Archive for September, 2021

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் — மருந்து -பத பிரயோகங்கள் —

September 18, 2021

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்–பெரியாழ்வார் -2-7-1-

அரு மருந்து ஆவது அறியாய் –
நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

அரு மருந்து ஆவது அறியாய்
பெறுவதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறாய் இல்லை –
இவன் ஆரா வமுது இறே
இது கடல் படா அமுது இறே
ஆகை இறே அரு மருந்து ஆயிற்று –

மருந்து -அம்ருதம்
இம் மருந்து தான்
சந்நிதி பண்ணின போது போக்யமுமாய்
நீங்கின போது சத்தா நாஸ பரிஹாரமுமாய் இறே இருப்பது –

————

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –

மருத்துவ பதம் -இத்யாதி
மருத்துவனானவன் சமைக்கிற ஒவ்ஷதத்திலே -பாகம் பார்த்து செய்யாத போது –
அது கை தவறுமா போலே –
இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள்
கை கழிந்தாள் என்னும் வார்த்தை லோகத்தில் உண்டாவதுக்கு முன்பே

ஒருப்படுத்திடுமின் -இத்யாதி
தன்னுடைமையை -மகா பலி -என்னது -என்று இருக்க
விரகாலே அவன் பக்கலில் நின்று வாங்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் பக்கலிலே
இவளை நீங்களே சேர்த்து விடும் கோள் –
நீங்கள் சேராத போது-இவள் ஸ்வபாவத்தாலும் இரண்டு தலையும் சேர்ந்தே விடும்
ஆன பின்பு ஏற்கவே நீங்களே சேர்த்து விடும் கோள் என்று த்வரிப்பிக்கிறார்கள்

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஆரோக்யாதிகளுக்கு(ஆதி -ஆயூஸ்ஸூக்கள்-உயர -இளைக்க -இத்யாதிகள் ) ஹேதுவாக ஓவ்ஷதங்கள்
சமைப்பார் பாகம் பார்க்குமா போலே
பருவம் தப்பாமல் பார்க்க வேணும் இறே பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு
அது தப்பினாள் என்னும் வார்த்தை பிறப்பதற்கு முன்பே

ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே
வரையாதே திரு உலகு அளந்து ரஷித்த ஸர்வ ரக்ஷகன் பக்கல் நெஞ்சு
ஒருமித்துக் கொண்டு போய் விடப் பாருங்கோள்

இடுமின்
கொண்டு போய் இட்டு வைக்கப் பாருங்கோள் -என்னுமாம் –

ஸ்வரூபானுரூபமான புருஷார்த்தத்திலும் காட்டில்
விஷய அனுரூப புருஷார்த்தம் உத்தேச்யம் என்று அறுதியிட்டுச்
சரம பர்வ ஸ்திதியை பிரதம பர்வத்திலே கொண்டு போய்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
சேர்க்கப் பாருங்கோள் என்கிறது –

————

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும்  மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா –
மருந்தாய் இருக்கை அன்றிக்கே –
மருந்து அறிவதும் செய்யும் –

இது தான் –
மலை மேல் மருந்துமாய் –
ஏக மூலிகையுமாய் –
ஸக்ருத் சேவ்யுமாய்-
பலியாத மருந்து பல காலும் சேவித்தாலும் பலியாது இறே

இவ் ஒவ்ஷதம் தான்
வேறு ஒரு ஒவ்ஷதம் பொறாத அளவு அன்றிக்கே –
மீண்டு தன்னையும் பொறாது

மருத்துவன் -என்று ஆசார்யன்
ஆய் – -என்று ஏறிட்டு கொண்டான் என்றது
ஆகையால் இறே-
பீதக வாடைப் பிரானார் வந்து இவரை -இராப்பகல் ஒதுவித்தது –

மா மணி வண்ணா
மருந்து இருக்கிறபடி –
மணி மந்திர ஒவ்ஷதம் -என்னக் கடவது இறே

மணியும் –
மந்த்ரமும் –
ஒவ்ஷதமும் -நாட்டுக்கு வெவ்வேற

இங்கு எல்லாம் ஒரு தலைத்த விஷயம்

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரம் என்று
நெஞ்சுக்கு இனிய மந்த்ரமும்

மறவாத மந்த்ரமும் –
வாழும் மந்திரமும் -இது இறே
அச்சுதன் அமலன் (3-4 )இறே
நச்சு மா மருந்தம் -(3-4 )
நழுவ விடாததுமாய் –
ஹேயத்தைக் கழிக்குமதாய்  –
ஆசைப்படும் மருந்து இறே –

வைப்பாம் மருந்தாம் ( 1-7-5 )-என்று
இரண்டும் ஒன்றான மருந்து இறே –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே (மூன்றாம் திருவந்தாதி )-என்று மூன்றும் ஒன்றான மருந்து இறே

(மருந்து அநிஷ்ட நிவர்த்தக உபாயம்
பொருள் இஷ்ட பிராப்தி உபாயம் -சாதனம்
அம்ருதம் ப்ராப்யம் )

பொருள்-உபாயம் -சமஸ்த வஸ்து ஹீநோபி –
அம்ர்தம் ப்ராப்யம் –
மருந்து -விரோதி நிவர்தகம் -பந்தம் அறுப்பதோர் மருந்து -என்னக் கடவது இறே
என்றும் ஒன்றான மருந்து இறே

தீர் மருந்து இல்லா ஐந்து நோய்க்கு ஆர் மருந்து ஆகுவார் -(திருவாய் – 7-1-5 )
மருந்து -என்று அஞ்ச வேண்டாதபடி தீர் மருந்தான மருந்து இறே

தீர்க்கும் மருந்து –
ஊருகிற பாம்புக்கு தடை இடுமா போலே –
வருகிற நரகத்தை தீர்க்கும் மருந்து –
அற்றவர்கட்கு அரு மருந்து (பெருமாள் திருமொழி )-என்ன கடவது இறே

ஆனை தன் பலம் அறியாதாப் போலே –
அரு மருந்து ஆவது அறியாய் -என்ன கடவது இறே –

ஆர்க்கும் அறிய ஒண்ணாத பிரேம வியாதியும் அகப்பட தீரும் என்னும் படி
கை கண்ட மருந்து இறே –

போக மகிழ்ச்சிக்கு மருந்து (9-3 )-என்று
ஒரு விபூதியாக கொண்டாடும் மருந்து -இறே

மறு பிறவி தீர்க்கும் மருந்து
மருத்துவனைச் (மருந்தகாகச் )சொல்லி –
மருந்து செய்யும் கார்யம் சொல்லுகிறது மேல் –

வருகிற ஜன்மங்களைப் போக்கி தவிர்க்கை யாவது –
வீடு அறுக்கை
மறுமைக்கு மருந்தினை (பெரிய திருமொழி -7-10 )-என்று சொல்லக் கடவது இறே

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

—————-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-ஸ்ரீ நாச்சியார் திருமொழி-12-2-

பாணியாது என்னை மருந்து செய்து -பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பாணித்தல் -காலம் தாழ்த்தல் —
காதல் நோயைத் தீர்க்கப் பரிஹாரம் செய்தல்
தாழாதே எனக்கு வேண்டும் பரிஹாரம் பண்ணி –

பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பண்டு -சம்சஸ்லேஷ நிலை
பண்டு பண்டு -முந்திய நாயகனைப் பற்றி அறியாத நிலை
சம்ஸ்லேஷத்துக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாக்கப் பார்த்தி கோளாகில்-
கலக்கப் புக்கவன்று தொடங்கி-மெலிவுக்கு இறே கிருஷி பண்ணிற்று –

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
மாணியுருவாய் –
உண்டு என்று இட்ட போதொடு -இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதொடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையவனாய்

யுலகளந்த மாயனைக் காணில் –
த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனைக் காணில் –
குண ஜ்ஞானத்தால் ஜீவித்து இருக்கும் அவஸ்தை இல்லை என்கிறது
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருக்கும் -8-3- நிலை தாண்டிற்றே

தலை மறியும்-
தொடருகிற பாம்பை திரிய விடுவிக்குமா போலே –
பிரிவாற்றாமையால் வந்த நோய் தீரும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் –
உங்கள் ஆணையே -உங்கள் மேல் ஆணை என்றபடி
நீர் என்னை நோக்க வேண்டில் -என்னுதல்
நான் தெரிந்து இருந்து உங்களுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் படியாக
என்னை நோக்கப் பார்க்கில் -என்னுதல்

ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-
அவன் தீம்புக்கு பெற்ற தாய் -பெரு நிலை -துணை -நிற்கும் ஊரிலே-
என்னைக் கொண்டு பொய் போகடப் பாருங்கோள்-
அங்கனம் தீமை செய்வார்களோ நம்பீ-ஆயர் மட மக்களை –பெரிய திருமொழி -10-7-11-என்று இறே அவள் சொல்லுவது

———–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்

பரம பிராப்யமாய் –
நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை –
உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று

பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்

தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————–

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—ஸ்ரீ பெருமாள் திருமொழி- 5-4-

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்
பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து
அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே
அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ
நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக

வுன தருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்

அடியேனே—
அடியேன் ஆகையாலே –
என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்

தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து
நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் –
அன்றியே –
குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம் என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே
இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

—————-

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -ஸ்ரீ பெரிய திருமொழி—5-7-2-

பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும்
இப்படிப் பட்ட சம்சார சம்பந்தத்தை போக்கக் கடவதான பேஷஜமும்
( நிர்வாணம் பேஷஜம் பிஷக் அவனே )
இஸ் சம்சார பந்தம் அற்றால் இருக்கக் கடவ நிஷ்கல ஸ்வபாவமும்

———–

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

———–

வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-

வைப்பாம் –
ஆடு அறுத்துப் பலியிட்டு-‘-அரைப்பை யாக்கி -பணப்பை யாக்கி,- இஷ்ட விநியோக அர்ஹமாம்படி –
தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் -சேமித்து வைக்கும் சேமநிதி போன்று,
ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.

மருந்தாம் –
‘ஆயினும்,-ஷூத்ர – சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ் வுயிர்கட்கு அன்றோ
சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்?
இவன் அவ் விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில்,
அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான
சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார்.
இதனால், பிராபகத்வம் கூறிய படி.

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ் விரண்டாலும்
பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.

————–

அணங்குக்கு அரு மருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே–4-6-7-

அணங்குக்கு அரு மருந்து என்று –
அப்ராக்ருத ஸ்வபாவையான -தெய்வத் தன்மையை யுடைய இவளுக்குத் தகுதியான பெறுதற்கு அரிய மருந்து என்று.
இவள் வைலக்ஷண்யமும் -வேறுபட்ட சிறப்பினையும் அறிந்திலீர்கோள்’ என்பாள், ‘அணங்குக்கு’ என்கிறாள்.

—————-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே–5-2-7-

மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் ஆஸ்ரயணீயர்- அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற,
இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டு போய் அன்றோ காப்பாற்றுவது.
“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.
காப்பாற்றுவதில் நிலை நிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும்
ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே,
என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலே யாம்.
வேறு சிலரை ஆச்ரயிக்க -ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான்

————-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

செடியார் வினைகள் தீர் மருந்தே-
செடி -பாபம் –
பாபத்தோடே பொருந்தின அஸத் கர்மங்களால் -தீய வினைகளா லுண்டான
துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே!
அது புஜிப்பிக்கைக்கு -உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி.
அன்றிக்கே, தூறு மண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல்.
அந்த அமுதம் தானே காணும் மருந்தாகிறது.
மருந்தும் பொருளும் அமுதமும் தானே”–மூன்றாந்திருவந். 4. – என்றும்,
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு”-திருவாய். 9. 3 : 4 – என்றும் கூறுகிறபடியே
அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே.
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார் திரு. 5. 3 : 6.–

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலி னீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!–7-1-4-

வினையேன் வினை தீர் மருந்தே –
பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே!
என்னுடைய சப்தாதி விஷய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் -ப்ராவண்யத்தை -ஈடுபாட்டினைப் போக்கி
என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

————-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங் குடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்!அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

தீர் மருந்து இன்றி-
வேறு ஒரு பிரதி கிரியை -பரிகாரம் – உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ?
சர்வ சக்தியாலும் போக்கப் போகாதன்றோ?

ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-
ஐம்புலன்களாகிற நோயாலே இவ்வாத்மாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு.

திரிக்கும் ஐவரை-
பாதிக்கிற ஸ்தோத்ராதிகளை -வருத்துகின்ற ஐம் பொறிகளை. என்றது,
சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி.

நேர் மருங்கு உடைத்தா அடைத்து-
எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது,
அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதி ரதர் மஹா ரதர் என்னுமவர்கள் அடங்கலும்
சூழப் போந்து அடைத்தால் போலே, இந்திரியங்களுக்குக் கை யடைப் பாக்கி’ என்றபடி.

நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
இதுவோ தான் எனக்கு நிலை நிற்கப் புகுகிறது?
இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த
நம்பிக்கையையும்-விஸ்வாசத்தையும் – குலையா நின்றாய்.
ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக் கொண்டாலோ?’ என்றான்;

ஆர் மருந்து இனி ஆகுவார்-
என் இடையாட்டம் பிறரைக் கொண்டு காரியம் இல்லை:
நான் நோவு படா நின்றேன். நீ கை வாங்கினாய்.
ஆன பின்பு எனக்கு ஒரு ரஷகர் உளரோ? நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு:
நீ விட்ட அன்று யார் உண்டு? ஆனால் நீரோ?’ என்றான்;
நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?
மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ?
மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந் திருவந்தாதி, 4.

——————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை-வர்த்திப்பவனே –
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான –சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய ஸூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்-கிண்ணகத்தில் இழிவாரைப் போலே-திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று-பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –

பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

—————

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி–3-

தீர்க்கும் மருந்து –
அனுபவித்தால் அல்லது விடாத நரகத்தைக் கடக்கைக்கு பேஷஜம் ஆனவன்
மருத்துவன் என்று அவன் ஸ்வ பாவம் சொல்லுகிறது
கருத்து இருக்கும் என்னுமா போலே
மனஸ்ஸூக்குப் புகுருகைக்கு அடி இவ்வாத்மா தானே இறே
ஆத்மைவ ரிபுராத் மன –

வரு நரகம் தீர்க்கும் மருந்தாய்க் கொண்டு மனத்துள்ளான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –

அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –
மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

தண் துழாய் மார்வனாய் மலராள் தனத்துள்ளானாய் மா கடல் நீருள்ளானாய்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணனாய் மனத்துள்ளானவன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –

ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

———–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே –
மருந்து என்று
விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று
உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று
உபேயத்தைச் சொல்லுகிறது –

விரோதியைப் போக்குவானும்
அபிமதத்தைத் தருவானும்
அபிமதம் தானும்
அவனே -என்றபடி

அநிஷ்ட நிவாரண பூர்வகமான
இஷ்ட பிராப்தி பண்ணித் தருவானும் அவனே -என்றபடி

அன்றிக்கே
மருந்து என்று உபாயமாக்கி
பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து

அர்தியாய் வருகையாலே பொருளானான்

திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்

திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்

அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்

இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று –

பொருந்தியும்
ரஷணத்திலே பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர் ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தான படி
உமிழ்ந்து -பொருளான படி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –
மருந்து என்று உபாயம் ஆக்கி பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

————

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–62-

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

———–

மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே —-ஸ்ரீ பெரிய திருமடல்

மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று
கடலைச் சரணம் புக என்றால் போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே
இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-
இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ
முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –

மன்னு மருந்து –
தப்பாத மருந்து –

அறிவீர் இல்லையே –
அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –
ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இறே
இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –

மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க
சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ குணரத்ன கோஸம்–

September 17, 2021

இந்தச் ச்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ச்லோகமாகும்.

தனியன்

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார்.
ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய அந்தப் பராசரபட்டரின் திருவடிகளை அடைந்து
நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–ஸ்லோகம் – 1

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

————-

கடந்த ச்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரியபிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரியபெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்கநாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்துகொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்துவிடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும்போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும்போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங்மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூறவேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கியிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால்தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறிவிட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும்போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டுவிடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டுவிடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ச்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.–6–

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்றுவிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7-

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்தச் ச்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள்பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போதுதான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல்வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.

————————-

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ச்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்.–8–

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்கவேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்கவேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்படவேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

ச்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ச்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ச்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–9-

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக்கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரியபெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரியபெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக்கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகியமணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப்போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ச்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரியபெருமாளின் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ளபோது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூறவில்லை, பெரியபெருமாள் கேட்டதனால்தான் கூறினார்.

—————–

தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்தச் ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ்பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப்போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம்பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம்பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம்பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ச்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12–

பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

அஸ்ய ஈசாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:–13-

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக்கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக்கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத்ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–14-

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–17-

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–18-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்யத்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–19-

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க்குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:–21–

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேச்வர தேவி கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–26

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–29-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–30–

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–31–

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34-

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–36-

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணமத் அநுவிதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–38-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–42-

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–43–

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–45–

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–46–

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–47-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56–

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–கிஷ்கிந்தா ஸ்கந்தம்- -94-111-ஸ்லோகங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

September 15, 2021

பம்பா தீர ருஹான் தரூன் ககன கான் காமா ம்ருக அவேக்ஷயா
த்ருஷ்ட்யா ஹந்த ஸமீக்ஷ்ய லக்ஷ்மண யுஜ: தே கச்சதோ அக்ரே நதம்
ஸுக்ரீவாத் ஸமுபாகதம் பவனஜம் த்ருஷ்ட்வா தத் உக்த ச்ருதே:
யத் மந்த ஸ்மிதம் ஆனனே லகு பபௌ ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ–94-

பம்பா தீர ருஹான் தரூன் ககன கான் காமா ம்ருக அவேக்ஷயா-திருவடி பார்த்து முதல் மந்தஸ்மிதம் இது –
கிஷ்கிந்தா முதல் ஸ்லோகம்
தூங்க பத்ரா நதியே பம்பா ஹம்பியே கிஷ்குந்தா
மரங்கள் வளர்ந்து ஆகாசம் வரை
சாகா -மிருகம் – குரங்கு சாகைகளிலே தாவி இருப்பதே நிரூபகம்
த்ருஷ்ட்யா ஹந்த ஸமீக்ஷ்ய லக்ஷ்மண யுஜ: தே கச்சதோ அக்ரே நதம்-ரிஷ்யமுக மலை –
ஒருவன் அடி பணிந்து நின்றவனை காண
ஸுக்ரீவாத் ஸமுபாகதம் பவனஜம் த்ருஷ்ட்வா தத் உக்த ச்ருதே:-மகாராஜரால் அனுப்பபற்ற திருவடி -வாயு மைந்தன்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே லகு பபௌ ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ-
யுக்த -இனிமையான பேச்சைக் கேட்டதும் பிறந்த மந்தஸ்மிதம் -பிராட்டியைப் பார்த்த ஹர்ஷம் போல் –
கண்டதுமே இவனே பிராட்டியைக் கண்டு வந்து சொல்வான்
மார்களு முழு சந்திரனைப் பார்த்ததும் கிருஷ்ணன் பார்த்தஹர்ஷம் ஆண்டாள் பெற்றது போல் இங்கும்
அதே மந்தஸ்மிதம் வடுவூரில் பிராட்டி திருவடி சேர்ந்து இளவல் உடன் சேவை சாதிக்கும் மந்தஸ்மிதம்

———————

வாயோ: ஆத்ம புவோ நதஸ்ய நிதராம் தஸ்ய அத தாம் அத்புதாம்
ச்ருத்வா நாம கிரம் ஸுவர்ண மஹிதாம் ஸுஷ்டூதிதாம் ஸுஸ்வராம்
ஸத்யம் திவ்ய ஸுதோபமாம் ஸுமஹிதாம் ஸ்ரீராம மந்த ஸ்மிதம்
யத் தே நாம முகாம்புஜே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-95-

வாயோ: ஆத்ம புவோ நதஸ்ய நிதராம் தஸ்ய அத தாம் அத்புதாம்-வாக்மீ ஸ்ரீ மான் –
சொல்லின் செல்வன் -பிராட்டி இதன் தூது போகச் சொன்னால் செல்வான் –
வாயு புத்ரன் -அடி பணிந்த திருவடி பேச்சு அத்புதமாக உள்ளதே -விரிஞ்சனோ விடை வல்லானோ
ச்ருத்வா நாம கிரம் ஸுவர்ண மஹிதாம் ஸுஷ்டூதிதாம் ஸுஸ்வராம்-நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி –
மதுரமான -பொருத்தமான -அழகிய ஸ்வரத்துடன்
ஸத்யம் திவ்ய ஸுதோபமாம் ஸுமஹிதாம் ஸ்ரீராம மந்த ஸ்மிதம்-தேவ அம்ருதம் போல்
பெருமை மிக்க வார்த்தை அன்றோ -மூன்று வேதம் அறிந்தவன்
பணிவு ரிக்வேதம்- தொகுத்து பேசுகிறான் யஜூர் வேத வல்லவன்- ஸூரம் பொருந்தி -சாம வேத வல்லவன்
யத் தே நாம முகாம்புஜே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-அப்பொழுது தோன்றிய
மந்தஸ்மிதம் இன்றும் நாமும் செவிக்கும்படி அருளுகிறாயே

—————-

நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்
ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்
தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்–96-

நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்-வாயு புத்ரன் -அருகில் அழைத்துச் செல்லப்பட்ட
ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்-ஸூ க்ரீவனை நண்பனாக கொண்டாயே –
நேராக பெருமாளைப் பார்த்து -பட்டாத்ரி நாராயணீயம் குருவாயூரப்பனைப் பார்த்து அருளிச் செய்தது போலவே
தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்-அவன் தனது வ்ருத்தாந்தம் சொல்ல –
மனைவி உமாவை இழந்து பெருமாளைப் போல் -இவ்வளவையும் கேட்டு மித்ரனாக பெற்றதால் மந்தஸ்மிதம்
மித்ரன் ஸூர்யன் மகன் -மித்ரனுடைய மகன் தம்பியாகவும் மித்ரனாகவும் பெற்ற தாலேயே மந்தஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்-அடியோங்களையும் மித்ரர்கள்
ஆனதால் மந்தஸ்மிதம் கொண்டதைப் பார்த்து அடியோங்களும் மகிழ்வோம் –

———–

காயம் க்ஷிப்தவத: ஸுதூரம் அபி தே ஸ்வாங்குஷ்டதோ துந்துபே:
ப்ரத்யக்ரம் ஹி ஸமாம்ஸம் ஏதத் அபவத் க்ஷிப்தம் புரா வாலினா
இதி உக்த்யா ரவி ஸம்பவஸ்ய ஸுஹ்ருதோ மந்த ஸ்மிதம் யன்முகே
ஸஞ்ஜாதம் தவ தத் மம அத்ய புரதோ வித்யோததே ராகவ–97-

காயம் க்ஷிப்தவத: ஸுதூரம் அபி தே ஸ்வாங்குஷ்டதோ துந்துபே:-வில்லா திரு விண்ணகரம் மேயவனே –
தன்வீ -சாரங்க பாணி -கோதண்ட பாணி-அவனது வில்லாற்றமையில் சந்கின்கொண்ட ஸூக்ரீவன்
துந்துபி -எலும்புக்கூடு -மராமரம் ஏழும் -செய்து காட்டி அருளி -அந்த நேரத்தில் செய்து அருளியய மந்தஸ்மிதம் –
எலும்பு கூடு தொடக் கூடாதே -இடது திருவடி கட்டை விரலால் -ஓங்கி உலகு அந்தம் இடது திருவடி மேலே போக –
அதில் இருந்து விழுந்த கங்கை -கங்கைக்கு தீட்டு இல்லையே -வெகு தூரம் அண்டத்துக்கும் அப்புறம் போனதே
ப்ரத்யக்ரம் ஹி ஸமாம்ஸம் ஏதத் அபவத் க்ஷிப்தம் புரா வாலினா-மாம்ச உடலை வாலி எறிந்து -இன்னும் நம்பிக்கை வராமல்
இதி உக்த்யா ரவி ஸம்பவஸ்ய ஸுஹ்ருதோ மந்த ஸ்மிதம் யன்முகே-இப்படி ஸூர்ய மகன் நம்பிக்கை இல்லாமல்
சொல்வதால் -இறைவனை சோதிக்கும் ஸ்வ பாவம் மனுஷனுக்கு மாறாதே –
ஸஞ்ஜாதம் தவ தத் மம அத்ய புரதோ வித்யோததே ராகவ-இந்த அவநம்பிக்கை உள்ள அடியோங்களைப் பார்த்து மந்தஸ்மிதம்
நம்பிக்கை உண்டாக்கி ரக்ஷித்து அருளும் ஸ்வ பாவன் அன்றோ –

————

ஸாலான் ஸப்த ததா தரான் அபி சரேண ஏகேந பேத்து: புரா
பாதாப்ஜே தவ மஸ்தகம் க்ருதவத: தே சம்ஸதோ விக்ரமம்|
விஸ்ரப்தஸ்ய ப்ருசம் விலோக்ய ஸுஹ்ருதோ மோதோதிதம் சேஷ்டிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ||–98-

ஸாலான் ஸப்த ததா தரான் அபி சரேண ஏகேந பேத்து: புரா வடுவூர் ஹயக்ரீவர் சந்நிதி முன்பே ஸ்வாமி அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரிதர் விசுவாசம் -ஊட்டி அருளி மந்தஸ்மிதம் -ஒரே அம்பால் ஏழு சால மரங்களையும் -நடுவில் ஊடு உருவி –
பூமியையும் ஊடு உருவி அம்புறா துணி அடைய
பாதாப்ஜே தவ மஸ்தகம் க்ருதவத: தே சம்ஸதோ விக்ரமம்|-திருவடிகளில் தலையை மடுத்து சேவித்து -விக்ரமம் புகழ்ந்து
விஸ்ரப்தஸ்ய ப்ருசம் விலோக்ய ஸுஹ்ருதோ மோதோதிதம் சேஷ்டிதம் நண்பனுக்கு நம்பிக்கை கொடுத்து அருளி –
செயலினால் ஆனந்தம் உதிக்கச் செய்ததே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ||-அதே புன்னகை நாமும் சேவிக்கும் படி சேவை சாதித்து அருளுகிறாய்
மந்தஸ்மிதம் சேவித்து மஹா விசுவாசம் பெறுகிறோம் -நம்பிக்கை நக்ஷத்ரமாக புன்னகை விளங்குகிறதே –

————

ஸுக்ரீவேண ஸமீரிதாம் சுபவதீம் ச்ருத்வா கதாம் அத்புதாம்
ஸ்ரீமத் ஸப்த ஜன ஆச்ரமஸ்ய பவத: ப்ரீத்யா நமஸ்குர்வத:|
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ
தத் தே ஸௌது ஸுகானி பூர்வ புருஷாநத்யா ஸமுத்தானி மே||–99

ஸுக்ரீவேண ஸமீரிதாம் சுபவதீம் ச்ருத்வா கதாம் அத்புதாம் ஸ்ரீமத் ஸப்த ஜன ஆச்ரமஸ்ய -ஆஸ்ரமம் காட்ட –
அத்புத இனிமையான கதையை சொல்ல ஸப்த ரிஷிகள் -தலைகீழாக இருந்து தவம் இருந்து
பவத: ப்ரீத்யா நமஸ்குர்வத:|-மிகவும் மகிழ்ந்து அவர்கள் இருந்த இடம் நமஸ்கரித்து
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ- தத் தே ஸௌது ஸுகானி பூர்வ புருஷாநத்யா
ஸமுத்தானி மே||- அப்பொழுது பூர்வ புருஷர்கள் மரியாதை செய்து மந்தஸ்மிதம் –
அதே புன்னகை இங்கும் காட்டி -மஹான்கள் -வேத வல்லார் -வேத பாடசாலை சூழ்ந்து இருக்க –
கண்டு பக்தியை மெச்சி புன்னகை -அது எங்களுக்கு மகிழ்ச்சி இன்பம் வளரும் படி அனுக்ரஹித்து அருளுவாய் –

————

ஏகேனைவ சரேண பாதிதவத: தே வாலினம் தத் கிரா
ஸந்நிந்தாகுலயா ததா அதிகதயா ந்யாயாத் அபேதாத்மனா
யத் மந்த ஸ்மிதம் ஆனனேதவ பபௌ தர்ம ஸ்வரூபாச்ரயே
தீனானாத சரண்ய தைவமணே ஸ்வாமி ஸுகாயாஸ்து ந:–100-

ஏகேனைவ சரேண பாதிதவத: தே வாலினம் தத் கிரா
ராம நாமம் கண்டான் வாலி பானத்தில் -கேள்விகளுக்கு முதலில் மந்தஸ்மிதம் -பின்பு பதில்கள் –
ஒற்றை பானம் -ஒரு வில் ஒரு சொல் ஒரு இல் –ஒன்றாலேயே -அடித்து விழும்படி செய்தான் –
கீழே விழுந்தவன் ஆறு கேள்விகள்
1-நான் யாரோ நீ யாரோ -அறிமுகம் இல்லையே
2-நாங்கள் குரங்குகள் -நீ மன்னன் மனிதன் -என்ன சம்பந்தம்
3-மறைந்து இருக்க வேண்டுமா
4-என்ன பிரயோஜனம்
5-என்ன தவறு செய்தேன்
6-தண்டிக்க நீ யார் -போன்ற ஆறு கேள்விகள் தொடுத்தான்
ஸந்நிந்தாகுலயா ததா அதிகதயா ந்யாயாத் அபேதாத்மனா-அதிகமாக நிந்தைகள் -நியாயம் இல்லாத கேள்விகள் –
1-சண்டை போடுவதற்கு முன் அறிமுகம் வேண்டாம் -வேட்டை ஆடுவதற்கு –
2-நாடு காடு அனைத்தையும் இஷுவாகு -நாட்டை பரதன் -காட்டை நான்
3-மிருகம் வேட்டை ஆட மறைந்து தானே ஆட வேண்டும்
4-புலி நகம் மான் தோல் போல் பயன் இல்லையே -என்னில் தவறை தண்டிக்கவே -உன்னால் கேடு உண்டானதே
5-தம்பியின் மனைவி ரூமா அபகரித்தாய் அது பெரிய தவறு
6-நான் சக்ரவர்த்தி திரு மகன் -ஆகவே தண்டிக்கலாமே
யத் மந்த ஸ்மிதம் ஆனனேதவ பபௌ தர்ம ஸ்வரூபாச்ரயே தர்மங்களுக்கு ஆஸ்ரயமான திரு முக மண்டலத்தில்
மந்தஸ்மிதம் -வாலியும் தாரையும் ஒத்துக் கொண்டார்கள் -அப்ரமேயன் ஸ்தோத்ரம் பண்ணினாள்
கிஷ்கிந்தா -கிஷ்கி -சரணாகதி -அர்த்தமும் உண்டே
சரண் புகுந்த தம்பியை அடைக்கலம் கொடுக்காமல் இருக்க -ஸஹ மனுஷன் இடம் கருணை காட்டாமல் -இருந்தாய் –
கொல்லப் பார்த்தாய் -இறைவனது கருணையை எதிர்பார்க்க வாய்ப்பு இல்லையே
முன்னால் வந்தால் சரணாகதி பண்ண வாய்ப்பு இருக்குமே
தீனானாத சரண்ய தைவமணே ஸ்வாமி ஸுகாயாஸ்து ந:-தீனர்கள் -அநாதிகள் -புகல் அற்றவர்களுக்கு சரண்யன் –
தேவர்கள் அதிபதி –அகில ஜகத் ஸ்வாமின் -அஸ்மின் ஸ்வாமி -வாலியை கைக்கொண்டு மந்தஸ்மிதம் –
இதுவே நமக்கு அருள்களைக் கொடுக்கட்டும் –

———–

ஹ்ருத்யை: வாத்ய கணோதிதை: கரக்ருதை: ஸ்த்ரீணாம் ச கீத்யாதிபி:
ஜாதை: ச்ரோத்ர ஸுகை: நிநாத நிவஹை: தீவ்யந்தம் அந்த: புரே
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் விலோக்ய பகவன் மந்த ஸ்மிதம் யத் முகே
தத் மே ஸௌது ஸுகம் பரம் ரகுபதே தீன-அவன-ஏக-வ்ரத–101-

ஹ்ருத்யை: வாத்ய கணோதிதை: கரக்ருதை: ஸ்த்ரீணாம் ச கீத்யாதிபி:-இனிதாக -வாத்ய த்வனி -கர த்வனி -பெண்கள் பாடும் ஒலி
ஜாதை: ச்ரோத்ர ஸுகை: நிநாத நிவஹை: தீவ்யந்தம் அந்த: புரே-இவற்றைக் கேட்டுக் கொண்டு
அந்தப்புரத்தில் விளையாடும் சுக்ரீவன் –பெருமாள் வாடும் நிலையை நினைக்காமல்
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் விலோக்ய பகவன் மந்த ஸ்மிதம் யத் முகே-ஸ்வாமியான பெருமாள் சுக்ரீவனான நண்பனைப் பார்த்து –
மனக்கண்ணால் -மந்தஸ்மிதம் -கோபத்தை வெளியிடும் மந்தஸ்மிதம் -மனத்துக்கு இனியான் –
வாலி அனுப்பிய பானம் தயார் -அவன் போன இடம் வாசலும் திறந்து உள்ளது
தத் மே ஸௌது ஸுகம் பரம் ரகுபதே தீன-அவன-ஏக-வ்ரத- ரகு குல திலகம் -அதே மந்தஸ்மிதம் நமக்கு புண்யம் –
பிராட்டி போல் நம்மையும் விரைந்து ரக்ஷிப்பானே –
நம்முடைய பாபங்கள் மேல் கோபித்து போக்கும் படி -தீனர்கள் -காக்கும் விரதம் பூண்டவன் அன்றோ –

————–

அந்தர் துக்கசயம் வஹன் அபி பவான் ப்ருக்தம் ஸுஹ்ருத் ஸௌக்யத:
மோதம் கஞ்சன ஸம்வஹன் யதகரோ: மந்த ஸ்மிதம் மஞ்ஜுளம்
தத் தே ராகவ கிஞ்சன அதி ஸுபகம் ஸௌஜன்யம் அன்யாத்ருசம்
மான்யம் தர்சயதி இதி தத்ர ரமதே ஸர்வோபி அபிஜ்ஞோ ஜன:–102-

அந்தர் துக்கசயம் வஹன் அபி பவான் ப்ருக்தம் ஸுஹ்ருத் ஸௌக்யத:-பவான் நேரே விழித்து –
உள்ளே சோகம் தங்கி இருந்தாலும் -நண்பனான ஸூ க்ரீவனோ மகிழ்ந்து தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாலும்
மோதம் கஞ்சன ஸம்வஹன் யதகரோ: மந்த ஸ்மிதம் மஞ்ஜுளம்-மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிமையான புன்னகை காட்டி அருள
தத் தே ராகவ கிஞ்சன அதி ஸுபகம் ஸௌஜன்யம் அன்யாத்ருசம்-மிகவும் இனிமை அழகிய அன்பை
வெளிப்படுத்தும் வியக்கத்தக்க போடத்தக்க புன்னகை
மான்யம் தர்சயதி இதி தத்ர ரமதே ஸர்வோபி அபிஜ்ஞோ ஜன:-எல்லா ஞானிகளும் வியந்து மகிழ்ந்து போற்றும் படி
நட்பின் இலக்கணம் காட்டி -நண்பன் மகிழ்ச்சியே தனக்கு -என்றும்
இடுக்கண் வருங்கால் நகுக வாழ்க்கையின் தத்வம் -வருந்துவதால் என்ன பிரயோஜனம் –
பிரயத்தனம் எடுத்து போக்கவே வேண்டும்
வேதாந்த தத்வம் ஸூக துக்கம் கண்டு வாடாமல் இறை த்யானம் -உலக வாழ்க்கை -ecg மேலும் கீழும் போனால்
தான் -மேடு பள்ளங்கள் இருப்பதே வாழ்க்கை –
புன்னகை ஓன்று தத்வங்கள் மூன்றும் காட்டி அருளினான் -இப்பொழுதும் சேவை சாதித்து நமக்கும் உணர்த்தி அருளுகிறார் –

————-

தூஷ்ணீம் ஏஷ ஸுராநுபூதி நிரத: காமம் க்ருதக்ன: கபி:
நைவ த்வாம் உபகாரகம் ஸ்மரதி தத் வாலி அந்திகம் கச்சது
இத்தம் லக்ஷ்மண பாஷிதே ந ஹி ததா கோபோ விதேய: புர:
ஸாந்த்வம் ப்ரூஹி ஸகேதி தே ஸுவசஸா மந்த ஸ்மிதம் சோபதே–103-

தூஷ்ணீம் ஏஷ ஸுராநுபூதி நிரத: -மது போதையில் கிடக்கிறான்
காமம் க்ருதக்ன: கபி:-செய் நன்றி மறந்து காமத்தில் ஆழ்ந்து
நைவ த்வாம் உபகாரகம் ஸ்மரதி தத் வாலி அந்திகம் கச்சது-வாலியை அனுப்பிய வழிக்கே இவனை
இத்தம் லக்ஷ்மண பாஷிதே -லஷ்மணன் சொல்ல
ந ஹி ததா கோபோ விதேய: புர:-கோபிக்கக் கூடாதே -பணிவுடன் செல்ல வேண்டும் -ராஜா அன்றோ –
ஸாந்த்வம் ப்ரூஹி ஸகேதி தே ஸுவசஸா மந்த ஸ்மிதம் சோபதே–தேற்றி அனுப்பி -பொறுமை உடன் –
கருணா காகுஸ்தனாக மந்தஸ்மிதம் செய்து அருளினாய்
அதே மந்தஸ்மிதம் -காட்டி சேவை சாதித்து அருளுகிறாய் –

—————

ஆனீதம் கபிபி: க்ருதாஞ்ஜலி புடை: ஸங்க்யாதிகை: பீகரை:
சத்ரூணாம் தரணீ தலம் நிகலம் அபி ஆசாதயத்பி: ததா
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் ஸமீக்ஷ்ய ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே–104-

ஆனீதம் கபிபி: க்ருதாஞ்ஜலி புடை: ஸங்க்யாதிகை: பீகரை:-லஷ்மணனால் அழைத்து வரப்பட்ட
சுக்ரீவனை கண்டு -அஞ்சலி முத்திரையுடன் வந்த எண்ணிறந்த -வானர முதலிகளையும் –
சத்ரூணாம் தரணீ தலம் நிகலம் அபி ஆசாதயத்பி: ததா-சத்ருக்கள் பயப்படும்படி -உலகம் முழுவதும் நிறையும் படி
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் ஸமீக்ஷ்ய ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே-நண்பனான ஸூ க்ரீவனைக் கண்டு
நன்றாக மகிழ்ந்த திரு உள்ளத்துடன்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே-மந்தஸ்மிதம் காட்டி அருளினாய் –
அதே புன்னகை காட்டி -அவ்வளவு பக்தி கைங்கர்ய சிரத்தை இல்லாத அடியோங்களைக் கண்டும்
அதே மந்தஸ்மிதம் காட்டி அருளுகிறாயே

——–

“ஸ்வாமின்! ஸைன்யம் த்வதீயம் கபிகுல வலிதம் ஹ்ய்ருக்ஷ ப்ருந்தாவ்ருதம் ஸத்
ரக்ஷோ விக்ஷேப தக்ஷம் சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்”
இதி ஏவம் ஸூரஸூநௌ கதிதவதி முகே தாவகே தாடகாரே
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்–105-

“ஸ்வாமின்! ஸைன்யம் த்வதீயம் கபிகுல வலிதம் ஹ்ய்ருக்ஷ ப்ருந்தாவ்ருதம் ஸத்–ஸ்வாமியே –
70 வெள்ளம் வானர முதலிகள் அனைத்தும் உம்முடையவையே -ஜாம்பவான் தலைமையில் உள்ள கரடிக்கூட்டமும் உண்டே
ரக்ஷோ விக்ஷேப தக்ஷம் சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்”-அரக்கர் கூட்டத்தை அழிக்க வல்லவை –
உமது திருவடியில் பணிந்து ஆணைப்படி செயல்பட காத்து உள்ளன
இதி ஏவம் ஸூர ஸூநௌ கதிதவதி முகே தாவகே தாடகாரே-ஸூ ர்ய புத்ரன் சொல்ல – தாடகையை வாதம் செய்த தேவரீர்
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்-மெல்லிய மந்தஸ்மிதம் –
இந்த கூட்டம் கண்டாவது பயந்து ராவணன் திருந்துவானோ என்கிற நப்பாசையால் மந்தஸ்மிதம் –
இவனை நிரசிக்க பெருமாள் ஒருவனே -தாடகையை பால ராமனே அழித்ததை இதுக்காகவே காட்டி அருளுகிறார் இந்த ஸ்லோகத்தில்
அந்தரங்கமான மந்தஸ்மிதம் -பக்தி அஞ்சனம் கொண்டே இத்தை அறிய முடியும் -நாமும் அறியும்படி இன்றும் சேவை சாதித்து அருளுகிறாரே –

—————-

ப்ராசீம் கச்சேய யூயம் ததநு பவநபூ: அங்கதாத்யை: ஸமேத:
மத் ப்ராது: தர்ம த்ருஷ்டே: திசிம் இதி சுபயா ஸ்ரீதினாதீச ஸூனோ:
வாசா ஸத்யோ முகே தே நவகமல நிபோ யோ பபௌ மந்த ஹாஸ:
தத் த்வம் ஸீதாபதே மே நிரவதிக தயோ தர்சயஸி அத்ய ஸத்யம்–106-

ப்ராசீம் கச்சேய யூயம் ததநு பவநபூ: அங்கதாத்யை: ஸமேத:-நீங்கள் கிழக்கு திக்கு செல்லுங்கோள் –
அத்தைத் தொடர்ந்து வாயு புத்ரன் -அங்கதன் ஜாம்பவான் இவர்களைக் குறித்து
மத் ப்ராது: தர்ம த்ருஷ்டே: திசிம் இதி சுபயா ஸ்ரீதினாதீச ஸூனோ:-தன்னுடைய சகோதரன் –
யம தர்ம ராஜனும் ஸூ ர்ய புத்ரன் -அண்ணன் முறை -தெற்குத் திசை நோக்கி
வாசா ஸத்யோ முகே தே நவ கமல நிபோ யோ பபௌ மந்த ஹாஸ:-இப்படிச் சொல்வதைக் கேட்ட உடனே –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்ற திரு முகத்தில் மந்தஹாசம்
தெற்கு திசை மங்களம் அல்ல -என்பர் -இவர்களே பிராட்டியைக் கண்டு த்ருஷ்டா சீதா சொல்லப் போகிறார்கள்
மங்களகரமான மூர்த்தி திருவடி இதனாலே இன்றும் சொல்கிறோம் -புத்திர் -பலம் யசஸ் ஸூ -இத்யாதி
தத் த்வம் ஸீதாபதே மே நிரவதிக தயோ தர்சயஸி அத்ய ஸத்யம்-எல்லையற்ற தயா மூர்த்தி –
அதே மந்தஸ்மிதம் அடியோங்களுக்கும் மங்களம் கொடுக்கும் -இது சத்யம்

—————-

தத்வா மாருத நந்தனஸ்ய கரயோ ரத்னாங்குளீயம் சுபம்
த்ருஷ்ட்வா தஸ்ய நதஸ்ய மஸ்தக தலம் ஸீதா த்ருசோ: ஆஸ்பதம்
யத் மந்த ஸ்மிதம் ஆததான ஸ பவான் தன்மங்கலம் மத்புரோ
பூயோ தர்சயதி ஸ்வயைவ தயயா தாத்ருக்ஷயா அமேயயா–107-

தத்வா மாருத நந்தனஸ்ய கரயோ ரத்னாங்குளீயம் சுபம்-தெற்கு திசைக்கு -திருவடி -ரத்னங்கள் பதித்து
ராம நாமம் பொறிக்கப் பெற்ற கணையாழி பெற்று உச்சிமேல் வைத்து உகந்து மந்தஸ்மிதம்
வாய் புத்திரனான திருவடிக்கும் பெருமாளுக்கும் –
த்ருஷ்ட்வா தஸ்ய நதஸ்ய மஸ்தக தலம் ஸீதா த்ருசோ: ஆஸ்பதம்-விழுந்து வணங்கிய திருவடியைக் கடாக்ஷித்து –
ஸீதாப்பிராட்டி யையும் வணங்கி அவள் கடாக்ஷத்துக்கும் ஆஸ்பதம் -இடமாகப் போகிறதே –
தோஷங்களையே பார்க்கத் தெரியாத பிராட்டி-நாச்சியார் விழி விழிக்கப் போகாதே அவனுக்கு –
யத் மந்த ஸ்மிதம் ஆததான ஸ பவான் தன்மங்கலம் மத்புரோ-இத்தை நினைந்தே மந்தஸ்மிதம் –
அந்த மங்களகரமான அத்தை இன்றும் இங்கே
பூயோ தர்சயதி ஸ்வயைவ தயயா தாத்ருக்ஷயா அமேயயா-மறுபடியும் உனக்கே உள்ள பரம எல்லை இல்லாத
கருணையால் அடியோங்களுக்கும் சேவை சாதித்து அருளுகிறாயே –

——————

ஆதாய அங்குலி பூஷணம் ஸ ஹநுமான் க்ருத்வா சிரோ பூஷணம்
பத்த்வா சேல முகே பவந்தம் அபி தம் நத்வா முஹு: ஸாதரம்
ஸாகம் ஸ்வை: அகமத் திசம் நிஜ பிது: ஸௌம்யஸ்ய லீலாபதம்
தத் த்ருஷ்ட்வா வதனே ததா யத் அபவத் மந்த ஸ்மிதம் தே அத்ய தத்–108-

ஆதாய அங்குலி பூஷணம் ஸ ஹநுமான் க்ருத்வா சிரோ பூஷணம்-கணையாழி அளித்து விஜயத்துடன்
திரும்பி வர ஆசீர்வாதம் செய்து மந்தஸ்மிதம்
108-1 power 1-times-2 power 2 times-3 power 3 ==108
திரு விரலுக்கு பூஷணமாக இருந்ததை தலைக்கு பூஷணாமாகக் கொண்டு உச்சி மேல் வைத்து உகந்தான்
பத்த்வா சேல முகே பவந்தம் அபி தம் நத்வா முஹு: ஸாதரம்-இடுப்பின் வஸ்த்ரத்தில் முடிந்து கொண்டு
பவாந்தம் -உன்னை மீண்டும் விழுந்து வணங்க
ஸாகம் ஸ்வை: அகமத் திசம் நிஜ பிது: ஸௌம்யஸ்ய லீலாபதம்-உடன் இருந்த முதலிகளைக் கூட்டிக் கொண்டு
தென்றல் வீசும் தெற்கு நோக்கி புறப்பட்டதைப்
கொண்டல் -கோடை வாடை தென்றல் -கிழக்கு -மேற்கு வடக்கு தெற்கு -திசைக் காற்றுக்கள்
தத் த்ருஷ்ட்வா வதனே ததா யத் அபவத் மந்த ஸ்மிதம் தே அத்ய தத்-பார்த்து மெல்லிய புன்னகை உடன் அனுக்ரஹித்து ஆசீர்வாதம்
அதே மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கப் பெற்று அருள் பெறுகிறோமே –

————————

ஐஷ்யத் யேஷ மம ப்ரியாம் ஜனகஜாம் சாமீகராங்கீம் ஸதீம்
நீலாம்போஜ தலாதிரம்ய நயனாம் நாஸாபிராமானனாம்
த்ருஷ்ட்வா மஞ்ஜுள மந்தஹாஸ மதுராம் வாணீ ஸுதா வர்ஷிணீம்
இந்த யந்தஸ் தவ குர்வதோ ஹி யதபூத் மந்தஸ்மிதம் தன்முகே–109-

ஐஷ்யத் யேஷ மம ப்ரியாம் ஜனகஜாம் -மிக பிரியவளான பிராட்டியை காணப் போகிறான்
இலங்கையில் இருந்தாலும் இவனுக்கு எப்பொழுதுமே பிரியம்
ஜனக வம்ச புகழை காக்குக் கற்பு நிலை
சாமீகராங்கீம் தங்கம் போன்ற திரு மேனி -அரக்கிகள் சூழ்ந்து இருந்தாலும்
ஸதீம்–கற்புக்கு அரசியாக
நீலாம்போஜ தலாதிரம்ய நயனாம் -நீல தாமரை இதழ் போல் அதி ரம்யமான திருக்கண்கள்
நாஸாபிராமானனாம்-திரு மூக்கு திரு முகம் =கண்டு இவனே பிராட்டி என்று அறிவான்
த்ருஷ்ட்வா மஞ்ஜுள மந்தஹாஸ மதுராம் =அழகான இனிய மெல்லிய புன்னகை
ராமசரிதம் பாடுவான் கணையாழி கொடுப்பான் இதனால் பிறக்கும் மந்தஸ்மிதம்
வாணீ ஸுதா வர்ஷிணீம்-அமுதே பொழியும் வாகக்கு வன்மை -பெருமாளுக்கு செய்து பதில் சொல்லி அனுப்பப் போகிறாள் அன்றோ
புறப்பட்ட போதே திருவடிக்கு இப்படி விண்ணப்பம்
இந்த யந்தஸ் தவ குர்வதோ ஹி யதபூத் மந்தஸ்மிதம் தன்முகே-இந்த மந்தஸ்மிதம் இப்போதும் நமக்கு காட்டிக் கொடுத்து அருளுகிறாயே –

———–

மார்கே கச்சது விக்ன கந்த ரஹிதோ தூன்வன் பரான் விக்ரமை
ரக்ஷஸ் வங்க விமர்தனோ கிரிரிவ ப்ராப்தே ப்ரசாரோ மஹான்
த்ருஷ்ட்வா தாம் அஸி தேஷிணாம் மதுரயா வாண்யா தயா நந்தித
சோயம் மாம் அபி நந்தயத் விதி ஹ்ருதி த்யாதுர் முகே பூத் ஸ்மிதம் – 110-

மார்கே கச்சது -நன்றாக பயணம்
விக்ன கந்த ரஹிதோ -தடை வாசனை கூட இல்லாமல்
தூன்வன் பரான் விக்ரமை -தடை வந்தாலும் த்வந்தசம் பண்ணட்டும்
கிரிரிவ ரக்ஷஸ் வங்க விமர்தனோ –மலை போன்ற அரக்கர்களை வாதம் செயயவும் ஆசீர்வாதம் செய்தாயே
ப்ராப்தே ப்ரசாரோ மஹான் -மிகப்பெரும் புகழை அடையவும் ஆசீர்வாதம் செய்தாயே
த்ருஷ்ட்வா தாம் அஸி தேஷிணாம் -பிராட்டியைக் காணவும் ஆசீர்வாதம்
மதுரயா வாண்யா தயா நந்தித -அவள் இனிய வாக்குகளைக் கேட்டு மகிழட்டும்
சோயம் மாம் அபி நந்தயத் -நீயும் ஆனந்தம் அடைய அன்றோ இப்படி ஆசீர்வாதம்
விதி ஹ்ருதி த்யாதுர் முகே பூத் ஸ்மிதம் –நமக்கும் தடைகளை போக்கி -மலை போன்ற காமக்ரோதாதிகளைப் போக்கி
லஷ்மீ கடாக்ஷம் பெற்று நித்ய ஸூரிகள் போல் நிரதிசய ஆனந்தம் கீர்த்தி பெறுவதற்காகவே
இன்றும் அதே மந்தஸ்மிதம் காட்டி அருளுகிறாய் –

——-

ஸர்வே திக்ஷு கதா: பராஸு கபய: ப்ரத்‌‌‌யாகத: ஸாம்ப்ரதம்‌‌‌
நாமீ தக்ஷிண திக் கதா ஹநுமதா யுக்தா: தத: தே த்ருவம்‌‌‌
த்ரக்ஷ்யந்‌‌‌த்யேவ ஸுதாம் விதேஹ ந்ருபதே: இத்யுத்திதாம் மோதத:
ஸுக்ரீவாத்‌‌‌ வசனம் நிசம்ய பவதோ மந்தஸ்மிதம் வர்ததே–111-

ஸர்வே திக்ஷு கதா: பராஸு கபய: ப்ரத்‌‌‌யாகத: ஸாம்ப்ரதம்‌‌‌-தெற்குத் திக்கில் தவிர மற்ற
எல்லா திசைகளிலும் போனவர் -திரும்பி வந்தனர்
நாமீ தக்ஷிண திக் கதா ஹநுமதா யுக்தா-தெற்கு திக்கில் திருவடி தலைமையில் சென்றமுதலிகள் மட்டும் வர வில்லை
தத: தே த்ருவம்‌‌‌-இது கொண்டு நிச்சயம்
த்ரக்ஷ்யந்‌‌‌த்யேவ ஸுதாம் விதேஹ ந்ருபதே:இத்யுத்திதாம் மோதத: -ஜனக ராஜன் திரு மகளைக் கண்டு உள்ளார் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல
ஸுக்ரீவாத்‌‌‌ வசனம் நிசம்ய பவதோ மந்தஸ்மிதம் வர்ததே–இத்தைக் கேட்டு உனது மந்தஸ்மிதம் இன்று வரை வளர்ந்து உள்ளதே
நாமும் இன்றும் சேவித்து மகிழும் படி அன்றோ இங்கே சேவை சாதித்து அருளுகிறாய் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்விய தேசம்–தாயார்–மூலவர்–உத்சவர்–திரு நாமங்கள்

September 11, 2021

ஸ்ரீ திவ்விய தேசம்–தாயார்–மூலவர்–உத்சவர்-திரு நாமங்கள் -மண்டலம்–எந்த நகருக்கருகில்

1–ஸ்ரீரங்கம் (திருவரங்கம்)–ஸ்ரீரங்க நாச்சியார்–ஸ்ரீ ரங்கநாதன்–நம்பெருமாள்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

2–திருக்கோழி (உறையூர், நிசுலாபுரி, உரந்தை)–ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்–ஸ்ரீ அழகிய மணவாளன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

3–திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)–ஸ்ரீ பூர்வ தேவி–ஸ்ரீ புருஷோத்தமன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

4–திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)–ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்–ஸ்ரீ புண்டரீகாக்ஷன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

5–திரு அன்பில்–ஸ்ரீ அழகிய வல்லி நாச்சியார்–ஸ்ரீ வடிவழகிய நம்பி–ஸ்ரீ சுந்தரராஜன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

6–திருப்பேர்நகர் , அப்பக்குடத்தான்–ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)–அப்பலா ரங்கநாதன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

7–திருக்கண்டியூர்–ஸ்ரீ கமலவல்லி–ஹர சாப விமோசன பெருமாள்–கமலநாதன்–சோழ நாடு–திருச்சிராப்பள்ளி

8–திருக்கூடலூர்,–ஆடுதுறை பெருமாள் கோவில்–ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)– வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)-சோழ நாடு-கும்பகோணம்

9–திரு கவித்தலம் (கபிஸ்தலம்)–ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)–கஜேந்திர வரதன்–சோழ நாடு–கும்பகோணம்

10–திருப்புள்ளம் (பூதங்குடி)–ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)–ஸ்ரீ வல்விலி ராமர்–சோழ நாடு–கும்பகோணம்

11–திரு ஆதனூர்–ஸ்ரீ ரங்கநாயகி–ஸ்ரீ ஆண்டளக்குமையன்–சோழ நாடு–கும்பகோணம்

12–திருக்குடந்தை(பாஸ்கர க்ஷேத்ரம்)–ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)–ஸ்ரீ சாரங்கபாணி-சோழ நாடு-கும்பகோணம்

13–திருவிண்ணகர்,–ஒப்பிலியப்பன் கோயில்–ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்–ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)–சோழ நாடு–கும்பகோணம்

14–திரு நறையூர்,–நாச்சியார் கோயில்–ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்–திருநறையூர் நம்பி–சோழ நாடு கும்பகோணம்

15–திருச்சேறை-ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)–ஸ்ரீ சாரநாதன்–சோழ நாடு–கும்பகோணம்

16–திருக் கண்ணமங்கை–ஸ்ரீ அபிஷேக வல்லி–பக்த வத்சல பெருமாள்–சோழ நாடு–கும்பகோணம்

17–திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)–ஸ்ரீ கண்ணபுர நாயகி–நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்–சோழ நாடு-நாகப்பட்டினம்

18–திருக் கண்ணங்குடி–ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)–ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்–சோழ நாடு–கும்பகோணம்

19–திரு நாகை,–நாகப்பட்டினம்–ஸ்ரீ சௌந்தர்ய வல்லி–நீலமேகப் பெருமாள்–சௌந்தர்யராஜன்–சோழ நாடு–நாகப்பட்டினம்

20–தஞ்சைமாமணி கோயில்–ஸ்ரீ செங்கமல வல்லி–நீலமேகப் பெருமாள்–சோழ நாடு–தஞ்சாவூர்

21–திரு நந்திபுர விண்ணகரம்,–நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்–ஸ்ரீ செண்பக வல்லி தாயார்–
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)–சோழ நாடு-கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி–ஸ்ரீ மரகத வல்லி–கோலவல்வில்லி ராமன்–ஸ்ருங்கார சுந்தரன்–சோழ நாடு–சீர்காழி

23–திருவழுந்தூர்–(தேரழுந்தூர்)–ஸ்ரீ செங்கமல வல்லி–தேவாதிராஜன்–ஆமருவியப்பன்–சோழ நாடு–மயிலாடுதுறை

24–திரு சிறுபுலியூர்–ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்–அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)–க்ருபா சமுத்ரப் பெருமாள்–சோழ நாடு–மயிலாடுதுறை

25–திரு தலைச் சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)–ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்–நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)–சோழ நாடு–மயிலாடுதுறை

26–திரு இந்தளூர்–ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)–சோழ நாடு–மயிலாடுதுறை

27–திருக் காவளம்பாடி,–திரு நாங்கூர்–ஸ்ரீ மடவரல் மங்கை–ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)–சோழ நாடு–சீர்காழி

28–திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி–ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)–திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்–சோழ நாடு–சீர்காழி

29–திரு அரிமேய விண்ணகரம்,–திரு நாங்கூர்–ஸ்ரீ அம்ருதகட வல்லி–குடமாடுகூத்தன்–சதுர்புஜங்களுடன் கோபாலன்–சோழ நாடு–சீர்காழி

30–திருவண் புருடோத்தமம்,–திரு நாங்கூர்–ஸ்ரீ புருஷோத்தம நாயகி–ஸ்ரீ புருஷோத்தமன்–சோழ நாடு–சீர்காழி

31–திரு செம்பொன்செய் கோயில்,–திரு நாங்கூர்–ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்–ஸ்ரீ பேரருளாளன்–
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)–சோழ நாடு–சீர்காழி

32–திருமணிமாடக் கோயில்,–திரு நாங்கூர்–ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்–ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்–சோழ நாடு–சீர்காழி

33–திரு வைகுந்த விண்ணகரம்,–திரு நாங்கூர்–ஸ்ரீ வைகுந்த வல்லி–ஸ்ரீ வைகுந்த நாதன்–சோழ நாடு–சீர்காழி

34–திருவாலி மற்றும் திருநகரி–திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு–சீர்காழி

35–திருத் தேவனார் தொகை,–திரு நாங்கூர்–ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி–தெய்வநாயகன்–மாதவப் பெருமாள்–சோழ நாடு–சீர்காழி

36–திருத்தெற்றி அம்பலம்,–திரு நாங்கூர்–ஸ்ரீ செங்கமல வல்லி–செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)–சோழ நாடு–சீர்காழி

37–திருமணிக்கூடம் ,–திரு நாங்கூர்–ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி–வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)–சோழ நாடு–சீர்காழி

38–அண்ணன் கோயில் (திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்–ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்–சோழ நாடு–சீர்காழி

39–திரு பார்த்தன் பள்ளி,–திரு நாங்கூர்–ஸ்ரீ தாமரை நாயகி–ஸ்ரீ தாமரையாள் கேள்வன்–ஸ்ரீ பார்த்தசாரதி–சோழ நாடு–சீர்காழி

40–திருச்சித்திரக் கூடம் ,–சிதம்பரம்–ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்–கோவிந்தராஜன்–தேவாதி தேவன் (பார்த்தசாரதி)–சோழ நாடு–சிதம்பரம்

——————-

41–திரு அஹீந்த்ரபுரம்,–ஆயிந்தை–ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)–ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்–நடு நாடு–கடலூர்

42–திருக்கோவலூர்–ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்–த்ரிவிக்ரமன்–ஆயனார், கோவலன் (கோபாலன்)–நடு நாடு–கடலூர்

————

43–திருக்கச்சி,–அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)–ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

44–அஷ்டபுயகரம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்–ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு–காஞ்சிபுரம்

45–திருத்தண்கா,–தூப்புல், காஞ்சிபுரம்–ஸ்ரீ மரகத வல்லி–ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு–காஞ்சிபுரம்

46–திரு வேளுக்கை,–காஞ்சிபுரம்–ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)–அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு–காஞ்சிபுரம்

47–திரு நீரகம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ நிலமங்கை வல்லி–ஸ்ரீ ஜகதீச்வரர்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

48–திருப் பாடகம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா–பாண்டவ தூதர்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

49–திரு நிலா திங்கள் துண்டம், காஞ்சிபுரம்–நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

50–திரு ஊரகம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)–ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு–காஞ்சிபுரம்

51–திரு வெஃகா,–காஞ்சிபுரம்–ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்–ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு–காஞ்சிபுரம்

52–திருக் காரகம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)–ஸ்ரீ கருணாகர பெருமாள்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

53–திருக் கார்வானம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)–ஸ்ரீ கள்வன்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

54–திருக் கள்வனூர்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்–ஆதி வராஹப் பெருமாள்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

55–திருப் பவளவண்ணம்,–காஞ்சிபுரம்–ஸ்ரீ பவள வல்லி–ஸ்ரீ பவளவண்ணன்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

56–திருப் பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்–ஸ்ரீ வைகுண்ட வல்லி–ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

57–திருப்புட்குழி–ஸ்ரீ மரகத வல்லி தாயார்–ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்–ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்–தொண்டை நாடு–காஞ்சிபுரம்

58–திரு நின்றவூர்–(தின்னனூர்)–ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)–ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு–சென்னை

59–திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்–ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)–வைத்ய வீர ராகவப் பெருமாள்–தொண்டை நாடு–சென்னை

60–திரு அல்லிக் கேணி (திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)–ஸ்ரீ ருக்மிணித் தாயார்–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி–தொண்டை நாடு–சென்னை

61–திரு நீர்மலை–ஸ்ரீ அணிமாமலர் மங்கை–நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)–தொண்டை நாடு–சென்னை

62–திரு இட வெந்தை–ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்–லக்ஷ்மி வராஹப் பெருமாள்–நித்ய கல்யாணப் பெருமாள்–தொண்டை நாடு–சென்னை

63–திருக் கடல் மல்லை,–மஹாபலிபுரம்–ஸ்ரீ நில மங்கை நாயகி–ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)–தொண்டை நாடு–சென்னை

64–திருக்கடிகை,–சோளிங்கர்–ஸ்ரீ அம்ருத வல்லி–யோக ந்ருஸிம்ஹன்–அக்காரக்கனி–தொண்டை நாடு–சென்னை

——————–

65–திரு அயோத்தி,–அயோத்யா–ஸ்ரீ சீதாப் பிராட்டி–ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)–வட நாடு–உத்தர் பிரதேஷ்

66–திரு நைமிசாரண்யம்–ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)–ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)–வட நாடு–உத்தர் பிரதேஷ்

67–திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக், (ஜோஷி மடம்)–ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்–பரம புருஷன்–வட நாடு–உத்தராஞ்சல்

68–திருக் கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)–ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்–ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)–வட நாடு–உத்தராஞ்சல்

69–திரு வதரி ஆசிரமம்–(பத்ரிநாத்)–ஸ்ரீ அரவிந்த வல்லி–ஸ்ரீ பத்ரி நாராயணன்–வட நாடு–உத்தராஞ்சல்

70–திரு சாளக்ராமம்(முக்திநாத்)–ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்–ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி–வட நாடு–நேபால்

71–திரு வட மதுரை–(மதுரா)–ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்–கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)–வட நாடு–உத்தர் பிரதேஷ்

72–திருவாய்ப்பாடி,–கோகுலம்–ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா–ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்–வட நாடு–உத்தர் பிரதேஷ்

73–திரு த்வாரகை–(துவரை, துவராபதி)–ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)–
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)–வட நாடு–குஜராத்

74–திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்–ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)–ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)–வட நாடு–ஆந்திரம்

75–திருவேங்கடம்–(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)–அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)–ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு–ஆந்திரம்

————–

76–திரு நாவாய்–ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)–நாவாய் முகுந்தன் (நாராயணன்)–மலை நாடு–கேரளம்

77–திரு வித்துவக்கோடு (திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)–ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)–மலை நாடு–கேரளம்–மாவட்டம்: பாலக்காடு
தீர்த்தம், : சக்கரதீர்த்தம். -புராண பெயர்: திருமிற்றக்கோடு

78–திருக்காட்கரை–ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)–காட்கரையப்பன்–மலை நாடு–கேரளம்
மாநிலம் எர்ணாகுளம்( கொச்சின்) …ஓணம் திருவிழா வெகு விசேஷமாக .

79–திரு மூழிக்களம்–ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்–திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ ஸூக்தி நாத பெருமாள், அப்பன்)–மலை நாடு-கேரளம்
அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்-683 572 எர்ணாகுளம் –மங்களாசாசனம், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

80–திரு வல்ல வாழ்–(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)–ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்–ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)–மலை நாடு–கேரளம்

81–திருக்கடித்தானம்–ஸ்ரீ கற்பக வல்லி–ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்–மலை நாடு–கேரளம்-மாவட்டம்:கோட்டயம்
தீர்த்தம்:பூமி தீர்த்தம்
நம்மாழ்வார் மங்களாசாஸனம்
கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.

திருவிழா:
திருக்கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு “சங்கேதம்’ என்று பெயர்.
இந்த தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும். இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இந்த தீபம் ஏற்றும் விழாவிற்கு புராண நிகழ்ச்சியை கூறுகின்றனர்.
முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் தீப்பிழம்பாக தோன்றியதாகவும்,
இந்த வெப்பத்தால் இப்பகுதி அழிந்து விடாமல் இருக்க பிரம்மனும் விஷ்ணுவும் சிவனிடம் வேண்டினர்.
சிவன் சிறிய தீபமாக மாறி அருள்புரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திருக்கார்த்திகை தினத்தில் நடந்தாக கூறப்படுகிறது.
இவை தவிர கோகுலாஷ்டமி மற்றும் பெருமாளுக்குரிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

“கடி’ என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்.
பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன.
அவைகளுள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம்.
அதாவது ஒரு கணப்பொழுதில் தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால்,
எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம்.
இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும்,
கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்- 686 105 கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சாஸ்தா, சுப்பிரமணியர், நாகர் விக்ரகங்கள் உள்ளன.
இத்தலத்து பிரமாண்டமான கோட்டைசுவர்கள் பூதங்களால் கட்டப்பட்டது என கூறுவர்.
இக்கோயிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
அதற்கு ஒரு புராண கதை உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட ராஜா சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அவர் வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கோயில் மெய்க்காப்பாளன் ராஜாவிடம் பணம் வாங்கி கொண்டு
கோயில் நடையை திறந்து விட்டான்.
இதன் தண்டனையாகத் தான் அந்த மெய்க்காப்பாளனின் உடல் கோயில் வாசல் முன் வைக்கப்பட்டுள்ளது என்பர்.

தலபெருமை
வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள்.
எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இதில் நரசிம்மரின் உருவம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர்.
கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள்.
இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும்.
நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தை குறைப்பதற்காக பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
நரசிம்மருக்குரிய ஒவ்வொரு பூஜையின் போதும் “நாராயணீயம்’ சொல்லப்படுகிறது. இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இவருக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது.
இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தல வரலாறு
சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான்.
இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர்.
தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான்.
மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர்.
உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவித்தான்.
இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது.
இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, “”நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால்
நாங்கள் வானுலகம் செல்ல முடியும்,”என தேவர்கள் கூறினர். இதைக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக்கொண்டு,
இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்கு தானமாக அளித்தான்.
தேவர்களும் வானுலகம் சென்றனர்.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு “திருக்கடித்தானம்’ என பெயர் வந்ததாக கூறுவர்.
இத்தலத்து பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான்.
அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம்.
இதன் காரணமாக இத்தல பெருமாள் “அற்புத நாராயணன்’ என அழைக்கப்படுகிறார்.
இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும்,
கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்

82–திருச்செங்குன்றூர்–(திருச்சிற்றாறு–ஸ்ரீ செங்கமல வல்லி–இமயவரப்பன்–மலை நாடு–கேரளம்
புராண பெயர், : திருச்செங்குன்றூர். ஊர், : திருச்சிற்றாறு. மாவட்டம், : ஆலப்புழா. மாநிலம்

83–திருப்புலியூர்–(குட்டநாடு)–ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்–மாயப்பிரான்–மலை நாடு-கேரளம்

84–திருவாறன்விளை–(ஆறன்முளா)–ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்–திருக்குறளப்பன் (செஷாசனா )–மலை நாடு-கேரளம்

85–திருவண் வண்டுர்–ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்–பாம்பணை அப்பன்–மலை நாடு–கேரளம்

86–திருவனந்தபுரம்–ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி–அனந்தபத்மநாபன்–மலை நாடு–கேரளம்

87–திரு வட்டாறு–ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்–ஆதி கேசவ பெருமாள்–மலை நாடு–கேரளம்

88–திருவண்பரிசாரம்–ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்–ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)–மலை நாடு–கேரளம்

——————

89–திருக்குறுங்குடி–ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்–சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)–பாண்டியநாடு–திருநெல்வேலி

90–திரு சிரீவர மங்கை (வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)–ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)–ஸ்ரீ தெய்வநாயகன்–பாண்டியநாடு–திருநெல்வேலி

91–ஸ்ரீவைகுண்டம்,–நவதிருப்பதி–ஸ்ரீ வைகுந்தவல்லி–ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)–பாண்டியநாடு–திருநெல்வேலி

92–திருவரகுணமங்கை,-நவதிருப்பதி–ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)–விஜயாசனப் பெருமாள்–பாண்டியநாடு–திருநெல்வேலி

93–திருப்புளிங்குடி,–நவதிருப்பதி–ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி–ஸ்ரீ காய்சினவேந்தன்–பாண்டியநாடு–திருநெல்வேலி

94–திரு தொலைவில்லிமங்கலம் (ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி-ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்–ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு–திருநெல்வேலி

95–திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி–ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி–ஸ்ரீ ஸ்ரீநிவாசன்–ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு–திருநெல்வேலி

96–திருக்கோளூர், நவதிருப்பதி–ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்–ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு–திருநெல்வேலி

97–திருப்பேரை-(தென் திருப்பேரை), நவதிருப்பதி–ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)–பாண்டியநாடு–திருநெல்வேலி

98–திருக்குருகூர்–(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி–ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)–ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்–பாண்டியநாடு–திருநெல்வேலி

99–ஸ்ரீவில்லிபுத்தூர்–ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)–ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)–பாண்டியநாடு–விருதுநகர்

100–திருதண்கால் (திருதண்காலூர்)–ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்–பாண்டியநாடு–விருதுநகர்

101–திருக்கூடல்,–மதுரை–ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)–கூடல் அழகர்–பாண்டியநாடு–மதுரை

102–திருமாலிரும் சோலை–(அழகர் கோயில்)–ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)–திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு–மதுரை

103–திரு மோகூர்–ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி–ஸ்ரீ காளமேக பெருமாள்–ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்–பாண்டியநாடு–மதுரை

104–திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)–திருமாமகள் நாச்சியார்–ஸ்ரீ உரகமெல்லணையான்–ஸ்ரீ சௌம்யநாராயணன்–பாண்டியநாடு–புதுக்கோட்டை

105–திருப்புல்லாணி, ராமநாதபுரம்–ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநித் தாயார்–ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)–பாண்டியநாடு–ராமநாதபுரம்

106–திருமெய்யம்–ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்–ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)–ஸ்ரீ மெய்யப்பன்–பாண்டியநாடு–புதுக்கோட்டை

————

107–திருப்பாற்கடல்–ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)–ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்–விண்ணுலகம்–விண்ணுலகம்

108–பரமபதம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார்–ஸ்ரீ பரமபத நாதன்–விண்ணுலகம்–விண்ணுலகம்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும்–ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் ஸ்வாமிகள் / ஸ்ரீ உ ,வே ,S , P, புருஷோத்தமன் ஸ்வாமிகள் —

September 7, 2021

ஸ்ரீ திருப்பாணாழ்வார் உள்ளத்தினைக் கவர்ந்த கள்வனான ஸ்ரீ அரங்கன், கள்வனாக மாறிய
ஸ்ரீ திருமங்கையாழ்வார் மனதினையும் கவருகின்றார்.
அரங்கன் கள்ளனுக்கெல்லாம் கள்ளன். இவரது இயற்பெயர் நீலன். கள்ளர் குலத்தவர். சோழபேரரசின் தளபதி.
இவர் திருவாலி என்னும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலி நாட்டு பெரிய நீலன் என்ற படைத்தளபதிக்கும்
வல்லித்திரு எனும் நற்குண மங்கைக்கும் மகனாகப் பிறந்தார். போரில் எதிரிகளை கலங்கடித்தவர்.
பின்னர் சோழமன்னன் அவரை ‘திருமங்கை’ என்னும் சிற்றரசுக்கு அரசனாக்கினான்.

வீர இளைஞனான நீலன் திருவெள்ளக்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் குமுதவல்லி எனும்
கபிலமுனியின் சாபத்தினால் மானுடவாழ்வெடுத்த தேவமகளை, தேவதையை, அழகு என்ற சொல்லுக்கே இலக்கியமானவளை,
மஹாஞானியை பார்க்கின்றாh. தன் மனதினை பறிக்கொடுக்கின்றார். குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.

1) பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமாலடியவனாய் மாறவேண்டும்.
2) அடியார்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் யாரிடம் செய்து கொள்வது?. என்றும் உயர்ந்ததையே நாடும் நீலன் அன்று
திருநறையூர் ஸ்ரீநிவாஸனையே தேர்ந்தெடுத்தார் குருவாக.
மன்னன் சித்தம் கேட்ட பட்டர் செய்வதறியாது திரைசேர்த்து வெளியேறினார்.

கருவறையில் ஸ்ரீநிவாஸன் எதிரே நீலன்!
பிடிவாதமாக அவர்தான் தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்ய வேண்டுமென்று கண்மூடி அசையாது அவரையே தியானித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தபஸ் அது.
மெய்யுருகி நின்றால் வெண்ணையுண்டவாயன் தான் உருக ஆரம்பித்து விடுவான்.
ஸ்ரீநிவாஸனின் சக்கரக்கையும் சங்கக்கையும் நீலனின் புஜங்களை தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரமிட்டது.
பரகாலன் என்று நாமமிட்டு அழைத்தது. திருமந்திரத்தை உபதேசித்தது. நீலனின் களை மாறியது. தேஜஸ் ஒளிர்ந்தது.
புனித குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அன்னதானம் ஆலிநாட்டில் சிறப்பானது.
ஆலிநாடே அதிசயபட்டது. மன்னன் பரகாலன் புகழ் எட்டுதிசைகளிலும் பரவியது.

கப்பம் கட்டாத பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்றறிந்த சோழமன்னன் தந்திரமாக அவனை ஒரு கோவிலில் சிறை வைத்தான்.
மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த பரகாலனின் கனவில் பேரருளாளன் அத்திகிரி அருளாளப் பெருமாள் வரதன் தோன்றினான்.
காஞ்சிக்கு வரப் பணித்தான். கடனைத் தீர்ப்பதாக அறிவித்தான். அருளாளின் ஆணையை அரசிற்குத் தெரிவித்தார் பரகாலன்.
பரகாலன் சத்தியம் தவறாதவர் என்று நன்குணர்ந்த அரசன் ஒரு சிறு குழுவினை அவரோடு காஞ்சி அனுப்பி வைத்தார்.
மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய அருளாளன் ஒரு புதையல் இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தார்.
வேகவதி ஆற்றங்கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலை கண்டெடுத்தார்.
அரசுக்கு செலுத்தவேண்டிய கப்பம் செலுத்தினார். மீதமானதை அன்னதானத்திற்கு எடுத்து வைத்தார்.
திருமங்கை விளைச்சலில் அரசுக்கு சேரவேண்டிய நெல்லைக் கேட்டனர் குழுவினர். அருளாளனின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண்ணை
மூடிக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார் பரகாலன்.
என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல்துகளனைத்தும் நெல்மணிகளாயின!
பரகாலன் பெருமையினை, தெய்வம் துணை நின்றதையறிந்த அரசன் தவற்றுக்கு வருந்தினான்.
அவரை சுதந்திரமாக திருமங்கையை ஆளவிட்டார்.

நீலன் மனப்பூர்வமாக வைணவனாக உறுதி பூண்டார். திருநறையூர் நம்பி அருள் புரிந்தார் இவரின் உறுதி கண்டு!.
அன்னதானத்தின் பயன் அருளாளன் வரதன் அருள்புரிந்தார்.

ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வளமுள்ளவரிடத்து கொள்ளயடித்தாவது இந்த கைங்கர்யத்தைச் செய்ய துணிபு பூண்டார் பரகாலன்.
வழிப்பறிக் கொள்ளையனாய் மாறினார்.
வயலாளி மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியனராய் மாறினர். இவர்களின் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்த
பரகாலனால் நம்பெருமாள் கால்விரலில் அணிந்திருந்த விரலணியை கழற்ற இயலவில்லை.
பரகாலன் பல்லால் கடித்தாவது கழற்ற முயலுகின்றார். அவரின் தலை இறையின் பாதங்களில் முட்டுகின்றது.
பல்லினால் கடிக்கின்றார். தீண்டிய வேகத்தில் மெய்வண்ணம் உணர்கின்றார். திருமந்திரம் மீண்டும் உபதேசித்து பேரொளியாய் மறைகின்றான் மாயவன்.

கவி பிறக்கின்றது கள்வனுக்கு!

பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே

பொய்கள் போன்ற பலவிதமான பாவச் செயல்களை மனதிலிருந்து நீக்கி, ஐந்து புலன்களையும் தகாத வழிகளில்
போகாத வண்ணம் நிலைநிறுத்தி, ஆத்மாவுடன் சேர்ந்து முழு உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு,
தனது உண்மையான குணங்கள் முழுவதும் காண்பிப்பவனை, கண் மைப் போன்ற கரிய நிறமும், கரியமேகம் போல் ஒளிவீசும் நிறமும்,
மரகதம் என்ற ரத்தினத்தினைப் போன்ற பச்சை நிறமும் உடைய பெரியபெருமாளை, நான் திருவரங்கத்தில் கண்டு வணங்கினேன்.

திருமங்கையாழ்வார் பரம பாக்யசாலி. பகவானால் பஞ்சசம்ஸ்காரம் செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!.
இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செய்த பல கைங்கர்யங்கள் கணக்கிலடங்கா! ஆனால் இந்த கைங்கர்யத்தினை நிறைவேற்ற இவர்
கையாண்ட முறை வித்யாசமானது! எது வேண்டுமானாலும் பகவத் கைங்கர்யத்திற்காக துணிவோடு செய்வார்.
இவர் செய்த கைங்கர்யங்களுள் சாட்சியாகயிருப்பது இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமான, மண்டப, கோபுரங்களும்
இவர் பாடிய பாசுரங்களும்தாம். திருவரங்கம் திருச்சுற்றில் நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றே
திருமங்கை மன்னன் திருப்பணியை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது.

நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள ஒரு புத்தர் கோவிலிலுள்ள சொர்ணத்தினாலான, எளிதில் திருடவே முடியாத, ஒரு புத்தர் சிலையை
வெகு சாமர்த்தியமாகக் கொள்ளையடித்தார். பயணக்கப்பல் ஒன்றில் தன் பரிவாரங்களோடு பயணமும் செய்து பொய்வழக்காடி
அந்த கப்பல் முதலாளியிடமிருந்து நிறைய தனத்தினைப் பெற்றார். இவையனைத்தையும் திருப்பணிக்காக செலவழித்தும்
ஊழியர்களுக்கு சம்பளபாக்கி!. அவர்களனைவரையும் ஒரு ஓடத்தில் ஏற்றினார்.
அக்கரைச் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறி கொள்ளிடம் நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்து அவர்கள்தம் பிறவிக்கடனை இவர் கழித்தார்.
அவரவர் உறவினர் இவரை மடக்க, இவரது ஸ்வப்னத்தில் (இங்குமா!?), அரங்கன் எழுந்தருளி உறவினர்களளனைவரையும்
காவேரி ஸ்நானம் செய்து அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று அவரவர் உறவினர் பெயரைக் கூப்பிட்டு காத்திருக்கச் சொல்லி மறைந்தார்.
அவ்வாறே ஆழ்வாரும் ஏற்பாடு செய்தார். மாண்டோர் அனைவரும் மீண்டனர். அவர்களனைவரும் அவர்கள்தம் உறவினர்களிடத்து
‘ஆழ்வாருடைய நிர்ஹேதுக பரம க்ருபையுண்டானபடியினாலே நாங்கள் பெரியபெருமாள் திருவடிகளையடைந்தோம்!
நீங்கள் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப்படாதீர்கள். சிலகாலம் இந்த ஸம்ஸார வாழ்க்கையினைக் கழித்து விட்டு
ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்!’ என்று விண்ணப்பித்து மீண்டுபோனார்கள்.

இந்த க்ஷணம் அடியேன் சிலகாலம் முன்பு என் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு கேள்விக்கு அரங்கன் பதிலளித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் முகலாயர்கள் படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கான வைணவர்கள் இறந்தார்களே?
கோவில் வளாகத்திற்குள்ளேயே இறந்து போனார்களே? அப்பொழுதெல்லாம் ஏன் அரங்கன் அவர்களைக் காப்பாற்றவில்லை?
அரங்கனுக்கு அவர்களைக் காப்பாற்றக் கூடிய சக்தியில்லையா? என்றெல்லாம் தோன்றியது.
என்றாவது ஒரு நாள் பதில் தருவான் என்று மனதின் ஒரு மூலையில் கிடத்திய இக்கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.
அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணிய அடியார்களை ஆற்றில் மூழ்கடித்தார் திருமங்கைமன்னன்.
நம் பார்வைக்கு அநியாயமாகக் கொல்லபட்ட அவர்களை அரங்கன் ஆட்கொண்டான்.
அவர்கள் பெரியபெருமாள் திருவடிகளடைந்ததை பிரத்யட்சமாக அழகிய மணவாளன் மண்டபத்தில் மீண்டு வந்து உணர்த்தினார்கள்.

இதை நாம் பிரமாணமாகக் கொள்ள வேண்டும்! அரங்கநகரப்பனைக் காக்கும் பொருட்டு தன் இன்னுயிர் துறந்தவர்களை சும்மாவா விடுவான் அரங்கன்?
அவர்களைனைவரையும் அரங்கனே அவர்களது ஊழ்வினையறுத்து தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
உயிர் கூட்டினை விட்டு சாமான்யர்களின் உயிர்பறவை பிரிவதென்பது வலிதான். இவர்களனைவரும் சற்று கடுமையான வலியினைத் தாங்கியுள்ளனர்.
எவர் மூலமோ கொடுவாள் எடுத்து ஊழ்வினையறுத்து, அவனது நிர்ஹேதுக கிருபையினால் அவன் திருவடிகளையடைந்துள்ளனர்.
அவனது திருவடிகளடைந்து பரமபதம் சென்றாலும் அவர்கள் அவ்வப்போது திருவரங்கமும் வந்து சென்று அரங்கனை தரிசிக்கின்றார்கள்.
இதனை நான் சொல்லவில்லை. ஆழ்வாரே அறிவிக்கின்றார்! இதோ அவர் பாடல்!

ஏனமீனாமையோடு அரியும் சிறுகுறளுமாய்
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால்
வானும் மண்ணும் நிறையப்புகுந்து ஈண்டி வணங்கும்- நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே!

பரமபதத்தில் உள்ளவர்களும், இந்த பூமியிலுள்ளவர்களும் ஊர் முழுவதும் நிறைந்துள்ளது போல் இங்கு வந்து ஒன்றாகத்
திரண்டு வணங்கும் இடமும், சுவையும் மதுரமும் உள்ள தேனும் பாலும் இரண்டற ஒன்றாகக் கலந்தது போல்
இங்கு உள்ள அடியார்கள் சேர்ந்து நிற்கவும் ஆகிய திருவரங்கமானது – வராகமாகவும், மீனாகவும், ஆமையாகவும்,
நரசிம்மமாகவும், வாமனனாகவும் அவதாரங்கள் எடுத்துப் பின்னர் தானே ஒரு பூர்ணமான அவதாரம் எடுத்தப் பூமியின் தலைவனும்,
சக்ரவர்த்தித் திருமகனாம் ஆகிய இராமபிரானின் இடமாகும்.

திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு
எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள்
அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு,
திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சில வரங்களை யாசிக்கின்றார். அவற்றுள் சில

– தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
– திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்) எந்தவித தோஷங்களும் கூடாது.
அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.

அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த
திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று.
ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்)
தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார்.
இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள
‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம்.
(இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்).
இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும்,
இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர்.
அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!

இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை
ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும்.
திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான்.
திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும்.
காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார்.
அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும்.
இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.

ஏழை ஏதலன் கீழ்மகனென்று எண;ணாது
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை – உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட –
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு,
அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய
இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும்,
என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய்.
இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய்.
உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய்.
இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது.
கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே!
உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன்.

நம் தேகமே ஆத்மா, ஆத்மா நம்முடையது, நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு.
எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!

———–

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபய வேதாந்தத்தைச் சார்ந்துள்ளது.
உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும்,
அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம்.

ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும்,
உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல்,
தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
அவற்றின் வ்யாக்யானமாக தமிழ் வேதாந்தத்தையும் சேர்த்தே நம் பூர்வாசார்யர்கள் போற்றினார்கள்.

உபய வேதாந்தமும் இரண்டு கண்களாகக் கருதப்படுகின்றன.
எம்பெருமானால் ‘மயர்வற மதிநலம் அருளப் பெற்ற’ ஆழ்வார்கள், அற்புதமான திவ்ய ப்ரபந்தத்தை அருளிச் செய்து,
அதன் மூலம் ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரார்த்தத்தை தெளிவாக்கி, இவ்வுலகோர் உய்ய வழி காட்டியருளினார்கள்.
அவர்கள் மீது நம் ஆசார்யர்களும், நாமும் ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க இதுவே காரணமாகத் தட்டில்லை.

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது.
வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.
பிறகு நித்யாநுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஒத வேண்டும்.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஒதுவதில்லை.
இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் .
மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல.

த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது.
த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.

அநத்யயன காலத்திலேயே நாம் அத்யயன உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம்.
நம்மாழ்வார் பரமபதம் சென்ற நாளை அத்யயன உத்ஸவமாக போற்றிக் கொண்டாடுவது நம் ஸம்ப்ரதாய வழக்கம்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இவற்றுக்கு உண்டான விசேஷ தொடர்பு பற்றி
பெரியவாச்சான் பிள்ளை ‘கலியன் அருள் பாடு’ என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த க்ரந்தத்தின் விரிவுக்கஞ்சி, நம் தலைப்பிற்குத் தொடர்பான சில முக்கிய விஷயங்களை மட்டும் நாம் மேலே பார்க்கலாம்.
பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன், தன் நிர்ஹேதுக க்ருபையால் சகல ஜீவாத்மாக்களும் ஸம்ஸாரம் என்ற கரையைக் கடக்க,
பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அர்ச்சாவதார திருமேனியுடன் அதாவது,
எளியவர்களும் பார்க்கும்படியாகவும், கைங்கர்யம் செய்ய ஹேதுவாகவும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று
ப்ரஸித்தமாக போற்றப்படும், ஸ்ரீரங்கம், திருவேங்கடம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவதரித்து அருள் செய்கின்றான்.

ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு,
பகவானின் அர்ச்சா மூர்த்திகளில் ஆழ்ந்து, மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தமிழ் நூல் (திருவாய்மொழி) புலவன் மங்கையாளன் என்று தன்னைப் பற்றிக் கூறியவர்,
ஆழ்வாரின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து அநுபவித்து, ஸேவித்து வந்தார்.

பொதுவாக நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில், பௌர்ணமி திதி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுகின்றோம்.
அப்படி ஒரு திருக்கார்த்திகை அன்று, நம்பெருமாளும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி,
ஸ்ரீ வைஷ்ணவ பக்த கோஷ்ட்டியில் எழுந்தருளியிருக்கும் காலத்தே,
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தை இயற்றி, எம்பெருமானுக்கு இசையோடு பாடிக் காண்பித்தார்.
மேலும், திருவாய்மொழியிலிருந்தும் சில பாசுரங்களை திவ்யமான இசையோடு பாடினார்.

இதைக் கேட்ட நம்பெருமாள் மிகவும் உகந்து, உமக்கு ஏதேனும் விருப்பம் இருந்ததாகில் கேளும்
அதை நாம் நிறைவேற்றி அருளுவோம் என்று திருமங்கையாழ்வாரிடம் கூறினார்.

திருமங்கையாழ்வார் தனக்கு இரண்டு விருப்பங்கள் என்று மேலே விண்ணப்பிக்கிறார்:
1-எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி,
அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று அத்யயன உத்ஸவம் கொண்டருளும்போது
வேத பாராயணத்துடன், திருவாய்மொழியை முழுவதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
2-திருவாய்மொழியை உலகோர் உணர ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையானது என்று அறிவிக்க வேண்டும்

எம்பெருமான் திருவுள்ளம் உகந்து இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றினார்.
கலியன் தொடர்ந்து பாடியதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான்,
திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை
அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ஆழ்வார் திருநகரியில் உள்ள அர்ச்சா ரூபத்திலுள்ள ஸ்வாமி நம்மாழ்வாருக்குத் திருமுகம் (தகவல்) அனுப்பப்பட்டு,
அவர் உடனடியாக கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள்,
காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார்.

உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத்
தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை அன்று ஏற்படுத்தினார்.
பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இப்படிச் சிலகாலம் சென்றது.

கலியுகத்தின் கோலம், காலப் போக்கில் திவ்ய ப்ரபந்தம் தாற்காலிகமாக மறைந்து,
ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளுவது நின்றது.
நாதமுநிகள் அவதரித்து, எம்பெருமானின் க்ருபையால், ஆழ்வாரைப் பற்றியும் திவ்ய ப்ரபந்தத்தைப் பற்றியும் அறிந்து,
ஆழ்வார் திருநகரி அடைந்து, மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பை கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம க்ருபையைப் பெற்று,
நாலாயிரமும் ஸம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று நம்மையெல்லாம் உய்வித்தார்.

நாதமுநிகள் தன் சிஷ்ய கோடிகளுக்கு அத்யயனம் செய்து வைத்து,
ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்தார்.
திவ்ய ப்ரபந்தத்தின் ஏற்றத்தையும், ஆழ்வார்களின் பெருமைகளையும் நம்மாழ்வார் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாதமுநிகள்,
நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படி வழி செய்தார்.
வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி என்ற எம்பெருமானின் நியமனத்தை அநுசரித்து,
நாதமுநிகள் திருவாய்மொழிக்கும் மற்ற ப்ரபந்தங்களுக்கும் அநத்யயன காலத்தை ஏற்படுத்தினார்.

திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீப நாளிலிருந்து தொடங்கி
அத்யயன உத்ஸவ நாளுக்கு முன்பாக முடியும்.
அத்யயன காலம் அத்யயன உத்ஸவ முதல் நாளில் தொடங்கித் திருக்கார்த்திகை தீபமன்று முடியும்.
நாதமுனிகள் நின்று போயிருந்த அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கும் பொருட்டு,
எம்பெருமானிடம் இருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும்,
பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உத்ஸவத்தில் கேட்டு முடிக்கும் வரை
ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழியாமல் இருக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தார்.

மேலும், திருக்கார்த்திகை தீபம் அன்று எம்பெருமானுக்குச் சாத்திய எண்ணெய்க்காப்பு சேஷத்தை
நம்மாழ்வார் தொடக்கமான மற்றைய ஆழ்வார் ஆசார்ய்களுக்குச் சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் ப்ரசாதிக்குமாறு செய்தார்.

நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாகவும்
மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் வேதத்தின் அங்க (சீக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்)
உபாங்ககளாகவும் கருதப்படுகிறது. இந்த ப்ரபந்தங்கள் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம் ச்லோகத்தின் அர்த்தங்களையும் விளக்குகின்றன.

மேலும், நாதமுனிகள் பின்வரும் நியமனங்களைச் செய்தார்.
அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை)
முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி,
திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமனாதிபிரான், கண்ணிநுண் சிறுத் தாம்பு),
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று, திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்.
10 நாட்களும், காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும்.
கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்.

21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி,
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.

(குறிப்பு: இராமானுச நூற்றந்தாதி நம்பெருமாளின் ஆணையின் பேரில் எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது.
21ஆம் நாள் அன்று இரவு புறப்பாட்டில் சேவிக்கப்படும்).

மேலும், நாதமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தவறாமல் வேதம் கற்றுக் கொள்கிறானோ,
அது போல ப்ரபந்நர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபந்தங்களை அவசியம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று நியமிக்கிறார்.

மேலும், மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும்
ஆண்டாளின் திருப்பாவையும் சேவிக்கப்படுகிறது (அநத்யயன காலமாக இருந்தாலும் இந்த இரு ப்ரபந்தங்களும்
முறையே பகவானையும் பாகவதர்களையும் துயிலெழுப்புவதால், இவற்றைச் சேவிக்கத் தடை ஏதும் இல்லை).

இவ்வாறு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி மற்றும் எம்பெருமானாரின் காலம் வரை சென்றது.
எம்பெருமானார் காலத்தில் ஒரு முறை ஏதோ சில காரணங்களினால் நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை.
எம்பெருமானார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனியையும் மற்றைய ஆழ்வார்களின் திருமேனிகளையும்
எல்லா திவ்ய தேசங்களிலும் ப்ரதிஷ்டை பண்ணும்படி நியமித்தார்.
திருமலையே எம்பெருமானின் திருவுடம்பாகக் கருதப்படுவதால் ஆழ்வார்களை திருவேங்கட மலையடிவாரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் செய்தார்.
மேலும் அனைத்து திவ்ய தேசங்களிலும் அத்யயன உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடும்படி நியமித்தார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் நியமனத்துடன் திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் எழுதி அவரிடம் சமர்ப்பிக்கிறார்.
எம்பெருமானார் மிகவும் உகந்து அனைவரும் ஸ்ரீ பாஷ்யத்துடன் இதையும் கற்கும்படி நியமிக்கிறார்.
எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பலகாலம் ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருந்திரளில் வாழ்ந்தார்.
அவர்களுக்கு ஸாரார்த்தங்களை விளக்கிக் கொண்டும் பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து கொண்டும் வாழ்ந்தார்.

எம்பெருமானார் பரமபதத்துக்கு எழுந்தருளிய பிறகு, ஆழ்வானின் திருக்குமாரரும் பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியின்
ஸ்வீகார புத்ரரான பட்டர், எம்பெருமானாரின் அபிமான புத்ரரான பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார்,
கந்தாடை ஆணடான், முதலியவர்கள் கூடி எம்பெருமானின் ஆணைக்கேற்ப எம்பெருமானாரின் அர்ச்சா விக்ரஹத்தை
அனைத்துலகின் வாழ்ச்சிக்காக ஏற்படுத்தி வைத்தனர். இது போல அனைத்து திவ்ய தேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் ஏற்றத்தை அறிந்து 4000 திய்வ ப்ரபந்தத்தில் அதைச் சேர்த்தார்போல்
எம்பெருமானும் இராமானுச நூற்றந்தாதியை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கும்படி ஆணையிடுகிறான்.
எப்படி ப்ராஹ்மணன் அநுதினமும் காயத்ரி ஜபம் செய்வது அவசியமோ அது போல ப்ரபந்நன் அநுதினமும் ப்ரபந்ந காயத்ரி
என்று போற்றப்படும் இராமானுச நூற்றந்தாதியை ஒரு முறையேனும் சொல்லுதல் அவசியம்.

இவ்வாறு பிற்பட்ட ஆசார்யர்கள் எம்பெருமானார் உரைத்த ஸாரார்த்தங்களை அனைத்துலகும் வாழ உபதேசித்துப் போந்தார்கள்.
இவ்வாறாக கலியன் அருள் பாடு என்னும் க்ரந்தம் முடிவடைகிறது.

பின்பு, பராசர பட்டர் திருநாராயணபுரத்துக்குச் சென்று வேதாந்தியிடம் வாதம் செய்து,
வாதத்தில் ஜெயித்து அவரை சிஷ்யராக ஏற்றுக் கொள்கிறார்.
வேதாந்தியும் பட்டரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டு சந்யாஸம் பெற்றுக் கொள்கிறார்.
பிற்காலத்தில் நஞ்ஜீயர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்படுகிறார்.
பட்டர் வேதாந்தியை வாதத்தில் வென்று அத்யயன உத்ஸவத்தின் முதல் நாள் ஸ்ரீரங்கத்தை அடைகிறார்.
பெரிய பெருமாள் பட்டரிடம் வாதத்தைப் பற்றி விசாரிக்க பட்டர் வேதாந்தியை திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம்
திவ்ய ப்ரபந்தத்தை வைத்து வென்றேன் என்கிறார்.
பெரிய பெருமாள் மிகவும் திருவுள்ளம் உகந்து பட்டரை மிகவும் பெருமைப்படுத்தவேண்டும் என்று நியமிக்கிறார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க வேண்டும் என்று நியமிக்கிறார்.
இவ்வாறு நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் அத்யயன உத்ஸவத்தைச் சுருக்கமாக அனுபவித்தோம்.

பொதுவாக, பல திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவம் 21 நாட்களாகக் கொண்டாடப் படுகிறது.
எம்பெருமான், நாச்சியார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் 21 நாட்களும் பெரிய ஓலக்கத்தில் (சபையில்) எழுந்தருளியிருப்பர்கள்.
எம்பெருமானும் நாச்சியார்களும் ஓலக்கத்தின் நடுவில் வீற்றிருப்பர்கள்.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எம்பெருமானுக்கு இரு புறமும் எதிரெதிராக வீற்றிருப்பர்கள்.
பல திவ்ய தேசங்களில், நம்மாழ்வார் ஆழ்வார் கோஷ்டிக்கு முதல்வராக இருப்பார்.
அவருடன் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் எழுந்தருளியிருப்பர்கள்
(ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயத்திற்கு இவர்கள் செய்த பேருபகாரத்தை நினைவில் கொண்டு இவர்கள் முதலில் எழுந்தருளிருப்பர்).
மற்றைய ஆழ்வார் ஆசார்யர்கள் தொடர்ந்து எழுந்தருளிருப்பர்.

வானமாமலை திருக்குறுங்குடி போன்ற சில திவ்ய தேசங்களி நம்மாழ்வாருக்குத் தனியாக அர்ச்சா விக்ரஹம் இல்லாததால்
கலியனும் எம்பெருமானாரும் கொண்டாட்டங்களை முன்னின்று நடத்திப் போவர்கள்.

ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானாருக்கு முக்கியத்துவம் உள்ளதாலும், ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானாரை
“நம் கோயில் அண்ணர்” என்று அழைத்துத் தன் அண்ணனாக ஏற்றுக் கொண்டதாலும்,
அவர் எம்பெருமானாருக்கு அடுத்து ஆழ்வார் கோஷ்டியில் முதன்மையாக எழுந்தருளுகிறார்.
வைகுண்ட ஏகாதசி தொடங்கி மாலை வேளையில் பரமபத வாசல் திறக்கப்படும்.
நம்மாழ்வார் பரமபத வாசலுக்கு வெளிப்புறம் நின்று, வாசல் திறக்கும்போது எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்து
பின்பு எம்பெருமானுடன் புறப்பாடு கண்டருள்வர்.
சில திவ்ய தேசங்களில், மற்றைய ஆழ்வார் ஆசார்யர்களும் பரமபத வாசல் சேவைக்கு எழுந்தருளுகின்றனர்.

பகல் பத்து மற்றும் திருமொழித் திருநாள் எனப்படும் முதல் 10 நாட்கள் முதலாயிரமும் பெரிய திருமொழியும் சேவிக்கப்படும்.
திருவீதிப் புறப்பாடு இருக்கும் திவ்ய தேசங்களில் புறப்பாட்டின்போது உபதேச ரத்தின மாலை சேவிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி 10 நாட்கள் இரவில் திருவாய்மொழி சேவிக்கப்படும்.
இந்தப் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
இருபதாவது நாள் ஆழ்வார் திருவடித் தொழல் மற்றும் திருவாய்மொழி சாற்றுமுறையுடன் இனிதே முடியும்.
திருவடித் தொழலின் போது நம்மாழ்வார் அர்ச்சகர்கள் நம்மாழ்வாரைக் கைத்தலமாக எம்பெருமானிடம்
எழுந்தருளப் பண்ணிக் கொண்டு சென்று எம்பெருமானின் திருவடியில் ஆழ்வாரின் திருமுடி படும்படிச் சேர்த்து விடுவர்.
பின்பு ஆழ்வார் திருத்துழாயால் முழுவதும் மூடப்படுவர்.

21ஆம் நாள் மாலை – இயற்பா சேவிக்கப்படும்
இரவு – இராமானுச நூற்றந்தாதி கோஷ்டி மற்றும் இயல் சாற்றுடன் வீதி புறப்பாடு.

22ஆம் நாள் – திருப்பல்லாண்டு தொடக்கம். இன்று முதல் ஸந்நிதிகளில் 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் ஆரம்பம்.

ஓரொரு திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவதில் சில விசேஷ அம்ஸங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் சிலவற்றை இப்பொது காண்போம்.

ஸ்ரீரங்கம்
22 நாட்கள் கொண்டாட்டம் – பகல் பத்துக்கு முந்தைய நாள் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படும்.
தொடர்ந்து 21 நாட்கள் அத்யயன உத்ஸவம்.
பாசுரங்களை அரையர்களே அபிநயத்துடன் நாட்டிய நாடகம் போல நம்பெருமாள், நாச்சியார்கள் மற்றும்
ஆழ்வார் ஆசார்யர்களின் ஓலக்கத்தில் சேவிக்கின்றனர்.
அரையர் ஸேவையின் போது நம்பெருமாளும் நாச்சியார்களும் உயர்ந்த மண்டபத்தில் வீற்றிருக்க
ஆழ்வார் ஆசார்யர்கள் நம்பெருமாளை நோக்கிக் கொண்டு எழுந்தருளியிருப்பர்கள்.

—————-

ஆழ்வார் திருநகரி
அபிநயத்துடன் அரையர் சேவை. முதல் நாள் அரையர் சேவிப்பதை மறுநாள் அத்யாபகர்கள் கோஷ்டியாகச் சேவிப்பர்கள்.
பகல் பத்தில் 10ஆம் நாள் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தசமி அன்று
நம்மாழ்வாரும் எம்பெருமானாரும் சேர்ந்து அற்புதமான ஒரு சேவை –
நம்மாழ்வார் அழகிய மணவாளனாக சயன திருக்கோலத்திலும் எம்பெருமானார் ஸ்ரீ ரங்க நாச்சியாராக
ஆழ்வாருடைய திருவடித் தாமரைகளிலும் எழுந்தருளியிருப்பர்.

இராப்பத்து சாற்றுமுறை அன்று அனைத்து திவ்ய தேசங்களிலும் திருவடித் தொழல்
அதாவது நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் சென்று சேர்தல்.
ஆனால் இங்கு மட்டும் திருமுடித் தொழல் அதாவது
அர்ச்சகர்கள் எம்பெருமானைக் கைத்தலமாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று
ஆழ்வாரின் திருமுடியில் எம்பெருமானின் திருவடியைப் பதிப்பர்கள்.
கண்கொள்ளாக் காட்சியான இது நம் ஸம்ப்ரதாயத்திற்கு உயிரான பரகத ஸ்வீகாரத்தை நேரே தெளிவாக உணர்த்துகிறது.
பரகத ஸ்வீகாரமாவது எம்பெருமான் தான் விரும்பி ஜீவாத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வது.

22 நாட்கள் கொண்டாட்டம் – கடைசி நாளான்று “வீடு படைத் திருமஞ்சனம்” நடக்கும்.
இந்த நாளன்று, பொலிந்து நின்ற பிரான் நம்மாழ்வாரை அனைத்துலகின் உஜ்ஜீவனத்திற்காக
லீலா விபூதியிலேயே இருக்குமாறு பணிக்கிறான்.

இதன் பின்பு வரும் முதல் திருவிசாகத்தன்று திருப்பல்லாண்டு தொடக்கம் செய்யப்படும்.

—————

திருத்துலைவில்லி மங்கலம்
நம்மாழ்வார் திருவாய்மொழியில் தேவபிரான் எம்பெருமானே தனக்குத் தன்தை மற்றும் தாய் என்று கூறுகிறார்.
அவருக்கு தேவபிரானிடம் மிகுன்த ஈடுபாடு.
முற்காலங்களில் ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பும்போது துலைவில்லி மங்கலத்தை அடைந்து
மாசி விசாகத்தின் வரை இங்கே இருந்துவிட்டு பின்பு ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புவர் என்று சொல்லப்படுகிறது.

இதன் நினைவாக, இன்றளவும் நம்மாழ்வார் மாசி விசாகத்தன்று
(மாசி மாதம் 13 நாட்கள் ஆழ்வார் திருநகரியில் கொண்டடப்படும் உத்ஸவத்தின் இறுதியில்) இங்கே எழுந்தருளுகிறார்.
எம்பெருமானுடன் அன்று முழுதும் கூடி இருந்து திருமஞ்சனம், கோஷ்டி முதலியவை கண்டருளி மாலையில்
எம்பெருமானிடம் பிரியா விடை பெற்றுச் செல்கிறார்.

இதன் மறுநாள் இங்கே திருப்பல்லாண்டு தொடக்கம் (அது வரை இங்கு அநத்யயன காலமே).

————

திருவாலி/திருநகரி மற்றும் திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

பொதுவாக திருக்கார்த்திகை தீபமும் கலியன் திருநக்ஷத்ரமான கார்திகையில் கார்திகையும் சேர்ந்தே வரும்.
ஆனால் சில சமயங்களில் கார்த்திகை மாதத்தில் இரு முறை கார்த்திகை நக்ஷத்ரம் இருந்தால்
இரண்டாவது கார்த்திகையே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரமாகக் கொண்டாடப்படும்.
மற்றைய திவ்ய தேசங்களில் திருக்கார்த்திகை தீபத்தன்று அநத்யயன காலம் தொடங்கினாலும்,
இங்கே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரம் முடிந்த பிறகே தொடங்கப்படுகிறது.
ஆழ்வார் திருநக்ஷத்ரத்துக்கு 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்து சிறப்பாகக் கொண்டாடவே இந்த ஏற்பாடு.

————-

திருமெய்யம்
மற்றைய திவ்ய தேசங்களில் நடக்கும் 21 நாட்கள் கொண்டாட்டத்துக்கு மேலாக,
பகல் பத்தின் கடைசி நாள் கலியன் திருவடித் தொழல் உத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

———–

ஸ்ரீபெரும்பூதூர்
குரு புஷ்யம் தை மாதம் பூசம் அன்று முடியும்படி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அர்ச்சா திருமேனி ப்ரதிஷ்டை பண்ணப்பட்ட நாளே இது.
இது இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்யயன உத்ஸவமும் குரு புஷ்யமும் சேர்ந்து வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

————–

திருச்சேறை, திருமழிசை முதலிய திவ்ய தேசஙளிலும் ப்ரஹ்மோத்ஸவமோ ஆழ்வார் உத்ஸவமோ
அத்யயன உத்ஸவ சமயத்தில் வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

————-

பொதுவாக கோயில்களில் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் திருப்பல்லாண்டு சேவித்து
வழக்கமான திவ்ய ப்ரபந்த சேவாகாலம் தொடங்கப்படும்.
பல திவ்ய தேசங்களில் மேலும் பல விசேஷ அநுஷ்டானங்கள் காணப்படுகிறது.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்த சேவாகால க்ரமம் திவ்ய தேசத்துக்கேற்ப மாறுபடுகிறது.

———-

பல திவ்யதேசங்களில், க்ருஹங்களின் சேவாகாலம் கோயில் க்ரமத்தையே பின்பற்றுகிறது.
அதாவது கோயில்களில் அநத்யயன காலம் தொடங்கிய பின் க்ருஹங்களில் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப்ப் படுவதில்லை.
கோயில்களில் என்று திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகிறதோ
அன்றிலிருந்து க்ருஹங்களிலும் மீண்டும் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப் படுகிறது.

கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரமான தை ஹஸ்தத்துக்குப் பிறகே க்ருஹங்களில் திய்வ ப்ரபந்தம் சேவிக்கப் படவேண்டும்
என்று சிலர் கருதுகின்றனர். இதன் காரணம் – முற்காலங்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் சென்று
நம்பெருமாள் மற்றும் ஆழ்வாருடன் இருந்து அத்யயன உத்ஸவத்தைச் சேவித்து வருவர்.
உத்ஸவம் முடிந்து அவர்கள் தங்கள் க்ருஹங்களுக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும்.
இதன் நினைவாக, க்ருஹங்களில் தை ஹஸ்தத்தன்று திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் தொடக்கம் என்ற ஏற்பாடு.
அவரவர் தங்கள் தங்கள் பெரியோர்களிடம் கேட்டறிந்து தங்கள் திவ்ய தேசம் மற்றும் குடும்ப வழக்கத்தை நடைமுறைப் படுத்துதல் சாலச் சிறந்தது.

——————–

அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?
சில உபயோகமான குறிப்புகள்:
பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில், திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும்
கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கபடும்.
மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.

கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை
(மார்கழி மாதத்தில் கோயில்களில் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).

கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது),
ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம்
(இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும்.
கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே
ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.

திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும்
சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.

பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும்.
அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.

பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும்.
அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும்.
தொடர்ந்து “ஸர்வ தேச ஸதா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.

பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை,
உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.

அநத்யயன காலத்தில் அருளிச் செயல் அந்வயம் இல்லாவிடினும் ஆனந்தப்படக்கூடிய (பகவத்) விஷயங்கள் பல உள்ளன.
சிலவற்றை இங்கே காண்போம்:
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அதி அற்புதமான அத்யயன உத்ஸவம் –
இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தலையான உத்ஸவம் – இருபதுக்கும் மேற்பட்ட அற்புதமான பகவத் அனுபவம் நிறைந்த நாட்கள்
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அழகான மார்கழி மாதம் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அருளால் கிடைக்கும் திருப்பாவை அனுபவம்
சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை மிக எளிமையாக வெளியிடும் பூர்வாசார்யர்களின் ஸம்ஸ்க்ருத மற்றும் தமிழ் ஸ்ரீ ஸூக்திகளை கற்றுத் தேற ஒரு அரிய வாய்ப்பு.

நம்மாழ்வாரின் பெருமைகளும் திருவாய்மொழியின் பெருமைகளும் உச்சத்தை எட்டியது மணவாள மாமுனிகளின் அவதரித்த பின்னே.
திவ்ய ப்ரபந்தங்களில் உள்ள ஸாரமான அர்த்தங்களைப் பிறர்க்கு எடுத்து உரைத்து அனைவரையும் உஜ்ஜீவிப்பதிலேயே
தன்னுடைய பொழுதைப் போக்கினார் மாமுனிகள்.
அது மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களின் உயர்ந்த ஸ்ரீ ஸூக்திகளின் படி நடந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி
இருக்க வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.
இதனாலேயே நம்பெருமாள் தானே மாமுனிகளின் உயர்ந்த நிலையை அங்கீகரித்து,
திருவாய்மொழிக்கு உண்டான நம்பிள்ளை ஈடு மற்றும் இதர வ்யாக்யானங்களையும் கொண்டு
பகவத் விஷய காலக்ஷேபம் தன்னுடைய ஸந்நிதியின் முன்னே ஒரு வருட காலம் செய்யும்படி மாமுனிகளை நியமித்தார்.
காலக்ஷேப சாற்றுமுறை தினமான சிறந்த ஆனித் திருமூலத்தன்று, ஸ்ரீ ரங்கநாதன் ஒரு பாலகனாகத் தோன்றி
மிக ஆச்சர்யமான “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியனைச் சமர்ப்பித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டான்.

————–

நாச்சியார் கோயில் அத்யயன உத்சவம் -தை மாதம் –
மஞ்சள் குளி உத்சவத்துக்கு பின்பே நடக்கும்
திரு மங்கை ஆழ்வார் தானே தனது ஆச்சார்யருக்கு நடத்துகிறார்
திருவரங்கம் -ஆரம்பித்து வைத்ததுடன் இங்கேயே வருஷம் தோறும் இவரே வந்து நடத்துகிறார்

மஞ்சள் குளியல் -பாசுரம் திருநறையூர்
புலை யார்ந்த –திருநறையூர் — நிலை யார நின்றவன் தன நீள் கழலை அடைமின்களே
திருவாலி திருநகர் வரை நீண்ட திருவடிகள்

110 பாசுரங்கள் ஒரே ஆழ்வார் ஒரு திவ்ய தேசத்துக்கு அதிகம்
பெருக்காறு போல்
திருவிண்ணகர் பதிகத்திலும் பொதிந்து காட்டும்

நாச்சியார் கோயில் கட்டிய கோச்செங்கணான் சோழன் -அவனுக்கும் பத்து பாசுரம்
மதிள் கட்ட வேண்டாம் மடல் பாடும் எனக்கு என்று பாட்டுப்பிச்சன் கேட்டும் மறுத்து திரு நறையூருக்கு
யானை வராமல் மணிமாடக்கோயில்

திருக்கண்ணபுரம் -104 பாசுரம் –
அந்த திவ்ய தேசப்பாசுரங்களிலும் நாச்சியார் கோயில் பாசுரம் உண்டே

6-8- நான் சென்று நறையூரில் கண்டேனே -எல்லாப்பெருமாள்களையும் ஆச்சார்யர் இடமே காணலாமே
எல்லாம் வகுத்த இடம் தானே
பரிபூர்ணனைக் காட்டி அருளி -பாட்டினாலே காட்டி அருளி

கறவா மட நாகு -கன்று -போல் இவருக்கும் நறையூர் நம்பிக்கும் ஈடுபாடு
அத்தா -பித்தா என்று பேசுகிறார் –பித்தா உன்னை நான் எங்கனம் விடுகேன
எம்மானும் –ஒழிந்த பின்பு –அம்மானும் நம்பி -அடியேனுக்கு -தாய் தந்தை ஆச்சார்யர் இவனே
தனக்கு செய்த உபகாரத்தை தானே பாடிக் காட்டுகிறார்

பெரிய திருமடலில் தாயார் வடிவு அழகு வர்ணனை
மன்னு திருநறையூர் – வஞ்சிக்கொடி போன்று –அன்னம் போல் நடை -மான் பார்வை -மயில் சாகை –
மின்னல் இடை –சந்தேகம் -வடமொழி இடைக்கு –
கெண்டை திருக்கண்கள் திரு உருவம் –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ ,வே ,S , P, புருஷோத்தமன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராம அஷ்டோத்ரம் —

September 7, 2021

ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவல்தி3

ஓஂ ஶ்ரீராமாய நம:
ஓஂ ராம ப4த்3ராய நம:
ஓஂ ராம சந்த்3ராய நம:
ஓஂ ஶாஶ்வதாய நம:
ஓஂ ராஜீவலோசனாய நம:

ஓஂ ஶ்ரீமதே நம:
ஓஂ ராஜேந்த்3ராய நம:
ஓஂ ரகு4புங்க3வாய நம:
ஓஂ ஜானகீவல்லபா4ய நம:
ஓஂ ஜைத்ராய நம: ॥ 1௦ ॥

ஓஂ ஜிதாமித்ராய நம:
ஓஂ ஜனார்த3னாய நம:
ஓஂ விஶ்வாமித்ர ப்ரியாய நம:
ஓம் தா3ன்தாய நம:
ஓஂ ஶரண த்ராண தத் பராய நம:

ஓஂ வாலி ப்ரமத2னாய நம:
ஓஂ வாங்மினே நம:
ஓஂ ஸத்ய வாசே நம:
ஓஂ ஸத்ய விக்ரமாய நம:
ஓஂ ஸத்ய வ்ரதாய நம: ॥ 2௦ ॥

ஓஂ வ்ரதத4ராய நம:
ஓஂ ஸதா3 ஹனுமதா3ஶ்ரிதாய நம:
ஓஂ கோஸலேயாய நம:
ஓம் க2ர த்4வம்ஸினே நம:
ஓஂ விராத4வத4 பண்டி3தாய நம:

ஓஂ விபீ4ஷண பரித்ராத்ரே நம:
ஓஂ ஹர கோத3ண்ட3 க2ண்ட3னாய நம:
ஓஂ ஸப்த ஸால ப்ரபே4த்த்ரே நம:
ஓம் த3ஶக்3ரீவ ஶிரோ ஹராய நம:
ஓஂ ஜாமத3க்3ன்ய மஹா த3ர்பத3ல்த3னாய நம: ॥ 3௦ ॥

ஓஂ தாடகாந்தகாய நம:
ஓஂ வேதா3ந்த ஸாராய நம:
ஓஂ வேதா3த்மனே நம:
ஓம் ப4வரோக3ஸ்ய பே4ஷஜாய நம:
ஓம் தூ3ஷணத்ரிஶிரோ ஹந்த்ரே நம:

ஓஂ த்ரி மூர்தயே நம:
ஓஂ த்ரி கு3ணாத்மகாய நம:
ஓஂ த்ரி விக்ரமாய நம:
ஓஂ த்ரி லோகாத்மனே நம:
ஓஂ புண்ய சாரித்ர கீர்தனாய நம: ॥ 4௦ ॥

ஓஂ த்ரி லோக ரக்ஷகாய நம:
ஓம் த4ந்வினே நம:
ஓம் த3ண்ட3காரண்ய கர்தனாய நம:
ஓஂ அஹல்யா ஶாப ஶமனாய நம:
ஓஂ பித்ரு ப4க்தாய நம:

ஓஂ வர ப்ரதா3ய நம:
ஓஂ ஜித க்ரோதா4ய நம:
ஓஂ ஜிதா மித்ராய நம:
ஓஂ ஜக3த்3 கு3ரவே நம:
ஓஂ ருஷவானர ஸங்கா4தினே நம: ॥ 5௦॥

ஓஂ சித்ரகூ டஸமாஶ்ரயாய நம:
ஓஂ ஜயந்தத்ராண வரதா3ய நம:
ஓஂ ஸுமித்ரா புத்ர ஸேவிதாய நம:
ஓஂ ஸர்வ தே3வாதி3 தே3வாய நம:
ஓஂ ம்ருத வானர ஜீவனாய நம:

ஓஂ மாயா மாரீச ஹந்த்ரே நம:
ஓஂ மஹா தே3வாய நம:
ஓஂ மஹா பு4ஜாய நம:
ஓஂ ஸர்வ தே3வஸ்துதாய நம:
ஓஂ ஸௌம்யாய நம: ॥ 6௦ ॥

ஓம் ப்3ரஹ்மண்யாய நம:
ஓஂ முனி ஸம்ஸ்துதாய நம:
ஓஂ மஹா யோகி3னே நம:
ஓஂ மஹோ தா3ராய நம:
ஓஂ ஸுக்3ரீவேப்ஸித ராஜ்யதா3ய நம:

ஓஂ ஸர்வ புண்யாதி4க ப2லாய நம:
ஓஂ ஸ்ம்ருத ஸர்வாக4னாஶனாய நம:
ஓஂ ஆதி3 புருஷாய நம:
ஓஂ பரம புருஷாய நம:
ஓஂ மஹா புருஷாய நம: ॥ 7௦ ॥

ஓஂ புண்யோ த3யாய நம:
ஓம் த3யா ஸாராய நம:
ஓஂ புராணாய நம:
ஓஂ புருஷோத்தமாய நம:
ஓஂ ஸ்மித வக்த்ராய நம:

ஓஂ மித பா4ஷிணே நம:
ஓஂ பூர்வ பா4ஷிணே நம:
ஓஂ ராக4வாய நம:
ஓஂ அனந்த கு3ண க3ம்பீ4ராய நம:
ஓம் தீ4ரோதா3த்த கு3ணோத்தமாய நம: ॥ 8௦ ॥

ஓஂ மாயா மானுஷ சாரித்ராய நம:
ஓஂ மஹா தே3வாதி3 பூஜிதாய நம:
ஓஂ ஸேதுக்ருதே நம:
ஓஂ ஜித வாராஶயே நம:
ஓஂ ஸர்வ தீர்த2 மயாய நம:

ஓஂ ஹரயே நம:
ஓஂ ஶ்யாமாங்கா3ய நம:
ஓஂ ஸுந்த3ராய நம:
ஓஂ ஶூராய நம:
ஓஂ பீத வாஸஸே நம: ॥ 9௦ ॥

ஓம் த4னுர்த4ராய நம:
ஓஂ ஸர்வயஜ்ஞாதி4பாய நம:
ஓஂ யஜ்வனே நம:
ஓஂ ஜரா மரண வர்ஜிதாய நம:
ஓஂ ஶிவ லிங்க3 ப்ரதிஷ்டா2த்ரே நம:

ஓஂ ஸர்வாவகு3ண வர்ஜிதாய நம:
ஓஂ பரமாத்மனே நம:
ஓஂ பரஸ்மை ப்3ரஹ்மணே நம:
ஓஂ ஸச்சிதா3ந்ந்த3 விக்3ரஹாய நம:
ஓஂ பரஸ்மை ஜ்யோதிஷே நம: ॥ 1௦௦ ॥

ஓஂ பரஸ்மை தா4ம்னே நம:
ஓஂ பராகாஶாய நம:
ஓஂ பராத் பராய நம:
ஓஂ பரேஶாய நம:
ஓஂ பாரகா3ய நம:

ஓஂ பாராய நம:
ஓஂ ஸர்வ தே3வாத்மகாய நம:
ஓஂ பராய நம: ॥ 1௦8 ॥

இதி ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமா வளீதீ3ஸ் ஸமாப்தா ॥

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மஹா லஷ்மி அஷ்டோத்திரம் —

September 7, 2021

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ஸ்ரத்தாயை நம

ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் ஸுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம

ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம

ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹ பதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரி வல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஸ்ரீ மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள் எவை?

ஓம் பத்ம ப்ரியாயை நம
ஓம் பத்ம ஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்ம ஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம

ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்ம நாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலா தராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம

ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ர வதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் ஸுக்லமாம்யாம்பரரயை நம

ஓம் ஸ்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் தந தாந்யகர்யை நம

ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் ஸுப ப்ரதாயை நம
ஓம் ந்ருப வேஸ்மகதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் ஸுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம

ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம

ஓம் ப்ரம்ம விஷ்ணு ஸிவாத்மி நம
ஓம் த்ரிகால ஜ்நாந ஸம்காயை பந்நாயை நம
ஓம் புவனேஸ்வர்யை நம.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–4–சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்–

September 6, 2021

பர
வ்யூஹ
விபவ
அந்தர்யாமி
அர்ச்சாவதாரங்களான
இடங்களிலே எழுந்து அருளி நிற்கிறது
சேதனரைத் திருத்துகைக்கும்
திருந்தின சேதனரை அடிமை கொள்ளுகைக்கும் ஆய்த்து

அவை எல்லாவற்றிலும்
அவை மிக்கு இருப்பது திருமலையிலே நிற்கிற நிலை இறே

திருமால் இருஞ்சோலை மலை என்றேன் –இத்யாதி
வெற்பு என்று இருஞ்சோலை –இத்யாதி
வெற்பு என்று வேங்கடம் பாடும் –இத்யாதிகளிலே காணலாம்

ஆகையால் ஈஸ்வரன் ஆழ்வார்களுக்கு
பிரதம காலத்திலே
மயர்வற மதி நலம் அருளி விநியோகம் கொள்ளும்
அவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே யாய்த்து

நமக்கு எல்லாம்
சரீர அவசானத்திலே இவற்றைப் பிறப்பித்துக் கார்யம் செய்யும்

ஊரவர் இத்யாதி –
பாகவத அங்கீ காரமாகிற எருவை இட்டு
ஆச்சார்ய உபதேச ஞானம் ஆகிற நீரைப் பாய்ச்சி
சங்கம் ஆகிற நெல்லை வித்தி இறே கிருஷி பண்ணுவது

இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க
அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகப்புக்கு மேல் இனி வேறே ஒரு பேறும் இல்லை -என்று இவர் இருக்க

இவர் காரியத்தில் நாம் முதல் அடி இட்டிலோம் -என்று
அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு

விரோதிகள் அடையப் போய்த்தாகில்
அபேக்ஷிதங்களைப் பெற வேண்டும் அம்சம் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று
அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

———–

திருமலையிலே கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு ஸந்நிஹிதனாய்
என்னை விஷயீ கரித்து உன் கிருபையை எனக்கு அவலம்பமாம் படி பண்ணினாய்
இனி மேல் தேவர்க்குத் திரு உள்ளம் ஏது என்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?–

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்
உயர்ந்த கொடி முடியை யுடைத்தாய்
ஸ்ரம ஹரமான திருமலையை உனக்கு இருப்பிடமாக உடையவனே
உபய விபூதிக்கும் முகம் காட்டுகைக்கு நிற்கும் இடம் இறே த்ருதீய விபூதி இறே திருமலை –

உலகு தன்னை வாழ நின்ற நம்பீ
வை ஷம்யம் அற எல்லாரும் உன்னைக்கிட்டி வாழும்படி
நிலையார நின்ற கல்யாண குண பூர்ணனே
கானமும் வானரமும் ஆனவற்றுக்கும் முகம் கொடுக்கும் படி யாய்த்து நீர்மையில் பூர்த்தி
வாத்சல்யத்தி குண பூர்ணனே

தாமோதரா
அந்தப் பூர்த்தியை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின படி
வெண்ணெயைக் களவு கண்டான் என்று கொண்டி யோடே பிடித்து
யசோதைப்பிராட்டி கட்டக் கட்டுண்டு
அத்தால் வந்த தழும்பை நிரூபகமாக யுடையவனே

இத்தால்
ஆஸ்ரித பவ்யதை சொல்லுகிறது

சதிரா
ஆஸ்ரித தோஷம் காணாத விரகு

என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆத்மாவையும் ஆத்மீயங்களையும்
திருவாழியாலே முத்திரை இட்டு
ஆத்மாவுக்கு சேஷத்வ ஞானத்தை உண்டாக்குகை
ஆத்மீயங்களான தேஹாதிகளுக்குத் திரு இலச்சினை சாத்துகை

நின்னருளே புரிந்து இருந்தேன்
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து
நிர்பரனாய் இருந்தேன்

இனி என் திருக் குறிப்பே
ஞான லாபத்தையும் பண்ணித் தந்து
விரோதி நிவ்ருத்த பூர்வமாக
அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

———-

கீழ் அவன் அருளாலே பேற்றுக்கு ஹேது என்றார்
இதில் அவன் அருளாலே தாம் பெற்ற பேறு சொல்லுகிறார் –

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது–
கிரமம் -இராதே ராஜ குமாரன் என்று அறிந்த பின்பே கிரீடம் தலையிலே ஏறி
பின்பு தானே சிறை வெட்டி விடுவார்

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பெரிய திருவடியை வாகனமாக யுடைய பரம புருஷனே
சங்க ஸ்வ பாவனான நீ
உன்னால் அல்லது செல்லாத என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட பின்பு

பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலும் சுவறிப்
பெரிய தரமும் உண்டாகா நின்றது
மேல் சாத்தும் பர்யட்டமும் வாரா நின்றது
பரம சாம்யா பத்தி உண்டாகா நின்றது

இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
இவ் வாத்மாவை முடிக்கிற கர்ம ஆரண்யம்
சீறா எரியும் திரு நேமியினுடைய ஜ்வாலாக்நி
கொழுந்தி தக்தமாகா நின்றது

அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே
ஞானம் ஆகிற அம்ருத ப்ரவாஹினியான நதி பெருகி
வாயளவாயத் தலைக்கு மேலே போகா நின்றது

அதனில் பெரிய அவா -என்கிறபடியே
இனி என் திருக்குறிப்பு -என்று கீழோடே அந்வயம் –

———-

பாப நிவ்ருத்தி என் அளவிலே அன்றிக்கே
நான் இருந்த தேசத்தில் உள்ள பாபங்களும் நசித்துப் போன பின்பு
நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ என்கிறார் –

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!-தாய் -மன்னன் –
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன–

எம்மனா
எம்மன்னா -என்று வலித்து
எனக்குத் தாய் போலே பரிவன் ஆனவனே

அன்றிக்கே
மன்னா -என்று ராஜாவாய்
ஈரரசு தவிர்த்தவன் என்னவுமாம்
என் ஸ்வா தந்தர்யத்தைக் குலைத்தவனே

என் குல தெய்வமே
என் குலத்துக்குப் பர தேவதையானவனே
என் குல நாதனே

என்னுடை நாயகனே
என் குலத்தில் உள்ளாருக்கு ஸ்வாமி யானதும் என்னாலே என்னும்படி
எனக்கு நாதன் ஆனவனே
(அர்வாஞ்சோ இத்யாதி –திருமுடி சம்பந்தத்தால் ஏற்றம் )

இம் மூன்று பதத்தாலும்
ஸ்வரூப
சாதன
ப்ராப்ய விரோதிகளைப் போக்கி
ஆகார த்ரய பிரதி சம்பந்தி யானவன் என்னுமாம்

நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை
உன் அபிமானத்தில் அந்தர் பூதனாய்ப் பெற்ற பிரயோஜனம்

இவ்வுலகினில் யார் பெறுவார்
இஸ் ஸம்ஸாரத்தில் யாருக்கு லபிக்கும்
இது எனக்கு அலாப்ய லாபம் அன்றோ
இப்படி பேறு பெற்றார் உண்டோ

நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
யம படரைப் போலே விழவிட்டு அமுக்கும் படியான
என் நாட்டில் உள்ள பாபங்கள் எல்லாம்

சும்மேனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே
மூச்சு விடாதே போய்
முன்பு இருந்த இடத்தைக் கை விட்டு
துடர்ந்து பிடிக்க வருகிறார்களோ என்று புரிந்து பார்த்து ஓடிக்
காட்டிலே விழுந்து போயிற்றன

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே

ஸம்ஸார மருகாந்தரத்திலே போய்ப் புகுந்தன -என்கை –

———–

தாம் பகவத் விஷயத்திலே அவஹாகிக்கையாலே
தம்முடைய ஆஜ்ஜை நடக்கும் இடம் எல்லாம்
யம வஸ்யதை புகுரப் பெறாது என்கிறார்

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 –

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்–

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி
கலசத்தை நிறைத்தால் போலே

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
ஸரீரமானது அபி நிவேச அதிசயத்தாலே உருகி
ப்ரீதி ப்ரேரிக்க
வாய் திறந்து
இரண்டு கையையும் மடுத்து -என்னுமா போலே
மண்டிக் கொண்டு நிரதிசய போக்யனான உன்னைப் பூர்ணமாக அனுபவித்தேன்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்னுமா போலே

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
பாபம் பண்ணினவர்களைக் கண்ணற்று நலிகிற மிருத்யுவும்
என் ஆஜ்ஜை நடக்கிற இடத்திலும் கிட்டப் பெறாது

தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே
மலை போலே பெரிய தோள்களை யுடையையாய்
பெரிய மலை என்னுமாம்

திருவாழியாலே அலங்க்ருதமான திருக்கைகளை யுடையையாய்
ஸ்ரீ சார்ங்கமாகிற வில்லை யுடைய ஸூரனே
உன்னை அண்டை கொண்ட பலம் இறே யமாதிகள் அஞ்சுகிறது –

———-

ஸ்லாக்யனான யுன்னை நாவால் ஹிருதயத்திலே வைத்துக் கொண்ட எனக்கு
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்கிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.-பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்–
மேலைத்தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அனுபவம் சரணாகதியை பண்ணத் தள்ளும் -கையாலாகாத் தனம்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
பொன்னை உரை கல்லிலே நிறம் பிறக்கும் படி உரைக்குமா போலே

உன்னைக் கொண்டு என் நாவகம் பால்
பொன்னிவர் -என்னும் உன்னை
என் நாவாகிற உரை கல்லிலே
வேதங்களாலும் அளவிட ஒண்ணாத யுன்னை

மாற்றின்றி
மாற்று அற
ஸத்ருசம் அற

உரைத்துக் கொண்டேன்
வஸ்துவை உள்ளபடி வ்யஹரிக்க வல்ல வாசகமாக யுரைக்கப் பெற்றேன்

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
ஸ்ப்ருஹணீயமான உன்னுடைய அங்கீகாரத்தைக் கொண்டு
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட -என்னும்படி
என்னுடைய அனுபவத்துக்கு விஷயம் ஆக்கினேன்

என்னையும் உன்னில் இட்டேன்
நீ இப்படி மேல்விழுந்து ஆதரிக்கைக்கு யோக்யனான என்னையும்
உனக்கு போக்யம் ஆக்கினேன்
நம இத்யேவ வாதீந -என்னுமா போலே

என்னப்பா
எனக்கு ஜனகன் ஆனவனே

என் இருடீகேசா
எனக்கு சர்வ இந்திரியங்களுக்கு விஷயம் ஆனவனே

என் உயிர்க் காவலனே
என் ஆத்மாவுக்கு ரக்ஷகன் ஆனவனே
நான் இனிப் பெறாதது உண்டோ என்கை –

—————

நீ என்னுடைய ஹிருதயத்திலே ஞான விஷயமாகக் கொண்டு ஸந்நிஹிதனான பின்பு
என்னை விட்டு இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்கிறார் –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான்–எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே
கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?–

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
உன்னுடைய திவ்ய அபதானங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாவற்றையும்

என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
சுவரிலே சித்ரம் எழுதினால் கண்ணுக்குத் தோற்றுமா போலே
என்னுடைய நெஞ்சிலே இவற்றையும் பிரகாசிக்கும் படி பண்ணிக் கொண்டேன்
ரிஷிகளுக்கும் பிரகாசியாத அர்த்தங்களும் எனக்குப் பிரகாசித்து அனுசந்திக்கப் பெற்றேன்

மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
ஆஸூர ப்ரக்ருதிகளான ராஜாக்கள் முடியும்படியாக
மழு என்கிற திவ்ய ஆயுதத்தை வலக்கையில் தரித்து
ஞான சக்த்யாதிகளாலே பூர்ணனான
ஸ்ரீ பரஸூ ராமாவதாரத்தைப் பண்ணினவனே

என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே
என் சேஷத்வத்தையும்
உன் சேஷித்வத்தையும்
எனக்குப் பிரகாசித்து என்னைக் கைக் கொண்ட பின்பு
இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ
போகிலும் கூடப் போம் அத்தனை –

————

என்னை உனக்கே அநந்யார்ஹம் ஆம் படி
நிர்ஹேதுகமாகக் கைக் கொண்டு வைத்து
இனிப் பொகட்டுப் போகலாமோ -என்கிறார் –

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர த்வஜத்தை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும்
(இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே–

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
பாண்டிய வம்சத்துக்கு நிர்வாஹனாய் இருப்பான் ஒரு ராஜா தன் தேசத்தின் நின்றும்
மஹா மேரு அளவும்
வழியில் உள்ள வன்னியம் அறுத்து ஜெயித்துக் கொடு சென்று
மஹா மேருவிலே தன் வெற்றி எல்லாம் தோற்றும்படி
தன் அடையாளமான கயலை இட்டுப் போந்தால் போலே

பரம பதம் கலவிருக்கையான ஈஸ்வரனான நீ
அங்கு நின்றும் என் பக்கலிலே வரும் அளவும் உண்டான
பாவக் காட்டைச் சீய்த்து
என்னுடைய ப்ராதிகூல்ய ரூப வன்னியம் அறுத்து
என்னிடத்தில் பாத இலச்சினை வைத்தாய்
உன் அடையாளம் இட்டுக் கொண்டாய்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல்
பொறித்தாய்
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள்
ஆர்ஜவ ஸ்வ பாவமானது என்கை

அதவா
ஐஸ்வர்ய சிஹ்னங்களை யுடைத்தான திருவடிகள் என்றுமாம்
கதா புந–இத்யாதி
அமரர் சென்னிப் பூவான ப்ராப்யத்தை லபிக்கப் பெற்றேன்

மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை
ப்ராப்ய விரோதிகளை
குவலயா பீடத்தையும் சாணூர முஷ்டிகரையும் நிரசித்தால் போலே நிரசித்துப் பொகட்டு
அவ்வபதானங்களுக்குத் தோற்று நான் ஏத்தும் படி பண்ணினவனே –

யுனக்கு உரித்து ஆக்கினையே
இதுவே யாத்ரையாய் இருக்கும்படி இருக்கிற என்னை
உன்னை ஒழியப் புறம்பு ஆளாகாத படி பண்ணின பின்பு
இனி எங்குப் போவது –

——–

அநந்த கருடாதிகளிலும் காட்டில் என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி
நீ என்னோடே ஸம்ஸ்லேஷிக்க
நானும் அத்தை அனுசந்தித்து விஸ்ராந்தனான பின்பு
இனி உனக்குப் போக்கிடம் உண்டோ என்கிறார் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து
பிராட்டிமாரோ பாதி
தனக்கு போக்யரான திருவனந்த ஆழ்வான் பெரிய திருவடி இவர்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் அத்யல்பம் என்னும்படி
என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி

என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
தான் மயர்வற மதி நலம் அருள
அத்தாலே
நெஞ்சு நாடு என்னும்படி திருந்தின என் ஹிருதயத்துக்கு உள்ளே
அஹேதுகமாக வந்து வர்த்தித்து
நான் அனுபவித்து ஸூகிக்கும் படி பண்ணின என் உபகாரகனனே

என்னாயன் செய்த உபகாரம் தான் என் என்ன
த்ரிபாத் விபூதியில் உள்ள எல்லோரோடும் பரிமாறும் பரிமாற்றத்தை எல்லாம்
இவர் ஒருவரோடும் பரிமாறும் உபகாரம்

நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
உன் வியாமோஹாதி கல்யாண குணங்களையும்
வடிவு அழகையும் என்னிலே நினைத்து
அத்தாலே வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
ஸ்தப்த்தனாய்ப் பின்னை
சிதில அந்தக் கரணனாய்
அந்த ஸைதில்யம் கண்ண நீராகப் ப்ரவஹிக்க

உள் உருகுகின்றது
புற வெள்ளம் விட்டபடி

நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன்
நீ பண்ணின யுபகார பரம்பரைகளை அனுசந்தித்து
இளைப்பாறி இருந்து
உன்னைப் பெறாமையாலே வந்த ஸ்ரமம் எல்லாம் ஆறப் பெற்றேன்

நேமி நெடியவனே
திருக் கையும் திருவாழியுமான அழகுக்கு எல்லை இல்லாதவனே
ஆழ்வார் பக்கல் ப்ரேமத்துக்கு முடிவு இல்லாதவன் என்னவுமாம் –

———–

போக ஸ்தானங்களான ஷீராப்தி யாதிகளையும் உபேக்ஷித்து
என் நெஞ்சையே போக ஸ்தானமாகக் கொண்டான் என்கிறார்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது
சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே -குகன் இடம் பெருமாள்
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)–

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு
திருமேனியில் ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஸ்ரமஹரமாம் படி
குளிர்ந்த திருப் பாற் கடலிலே இறே பள்ளி கொண்டு அருளுவது –

அத்தைப் பழக விட்டு –
மறந்து விட்டு
அத்தை மறப்பித்தது இறே இவர் திரு உள்ளத்தில் குளிர்த்தி

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல
கடுக நடையிட்டு வந்து
(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு )
என் உடைய நெஞ்சாகிற கடலிலே புக்கு
அபிமத லாபத்தாலே வந்த ஐஸ்வர்யத்தாலே குறைவற்று ஸூகிக்க வல்ல

மாய மணாளா நம்பீ
ஆச்சர்யமான வடிவு அழகாலும்
குணங்களாலும்
பூர்ணனானவனே

இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே
குணங்களும்
திருமேனியில் செவ்வியும்
பூர்த்தி பெற்றது

தனிக் கடலே
அத்விதீயமான கடல் போலே அபரிச்சேதயனானவனே

தனிச் சுடரே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -என்கிறபடியே
வந்து திரு அவதரித்து ப்ரகாசகனான அத்வதீயனே
ஸ்வயம் பிரகாச ஸ்வரூப ஸ்வபாவன் என்னுமாம்
(விளக்கு தான் தன்னையும் விளக்கி மற்ற அனைத்தையும் விளக்கும்
அவனையும் விளக்கும் குத்து விளக்கு அன்றோ பிராட்டி )

தனி உலகே
அத்விதீயமான ப்ராப்யம்
ஒரு விபூதிக்காக ஒருவனுமே இறே ப்ராப்யம்
அந் நினைவிலே இறே விபூதியாக நடக்கிறது

என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே
இப்படிப்பட்ட திரு நாமங்களை மாறாதே ரஸ்யதையாலே சொல்லும்படி பண்ணி
உனக்கு ஷீராப்தியாதி தேசங்கள் அநேகங்கள் எல்லாம் உண்டாய் இருக்க
அவற்றை உபேக்ஷித்து
அவை எல்லாம் என்னுடைய ஹிருதயமாகவே விரும்புகையாலே
அவாப்த ஸமஸ்த காமனான யுனக்கு
சேஷ பூதனான என்னை
அநந்யார்ஹன் ஆக்கினாய் —

———

பரமபதம் முதலான தேசங்கள் எல்லாத்தையும் விட்டு
என் நெஞ்சில் புகுந்த பின்பு நீ உஜ்ஜவலன் ஆனாய் என்கிறார் –
(கீழே அவற்றை விட்டு ஓடி வந்தவர் உஜ்ஜவலமாக இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் )

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பதவுரை

தடவரை வாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)–

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
பரப்பை உடைத்தான மலையிடத்திலே பிரகாசகமுமாய்
தேஜஸ்ஸாலே விளங்கா நிற்பதாய்
பரி ஸூத்தமான பெரிய கொடி போலே

தடவரை -பெரிய பர்வதம் என்றபடி
மிளிருகை -ஒளி விடுகை –
தவழுகை என்றுமாம்

சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
நிரவதிக தேஜஸ்ஸாய்
நெஞ்சுக்குள்ளே தோன்றுகிற தேஜஸ்ஸாலே பூர்ணன் ஆனவனே

சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரஹம் -என்னவுமாம்
சோதி -குணங்கள் என்னவுமாம்
நம்பி -இவற்றால் குறைவற்று இருக்கும் படி
என் -இவற்றை எல்லாம் தமக்குப் பிரகாசிப்பித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு
திருமேனியும் புகர் பெற்று
பூர்த்தியும் உண்டாய்த்து

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு
சனகாதிகளுக்கு முகம் கொடுக்கிற திருப்பாற் கடலும்
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும்
பிரணயி நிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும்
அரணையும் உடைத்த தேசம் என்கை

இவை முதலான திவ்ய தேசங்கள் எல்லாத்தையும் அநாதரித்து
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளுமா போலே
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன -என்னக் கடவது இறே

என் பால் இடவகை கொண்டனையே
இவற்றில் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணினாய்

இப்படி ஆதரித்தது உன்னுடைய பிரயோஜனம் என்னும் இடம்
உன் திருமேனியிலே காணலாம்படி இருந்தாய்
இது என்ன வ்யாமோஹம் தான் -என்கிறார் –

———-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யஸித்தாருக்குப் பலம் தம்மைப் போலே
எம்பெருமானுக்கு அநந்யார்ஹர் ஆகை என்கிறார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –

பதவுரை

வேயர் தங்கள்–வேயர் வைதிகர்களுடைய
குலத்து–வம்சத்து-வைதிகர் குலம்
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்–
பாத ரேகா சாயை போல் அணுக்கர்

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக்
ஜகத்துக்கு ஆதித்யன் உதித்து அந்தகாரத்தைப் போக்குமா போலே
வேயர் கோத்ரத்திலே இவர் வந்து அவதரித்து
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கின படி

இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஹிருதய கமலத்தையே தனக்கு
அசாதாரணமான கோயிலாக அங்கீ கரித்த கிருஷ்ணனை யாய்த்து
இப்பிரபந்தத்தாலே ப்ரதிபாதித்தது –

விட்டு சித்தன்
ஸர்வேஸ்வரனுக்கு ஹ்ருத்யரான ஆழ்வார்
இவர் திரு உள்ளத்திலே
பர வ்யூஹாதி ஸ்தலங்களான ஸ்ரீ வைகுண்டாதிகளை எல்லாம் உபேக்ஷித்து
ஆழ்வார் திரு உள்ளத்தையே அவை எல்லாமுமாகக் கொண்டான்

கோவலன்
நிமக்நரை உத்தரிப்பிக்கைக்காக தாழ்ந்த குலத்தில் வந்து அவதரித்தவனை

கொழும் குளிர் முகில் வண்ணனை
அழகியதாய் ஸ்ரம ஹரமான மேகம் போன்ற திரு மேனியை யுடையவனை
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பாய்த்து
குளிர்ந்து செவ்வி யுண்டாய்த்
தன் நிறம் பெற்றது திரு மேனி

முகில் வண்ணன் -என்று
இவன் அவருக்குப் பண்ணின ஒவ்தார்யத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆகவுமாம்

ஆயர் ஏற்றை
இடையரோடே கலந்து பரிமாறுகையாலே மேனாணித்துச் செருக்கி இருக்கிறவனை

அமரர் கோவை
அனுபவம் மாறில் முடியும்படியான ஸ்வ பாவத்தை யுடைய நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவனை

அந்தணர் தம் அமுதத்தினை
இவ் விபூதியில் முமுஷுக்களாய்
நிரதிசய பக்திமான்களான ப்ராஹ்மணருக்கு நிரதிசய போக்யமான அம்ருதம் போலே ப்ராப்யனானவனை
அவர்களை விண்ணுளாரிலும் சீரியர் என்னக் கடவது இறே
இங்கேயே அவர்களை போலவே இவ் வமுருதத்தைப் பாநம் பண்ணுகையாலே

சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -–
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே என்று எம்பார் யோஜனை

பாடுகையாவது
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று
ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு
ரஷ்ய ரக்ஷக பாவத்தை மாறாடி மங்களா ஸாஸனம் பண்ணுகை

சாயை போலே என்றது
புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கும் புறப்பட்ட இடத்தே புறப்பட்டு
அதன் பிரவிருத்தி நிவ்ருத்திகள் அடைய புருஷன் இட்ட வழக்கமாம் போலே

இத் திருமொழி கற்றாருக்கும் தங்களுக்கு என்று ஒரு ப்ரவ்ருத்தியாதிகள் இன்றிக்கே
ஈஸ்வரன் இட்ட வழக்காய் அவனுக்கு அந்தரங்கராகப் பெறுவார்கள் –

சாயா வா ஸத்வம் அநு கச்சேத் -என்றும்
நிழலும் அடி தாறும் ஆனோம் (பெரிய திருவந்தாதி )-என்று சொல்லக் கடவது இறே

அதவா
சாயை போலேப் பாட வல்லார்
சாயை என்று நிழலாய்
குளிரப்பாட வல்லார் என்றுமாம்
தங்கள் அந்தரங்கர்கள் ஆவார்கள் என்கை

ஆக
பத்துப் பட்டாலும்
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்து
இது கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

ஆக
திருப் பல்லாண்டில் தொடங்கின மங்களா சாஸனமே யாத்திரையாகக் கொண்டு போந்து
நிகமிக்கிற இடத்திலும்
சாயை போலே பாட வல்லார் -என்றது
திருப் பல்லாண்டு பாட வல்லார் என்று
மங்களா ஸாசனத்தோடே தலைக் கட்டுகையாலே
இவருக்கு மங்களா சாஸனமே எவ் வஸ்தையிலும் யாத்ரை -என்றதாயிற்று –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–3–துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை-

September 5, 2021

கீழில் திருமொழியில்
திருமால் இருஞ்சோலை மலையிலும்
சூழ் விசும்பு அணி முகிலிலும் சொன்ன அர்த்தங்கள் சொல்லிற்று

இதில்
முனியே நான் முகனில் ஒன்பது பட்டாலும் சொன்ன அர்த்தத்தைச் சொல்லுகிறது

பத்தாம் பாட்டில் அர்த்தம்
மேலில் திரு மொழியிலே சொல்லுகிறது

அன்றிக்கே
கீழில் திருமொழியில்
அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லி

இத் திருமொழியிலே
இஷ்ட ப்ராப்திக்கு
திருவாணை இட்டுத் தடுக்கிறார் -என்னவுமாம் –

—————————————–

அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
உன்னைக் காணப் பெற்ற நான்
இனிப் போக விடுவேனோ என்கிறார் –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

துக்கச் சுழலையை
சுழல் ஆறு போலே வளைய வருகிற துக்கத்தை விளைப்பதாய் இருக்கை
கர்ப்ப வாஸம் போலே இவனைச் சுற்றிக் கிடக்கிற துக்கங்களை என்றுமாம் –

சூழ்ந்து கிடந்த வலையை
தப்ப ஒண்ணாத படி வீசின சரீரமாகிய வலையை
ஆத்மாவைச் சுற்றிக் கொண்டு கிடக்கிற அவித்யா கர்மாதிகள் -என்னுமாம்

அறப் பறித்து
ருசி வாசனைகளோடே போம்படி பண்ணி

புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன்
பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார அளவாகச் சொல்லுகை
எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்

இனிப் போக விடுவது உண்டே
கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை
உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ

நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கிடக்கிறார் ஆகவுமாம்

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
தேவகியார் இழவு தீர்ந்தால் போல்
என் இழவையும் தீர்த்து அருள வேணும் என்கிறார் –

கால நேமியோடே சம்பந்தம் உடையராய் ப்ரஹ்ம சாபத்தாலே பாதாளத்திலே வர்த்திப்பார்
ஆறு அஸூரர்களை யோக நித்ரையாலே தேவகி கர்ப்பத்தில் பிரவேசிப்பிக்க
அந்த அஸூரர்களை ஜனிக்க ஜனிக்க
கம்சன் கல்லோடே அடித்துப் பொகட்டான்

ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோஹிணியார் திரு வயிற்றிலே அவதரிப்பித்து
தான் அஷ்டம கர்ப்பமாக விறே திரு அவதரித்தது
இப்படி ஆறு புத்ரர்களைக் கல்லோடே மோத
இழந்த தேவகியார் திரு வயிற்றிலே

சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
அந்த கம்சனால் நலிவு பண்ணாதபடி வலியையாய்
அவன் தனக்கே பாதகனாய்க் கொண்டு
வந்து திரு அவதரித்தாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த அவதாரத்தில் உதவப் பெறாத எனக்காகவே
திருமலையில் ஸந்நிஹிதனாய்
கிருஷியைப் பண்ணி
பல வேளையில்
பொகட்டுப் போகலாமோ –

————-

அவனுக்குப் போக ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் (பேரில் )ஆணை இடுகிறார்

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்-அவிசேஷஞ்ஞார்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்-விசேஷஞ்ஞார்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற-பலத்தைக் கொடுக்கும் என்றுமாம்
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு –நின் திரு உனக்கு சேஷ பூதை -–
திரு ஆணை-உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை–

வளைத்து வைத்தேன்
ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளை வளைத்து
போக ஒண்ணாது -என் கார்யம் செய்து அல்லது -என்றால் போலே
இவரும் ஈஸ்வரனை வளைக்கிறார்
தம் செல்லாமை இறே வளைக்கிறது

இனி போகல் ஒட்டேன்
உன் சுவடு அறிந்த நான் இனிப் போக விடுவேனோ

உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்
உன்னுடைய ஐந்திர ஜாலங்களை இட்டு என்னை மறைத்து
நீ மறைய நிற்கில்
இங்கே இருத்தி ஒரு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணி மறப்பித்துத் தான் மறைய நிற்கை

அன்றிக்கே
மம மாயா துரத்தயா -என்கிற
பிரக்ருதியை இட்டு மறைக்கை என்னுமாம்

நின் திருவாணை கண்டாய்
உனக்கு அநன்யார்ஹமாய்
நிரதிசய போக்ய பூதையுமான
பெரிய பிராட்டியார் ஆணை கிடாய்

அவள் பக்கல் முகம் பெற வேண்டி இருந்தாய் யாகில்
அவள் பரிகரமான என் அபேக்ஷிதம் செய்து அல்லது
உனக்குத் தரம் சொல்ல ஒண்ணாது

இங்கனே நம்மை நிர்பந்திக்கைக்கு நாம் உமக்கு தப்பினது உண்டோ என்ன
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
கரு மலர்க்கூந்தல் –இத்யாதி
ஒரு பேதைக்குப் பொய் குறித்து -என்கிறபடியே
நீ யாருடனே நிலை நிற்க ஸம்ஸ்லேஷித்தாய்

அளித்து எங்கும் நாடும் நகரமும்
அஞ்ஞரோடே
சர்வஞ்ஞரோடே
வாசியற
அவி சேஷஞ்ஞரோடு
வி சேஷஞ்ஞரோடு
வாசியற–என்கை
இப்படி எங்கும் ரஷித்து

தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்து அளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய்
தம் தாமாலே பண்ணப்பட்ட துஷ்கர்மங்களைப் போக்குகையிலே ஒருப்பட்டு இருக்கும்
அவர்களாலே
தீர்த்தங்களை ப்ரோக்ஷித்துக் கொண்டு ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணப் படும்
தீர்த்தங்களை யுடையதான திரு மலையிலே
நின்று அருளின என் ஸ்வாமியே

அளித்து இத்யாதி
அழகருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

(நூபுர கங்கை திருமலை அழகர் -மூன்றுக்கும் விசேஷணமாகக் கொண்டு மூன்று நிர்வாகம் )

—————-

முதல் பாட்டில்
உன் ஸ்வரூப சித்திக்காக என் கார்யம் செய் என்றார்
இரண்டாம் பாட்டில்
உன் பிரணயித்வத்துக்காக என் கார்யம் செய் என்றார்
இப்பாட்டில்
உனக்கு தேஜோ ஹானி வராமல் இருக்க வேண்டில் என் கார்யம் செய் என்கிறார்

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?–

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்
வகுத்த விஷயமான உனக்கு
முற்பட சேஷத்வ ஞானம் பிறந்த பின்பு
சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து
கைங்கர்யமே யாத்ரையாய்
அது இல்லாத போது சத்தை குலையும் படியாய்
இப்படி கைங்கர்யம் பண்ணி அதுவே யாத்ரையாய் இருக்கும் படியான தபஸ்ஸை யுடையேன்

இவருக்குத் தபஸ்ஸூ அவன் பிரசாதம் ஆயிற்று

இனிப் போய்
இப்படி கைங்கர்யமே யாத்ரையான பின்பும்
இவற்றை விட்டுப் புறம்பே போய்
அந்நிய விஷய ஸா பேஷனாய்

ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை
ஷூத்ரனாய் இருப்பான் ஒரு சம்சாரி சேதனன் காலில் விழுந்து
அவன் வாசலைப் பற்றி நிற்கை

நின் சாயை அழிவு கண்டாய்
உனக்குத் தேஜோ ஹானி கிடாய்
உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது

புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்றினக் குறவர் புதியது உண்ணும்
புனத்தினிலே புதுத் தினைக்கதிரை முறித்து
அக்னியிலே பக்வமாக்கி
அழகருடைய ஸ்ப்ருஹ ணீயமான திருவடிகளை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி
உன் திவ்ய ஐஸ்வர்யம் ஸம்ருத்தமாக வேணும் -என்று திருப்பல்லாண்டு பாடி
திருமலையில் திருக் குறவர்
தங்களுடைய புத்ர தாரங்களோடும்
நவ போஜனம் பண்ணா நிற்பர்கள்

எழில் மால் இரும் சோலை எந்தாய்
அழகிய திருமலையிலே வர்த்திக்கிற ஸ்வாமியே
அந் நிலையிலே உன் ஸ்வாமித்வத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனே –

————-

உன் திருவடிகளை ஒழிய புறம்பு போக்கிடம் இல்லாத என் கார்யம்
செய்து அருள வேணும் என்கிறார் –

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3- 4- –

பதவுரை

குரு-குரு வம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் -இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(தாபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்பு இடம்–மூச்சு விட இடம் -ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை–

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை
நெஞ்சுக்கும் கண்ணுக்கும் எட்டின இடம் எல்லாம்
அலர்மந்து திரிந்த இடத்தில்
அவ்விடங்களில் ஒரு நிழலாதல் நீராதல் கண்டிலேன்-

கண்டது ஸம்ஸார விஷ விருஷத்தின் நிழலும்
மாரீசிகா ஜலமும் இறே
வாஸூ தேவ தருச்சாயையும்
அவன் திரு உள்ளத்தில் நீர்மையையும் இறே
நிழலும் நீரும் ஆவது

உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
அவனடி நிழல் தடம் -என்னக் கடவது இறே
இது ஒழிந்து மூச்சு விடுகைக்கு ஓர் இடமும் அநந்ய கதியான நான் காண்கிறிலேன்

அந் நிழலில் ஒதுங்கினார் உண்டோ என்ன
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய்
குரு குலத்தில் பிறந்த பாண்டு புத்ரர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்து இல்லையோ
அவர்கள் அநந்ய கதித்வம் கண்டு அன்றோ நீ அது செய்தது

அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்
அந்த துர்யோதனர்கள் பக்கல்
உங்களோடு அவர்களோடு வாசி என்
நீங்களும் எனக்கு பந்துக்கள் அன்றோ என்று
அஹ்ருதயமாக உறவு சொல்லிக் கொண்டு சென்று
ஸம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகத்தைப் பண்ணி
பூ பாரமானவர்களை நிரஸித்துப் பொகட்டிலையோ

திருமால் இரும் சோலை எந்தாய்
அவ் வவதாரத்தில் உதவாத எனக்காகவேத் திருமலையிலே நின்று அருளினவனே —

————–

பக்தியாலே பரவசனான என் கார்யம் செய்து அருள வேணும் என்கிறார் –

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை
( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்–

காலும் எழா
காலும் எழா –என்கிறபடியே
கால் நடை தாரா

கண்ண நீரும் நில்லா
கண்கள் நீர் மாறாது

உடல் சோர்ந்து நடுங்கி
ஸரீரமானது பரவசமாய்த் தடுமாறி

குரல் மேலும் எழா
வார்த்தை சொல்ல பலமில்லை

மயிர்க் கூச்சமறா
ரோமங்கள் புளகிதமாய் மாறுகிறது இல்லை

என தோள்களும் வீழ் ஒழியா
என் கைகளும் அஞ்சலி மாறா

மாலுகளா நிற்கும் என் மனமே
என் மனஸ்ஸானது மேல் மேல் என பித்தேறா நின்றது

உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
உன்னை அனுபவித்து வாழ வேணும் என்று தலைப்பட்டேன்

சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய்
சேல்களாகிற மத்ஸ்யங்கள் உகளிக்கும் படி பரப்பை யுடைத்தான தடாகங்கள் சூழப்பட்டு இருக்கிற
திருமலையிலே ஸந்நிஹிதனாய் எனக்கு இந்த பக்தியை விளைத்தவனே

இத்தால்
ஜலத்தைப் பிரிந்து தரிக்க மாட்டாத
மத்ஸ்யம் போலே உன்னைப் பிரிந்து ஆற்ற மாட்டேன் -என்கிறார் –

—————

நீர் மற்ற ஓர் இடம் இல்லை என்பான் என்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இல்லையோ -என்ன
அவர்கள் அஸக்தர் -என்கிறார் –

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருதுக் கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இப் பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப் பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான-ஆச்சார்யராய்
மா மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராத படி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்–

எருத்துக் கொடி உடையானும்
அறிவு கேட்டுக்கு எல்லை யான விருஷபத்தை த்வஜமாக யுடைய ருத்ரனும்
இத்தால் அவனுடைய தமஸ் ஸூ பிராஸுர்யம் சொல்லிற்று

பிரமனும்
அவனுக்கு ஜனகனாய்
தேவர்களுக்கு ஞான பிரதானம் பண்ணினவன் என்னும்படி
ஞாதாவான ப்ரஹ்மாவும்
ஸ்ருஷ்ட்டி கர்த்தா வாகையாலே ராஜஸோத்தரன் என்று தோற்றுகிறது

இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
த்ரை லோக்ய அதிபதியான இந்திரனோடே கூட மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஒருவரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை –
ஸம்ஸார பீஜமாம் அத்தனை

சர்வேஸ்வரன் ஸம்ஸார நிவர்த்தகன் என்று அறியார்கள் –
ஈஸ்வரோஹம் என்று இருக்குமவர்கள் ஆகையாலே
கடிக் கமலம் இத்யாதி
கார் செறிந்த இத்யாதி
நீறாடி —

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

உன் கோயில் கடை புக பெய்
உன் கோயிலில் திரு வாசலைப் பற்றி இருந்து வாழும்படி பண்ணி

திருமால் இரும் சோலை எந்தாய்
என் ஜென்மத்தை அறுக்கைக்கு அன்றோ
நீ திருமலையிலே ஸந்நிஹிதனாயிற்று
மா மாயையை மங்க ஓட்டுமவன் அன்றோ –

————–

உன் நிர்ஹேதுக கிருபையாலே விஷயீ க்ருதனான என்னை
அஞ்சாதே கொள் என்று
சோக நிவ்ருத்தியைப் பண்ணி அருளாய் என்கிறார் –

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்–

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி
பகவத் விஷயத்துக்கு அவ்வருகாய்
ஆத்ம வஸ்துவுக்கு ஹானியை விளைப்பதான ஸம்ஸார சமுத்ரத்திலே அவகாஹித்து

உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
துயர் அறு சுடர் அடியான திருவடிகள் ஆகிற
இக்கரையை ஏறிப்
பின்னையும் ஞான லாபம் ஒழிய பிராப்தி இல்லாமையாலே
தளர்ந்து பதஸ் பந்தம் பண்ண மாட்டாதே இருக்கிற என்னை
ப்ராப்ய ருசியாலே த்வரித்து கிலேசிக்கிற என்னை

அஞ்சேல் என்று கை கவியாய்
பிராப்தியைப் பண்ணித் தந்து -மாஸூச -என்னாய்

ப்ராப்ய வேஷம் சொல்லுகிறது மேல்

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும் செக்கர் நிறத்து சிவப்புடையாய்
திருக் கைகளுக்கு அழகை உண்டாக்கும் திருவாழியும்
வெறும் புறத்தே ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய திருக் கைகளும்
அவ் வாழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்களும்
பும்ஸத்வ அவஹமாய் ஸ்ப்ருஹணீயமான திருப் பீதாம்பரத்தோடே கூட
ஸந்த்யா ராகம் போலே சிவந்த நிறத்தை யுடையையாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
இவ் வடிவு அழகைத் திருமலையிலே எனக்குப் பிரகாசிப்பித்தவனே

ஸந்த்யா ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே யாய்த்துத் திருமேனியும்
திவ்ய அவயவங்களும்
திவ்ய ஆயுதங்களும்
திருப்பீதாம்பரமுமான
சேர்த்தி அழகு இருப்பது –

—————

அநாதி காலம் இழந்தது போராதோ
நீ கடாஷித்த பின்பும் போக ஸஹிப்பேனோ -என்கிறார்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடு பட்டு ஞானம் பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(ஸர்வ ரக்ஷகனான உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின் பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே யித்தனை காலமும் போய்க்
இன்று நாளை நேற்று என்று தொடங்கி
அநேக கல்பங்களான இந்தக் காலம் எல்லாம்
இப்படி அநாதி காலம் எல்லாம் வியர்தமாகவே போயிற்றே

கிறிப் பட்டேன்
இதுக்கு அடியாய் இருபத்தொரு விரகிலே அகப்பட்டேன்
அதாவது
பிரம ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம்

அதவா
கீழே அநாதி காலம் பழுதே போம்படி இழந்த நான்
கிறிப்பட்டேன்
நல்ல விரகிலே அகப்பட்டேன்
பெரும் கிறியார் (திரு விருத்தம் )-என்கிற விரகிலே அகப்பட்டேன் என்னவுமாம் –

இனி உன்னைப் போகல் ஒட்டேன்
உன்னாலே நிர்ஹேதுகமாக விஷயீ க்ருதனாய்
உன்னால் அல்லது செல்லாமை பிறந்த பின்பு இனிப் போக ஒட்டுவேனோ

நீர் இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ விரோதி கிடைக்க என்ன
பாண்டவர்கள் விரோதியிலும் காட்டில் பிரபலமோ என் விரோதி என்கிறார்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
பிரகிருதி சம்பந்த மாத்ரமான பாண்டவர்களை ராஜ்ய ஸ்ரீ யாலே ஸூகிக்கும் படி பண்ணி
அவர்களுக்கு விரோதியான துர்யோத நாதிகளை நரக ப்ராப்தராம் படி நசிப்பித்தாய்

அவர்களுக்கு நாம் அல்லது இல்லை ஆகையால் செய்தோம் என்ன
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய்
அவர்களை போலியோ நான்
உன் பக்கல் ப்ரவணமான நெஞ்சை உடையேன் என்னும் இடம்
அதுக்கு வாய்த்தலையான நீயே அறிவுதியே

என் நெஞ்சை நீ வஸீ கரித்து
திருமலையில் நின்ற நிலையைக் காட்டி அன்றோ (இவற்றைச் செய்து அருளினாய் )

—————-

ஜாயமான கால கடாக்ஷமே பிடித்துக் கைங்கர்ய அபேக்ஷை யுடையனாய்
பிரதி சம்பந்தியான உன்னைக் காணப் பெற்று இனிப் போக விடுவேனோ
என் விரோதியைப் போக்கி பிராப்தியைப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 -3-9 –

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.–

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
கர்ப்பத்தில் கிடக்கிற காலத்திலேயே
அடிமை செய்கையே புருஷார்த்தம் என்று துணிந்து இருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
அன்று நான் பிரார்த்தித்த படியே
இப்போது உன்னைக் கிட்டி இங்கே காணப் பெற்றேன்
ப்ராப்ய தேசமான திருமலையில் காணப் பெற்றேன்
இப்படி ஸூ லபனான உன்னைக் கண்ட பின்பு போக விடுவேனோ

விரோதி கனத்து இருந்ததே என்ன
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால் சென்றித் திசை திசை வீழச் செற்றாய்
வாணனுடைய பஹு வனத்திலும் கனத்து இருந்ததோ என்னுடைய விரோதி என்கிறார்

ஸ்ரீ துவாரகையின் நின்றும் சோணித புரத்திலே எடுத்து விட்டுச் சென்று
பாணனுடைய புஜ வனத்தைத் திக்குகள் தோறும் தெறித்து விழும்படி
திருவாழியாலே அறுத்துப் பொகட்டு
உஷா அநிருத்த கடகன் ஆனவனே

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த கிருஷ்ண அவதாரத்துக்கு பிற்பாடானான எனக்காகவே அன்றோ
திருமலையில் ஸந்நிஹதன் ஆய்த்து-

————–

நிகமத்தில் இத்திருமொழியை அப்யசித்தவர்களுக்கு பலம் அருளிச் செய்கிறார் –

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத் திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்–

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல்
அஞ்ஞரோடு விசேஷஞ்ஞரோடு வாசியற தம்தாம் அபிமதங்கள் பெறுகைக்காகச் சென்று
ஆழ இழிந்து அவகாஹிக்கும் தலை அருவி தொடக்கமான தீர்த்தங்களை யுடைய
திருமலையில் ஸந்நிதி பண்ணி நிற்கிற உபகாரகன் திருவடிகளில்

அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
அடிமை விஷயமாக
கைங்கர்ய பிராப்தி பண்ண வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்த

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஸ்ப்ருஹ ணீயமாய் உஜ்ஜவலமான மாடங்களாலே நிறையப்பட்டு
ப்ரத்யக்ஷமாய் இருக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்திக்கு உறுப்பாகத் சொல்லுகிறார்

ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
நின் திருவாணை கண்டாய் -என்ற ஒரு பாட்டோடு
அது பெறா ஆணை அல்லவாக்கின ஒன்பது பாட்டையும்

அன்றிக்கே
ப்ராப்ய துவரையை விண்ணப்பம் செய்த ஒன்பது பாட்டோடு
பலம் சொன்ன ஒரு பாட்டையும் கூட்டி
ப்ரீதி பிரேரிதராய் பாட வல்லார் என்றுமாம்

உலகம் அளந்தான் தமரே–
இவ்வாத்மாவினுடைய அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ரங்களைப் போக்கின
செயலை யுடைய திரிவிக்ரமனுக்கு அநந்யார்ஹராகப் பெறுவர்

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
உலகம் அளந்தான் தமரே–
என்று அந்வயம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.