Archive for October, 2021

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–

October 31, 2021

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

யதீந்திர மத தீபிகா :

ஸர்வம் வஸ்து ஜாதம் .
அவை ஜடம் + அஜடம் எனவாய்
பிரகிருதி, காலம் 2ம் ஜட வஸ்து.
நித்ய விபூதி, தர்மபூத ஞானம், ஜீவன், ஈஸ்வரன் இவை 4ம் அஜட வஸ்து ஆகும்.

இந்த அஜட வஸ்த்துக்கள் 4ல் முதல் இரண்டும், அதாவது நித்ய விபூதி, தர்மபூத ஞானம் 2ம் பிரத்யக் என்றும்,
ஜீவனும் ஈஸ்வரனும் பராக் என்றும்,

ஜடம், அஜடம், இரண்டும் திரவ்யத்திலும் ,
ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் அதிரவ்யங்களுமாய்
கீழ் கண்ட Chart மூலம் அறியலாம்.

வஸ்து பிரமாணம் (3) ; பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் -; ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் ; பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் -; நித்ய விபூதி + தர்ம பூத க்ஞானம்
| தர்மி பூத க்ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் ; பர +
| வியூக (4) +
| விபவ ; ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி +
| அர்சை (106 +ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு -; அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமைகாந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

—————–

ஜட வஸ்துவில் ஒன்றான பிரக்ருதி 23 தத்வங்களாய் பார்க்கப் படுகின்றன. அவை:
மூல பிரகிருதி. மஹான், (சாத்விக + ராஜச + தாமச ) அஹங்காரம் – 3
ஆகாசம், வாயு, அக்நி , ஜலம், பிருதிவி ஆகிற – 5
ஞான இந்திரியம் – சப்த, ஸ்பர்ச, ரூப ரச கந்தம் – 5
கர்மேந்திரியம் – காது , தோல், கண், நாக்கு, மூக்கு – 5
பஞ்ச தன்மாத்ரைகள் . சக்ஷுர், கிரண, ஷோத்ரிய, பாயு, உபஸ்தங்கள் – 5
இவற்றுக்குமேல் மனசு 24 வது தத்வம் . ஆத்மா 25. பரமாத்மா 26 வது தத்வம் என்றும் அறியவும்.

————–

பிரத்யக் + பராக்
என வஸ்துக்கள் ஐந்திரியமாகவும்; அதீந்த்ரிய மாகவும் காணக் கிடைக்கின்றன.

பிரமா ; உள்ளதை உள்ளபடி அறிகை பிரமா .
பிரமாணம்; பிரமா கரணத்வம் பிரமாணம். அதிசயித்த ஞானத்தை கால விளம்பம் இன்றி சாதித்துக் கொடுப்பது பிரமாணம்.

பிரமா -; ஞானம் ; லக்ஷியம்.
பிரமாணம் -; கருவி ; லக்ஷணம்.
பிரமேயம் ; பிரத்யக்ஷ, அனுமான, ஸப்த பிரமாணங்களால் அறியப் படுமவை பிரமேயம்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டு நேராக உள்ளதை உள்ளபடி அறிய ஹேதுவாக இருப்பது பிரத்யக்ஷம்.

ஸவிகல்ப ஸாக்ஷத்காரம் ; இரண்டு, அதற்கு மேற்படவும் குணங்களை கிரஹிப்பது .
நிர்விகல்ப ஸாக்ஷத்காரம் ; பிரதம பிண்ட கிரஹணம் – விசேஷணங்களை சமூகமாக முதல் முறையாக அறிதல்.
சம்யோகம் -; இந்திரிய திரவ்ய சம்பந்தம் ஸம்யோகம்
சம்யுக்த சம்யோகம் -; திரவிய ஆஸ்ரய குணத்தை அறிகை .உ.ம். வர்ண கலாபமான மண் குடத்தின் வர்ணம் இன்னது என்று அறிகை.

நம்முடைய ஞானம் இந்திரிய ஸம்யோகத்தால் உண்டாவது -; அர்வாசீனம்.
ரிஷிகளுடைய ஞானம் யோக ஸம்யோகத்தால் உண்டாவது. -; அநர்வாசீனம் – ஸ்வயம் சித்தம்.
ஆழ்வார்களுடைய ஞானம் பகவத் அனுக்கிரஹ ஸம்யோகத்தால் உண்டாவது. – மயர்வற மதி நலமான பகவத் பிரசாதம்..

ஸம்ஸ்காரம் -; பிரத்யக்ஷத்தால் ஏற்படும் ஞானம்.
ஸ்மிருதி – பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் ஸ்மிருதி.(நினவுப் பதிவு).
ஊகம் , சம்சயம், பிரதிபா, பிரமம் இவை அனைத்தும் பிரயக்ஷத்துள் அடக்கம்.
சம்ஸயம் -; இதுவா, அதுவா என்பது – ஸ்தம்போவா புருஷோவா என்கிற சந்தேகம்.
விபர்யயம் -; அன்யதா ஞானம் + விபரீத ஞானம் வஸ்து, குணம் இவைகளை மாறாடி நினைகை .
பிரமம் ; பாம்பை பழுதென நினைப்பிடுகை பிரமம்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் – காணலாக ஜீவனை காணும்படியானவன் ஜீவன் என்னல்.
ஸக்கியாதி -; உண்மை அறிவு. இந்த உண்மை அறிவால் அறியப்படும் அனைத்தும் உண்மை / சத்யம்.
அ+கியாதி =; சுக்தியை வெள்ளி என்று பார்க்கும் போது பிரத்யக்ஷத்தில் கிளிஞ்சல் இருந்தாலும்
அதன் பளபளப்பினால் வெள்ளியின் நினைவு வருகிறது.
இங்கே பிரயக்ஷமும், ஸ்ம்ருதியும் இருக்கின்றன. சுக்திக்கும் வெள்ளிக்கும் உள்ள பேதத்தை உணர முடியாத
அறியாமையோடு கூடிய ஞானம் அக்யாதி /அன்யதா கியாதி என்கிறான் மீமாம்ஸகன்.

ஆத்மாவின் ஞானம் ஒன்று தான் எங்கும் இருப்பது. அதற்கு விஷயமாக வெளிப் பொருள் எதுவுமில்லை.
சுக்தியானாலும், வெள்ளியானாலும் பார்க்கப்பதுவது ஞானம் தான் என்கிறான் யோகாசாரன் (பௌத்தன்). இது ஆத்மகியாதி.

சுக்த்தியில் வெள்ளி உண்டாகி பிறகு போய் விடுகிறது.
இப்படி வெள்ளி என்கிற ஞானம் உண்டாகி மறைவது அநிர்வநீயக்யாதி என்கிறான் அத்வைதி..

விசேஷணம் -; சிறப்பம்சம் , ஒன்றிலிருந்து மற்றதை வியாரவர்த்திக்கை / கழித்து வேறுபடுத்தல் பிரயோஜனம்.
உ.ம். கடம் என்றால் படத்வ பின்னம்.

சங்க : பீத : என்பது மருள் (அக்ஞானம்=குணத்தை மாறாடி நினைத்தல் ) – பார்ப்பவன் குறையே ஒழிய பொருளில் குறை இல்லை..
முத்துச் சிப்பியை வெள்ளி என்று அறிதல் மயர்வு (அன்யதா ஞானம்=வஸ்துவை மாறாடி நினைத்தல் ) பயன் பாட்டின் குறை.
மாறாக , தெருள் = பிரமா – வியவஹார பூர்த்தியோடு கூடிய ஞானம்.

——–

வேதாந்தம் ; விசேஷ ஸாஸ்த்ரம் .

வியாகரணம்
தர்க்கம்
மீமாம்சை இவை -; சாமான்ய ஸாஸ்த்ரம் .

உத்திஷ்ட ; எழு – Arise
ஜாக்ரத ; விழித்துக் கொள் – Awake and
பிராப்பியவரான் நிபோதித -; முயற்சி செய் – Stop not till the Goal is reached.
என்று ஞான ஸந்தர்சன கார்யம் விவேகம்.
ஐந்த்ரியத்தை பிரத்யக்ஷ த்தாலும், அனுமானத்தாலும் சாதிக்கலாம்.
அதீந்திரியமான பகவத் தத்வத்தை சப்த பிரமாணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
பிரத்யக்ஷ அனுமானங்கள் ஐந்திரிக சாதன மாகையாலே.

———————————-

இது இப்படி, இது ஆனபடியாலே .
இது இப்படி இல்லை; இது இல்லாத படியாலே .
என்று யூகிப்பது அனுமானம்.

அனுமிதி -; பிரமிதி -; ஞானம் .
அனுமானம் -; கருவி (பிரமாணம்). ஆக அனுமிதிக்கு கரணம் அனுமானம். அப்படிப்பட்ட அனுமானம் பலிக்க :
ஹேது வியாப்தியால் இருக்க வேண்டும்.
பக்ஷத்தில் ஹேது தர்மம் இருக்க வேண்டும்.
ஸபக்ஷத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஹேது வியாவர்த்திக்கக் கூடாது.
ஹேது பிரத்யக்ஷத்தில் பாதிக்கப் பட கூடாது.
பிரதி பக்ஷம் இருக்கக் கூடாது.

வியாப்தி -; எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கு நெருப்பு உண்டு என்று பொதுப்படுத்திக் கூறுவது வியாப்தி..
வியாபகம் -; ஆதிக்யம் உடையது. – அதிக இடத்தில் அதிக காலத்தில் இருக்கும்.
புகை இருக்குமிடம் எல்லாம் நெருப்பு உண்டு. ஆகையால் நெருப்பு வியாபகம். உ.ம். மடைப்பள்ளி. பூஜை அறை etc
வியாப்பியம் -; நியூனதையோடே கூடி இருக்கும். – குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் இருப்பது.
நெருப்பு இருக்கும் இடமெல்லாம் புகை இருப்பதில்லை. ஆகையால் புகை வியாபியம். உ.ம். அயப்பிண்டம்.
சாகசர்யம் -; இது இருந்தால் அது உண்டு . புகை (வியாப்பியம்) இருந்தால் நெருப்பு (வியாபகம்) உண்டு
என்கிற நியத சாகசர்யம் என்பது -; நியத சாமான்யாதிகரண்யம்

பர்வதோ வன்னிமான், தூமத்வாத்.

இதில்
பர்வதம் – பக்ஷம். வன்னிமான் – சாத்யம் . தூமத்வாத் – ஹேது .
சாத்தியம் எதிலே சாதிக்கப் படுகிறதோ அது பக்ஷம்.
நெருப்பு மலையில் சாதிக்கப் படுவதால், மலை = பக்ஷம்.
எதை சாதிக்கிறோமோ அது சாத்தியம் .
மலையில் நெருப்பை சாதிப்பதால், நெருப்பு = சாத்தியம்.
எதனால் (எந்த காரணத்தைக் கொண்டு) சாதிக்கிறோமோ, அது ஹேது = லிங்கம் = சாதனம்.
புகையைக் கொண்டு மலையில் நெருப்பை சாதிப்பதால், புகை = ஹேது .

சபக்ஷம் -; எங்கெல்லாம் புகை இருந்ததோ அங்கெல்லாம் நெருப்பு இருந்ததாகக் காண்கிறோம்.. உ.ம். மலை, அடுப்பு, ஊதுவத்தி etc .
விபக்ஷம் -; நெருப்பாகிற வியாபகம் சேராத இடம் உ.ம். குளம்.
லிங்க பராமர்சம் ; புகை என்கிற அடையாளம் (ஹேது ) மலை என்கிற பக்ஷத்தில் இருப்பதாக காண்பது.

ஈர விறகு என்றால் புகையும்

1. அன்வய வியாப்தி . 2. வியதிரேக வியாப்தி. 3. அன்வய வியதிரேகி 4. பாவ வியாப்தி. 5. அபாவ வியாப்தி என ஐந்து வகை.

அன்வய வியதிரேகி -; அந்வயம், வியதிரேகம் இரண்டிலும் சொல்லலாம்.
கேவல அன்வயி -; அன்வயத்தில் மட்டுமே சொல்லலாம். உ.ம். பிரம்மத்தை வார்த்தையால் சொல்லத் தகும், வஸ்த்துவாய் இருக்கையாலே..
இதுக்கு விபக்ஷம் சொல்ல முடியாதாகையால் இது கேவல அன்வயி யாகும், அவஸ்து என்ற ஒன்று இல்லையாதலால்.

அவியாபதி -; உ. ம். வெளிய பசு என்றால் வேறு நிற பசுக்கள் உண்டாகையால் ;
அதிவியாப்தி -; உ.ம். கொம்புள்ள பசு என்றால், கொம்புள்ள வேறு மிருகங்களும் உண்டாகையால்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் உ.ம். காணலா ஜீவனை காணும் படியான ஜீவன் என்னால்.

இனி உ.ம். பார்க்கலாம் :
ஜீவன் முக்குணத்தன், என்றால், நித்ய முக்தர்கள் பக்கல் அவியாப்தி
ஜீவன் ஞான குணகன் என்றால்,, பரமாத்மாவும் ஞான குணகன் ஆகையால் அதிவியாப்தி .
சக்ஷுர் விஷயம் ஜீவன் என்றால், கூடாத அடையாளம் ஆதலால் அசம்பவம்..

இதில் இன்னது இருக்கிற படியாலே இப்படி இருக்க வேண்டும், இதை போலே .
எங்கெல்லாம் புகை உண்டோ, அங்கு நெருப்பு இருக்கிறது, சமையல் அறை அடுப்பு போலே.
இந்த மலை புகை உடைத்தது,.
ஆகையாலே , இந்த மலை நெருப்பை உடைத்ததாய் இருக்கிறது,–என்பதையே
பர்வதோ வந்நிமான், தூமத்வாத் என அனுமானிக்கிறோம்.

ஆக அனுமானிக்க 5 அங்கங்கள் வேண்டும். :அவை
1-பக்ஷம் – மலை.
2-ஹேது – புகை.
3-சாத்யம் – நெருப்பு.
4-ஸபக்ஷம் – சமையலறை.
5-விபிக்ஷம் – குளம்.

————

உபமானம் – வியாப்திக்கு சம்பந்தப் பட்ட மற்றுமோர் இடம் – பூஜை அறை .
அன்வய வியாப்தி -; புகை இருக்கும் இடத்தல் நெருப்பு இருக்கும்
வியதிரேக வியாப்தி ; நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது.
இதில் புகை – ஹேது , நெருப்பு சாத்தியம். ஆக சாத்தியம் இல்லையேல் ஹேது இருக்காது.
அனுமானம் துஷ்ட மாகாத போது ஏற்படும் ஞானம் ஸாது .

அனுமான பிரக்ரியை -;

1. பிரதிக்ஞா – பக்ஷத்தில் ஸாத்யம் இருப்பதாக அறிவது.
2. ஸத் ஹேது – ஹேதுவை காண்பது.
3. உதாரணம் – எங்கெல்லாம் புகை இருக்குமோ, அங்கே நெருப்பு இருக்கும், மடைப் பள்ளி போலே .
4. உபமானம் – மடப் பள்ளியில் புகை-நெருப்பு சம்பந்தத்தை , மலையில் உள்ள புகையோடு ஒப்பிட்டு மலையில் நெருப்பு இருக்க வேண்டும் என யூகிப்பது.
5. நிகமனம் – ஆக, இம்மலை நெருப்போடு கூடியது (அன்வயம்)
அதவா இம்மலை நெருப்பின்மை யோடு கூடியது அல்ல (வியதிரேகம்) என முடிப்பது.
தூம சதுர்ச தூசி மண்டலம் ஹேதுவாபாச மாகக் கடவது.

நையாயிகன் – 1 -; 5 அவஸ்யா பேக்ஷிதம் .
மீமாம்சகன் – 1 -; 3 மட்டும்.
பௌத்தன் – 2ம் 4லும் .
விசிஷ்டாத்வைதி – அநியமம்

துஷ்ட அனுமானம் :

1. அசித்தம் -;
a . ஸ்வரூப அசித்தம் – ஜீவன் அநித்யன், கண்ணால் பார்க்கப் படும் குடத்தைப் போலே .
b .ஆஸ்ரய அசித்தம் – ஆகாசத் தாமரை போலே .
c . வியாப்தி அசித்தம் – எது எது உள்ளதோ அது அநித்தியம் என்பதில்,
உதாரணம் காட்டப் படவில்லை யாதலால், உதாரண ராஹித்யத்தால் அசித்தி .

2. விருத்தம் -; பிரகிருதி நித்யா, கிருதகிருத்தவாத் , காலவது ..
உலகம் அழிவில்லாதது, படைக்கப் பட்டதால், கால தத்வத்தைப் போலே .
படைக்கப்படுமவை யாவும் அழியக் கூடியவை ஆகையாலே , நித்யம் என்று சாதிப்பது விருத்த அனுமானம்.

3. அனைகாந்திகம் (வியபிசாரம்) -; ஹேதுவும், சாத்தியமும் சேருமிடம் ஏகாந்தம். உ.ம். புகை+நெருப்பு கூடிய மலை .
சேராத இடம் தோஷம் (அ ) வியபிசாரம்.உ.ம். புகை இல்லாத நெருப்பு பழுக்கக் காச்சின இரும்பு.

a . ஹேது – பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் 3லும் இருந்தால், அது சாதாரண ஹேது.
உ.ம். ஸப்தம் அழிவற்றது, அறியப் படுவதால், ஆத்மாவைப் போலே .
”அழிவற்றது” என்கிற ஹேது , ஸப்தத்தில் (பக்ஷத்தில்) உள்ளது. ச பக்ஷமாகிற ஆத்மாவுக்குப் பொருந்தும் .
ஆனால் உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட விபக்ஷமான கடத்துக்குப் பொருந்தாது,
கடம் அழியக் கூடியது ஆகையாலே . அனுமானமும் தோஷமாய் முடியும்.

b . ஹேது – பக்ஷத்தில் இருந்து, சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லாது போனால், அது அசாதாரண ஹேது .
உ.ம். பூமி அழிவற்றது, கந்தவது பிருதிவி. ”அழிவற்றது” என்கிற ஹேது பக்ஷத்தில் மட்டும் இருந்து,
மற்ற இரண்டில், சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லையாய்ப் போவது.

4. பிரகரண சமம் (ஸத் பிரதி பக்ஷம்) ;
உ. ம். பகவான் நித்யம், அநித்ய தர்மம் இல்லாத படியால்.
இதில் ஹேது ”நித்யம்”.
பகவான் அநித்தியம், நித்ய தர்மம் இல்லாதபடியால்.
இதில் வரும் ” அநித்தியம்” பூர்வ வாக்யத்துக்கு ஹேத்வந்தரம் எதிர்மறை ஹேத்வபாவமாகையால், ஏற்படும் அனுமானம் தோஷதுஷ்ட்டம்.

5. காலாத்யபாவம் -;
உ.ம். நெருப்பு உஷ்ணமில்லாதது, வஸ்துவாய் இருக்கிறபடியாலே , ஜலத்தைப் போலே .
பிரத்யக்ஷத்தில் நெருப்பு உஷ்ணமானது. ஆகையால், சாத்தியம் பக்ஷத்தில் இல்லாத போது அபாவம்.

—————

தர்க்கம் -;

a நிஸ்சய வாதம். – தர்க்க அனுகிருஹீத பிரமாண பூர்வக தத்வ அவதாரணம்.
பிரமாணங்களின் உதவி கொண்டு உண்மைப் பொருளை நிரூபித்தல் .
வாதி பிரதிவாதி பக்கல் சாராமல் , பக்ஷபாத மில்லாமல் செய்யப்படுமது.
b ஜல்பம் – ஜன்னி வந்தாப் போலே சொன்னதை விடாமல் மீண்டும் மீண்டும் பேசி வாதடுவது.
c விதண்டா – தன் பக்ஷ ஸ்தாபனத்தை விட்டு, எதிரி பக்ஷ தவற்றையே பேசுவது.
d சலம் – எதிரி பக்ஷம் நினைப்பிடாததை ஆரோபித்து மடக்கி பேசுவது..
e ஜாதி – ஸ்வ பக்ஷ விரோதமாய் நிக்ரஹத்தில் முடியும் வாதம் ஜாதிஹி.
f நிக்ரஹ ஸ்தானம் – பராஜாய ஸ்தானம் . தவறான உத்தரத்தால், தன் பக்ஷம் தோற்றுப்போ போவது.
இவை 6ம் அனுமானத்துக்குள்ளும் பிரத்யக்ஷயத்துக்குள் அந்தர்கதம் .

—————-

ஸப்த பிரமாணம் —

பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிக்கப் படலாம். அதே போல் அனுமானம் பிரத்யக்ஷத்தால் பாதிக்கப்படலாம்.
ஆனால் சப்த பிரமாணங்களில் ஒன்றான வேதம் ஸவ்த சித்தம்.
அதீந்ரியமான பிரம்மத்தை அறிய சப்த பிரமாணமாகிற வேதம் ஒன்றே வழி. அது கால ஆராய்ச்சிக்கு உட்படாதது. அநாதியானது.
ஒரு புருஷனால் சொல்லப் பட்டது அல்லதாய் அபௌருஷேயம். அபூர்வார்த்த பிரதிபாதனே ஸதி சத்ய வாதத்துவம் தெரியாத
புதிய அர்த்தங்களைத் தருவதோடு சத்யமான வற்றையே பேசும்.

பிரத்யக்ஷத்துள் ஒன்றான ஸ்ரோத்ர ஐந்திரிய கரண சப்தம் வார்த்தை அளவிலானது.
வேதமாகிய பிரமாணத்துக்கு கரணம் (கருவி) சப்தம் அது சப்த்தத் தால் குறிப்பிடப் படும் பொருள் வரையிலுமாக உணர்த்த வல்லது.

வேதம் ஆப்த வசனம் என்பது நையாயிக பக்ஷம். சத்ய வசனமாகிலும் ஆப்தன், புருஷனாலே சொல்லப்பட்டது என்றால்
அபௌருஷேயத்வம் சித்திக்காது.ஆகவே அநாப்பதனாலே சொல்லப் படாதது என்று
வியதிரேகத்திலே கொள்வோமேயானால், அதுவே சாதுவான பக்ஷம். இராமானுஜ சம்மதம் .

அநாப்தனாலே சொல்லப்படாத வாக்கியத்தாலே ஏற்படும் அர்த்த ஞானம் , சப்த பிரமாணம் எனப்படும்.

காரணத்வ, பாதகத்வங்கள் இதுக்கு இல்லை.. வேத பிரமாணத்துக்கு பகவானும் காரணமில்லை..
அவனும் முன்னிருந்தபடி புத்தி செய்து படைப்பு காலத்தில், பிரமனுக்கு உபதேசித்தானாகில் இதுக்கு காரணத்வ தோஷம் இல்லை.

”பசுவை அழைத்து வா .கட்டு” என்ற வாக்கியத்தின் படி இன்னது பசு என்கிற காரிய-காரணத்வ சம்பந்தத்தால்
ஏற்படும் அறிவு ப்ரஹ்மத்தின் விஷயத்தில் உதவாது. காரணம் ப்ரஹ்மம் சித்த வஸ்து ஒழிய காரிய வஸ்து அல்லவே.
ஆக சப்த வாக்கிய பிரமாணம் ப்ரஹ்மத்தை சொல்லாது என்பது பூர்வ பக்ஷம் .

இதுக்கு பிரதிபக்ஷம் என்ன வென்றால் – ஒரு தாய் தன் குழந்தைக்கு இன்னார் தந்தை என்று காட்டும் போது
வாயால் ”அப்பா” என்று சொல்லி ஜாடை செய்யும் போது குழந்தை புரிந்து கொள்கிறது.
இவ்விடத்தில் வருதல் , காட்டுதல் போல காரிய விவகாரம் இல்லை ஆகிலும் குழந்தைக்கு இன்னார் தான்
தந்தை என்கிற அறிவு சித்த வஸ்துவைக் காட்டி சப்த சூசனையால் சாதிக்கப் படுவதால்,
ப்ரஹ்மத்தின் விஷயத்திலும் காரியபரதையாகிற அபேக்ஷை இல்லை.

”ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதிதாஸ்யவ்ய: என்கிற உபாசன காரிய பரதை ப்ரஹ்மத்தின் விஷயத்திலும்
சொல்லலா மாகையாலே , ப்ரஹ்மம் சித்த வஸ்து வானாலும் சப்த பிரமாணம் கொண்டு அப்பியகம வாதம்,
அனப்பியகம வாதம் இரண்டாலும் – எதிராளி சொல்வதை ஏற்றுக் கொண்டோ அல்லது நிராகரித்தோ பிரஹ்மத்தை சாதிக்கலாம்.

பில்லி சூன்யம் சேன யாகாதி அபிச்சாரி கர்மங்கள் அடங்கிய வேத பாகம் பிராமணம் ஆகுமோ என்னில் ,
திருஷ்ட பலத்தைக் காட்டி, அதிருஷ்ட பலமாகிற மோக்ஷத்தில் மூட்டுகிற படியால் வேதம் முழுவதுமாக பிரமாணம் ஆகும்.
திரைகுண்யா விஷயா வேதா: என்பதால் தாமச பிரகிருதிக்கு உண்டான வேத பாகம் சாத்விகருக்கு
அன்வயமில்லை ஆனாலும், அவைகளின் பிராமாண்யதைக்கு குறை இல்லை.

பூர்வ பாகம் கர்ம மீமாம்ஸா – உத்தர பாகம் ப்ரஹ்ம மீமாம்ஸா
கர்ம பாகம் தேவதா ஆராதன விதிகளையும்
ப்ரஹ்ம பாகம் ஆராத்ய தேவதா பிரகாரமும் சொல்லும்.

மந்த்ர அனுஷ்டான விதி பாகம் கர்ம காண்டம். அதில் சொல்லப் பட்ட செயலில் தூண்டி அதில்
உத்தியோகிக்க வேண்டி போற்றிப் பேசும் கொண்டாட்டம் அர்த்த வாதம் – ஹிதைஷி வாக்கியம் விதி.எனப்படும்.

விதி வாக்கியங்கள் அபூர்வம், , பரசங்கியா , நியமம் என மூன்றாய் நித்ய, நைமித்யக, காம்ய கர்மங்கள் என பிரிந்து இருக்கும்.

விரீன் புரோக்ஷய என்கிற விதி வாக்கியம் அபூர்வ விதி. யாக திரவ்யமான நெல்லை ஹவிஸாக பயன்படுத்தும் முன்
புரோக்ஷிப்பாய் என்கிற இந்த விதி நூதனமாக சொல்லப் படுவதால் இது அபூர்வம்.

இரண்டு விதமான செயலில் ஒன்றை முதலில் செய் என்று ஆணை இடுவது ப்ரசங்கியா விதி.

பலவழிகளில் செய்யப்படுமதை ”குரும் அபிகமநாத்’
என்று ஞனத்தை சம்பாதிக்கிற விஷயத்தில் படித்து தெரிந்து கொள்வது , ஆசாரியனை அடைந்து தெரிந்து கொள்வது
என்கிற பல வழிகள் இருக்க, ”குருவை” அடைவாய் என்று உபதேசிப்பது நியமம்.

சந்தியாவந்தனாதி விதிகள் நித்ய விதி.
ஒரு காரணத்தைப் பற்ற வருகிற விதி நைமித்திகம். உ.ம்.கிரஹண தர்ப்பணம்.
ஜோதிஷ்ட்டேன காம்ய கார்ய அபிஸந்தி விதி காம்ய. விதியாகும்.

சந்தா – அனுஷ்டுபு (32 எழுத்து) , த்ரிஷ்டுப்பு (44 எழுத்து) என சந்தஸில் உள்ள எழுத்து, பாத கணக்கு பற்றியது.

கல்பம் – எழுத்து விதி சௌதா ஸ்மார்த்த விதிகளாகக் கடவது.

ஸிக்ஷஆ – ஸ்வரம் சம்பந்தப் பட்டது.

நிரூக்தம் – அபூர்வ அர்த்த வார்த்தைகள் சம்பந்தப் பட்டது.

ஜோதிஷம் – – கால நிர்ணய வானவியல் சாஸ்திரம் ஆகக் கடவது.

வியாகரணம் – இலக்கண சாஸ்திரம்.இவை 6ம் வேதாங்கங்கள் .

மனு, யாக்ஞய வல்கிய , போதாயன, ஆஸ்பலதாயர் இவை போல ஸ்மிருதிகளும் வேதாங்கம் ஆகும் .
பிரம்மா, கபிலர் இவர்கள் இயற்றிய யோக சாஸ்திரம், தள்ளத்தக்கது , அவை வேத விரோதமாம்போது.

ஸ்மிருதிகள் போலே இதிஹாச புராணங்களும் வேதத்துக்கு அவை உப பிராம்மணங்கள் ஆகும்.
ஸ்மிருதிகள் கர்ம பாகத்துக்கு அங்கமானால் , இதிஹாச புராணங்கள் உபநிஷத் பாகத்தின் அங்கமாகும்.

புராணங்கள் வகை 18. அவையுள் சாத்விக புராணங்கள் 6ம் , வேத அனுரோத ராஜஸ., தாமஸ புராண பாகங்களும் பிரமாணம்.
மற்ற பாகங்கள் தள்ளத்தக்கன. பாசுபத ஆகமமும் அப்படியே.

வைகானஸ சாஸ்திரம் போலே பாஞ்ச்ராத்ர ஆகமம் முழுவதும் பகவானாலே வேதத்ததை அனுசரித்து சொல்லப் பட்ட படியால் அதுவும் பிரமாணமே .

வைத்திய சாஸ்திரம் (ஆயுர்வேதம்) , சில்ப சாஸ்திரம் (Temple architecture ) , காந்தர்வம் (Musicology ),
பரதம் (நிருத்யம்), தத்வ, உபாய புருஷார்த்தம் சம்பந்தப் பட்ட பாகங்கள் ஆய கலைகள் 64லிலும் பிரமாணமே

(a)ஆக்காங்க்ஷ (b) யோக்கியதை (c) சந்நிதி ஆகிற 3ம் இருக்கிற லௌகிக கிரந்தங்களும் பிரமாணமாகும் .

சடகோபமுனி .சாதித்த திராவிட வேதம் 4ம் , அதற்கு அங்கமான ஏனைய ஆழ்வார்கள் பிரபந்தங் களும் பிராமண தரம் .
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லை என்பது ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி .

பகவத் ராமானுஜர் சாதித்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள், ஏனைய ஆச்சார்யர் களுடைய ஸ்ரீ ஸூக்திகள் அனைத்தும் பிராமண தமம்

மொத்தத்தில் உண்மை அறிவை போதிக்கும் எந்த வாக்கியமும் பிரமாணம் தான்.

அதில் வேத வாக்கியம் வைதிகம். லோக வியவகார வாக்கியம் லௌகீகம் .

முக்கிய விருத்தி – சிங்கம் என்ற சொல் மிருக ராஜனை குறிப்பது முக்கிய விருத்தி

அபிதா விருத்தி – யோகம் – ரூடி என இரண்டு வகை காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்பதே அவை. உ.ம். பாசகன் = .
பச + ஆக என்கிற சேர்க்கையால் (யோகம்) சமையல் காரன் என்ற பொருளில் வருவது.

பங்கஜம் – பங்க + ஜ என்று சேற்றில் எழ செந்தாமரையாக தாமரை மலரைக் குறிப்பது ரூடியர்த்தம் .
குமுத மலரும் ஆம்பலும் சேற்றிலே மலர்ந்தாலும் தாமரையை அது உணர்த்துவதாக அறிவது லோக வழக்கம் கொண்டு.

முக்கியார்த்தத்தை சொல்ல முடியாத போது அருகாமையான லக்ஷணையாலே குறிப்பது கௌணார்த்தம் .
இது தமிழில் ஆகு பெயர் எனப்படுவது. கங்காயாம் கோச : என்றால் கங்கைக் கரையிலுள்ள தான குடிசையை குறிக்கும் .
உலகம் என்றால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பது போலே.

புஷ்பம் என்றால் அது பழம், பறவை, என்பதான இதர பொருள்களில் இருந்து வேறுபடுகிறது.
நீலோத்பலம் என்றால் செந்தாமரையில் இருந்து வேறுபடுகிறது. ஆக உலகத்தில் எந்தப் பொருளும் ,
விசேஷண விசிஷ்டமாய் விசேஷ்யத்தைக் குறிக்கும் – நிர்விசேஷணமாய் எந்த வஸ்துவும் இருத்தல் ஆகாது என்று தேறுகிறது .

மேலும் வஸ்துக்களைக் குறிக்கும் எந்த சொல்லும் அது அந்த வஸ்துவைத் தாங்கும் ஆத்மா மூலமாக
அந்தராத்மா வான நாராயணன் வரை பர்யவசிக்கும் (சென்று குறிக்கும்) காரணம் ,
பிரம்மா, ருத்ரன்,இந்திரன், அக்நி ஆகிய சேதனர்கள் , பிரகிருதி, காலம், ஆகாசம், பிராணன் ஆகிய
அசேதன வஸ்து விசிஷ்டமான ப்ரஹ்மம் அவனாகையாலே.
இத்தால் , சர்வ சப்த வாச்யார்த்தம் நாராயணன் என்பது வேதாந்த விழுப் பொருள்.

பிரமேயம் – பிரகர்ஷேண மேயம் – நன்கு அறியப்படுவது பிரமேயம்.
பிரமா + இயம் = எது எப்படிப் பட்டது என்று அறிவது பிரமேயம்
எதைக் கொண்டு அறிகிறோமோ அது பிரமாணம் .

யார் அறிகிறாரோ அவர் பிரமாதா.

இவை

திரவ்யம் + அதிரவ்யம் என்று இரண்டாய் ,
அதில்
திரவ்யம் : உபாதான (அவஸ்தா விசேஷம்) பேதம் திரவ்யம் .
பிரக்ருதி (அ) லீலா விபூதி – சரீரம் தொடங்கி மூலப் ப்ரக்ருதியினின்றும் படைக்கப் பட்ட பிராக்ருதங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
கர்ம , சாமான்ய, விசேஷ, ஸமவாய அபாவங்கள் – ஆகிய நையாயிக பக்ஷ 5ம் – திரவ்யத்தோடே அடங்கும்.
மேல், கீழ், சுருங்கல்,விரித்தல் , சலித்தல் ஆகிய நிலை = அவஸ்தை கர்ம.

சலநாத்மகம் கர்மா என்று ஒன்றை 5ஆக விரித்துக் கூறுகை கௌரவம் என்கிற குற்றத்துக்கு உள்ளாகும்.
லாகவம் =சுருங்க உரைத்தல்; கௌரவம் =பரக்கப் பேசுதல் .
இந்த சலனமும் ஸம்யோகத்தோடே சேர்த்து படிக்கலாம்.
கடத்வ படத்வ ஜாதி விசேஷம் இதை அதிலிருந்து வேறு படுத்த போதுமானதாக இருக்க சாமான்யம் என்கிற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்றை நிரூபிக்க இன்னொன்றை புதிது புதிதாக கல்பித்தலாகிற அநவாஸ்தான தோஷம் ஸமவாயத்துக்கு உண்டு. ஆக அதுவும் விலக்கு.

இனி அபாவம் – பிராக் அபாவும், பிரத்வம்ஸா அபாவும், அன்யோன்யா அபாவம் ,
அத்யந்த அபாவமாவது முன்.பின்,ஒன்றினோடு இன்னொன்று ,
எப்போதுமான ”கடத்தில் மறொன்றின் இன்மை ” படத்தில் இன்னொன்றின் இன்மை”
ஸ்வதசித்தம் . தனித்து அபாவாத்தின் அவசியம் இல்லை.

குடம் இன்மை என்கிற நிலை குடத்தை செய்வதற்கு முன் ,(மண் என்கிற நிலை ), அந்த
குடம் உடைந்த பின் (ஓட்டு சில்லு அல்லது சூர்ணம் என்கிற நிலை)
குடத்தின் இடத்தில் இன்னொன்று இருக்கும் பக்ஷத்திலும் (அன்யோன்யா அபாவம்)
குடம் இருந்ததே இல்லை என்கிற அத்யந்த அபாமாகிற 4 ஆக நையாயிகன் பிரித்து திரவ்யங்கள் மொத்தம் 7 என்று கணக்கிடுகிறான்.
இந்த 4ம் பூதல ஸ்வபாவமாய், பிரத்யக்ஷத்தில் அடங்கும் என்பது வைதிகர் – ராமானுஜ பக்ஷம் .

இனி திரவ்யம் என்பது வெவ்வேறு (உபாதானங்களாய்) தசா விசேஷங்களாய், குண ஆஸ்ரயமாய் இருக்கும்.

மஞ்சள் குடம் என்றால் மஞ்சள் வர்ணத்தோடு கூடிய குடம் என்றும் மண்ணாய் இருந்த தன்மை போய்
கடமான தன்மையில் மஞ்சள் பூச்சு ஆசிரயணீயம்.

பிரக்ருதி , காலம் ஆகிற ஜட வஸ்து இரண்டும் ஸ்வயம் பிரகாசம் இல்லாதது.
நித்ய விபூதி , தர்மபூத ஞானம் , ஜீவன் , ஈஸ்வரன் ஆகிற அஜட வஸ்து 4லும் ஸ்வயம் பிரகாசிதம் .
இவை 6ம் திரவ்யம் – முக்குணங்கள் அதிரவ்யம் என்றும் அறியவும்.

– – – – — – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – –

பகவானுக்கு சரீரமாக இருக்கிற பிரக்ருதியை மூலப் பொருளாக கொண்டு
அத்வாரக + ஸத்வாரக ஸ்ருஷ்டி
சமஷ்டி + வியஷ்டி ஸ்ருஷ்டி
என்பவை சிருஷ்டிப் பிரகாரம்.

வைகாரிக + தைஜஸ + பூதாதி ; ஸாத்விக , ராஜஸ, தாமச அகங்காரங்களின் வேறு பெயர்கள்.

சாத்விகா அஹங்காரம் -; 11 இந்திரியங்கள்.
மனசு -; (நிச்சிதா) புத்தி -; அஹங்காரம் = மனசின் வேறு நிலைகள்.
ஞானேந்ரியம் + 5 தன்மாத்ரங்கள் (= சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் ) + பஞ்ச பூதம்.
கர்மேந்த்ரியம் ; வாக், பாணி, பாத, மல, ஜல உபஸ்தங்கள்.
ஞானேந்ரியம் சாத்விக அஹங்கார பரிணாமம்.
கர்மேந்த்ரியம் தாமஸ அஹங்கார பரிணாமம்.
சாத்விக தாமஸ அஹங்கார பரிணாம சககாரி ராஜச அகங்காரம்.

குறிப்பு: ஒருவன் மறித்து விட்டால் பயணமாகும் ஆத்மாவோடு , கர்ம வினைகளும், இந்திரிய ஸூக்ஷ்மங்களும் எடுத்து செல்லப்படும்.
கர்ம வினைகளுக்குச் சேர கிடைக்கிற சரீரத்துக்கு அதனதன் பயன்பாட்டுக்கு அவைகள் ஆட்படும்.
இது பிராகிருத பிரளயம் வரை அழிவதில்லை. பிரம்மா வுடைய காலம் முடிந்து, பிராகிருத பிரளயத்தில்,
பஞ்சபூதங்கள் மஹான்-பிரக்ருதியில் லயம் அடையும் போது மட்டுமே இந்த இந்திரிய ஸூக்ஷ்மங்கள் முடிவுக்கு வரும்.
அந்த நிலையிலும் தொலையாதது கர்ம பயன்.

ஒருவேளை அந்த ஆத்மாவுக்கு மோக்ஷம் கிட்டினால் , அப்ராக்ருத தேசமான அங்கு பிரகிருதி பிராக்ருதமான
இந்திரிய ஸூக்ஷ்மங்கள் புகுற வழியில்லை. விரஜைக்கு இப்பால் அவைகள் விடப்பட்டு , பிரளயத்தோடே நசியும்.
அல்லது அதன் குறைபாடு உள்ள ஆத்மாவுக்கு உபயோகி ஆகலாம்.

பாலை உறையவிட்டு தயிராக்கும் போது , பாலாகிற தன்மை போய் தயிர் என்றாவதாகிற கால அளவைக்கு
இடைப்பட்ட நிலை போன்றதானது , தாமஸ அஹங்காரம் பஞ்ச பூதங்களாக மாறுவதற்கு முன்னான (அவ்யவஹித தசை)
பஞ்சதன் மாத்ரங்களாகிற நிலை எனலாம்..

ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து உருவாவது ஆகாசம். அதாவது தாமஸ அஹங்காரம் ஆகாசமாக மாறுவதற்கு
இடைப்பட்ட நிலையிலுள்ள திரவ்யம் ஸப்த தன்மாத்ரம். அடுத்து வாயு, அக்நி , அப்பு, பிருதிவி இவர்களுக்குரிய
ஸ்பர்ச, ரூப ரஸ , கந்த தன்மாத்ராங்கள் படைக்கப் படுகின்றன.

ஆகாசத்துக்கு ஒலியின் குணம் மட்டும் உண்டு. அடுத்து வரும் வாயுவிற்கு ஸப்தம் , ஸ்பர்சம் இரண்டின் குணங்கள் உண்டு.
அக்கினியில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் முக்குணங்கள்; ; தண்ணீரில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் ரசம் ஆகிய 4ம் ;
பூமியில் கந்தம் சேர 5ன் குணங்களும் உண்டு.

ஆகாசத்தை தொடு உணர்ச்சியால் உணர முடியாது. அதாவது தொட்டு உணர முடியாது.
சூரியன், சந்திரன், உலகம், உலகில் உள்ள எல்லாவிதமான பொருள்களுக்கும் இடம் கொடுப்பதாய் ஆகாசம் இருக்கும்.
ஆகாசம் உண்டாவதில்லை, நித்யம் என்கிற சிலர் வாதமும் தவறு,
ஏனென்றால் ஸப்த தன்மாத்திரத்தில் இருந்து ஆகாசம் உருவாகிறது என்று இங்கு படிக்கப்படுவதால்.

ஆகாசத்துக்கு ஒலி மட்டும் குணம் என்றால் அது நீல நிறமான அக்கினியின் குணத்தில் ஒன்றான
ரூபத்தைக் கூட்டிக் கொண்டு காண்பது ஏன்?
இதற்கு விடை ஒவ்வொன்றின் தன்மை மற்ற பூதங்களில் பஞ்சீகரண முறையில் பகிரப் படுவதுதான் காரணம்.

ஆகாசம்,காற்று நெருப்பு ஆபப் பிருத்வி கால திக்கு ஆத்மா மனசு என வைசேஷிகர்கள் திரவ்யங்களை 9ஆக பிரிக்கின்றனர் .
அது தேவை இல்லை என்பது வைதிக பக்ஷம். திஸ ஸ்ரோத்ராத் என்கிற விடத்தில் திசைகள் படைக்கப் படுகின்றன என்று கொள்ளாமல் ,
திசையில் உள்ள லோகங்கள் படைக்கப் படுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆக திக்கு என்ற பதார்த்தம் கிடையாது. .

ஆகாசம் படைக்கப் பட்ட பிறகு, ஸ்பர்ச தன்மாத்திரத்தில் இருந்து உருவாவது வாயு. இது தொடு உணர்ச்சியால் அறியப்படுவதாய் ,
உஷ்ணம் குளிர்த்தி ரூபம் இல்லாதது. காற்று சப்த, ஸ்பர்ச இந்த்ரியங்களுக்குப் புலப்படுவது.
பிராண (ஹ்ருதய ஸ்தானம்), அபான (பிருஷ்ட பாகம்), வியான (சரீரம் முழுவதும்), உதான (கண்டம்) ,
சமான (நாபி தேசத்தில் ) வர்த்திக்கும் பஞ்ச பிராண சக்தி மனிதன், விலங்கு போன்ற ஜங்கம (mobile life form)
ஜீவராசிகளில் பூர்ணமாய், ஸ்தாவர வர்கங்களில் ஸ்வல்பமாயும் உபகாரமாகிறது.

ரூப தன்மாதரத்தைக் கொண்டு உருவாவது தேஜஸ் . இது அக்நி சூரியன் போன்ற பதார்த்தங்களில் இருந்து ,
தொட்டால் சுடுவதுமாய், ஒளியோடே கூடியது. ஜாடராக்நி யாய் வைச்வாநரன் என்ற பெயரில் பிராணிகளின் வயிற்றில்
ஆகாரத்தை ஜெரிக்கச் செய்கிறது. வெளிச்ச ரூபத்தில் நம்முடைய சக்ஷுர் இந்த்ரியத்துக்கு பதார்த்தங்களைக் கண்டு
அறிய உதவவும் செய்கிறது. பகல் குருடு ஆந்தை இதுக்கு விதிவிலக்கு. இதை 4ஆக பிரிக்கலாம்..

பௌமம் -; எண்ணை விறகு போன்ற பூமியில் கிடைக்கும் பொருள் கொண்டு எரிவது .
திவ்யம் -; சூரியன், மின்னல் இவை பிரகாசிப்பது ஜலத்தைக் கொண்டு.
உதரியம் ; ஜாடராக்நி இதற்கு இந்தநம் தண்ணீரும், பௌமமும்.
ஆகரஜம் -; தங்கம், வைரம் போன்ற சுரங்க கனிமங்கள் – நிரிந்தனம்
.
தங்கம், வைரம் இவைகளில் ஒளஷ்ணியம் இல்லையே என்றால் அவைகளில்
பிருதிவி அம்சம் அதிகமாய் தேஜஸ் அம்சம் அல்பமாய் இருப்பதே காரணம்.

ஞானம் ஆத்மாவுக்கு குணம். அதுபோல் ஒளி தீபத்துக்கு குணம். இதில் ஞானம், ஆத்மா, ஒளி
இவை மூன்றும் திரவ்ய கோஷ்டியிலும் சேரும் குண கோஷ்டியிலும் சேரும்.

திரவ்யம் இடத்தை அடைக்கும். குணம் இடத்தை அடைக்காது. ஆத்மா, ஒளி (தேஜஸ்) இரண்டும் திரவியம் ஆனாலும் ,
இடத்தை அடைக்காது குணங்களைப் போலே . ஒலி ,உணர்வு, உருவம் இவை மூன்றும், தேஜசின் குணங்கள்.

ரஸ தன்மாத்திரத்தில் இருந்து உண்டாவது ஜலம். குளிர்த்தி, சுவை, வாசனை அற்ற தன்மை நீரினுடையது.
கடல்,ஆறு கிணறு என பலவாக ஆஸ்ரயணத்துக்குச் சேர நிறம் மணம் பெற்றாலும் உண்மையில் அவை இல்லாதது.

அடுத்து, கந்த தன்மாத்திரத்தில் இருந்து உருவவாது பிருதிவீ . கந்தம் , அஉஷ்ண சீத ரஹித ஸ்பர்ஸ யோக்யதா லக்ஷணம் பிருத்வி.
மண் கல் கட்டி என்று இருப்பதோடு உணவு, மூலிகை விளையவும் உதவுவது பூமி. மற்ற பூதங்களுடன் சேர்ந்து பக்குவப் படும் போது
நிறம், மணம் ரூபம் மாறக் கூடியது. பொருள்களையும் தாங்குவதாய் நிறம் மணம் உரு ஒலி ஒளி என்று 5ன் குணமும் இதில் உண்டு.

தமஸ் (அ ) இருட்டு என்பது ஒளியின்மை என்பது சிலர் வாதம். அது தவறு. தமஸ் பூமியின் ஒருபகுதி, அது கருநீலமாக இருக்கிறபடியால்.

படைக்கப் பட்ட 5 பூதங்கள் பஞ்சிகரண முறையில் கலப்படம் செய்யப்பட்டு சரீரமானது உருவாகிறது.
உருவான சரீரத்தில் – தங்க தோட்டில் வைரம் பதிப்பது போல் – இந்திரியம், மனசு இவை பதிக்கப்பட்டு
அவை அந்தந்த சரீரத்தை ஆக்ரமிக்கின்றன.

சரீரத்துக்கு லக்ஷணம் : ஜீவாத்மாவால்
1. ஆதேயத்வம் – தாங்கப் படுமது.
2. விதேயத்வம் – ஏவப்படுமது.
3. சேஷத்வம் – ஜீவாத்மாவுக்கு சொத்தாய்
4. அப்பிரதத் சித்தமாய் – பிரிக்க முடியாததான திரவியம் சரீரம். (அ )

ஈஸ்வரனும் அவனுடைய ஞானம் நீங்கலாக உள்ள அனைத்துமே சரீர சப்த வாச்யம்.. இதை
நித்யம் Vs அநித்தியம் என பிரிக்கலாம்.
பகவானுக்கு சரீரமாக உள்ள அனைத்தும் நித்யம்.
பிரக்ருதி காலம் ஜீவாத்மாக்கள், பகவத் திவ்ய மங்கள விக்ரகம் இவை அனைத்தும் அவனுக்குச் சரீரமான படியாலே நித்யம்.

நித்யஸூரிகள் கர்மத்தால் பிறவாதவர்கள். மற்றவை
கர்மத்தால் பிறப்பன Vs கர்மத்தால் அல்லாது பிறப்பவை இவை இரண்டும் அநித்தியம் .
மஹான், அஹங்காரம் இத்யாதி , இச்சா கிருஹீத நித்ய, முக்தர்களுடைய பார்த்திவ சரீரம் அநித்யஸ்ய அகர்ம கிருதம்.
சங்கல்ப வர்ஜித கர்ம கிருதம் Vs சங்கல்பத்வேன கர்மகிருதம்

நாமும் சௌபரியும் (ஆபாச அனுபவத்துக்கு 50 சரீரம்?

மரம், செடி. கொடி புதர் ; ஸ்தாவரம்
தேவ, மனுஷ்ய, திர்யகு , நாரகி ; ஜங்கமம்
இவை அனைத்தும் கர்மாதீனமாய்ப் பிறப்பன.

உத்பிஜ்ஜ (விதை வெடித்து) ஸ்வேதஜ (வியர்வை யிலிருந்து) அண்டஜ (முட்டையிலிருந்து)
ஜராயு (கர்பப் பையிலிருந்து) பிறப்பவை என மேலும் 4 வகையாக சரீரத்தைப் பிரிக்கலாம்.

சீதை, ஆண்டாள் முதலாழ்வார்கள் அயோநிஜர்களாய் பிறந்த இன்னோரு வகுப்பும் உண்டு.

இப்படி ஸ்ருஷ்டியானது , பனை ஓலையிலிருந்து காது ஓலை பிறந்தாப் போலே – ஒன்றின் கார்யம் மற்றொன்றின் காரணமாய் –
பகவத் சங்கல்பத்தாலே பரிணமிப்பதே ஒழிய எதுவும் புதிதாக உற்பத்தி ஆவதில்லை.

முன்னது பின்னத்துக்குக் காரணம் என்றால் பிரஹ்ம காரணத்வ வாதம் தொலையாது? என்னில் அப்படி அன்று!

மண் குடமாம்போது , களி மண் என்ற ஆகாரம் போய் வாயும் வயிறுமான குடம் என்ற ஆகாரம் வந்ததே ஒழிய .
இதில் அவஸ்தா பேதம் தவிற உபாதான பேதம் உண்டோ? இல்லை.

அதுபோலவே பிரகிருதி மஹானாகவும், மஹான் சாத்விக தாமஸ அகங்காரத்தின் வழி 21 தத்துவங்களாக பிரிவது காரண பிரஹ்மம் -;
காரிய பிரஹ்மம் ஆவது அவனுடைய சரீரத்துக்குண்டான அவஸ்தா பேதமே ஒழிய இரண்டுக்கும் சேர
அவனுடய உபாதான காரணத்வத்துக்கு நசிவில்லை, எப்படி மண்ணானது குடமானபோதும் அதை மண்குடமாகவே வியவகரிப்பது போலே.

பிரஹ்மமே பலவற்றின் காரிய காரணமாக ஆவது அவனுடய சங்கல்ப மாத்திரத்தாலேயே என்பதால்,
சிருஷ்டிக்கு நிமித்த , சககாரி காரணமும் அவனே.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

பிரக்ருதி பரமாத்மா ஜீவாத்மா இரண்டுக்குமாக போக போகஸ்தான போகோப கரணமாக இருப்பது .
சக்கரை பொங்கல் – போகம் , உபகரணம் – தொன்னை. போகஸ்தானம் – கோயில் .

கண் மூக்கு நாக்கு செவி தோலிவை போகோபகரணம். பார்த்தல் நுகர்தல் சுவைத்தல் கேட்டல் உணர்தல் இவை போகம். .
அங்கண் மா ஞாலம் போக ஸ்தானம். அதாவது அண்டமும் அண்டத்துகுள்ளீடான இந்த பிரபஞ்மும்.

ஆக இந்த அண்டமானது திரவ்யமாய் இருக்கும். பிராகிருதமாய் இருக்கும். பஞ்சீகிருத பஞ்ச பூதத்தால் ஆக்கப் பட்டிருக்கும்.
விளாம்பழ வடிவில் இருக்கும் அதில் ஒரு பத்மத்தின் வடிவில் இருப்பது பூமி.
பூமியின் நடுவில் தலைகீழாய் குத்திய ஆணிபோல் இருப்பது மேரு மலை.
அதன் தெற்கு பகுதியில் இருப்பது பாரத, ஹரி, கிம்புருஷ வர்ஷங்கள். ரம்யகம், ஹிரண்யக, குரு வர்ஷங்கள் வடக்கிலும் அமையப் பெற்றுள்ளன.
பார்தஸ்வம் கிழக்கிலும், கேதுமால வர்ஷம் மேற்கிலும் அமைந்துள்ளன. மத்தியில் இளா வருஷம் சேர ஆக மொத்தம் ஒன்பது வர்ஷங்கள்.

இந்த ஜம்பூ த்வீபம் ஒரு லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் கொன்டது.
இதை சுற்றி வளைத்து இருப்பது உப்புக்கடல். அடுத்து
பிலக்க்ஷ தீபம். கடல் கரும்புச் சாறு. விஸ்தீர்ணம் இரண்டு லக்ஷம் யோஜனை. மூன்றாவது
சால்மலித் த்வீபம். கள்ளுக் கடல். விஸ்தீர்ணம் நான்கு லக்ஷம் யோஜனை. .
குசத்வீபம் – நெய்கடல் – 800000 யோஜனை.
கிரௌஞ்ச த்வீபம். – தயிர்க்கடல் – 1600000 யோஜனை
சாக த்வீபம் – பாற்கடல் – 3200000 யோஜனை
புஷ்கர த்வீபம் – மானலோத்ர பர்வதம் – ஸுத்த தீர்த்தம் – 6400000 யோஜனை.
ஸ்வர்ண பூமி – லோகாலோகம்
கர்த்தம் (ஒருவித ஜலம்)
அண்ட ஓடு.
பெருவெளி.
இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக கோள வடிவில் ஒரு விளாம்பழம் போல் அமைந்திருப்பது இந்த அண்டகடாகம் .

– – – – – – – – – – – – – – –

தமஶ்**
ஸத்ய லோகம்
தபோ லோகம்
மஹர் லோகம்
ஸுவர் லோகம்
புவர்லோகம்
||
த்ருவ பதம்
ஸப்த ரிஷி மன்டலம்
சனி
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
நக்ஷத்ரங்கள்
சந்திரன்
ஸூரியன்
||
புவர்லோகம்
||பூமி||
அதள
விதள
ஸுதள
தலாதள
மஹாதள
ரஸாதள
பாதளம்
நரகம் (பாப பூமி)
தமஸ்**
கர்த்தம்
அண்ட ஓடு
பெருவெளி.
தமசிலிருன்து தமஸ் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ண்யம்.

– – – – – – – – – — – – – – –

திரவ்யம் -; சேதனம்(2) அசேதனம் (4)
சேதனத்தில் அடங்கும் திரவ்யம் இரண்டு ஈஸ்வரனும் ஜீவனும்.
அசேதனத்தில் அடங்கும் திரவ்யம் பிரக்ருதி, காலம், ஸுத்த ஸத்வமாகிற நித்ய விபூதி, தர்ம பூத ஞானம் ஆகியவை.

இதில் அஜடமான சேதனனும், ஈஸ்வரனும் ஶ்வயம் பிரகாஸமாய்,
பிரத்யக் என்று, தீபத்தைப் போலே தன்னைக் காட்டி , பிரவற்றையும் காட்டித் தரும்.
இதையே ஶ்வயம் பிரகாஸிதம், ஶ்வஶ்மை பிரகாஸிதம் என்று சொல்லுவர்.

அசேதன திரவ்யமான பிரக்ருதி, காலம் இரண்டும் தானாகவும், தனக்காகவும் பிரகாசிக்காது.
அஶ்வயம் பிரகாசிதம், ஜடமான படியாலே.

நித்ய விபூதியும், தர்ம பூத ஞானமும் அசேதன, அஜட திரவ்யம் பராக் என்று அழைக்கப்பட்டு தானே பிரகாஸிக்கும், தனக்கு பிரகாஸிக்காது .

– – – – – – – – – – – – – –

இனி கால தத்வத்தைப் பார்ப்போம் :

இது ஒரு ஜடப்பொருள். முக்குணத்துக்கு அப்பாற்பட்டது
ஶ்வஶ்மை பிரகாஸத்வம், ஸ்வயம் பிரகாஸத்வம் இல்லாதது.
இது அகண்ட காலம் ஸகண்ட காலம் என நித்யாநித்யமாய் இரண்டு.
அகண்ட காலம் ஶகண்ட காலத்துக்கு உபாதானமாய் இருக்கும்.
அகண்ட காலம் நித்யம். ஶகண்ட காலம் கார்யமாய், ஸதத பரிணாமியாய் அநித்யம்.

அகண்டகாலம் – பூத, பவத், பவிஷ்யத் காலம் என்றும், யுகபத (ஒரே ஸமயம்);
க்ஷிப்ர (ஸீக்ர/விரைவானதாய்); சிராதி என்று (நீண்டதாயும்) இருக்குமது.

ஶகண்ட காலம் – விநாடி, நிமிடம், மணி, நாள், வாரம், பக்ஷம், ருது, அயனம், ஶம்வத்சரம்
என்று மாறிமாறி சுழலுமது. இவை மநுஷ்ய மாண நேரம்.

பித்ருக்கள் நேரம் :
மநுஷ்ய மாதம் அவர்களுக்கு 1 நாள். வளர் பிறை – பகல். தேய்பிறை – இரவு. அம்மாவாசை மதியம்.

தேவர்கள் நேரம் :
மநுஷ்யர்களின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள்.
உத்தராயணம் – பகல்.
தக்ஷ்ணாயனம் – இரவு.
தேவ வருஷம் 12000 = ஒரு சதுர் யுகம். அதில்

கிருத யுகம் 4000 யுக சந்தி 800(700) தர்மம் 1 கால்.
திரேதா யுகம் 3000 – 600(500) – 3/4.
த்வாபர யுகம் – 2000 – 400(500) – 1/2.
கலி யுகம் – 1000 – 200(300) – 1/4.

தேவமாண 1000 சதுர் யுகம் பிரம்மாவுக்கு பகல்.
இந்த 1000 சதுர் யுகத்தில், 71 சதுர் யுகம் என்கிற விகிதத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிக்கள் வந்து போவார்கள்.
பிரம்மாவுடைய ஆயுசு 2000 சதுர்யுகம் x 30 x 365

பிரளயம் :

௧. நித்ய பிரளயம் – சரீர வியோகம் (அ) மரணத்தில் ஏற்படுவது.

௨. நைமித்யிக பிரளயம் – பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் பூ, புவ, ஸுவர் லோகங்கள் அழியும் .
பிரம்மாவின் ஆயுட்காலதில் நடுநடுவே ஏற்படுவதால், இது அவாந்தர பிரளயம் என்றும் – கிருதம் என்றும் அழைக்கப்படும்..
இந்த சமயத்தில், மஹர்லோக வாசிகள் குடிபெயர்ந்து ஜனர்லோகத்தில் இருப்பர்.
அதாவது பிரம்மாவுடைய இரவுக்காலத்தில், முதல் மூன்று லோகங்கள் அழிய, மற்ற நான்கு உலகங்களும் அழிவதில்லை.
மறுபடியும் பிரம்மவுக்கு பகல்போது ஆகும் போது, அழிந்த மூன்று உலகங்களும் படைக்கப்பதும்.
ஆகவே இந்த மூன்று உலகங்களும், கிருதம் என்றும், மஹர் லோகம் – கிருதகிருத்யம் (அழியாதது ஆனால் வசிப்பார் அற்றது) என்றும்,
அதன்மேல் உள்ள சத்ய, தபோ, ஜநைர் லோகங்கள், அழிவதில்லை யாதலால், அகிருதம் என்றும் அழைக்கப் படுகின்றன.

௩. பிராகிருத பிரளயம் :

பிரம்மவினுடைய ஆயுஸு முடியும் போது 14 உலகங்களும் அழிந்து, ப்ருத்வி நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும்,
காற்று அண்ட வெளியிலும், இப்படி பஞ்ச பூதங்களும் கலந்த ஆகாஸம் அஹங்காரம், மஹாந் பிரகிருதி என்று
எம்பெருமான் திருமேனியிலும் லீநமடையும்.

அப்படி அவைகள் அநாதியாய் ஸூக்ஷ்ம தசையில் ஒன்றிக் கிடக்க, காலத்தால் உணர்த்தப் பட்டு,
பிராட்டி அனுஞையோடே மீண்டும் உண்டாவது தான் படைப்பு.
இப்படியான யோகபத்யம் அநுகிரஹ கார்யம் என்பது பிரசித்தி.

ஆக லீலா விபூதி காலாதீனம். பகவானும் இங்கு காலத்துக்கு கட்டுப் பட்டே கார்யம் செய்கிறான்.

நித்ய விபூதியில் காலம் உண்டு ஆனால் அதன் ஆட்சி இல்லை. ”நவைகால தத்ர பிரபுஹு” என்கிற பிர்சித்தியோடே,
ஒன்றின் அடுத்து ஒன்று என்கிற கிரமம்தான் உண்டு. அந்த ஒவொன்றும் எத்தனை காலம் என்பது கிடையாது,
பகவாக்ஞா ஸீமிதமானது என்றே சொல்ல வேண்டும்.
நித்யவிபூதியில் காலம் ஷடிந்திரிய கிராஹ்யமாய், ஆறு இந்திரியங்களாலும் அறியத்தக்கதாயிருக்கும்..

௪. அத்யந்திக பிரளயம் – ஜீவன் முக்தி அடைவதாகும்.

1, 4 ஜீவாத்மா சம்பந்தப் பட்டது.
2, 3 லோகங்கள் சம்பந்தப் பட்டது.

– – – – – – – – – – – – –

நித்ய விபூதி / வைகுந்தம் :

திரவ்யமாய், பராக் கோஷ்டியில் அன்வயிப்பதாய், அஜடமாய் இருக்கும்.
ஶ்வயம் பிரகாசம், ஶ்வஶ்மை பிரகாசத்வத் தோடு கூடியது. அதாவது பிறர்க்கு ஒளிவிடும்.
தனக்கு ஒளிவிடாது. ஸுத்த சத்வமாய், மிஶ்ர தத்வம் கலசாதது. தூமணி துவளில் மாமணி விளக்கம் இங்கு நோக்கத்தக்கது.

மேல் பக்க வாட்டங்களில் அசீமிதமாய், கீழ்வாட்டில் லீலாவிபூதியால் சீமிதமானது.
ஆனாலும் முக்குணத்தால் ஆன ப்ரக்ருதி தத்வதினிற்றும் தனித்து, ஸுத்த சத்வமயமானது.
அசேதனம். ஆனந்தாவஹம். பஞ்ச உபனிஷத் மய- பூத தத்வத்தாலும், பஞ்ச சக்தி- இந்திரிய விசேஷங்களாலும் ஆன
சரீரங்களோடு கோடிய நித்ய, முக்த ஜீவாத்மாக்களுக்கு இடம்.

அங்கு போகம் – பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
போகோபகரணம் – சந்தன, புஷ்ப, குசுமாதிகள். (லீலாவிபூதிபோல் இந்த்ரியங்கள் அன்று).
போகஸ்தானம் – கோபுர, பிராகார, விமான, மண்டபம் இத்யாதிகள்.

நித்ய, முக்தர்கள் பரிகிரஹிக்கிற சரீரம், ஸுத்த சத்வமயமாய், ஈஶ்வர சங்கல்ப்பத்தாலே அமைவது. கர்மத்தால் அன்று.
பகவத், வியூக, விபவ, அர்சா திருமேனியும் அப்ராகிருதம்தான். வேறு சிலர் அவன் அர்சா திருமேனியை
பிராகிருதம் என்று சொனாலும் அதுவும் அப்ராகிருத ஆவிர்பாகம் என்றே நம் சித்தாந்தம்.

சிலர் அவனுக்கு சரீர்மே இல்லை என்று வாதிக்க, நித்ய முக்த்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கைகாக
பரமபதத்தில் அவன் ஒரு அபிராகிருத சரீரத்தோடே இருத்தல் அவஸ்யம்.

நித்ய முக்தர்கள் அசரீரியாக, ஆத்ம வடிவமாகவே இருந்து அனுபவிக்கலாமே என்றால்,
திருவாராதன, உற்சவ கைங்கர்யங்களைச் சமர்ப்பிக்க, அவர்களுக்கும் கரண களேபரங்கள் அவஶய்மாகின்றன.

ஞான பல ஐஶ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் பகவத் சரீரத்தாலே பிரகாஸிதம். மேலும்
நித்ய, நிரவத்ய, நிரதிசய, ஔஜல்ய , ஸௌகந்த, ஸௌகுமார்ய, லாவண்ய, யவ்வன, மார்த்வ, ஆர்ஜவ குண ஸம்பன்னன்.
அவனுடைய திருமேனி இப்படியாக அபிராகிருதம் – ஹேய குண பிரதிபடம்.

அவர் ஆத்மாவாலும், ஸ்வரூபத்தாலும் விபு – வியாபிக்கக் கூடிய சக்தி சாமர்த்தியம் உடையவர்.
இதற்கு கண்ணனெம் பெருமான் குருக்ஷேத்ரத்தில் காட்டிய, விராட் ஶ்வரூபமே சாக்ஷி.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஸ்வயம் பிரகாசம் :
ஆத்மா ஞானதால் ஆனது. ஞானவான். ஞான குணகனும் கூட. மற்றப் பொருள்களை தன் ஞானம் கொண்டு அறிவதோடு
தனக்கு ஞானம் உண்டு என்பதும் அறிபவர். இதையே தனக்கு பிரகாசிப்பவர். தானே பிரகாசிப்பவர் என்கிறது.
ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய விபூதி ஸ்வயம் பிரகாஸம். ஆனால் ஶ்வஸ்மை பிரகாஸிதம் இல்லை.
முக்குணத்தால் ஆன லீலா விபூதியில் எம்பெருமான் அவதரிக்கும் போதும் , அர்ச்சா திருமேனியோடு இருக்கும் போதும்
ஸுத்த ஸத்வ மயமாமன திவ்யமங்கள விக்ரகத்தோடே எழுந்தருளுவதால், லீலா விபூதியிலும் ஸுத்த ஸத்வதுக்கு அவகாசம் உண்டு.

ஶ்ரீ விஶ்ணுபுராண அஸ்த்ரபூஷணா அத்யாயத்தின்படி லீலா விபூதியில் காண்கிற ஒவ்வொன்றுக்கும்
எம்பெருமான் திருமேனியில் பிரதிநித்வம் (ஸர்வ அபாஸ்ரயத்வம்) உண்டு.
கௌஸ்துபம்=ஜீவாத்மா.
ஶ்ரீவத்ஸம் என்கிற திருமார்பில் மரு = பிரக்ருதி.
கதை = மஹான்
சங்கு= ஶாத்விக அஹங்காரம்.
சார்ங்கம்=ராஜஸ அஹங்காரம்.
கட்கம்=ஞானம்.
கட்கத்தின் உறை=அஞானம்.
சக்ரம்=மனசு.
அம்ராதூளியில் உள்ள 10 அம்பு=ஞாநேந்திரியம், கர்மேந்திரியம்.
வைஜயந்தி,வனமாலா =பூத ஸூக்ஷ்மங்களும், பஞ்ச பூதமும்.

ஆமோத, பிரமோத, ஸம்மோத, வைகுந்தம் என்று நித்ய விபூதியில் அடைகிற ஆனந்தத்தின் நான்கு நிலைகள் தான் அவை.
அதாவது பார்த்துக் களிப்பது. பார்த்ததை அடைந்து ஆனந்திப்பது. அடைந்ததை அநுபவித்து இன்புருவது.
கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்து சிரகாலம் அநுபவிப்பது என்கிற நாலு நிலைக்கு நித்ய விபூதியில் உண்டான நான்கு விபாகங்கள்.

திரிபாத் விபூதி, பரமபதம், பரமவியோமம், பரமாகாச, அம்ருத, நாத, அப்ராக்ருத, ஆனந்த, வைகுண்ட, அயோத்யா
என்று பரம பதமான நித்யவிபூதிக்கு பர்யாய சப்தங்கள்.
அப்படிபட்ட தேசத்தில் இருகிற ஊர் வைகுந்தம். அது 12 மதில்களால் சூழப்பெற்றது.
அங்கு ஆனந்த மண்டபம் என்கிற கோயிலில் 1000 கால் மண்டபத்தில், திரு மாமணி மண்டபம் என்கிற திரு ஓலக்க சபை உண்டு.
அதில் ஆயிரம்தலை பணாமண்டலம் கொண்ட ஸேஷபீடம் –
அதில் (தர்மம், அதர்மம்-ஞானம், அஞானம்-வைராகியம், அவைராகியம்-ஐஸ்வர்யம், அநைஸ்வர்யம் என்கிற எட்டு கால்களை) உடைய தர்மாதி பீடம்.
அஷ்டதள தாமரை மலர்போல ஆசனம், சத்ர, சாமர, ஆலவட்ட கைங்கர்ய பரர்கள் சூழ
வீரா சனத்தில் தேதீப்யமான திவ்யமங்கள விக்ர்ஹதோடே நம்பெருமாள் சேவை சாதிகும் படியான தேசம் நித்ய விபூதி.

—————–

இனி தர்மபூத ஞானம் விவரிக்கப்படுகிறது:
ஜீவ-பர தர்மமாய் (குணமாக) இருகிற ஞானம், தர்ம பூத ஞானம். பரமாத்மாவுக்கு அது பூர்ணமாக விகஸித்திருக்கும்.
ஜீவாத்மாகளுக்கு அது கர்மத்தால் மழுங்கி இருக்கும். பரம பதத்தில் கர்மா இல்லையாய், விகஸித்தபடி காணலாம்.
ஸ்வந்திரன் என்கிற ஞான ஸங்கோசம் போய், சேஷ பூதன் என்கிற விகசித ஞானம் பெறுகை.
புத்தி (அ) தர்மபூத ஞானம் – ஸ்வயம் பிரகாசம். ஸ்வஸ்மை பிரகாசிதம் இல்லையாய் பராக் என்றும், அசேதனமாயும் இருப்பது.
ஸூர்யனுக்கு பிரகாசம் போலே, விளக்குக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு ஞானம்.
அணுவான ஆத்மாவுக்கு குணமான ஞானம் விபுத்வத்தோடே கூடியது.
அதாவது ஆத்மா ஓரிடத்தில் இருக்க, சரீரம் முழுவதுமாய் வியாபிப்பது. அதுக்குண்டான, தர்மபூத ஞானம்.

பரமாத்மாவோ என்னில் அவன் ஸ்வரூபத்தாலும் விபு. அவருடைய ஞானமாகிற குணத்தாலும் விபு.
தனக்குத் தானே ஒளிவிடும் ஜீவாத்மா. தனக்குத் தானே ஒளிவிடுவார் பரமாத்மா.
தானே ஒளிவிடும் தனக்கு ஒளிவிடாது ஞானம். தானும் ஒளிவிடாது, தனக்கும் ஒளிவிடாது ஜடப்பொருள்கள்.
ஞானத்தைக் கொண்டு மற்ற பொருள்களை ஆத்மா கிரகிக்கிறது.
ஆக பொருள்கள் ஞானத்துக்கு விஷயம். ஞானமே விஷயமாம்போது, விஷயி ஆகிறது.

இந்த தர்மபூத ஞானம் பகவானுக்கும், நித்ய ஸூரிகளுக்கும் எங்குமே எப்போதுமே விபுவாயிருக்கும்.
பத்தர்கள் விஷயத்தில் இது மூடப்பட்டு குறைய பிரஸரிக்கும். முக்தர்களுக்கு இது மறைவு வெளிப்பட்டு, நித்யர்களுக்குப் போலே ஒளிவிடும்.
பிறந்திறவாத ஆத்மாவை பிறந்தார், இறந்தார் என்னுமாபோலே, ஞான உத்பந்நம், நஷ்ட்டம் என்கிற வியவகாரம்,
அது கர்மத்தால் சங்குசிமாவதும், கர்மம் தொலைந்தால் விகசிப்பதுமான நிலையைக் குறிக்கும்.
எதைப்பற்றிய ஞானம், யாருக்கு ஞானம் என்பதைக் கொண்டு கர்மக-ஞானம் கருத்ருக-ஞானம் என்று ஞான விபாகம்.

இது விளக்கு என்று புரிதலாகிற ஞானம் உண்டாகும்போது, விளக்கு கர்மா, அறிபவர் கர்த்தா.
தீபம் அஹம் ஞானாமி அன்ற வாக்கியத்தில், தீபம் ஞானத்துக்கு விஷயம். அஹம் ஞானத்துக்கு ஆஶ்ரயம்.
இத்தால் ஞானம் ஸகர்மக-ஸகர்த்ருக மாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தேறுகிறது.
வேகம், நுண்மை, லகு இத்தோடு தான் இருக்கும் போது, பிரகாசியாமல் இருக்காது ஞானம் என்பது.
ஞன பிரஸர த்வாரம் இந்திரியம். இந்திரிய நிஸ்ருஜ்ய ஞானம் என்பது விஷயத்துக்கும் (பொருள்கள்) இந்திரியத் துக்குமான இரு-வழி பாலம்.
அதாவது – ஆத்மாவிலிருந்து புறப்படும் ஞானம் மனம் மொழி காயங்கள் ஆகிற இந்திரியங்கள் வழியாக
பொருட்களைக் கிரஹித்து மீண்டு புத்திக்கு விஷய மாக்குகை.
ஆக ஞனத்துக்கு கமனம், பாம்பின் உடல் குண்டலத்தைப் போல் – சுருங்கி விரிவது ஞானம்.

ஞானம் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருப்பதால் ”குணம்” என்றும், சுருங்கல் விரிதல், கமனம் ஆகிய மாறுதலுக்கு உட்பட்டுவதாய்,
அக்ஞானம், ஞான சங்கோசம், ஞான விகாசம் என்கிற நிலையை அடைவதாலும் ”திரவ்யம்” என்று கூறலாம்.
விளக்கு போலே தன்னைக் காட்டி பிறவற்றைக் காட்டும், தான் ஆஸ்ரயித்து இருக்கிற ஆத்மாவுக்கு மட்டிலும்,
ஏனெனில் அந்தந்த ஆத்மாவுக்கான ஞானம் அதனதன் இந்திரிய சன்நிகர்ஷத்தாலே ஏற்படுமே அன்றி
ஒருவருடைய ஞானம் மற்றவருக்கு ஒளிர வழியில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் தனக்கு போல் இன்னொருவருக்கும் ஏற்பட வழி உண்டாகையால்,
அதை அநுமானத்தல் அறியலாம் அன்றி தன்னுடைய ஞானம் அவர் அளவாக பிரஸரிப்பதாகிற பிரத்யக்ஷ பிரமாணத்தை கொண்டு இல்லை எனலாம்.
ஞானம் ஸ்வத ஏவ பிரமாணம்-எந்த ஞானமும் உண்மை ஞானம் என்பது ராமனுஜ சம்பிர தாயத்தின் அடிப்படைக் கொள்கை.
இது விளக்கு என்ற அறிவுக்கு சஜாதீயமான இன்னொரு விளக்கு தேவை இல்லை.
விஜாதீயமான கர்தாவும், கார்யத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும். ஆக அது ஸ்வயம் பிரகாசம்.

ஞானம் க்ஷணிகம் (பௌத்தன்), த்ரிக்ஷணிகதம் (நையாயிகன்), ஞான குணகன் ஆதமா என்னாமல் ஞானமே ஆத்மா (அத்வைத மதம்),
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிக்கிற ப்ராதிபாஸ ஞானம் (மாயா வாதம்)அனைத்தும் மேற்சொன்னவைகளால் நிரஸிக்கப் பட்டன.
ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஏற்படுகிற ஞானம் வெவ்வேறு அல்ல ஒரே ஞானம் தான்.
தமோ குண சன்னிதியால் மயக்கம், தூக்கம் இவை எற்பட்டு ஞானம் மூடப்படலாமே ஒழிய அது ஞான அபாவம் என்று சொல்லு வதற்கில்லை.
எதை போலே என்றால் , யவ்வன பருவத்தை பாலய பருவம் மூடினால் போலே, கௌமாரம் நீங்கி யுவா ஆனவாரே ஸுக்லம் பிரஸரிப்பது போலே இது.

மதி, பிரக்ஞா, ஸம்விது, தீ, மணீஷா, ஸேமுஷி, மேதா, புத்தி என்பது தர்மபூத ஞானத்துக்குண்டான ஒரு பொருள் பல சொல்.
சுக, துக்க, இச்சா, துவேஷ பிரேமம் அனைத்தும் ஞான விபாகமே. அனுகூல ஞானம் சுகம். பிரதிகூல ஞானம் துக்கம்.
இப்படி ஸில பல உபாதியால் வேறுப்டுகிற ஞானம் இவை அறிவின் வேறு வேறு நிலைகள்.
நினைவு கூறுதலாவது முன் நிகழ்ந்த ஒன்றை, பார்த்த, கேட்ட ஸம்பவம், பொருள் அல்லது மனிதரை ஞாபகப் படுத்திக் கொள்வது.
இது இரண்டு வகையில் ஏற்படலாம். அதே சம்பவம் மீண்டும் நிகழ மறு நினைவு ஏற்படலாம்.
இதை ஸ்மரணை என்பர். அல்லது ஒன்றின் நினைவு இன்னொன்றின் எண்ணத்தை மீட்க்கலாம்.
இதுக்கு பிரத்யபிக்ஞா என்று பெயர். அப்படியான அறிவின் மாறுபாடுகளே சுக, துக்காதிகள்.

——————————————————————————–

சேமுஷி பக்தி ரூபா – ஜ்ஞானம் கலந்த நலம் – மதி நலம் என்ற இவை முதிர்ந்த பகவத் பத்தியை குறிக்கும்.
இந்த பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் மோஷோபாயம். இந்த ஜ்ஞானம் ஜீவனுக்கும்,ஈஸ்வரனுக்கு குணமாய் இருப்பதால்
அதை தர்ம பூத ஜ்ஞானம் என்கிறோம்.

இந்த தர்மபூத ஜ்ஞானம் திரவியமாய் , அசேதனமாய், அஜடமாய் இருப்பது. வெறுமனே ஜ்ஞானம் பக்தியாகி விடாது,
ஏனென்றால் கர்மத்தால் அது மூடப்பட்டுள்ளது, வெட்டி எடுக்கப்பட்ட வைரம் போலே.
அதன் ஒளியை கூட்ட பட்டை தீட்டுவது போல், அதை நன்றாக
(1) ஆச்சார்ய உபதேசங்களாலும்
(2) உபதேச உசித அநுஷ்டானத்தாலும் பரிஷ்கரிக்கப்பட வேண்டும்.
ஆத்மா வா அரே ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: திர்ஷ்டவ்ய: நிதித்யாஸி தவ்ய : என பரிபக்வமாக வேண்டும்.

காமம் (விருப்பம்) சங்கல்பம் (உறுதி) சிரத்தை (ஈடுபாடு),விசிக்கிச்ஸா (அறிந்து கொள்ளும் ஆசை)
திருதி (தைர்யம்) ஹ்ரீஹி ( வெட்கம் ) தீஹி (புத்தி) பீஹி (பயம்)
இவை அனைத்தும் ஜ்ஞானத்தின் வெளிப்பாடுகளே. இவை மனதின் வெளிப்பாடு என்று சாஸ்த்ர வசனம் இருக்கிறதே,
மனம் ஜடப் பொருளாயிற்றே ? அஜடமான ஜ்ஞானத்தின் வெளிப்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்டால்.
அவை ஜ்ஞான காரியமாக இருக்க, மனக் காரியம் என்றது உபசார வழக்காகக் கொள்ள வேண்டும்,
ஜ்ஞானம், மன சாகாய மின்றி நடவாதாகையால்.

பிரத்யக்ஷம், அனுமிதி, சாஸ்திர (ஆகம) ஜ்ஞானம், ஸ்மிருதி, சம்ஸயம் (இதுவா அதுவா என்று தடுமாறுகிற அறிவு),
விபர்யயம் (இதுதான் என்று தவறாக முடிவு பண்ணுகிற அறிவு), மயக்கம் (வஸ்துவை மறாடி நினைக்கை)
விவேகம் (பகுத்து அறிதல்), வ்யவசாயம் (துணிவு), மோஹம் (கிறக்கம்) ராகம், த்வேஷம், மதம் (செறுக்கு )
மாத்சர்யம், தைர்யம், சாபல்யம், டம்பம் (தர்ம காரியத்தை படாடோபத்துக்குச் செய்வது),
லோபம், க்ரோதம், தர்ப்பம் (செருக்கு) ஸ்தம்பித்தவம் (திகைப்பு) துரோகம், அபிமானம், நிர்வேதம் (மன வெறுப்பு) ஆனந்தம் ,
நல்ல அறிவு, தீய அறிவு, அன்பு, திருப்தி, சாந்தி, கீர்த்தி, வைராக்கியம், மன அழுத்தம், இன்பம், நட்பு, கருணை, இச்சை,
மென்மை, பொருமை , வெறுப்பு,, பாவனை,பேராசை, துராசை ,சர்ச்சை, சக்தி,பக்தி, பிரபத்தி இவை முதலான ஆத்மாவின் குணங்கள்.

ஜ்ஞான, சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் வாத்சல்ய, காருண்ய இத்யாதி பகவத் குணங்கள்.
அவருடைய ஜ்ஞானம் இறந்த காலம் நிகழ் காலம், வருங்காலம் அனைத்தும், பிரத்யக்ஷத்தில் காண்பது போல் அறிபவர்.
மநுஷ்யர்களுக்கு இறந்த காலத்தில் சிலவும், நிகழ் காலமும் வியக்தம்.
ரிஷி, முனிகளுக்கு இறந்த காலமும், வரும் காலமும் ஸ்புரிக்குமே ஒழிய, கண்முன் நடப்பதுபோல் தோன்றாது .
ஆனால் பகவானுக்கு அவைகள் பிரத்யக்ஷத்தில் பார்ப்பதுபோல் ஒளிவிடக்கூடியது.

சக்தி அகடித கடனா சாமர்த்தியம்.
பலம் ஜகத் தாரண சாமர்த்தியம்.
ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் .
வீர்யம் அவிகாரத்வம் .தன்னுடன் சேர்ந்தவைகள் மாற்றம் அடைந்தாலும், தான் மாறுதல் இல்லாத.
தேஜஸ் பராபிவன சாமர்த்தியம்.
சௌசீல்யம் – நீரந்தரேண சம்ஸ்லேஷம்
வாத்சல்யம் – குற்றத்தையே குணமாக பார்த்தல்.
மார்த்தவம் – அடியார்கள் பிரிவை சகியாதவன்.
ஆர்ஜவம் – ஒன்றே நினைத்து ஒன்றே பேசி ஒன்றே செய்வது.
சௌஹார்த்தம் – தனக்கு இழுக்கான செயலானாலும், பிறர் ரக்ஷணத்தில் முனைப்பு.
சாம்யம் – ஆஸ்ருதர்களிடத்தில் உயர்வு தாழ்வு பாராதவன். யதிவா ராவண ஸ்வயம் என்ற இடம் காண்க.
ஆனால் அபக்தன், பக்தன் இவர்களிடம் வேறுபாடு பார்க்கமாட்டான் என்பது இல்லை.
காருண்யம் – பரதுக்க துக்கித்தவம், பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் . பிறர் வருத்தம் கண்டு பொறாதா தன்மை
மாதுர்யம் – போக்கிய வஸ்துவான பால் மருந்தாமாப் போலே, உபாய உபேயம் இரண்டிலும் மதுரமாம் தன்மை.
காம்பீர்யம் – ஆழங்கால் காண முடியாத கொடையாளி. திரௌபதி விஷயத்தில் எல்லாம் செய்தும், என்ன செய்தோம் என்ற அதிருப்த்தி .
சாமர்த்தியம் – அடியார்கள் அபராதங்களை தான் கணிசியாததோடு , மறைக்கிறார்.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்னடியார் அது செய்யார் என்று தோஷ கோபத்வம்.
ஸ்தைர்யம் – பக்தர்கள் ரக்ஷண விஷயத்தில் யார் எதுசொன்னாலும் அசராதவன் தடங்கலைக் கண்டு கலங்காதவர் .
தைர்யம் – பழுதாகாத பிரதிக்ஞை உடையவர்.
சௌர்யம் – பரபல பிரவேஸ சாமர்த்தியம்.
பராக்கிரமம் – பரர்களை சின்னாபின்ன மாக்கல் .
என்று எண்ண முடியாததாய், அனுபவித்து முடிக்க முடியாததாய் இருக்கும் பரமாத்மாவுடைய ஜ்ஞானம்.

இனி பக்தி பிரபத்தியின் தன்மைகளை கிஞ்சிது பார்ப்போம்,
ஏனெனில் அவைகளை பற்றி முழுவதுமாக ஒரு ஆசாரியனை வணங்கியே அறியலாவது.

பக்தி பிரபத்திகளை வியாஜமாகக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே உபாயமாக இருந்து
மோக்ஷத்தை அளிக்கிறான் என்பது தேர்ந்த உண்மை.

மோக்ஷோபாயத்தை சித்தோபாயம் சாத்யோபாயம் என்று இரண்டாக பிரிக்கலாம்
இதில் சித்தோபாயம் பகவான். சாத்யோபாயம் பக்தி/பிரபத்தி.
இது விஷயமான கலா பேதம் பிள்ளைலோகாச்சார்யார் (தென்கலை) சம்பிரதாயம் என்றும்;
வேதாந்த தேசிகர் (வடகலை) சம்பிரதாயம் என்றும் இரண்டு.
பக்தியோ பிரபத்தியோ வியாஜ உபாயமே. பகவானே முக்கிய உபாயம் என்பது தேசிக பக்ஷம்.
அவை அதிகாரி விசேஷணம் மாத்திரமே வியாஜ மாத்ர உபாயமும் இல்லை என்பது பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.
இருவருக்கும் பகவானே உபாயம் என்பதில் பேதமில்லை.
ஆனால் அவனுடைய அந்த உபாயத்வம்; கிருபா ஜன்யமா? கிருபா ஜனகமா? என்பதிலேயே பேதம் சொல்லப்படுகிறது. .’
‘அதுவும் அவனது இன்னருளே ” என்கிறபடி கிருபா ஜன்யம் . இது பிள்ளை லோகாசார்யர் அபிப்ராயம்.
இவன் செய்யும் பிரபத்தி கிருபா ஜனகம் என்பது தேசிகர் அபிப்ராயம்.

பக்திக்குச் சாதனம் கர்மயோகமும், ஜ்ஞான யோகமும். கர்மயோகம் சித்த சுத்தியை ஏற்படுத்தும் அது ஜ்ஞான யோகத்திலும்,
ஜ்ஞான யோகம் ஆத்ம சாக்ஷத்காரத்தை வரவழைத்து, பகவத் பக்தியிலே மூட்டும்.

இவை மூன்றும் தனித்தனியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு.
ந தர்ம நிஷ்டோஸ்மி நசாத்மவேதி ந பக்திமான் — ஆளவந்தார். பக்திக்கு அங்கமாக மற்றை இரண்டும் வைத்து,
பக்தியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு. நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் — நம்மாழ்வார்.
பக்திக்கு அங்கமான இவை இரண்டும் இல்லை என்றால், மோக்ஷோபாயமான பக்தியம் இல்லை என்று சொல்ல பிரசக்தியே இல்லை என்கிறார்.

கர்மயோகமாவது :

வர்ணாஸ்ரம தர்மத்தில் நின்று
தேவதா ஆராதனா, யாக யஜ்ஞம், தான தர்மாதிகளை செய்வது
ஆச்சார்யனை அண்டி தத்வ ஜ்ஞானம் பெற்று, அதற்கநுகுணமான ஆசாரத்தில் நிற்பது
அகிருத்ய கிருத்யம் , கிருத்ய அகிருத்யம் இவைகளை தவிர்ப்பது
கர்த்ருத்வ தியாகம், பலத் தியாகம் , பல சங்கத் தியாகம் கூடிய நித்ய கர்மாநுஷ்டான வர்தனம்
தாழ்ந்த பலன்களில் கண் வையாமை
செய்பவை யாவும் பகவத் கைங்கர்யமாக செய்தல் இத்யாதி.

கர்ம யோகத்தால் மனதின் அழுக்கு நீங்கி ஜ்ஞான யோகத்துக்கு வழி வகுக்கும்.

ஜ்ஞான யோகமாவது :

வேதாந்த விசாரமும்
பகவத் சேஷமான
நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்வரூப
தியான, ஆசன, யோக முறைகளும் (அ )
நாம சங்கீர்த்தனம் (அ )
திவ்ய தேச வாசம் (அ)
பக்திக்கு அங்கமான சரணாகதியாலே

பகவத் பக்தியில் ஈடுபட உள்ள தடங்கல்கள் விலகி
பக்தி யோகத்திலே மூட்டும்.

பக்தி யோகமாவது :

யமம் நியமம் ஆஸனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் ஸமாதி என்று எட்டு அங்கங்களோடு கூடியதான
தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தானம் (அ)

விவேக, விமோக, அவ்யாச, கிரியா, கல்யாண, அநவசாத, அனுதர்ஸ்வ ; சாதன சப்தகம் பக்தி.

இந்த மேலே விளக்கமாகப் பார்க்கலாம்:

பக்தி பிரபத்தி இரண்டுமே ஜ்ஞானத்தின் வெளிப்பாடுதான். தர்மிபூத ஜ்ஞானம் நெருப்பு என்றால்,
அந்த தீயின் பொறி போன்றது தர்ம பூத ஜ்ஞானம். ஜ்ஞானத்தின் முதிர்ந்த நிலை பக்தி.
கர்ம, ஜ்ஞான யோகத்தாலேயே பெறப்படும் ஒன்று. இந்த பக்தியே முக்தியைப் பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்து.
இல்லை கர்ம, ஜ்ஞாம, பக்தி யோகங்களே தனியாக, நேரே மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பது இன்னொரு சாரார் கருத்து.

கர்ம ஜ்ஞான ஸகக்ருதையான பக்தி யோகம் என்பது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து,
தூமலர் தூவித் தொழுது என்கிறபடி மனம் மொழி காயம் என்று மூன்றாலும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்.
அர்ச்சனம் செய்தல், நமஸ்காரம், பூத் தொடுத்தல், நாம சங்கீர்த்தனம் செய்தல்,
”மத் கதா ப்ரீதிஹி” என்று அவனுடைய கதையைக் கேட்டல் , அவரை விட்டுப் பிரிந்தால் தாங்க மாட்டாமை ,
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருத்தல் பத்திக்கு லக்ஷணம்.
இது 8 அங்கங்களைக் கொண்டு , பக்தி அங்கியாய் இருக்கும்.

யமம் – சத்தியம் பேசுதல், திருடாமை, அஹிம்சை, பிரஹ்மசரியம் ,
அபரிக்ரஹம் (= தேவைக்கு அதிகமான பொருள்கைளின்மேல் பற்றின்மை) யமம் .

நியமம் – வேதம் (அ ) அதுக்கு நிகரான ஆழ்வார் பாசுரங்களை ஓதுதல், சுத்தியோடு இருத்தல்=
சரீரத்துக்கு அழுக்கு சேறு, சகதி, வியர்வை, மலஜலம்.
மனசுக்கு அழுக்கு காம, குரோதாதி அரிஷட் வர்க்கங்கள்.
ஆத்மாவுக்கு அழுக்கு பாப புண்யங்கள். துஷ்டி = இருப்பதைக் கொண்டு நிறைவடைதல்.
காய கிலேசமான சுத்தி = தேகமாய் போஷிக்காமல், சரிரமாய் நோக்கிப் போதல். மனதை நியமித்து பகவானிடத்தில் ஈடுபடுத்தல் நியமம்.

ஆசனம் – தியானத்துக்கு உசித (துதிகால் தொடையில் தொட அமர்ந்து கொள்கிற பத்மாசனம் போன்ற ) அமர்வு நிலை.

பிராணாயாமம் – கும்பகம் (உள்வாங்கல்), பூரகம் (இழுத்து நிறுத்தல்), ரேசகம் (வெளியேற்றல்) இவைகளை சமமான கால அளவில் செய்தல்.

பிரத்யாஹாரம் – புறப்பொருள்களில் ஈடுபட்டுள்ள புலன்களை வாங்கி, ஆத்ம, பரமாத்ம விஷயத்தில் திருப்பி விடுகை.

தாரணம் – அவைகளை பரமாத்ம விஷயத்தில் நிலை நிறுத்தல் .

தியானம் – நிறுத்திய மனதை மற்றது கலசாத சதத பகவத் நினைவு.

சமாதி – இப்படிப்பட்ட முயற்சிகளால் அந்த பகவானை வசீகரித்தல்.

தைல தாரை போலேயுள்ள விடுபடாத தொடர் நினைவுச் சங்கிலி சாதன பக்தி.
மோக்ஷத்துக்கு சாதனமாக இருக்கிற பக்தி சாதன பக்தி. இது உபாசகர்களுக்கு வழி.

பிரபன்னர்கள் செய்கிற பக்தி சாத்ய பக்தி. மோக்ஷத்துக்கு
சாதனமாக இல்லாது அதுவே பிரயோஜனமாய், பகவானால் அருளப்படும் (பிரசாதிக்கப்படும்) பக்தி சாத்ய பக்தி (அ) பலபக்தி யாகும்.

பிரபத்தி அனுஷ்ட்டித்த பிறகு, மோக்ஷம் போவதற்கு இடையில் உண்டான – இருக்கும் நாள் –
பிராப்ய ருசியினாலே செய்கிற பக்தி ஸ்வயம் பிரயோஜன (சாத்ய) பக்தி. கொடுத்துக் கொள்ளாதே,
கொண்டதுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமாய் –
ஒன்று நூறாக பின்னும் ஆளும் செய்வன் என்கிற ஸ்வயம் பிரயோஜன பக்தி. இவை 8ம் ஒருவகை.

சாதன சப்தகமடியாக செய்கிற பக்தி இன்னொரு வகை.

விவேகம் – ஆகார சுத்தி = ஜாதி துஷ்டமான, ஆச்ரய துஷ்டமான, நிமித்த துஷ்டமான (=தலை மயிர், புழு விழுந்த ) பண்டங்களை ஸ்வீகரியாமை .

விமோகம் – பற்று அற்று இருத்தல் = லௌகீகர்கள் விரும்புகிற விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்.

அப்பியாசம் – பகவத் விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பது.

கிரியா – பஞ்ச மஹா யக்ஞங்களை ( ப்ரஹ்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவைகளை), விடாமல் செய்வது.

கல்யாணம் – உண்மை பேசுதல், ஆர்ஜவத்தோடு (=மனஸ் ஏகம் , வசஸ் ஏகம் , கர்மண் ஏகம் என்று) நேர்மையாய் நடத்தல்,
கருணையோடு இருத்தல், தான, தர்மம் செய்தல், அஹிம்சை, பிறர் பொருள் நச்சுதல் செய்யாமை இவை .

அநவசாதம் – துக்கம் கண்டு துவளாமை. நிர்வேதம் கொள்ளாமை .

அனுர்தர்ஷம் – சந்தோஷம் வரும்போது உன்மத்தர் ஆகாமை.

இந்த 7 னாலும் கிட்டுவதும் பக்தியே .

பக்திக்கு பிரயோஜனம் தரிசன சமானாகார பகவத் சாக்ஷத்காரம் . இதை மோக்ஷ பர்யந்தம் அனுஷ்டிக்க வேண்டுவதாய்,
மோக்ஷம் அடைந்து அங்கு செய்கிற பக்தி , சாதன பக்தியாய் இல்லாது, சாத்ய பக்தியாய் இருக்கும்.

யாருக்கு எப்போது மோக்ஷம் என்ற கேள்வி வரும் போது,
சாஸ்திரம் ”கர்மாவசாநே மோக்ஷம்” என்கிறது. கர்மங்கள் முழுவதுமாக தொலைவது எப்போது என்றால்

பக்தி நிஷ்டனுக்கு பக்தி யோகத்தில் இழியும் நிலையில் சஞ்சித கர்மங்கள் தீயினில் தூசாகும்.
உபாசன மாஹாத்ம்யத்தாலே ஜன்மாந்தரத்தில் பிராரப்த கர்மம் முடிந்த நிலையில், அந்திம ஸ்மிருதி ஏற்பட்டு மோக்ஷம் கிட்டும் .
இப்படி உபாசகர்கள் விஷயத்தில் பிராரப்த கர்மத்தைக் தொலைத்துக் கொள்வது அவர்களுடைய பொருப்பு .

பிரபன்னனுக்கு சரணாகதி அனுஷ்ட்டிக்கும் போது சஞ்சித கர்மமும், தேஹாந்தர ஆரப்த கர்மமும் நசியும்.
வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் தேஹாவசாநே தொலைந்து இந்த ஜன்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிட்டும்.
இவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி நியமமில்லை. அத்தோடு இவர்களின் பிராரப்த கர்மாவை போக்கிக் கொடுப்பது பகவானின் பொருப்பு.

பூர்வாகங்கள் (சரணாகதிக்கு முன்செய்தவை) இப்படிக் கழியுமாகில், உத்தராகங்கள் க்ஞாதம், அக்ஞாதம் என்று இரண்டாய்,
க்ஞாதம் பஸ்சாதாபத்தால் கழியப் பெற்று, அதில்லாது தெரிந்தே செய்தவையாய், வருத்தமும் படாததாய் உள்ளவை யாவை,
அவை அனைத்தும் வர்த்தமான சரீர ஆரப்தத்தோடே சேர்க்கப்பட்டு அதிகப்படி அனுபவிக்க வேண்டியதாய் வரும்.

”ஆக, ஸர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி ” என்கிற இதுக்குப் பொருள், மேல் சொன்ன சஞ்சித பாபங்கள் வரை பக்தனுக்கும் ,
தேஹாந்த்ர ஆராப்த கர்மம் வரை சரணாகதனுக்கும் போக்கித் தருவேன் என்பது கூடார்த்தம் .
அதுவா, வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் மோக்ஷ பர்யந்தம் அனுபவித்தே அற வேண்டும் என்பதிலே கிருஷ்ண கீதைக்கு நோக்கு.

இங்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஒருவனுக்கு ஆயுசு 80 என்று வைத்துக் கொண்டால் ,
அவன் 60 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, மீதம் உள்ள 20 வயதுக்கான ஆரப்த கர்மத்தோடு,
உத்தராகங்களையும் சேர்த்து அந்த 20 வருடத்தில் தீவ்ரமாக அனுபவிக்க வேண்டி வரும்..
அங்கனன்றி, அவரே 20 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, அனுபவ காலம் நீண்டு தீக்ஷண்யம் மிதமாய் இருக்க ஹேது உண்டு.

வேதனம், தியானம், உபாஸனம் என்கிற எல்லாம் பக்தியையே குறிக்கும்.
இந்த பக்திக்கு அங்கமான சரணாகதியும் ஜ்ஞான விபாகமே.
இத்தை பரபக்தி , பரஜ்ஞான, பரம பக்தி என்று பக்தியின் மூன்று நிலைகளாகச் சொல்லுவார்.

ஜ்ஞாதும், திரஷ்ட்டும் , பிரவேஷ்ட்டும்
அறிகை, காண்கை , அடைகை
ஜ்ஞான, தரிசன , பிராப்தி
இவை ஒவ்வொன்றும் பக்திக்கு அங்கமான பிரபத்தியின் ஆவிஷ்காரமே.

அறிகை – பகவானாப் பற்றிய ஜ்ஞானம் ஏற்படுகை., ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பும் , விஸ்லேஷத்தில் தரியாமையுமாகிற பரபக்தி நிலை.
காண்கை – பிரத்யக்ஷ தர்சன ஸமானாகாரமான பர ஜ்ஞானம். சாட்சாத்காரமாவது நேரில் காண்பது போன்ற மானச அநுபவம் .
அடைகை – பகவான் திருவடிகளை அடையப் பெற்று மீளா இன்பத்தில் திளைக்கை பரம பக்தி.

பிரபன்னாதிகாரிக்கு சரீர அவஸாந பர்யந்தம் பரபக்தியாலே செல்லும். சரீர வியோகத்தில், அர்ச்சிராதி மார்க கதி மத்தியில்
பரஜ்ஞான தசையான தரிசன ஸமாநாகாரம் லபிக்கும் . பரம பதத்தை சேர்ந்தவாரே பரம பக்தி தலை எடுக்கும்.

ஆழ்வாருக்கு இவைமூன்றும் திருப்புளியாழ்வார் அடியிலேயே பிராப்தமாம்பட்டி வைத்தது,
இவரைக் கொண்டு ஊரும் நாடும் திருத்த வேண்டிய படியாலே. அது ஆழ்வார் பால் அவனுக்குண்டான கருணை என்பதை விட
ஆழ்வார்மேல் அவன் கொண்ட பிரேமம் என்றே சொல்ல வேண்டும். கணவன் மனைக்கு மத்தியில் நியமங்கள் நடக்கலாம் ,
காமுகன் காமுகிக்கு இடையில் அக்ரமமே ஸக்ரமம் அன்றோ?

சாதன பக்தியானது கீழ்ச் சொன்ன அஷ்டாங்க யோகத்தாலோ (அ) சாதன சப்தகத்தாலோ உண்டாவது.
பல பக்தியோ வென்னில் ஈஸ்வர கிருபையாலே ஏற்படுவது. நம் பூர்வாச்சார்ய கோஷ்டியில்
நம்மாழ்வார் தொடக்கமாக நாதமுனிகள், எம்பெருமானார் என்று அனைவரும் பல பக்தி நிஷ்டர்களேயாவர் .
பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி என்று கொண்டு பக்தியில் அவர்கள் இழிந்தார் இல்லையோ என்னில், அங்கனன்று.

அவதார ரஹஸ்யம், புருஷோத்தம வித்தை இதன் படிக்கு பக்தி உபாசகனாக இருந்து ”புனர் ஜன்ம ந இதி” என்கிற விதி விலக்கால்,
அந்த ஜன்மத்தின் இருதியில் , பிரபன்னனைப் போலவே முக்தி அடைய வழி உண்டானாலும் ,
கால விளம்ப அசகதவமும் காரணமன்று. ஸ்வரூப விரோதமே காரணம். பக்தி ஸ்வாதந்த்ரிய அனுரோதாமான படியாலே .
தங்கமயமான பாத்திரத்தில் வைத்த பாலேயானாலும் , ஒரு துளி கள்ளு சேர்ந்தால் எப்படி நிஷித்தமோ அதுபோலே ,
ஆத்மா = தங்கபாத்ரம். பக்தி = பால். ஸ்வாதந்திரியம் = கள்ளு, என்பதாலே அஸ்வீகாரம்.

அங்கனாகில் பூர்வாச்சார்ய கோஷ்டியில் பக்திக்கு அங்கீகாரமில்லையோ என்னில் , தவறு.
சாதன பக்தியை விட்டு, சாத்ய பக்தியை அன்றோ அவர்கள் ஆதரித்தது.
”சார்வே தவ நெறிக்கு தாமோதிரன் தாள்கள் …” என்கிற திருவாய்மொழி (10-4-1) வியாக்கியானம் இங்கு அனுசந்தேயம் .

ஸ்வ பிரயோஜனம், ஸ்வயம் பிரயோஜனம், பர பிரயோஜனம் என்கிறத்தின் அடிப்படையில் வந்தவை இத்தனையும்.

ஸ்துதி, நமஸ்காரம் போன்கிற பிரயோகம் பக்தியை குறிக்குமோ என்னில் , இல்லை. அவை உபசார வழக்கே ஆகும்.

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதிவ்ய: என்றவிதில்
எது விதி வாக்கியம் , எது ராக பிராப்தம் என்று விசாரித்ததில்
வேத படன வனந்தரம் ப்ரஹ்ம தியான விஷயமாக கேட்பதற்கும், மனனம் பண்ணுவதற்கும்
ஒருவன் ஆசைகொண்டு வருவது பிராப்தமாகையால் , ஸ்ரோத்ரம், மந்தாரம் இரண்டும் ராக பிராப்யமாய் ,
ப்ரஹ்ம சாட்சாத்காரத்துக்கு நிதித்யாஸனமே விதி வாக்கியம் என்று கொள்வதே அநுமதம்.

தியானம் என்கிற பக்தியை, வித்யா பேதத்தால் இரண்டாக பார்க்கப் படுகின்றது.
இகலோக பலத்தைக் குறித்தாக்கில், ஐஹிக்க-பலா என்றும், மோக்ஷ பலத்தைக் குறித்து செய்யும் தியானம்
பாரமார்த்திக-பலா என்றும் இரண்டு வகை. இதையே உத்கீத வித்யா, மற்றும் பிரம்மா வித்யா என்றும் கூறுவார்.

அக்ஷி வித்யா – கண்ணில் சூரியனை வைத்து செய்யும் தியானம்.

அந்தராதித்ய வித்யா – சூர்ய மண்டல மத்திய வர்தியான ப்ரஹ்மத்தைக் குறித்துச் செய்யும் உபாசனம்.

தகர வித்யா – ஹ்ருதயத்து தகராகாசத்தில் உள்ள ப்ரஹ்மத்தை தியானிப்பது.
.
பூமா வித்யா – நிரதிசய சுகம் முதலிய குணங்களுக்கு ஆஸ்ரயனாக செய்யும் வித்தை.

ஸத் வித்யா – ஸத் சப்த வாச்யனான பகவானைத் தியானிப்பது.

மது வித்யா – வஸ்வாதிகளுக்கு அந்தராத்மாவாககே கொண்டு தியானிப்பது.

பஞ்சாக்கினி வித்யா – பகவானை ஆத்மாவாகவும், தன் ஆத்மாவை அவருக்கு சரீரமாகவும் வைத்து செய்யும் வித்யை.

அந்தரிக்ஷ வித்யா –

உப போசல வித்யா –

சாண்டில்ய வித்யா –

புருஷ வித்யா –

பிரதர்தன வித்யா –

வைஸ்வானர வித்யா –

என்று ப்ரஹ்ம வித்தைகள் 32. அதில் ஒன்று

நியாஸ வித்தை – இதுதான் சரணாகதி.

அநன்ய ஸாத்யே ஸாபீஷ்டா மஹா விஸ்வாசா பூர்வகம் ததேக உபாயதா யாஞ்சா பிரபத்தி சரணாகதி ஹி – என்கிற
பிரபதனம் சரணாகதி. பிரபத்யே என்கிறதில் உள்ள கத்யர்தே புத்யர்த்தம் ஜ்ஞான கார்யமான படியாலே ,
இந்த பிரபத்தி ஜ்ஞான விபாகமாக சொல்லப்படுகிறது.

பஞ்ச அங்க வித்யையே பரண்யாசம்.

ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்
பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விசஸ்வாச:
கோப்திருப்த வரணம் ததா
கார்ப்பணயம்
இவை ஐந்தும் அங்கங்களாகக் கொண்ட ஞாசமாகிற = ஆத்ம ரக்ஷணாபர ஸமர்ப்பணமே
பிரபத்தி என்பது ஸ்வாமி தேசிகர் பக்ஷம்.

இத்துடன்
ஆத்ம நிக்ஷேபமாகிற
ஆத்ம ஸமர்பணம் சேர்த்து ஷடங்கியாக இருப்பது சரணாகதி.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – என்கிற ஒன்றே பிரபத்திக்கு அங்கம்.
மேற்சொன்ன 6ம் அவகாத-ஸ்வேதம் = நெல் குத்த வியர்வை தானே சுரக்குமா போலே
சம்பாவித ஸ்வபாவம் என்பது ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.

ஈஸ்வர பிரவிருத்தி விரோதி ஸ்வ பிரவிருத்தி தந் நிவிர்த்தி ஏவ பிரபத்திஹி என்கிற இத்தால்,
ஸ்வ பிரவிருத்தி நிவிருத்திக்கு ஈடான ஸர்வ தர்ம பரித்யாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகாதோ என்னில் ,

அங்கங்களை எதிர்பார்க்கும் பிரபத்தியால் பகவான் கார்யம் செய்கிறான் என்றால்
அது சாதன பக்தியாகுமே ஒழிய சாத்ய பக்தி ஆகாது.
அந்த விதத்தில் மேற்சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகம் நிவிர்த்தி தர்மம் மாகையாலே அது, அங்கமாக கணக்கிடப் படாது.

பிரபதியின் விசேஷங்களாவன :
தேஹாவஸாநே மோக்ஷம்.
அந்திம ஸ்மிருதி வர்ஜனம்.
ஸக்ருத் = ஒருமுறையே செய்யப்பட வேண்டியதான் அபேக்ஷை .
ஜ்ஞான விசேஷ ரூபம் = ஜ்ஞானத்தின் செறிந்த நிலையோடு .
ஒரு சதாசார்யனை அண்டி அறிய வேண்டும் ரஹஸ்யம் இது.

சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே , பிரபத்திக்கு விஷய நியமம் அதிமுக்யம்.
இத்தால், தேவதாந்திர சம்பந்தமும், பாகவதா பச்சாரத்தையும் இது பொறாது . ஆர்த்தி தலை எடுத்து,
ஆர்த்தியில் பூர்த்தி ஏற்பட்ட வன்றே (= விஷயாந்தர ஸ்பர்சம் லவலேசமும் இல்லையான பின்பே) மோக்ஷம் சுநிஸ்ச்சிதம் .

”இன்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று தொடங்கின ஆழ்வாருக்கு உடனே கிட்டாத மோக்ஷம்,
நாலு பிரபந்தம் பாடி, வைகுந்தத்தில் நின்று, வரகுண மங்கை இருந்து, புளிங்குடிக்கிடந்து என்றபடி
ஆழ்வாராகிற ஆத்ம = அன்னம் பரிபக்குவமாக பார்த்தானாய், நமக்கும்
”மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” பிரானான அவன், அந்திம தசையில்
அவைகளை உண்டாகித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான்.

தேகமே ஆத்மா என்றிருக்கிற லோகாயதனுக்கு ஸ்வர்க, நரக , பாப, புண்யங்கள் கிடையா தாகையாலே
பக்தி, பிரபத்தி இவை பொருந்தாது .

க்ஷணிக வாதியான பௌத்தன், க்ஷணிக ஜ்ஞானமே ஆத்மா என்பதால், முக்தி, உபாயங்களின் பிரசங்கமில்லை.
ஒன்று இன்னொன்றில் மூட்டுக்கையாகிற ஜ்ஞான பரம்பரை வைத்துக் கொண்டு பார்க்கில்,
உபாசிக்கும் ஆத்மா ஒன்றாக, மோக்ஷ பல சித்தி அடையும் ஆத்மா வேறு என்று முடியும் .
ஒருத்தன் நோவுபட்ட இன்னொருத்தன் அனுபவிப்பது சாத்தியமல்லவே.

சப்த பங்கி வாதிகளான க்ஷபணர்கள் மோக்ஷத்தை இருக்கு, இல்லை, இருந்தும் இல்லை, இல்லையாய் இருக்கும்
என்று பேசி சேருமிடம் அறியமாட்டாத அவர்களுக்கும் பக்தி, பிரபத்தி பொருந்தாது.

வைசேஷிகர்கள் பாஷாண கல்பமான ஸ்திதியை மோக்ஷம் என்றும்,
சாங்கியன் சித் , அசித் தத்வங்களை ஒப்புக்கொண்டு,
ஈஸ்வரனை இல்லை செய்கிறபடியால், யாருக்கு எதனால் மோக்ஷம் என்பது அஸ்பஷ்ட்டம்.

மாய வாதிகளான அத்வைதிகள் வியாவஹாரிக பிரஹ்ம வாதத்தால் பாரமார்த்திக மோக்ஷத்தை ஒப்புக்கொள்வ தில்லை .
பாஸ்கர, யாதவ பிரகாசர்கள் கர்ம – ஜ்ஞான சமுச்சயம் மோக்ஷ சாதனம் என்ன, வேதமானது பக்தியையே
மோக்ஷ சாதனமாக சொல்லுகிற படியால், இவர்கள் மதம் குதிருஷ்டி மதமாகிறது.
வேத பிராமாண்யத்தை ஒப்புக் கொண்டும், அதற்கு விருத்தமான கொள்கையை பேசுவதால் அதுவும் தள்ளுபடி.

சைவம், லைங்கியம் , பாசுபதம் போன்ற மதங்களில், பிராப்யம் சிவன் என்று பேச, அதுவும்
அநுத்தேஸ்ய மாயிற்று.

இத்துடன் தர்மபூத ஜ்ஞான விளக்கம் முற்றுப் பெறுகிறது.

———————————————————————————-

8 வது அவதாரம் ஜீவனைப் பற்றியது.
கீழே சொல்லப்பட்டவையுள் பிரமாணங்கள் 3 அவதாரம் .
பிரமேயத்தில் அடங்கின திரவ்யங்களைப் பற்றியதான 4 அவதாரங்கள்.
பிரகிருதி, காலம், தர்ம பூத ஜ்ஞானம், சுத்த சத்வமான பரம பதம்.
இவை பராக் என்றும், திரவ்யங்களில் அடங்கின ஜீவனும் , ஈஸ்வரனும் பிரத்யக் என்றும் பார்த்தோம்.

ஜீவன் என்பது :
அணுவாய், நித்தியமாய், ஜ்ஞானமாய், ஜ்ஞான குணகனாய் பகவத் சேஷ பூதனாய் விளங்குமவர்.
தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றிற்கும் சாமான்ய லக்ஷணம் சொல்லப் புகில் :

சித்தும், அசித்தும் பகவத் சேஷ வஸ்து.
சித்தும், ஈஸ்வரனும் ஜ்ஞானம் உடைத்து.
அசித்தும், ஈஸ்வரனும் தன்னை சேர்ந்தவர்களை தன்னைப் போல் ஆக்கும் ஸ்வபாவம் படைத்தவர்கள்.
அசித் சம்பந்தம் அவஷ்டப்யம் . பகவத் சம்பந்தம் உன்மீயம்.

பிரத்யக்த்வம் – தனக்குத் தானே ஒளி விடுபவர். தானே பிரகாசிப்பவர். ஸ்வயம் பிரகாசத்வம்.
சேதனத்வம் – அறிவுடையவர். தனக்குப் பிரகாசிப்பவர். ஸ்வஸ்மை பிரகாசத்வம்.
ஆத்மத்வம் – அநாத்மா அல்லாதது. சரீரத்துக்கு பிரதி சம்பந்தியாய், ஈஸ்வரனுக்குத் தான் சரீரமாக இருப்பது.
கர்திருத்வரம் – செயல் திறன் உடையது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரதத்வம் நீங்கலாக ,
லௌகிக கார்ய, மோக்ஷ சாதன அனுஷ்டான பர்யந்தமான கர்திருத்தவம் உடையவர். சங்கல்ப ஜ்ஞான ஆஸ்ரயத்வம் கர்திருத்தவம் .

இவை 4ம் ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு உண்டான சாமான்ய (பொதுவான) லக்ஷணம்.

ஆத்மா, அறிவு, பொருள் (அசேதனம்) இவையில்,

ஆத்மா – ஜ்ஞானம் உடையதாய், ஜ்ஞானமுமாய் – இரண்டுமாய் இருக்கும்.

அறிவு – ஜ்ஞானமாய் இருக்கும். ஜ்ஞான முடையதாய் இருக்காது.

பொருள்கள் – ஜ்ஞான ஆகாரமோ, பாசமோ – இரண்டும் இல்லாதது.

இல்லதும் , உள்ளதும் அல்ல தவனுரு — நம்மாழ்வார்.

இல்லது – ஜ்ஞானம் அற்றது, அசித்து .
உள்ளது – ஜ்ஞானம் உள்ளது. சித்து .
அல்லது அவனுரு – சித் , அசித் விலக்ஷணன் என்கிற வியாவர்த்தம் சொல்ல வந்த பாசுரம் இது.

கணவனுக்கு மனைவி, பிரதி சம்பந்தி.
சேஷனுக்கு சேஷி, பிரதி சம்பந்தி. அது போல
சரீரத்துக்கு ஆத்மா, பிரதிசம்பந்தி –
ஒன்றிருந்தால்தான் , இன்னொன்று இருக்கும் என்கிற சம்பந்தம், பிரதி சம்பந்தத்வம்.

இனி ஆத்மாவுக்குண்டான அசாதாரண லக்ஷ்ணம் :

1. அணுவாய் இருக்கும் போதே அறிவுடையதாய் இருக்கும்.
2. பகவத் சேஷமாய் இருக்கும் போதே ஜ்ஞானத்தோடே இருப்பவர்.

சேஷத்வத்தை முதலில் சொல்லி ஜ்ஞாத்ருத்வத்தை அடுத்து சொன்ன படியால், ஆத்ம ஸ்வரூபத்துக்கு சேஷத்வமே பிரதானம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (திருவாய் 8-8-2)

ஈஸ்வரனுக்குண்டான சரீர-ஆத்ம அந்தராத்மதையைச் சொல்லும்போது, ஆத்மாவை ஆழ்வார்
அடியேன் என்று சொன்னபடி காணலாம். ”உள்ளான்” என்கிற வியாபக ஜ்ஞானம் உடைய ஆழ்வார் தன்னை,
என்னுள் உள்ளான் என்று சொல்லாமல் அடியேன் உள்ளான் என்று சொன்ன படியாலே,
ஜ்ஞாதிருத்துவத்தைக் காட்டிலும், சேஷத்வமே ஆத்மாவுக்குண்டான விசேஷ தர்மமாய் தேறுகிறது .

யானும் தானாய் ஒழிந்தானே (நம்மாழ்வார் 8-8-3) என்ற இடத்தில் ஜீவ-பர ஐக்கியம் அர்த்தம் ஆகுமோ என்னில்,
”ஆய்” என்கிற சாமானாதிகரண்யத்தாலே சரீராத்மா பாவத்தைக் காட்டியதாகவே பார்க்கலாம்.

பகவத் சேஷத்வம் சித் அசித் இரண்டுக்கும் பொது. அந்த சேஷத்வமாகிற வைரத்தை ஜ்ஞாத்ருத்வமுடைய
தங்க பெட்டியில் இருப்பது அசித்தோடு இருப்பதைக் காட்டிலும் உயர்வு.
அது தோற்ற சேஷத்வத்தைச் சொல்லி பிறகு ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உயர்ந்த பகவத் சேஷத்வத்தை மறந்து வர்த்திக்கை அசித் சமானமன்றோ?
ராஜ புத்திரன் அத்தை அறியாது கிடக்க, சம்பந்த ஜ்ஞானம் பெற்றவாரே உண்மை யான அறிவு பிறக்குமா போலே,
ஒரு சதாசாரியனை அண்டி வருகிற சேஷத்வ ஜ்ஞானம் , ஆத்மாவை அழகு படுத்தும்.

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல்நெஞ்சே ! (திருமழிசை ஆழ்வார்) அப்போது தான்
பகவத் தத்வம் நெஞ்சுக்கு நன்கு பிரகாசிக்கும். நெஞ்சும் நல் நெஞ்சாகும்.

ஆதேயத்வம் (தாங்கப் படுமவர் )
விதேயத்வம் (ஆணைப்படி நடப்பவர்)
பராதீன கர்த்ருத்வம் (எண்ணப்படி செய்பவர்)
பரதந்திரம் (பகவானையே பரம பிரயோஜனமாக கொண்டிருப்பவர்)

தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

தேகமே ஆத்மா என்பது பொருந்தாது. நான் உடல் என்பது வழக்கு இல்லை. என்னுடைய உடல் என்பது தான் வழக்கு.
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு தேக அதிரிக்தன் ஆத்மா என்பதை உறுதி படுத்துகிறது.

கண்களால் பார்க்கிறேன் என்பதிலுள்ள ”ஆல்” 3ஆம் வேற்றுமை உறுபு வெளி இந்திரியங்கள் ஆத்மா இல்லை,
அவை கருவி , ஆத்மா கர்த்தா என்பதை உறுதி படுத்துகின்றன. த்ரிதீயா விபத்தே கருத்ருத்வாத் என்பது சூத்திரம்.

மனஸா ஸ்மராமி , நெஞ்சால் நினைக்கிறேன் என்கிற வழக்கும் – ”ஆல்” வேற்றுமை உறுபு –
அந்தக் கரணமான மனசைக் காட்டிலும் ஆத்மா வேறு என்பதை தெரிவிக்கிறது.

மம பிராணாஹி – என்னுடைய பிராணன் என்கிற வழக்கும்
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு கொண்டு ஆத்ம பரிச்சேதம் சொல்லிற்று.

தீ = ஜ்ஞானம். தர்ம ஜ்ஞானத்தை உடையது ஆத்மா. ”யான்” தர்மி ஜ்ஞானம். ”எனது” தர்ம (பூத) ஜ்ஞானம்.
ஆக தர்ம பூத ஜ்ஞானமும், ஆத்மாவும் வேறு.

ஆத்மா அணு, வேத உபநிஷத் பாகங்களில் இப்படி சொல்லி இருக்கிறபடியால். .
ஆனையின் ஆத்மா ஆனை அளவு, பூனையின் ஆத்மா பூனை அளவு என்கிற ஜைன சம்பிரதாயம் பொருந்தாமையோடு கூடியது.
அவர்கள் சொல்லுகிற படியானால், ஆத்மாக்கள், வேறு வேறு பிறவிகளில் , எடுத்துக் கொள்கிற தேகத்துக்கு ஏற்ப
சுருங்கல் , விரித்தல் செய்ய வேண்டும். அதாவது ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் உண்டு என்பதை நியாயப் படுத்த வேண்டும்.
உண்மையில் ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவித்தலாகிற ஸ்வபாவ விகாரம் உண்டு. ஸ்வரூப விகாரம் கிடையாதே .
ஆகவே அது ஏகதா அணுவாகவே இருக்கும், ஒரு கால விசேஷத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா, உத்கிரமித்து,
அர்ச்சிராதி மார்க்கத்தில் பரமபதத்தை அடைகிற படியால். ஆத்மா விபுவாக இருந்தால், பயணப்பட வாய்ப்பில்லை யாகையாலே.

ஆத்மா ஒரு இடத்தில் இருந்தாலும், அதனுடைய தர்மபூத ஜ்ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும்.
ஸ்வப்ன சரீரத்திலும் வியாபிக்கும். ஆபாச இன்பத்துக்கு ஐம்பது சரீரம் என்று சௌபரிக்குப் போலே
அத்தனைக்கும் வியாபிக்கும். கூடு விட்டு கூடு பாய்கிறபோது அந்த இரண்டு சரீரமளவும் வியாபிக்கும்.

ஆத்மா நித்யம். பௌத்த, சார்வாக மதத்தில் சொல்லியது போல் ஆத்மா அநித்யமாய், சரீரத்தோடே அழிவதாகில் ,
கிருத பிரணாசம் (=செய்தவை களுக்கு பலன் கிட்டாமை)
அகிருத அப்பியாகமம் (=செய்யாதவைகளுக்கு அனுபவிக்கை)
ஆகிற தோஷம் வரும்.
ஆத்மாவுக்கு உற்பத்தி, நஷ்ட்டம் தேக சம்பந்தமும், வியோகமும் ஸ்வரூபேண உண்டாதல் சாதல் கிடையாது.
ஜீவராசிகளுக்கு ஜ்ஞானத்தில் உண்டான தாரதம்யத்துக்குச் சேர மனுஷ்ய, மிருக, ஸ்தாவர, ஜங்கம பிறவிகள் கிடைக்கின்றன.
அவர்களின் ஜ்ஞானம் கர்மத்தால் மறைக்கப் படும் அளவைப் பொருத்து
ஜ்ஞான சங்கோச, விகாச பரிமாணத்தின் அளவையைக் கொண்டு அந்தந்த பிறவி கிட்டுகிறது எனலாம்.

மனுஷ்ய சரீரத்தில் நகம் முதல், மயிர் கால் வரை பல ஆத்மாக்கள் உண்டு.
அவைகள் கல்லுக்குள் இருக்கிற ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் மழுங்கின நிலையில் உள்ள படியாலே
அதிஷ்டான ஆத்மாவுக்குண்டான சுக துக்க அனுபவங்கள் வியாபரியாத ஆத்மாக்களுக்கு கிடையாது.

ஆக ஆத்மா ஒன்றல்ல, பின்னமே. ஒவ்வொரு சரீரத் துக்குள்ளேயும் உள்ள ஆத்மாக்கள் வேறு வேறு என்பது அத்வைத சித்தாந்த பிரதிபடம் .
ஜ்ஞானத்தில் சமண ஆகாரத்தைக் கொண்டு, ஜாத்யேக வசனமாய் அவை ஒன்று என்று சொல்லும் வழக்கு உண்டு.
பரமாகாச-கடாகாசம் போலன்று.

ஆகாசத்தில் உள்ள சூரியன், குளத்தில், கிணற்றில், கண்ணாடியில் பட்டு ஒன்று பலவாக தெரிவது போல்,
ப்ரஹ்மம் ஒன்றே. சரீரமாகிற உபாதியால் அவை பலவாக தோற்றுகின்றன.
சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தால், பல என்ற அந்த பிரமம் விலகும் . என்பது உண்மையானால்

நித்யோ நித்யானாம், சேதன சேதனாநாம் என்கிற பஹு வசன பிரயோகம் ஆத்மாக்கள் ஒன்றல்ல,
பல என்று பேசுவதை எப்படிப் பரிஹரிப்பது? ”ஏஷாம் – தேஷம் ” என்கிற கீதா ஸ்லோகத்தை எப்படிப் பொருந்த விடுவது?
ஆக அத்வைதம் பொய்யாகி, ஆத்மாக்கள் பல என்பதே நிரூப்யம்.

அஹம் அல்லாததை அஹம் புத்தி பண்ணுகை

ஆத்மா கர்த்தா – லௌகிக வியாபாரங்கள், மற்றும் மோக்ஷோபாய சாதனா அனுஷ்டான, உபாசனா கிரியா கர்தாவாகையாலே.
போக்தா-பாப புண்ய விஷயானுபவங்கள் நடக்கிற படியாலே .
சரீரி, சரீரம் – இந்த உடலோடும் , பரமாத்மாவோடும் வைத்துப் பார்க்கையில்,
உடலை தாங்குபவராயும், ஈஸ்வரனால் தாங்கப் படுமவராயும் இருக்கையாலே.
அமலத்வம்-குற்றமற்ற தன்மை. இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஆத்மா -; ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருக்கும்

ஜ்ஞானம் -; ஜ்ஞானம் ஞேயம் 2ஆய் மட்டும் இருக்கும் . ஜ்ஞாதாவாய் இருக்கமாட்டார் அசேதன மாகையாலே.

பிரகிருதி -; ஞேயமாய் மட்டும் இருக்கும்.

ஈஸ்வரன் -; ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருப்பர்.
கூடவே தாதாவாய் இருப்பர், மூன்றன் பிரதாதா அவரானபடியாலே.

—————————————————————————

பர பக்ஷம் :

பௌத்தன் – ஆத்மா க்ஷணிகம். ஏனெனில் அவர்கள் மதத்தின் படி ஜ்ஞானமே ஆத்மா. ஜ்ஞானம் க்ஷணிகம்.
ஆகவே ஆத்மாவும் க்ஷணிகம். ஒருகாலத்தில் ஏற்படும் ஜ்ஞானம் மறறொரு காலத்தில் ஏற்படும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறு பட்டது,
காலத்தால். அப்படிப் பார்த்தால் நோற்பும் பயனும் வெவ்வேறு ஆத்மாக்களதாய் ஸ்ரமிசிதவனுக்கு பலன் இல்லாமல் போகும்.
உலகியல் நடைமுறை இப்படி இல்லை ஆதலால், ஜ்ஞானமும் க்ஷணிகமல்ல. ஆத்மாவும் க்ஷணிக மல்ல .

சாருவாகன் – பூத சதுஷ்டயத்தால் (ஆகாசம் தவிர்ந்த பிருதிவி, அப்பு தேஜஸ் வாயு இவற்றால்) ஆன தேகமே ஆத்மா.
தேக அதிருக்த ஆத்மா என்பது இல்லை. ஸ்வர்க்க நரகங்கள் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற நாஸ்திக வாதம்.
உயிருள்ள தேகம், உயிரற்ற உடல் என்கிற வித்யாசம் தெரிகிற படியால் இவர்கள் பக்ஷமும் உண்மைக்குப் புறம்பானது.

ஜைனர் – யானைக்கு யானை அளவு பெரிய ஆத்மா . எறும்புக்கு எறும்பளவு ஆத்மா என்கிற இவர்கள் பக்ஷமும் நிரஸ்த்தம் .
இந்த ஜென்மத்தில் யானையாக இருந்து அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறக்க வேண்டுமானால்,
ஆத்மா சுருங்கல், விரித்தலுக்கு உள்ளாக வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆத்மாவை அணு என்று சொல்லி இருக்கிற படியால்,, இவர்கள் வாதமும் தவறு.

சாங்கியம் – கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பிரகிருதி புருஷன்கள் அளவே. மூன்றாவதான ஈஸ்வர தத்துவம் இல்லை என்று மறுப்பவர்கள் .
செயல் உடலதாகவும், அனுபவம் ஆத்மா வுடையதாகவும் பார்ப்பவர்கள்.
இது நிரீஸ்வர் சாங்கியம். ஸேஸ்வர சாங்கியர் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும்,
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பூத பரிமாண உடலுக்கேயாய்,
ஜெபா குஸும – ஸ்படிக உதாரணத்தின் மூலம், எப்படி புஷ்பத்தின் சிகப்பு நிறம் ஸ்படிகத்தில் பட்டு, ஸ்படிகம் சிகப்பாக தெரிகிறதோ,
அதுபோல, தேகத்துக்குண்டானது ஆத்மாவுக்குப் போலே தெரிகிறது என்பர்.
உண்மையில் கருத்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவனுக்கே என்பது வைதிக பக்ஷம். ராமானுஜ சம்பிரதாயமும் கூட.

யாதவ பக்ஷம் – பிரம்மத்தின் அம்சம் ஜீவன் என்பது . அதுவும் தவறு ஏனென்றால், பிரமத்துக்கு சரீரம் பிரக்ருதியும், ஆத்மாவும்.

பாஸ்கர பக்ஷம் – சரீரமாகிற உபாதியாலே பிரம்மத்தின் ஒரு கண்டமாக (பகுதியாக) சோபாதிக ஜீவன் இவர்களால் பார்க்கப் படுகிறது.
அதுவும் தவறு ஏனெனில், ஆத்மா அணுவாகவும், பிரமத்துக்கு சரீரமாகவும் இருக்கிற படியால்.

அத்வைதம் – பிரம்மத்துக்கு அஜ்ஞானம். தன்னைப் பலவாக பிரமிக்கிறது அப்படி இல்லை என்கிற ஐக்கிய ஜ்ஞானம் வந்தால்,
அதுவே மோக்ஷம். இதிலே பல கேள்விகள்.

1. பிரம்மத்துக்கு பிரமம் என்பது இயற்கையா? செயற்கையா?
2. அதாவது, ஸ்வரூபமா? ஸ்வரூப வியதிரேகியா?
3. ஸ்வரூபம் (இயற்கை) என்றால், அவித்யை விலக வாய்ப்பில்லை. அப்படியானால்,
பிரமத்தால் வந்த ஜகத் வியாவிர்த்தி விலகாது / அஸ்த்தமிக்காது .அங்கனாகில் மோக்ஷம் சித்திக்காது .
4. இயற்கை இல்லை. செயற்கைதான் என்றால், அத்வைதம் நிற்காது. பிரம்மம் என்கிற ஒருதத்வம்.
பிரம்மத்துடைய அஜ்ஞானம் என்கிற ரெண்டாவது தத்வம் சித்திக்கும்.
5. இதில் எது உண்மை? பிரம்மம் பாரமார்த்திகமா? அதன் அஜ்ஞானம் பாரமார்த்திகமா?
6. பிரமத்தை பொய் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவித்யை பொய்யானால், பொய்யான ஒன்றை எப்படிப் போக்க?
7. முடிவாக, அவித்யா சபளித்த பிரம்மத்தின், அஜ்ஞானத்தை யார் போக்க?
அதுவும் பொய்யான ஒரு ஆசாரியானால் , பொய்யான ஜ்ஞானத்தால் மறைக்கப் பட்ட உண்மையான
பிரம்மத்தினிட மிருந்து பிரமத்தை எப்படிப் போக்க முடியும்?
என்பதான 7 வித (ஸப்தவித) அனுபபத்தி சித்திக்கும் . இதனால் ஏக ஜீவ பக்ஷமும் நிரஸநமாகிறது .

வாசஸ்பதி மதம் – பிரம்மத்துக்கு பல அந்தக் கரணங்கள் (மனசு) இருப்பதால், பல ஜீவர்களாக தோற்றுகிறது
என்பதும் ஆத்மா விபு என்கிற வாதம் உள்பட அனைத்தும் தவறு. ஏனென்றால்,

1. ஆத்மாக்கள் அநேகம்.
2. அதனதன் கர்மத்தால், வெவ்வேறு சரீரங்களை எடுத்துக் கொள்கின்றன.
3. பிராகிருத சரீரம் அசேதனம். கர்மத்தால் அதனுள் விலங்கிடப் பட்டுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் சேதனம்.
4. அவை அனைத்தும் பிரம்மத்துக்கு சரீரமாய் (உடலாய்) பிரகாரமாய் இருக்கும்.
5. சாஸ்திர ஜ்ஞானத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் , கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை
அனுஷ்ட்டித்து (அ) பகவானை சரணமடைந்து அவனுடைய கருணையால் பாபங்கள் விலக்கப் பெற்று
சம்சாரத்தைக் கடந்து மோக்ஷமடைகிறான். என்கிற, இதுவே சாஸ்திர சம்மதமான மார்க்கம். மற்றவை குத்ருஷ்டிகள் மதமாகின்றன.

6. ஆத்மா விபுவல்ல அணுவே. அதன் தர்ம பூத ஜ்ஞானம் பல சரீரங்களில் பிரசுரிக்க ஒருவர் பல சரீரம் எடுக்கவோ
அவர் புகழ், பெருமை பல இடங்களில் வியாபிக்கவோ, வாய்ப்புண்டு .
அது யோக சக்தியாலோ / அதிருஷ்ட பலத்தாலோ உண்டாவது.

இங்கு அதிருஷ்டமாவது பகவானுக்கு பிரீதியை விளைவிக்கிற , ஜீவனாலே செய்யப் பட்ட கர்ம விசேஷம்.
சுருங்கச் சொல்லில், பகவத் கிருபை (அ) பகவத் ப்ரீதி விசேஷ ஜ்ஞான ரூபம் அதிருஷ்டம்.
”விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்று ஆழ்வார் விளக்கம்.
அது பகவான் ஒருவனிடத்தில் மட்டும் நிலைப்பது., தேவதாந்தரங்கள் அநித்யமாகையாலே.

—————–

அந்த ஜீவாத்மா 1. பத்தர். 2.முக்தர். 3. நித்யர் என மூவகைப் பட்டவர்கள்.
இதில் பத்தர்கள் கர்மத்துக்கு வசப்பட்டு, பிராகிருத பூமியில் இன்னும் உழன்று கொண்டு இருப்பவர்கள்.
முக்தர்கள் கர்மங்களில் இருந்தும், பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு, அர்ச்சிராதி மார்க்கத்தில்
”அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்ற கணக்கில் வைகுந்தம் புகுந்தவர்கள்.
நித்யர்கள், அநந்த,கருட,விஸ்வக்ஷேணர் போல, கர்ம வாசனையே இல்லாதவர்களாய்,
பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் இருப்பவர்கள்.

1. பத்தர்கள் : 1. தேவர்கள் :

பிரம்மா ; சிவன்.
||
V
நாரதாதி தேவர ரிஷிகள்
விசிஷ்டாதி பிரம்ம ரிஷிகள் (ராஜ ரிஷி, மகா ரிஷி, ரிஷி என்று அவர்களின் யோக/வைராக்யங்களை இட்டு தார தம்யாம்)
புலஸ்திய, மரீசி, கச்யப, தக்ஷ நவ பிரஜாபதிகள்
திக்பாலகர்க்ள் -; வ – குபேரன் ; கி – இந்திரன்; தெ – எமன்; மே – வருணன்)
14 – இந்திரர்கள் (பிரம்மா பகல் போதில் படைக்கப் படுமவர்கள்)
14 – மநுக்கள்
அஸுரர்கள்
பித்ருக்கள்
கந்தர்வ யக்ஷ
கின்ன
கிம்புருஷ
சித்த
வித்யாதரர்கள்
8 – வஸுக்கள்
11 – ருத்ரர்கள்
12 – ஆதித்யர்கள்
2 – அஸ்வினி தேவதைகள்
தானவ யக்ஷ ராக்ஷஸ
பிசாசங்கள் .

2. பத்தர்கள் : மநுஷ்யர்கள் :
||
v
பிராஹ்மண
க்ஷத்ரிய
வைஸ்ய
சதுர்த்தர்கள்

3. பத்தர்கள் : திர்யக்கு :
||
v
பசு
பக்ஷி
ஊர்வன (பாம்பு முதலான)
பறப்பன (விட்டல் பூச்சி முதலான)
கீடங்கள் (புழு பூச்சிகள்)

4. பத்தர்கள் : ஸ்தாவரம் :
||
v
விருக்ஷம்
குல்மம் (புதர்)
லதா (கொடி)
வீறு (அறுக்க, அறுக்க முடியாதன)

இந்த நான்கையும் வேறுவிதமாகவும் பிரிக்கலாம்.

ஜராயுஜ (கர்ப பையிலிருந்து உண்டாவன ) = 1,2;3.
அண்டஜ ( முட்டையிலிருந்து உண்டாவன ) = 3
உத்பிஜ்ஜ (முளைவிட்டு உண்டாவன) = 4
ஸ்வேதஜ (வியர்வையில் உண்டாவன ) = 3
அயோநிஜ (யோநியில் சேராத)
||
v
பிரம்மா (நாபி கமலம்)
சிவன் (பிரம்மாவின் புருவ நெறிப்பு)
ஸநகாதிகள் (பிரம்மாவின் மனசிலிருந்து )
சீதா (பூமியிலிருந்து)
முதலாழ்வார்கள் (பூவிலிருந்து)
திரௌபதி, (நெருப்பிலிருந்து)
திருஷ்ட துயும்னன்
பூத, வேதாளங்கள்.

கர்ம பிரவாக சக்ரம் :

அவித்யா (அறியாமை)
ருசி (தூண்டுதல்)
கர்மா
(தவறான செயல்)
ஜென்மம்
(அழுத்தம்)
வாசனை
விதை செடி பூ காய் பழம் விதை போலே பிறவியும்

கர்ப ஜன்ம சைஸவ பால்ய யௌவன
ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்தி மூர்ச்சா
ஜரா மரண
ஸ்வர்க்க நரகாதி
ஆத்யாத்மிக ஆதி தைவீக ஆதி பௌதிக தாப த்ரய சுழற்சி .

ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தியும் இழந்து,
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடு கிறவர்களே பத்தர்கள்..

——————————————————————

சாஸ்திரத்துக்கு வசப்படாதவை -; விலங்குகளும், ஸ்தாவரங்களும்..

சாஸ்திரத்துக்கு வசப்பட்டவர்கள் -; தேவர்களும், மநுஷ்யர்களும். விவேக ஜ்ஞானம் உள்ளபடியால்.
||
V
புபுக்ஷுக்கள் ; தேஹாத்மாபிமானிகளாய்
அர்த்தத்தில், காமத்திலும் இச்சை உடையவர்கள்.

முமுக்ஷுக்கள் -; தேஹ அதிருக்த ஆத்ம பிரசம்ஸை உள்ளவர்கள். தர்மத்தில் பற்றுடையவர்கள்.

பரலோக அனுபவ ச்ரேயஸ் சாதனம் தர்மம் . யக்ஞ, தான, தபஸ், தீர்த்த யாத்திரை, திவ்ய தேச வாசம் இத்யாதி இதில் அடங்கும்.
||
V
தேவதாந்த்ர பரர்கள் ; தர்மார்த்த புருஷார்த்த துக்காக அன்ய தேவதைகளை உபாசிப்பவர்கள்.

பகவதாஸ்ருதர்கள் -; பக்தன். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களில் ,
வீட்டின்பத்தை விட்டு இதர பலன்களுக்காக பகவானை ஆச்ரயிப்பவர்கள்.
பிரபன்னன் -; மோக்ஷ லாபார்த்தி.

ஆர்த்தன் -; பிரஷ்ட ஐஸ்வர்ய காமன்.
அர்த்தார்த்தி -; அபூர்வ ஐஸ்வர்ய காமன்.
ஜிக்ஞாஸி -; கைவல்யார்த்தி.

கேவலன் -; ஆத்மானுபவம் தவிர்ந்த இரண்டாவதான பகவதனுபவ பர்யந்தம் வராதவன்.

தேசிக பக்ஷம் -; கேவலன் புபுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் , பிரகிருதி நியுக்த ஸ்வாத்மானுபவ நிஷ்டராய்
விரஜைக்கு இப்பால் வர்த்திப்பவர். திருந்தி பகவன் லாபார்த்தியாக வழியுண்டு.

பிள்ளை லோகாச்சாரியர் பக்ஷம் =; கேவலன் முமுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் ,
ப்ரக்ருதி நியுக்த ஸ்வாத்மானுபவம் விரஜைக்கு அப்பால். கர்ம பூமியை விட்டு விலகி
போக பூமியுள் வந்துவிடுகிற படியால் ஸ்வானுபவத்தை விட்டு, பதி -தியக்த பத்நி போலே ,
பகவன் லாபார்த்தியாக வழியில்லை.

பகவத் பக்தனுக்கும் , பிரபன்னனுக்கும் வேண்டியவை :

வேதத்தை அதன் அங்கங்களோடே வாசிக்கை. அதாவது கர்ம காண்டம் + தேவதா காண்டம் + ஜ்ஞான காண்டங்கள் கற்று
பூர்வ மீமாம்ஸா + உத்தர மீமாம்ஸா இவைகளில் தேர்ந்து
சித், அசித்தினின்றும் வேறுபட்ட
அதிசய, ஆச்சர்ய, ஆனந்த நிலையனாய்
ஹேய குணங்கள் இல்லாதவனாய்
கல்யாண குணைகதானனாந பகவான்
அவனை, ஸ்த்ரீ. சதுர்த்த வர்ணத்தவர்கள் நீங்கலாக
அடைய அங்கங்களோடே கூடிய பக்தியை உபாயமாகக் கொண்டு மோக்ஷமடைபவன் பக்தன். இவர்கள் சாத்யோபாய நிஷ்டர்கள்.

ஆர்த்தித்தவம் , சாமர்த்தியம் இரண்டும் பக்திக்கு யோக்யதைகள்.

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தணன் ஒருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டுநீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உன்னை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்–(பெரிய திருமொழி 5-8-7)

வைதிகன் பிள்ளை மோக்ஷ பூமியை பிராபித்தும் திரும்ப சம்சாரத்தில் வந்தது மோக்ஷ மடைய சாமர்த்தியம் இல்லையான படியால்.
அர்ஜூணனும் வைதிகனும், மோக்ஷத்தின் வாயில் வரை சென்றார்களாயினும்,
மோக்ஷ பூமியைப் பிராபிக்காதது அவர்களிடத்தில் ஆர்த்தித்தவம் இல்லை யானபடியாலே.
அத்தகைய பக்தியானது புத்தி பரிச்சேத ஜ்ஞான விசேஷம் (அ ) முதிர்ந்த ஜ்ஞானம் என்பர்.

வியாசர் முதலானோர் -; சாதன பக்தி நிஷ்டர்கள். அறம், பொருள், இன்பமாகிற திரைவர்கிக பலம் உத்தேஸ்யம்.

நாதமுனி முதலானோர் -; சாத்ய பக்தி (பல பக்தி) நிஷ்டர்கள். மோக்ஷ பலம் உத்தேஸ்யம்.

பிரபத்திக்கு உறுப்பு ஆகிஞ்சின்யமும் , அநன்யகதித்வமும் .
நம்மாழ்வாருடைய நோற்ற நோன்பிலேன், ஆராவமுதே திருவாய்மொழிகள் இதுக்கு லக்ஷணம்.

வீடடைய வேண்டுவது :
சத்ஸங்கம்
நித்ய, அநித்ய வஸ்து விவேகம்
ஸம்சாரத்தில் நிர்வேதம்
வைராக்கிய சீலராய்
மோக்ஷத்தில் விருப்பம்
த்வேஷ மற்றவனாய், விஷ்ணு பக்தனாய், வேத சாஸ்திர விற்பன்னனாய் இருக்கிற ஆசாரியனை அடைந்து
அவர் மூலமாக புருஷகார பூதையான பிராட்டியை ஆஸ்ரயித்து
பக்தி முதலான மற்ற உபாயங்களை (அசத்தி ஆயாசங்களுக்காயும், பிராப்தி இன்மைக்குமாக) விட்டவனாய்
ஆகிஞ்சின்யத்வ , அனன்ய கதித்வங்களை (கர்ம, ஜ்ஞான, பக்தி இல்லை. வேறு கதி இல்லை என்று) பிரார்த்திப்பவராய்

1. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்;
2. பிராதி கூல்யஸ்ய வர்ஜனம்;
3.ரக்ஷஸ்யதி இதி விச்வாஸ:
4.கோப்த்ருத்வ வரணம்;
5.கார்ப்பண்யம்;
6. ஆத்ம நிக்ஷேபம்

இந்த ஆறும் ஏற்பட்டவனாய்
ஸ்ரீமன் நாராயணனுடைய சரணங்களையே உபாயமாக சுவீகரிப்பவன் பிரபன்னன்.

தேசிக பக்ஷம் =; ஆத்ம சமர்ப்பணத்துக்குக் கீழ் சொன்ன
5 ம் அங்கமாய் அங்க பிரபத்தியிலே சேரும்.

லோகாசார்ய பக்ஷம் =; அங்கமாகக் கொண்டு செய்கிற பிரபத்தி சாதன பக்தியில் போய் முடியுமாகையால்
கீழ்ச் சொன்ன 5 ம் ஸம்பாவித ஸ்வபாவங்களாய் – நெல் குத்த வியர்க்குமா போலே –
இவை 6ம் தானே ஏற்பட, ஸ்வதந்த்ர பிரபத்தியிலே சேரும்.

பிரபதிக்கு ஸர்வரும் அதிகாரிகள்.
||
V
ஏகாந்தி :
தேஹ யாத்திரை நிமித்தமாக மற்றதும் கேட்டு, மோக்ஷமும் பிரார்திப்பார்..
இரண்டும் பகவானிடத்திலேயாய், தேவதாந்தரங்கள் பக்கல் போகாதவர்கள்.

பரமைகாந்தி:
பரமனான பகவானை மட்டுமே பலமாக பிரார்த்திப்பவர். இவரும் பகவானைத் தவிர
வேறு இடத்தில் கை ஏந்தாதவர்கள். பிராப்பியா பிராபக ஐக்கியம் இங்கே உண்டு.
||
V
திருப்தன் -; அஸ்மதாதிகள் . இவர்களுக்கு தேஹாவஸானே மோக்ஷம். மரணமானால் வைகுந்தம் தரும்.

ஆர்த்தன் -; ஆழ்வார், ஆசாரியர் போல்வார். பிரபத்தி உத்தர க்ஷணத்திலே மோக்ஷம். .மரணமாக்கி வைகுந்தம் தரும் .

இதுவரை சொல்லப் பட்டவர்கள் பக்தர்கள். கர்மத்தால் தளைப் பட்டவர்கள். பகவத் கிருபையால் மோக்ஷ மடைபவர்கள்.

——————————————————————————

இனி முக்தர்கள் :

உபாய சுவீகார அனந்தரம்
ஆஜ்ஞா கைங்கர்யம் (அகரனே பிரத்யவாயங்கள் – செய்யத் தவறினால் பாபம் )
அநுஜ்ஞா கைங்கர்யம் (பாபம் ஸம்பவிக்காது – செய்யாமல் விட்டால் அவன் முகமலத்திக்கு குந்தகம் ஏற்படும்).
ஸ்வயம் பிரயோஜனமாய் (வேறு எந்த பலனையும் எதிர்பாராது அல்ல அல்ல செய்வதே பிரயோஜனமாய்)
பகவத், பாகவத, ஆச்சார்ய, அசக்கியா அபசார விமுக்தராய்/தவிர்ந்தவராய்
தேஹாவாசானே / சரீரம் விழும் போது
புண்யங்களை மித்ரர்களுக்கும் , பாபங்களை அமித்ரர்களுக்கும் பகவானாலே கொடுக்கப் பட
ஹ்ருதய வாசியான பெருமானிடம் விடை பெற்று
ஸுஷும்நா நாடியை அடைந்து
பிரம்ம ரந்தரம் வழி வெளிப்பட்டு
சூரிய கிரணங்களை வாகனமாகப் பற்றி

அர்ச்சிஸ் மார்க்கத்தில் முதலில் அக்கினி லோகம்
பகல்
ஸுக்ல
உத்தராயணம் வாயு
சூர்ய லோகம்
சந்திர
வித்யுத் / மின்னல்
வருண
இந்திர
சத்ய லோகம் இவைகளை ஆதிவாகர்கள் கடத்த , அவ்வோ லோகங்களின் அபிமானிநி தேவதைகள் ஸத்கரிக்க

பரமபத வாசலில் உள்ள விரஜையில் குளித்து
ஸூக்ஷ்ம சரீரத்தை உதிரி
அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று
அபிராக்ருத திருமேனியும்
பிரம்மாலங்காரமும் செய்யப் பெற்று
நகர பாலகர்களுடைய அனுமதி கிட்டி

வைகுந்தம் புகுதலும்
அனந்த கருட விஸ்வகஸேனர்களைச் ஸேவித்து
திருமாமணி மண்டபத்தில், ஸ்வ ஆச்சார்ய கூடஸ்தரையும் ஸேவித்து
பர்யங்க சயனத்தில், தர்மாதி பீடத்தில் தேவிமார் மூவருடன் ஜாஜுல்யமாய் எழுந்தருளி இருக்கும்
திவ்ய பூஷணார் பூஷிதம், அபரிமித கல்யாண குண பூர்ணராய் ஸேவை சாதிக்கும்
பகவான் திருவடிகளை தலைகளால் வணங்கி
பர்யங்கத்தில் கால் வைத்து மிதித்து ஏறலும்

பகவான் கைபிடித்து தூக்கி மடியில் அமர்த்தி
”கோஸி ?” என்று விளிக்க
அஹம் பிரஹ்ம பிரகார:
பிரஹ்ம பரிகார:
பிரஹ்ம பிரகாஸ: அஸ்மி என்று சொல்லி நிற்க
பகவான் தன்னுடைய குளிர்ந்த கண்களால் கடாக்ஷிக்க
அந்த அனுபவம் தந்த ஆனந்தம் பல்கிப் பெருக
ஸர்வ தேச ஸர்வ கால சர்வாவதோசித சகலவித கைங்கர்யங்களையும் செய்ய விரும்புவனாய்
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸாயுஜ்ய மாகிற
( ஜகத் வியாபார வர்ஜம் – போக மாத்ர ஸாம்ய லிங்காஸ்ச — ஸ்ரீபாஷ்யம் இத்யாதிகளில் தெரிவித்த )
அஷ்டவித ஆவிர்பாகத்தை அடைந்து எல்லை யற்ற பிரம்மானந்தத்தில் தோய்கிறவன் முக்தன்.

”ஸோஸ்ணுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா ” என்று
ஆனந்தத்தில் ஸாம்யம் அடைவதன்றி ஸ்வரூப ஐக்கியம் அடைகிறான் அன்று .

———————————————————————————-

வேத வேதாந்தங்களிலே பிரஹ்மத்தைப் பற்றி சொன்ன வாக்கியங்களுக்கு அர்த்தம் பார்க்கும் போது
எந்தவித முரண்பாடும் கிடையாது. அப்படி விரோதம் தோற்றினாலும் அதை பரிஹரிக்கவே
சுவாமி எம்பெருமானார் பல கிரந்தங்களை அனுகிரகித்தார்.
அவருடைய மதத்தை வெளிச்சம் போட்டு காட்ட அவதரித்த கிரந்தமே ”யதீந்த்ர மத தீபிகா என்கிற இந்த நூல்.

இதிலுள்ள 10 அவதாரங்களில், 9 வது அவதாரம் ”ஈஸ்வரனைப் ” பற்றிய விசாரம்.

ஸர்வேஸ்வரத்வம் .= நியந்திருத்தவம். ஈஸ் +வரச் =ஈஸ்வரன். நியமன சாமர்த்தியம்.
ஸ்வபாவார்த்தே வரச். ஈசன சீல: நாராயண: என்று சங்கராச்சாரியார் வியாக்கியானம்.
ஸர்வ சப்தத்தால் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்குமான ஈஸ்வரன், தனக்கொரு ஈஸ்வரன் இல்லாத என்று பொருள்படும்.
அவன் ஈஸ்வரன். அவனுடைய செயல் ஈசனம் நாம் ஈஸிதவ்யர்கள்.

ஸர்வ சேஷித்வம் = எல்லோருக்கும் ஸ்வாமியாய் , சேஷியாய் இருத்தல். கைங்கர்ய பிரதி சம்மந்தி.
பகவானுக்கு பெருமை சேர்க்க வல்ல கார்யங்களையே எவனொருவன் செய்கிறானோ அவனே சேஷன். பகவான் சேஷி.

ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம்.= எல்லாருடைய (சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஸ்ரார்த்தமித்யாதி)
கர்மங்களாலும் ஆராதிக்கப் படுமவர். ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி.
.
ஸர்வ கர்ம பலபிரதத்வம்.= எல்லா கர்மங்களுக்கும் பலன் கொடுப்பவர் நாராயணனே..
தேவதாந்தரங்கள் கொடுக்கிற பலன்கள் இவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற சக்தி சாமர்த்தியத்தைக் கொண்டு.
அப்படிக் அவர்கள் கொடுக்கும் போதும் இவன் அவர்களுக்குள் அந்தராத்மாவாக இருந்தே கொடுக்கிறான்.

ஸர்வ ஆதாரத்வம்.= எல்லாவற்றையும் தாங்குமவர். அவன் ஆதாரம். நாம் ஆதேயம்.

ஸர்வ கார்ய உத்பாதகத்வம்.=
”செய்கின்ற கிரியெல்லாம் யானே என்னும், செய்வா நின்றகளும் யானே என்னும் ,
செய்து முநிறந்தவையும் யானே என்னும், செயகைப் பயநுண்னுபேம் யானே என்னும் ” (திருவாயிமொழி-5-6-4) என்றபடி
செய்வார்கள் செய்யும் கிரியைகள் அனைத்துக்கும் ஊற்றுவாய் அவரே.

ஸர்வ வாச்யத்வம். = எல்லா சொல்லின் பொருளும் அவரே. திருமால் , சிவன், இந்திரன் என்று எது சொன்னாலும்
அவை அனைத்தும் பர்யவஸான விதியின் படி சரீரியான நாராயணனையே குறிக்கும். வாசகம் = சொல். வாச்யம் = பொருள்.

ஸ்வக்ஞான ஸ்வேதிர ஸமஸ்த திரவ்ய ஸரீரத்வம் = தன்னையும், தன் ஜ்ஞானம் இரண்டும் தவிர்ந்த அனைத்தும் அவருக்கு சரீரம்.
ஜ்ஞானம் அவருக்கு குணமாதலால் அவர் குணியாகிறார். அவர் மற்றவைகளை தாங்குபவராக இருக்கிறாரே ஒழிய,
தன்னைத் தான் தங்குபவராக இல்லை. எனவே தன்னையும், தன் ஜ்ஞானமும் தவிர மற்றவைகளுக்கு சரீரியாக இருக்கிறார் என்று சொல்லப் பட்டது..

இவை ஈச்வரனுக்குண்டான அடையாளங்கள். இந்த பிரஹ்மம் ஜகத்துக்கு திரிவித – உபாதான, நிமித்த, சககாரி – காரணங்களாக இருக்கிறார்.

எது எதுவாக மாறுகிறதோ, அது அதுக்கு உபாதானம். மண் குடத்துக்கு உபாதானம்.
தங்கம் சங்கிலிக்கு உபாதானம். பஞ்சு வேஷ்ட்டிக்கு உபாதானம். மூலப் பொருள் உபாதானம்.
செய்கிறவர் சங்கல்பமடியாக பொருள்கள் படைக்கப் படிகின்றன.
எனவே குயவன், தட்டான், நெசவாளி இவர்கள் குடத்துக்கு, சங்கிலிக்கு, வேஷ்டிக்கு நிமித்த காரணம்.
இப்படி படைக்க உதவும் கருவிகளுக்கு – சககாரி காரணம் என்று பெயர்.
குயவனுக்கு தண்ட ,சக்ரம். தட்டானுக்கு நெருப்பு துருத்தி, ஊது குழல், நெசவாளிக்கு ராட்டை,
நெய்கிற இயந்திரம் இவைகள் அவரவர்களுக்கு சககாரி காரணம்.

சித் அசித் விஷிஷ்ட பிரஹ்மம் ஏகம் .

பிரஹ்மத்தோடு கூட இரண்டாவது கிடையாது. – அதுவைதம்

சித் அசித்தோடு கூடிய பிராஹ்மம் (போல ) இரண்டாவது கிடையாது – விஷிஷ்டாத்வைதம்

விஷிஷ்ட யோகோ அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் –
பிரஹ்மத்தோடு கூடி இருக்கிற (ஜாத்யேக வஸ்துக்களான) சித் அசித் போலே இரண்டாவது கிடையாது.
விஷிஷ்ட அஸ்ய அத்வைதம் விஷிஷ்டாத்வைதம் – சித் அசித் கூடி இருக்கிற பிரஹ்மத்தைப் போல இரண்டாவது கிடையாது .-
ந த்வத் சமஸ்ச அப்யதிகஸ்ச திருஸ்யதே என்றபடி.

ஸத் வித்யா பிரகரணம் :(சாந்தோக்ய உபநிஷத்)

ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் – பிரதிக்ஞை.

ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் ஜ்ஞானம்.

மண் என்கிற காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யமான குடம், மடக்கு, பொம்மை அனைத்தும் அறிந்ததாகும் அல்லவா? அதுபோல

காரண பிரஹ்மத்தை அறிந்தால், அதன் காரியமான ஜகத் அனைத்தும் அறிந்ததாகும்.

குடம் என்றும், மடக்கு என்றும் பொம்மை என்றும் பலவாக பார்ப்பது வியவகார வழக்கு.
ஆனால் எல்லாம் மண் என்பதே உண்மை. காரண ரூபத்திலான மண்ணுக்கும் காரிய ரூபத்திலான
மண்ணுக்கும் நாம (குடம்) ரூப (வாயும், வயிறுமான ஆகாரம்) வியவகார வித்யாசம் உண்டு போலே ,
காரண பிரஹ்மமான ஈஸ்வரனுக்கும் கார்ய பிரஹ்மமான ஜகத்துக்கும் குடத்துக்கும் மிருக் பிண்டத்துக்குமான
வேறுபாடு போலே ஆதார ஆதேயத்தவ, சேஷ சேஷிதவ வியவகார பேதம் உண்டு.

மண், மண்ணால் ஆன குடம். பிரஹ்மம். பிரஹ்மத்தால் ஆன ஜகத் என்பதே உண்மை.
எது எதுவாகிறதோ அது அதுக்கு உபாதாந காரணம் என்று வைத்து பார்க்கில், ஜகத்துக்கு ஈஸ்வரன் உபாதாந காரணம்.

பிரளயம் காரண தசை. ஸ்ருஷ்டி கார்ய தசை. காரண பிரஹ்ம விசிஷ்டமான சித்தசித் ஸூக்ஷ்ம தசையிலும் ,
கார்ய பிரஹ்மமான ஜகத் நாம-ரூப வியார்த்தமாய் ஸ்தூல தசையை அடைவதே ஸ்ருஷ்டி.

” பஹுஸ்யாம் பிரஜாயேய ”என்று பிரஹ்மம் சங்கல்பிப் பதால் பிரஹ்மமே நிமித்த காரணம்.
நான் பலவாக ஆகிறேன் ”அநேந அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி ” என்று தான்
தன்னை கார்ய வஸ்துக்களாக மாற்ற நினைப்பதால், ”அபிந்ன நிமித்த உபாதான காரணம் பிரஹ்ம”
என்கிற சாஸ்திர வசனத்தின்படி உபாதாந காரணமாகவும் அவரே ஆகிறார்.

தண்ட, சக்ரம் போலே பிரஹ்மம் தன்னிடத்தேயான பிரக்ருதி, காலம், ஜ்ஞானம், சக்தி இவைகளைக் கொண்டே படைப்பதால் ,
சககாரி காரணமும் பிரஹ்மமே என்று தேறுகிறது.

”ஸதேவ ஸோம்ய ஏகமேவ அக்ர ஆஸீத், அத்விதீயம் ”

ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டாவது இல்லை என்றால்

1. ஸதேவ = உள்ளத்திலிருந்து உள்ளது வந்தது (ஸத் கார்ய வாதம்) அன்றி இல்லத்திலிருந்து உள்ளது வர (அஸத் கார்ய வாதம்) இல்லை ‘
2. ஏகமேவ = நாம ரூபம் இல்லாது ஒன்றே என்று சொல்லும்படியாக ஸூக்ஷ்ம தசையில் இருந்த சேதநா சேதன விஸிஷ்ட காரண பிரஹ்மம் அதுவே
3. அதுவிதீயம் = ஸ்தூல தசையிலான சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மமாயித்து, இரணடாவது இல்லை.
வஸ்து இரண்டாவது இல்லை என்ற பொருள் அல்ல. காரண பிரஹ்மமே காரிய பிரஹ்மம் ஆனபடியால் இரண்டாவது இல்லை என்கிறது.

சைஸவம், பால்யம், யௌவனம் , யுவா, குமார விருத்த என்று ஒருவருக்கு பல அவஸ்தை உண்டு போலே,
பிரஹ்மத்தின் சரீரமான சித்தசித் பிரகிருதி பிராகிருதங்களாக விகாரமடைகிறதே ஒழிய,
ஆத்மாவுக்குப் போலே பிரஹ்மத்துக்கும் எந்தவித விகாரமும் ஏற்படுவது இல்லை . பிரஹ்மம் நிர்விகாரம்

”தத்வமஸி ஸ்வேத கேதோ” = தது + த்வம் +அஸி .

விட்டு (ஜகல்) இலக்கணம்
விடாத (அஜகல் ) இலக்கணம்
விட்டு விடா (ஜகாலஜகல்) இலக்கணம்

விசேஷணத்தை (அடைமொழி) விட்டு விசேஷ்யத்தை (அடைகொளியைப் ) பார்ப்பது விட்டிலக்கணம் .
சேர்த்துப் பார்ப்பது விடாவிலக்கணம்.

தது = த்வம் அஸி
விசிஷ்ட பிரஹ்மமே = ஸ்வேதகேதோ, உனக்கு அந்தராத்மாவான பிரஹ்மம் ஆகிறது.

ஸூக்ஷ்ம சேதநாசேதன விசிஷ்டமாய் பிரஹ்மம் இருக்கிறபடியால் அது உபாதான காரணம் ஆகிறது.
கார்ய ரூபமாக விகாரம் அடையக் கூடிய வஸ்து உபாதான வஸ்து . மண் குடமாவதற்கு இடையில் பல நிலைகள் உள்ளன.
மண்ணைப் பிசைந்து உருட்டி, சக்கரத்தில் இட்டு சுழற்றி வாயும் வயிறுமாகப் பிடித்தால் குடம் உண்டாகும் .
இப்படியான அடுத்தடுத்த நிலைகளின் (நியத) முன் நிலை, அதன் அதன் உபாதானப் பொருள் ஆகும்.

சங்கல்ப விசிஷ்ட பிரஹ்மமாய் இருக்கிறபடியால் அதுவே நிமித்த காரணம் ஆகிறது.
காரணப் பொருளை கார்யப் பொருளாக யார் பரிணமிக்கச் செய்கிறாரோ அவர் நிமித்தம்.
தான் மாறாமல் தன்னோடு கூடிய சேதநாசேதனங்களை மாற்றமடையச் செய்கிறபடியால்.

காலம் , ஜ்ஞான, சக்தியாதிகளுக்கு அந்தர்யாமி பிரஹ்மம்மாய் இருக்கிறபடியால் சககாரி காரணமும் அதுவே ஆகிறது.
கார்ய உத்பத்தியில் உதவி செப்பவை ஸஹகாரி.

இப்படியாகப் படைப்பவர் நாராயணன் என்று சொல்லலாம். அதுதான் எப்படி? என்றால் :

கஸ்ய த்யேய:? காரணம்து த்யேய:

உள்ளது காரணமா? இல்லது காரணமா? உள்ளது காரணம் என்றால் ”ஸத் ” காரணம். ‘ஸதேவ ஸோம மக்ரம் ஆஸீத்”.

ஜ்ஞானம் உள்ளது காரணமா? ஜ்ஞானம் அற்றது காரணமா? ஜ்ஞானம் உள்ளது காரணம் என்றால் ‘
‘ஆத்மா ” காரணம். ”ஆத்மா வா இதம் ஆக்ர ஆஸீத் ”

சிறியது காரணமா? பெரியது காரணமா? பெரியது காரணம் என்றால், ”உள்ளதாய் ,
” ஜ்ஞானம் உள்ளதாய்” இருக்கிற ”பிரஹ்மம் ” காரணம். ஆகும்.

அந்த பிரஹ்மம் நாராயணனே என்றது எந்த நியாயத்தாலே?

1. ஸர்வ சாகா பிரத்யயம் நியாயம். – பூர்வ பாகத்தில், பல சாகைகளில் பலபடி சொல்லப்பட்ட
ஒன்றை சமன்வயப் படுத்தி பொருள் கொள்ளல்.

2. ஸகல வேதாந்த பிரத்யயம் நியாயம். – பல பல உபநிஷத்துக்களில் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கொன்று
முரண்படாமல் பொருள் கூறல். ஸத் , ஆத்மா , பிரஹ்மம் என்று வெவ்வேறு சொல்லால் குறிப்பிட்ட பிரஹ்மத்தை ,
வேதாந்தங்களில் பூர்ணமாக பிரஹ்மத்தைப் பற்றி சொன்னதுக்கு முரண் படாமல் இன்னது அன்று அறுதி இடல்.

3. சாமான்ய விசேஷ நியாயம். – பொதுவாக சொன்னவைகளை விசேஷித்து சொன்னதனோடு சேர்த்துப் படித்தல்.
அதாவது, ஸத்; ஆத்மா; என்கிற சாமான்ய சப்தங்களை , பிரம்மா; சிவன்; இந்திரன் என்று விசேஷித்துச் சொன்ன சப்தங்களோடு சேர்ப்பது.

4.சாக-பசுந் நியாயம். – பசுவைக் (4 கால்மிருகம்) கொண்டு யாகம் செய் என்று சாஸ்திரம் சொல்ல,
எந்த நாலுகால் பசு? என்ற விசாரம் வந்தது. அதற்கு சாஸ்திரம் சாக-பசு என்று விசேஷித்து
”வெள்ளாட்டைக்” கொண்டு யாகம் செய் என்று நிர்தேசித்தது.

சப்தங்களுக்கு பொருள் இரண்டு வகையில் சொல்லலாம்.
ஒன்று யோகம்.= சப்த சேர்க்கை.
இரண்டாவது ரூடி = பிரசித்த வழக்கு.
பங்கஜ -; தாமரை. நாய்க்குடை, ஆம்பல், அல்லி எல்லாம் தாமரையை போலவே நீர் அளரில் தோன்றினாலும்,
ரூடி அர்த்தம் தாமரை என்பதே.

வேதாந்தத்தில் பிரம்மா, சிவன், இந்திரன், ருத்ரன், ஹிரண்யகர்பன், நாராயணன் என்று பல படி சொல்லி இருப்பதால்,
இவர்களில் காரண பிரஹ்மம் யார் என்ற விசாரம் வந்தது. இந்த சப்தங்களின் ரூடி அர்த்தத்தை மாற்ற முடியாது.
யோக அர்த்தத்தைக் கொண்டு மற்றவர்களின் பெயர்களை நாராயணனுக்கு பொருந்த விட வழி உள்ளது போல்
மற்றவர்களின் பெயருக்கு நாராயணன் என்பதும் அர்த்தமாகச் சொல்ல வழி இல்லை. காரணம்:

பூர்வ பததாது ஸம்க்ஞா: அக: என்ற பாணினி சூத்திரத்தின் படி
நாரா: + அயன = நாராயன என்பதற்கு பதிலாக நாராயண என்றாகும் என்கிறார்.
அதாவது ஒருசொல் ”ர ” வில் முடிந்து அடுத்த சொல் ”க ” வில் தொடங்காவிடில், ”ன ” என்பது ”ண ” என்று மாறி,
விசேஷித்து ஒருத்தரை மட்டுமே குறிக்கும் என்பது வியாகரணம்.

ஆதலால் யோகிகப் பொருள் கொண்டு ”நாராயணன் ‘ என்ற சொல்லை, இந்திரன், சிவன், ருத்ரன் பிரம்மன்
இவர்களுக்கு பொருந்த விட முடியாதோ , என்றால், ‘ண ” த்வம் ஒரு தேவதா விசேஷத்தைத்தான் குறிக்கும்
என்பது பாணினி சூத்திரத்தின் விதி.
அவர்கள் எல்லாம் ”ஸ்ரஷ்டம் ” என்பது பிரசித்தமும் கூட.
எனவே ”ஸத் ” ஆத்மா ” பிரஹ்மம் ” என்ற நாமங்கள் நாராயணனை மட்டுமே குறிக்கும்
ஆதலால், நாராயணனே ஸ்ருஷ்டி கர்த்தா, பர பிரஹ்மம் என்பது கரதலாமலகமாய் விளங்குமன்றோ?

பிரகிருதி காரணமா? என்றால் அதுக்கு உபாதான காரணத்வம் சொல்லப் போனாலும்,
நிமித்த காரணம் சொல்லப் போகாது , ஜ்ஞானம் இல்லையாதலால்.

சாந்தோக்கியத்தில் ஸத், ஆகாச, பிராண, சப்தங்களைச் சொல்லி ஜகத் காரணம் என்றது..
வாஜஸநேயத்தில் பிரஹ்ம்ம சப்தம் சொல்லி காரணத்வம் கூறப்பட்டது.

ஸகல வேதாந்த பிரத்யய நியாயத்தைக் கொண்டு சாமான்ய சப்தங்களை பிரஹ்மத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.
பிரஹ்ம சப்தத்தை சாக-பசுந் நியாயத்தாலே ஒரு தேவதா விசேஷத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த பிரஹ்மம் எது என்று கேள்வி எழ, தைத்ரீய உபநிஷத்தின் படி ஆத்ம சப்தத்திலே சேர்க்க வேண்டும்.

அந்த ஆத்மா யார் என்ற கேள்வி வர, ஸ்ருதிகளில் சொல்லப்பட்ட இந்திரனா?
அல்லது அவரைப் போல பிரசித்தமாய் இருக்கிற அக்நியா? உபாஸ்ய விஷயமான ஸூர்யனா?
அல்லது ஸோமந் தான் பிரஹ்மமா? குபேரனா? வருணனா? எமனா? என்ற சந்தேகம் எழ,
கர்ம வஸ்யராய் படைப்புக்கு உள்ளாகி, பரிமித ஐஸ்வர்ய தேவதைகளாகவும், பிரம்மாவினுடைய ஆயுஸ்
காலத்துக்குள்ளாக அழிவராகவும் இருக்கும் பக்ஷத்தில், அவர்களுக்கு பிரஹ்மத்துவம் சித்திக்க வழி உண்டோ? இல்லையே.

ஸ்வேதஸ்வேதா உபநிஷத்தில் ”சிவவஸ்ச காரணன் ” என்று சொல்லப் பட்டு இருக்கிறதே ?
அவர்தான் பிரஹ்மமோ? அதர்வ சிகையிலே சம்புவை காரணம் , சர்வத்துக்கும் ஆத்மா என்கிறதே?
தைத்ரீய உபநிஷத்தில் ஹிரண்யகர்பர்க்கு இதே காரணத்வம் சொல்லப் பட்டிருக்கிறதே? என்றால்
ஸாமான்ய-விசேஷ நியாயத்தாலே ஸம்பு, சிவன், ருத்ர வாச்யர்களை , ஹிரண்யகர்பர் என்கிற
பிரம்மாவிடத்திலே சேர்க்க வேணுமாகும் . காரணம் – சிவன், சம்பு என்று சொல்லப் படுகிற ருத்ரன்,
பிரம்மாவினுடைய கோபத்தால் புருவ நெறிப்பின் நடுவில் இருந்து பிறந்தான் என்றும்,
கபாலித்தவம் பவிஷ்யத்தலாகிற பாபங்கள் அவருக்கு புராணங்களில் படிக்கிற படியால்.

மஹோபநிஷது , நாராயண உபநிஷது , ஸுபாலோபநிஷது , மைத்ராயணி, புருஷ ஸூக்தம் ,
நாராயண அநுவாகம் , அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதிகளில்
பரம காரணத்வம்
ஸர்வ ஸப்த வாச்யத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ ஸரீரகத்வம்
நாராயணனுக்கே என்கிறபடியால், பிரம்மாவுக்குண்டான ஸ்வயம்பூ , ஹிரண்யகர்ப, பிரஜாபதி சப்தங்கள்
நாராயணிடத்தே பர்யவசானமாக , சாக – பசுந் நியாயத்தாலே நாராயணனே காரண பிரஹ்மம் என்று இறுதியாகத் தேறுகிறது.

அந்தராதித்ய வித்யா பிரகாரணத்தில் , சூர்ய மண்டல மத்திய வர்த்தி பர்க்க: = சிவன் என்று இருப்பதால்,
நாராயண பரத்வம் ஏற்பல்ல என்கிற வாதம் வந்ததாகில் அதற்கு சமாதானம் :

ஹர : சிவ: பர்க: சிவனைக் குறித்தாலும், தது ஸவிதுஹு வரேண்யம் பர்க: என்று இருப்பதால்,
தது – வரேண்யம் என்று ”நபும்ஸஹ ” லிங்கத்தோடே வருகிற பர்க: சப்தத்தையும்,
அது புல்லிங்க மானாலும், ”ஹார்ஷ பிரயோகமாக”, நபும்ஸக லிங்கமாகவே கொள்ள வேண்டும்.
அப்படி ”அ ”காரத்தில் முடிவதை ”ஸ ” காரமாகக் கொண்டால் , ”உயர்ந்த ஒளி ” என்றுதான் பொருள் படும்,
”சிவன் ” என்று அர்த்தம் வராது. ஆக அந்தராதித்ய வித்யா பிரகரணத்தில் சிவ தியானம் சொன்னதாக ஆகாது.
என்றால் நாராயண பரத்வத்துக்கு குறை இல்லை.

இதே போல தகர வித்யா பிரகரணத்தில் ”தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யப்பரஸ்ய மஹேஸ்வர:” என்று
ஹிருதய மத்தியில் இருக்கிற ஆகாசத்தை விஷ்ணுவாகச் சொல்லி, விஷ்ணுவுக்கு அந்தராத்மாவான சிவனை
தியானம் பண்ண வேண்டும் என்கிறது என்பர்.
”வி சோக:” என்பதற்கு சிவன் என்று கொள்ளாமல் அஷ்ட குணங்களில் உள்ள ”வி சோக:” என்கிற குணமாகக் கொண்டு,
அந்தராத்மாவான நாராயணனுடைய குணங்களை உபாசிப்பாய் என்றே கொள்ள வேண்டும்.
ஆக அந்த விதத்திலும் நாராயண பரத்வத்துக்குக் குறை இல்லை.

ஸப்ரஹ்மா ஸசிவஸ் ஸேந்திர ஸோ அக்ஷரப் பரம ஸ்வராட்| —
அந்த பரமாத்மாவே சிவன், இந்திரன், அக்ஷரம் அனைத்துமே என்கிறது விஷ்ணு ஸூக்தம்.
அவனே கல்யாண குணாத்மகனாய் , பிரகிருதி புருஷர்களோடு கூடியவராய், அவர்களைக் காட்டிலும் வேறு பட்டவராய்
இருக்கிற நாராயணன். அவரே ஜகத் காரணம் . மற்ற தேவதைகளின் பெயர்கள் ஜகத் காரண விஷயத்தில் ,
சரீராத்ம சம்பந்தத்தாலே அவை அனைத்தும் நாராயணனையே சொன்னதாக அமையும். காரணம்:

ப்ரஹ்மாச நாராயண: சிவச்ச நாராயண: என்று நாராயண உபநிஷத்திலும்;
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று ஆழ்வாரும் சொல்லி இருக்கிறபடியால்
சரீராத்ம பாவம் அவருக்கே பிரஸித்தம் .
மேலும் ”நீராய் நிலனாய் ..சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயனானாய் (திருவாயமொழி-6-9-1) என்று
சாமான்யதிகரணத்தில் ( முதல் வேற்றுமை உறுப்பில்) படித்ததும் சரீராத்ம சம்பந்தத்தைக் கொண்டே எனலாம்.

—————————————————————————————————————————————–

ஆத்மா – பரமாத்மா = இருவருக்கும் ஜ்ஞானம் பொது.
சேதனன் – பரம சேதனன்
தத்வம் – பரதத்வம் / பர பிருஹ்மம்
பிருஹ்மம் என்று சொல்ல தகுதி படைத்தவர் ஒருவரே. அவரே பர பிருஹ்மம் ஸ்ரீமந் நாராயணன்.
அவரே அகில ஜகத்துக்கும் மூன்று வித காரணமாயும் இருக்கிறார். ஆனால் தான் விகாரமடைவதில்லை.
தன்னோடு கூடி இருக்கிற சேதநா சேதனங்கள் நிலை பெருத்தலும் நீக்கலும் உடையன.
ஸ்தூல சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மம் ஸூக்ஷ்ம சேதநா சேதன விசிஷ்ட காரண பிருஹ்மமாய்
இருக்கையை நிலை பெருத்தலும் நீக்கலும் ஆகும்.
எதுபோல என்றால், 25 வயது கட்டிளங் காளை 60 வயது முதியவர் ஆகும்போது
அவருடைய சரீர கத மாற்றங்கள் ஆத்மாவை பாதியாது போலத்தான்

அங்கனாகில், ஆத்மா இந்த உடலோடு கூடி இருக்கும்போது, படுகிற இன்ப துன்பங்கள் ,
சேதநா சேதன விசிஷ்ட பிருஹ்மத்துக்கும் உண்டோ என்னில்? கிடையாது.

ஸம்ஸார பத்தமான ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களாகிற ஸ்வபாவ விகாரம் உண்டே ஒழிய,
ஸ்வரூப விகாரம் கிடையாது. இவை அனைத்தும் கர்மத்தால் வருவன. தோஷ பூயிஷ்டம்..

மாறாக பரமாத்மா விஷயத்தில், ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டுமே கிடையாது,
காரணம் அவருக்குச் சரீரமான சேதநா சேதனங்கள் அவருடன் கூடியிருப்பது அவருடைய சங்கல்பத்தாலே யாகி குண கோடியிலே சேரும்.

ஆனால், முக்த ஆத்மாவுக்கு பரமாத்மாவைப் போலே ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டும் கிடையாது,
அங்கு சென்றதும் கர்மம் தொலைந்து, ஸாரூப ஸாயுஜ்யம் பெறுவதாலே .

அத்துவைதிகள் பிருஹ்மம் ஒன்றே சத்தியம் . ஜகத்து கானல் நீரைப் போலே பொய்த் தோற்றம்.
ஆத்மாக்கள் பலவாக தோற்றுவது மாயை. அந்த மாயை எப்படிப் பட்டது என்றால், அநிர்வசனீயம்.
பிருஹ்மம் அவித்தையால் மறைக்கப்பட்டு, ஒன்றை பலவாக பிரமிக்கிறது. (அபேத ஸ்ருதி) வாக்கிய ஜன்ய (தத்வமஸி)
வாக்கியார்த்த (ஐக்கிய) ஜ்ஞானத்தாலே, அவித்தையாகிற திரை விலகி,
பிரஹ்மமே மோக்ஷம் அடைகிறது என்பது அவர்களுடைய மதம்.

பிரக்ருதி பிராக்ருதங்களுக்கு ஸ்வரூப, ஸ்பாவ விகாரம் இரண்டும் உண்டு.
பத்த ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் கிடையாது. ஸ்வபாவ விகாரம் மட்டும் உண்டு.
தத்வம் எல்லாம் ஒன்று என்றால், இப்படியான தோஷங்கள் பிருஹம்மத்துக்கும் வந்து சேரும் அல்லவா?
என்கிற விசிஷ்டாத்வைத வாதத்துக்கு எதிர்வாதம் :

நேஹ நாநாஸ்தி கிஞ்சந …பல என்பது இல்லை. பல என்று படித்தால் சம்ஸாரம் சித்திக்கும் என்பதும்
சாத்திர வசனம் தானே இது போன்ற ஆக்ஷேபங்கள் வருமே? என்றால்

போக்தா போக்கியம் பிரேரிதாம் ச மத்வா க்ஷரம் பிரதானம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநா ஈஷதே தேவ ஏக: என்று
பேத ஸ்ருதிகள் தத்வங்களை மூன்றாகப் பிரிக்கின்றன.

யஸ்ய ஆத்மா சரீரம், யஆத்மா நவேத யஸ்ய பிருதிவி சரீரம், யம்பிருதிவி நவேத என்கிற
அந்தர்யாமி ப்ராஹ்மணங்களில் சொல்லப் பட்ட கடக வாக்கியங்களை முக்கியமாகக் கொண்டு,
அத்துவைத -துவைத மத சங்கடங்களைப் பரிகரிக்கலாவது.

ஸஜாதீய பேதம் = ஒரே ஜாதியில் வெவ்வேறு வகை = மா, பலா என்று மரங்களிலேயே வேறு வகை.
விஜாதீய பேதம் = வேறு ஜாதி வேறு பொருள் = மலை, மரம் என்கிற இரு வேறு ஜாதி
ஸ்வகத பேதம் = ஒரு வகையில், வேறு வேறு பிரிவு, பாகங்கள் = மரம், கிளை, பூ, காய், பழம் என்பன.

சங்கரர் இந்த மூன்றுவித பேதங்களும் பிரஹ்மத்துக்குக் கிடையாது என்கிறார். அதாவது

பிரஹ்மம் ஜ்ஞான முடைத்து. சஜாதீயமான (ஜ்ஞான வாச்சயமான) ஆத்மா தனிப்பட இல்லை யாதலால் ஸஜாதிய பேதமில்லை.

ஜடப் பொருள்களுக்கு ஜ்ஞானமில்லை. ஜெகன் மித்யா வாதத்தால் விஜாதீயமான பேதமும் இல்லை.

ஜ்ஞான முடைய பிரஹ்மத்துக்கு, குணங்கள் இல்லை யாதலால் , ஸ்வகத பேதமும் இல்லை என்பர்,

ஆத்மா, பிரக்ருதி , குணங்கள் மூன்றும் பிரஹ்மத்தைப் போலே சத்தியம், நித்தியம் அனந்தம் ஆகையால் ,
ராமானுஜ ஸம்பிரதாயத்தில் திரிவித பேதமும் ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

இந்த மூறு பேதமும் கிடையாது என்கிற அத்துவைதிகள் , சரீர கத தோஷம் ஆத்மாவுக்கு உண்டு போல் ,
அந்தர்யாமி பிரம்மத்துக்கும் சேதநா சேதன விகாரங்கள் வாராதோ என்று ஆக்ஷேபிக்க , அதற்கு உத்தரம் என்ன வென்றால் :

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா – என்று வியாப்பியம் சொன்ன விடத்தில்,
வியாப்பிய கத தோஷமும் தட்டாதவர் என்கிற வாக்கியங்களும் சேர்த்தே படிக்கிற படியால்,
அமலன், விமலன், நின்மலன் நீதி வானவன் – என்றார் திருப்பாணாழ்வாரும்.

யோகபத்யம் அனுக்கிருஹ கார்யம். விஷம ஸ்ருஷ்டிக்கு ( படைக்கப் பட்டவைகளுள் ஏற்ற தாழ்வுக்கு)
அவரவர் கர்மா காரணமே ஒழிய, பிரஹ்மம் காரணமன்று.
வீட்டை பண்ணி விளையாடும், விமலன் ..(நாச்சியார் திருமொழி) என்றபடியால்
பிரஹ்மத்துக்கு வைஷம்ய நைர்கிருண்ய தோஷம் இல்லை என்பது ஆண்டாள் திருவாக்கும் கூட .

படைப்பாளி பிருஹ்மம் நாராயணன் என்று தேறின பிறகு

கர்திருத்வ (செய்ப்பவர்)
காரயித்வ (செய்விப்பவர்)
நியந்திருத்தவ (உள்ளிருந்து நடத்துபவராய்)
பிரகாசயித்தவ (பிரகாசப் படுத்துவராய் )
அநுமந்திருத்வ (ஜீவ சுவாதந்ரியத்தைக் கொண்டு செய்யப் புகுகிற காரியங்களில் அனுமதிப்பிரதானம் பண்ணி )
சககாரித்தவ (கர்மானுசாரமாய் மேன்மேலும் பிரவர்திப்பித்து)
உதாசீனத்தவம் (சாஸ்த்ர வஸ்யத்தை இன்றி புறம்பே போகும் போது தடுக்கவும் தடுக்காமல் ,
ஆதரிக்கவும் செய்யாமல் திருந்துவான் என்று உதாசீனவது ஆசீனம் – நித்ய, நிரவதிக, நிருபாதிக, நிர்ஹேதுக கிருபை காரணம் )

இவை அனைத்தும் நாராயணனுக்கே குறைவின்றிப் பொருந்தும்.

ஆதார-ஆதேயத்வம்.
விதாதா-விதேயத்வம்.
சேஷி-சேஷத்வம்.

என்று சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான தொடர்பு போல,
ஆத்மாவுக்கும் (சரீரம்) பரமாத்மா (ஈஸ்வரன்) வுக்குமான தொடர்பு இவையாகும்.

அந்த ஈஸ்வரன் விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்து) இருக்கிறார். இப்படி அவர் வியாபிப்பதுவும் மூன்று படியாலே .

ஸ்வரூப வியாப்தி.
விக்ரக வியாப்தி
தர்ம பூத ஜ்ஞானத்தாலே வியாப்தி.

ஆத்மா அணுவாகையால், தர்ம பூத ஜ்ஞான வியாப்தி தவிர்ந்த மற்ற இரண்டும் கிடையாது.

ஈஸ்வரன் அனந்தன் . அதாவது அந்த மற்றவன்.

கால அபரிச்சினன் (நித்யமானபடியாலே)
தேச அபரிச்சினன் (எங்கும் வியாபித்திருக்கிற படியாலே )
வஸ்து அபரிச்சினன் (ஸமஸ்த வஸ்துக்களும் அவருக்கு சரீரமான படியாலே ).

சத்யத்வம்
நித்யத்வம்
ஆனந்தத்வம்
அமலத்வம்

இவை அவருக்கு ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஸ்ருஷ்டி உபஹிருதங்களான ஸர்வக்ஜ்ஞத்வம்
சர்வ சக்தித்வம் நிரூபித ஸ்வரூப குணங்கள்.

சௌலப்யம்
சௌசீல்யம்
வாத்சல்யம் இத்யாதி ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்.

காருண்யம் முதலியன ரக்ஷணத்துக்கு உபயோகியான குணங்கள்.

அந்த ஈஸ்வரன் அண்டங்களை படைப்பதற்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர்..
பிறகு சதுர்முக பிரம்மா, தக்ஷ பிரஜாபதி இவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து வியஷ்டி ஸ்ருஷ்டிகளைத்த தொடங்குகிறார்.
தான் விஷ்ணுவாக அவதரித்து காலம், மனுவாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ரக்ஷணத் தொழிலைச் செய்கிறார்.
ருத்ரன், மிருத்யு தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸம்ஹாரத் தொழிலைச் செய்கிறார்.
ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் இவரே செய்கிறார்.

இப்படியான ஈஸ்வரனின் நிலைகள் ஐந்து. இதை

விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய் , மண்மீதுழல்வாய், இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் (திருவாய்மொழி -6-9-5)
பாட்டு கேட்குமிடம்; கூப்பீடு கேட்குமிடம், குதித்த விடம் , வளைத்த விடம் , ஊட்டுமிடம் என்று ஆழ்வார்களில்
நம்மாழ்வாரும், ஆச்சாரியர்களில் பிள்ளை லோகாச்சாரியரும் பேசியுள்ளனர்.

பர – பரம பதத்தில் இருப்பு. – பரபிருஹ்மம் , பர வாசுதேவனான ஸ்ரீமந் நாராயணனாய் ஸர்வ லோக மஹேஸ்வரனாய் இருக்கும் இருப்பு.

வியூகம் – திருப்பாற்கடல் சயன வியூக வாசுதேவன் தன்னை நான்காக வகுத்துக் கொண்டு முத்தொழிலும் நடாத்துகின்ற கார்ய வைகுண்டம் வாசம்..

வியூக வாசுதேவன் -ஷாட்குண பூர்ணன் -கேசவன் சக்ரதாரி தங்க வர்ணம் ; நாராயணன் சங்கம் கருநீல வர்ணம் ; மாதவன் கதை மணியின் வர்ணம் ;
ஸங்கர்ஷணன் – ஜ்ஞான, பலம் – ஸம்ஹாரம் – கோவிந்தன் சார்ங்கம் நிலாவின் ஒளி ;
விஷ்ணு கலப்பை தாமரை மகரந்த வர்ணம் ; மதுசூதனன் கல் உலக்கை செந்தாமரை வர்ணம்;
பிரத்யுமனன் – ஐஸ்வர்ய, வீர்யம் – ஸ்ருஷ்டி- திருவிக்ரமன் வாள் நெருப்பு வர்ணம் ;
வாமனன் வஜ்ராயுதம் உதய சூர்ய வர்ணம் ; ஸ்ரீதரன் கோடாரி வெண்டாமரை வர்ணம்;
அநிருத்தன் – சக்தி, தேஜஸ் – ஸ்திதி – ஹிருஷீகேசன் மின்னல் வர்ணம் இரும்பு உலக்கை ;
பத்மநாபன் – சூரிய ரஷ்மி வர்ணம் பஞ்சாயுதம் ; தாமோதரன் இந்திரகோப வர்ணம் (பட்டாம்பூச்சி வர்ணம்) பாசக்கயிறு பிடித்திருப்பார்.

விபவம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள் .
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியுமானான் .
தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளில் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா ! – என்று ஆழ்வார் காட்டினபடி.

முக்கியாவதாரம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள். இவர்கள் மட்டுமே உபாசிக்கத் தக்கவர்கள். மற்ற.அநுபாஸ்யங்களான கௌணாவதாரத்தில்
ஸ்வரூப ஆவேசாவதாரம் – பரசுராம, பலராமர்கள்
சக்தி (அம்ச) ஆவேசாவதாரம் – பிரம்மா, ருத்ரன், மரீசி, வியாசர் இவர்கள்.

1. நம்முடையது பிறப்பு. அவனுடையது அவதாரம். நம் பிறப்பு கர்மத்தால். அவன் அவதாரம் தன் இச்சையால் (ஸ்வ சங்கல்ப்பத்தால்).
2. நாம் பிறந்து சிரமப் படுகிறோம். அவன் அவதரித்து மேன்மை அடைகிறான். ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமான:
3. நம்முடையது பாஞ்ச பௌதிக தேகம். (பிறந்த இடத்தும்) அவனுடையது அபிராக்ருத திருமேனி.
4. தர்மம் செய்து மேன்மை அடைய நம் பிறவி. நலிவுற்ற தர்மத்தை உத்தரிக்க அவன் அவதாரம்.
5. கர்மம் கழிய வேண்டி நாம் பிறக்கிறோம் . அதர்மத்தை அழித்து, ஸாதுக்களை ரக்ஷிப்பது பகவதவதார பிரயோஜனம்.
6. நாம் பிறவாதிருக்க வேண்டி அவன் பிறக்கிறான்

அந்தர்யாமி – ஹார்த்த ரூபியான – தகராகாஸ வாசி. தன்னை அநாதரிப்பவர்களையும் ஆதரித்துப் போருகிற இடம்.
இவனுடைய ஸ்வர்க்க நரகாதி யானத்திலும் விடாதே பற்றி இருக்கும் நிலை. உடன் கேடனாய் இருக்குமிடத்தும்,
தோஷ அஸம்ஸ்பிருஷ்ட்டனாய். ரிஷி யோகிகளுக்கும் பிரத்யக்ஷம்.

அர்ச்சை .- திருவாளன் திருப்பதிகள் தோறும் விக்ரக ரூபத்தில் எழுந்தருளி இருத்தல்.
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று கிருஹார்ச்சையாய் சந்நிதி பண்ணி அபூர்ணனைப் போலேயும்
அசகத்தனைப் போலேயும் இட்டது கொண்டு நிறைவு அடைபவனாய் ரக்ஷணம் பண்ணி போருமவன்.

ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வானமாமலை , திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் திருவேங்கடம் நைமிசாரண்யம் புஷ்கரம் பத்ரிநாத் முக்திநாத்.

தெய்வ
சித்த
மநுஷ்யர்களால்
ஏறி அருளப் பெற்ற க்ஷேத்ரங்கள் என அர்ச்சாவதார க்ஷேத்ரங்கள் நான்கு வகை.

பகவத் விபவ அவதார காலங்களிலும் ஆராதிக்கப் பெற்ற பெரிய பெருமாள், ராமப்பிரியன் போன்று
பெருமை உடைய அவதாரம் அர்ச்சாவதாரம். ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று பிரபத்திக்கு உகந்தவிடம் அர்ச்சாவதாரம் .
ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் பிரபத்தி பண்ணித்து அர்ச்சையிலே .

இந்த 5 நிலைகளிலும் ” அகலகில்லேன் இறையும் என்று லக்ஷ்மி விசிஷ்டனாகவே அவன் கோயில் கொள்கிறான் என்பது
வேத, இதிஹாச, புராண, ஆழ்வார் பாசுரங்களில் பிரசித்தம்.
ஆக, இது ஒரு மிதுன ஸம்பிரதாயமாய் ஏகாயான மதம் நிரசிக்கப் பட்டது .

—————————————————————————–

கடிகாசலம் என்கிற சோள சிம்ம புரம் தொட்டையாச்சார் ஸ்வாமியின் சிஷ்யர்
ஸ்ரீநிவாஸ குரு சாதித்த பால போத கிரந்தம் ”யதீந்திர மத தீபிகா” என்கிற இந்த நூல்,
பகவத் அவதாரங்கள் 10 போலே , ஆழ்வார்கள் அவதாரங்கள் 10 போலேயும் 10 அவதாரங்களைக் கொண்டது.
அவை பிரமாணங்கள் விஷயமான 3ம் + பிரமேயங்கள் விஷயமான 7 மாக 10 அவதாரங்கள். அவையாவன:

பிரத்யக்ஷ பிரமாணம்.
அனுமானப் பிரமாணம்,
சப்த பிரமாணம்
என்ற மூன்று.

அடுத்து பிரமேயத்துக்கான 7ல் திரவியம் 6 + அதிரவ்யம் 1. திரயங்களில் ஜடம் 4 + அஜெடம் 2.

பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்; (பராக்)
சுத்த சத்வமாகிற பரம பதம் (பராக்) 4ம் ஜடம்.

ஜீவாத்மா; (பிரத்யக்)
பரமாத்மா (பிரத்யக்) 2ம் அஜடம்.

லக்ஷ்மி லக்ஷியா அனயா தேவி. பூ நீளா தேவிகளோடு சேர்ந்து நம் குற்றங்களைப் பொறுப்பிக்குமவள் அவளே.
ஜீவாத்மாவுக்கு ஒரு மிதுனமே உத்தேச்யம். பகவான் உபாயமும், பிராப்பியமுமாய் இருக்க,.
பிராட்டி புருஷகார பூதை மற்றும் கைங்கர்ய பிரதி சம்மந்தியுமாவள். அவளை பற்றித்தான் பகவானைப் பற்ற வேண்டும்.
புருஷம் கரோதி இதி புருஷகார: நம்மை அருளாலே திருத்தி, அவனை அழகால் திருத்தும்,
பிராட்டியை முதலில் பற்றுவதற்குக் காரணம், உபாய அத்யாவசாயம் பலிக்கவே.
இவளுடைய அருளாலே அவனுடைய ஸ்வாதந்திரியம் மடிந்தால், தலை எடுக்கும் குணங்கள் :
நீரிலே நெருப்பு கிளருமா போலே ,
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யுமென்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம் .
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீலயம் . கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.
விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்.

அஸ்ய ஈஸானா ஜகத: விஷ்ணு பத்நி என்று அவள் நமக்கு சேஷியாய், விஷ்ணுவுக்கு பத்நியாய் , பிரதம கிங்கரியாய் விளங்குமவள்.

இந்த விஷயத்தில் ஒரு யோஜனா பேதம் உண்டு. பிராட்டியை பிருஹ்ம கோடியிலே சேர்ப்பதா? சேஷ கோடியிலே சேர்ப்பதா ? என்பதே அது.
விசிஷ்ட அத்வைதம் என்று பிரஹ்ம ஏக வாதமாய் இருக்க, பிராட்டியை ஆத்ம கோடியில் இல்லாது பிரஹ்ம கோடியில் சேர்த்தால்,
விசிஷ்ட துவைத்த சம்பிரதமாக வன்றோ தேறும்? என்பது தென்னாசார்ய பக்ஷம்.

நம் விஷயத்தில் அவளுக்கான ஆகாரத் திரயம் :(லோகாசார்ய பக்ஷம்)

புருஷகாரத்வம்.
சேஷித்வம்.
பிராபியத்வம்.
ஸ்வரூபதயா அணுத்வம்.
பகவத்விக்ரக வியாப்திதயா விபுத்வம் ஸம்பாவிதம்.

அவளுக்கு உபாயத்வம் இல்லை என்பதாம். உபாயத்வம் ஸ்வதந்திரனான பரமாத்மாவுக்கே அசாதாரணம்.
பிராட்டி உட்பட அனிதரர்கள் அவனுக்கு பரதந்திரப் பட்டவர்கள் என்பது கொண்டு.

தேசிக பக்ஷம்:

புருஷகாரத்வம்.
உபாயத்வம்.
பிராபியத்வம் .
ஸ்வரூபத்தாலேயே விபுத்வம் வியவஸ்திதம்.

—————————————————————————————–

இனி பத்தாவது அவதாரம் அ திரவ்யம்.

சம்யோக ரஹிதம் அதிரவ்யம். (Dimensionless-non object ) அதாவது அதிரவ்யங்கள் ஒன்றோடு ஒன்று சேர இயலாதன.

குணங்கள் ஒன்றொடு ஒன்று சேர இயலாது. ஆனால் அவை ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம்.
அதாவது ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் ஒன்றோடு ஒன்று சேராது
ஆனால் அவை சரீரமாகிய ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம். குணம் சரீரத்தை ஆஸ்ரயித்து இருக்கலாம்.
குணம் குணத்தை ஆஸ்ரயித்து இருக்கலாகாது.

அவஸ்தாஸ்ரயம் (மாறுதலுக்கு உட்படுவது) திரவ்யம் = உபாதானம்.

அ-திரவியங்களாவன :

ஸத்வம் = உண்மை அறிவாய், சுகமாய் லாகவமாய் அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. மோக்ஷ ஹேது .
அதுவும் இரண்டு வகை.
1. சுத்த ஸத்வம் = ரஜஸ் தமஸ் ரஹித விருத்தி (ரஜஸ் தமஸ் இல்லாத ஆஸ்ரயம்).
அவைதான் பரம பதமும் , பகவத் திவ்ய மங்கள விக்கிரகமும்.
2. மிஸ்ர ஸத்வம் = ரஜஸ் தமஸ் சகசாரி . பிரகிருதி, பிராகிருத்தங்கள்.

ரஜஸ் = அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. உலக விஷயங்களில் விருப்பம், ஆசை, பேராசை செயல்பாடு இவைகளுக்கு காரணம்.
ஸ்வர்க்க, பித்ரு லோக பிறப்பிக்குமதாய், அல்ப, அஸ்திர, ஆமுஷ்கிக பல, துக்க ஹேது .
மாறாக, பகவத் விஷயத்திலான விருப்பம், ஆசை, பேராசை, செயல் பாடு சத்வ குண பிராசர்யத்தால் வருவது.

தமஸ் = மறதி , மயக்கம், சோம்பல், தூக்கம், கவனக் குறைவு இவைகளுக்கு காரணமாகிறது. அஜ்ஞான ரூப, நரக ஹேது.

இம்மூன்றும் பிரளய தசையில் சமமாய் இருக்க , சிருஷ்டியின் போது வி சமமாய் (ஆகவே தான் ஸ்ருஷ்டி விஷம சிருஷ்டி யாகிறது?).
உபயுக்த மாகின்றன. ஸ்ருஷ்டி ரஜோ குண கார்யம். சம்ஹாரம் தமோகுண கார்யம். ரக்ஷணம் ஸத்வ குண கார்யம் .
பகவானுக்கு முக்குணங்கள் உண்டா என்றால் இல்லை. லீலார்த்தமாக, தன் இச்சையால் அவைகளை அவலம்பித்து கார்யம் செய்வார்.

ஸப்த = காற்றின் உதவியால் காதால் உணரப் படுவது. பஞ்ச பூதத்தால் ஆனது.
இதுதானும் வர்ணாத்மகம். அவரணாத்மகம் என இரண்டு வகை.
உயிர் எழுத்து (13), மெய்யெழுத்து (18), உயிர்மெய்எழுத்து (216) அனைத்தும் வர்ணாத்மகம்.
இவை மனுஷ்ய, தேவ உதட்டசைவுகளால் ஏற்படுவன.
மற்ற ஒலி வடிவங்கள் (பட்சிகளின் சப்தம், வாத்தியங்களின் சப்தம் இவை) அவர்ணாத்மகம் .

விஜாதீயமாய் பரமபதத்தில் உணரப்படிகிற சப்த ரூப ரஸ கந்தம் இங்கு சொல்லப் பட்டவைகளைக் காட்டிலும்
விலக்ஷணமானவை.வேறுபட்டவை.

பிரணவத்தின் உள்ள அகாரம் , சப்தங்களுக்கு உபாதானமாய் சொல்லப்படுவதால்,
சப்தம் அதிரவ்யம் என்பது பொருந்தாதே என்னில் , ”அ ” என்பது விஷ்ணுவைக் குறிக்குமாதலால்,
எப்படி விஷ்ணு ஜகத்துக்கு உபாதான காரணமோ, அதுபோல் சப்த ராசிகளுக்கு அகாரம் உபாதான காரணம் என்று
கொள்வதும் ஒளபசாரிகமாய் ஒழிய வஸ்துதா இல்லை.

ஸ்பர்ச = தொடு உணர்ச்சியால் அறியப் படுவது. வெப்பம், குளிர்த்தி, இரண்டும் அற்ற தன்மை என மூன்று வகையாக உணரப்படும்.
தண்ணீர் குளிர்த்தி. நெருப்பில் இருப்பது வெப்பம். நிலம், காற்று இவைகளில் இரண்டும் அற்ற தன்மையைப் பார்க்கலாம்.
இந்த ஸ்வபாவ குணங்கள் அவையவை நெருப்போடு சம்பந்தப் படும்போது மாறலாம்.
ஆனால் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். நெருப்போடு சம்பந்தப் பட்டால்
”பாகஜம்” என்றும், மற்ற நிலை ”பாகஜ அபேதம் ” என்றும் பிரிக்கலாம். உ.ம். அமிர்தம், பஞ்சு நெருப்பு, கல்லு, பசு இவை.

ரூப = நிறம், பளபளப்பு எனப்படுகிற அதிரவ்யம் ரூபம். அத்தை கண்களால் மட்டுமே உணர முடியும் .
மஞ்சளான அக்ஷதையை கண்ணால் பார்த்தும் , கைகளாகிற தொடு உணர்ச்சியாலும் அறியலாம்.
ஆனால் அதன் மஞ்சள் நிறத்தை கண்களால் மட்டுமே கிரஹிக்க முடியும். துவக் இந்திரியத்தால் ஆகாது.
எனவே ரூபம் கண்களுக்கு மட்டுமே விஷயம்.
நிறங்களில், வெண்மை, சிகப்பு, மஞ்சள், கறுப்பு என்று நால்வகை வர்ண பேதம் பார்க்கப் படுகின்றன.
பாஸ்வரம் =ஒளிவிடக் கூடிய (நெருப்பில் உள்ள சிகப்பு)
ஆபாஸ்வரம் = ஒளிவிடாத (ஜெபா குசுமாம் ) என்று நிறங்களை வேறு விதமாவும் பிரிக்கலாம்.

ரஸ = வாயிலுள்ள நுனி நாக்கால் உணரப்படும் சுவைகள் 6 – இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு , காரம்.
அடியார்களுக்கு ஆறு சுவை அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்கிற ஷட் ரஸமாகும்

கந்தம் = மூக்காகிற இந்திரியத்தினால் உணரப்படுவது. பூ, சந்தனம் இவைகளில் உள்ள நறுமணம்,
மல, மூத்திராதிகளில் உள்ள துர்நாற்றம் என்று இரண்டு வகை.
காற்று, ஜலம் இவைகளுக்கு இயற்கையில் மணம் இல்லாவிட்டாலும், ‘
‘கந்தவது பிரிதிவி ” என்ற வகையில் பூமியில் இருந்து உண்டாகும் பூக்களின் மகரந்த சேர்க்கையால்
காற்றுக்கும், ஏலம், கிராம்பு போன்றவைகளின் சேர்க்கையால் ஜலத்துக்கும் மணம் பாக பேதத்தால் சம்பாவிதம்.

ஆகாசம் – சப்தம் – காது
நெருப்பு – ரூபம் – கண் –
காற்று – ஸ்பர்சம் – தொடு உணர்சி
நீர் – சுவை – நாக்கு
நிலம் – மணம் – மூக்கு.

பஞ்சிகரணத்தால் எல்லாவற்றிலும் எல்லா குணங்களும் இருக்குமானால் , பிரதானமான குணங்கள் இவை.
பாகம் படும்போது மற்றைய குணங்கள் வெளிப்படுவது உண்டானாலும் அது நேரம் போகப் போக பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
இரும்பு கொதிக்கிறது என்றால், காய்ச்சும் போது கடின பதார்த்தம் திரவம் போல் ஆனாலும்,
உஷ்ணம் நீங்கும் போது மீண்டும் கெட்டிப் படும் என்பது இயற்கை.

ஸம்யோகம் – கூட்டறவுக்கான புரிதல் ஸம்யோகம். உ.ம். மேசை மேல் புத்தகம் இருக்கும் போது
புத்தகத்தின் ஒரு பகுதியும் மேசையின் குறிப்பிட்ட பகுதியும் சம்பந்தப் பட்டிருக்கும்.
அப்படியான மேசையின் ”மேல் ” புத்தகத்துக்கான சம்பந்தத்தை ” மேல்” என்கிற புரிதலால் அறிகிறோம். அந்த அறிவு ஸம்யோகம்.

கார்ய ச சயோகம் – இரண்டு ஆடுகள் முட்டிக் கொள்ளும்போது அதன் தலைக்கான சம்பந்தம்.
மரக் கிளையின் மேல் கிளி வந்து உட்காருதலால் ஏற்படுகிற சம்பந்தம். கையில் புத்தகத்தை எடுக்கும் போது உண்டாகும் சம்பந்தம் இவை.

கையோக ச சயோகம் – கையில் புத்தகம் இருக்க, உடலுக்கும் புத்தகத்துக்குமான சம்பந்தம்.
இது கையோகத்தில் அடக்கமாதலால், அதிவாதமாய் மறுக்கப் படுகிறது.
அதே கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டால் ஏற்படும் எதிர் நிலை விபாகச விபாகம் என்பர் தாரிக்கிகர் .
இதுவும் மறுக்கப் படுகிறது. இத்தை சையோகச அபாவத்தில் அடக்கிவிட முடியுமாதலால்.

ஆகார்யச சையோகம் – இரண்டு விபு தத்வங்களுக்கான சம்பந்தம். பிரஹ்மமும் காலமும் சம்பந்தப் பட்டிருத்தல்.
பிரஹ்மமும் பிரகிருதியும் சேர்ந்து இருத்தல்.

சக்தி.- நெருப்புக்கு சுடுதலாகிற தன்மையை எது செய்கிறதோ அதை சக்தி என்கிறோம்.
அதேபோல் எல்லாப் பொருட்களுக்கும் அதனதன் தன்மையை நிர்வகிக்கும் அதிரவ்யம் ”சத்தி” எனப்படும்.
காந்தமும்-இரும்பும் போலே . மந்த்ரம், மருந்து, இவைகளால் கட்டி இடாதபோது வெளிப்படுமது .

பரா அஸ்ய சக்திஹி விவிதைஸ்ச ஸ்ரூயதே — என்று சொல்லப்பட்ட விஷ்ணு சக்தி அதுவாகும்.
அது இந்திரியங்களுக்கு கோசரம் இல்லை.

தார்க்கிகள் சொல்லும் மேலும் 14 விதமான குணங்கள் தனித்து சொல்லாமல் மேல் சொன்ன 10 அதிரவ்யங்க ளுக்குள்ளேயே
அடக்கிவிடலாம் என்பது ராமானுஜ பக்ஷம்.

புத்தி, இச்சை சுகம் துக்கம் த்வேஷம் யத்தனம் இந்த 6ம் ஜ்ஞானத்தின் வெளிப்பாடு ஆகையால்
தனிப்பட்ட சொல்ல வேண்டியதில்லை ஜீவனுடைய ஜ்ஞாத்துக்குள் அந்தர்கதம் .

தர்ம அதர்மமௌ பாப புண்யௌ ஈஸ்வ்ர ப்ரீதி கோபௌ என தர்ம அதர்மங்களை ஈஸ்வர ஜ்ஞானத்துள் படிக்கலாம்.

சம்ஸ்காரம் எனப்படும் பாவனை, வேகம் , ஸ்திதி ஸ்தாபனம் (எத்தனைப் பிரயத்னப் பட்டாலும்
அதன் முன் நிலைக்கே திரும்புவது, நாய் வால் போலே ) மூன்றும் ஜ்ஞான விபாகமாகவும்,
வஸ்து ஸ்வரூபமாகவும், சையோகத்து க்குள்ளாகவும் சேர்த்து விடலாம்.

விபாகம் (பிரிவு) பிரதத்வம் (தனிமை) இரண்டும் அப் பாவ நிலையாய், சையோகத்துக்குள் அடங்கும்.

சங்கியா (எண்ணிக்கை), பரிமாண (மாறுதல்), திரவத்வ (நீரான தன்மெய்), ஸ்நேஹானாம் (பிசு பிசுப்பு)
இவை வஸ்து ஸ்வபாவமாய், தனிப்பட சொல்ல வேண்டியதில்லை.

குருத்வம் (எடை கூடிய நிலை) சக்தி- அதிரவ்யத்துக்குள் அடக்கி விடலாம். ஆக அதிரவ்யங்கள் 24 (அ ) 38 இல்லை 10 மட்டுமே.

சத்வ, ரஜஸ் , தமோ குணங்கள் பிரகிருதி சம்பந்தப் பட்டது. ஆத்மாவுக்கு இல்லை.
ஆனால் சரீரத்துக்குள்ளான ஆத்மாவுடைய தர்மபூத ஜ்ஞானம் முக்குணங்களால் மறைக்கப் படுவதால்
ஆத்மாவை அவை பாதிப்பதாக சொல்லப் படுகிறது.

சாத்விக ஜ்ஞானம் , சாத்விக காலம் என்கிற வழக்கு உபசார வழக்கே. உண்மையில் சரீரத்தில் சாத்விக தாதுக்கள்
மேலோங்கின காலத்து ஜ்ஞானம், சாத்விக வஸ்து பரிமித காலம் என்று கொண்டு ஒளபசாரிகமாக கொள்ளவேண்டும்.

ஆகாசம் – சப்தம்
நெருப்பு – ரூபம் + சப்தம்
காற்று – ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நீர் – சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நிலம் – மணம் + சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
என கலசி இருக்கும்.

சுத்த சத்வம் திரிபாத் விபூதியிலும் அதனை வளர்த்துக் கொடுக்கும் பகவானி டத்திலுமாய் இருக்கும் .

சையோக சக்தி கீழ்ச் சொன்ன
பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்;
சுத்த சத்வமாகிற பரம பதம்
ஜீவாத்மா;
பரமாத்மாவாகிற
6 திரவ்யங்களில் இருக்கும்.

ஆத்யாத்கமி சாஸ்திரமான இதில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டதும் இப்புடைகளாலே :

பிரகிருதி, ஜீவ பர பரிச்சேதம் சொல்லு முகேண தத்துவமும்; புத்தி பரிச்சேத முகேண ஹிதமும் (பக்தி, பிரபத்தி முதலான உபாயமும் ) ;
நித்ய விபூதி, ஈஸ்வர பரிச்சேத முகேண புருஷார்த்தமும்
(நித்ய விபூதியைப் பிராபிக்கை பிராப்தி என்றும் ஈஸ்வர கைங்கர்யம் பிராப்தி பலம் என்றும்) விளக்கப்பட்டன.

தத்வம் ஏகம் என்று சூரிகளும் ; அதுவே
ஆத்மா (ஜீவ, பரர்கள்) அநாத்மாவாய் (பிரகிருதி) இரண்டு என்று ரிஷிகளும்
போக்யம், போக்தா பிரேரிதா என்று மூன்றாய் ஸ்ருதியிலும் ;
ஹேயம் (சரீரம்), தஸ்ய நிவர்த்தகம் (கழிய வழி ) உபாதேயம் (கொள்ளத்தக்கது )
தஸ்ய உபாயம் ( அதை அடைய வழி) என நான்காய் இதர ஆசாரியர்களும் ;
பிராப்பியம், பிராப்தா, உபாயம், பலம், விரோதி என் அர்த்த பஞ்சகமாய் அஸ்மத் ஆசாரியர்களும்
அத்தோடு ஜீவா-பர சம்பந்தம் சேர்த்து தத்துவங்கள் ஆறு என்று சொல்பவரும் உண்டு.

எப்படிச் சொன்னாலும், சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் ஏக மேவ என்பதே வேதாந்தத்தின் முடிவு..
அதையே வேத வியாசரும் தன்னுடைய பிரஹ்ம சூத்திரத்தில் பிரஹ்ம ஜகத் காரணத்வத்தை முதல் இரண்டு அத்தியாயத்திலும்,
அத்தை அடைய உபாயம் பக்தியே என்று 3வது அத்யாயத்திலும், பிரஹ்ம சாயுஜ்யமாகிற முக்தியை 4வது அத்தியாயத்திலும்
காட்டியதான அந்த பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே தத்வம் என்பது விசிஷ்டாத்வைதிகளின் தர்சனமாகும் .

அற நூல் அளித்த அறிவின் வழி யாத்த
மறை நூல் ”யதிபதி போதநல் — நிறை கொள்
விளக்கம்” திருவளர் சீனிவாச மா குருநாம்
ஆள வகுத்த தொழுகு

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரா திவ்ய ஹார சுருக்க விளக்கம் /ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் / ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்கள் தனியன்கள் /ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள் தனியன்கள்–/ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

October 30, 2021

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது
நவ ரத்ன ஹாரம் -எம்பெருமானார் நடுநாயகம் -முன்னும் பின்னும் நவ ஆச்சார்யர்கள் உண்டே

ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு
ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
ராமாநுஜர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளைலோகாச்சாரியார்
திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மாமுனிகள்.

நவ கிரந்தங்கள் -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்ய காரர்
18 கிரந்தங்கள் -அருளிச் செயல்-ரஹஸ்ய கிரந்தங்கள் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ மா முனிகள்
சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம் என்று மற்ற பூர்வர்கள் அருளுக்கு இலக்கு
இவருக்கு-மா முனிகளுக்கு சீர் அருள்
மன்னிய சீர் மாறன் காலை உணவாவாகப் பெற்றோம்
முன்னவராம் குரவர் மொழி உள்ளப்பெற்றோம்
முன்னவர் கிரந்தங்களை வாசித்தும் சொல்லியும் அர்த்த விசேஷங்களை எழுதியும் இருந்ததால்
இவரைக் கொண்டே ஈடு வியாக்யானம் கேட்டு அருளினான்
அம்புயர் கோன் தன் குருவின்-மா முலைகளின் – தாள் இணையில் அன்பு செய்யாமல்
தன்னிடம் செய்தாலும் விண்ணாடு அளிக்க மாட்டானே

—————————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937 AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

——

அகலகில்லேன் இறையுமென்ற”
ஆழ்ந்த பர தத்துவத்தை
இப்புவனம் உய்வதற்காய்
ஈந்திட்ட எம் குருக்காள்‚
உண்மை உறைப்பதற்காய்
ஊணுறக்கம் ஒழிந்திட்டீர்
எம்மையும் போன்றதொரு
ஏதிலனும் பயன்பெறவே
ஐயன்மீர் வந்துதித்தீர்‚
ஒழிவில் காலமெல்லாம்
ஓயாமல் உமதுபுகழ்
ஓதும் வண்ணமதாய்
அ‡(ஹ)ம் அருள்வீரே‚

நாதன் வகுத்தளித்தான்
நல்லாள் நங்கையிடம்
நங்கை ஈன்றாளே
நற்சேனை நாதனிடம்

நற்சேனை நாதனவன்
நம்மாழ்வார் திரமீந்தான்
நம்மாழ்வார் தாமீந்தார்
நாதமுனி கரங்களிலே‚

நாதமுனிசீடரதை உய்யக்கொண்டாரே
நாதமுனி பேரர் யாமுனராமவர்க்கு
நடுவில்வந்தவராம் மணற்கால்நம்பியும்தான்
நயமாயதைச் சேர்த்தார் ஆளவந்தாரவற்கே‚

ஆளவந்தாரதனை ‘ஆம்முதல்வனு”க்கீயும்படி
ஆளவந்தார் சீடர் பெரியநம்பிவசம்மீந்தார்
ஆளவந்தார் சீடர் அளித்த பொக்கிஷத்தை
ஆளவந்தாரவரே எம்பெருமானானாரே‚

எம்பெருமானாரின் இட்டவழக்காக
எம்பாரும் இயல்பாக இங்கேவந்துதித்தார்
எம்பாரின் சீடரிலே ஏற்றமிகு பட்டரவர்
எளிதில் வேதாந்தியை நஞ்ஜீயராக்கினரே‚

நஞ்ஜீயர் நம்மதத்தில் நன்கு கற்றறிந்த
நல்ல உரைகளெல்லாம் நம்பிள்ளைக்கீந்தாரே
நம்பிள்ளை நவின்றதனை நல்லோலை தனிலிட்டு
நமக்காயளித்தவரே வட திருவீதிப்பிள்ளை‚‚

இன்னம் வந்ததொரு
இணையில்லா குருக்களவர்
இன்னமுதத் திருவடிகள்
இறைஞ்சி இருமனமே‚

——-

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற
ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்;
அவரிடமே பயின்றவர்.

ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD ) -பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.- தேசிகப் பிரபந்தம்

——————–

ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

ஸ்ரீ பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

ஸ்ரீ நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——–

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

——————

ஸ்ரீ பெரிய பெருமாள் :-

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு,
அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
அக் குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும்,
பின் எம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டுவந்தார்கள்.
இந் நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷணன், அங்கு எழுந்து அருளப்பட்ட இருக்கும் பெரிய பெருமாளைப் பார்த்து,
மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில்
மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏழப் பண்ணினான்.
நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில்,
அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது
என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு,
பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாளன்று நக்ஷத்திரம் ரேவதி.

————

பெரிய பிராட்டியார் :-

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார்.
தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர்.
இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை.
தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.
தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

————–

ஸேனை முதலியார் : –

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.
எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர்.
கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.
மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார்.
இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது
அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார்.
இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி ,
குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன்
முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.
பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி
ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும்
அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

—————-

நம்மாழ்வார் : –

நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப் படுகின்றார்.
திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் ,
விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர்,
ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார்.
திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள ,
அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது,
தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து,
திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும்,
அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து
நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார்.
சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார்.
நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள்,
ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க,
ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக
” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.
மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து ,
அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார்.
அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தேவு மற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல,
அதனை ஏடுபடுத்த மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல்
வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும்
திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும்,
முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து
இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.

ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது,
எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார்.
இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து
இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு
ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து
சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது – அவதரித்திருந்தால்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும்,
ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே.
ஆம். நாதமுனிகள் இவரிடம்” திருவாய்மொழி ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது,
ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

————

நாதமுனிகள் :-

ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் இன்று காட்டுமன்னார் கோயில் என்று அழைக்கப் படும்
அன்றைய வீர நாராயணபுரத்திலே அவதரித்தார். நாதமுனிகளும் இவர் திருத் தகப்பனார் ஈஸ்வர பட்டரும்
வீரநாராயணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மன்னாருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்துகொண்டு வந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து இவர்கள் குடும்பத்தாருடன் திவ்ய ஸ்தல யாத்திரையாக வட நாடு சென்றனர்.
அவ்வமயம் அவர்கள் வாரணாசி, பூரி, அஹோபிலம், திருமலை, திருக்கோவலூர், திருவரங்கம் முதலிய
திவ்ய ஸ்தலங்களையும் ஸேவித்துவிட்டு, வீரநாராயணபுரம் திரும்பினர்.

ஒரு நாள் ஸ்ரீ மன்னார் ஸன்னதியில், திருநாராயணபுரத்திலே இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிலர் கோஷ்டியாக ” ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே ” என்ற திருவாய்மொழி பாசுரங்களை
ஸேவித்துக் கொண்டிருப்பதை கண்டும் , கேட்டும் மகிழ்ந்தனர்.
பிறகு அக் கோஷ்டியார் அப் பாசுரங்களின் கடைசி பாசுரத்தை ஸேவிக்கும் பொழுது அதில் வரும்
” ஆயிரத்துள் இப்பத்தும் ” என்ற வரியைக் கேட்டு, மற்ற ஆயிரம் பாசுரங்களையும் ஸேவிக்கும்படி வேண்டினர்.
ஆனால் அக்கோஷ்டியார் தங்களுக்கு இந்தப் பதினோறு பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்று கூறி,
மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் ஸ்வாமி சடகோபன் அவதரித்த திருக்குறுகூரிலே சென்று அதுபற்றி விசாரிக்கக் கூறினர்.

நாதமுனிகளும் திருக்குறுகூர் சென்று அங்கு இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள்,
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய வம்சத்திலே வந்த பராங்குசதாஸரை பார்க்கும்படி சொல்ல, நாதமுனிகளும் அவரைப் பார்த்தார்.
பராங்குசதாஸரிடம் , தான் மன்னார் ஸன்னதியில் கேட்ட பாசுரங்களைப் பற்றிக் கூறி,
ஆழ்வாரின் மேலும் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி வினவினார்.
பராங்குசதாஸரும், நாதமுனிகளுக்கு மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களான ” கண்ணினுன் சிறுத்தாம்பு ”
பாசுரங்களைச் சொல்லி , ஸ்ரீ நம்மாழ்வார் வாசம் செய்த ஆதினாதன் ஸன்னதியிலே உள்ள
புளிய மரத்தடிக்கு சென்று அங்கே அவற்றை அனுஸந்திக்கச் சொன்னார்.

நாதமுனிகளும் நேராக புளியமரத்தடிக்கு வந்து, அங்கிருந்தபடியே ” கண்ணினுன் சிறுத்தாம்பு ” பதிகத்தின்
பதினோறு பாசுரங்களையும் மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டாயிரம் முறை ஸேவிக்க,
அப்பொழுது அவருக்கு ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ சடகோபன் காட்சியளித்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கேட்க
நாதமுனிகளும் தான் வந்திருக்கும் காரணத்தைக் கூறி, ஆழ்வார் அருளிச் செய்துள்ள ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டினார்.
அப்பொழுது ஸ்ரீ நம்மாழ்வார் , தான் அருளிச்செய்த ப்ரபந்தங்களோடு, மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் அருளிச்செய்த
அனைத்துப் ப்ரபந்தங்களையும் பரிபூரணமாக அவரிடம் சொல்லி அருளினார்.

பின்னர் வீரநாராயணபுரம் திரும்பி, தான் அறிந்து கொண்ட ப்ரபந்தங்களை தம் மருமக்களான
கீழையகத்தாழ்வானையும், மேலயகத்தாழ்வானையும், திருக்கண்ணமங்கையாண்டானையும் அழைத்து அவர்களிடம்
இயல், இசையுடன் பாடி அருள அவர்களுடன் ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களும் பிரசித்தமாயின.
இன்றும் அரையர் ஸேவைகள் அபிநயத்துடன் திருவரங்கம் உட்பட சில திவ்யதேஸங்களில் ஸேவிக்கப்படுகின்றன.

ஒருநாள் அப்பிரதேஸத்து அரசன் வேட்டையாடிவிட்டு திரும்பும் பொழுது, நாதமுனிகளை ஸேவித்து ஆசி பெற்றுக் கொண்டு போனான்.
அங்கே சிறிது நேரத்தில் நாதமுனிகளின் திருமாளிகையிலிருந்து ஒரு பெண் வந்து, அவரிடம் தெண்டனிட்டு,
அவர் அகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு வில்லாளர்களும், ஒரு அழகிய ஸ்த்ரியும், ஒரு குரங்கும் வந்திருந்தனர் என்றும்,
அவர்கள் நாதமுனிகள் அகத்தில் எழுந்தருளியுள்ளாரா என்று வினவியதாகவும், பிறகு அவர் அங்கு இல்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும்,
அவர்களை தேவரீர் வழியில் கண்டீர்களா என்று கேட்க, நாதமுனிகள் ஆச்சரியப்பட்டு அவ்வாறு வந்தவர்கள்
பெருமாளும் , பிராட்டியும், இளைய பெருமாளும் மற்றும் ஆஞ்சனேயரும்தான் என்று அறிந்து கொண்டு,
அவர்கள் சென்ற திசையிலேயே தாமும் சென்றார். வழியில் எதிரில் வந்தோரிடம் எல்லாம் அவர்களைப் பற்றி விசாரிக்க,
எல்லோரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினர். இதனால் மனம் மிகவும் ஏங்கி வழியிலேயே விழுந்து மோகித்தார்.

—————–

உய்யக்கொண்டார் : –

புண்டரிகாக்ஷன் என்ற பெயர் கொண்ட உய்யக்கொண்டார், சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்
திருவெள்ளரையிலே அவதரித்தவர். ஆண்டாள் என்ற நங்கையை மணந்து கொண்ட இவருக்கு
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். நாதமுனிகளின் முக்கிய பத்து சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை அவரிடம் கற்றார்.

ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து ” பிணம் கிடக்க மணம் புணரலாமோ ” என்று வினவினார்.
அதாவது இப் பூவுலகிலே சம்ஸாரிகள் இறையுண்மை அறியாமல் உழன்று நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக தான் மட்டும் எப்படி ” யோக ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது என்றும், அது தர்மமும் ஆகாது என்றும் கூறினார்.
உய்யக்கொண்டாரின் இந்த பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக க்ஷேமத்திற்காகவும் வைணவ ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும் என்று கூறினார்.

சில காலம் கழித்து உய்யக்கொண்டாரின் திருமேனி தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு எழுந்தருளும் நேரம் வந்தது.
அவர் தம் ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும் மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து, மணக்கால் நம்பியே
நம் வைணவ தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி செய்வார் என்று கூறி, நாதமுனிகள் முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை, அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக் கூறினார்.
பிற்காலத்தில் நாதமுனிகளின் புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயரிட்டு, அவர் மூலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,
தர்ஸன ஸாஸ்திரங்களையும் வளர்க்கவும் என்று கூறிவிட்டு, நாதமுனிகளின் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————

மணக்கால் நம்பி : –

மணக்கால் நம்பி மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் , ஸ்ரீரங்கத்துகு அருகிலே அமைந்துள்ள மணக்கால் என்னும்
சிறிய கிராமத்திலே அவதரித்தவர். இவருடைய இயற் பெயர் ராம மிஸ்ரர்.

உய்யக் கொண்டாரின் முதன்மை சிஷ்யரான இவர், அவருக்குப் பின் ஆச்சார்ய ஸ்தானத்தை ஏற்று,
வைஷ்ணவதர்மத்தை பிரச்சாரம் பண்ணினார். இளமைக் காலத்திலேயே தர்ம பத்தினியை இழந்த இவர்,
தன் ஆச்சாரியரான உய்யக் கொண்டாரின் திருமாளிகையிலேயே இருந்து , திருமாளிகை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் உய்யக் கொண்டாரின் இரு மகள்களும், நதியில் நீராடிவிட்டு திரும்புகையில், வழியில்
ஒரு குறுகலான வாய்க்காலில் சேறு படிந்துள்ளதைக் கண்ட அப் பெண்கள், வாய்க்காலைக் கடக்காமல் தயங்கி நின்றனர்.
அப்பொழுது மணக்கால் நம்பி சற்றென்று அவ் வாய்க்காலில் உள்ள சேற்றின் மீது குறுக்கே படுத்துக் கொண்டு,
தம் மீது அவர்களை நடந்து போக வேண்டினார். பின்னர் இதனை அறிந்த உய்யக் கொண்டார்
அவ்வாறு செய்யலாமா என்று கேட்க, ஆச்சாரியன் பணிவிடையே தனக்கு பாக்கியமும், போக்கியமும் என்று பதிலளித்து,
தன் ஆச்சாரிய அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

காலம் செல்லச் செல்ல இவரின் திருமேனியும் தளர்வடைந்து போக, நாதமுனிகள் இவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி,
தான் மணக்கால் நம்பியிடம் அளித்து, பின் இவரிடம் அளிக்கப் பெற்ற
” பவிஷ்யாதாசார்யரின் ” விக்ரஹத்தை ஆளவந்தாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை நேரில் கண்டு,
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அவர் மூலம் வளர்க்க ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.

பின்னர் மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில் கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து, தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று ஆசிர்வதித்து,
தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார் அவர்களின் திருவடிகளை த்யானித்து பரமபதம் அடைந்தார்.

—————

ஸ்ரீ ஆளவந்தார் : –

நாதமுனிகளின் குமாரர் ஈசுவரமுனிகளின் திருப்புதல்வனாக ஆடி மாதம், உத்தராட நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இச் சுபசெய்தியை மணக்கால் நம்பிக்கு தெரிவிக்க அவரும்,
வீரநாராயணபுரம் வந்து மிக்க மகிழ்ச்சியுடன் அக் குழந்தைக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயர் சூட்டினார்.

யமுனைத்துறைவன் அவருடைய ஆறாம் வயதில் குருகுல வாஸம் செய்து எல்லா ஸாஸ்திரங்களையும் கற்று
மிகச் சிறந்த வல்லுனராக விளங்கலானார். இச் சமயத்தில் அரச சபையில் ” ஆக்கியாழ்வான் ” என்ற
எல்லா ஸாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஒரு வித்வான் மிகுந்த கர்வத்துடனும், இறுமாப்புடனும் விளங்கினான்.
தன்னை வெல்ல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ஆக்கியாழ்வான், அரசனிடம் சொல்லி தன்னுடன்
வாதப் போர் செய்ய யாராவது வருகிறீர்களா என்று முறசறையச் சொன்னான். அரசரும் அவ்வாறே ஒப்புக்கொள்ள,
இதனைக் கேள்விப்பட்ட யுமுனைத்துறைவன் தான் அவனிடம் வாதம் செய்து அவனுடைய கர்வத்தை அடக்கத் தயார் என்று கூறினான்.
ஆச்சரியப்பட்ட அரசன் அவ்வாறு ஆக்கியாழ்வானை வாதப் போரில் வென்றால்
தன் நாட்டின் சரிபாதியை யமுனைதுறைவனுக்கு தருவதாக வாக்களித்தார்.

யமுனைத்துறைவனுக்கும், ஆக்கியாழ்வானுக்கும் தொடர்ந்து நடந்த வாதப் போரில் யமுனைத்துறைவன் வெற்றி பெற,
ஆக்கியாழ்வானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற அரசனும்,
தான் வாக்களித்தபடியே தனது ராஜ்ஜியத்தின் பாதியை பகிர்ந்து யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார்.
ராஜ்ஜியத்தை ஆளவந்தவராகையால் , யமுனைத்துறைவன் அன்று முதல் ” ஆளவந்தார் ” என்று அழைக்கப்படலானார்.

ராஜ்ஜியத்தை ஆளவந்த ஆளவந்தாரும், ராஜ்ஜிய பரிபாலனத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க ,
வைஷ்ணவ ஸாஸ்திரங்களையும், அருளிச் செயல் அருமைகளையும் அவர் வளர்க்க வேண்டி இருப்பதை மறந்த நிலையில்
அதனை அவருக்கு உணர்த்த விரும்பினார் மணக்கால் நம்பி. ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் விருப்பமான ஒன்று.
எனவே ஆளவந்தாரின் உணவுக்காக தினசரி தூதுவளை கீரையை , மணக்கால் நம்பி அனுப்பி வரலானார்.
திடீரென்று சில காலத்திற்கு பிறகு அக் கீரையை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
தான் அருந்தும் உணவில் தூதுவளை கீரை இல்லாததைக் கண்ட ஆளவந்தார், பரிசாகரிடம் அதுபற்றி வினவ,
அவரும் ஒரு வயோதிக வைஷ்ணவர் தான் தினமும் தூதுவளை கீரையை சமைக்க கொண்டுவருவார் என்றும்,
ஆனல் சில நாட்களாக அவர் வரவில்லை என்று கூறி, அதனால் தான் சமையலில் அக்கீரையை சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
தூதுவளை கீரை இல்லாத உணவினை உண்ண ஆளவந்தாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் பரிசாரகரை அழைத்து, அந்த வயோதிக வைஷ்ணவர் மீண்டும் வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
சில நாட்களில் மீண்டும் தூதுவளை கீரையுடன் வந்த மணக்கால் நம்பி அவர்களை , ஆளவந்தாரிடம் அந்தப் பரிசாரகன் அழைத்துச் சென்றான்.

மணக்கால் நம்பியை கண்ட ஆளவந்தார் , அவரிடம் அவரின் திருநாமம் மற்றும் அவர் எங்கிருந்து வருவதாகக் கேட்க,
அவரும் தான் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவராகையால் தனக்கு மணக்கால் நம்பி என்ற பெயரும்,
தான் ஆளவந்தாரின் பாட்டனாரான நாதமுனிகள் சம்பாதித்த செல்வங்களை அவரிடம் ஒப்படைக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆளவந்தாரும் அச் செல்வம் எப்பேற்பட்டது என்று வினவ , மணக்கால் நம்பியும் அச் செல்வமானது காலத்தால் அழியாதது ,
இரு நதிகளுக்கு இடையேயும் , ஏழு ப்ராகாரங்களுக்கு நடுவிலும், ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார்.
ஆளவந்தாரும் அச் செல்வத்தைப் பெற தனது படை பரிவாரங்களுடன் புறப்படத் தயாரானார்.
ஆனால் மணக்கால் நம்பி, அவரிடம், அவர் மட்டுமே தனியாக வர வேண்டும் என்று தெரிவிக்க,
ஆளவந்தாரும் அதற்கு உடன்பட்டு அவருடன் புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்தார்.

திருவரங்கம் பெரிய கோவிலுனுள்ளே சென்ற ஆளவந்தார் அங்கு பாம்பணையிலே ஸயனித்திருக்கும் பெரிய பெருமாளைக் கண்டு,
மிக்க ஆனந்தித்து , அங்கேயே மணக்கால் நம்பியின் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவருடைய சிஷ்யரும் ஆனார்.
அதன் பின் மணக்கால் நம்பியின் உபதேசத்தின்படி, ஆளவந்தார் அரங்கனின் அந்தரங்கராகி,
திவ்யப் பிரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களையும் செவ்வனே நடத்திக் கொண்டு,
நாதமுனிகள், மணக்கால் நம்பியின் மூலம் அளித்த ” பவிஷ்யதாச்சாரியர் ” விக்ரஹத்தையும் ஆராதித்து வரலானார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்த ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நலம் விசாரித்து விட்டு , பேரருளாளனை ஸேவிக்க,
தேவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார். அவ்வமயம் அங்கே யாதவப் பிரகாசர் தம்முடைய ஸிஷ்யர்களுடன் வந்திருந்தார்.
பெருமாளை ஸேவித்துவிட்டு, ப்ராகாரத்திலே வரும்பொழுது, அக் கோஷ்டியினரைக் கண்ட ஆளவந்தார்,
அக் கோஷ்டியிலே வருபவர்களில் இளையாழ்வார் யார் என்று திருக்கச்சி நம்பிகளிடம் கேட்க,
அவரும் சிவந்த முகத்துடனும், நெடியவராய், முழங்கால் அளவு நீண்ட கைகளை உடையவருமாக இருப்பவரே அவர் என்று கூற ,
அவரைப் பார்த்த மாத்திரத்திலே சந்தோஷத்துடன் தன் மனத்திற்குள்ளே ” ஆ முதல்வன் இவன் ” என்று கூறிக் கொண்டார்.
மனதிற்குள்ளேயே அவரை ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு ஒரு சமயம் உடலிலே ” பிளவை ” நோய் ஏற்பட்டது.
அதன் காரணமாக அவரால் அரங்கனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய முடியாமலும்,
தினமும் காலக்ஷேபங்கள் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். பெருமாள் கைங்கர்யம் பண்ண முடியவில்லையே என்று கலங்க,
அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் ” உமது கோஷ்டியிலே யாரேனும் இந்த நோயை வாங்கிக் கொள்வார்களா என்று பாருமே” என்று சொன்னது.
ஆளவந்தாரும் மறுநாள் தனது காலக்ஷேப கோஷ்டியினரிடம் , யாரேனும் சில காலத்திற்கு
தன் பிளவை நோயை வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆளவந்தாரின் காலக்ஷேப கோஷ்டியிலே
பல இனத்தவரும் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் அக்காலங்களிலே தீண்டத்தகாத இனத்தவராகக் கருதப்பட்ட
இனத்தைச் சேர்ந்த ” மாறனேர் நம்பி ” என்பவரும் இருந்தார். மற்றையவர்கள் எல்லாம் ஆளவந்தார் கேட்டதற்கு
பதில் அளிக்க முடியாமல் திகைத்து தயங்கி நிற்க, அச் சமயம் மாறனேர் நம்பி சற்றும் தயங்காமல்
ஆளவந்தாரின் பிளவை நோயை, தான் பகவத் ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறி,
உவந்து அந் நோயை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிறகு ஆளவந்தாரிடம், அவரின் நோயை பெற்றுக் கொள்வதால் ,
அவரின் உடல் உபாதைகள் நீங்கி, பகவத் கைங்கர்யங்களை செவ்வனே மேற்கொள்ள முடியுமென்பதால்,
அது தனக்கு பாக்கியமே என்றும் கூறினார்.
இப்படியாக தனக்கு ஒரு பாகவதன் இருக்கிறான் என்று கண்டு, உள்ளம் பூரிப்படைந்தார்.
மாறனேர் நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு வியந்து கொண்டிருந்த தன் ஸிஷ்யரான பெரிய நம்பியிடம்,
ஆளவந்தார், தம்மைப் போலவே மாறனேர் நம்பியையும் நினைத்துக் கொண்டு,
அவருக்கு சகல சிறப்புகளையும் செய்யும் என்று கட்டளையிட்டார்.

பிளவை நோய் நீங்கிய ஆளவந்தார் முன்பு போலவே பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டும்,
காலக்ஷேபங்கள் நடத்திக் கொண்டுமிருந்தார். பின் சிறிது காலத்தில் அவரின் உடல் தளர்வுற்ற நிலையில்,
தான் தினமும் ஆராதித்து வந்த “பவிஷ்யாதாச்சார்யர் ” விக்ரஹத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கொடுத்து,
இந்த மூர்த்திதான் அந்த இளையாழ்வார் என்று அருளினார். இதன் பின் பத்மாஸனம் இட்டுக் கொண்டு,
தம்முடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியின் திருவடி அருகிலே அமர்ந்து கொண்டு,
கபாலம் விரிந்து வழிவிட , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————–

பெரிய நம்பி :-

பெரிய நம்பி, மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் , திருவரங்கத்திலே அவதரித்தவர் ஆவார்.
இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். ஆளவந்தாரின் அடியார்களில்
பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப் பெருமாள் அரயர்,
திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆறு பேருமே மிகச் சிறந்தவர்கள்.
ஸ்வாமி எம்பெருமானாரின் உயர்வுக்கு முக்கிய காரணகர்த்தர்கள். இவர்களில் முதலாவதாக இருப்பவர் பெரிய நம்பி.

ஸ்வாமி இராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தவர் பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் அரிய பெருமைகளை
இராமாநுஜருக்கு சொல்லியவர். ஆளவந்தார் உடல் நலம் குன்றியிருந்தபொழுது, அவரை தரிசிக்க இராமாநுஜரைக்
காஞ்சியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே ஆளவந்தார் பரமபதித்து விட்டார்.
இது தெரிந்தவுடன் பெரிய நம்பிகள் மிகுந்த துயரமும், ஏமாற்றமும் அடைந்தார்.

ஒரு நாள் அத்துழாய் , அதிகாலையில் தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது, துணைக்கு தன்னுடன் வரும்படி தன் மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ ” உன் சீதன வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்ல,
அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற,
அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார். அத்துழாயும் உடையவரை சந்தித்து
தன் தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல,
உடையவரும் , முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக ” சீதன வெள்ளாட்டியாகச் ” செல்லுமாறு பணித்தார்.

பெரிய நம்பியின் காலத்திலே சோழ தேஸத்தை ஆண்டு கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான கிருமி கண்ட சோழன்.
இவன் நாலூரான் என்பவனின் தூண்டுதலால், சைவ சமயத்தை சாராத பலரிடமும்,
சிவனுக்கு மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற இராமாநுஜரையும் பணிக்க விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட கூரத்தாழ்வான்,
இராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப் போல
காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி, கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவரின் கண்களையும் பிடுங்க ஆணையிட,
ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள,
பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக வேதனை தாளமாட்டாமல்
பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

—————–

ஸ்வாமி இராமாநுஜர் :-

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக ,
சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும்,
வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள்,
தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,
பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று,
அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது.
இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து,
அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும்
அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் ,
தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க,
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார்.
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார்.
இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார்.
அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர்,
இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார்.
காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து,
தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன்,
இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு,
ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார்.
ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன்
அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது,
அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத
அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு,
அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.

வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க,
உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார்.
பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் )
அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை,
திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள்,
அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம்.
திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார்.
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட,
அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் ,
மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி,
இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும்,
தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து
அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம்,
பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட
பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார்.
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற,
பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி
அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த
இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால்
மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில்
திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு,
காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர்.
இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் ,
சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர்
முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,
பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி
எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க ,
உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன்
இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு,
பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே
ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி,
இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –
இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது.
தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும்,
தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால்
அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும்
திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு
நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம்
அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும்,
இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும்
தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர்
சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும்,
மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம்
கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார்.
ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல,
இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார்.
அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி
அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார்.
சுல்தானால் களவாடப்பட்ட , பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி,
உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே
” வாரும் செல்வப் பிள்ளாய் ” என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர,
அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல்
இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார்.
மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை
அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார்.
இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும்
மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார்.
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும்,
கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

————-

எம்பார் :-

தை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில், த்யுதிமதி அம்மையாருக்கும், கமல நயன பட்டருக்கும் திருக்குமாரராக
அவதரித்தவர் எம்பார் அவர்கள். இவர் ஸ்வாமி இராமானுஜரின் தாய் வழி சிற்றன்னையின் திருமகனாவார்.
இவருடைய மாமா பெரிய திருமலை நம்பி இவருக்கு ” கோவிந்த பட்டர் ” என்று திருநாமம் சூட்டினார்.
இவருடைய உபனயனமும், விவாஹமும் இவர் பிறந்த ஊரான மதுரமங்கலத்தில் நடைபெற்றது.
இராமாநுஜர் , யாதவப் பிரகாசரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்வதை கேள்விப்பட்ட கோவிந்த பட்டர் ,
தாமும் அவருடன் சேர்ந்து வேதம் கற்றுக் கொள்ளச் சென்றார். அது முதல் அவருடன் இணை பிரியாமல் இருந்தார்.

இராமாநுஜருக்கு, அவர் குருவான யாதவப் பிரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
காசிக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல சதி செய்த குருவின் சதிச் செயலை அறிந்து,
அவரிடமிருந்து இராமாநுஜரைக் காத்து, காஞ்ச்சிக்கு அனுப்பியதும் இவரே. ஒரு சம்யம் காசியில்,
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கையில் ஒரு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இதனால் சிவ பக்தி ஏற்பட்டு அதன் காரணமாக காளஹஸ்தி சென்று அங்கு சிவனை வழிபடலானார்.
இவரை ” உள்ளங்கை குளிர்ந்த நாயானார் ” என்று பலர் அழைத்தனர்.

இராமாநுஜர் ஸன்னியாஸம் மேற்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த பொழுது,
கோவிந்த பட்டர் சிவ பக்தரானதைக் கேள்விப் பட்டு , மிக வருந்தி, அவரை மீண்டும் வைஷ்ணவத்திற்கு
திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்குப் பொருத்தமானவர் தங்கள் இருவருக்கும் மாமாவாகிய
பெரிய திருமலை நம்பி தான் என்று முடிவு செய்து அவருடன் மேலும் சில வைஷ்ணவர்களையும் காளஹஸ்திக்கு அனுப்பினார்.
கோவிந்த பட்டரைத் திருத்துவதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டார் பெரிய திருமலை நம்பி.
இவ்வாறு இரு முறைகள் முயன்று தோல்வியுற்ற நம்பிகள் மூன்றாம் முறையாக நம்மாழ்வாரின் திருவாய் மொழி
இரண்டாம் பத்தின், இரண்டாம் திருமொழியான
“திண்ணன் வீடு ” திருமொழியின் ” தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான்முகனைப் படைத்த
* தேவன் எம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும் தகுமே * என்ற நான்காம் பாசுரத்தினை மீண்டும், மீண்டும்
கோவிந்த பட்டரின் செவியில் விழும்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரும் ” தகாது , தகாது ” என்று கூறிக்கொண்டே
பெரிய திருமலை நம்பியின் திருவடியில் விழுந்தார். பிறகு பெரிய திருமலை நம்பியும் , கோவிந்த பட்டரை ஆசிர்வதித்து,
அவரை திருமலைக்கு அழைத்துச் சென்று, வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றி பயிற்சி அளித்தார்.

பெரிய திருமலை நம்பியின் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட்க வந்திருந்த இராமாநுஜர்,
காலக்ஷேபம் முடிந்து புறப்படத் தயாரான பொழுது, அவருக்கு தாம் ஒன்றும் கொடுக்க வில்லையே என்று அவர் கூற,
அதற்கு இராமாநுஜர், தமக்கு கோவிந்த பட்டரை தந்தருள வேண்டும் என்று ப்ரார்திக்க,
அவர் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார் பெரிய திருமலை நம்பி அவர்கள்.

ஞான பக்தி, வைராக்கியத்துடன் இராமாநுஜரிடம் அதீத ஈடுபாடு கொண்ட, கோவிந்த பட்டர் சன்யாஸம் மேற்கொண்டு
எம்பார் என்ற திருநாமம் பெற்று, பின்னர் இராமாநுஜரின் அர்த்த விஷேஷங்களையும், தர்சனத்தையும் நிர்வகித்து
வாழ்ந்தருள வேண்டும் என்று மங்களா ஸாஸனம் செய்து பட்டர் திருக்கைகளில் காட்டிக் கொடுத்து,
இராமாநுஜரின் திருவடிகளை தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————-

பட்டர் :-

பெரிய பெருமாளின் அருள் பிரசாதமாக , கூரத்தாழ்வானுக்கும், ஆண்டாளுக்கும் திருமகனாக
வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பட்டர்.
இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள், குழந்தையைப் பார்ப்பதற்காக இராமாநுஜரும், எம்பாரும் வந்தனர்.
அச் சமயம் எம்பார், திருமந்திரத்தை சொல்லிக் கொண்டே, குழந்தையை எடுத்து இராமாநுஜரிடம் கொடுக்க,
அவரும் ” நீரே இக் குழந்தைக்கு ஆச்சாரியனாக இரும் ” என்று சொல்லி, ஆளவந்தாருக்கு வாக்கு கொடுத்தபடி,
குழந்தைக்கு “பராசர பட்டர் ” என்னும் திருநாமத்தை சூட்டினார்.
ஸ்ரீரங்கனாதன் ஸன்னதியில், திருமணத் தூண் அருகில் தொட்டிலிட்டு, பெருமாளும், பிராட்டியுமாக குழந்தையை வளர்த்தனர்.

பட்டர் அவரது ஐந்து வயதில், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,
ஒரு பெரிய வித்வான் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.
கூட வந்த கட்டியக்காரன் “ஸர்வக்ஞர் ” ( எல்லாம் அறிந்தவர் என்று பொருள் ) வருகிறார் என்று
கட்டியம் கூறியதைக் கேட்ட பட்டர் , அவர் ஒரு பெரிய அஹங்காரராய் இருப்பார் என்று எண்ணி,
அவருடைய அகந்தையை அகற்ற எண்ணம் கொண்டார். தன் கையில் ஒரு கைப்பிடி மண்னை எடுத்துக் கொண்டு,
அந்த வித்வானிடம், தன் கையில் எவ்வளவு மண் இருக்கிறது என்று வினவ, பதில் சொல்ல முடியாமல் அந்த ஸர்வக்ஞன் முழித்தான்.
உடனே பட்டர் தன் கையில் இருப்பது ஒரு கைப்பிடி மண் என்று கூற, அந்த வித்வான் அஹங்காரம் அழிந்து தலை குனிந்து நின்றார்.

பட்டருக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்துவைத்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவர் பெற்றோர்.
கேட்ட மாத்திரத்திலேயே தான் கற்றதை மனதில் பதிய வைத்துக் கொள்ளூம் ஆற்றல்
அவருக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நூல்களையும்,
ஆழ்வார்களின் ஈரச் சொல் பாசுரங்களையும், இதிகாச புராணங்களையும், மற்றைய தத்துவ நூல்களையும் கற்றார்.

ஒரு கைசிக துவாதசி அன்று, பட்டர் மிக அழகாக கைசிக புராணம்
வாசித்த நேர்த்தியைக் கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள் இவரிடம்
” பட்டரே உமக்கு பரம பதம் தந்தோம் ” என்று அருளினார்.
பட்டரும் மிகுந்த ஆனந்தத்துடன் இல்லம் திரும்பி, தம் தாயாரை தெண்டம் ஸமர்ப்பிக்க,
அவரும் ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் ” என்று வாழ்த்த, பட்டரும் ” அம்மா, அடியேன் வேண்டியது ஈதே ” என்று கூறினார்.
பிறகு பட்டர் திருநெடுந்தாண்டகம் உபன்யாசம் செய்ய தொடங்கி, விளக்கியருளும் போது,
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியின்
ஒரு பாசுரமான ” பறவியேறு பரம புருடா * நீ என்னைக் கைக் கொண்ட பின் * பிறவி என்னும் கடலும் வற்றி * பெரும் பதமாகின்றதால் ”
பாசுரத்தை அனுஸந்தித்து, இரு கரம் கூப்பிக் கொண்டிருக்கும் போதே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————-

நஞ்சீயர் :-

திருநாராயணபுரத்தில் பங்குனி மாதம், உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்த நஞ்சீயரின் இயற்பெயர் மாதவாச்சாரியார்.
வேதங்களில் கரைகண்டவரான வல்லவராக இருந்ததினால் இவர் வேதாந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு அந்தணர் பெரும் வேதாந்தியாகத் திகழ்ந்த மாதவாச்சாரியாரை, பட்டரின் பெருமைகளை சொல்லி
அவரிடம் ஈடுபாடு கொள்ளும்படி வேண்ட, இவருக்கும் பட்டரை நேரில் காண ஆவல் எழுந்தது.
பட்டர் திருநாராயணபுரம் ஏள்ளியிருந்த பொழுது, பரிவாரங்களுடன் வேதாந்தி மணி பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
மற்ற பிற அந்தணர்கள் உணவு பறிமாறும் இடத்திற்குச் செல்ல, பட்டர் ஒரு எளிய அந்தனர் போல் ,
மாதவாச்சாரியார் இருந்த இடத்திற்கு வந்தார்.

இவரைக் கண்ட வேதாந்தி ” எதற்கு இங்கு வந்தீர் ” என்று வினவ,
” பிட்சைக்கு வந்தேன் ” என்று பட்டர் பதிலுரைக்க, அதற்கு வேதாந்தி ” உணவு பறிமாறும் இடத்திற்கு போவதுதானே ” என்று சொன்னார்.
ஆனால் பட்டரோ, தான் தர்க்க பிட்சைக்குத்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார்.
இவர் யாரென்று ஊகித்த வேதாந்தி, பட்டரிடம் ” நீர்தான் பட்டரோ ? ” என்று கேட்க, அவரும் ” ஆம் ” என்று சொல்ல,
இருவருக்கும் வாதம் நடந்தது. முடிவில் பட்டர் வேதாந்தியை வெற்றி கொள்ள, அவரும் ” விஷிஷ்டாத்வைத மதமே”
உயர்ந்தது என்பதனை ஒப்புக் கொண்டு, பட்டர் திருவடிகளில் சரணம் அடைந்தார்.
பட்டர் அவருக்கு ” பஞ்ச ஸமஸ்காரம் ” செய்து வைத்தார்.

பின்னாளில் வேதாந்தியாகிய , மாதவாச்சாரியார் துறவறம் பூண்டு, அத் துறவறக் கோலத்துடனே ஸ்ரீரங்கம் வந்து,
பட்டரின் திருவடியை சரணமடைந்தார்.
பட்டரும் , அவரை வாரி அணைத்துக் கொண்டு, அவருக்கு ” நஞ்சீயர் ” என்று திருநாமம் சூட்டினார்.
பட்டரிடம் அளவற்ற பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலே நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்துள்ளார்.
நஞ்சீயர் காலக்ஷேபங்களைக் கேட்ட, நம்பிள்ளை, பிற்காலத்தில், தாம் காலக்ஷேபம் செய்யும் போது,
நஞ்சீயரின் குண நல விஷேங்களை பூரிப்போடு கூறுவாராம்.

நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர் மிகவும் விரும்பிய,
திருமங்கை ஆழ்வாரின் ” தூவிரிய மலருழக்கி ” பதிகத்தை அரையர் ஸேவிக்க,
அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டு பரமபதம் அடைந்தார்.

————–

நம்பிள்ளை :-

திருமங்கை ஆழ்வாரின் அவதார மாதமும், நக்ஷத்திரமுமான, கார்த்திகை மாதம் , கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்
நம்பிள்ளை. இவரின் இயற்பெயர் வரதர். பட்டருடைய வியாக்யானங்களை தம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சீயர் திருவாய்மொழிக்கு, உரை எழுதிக்கொண்டிருந்தார்.
அதனை ஏடு படுத்த அழகான கையெழுத்துடன் எழுதக் கூடியவரை தேடிக் கொண்டிருக்கும் போது,
அவருக்கு அப்பொழுது அறிமுகமானவர் வரதர். நஞ்சீயருக்கு,வரதரின் கையெழுத்து பிடித்துப் போக அவரைத் தம் சீடராக்கிக்
கொண்டார். திருவாய்மொழி உரையை, வரதருக்குக் கற்றுக் கொடுத்து, தான் எழுதி வைத்திருந்த
ஓலைச் சுவடிக் கட்டையையும் வரதரிடம் கொடுத்து அதனை அவரின் கைவண்ணத்தில் ஏடுபடுத்திக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.

வரதர் சுவடிகள் அடங்கிய கட்டையை எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைய ஆற்றில் இறங்கினார்.
அப்பொழுது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நன்கு நீந்த வல்லவரான வரதர்,
ஓலைக் கட்டையை தம் திருமுடியில் கட்டிக் கொண்டு நீந்தினார்.
ஆனால் வெள்ளப் பெருக்கின் ஓட்டத்தில் அவருடைய திருமுடியில் கட்டப்பட்டிருந்த அவ்வோலை கட்டைகள்,
ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மிக்க துயரமுற்ற வரதர், புலம்பியபடியே கரையை கடந்து மறு பக்கம் வந்தார்.
பிறகு தம் மனதைத் தேற்றிக் கொண்டு, ஆச்சாரியனிடம் தாம் கற்று, தம் மனதில் நிறுத்திக் கொண்டதை நினைவில் கொண்டு,
எம்பெருமானின் அருளினை வேண்டி, தாமே அவ்வுரைகளை எழுதி முடித்து அதனை நஞ்சீயரிடம் கொண்டு ஸேர்ப்பித்தார்.
இதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் தாம் கற்றுக் கொடுத்ததை விட மிகச் சிறப்பாக திருவாய்மொழி உரை இருப்பதைக் கண்டு,
மிகவும் பரவசப்பட்டு, மனம் குளிர்ந்து வரதரைப் பாராட்டினார். வரதரும் நடந்த சம்பவங்களை நஞ்சீயரிடம்
கூற, மிகப் பூரிப்புடன் ” நீர் நம்பிள்ளையோ ” என்று ஆரத் தழுவிக் கொண்டார்.

திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு, காலக்ஷேபங்கள் செய்து வந்த நம்பிள்ளை கோஷ்டியில் இடம் பெற்றிருந்த,
கூரத்தாழ்வானின் பேரனான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் விளக்க உரை கேட்டதைக் கொண்டு,
அதனை சுவடி படுத்திக் கொண்டு, ஆச்சாரியனிடம் சென்று காட்டினார். ஆனால் நம்பிள்ளையோ, தம்மிடம் இசைவு பெறாததாலும்,
அவர் எழுதிய உரையானது மிகவும் விஸ்தாரமாக இருந்ததாலும், ஆழ்பொருளை சரியான முறையில் தெரிவிக்காததாலும்,
கோபம் கொண்டு அச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிவிடுகிறார்.

திருவரங்கத்தில், நம் பெருமாள் ஸன்னதியில் நடக்கும் இவரின் காலக்ஷேப பேருரைகளைக் கேட்க ,
பெருமளவில் அலை மோதும் பக்தர்கள் கூட்டத்தைக் கண்டு ” இது நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ ” என்று
அக்காலத்தில் மக்கள் வியப்பார்களாம்.
இவருக்கு உலகாச்சாரியர் என்ற பட்டப் பெயரும் உண்டு. 95 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்தார் நம்பிள்ளை.

—————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை :-

வடக்குத் திருவீதிப் பிள்ளை , ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம், சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பிரபலமானவர்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யான காலக்ஷேப கோஷ்டியில் ஈடுபாடு கொண்டு,
அங்கு விவரிக்கப்பட்டவற்றை குறித்துக் கொள்ள விழைந்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரின் பிரயத்தனத்தின் மேல் நம்பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தினை மனதில் இருத்திக் கொண்டு,
நம்பிள்ளையின் காலக்ஷேப வியாக்யானங்களை முழுவதுமாக குறிப்பெடுத்துக் கொள்வார்.
அவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டதை ஓலைச் சுவடியில் எழுதி, தம் திருமாளிகையில் கோவிலாழ்வார் ஸன்னதியில்
சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நம்பிள்ளையை தமது திருமாளைகைக்கு அமுது செய்விக்க விரும்பி ப்ரார்த்தித்தார்.

அவரும் ஒப்புக் கொண்டு ஒருநாள் திருமாளைகைக்கு எழுந்தருளி, அங்கு அன்று தாமே பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதாகக் கூறி,
கோவிலாழ்வார் கதவுகளைத் திறந்தார். உள்ளே இருந்த சுவடிகளைக் கண்டு அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தார்.
தம்முடைய வியாக்யானங்களே அவை என்றுணர்ந்து, அவை மிகச் சிறப்பாக குறிப்பெடுக்கப்பட்டதைக் கண்டு திருப்தியுற்று,
” பிள்ளாய் இது என்ன செயல்? ” என்று வினவ, வடக்குத் திருவீதிப் பிள்ளையும் தாம் மறக்காமல் இருப்பதற்காகத் தான்
இவற்றை ஏடு படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

அலங்காரம் செய்யப்பட்ட யானை மிக கம்பீரமாக நடப்பதைப் போல, இந்தக் குறிப்புகள் இருப்பதாகக் கூறி,
வடக்குத் திருவீதிப் பிள்ளையை நன்றாக கடாக்ஷித்தார்.அந்த ஏடுகளை தாமே வைத்துக் கொள்வதாகக் கூறி, தம்முடன் எடுத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஈட்டை ஈயுண்ணி மாதவர்க்குக் கொடுத்தார். அவர் பின் அதனை தம் மகனான பத்மனாபனிடம் கொடுத்தார்.
பத்மனாபன் அதனை நாலூர் பிள்ளைக்குக் கொடுக்க, அவர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுக்க,
பின் அவர் தம் சிஷ்யர்களான திருவாய்மொழிப் பிள்ளை, திருநாராயணபுரம் ஆய் என்கிற ஜனனாச்சாரியர், இளம்பிலிசை பிள்ளை மூவருக்கும் கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அதனை மணவாள மாமுனிக்குக் கொடுக்க, அவர் அதனை நம்பெருமாள் முன்பு பிரகடனப்படுத்தினார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் காலஷேபங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால், இல்லறத்திலே
நாட்டமில்லாதவராக இருந்தார். இதனால் பிள்ளையின் தாயார் அம்மி கவலையடைந்து, நம்பிள்ளையிடம் தெரிவிக்க,
அவரும் பிள்ளையை அழைத்து தக்க வகையில் உபதேசித்தார். ஆச்சார்ய உபதேசத்தைப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை,
திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, இரண்டு ஆண் புத்திரர்களைப் பெற்றார்.
தம் ஆச்சாரியரான நம்பிள்ளையின் பட்டப் பெயரான உலகாச்சாரியர் என்று தம் ஒரு மகனுக்கு பெயரிட்டார்.
அவர்தான் பிள்ளைலோகாச்சாரியர் ஆவர். துலுக்கர்களின் படை எடுப்பின் போது நம்பெருமாளைக் காக்க வேண்டி,
அவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜ்யோதிஷ்குடிக்கு சென்றார்.
மற்றொரு புதல்வனுக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று திருநாமம் சூட்டினார்.
இவர் தான் ” ஆச்சார்ய ஹ்ருதயம் ” என்னும் மாபெரும் நூலை எழுதியவர்.
பிள்ளைலோகாச்சாரியர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று இரு மாபெரும் புதல்வர்களை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரயதாயத்திற்கு அளித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை 106 ஆண்டுகள் வாழ்ந்து பின் பரமபதம் அடைந்தார்.

—————–

பிள்ளைலோகாச்சாரியார் :-

ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்தில், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக,
ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். நம்பிள்ளையின் பட்டப் பெயரான ” லோகாச்சாரியன் ” என்கிற பெயரோடு,
” பிள்ளை ” என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு ” பிள்ளை லோகாச்சாரியன் ”
என்று பெயரிட்டு அழைத்தனர். இவர் தம் தகப்பனாரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு, நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தகப்பனாரிடம் திருவாய் மொழி மற்றும் இதர பிரபந்தங்கள், ஈடு முதலான வ்யாக்யானங்கள், ஸ்ரீ பாஷ்யம்
ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு, பரந்த ஞானம் பெற்றார். சம்பிரதாய ரஹஸ்யங்கள் பற்றி காலஷேபங்கள் செய்து வந்தார்.

பிள்ளைலோகாச்சாரியார் , தம் சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்திலே உள்ள காட்டு அழகிய ஸிங்கர் திருக்கோயில்
ஸன்னதியில் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணப்பாக்கத்து நம்பி என்று ஒருவர்.
இவர் ஸ்வப்னத்திலே, காஞ்சி தேவப் பெருமாள் தோன்றி, விஷேஷார்தங்களை அருளிச் செய்து,
மேலும் இவரை ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வரச் சொல்லி அங்கே மேற்கொண்டு
இவ்வர்த்தங்களை விரிவாகச் சொல்வதாகச் சொன்னார்.

மணப்பாக்கத்து நம்பியும் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வந்த பொழுது, அங்கே பிள்ளைலோகாச்சாய்யாரின்
விஷேஷார்த்த காலஷேபத்தில் கலந்து கொண்டார். பிள்ளைலோகாச்சாரியார் அருளிய அர்த்தங்கள்,
காஞ்சி பேரருளாளன் அருளிச் செய்த அர்த்தங்களாகவே இருந்ததைக் கண்டு இவர்,
பிள்ளைலோகாச்சாய்யரிடம் சென்று ” அவரோ நீர் ? ” என்று ஆச்சரியத்துடன் சொல்லி, அவர்தம் திருவடிகளை சரணடைந்தார்.
பின்னர் பிள்ளைலோகாச்சாரியார் அவரை தம் சிஷ்யராக்கிக் கொண்டார்.

பிள்ளைலோகாச்சாரியார் , நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது.
ஒரு சமயம் தில்லி பாதுஷாவான அலாவுதீன் கில்ஜி என்பவன் தன் தளபதியான மாலிக்காபூர் என்பவனை அழைத்து,
தமிழகத்தின் மீது படையெடுத்து, இங்கு திருக்கோயில்களில் உள்ள பொன்னையும், பொருள்களயும், களவாடி வரும்படி ஆனையிட,
அதன் பொருட்டு, வழியில் உள்ள பல சைவ , வைணவ திருத்தலங்களில் கொள்ளையடித்துக் கொண்டு,
ஸ்ரீரங்கத்தை நோக்கி அவன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.
பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர்
திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி என்னும் ஊரில்,
ஒரு மலை அடிவாரத்திலே , பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார்.
வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி,
தம் 105 ஆம் வயதில் நம்பெருமாளை தியானித்துக் கொண்டே ஆச்சாரியன் திருவடி சேர்ந்தார்.

—————–

திருவாய்மொழிப் பிள்ளை :-

திருமலை ஆழ்வார் என்னும் இயற்பெயருடைய திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வாரின் அவதார மாதமான வைகாசி மாதத்தில்,
அவரின் அவதார நஷத்திரமான விசாக நஷத்திரத்தில் அவதரித்தார். அவரின் இளம் வயதிலேயே பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யராகி,
அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பாண்டிய மன்னனுக்கு ப்ரோஹிதராகவும் , பிரதான அமைச்சராகவும் இருந்து
அரசு பணி ஆற்றிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பாண்டிய மன்னன் அகால மரணமடைய,
அரசனின் மகன் மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணியார், திருமலை ஆழ்வாரை
ராஜப் பிரதிநிதியாக நியமித்தார். இவரும் மிக்க புகழுடனும், பாராட்டுகளும் பெற்று, ராஜ்யத்தை நல்லபடியாக பரிபாலனம் செய்து வந்தார்.

இந்த சமயத்தில் தான், பிள்ளைலோகாச்சாரியார், நம்பெருமாளை, துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு,
அவருடன் ஜ்யோதிஷ்குடி எழுந்தருளியிருந்தார். அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, அவர்களை திருமலையாழ்வாருக்கு,
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை கற்பித்து, அவரை தர்ஸன ப்ரவர்த்தகராக ஆக்க வேண்டும் என்று பணித்தார்.
சிஷ்யர்களும் ஆச்சாரியன் ஆக்ஞைப்படி, திருமலை ஆழ்வாருக்கு, ஸத்விஷயங்களைக் கற்பித்து,
அவரை ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபட வைத்தனர்.

நம்பெருமாளை பாதுகாப்பு கருதி, ஜ்யோதிஷ்குடியிலிருந்து மேலும் தெற்கு நோக்கி, மலையாள தேஸத்திலுள்ள கோழிக்கோடு
நகரத்திற்கு பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யர்கள் எழுந்தருளப் பண்ணியிருந்தனர். நம்பெருமாளைப் போலவே, பாதுகாப்புக் கருதி,
திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரையும் அங்கிருந்த பக்தர்கள்,
கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப் பண்ணியிருந்தனர். இவ்விருவரும் தேனைகிடம்பை என்ற ஊரிலே சிறிது காலம் எழுந்தருளியிருந்து,
பின் நம் பெருமாள், திருநாராயணபுரம் எழுந்தருள, நம்மாழ்வார், முந்திரிப்பு என்னும் ஊருக்கு எழுந்தருளப்பட்டார்.
அவ்வூரில் நிலவிய திருடர்கள் பயம் காரணமாக, ஆழ்வார் ஒரு பெட்டகத்தில் எழுந்தருளப்பட்டு,
அப்பெட்டகத்தை இரும்புச் சங்கிலியால் பிணைத்து , ஒரு மலைச்சரிவின் அடியில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

துலுக்கர்கள் பயம் நீங்கிய நிலையில், நம்மாழ்வாரை மீண்டும் திருக்குறுகூருக்கு எழுந்தருளப் பண்ண விரும்பிய பக்தர்கள்,
மலைச் சரிவிலிருந்து, ஆழ்வாரை எழுந்தருளப்பண்ண உதவி வேண்டி, மதுரையில் ராஜப் பிரதிநிதியாக இருந்த
திருமலை ஆழ்வாரை, தோழப்பர் என்னும் அடியவர் மூலம் நாடினர். திருமலை ஆழ்வாரும் ,
கொச்சி அரசருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டி ஒரு கடிதம் கொடுக்க, அதனை தோழப்பர் கொச்சி அரசரிடம் சென்று சமர்ப்பித்தார்.
பின் அவர் மூலம் உதவிகள் பெறப்பட்டு, நம்மாழ்வாரை மீண்டும் இரும்பு சங்கிலி கொண்டு மலை சரிவிலிருந்து மேலே கொண்டுவர முயன்றனர்.
அப்பொழுது தோழப்பர் இரும்புக் கம்பிகளுடன் மலைச் சரிவில் இறங்கி, நம்மாழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணினார்.
மீண்டும் கீழே இறக்கப் பட்ட அதே இரும்புக் கம்பியை பற்றி மேலே வர,
தோழப்பர் முயற்சிக்கையில் கம்பி அறுந்து விழ , அங்கேயே அவர் உயிர் நீத்தார்.

திருமலை ஆழ்வார் ராஜ்ய பரிபாலனங்களை தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபடலானார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீது அதீத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்ததால்,
இவர் திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்த பொழுது,
திகழக்கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் பிறந்த குமாரரான
அழகிய மணவாளனை சிஷ்யராக்கிக் கொண்டார். அழகிய மணவாளனாகிய இவர் தான் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயம்,
இன்றும் தழைத்தோங்கி இருப்பதற்குக் காரணகர்த்தரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆவார்.

திருவாய் மொழிப் பிள்ளை திருமேனி நோய் வாய்ப்பட்டு, சிரம திசையில் இருந்த பொழுது,
எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து, மென் மேலும் வளர்க்கப் போகிறவர் யார் என்று வினவ,
உடனே அழகிய மணவாளன் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
உடனே ஸமஸ்கிருத சாஸ்திரங்களிலே ஸ்ரீ பாஷ்யத்தைக் கேட்டும், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே
அநவரதம் ஈடுபடுத்திக் கொண்டும், பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு,
மங்களா ஸாஸன கைங்கர்யபரராய் இருந்து கொண்டும், கோயிலிலே நித்ய வாசராய் எழுந்தருளியிரும் என்று
அழகிய மணவாளனை, திருவாய்மொழிப் பிள்ளை உபதேசித்து, ஆசிர்வதித்தார்.
பிறகு தம் சிஷ்யர்களை அழைத்து, அழகிய மணவாளன் ஒரு அவதார விஷேஷமானவன் என்று
ஆராதித்து வாருங்கள் என்று தெரிவித்து, தமது 120 வது வயதில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

————–

மணவாள மாமுனிகள் :-

ஐப்பசி மாதம் , மூல நக்ஷத்திரத்தில் ஆழ்வார் திருநகரியிலே,
திகழக்கிடந்தார் திருநாவீருடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமகனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள்.
இவர் தம் இயற் பெயர் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும்.

சிறுவயதிலேயே சௌளம், உபநயனம் நடந்தேறியது. தம் திருத்தகப்பானாரிடத்திலே, அருளிச் செயல்களையும்,
வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளை தமக்குப் பின் எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து,
வளர்க்கப் போகிறவர் யாரென்று வினவ, அழகிய மணவாளப் பெருமாள்” அடியேன் அதற்குத் தயார் ” என்று கூறினார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் இவருக்கு அருளிச் செயல்களையும் மேலும் தத்துவார்த்தங்களையும் கற்பித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை, இவரின் அருமை, பெருமைகளை தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு இவரை
ஸ்ரீரங்கம் சென்று அங்கு அழகிய மணவாளனுக்கு கைங்கர்யம் செய்யப் பணித்தார்.
ஸ்வாமி இராமாநுஜரின் மறு அவதாரமே, அழகிய மணவாளப் பெருமாள் எனபதனையும் உணர்ந்து,
அவரின் அவதார மகிமையை போற்றிக் காத்து, அவருக்கு துணை நிற்கவும் தம் எல்லா சிஷ்யர்களையும் பணித்தார்.

அழகிய மணவாளப் பெருமாளை உடையவர் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார் திருவாய்மொழிப் பிள்ளை.
உடையவர் பெயரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் இவருக்கு” யதீந்த்ரப்ரவனர் ” என்றும் திருநாமமிட்டார்.
எம்பெருமானார், பிள்ளைலோகாச்சார்யார் இவர்களின் வைபவங்களை நினைத்துக் கொண்டும்,
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய செயல்களை வியந்து கொண்டும்,
அவர்கள் எழுந்தருளியிருந்த இடங்களைக் கண்டும் பரம திருப்தி அடைந்தார்.

பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகை வாசலில் கீழே விழுந்து வணங்கி,மண் புழுதியிலே புரண்டு “இது ரகசியம் விளைவித்த மண்”
என்று பெருமையுடன் மனம் மகிழ்வார். சிதிலம் அடைந்த ஓலைச் சுவடிகளை மீண்டும் ஏடுபடுத்தினார்.
இவருக்கு பிறந்த மகனுக்கு” ராமாநுஜப் பிள்ளை ” என்று ஆச்சாரியரின் ஆக்ஞைப்படி பெயரிட்டார்.
பின்னர் இவர் இல்லற வாழ்க்கையை விடுத்து, துறவற வாழ்க்கையான சன்யாசத்தை மேற்கொண்டார்.
பெரிய மங்களா ஸாஸனம் செய்து, பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளினார். அதுவே அவருடைய ஆஸ்தான மணபம் ஆயிற்று.
அது முதற் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள், மணவாள மாமுனிகள் என்று அழைக்கப்படலானார்.

மாமுனிகளின் பெருமையும் அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத சிலர், அவர் எழுந்தருளியிருந்த மடத்திற்கு
நடு நிசியில் தீ வைத்து, மடத்தை எரித்தனர். மாமுனிகள் ” திருவநந்தாழ்வான் ” வடிவம் கொண்டு,
திருமால் அடியார்களின் பக்கம் வந்து சேர்ந்தார். தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு, அரசன் தண்டனை அளித்த போது,
மாமுனிகள் கருணை உள்ளத்துடன் மனமுவந்து அவர்களை மன்னித்து அருளினார்.

காஞ்சிபுரம், திருப்புட்குழி, திருக்கடிகை, எறும்பி, எம்பெருமான்களை ஸேவித்துக் கொண்டு
திருப்பதி, திருமலை எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்.
அங்கு அரசனின் உத்தரவு பெற்று ஒரு ஜீயரை நியமித்தார்.
அவரே எம்பெருமானார் ஜீயர் என்றும் சின்ன ஜீயர் என்றும் அழைக்கபடுபவர் ஆவார்.

திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப் படிக்கு மேற்கோள்களின் திரட்டு, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி,
யதிராஜ விம்ஸதி, ஆர்த்தி ப்ரபந்தம், தேவராஜ மங்களம், கோபால விம்சதி உட்பட பன்னிரண்டு நூல்கள் இயற்றினார்.
மேலும் ஸ்ரீவசனபூஷணம், மும்முஷூப்படி, ஆசார்ய ஹ்ருதயம் உட்பட எட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளினார்.
இவை தவிர மேலும் பல நூலகளையும், உரைகளையும் அருளிச்செய்தார்.

தென்னாட்டு திவ்ய தேஸங்கள் அனைத்தையும் ஸேவித்துக் கொண்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு,
வட நாட்டு திவய தேஸங்களை ஸேவிக்க இயலவில்லையே என்று வருந்தினார்.
அப்பொழுது ராமாநுஜ தாஸர் என்பவர், தாம் வடநாட்டு திவ்ய தேஸங்களுக்கு சென்று, அங்கு மாமுனிகளின் திருநாமத்தை ஓதி,
எம்பெருமான்களையும் ஸேவித்து, திருத்துழாய் பிரசாதத்தை அவரிடம் ஸமர்ப்பிப்பதாகக் கூறி, அவரின் சம்மதத்தைப் பெற்றார்.
ராமாநுஜரும் அவ்வண்ணமே பத்ரி, பிருந்தாவனம், அயோத்தி, ஹரித்வார், புஷ்கரம் உட்பட பல திவ்ய தேஸங்களையும் ஸேவித்துக் கொண்டு,
கங்கை, யமுனை, சரயு நதிகளில் தீர்த்தமாடி, அபய ஹஸ்தம், திருத்துழாய் பிரசாதங்களுடன் திரும்பி வந்து மாமுனிகளிடம் ஸமர்ப்பித்தார்.
மணவாள மாமுனிகளும் அப்பிரஸாதங்களைப் பெற்றுக் கொண்டு வட நாட்டு திவ்ய தேஸங்களை ஸேவித்த உணர்வை அடைந்தார்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்பவும், அருளிச் செயல்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும் ,
மிகவும் ப்ரஸித்தி பெற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு , அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் வானமாமலை ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ராமாநுஜ ஜீயர், கோவிலண்ணன்,
பிரதிவாதி பயங்கரம் அண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் ஆவர்.

கால வெள்ளத்தில் திருமேனியில் நோவு கண்டு, அரங்கனுக்கு நேரில் சென்று கைங்கர்யங்கள் செய்ய முடியவில்லையே என்றும்,
மேலும் பெருமாளையும் நேரில் ஸேவிக்க இயலவில்லையே என்றும் வருத்தமுற்றார்.
ஒரு நாள் அரங்கன் வீதி உலா வரும் பொழுது நேரில் கண்ணாரக் கண்டு ,சேவித்து மிகுந்த ஆனந்தமடைந்தார்.
74 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து எம்பெருமானார் தர்ஸனத்தை நிலைநிறுத்தி, கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெற
ஏற்பாடுகள் செய்வித்து, ஆழ்வார், ஆச்சார்யர்களின் அருளிச் செயல்களை மக்களிடையே பரப்பினார்.

இப்படியாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமேற் கொண்டு செவ்வனே நியமனப்படுத்திய ஸ்வாமி மணவாள மாமுனிகள்,
மாசி மாதம், க்ருஷ்ணபக்ஷ துவாதசியன்று, எம்பெருமானார், பிள்ளைலோகாச்சாரியார், திருவாய்மொழிப் பிள்ளை, இவர்களின்
திருவடிகளை நினைத்து கொண்டே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி
வளரச் செய்த நம் ஸ்வாமியை ” மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் ” என்று வேண்டிக் கொள்கிறோமே —

—————

ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

ஸ்ரீ பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்)

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீ சேனை முதலியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூராடம் (ஐப்பசி)
ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ நம்மாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: விசாகம் (வைகாசி)

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சித்திரை (சித்திரை)

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குஉதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன்என்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

ஸ்ரீ பொய்கையாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவோணம் (ஐப்பசி)

செய்யதுலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பூதத்தாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அவிட்டம் (ஐப்பசி)

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி யிட்டபிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ்உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சதயம் (ஐப்பசி)

திருக்கண்டேன்என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: மகம் (தை)

அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்குஉதித்தான் வாழியே
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவர்கோன் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே

ஸ்ரீ குலசேராழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: புனர்பூசம் (மாசி)

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதன்னில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிடடான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி)

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூரம் (ஆடி)

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கேட்டை (மார்கழி)

மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தோன் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப்பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

ஸ்ரீ திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (கார்த்திகை)

உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொனடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை (கார்த்திகை)

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்துஏழிந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

சித்திரையில் கார்த்திகை – ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திரு அவதார திருநக்ஷத்ரம்

ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்னும் ஸ்ரீ உய்யக்கொண்டார் -திருக்குருகூர்

ஸ்ரீ உய்யக்கொண்டாரின் வாழித்திருநாமம்–
“வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவாதிரை (சித்திரை மாதம்)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (தை மாதம் )

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான்தன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (பங்குனி)

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில் குடிவிளங்க இங்குவந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனார் அடியிணைகள் வாழியே
ஸ்ரீ வடுகநம்பி வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அஸ்வினி (சித்திரை மாதம்)

ஏராரும் சித்திரையில் அசுவதீ வந்தான் வாழியே
எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே
எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே
அனவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே
ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அநுஸந்தித்தான் வாழியே
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே
ஸ்ரீ வடுஹ நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (ஆவணி)

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மண்புகழ் சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி)

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்ரீ கூர குலோத்தம தாஸர் வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம் : திருவாதிரை (ஐப்பசி)

சந்தமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
உலகுதுலா வாதிரையில் இங்கு உதித்தான் வாழியே
இந்த உலகத்தோர்க்கு இதமுறைத்தோன் வாழியே
எழில்வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
குந்திநகர்ச் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தம தாசர் குரைகழல் வாழியே

ஸ்ரீ மணவாளமாமுனிகள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருமூலம் (ஐப்பசி)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள் பொது நின்ற பொன்னம் கழலே சரணம்
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத ஸ்ரீ பேர் அருளாளன் துயர் அறு சுடர் அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கம் பெரியகோயில்

October 30, 2021

|”காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸூ தேவோ ரங்கேச வேத ஸ்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக”|

இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேத ஸ்வரூபன் என்னும் விமானத்தை
ப்ரணவாகார விமானம் என்றும்,
கலசங்களை வேத ஸ்ருங்கக்ளெனவும் அழைப்பர்.
காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன.

காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

“ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!”

காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே!
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே!
ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே!
ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.

” விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா”
(• வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 87 வது சுலோகம்.)

——————–

ஸ்ரீ காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட , உலகின் மிகப் பெரிய ஸ்ரீஅரங்கநாதஸ்வாமி திருகோயிலின்
ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக,
( சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும் 4 கிமீ (10,710 அடி) சுற்றளவும் கொண்டது)
நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும்.
இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.

• இதற்கு ‘அடைய வளைந்தான் திருச்சுற்று’ என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் ஏழு பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
இந்த 8வது அடையவளைந்தான் திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான தெற்கு கோபுரமே
இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ‘ராயர்கோபுரம்’ கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509–1529)
காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் ஒரே சமயத்தில் நாடெங்கும் ) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி முறியடிக்கப்பட்டதும்
பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே நின்று விட்டன.
அச்சுதராயன் (கி.பி.1530-1542) எனும் மன்னனால் முயன்று முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது
இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும். 1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய வழிபாடுகளும் நடைபெற்றன.
இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் என்றும் அழைத்தனர்.
இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம் வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.

அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள்
தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
(இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.)
மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு வாசல் இராஜகோபுரம் 13 நிலைகளுடன் கூடிய
ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர்
ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில்
நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது.
இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான்.
தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.
இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.
கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள்
இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது.
திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது.
இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.

இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில்
நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்)
நன்கொடையிலேயே சிறப்பான முறையில் செய்து விட்டார்கள்.
இராஜகோபுரம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அறியலாம்.
இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு. 10.5 அடி உயரம் கொண்டது
கலசங்கள்:- ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg,
இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்)
இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்)
இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன.
கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன.
மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும்.
அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட திருப்பணி நிறைவுற்றது.

————

ஏழாம் சுற்றான தெற்குச் சித்திரை வீதி புறமுள்ள கட்டைக் கோபுரம் வழியாக நுழைய
பூர்ணன்,புஷ்கரன் என்னும் துவாரபாலகர்கள் இருவரை வணங்கி உள்ளே செல்வோம் .
கோபுரத்தின் எதிர்புறமுள்ள நான்கு கால் மண்டபத்தில் வலப்புறக் கம்பத்தின் கீழ் பாதாள கிருஷ்ணன் சன்னிதி உள்ளது.

பாவனாச்சார்யர் திருமாளிகை, தாத்தாச்சாரியர் திருமாளிகை, ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ஸ்ரீஹயக்ரீவர் தேசிகர் சந்நதி,ஆயனார் திருமாளிகை,
கபிஸ்தலம் ஸ்வாமி திருமாளிகை,பகுகுடும்பி ஸ்வாமி திருமாளிகை,
திருவரங்கத்தமுதனார் திருமாளிகை, சித்திரைத்தேர் முட்டி, பெரியநம்பி திருமாளிகை,
கூரத்தாழ்வான் திருமாளிகை,முதலியாண்டான் திருமாளிகை
வானமாமலை மடம் ஆகியனவற்றை நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து காணலாம்.

————

• மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம்
மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும்
தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்.

திருவரங்கம் பெரியகோயிலின் புராண மரபுகளான ஸ்ரீரங்க மாஹாத்ம்யத்தை கருடபுராணத்தில் உள்ள
‘சதாத்யாயீ’ (108 அத்யாயம்) மற்றும் ப்ரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ள ‘தசாத்யாயீ’ (10 அத்யாயம்) ஆகிய
இரு புராணங்கள் கொண்டு அறிய முடிகிறது.
மேற்க்கண்ட தசாத்யாயீயில் 11வது அத்யாயமாக ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம் என்ற அத்யாயயமும் சேர்த்து
பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.
(பத்துஅத்தியாயம் போலே சிவன் நாரதருக்கு சொல்லுகிற க்ரமமாயிராமல்,
ப்ரம்மா ஸநத்குமாரருக்கு சொல்லுவதியிருப்பதால், இது 11ம் அத்யாயம் ஆகாது)

• ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ப்ரம்மாண்ட புராணத்தில் நாரதரால் பிரகலாதனுக்கு உபதேசிக்கப்பட்டது.
ஒரே அத்யாயம் கொண்டது இந்த ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ஆகும்.

• பாரமேஸ்வர ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்காக ஏற்ப்பட்ட பௌஷ்கர ஸம்ஹிதையின் 10ம் அத்தியாயத்தில் 387 ஸ்லோகங்களில்
ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் சொல்லப்படுகிறது.

——————

• மூலவர்(மூர்த்தி)
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
(ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய புஜங்க சயனம் )

• உற்சவர்
நம் பெருமாள்
அழகிய மணவாளன் என்னும் திருப்பெயரும் உண்டு

• தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்

• தீர்த்தம்
(இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள் உள்ளன)- நவ தீர்த்தம்

1.சந்திர புஷ்கரணி
2.வில்வ தீர்த்தம்
3.சம்பு தீர்த்தம்
4.பகுள தீர்த்தம்
5.பலாச தீர்த்தம்
6.அசுவ தீர்த்தம்
7.ஆம்ர தீர்த்தம்
8.கதம்ப தீர்த்தம்
9.புன்னாக தீர்த்தம்

• தலவிருட்சம்
புன்னை
• விமானம்
ப்ரணா வாக்ருதி விமானம்
• காட்சி கண்டவர்கள் (பிரத்யட்சம்)
வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன். ஆழ்வார்,ஆச்சார்யர்கள்

————-

||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
சக்கரம்,சங்கம் என்னும் துவார பாலகர்களை வணங்கி விட்டு ‘புவர்லோகம்’ என்று
அழைக்கப்படும் 6 வது திருச்சுற்றாகிய ‘திருவிக்கிரமன் திருவீதி’ என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
இந்த வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர்.
திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக ‘உள்துறை வீதி’ என்றும் கூறப்படுகிறது.

யானைகட்டும் மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை,
ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்
(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்),
ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல்
( இவ்வழியே 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து
ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக் கவனித்த மடமாகிய ‘ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி மடம்’ என்ற பெயரில்
தொன்று தொட்டு ஜீயர்கள் பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)

கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம்.
அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம்
இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமி திருமாளிகை,
மணவாள மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது.
மணவாள மாமுனிகள் தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான் காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது.
பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் ‘மணவாளமாமுனிகள் மடம்’ ஆகும் என்பது ஐதீகம்.

மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும்
இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.

அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும்
‘பங்குனி உத்திரம்’ திருவிழா பற்றி குறிப்புள்ளது.

——————-

• திருவரங்கம் பெரியகோயிலில் வரலாற்று கால கல்வெட்டுகள்
சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம்.
செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

• கி.பி. 10ம் நூற்றாண்டு – இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892)
நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்
(A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62) திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892)
இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக ‘பீமஸேனி கற்பூரம்’ வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62)
ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள
சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் ‘பீமஸேனி கற்பூரம்’ கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது.
கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு
பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய
பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370) உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53)
சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

• இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை
‘கோயிலொழுகு’ (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான்.
இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் ‘இராசமகேந்திரன் திருவீதி’
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன் அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய
கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில் முதலாம் குலோத்துங்கச்சோழனின் (கி.பி.1070-1122)
கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள
இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

• ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள் ஸ்ரீரங்க வரலாற்றின் ‘பொற்காலம்’ என்றே கூறலாம்.
இவரின் அரிய சேவைகளை ‘கோயிலொழுகு’ என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.
அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம்.
முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில் தங்கியிருந்தார்
எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

• இரண்டாம் குலோத்துங்கச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய
இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜராஜச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜாதிராஜச்சோழன் ( கி.பி. 1163-1178) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம் திருச்சுற்றில் உடையவர்சந்நதி எதிரில் உள்ளன.

• மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218) காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49 61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892; 364 of 1953-54; 157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம் திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37; 102,133,134,147 of 1938-39 156 of 1956-57;30,52 of 1948-49;
156,157,158 of 1951-52;363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

• கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள் 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.
நான்காம் திருமதிலைக் கட்டியவர் ‘திருமங்கை ஆழ்வார்’ என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள்
தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள
வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி ‘பிற்காலப் பாண்டியர்கள்’ காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என
அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின் கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும்.
இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின்
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060—1063 ஆம் ஆண்டில்
இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ‘ராஜமஹேந்திரன் திருவீதி’ என வழங்கப் படுகிறது.

சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும்,
‘ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்’ சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது.
தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
• திருவரங்கம் பெரியகோயிலில் சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38) பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216—1238) கல்வெட்டானது
(இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர் -A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட
நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான், எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன்
திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 362 of 1953-54 )
முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின் (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில்
‘விக்கிரம சதுர்வேதிமங்கலம்’ என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது.
முதலில் ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும்.
இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது.
வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும்
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.
இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர்
என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு
திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.

வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி
சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில்
“ஆரோக்ய சாலை” ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு
வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37) கூறுகிறது.
சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும் காணலாம்.
தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த ‘கருடவாகன பண்டிதர்’ இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார்
என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
(A.R.E.No.64,65,70,74, of 1936-37) (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த ‘வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி’ கட்டப் பட்டது.
இவனது 15வது ஆட்சிகாலக் கல்வெட்டு (A.R.E.No.74 of 1892)’திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி’ என்று குறிக்கிறது

• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
(கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று
இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க
குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த
‘குமாரநம்பி நல்லூர்’ என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக
கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது.

• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
கி.பி. 1250-இல் முடிசூடிய ‘இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்’ போசள மன்னனுடன் பகைமை கொண்டான்.
‘கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்’ (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
அவனது தம்பியான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று,
பாண்டிய நாட்டில் இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

————-

திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 – 1271) ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த ‘பாண்டிய பேரரசன்’ ஆவான்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு
பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.
இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் – A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

• திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம்,
மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.
இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம்,
பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.
ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய
பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை,
பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.
விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.
மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.
தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.
பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.
தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி)
வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை ‘கோயில் ஒழுகு’ நூல் கூறுகின்றது.
‘பொன்வேய்ந்த பாண்டியன்’ என்று புகழப்பட்ட ‘ஹேமச்சந்தன ராஜா’வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம்,
கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான்
திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி,
முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக ‘சுந்தரபாண்டியன் மடம்’ என்று
தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக் கட்டியுள்ளான்.
இரண்டு மீன்சின்னங்கள் பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37)
விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய
ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

————–

சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள்
(கோயிலொழுகு தரும் தகவல்)

திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர்.
இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு உண்டு.
இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும் உண்டு.

சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில்
(பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம்.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது.
“ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான்.
அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார்.
அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான்.
இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.

சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால்
“பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை”
வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)
இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும்
கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற
சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார்.
தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும்.
இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள் துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:

“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற
பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான
ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார்.
அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க
அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து
அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.

சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை
பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே
இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது….”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து
ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள்
பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
“அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம்
அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…”
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே
எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார்.
கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து
அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.
சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும்
இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.

—————

தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் ‘ஜ்யோதிஷ்குடி’ (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில்
பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர்.
அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில்
பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து
ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள்
என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி’அழகிய மணவாளப்பெருமாள்’ மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை – அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் ‘
கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்’ எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான்.
அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மற்றும்
திருவாராதனங்களுக்காக ‘அழகியமணவாளன் திருக்கிணறு’ ஒன்றையும் உருவாக்கினார்கள்.
(அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும்
திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள்.
குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு
தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார்.
பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது.
குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து
பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும்
‘மதுரா விஜயம்’ என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து,
‘அழகியமணவாளப் பெருமாள்’ திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார்
திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள ‘சிங்கபுரம்’ என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி
பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி
(திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை
செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும்
ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892)
ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
(கி.பி.1324 முதல் 1370 வரை சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்)

அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில்
‘அழகியமணவாளம்’ எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார்.
மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான்
அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே “நம்பெருமாள்” என்பதாகும்.
கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

——————

விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில் சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் ‘ஹரிஹரர்’ மற்றும் ‘முதலாம் புக்கராயர்’
ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது.
இந்திய வரலாற்றில் ‘விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்’ கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது,
அது 1336 – 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம்
மற்றும் 1542 – 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.
இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள ‘ஹம்பி’யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம்
போன்ற பல விஜயநகர சமகால இலக்கிய நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்ரீரங்க அழகியமணவாளன் திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில் இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த
கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை தரிசித்து விட்டு
திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால்
அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான்
அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார்.
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான ‘அழகியமணவாளன்’ என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன்
நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி
ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த
கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட “நம்பெருமாள்” என்ற பெயரே இன்றுவரை வழங்குகிறது

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார். ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான ‘கிருஷ்ணராய உத்தமநம்பி’ செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.
இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக
பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.

சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக
நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து,
அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் ‘பிரம்மோற்சவம்’ ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார்
பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)

இதில் கோபண்ணவுடையாருடன் வந்த ‘குண்டு சாளுவயர்’ அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான
பொன்னாலான ‘திருக்கொடித்தட்டு’ (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத்
திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்).
அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர்.
அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, “துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில்,
பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட
ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த,
பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்….”
என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.

கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 – 1529) ஆட்சி:-
ஸ்ரீகிருஷ்ணதேவராயனின், தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை,
கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர்,
அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார்.
பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது.
தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார்.
கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார்.
போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார்.
ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும் இருந்தார் .

இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான்.
மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும்
(சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார்.
கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ‘ஆந்திரபோஜர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார்.
அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும்
சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
• ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு
“ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.

•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள்
திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும்,
சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு
(A.R.E.No.341 of 1950-51 – இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது.
மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய ‘மாசி பிரம்மோத்ஸவம்’ நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)(A.R.E.No.265 of 1930) மூலம் அறியமுடிகிறது.
தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது

மாபெரும் விஜயநகரத்தை கட்டமைத்து ஒட்டுமொத்தத தென்னிந்தியாவையே ஆட்சி செய்த
ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இடம் வரலாற்றில் சிறப்பானது மட்டும் அல்ல, தனித்துவமானதும் கூட!. திருவரங்கம் பெரியகோயிலில்
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தைய 34 கல்வெட்டுக்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் இயற்றப்பட்ட ‘ஞானசிந்தாமணி’யைப்
பெரியபெருமாள் கேட்டுமகிழும் வண்ணம் அதைப் படிப்பதற்காக பண்டிதர்களை நியமித்து அதற்காக
ஸ்ரீபண்டாரத்தில் (கோயிற் கருவூலம்) 105 பொன் செலுத்தியது பற்றிய கல்வெட்டு
(இரண்டாம் திருச்சுற்று மேற்குத் தாழ்வரை பகுதி – A.R.E.No 295 of 1950-52) கூறுகிறது.

விஜயநகருக்கு கட்டுப்பட்டு செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு
‘நாயக்கர் ஆட்சி’ தமிழகத்தில் ஏற்பட்டது.
• தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
• செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது;
• மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது.
• இதில் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை
(மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.

•• முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள்.
ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர்,
அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.
இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் “மதுரை நாயக்கர்களின் பொற்காலம்” எனலாம்.
திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர்.
இவர்களுள் ‘இராணி மங்கம்மாள்’ குறிப்பிடத்தக்கவர்.
இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் ‘விஜயரங்க சொக்கநாத நாயக்கர்’
வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது.
எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான
‘சந்தா சாகிப்’ அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார்.
இதன் மூலம் ‘மதுரை நாயக்கர் வம்சம்’ ஒரு முடிவுக்கு வந்தது

——————-

திருமலை நாயக்கர் ஆட்சி:- (கி.பி.1623-1659):-
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கர்
முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார்.
திருமலை நாயக்கரின் முழுப்பெயர் “திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு” என்பதாகும்.
• ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர்
ஆட்சி செய்தபோதிலும் “நாயக்கர் வம்சம்” என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர் மட்டும் தான்

|| மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பட்டியல் ||
• 1. விசுவநாத நாயக்கர்
(கி.பி.1529 – 1564)
• 2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564 – 1572)
• 3. வீரப்ப நாயக்கர் (கி.பி.1572 – 1595)
• 4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி1595 – 1601)
• 5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் [இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர்
விசுவப்ப நாயக்கரின் மகன்] (கி.பி.1601 – 1609)
• 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் [முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்]
(கி.பி. 1609 – 1623)

• 7. திருமலை நாயக்கர் (கி.பி.1623 – 1659)
• 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659 )
• 9. சொக்கநாத நாயக்கர் [இராணிமங்கம்மாள் கணவர்] (கி.பி.1659 – 1682)
•10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682 – 1689 )
•11.இராணி மங்கம்மாள் [சொக்கநாதரின்
மனைவி] (கி.பி.1689 – 1706)
•12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் [சொக்கநாதரின் மகன்]
(கி.பி.1706 – 1732 )
•13.இராணி மீனாட்சி [விஜயரங்கநாதரின் மனைவி] (கி.பி.1732 – 1736 ) ஆகியோர்கள் ஆவார்கள்.

———

•மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை
ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர்.
திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி,
திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர்
ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார்.
சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர்
தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம்.

————–

திருமலை நாயக்கரின் கலைப் பணிகள்:-
திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த “கலாரசிகர்” ஆவார்.
மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
“திருமலை நாயக்கர் மஹால்” இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும்.
“தென்னிந்தியாவின் தாஜ்மஹால்” என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும்.
ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு
பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.
இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த ‘இந்தோ சரசனிக் பாணி’ என அழைக்கப்படும்
கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான
பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.
ஒன்று ‘சொர்க்க விலாசம்’ என்றும், மற்றொன்று ‘ரங்க விலாசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர்.

அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள ‘பத்துத் தூண்கள்’ ஆகும்.
ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.
[திருவரங்கம் பெரியகோயிலில் ‘ஸ்ரீரங்கவிலாசம்’ என்ற மண்டபம் முதலில் நம்மை வரவேற்கிறது.]

——————

திருமலை மன்னர் காலத்தில் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’
(அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய
எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்..
(“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்” என்பது தமிழறிஞர்கள் கூறுவர்.)
திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர்
இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் “திவ்விய பிரந்த சாரம்” எனக் கூறுவர்.
சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
• அஷ்ட பிரபந்தங்கள்
1.திருவரங்கக் கலம்பகம்
2.திருவரங்கத்து மாலை
3.திருவரங்கத்து திருவந்தாதி
4.சீரங்கநாயகர் ஊசல்
5.திருவேங்கட மாலை
6.திருவேங்கடத்தந்தாதி
7.அழகர் அந்தாதி
8.நூற்றெட்டுத் திருபதி அந்தாதி.
இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார் பிரபந்தம்’ எனவும் வழங்கப்பட்டன.

இதில் முதல் நான்கு நூல்கள் ‘திருவரங்கம் பெரியகோயில்’ புகழ் பாடும் நூல்களாகும்.
இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு கதை பின் வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெரியபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந் தொழாத மனவுறுதியுடையவராய்,
அப்பெரியபெருமாள் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன் இவரது கனவில் தோன்றி
‘நம் வேங்கடத்தின் விஷயமாகச் சில பிரபந்தம் பாடுக!’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் “அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்!” என்றுகூறி மறுக்க,

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு
உடனே ‘திருவேங்கடமாலை’, ‘திருவேங்கடத்தந்தாதி’ என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,

அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி,
பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக ‘அழகரந்தாதி’ பாடி,
அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்கு விளங்க ‘நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி’ பாடினார் என்பர்.

• திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் –
திருவரங்கம் பெரியகோயிலில் சலவைக்கல் மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர்.
(அதாவது ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் தற்போது உள்ள திருவேங்கடமுடையான் சித்திரம் அருகாமையில் என்பர்.)

——————-

திருவரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே 17ம் நூற்றாண்டில் தென்கலை வடகலை பிரிவுகளின் முரண்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்தன.
‘ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருக்கே உரிய கோயில்’ என்பதை நிலைநாட்ட போராடிய நிகழ்ச்சி
திருமலை நாயக்கர் திருச்சியில் இருந்த போது நடந்தது.
திருமலை சௌரி மன்னர் திருச்சியிலிருந்த போது தீவிரமான ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை பின்பற்றியவராக
‘பிரணதார்த்திஹர வாதூல தேசிகரான கோயிலண்ணர்’ எனும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றிருந்தார்.
கி.பி. 1630 ஆம் ஆண்டு விஜயநகர அரசரான மூன்றாம் வேங்கவனுடைய (கி.பி 1630-42) குலகுருவான
‘ஏட்டூர் திருமலை குமார தாத்தாச்சார்யர்’ (அல்லது) கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர், திருமலை வேங்கத்துறைவனை வழிபட்டு,
ஆனந்த நிலையம் விமானத்திற்கு பழுது பார்த்து பொன்வேய்ந்து திருப்பணி செய்து, காஞ்சி வரதராசரையும் வழிபட்டு
மேற்படி திருப்பணிகளையே செய்த பிறகு திருவரங்கம் நோக்கி வந்தார்.
விஜயநகர மன்னரான மூன்றாம் வேங்கடவன் திருவரங்கம் பெரியகோயிலுக்கு ‘கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர்’ வருவதற்கு
முன்பே திருமலை மன்னருக்கு குருவின் வருகையை தூதனுப்பி தெரிவித்து விட்டார்.
அக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் பட்டர் திருமலாசார்யர்,உத்தம நம்பி, அண்ணங்கார் ஆகியோரிடையே நிலவி வந்த
பகைமை உணர்ச்சி வலுத்திருந்தது. இதற்கான காரணத்தை கோயிலொழுகு (முதற்பாகம்) இறுதியில் கூறுகிறது

“உத்தமநம்பிக்கும் பட்டர் திருமலாசார்யருக்கும் உண்டாற கலஹம்” எனும் பகுதியில் உள்ளது.
தனது குருவான அண்ணங்காரைச் சந்தித்த திருமலை சௌரி (கோயிலொழுகு நாயக்கரை அவ்வாறே கூறுகிறது)
விஜயநகர மன்னரின் விருப்பப்படி, திருவரங்கம் வருகை தரும் தாத்தாச்சார்யருக்கு தகுந்த மரியாதைகளை அளித்திடுமாறு வேண்டிக் கொண்டான்.
வடகலையாரான தாத்தாச்சாரியாருக்கு தென்கலையாருக்குரிய கோயில் மரியாதைகளை அளிப்பதற்கு அண்ணங்கார் உடன்படவில்லை.
சிஷ்யரான தன்னுடைய. இந்த வேண்டுகோளை ஏற்காவிட்டால் அண்ணங்கார் பல ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்
என்று அச்சுறுத்திய போதிலும், அவர் மன்னனுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை.
திருவரங்த்தில் நிலவியிருந்த சூழ்நிலையை தாத்தாச்சார்யருக்கு தெரியப்படுத்தினான்.

இதனால் சினங்கொண்ட தாத்தாச்சார்யர் மன்னரிடம் ” காஞ்சிபுரத்தில் தென்கலையார்கள் ஒன்றுகூடி
இத்தகைய இடர்பாடுகளைச் செய்யமுனைந்தனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்.
இதுபற்றி நான் விஜயநகர பேரரசரிடம் தெரிவிக்கப்போகிறேன்” என்று கோபத்துடன் கூறினார்.
திட்டமிட்ட படி வந்த தாத்தாச்சார்யரை ஸ்தலத்தார்கள் யாரும் மரியாதை தரவில்லை.
திருவரங்கம் ப்ரணவாகார விமானத்திற்குப் பொன் வேய்வதற்காக கொண்டு வந்த தங்கத்தினை, ‘திருமாலிருஞ்சோலை’
சோமச்சந்த விமானத்திற்குப் பொன் வேய்ந்து விட்டு, தாத்தாச்சார்யர் வடநாட்டு யாத்திரையை மேற்க்கொண்டார்.
விஜயநகரபேரரசன் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்தை அறிந்து, பின்னர் கிருஷ்ணராயர், விட்டலராயர் ஆகியோரை
திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்து நடந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி ஆராய்ந்து தேவைப்பட்டால்
திருமலை சௌரி நாயக்கனின் தலையைக் கொய்து தனக்கு அனுப்பி வைத்திடுமாறு பணித்தான்.

திருமலை சௌரி குற்றமற்றவர் என்பதை அவர்கள் தீரவிசாரித்து அறிந்து விஜயநகர பேரசனுக்கு தெரியப்படுத்தினர்.
திருமலை சௌரியும் விஜயநகர மன்னருக்குத் தங்கத்தாலான தனது தலையையும், பல்லாயிரம் பொற்காசுகளையும் காணிக்கையாக அனுப்பி வைத்தாராம்.
தனது கோரிக்கையை ஏற்காத ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார்களில் ஒருவரான
தனது குரு ப்ரணதார்த்திஹர வாதூல தேசிகர் (அண்ணங்கார்) மீது வெறுப்பு மேலிட்டது.
இதன் விளைவாக அவருடன் ஏற்பட்டிருந்த ஆச்சார்ய சிஷ்ய உறவை அறுத்துக் கொண்டு
‘திருவானைக்காவல்’ ஸ்தலத்தில் இருந்த “அய்யங்காள் ஐயன்” என்ற சைவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார்.
பிறகே தனது தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்கிறவாறு கோயிலொழுகு கூறுகிறது.

———————-

• திருவரங்கம் பெரியகோயிலில் திருமலை நாயக்கர் காலத்தில்
திருமலை மன்னன் பெயரிலோ அல்லது விஜயநகரமன்னர் பெயரிலோ எந்தக் கல்வெட்டும் பொறிக்கப்படவில்லை.
மாறாக மண்டலாதிகாரிகள், சேனைத்தலைவர்கள், தனிகர்கள் ஆகியோருடைய பெயர்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர்(கி.பி.1706-31)ஆட்சிக் காலம் :-
உரிய பருவம் அடைந்த பின் விஜயரங்கசொக்கநாத நாயக்கன் (கி.பி 1706ல்) மதுரை நாயக்க மன்னனாக முடிசூட்டிக்கொண்டான்.
இவனுடைய காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சி சரிவை நோக்கிச் சென்றது.
அரசாள்வதில் நாட்டமில்லாத இந்த நாயக்க மன்னன் அரசாளும் பொறுப்பினை தன்னுடைய மந்திரிகளிடமும் விட்டு வைத்திருந்தான்.
இதனால் நாட்டில் பல முறைகேடுகள் தொடங்கின.
பல முறை பல தலங்களுக்கு தீர்த்தயாத்திரைகளும் சென்றான். இவன் ஸ்ரீரங்கம் கோயிலை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.
இவனுடைய ஆட்சியில் கி.பி.1710 -1720 ம் ஆண்டுகளில் நாட்டில் பஞ்சம் நிலவியதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர்.
இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் புலமை பெற்றிருந்தார்.
இவர் தெலுங்கு மொழியில் “ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்” மற்றும் “துலாகாவேரி மாஹாத்ம்யம்” ஆகிய நூல்களைப் படைத்தார்.

•• இம்மன்னர் பற்றிய ஓர் கதை :- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஓர் சமயம் கைசிக ஏகாதசி சமயம்
‘கற்பூரப்படியேற்றம்’ காண சற்று தாமதித்து வந்தார். இடையில் பெருமாள் மூலஸ்தானம் சென்றிருந்தார்.
அது கண்டு நாயக்க அரசர் மீண்டும் ‘கற்பூரப்படியேற்றம்’ காண விழைந்தார்.
நிர்வாகிகள் இனி அடுத்த வருடம் தான் கற்பூரப்படியேற்ற சேவை. பெருமாள் மூலஸ்தானம் சென்று விட்டால்,
பிறகு திரும்புவது கிடையாது, என்பதும் அரசருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் மனம் வருந்திய அரசர் அடுத்த வருடம் வரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்து
அக்கற்பூரப்படியேற்ற சேவையைக் கண்டு பேரானந்தமடைந்தார் என்று ஒரு கதை கூறுவர்.
இதனை நினைவூட்டும் வகையில் இரண்டாம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்று மேற்குப்பகுதியில்
நாயக்க அரசரும் அவர் குடும்பத்தாரும் தந்தத்தால் ஆன சிலாரூபமாக கருவூல மண்டபத்தில்
கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதற்கான அறிவிப்பு பலகையும் அருகில் உள்ளது.

விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கர் பற்றிய கோயிலொழுகு குறிப்புகள்:-
• விஜயரங்க சொக்கநாத மன்னர் கைசிக ஏகாதசியன்று நம்பெருமாளுக்குச் சாற்றுவதற்காக 360 பீதாம்பரங்களைச் சமர்பித்தார்.
ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுவதற்காக ஆயிரம் செப்புக்குடங்களையும் இவர் காணிக்கையாக சமர்ப்பித்தார்.
திருவரங்கத்திலேயே பலநாட்கள் தங்கியிருந்து நாள், பக்ஷ, மாத, திருவிழாக்களை இவர் கண்டுகளித்து வந்ததாகக் கோயிலொழுகு தெரிவிக்கிறது.

• கி.பி.1707ம் ஆண்டு துரை ரங்காச்சார்யருடைய மகனான ஸ்ரீநிவாஸ தேசிகர் மன்னனுடைய பொருளுதவி கொண்டு
“திருவாராதன காலத்தில் உபயோகத்தில் கொள்ளும்படி தங்கத்தாலான வட்டில்கள், தங்கத்தட்டுகள், படிக்கம்,
காவிரி நீரினைச் சுமந்து வருவதற்கான தங்கத்தாலான குடம் மற்றும் பல பொருட்களோடு,
நம்பெருமாளும், உபயநாச்சிமார்களும், ஸ்ரீரங்கநாச்சியாரும் விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளும் பொருட்டு,
வைரமுடி, விலையுயயர்ந்த ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.
விஜயரங்கசொக்கநாதன் காலத்தில் தான் தற்போதைய ‘கண்ணாடி அறை’ நிர்மாணிக்கப்பட்டது.
சேரனை வென்றான் மண்டபத்திற்கு வடக்கு நோக்கி, துரை ரங்காச்சார்யர் மண்டபத்திற்குச் செல்லும் நடைபாதை சீரமைப்பு செய்யப்பட்டது.

நம்பெருமாளுடைய திருவடி நிலைகளுக்கு கீழே அமைந்துள்ள தங்கத்தகட்டில் விஜயரங்க சொக்க நாயக்கருடைய
உபயம் என்ற தெலுங்கு மொழி (A.R.No.353 of 1950-51)வாசகங்கள் உள்ளன.

• உமிழ் நீரை ஏந்தும் தங்கத்தாலான வட்டில்கள் மூன்றினில் இவை விஜயரங்க சொக்கநாத நாயக்கனால்
கஸ்தூரி ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்டவை என்று (A.R.No.354 of 1950-51)தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

• தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளால் ஆன தங்கப்பபல்லக்கு இம்மன்னராலேயே நம்பெருமாளுக்கு (A.R.No.348 of 1952-53)
சமர்ப்பிக்கப்பட்டதாக தெலுங்கு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
(இப்பல்லக்கு 1813ல் ஜார்ஜ் பிரான்சிஸ் எனும் ஆங்கிலேய கலெக்டரால் பழுது பார்க்கப்பட்டது)

• பெருமாளுக்கு இரவில் பால் சமர்ப்பிக்கப்படும் தங்கக்கிண்ணம் இம்மன்னராலேயே தரப்பட்டதாக (A.R.No.353.1 of 1950-51)
அதிலுள்ள தெலுங்கு வாசகங்கள் மூலம் அறியமுடிகிறது.

நம்பெருமாள் புறப்பாட்டிற்கென தங்கக்குடை ஒன்றும் இம்மன்னரால் (A.R.No.348 of 1950-51) சமர்ப்பிக்கப்பட்டது.
தங்கக்குடையின் பிடியில் 02-04-1734 ஆம் நாளன்று பொறிக்கப்பட்ட வாசகங்கள் ” ஆனந்த வருஷம், சைத்ரமாதம்,
சுக்ல பக்ஷ தசமியன்று ஜிட்டு விசுவநாத நாயனி, விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் இந்தத் தங்கக்குடை சமர்ப்பிக்கப்பட்டது”
மேலும் இதன் பிடியில் இந்தக் குடை1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழுது பார்க்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

“ஶ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்”/ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம் /ஸ்ரீராமசந்த்ர வஜ்ர கவசம் —

October 30, 2021

ஶ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “ஶ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்”
மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது.

ஸ்ரீ வேங்கடேஸ்வர கோஷமிடுவது வஜ்ர காவதம் பக்தருக்கு வைரக் கவசமாகவும்,
ஸ்ரீ வேங்கடேஸ்வரரின் அருளால் அனைத்து வகையான பிரச்சினைகள்,
துரதிர்ஷ்டம் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஶ்ரீ “ஶ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” ஸ்தோத்ரம்

நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வகாரண காரகம்
ப்ரபத்யே வெம்கடேஶாக்யாம் ததேவ கவசம் மம

ஸஹஸ்ரஶீர்ஷா புருஷோ வேம்கடேஶஶ்ஶிரோ வது
ப்ராணேஶஃ ப்ராணனிலயஃ ப்ராணாண் ரக்ஷது மே ஹரிஃ

ஆகாஶராட் ஸுதானாத ஆத்மானம் மே ஸதாவது
தேவதேவோத்தமோபாயாத்தேஹம் மே வேம்கடேஶ்வரஃ

ஸர்வத்ர ஸர்வகாலேஷு மம்காம்பாஜானிஶ்வரஃ
பாலயேன்மாம் ஸதா கர்மஸாபல்யம் னஃ ப்ரயச்சது

ய ஏதத்வஜ்ரகவசமபேத்யம் வேம்கடேஶிதுஃ
ஸாயம் ப்ராதஃ படேன்னித்யம் ம்றுத்யும் தரதி னிர்பயஃ

இதி ஶ்ரீ வெம்கடேஸ்வர வஜ்ரகவசஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

———

நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வகாரண காரகம்
ப்ரபத்யே வெம்கடேஶாக்யாம் ததேவ கவசம் மம

அடியேன் ஸ்ரீ வேங்கடேஸ்வரனை வணங்கி ஆஸ்ரயிக்கிறேன்
இவனே பர ப்ரஹ்மமான ஸ்ரீ மன் நாராயணன்
இவனே ஸர்வ ஸர்வ ஸ்வாமி சேஷி ஸர்வ காரணன் நமக்கு ரக்ஷகமான இவனது வஜ்ரா கவசம் கீர்த்திப்போம்

——-

ஸஹஸ்ரஶீர்ஷா புருஷோ வேம்கடேஶஶ்ஶிரோ வது
ப்ராணேஶஃ ப்ராணனிலயஃ ப்ராணாண் ரக்ஷது மே ஹரிஃ

தாள் ஆயிரம் முடி ஆயிரம் பேர் ஆயிரம் கொண்ட இவனே
ஸமஸ்த இதர விலக்ஷண புருஷோத்தமன்
ஸமஸ்த தாரகனும் நியாமகனும் இவனே

———–

ஆகாஶராட் ஸுதானாத ஆத்மானம் மே ஸதாவது
தேவதேவோத்தமோபாயாத்தேஹம் மே வேம்கடேஶ்வரஃ

வானாய் நீராய் நிலனாய் தீயாய் காற்றாய் நின்ற ஸ்ரீ வேங்கடேஸ்வரா
ஆகாச புத்ரி அடியோங்களை ரக்ஷிக்கட்டும்
தான் அருளிய கரண களேபரங்களை தானே ரக்ஷித்து தனக்காகவே ஆக்கி அருளட்டும்

———-

ஸர்வத்ர ஸர்வகாலேஷு மம்காம்பாஜானிஶ்வரஃ
பாலயேன்மாம் ஸதா கர்மஸாபல்யம் னஃ ப்ரயச்சது

சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ பிரகாரங்களிலும்
அகலகில்லேன் இறையும் என்று உறையும் அலர்மேல் மங்கை திரு மார்பனே
உனது அநந்யார்ஹ சேஷபூதனான அடியேனை நியமித்து ஸத் கார்யங்களிலே ப்ரவர்த்திப்பித்து
உனக்கேயாக ஆள் கொள்ளும் ஈதே அடியேன் வேண்டுவது

————

ய ஏதத்வஜ்ரகவசமபேத்யம் வேம்கடேஶிதுஃ
ஸாயம் ப்ராதஃ படேன்னித்யம் ம்றுத்யும் தரதி னிர்பயஃ

ஸ்ரீ வேங்கடேஸ்வரனை என்றுமே விட்டுப் பிரிக்க முடியாத இந்த வஜ்ர கவச ஸ்துதிகளை
நித்யமாகவே காலையும் மாலையும் பாராயணம் செய்து
நிர்ப்பரராய் ம்ருத்யுவுக்கும் அஞ்சாமல் வாழ்ந்து
திருவடி சேர்ந்து பரம புருஷார்த்த கைங்கர்யம் பண்ணப் பெறுவோம்

—————-

ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

அஸ்ய ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருஷி꞉ அநுஷ்டுப் ச²ந்த³꞉
ஶ்ரீ வேங்கடேஶ்வரோ தே³வதா இஷ்டார்தே² விநியோக³꞉ ।

நாராயணோ ஜக³ந்நாதோ² வாரிஜாஸநவந்தி³த꞉ ।
ஸ்வாமி புஷ்கரிணீ வாஸீ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ ॥ 1 ॥

பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
கந்த³ர்ப கோடி லாவண்ய꞉ கமலாயத லோசந꞉ ॥ 2 ॥

இந்தி³ராபதி கோ³விந்த³꞉ சந்த்³ர ஸூர்ய ப்ரபா⁴கர꞉ ।
விஶ்வாத்மா விஶ்வ லோகேஶோ ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉ ॥ 3 ॥

ஏதத்³த்³வாத³ஶநாமாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²நிர் முக்தோ த⁴நதா⁴ந்யஸம்ருத்³தி⁴மாந் ॥ 4 ॥

ஜநவஶ்யம் ராஜவஶ்யம் ஸர்வகாமார்த² ஸித்³தி⁴த³ம் ।
தி³வ்யதேஜ꞉ ஸமாப்நோதி தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தி ॥ 5 ॥

க்³ரஹரோகா³தி³நாஶம் ச காமிதார்த²ப²லப்ரத³ம் ।
இஹ ஜந்மநி ஸௌக்²யம் ச விஷ்ணு ஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 6 ॥

இதி ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ ஶ்ரீ வேங்கடேஶத்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।

————-

ஸ்ரீ ஏடு கொண்டல வாடா…
ஸ்ரீ வேங்கட ரமணா…
ஸ்ரீ கோவிந்தா கோவிந்தா….

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேக சியாமா கோவிந்தா
புராண புருஷ கோவிந்தா
புண்டரீகாட்சா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா
பசுபாலக ஸ்ரீ கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

துஷ்ட சம்ஹாரா கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரி பாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

வஜ்ர மகுட தாரா கோவிந்தா
வராக மூர்த்தி கோவிந்தா
கோபி ஜன லோல கோவிந்தா
கோவர்த்தன உத்தர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரியா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

மச்ச கூர்ம கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன பரசுராம கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

பலராமா அனுஜ கோவிந்தா
பெளத்த கல்கி தர கோவிந்தா
வேணுகான ப்ரியா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

சீதா நாயக கோவிந்தா
ஸ்ரீதா பரி பாலக கோவிந்தா
தரித்ர ஜன போஷக கோவிந்தா
தர்ம சம்ஸ்தாபக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்சல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

கமலா தளாக்ஷ கோவிந்தா
கமிதா பலதாத கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

பத்மாவதிப் ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபய ஹஸ்த ப்ரதர்சன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

சங்க சக்ர தர கோவிந்தா
சாரங்க கதா தர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்த்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

சகஸ்ர நாமா கோவிந்தா
சரசிஜ நயனா கோவிந்தா
லட்சுமி வல்லப கோவிந்தா
லட்சுமணக்ரஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனா அம்பரதர கோவிந்தா
கருட வாகனா கோவிந்தா
கான லோலா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

வானர சேவித கோவிந்தா
வாராதி பந்தன கோவிந்தா
ஏக சொருபா கோவிந்தா
சப்த கிரீசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

ஸ்ரீ ராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யட்ச தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

வஜ்ர கவச தர கோவிந்தா
வைபவ மூர்த்தி கோவிந்தா
ரத்ன கிரீட கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

பரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜ நாபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த தரகித கோவிந்தா
இக பர தயகா கோவிந்தா
இபராஜ ரட்சகா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா

சேஷ சாயினே கோவிந்தா
சேஷாத்ரி நிலையா கோவிந்தா
ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா…

—————

ஸ்ரீ ராம தாரகம்

அஸ்யஸ்ரீ ஆபதோத்தாரண மஹாமந்த்ரஸ்ய, வாஸிஷ்டமஹ ரிஷி: பங்க்த்திஸ் சந்த:,
ஸ்ரீ ராமசந்த்ர பரமாத்மா தேவதா, ஓம் பீஜம், நம் சக்தி, ராமாய கீலகம்,
ஸ்ரீ ராமசந்த்ர பரமாத்ம பிரஸாத ஸித்தியர்த்தே ஜபே விநியோக.

ஆபதாமப ஹர்த்தாரம், அங்குஷ்டாப்யாம் நம: தாதாரம் ஸர்வஸம்பதாம், தர்ஜனீப்யாம் நம:
லோகாபிராமம், மத்யமாப்யாம் நம: ஸ்ரீராமம், அநாமிகாப்யாம் நம:
பூயோ பூயோ, கனிஷ்டிகாப்யாம் நம: நமாம்யஹம், கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஆபதாமப ஹர்த்தாரம், ஹ்ருதயாய நம: தாதாரம் ஸர்வஸம்பதாம், ஸிரஸே ஸ்வாஹா லோகாபிராமம்,
ஸிகாயை வஷட் ஸ்ரீராமம், கவசாய ஹும் பூயோ பூயோ, நேத்ரத்ரயாய வெளஷட் நமாம்யஹம், அஸ்த்ராய பட்.

த்யாநம்
அயோத்யா நகரே ரம்யே, ரத்ன ஸிம்ஹாஸனே ஸுபே ஸஹஸ்ரதள பத்மாட்யே, ஸோம ஸூர்யாக்னி மண்டலம்
தன் மத்யே சிந்தயேத் ராமம், ஸச்சிதானந்த விக்ரஹம். நீலோத்பலதள ஸ்யாமம், புண்டரீகாய தேக்ஷணம் கோடி ஸுர்ய ப்ரதீகாஸம்,
கோமளா வயோஜ்வலம். ரத்ன க்ரைவேய கேயூரம், ரத்ன கங்கண சோபிதம் ரத்ன குண்டல சோபாட்யம், பூர்ண சந்த்ர நிபாநனம்.

பாதுகா – ரிக்வேத:
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம் ராம்
ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம:ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்.
ஆபதாமப ஹர்த்தாரம், தாதராம் ஸர்வ ஸம்பதாம்,

ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்,
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்,
ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,

ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்,
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்,
ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,

லோகாபி ராமம் ஸ்ரீ ராமம், பூயோ பூயோ நமாம்யஹம்.

ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்,
ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,
ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம், ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:,
ஓம் ஸ்ரீம் ராம் ராம் ராமாய நம:, ராமாய நம: ராம் ராம் ஸ்ரீம் ஓம்.

அநேக ரத்ன ஸம்சின்னம், ஸ்வர்ண யக்ஞோபவீதிநம்
ஸ்ரீவத்ஸ கௌஸ்துபோ ரஸ்கம், வநமால்யா விராஜிதம்.
முக்தா ஹாராதி சோபாட்யம், முத்ரிகா பராலங்க்ருதம்
வஜ்ர வைடூர்ய ரத்னாட்யம் கிங்கிணீ தாம சோபிதம்.
வித்யுத்வர்ணாம்பரதரம், திவ்ய மால்யா நு லேபநம்
நானா மணிகணா கீர்ணம், பாதுகாபரனோஜ்வலம்.

பாதுகா – யஜுர்வேத:

ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,
ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்.

ஆபகாம்ப ஹர்த்தாரம், தாதாரம் ஸர்வ ஸம்பதாம்,

ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,
ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம்
ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,

ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,
ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம்
ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்.

லோகாபி ராமம் ஸ்ரீராமம், பூயோ பூயோ நமாம்யஹம்.

ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஒம் ஸ்ரீம்,
ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம்,
ராம் ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம்,

மஞ்ஜீர நூபுராத் யைஸ்ச, பாத பங்கஜ சோபிதம் சம்பகா சோக புன்னாக, மல்லிகா தாம பூஷிதம்.
துளஸீ குந்த மந்தார, புஷ்பமால்யை ரலங்க்ருதம் பார்ஸ்வயோர் உபயோய்ஸைவ, ஸீதாலஷ்மண ஸோபிதம்..
கோதண்ட பாண்ய தூணீர, த்ருத ஹஸ்தாம் புஜத்வயம் ஸரண்யம் ஸர்வ லோகானாம், த்ருத ஸர்வாக நாஸன:

பாதுகா – ஸாமவேத

ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம்,
ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம்,
ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம்,
ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம்,

ஆபதாமப ஹர்த்தாரம், தாதாரம் ஸர்வ ஸம்பதாம்,

ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம்:,
ராம்:,ராமாய நம:,ஓம் ஸ்ரீம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம்,
ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம்,
ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராம் ராம் ராமாய நம:, ஓம் ஸ்ரீம் ராம்,

ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம்,
ராம் ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம்,
ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம்,
ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம்,

லோகாபி ராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்,
ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம்,
ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம்,
ராம் ஸ்ரீம் ஓம், ராமாய நம: ராம் ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம்
ராம், ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம: ராம்,

பக்த்தார்த்தி பஞ்ஜநம் வீரம், ப்ரும்ஹ ருத்ரேந்து ஸேவிதம்
ஸநகாத்யைர் யோகி பிருந்தை:, ஸுரஸம்ஸைஸ்ச ஸேவிதம் வஸிஷ்ட வாமதேவாத்யை:,
ருஷி ஸம்ஸைஸ்ச பூஜிதம் புராண
புருஷம் தேவம், காரக ப்ரும்ஹ ரூபிணம். நம: கோதண்ட ஹஸ்தாய,
ஸித்தீக்ருத ஸராயச தாடிதாகில தைத்யாய, பக்த துக்கார்த்தி ஹாரிணே.

பாதுகா – அதர்வண வேதம்

ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராம் ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம், சாம் ராம்,
ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம்,
ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:.

ஆபதாமப் ஹர்த்தாரம், தாதாரம் ஸர்வ ஸம்பதாம்,

ராம் ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம்,
ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராம் ராம் ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம்,

ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம் ராம்,
ராமாய நம: ஓம் ஸ்ரீம்,ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம் ராம்,

லோகாபி ராமம் ஸ்ரீராமம், பூயோ பூயோ நமாம்யஹம்.

ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:,
ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம்,
ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:, ராமாய நம: ஓம் ஸ்ரீம் ராம் ராம்,
ராமாய நம: ஓம் ஸ்ரீம், ராம் ராம் ராம் ராம், ஸ்ரீம் ஓம் ராமாய நம:
.
அஸ்ய ஸ்ரீ ராம வஜ்ர கவச மஹாமந்த்ரஸ்ய அகஸ்திய மஹரிஷி:, அநுஷ்டுப் சந்த:,
ஸ்ரீராமசந்த்ர பரமாத்மா தேவதா, ஓம் பீஜம் நம் ஸக்தி:, ஸ்வாஹா கீலகம்,
ஸ்ரீராமசந்த்ர பரமாத்மா பிரஸாத ஸித்தியர்த்தே, வஜ்ரகவசே விநியோகஹ

ராம், அங்குஷ்டாப்யாம் நம:
ரீம், தர்ஜநீப்யாம் நம:
ரூம், மத்யமாப்யாம் நம:
ரைம், அநாமிகாப்யாம் நம:
ரெளம், கனிஷ்டிகாப்யாம் நம:
ரஹ:, கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

ராம், ஹ்ருதயாய நம:
ரீம், ஸ்ரீரஸே ஸ்வாஹா
ரூம், ஸிரிகாயை வஷட்
ரைம், கவசாய ஹும்
ரெளம், நேத்ரத்ரயாய வெளஷட்
ரஹ:, அஸ்த்ராய பட்
நம: கோதண்ட ஹஸ்தாய, ஸித்தீக்ருத ஸராயச தாடிதாகில தைத்யாய, பக்த துக்கார்த்தி ஹாரிணே.

லம், ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம், ஆகாஸாத்மனே புஷ்பாணி பூஜயாமி
யம், வாயுவாத்மனே தூபம் ஆக்ராபயாமி
ரம், வன்ஹியாத்மனே தீபம் தர்பயாமி
வம், அம்ருதாத்மனே அம்ருத மஹா நிவேதனம் நிவேதயாமி
ஸம், ஸர்வாத்மனே ஸமஸ்தோபசார
பூஜா ஸமர்ப்பயாமி.

ஸ்ரீராமசந்த்ர வஜ்ர கவசம்.

ஸ்ரீ ராமாப் பாதுமே மூர்த்தி, தத்பூர்வம் ரகுவம்ஸஜ, தக்ஷிணேமே ரகுபதி, பஸ்சிமே பாது ராகவ:
உத்தரேமே ஹ்ருஷீகேஸ:, பாலம் தரஸ தாத்மஜ: ப்ருவெள தூர்வாதளஸ்யாம:, தயோர் மத்யம் ஜனார்த்தன:
ஸ்ரோத்ரேமே பாது ராஜேந்த்ரோ, திஸௌ ராஜீவ லோசன:, கர்ணௌமே பாது ராஜருஷி, கண்டௌ மே ஜானகிபதி:,
கர்ண மூலே கரத்வம்ஸி, தாலூமே ரகு வல்லப: ஜிஹ்வாம்மே வாக்பதி:கப் பாது, தந்தவல்யௌ ரகூத்தம:,

ஓஷ்டௌ ஸ்ரீ ராமசந்த்ரோமே, முகம்மேது பராத்பர: ஜ்ஞானேந்திரியாணி மே பாது, ராமசந்த்ரஸ்து ஸர்வதா,
கண்டம் பாது ஜகத்வந்ய:, ஸ்கந்தௌமே ராவணாந்தக: ஹநூபாணே தர:ப் பாது, புஜௌ மத்தாரி மர்த்தன:
ஹ்யம் பாது ஹ்ருஷீகேசஹ, ஸாக்ஷிணீ ஸத்ய விக்ரஹ ஊரு சார்ங்கதர:ப் பாது, ஜாநுநீ ஹநுமத் ப்ரிய:
ஜங்கே பாது ஜகத்வந்ய:, பாதம்மேபாது வாமந: ஸர்வாங்கம் பாதுமே விஷ்ணு:, ஸர்வ ஸித்தி மனுமய:

ஜானகீ வல்லப: பாது, ஸப்தாதி விஷயாநபி ப்ருதிவ்யாதீநி பூதாநி,
தத் ஸம்பந்தீன் அயோநிஜ ரோம கூபாண் யஸேஷாணி, பாத ஸுக்ரீவ ராஜ்யத: வாங்மனோ புத்தி ரஹங்கார்,
ஜ்ஞானா ஜ்ஞான க்ருதாநிச ஜன்மாந்தர க்ருதா நீஹ, பாபாநி விவிதாநிச தாநி ஸர்வாணி துக்காத்யாத்,
தத்ர கோதண்ட கண்டன: பாதுமாம் ஸர்வதோ ராம:, ஸார்ங்கபாண தரஸ்ஸதா ஜ்வராபஸ்மார குஷ்டாதீன்,

ஸர்வ ரோகாதி நாஸநஹ ராஜாஸத்ரு பயம் நாஸ்தி, ஆயுராரோக்ய ஸம்பதாம்,
அயோத்யா நகரே ரம்யே, ரத்ன ஸிம்ஹாஸனே ஸுபே
ஸஹஸ்ரதள பத்மாட்யே, ஸோம ஸூர்யாக்னி மண்டலம்
தன்மத்யே சிந்தயேத் ராமம், ஸச்சிதானந்த விக்ரஹம்..

ஆபதாமப ஹர்த்தாாம், தாதாரம் ஸர்வ ஸம்பதாம். லோகாபி ராமம் ஸ்ரீராமம், பூயோ பூயோ நமாம்யஹம்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவரங்க சிலேடை மாலை –ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் —

October 28, 2021

நூறு வெண்பா பாடல்கள் –
முதல் இரண்டு வரிகளால் திருவரங்க சிறப்பையும்
பின் இரண்டு வரிகளால் திரு அரங்க நாதனின் சிறப்பையும் சொல்லும்

ஐந்து பாடல்களுக்கு ஒரு முறை 20 பாடல்களில் மூன்று சிலேடைகளும்
பத்து பாடல்களுக்கு ஒரு முறை பத்துப் பாடல்களில் நான்கு சிலேடைகளும்
நூறாவது வெண்பாவில் மா மணி மகுடம் போல் ஐந்து சிலேடைகளும் கொண்ட திவ்ய பிரபந்தம்

ஸ்ரீ ஸ்வாதி திருநாள் அரச கவிஞரான ஸ்ரீ தென் திருப்பேரை வாசி யான ஸ்ரீ குழைக்காத ஐயங்காரின்
திருப்புதல்வரான கவி ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ஐயங்காருக்கும்
அவரது அருமைத் தேவியாரான ஸ்ரீ குழைக்காத நாய்ச்சியாருக்கும் -1869-திரு அவதரித்த ஸ்வாமி இவர் –
ஸ்ரீ அனந்த கிருஷ்ண ஐயங்கார் -இயல் பெயர் -இவருக்கு
ஸ்ரீ வானமா மலை -25 பட்ட ஜீயர் இவருக்கு அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற
பட்டப்பெயர் சூட்டி அபிமானித்து அருளினார்

ஸ்ரீ பத்ம நாப ஸ்வாமி சந்திரகலா மாலை
ஸ்ரீ திருப்பேரைக் கலம்பகம்
ஸ்ரீ தனிப்பா மஞ்சரி போன்ற பல நூல்களையும் இயற்றி உள்ளார்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் குலத்தரான இவரை கருவிலே திருவுடையவர் என்றும்
ஸ்ரீ மதுரகவி என்றே புகழ வேண்டும் என்பர்

———-

அணி அரங்க மாலை அடி பணிந்து அம் நல் தாளுக்கு
அணி அரங்க மாலை அணிந்தான் -தணிவில்
அனந்த வளத்து தென் பேரையான் றலவ காரன்
அநந்த க்ருஷ்ண பேர்க் கவிஞன் ஆய்ந்து –ஸ்ரீ உ வே சுவாமிநாத ஐயர் –1900-

ஆலை யுறு வான் தாட்க்கு அரங்கச் சிலேடை வெண்பா
மாலை யன்பாய்ச் சூட்டி இசை மன்னினான் -ஆலையுடன்
தென்ன நந்த மாவருக்கை சேரும் திருப்பேரை
மன்னன் அநந்த கிருஷ்ண கவி மான் –இராம நாத புரம் ஸமஸ்தான வித்வான் ப்ரஹ்ம ஸ்ரீ பிச்சு ஐயர் அவர்கள் -1904-

————-

திருவரங்க மாலுக்குச் சிலேடைத் தார் சாத்திப்
பெரு வரங்கள் நாளும் பெறவே –வரு கவிகள்
கொம்பேறித் தாவும் குருகூர் மகிழ் மாறன்
அம்போ ருகத்தாள் அரண் –1-காப்பு வெண்பா

சிலேடைத் தார்-சிலேடை மாலை
கவிகள் -குரங்குகள்
குருகூர் -ஆழ்வார் திரு நகரி
மகிழ் -மகிழம்பூ மாலையை யுடைய
மாறன் -நம்மாழ்வார்
அம்போருகம்–தாமரை
அரண் -காப்பு –

அம்போ ருகத்தாள் –தாமரையில் வீற்று இருப்பவள் –திருமகள் -கலைமகள் இருவருக்கும் பொருந்தும்
அரண் -நம்மாழ்வார் -திரு மக்கள் காலை மக்கள் மூவருமே காப்பாவார்கள்
குருகூர் மகிழ் மாறன் -மால் -தன் -அம்போ ருகத்தாள் -ஆழ்வார் திருநகரியை உகந்து கொண்டு அருளிய
ஸ்ரீ ஆதி நாதராது பாதார விந்தம் என்றுமாம் –

——————

மன்னும் இதயத்தில் வைத்தேன் சிலேடை யதாய்
உன்னு பதங்கள் உதிக்கவே –மின்னும்
மதிள் மருவு தண் அரங்க மாலின் அருள் வாய்ந்த
பதின்மர் அரும் பூம் பதம் –2-பதின்மர் வெண்பா

பதங்கள் -சொற்கள்
பதம் -திருவடி
பதின்மர் பதங்களையும் இதயத்தில் வைத்தலால் –
உன்னிய பதங்கள் எல்லாம் -பல பொருள் தரும் சிலேடையாய் உதிக்கும் என்கிற நயம் காண்க
பதின்மர் -ஆழ்வார் மதுரகவியார் நீங்கலாக உள்ள ஆழ்வார்கள்

———-

நாடியே நான் பணிந்தேன் நன்கு அருள்வாய் மல்லி வள
நாடியே கோதாய் நறுங்குழல் நீ -சூடிய நன்
மாலை அணி அரங்க மா மணவாளற்கு உவந்து
மாலை சொல நின் தாள் மலர் –3-ஆண்டாள்

மல்லி வள நாடி–மல்லி வள நாட்டுக்கு உரியவள் -வில்லி எனும் வேடனது தாயான மல்லி என்பவள்
ஆண்ட நாடு மல்லி நாடு எனப் பெயர் பெற்றது
ஆண்டாள் நீ சூடிய மாலையை ஏற்றவன் ஆதலின் நின் தாள் மலர் பணியும் நான் உவந்து சூடும்
இப் பா மாலையை ஏற்றுக் கொள்வான் என்று ஆசிரியர் கூறும் பொருள் நயம் காண்க –

————-

இக் கோன் பிதாவாம் எழில் அரங்கர் அண்டர் இறைஞ்ச சு
இக் கோன் அடி புனையும் இம் மாலை -தக்கோர்
மதுர கவி என்றே மதிப்பான் அமைத்தேன்
மதுர கவியாரை மனத்து –4-மதுர கவி யாழ்வார்

இக் கோன் பிதா-இக்கு -கரும்பு -வில்லை யுடைய மன்மதனுக்குப் பிதா -சாஷாத் மன்மத மன்மதன்
இக்கோன் -இந்தப்பெருமான்
அண்டர்-தேவர் என்றும் இடையர் என்றும்
அண்டர் இறைஞ்சு இக் கோன் –ஆயர் வணங்கும் இவ்வாயர் தலைவன்
மதுர கவி என்றே மதிதித்து தக்கோர் எல்லாம் பாராட்ட மதுர கவி ஆழ்வாரை மனத்து அமைத்தேன்-என்கிறார்

———

சீர் அங்கம் ஒன்றும் தெரியா மட நெஞ்சே
சீர் அரங்கற்கு இம் மாலை செப்ப எணில் -தூர
மதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –5–உடையவர்

சீர் அங்கம் -சிறப்பு வாய்ந்த ஆறு அங்கங்கள் –சீர் முதலிய யாப்பின் உறுப்புக்கள் என்றுமாம் –
தூரமதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர் -வெகு தூரத்தில் உள்ள சந்திரனிடம் பொருந்துமாறு
தாழை வளர்ந்து ஓங்கும் ஸ்ரீ பெரும்பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –எதிராஜர் உடையவர் இணை அடிகளையே ஸ்துதித்துப் போ

————-

அல்லும் பகலும் அனுதினமும் என்னெஞ்சே
சொல்லரிய பேர் இன்பம் தோய்வதற்கா -நல்ல
குணவாள மாந்தர் குழாம் ஏத்தும் எந்தை
மணவாள மா முனியை வாழ்த்து –6- மா முனிகள்

————-

சென்னிக்கு அணி மலராம் சிந்தை அளிக்கு அம்புயமாம்
மன்னு பவக் கடற்கோர் வங்கமதாம் –தன்னின்
பதியோடு அலர் மங்கை பற்று வர மங்கைப்
பதி வாழ் எதியின் பதம் –7- ஆச்சார்ய ஸ்துதி

அம்புயமாம் –தாமரை மலராம்
வங்கமதாம் –மரக்கலமாம்
அலர் மங்கை தன் இன் பதியோடு பற்று வர மங்கைப் பதி -மிதுனமாய் உகந்து வீற்று இருந்து அருளும்
ஸ்ரீ வரமங்கை பதி -ஸ்ரீ நான்கு நேரி –
வாழ் எதியின் பதம் –எதி ஸ்ரீ வானமா மலை ஆதீன கர்த்தரும் இந்நூல் ஆசிரியரின் ஞான ஆச்சார்யரான
ஸ்ரீ ராமானுஜ ஸ்வாமிகள் -அஷ்ட திக் கஜங்களில் முதல்வர்

எதியின் பதம் சிரத்தில் சூடும் மலராகவும்
மனமாகிய வண்டுக்கு ஏற்ற தாமரையாகவும்
பாவமாகிய கடலைக் கடத்தற்கு ஏற்ற மரக்கலமாகவும் -விளங்கு கின்றது -என்கை –

———-

நூல் அருமை சற்றும் நுகராத புன் மதியேன்
கோலச் சிலேடை வெண்பாக் கூறுவது –பாலகர் தாம்
பாண்டி வரைந்து பரவையை வட்டாடும் கால்
தாண்டுவது போலாம் தலத்து –8- அவை அடக்கம் –

பாண்டி வரைந்து வட்டாடுதல் -பாண்டி ஒரு வித விளையாட்டு –
அவ்விளையாட்டுக்கு உரிய அரங்கினை வகுத்து -அதில் கண்ட வாய் -சமுத்திரம் -காடு எனப்பெயர் இட்டு வட்டு ஆடுதல்
அரங்கு இன்றி வட்டாடி அற்றே -திருக்குறள்
அல்ப மதியையுடைய நான் அழகிய சிலேடை வெண்பாக்களைக் கூறி விடுவேன் என்பது
பாலகர் பாண்டி வரைந்து விளையாடுகையில் சமுத்திரம் தாண்டினேன் என்று கூறுதலை ஒக்கும் -என்று அடக்கத்தை அறிவிக்கிறார் –

————-

திங்கள் நுதல் ஆயிழையார் தேங்கூந்தல் கொங்கை நடை
அங்கனமே நேரும் அரங்கமே –துங்க வகிச்
சக்கரத்தான் அனத்தான் தனி வாரி சக்கரத்தான்
சக்கரத்தான் அனத்தான் தலம் –1-மூன்று சிலேடைகள்

திங்கள் நுதல் ஆயிழையார் -சந்திரனை ஒத்த நெற்றியை யுடைய பெண்கள் உடைய
தேங்கூந்தல் அங்கனமே நேரும் -அம் கனமே நேரும் – -அழகிய கூந்தலானது ஜலத்தை யுடைய மேகத்தை ஒக்கும்
கொங்கை அங்கனமே நேரும்–அழகிய பாரத்தைப் பொருந்தும்
நடை அங்கனமே நேரும்–அங்கு அனமே நேரும் -அனம்-அன்னம் – -நடையோ அன்னத்தை நிகர்க்கும்
துங்கம் -உயர்வு
வகிச் சக்கரத்தான் அனத்தான்-அகி சேஷம் -சக்கரம் -மலை –சேஷாசலத்தை இருப்பிடமாகக் கொண்டு அருளுகிறவன்
தனி வாரிசக் கரத்தான் –ஒப்பற்ற -வாரிசாம் -தாமரை போன்ற திருக்கரங்கள் யுடையவன்
சக்கரத்தான் நத்தான் –சக்ராயுதமும் சங்கும் ஏந்தியவன் –
தலம் –இடம்

—————-

செம் பொன் மதிள் புறத்தும் தேர் வீரர் தூணியிலும்
அம்பு அகழி சேரும் அரங்கமே -பைம் பொழில் வாய்
செல் நகரான் குன்றான் திருக் குருகையான் குடந்தைப்
பொன்னகரான் குன்றான் புரம் –2-

செம் பொன் மதிள் புறத்தும் அம்பு அகழி சேரும்-நீர் நிறைந்த அகழி
தேர் வீரர் தூணியிலும் அம் பகழி சேரும்-அழகிய பாணங்கள் சேரும்
அரங்கமே –
பைம் பொழில் வாய் செல் நகரான் குன்றான் -சோலையின் இடத்து மேகம் சஞ்சரிக்கும் ரிஷப கிரியை யுடையவன்
திருக் குருகையான்
குடந்தை பொன்னகரான் குன்றான் -திருக்குடந்தைப் பதி குறையாதவன்
புரம் –பட்டணம்

——————

கொங்கு ஏய் தடத்துக் குமுத மலர் ஒண் புரிசை
அம் கேழ் மருவும் அரங்கமே -மங்கா
இருக்கு அந்தரத்தார் எழில் கந்த ரத்தார்
உருக் கந்தரத்தார் உவப்பு –3–

கொங்கு ஏய் தடத்துக் -வாசனை பொருந்திய தடாகம்
குமுத மலர்
ஒண் புரிசை -அழகிய மதிள்
அம் கேழ் மருவும் -அழகிய நிறத்தைப் பொருந்தும்
அரங்கமே –
இருக்கு அந்தரத்தார் -இருக்கு -வேதம்
எழில் கந்த ரத்தார் –காந்தாரம் -கழுத்து
உருக் கந்தரத்தார் -திரு மேனி மேகத்தை ஒத்தவர் -கந்தரம் -மேகம்

————–

செம்மைத் தெருவினிலும் சேயிழையார் கைகளிலும்
அம்மனைகள் காணும் அரங்கமே -இம்மகியில்
வில்லாண்டு வந்தார் விமலன் புதுவையர் கோன்
பல்லாண்டு உவந்தார் பதி–4–

தெருவினிலும் அம்மனைகள் காணும்–தெருவினில் அழகிய வீடுகள் காணப் பெறும்
சேயிழையார் கைகளிலும் அம்மனைகள் காணும்–கைகளில் அம்மனைக் காய்கள் காணப் பெறும்

————

சித்திர நற் கோபுரங்கள் செல் வரிலம் மாதரிடை
அத்தம் திகழும் அரங்கமே -பத்தர் உளம்
தங்க விமானத்தார் தனிச் சீர்ப் ப்ரணவமாம்
தங்க விமானத்தார் தலம்–5- மூன்று சிலேடைகள்

கோபுரங்கள் அத்தம் திகழும்-ஹஸ்த நக்ஷத்ரத்தை அளாவி நிற்கும்
செல்வர் இல்லம் அத்தம் திகழும்-பொருள் செல்வத்தால் பிரகாசிக்கும்
மாதரிடை அ தந்து இகழும் –மென்மையினால்-நுட்பத்தால் – பஞ்சு நூலையும் பழிக்கும்
பத்தர் உளம் தங்கு அவிமானத்தார்-அபிமானத்தை யுடையவர்
ப்ரணவமாம் தங்க விமானத்தார் –தங்க மயமான ப்ரணவகார விமானத்தை யுடையவர்

————

மங்காத பொன்னறையில் மா மணி மின் மாட மதில்
அங்கே தனம் சேர் அரங்கமே –இங்கு ஏழு
திண்ண விடை முன் பொறுத்தார் சிற்றனையால் வற் கலையை
வண்ண விடை முன் பொறுத்தார் வாழ்வு –6-

மங்காத-குறையாத
பொன்னறை–பொக்கிஷம்
பொன்னறையில் அம் கேதனம் சேர் மின் மாட மதில் –மின்னுகிற மாடங்களிலும் மதில்களிலும் கொடி சேர்ந்து -கேதனம் -கொடி
ஏழு திண் அம் விடை முன் பொறுத்தார் -நப்பின்னைப் பிராட்டிக்காக ஆன் ஏறு ஏழு வென்றான்
முன்பு ஓறுத்தார் –வலிமை அழித்தார்
வற் கலை-மரவுரி
சிற்றனை-கைகேயி
வண்ணம் இடை முன் பொறுத்தார் -அழகிய இடுப்பிலே தரித்து அருளினார்

————-

கஞ்ச மலர் சேர் கழனியிலும் வேள் இடத்தும்
அஞ்சம் படுக்கும் அரங்கமே –வஞ்சகர்கள்
வந்திக்கத் தாமதியார் மா நிலத்தில் அன்பரிடம்
சந்திக்கத் தாம் மதியார் சார்பு –7–

கஞ்சம் -தாமரை
கழனி-வயல்
வேள் -மன்மதன்
கழனியிலும் அஞ்சம்-அன்னம் -படுக்கும்
வேள் இடத்தும் அஞ்சு அம்பு அடுக்கும் -பஞ்ச பாணங்கள்
வந்திக்க–வணங்க -தாம் மதியார்
தாமதியார் -தாமஸிக்க மாட்டார் -விரைந்து எழுந்து அருள்வார்

————

அங்க மறை யோது முதிர் அந்தணரும் ஆடவரும்
அங்கயனை மானும் அரங்கமே –பொங்கும்
அரங்கிலே சங்கெடுத்தான் ஐவருக்க நேகந்
தரங்கிலே சங்கெடுத்தான் சார்பு –8–

அங்க மறை யோது-ஆறு அங்கங்களையும் வேதங்களையும் யோதும்
முதிர் அந்தணரும் -அறிவால் முதிர்ந்த வேதியர்
அந்தணரும் அங்கயனை மானும் -பிரம தேவனை ஒக்கும்
ஆடவரும் அங்கயனை மானும் -ஆடவரும் அங்கசனை -மன்மதனை ஒக்கும்
அரங்கமே –யுத்த அரங்கம் -போர்க் களம்
சங்கெடுத்தான்-பாஞ்ச ஜன்யத்தை முழங்கியவன்
ஐவர் -பாண்டவர் ஐவர்
அநேகம் தரம் கிலேசம் கெடுத்தான்-பல தடவைகள் துயரங்கள் தீர்த்து அருளிய பஞ்ச பாண்டவ ஸஹாயன்

——————

ஊனமிலா முல்லையரும் ஒண் செல் வருமன்பால்
ஆனை வளர்க்கும் அரங்கமே –தானவரை
கொன்றவிரும் செங்கதையான் கோ மகனா வந்து வனம்
சென்ற இரும் செங்கதையான் சோர்வு –9-

ஊனமிலா -குற்றம் இல்லாத
முல்லையரும் –முல்லை நிலத்திற்கு உரிய ஆயர்
மன்பால் ஆனை வளர்க்கும் –மிகுதியான பாலைத் தரும் பசுவை வளர்க்கும்
ஒண் செல்வரும் அன்பால் ஆனை வளர்க்கும் – அழகிய செல்வந்தர்களும் யானையை வளர்க்கும்
அரங்கமே —
தானவரை –அஸுரரை
கொன்று அவிரும் செங்கதையான் –ஸம்ஹரித்து விளங்கா நிற்கும் இரத்தம் தோய்ந்த சிவந்த கதை ஆயுதத்தை யுடையவன்
கோ மகனா வந்து -சக்கரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்து அருளி
வனம் சென்ற இரும் செங்கதையான் –தண்டகாரண்யம் சென்ற பெரிய அழகிய வரலாறு -ஸ்ரீ ராமாயணம்-

——————

மங்கையர் தம் மார்பு கரம் வாழ் உயிர் மேலோர் ஆயுள்
அங்கம் சுகம் கொள் அரங்கமே –இங்கு இணையில்
மா சுபத்திரைக்கு அணனார் வண் தாமரைக் கணனார்
மாசு பத்திரைக் கணனார் வாழ்வு –10- நான்கு சிலேடைகள்

மார்பு அம் கஞ்சுகம்-கச்சு கொள்ளும்
கரம் அங்கு அஞ்சுகம் -கிளியைக் -கொள்ளும்
வாழ் உயிர் –ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் செய்யும் நாள் பேறு பெற்ற பிராணிகள் -அங்கம் சுகம் கொள்ளும் -தேக ஆரோக்யத்தைப் பொருந்தும்
மேலோர் ஆயுள் -ஞானிகளின் பிராயம் -அங்கம் சுகம் கொள் -அங்கு அஞ்சு யுகம் கொள்ளும்
இணை -உவமை
மா -அழகு -சுபத்திரைக்கு அண்ணனார்
வண் தாமரைக் கண்ணனார்
மா சுபம் திரைக் கண்ணனார் -பெரிய மங்களகரமான ஷீராப்தியை யுடைய கண்ண பிரான்
கண்ணனார் -கடல் இடமாகக் கொண்டவர்

———-

பொன்னார் புரிசைகளும் பூம் பொழிலும் நீரகழும்
அன்னாக மேவும் அரங்கமே -ஒன்னாருக்கு
அஞ்சாம கானத்தான் அன்று அடைந்த கானத்தான்
அஞ்சாம கானத்தான் ஆர்வு –11–மூன்று சிலேடைகள்

புரிசைகளும் அன்னரக மேவும்-அம் நரக மேவும் -மதிள்கள் வானத்தை அளாவும்–புரிசைகள் மலையை ஒக்கும் எனவுமாம்
பொழிலும் அன்னாக-அந் நாகம் – மேவும்-சோலைகளும் அழகிய புன்னை மரங்களைப் பெற்று இருக்கும்
நீர் அகழும் அன்னரக-அ நாக – மேவும்-மதில்களைச் சூழ்ந்த கிடங்கும் -பாம்பு -சர்ப்ப லோகமாகிய பாதாளம் ஆகும்
ஒன்னார் -பகைவர்
அஞ்சாம கானத்தான்-அஞ்சா மகான் நத்தான் -மகான் -பெரியோன் -நத்தான் -சங்கை ஏந்தினவன் -நந்து -சங்கு -வலித்தல் விகாரம் பெற்றது
அன்று அடைந்த கானத்தான்-காட்டை யுடையவன்
அஞ்சாம கானத்தான்-அழகிய சாம வேத கீதத்தை யுடையவன்

————

பண்டை வயலில் பயிரிடு முன்னும் பின்னும்
அண்ட சங்கள் வைகும் அரங்கமே –கண்ட கர்க்குத்
தாங்கைச் சரச மன்னார் தண் புதுவை மான் கமலத்
தேங்கைச் சரச மன்னார் சேர்வு–12–

பயிரிடு முன்னும் அண்டு அசங்கள் வைகும் -நெருங்கிய ஆடுகள் தங்கும்-
வயலில் உரத்துக்காக ஆட்டுக் கிடைகள் வைத்தல் வழக்கம்
பயிரிடு பின்னும் அண்டசங்கள்-பறவைகள் – வைகும்
கண்டகர்க்குத்-அசுரர்களுக்கு – தாம் கைச்ச -கைத்த -ரசம் அன்னார்
புதுவை மான்-ஆண்டாள் – கமலம் தேம் கை சரச மன்னார் –ரெங்க மன்னார்

————-

சிங்கார நல் வணிகர் செல்வர் துயில் இடங்கள்
அங்காடி மேவும் அரங்கமே -வெங்கானில்
சேர்ந்த விரதத்தினார் திண் விசயன் சாரதியா
ஊர்ந்த விரதத்தினார் ஊர் –13-

வணிகர் அங்காடி-கடைவீதி -மேவும்
துயில் இடங்கள் அங்கு ஆடி-நிலைக் கண்ணாடி – மேவும்
வெங்கானில் சேர்ந்த விரதத்தினார் -ஸ்ரீ ராம அவதாரம்
விசயன் சாரதியா ஊர்ந்த ரதத்தினார்-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

————

வாசமுறு யோகியரும் வாழ்த்து மறை ஒலியும்
ஆசை யகலும் அரங்கமே -வாச யுரங்
கூடு திருப்பாவை யினான் கோதை எனும் சோழியப் பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று –14-

வாசமுறு யோகியரும் ஆசை யகலும்-ஆசை மூவாசைகள் நீங்கும்
வாழ்த்து மறை ஒலியும் ஆசை யகலும்–வேத கோஷமும் திக்குகளை வியாபிக்கும்
வாச யுரங் கூடு திருப்பாவை யினான் -உரம் வாசம் கூடும் -துளவ சந்தனாதி மணம் பொருந்திய உரத்தில் கூடு
திரு மார்பின் கண் வசித்தலைப் பொருந்திய திரு மகள் ஆகிய அழகிய பெண்ணை யுடையவன்
கோதை எனும் சோழியப் பெண்-ஆண்டாள் -சோழியர் குலத்தில் உதித்த பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று -பாடிய திருப்பாவை எனும் திவ்ய பிரபந்தத்தை யுடையவன் விரும்பும் இடம்

————-

வாழு மடவார் கரம் தேர் வண்கா விரி நதி பொன்
ஆழி மருவும் அரங்கமே -பாழி மிகும்
தானவரை முன் பரித்தார் தண்ட டத்தில் அன்று அழைத்த
தானவரை முன் பரித்தார் சார்பு –15–மூன்று சிலேடைகள்

மடவார் கரம் பொன் ஆழி-தங்க மோதிரம் – மருவும்
தேர் பொன் ஆழி -அழகிய சக்கரங்கள் – மருவும்
நதி பொன் ஆழி-திரு மகள் பிறந்த கடலை – மருவும்
பாழி-வலிமை
தானவரை முன் பரித்தார் -முன்பு அரித்தார் -அசுரரை வலி அழித்தார் -முற்காலத்தில் ஸம்ஹரித்தார்
தண் தடத்தில் அன்று அழைத்த தான வரை-ஸ்ரீ கஜேந்திராழ்வானை-
தானம் வரை -மத ஜலத்தை சொரிகின்ற மலையாகிய யானை
முன் பரித்தார் -அந்நாளில் காத்து அருளினார் –

————-

மங்குல் தவழ் சோலையிலும் மாளிகை சார் பஞ்சரத்தும்
அங்கிளைகள் மேவும் அரங்கமே -பொங்கும்
பயமா மலைக்குடையான் பண்டாய ரேத்து
நயமா மலைக்குடையான் நாடு –16–

மங்குல் -மேகம்
சோலையிலும் அங்கிளைகள்-கோப்புகள் – மேவும்
பஞ்சரத்தும் -பஞ்சரம் கூடு கிளிக்கூண்டு -அங்கிளைகள் -அழகிய கிளிகள் -மேவும்
பயமாம் அலைக்குடையான்–பயம் பால் -அலை கடல் –திருப்பாற் கடலுக்கு உரிமை யுடையவன்
ஆயர் -இடையர்
நயம் மா மலை குடையான் -அழகான கோவர்த்தன மலையைக் குடையாக யுடையவன் –

———–

வஞ்சியர் தம் கண்ணிணையும் மாடமுறு மந்திரமும்
அஞ்சனங்கள் ஆரும் அரங்கமே -தஞ்சிகையில்
தோய்ந்த கலா பத்தார் துகள் மாதுலனான் முன்
வாய்ந்த கலா பத்தார் மனை –17–

வஞ்சியர் -வஞ்சிக் கொடி போன்ற மகளிர்
மந்திரம்-மாளிகை
கண்ணிணையும்–அஞ்சனங்கள்-மை – ஆரும்-பொருந்தும்
மந்திரமும் அஞ்சனங்கள்-அம் ஜனங்கள் – ஆரும் -நிறையும்
சிகை -குஞ்சி
தோய்ந்த கலா பத்தார் -அணியப்பெற்ற மயில் இறகை யுடையவர்
மாதுலனால் -கம்சனால்
முன் வாய்ந்து அகல் ஆபத்தார்–முதலில் ஏற்பட்டுப் பின் எளிதில் நீங்கிய ஆபத்துக்களை யுடையவர் –

———-

தங்க நெடும் கேதனமும் சாரும் பல தருவும்
அங்கனி யோடேயும் அரங்கமே -துங்க
அருவரை முன் அங்கு எடுத்தார் அன்று மல்லரான
இருவரை முன்னம் கெடுத்தார் இல் –18-

கேதனம்–துகில் கொடி
கேதனமும்-அங்கனி யோடே-கன்யா ராசியோடு —
தருவும் அங் கனி யோடே-அழகிய பழங்களுடன்
துங்கம் -உயர்வு
வரை -கோவர்த்தன கிரி -முன் அங்கு எடுத்தார் -குடையாகப் பிடித்தவர்
மல்லர் இருவர் -சாணூர முஷ்டிகர் -இருவரை முன்னம் கெடுத்தார்-ஸம்ஹரித்தார்

————

பேரா விலங்கையர் கோன் பீமன் நளன் நேர் மடையர்
ஆரா தனம் செய் அரங்கமே -சீர் ஆயர்
வின் மந்திர முடையார் வெண்ணெய் யுண்டார் எஞ்ஞான்றும்
தன் மந்திரமுடையார் சார்பு –19–

பேரா -அழியாத
விலங்கையர் கோன் –விபீஷணன் -ஆரா தனம் செய் அரங்கமே
பீமன் நளன் நேர் மடையர்-மடைப்பள்ளிக் காரர்
பீமன் நளன் இருவரும் பாக ஸாஸ்த்ர விற்பன்னர்
ஆராதனம் -திரு அமுது வகைகள்
வில் -ஒளி
மந்திரம் –வீடு
முடை நாற்றம் ஆர் வெண்ணெய் யுண்டார்
தன்மம் -தர்மம்
திரம் யுடையார் -ஸ்திரமாக யுடையார்

————–

ஓங்கு பெரும் செல்வர் ஒண் மஞ்சம் காவிரி நெல்
ஆங்கு திரை மேவும் அரங்கமே –பூங்கமல
வாசமா தங்கத்தான் வந்தருள் மா தங்கத்தான்
வாசமா தங்கத்தான் வாழ்வு –20—நான்கு சிலேடைகள்

செல்வர்-ஆம் குதிரை மேவும்
ஒண் மஞ்சம் -ஆங்கு திரை-திரைச்சீலை – மேவும்
காவிரி ஆங்கு திரை -அலை -மேவும்
நெல் ஆம் குதிர் ஐ மேவும்-குதிர் -நெல்லைச் சேமித்து வைக்கும் குலுக்கை
பூங்கமல வாசம் மாது அங்கத்தான்
வந்தருள் மா தங்கத்தான் –இரங்கிக் காத்து அருளப் பெற்ற கஜேந்திரனை யுடையவன்
வாசம் -வஸ்திரம் -மா தங்கத்தான் -அழகிய பீதாம்பரத்தை யுடையவன் –

—————

மச்சமுறும் பண்ணை மத வாரணம் இரதம்
அச்சங்கள் தரும் அரங்கமே –இச்சை கொளும்
அம் பவள வாயினான் அம் புதியில் மீனுருவா
அம் பவள வாயினான் அயர்வு –21-

பண்ணை அச்சங்கள் தரும்- அச் சங்கு அடரும் -நெருங்கும்
மத வாரணம் -மத யானை -அச்சங்கள் தரும்
இரதம் அச்சங்கள் தரும் –அச்சு அங்கு அடரும் –
அம் பவள வாயினான்
அம் புதியில் மீனுருவா -கடலில் மத்ஸ்ய அவதாரம்
அம் பவள வாயினான் -அம்பு அ அளவு ஆயினான் -தண்ணீரின் அளவாய் வளர்ந்தவன் –

—————

வாம் பரி செல் வீதி வணிகரும் நூல் ஆய்வோரும்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
காவனவின் முன்பு ஓசித்தான் அன்று அமுது மா விதுரன்
பாவனவின் முன்பு ஓசித்தான் பற்று –22–

வாம் பரி செல் வீதி -தாவுகின்ற குதிரைகள் செல்லுகின்ற வீதிகளில்
வீதிகளில் வணிகரும் ஆம் பொருளை எண்ணும்-தேடும் பொருள்களை ஓன்று இரண்டு என்று என்னும் வீதிகளில்
நூல் ஆய்வோரும் ஆம் பொருளை எண்ணும் -நூலில் பொருந்திய விழுமிய கருத்துக்களை சிந்திக்கின்ற
சாம்பன் -சிவன்
கைக்கு ஆ வன வில் முன்பு ஓசித்தான் –வனம் அழகு -ஒசித்தல் -முறித்தல் -சிவ தனுஸ்ஸை முறித்தவன்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
மா விதுரன் பாவன இல் முன் அன்று அமுது பொசித்தான் -புசித்தவன் –
பற்று –

————–

ஊரிலுறும் பொன்னளியும் ஊடு மட வாரணியும்
ஆர மதில் மின்னும் அரங்கமே -சேரன்
விருத்தங்களுள்ளான் மெல்லடி போற்றாதார்
வருத்தங்களுள்ளான் மனை –23–

பொன்னளியும் -அழகிய வண்டுகளும்
ஆர மதில் மின்னும்-ஆடவரும் மகளிரும் அணிந்த பூ மாலைகளிலே விளங்கும்
மட வார் அணியும் ஆர மதில் மின்னும் -மிகுதியாக மதிள்களிலே பிரகாசிக்கும்
சேரன் விருத்தங்களுள்ளான் -குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி விருத்தப் பாக்களின் கண் எழுந்து அருளி உள்ளவன்
மெல்லடி போற்றாதார் வருத்தங்கள் உள்ளான் -நினையாதவன்

———-

செம்பொன் நெடும் கோட்டைகளும் கிண் தனுக்கை வேட்டுவரும்
அம்புலியை நாடும் அரங்கமே -உம்பர்
உரக மட மானார் ஒருங்கே யுவப்ப
வரக மட மானார் மனை –24-

கோட்டைகளும் அம்புலியை நாடும் -சந்திரனை அளாவும்
வேட்டுவரும் அம் புலியை நாடும்-தேடித் திரியும்
உரக மட மானார்-நாக கன்னியர்
உம்பரும் மானாரும் ஒருங்கே யுவப்ப
வர கமடம் ஆனார் -மேன்மை வாய்ந்த கூர்மாவதாரம் எடுத்து அருளினார் -கமடம் -ஆமை

————-

தம்புரத்தில் ஆசை யற்றோர் சார்ந்த கொடி கோபுரங்கள்
அம்பர மேனாடும் அரங்கமே -வம்பு மலர்க்
காமனைக் கண் முன்னட்டான் கையேற் பொழித்தான் விண்
காமனைக் கண் முன்னட்டான் காப்பு –25- மூன்று சிலேடைகள்

தம்புரத்தில் -தம் சரீரத்தில்
ஆசை யற்றோர் -தவ முனிவர்
அம்பர மேனாடும்-அம் பரம் மேல் நாடும் -அழகிய பரலோகத்தின் மேல் விருப்பத்தைச் செலுத்தும்
கொடி -அம்பரம் துணி மேல் நாடும்
கோபுரங்கள் அம்பரம் -ஆகாயம் – மேல் நாடும்
வம்பு -வாசனை
காமனைக் கண் முன் அட்டான் -மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டு எரித்த சிவன்
கையேற்பு -கையினால் யாசித்தால்
விண் கா -பாரிஜாத விருக்ஷம்
மனை கண் முன்னட்டான் -ஸ்ரீ சத்யபாமா தேவி திரு க்ரஹத்தின் முன் நட்டு அருளினவன் –

———-

ஏறு இரதப் பொன் நேமி ஏர் விரசைக் காவிரியாம்
ஆறு அச்சு உழி மேவு அரங்கமே -பேறு மிகும்
தேசு அங்கம் மழிசையார் சீரப்பாவார் வேய் தனில் வாய்
வாசம் கமழ் இசையார் வாழ்வு –26-

ஏறு இரதப் பொன் நேமி -உருளை -ஆறு அச்சு உழி மேவு -வழிகளில் அச்சின் கண் மேவு
ஏர் விரசைக் காவிரியாம் ஆறு அச்சு உழி மேவு -அ சுழி மேவு
தேசு அங்கம் மழிசையார் –திருமழிசை ஆழ்வார்
வேய் -மூங்கில்
வாய் வாசம் கமழ் இசையார் -வேணு கானத்தை யுடையவர்

———-

சாலத் திகழ் மணத்துத் தையலர் கையும் பொழிலும்
ஆலத்தி காணும் அரங்கமே –பாலத்
துருவனை முன்னம் களித்தார் தொல் வீடணனைச்
செருவனை முன்னம் களித்தார் சேர்வு –27–

சால-மிகுதியாக
தையலர் கையும் ஆலத்தி-நீராஞ்சனம் – காணும்
பொழிலும் ஆலத்தி -ஆல் அத்தி -ஆல் அத்தி மரவகைகள் – காணும்
பாலத் துருவனை முன்னம் களித்தார்
தொல் வீடணனைச் -செருவனை முன்னம் -போர் புரிவதன் முன்னம் -களித்தார்-அபயம் அளித்து ரஷித்தார் –

—————-

காரண முன்னூலினரும் கா முகரும் என்றும் சீர்
ஆரணம் கைக் கொள்ளும் அரங்கமே -பார் அளந்து
பீன வடிவானார் பிரமற்குக் காட்டினார்
ஏன வடிவானவர் இடம் –28-

முன்னூலினரும் -பழைய ஸாஸ்த்ரங்களை உணர்ந்த பெரியோர்
நூலினரும் என்றும் சீர் ஆரணம் -வேதம் -கைக் கொள்ளும்
கா முகரும் என்றும் சீர் ஆரணங்கைக்-அழகிய மகளிரைக் கொள்ளும்
பீன அடி வான் ஆர் பிரமற்குக் காட்டினார் -பெரிதான தம் திருவடியை ஸத்ய லோகத்தில் பொருந்திய பிரம தேவனுக்குக் காட்டி அருளியவர்
ஏன வடிவானவர் –ஸ்ரீ வராஹ வடிவானவர்

—————–

வந்தனமே செய்ய வரும் மன்னவரும் வீணைகளும்
அந்தந்தி மேவும் அரங்கமே -சிந்து பதி
மாண்டவன் வானாக வத்தான் வாழக் கதிர் மறைத்தான்
தாண்டவன் வானாக வைத்தான் சார்பு –29–

மன்னவரும் அம் தந்தி-யானை – மேவும்
வீணைகளும் அந்தந்தி-நரம்பு – மேவும்
சிந்து பதி –ஜயத்திரதன்
மாண்டு அவன் வானாக–இறக்க –
அத்தான்-அத்தையின் புத்திரனான அர்ஜுனன்
வாழக் கதிர் மறைத்தான் –சக்கரத்தால் ஸூர்யனை மறைத்து அருளியவன்
தாண்டவன் –சிவன்
வான் ஆகவம் -பெரிய யுத்தம்-பாணாசூர யுத்தம்
ஆக வத்தான் –யுத்தத்தை யுடையவன்

—————

பொங்கேரி யிக்கு வனம் பூந்தண்டலை வீதி
அங்கே கயம் சேர் அரங்கமே -செங்கீதை
ஓர் விசயன் பாற் பணித்தார் உற்றானும் தாம் என்றே
ஓர் விசை அன்பால் பணித்தார் ஊர் –30- நான்கு சிலேடைகள்

பொங்கு ஏரி அங்கே கயம்-ஆழம் – சேர்
யிக்கு வனம் -அங்கே கயம் -யானை – சேர்
பூந்தண்டலை-பூஞ்சோலையில் – அம் கேகயம்-மயில் – சேர்
வீதி அங்கு ஏகு அயம்-குதிரை – சேர்
செங்கீதை -சிறந்த ஸ்ரீ பகவத் கீதை
ஓர் விசயன் -ஒப்பற்ற விஜயனுக்கு
பணித் தார் உற்றான் -நாக ஆபரணங்களை யுடைய ருத்ரன்
அன்பால் -ருத்ராணாம் சங்கர ச அஸ்மி -என்று கீதையில் உபதேசம் பண்ணி அருளினவன்
ஓர் விசை –ஒரு தடவை

———–

பம்பு வரி நெல் பருந்தரளம் காவேரி
அம்பணை வாய் மேவும் அரங்கமே -நம்பியே
பண்டு அழைத்த வாரணத்தார் பாணி தனில் வாரணத்தார்
பண்டு அழைத்த வாரணத்தார் பற்று –31–மூன்று சிலேடைகள் –

நெல் அம்பணை -வயல் -வாய் மேவும்
தரளம் -முத்து -அம்பணை-மூங்கில் – வாய்-கணை – மேவும்
காவேரி அம்பு-நீர் – அணை வாய் -அணைக்கட்டுகளிலே -மேவும்
அம்பணை வாய் மேவும்
பண்டு அழைத்த வாரணம் -ஸ்ரீ கஜேந்திராழ்வான்
பாணி -திருக்கரம்
வாரணம் -மூங்கில் -புல்லாங்குழல்
பண் தழைத்த ஆரணம் -சாம வேதம்

———

வார் அணிந்த கொங்கை மடவார் விழி சாயல்
ஆரு மயின் மானும் அரங்கமே -நேரில்
அரு கமல யுந்தியினான் அன்று அயனை ஈன்ற
ஒரு கமல யுந்தியினான் ஊர் –32-

மடவார் விழி–ஆரும் அயில் -வேல் -மானும்
மடவார் சாயல் -ஆரும் மயில் மானும்
நேரில் -நிகரற்ற
அருகு அமல யுந்தியினான்-சமீபத்தில் -இரு பாலும்-பரிசுத்த நதியை யுடையவன் -உந்தி- நதி
ஒரு கமல யுந்தியினான்-ஒப்பற்ற நாபி கமலத்தை யுடையவன் –

—————

தும்பை புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம்பதிக நேரும் அரங்கமே -வம்பு மலர்த்
தாது திரு மாலையார் தாசரடித் தூள் ஆழ்வார்
ஒது திருமாலையார் ஊர் –33–

தும்பை -போருக்குச் செல்லுவோர் அணியும் மாலை
தூணிகள்—அம்பு புட்டில் –அம்பு அதிகம் நேரும்-பொருந்தும்
மின்னார் அளகம்–பெண்கள் கூந்தல்
அம்பதிக நேரும்
புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம் -அழகிய -பதிகம் -சைவலம் -நீர்ப்பாசி — நேரும் -ஒக்கும்
வம்பு -வாசனை
தாது உதிரும் மாலையார்-மகரந்தம் சிந்துகின்ற துளப மாலையை யுடையவர்
தாசரடித் தூள் ஆழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஒது திருமாலையார்–திருமாலை பிரபந்தம் அருளிச் செய்தவர்

————-

தூய மறையாளர் சொல்லின்ப நாவலர் சீ
ராய மகம் செய் அரங்கமே -பேயினது
கொங்கை அங்கம் சுவைத்தார் கொற்றம் பெறு படைகள்
செங்கை அங்கு அஞ்சு வைத்தார் சேர்வு –34–

மறையாளர் சீராய மகம் -யாகம் -செய்
நாவலர் சீரா யமகம்–ஒரு விதச் சொல்லணி – செய்
கொங்கை அங்கம்–ஸ்தானமாகிய உறுப்பை – சுவைத்தார்
கொற்றம் -வெற்றி
செங்கை அங்கு –படைகள் அஞ்சு வைத்தார்

————-

மங்கல நற் பாலிகைகள் மாந்தர் இரும் புரவி
அங்குரங்கள் மேவும் அரங்கமே –செங்கமல
மாது வசம் அன்புள்ளார் வானவரும் கண்டு தொழு
மாது வசம் அன்புள்ளார் வாழ்வு –35–மூன்று சிலேடைகள்

பாலிகைகள்–முளைப் பாலிகைகள் – அங்குரங்கள்-முளைகளை – மேவும்
மாந்தர் -அங்கு உரம் -வலிமை -கண் மேவும்
புரவி -அம் குரங்கள் -குரம் -குளம்பு -மேவும்
செங்கமல மாது வசம் அன்புள்ளார்
மா துவசம்–அழகிய கொடியாக – மன் புள்ளார் -பக்ஷி ராஜனாகிய கருடனை யுடையவர்

————-

சீரார் பொன் கொள்வோரும் தேர் புலவரும் கலையே
ஆராய்ந்து உரை செய் அரங்கமே –வாரார்
முரசு அங்கன் தூதினான் மோது ஆகவத்தால்
வர சங்கு அன்று ஊதினான் வாழ்வு –36–

பொன் கொள்வோரும் கலையே -கல்லையே -உரை கல்லையே -ஆராய்ந்து உரை செய்-உரைத்துப் பார்க்கின்ற
தேர் புலவரும் கலையே -ஸாஸ்திரங்களையே -ஆராய்ந்து உரை செய் -ஸம்பாஷிக்கின்ற
முரசு அங்கன் தூதினான்–முரசு அடையாளக் கொடியை யுடைய தருமனுக்காக கௌரவர் இடம் தூது சென்றவன்
மோது ஆகவத்தால் -ஆகவும் போர் -வர சங்கு-மேன்மையான பாஞ்ச ஜன்யம் அன்று ஊதினான்

—————

சாலை தனில் தீம் பலவைச் சாடு குரங்கும் கரும்பும்
ஆலை மருவும் அரங்கமே –வாலி தனைத்
துஞ்சக் கரந்து அரித்தான் தொண்டரையே காப்பதற்காச்
செஞ்சக்கரம் தரித்தான் சேர்வு –37–

தீம் பலவை–தித்திப்பான பலா மரத்தை
குரங்கும் -ஆலை -மரத்தை -மருவும்
கரும்பும் ஆலை இயந்திரத்தை – மருவும்
வாலி தனைத் துஞ்சக்–சாகக் – கரந்து -மறைந்து -அரித்தான்-அழித்தவன்
தொண்டரையே காப்பதற்காச் செஞ்சக்கரம்-செம் சக்கரம் – தரித்தான் -தாங்கியவன் –

————-

ஊக முற்ற வேதியரும் உள் ததி சேர் தாழியும் மோர்
ஆகமத்தைக் கொள்ளும் அரங்கமே –மா கரிக்கு
மோக்கந் தரத்தான் முனம் வந்து இடங்கர் உயிர்
போக்கந் தரத்தான் புரம் –38–

ஊகம் -யூகம்-ஞானம்
வேதியரும் ஓர் ஆகமத்தைக் கொள்ளும்
உள் ததி-தயிர் – சேர் தாழியும் மோரக மத்தைக் கொள்ளும்
மா கரி-கஜேந்திரன் -மா கரிக்கு மோக்கந் தரத்-மோக்ஷம் தர -தான் முனம்-முன்னே – வந்து
இடங்கர்–முதலை – உயிர் போக்கு அந்தரத்தான் –ஆகாய மார்க்கத்தை யுடையவன்

————-

கொம்பார் தருக்களிலும் கூடு திரை வாவியிலும்
அம் பார்ப்பு மேவும் அரங்கமே -நம் பாணர்
பாட்டினை முன் கேட்டார் பகை யரசர் பாலைவர்
நாட்டினை முன் கேட்டார் நகர் –39–

கொம்பார்-கிளை ஆர்ந்த – தருக்களிலும்
அம் பார்ப்பு -அழகிய பறவைக் குஞ்சு -மேவும்
திரை -அலை -கூடு வாவியிலும் -தடாகத்திலும்
அம்பு ஆர்ப்பு -ஜலத்தின் ஆரவாரம் -மேவும்
பாணர் -திருப்பாண் ஆழ்வார்
பாட்டினை முன் -முற் காலத்திலே -கேட்டார் -திருச்செவியின் மாந்தினவர்
பகை யரசர் -கௌரவர் -பால் ஐவர் -பாண்டவர் -நாட்டினை முன் -முன் நின்று கேட்டார் -இரந்தவர்

———–

அங்கனையார் மார்பு கயம் அந்தணர் கை நூல் உணர்வோர்
அங்குசத்தைக் கொள்ளும் அரங்கமே -வெங்கபடர்
பாலார் கலி யுடையார் பைம்பொன் கலி யுடையார்
பாலார் கலி யுடையார் பற்று –40–நான்கு சிலேடைகள் —

அங்கனையார் –பெண்கள்
மார்பு- அங்குசத்தைக் -குசம் -ஸ்தானம் -கொள்ளும்
கயம்-யானை அங்குசத்தைக்-அடக்கும் கருவியைக் – கொள்ளும்
அந்தணர் –அங்குசத்தைக் -தர்ப்பையைக் -கொள்ளும்
நூல் உணர்வோர் –அங்குசத்தைக்–அங்கு சத்தைக் சாரத்தைக் – கொள்ளும்
வெங்கபடர் பால் –வஞ்சகர் பால்
ஆர் -நிறைந்த -கலி-பாவத்தை – யுடையார் -தகரார்
பைம்பொன் கலி–வஸ்திரம் பீதாம்பரம் – யுடையார் -தரித்தவர்
பாலார் கலி யுடையார்-பால் ஆர் கலி -கடல் -உடையார்

———–

பூ மேவு கான் மதகு பூங்குழலார் ஆகம் உளம்
ஆ மோதஞ் சாரும் அரங்கமே –சீ மூத
வண்ணத்தான் ஆகத்தான் மாயத்தா னேயத்தான்
வண்ணத்தான் ஆகத்தான் வாழ்வு –41–மூன்று சிலேடைகள் –

பூ மேவு கான்-கால் -ஆற்றுக்கால் – மதகு -ஆ மோதஞ்-ஆம் ஓதம் -நீரின் ஒலி – சாரும்
பூங்குழலார் ஆகம் ஆமோதஞ்–பரிமளம் – சாரும்
உளம் ஆ மோதஞ்–ஸந்தோஷம் – சாரும்
சீ மூத வண்ணத்தான் –மேக வண்ணத்தான்
நாகத்தான் -பரம பதத்தை யுடையவன்
வண்ணத்தான்–வண் அழகிய நத்தான்-சங்கை ஏந்தியவன்
நாகத்தான் –ஆதி சேஷனை யுடையவன்

———–

கும்பு பொறி வண்டு மணிக் குண்டலங்கள் மாதரார்
அம்புயத்து மின்னும் அரங்கமே -கொம்பனையார்
அற் பரதத்துக் கினியான் ஆசை கொளா தாட் கொள்வான்
நற் பரதத்துக் கினியான் நாடு –42–

கும்பு -கும்பல்
பொறி வண்டு மாதர் -அழகு -ஆர் அம்புயத்து-தாமரையினிடத்து – மின்னும்
மணிக் குண்டலங்கள்-மாதரார் -பெண்களின் -அம் புயத்து–தோள்களிலே மின்னும்
கொம்பனையார் -மகளிர்
அற்ப ரதத்துக்கு -சிற்றின்பத்துக்கு -இனி யான் ஆசை கொளாது ஆட் கொள்வான்
நற் பரதத்துக்கு -பரத நாட்டியதுக்கு – இனியான் -இனிமை யுடையவன்

————

மங்காத வெப்பொருளும் மா மணம் செய்வோர் அகமும்
அங்கா வணம் சேர் அரங்கமே -இங்கார்ந்தோர்
வாச மருந் தூணினார் வந்து தொழ வார்த்து வந்த
தேச மருந் தூணினார் சேர்வு –43–

எப்பொருளும் அங்கு ஆவணம்-கடை வீதி சேர்
மா மணம் செய்வோர் அகமும் -அம் காவணம் -பந்தர் -சேர்
வாச மருந்து ஊணினார்-மணம் பொருந்திய அம்ருதத்தை உண்ட தேவர்
ஆர்த்து வந்தது -ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில்
தேச மருந் தூணினார்-தேசு அமரும் ஒளி பொருந்திய மணித்தூணை யுடையவர்

—————

தாண்டு வராற் பண்ணைகளும் சன்ம வுயிர் யாவும் சீர்
ஆண்டு முத்திக் கேயும் அரங்கமே -பாண்டவர் பால்
கட்டுப்பட்டா விளைத்தான் கா வெனத் துரோபதைக்குப்
பட்டுப் பட்டா விளைத்தான் பற்று –44–

பண்ணைகளும் –வயல்களும்
ஆண்டு சீர் முத்து இக்கு ஏயும் -அவ்விடத்து அழகிய முத்துக்களை சொரியும் கரும்புகளைப் பொருந்தும்
சன்ம வுயிர் யாவும்-இகத்தில் – சீர் ஆண்டு -சிறப்புக்களை அனுபவித்துப் பின் முத்திக்கு -மோக்ஷத்துக்கு -ஏயும் -பக்குவத்தை அடையும்
பாண்டவன் -சகாதேவன் -கட்டுப்பட்டு ஆ -உயிர் – இளைத்தான்–மெலிவுற்றான்
கா வென –காப்பாற்றுவாய் என்று அரற்ற
பட்டுப் பட்டா விளைத்தான் -பட்டுப் புடவையை ஒன்றன் பின் ஒன்றாக விளைந்து கொண்டே இருக்கும் படி அருள் செய்தான்

————–

சேறுமதற் கம்பு மலர் தேங்குழலார் கஞ்ச மிறை
ஆரு மஞ்சஞ்சாரும் அரங்கமே -வீர விற் பூ
அம்புருவ நோக்கினான் அன்று ஏழ் மரம் துளைத்தவ்
வம்புருவ நோக்கினான் வாழ்வு –45–மூன்று சிலேடைகள்

மதற்கு -மன்மதனுக்கு
அம்பு மலர் -புஷ்ப பாணம்
இறை ஆரும் அஞ்ச அஞ்ச ஆரும் -கடவுளர் எவரும் அஞ்சத்தக்க அஞ்சு பாணம் பொருந்தும்
தேங்குழலார் -மகளிர் -இறை-கணவன் – ஆரும் மஞ்சம் -சப்ரமஞ்சம் -சாரும்
கொஞ்சம் -தாமரை -இறை -சிறகு -ஆரும் அஞ்சம் -அன்னம் -சாரும்
வீர விற் –வீரம் பொருந்திய வில்லும்
பூ -தாமரைப் பூவையும்
முறையே உவமையாகக் கொண்ட
அம்புருவம் நோக்கினான் -அழகிய புருவங்களை கண்களையும் யுடையவன்
அன்று -ஸ்ரீ ராமாவதார காலத்தில்
ஏழ் மரம் துளைத்து அவ் வம்பு உருவ -ஊடுருவச் செல்ல -நோக்கினான் –

———–

கங்குலிலே காமுகர்கள் காவலர்பால் நா வலர்கள்
அங்கணிகை மேவும் அரங்கமே -பொங்கமரில்
நாணுதலின் மான்மதத்தார் நால் வாயின் கோடி டந்தார்
வாணுதலின் மான்மதத்தார் வாழ்வு –46–

காமுகர்கள் அங்கணிகை-வேசிகை – மேவும்
நா வலர்கள் அங்கு காவலர்பால்-அணிகை -ஆபரணங்களை -மேவும் அடையும்
நாணுதல் இல் மால் மதத்து ஆர் நால் வாயின்-குவலயா பீடம் என்னும் யானையின் – கோடு இடந்தார் -தந்தத்தை முறித்து அருளியவர்
வாணுதலின்-நெற்றியில் மான்மதத்தார்-கஸ்தூரி திலகத்தை யுடையவர் -மான்மதம் -கஸ்தூரி

————-

தேசு மணி மாடம் சீர் மாரன் பாணி மலர்
ஆசுகம் கண் நீங்கா அரங்கமே -காசிபனில்
வாய்ந்த வட பத்திரத்தான் மாவா மனனானான்
ஏய்ந்த வட பத்திரத்தான் இல் –47-

மலர் ஆசுகம்–பூங்காற்று – கண் நீங்கா
மாரன்-மன்மதன் – பாணி-கை -மலர் ஆசுகங்கள் -புஷ்ப்ப பானங்கள் நீங்கா
காசிபன் இல்-மனைவியாக வாய்ந்தவள் -அதிதி – தபம் திரத்தால் -வலிமையால் மா வாமனன் -வாமநவதாரம் ஆனான்
ஏய்ந்த வட பத்திரத்தான் –ஆலிலைப் பள்ளி யுடையவன் –

————

மாறன் அடியாராம் வைணவர் நாமம் பொன்னி
ஆறு இரண்டாக் காணுமே அரங்கமே -தேறி யணை
ஆய் மா தரங்கத்தார் ஆனந்த மாத் துயில
வாய் மா தரங்கத்தார் வாழ்வு –48-

மாறன்–மால் தன் அடியாராம் வைணவர் இடும் – நாமம்-திருமண் காப்பு –
ஆறு இரண்டாக்-பன்னிரண்டாக –
பொன்னி–காவேரி – ஆறு இரண்டாக்–கொள்ளிடம் காவேரி என்று இரண்டு கிளையாக -காணுமே
யணை ஆய் மாதர் -கோபிகா ஸ்த்ரீகள் -அங்கத்தார்–சரீரத்தை யுடையவர்
ஆனந்த மாத் துயில வாய் – பொருந்திய -மா தரங்கத்தார் –திருப்பாற் கடலை யுடையவர் –

————-

தற் பரனை எண்ணித் தவம் புரிவோர் நூல் உணர்வோர்
அற் பகலை ஓரா அரங்கமே –பொற் பணிகள்
பூண்டவியப் பண்ணினார் பூ பார மன்னவரை
மாண்டவியப் பண்ணினார் வாழ்வு –49-

தற் பரனை -ஸர்வேஸ்வரனை
எண்ணித்
தவம் புரிவோர் -அற் பகலை-அல் பகலை -இரவு பகல் என்று ஓரா -உணராத
நூல் உணர்வோர் அற்ப -சொற்பமான -கலை-சாஸ்திரங்களை ஓரா -ஆராய்ச்சி செய்யார்
பொற் பணிகள் பூண்ட வியப்பு அண்ணினார் -பொருந்தியவர்
பூ பார மன்னவரை -பூமிக்குப் பாரமாகப் பொருந்திய அரசரை
மாண்டவியப் பண்ணினார் -பாரத யுத்தத்தில் இறந்து ஒழியப் பண்ணினவர்

————

எப்புறத்தும் மா மரத்தும் ஏரியிலும் பாடிடத்தும்
அப்பணிலம் சேரும் அரங்கமே -இப்புவியோர்
உண்ணும் பலத்தார் உடன் பலத்தார் முன் சவரி
உண்ணும் பலத்தார் உவப்பு –50- நான்கு சிலேடைகள்

எப்புறத்தும் -அப்பணிலம் -அப்பு அண் நிலம் -நீர் வளம் பொருந்திய நன்செய்கள் -சேரும்
மா மரத்தும் -அப்பணிலம் சேரும் -அப்பு அணிலம் -பற்றுகின்ற அணில்கள் -சேரும்
ஏரியிலும் அப்பணிலம்-அ பணிலம் -சங்குகள் – சேரும்
பாடிடத்தும் அப்பணிலம்–அ பண்ணில் அம் அழகு சேரும்
உண்ணும் பலத்தார் -உள் நம்பு அலத்தார் -அலம்-கலப்பை -ஏந்தியவர் -பல ராமர்
உடன் பலத்தார் -சகோதர பலமாக யுடையவர்
முன் சவரி உண்ணும்–உண் அம் – பலத்தார் -பழத்தை யுடையவர் –

————-

கொண்டல் நிகர் பூங்குழலார் கொங்கை யிதழ் நற்றொரு பொன்
அண்டு வரை யொப்பாம் அரங்கமே -பண்டு
படுகள முன் சேதித்தார்ப் பார்த்திபன் முத்தாரம்
படுகள முன் சேதித்தார்ப் பற்று –51–மூன்று சிலேடைகள்

கொண்டல் நிகர் –மேகத்தை ஒத்த -பூங்குழலார் கொங்கை -பொன் அண்டு வரை -மேரு மலைக்கு -யொப்பாம்
யிதழ் -பொன் அம் துவரை -அழகு வாய்ந்த பவளத்தை -யொப்பாம்
நல் தெரு பொன் அம் துவரை –ஸ்ரீ லஷ்மீகரம் பொருந்திய ஸ்ரீ மத் த்வாரகா புரியை –யொப்பாம்
படு கள முன் -ரண களத்தில்
சேதித்தார்ப் பார்த்திபன்-சிஸூ பாலன் உடைய
முத்தாரம் படு களம் -முத்து மாலை அணிந்த கழுத்தை – முன் சேதித்தார்–அறுத்து அருளியவர்

————–

சுத்த மணி மேடையில் நூல் சொல்வோர் தின மணியால்
அத்த மன மோரும் அரங்கமே -பத்தன்
தரும வலை யுண்ணே ரார் தண் கரத்தார் என்னைக்
கரும வலை யுண்ணே ரார் காப்பு –52–

சுத்த மணி -குற்றமற்ற ரத்னம்
மேடையில் தின மணியால் -ஸூர்யனால் -கடிகாரத்தால் –
அத்த மனம் -அஸ்தமனம்
ஓரும்
நூல் சொல்வோர்-தினம் அணியால்–அலங்கார ஸாஸ்த்ரத்தால்
அத்தம் -பொருள் நூல் கருத்துக்களை -மனம் ஓரும்
அரங்கமே –
பத்தன் -குசேலர்
தரும் அவலை யுண் ணேர் -அழகு ஆர் தண் கரத்தார்
என்னைக் கரும வலை யுள் நேரார் –பொருந்தச் செய்யாதவர் –

—————

வீசு திரைக் காவிரியும் மின்னாரும் தம் கொழுநர்க்கு
ஆசை முத்த நல்கும் அரங்கமே –வாச மலர்க்
கையில் கலப்பை யுளான் காதல் இளையோன் போற்றார்
மெய்யில் கலப்பை யுளான் வீடு –53-

காவிரியும் ஆசை -திக்குகள் எல்லாம் -முத்த–முத்துக்களை – நல்கும்
மின்னாரும்-மகளிரும் – தம் கொழுநர்க்கு ஆசை முத்தம் -அன்பு கனிந்த முத்தங்கள் – நல்கும்
கையில் கலப்பை யுள்ளான் -பலராமன் -காதல் இளையோன்
போற்றார் மெய்யில்-சரீரத்தில் – கலப்பை -சேர்ந்து இருத்தலை -யுள்ளான்–விரும்பாதவன்

————

பூண்ட புகழ் மன்னவரும் புத்தேளிரும் வலமா
ஆண்டு வரு நல் அரங்கமே -வேண்டும்
விர காலன் பாவார் மிளிரு முனை வேற் கைப்
பரகாலன் பாவார் பதி –54–

பூண்ட புகழ் மன்னவரும் வலமா -வெற்றியாக
ஆண்டு வரும் -அரசாட்சி செய்யும்
புத்தேளிரும்-கடவுளரும் ஆண்டு வலமா –பிரதக்ஷிணமாக -வரும்
நல் அரங்கமே –
வேண்டும் விர கால் –பிரார்திக்கின்ற உபாயத்தினாலே அன்பு ஆவார்
மிளிரும் முனை –கூர்மை -வேற் கைப் பரகாலன்-திருமங்கை ஆழ்வார் பாவார் -திருப்பாசுரங்களை யுடையவர்

—————

மஞ்சு தவழ் மாடம் மக வான் இகல் வீரர்
அஞ்சசி யோடேயும் அரங்கமே -வஞ்சகர் பால்
மெய்யான அன்பிலான் மேதினி நூறு எண் பதிக்குள்
மெய்யான வன்பிலான் வீடு –55–மூன்று சிலேடைகள்

மஞ்சு தவழ் மாடம் -அஞ்சசி யோடேயும்-அம் சசியோடே -சந்திரனோடு -ஏயும்
மக வான் இந்திரன் -அஞ்சசி யோடேயும்-இந்திராணியோடே ஏயும்
இகல் -வலிமை வீரர் -அஞ்சசி யோடேயும்-அஞ்சு அசியோடே -வாளோடு -ஏயும்
மெய்-சரீரம் -யான அன்பிலான்
மேதினி -பூமி
நூறு எண் பதிக்குள் -108 திவ்ய தேசங்கள்
மெய்யான-அழிவில்லாத – வன்பிலான் -அன்பில் திவ்ய தேசத்தை யுடையவன் – —

————

நம் பாரில்லறத்தை நாடினரும் குஞ்சரமும்
அம்பாரி மேவும் அரங்கமே -வெம் பாந்தள்
ஏந்த லமளியார் எண்ணார்க்கு வைகுந்தந்
தாந்த லமளியார் சார்பு –56–

நாடினரும்-விரும்பியவர் -அம்பாரி-அழகிய பத்தினி – மேவும்
குஞ்சரமும் -யானையும் -அம்பாரி மேவும்
பாந்தள் -பாம்பு -ஏந்தல்-ஆதி சேஷன்
அமளி-படுக்கை -யார் எண்ணார்க்குத் தாம் வைகுந்தம் தலம் அளியார்

————–

கொங்கு மலர்ப் பூங்குழலார் கொங்கையிலும் வீதியிலும்
அங்கள பஞ்சாரும் அரங்கமே -எங்குமவன்
தன் திருப்பேரையான் சாற்றிடினும் இன்னருள் செய்
தென் திருப்பேரையான் சேர்வு –57–

கொங்கையிலும் -அங்கள பம் -கலவைச் சந்தானம் -சாரும்
வீதியிலும் அங்களயம் -யானைக்குட்டி -சாரும்
எங்குமவன் தன் திருப்பேரை -திரு நாமத்தைச் -சாற்றிடினும் இன்னருள் செய் தென் திருப்பேரையான்

ஆசரியரது ஜென்ம தேசமும் அதுவே

————

நந்தாப் பெரும் செல்வர் நன் மனையும் நா வலரும்
அந்தாதி காணும் அரங்கமே -வந்தார் கை
நங்கோ வியர் கொண்ணார் நாயகர் தம் மேர் எழுத
இங்கோ வியர் கொண்ணார் இல் –58–

நன் மனையும் -அழகிய மாளிகைகளும் -அம் தாதி -பணிப்பெண்டிர் காணும்
நா வலரும் அந்தாதி-ஒருவகை பிரபந்தம் – காணும்
நந்து -சங்கு வளை -ஆர் கை நம் கோவியர்க்கு -கோபிகா ஸ்திரீகளுக்கு – ஓண்-ப்ரகாசகமான -நார்-அன்பு நாயகர்
தம் ஏர் எழுத இங்கு ஓவியர்க்கு -சித்ர காரருக்கு – ஓண்ணார்-இயலாதவர் –
ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தார் என்கை –

————-

வாதமிடு பண்டிதரும் மா மயிலும் என்று மதி
யாதரவைக் கோரும் அரங்கமே –காதவுணர்
ஊனின் மணவாளர் ஓங்கு வளப்புதுவை
மானின் மணவாளர் வாழ்வு –59-

வாதமிடு பண்டிதரும் என்று மதி-மதிக்கத்தக்க -ஆதரவை -துணியை – கோரும்-விரும்பும்
கற்றோரைக் கற்றாரே காமுறுவர்
மா மயிலும் என்று மதியாது -அரவைக்-பாம்பைக் – கோரும் -அழகிலே கோத்திக் கோர்த்துத் திரியும்
அரங்கமே —
காது -மோதுகின்ற -அவுணர்-அசுரர் – ஊனின் மணம் வாளர் –தசை நாற்றம் பொருந்திய நாந்தகம் என்னும் வாளை ஏந்தியவர்
ஓங்கு வளப்புதுவை மானின்-ஆண்டாளின் -மணவாளர் -கணவர் –

————-

சங்க மடு மா மறுகு சான்றோர் தம்முள்ள மிடை
அங்கலைகள் ஆரும் அரங்கமே -மங்கை நல்லார்
அந்தப்புரத்தார் அநந்த புரத்தார் திரு வாழ்
அந்தப்புரத்தார் அகம் –60- நான்கு சிலேடைகள்

சங்க மடு அங்கு அலைகள் ஆரும்
மா மறுகு அம் கலைகள்-மான்கள் – ஆரும்
சான்றோர் தம்முள்ளம் அம் கலைகள்-ஸாஸ்த்ரங்கள் – ஆரும்
இடை -அவர்கள் இடுப்பு -அம் கலைகள்-வஸ்த்ரங்கள் – மங்கை நல்லார் அந்தப்புரத்தார் -ராஜ ஸ்த்ரீகள் வாழும் இடம்
அநந்த புரத்தார்
திரு வாழ் -ஸ்ரீ மஹா லஷ்மி தாயார் நித்யவாஸம் செய்து அருளும் அந்தப்புரத்தார் -அழகிய சரீரத்தை யுடையவர்

————–

வம்பு மலர்த் தண்டலையும் மா நதியும் கெண்டைகளும்
அம் புளின மேவும் அரங்கமே –நம்பும்
அரிய மா மண்டலத்தா ராராலும் எண்ணற்க்கு
அரிய மா மண்டலத்தார் ஆர்வு –61- மூன்று சிலேடைகள்

வம்பு-வாசனை – மலர்த் தண்டலையும்-சோலையும் – அம் புளின மேவும் -புள் இனம் மேவும்
மா நதியும் அம் புளின மேவும் -புளினம் -மணல் மேடுகள் -மேவும்
கெண்டைகளும் அம் புளின மேவும் -அம்புள் நீரில் இனம் -கூட்டமாக -மேவும்
அரிய மா -ஸூரியன் -மண்டலத்தார்–ஸூர்ய மண்டலா மத்ய வர்த்தி
மண் -பெரிய பூமியின் இடத்து – எண்ணற்க்கு அரிய தலத்தார் -பல ஸ்தலங்களை யுடையவர் –

———-

மா சீடர் தம்மிடத்தும் மன்றுளும் நூலாரியர் முன்
ஆசீர்வாதம் செய் அரங்கமே -மா சீற்ற
வாசித் திருந்தார் மனம் கொதிப்ப வீடணனை
நேசித் திருந்தார் நிலம் –62–

நூலாரியர்–மா சீடர் தம்மிடத்தும் முன் ஆசீர்வாதம் செய்
நூலாரியர்–மன்றுளும்-சபைகளின் இடத்தும் – முன்னா -சிந்தித்து – சீர்-சிறப்பான -வாதம் செய்
மா சீற்ற வாசித் -குதிரைப்படையை யுடைய -திருந்தார்-பகைவர் – மனம் கொதிப்ப
வீடணனை நேசித்து இருந்தார் –

————–

காம்பு மலர்களிலும் கந்தரம் சேர் சோலையிலும்
ஆம் பிரம்பரம் சேர் அரங்கமே -வாம் பிறை நீர்
வாசம் செய்யச் சடையான் மா வரம் கொள் தானவரை
நாசம் செய்யச் சடையான் நாடு –63-

மலர்களிலும்-ஆம் பிரம்பரம்-வண்டு -சேர்
கந்தரம்-மேகம் சேர் சோலையிலும் -ஆம்பிர மரம் -தேமா மரம் -சேர்
வாம் பிறை நீர் வாசம் செய் யச் சடையான்–சடா பாரத்தை யுடைய சிவன்
மா வரம் கொள் தானவரை நாசம் செய்யச் சடையான்–சலிப்பு அடையான் –

—————-

சங்கு ஆரும் கையார் தனங்களிலும் வேதியிலும்
அங்கார மேவும் அரங்கமே –சிங்காரப்
பூவின் மகிழ் மாறன் போற்று திருவாய் மொழியாம்
பாவின் மகிழ் மாறன் பற்று –64-

சங்கு -வளையல்கள் -ஆரும் கையார் தனங்களிலும் -அங்கார மேவும்-அங்கு ஆறாம் மேவும்
வேதியிலும் -யாக மேடையிலும் -ஓம குண்டங்களிலும் -அங்காரம் -தீக்கனல் மேவும்
சிங்காரப் பூவின் மகிழ் மாறன்-வகுளாபரணர் – போற்று திருவாய் மொழியாம்
பாவில் – மகிழ் -மாறன்-மால் தன் பற்று –

————-

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி சொல் காவேரி
அப்பால் நலம் காட்டு அரங்கமே –இப்பாரில்
அங்கதனைப் பெற்றான் அமர் களத்திலே துதிக்க
அங்கதனைப் பெற்றான் அகம் –65–மூன்று சிலேடைகள் —

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி -அப்பால் நலம் காட்டு-அப் பானல் -நீலோற் பல மலர் -அம் -அழகு -காட்டு –
சொல் -பால் நலம் காட்டு
காவேரி அப்பால்-தன் தீர்த்த மஹிமையால் -மூழ்குவோர்க்கு – நலம்-மோக்ஷம் – காட்டு
இப்பாரில் அங்கதனைப் பெற்றான் -வாலி அமர் களத்திலே துதிக்க
அங்கு அதனைப்-தான் விரும்பிய மோக்ஷத்தை – பெற்றான் –அடையச் செய்தவன் –

————–

சீர் மருவு சாதகமும் திண்ணியவா விக்கரையும்
ஆர் மழைக்கு அங்காக்கும் அரங்கமே –ஓர் மருங்கில்
தங்க நக வில்லான் தனை வைத்தான் அன்பரக
அங்க நக வில்லான் அகம் –66–

சீர் மருவு சாதகமும் –சாதகப் பட்சியும் –ஆர் மழைக்கு அங்காக்கும்-அண்ணாந்து இருக்கும் –
திண்ணிய வாவிக் கரையும் ஆர் மழைக்கு அங்காக்கும் –ஆர் மழை கம் -ஜலம் -காக்கும்
அரங்கமே —
ஓர் மருங்கில்-பாகத்தில்
தங்க நகம் -பொன் மலை -மேரு மலை – வில்லான்–சிவன் –சிவனை ஒரு பாகத்தில் வைத்தவன்
அன்பர் அகம் அங்கு அநகம் இல்லான்
அநக இல் தோஷம் அற்ற வீடு
அம் கநக இல்லான் -அழகிய பொன்மயமான வீட்டை யுடையவன் என்னவுமாம் –

————-

நல்ல கதிரினையே நாற் புறத்துப் பண்ணைகளும்
அல் இறைவனும் காட்டு அரங்கமே -கல்லினை முன்
நாரி வடி வாக்கினான் நன்னயமா மின்னமுத
வாரி வடி வாங்கினான் வாழ்வு –67–

நாற் புறத்துப் பண்ணைகளும் -வயல்களும் -நல்ல கதிரினையே-நெற் கதிர்களையே -காட்டு
நாரி -பெண் -அகலிகை —
நாரி வடிவு ஆக்கினான்
இன்னமுத வாரி-கடல் – வடி வாக்கினான் —

————-

மங்குல் எனும் கூந்தல் மடவார் களம் இரு கண்
அங்கம்பு மானும் அரங்கமே -பொங்கும்
பய வேலையை மதித்தான் பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் நாடு –68–

மடவார் களம்–கழுத்து – அங்கம்பு-சங்கு – மானும்
மடவார் இரு கண் அங்கு அம்பு மானும்
பய வேலையை மதித்தான்-பாற் கடலைக் கடைந்தான்
பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் –அழகிய தொழிலைப் பெரிதாகக் கொண்டான்

————–

மிக்கார் திரு மொழியும் மேவும் அரன் கந்தரமும்
அக்கார நேரும் அரங்கமே –தக்கார்
திரு நாட்டிருப்பினார் செத்தவனை யாசற்
கொரு நாட்டிருப்பனார் ஊர் –69–

மிக்கார் -அழகு மிக்க மகளிர் திரு மொழியும்
மிக்கார் திரு மொழியும்–ஆழ்வார்களது அருளிச் செயல்கள் -அக்கார-வெல்லப்பாகு – நேரும்-ஒக்கும்
அரன் கந்தரமும் -கழுத்தும் -அக்கு ஆரம் -ருத்ராட்ச மாலைகளைப் பொருந்தும்
தக்கார் திரு நாட்டு இருப்பினார் -முக்தர்கள் வாழும் பரமபதத்தில் எழுந்து அருளியவர்
ஆசான் -சாந்தீபினி
செத்தவனை -அவன் குமாரனை
ஓரு நாள் –ஒரு காலத்தில்
திருப்பினார் -உயிருடன் மீளச் செய்தவர் –

———–

செம்மை விழியார் வேந்தர் சீரியர் நூல் மா மாடம்
அம்மணிகள் மேவும் அரங்கமே -தம் மனையை
ஆகத் திருத்தினான் அச் சாந்தக் கூனியை நேர்
ஆகத் நிறுத்தினான் ஆர்வு –70–நான்கு சிலேடைகள் –

செம்மை விழியார் -அழகிய கண்களை யுடைய மகளிர் -அம் அணிகள்–ஆபரணங்கள் – மேவும்
வேந்தர் -அம் அணிகள்-படைகள்
சீரியர் நூல் —அம் அணிகள்-அலங்காரங்கள் -மேவும்
மா மாடம் –அம்மணிகள்–நவ ரத்தினங்கள் -கடிகாரங்கள் – மேவும்
அரங்கமே –
தம் மனையை -ஸ்ரீ லஷ்மீ தேவியை -ஆகத்து -திரு மார்பில் – இருத்தினான்
கூனியை நேர் ஆகத் திருத்தினான் -கூன் நிமிர்ந்து நேராம்படி திருந்தச் செய்தவன் –

———–

ஈகையரும் பாடகரும் ஏத்தவரும் ஐங்கரனும்
ஆகு மிசை யாரும் அரங்கமே –சாகரமா ப்
பா வருணனைக் கடுத்தார் பைந்தமிழ் பராங்குசனார்
பா வருணனைக் கடுத்தார் பற்று –71-மூன்று சிலேடைகள்

ஈகையரும் -கொடையாளிகளும் –ஆகும் இசை -புகழ் –யாரும் –
பாடகரும் -ஆகும் -இராகம் – யாரும்
ஐங்கரனும் -விநாயகனும் –ஆகு–பெருச்சாளி – மிசை யாரும்
சாகரமாப் பா வருணனைக் –கடல் வடிவாய் பரவியுள்ள வருண தேவனை -கடுத்தார்-கோபித்தார்
பைந்தமிழ் பராங்குசனார் பா வருணனைக்கு அடுத்தார் –

—————

தப்பித மில்லார் இடத்தும் சந்திரப் பேர் வாவியிலும்
அப்பு நிதம் நீங்கா அரங்கமே –இப்புவியில்
போர் காது வணத்தார் பூம் பொழில் தென் பேரையில் வாழ்
வார் காது வணத்தார் வாழ்வு –72-

தப்பித மில்லார் இடத்தும்-அப் புநிதம்-பரி சுத்தம் – நீங்கா
சந்திரப் பேர் வாவியிலும்-சந்த்ர புஷ்கரணியிலும் அப்பு நிதம் நீங்கா
அரங்கமே —
இப்புவியில் போர் காது- மோது -உவணத்தார்-கருட வாகனத்தை யுடையவர்
பூம் பொழில் தென் பேரையில் வாழ்வார் காது வண்ணத்தார் -மகர நெடும் குழைக்காதர் –

———

மஞ்சார் பொழில் தனிலும் மன்னர் மருங்கினிலும்
அஞ்சா மரை சேர் அரங்கமே –துஞ்சாச் சீர்
பொய்கையார் பாற் கவியார் போத நல்லார் தாம் பழிக்கும்
செய்கையார் பாற் கவியார் சேர்வு –73–

மஞ்சார் பொழில் தனிலும் அஞ்சா மரை-ஒரு வகை மான் – சேர்
மன்னர் மருங்கினிலும் அஞ் சாமரை -அம் சாமரம் -சேர் அரங்கமே —
துஞ்சாச் சீர் பொய்கையார் பாற் கவியார் -பால் போல் இனிய கவியை யுடையவர்
போத நல்லார் தாம் பழிக்கும் செய்கையார் பாற் கவியார் -மனம் கவியாதவர் –

—————-

கொம்பு வளர் மா மரத்தும் கோதில் தெருக்களிலும்
அம்பலங்கள் காணும் அரங்கமே -கும்ப முனி
ஆச்சிரமத்து ஒன்றினான் அம்புதியை முன் கடைந்த
மாச்சிரமத்து ஒன்றினான் வாழ்வு –74–

கொம்பு வளர் மா மரத்தும் –அம்பலங்கள் –கனிகள் -காணும்
கோதில் தெருக்களிலும் அம்பலங்கள்-மன்றங்கள் – காணும்
அரங்கமே –
கும்ப முனி -அகத்தியன் -ஆச்சிரமத்து-பர்ணசாலையிலே – -ஸ்ரீ ராமனாக ஒன்றினான்
அம்புதியை-கடலை – முன் கடைந்த மா சிர மத்து ஒன்றினான் -பெரிய சிகரங்களை யுடைய மந்த்ர மலையாகிய மத்து ஒன்றை உடையவன் –

————–

ஏற்றின் இனம் புள்ளின் இனம் ஏரார் வராலின் இனம்
ஆற்றலை மன்னும் அரங்கமே –போற்ற மரர்க்கு
இட்ட மருந்தா ரத்தர் ஏடு பொரும் தாரத்தர்
இட்ட மருந்தாரத்தர் இல் –75–மூன்று சிலேடைகள் —

ஏற்றின் இனம் –ஆற்றலை-வலிமையை மன்னும் –
புள்ளின் இனம் -ஆற்றலை-ஆல் தலை -ஆலமரத்தில் – மன்னும்
ஏரார் வராலின் இனம் -ஆற்றலை-ஆற்று அலை – மன்னும்
அரங்கமே –போற்ற
அமரர்க்கு இட்ட மருந்து -அமிர்தம் -ஆர் அத்தர்–திருக்கரத்தை யுடையவர் –
ஏடு பொருந்து ஆரத்தர் –பூ இதழ்கள் பொருந்திய மாலையை யுடையவர்
இட்ட-இஷ்ட – அரும் தாரத்தர் –அரிய பிரிய நாயகியை யுடையவர் –

————

பாரில் விளையாடும் பாலரும் பார்ப்பாரு மணல்
ஆரிடத்தை நாடும் அரங்கமே –போரைத்
தொடுத்த விராவணனார் தொல் இளையோன் போற்றப்
படுத்த விராவணனார் பற்று –76–

பாரில் விளையாடும் பாலரும் மணல் ஆரிடத்தை நாடும்
பார்ப்பாரும் அண்ணல் ஆரிடத்தை-ஆர்ஷம் -வேதம் – நாடும்
அரங்கமே —
போரைத் தொடுத்த விராவணனார் தொல் இளையோன் -விபீஷணன் -போற்றப்
படுத்த -ஸ்ரீ ரெங்கத்திலே பள்ளி கொண்டு அருளும்
விரா வண்ணனார்-இரவு போலும் கறுமை நிறத்தை யுடையாரைப் பற்று —

————-

பூ மாட்டுச் சந்தைகளில் பூரண கும்பங்களில் சீர்
ஆ மா விலை கொள் அரங்கமே –தே மாலை
அக்கனுடன் முன் பிசைந்தார் அம்புயம் உற்றார் அமர்க்கு
நக்கனுடன் முன் பிசைந்தார் நாடு –77-

பூ மாட்டுச் சந்தைகளில் சீர்-அழகிய -ஆ-பசு – மா விலை கொள் –
பூரண கும்பங்களில் சீர் -ஆ மாவிலை கொள் –
அரங்கமே —
தே மாலை அக்கனுடன்-அஷன் -இராவண குமரன் முன்பு இசைந்தார் -ஹனுமான்
அம்புயம் உற்றார் அமர்க்கு -பாணாசூர யுத்தத்தில் -நக்கனுடன் முன்பு இசைந்தார் —

———-

தண் தட நற் கோயிலையும் தாழித் ததியினையும்
அண்டர் மதிக்கும் அரங்கமே -அண்டினிமை
ஓங்குதிரைக் கந்தரத்தார் ஒண் புவியில் பின்புதிக்கும்
வாங்குதிரைக் கந்தரத்தார் வாழ்வு –78–

தண் தட நற் கோயிலையும் -அண்டர் மதிக்கும் -தேவர் போற்றுகின்ற
தாழித் ததியினையும் அண்டர் மதிக்கும் -இடையர் கடைகின்ற
இனிமை ஓங்கு திரைக்கு-திருப்பாற் கடலுக்கு – அந்தரத்தார்
பின்பு -இனி வரும் காலத்தில்
வாம் குதிரைக் -தாவும் குதிரை -கந்தரத்தார்-கழுத்தை யுடையவர் – —
கல்கி திரு அவதாரம் -ஹயக்ரீவர் திரு அவதாரம் -வாசித்தலை மருவும் மால் இவர்களே –
தனிப்பா மஞ்சரி –இதே ஆசிரியர் திரு வாக்கு –

———

கோங்கு அமையும் சோலையிலும் கோதில் நரர் இடத்தும்
ஆங்கு தரு மஞ்சார் அரங்கமே -ஓங்கு இசையால்
பேறாக்கு வித்தான் பெரும் காலயவனனை
நீறாக்கு வித்தான் நிலம் –79–

கோங்கு அமையும் சோலையிலும் -ஆங்கு தரு -தருவில் -மஞ்சார்
கோதில் நரர் இடத்தும் ஆங்கு தருமம் சார்
தரு மஞ்சு -மழையைத் தரும் மேகம் என்னவுமாம்
அரங்கமே –
ஓங்கு இசையால் பேறு ஆக்–பசுக்கூட்டம் – குவித்தான்
பெரும் காலயவனனை நீறாக்கு வித்தான் நிலம் –முசுகுந்தனைக் கொண்டு காலயவனைக் கொன்று ஒழித்தான்

——————-

தேங்குழலார் மெய்யுமிலும் செய்களிலும் பொன்னியிலும்
ஆங்கலங்கள் மேவும் அரங்கமே -தூங்குமிடம்
அந்தரங்கம் ஓதுவார் அம்புதியார் பூ மகளார்க்கு
அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு –80-நான்கு சிலேடைகள் — 80-

தேங்குழலார் -மகளிர் -மெய்யும் -ஆங்கலங்கள்- ஆபரணங்கள் – மேவும்
இல்லும் ஆம் கலங்கள்-பாத்திரங்கள் – மேவும்
செய்களிலும் ஆங்கு அலங்கள்-கலப்பைகள் – மேவும்
பொன்னியிலும் ஆம் கலங்கள்-தோணிகள் – மேவும்
அம் தரங்கம்-அலை -மோதுவார் அம்புதியார்–கடல்
பூ மகளார்க்கு -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவி -இருவருக்கும் அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு —

———-

மை யணி கண்ணார் கை மருங்கு மருத்துவர்கள்
ஐயம் கொடுக்கும் அரங்கமே -வெய்ய விடக்
கண்டத்தான் அம்புயத்தான் காண்பரியான் இப்பரத
கண்டத்தான் அம்புயத்தான் காப்பு –81–

மை யணி கண்ணார் கை ஐயம் -பிச்சை -கொடுக்கும்
மருங்கு-இடை – ஐயம்-சந்தேகம் – கொடுக்கும்-உண்டோ இல்லையோ என்னும்படி நுட்பமாய் இருக்கும்
மருத்துவர்கள்- ஐ கபம் அங்கு ஓடுக்கும்
அரங்கமே –
வெய்ய விடக் கண்டத்தான்-விக்ஷம் தங்கிய கழுத்தை யுடைய சிவன் – அம்புயத்தான் -பிரமன் -காண்பரியான்
இப்பரத கண்டத்தான் -ஏழு உலகுக்கும் அதிபதி என்றாலும் விசேஷித்து இப் பரத கண்டத்துக்கு தலைவன்
அம் புயத்தான்-அழகிய திருத்தோள்கள் ஸூந்தர பாஹு -யுடையவன் – காப்பு —

————-

ஒப்பு மடைப் பள்ளியிலும் ஊசல் அமளியிலும்
அப்பம் சமைக்கும் அரங்கமே -இப்புவனம்
உண்ட திரு நாவாயார் உற்ற குகன் நாவாயார்
வந்த திரு நாவாயார் வாழ்வு –82–

ஒப்பு மடைப் பள்ளியிலும் அப்பம் சமைக்கும்
ஊசல் அமளியிலும்-படுக்கையிலும் – அ பஞ்சு அமைக்கும்
அரங்கமே –
இப்புவனம் -பூமி -உண்ட திரு-அழகிய – நாவாயார் -நாவுடன் கூடிய திரு வாயை யுடையவர்
உற்ற குகனது நாவாயார் -தோணியை யுடையவர்
வண்டு அதிரும் -சங்கு முழங்கும் -திரு நாவாயார் –திவ்ய தேசத்தை யுடையவர் –

————

மங்காப் புற நகரில் வாசி வரு வீதிகளில்
அங்கா விலகும் அரங்கமே -சிங்காரப்
பூதத்தார் மா கவியார் பொற் கலை முகத்து நட்ட
சீதத்தார் மா கவியார் சேர்வு –83-

மங்காப் புற நகரில்-அங் கா -சோலை -இலகும்
வாசி-குதிரை – வரு வீதிகளில்- அங்கு ஆ விலகும்
சிங்காரப் பூதத்தார் மா கவியார்
பொற் கலை முகத்து -ருசியா முக பர்வதத்திலே
நட்ட -ஸ்நேஹித்த
சீத தார் மா கவியார் –பெருமை வாய்ந்த ஸூக்ரீவன் என்னும் வானர வேந்தை யுடையவன் –

———–

பேதமுறு எந்தப் பிராணிகளும் இல்லு மதி
யாதிரையை நாடும் அரங்கமே -கோதை
மணவாளாராக் கொண்டார் வாய்ந்தவனார் தூங்கப்
பணவாளராகக் கொண்டார் பற்று –84-

பேதமுறு எந்தப் பிராணிகளும் மதி யாது இரையை நாடும்
இல்லும் -மாளிகைகளும் – மதி -சந்திரன் –யாதிரையை -திருவாதிரை நக்ஷத்ரம் நாடும்
அரங்கமே –
கோதை மணவாளார் ஆக்கு ஒண் தார் வாய்ந்த அன்னார் -ஆண்டாள் தன் நாயகனாகச்
செய்வித்தற்காக சூடுகின்ற மண மாலையை யுடைய அப்பெருமான்
தூங்கப் பணம் படம் வாள் அரா-பாம்பு – கொண்டார் —

————

கூடு பெரும் செல்வர் இலம் கோதில் கடை காணம்
ஆடக மாடம் சேர் அரங்கமே -நாடி யுமை
சாரங்க வத்தத்தான் தாமரையான் போற்று விறல்
சாரங்க வத்தத்தான் சார்பு –85—மூன்று சிலேடைகள்

கூடு பெரும் செல்வர் –காணம் ஆடக மாடம் சேர் –காண் அம் ஆடக -பொன் மாளிகை சேர்
இலம்-இல்லம் – காணம் ஆடக மாடம் –காண் அம் ஆடு -மேஷ ராசி -அக மாடம் -சேர்
கோதில் கடை காணம் -கொள்ளு ஆடகம் துவரை – மாடம்-உளுந்து – சேர் –
அரங்கமே -நாடி
யுமை சாரங்க வத்தத்தான் -சார் அங்க அத்தத்தான் -உமா தேவி பொருத்தப்பெற்ற பாதி உடலை உடையவன்
தாமரையான் -நான்முகன்
போற்று விறல் சாரங்க வத்தத்தான் -சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய கையை யுடையவன்
சார்பு —

————–

பக்கமொடு பாமாலை பார்ப்போரும் மன்னவரும்
அக்கரம்பி ரிக்கும் அரங்கமே –மிக்க புகழ்
மன் பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் தீம் கவியார் ஆர்வு –86–

பக்கம் -பக்ஷம் –
பாமாலை பார்ப்போரும் -அக்கரம்பி ரிக்கும்-அக்ஷரம் பிரிக்கும்
மன்னவரும் அக்கரம்பி ரிக்கும் -அ கரம் -தீர்வை -பிரிக்கும்
அரங்கமே –மிக்க
புகழ் மன்–நிலை பெற்ற
பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் -அன்பு ஏயார் -பொருந்தாத கசடர் -தீம் கவியார் -தீங்கு அவியார் –

——–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் தோணிகளால்
ஆற்றைக் கடக்கும் அரங்கமே -சீற்ற மிகும்
துட்டக் கரனார் தொலையச் சரம் தொட்ட
எட்டக் கரனார் இடம் –87–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் -ரயிலாலும் -ஆற்றைக் –வழியைக் -கடக்கும்
அவர்கள்
தோணிகளாலும் -காவேரி – ஆற்றைக் கடக்கும்
அரங்கமே –
சீற்ற மிகும் துட்டக் கரனார் –துஷ்ட கரன் என்னும் அரக்கன் ன்-
தொலையச் சரம் -பாணம் -தொட்ட எட்டக் கரனார்-அஷ்டாக்ஷர த்தை யுடையவர் இடம் —-

—————

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் இரவும் பகலும்
அம்பரி அங்கம் சார் அரங்கமே –தம்ப மதில்
பேர் அரவம் காட்டினார் பீதி தரு மை மடுவில்
ஓர் அரவம் காட்டினார் ஊர் –88–

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் –
இரவும் -அம் பரியங்கம்-காட்டில் சார்
பகலும் அம் பரி-குதிரை – அங்கம் சார்–சவாரி செய்கின்ற – அரங்கமே —
தம்பம் -தூண் மதில் பேர் அரவம்-பெருத்த ஆரவாரம் – காட்டினார் -ஸ்ரீ நரஸிம்ஹ திரு அவதாரத்தில்
பீதி-அச்சம் – தரு மை மடுவில் -விஷம் பொருந்திய குளம் –
ஓர் அரவம்–காளியன் -அங்கு ஆட்டினார் ஊர் —

——————-

நேர்ந்த விரும்பதரை நெற் பகர்வோரும் புகையே
ஆர்ந்த சகடும் போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரையார் எழில் வேங்கட வரையார்
நந்து வரையார் நகர் –89–

நெற் பகர்வோரும் இரும் பதரை போக்கு
புகையே ஆர்ந்த சகடும்–ரயிலும் -இரும்பு அதரை -இருப்புப் பாதையிலே போக்கு
போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரை -சந்த்ர மண்டலம் வரை -ஆர் –பொருந்திய எழில் வேங்கட வரையார்
நம் துவரையார்-துவாரகா பூரி —

—————–

மிஞ்சு மதன் மன்னவர்கள் வேற்றூரார் பண்ணவர்கள்
அஞ்சத் திரமே அரங்கமே -கஞ்சன் என்போன்
ஆரப் புரந்து வைத்தான் அவ்வீடணனை யரசு
ஆரப் புரந்து வைத்தான் ஆர்வு –90-நான்கு சிலேடைகள்

மிஞ்சு மதன் –அஞ்சத் திரமே-அஞ்சு அஸ்திரம் -மேவு
மன்னவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -குடை -மேவு
வேற்றூரார் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -தங்கும் இடம் -மேவு
பண்ணவர்கள்-தேவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -யாகம் -மேவு
கஞ்சன் என்போன் ஆரப் புரந்து வைத்தான் –ஆர் அ புரம் -சரீரம் துவைத்தான் -நசுக்கி அழித்தவன்
அவ்வீடணனை யரசு ஆரப் புரந்து -காப்பாற்றி வைத்தான் -சிரஞ்சீவியாக வைத்தான் –

—————–

தாமப் பொதுவரிலம் தண் வாவி கோபுரம் சீர்
ஆமை மருவும் அரங்கமே -தாமமெனு
மாவா ரண வரையார் வண் கையில் ஆழிக்கு அஞ்ச
மாவா ரண வரையார் வாழ்வு –91–மூன்று சிலேடைகள்

தாமப் பொதுவரிலம் -இடையர் மனை -சீர் ஆமை –அழகிய பசுக்களும் ஆடுகளும் -மருவும்
தண் வாவி -குளம் -சீர் ஆமை-கமடம் – மருவும்
கோபுரம் சீரா மை -மேகம் -மருவும்
தாமமெனும் -இருப்பிடமாகிய
ஆவா ரண வரையார் -ஹஸ்தி கிரியார்
வண் கையில் ஆழி வரை -சக்கர ரேகை – கஞ்ச வரை -பத்ம ரேகை –
மா வாரண வரை–சங்க ரேகை -யுடையார் வாழ்வு —

————-

பொங்கு மத கரிகள் புள்ளிக் கலை யினங்கள்
அங்கரிணி மேனாடு அரங்கமே –தங்கு ததி
தொட்டுண்ட கையினார் தூயவனை தாம்பு அதனால்
கட்டுண்ட கையினார் காப்பு –92–

மத கரிகள்-யானைகள் -அங்கரிணி -பெண் யானைகள் -மேல் நாடும்
புள்ளிக் கலை யினங்கள் -புள்ளி மான் கூட்டங்கள் -அங்கரிணி-பெண் மான் -மேல் நாடு
தத்தி -தயிர்
தூய அன்னை யசோதை
கட்டுண் தகையினார் -கட்டுண்ட பெருமையுடைய தாமோதனார்

————

வாணுதலார் சேர்ந்து இலகு மஞ்சமதில் மாலைகளும்
ஆண் அழகரும் தூங்கு அரங்கமே -வாணன்
கரக்கப் பரிந்தார் கனி மா வலி பால்
இரக்கப் பரிந்தார் இடம் — 93–

மஞ்சமதில் மாலைகளும் தூங்கு -தொங்குகின்ற
மஞ்சமதில் ஆண் அழகரும் தூங்கு -கண் வளர்ந்து அருளுகின்ற
வாணன்-பாணாசுரன் – கரம் கப்பு -கைக்கூட்டம் – அரிந்தார் -அறுத்து அருளியவர்
மா வலி பால் இரக்கப்–யாசிக்கப் – பரிந்தார்–மனம் உவந்தவர் – இடம் —

————

தாண்டு வடவைகளும் தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்
ஆண்டுரகம் தேடும் அரங்கமே -காண்டவனம்
அங்கிக் களித்தார் அடவியில் நீர்த்தோர் இடத்துத்
தங்கிக் களித்தார் தலம் –94–

தாண்டு வடவைகளும்–பெண் குதிரைகளும் -ஆண்டுரகம் –ஆண் துரகம் -குதிரை தேடும் –
தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்-ஆண்டுரகம்–ஆண்டு உறக்கம் -பாம்பு – தேடும்
காண்டவனம் அங்கிக் களித்தார் -அங்கி -அக்னி பகவான் -அங்கிக்கு அளித்தார்
அடவியில் -காட்டில் -நீத்தோர் –ரிஷிகள்- இடத்து-ஸ்ரீ ராமனாகத் தங்கிக் களித்தார் –

—————-

தக்க புராணம் படிப்போர் தார் வேந்தர் வேதியர் கை
அக்கதைகள் மேவும் அரங்கமே –மிக்க வருள்
செய்ய கலம்பகத்தான் சீர்த்தரசன் அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் சேர்வு –95–மூன்று சிலேடைகள்

தக்க புராணம் படிப்போர் –அக்கதைகள்-சரித்திரங்கள் – மேவும்–
தார் வேந்தர் –அக்கதைகள்–கதாயுதம் – மேவும்–
வேதியர் கை அக்கதைகள்-அக்ஷதைகள் – மேவும்
அரங்கமே —
மிக்க வருள் செய் யகல் அம்பகத்தான் -அம்பகம் -கண் –
சீர்த் தாசன் –ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -என்ற ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் –ஸ்ரீ திருவரங்க அலம்பகம் -என்ற அழகிய ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தை யுடையவன் –

————

வம்பு மலர் வாவி மாட முறு மடவார்
அம்பினலை வாரும் அரங்கமே –பம்பு மணச்
சாந்தப் புரத்தார் தரணியில் எப்போர் தனிலும்
தாந்தப் புரத்தார் தலம் –96–

வம்பு -வாசனை மலர்
வாவி –அம்பின் அலைவு ஆரும்-
மாட முறு மடவார் -அம் பின்னலை வாரும்
அரங்கமே —
பம்பு -நிறைந்த -மணச் சாந்து அப்பு உரத்தார் -திரு மார்பை யுடையவர்
தரணியில்-பூமியில் எப்போர் தனிலும் -தாம் தப்பு உரத்தார் -வலிமையை யுடையவர் —

—————-

கண்டு மொழி யார் நடனம் காண்போர் வருவி புதர்
அன்டுறக்கம் விட்ட அரங்கமே -கண்டு தொழா
மான வருடம் பெய்தார் மாதர் நிரை யுவப்பக்
கான வருடம் பெய்தார் காப்பு –97–

கண்டு மொழி யார் -கற்கண்டு போலும் இனிய சொல்லை யுடைய மகளிர்
நடனம் காண்போர் –அன்டுறக்கம் விட்ட-
வரு விபுதர் -தேவர் -அன்டுறக்கம் விட்ட –அண்-பொருந்திய -துறக்கம் -சுவர்க்கம் -விட்ட
அரங்கமே –
கண்டு தொழா மான வருடம் பெய்தார் -மானவர் -மானிடர் உடம்பு எய்தார்
மாதர் நிரை –மாதரும் ஆ நிரையும்
யுவப்பக் கான வருடம்-வேணு கானம் ஆகிய மழை – பெய்தார் –

————–

சீர் அணுகு வேதியர்கள் தேரோடு நல் வீதி
ஆரவாரம் மோதரங்கமே -ஏரிறகு
வாய்த்த விருந்தா வனத்தார் வந்து தொழா வானிரை முன்
மேய்த்த விருந்தா வனத்தார் வீடு –98-

ஆர -மிகுதியாக வாரம் ஒது
வீதி ஆரவாரம் மோது
வாரம் -வேதம் ஓதும் ஒரு முறை
ஏரிறகு வாய்த்து அவிரும் தாவு அனத்தார் -பிரமன்
ஆன் நிரை -பசுக்கூட்டம்
மேய்த்த விருந்தா வனத்தார் –பிருந்தாவனத்தை யுடையவர் வீடு –

————

மண்டலத்து மானிடரும் வண் புட் குழாமும் சீர்
அண்டத் துதிக்கும் அரங்கமே –அண்டர் இலம்
சென்று உயரம் தாங்கு உறி ஆர் தீம் ததி யுண்டார் நினையார்
வன்று உயரம் தாங்கு உறி ஆர் வாழ்வு –99–

மானிடரும் சீர் அண்ட- துதிக்கும்
வண் புட் குழாமும் சீர் அண்டத்து உதிக்கும்
சென்று உயரம் தாங்கு உறி ஆர்
நினையார் வன் துயரம் தாம் குறியார் -கருதார் –

———

நம் மானிட வீரர் நாலு புறம் சூழி குயில்
அம்மா வின் மேவும் அரங்கமே –வெம்மான் எய்
வைய மருங்கோலத்தர் மண்ணிடந்த கோலத்தர்
வைய மருங்கோலத்தர் வாழ்வு –100–ஐந்து சிலேடைகள் —

நம் மானிட வீரர் –அம்மா வின் -அம் மா வில் -மேவும்
நாலு புறம் -அம்மா வின்–அம் மா இல் – மேவும்
சூழி -அம்மா வின் -அம் மாவில்- யானையில் -மேவும்
குயில் அம்மா வின் மேவும்-அம் மாவில் -மா மரத்தில் -மேவும்
அம்மா வின் -அம மா திரு மகள் இல் -மேவும்
அரங்கமே —
வெம்மான் –மாரீசன் -எய் வை–கூர்மை -யமரும் -கோல் -பாணம் -அத்தர்–திருக்கரத்தை யுடையவர்
மண்ணிடந்த கோலத்தர் -ஸ்ரீ வராஹ ரூபத்தை யுடையவர்
வையம் அருமை கோலத்தர்–அரிய ஸுந்தர்யத்தை யுடையவர் –
வாழ்வு —

——————————-

ஆனைக்கும் கோபுரத்துக்கும் சிலேடை வெண்பா

கும்பம் மருவிடலால் கோவை அணுகிடலால்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –வம்பு மலர்த்
தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே
ஆனை நிகர் கோபுரமே யாம்

கும்பம் மருவிடலால் –யானை மத்தகத்தைப் பொருந்தி இருப்பதாலும் கோபுரங்கள் ஸ்தூபிகளைப் பொருந்தி இருப்பதாலும்
கோவை அணுகிடலால் -யானை அரசரைச் சேர்ந்து இருப்பதாலும் கோபுரங்கள் ஆகாயத்தை அளாவி இருப்பதாலும்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –இவ்வுலகோர் யானை மேல் ஏறிச் செல்லும்படி இருப்பதாலும் -ஏறுமாறு படிந்து கொடுப்பதாலும்
கோபுரங்கள் மனிதர்கள் ஏறும்படி படிக்கட்டுகள் உடன் பொருந்தி இருப்பதாலும்
வம்பு மலர்த் தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே ஆனை நிகர் கோபுரமே யாம்

———–

நம்மாழ்வாருக்கும் திருத்தேருக்கும் சிலேடை வெண்பா

எட்டு எழுத்தினைத் தேர் இரண்டின் மகிமை தேர்
மட்டில் சரம கவி மான்மியந்தீர் -சிட்ட்ரைத் தேர்
ஏர் மாறன் மா மதம் தேர் என்று முழக்கம் காட்டும்
சீர் மாறன் ஏறி வரும் தேர்

தேர் -தெளியுங்கோள் என்னும் பொருளில்
இரண்டு த்வயம்
சரம கவி மான்மியம் -சரம ஸ்லோக மஹிமை
ஏர் மாறன் மால் தன் மா மதம்-ஸ்ரீ வைஷ்ணவ மதம்
மாறன் ஏறி வரும் தேர் தேர் என முழக்கம் காட்டும்

————-

ஸ்ரீ ரெங்கநாதன் பேரில் நீரோட்டக வெண்பா

அரங்கத் தகி யிணையில் அண்டியே யண்டர்
தரங்கக் கடற்றார் அணியார் –சிரங்களினால்
ஏத்திட நன்னித்திரை செய் எந்தாய் அடியேனை
காத்திடலே நின் தன் கடன்

அகி அணை -ஸ்ரீ சேஷ சயனம்
அரங்கம் -ஸ்ரீ ரெங்க விமானம்
உதடு ஒன்றோடு ஓன்று ஒட்டாமலும் குவியா மலும் உள்ள எழுத்துக்கள் ஆகிய
உ ஊ ஓ ஒ ஒவ் –மேற்படி -உயிர் மெய் எழுத்துக்கள் -ம ப வ -எழுத்துக்கள்
வராமல் பாடுவது நீரோட்டகம் ஆகும் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யை யுடைய சீர்மை ஆராயும் சீர்மைத்தே —

October 24, 2021

உடல் ஆராய்ச்சி -பொய் நின்ற ஞானம் -நமன்தமர் உடல் ஆராய்வார்
உயிர் ஆராய்ச்சி -இதுவே மெய் நின்ற ஞானம் –
சிங்கப்பிரானின் பெருமை ஆராயும் சீர்மை -தெள்ளிய சிங்கத் திருவடிக் காவலர் நம்மாழ்வார் ஒருவரே
நாதஸ்ய தூந முசிதா நரஸிம்ஹ மூர்த்தே -என்றே ஆழ்வாரை தேசிகர் கண்டு களிக்கிறார் –
கற்றதால் ஆய பயன் என் கொல் வால் அறிவன் நல் தாள் தொழார் எனின் —
இக் கல்வியே ஆகம அறிவு என்பர் பரிமேல் அழகர் –
இதுவே மெய் நின்ற ஞானம்

மறை கொண்டு ஆராயும் ஓர் அறிவே ஆர் உயிர் நின்ற அப்பன் பொன்னடிப்பால் நம் சென்னியைத் தாழ்த்துவைத்து வாழ்விக்கும்
அனைத்து உலகுக்கும் ஓர் உயிராய்க் கரந்து எங்கும் பரந்து விளங்கும் பரம்பொருளின் பொன்னடி ஆராய்ச்சியே ப்ரஹ்ம வித்யை –
பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்தக் கற்றவோ பாதி என்பர் நம்பிள்ளை

பாரதத்தைப் பணித்தானும் நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம்மறைப் பொருளே என்பர் கம்பநாட்டாழ்வார்
இரு கண்களும் காண்பது கண்ணனாம் அறம் என்னும் மறைப்பொருளையே

தருமவரும் பயனாய திருமகளார் தனிக்கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவ்வுணர்வு உற்றாரையே முழுதுணர் நீர்மையினார்

தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி -என்பர் வால்மீகி பகவான்

கண்ணன் கழலிணையே ஆய்ந்து உருகி ஒருப்படும் சீரியரே பொன்னுலகு ஏகும் புண்ணியர்

ஆழ்வார் ஆராய்ந்து புலப் படப் புகுந்தது கண்ணன் பெருமையை
புலப்பட்டது ஆழ்வார் பெருமையே
புலப்படுத்தினவன் கண்ணனே

கண்ணனையே ஆழ்வார் ஆராய்வார் -ஆழ்வாரையே கண்ணன் ஆராய்வான் –
இருவரும் நன்கு ஆராய்ந்தே ஒருவர் ஒருவர் பெற்றது –
ஆழ்வார் பெற்ற பேறே கண்ணன் –கண்ணன் பெற்ற பேறே ஆழ்வார் –

அர்ஜுனனை வியாஜ்யமாக்கி ஊழி முதல்வன் தானே மன்னருள் சுரந்து மெய்ம்மை காக்கும் அறத்தையே ஓர் மறையாய் விரித்து
தன் அருங்கலை ஒருங்கிய மறை அனைத்துக்கும் ஒரே இலக்கு பொற்கழலே என்று உலகு அனைத்தும் கண் கொண்டு காணுமாறு
கை கொண்டு காட்டி முழு முதல் குருவாயத் திகழ்ந்த அன்று தன் செம்பவளத் திரள் வாய் கொண்டே மறை முடி அமிழ்தம் உமிழ்ந்து
தன் திருவடி நிலையைத் தானே நீராட்டுவித்து அருளினான் –
அப்பன் திருப்பவளம் உமிழ்ந்து நீராட்டு வித்த அத்திருவடி நிலை கான் நம் சடகோப பெருஞ்செல்வர் –
கண்ணன் தானே தன் கழலிணையை ஆழ்வார் திருமுடிக்கண் புனைவித்து
ஆழ்வாரையே தன் கழலிணைக் காவலராக முடி சூட்டி அருளிய சரிதையின் பெருமை ஆராயும் சீர்மைத்தே
என்பதே பெரிதும் பொருந்தும் –

உபநிஷதம் உதாராம் உத்வ மந்ந்வ அபி லஷ்யே சரணம் உப கதாந்ந த்ராயதே சார்ங்க தந்வா –
தந்தை என நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே —
ஸ்ரீ பகவத் கீதையையே -சடாரே சரீரம் மஹத் -என்பார்களே
யமே வைஷ வ்ருணுதே –
பஹு நாம் ஜென்ம நாம் அந்தே –

திருமாலே தானே திரு மாறனும்
அப்பனை ஆராயும் அற நெறி வகுத்தவர் ஆழ்வார்
ஆழ்வாரை ஆராயும் அற நெறி வகுத்தவன் அப்பன்
ஆர் என்னை ஆராய்வார் –நம் கண்ணனும் வாரானால் –என்று இவர் செந்நாப் போது
அவிழ்ந்த வாறே மறை முடி செழித்து மணம் கமழ்ந்தது –

இம் மெய்ப் போது அவிழ்த்து மகிழ்ந்தவன் கண்ணனே
இப் பெரு நல் உதவிக் கைம்மாறு தெரிக்கவே ஏனையர் தம்மை ஆராய வல்லர் அல்லர் அன்று என்று
அருளிச் செய்யும் தெய்வ மாக் கவிக் குறிப்பு ஆராயும் சீர்மைத்தே
கண்ணன் திருவருளால் அகக் கண் விழித்து அவன் பொன்னடி ஆராய்ந்தார் இழைக்கும்
மண மொழியை ஒழியப் பேசுமவை எல்லாம் துஞ்சுமவர் கண்ட கனவே யாம் –என்று
அன்றோ ஆழ்வாரது கவிக்குறிப்பு

அகக்கண் செழித்தோர் சில தறுவாய் துஞ்சினாலும் கனவிலும்
அவர்கள் மணமே உணர்வர் —
மண மொழியே பகர்வர் –
மங்கல வீதி வலம் செய்து மண நீர் அங்கு அவனோடே உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்டவே கனாக் கண்டேன் என்பர் –
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோ நித்தம் –
ஆழ்வாரும் கண்ணனும் ஒருவரை ஒருவர் அளப்பரிய அவா வுற்றுப் பெற்றே விடாய் தீர்த்தனர் –
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி
ஸம்ஸ்லேஷித்து அருளினான் -நம்பிள்ளை

அப்பன் திருவடியும் ஆழ்வார் திருமுடியும் கலந்தே நீர்மை பெற்றன
உபநிஷத்தும் திருவாய் மொழியும் கலந்த நீர்மை
உண்மையும் அறமும் ஒருங்கிய பான்மை
இவை ஒன்றிய சீர்மை விளக்கியவர் மதுரகவியார்
தொல் வழி நின்று இவர் ஏற்றியதே சான்றோருக்கு நல் வழி விளக்காம்

ஒண் தமிழாம் அருள் கொண்டு தமிழ் ஆரணக்
கொண்டல் எனும் சடகோபன் அவன் தான்
அண்டம் அளந்த பிரான் அடி என்றே
பண்டு ஒளி நண்ணிய பண்டிதர் கண்டார்

அருளிச் செயல்களின் த்ருஷ்ட அத்ருஷ்ட சக்தியினால் ப்ரத்யக்கான அவனைப்
ப்ராக் போலே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளி
அத்ருஸ்யத்தை த்ருஸ்யமாக்கி
விஷயீ என்னும் ஞான ஸ்வரூபனான ஈஸ்வரன் என்னும் உள் பொருளை விஷயம் போலவே
சாஷாத்காரிக்கச் செய்து அருளுவதாலேயே
பகவத் விஷயம் –
தீர்க்க சரணாகதி ஸாஸ்த்ரம் -திருவாய் மொழி என்னும் இன்ப வெள்ளம் –

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
‘இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது
அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?

‘ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84

தது அந்த ப்ரஹ்மம் -அறிய படுகிறதோ பார்க்க படுகிறதோ அடைய படுகிறதோ ததேவ ஞானம் –
ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்

பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

—————–

அகார வாஸ்யனே அரவணை அமலன்
ஆகார நியமம் ஆரியருக்கு அழகு
இல்லறத்து இருந்து இருடீகேசன் அடி சேர்
ஈசற்கு ஈசன் இலக்குமி நாதன்
உயர் நலம் உடையவன் உம்பருக்கு அதிபன்
ஊரார் உகப்ப உத்தமர் பேணு
எடுப்புமிலி ஈசன் எந்தை தந்தை
ஏரகத்தோனே ஏற்றம் உடையான்
ஐவை அர்த்தம் ஐயங்கார் கொள்கை
ஒப்பற்றவன் கான் ஒரு தனி முதல்வன்
ஓதல் தன்னுடன் ஒழுக்கத்தோடு இரு
ஒவ்வியம் அவித்தான் ஓவ்தார்ய புருஷன்

—————-

ஏவல் செய் அடியேன் நானே
இவருக்குத் தம்பி தொண்டன் அஹம் அஸ்மி ப்ராதா குணர் க்ருத தாஸ்யன்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர்
தண்ணீர் கொண்டு வந்தாயா சொம்பு கொண்டு வந்தாயா -போல்
தேகமும் உள்ளில் உறையும் ஆத்மாவும்
யானே நீ என்னுள் உறைவதால்

————-

அருளிச் செயல்களில் ஆழ்ந்த சிறுவர் கேள்வியும் பதிலும் –

கண்ணா -உன்னை நான் இன்று பன்னிரு பாட்டுக் கேட்க நீ ஓன்று கூட சொல்ல வில்லை யன்றா

1-கண்ணா நான்முகனைப் படைத்தானே -பெரியாழ்வார்
2- உன்னை -உன்னையும் ஓக்கலையில் கொண்டு –பெரியாழ்வார்
3-நான் -நான் கூறும் கூற்றாவது இத்தனையே –பெரிய திருவந்தாதி
4-இன்று -இன்று வந்து இத்தனையும் -நாச்சியார்
5-பன்னிரு –பன்னிரு திங்கள் -பெரியாழ்வார்
6-பாட்டு -பாட்டு முறையும் -நான்முகன்
7-கேட்க -கேட்க நான் உற்றது உண்டு -திருக்குறும் தன்னடக்கம்
8-நீ -நீயும் திரு மக்களும் நின்றாயால் –முதல் திருவந்தாதி
9-ஓன்று -ஓன்று உண்டு செங்கண் மால் -பெரிய திருவந்தாதி
10-கூட -கூடச் சென்றேன் இனி என் –திருவாய் மொழி
11-சொல்ல -சொல்ல மாட்டேன் அடியேன் -திருவாய் மொழி
12-இல்லை -இல்லை அல்லல் எனக்கேல் இனி -திருவாய் மொழி
13-அன்றா -அன்றாயர் குலக்கொடி யோடு -பெரிய திருமொழி

அமரம் காவியம் மாகம் சம்பு நாடகம் அலங்காரம் தற்கம் வேதம் வேதாந்தம் புராணம் பாரதம் ராமாயணம்
திருவாய் மொழி எல்லாம் சொல்லுவாயோ

1-அமரம் -அமர வோர் அங்கம் ஆறும் -திருமாலை
2-காவியம் -காவியங் கண்ணி எண்ணில் -பெரிய திருமொழி
3-மாகம் -மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் -பெரிய திருமொழி
4-சம்பு -செறி தவச் சம்பு -பெருமாள் திருமொழி
5-நாடகம் -நாடகம் செய்கின்றனவே -திருவாய் மொழி
6-அலங்காரம் -அலங்காரத்தால் வரும் மாயப்பிள்ளை -பெரியாழ்வார்
7-தற்கம் -தற்கச் சமணரும் -இராமானுச நூற்றந்தாதி
8-வேதம் -வேதம் வல்லார்களைக் கொண்டு -திருவாய் மொழி
9-வேதாந்தம் -வேதாந்த விழுப்பொருள் –பெரியாழ்வார்
10-புராணம் -இலிங்கத்திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி
11-பாரதம் –பன்னி உரைக்கும் கால் பாரதமாம் -பெரிய திருமடல்
12-ராமாயணம் -படி கொண்ட கீர்த்தி இராமாயணம் எனும் பக்தி வெள்ளம் (ராமானுச )
13-திருவாய் மொழி -திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை (ராமாநுச )
14-எல்லாம் -மற்றை யமரர் எல்லாம் (திருவாய் )
15-சொல்லு-சொல்லுவான் சொற் பொருள் (பெரிய திருமொழி )
16-வாயோ -வாயோர் ஈர் ஐஞ்சூறு நுதங்கள் (பெருமாள் திருமொழி )

——–

ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னை திருமணம்
காமம் க்ரோதம் லோபம் மோஹம் மதம் மாத்சர்யம் அஸூயை -போக்கி நம்மைக் கைக் கொள்ளுகிறான்

இரண்டு மல்லர்களை மாட்டியது -நீர் நுமது -என்ற இவை வேர் முதல் மாய்த்து

குவலயாபீட நிரசனம் -இந்திரியங்கள் மத களிற்றை அடக்கி

மாலாகாரர் உகந்து அளித்த பூ பெற்று மகிழ்ந்தது போல்
அஹிம்ஸா பிரமம் புஷ்பம் புஷ்பம் இந்திரிய நிக்ரஹ -ஸர்வ பூத தயா புஷ்பம் -புஷ்பம் ஷமா -புஷ்பம் விசேஷத –
ஞாதம் புஷ்பம் -தபஸ் புஷ்பம் -த்யானம் புஷ்பம் -ததைவ ச ஸத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் —
எண் வகைப் பூவையும் சிஷ்யர் பக்கலில் செழித்து வளரக் கண்டு ஹ்ருஷ்டராவார்

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆழ்வார்களும் நவராத்திரியும் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

October 23, 2021

ஸ்ரீ ஆழ்வார்களும் நவராத்திரியும்
கொலு
மணல் வீடு -சிற்றில் இழைத்து விளையாடி விளையாட

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-–2-3-
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்–2-8-
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா–2-9-
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்–2-10-
மண் பொம்மை இருக்கும் கொலுவில்

ஏலோர் எம்பாவாய் –
ஏல் கேள்
ஓர் பின்பற்று
பாவாய் பாவை வடிவு
நாராயணனின் திரு வடிவை மணலில் வடித்து
மழையே –மண் புறம் பூசி மெழுகு ஊற்றினால் போல் -பொம்மை பண்ணும் முறை
உள் பூச்சு -மெழுகு -வெளிப்பூச்சு -மெழுகை உருக்கி எடுக்க
நெஞ்சையே கொண்டு போனானே -உதாரணம் உள்ளம் கவர்வதை –

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று –
மண்ணைப் புறம்பே பேசி மெழுகி உள்ளில் மொழுக்கை வெதுப்பி ஊற்றுமா போலே ஊற்றும் –
உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்த்து-

நல் வேங்கடத்துள் நின்ற-
உங்களுக்குச் சென்று கூடிக் கொள்ளலாம் படி அணித்தாக நிற்கிறவர் –

அழகப பிரானார் தம்மை –
என்ன இப்பாடு படுத்துகைக்கு ஈடான பரிகரத்தை உடையவர் –

யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று –
நெஞ்சிலே பிரகாசித்து –
அணைக்கக் கோலி கையை நீட்டி அகப்படக் காணாமையாலே நோவு படுகை அன்றிக்கே-
நெஞ்சிலே பிரதி பாசிக்கும் படியே நான் அணைக்கும் படி பண்ணி –
உஷையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே –

என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே-
என்னை நெருக்கிக் கொண்டு
அப்போது இது தான் தேட்டமாய் இருக்கும் இறே
அவனைக் கூட்டி வைத்து ஊற்றுவாயாக -என்றபடி –

வீற்று இருந்து -ஏழு உலகும் தனிக்கோல் -செய்ய நம்மாழ்வார்
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–7-10-1-
கொலு -அழகுடன் வீற்று இருப்பது
கல்வி -மேன்மை ka
அகல் -கடினமாக -ga
கொலு வீற்று இருப்பது
அரசன் போல் கொலு பொம்மைகள் அமைப்பு
ஸ்ரீ வைகுண்ட நாதன் கொலு வீற்று இருந்து ஆட்சி செய்கிறான் –
ஒற்றைப்படை
ஏழு படி நிறைய பேர் வைப்பார்கள்
மேலே ஸ்ரீ மன் நாராயணன் கொலு வீற்று இருந்து –
பிராட்டி உடனே

அஷ்ட லஷ்மி
லஷ்மீ ஹயக்ரீவர்
ராமஜெயம்
நினைவூட்டவே
ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ஜெயந்தி போல் இந்த பத்து நாள்களும்

தமர் உகந்தது –பொய்கையார்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–

சாரங்க பாணி தனது திருநாமத்தையே ஆராவமுதன் என்று ப்ரஸித்தமாகக் கொண்டானே
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

மணல் வீடு கட்டி குழந்தைகள் மண் உருண்டை ஸ்வீ குறித்த எம்பெருமானார்

கொலுவில் ஸ்ரத்தை இருந்தால் அதிலேயே ஸாந்நித்யம் உண்டே

இறை அனுபவமே முதல் பலன்
கல்வி வீர செல்வம் -ஆனு ஷங்கிகம்
சீதா கல்யாணம் கீதா உபதேசம் வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன் -ஸூந்தர காண்ட-நேராகக் காணும் அனுபவம்
set
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னும் வீற்று இருந்த அம்மான் தன்னை அவன் இவன் என்று ஏத்தி -குலசேகரப் பெருமாள்
அவனே தான் இவன் -த்ரேதா யுக ராமரே இன்று இங்கே நமக்காக கோவிந்த ராஜராக சேவை –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -சரீரீ சரீர

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

உடல் மிசை உயிர் எனக்கரந்து பரந்துளன்

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
ஆகவே கொலுவில் எல்லாமே வைக்கிறோம்

நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓதார் கற்கின்றது எல்லாம் கடை -நான்முகன் -54-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

ஸமோஹம் சர்வ பூதாநாம் உணர்வு வருமே

நவ கிரகங்கள் நவத்வாரம் நவ படிகள்
கீழ் ஓர் அறிவு செடிகள் -தெப்பக்குளம்
சங்கு நத்தை ஈர் அருவி பிராணிகள்
கரையான் எறும்பு ஊர்வன