கர்மாக்களைச் செய்கிறார்கள்.]

—————–

ஸேவே தேவி த்ரிதச மஹிளா மௌளி மாலார்ச்சிதம் தே
ஸித்தி க்ஷேத்ரம் சமித விபதாம் ஸம்பதாம் பாத பத்மம்,
யஸ்மிந்நீஷந் நமித சிரஸோ யாபயித்வா சரீரம்
வர்த்திஷ்யந்தே விதமஸி பதே வாஸுதேவஸ்ய தந்யா: –.20.

தேவரார் மாதர் கோதை மண்டியே தொண்டு செய்யும்
தீவினை தவிர்க்கும் செல்வம் மல்கு முன் தாளிணைக்கே
ஆவிதந் தடிமை கொண்டேன் அடிமை யிவ் வாறு கொண்டார்
மா வுனக் குரிய மாயோன் மா பதம் புகுந்து மீளார். .20.

[தேவி! – தாயே!
த்ரிதச மஹிளா – தேவஸ்திரீகளுடைய;
மௌளி மாலா—மயிர்முடிகளில் அணிந்த பூமாலைகளால்:
அர்ச்சிதம்—அருச்சனை செய்யப் பெற்றதும்:
சமித விபதாம்—ஆபத்துக் கலசாததான:
ஸம்பதாம்—ஐச்வர்யங்களுக்கு:
ஸித்தி க்ஷேத்ரம்—இருப்பிடமுமான:
தே பாதபத்மம்—தேவரீரது திருவடித் தாமரையை:
ஸேவே—வணங்குகிறேன்:
யஸ்மிந்—எந்தத் திருவடிகளில்:
ஈஷந் நமித சிரஸ:—கொஞ்சம் தலை வணங்கினவர்,தந்யர்:
தந்யா:—கிருதக்ருத்யரானார்:
சரீரம் –கர்மாநுகுணமான சரீரத்தை:
யாபயித்வா—கழித்துவிட்டு:
வாஸுதேவஸ்ய—பர வாஸுதேவனுடைய:
விதமஸிபதே—ப்ரக்ருதி ஸம்பந்தமற்றதான ஸ்தாநத்தில், அழுக்கற்ற இடத்தில், மோக்ஷத்தில்,பரமபதத்தில்;
வர்த்திஷ்யந்தே – வசிப்பர், இருப்பர், நித்யவாஸம் பண்ணுகிறார்கள்.

தாயே! தேவஸ்திரீகளின் சிரஸ்ஸில் வைத்துக் கொள்ளப் பெற்ற புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பெற்றதும்,
ஆபத்தில்லாத ஸம்பத்தைக் கொடுப்பதுமான தேவரீர் திருவடிகளில் மோக்ஷார்த்தமாகச் சரணாகதி பண்ணி
க்ருதக்ருத்யரான பிரபந்நர், இருந்த நாளில் கர்மாதீநமாகிற பயன்களை அநுபவித்துக்
குறிப்பிட்ட நாளில் சரீரத்தை விட்டு, அர்ச்சிராதிகதியால் ப்ரக்ருதியை நீக்கி,
அப்ராக்ருதமான பரமபதத்தில் பரமபதநாதனுடைய கைங்கர்ய ஸாம்ராஜ்யம் அடைந்து வாழ்வர்.
தேவரீர் திருவடிகளில் சிரஸ்ஸைச் சிறிது வணங்கினவனும் தமோ குணமற்ற மோக்ஷத்தில் வஸிப்பான்]

————-

ஸாநுப்ராஸ ப்ரகடித தயை: ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப ஸ்நிக்தைரம்ருத லஹரீ லப்த ஸ ப்ரும்ம சர்யை:,
கர்மே தாப த்ரய விரசிதே காட தப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சந்ய க்லபித மநகை: ஆர்த்ர யேதா: கடாக்ஷை:–.21.

பயமெனு மிரவினுக்கோ ரிரவியாம் பரமனார்பால்
மயர்வறும் பக்தி வெள்ளம் கரை புரண் டோடப் பண்ணும்
தயையெனு மொன்று கொண்டே திருவெனும் தகைமை தோன்ற
உயர்நலம் மல்க நல்கும் தாயுனை யென்தாவென்பேன். –21

[அம்ப! –தாயே:
ஸாநுப்ராஸ – அடிக்கடி, தொடர்ந்திருக்கும்படி இடைவிடாமல்;
ப்ரகடித தயை: வெளிக்காட்டா நின்ற, பகிரங்கமாகக் காட்டப்பட்ட , பிரகாசம் செய்யப்பெற்ற தயையை உடையவரும்;
ஸாந்த்ர வாத்ஸல்ய – அதிகமான அன்பினால்;
திக்தை – நெருங்கினதும், பூசப்பெற்றதும்;
அநகை: – எக்காலத்திலும் உபேக்ஷை முதலான குற்றம் அற்றதும்;
ஸ்நிக்தை – இடைவிடாமல் ஸ்நேகம் உள்ளதும்;
அம்ருத லஹரீ— அமிருதமயமான அலைகளோடு;
லப்த – அடையப் பெற்ற;
ஸப்ரும்மசர்யை— நிகரானதும் (அமிருதப் பெருக்குக்குச் சமானமானதும்)ஆன;
க்ஷணம் – கொஞ்சம்;
கடாக்ஷை – கடைக்கண் பார்வைகளினால்;
தாப த்ரய—மூன்று வித தாபங்களினால்;
விரசித – உண்டான;
கர்மே – வெய்யிலில்;
காட தப்தம் – நன்றாகத் தபிக்கப் பெற்ற;
ஆகிஞ்சந்ய — வேறு உபாயம் இல்லாமையால்;
கல்பிதம் – வாடிப் போன;
மாம் – அடியேனை;
ஆர்த்ரயேத: குளிரச் செய்ய வேணும்.

அன்னையே! ஒரே தாரையாகப் பொழிகின்ற அருளினாலே பூசப்பெற்ற அமிருத மயமான
அலைகள் வீசும் தேவரீரது கடாக்ஷங்களினால் முவ் விதத் தாபத் திரயங்களில் அகப்பட்டு
வெந்து கிடக்கிற அடியேனைக் குளிரும்படி செய்து ஆதரிக்கக் கடவீர்.]

————-

பவ பய தமீ பாநவ த்வத் ப்ரஸாதாத் பகவத ஹரவ்
பக்திம் உத்வேல யந்த ஸர்வே பாவா ஸம்பத் யந்தே
இஹ அஹம் சீதள உதார ஸீலாம் த்வாம் கிம் யாசே யத
மஹ தாம் மங்களா நாம் ப்ரபந்நாம் பூயோ பூய திஸஸி –22-

துளக்கமில் விளக்கமேறுந் திருவருள் சுரக்கும்பெற்றி
கொளக்குறை வில்லாவள்ளற் குணமெனு மணியின் கோப்பு
வளர்க்குண வளப்பமேயா முன்னரு ளமுதநோக்கே
களக்கதி கொதித்துவேகும் கதியிலா வென்னைக்காக்கும். .22.

[பவபய — ஸம்ஸார பீதியாகிற;
தமீ பாநவ: — (திரண்ட இருளுக்கு) இரவுக்கு சூரியன் போன்றனவும்;
த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய அநுக்ரஹத்தால்;
பகவதி ஹரௌ – ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ்ஸு என்ற ஆறு குணங்கள் நிறைந்த ஸ்ரீமந் நாராயணனிடத்தில்;
பக்திம் – பக்தி ஞானங்களை;
உத்வேலயந்த—கரை புரளச் செய்யுமவையாவன;
ஸர்வே பாவா: – எல்லா வேண்டற்பாடும், அகில மநோபாவங்களும், எல்லா எண்ணங்களும்;
ஸம்பத்யந்தே – பெருகா நின்றன, உண்டாகின்றன;
இஹ – இங்கு இப்படிச் சிந்திக்கும் பொழுது;
அஹம் – அடியேன்;
சீதள உதார சீலாம் – குளிர்ந்ததும் உயர்ந்ததுமான ஸ்வபாவத்தையுடைய;
த்வாம் – தேவரீரை;
கிம் யாசே – எதை யாசிப்பேன்?;
யத: – ஏனெனில், யாதொரு காரணத்தினால்:
மஹதாம் மங்களாநாம் — மிக்க க்ஷேமங்களுடைய:
ப்ரபந்தாந் – வரிசைகளை:
பூயோ பூய: அடிக்கடி;
திசஸி – கொடுக்கிறீர் அல்லவா?

தேவரீருடைய கிருபையினால் அடியேனது எண்ணங்களெல்லாம் பகவான் மீது பக்தியை
விருத்தி செய்து கொண்டு ஸம்ஸாரமாகிய காரிருளுக்குச் சூரியனாக இருக்கின்றன.
அவ்வளவோடு நிற்காமல் மேன்மேலும் அளவற்ற மங்களங்களைத் தேவரீரே அளித்துக் கொண்டிருக்கையில்
அடியேனுடைய தீ வினையினால் மிகவும் பயத்தோடு கூடிய யான் தேவரீரைப் பிரார்த்திக்க வேண்டியது யாது உளது?]

—————–

மாதா தேவி த்வமஸி பகவாந் வாஸுதேவ: பிதா மே
ஜாதஸ் ஸோஹம் ஜநநி யுவயோ: ஏக லக்ஷ்யம் தயாயா:
தத்தோ யுஷ்மத் பரிஜந்தயா தேசிகரைப் யதஸ்த்வம்
கிம் தே பூய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபாஸி.– 23.

நீயேயென தன்னைத் திரு நாராயண னத்தன்
மெய்யே யெனை யீன்றீர் விழி பொய்யா தருள் பெய்தீர்
மெய்யாரியர் தந்தாரெனை நும் பேரடி யானென்
றய்யாவினி யென்னாமென வம்மா மகிழ் கின்றாய். 23.

[ தேவி! – தேவியே!
த்வம் –தேவரீர்;
மே –அடியேனுக்கு;
மாதா அஸி – தாயாக ஆகிறீர்;
பகவாந் வாஸுதேவ: – பகவானாகிய பெருமாள்;
பிதா – தகப்பன் ஆகிறார்.;
ஜநநி! – தாயே!;
அஹம் — அப்படிப்பட்ட அடியேன்;
யுவயோ: – தேவரீர்கள் இருவருடைய;
தயாயா— திருவருளுக்கு;
ஏக லக்ஷ்ய: – முக்கிய குறிப்பாக;
ஜாத: –ஆகி விட்டேன்;
யுஷ்மத் பரிஜந்தயா – தேவரீர்கள் கிங்கரன் ஆகுகைக்கு;
தேசிகை: – ஆசார்யர்களால்;
தத்த: – பர ஸமர்ப்பணம் பண்ணப் பட்டேன்;
தே – தேவரீருக்கு;
பூய: – பின்னும்;
கிம் ப்ரியம் – என்ன ஆசை;
இதிகில – என்று சொல்வது போல;
ஸ்மேர வக்த்ரா – மலர்ந்த முகம் உடையவர்களாய்;
விபாஸி – விளங்குகிறீர்.

அன்னையே! தேவரீர் அடியேனுக்கு மாதா; பகவான் பிதா;
அடியேன் தேவரீர்கள் இருவருடைய தயைக்கும் முக்கியமான பாத்திரமாய் இருக்கிறேன்.
ஆசார்யர்கள் அடியேனைத் தேவரீர்களுக்கு அடிமை யாக்கி விட்டார்கள்.
இப்படி யிருக்க இதற்கு மேல் என்ன பிரியம் இருக்கிறது அடியேனுக்கு என்று புன்னகையுடன் இருக்கின்றீர்]

————

கல்யாணா நாம விகல நிதி: காபி காருண்ய ஸீமா
நித்யா மோதா நிகம வசஸாம் மௌளி மந்தார மாலா,
ஸம்பத் திவ்யா மது விஜயிந: ஸந்நி தத்தாம் ஸதா மே
ஸைஷா தேவீ ஸகல புவந ப்ரார்த்தநா காமதேநு: –.24.

தருமங்கல தருமந்தரு திருவாமொரு தயையாய்த்
திருமாமறை யெழுமாமுடி தருமாபத மலராள்
திருவாயரி விரிமார்வுறை யொருமாவிறை யளியோள்
வருவாளென திதயத்தரு ளுதயத்திரு வொளியாய்.–.24.

[ கல்யாணாம் — மங்களங்களுக்கு;
அவிகல நிதி: – நாசமுறா நிதியும்;
காபி—வாசா மகோசர மஹிமை யுடையவும்;
காருண்ய ஸீமா – தயைக்கு எல்லை நிலமாயும்;
நித்யாமோதா – நிலைநின்ற ஆநந்தம் உடையவும்;
நிகம வசஸாம் – வேத வாக்குக்களுடைய;
மௌளி மந்தார மாலாம் — சிரஸ்ஸுக்குக் கற்பகப் பூமாலை போன்றவும்;
மதுவிஜயிந: – மது என்னும் அசுரனை ஜெயித்த பகவானுக்கு;
திவ்யாஸம்பத் – கலங்காப் பொருளாயும்;
ஸகல புவநப்ரார்த்தநா காமதேநு: — எல்லா ஜனங்களுடைய எல்லா வேண்டுதலையும் அளிப்பதில் காமதேநுவைப் போன்றவும்;
ஸைஷா தேவி – அப்படிப்பட்ட இந்த ஸ்ரீதேவி;
மே – அடியேன் பொருட்டு, அடியேனுடைய மனத்தில்;
ஸதா – எப்பொழுதும்;
ஸந்நிதத்தாம் – நித்ய வாசம் பண்ணக் கடவள்.

மங்களங்களுக்கெல்லாம் நாசமிலாத இருப்பிடமாயும், வாக்குக்கு எட்டாதவளும்,
தயைக்கு எல்லை நிலமாயும், வேதங்களுக்குச் சிரோபூஷணமாயும், பகவானுக்குத் திருவாயும்,
ஜனங்களுடைய எல்லா அபீஷ்டங்களையும் கொடுக்கும் காமதேநுவைப் போன்றவளாயும் இருக்கிற
லக்ஷ்மீ அடியேனுக்கு எப்பொழுதும் ஸாந்நித்யம் செய்யவேண்டும்]

—————–

உபசித குரு பக்தே; உத்திதம் வேங்கடேசாத்
கலி கலுஷ நிவ்ருத்யை கல்பமாநம் ப்ரஜாநாம்,
ஸரஸிஜ நிலயாயா: ஸ்தோத்ரமேதத் படந்த:
ஸகல குசல ஸீமா ஸார்வ பௌமா பவந்தி.–.25.

பெருகிய குருக்கணற்றாட் பத்தியின் சித்தி பூக்கும்
ஒருவனாம் வேங்கடேசன் உலகெலாம் கலி தவிர்க்கத்
தருமிதோர் திருவின் பாடல் தேறிய மனத்தரோத
இரு நிலம் கொழிக்கும் செல்வத் திரு நலம் பெருகி வாழ்வார்..25.

[உபசித – விருத்தி செய்யப் பெற்ற;
குருபக்தே – ஆசார்ய பக்தியையுடைய;
வேங்கடேசாத் – வேங்கடேசன் என்னும் திருநாமத்தையுடைய அடியேனிடமிருந்து;
உத்திதம் – ஸ்ரீ ஸங்கல்பத்தால் வெளிப்புறப்படா நின்றவும்;
ப்ரஜாநாம் –ஸகல ப்ராணிகளுடைய:
கலி கலுஷ நிவ்ருத்யை: — கலிகாலத்தால் உண்டாகும் தீமைகளைப் போக்கும் பொருட்டு, வினை விலக்குதலில்;
கல்பமாநம் – நற்றிறமையுடையவுமான;
ஸரஸிஜ நிலயாயாம் – தாமரை மலரில் நித்யவாஸம் செய்யும் அலர்மேல் மங்கையாம் ஸ்ரீதேவியினுடைய;
ஏதத் ஸ்தோத்ரம் — இந்த ஸ்தோத்ரத்தை;
படந்த: – படிப்பவர், சொல்லுபவர், குருமுகமாக ஸார்த்தமாகக் கேட்டு அநுஸந்திக்குமவர், கிளிபோற் சொல்லுமவர்;
ஸகலகுசலஸீமா – எல்லா மங்களங்களுக்கும் எல்லை நிலங்களாகவும், ஸகலவிதமான க்ஷேமங்கள் என்னும் எல்லை வாய்ந்த மண்டல முழுமைக்கும்;
ஸார்வபௌமா – சக்ரவர்த்திகளாகவும் ஆகின்றார்கள்.

குருபக்தியிற் சிறந்த ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனால் ஜனங்களுக்கு உண்டான
கலியின் கொடுமையைப் போக்கத் தக்கதென்று சொல்லப்பெற்ற
இந்த ஸ்ரீஸ்துதியைச் சொல்லுகிறவர்கள் ஸகல மங்களங்களையும்
தங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்யத் தக்கவராவார்கள்.]

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கேசவ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: