ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -1-12 —

பாடம் -1- வேதாந்தத்தின் முக்யத்வத்ம்

அநந்தா ஹை வேதா –பரத்வாஜர் -இந்திரன் -மூன்று மலைகள் -கற்றது கைப்பிடி அளவு –
நான் மறை -நான்கு -என்றாலும் த்ரை வேதா -வகைகளில் மூன்று -ருக் யஜுர் ஸாம –
அபூர்வம்-முன்னால் நமக்குத் தெரியாத – உண்மையையே வேதம் சொல்லும் –
ஸ்நாத்வா புஞ்சீத -குளித்தே சாப்பிட வேண்டும் –
வேதையதி வேதம் -விளக்கும்
மறை -குதர்க்க வாதிகளுக்கு மறைக்கும்
தெய்வீகத் தன்மை –
பூர்வ மீமாம்ஸை -ஆராதன முறை -வேதம் -கர்ம காண்டம் -12 அத்தியாயங்கள்
தேவதா காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
உத்தர மீமாம்ஸை -ஆராத்யனைப் பற்றி சொல்லும் -ப்ரஹ்ம காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
வேத வியாசர் -பாதராயணர் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
அதாதோ -ஆதாலால் அதற்குப் பின் – கர்ம விஜ்ஜாசா – ப்ரஹ்ம விஜ்ஜாசா -தொடங்கும்

கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -கேட்டு அதன்படி இருக்க வேண்டும்
திரோதானம் -பிரமம் -விபரீதம் -அநித்யங்களை நித்யமாகக் காட்டும் -அசத்யங்களை சத்யமாகவும் –
அபோக்யங்களை போக்யமாகவும் காட்டும்
சரீரம் உடன் தொடர்பால் மாற்றி அறிய வைக்கும்
இத்தை புரிந்து ஆத்மா வேறே -நித்யம் -அறிய -கர்மங்கள் செய்ய செய்ய பாபங்களைப் போக்கி –
ஆராதனம் பண்ண பண்ண தான் அபூர்வங்களை அறிய விருப்பமும் -தகுதியும் வரும்
ஆகவே வேத புருஷன் -பூர்வ காண்டம் பூர்வ மீமாம்சை -பின்பு உத்தர காண்டம் -உத்தர மீமாம்ஸை
நித்ய கர்மங்களைச் செய்யச் செய்ய அநாதி கால கர்மங்கள் -வினைகள் -போகும் –

பிரமம் -மயக்கம் விப்ரலம்பம் வஞ்சனை இல்லாமல் -பிரமாதம் -கவனக்குறைவு இல்லாமல்
உண்மை பாரமார்த்திகம் ஒன்றையே சொல்லும்
த்ரிவித பரிச்சேதம் இல்லாமல் -அநாதி -அபவ்ருஷேயம்
சர்வ கர்ம சமாராத்யானாய் -எல்லா கர்மங்களால் ஆராதிக்கப்படுபவர் ப்ரஹ்மம் -முதல் -12 அத்தியாயங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –கேசவம் பிரதி கச்சதி- சர்வ தேவதா அந்தராத்மாவாய் -ப்ரஹ்மம் -அடுத்த நான்கு அத்தியாயங்கள் –
ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனாய் ப்ரஹ்மம் -இறுதி நான்கு அத்தியாயங்கள்
வேதமே ஸாஸ்த்ரம் -ஸாஸனாத் -இதம் குறு -இதம் ஆகார்ஷி –
செய்ய வேண்டியவற்றையும் செய்ய வேண்டாதவற்றையும் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு காட்டும் –
த்ரை குண்ய விஷய வேதா -புள்ளு பிள்ளைக்கு இரை தேடி கொடுத்து மேலே மேலே கூட்டிச் செல்லும் –

வேதம் செய்யச் சொல்வதே தர்மம் -செய்யாத வற்றை அதர்மம் -இதனால் அவன் திரு உள்ளத்தில் –
புண்யம் பாபம் ஈஸ்வர ப்ரீதி கோபம் –
இப்படியே அழகான தொடர்பு –
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை –

————–

பாடம் -2- வேதாந்தத்தை யார் கற்க வேண்டும் –
வேதம் -விவர்த்தி சர்வ பூதா நாம் -வேத சாஸ்திரம் ஸனாதனம் -வேத்ய இதி வேதம் –
தஸ்மாத் ஏதத் பரம் அந்நிய -ஸஹஸ்ர மாதா போல் வத்சல்ய தமம்
தொன்மையான வேதங்கள் தான் உலகில் அனைத்து உயிர் இனங்களையும் தாங்குகிறது
உலகில் ஒருவன் தனது இலக்கை அடைய நியாயமான வழியைக் கூறும் வேதங்கள் தான் சிறந்த பிரமாணங்கள் என்று மநு பகவான்
வேதத்தை விட வேறே ஒரு சாஸ்திரமே கிடையாது -அங்கங்கள் உப அங்கங்கள் ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தில் இருந்தே தோன்றியவை
வேதமே அவற்றின் மூலம்
தத்தவங்களைப் பாதிப்பதால் வேதம் என்று பெயர் பெற்றது
வேதத்தில் கர்ம காண்டம் நாம் செய்ய வேண்டிய கர்மங்களைப் பற்றியும் உபநிஷத் என்னும் ஞான காண்டம் ப்ரஹ்மத்தைப் பற்றியும் கூறும்
குருவுக்கு அருகில் அமர்ந்து ரஹஸ்யமாக கேட்க்கும் படியால் உப நிஷத் எனப்படுகின்றன -உப அருகில் நிஷத்ய அமர்ந்து
சம்சார தாபம் தீர்க்கும் ஞானத்தைக் கொடுக்கிறபடியாலும் உப நிஷத் -நிஸ் சேஷ தாப த்ரய விசரணம் ஞானம் -ஆதி சங்கரர் –
ப்ரஹ்மத்தை நேரடியாகக் கூறும் வேதப்பகுதி தான் உபநிஷத் -அத்வாரக ப்ரஹ்ம ப்ரதிபாத்யம் உப நிஷத் –
ஸூதர்சன ஸூரி -ப்ரஹ்மத்துக்கு மிக அருகில் இருந்து நம்மை அருகில் கூட்டிச் செல்லும்
தச உபநிஷத்துக்கள் பிரசித்தம் –

வேதக் கல்வி
ஒவ்வொருவரும் தங்கள் குலத்தில் பயிலப்படும் வேதப்பகுதியை தவறாமல் கற்க வேண்டும் என்று வேதமே சொல்கிறது –
ஸ்வாத்யாயம் அத்யே தவ்ய –
அப்படிக் கற்பவன் வேதத்தை மட்டும் கற்காமல் அவற்றின் அங்கங்களான
சிஷா வியாகரணம் சந்தஸ் ந்ருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆகியவற்றையும் கற்க வேண்டும்
இப்படிக் கற்கும் பொழுது அவற்றைப் படிக்கும் பொழுதே மேலோட்டமாக அதன் பொருள் புரியத் தொடங்கும்
இதற்கு ஆபாத ப்ரதீதி மேலோட்டமான அர்த்தம் என்று பெயர்
இதில் சந்தேகங்களோ தவறான புரிதல்களோ ஏற்படும்

இந்த ஆபாத ப்ரதீதி எவ்வாறு இருக்கும் என்றால்
கர்மங்களின் பலன்களான ஸ்வர்க்கம் பசு குழந்தைகள் செல்வம் உணவு இவை எல்லாமே அழியக் கூடியவை என்றே தோன்றும்
சாதுர்மாஸ யாகத்தைச் செய்தால் -அக்ஷயம் -அழியாத புண்ணியம் கிட்டும் –
அபாம ஸோமம் அம்ருத -ஸோம ரஸத்தைப் பருகி மரணம் அற்றவர்கள் ஆகலாம் போன்ற சொல் தொடர்களைப் பார்த்து
சில கர்மங்களுக்கு நிரந்தரமான பலம் கிட்டும் என்றும் தோன்றும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -என்றும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி-முதலான சொல் தொடர்களைப் பார்த்தால்
பரமாத்மாவை த்யானம் செய்து நித்தியமான பலம் பெறலாம் என்று தோற்றும்
இந்த மேலோட்டமான தோற்றங்களை உறுதி செய்யத் தான் ஒருவன் மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -வேத விசாரத்தில் இழிகிறான்
விதியால் அல்ல -ஆசையால் இழிகிறான் – பூஜ்யம் -மதிக்கத்தக்க உயர்ந்த விஷய விசாரமே -மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
கர்ம மீமாம்ஸையில் கர்ம விசாரங்களைப் பற்றி விசாரித்து முடித்ததும் –
கர்மங்களால் ஒரு ஸ்திரமான அழியாத பலன் கிட்டாது என்ற நிச்சயம் ஏற்படும் – ஓட்டை ஓடங்கள் போல் கர்மங்கள் –
அந்தவத் -முடிவை உடையதாகவே இருக்கும் –
12 அத்தியாயங்கள் கர்ம விசாரம்
தேவதா காண்டம் -அல்லது சங்கர்ஷண காண்டம் என்று -நான்கு அத்தியாயங்களும் ஜைமினி பண்ணி உள்ளார் –
பரீஷ்ய லோகான் -ப்ராஹ்மணன் நிர்வேதம் -இவற்றை அறிந்து விசாரித்து –
வேதம் கற்பவன் வெறுப்பை அடையக் கடவன் -வேதமே சொல்லுமே

வேதாந்தக் கல்வியில் நுழைவு
இவ்வாறு கர்மங்களுக்கு ஸ்திரமான பலன் கிட்டாது என்ற நிச்சயமும் –
ப்ரஹ்ம தியானமே ஸ்திரமான பலம் கொடுக்க வல்லது என்றும்
இவ்வாறு மேலோட்டமான புரிதலும் -ஆபாத ப்ரதீதியும் -உடையவன் தான்
வேதாந்த சாஸ்திரம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -கற்க சரியான அதிகாரி ஆவார் –
வேதத்தைக் கற்றவன் கர்மங்களால் அடையயப்படும் பலன்களை ஆராய்ந்து –
இவற்றால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது என்ற உறுதியான நிச்சயம் பெற்றதால்
கர்மங்களில் நிர்வேதம் -வெறுப்பு ஏற்பட்டவனாக மேலே உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தை அறிவதற்காக
ஒரு குருவை கண்டிப்பாக அணுக வேண்டும் –
அந்த குரு அவனை சோதித்துப் பார்த்து ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பார் -என்று உபநிஷத் சொல்கிறது

இவ்விடத்தில் அவன் குருவை அணுக வேண்டும் என்பது நியம விதி ஆகும் –
ஒரு பயனை அடைய பல வழிகள் இருக்கும் பொழுது -அவற்றில் ஒன்றைக் கட்டளை இட்டு
மற்றவற்றைத் தவிர்க்கச் சொல்லும் விதி நியம விதி ஆகும் –
இங்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய பல வழிகள் இருந்தாலும் குருவை அணுகியே அறிய வேண்டும் என்ற நியமம் சொல்லப் படுகிறது
ஸ்வ குரு ரேவ அதிகச்சதி -நியம கதி
அபூர்வ விதி -நியம விதி வகைகளை கீழேயே பார்த்தோமே
த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாசி தவ்ய -அர்த்த க்ரமம் -பிரயோஜனம் வைத்து மாற்றிக் கொள்ள வேண்டுமே
பரமாத்மாவைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது
இங்கு படிக்கப்பட்ட வரிசையை விட்டு -ப்ரயோஜனத்தைக் கருதி -அர்த்த க்ரமத்தின் படி
கேட்க வேண்டும் -சிந்திக்க -ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் -காண வேண்டும் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் –

நம் நிலை
இவ்வாறு அங்கங்களோடு சேர்ந்த வேதத்தைக் கற்று மேலோட்டமான அறிவைப் பெற்று
கர்ம விசாரித்தால் அவற்றின் தன்மைகளை நிச்சயித்து பிறகு தான் ஒருவன் ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்துக்கு
வர வேண்டும் என்றால் நாம் அனைவரும் எவ்வாறு கற்பது என்ற ஐயம் எழும்
இதற்கான விடையை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தம்முடைய அதிகரண சாராவளி கிரந்தத்தில் கீழில் படி அருளிச் செய்கிறார்

முன் யுகங்களில் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை தடங்கல்கள் குறைவாகவும் இருந்த படியால் முறைப்படியே பயின்றார்கள்
இங்கு கலியுகத்தில் நாம் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை குறைவாகவும் இடையூறுகள் அதிகமாகவும் இருக்கிறபடியால்
காலத்தை விரயம் செய்ய முடியாத காரணத்தால் சில பாக்கியசாலிகள் நேரடியாக வேதாந்த ஸாஸ்த்ரத்தை கற்று மகிழ்கிறார்கள் –
அப்பொழுது நியாய சாஸ்திரம் பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரங்கள் தேவை இல்லையா -அப்படிப் பொருள் அல்ல –
முழுவதுமாக அந்த ஸாஸ்த்ரங்களைப் பயில இயலா விட்டாலும் தேவையான அளவாக வாகிலும் அவற்றைக் கற்று
பெரும்பாலும் வேதாந்த ஸாஸ்த்ரத்திலே பொழுது போக்க வேண்டும் -என்று தான் பொருள்
ஏன் என்றால் நியாயம் மீமாம்ஸை வியாகரணம் -இவற்றை பயிலாமல் வேதாந்தத்தைக் கற்க இயலாது –

————

பாடம் -3-வேதாந்தத்தின் வரலாறு
தயா சதகம் -அவனது கருணை வெள்ளத்தில் -சேர்ந்த நதி போல் -குரு பரம்பரை குளிர்ந்து –
தீர்த்த பஹுளாம் -உபதேசங்ககளில் ஆழ்ந்து உஜ்ஜீவிக்க வேண்டும்
எல்லா சம்பிரதாயங்களில் குரு பரம்பரை உண்டே –
ப்ரஹ்மம் -அஃறிணைச் சொல் சமஸ்க்ருதத்தில் பரமாத்மாவையே சொல்லும்
அனைத்து மதங்களும் இவன் மூலமே தொடங்கும்

விசிஷ்டாத்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி
2-பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
3-வேத வியாஸர் -ப்ரஹ்ம ஸூத்ரம் (நியாய கலாபம் -545-ஸூத்ரங்கள் -நம் சம்பிரதாயப்படி )-மஹா பாரதம் (பஞ்சம வேதம் -இதிகாசம் )
4-போதாயனர் -ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி (வியாக்யானம் -வ்ருத்தி வார்திகம் பாஷ்யம் போன்ற பல வகைகள் உண்டே )

5-டங்கர் -ப்ரஹ்ம நந்தி என்ற பெயரும் உண்டு -சாந்தோக்ய உபநிஷத்துக்கு வாக்கியம்
6-த்ராமிடாச்சார்யார் -சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்ய காரர்
7-குஹ தேவர் -கபர்தி -பாரதி -போல்வார் (வேதார்த்த ஸங்க்ரஹத்தில் இந்த பரம்பரையைக் காட்டி அருளுகிறார் )

8-ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாய தத்வம் -புருஷ நிர்ணயம் -யோக ரஹஸ்யம்
(யோ வேத்தி ப்ரத்யக்ஷமாக முக்காலத்தில் உள்ளவற்றை எப்பொழுதும் அறிபவன் ஸர்வஞ்ஞன் –
இவர் நியாய தத்வத்தில் காட்டி அருளிய ஸ்லோகம் கிடைக்கப் பெறுகிறோம் )

9-ஸ்ரீ யாமுனாச்சார்யர் -சித்தி த்ரயம் (ஸம்வித் -ஆத்ம -ஈஸ்வர த்ரயங்கள் ) –
ஆகம பிராமாண்யம் (பாஞ்சராத்ரம் கொள்ளத் தக்கதே என்று காட்டி அருளவே )
கீதார்த்த ஸங்க்ரஹம் (32-ஸ்லோகங்களில் )- ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோஹி
(த்ராயந்தார்த்தம் ஸூ ஹ்ருதமாக ஸூ லபமாகக் காட்டி அருளிய ஸ்லோக கிரந்தங்கள் இவையே முதலில் வந்தவை )

10-பகவத் ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம் -கத்ய த்ரயம் -நித்ய கிரந்தம்
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம்-இவை மூன்றும் ப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்கள்
ப்ரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -கீதா மூன்று -படித்துறைகள்
வேதார்த்த ஸங்க்ரஹம் -உபநிஷத்துக்களில் பிறக்கும் சங்கைகளை தீர்த்து அருளுகிறார்

(தத்வ ரத்நாகாரம் -பட்டர் எழுதியது நமக்கு கிடைக்க வில்லை )

11-வரத நாராயண பட்டாரகர் -நியாய தர்சனம் -ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம் -ப்ராஞ்ஞா பரித்ராணம்–
12-மேக நாதாரி ஸூரி -நயப்பிரகாசம் என்றும் ஸ்ரீ பாஷ்ய பாவ போதநம் என்றும் இரண்டு உரைகள் -நயத்யுமணி -தனி கிரந்தம்
(மேக நாதன் இந்த்ரஜித்துக்கு அரி எதிரி -லஷ்மணன் என்றவாறு -லஷ்மண ஸூரி )

13-விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் -ப்ரமேய ஸங்க்ரஹம் -சங்கதி மாலை -விஷ்ணு புராணத்துக்கு விஷ்ணு சித்தீயம் என்ற வியாக்யானம்
14-வாத்ஸ்ய வரதாச்சார்யார் -நடாதூர் அம்மாள்-(1165-1275-) ப்ரமேய மாலை -தத்துவ நிர்ணயம் -தத்வ சாரம் -(முக்கிய கிரந்தம் இது )
15-ஸூ தர்சன ஸூரி (வேத வ்யாஸ பட்டர் வம்சம் )—ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸ்ருதி ப்ரகாசிகா- ஸ்ருத ப்ரதீபிகா -ஆகிய இரண்டு வியாக்யானங்களும் –
வேதார்த்த ஸங்க்ரஹத்துக்கு தாத்பர்ய தீபிகா உறையும் – ஸ்ரீ மத் பாகவத புராணத்துக்கு ஸூக பஷீயம் என்ற உரையும் அருளிச் செய்தவர் –
16–ஆத்ரேய ராமானுஜர் -(அப்புள்ளார் சம்பிரதாய பெயர் -தேசிகர் தாய் சகோதரர் )-நியாய குலிசம்

17-வேதாந்த தேசிகர் –சேஸ்வர மீமாம்ஸை –மீமாம்ஸா பாதுகா ( ஜைமினி ஸூத்ர வியாக்கியானங்கள் இவை )
ஸ்ரீ பாஷ்யத்துக்கு தத்வ டீகை உரை -அதிகரண சாராவலீ -(156 அதிகரணங்கள் -ஒவ் ஒன்றுக்கும் ஸ்லோகம் அருளி )
தத்வ முக்த கலாபம் (பிரமாண ப்ரமேய விசாரங்கள் -ஸ்லோக வடிவில் -ஸர்வார்த்த சித்தி -இதுக்கு வியாக்யானம் இவரே எழுதி )
நியாய பரிசுத்தி (கத்யம் ) -நியாய ஸித்தாஞ்சனம் -( கத்யம் )
சத தூஷணீ -(அத்வைத குற்றங்கள் -100-இதுக்கு பதில் சத பூஷணி -அதுக்கும் பதில் கிரந்தம் உண்டே )
கீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகா
ஈஸா வாஸ்ய உபநிஷத் பாஷ்யம் —
சதுஸ் ஸ்லோஹி -ஸ்தோத்ர ரத்னம் -கீதார்த்த ஸங்க்ரஹம் (v)- இவற்றுக்கும் வியாக்கியானங்கள்

18-மஹா சார்யர் -(தொட்டாச்சார்யார் 1543-)-பாராசர்ய விஜயம் -சண்ட மாருதம் (சத தூஷணி ஆபேஷங்களுக்கு பதில் )
ப்ரஹ்ம வித்யா -ஸத் வித்யா -அத்வைத வித்யா -குரூப ஸித்தி மற்றும் பரிகர விஜயங்கள்
19-ரெங்க ராமானுஜ முனி -10 உபநிஷத் பாஷ்யம்-
மூல ப்ரகாசிகை-பாவ ப்ரகாசிகை (ஸ்ரீ பாஷ்யத்துக்கும் ஸூத பிரகாசிகைக்கும் இவை இரண்டும் )
விஷய வாக்ய தீபிகை -சாரீரிக ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸித்தாஞ்சன டீகை
20-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -ஸ்ரீ மஹாச்சாருடைய சிஷ்யர் -யதீந்த்ர மத தீபிகை -ப்ரகரண கிரந்தம்
21-அனந்தாச்சார்யார் ( மேல் கோட்டையில் இருந்தவர் )-நியாய பாஸ்கர -வேதாந்த வாதா வளி

அத்வைதம்
1- நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி -பராசரர் -வேத வியாசர் -ஸூகர்
2-கௌடபாதர் (7 நூற்றாண்டு )-மாண்டூக்ய காரிகை -கௌடபாத காரிகை –
3-கோவிந்த பகவத் பாதர் (சந்த்ர சர்மா பூர்வாஸ்ரமம் -நர்மதா கரையில் ஆதி சங்கரர் ஆச்சார்யர் )
4-ஆதி சங்கர பகவத் பாதர் -பத்து உபநிஷத்துக்களுக்கும் -பகவத் கீதைக்கும் -ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கும் உரை
விவேக சூடா மணி -உபதேச சாஹஸ்ரி

5-பத்ம பாதர் -சதுஸ் ஸூத்ரி பாஷ்ய விவரணமான பஞ்ச பாதிகா –
6- ஹஸ்தா மலகர் -ஹஸ்தா மலக ஸ்தோத்ரம் -12-ஸ்தோத்ரங்கள்
7-தோடகர்-தோடகாஷ்டகம் -8-ஸ்லோகங்கள் -ஸ்ருதி சார சமுத்தரணம் -179- ஸ்லோகங்கள்
8-ஸூரேஸ்வரர் -ஆதி சங்கருடைய ப்ரஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்துக்கும் தைத்ரிய உபநிஷத் பாஷ்யத்துக்கும்
வார்திகம் எனப்படும் உரை -நைஷ்கர்ம்ய ஸித்தி

9-வாசஸ்பதி மிஸ்ரர் -ஆதி சங்கர ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்கு பாபதி (பாமதி என்றும் சொல்வர் ) என்ற உரை
10-ப்ரகாசாத்மன் -பஞ்ச பாதிகா விவரணம் –
11-ஸ்ரீ ஹர்சர் -கண்டன கண்ட காத்யம் (நியாய சாஸ்த்ரா தவறுகளைக் காட்டி )
12-சித் ஸூகர் -தத்வ ப்ரதீகை

13-அமலா நந்தர் -பாமதிக்கு வியாக்யானமான கல்ப தரு
14-வித்யாரண்யர் -விவரண ப்ரமேய ஸங்க்ரஹம் -த்ருக் த்ருஸ்ய விவேகம் – ஜீவன் முக்தி விவேகம்
(ஹரிகரன் புக்கர் இவர்களின் ஆச்சார்யர் இவர் )
15-அப்பய்ய தீக்ஷிதர் -வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதிக்கு அமலா நந்தர் எழுதிய
கல்ப தரு வியாக்யானத்துக்கு வியாக்யானமான பரிமளம் -நியாய ரஷா மணி -ஸித்தாந்த கால்பதிலகா –

(மது ஸூதன ஸரஸ்வதி-இவரும் பல கிரந்தங்கள் அருளிச் செய்கிறார் )

17-தர்ம ராஜ அத்வரீந்த்ரர்-வேதாந்த பரிவாஷா -அத்வைத கருத்துக்கு இது ப்ரகரண க்ரந்தம்

த்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -சனகர் –சநந்தர் -சனத்குமாரர் -ஸனாதனர் -துர்வாசர் -ஞானநிதி தீர்த்தர் –
கருட வாஹனர் -கைவல்ய தீர்த்தர் -ஞானேச தீர்த்தர் -பர தீர்த்தர் -ஸத்ய பிராஜ்ஞ தீர்த்தர் -அச்யுத ப்ரேஷ்ய ஆச்சார்யர் –

2- மத்வாச்சார்யார் -(வாசுதேவன் என்ற இயற் பெயர் -1238 அவதாரம் -இவருக்கே ஆனந்த தீர்த்தர் பூர்ண ப்ரஞ்ஞர் )
அநு வியாக்யானம் -அநு பாஷ்யம் -மஹா பாரத தாத்பர்ய நிர்ணயம் –
விஷ்ணு தத்வ வி நிர்ணயம் -பிராமண லக்ஷணம் -உபாதி கண்டனம் -கதா லக்ஷணம் -மித்யாத்வ அநு மான கண்டனம் –

3-அஷோப்ய தீர்த்தர் -வித்யாரண்யர் வேதாந்த தேசிகர் சம காலத்தவர் –

ஜெய தீர்த்தர் -22 கிரந்தங்கள் -நியாய ஸூ தா
வியாச தீர்த்தர் -பல கிரந்தங்கள்
ராகவேந்திரர் நியாய முக்தாவளி -தச பிரகாரணி
ரகோத்தம தீர்த்தர் பாவ போதகங்கள் -நியாய ரத்ன தீபிகா –

——————

பாடம் -4- ஒரே சாஸ்தம் -ஒரே நூல்
ப்ரஸ்தான த்ரயம் -ப்ரஸ்தானம் -படித்துறை போல் –
வேத வியாசர் நமக்காக செய்து கொடுத்தவை மூன்று –
வேத உபநிஷத் புராணங்கள் -இவற்றைப் பிரித்து முறைப்படுத்திக் கொடுத்தார்
பஞ்சம வேதமான ஸ்ரீ மஹா பாரதத்தையும் அதனுள் அடங்கிய ஸ்ரீ பகவத் கீதையையும் கொடுத்தார்
ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் கொடுத்தார்
உபநிஷத்துக்கள் ஸ்ரீ கீதை ப்ரஹ்ம ஸூ த்ரம் -மூன்றுமே ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய வழிகள் -இவையே ப்ரஸ்தான த்ரயம்
உபநிஷத் ஸ்ருதி பிரஸ்தானம் -கீதை ஸ்ம்ருதி ப்ரஸ்தானம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஸூ த்ர ப்ரஸ்தானம்
உபநிஷத்துக்கள் பல -தச உபநிஷத் ப்ரஸித்தம்
ஈசாவாஸ்ய -கேன -கட -ப்ரச்ன -முண்டக -மாண்டூக்ய -தைத்ரிய -ஐத்ரேய -சாந்தோக்ய -ப்ரஹ்தாரண்யம்
கீதை பகவான் கிருஷ்ணனே அருளிச் செய்தது -18 அத்தியாயங்கள் கொண்டது
ப்ரஹ்ம ஸூத்ரம் -நான்கு அத்தியாயங்கள் -சமன்வய- அவிரோத- சாதன- பல அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் நான்கு பாதங்கள்
விஷய வாக்கியம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -சங்கதி இவை அனைத்தும் அங்கங்கள் அதிகரணத்துக்கு –
மொத்தம் 156 அதிகரணங்கள் -545-ஸூத்ரங்கள் –
அத்வைதப்படி -189 அதிகரணங்கள் -555-ஸூத்ரங்கள் –

முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
மூன்று சொற்கள் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

அத -இச் சொல்லுக்கு அடுத்து -என்ற பொருளை அத்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் கொள்கிறார்கள்
ஆனால் எதுக்கு அடுத்து என்பதில் வேறுபாடு உள்ளது
அத்வைதிகள் சொல்வது -சாதன சதுஷ்ட்யங்களுக்கு அடுத்து
சாதன சதுஷ்ட்யமாவது
நித்ய அநித்ய வஸ்து விவேகம் -பகுத்தறிவு
சமதாதி சாதன ஸம்பத் -புலன் அடக்கம்
இஹாமுத்ரா பல போக விராகம் -பற்றின்மை
முமுஷுத்வம் -மோக்ஷத்தில் இச்சை
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்துக்கு அடுத்து -வேத அத்யயனம் செய்த ஒருவனுக்கு
மேலோட்டமான பொருள் தான் தெரியும் –
அத்தை உறுதி செய்ய தானாகவே கர்ம விசாரம் செய்து -கர்மங்களால்
அல்ப அஸ்திர பலன்களைத் தான் பெறலாம் என்று உறுதிபட அறிந்து ப்ரஹ்ம விசாரத்துக்கு வருகிறான்
த்வைதிகள் சொல்வது -அத -மங்களமான சொல் -பரமாத்மாவைச் சொல்லும் –
மங்களா சரண சொல் என்பதால் முதலில் சொல்லப்படுகிறது –

அத-இந்த சொல்லுக்கு ஆகையால் என்று பொருள்
அத்வைதிகள் சொல்வது -கர்மங்களால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது –
ப்ரஹ்ம ஞானத்தால் மட்டுமே அது முடியும் என்பதால்
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்தால் கர்மங்களுக்கு நிரந்தரமான பலன் கிட்டாது என்ற முடிவும்
உபநிஷத்துக்களை அத்யயனம் செய்தால் ப்ரஹ்ம ஞானத்தால் அளவற்ற இன்பத்தைப் பெறலாம்
என்கிற மேலோட்டமான புரிதலும் உள்ளபடியால் -என்று
த்வைதிகள் சொல்வது -துக்கங்களை போக்கி அளவற்ற ஸூ கத்தை அடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறபடியால்

ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் என்று பொருள் –
ப்ரஹ்மம் -என்றால் மிகப்பெரியது என்று பொருள் -பரமாத்மா ஸ்வரூப ரூப குணங்களால் மிகப் பெரியவராயும்
தன்னை அண்டினார்களையும் மிகப் பெரியவராக ஆக்குபவர் –
ஆகையால்
இந்த ஸூ த்ரத்தின் பொருள் –
கர்ம விசாரத்தை முடித்த பிறகு -கர்மங்கள் நிரந்தரமான பலனை அளிக்காது என்ற உறுதி ஏற்பட்ட படியால்
ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதாகும் –
இதைத் தான் போதாயன மகரிஷியும் -வ்ருத்தி கிரந்தத்தில்
வ்ருத்தாத் கர்மாத்திகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விதிஷா -என்று கூறுகிறார்
முடிக்கப்பட்ட கர்ம விசாரத்துக்குப் பிறகு ப்ரஹ்மத்தை அறிய ஆசை பிறக்கிறது -என்று இதற்குப் பொருள் –

ஏன் முதலில் கர்ம விசாரம்
வேதத்தைக் கற்ற ஒருவனுக்குத் தானாகவே அதன் பொருள் மேலோட்டமாகத் தோற்றுமாயின்
அவன் ஏன் முதலிலேயே ப்ரஹ்ம விசாரம் செய்யாமல் கர்ம விசாகம் செய்கிறான் –
இந்தக் கேள்வியின் விடையைத் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண சாராவளீ நூலில் அருளிச் செய்கிறார் –

க்ரமம் -மீமாம்சை ஐந்தாம் அத்யாயம் பார்த்தோம் –ஆறு வகைகள் பார்த்தோம்
1-சுருதி -நேராக வேதத்தில் சொல்லும்
2-அர்த்தம் -பிரயோஜனம் பார்த்து முடிவு செய்கிறோம் -அக்னி ஹோத்ரம் யாவகு சமைக்க வேண்டும் –
3-பாடம் -படிக்கப்பட்ட வரிசையில்
4-முக்கியம் -பிரதான கர்மங்களில் போல் அங்கங்கள் செய்ய வேண்டும் -ஆக்னேய தயிர் இத்யாதி
5-ஸ்தான கிரமம்-முன் செய்த வழக்கம் படி
6- ப்ரவ்ருத்தி -பல ஸம்ஸ்காரங்களுக்கு -பலவற்றுக்கு செய்யும் –
கர்ம விசாரம் பின்பே ப்ரஹ்ம விசாரம் -ஸ்ருதி சொல்லுமே அஸ்திர பலம் உணர்ந்து -ஆச்சார்யர் இடம் சென்று கற்க சொல்லுமே
ப்ராவண்யம் ப்ராக் த்ரி வர்க்கம் –முதல் மூன்று புருஷார்த்தங்களில் ஆசை கொண்ட வாசனை பதிவுகள் இருக்குமே –
ப்ரஹ்மம் அறிய உபாசனம் வேண்டும் -உபாசனத்துக்கு அங்கமாக கர்மங்கள் வேண்டுமே -அறிந்து அனுஷ்ட்டிக்க வேணுமே –
அங்கி அங்கம் பாவத்துக்காகவும் இப்படி கர்ம மீமாம்ஸா -முதலில் -பின்பு ப்ரஹ்ம மீமாம்ஸா
முக்கிய கிரமம் -வேதம் அர்த்தம் அறுதி விடுவதே பலன் -இரண்டுக்கும் பொதுவான நோக்கு இதுவே
மூலம் படியே வியாக்யானம் செய்ய வேண்டுமே
இன்னும் இரண்டு காரணங்கள் -பூர்வ மீமாம்ஸா கற்றவற்றை ஆதாரமாகக் கொண்டே இதன் விசாரம் அறிவோம்
வேதம் அத்யயனம் -சொல்வதன் மூலமும் யாகம் யஜ்ஜம் தானம் ஹோமம் இவற்றால் உபாசனம் செய்து
ப்ரஹ்மம் அறிய வேண்டும் -சொல் தொடர் அறிய சொல்லின் பொருள்களை அறிய வேண்டுமே
சொல்லின் பொருள் அறிய கர்ம விசாரம் -சொல் தொடரின் பொருள் அறிய ப்ரஹ்ம விசாரம் –

1-எண்ணற்றப் பிறவிகளில் நாம் தர்மம் அர்த்தம் காமம் மூன்று புருஷார்த்தங்களையே ஆசைப்பட்டதால்
இப்பொழுதும் அவற்றைச் சொல்லும் கர்ம விசாரத்தில் தான் இயற்கையாக ஆசை ஏற்படும்
முக்தியைச் சொல்லும் ப்ரஹ்ம விசாரம் பழக்கம் இல்லாத படியால் ஈற்காது
2- உபாசனம் என்ற தியானத்துக்கு கர்மங்கள் அங்கமான படியால் அங்கங்களை அறிந்த பிறகு தான்
அங்கியை அறிய வேண்டும் என்பதால்
3- வேதம் என்ற ஒரே நூலுக்கு கர்ம மீமாம்ஸையும் ப்ரஹ்ம மீமாம்ஸையும் உரை நூல்களாக இருக்கிற படியாலும் –
மூலத்தில் எந்த வரிசையில் உள்ளனவோ அதே வரிசையில் தான் உரைகளைப் படிக்க வேண்டும் –
4-பூர்வ மீமாம்ஸையில் விசாரிக்கப் பட்ட பிரமாணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரஹ்ம மீமாம்ஸையில் செய்யப் படுகிற படியாலும்
5-ஒரு சொல் தொடரின் பொருளை அறிய வேண்டும் என்றால் அதற்கு முன் அதில் இருக்கும் சொல்லின் பொருளை அறிய வேண்டும் என்பதால்
யோகத்தால் –ப்ரஹ்மத்தை உபாசிக்கிறார்கள் -என்ற சொல் தொடரை புரிவதற்கு யாகத்தை முதலில் அறிந்து இருக்க வேண்டும் –
6-பூர்வ மீமாம்ஸையில் சொன்ன விஷயங்களை எடுத்துக் காட்டாக ஆக்கி உத்தர மீமாம்ஸையில் சொல்லுகிற படியால்
முதலில் எடுத்துக் காட்டை அறிய வேண்டும் என்பதாலும் கர்ம விசாரம் தான் முதலில் செய்ய வேண்டும் –

ஐக சாஸ்திர்யம்
இப்படி ஜைமினி மகரிஷி இயற்றின பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -வ்யாஸ மகரிஷி எழுதின உத்தர மீமாம்ஸையும்
ஒரே நூலான வேதத்தின் இரண்டு பகுதிகளைத் தான் விளக்குகின்றன –
ஆகையால் இவை இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் தான்
அதாவது நியாய சாஸ்திரம் -மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -என்று பிரித்து எண்ணுவது போல்
பூர்வ மீமாம்ஸை வேறு உத்தர மீமாம்ஸை வேறு என்று என்று பிரித்து எண்ணக் கூடாது –
இரண்டும் சேர்ந்து மீமாம்ஸா என்கிற ஒரே சாஸ்திரம் தான்
இதைச் சொல்லும் போதாயன மகரிஷி
ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமினீ யேந ஷோடச லக்ஷணேந இதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி –என்று தெரிவிக்கிறார் –
அதாவது ஸாரீரிகம் என்று அழைக்கப்படும் இந்த உத்தர மீமாம்ஸா சாஸ்திரம்
ஜைமினி மகரிஷி எழுதிய பூர்வ மீமாம்ஸை உடன் ஒரே சாஸ்திரம் -என்கிறார்
ஒரே சாஸ்திரமாக் இருந்தால் -எதற்கு இருவரும் தனித்தனியாக -நான் தர்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் –
நான் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்கிறார்கள் என்ற கேள்வி எழும்
1-உத்தர மீமாம்ஸையில் மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்தில் -கர்மங்களைப் பற்றி விசாரம் செய்து இருக்க வேண்டும்
அது மிகப் பெரிய விசாரமான படியால் அத்தை ஜைமினி மகரிஷி முன்பே தனியாக எழுதினார் –
2- அவரவர் இயற்றிய பகுதிக்கு அந்த அந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
முழுவதுமான மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு -வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு ப்ரதிஜ்ஜையைத் தருவித்திக் கொள்ளலாம்
3- தர்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று ஜைமினி செய்த ப்ரதிஜ்ஜை உத்தர மீமாம்சைக்கும் பொதுவானது
ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ஸாஷாத் தர்மம் தானே -நாம் ஆசைப்படும் சகலத்தையும் பெற்றுத் தந்து அருளுவதால் –

ஐக பிரபந்த்யம்
பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும் ஒரே ஸாஸ்த்ரம் என்பதோடு நம் ஆச்சார்யர்கள் நிறுத்த வில்லை –
இரண்டும் சேர்ந்து ஒரே நூல் என்றே தெரிவிக்கிறார்கள் –
சொல் தொடர்களின் கூட்டமே ஒரு நூல் என்பது
அவற்றுக்குள் ஒன்றுக்கு ஓன்று தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் பொழுது தான் –
ஒரு வரியைப் படித்த உடன் வரும் ஐயத்தை அடுத்த வரி போக்கினால் தான் அது ஒரே நூல் ஆகும் –
அதே போல் மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் –
ஜைமினியின் முதல் ஸூ த்ரத்தை படிக்கும் பொழுது தோன்றும் ஐயத்தை அடுத்த ஸூத்ரம் விலக்கும்
இதே போல் கடைசி ஸூ த்ரம் வரை தொடரும் –
ஜைமினியின் கடைசி ஸூ த்ரத்தைப் படித்த உடன் கர்மங்கள் அல்ப பலன்களையே கொடுக்கும் என்ற புரிதல்
ஏற்பட்டு பின்பு நித்தியமான ஸூ கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற எதிர்பார்ப்பு வருமே –
வியாஸரின் முதல் ஸூத்ரமானது -அதற்காகத் தான் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் -என்று தொடங்கி
ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறது –
ஆகையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கிற படியால்
இரண்டும் ஒரே நூல் தானே

வேதாந்த தேசிகர் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
வித்யா ஸ்தான ஐக்யம்
க்ரம நியதி -ஆகாங்ஷை -எதிர்பார்ப்பும் பதிலும் ஒன்றுக்கு ஓன்று இருக்கிறதே
அவாந்தர விஷயம் உள் பிரிவு இருக்கலாமே
ஜைமினி வியாசர் கருத்துக்களில் விரோதம் இல்லை -மேலோட்டமாக இருப்பது போல் இருந்தாலும் –
சொல்லப்பட்ட விஷயம் -பயன் -எழுதியவர் -முதலானவை மாறு பட்டாலும் தவறு இல்லை –
ஒரே நூலாக ஆக முடியும் என்பதையும் காட்டுகிறார் –

————-

பாடம் -5- ஸாஸ்த்ர ஆரம்பம்
சதுஸ் ஸூத்ரீ -முதல் நான்கும் பிரசித்தமாக உள்ளவை -வேதாந்த ஸாஸ்த்ர முன்னுரை –
ப்ரஹ்ம விசாரம் ஆரம்பிக்கக் கூடாது என்ற ஆஷேபம் எழ அவற்றுக்கு பதிலாக இந்த நான்கும் உள்ளன
1-ஸித்தமான வஸ்துவைப் பற்றி வ்யுத்பத்தி ஏற்பட முடியாது
2-ப்ரஹ்மத்தை லக்ஷணம் கொண்டு அறிய இயலாது
3-அனுமானத்தால் அறியப்படும் ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் சொல்வது வீண் —
4-ப்ரஹ்ம ஞானத்தால் பிரயோஜனம் பலன் இல்லை

அறிய முடியாது -ஆஷேபம் முதல் இரண்டாலும் நிவர்த்தகம்
அறிந்தால் பிரயோஜனம் இல்லை ஆஷேபம் அடுத்த இரண்டாலும் நிவர்த்தகம்

இந்த நான்கு காரணங்களால் உபநிஷத்துக்கள் ப்ரஹ்ம ஞானம் போதிக்கும் என்று ஏற்க முடியாது என்று ஆஷேபம்
இதனால் இந்த வேதாந்த விசாரம் ஸ்தம்பித்துப் போகிறது
இதுக்கு பதில் உரைத்து வேதாந்த விசார ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இந்த சதுஸ் ஸூத்ரீ ஸ்தாபிக்கின்றது –

ஜிஜ்ஜாஸ அதி கரணம்
அதேதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

பூர்வ பக்ஷம்
சொல் தொடரின் பொருளை அறிய சொற்களின் பொருள் தெரிந்து இருக்க வேண்டும் —
சொல்லும் பொருளுக்கும் உள்ள தொடர்பு தான் சக்தி –
ஆகையால் சொல்லின் சக்தியைப் பற்றின ஞானம் கண்டிப்பாகத் தேவை –
அந்த அறிவு வ்ருத்த வ்யவஹாரம் என்ற முறையில் தான் ஏற்படும் –
சக்தி கிரஹணம் அஷ்ட வகை நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் -அதில் ஒரு வகை வ்ருத்த வ்யவஹாரம் –
ஒருவர் ஏவி மற்ற ஒருவர் செய்வதைக் காணும் சிறுவனுக்கு இந்தச் சொல்லுக்கு இது பொருள் என்ற அறிவு ஏற்படுகிறது –
ஆகையால் செய்யப்பட வேண்டிய ஒரு செயலைச் சொல்லும் சொல் தொடரில் இருந்து மட்டும் தான் சக்தி ஞானம் ஏற்படும் –
உபநிஷத்துக்களோ -முன்னமே இருக்கக் கூடிய -ஸித்தமான -ப்ரஹ்மத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றன –
ஆகையால் உபநிஷத்துக்களால் -ஸித்தமான -முன்னமே இருக்கக் கூடிய ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் உண்டாக்க முடியாது

சித்தாந்தம்
வ்ருத்த வ்யவஹாரத்தால் தான் சக்தி ஞானம் என்பது தவறு
ஒருவர் விரலைக் காட்டி அப்பா என்று சொல்வதால் ஒரு குழந்தையும்
இதற்கு காக்கை என்று பெயர் என்ற உபதேசத்தால் ஒரு சிறுவனும் ஒருவர் செய்கை செய்ததையும்
அதை மற்ற ஒருவர் சொற்களால் சொல்வதைக் கேட்டு அனைவரும் சக்தி ஞானத்தைப் பெறுகிறோம்
இந்த இடங்களிலே எங்குமே செய்யப்பட வேண்டிய செயலே இல்லா விட்டாலும் சக்தி ஞானம் ஏற்படுகிறது
ஆகையால் உபநிஷத்துக்களில் இருந்தும் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் ஏற்படலாம் –

ஜந்மாத் யதி கரணம்
ஜந்மாத் யஸ்ய யத

பூர்வ பக்ஷம்
விசேஷணம் என்றால் -ஒரு பொருளின் பகுதியாய் இருந்து -அதை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தும் ஓன்று
உப லக்ஷணம் என்றால் ஒரு பொருளைக் காட்டிலும் தனியாக இருந்தாலும் அதை மற்றவற்றில் இருந்தும் வேறுபடுத்தும் ஓன்று
உலகைப் படைத்து அழித்துக் காப்பது ப்ரஹ்மம் -என்ற லக்ஷணம் பொருந்தாத படியால் ப்ரஹ்மத்தை அறிய முடியாது –
இந்தத் தன்மைகள் விசேஷணங்கள் என்று கருதினால் மூன்று விசேஷணங்கள் உள்ள படியால்
மூன்று ப்ரஹ்மங்கள் என்று சொல்ல நேரிடும்
உப லக்ஷணம் என்று கொண்டால் அந்தப்பொருளை ப்ரஹ்மம் என்று அறிவதற்கு முன்னால்
எவ்விதமாகவும் அறியமுடியாதே -என்று கேள்வி வரும்

ஸித்தாந்தம்
இவற்றை விசேஷணமாகக் கொள்ளலாம்
வெவ்வேறு காலத்தில் இவற்றை ப்ரஹ்மம் பரமாத்மா செய்கிறபடியால் இவற்றுக்கு இடையே
முரண்பாடே இல்லாத படியால் பல ப்ரஹ்மங்கள் என்று நேரிடாது
இவற்றை உப லக்ஷணமாகவும் சொல்லலாம்
உலகுக்கு உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் முன்னமே அறியப்பட்ட பொருளை
உலகைப் படைத்து அழித்துக் காப்பதால் இதுவே ப்ரஹ்மம் -உலகிலேயே மிகப் பெரிய பொருள் என்று தெரிந்து கொள்கிறோம்

ஆக முன்னால் அறியப்பட்ட வடிவம் ஒன்றும்
உப லக்ஷணம் ஒன்றும்
பின்னால் அறியப்படும் வடிவம் ஒன்றும் கிடைக்கின்றன –
ஆகவே இவை உப லக்ஷணமாகவும் குறை இல்லை –

வீடு என்பதை அறிந்து காக்கை உட்க்கார்ந்து உள்ள என்ற விசேஷணம் கொண்டு அது வராஹ ஸ்வாமி உடைய வீடு என்று அறிகிறோம்
அதே போல் ப்ரஹ்ம லக்ஷணம் கொண்டு -ஜென்மாதி -ஜென்மம் ஸ்திதி ஸம்ஹாரம் -விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் கொள்ளலாம்
உப லக்ஷணம் என்றால் முன்பே அறிந்து இருக்க வேண்டுமே -யார் ஜகத்தை படைத்தாரோ -யார் யார் என்று முன்பே அறிந்த ஒன்றை –
யார் அறிய சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மமே –
மூவகை காரணமாக உள்ளவன் ப்ரஹ்மம் என்று சொல்லுமே –

ஸாஸ்த்ர யோனித் வாத் அதி கரணம்
ஸாஸ்த்ர யோனித் வாத்

பூர்வ பக்ஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்த வத்-என்கிற நியாயத்தாலே -வேறே ஒரு பிரமாணத்தால்
அறியப் படாத பொருளை ஸாஸ்த்ரம் போதித்தால் தான் அதுக்கு பிரயோஜனம் உண்டு –
படைக்கப்படும் எந்தப்பொருளுக்கும் ஒரு படைப்பாளி வேண்டுகிறபடியால் படைக்கப்படும் இவ் உலகத்துக்கும்
ஒரு படைப்பாளி தேவைப்படும் -என்ற அனுமானத்தாலே அறியப்படும் ப்ரஹ்மம்
ஆகையால் சாஸ்திரம் பரமாத்மாவை போதிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நியாய மதஸ்தர் கூறுவார்கள்

சித்தாந்தம்
ப்ரஹ்மம் ஸாஸ்திரத்தாலே மட்டுமே அறியப்படும் தத்வம் தத்வம் ஆகும்
அனுமானத்தால் அறியலாம் என்பது தவறு -நீங்கள் சொல்லும் அனுமானத்தின் படி
இன்று ஒரு மூளையைப் படைக்கும் ப்ரஹ்மமும் நாளை ஒரு பூவைப் படைக்கும் ப்ரஹ்மமும்
நாளை மறு நாள் ஒரு பழத்தைப் படைக்கும் ப்ரஹ்மமும் வெவ்வேறாகக் கூட இருக்கலாம்
அனைத்தையும் படைத்தவர் ஒருவரே என்பதற்கு எந்தப் பிரமாணமும் இல்லை
மேலும் அதிகமான புண்ணியம் உடைய ஒரு ஜீவாத்மாவே உலகைப் படைக்கிறார் என்று சொன்னாலும்
தவறு இல்லை என்றாகி விடும் -சொல்லப்பட்ட அனுமானத்திலும் பற்பல தோஷங்கள் உள்ளன
ஆகையால் ஸாஸ்திரத்தாலேயே மட்டுமே உலகைப் படைத்து அழித்துக் காக்கும் பரமாத்மாவை உள்ளபடி
அறிய வேண்டும் என்பதால் உபநிஷத்துக்களுக்கு பிரயோஜனம் உள்ளது –

ஸமன்வய அதி கரணம்
தத் து சமன்வயாத்

பூர்வ பக்ஷம்
உபநிஷத்துக்களால் ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு ஏற்பட்டாலும் -அதனால் நமக்கு
ஒரு முயற்சி -ப்ரவ்ருத்தி -அல்லது -ஒரு விலக்கு-ஒரு நிவ்ருத்தி -ஏற்படாத படியால்
ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு பயன் அற்றது ஆகையால் ஸாஸ்த்ரத்தைத் தொடங்கக் கூடாது –

ஸித்தாந்தம்
ப்ரஹ்மம் மிக உயர்ந்த புருஷார்த்தமாக உப நிஷத்துக்களால் சொல்லப் படுகிற படியால்
வேதாந்தத்தால் ஏற்படும் அறிவுக்கு பயன் உண்டு –
எந்த ஸாஸ்த்ரத்தால் முயற்சி -ப்ரவ்ருத்தி -விலக்கு -நிவ்ருத்தி -ஏற்படுகிறதோ அது மட்டுமே
பிரயோஜனம் உடையது என்று சொல்வது தவறு –
உன் வீட்டின் கீழ் புதையல் உள்ளது -என்ற சொல் தொடரைக் கேட்டவுடன் ஒரு ஆனந்தம் ஏற்படுவதாலேயே
அந்த சொல் தொடர் பயன் உடையதாக ஆவது போல் காட்டில் தொலைந்து போய் வேடுவனாக வளர்ந்த ராஜ குமாரன்
உயர்ந்தவரான சக்கரவர்த்தி தான் தன தந்தை என்று அறிந்ததால் மட்டுமே ஆனந்தம் அடைவதால் மட்டுமே
அதை அறிவிக்கும் சொல் தொடர் பயன் உடையதாகுவது போலேவும்
சொல்ல ஒண்ணாத பெருமைகளை உடைய பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார் என்று போதிக்கும்
சொல் தொடரும் -ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் மட்டுமே கூட பிரயோஜனம் உடையது தான் –

சாரீரிக சாஸ்திரம் -ஸமஸ்தமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்ம விசாரம் தொடங்குவோம்

——————

பாடம் -6–வேதாந்தத்தில் பிரமாணங்கள்
யதா வஸ்தித வ்யவஹார அநு குணம் ஞானம் ப்ரமா-
ஒரு பொருளைத் தகுந்தபடி வியவஹாரம் செய்யக் காரணமான ஞானம் ப்ரமா ஆகும்
வியவஹாரம் -என்பது சப்த பிரயோகம் -அதைப் பற்றிச் சொல்லுதல் -மற்றும் அதை எடுத்தல் வைத்தல் முதலான செயல்களும்
தகுந்தபடி வியவஹாரம் செய்ய-என்று சொன்னபடியால் சம்சயம் விபரீத ஞானம் அந்யதா ஞானம் ஆகியவை ப்ரமா ஆக மாட்டா
சம்சயம் -சந்தேகம் -கயிறா பாம்பா என்பது போல் –
விபரீத ஞானம் -ஒன்றை மற்ற ஒன்றாக நினைப்பது -கயிற்றைப் பார்த்து இது பாம்பு என்று நினைத்தல்
அந்யதா ஞானம் -ஒரு பொருளின் தன்மையைத் தவறாக நினைத்தல்-
பித்தம் அதிகமாக உள்ளவன் வெண்மையான சங்கைப் பார்த்து இது மஞ்சளான சங்கு என்று நினைத்தல் –
அப்படிப்பட்ட ப்ரமாவுக்கு காரணமான -உண்டாக்கும் கருவியாக -இருப்பதற்கு பிரமாணம் என்று பெயர்
விசிஷ்டாத்வைத -வேதாந்த -தரிசனத்தின் படி பிரமாணங்கள் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் – சப்தம் என்று மூன்றும் –
(மீமாம்ஸாவில் பாட்ட மதம் போல் அத்வைதிகள் ஆறு பிரமாணங்கள் -உபமானம் அர்த்தா பத்தி மற்றும் )

ப்ரத்யக்ஷம் –
சாஷாத்காரி ஞானம் ப்ரத்யக்ஷம்
சாஷாத்காரி என்றால் விசதமாக -தெளிவாக ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தல் –
நாம் கண் மூக்கு போன்ற புலன்களால் பொருள்களை அறிகிறோமே -அதுவே ப்ரத்யக்ஷம் ஆகும்
விசத அபவாசம் -நெருப்பு சுடும் படித்து அறிவது போல் இல்லாமல் தொட்டுத் தெரிந்து கொள்வதே ப்ரத்யக்ஷம்
சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் -அத்வைதி -ப்ரஹ்மம் ஒன்றையே பார்ப்பது -பண்புகள் இல்லாமல் –
விசிஷ்டாத்வைதம் -அப்படி அல்ல பண்புகள் உடனே ப்ரத்யக்ஷம்

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும் -நிர்விகல்பகம் -ச விகல்பகம் –
நிர்விகல்பகம் -ஒரு பொருளையும் -அதில் இருக்கும் பண்புகள் -சாமான்யம் -செயல்கள் முதலானவற்றையும் –
முதன்முறை கிரஹிக்கப்படும் அறிவு –
மாடு -என்ற அறிவு -மாடு என்ற உடலையும் அதில் இருக்கும் மாட்டுத்தன்மை என்ற சாமான்யத்தையும் க்ரஹிக்கிறது
ச விகல்பகம் -ஒரு பொருளையும் அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றையும் -அவை வேறு சில இடங்களில் இருப்பதையும்
கிரஹிக்கும் ஞானம் ச விகல்பகம் ஆகும் –
மாடு என்னும் அறிவு -மாடு -மாட்டுத் தன்மை என்ற இரண்டுக்கும் மேலாக
இந்த மாட்டுத்தன்மை முன் மாட்டிலும் இருந்தது பின் மாட்டிலும் உள்ளது என்ற அநு விருத்தியையும் -தொடர்ச்சியையும்
கிரஹிப்பது ச விகல்பகம் ஆகும் –

(சிகப்பான தடியைப் பிடித்த மனிதர் வருகிறார் -தத் பிரகாரம் -விசேஷணம் உடனே அறிவது –
பிரித்து அறியாமல் மொத்தமாக அறிவது -சம்யுக்தா ஆகார மீமாம்சையில்
குண ஸம்ஸ்தான பதார்த்த கிரஹணம்
நிர்விகல்பகம் -ச விகல்பகம் -பெயர்கள் நியாய மீமாம்ஸா வேதாந்தம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் அர்த்தங்கள் மாறு படும்
இது மாடு -இதுவும் மாடு -அநு வ்ருத்தி
இது அறியும் இடமே ச விகல்பகம்
பிரதம பிண்ட கிரஹணம் நிர் விகல்பகம்
அப்புறம் கிரஹித்து ச விகல்பகம் )

ப்ரத்யக்ஷத்தின் வகைகள்
1-அநர் வாஸீ நம் -2-அர் வாஸீ நம் –
அநர் வாஸீ நம் -உண்டாகாதது -இது நித்ய ஸூரிகளுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ளது
அர் வாஸீ நம் – உண்டாகக் கூடியது
இது இரண்டு வகைப்படும் –
1-இந்த்ரிய சா பேஷம் –2- இந்த்ரிய நிரபேஷம்
இந்த்ரிய சா பேஷம் என்றால் –இந்த்ரியங்களில் தேவையை உடைய ப்ரத்யக்ஷம் -இது நம் போன்றவர்களினுடையது –

ஆறு ஸந்நிகர்ஷம் நியாய மாதத்தில் பார்த்தோம் –
வேதாந்தத்தில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் படுகின்றன -1-ஸம்யோகம் -2-ஸம்யுக்த ஆஸ்ரயணம் –
த்ரவ்யங்களைக் க்ரஹிக்க ஸம்யோகம் என்ற சந்நிகர்ஷமும் –
அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றைக் கிரஹிக்க ஸம்யுக்த ஆஸ்ரயணம் என்ற சந்நிகர்ஷமும் உதவுகின்றன –

இந்த்ரிய நிரபேஷம் என்றால் -இந்திரியங்களின் தேவையே இல்லாமல் ஏற்படும் ப்ரத்யக்ஷம் -இது மேலும் இரண்டு வகைப்படும்
1-ஸ்வயம் ஸித்தம் -2-திவ்யம் –
ஸ்வயம் ஸித்தம் என்றால் -தன் முயற்சியால் அடையப்பட்டது —
யோகிகள் தங்கள் யோக வலிமையால் எங்கும் உள்ள பொருள்களைக் காண்பது இந்த ப்ரத்யக்ஷத்தால் தான் –
திவ்யம் என்றால் தேவனான பரமாத்மாவால் கொடுக்கப் பட்டது
அர்ஜுனன் விஸ்வரூபம் காண்பதற்கு கண்ணனால் கொடுக்கப்பட்ட அது –

ப்ரத்யக்ஷத்தில் சேர்ந்தவை
ஸ்ம்ருதி -என்றால் நினைவு -முன்னால் ஏற்பட்ட அனுபவத்தால் -பதிவுகள் நம்மிடம் இருக்கும் –
அவை எப்பொழுது தூண்டப் படுகின்றனவோ அப்பொழுது அந்த விஷயம் நினைவுக்கு வருகிறது –
அந்தத் தூண்டுதலுக்குக் காரணம் –
1-அந்த விஷயத்துக்கு ஒப்பான மற்றறொரு பொருளைக் காணுதல்
2-அத்ருஷ்டம்
3-சங்கிலித் தொடரான நினைவு
4-அதை விட்டுப் பிரியாத ஒரு பொருளின் நினைவு -ஆகியவை –
ஆகையால் ஸ்ம்ருதி என்பதைத் தனி பிரமாணமாக எண்ணாமல்
அதற்குக் காரணமாக ப்ரத்யக்ஷத்திலேயே சேர்த்து விடலாம்

(உத்போதம் -தூண்டப்பட்ட சம்ஸ்காரம் -யானைப்பாகன் -யானை -அதன் மணி போல் சங்கிலித் தொடர் –
வயசு ஆக சம்ஸ்காரம் மறைந்து நினைவு வராமல்
ஸத்ருச அத்ருஷ்ட சிந்தை -ஆதி -சேர்ந்தே இருக்கும் தன்மைகள்-நெருப்பு புகை போல் விட்டுப்பிரியாமல் )

ப்ரத்யவிஞ்ஞா -என்பது -அந்த தேவதத்தன் தான் இவன் -என்பது போல் முன்பு அறியப் பட்ட பொருளாக
தற்போது கண் முன் இருக்கும் பொருளை அறிதல் –
இதுவும் ப்ரத்யக்ஷத்தில் தான் அடங்கும் –

அபாவங்களைப் பற்றின அறிவும் ப்ரத்யக்ஷம் தான் –
அபாவம் என்று தனியாக ஓன்று கிடையாது –
ஒரு பொருளின் அபாவம்- இன்மை என்பது – மற்ற ஒரு பொருளின் இருப்பு தான் –
தங்க வளையலின் அழிவு என்பது தங்கக் காசின் உத்பத்தி தான் –
தங்கக் காசின் அழிவு என்பது தான் தங்க மோதிரத்தின் உத்பத்தி —
ஆகையால் அபாவங்களை க்ரஹிப்பதும் புலன்களால் தான் என்பதால்
அதுவும் ப்ரத்யக்ஷம் தானே –

——————–

பாடம் -7-அனுமான பிரமாணம்

அர்த்த பஞ்சகம் சொல்லவே வேதங்களும் இதிஹாச புராணங்களும் -ஸப்த பிரமாணம்
இத்தை சரியாக அறிந்து கொள்ளவே ப்ரத்யக்ஷம் அனுமானம் -தர்க்கமும் அறிய வேண்டும் –

ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு வியாப்யமானது -அதாவது -தவறாமல் -அப்பொருளோடே சேர்ந்தே இருக்கக் கூடியது -என்பதை ஆலோசிப்பதால்
இப்பொருளைப் பார்த்ததும் அப்பொருளைப் பற்றிய ஞானம் அநு மிதி ஆகும்
அதுக்குக் கருவியாக இருக்கும் ஞானம் -அதாவது இப்பொருள் அப்பொருளுக்கு வியாப்யமானது என்ற ஞானம் அநு மானம் –

எடுத்துக்காட்டு –
ஓர் இடத்தில் புகை இருந்தால் அங்கு தவறாமல் நெருப்பு இருக்கும் என்பதை நாம் காண்கிறோம் –
இதற்கு வியாப்தி என்று பெயர் -நியத ஸாஹ சர்யம்
ஆகையால் ஒரு மலையின் மேல் நாம் புகையைக் கண்டால் அங்கு கண்டிப்பாக நெருப்பு உள்ளது என்று அறிகிறோம் அதுவே அனுமானம் –

வியாப்யம் என்றால் -அதிகமான இடங்களில் இல்லாதது என்று பொருள் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருந்தால் -அது நெருப்பைக் காட்டிலும் அதிகமான இடங்களில் உள்ளது என்று சொல்லலாம் –
ஆனால் புகை அப்படி இருக்காது –ஆகையால் நெருப்பை விட அதிகமான இடங்களில் இல்லாதது புகை -அநதிக தேச கால வ்ருத்தித்வம்
அதாவது நெருப்புக்கு வியாப்யமானது புகை என்று சொல்கிறோம் –

வியாபகம் என்றால் குறைவான இடங்களில் இல்லாதது என்று பொருள் -புகை இருக்கும் சில இடங்களிலே
நெருப்பு இல்லாமல் போனால் புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி பொய்த்துப் போகும் —
அதனால் வியாபகமான நெருப்பானது வியாப்யமான புகை இருக்கும் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் –
அதை விடக் குறைவான இடங்களில் இருக்கக் கூடாது –
வியாப்தி என்பது பூயோ தர்சனத்தால் அறியப் படுகிறது -அதாவது
பல இடங்களில் பல முறை புகையையும் நெருப்பையும் சேர்ந்தே காண்பதால் ஏற்படுகிறது –

ஹேதுவின் வகைகள்
மலையில் நெருப்பு உள்ளது புகை உள்ளபடியால் -என்ற அனுமானத்தின்
மலை பக்ஷம் –
நெருப்பு சாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது
புகை ஹேது -சாதித்துக் கொடுப்பது –

ஹேதுவுக்கும் சாத்யத்துக்கும் உள்ள வியாப்தி இரண்டு வகை –
1- கேவல அந்வய வியாப்தி
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது என்று இரண்டின் இருப்பை வைத்துச் சொல்வது
2-கேவல வியதிரேக வியாப்தி
வியதிரேகம் -அபாவம் -இன்மை -எங்கு எங்கு சாத்யம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இல்லை
அந்வய வ்யதிரேக வியாப்தி —
சில இடங்களில் இரண்டு வகையான வியாப்திகளையும் சொல்ல முடியும்
புகை என்ற ஹேது இருக்கும் இடத்தில் நெருப்பு இருக்கும் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது – என்ற இரண்டு வியாப்தியையும் காணலாம்
சில இடங்களில் அந்வய வியாப்தி மட்டுமே சொல்லலாம் படி இருக்கும் –
வியதிரேக வியாப்தியை அறியவோ சொல்லவோ முடியாமல் இருக்கும் –
அப்படிப்பட்ட வியாப்தி கேவல அந்வய வியாப்தி –
இந்தக் குடம் சொல்லால் குறிக்கப் படுவது -த்ரவ்யமான படியால் –
எது எது த்ரவ்யமோ அது அது சொல்லால் குறிக்கப் படும் என்ற அந்வய வியாப்தியை அறியலாம் ஒழிய
எது சொல்லால் குறிக்கப் படுவது இல்லையோ அது த்ரவ்யம் அல்ல என்ற வியதிரேக வியாப்தியை அறிய முடியாது
ஏன் என்றால் சொல்லால் குறிக்கப் படாத பொருள் என்ற ஓன்று உலகில் இல்லையே

நியாய மாதத்தில் ஏற்கப்பட்ட 3-கேவல வியதி ரேகி என்ற மூன்றாம் வகை ஹேது வேதாந்தத்தில் ஏற்கப்படுவது இல்லை –

அவயவங்களும் ஹேது ஆபாசங்களும்
தான் அனுமானத்தால் அறிந்த விஷயத்தை மற்றவரும் அறிய வேண்டும் என்றால் அதற்காக சில சொல் தொடர்களை சொல்ல வேண்டும் –
1-ப்ரதிஜ்ஜா -மலையில் நெருப்பு உள்ளது
2- ஹேது -புகை இருக்கிற படியால் –
உதாஹரணம் -எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு எல்லாம் நெருப்பு இருக்கும் -அடிப்படியில் போல்
4-உப நயம் -அப்படி நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை
5-நிகமனம் -ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை –

நியாய மதத்தில் இந்த இந்த ஐந்து சொல் தொடர்களும் வேண்டும்
மீமாம்ஸா மதத்தில் முதல் மூன்றோ இறுதி மூன்றோ போதும்
வேதாந்தத்தில் இத்தனையும் சொல்ல வேண்டும் என்கிற நியமம் இல்லை –
உதாஹரணம் உப நயம் என்ற இரண்டும் வேண்டும் –
அவை தான் நெருப்புக்கு வியாப்யமானது புகை என்றும் -புகை மலையில் உள்ளது என்றும் சொல்லும்
மற்றவை கேட்பவர்க்குத் தேவைப்பட்டால் சொல்லலாம் –

ஹேது ஆபாசங்கள் முன்பு நியாய சாஸ்திரத்தில் பார்த்தவையே வேதாந்தத்தில் கொள்ளப்படுகின்றன –

உபமானமும் அர்த்தா பத்தியும்
மீமாம்ஸா போல்வேரே சில தர்சனங்களிலும் இவை இரண்டையும் தனி ப்ரமாணங்களாகக் கொள்வர்
வேதாந்தத்தில் இவை அனுமானத்திலேயே அடங்கும் –

உபமானம்
மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட பின்பு –
நேரடியாக மாட்டைப் போல் இருக்கும் விலங்கைப் பார்க்கும் பொழுது
இதுவே கவ்யம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது என்ற அறிவு ஏற்படும் -அது தான் உபமிதி
அதற்கு காரணமான -இந்த விலங்கு மாட்டைப் போல் உள்ளது -என்ற ஸத்ருச ஞானம் தான் உபமானம்-என்பது நியாய மதம் –
இது ஒரு தனி பிரமாணம் அல்ல -சொல் தொடர் சப்த பிரமாணம் -நேரே காணுதல் ப்ரத்யக்ஷம் –
அவற்றின் சேர்க்கையே இந்த அறிவு -தனியான பிரமாணம் அல்ல என்பதே வேதாந்தக் கொள்கை –

அர்த்தா பத்தி
ஒவ்வாத ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக ஏற்படும் ஞானம் அர்த்தா பத்தி
குண்டாக இருக்கும் தேவதத்தன் பகலில் உண்பது இல்லை -என்பதைப் பொருந்த வைக்க –
தேவதத்தன் இரவில் உண்கிறான் -என்று கற்ப்பிப்பதே அர்த்தா பத்தி யாகும் –
இது தனியான பிரமாணம் என்பர் சிலர் -வேதாந்தத்தில் இது தனியான பிரமாணம் அல்ல -அனுமானத்திலேயே அடங்கும் –

ஸப்த பிரமாணம்
ஆப்தரால் சொல்லப்பட்ட சொல் தொடர் தான் ஸப்த பிரமாணம் -என்பர் நியாய மதத்தர்
ஆப்தர் -பொருளை உள்ளபடி அறிந்து அப்படியே உறைபவர்
வேதம் என்ற ஸப்த பிரமாணம் ஸர்வேஸ்வரனால் சொல்லப்பட்டது தான் என்று
அவர்கள் ஏற்கிற படியால் இந்த வேதத்துக்கும் பொருந்துகிறது –

ஆனால் வேதாந்த தரிசனத்தில்
வேதம் சர்வேஸ்வரனால் சொல்லப் பட்டதாகக் கொள்ள வில்லை –
வேதம் நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது –
ஆகவே ஆப்தனால் சொல்லப்பட்டது ஸப்த பிரமாணம் என்னும் லக்ஷணம் வேதத்துக்குப் பொருந்தாது –
ஒவ்வொரு சொல்லும் ஒலியும் அழியக் கூடியதாக இருந்தாலும் வேதம் நித்யமே –
ஏன் என்றால் வேதத்தில் இருக்கும் எழுத்துக்கள் சொற்கள் ஒலிகள் உச்சரிக்கப்படும் வரிசை மாறாமல் என்றும் ஒரே மாதிரியாகவே உள்ளது –
இதற்கு ஆனு பூர்வீ என்று பெயர்

ஆகவே என்றும் மாறாத நித்யமான ஆனு பூர்வீ வேதத்துக்கும்கு இருப்பதால் வேதமும் நித்யமாகவே சொல்லப் படுகிறது
ஆகவே வேதாந்த தரிசனத்தில் வேதத்துக்கும் பொருந்தும் படி ஸப்த லக்ஷணம் –
அநாப்தரால் சொல்லப்படாத சொல் தொடர் ஸப்த பிரமாணம் –
வேதம் யாராலும் சொல்லப்படாததாலும் அநாப்தரால் சொல்லப்படாததே ஆகும் –

வேதத்தைத் தழுவின நூல்கள்
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆறும் வேத அங்கங்கள்
புராணங்கள் ஸ்ம்ருதிகள் இதிகாசங்கள் நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ரங்கள்
ஆயுர் வேதம் தநுர் வேதம் காந்தர்வ வேதம் பரத -நாட்டிய சாஸ்திரம் அர்த்த -பொருளைப் பற்றிய சாஸ்திரம்
இவை அனைத்தும் வேதத்தைத் தழுவிய நூல்களே

இவற்றில் வேதத்துக்கு முரனாகச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவை பிரமாணங்கள் ஆகும்
அவற்றை இயற்றிய ரிஷிகளின் குறையால் இப்படி சில முரண்பாடுகள் இவற்றில் இருக்கலாம்
பாஞ்ச ராத்ரம் வைகானஸம் முதலிய ஆகம நூல்கள் முழுவதுமே பிரமாணங்கள் -இவற்றில் வேத வ்ருத்தமாக எதுவும் இல்லை –
மேல் சொன்னவற்றை விட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் உயர்ந்த பிரமாணங்கள் ஆகும் –
மிகத் தெளிவாக அர்த்தங்களை போதிக்கும் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் மிகச்
சிறந்த ப்ரமாணங்களாகக் கருதப்படுகின்றன –

——-

பாடம் -8- ப்ரமேயங்கள்

மா என்றால் அறிவு -மேயம் -என்றால் அறியப் படும் பொருள்
ப்ரமா-என்றால் சிறந்த அறிவு -உண்மையான அறிவு –
ப்ரமேயம் என்றால் சரியான அறிவால் அறியப்படும் பொருள் -உண்மையான பொருள் –

வேதாந்த தரிசனத்தில் இரண்டு ப்ரமேயங்களையே ஒத்துக் கொள்ளப்படுகின்றன –
த்ரவ்யம் -என்றும் அத்ரவ்யம் என்றும்
நியாய மாதத்தில் த்ரவ்யம் குணம் கர்மம் ஸாமாந்யம் விசேஷம் ஸமவாயம் அபாவம் என்ற ஏழும் ஒப்புக் கொள்ளப் பட்டன
அவற்றுள் த்ரவ்யங்களும் குணங்களும் வேதாந்தத்தில் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் ஏற்கப் பட்டவை
மற்றவை ஏற்கப் படாதவை
குணங்களிலும் -24 -நியாய மாதத்தில் உண்டு -அவை அனைத்தும் வேதாந்தத்தில் ஒத்துக் கொள்ளப் பட வில்லை –

கர்மம் தேவையில்லை
நியாய மதத்தில் கர்மம் என்று ஒரு பதார்த்தம் உண்டு -கர்மம் -என்றால் செயல்
ஆனால் நம் கண்ணுக்குக் கர்மம் என்ற ஓன்று தெரியவதே இல்லை -ஒரு பொருள் நகரும் பொழுது
ஓர் இடத்தை விட்டு மற்ற ஓர் இடத்தோடே தொடர்பு ஏற்படுகிறது என்பதையே கண்ணால் பார்க்கிறோம்
ஸம்யோகம் என்ற குணத்தைத் தவிர கர்மம் -செயல் என்ற பொருளை ஏற்கத் தேவையில்லை –
மேலே செல்லுதல் -கீழே செல்லுதல் -அருகில் வருதல் -தொடர்பு வைத்து ஐந்தாக சொல்லுவதால் –
ஸம்யோகம் ஒன்றையே கொள்ளலாமே

சாமான்யம் தேவை யில்லை
பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படும் இடங்களில் அவற்றுள் உள்ள பொதுத் தன்மை –
சாமான்யம் என்று நியாய மாதத்தில் பார்த்தோம் -அநு கத ப்ரதீதி நியாமகம் தானே சாமான்யம் –
ஆனால் நம் கண்ணுக்கு சாமான்யம் என்ற ஒரு பொருள் புலப்படுவது இல்லை –
ஒரு பொருளின் சமஸ்தானம் ஆக்ருதி மட்டும் தான் கண்ணுக்குப் புலப்படும் –
ஆகையால் வேதாந்த தர்சனத்தின் படி சமஸ்தானம் என்பது தான் ஒரு பொருளின் ஜாதி சாமான்யம் ஆகும் –தனியான ஒரு பொருள் அல்ல –
மாட்டினுடைய மாட்டுத் தன்மை என்பது கொம்பு குளம்பு வால் சாஸ்னா முதலியவற்றைக் கொண்டிருத்தல் தான்
மாடு குதிரை மேஜை போன்ற அவயவங்களுடைய பொருள்களாக இருந்தால் அவற்றின் அவயவங்கள் அமைப்பே ஸம்ஸ்தானம்
ஆத்மா ஆகாசம் போன்ற அவயவங்கள் அற்ற பொருள்களாக இருந்தால் அதன் தனித் தன்மையை தான் அதன் சமஸ்தானம் ஆகும்-
சாஸ்னாதிமத்வம் -அவயவ த்ரவ்யங்களின் கூட்டமே போதுமே -வஸ்து ஸம்ஸ்தானம் -வியக்தி மட்டுமே –

விசேஷம் தேவை யில்லை –
நித்தியமான த்ரவ்யங்களான பரம அணுக்கள் முதலானவற்றை வேறு படுத்திக் காட்ட
வேறே எந்த தன்மையும் இல்லாத படியால் விசேஷம் என்ற ஓன்று ஏற்கப்பட்டது நியாய மாதத்தில்
வேதாந்தத்தில் பரமாத்மா -விபு ஜீவாத்மா அணு -ப்ரக்ருதி முக் குண மாயம் -என்று
வேறு படுத்திக் காட்டுவதால் விசேஷம் தேவை இல்லை –

ஸமவாயம் தேவை யில்லை
பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கும் பொருள்களுக்கு இடையில் இருக்கும் சம்பந்தம் சமவாயம் என்று நியாய மதத்தில் பார்த்தோம்
இத்தை வேதாந்தத்தில் ஏற்கவில்லை
ஒரு குடத்துக்கும் நிறத்துக்கும் உள்ள தொடர்பு -சமவாயம் என்றால்
அந்த சமவாயத்துக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு எது என்று கேள்வி எழும்
அது மற்ற ஒரு சமவாயம் என்று சொன்னால் அதன் விஷயத்தில் மறுபடியும் இதே ஒரு கேள்வி வரும் —
இப்படி முடிவு இல்லாமல் சமவாயங்களைக் கல்பிக்க வேண்டும் –
அந்த தொடர்பு வேறே ஒரு சமவாயம் அல்ல -இயற்கையாகவே வேறே ஒரு தொடர்பு தேவை இல்லாமல்
அவை தொடர்பு பட்டுள்ளன என்று சொன்னால்
அந்தத் தன்மை நிறத்துக்கும் குடத்துக்கும் இடையிலே ஒப்புக் கொண்டு –
அப்ருதக் சித்த விசேஷணம் -பிரிக்கப் பட முடியாத விசேஷணம் -ஒப்புக் கொண்டு –
சமவாயம் என்ற ஒரு பதார்த்தம் தேவை இல்லை என்பதே வேதாந்த சித்தாந்தம் –

அபாவம் தேவையில்லை –
அபாவம் -பொருளின் இன்மை –
பொருள் உண்டாவதும் முன்னால் இருக்கும் அபாவம் ப்ராக் அபாவம்
அதன் அழிவுக்கு பின்பு அபாவம் த்வம்ஸம்
எக்காலத்திலும் ஓர் இடத்தில் ஒரு பொருள் இருக்காது என்றால் அத்யந்த அபாவம்
ஒரு பொருளுக்கும் மற்ற ஒரு பொருளுக்கும் வேறுபாடு அந்யோன்ய அபாவம்-முன்பு பார்த்தோம்

வேதாந்தத்தில் அபாவம் ஏற்கப்படுவது இல்லை –
குடம் உண்டாவதும் முன்னால் குடத்தின் அபாவம் கன்னுக்குத் தெரியாதே -மண் உருண்டை தானே தெரியும் –
குடம் அழிந்த பின்பும் த்வம்ஸ அபாவம் கண்ணுக்குத் தெரியாதே -துகள்களே தெரியும் –
ஆகவே ஒரு பொருளின் அபாவம் -இன்மையே -மற்ற ஒரு பொருளின் பாவம் இருப்பு – தான் என்பதே வேதாந்த மதம்
குடத்தின் ப்ராக் அபாயம் மண் உருண்டை
குடத்தின் அழிவே கபாலங்கள்
வாயுவில் நிறம் -ரூபம் -இல்லாமை -அத்யந்த அபாவமும் தனியான ஒரு அபாவம் அல்ல –
வாயுவின் இயற்கையான தனித் தன்மையை தான்
மாட்டின் இடம் குதிரையைக் காட்டிலும் வேறுபாடு என்று தனியான அந்யோன்ய அபாவம் கிடையாது –
மாட்டுத் தன்மை தான் மாட்டின் இடம் இருக்கும் – குதிரையைக் காட்டிலும் வேறுபாடு –

அதவா வஸ்து சமஸ்தான ரூப ஜாதியாதி லக்ஷண பேதம் -மூன்றும் ஒன்றே –

———-

பாடம் -9- த்ரவ்யங்கள் –

வேதாந்த தரிசனத்தில் ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் பிரிக்கிறோம்
த்ரவ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்
உபா தாநம் -த்ரவ்யம் -என்பது த்ரவ்யத்தின் லக்ஷணம் -எது ஓன்று உபா தானமாக உள்ளதோ அதுவே த்ரவ்யம் –
உபாதானமாய் இருப்பதே த்ரவ்யத்தின் லக்ஷணம் என்றதாயிற்று –
உபாதாநம் என்பது நியாய மாதத்தில் சமவாயி காரணம் என்று சொல்லப் பட்ட தற்கு நிகரான பொருள்
வேதாந்தத்தில் சமவாயம் என்ற ஒரு பதார்த்தத்தை ஏற்காத படியால் அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
பிற்காலத்தில் வேறே ஒரு அவஸ்தையை அடையப்போகும் வஸ்து முன் அவஸ்தையோடு கூடி இருக்கும் பொழுது
அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
அவஸ்தை என்றால் நிலை என்று பொருள் -ஆகந்துகமான அப்ருதக் ஸித்தமான தர்மமே அவஸ்தை என்று சொல்லப் படுகிறது –
ஆகந்துகம் என்றால் நித்தியமாக இல்லாமல் குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் ஒரு தன்மை
அப்ருதக் ஸித்தமான தர்மம் என்றால் தான் இருக்கும் பொழுது தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து பிரிக்க முடியாத தன்மை –
எடுத்துக் காட்டு
மண் உருண்டையில் இருந்து உருண்டை என்னும் தன்மை-என்பதைப் பிரிக்க முடியாதே –
அத்தன்மை நித்தியமாக இல்லாமல் -தொடக்கமும் முடிவும் உடையதாகவும் உள்ளது –
எனவே உருண்டைத் தன்மை என்பது மண்ணின் ஒரு நிலை -அதே போல் குடமாய் இருத்தல் என்பதும் மண்ணின் மற்ற ஒரு நிலை –
மாலையில் குடமாக மாறப் போகும் மண் காலையில் உருண்டை என்ற நிலையோடு -அவஸ்தையோடு -கூடி இருக்கிறது –
எனவே மண் தான் குடத்துக்கு உபா தானம் என்று சொல்லப் படுகிறது –

ஸத் கார்ய வாதம்
த்ரவ்யங்களுக்குச் சொல்லப்பட்ட இந்த லக்ஷணம் -வேதாந்தத்தில் மிக முக்கியமான ஸத் கார்ய வாதம் என்பதையே அடி ஒற்றியது –
நியாய மதத்தில் அஸத்ய கார்ய வாதம் -ஓன்று உண்டு –அஸத் -அபாவம் -கார்யம் என்றால் உண்டாகும் பொருள்
ஒரு பொருள் ஒரு அபாவத்தில் இருந்து தான் உண்டாகிறது என்பது அவர்கள் சித்தாந்தம் –
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் அதனுடைய அபாவம் -ப்ராக பாவம் -தான் இருந்தது –
உண்டாக்கக் கூடிய பொருள் அதன் அவயவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறு பட்டது –
ஏன் என்றால் அறிவு சொல் அளவு எண்ணிக்கை சக்தி வடிவம் முதலான அனைத்துமே காரியத்துக்கும் காரணத்துக்கும் வேறாக உள்ளன –
ஆனால் வேதாந்தத்தில் இந்த அஸத் கார்ய வாதம் ஏற்கப் படுவது இல்லை –
நூல்கள் சேர்ந்து ஒரு துணி உண்டாகும் பொழுது நூல் என்பது வேறே ஒரு த்ரவ்யம் –
துணி என்பது முற்றிலும் யதிதான வேறே ஒரு த்ரவ்யம் என்று நியாய மதத்தில் சொல்வது சரியில்லை என்பதே வேதாந்த கொள்கை –
ஸத் என்றால் இருக்கும் பொருள் -எனவே இருக்கக் கூடிய ஒரு பொருள் தான் கார்யமாக மாறுகிறது –
அபாவத்தில் இருந்து கார்யம் தோன்றவில்லை -என்பதே ஸத் கார்ய வாதம் -ஆகும் –
காலையில் உருண்டையாய் இருந்த மண் தான் இப்பொழுது குடமாக மாறி உள்ளது என்று நமக்கு அறிவு ஏற்படுவதைக் காண்கிறோம் –
இதற்குப் ப்ரத்யபிஞ்ஞா என்று பெயர் –
இந்த அறிவைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம் -மண் என்பதும் குடம் என்பதும் ஒரே த்ரவ்யம் தான் என்று –
பிறகு அளவு எண்ணிக்கை அறிவு சொல் முதலானவை ஏன் மாறுகின்றன என்றால் –
அந்த த்ரவ்யத்தின் அவஸ்தை நிலை -மாறி விட்ட படியால் மாறுகின்றன –

உபநிஷத்தில் ஸத் கார்ய வாதம்
சாந்தோக்யம் ஆறாவது ப்ரபாடகம் -ஸத் வித்யா ப்ரகரணம்
வாசா ஆரம்பணம் விகார நாம தேயம் ம்ருத்திகா இத்யேவ சத்யம்
விகாரம் -உரு மாற்றங்கள்
நாம தேயம் -பெயர்கள்
ஆரம்பணம் -அடையப்படுகின்றன
ஒரே மண் என்ற த்ரவ்யத்தால் வெவ்வேறு உருவங்களும் வெவ்வேறு பெயர்களும் அடையப் படுகின்றன என்று சொல்லும்
இதன் பிரயோஜனம் என்ன என்றால்
வாசா -வாக் முதலான வியவஹாரங்களுக்காக
வாயால் ஒரு பொருளைப் பற்றிச் சொல்வது -அதைக் கையால் எடுப்பது முதலானவை தான் வியவஹாரங்கள் –
வெவ்வேறு வியவஹாரங்கள் ஏற்படுத்துவதற்குத் தான் ஒரே மண் த்ரவ்யம்
வெவ்வேறு உருவங்களையும் பெயர்களையும் அடைகிறது என்று அழகாக ஸத் கார்ய வாதத்தைச் சொல்கிறது –
மேலும்
ம்ருத்திகா இத்யேவ சத்யம்
எந்த நிலையை அடைந்தாலும் அது மண் தான் என்பதே உண்மையாகும் -ப்ரமாணங்களால் அறியப் படுவதாகும் –
வேறே ஒரு த்ரவ்யம் உண்டாகிறது என்று சொல்ல இயலாது –

மேலும் ஸ்பஷ்டமாக அஸத் கார்ய வாதத்தைத் தவறு என்றும் கூறுகிறது –
சிலர் கூறுகிறார்கள் -ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் -அசத்தாக -அபாவமாக -இருந்தது –
அதில் இருந்து தான் ஸத் என்கிற உத்பத்தி ஏற்படுகிறது -என்று
எந்தப் ப்ரமாணத்தைக் கொண்டும் அவ்வாறு சொல்ல இயலாது
எப்படி அபாயத்தில் இருந்து உண்டாக்கும் ஏற்பட முடியும் என்று -பொருள் –

———

பாடம் -10-த்ரவ்யங்களின் வகைகள்
ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்
அவஸ்தை என்கிற நிலைகளுக்கு இருப்பிடமானவை த்ரவ்யங்கள்
ஸப்தம் ஸ்பர்சம் முதலான தன்மைகள் மட்டும் போதுமே -அவற்றை உடைய த்ரவ்யம் என்ற பொருள்
ஏன் ஏற்கப் பட வேண்டும் யென்று சிலர் சொல்வது சரி இல்லை –
ரூபத்தை மட்டும் க்ரஹிப்பதாக கண்ணும் ஸ்பர்சத்தை மட்டும் க்ரஹிப்பதாக தோலும் இருக்கும் பொழுது
நேற்றுப் பார்த்தத்தையே இன்று தொடுகிறேன் என்று ஏற்படும் ப்ரத்யவிஜ்ஜை யானது அவை இரண்டுக்கும்
பொதுவான இருப்பிடமாக ஒரு த்ரவ்யம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறது –

அதே போல் த்ரவ்யம் மட்டுமே போதுமே அதற்குத் தன்மைகள் எதற்கு என்று கூறுவதுவும் சரியில்லை
ஒரே த்ரவ்யத்தில் ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு மாதிரி நாம் அறிவதால் த்ரவ்யம் அறியப் பட்ட போதும்
அதில் இருக்கும் தன்மைகள் நம்மால் அறியப்பட வில்லை என்றே சொல்ல வேண்டும்
எனவே த்ரவ்யத்தில் ரூபம் ரஸம் முதலான தன்மைகள் உள்ளன என்று அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டும் –

புத்த மதத்திலே த்ரவ்யங்கள் அனைத்தும் க்ஷணிகங்கள் —
அதாவது ஒரே வினாடியில் அழியக் கூடியவை என்று சொல்லப் படுகிறது -அதுவும் தவறானது
காலை பார்த்த கூடத்தை இப்பொழுது தொடுகிறேன் என்பது போன்ற ப்ரத்யபிஜ்ஜை
அனைவருக்கும் ஏற்படுகிறபடியால் நீண்ட காலத்துக்கு ஒரே த்ரவ்யம் இருக்கிறது என்றதாயிற்று
இந்த அறிவு அனைவருக்கும் தவறாக ஏற்படுகிறது என்னவும் ஒண்ணாது

த்ரவ்யங்களின் வகைகள்
ஆறாக பிரிக்கலாம் -ப்ரக்ருதி -காலம் -பரமபதம் -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களுக்கு ஏற்படும் ஞானம் –
இவற்றை பலவகைகளாகப் பிரிக்கலாம்

ஜடம் -அஜடம் -பாகுபாடு
ஜடம் -ஸ்வயம் ப்ரகாஸம் அல்லாதவை
ப்ரக்ருதி காலம் இவை இரண்டும் என்றுமே தானாகப் பிரகாசிக்காதவை
இவற்றை அறிய வெளிச்சம் புலன்கள் போன்ற வேறு பொருள்களின் உதவி தேவை –
அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவை –
நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களின் ஞானம் என்ற நான்கும்
வேறே ஒரு பொருளின் உதவி தேவைப்படாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடியவை

ப்ரத்யக் பராக் என்கிற வேறுபாடு
ப்ரத்யக்-ஜீவாத்மா பரமாத்மா -இருவரும் தாங்களே பிரகாசிக்கிற படியால் ப்ரத்யக் என்று அழைக்கப் படுகின்றன
பராக் -மற்ற நான்கும் -மற்றவர்களுக்குத் தான் தோற்றம் அளிக்கக் கூடியவை -தான் தன்னை அறியாது -இவை பராக்

சித் -அசித் -பாகுபாடு
சித் -அறிவுடையவர்களான ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
அவன் பரம சேதனன் -ஆகவே தத்வ த்ரயம்
அசித் -அறிவற்றவையான மற்ற நான்கு பொருட்களும் –

——–

பாடம் -11- பிரகிருதி

ஆறு வகையான த்ரவ்யங்களில் ஓன்று பிரகிருதி
அஜாம் -ஏகாம் – லோஹிதம் சுக்லம் க்ருஷ்ணாம் – வஸ்தூம் ப்ரஜாம் ஜநயந்தி சரூபா -ப்ரக்ருதி
ஸ்ருஷ்டிக்கு மூலப் பொருள்
ஸத் கார்ய வாதம் -நித்யம் -அழிவதோ உண்டாவதோ கிடையாது -அவஸ்தா மாற்றமே
ஸ்ருஷ்டியில் பிரக்ருதியே உலகமாக மாறி -பிரளயத்தின் பொது இயல்பு நிலைக்கு மாறும் –
எனவே பிரக்ருதியை அஜா -பிறவாதது என்றும் சொல்வர்
இது முக்குண மயம் -ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ
இதுவே அனைத்து உலகப் பொருள்களாக மாறுவதால் அவை ப்ராக்ருதங்கள் என்று அழைக்கப்படும்
அவை அனைத்துமே முக்குணங்கள் உடையவையே
இதுவே பேர் ஆனந்தம் என்று பிரமித்து நித்ய சம்சாரிகளாக மாறி மாறி பல பிறப்புகளில் ஆழ்ந்து போகிறார்கள் பலரும்
வெகு சிலரே இவற்றை வெறுத்து முமுஷுக்களாகி முக்தர் ஆகிறார்கள் –

பிரகிருதியின் செயல்கள்
மம மாயா துரத்யயா -மாம் ஏவ -இத்யாதி
இந்த முக்குண மய பிரகிருதி என்னாலேயே இயக்கப் பட்டு என்னுடைய லீலைக்காக உள்ளது –
இந்த பிரக்ருதியான மாயையை யாராலும் எளிதில் தாண்ட இயலாது
யார் என்னையே சரணாகப் பற்றுகிறார்களோ அவர்கள் தான் இத்தைக் கடக்கிறார்கள் –

பிரகிருதி பாப புண்ணியங்களின் அடிப்படையில் நம்மைத் தளைப்படுத்துகிறது –
கர்மங்கள் நீங்கி விட்டால் ப்ரக்ருதியோடே நமக்கு இருக்கும் தொடர்பு நீங்கி விடும்
ப்ரக்ருதி பகவானை அறிய முடியாதபடி செய்து -நம்மையும் கூட நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத படி பண்ணி
இந்த உடலே நான் -என்கிற தேகாத்ம அபிமானத்துக்கும்
நான் ஸ்வ தந்த்ரன் என்று நினைக்கும் ஸ்வ தந்த்ர அபிமானத்துக்கும் காரணமாக உள்ளது
ப்ரக்ருதி தன்னுடைய வெவ்வேறே வடிவங்களான பிராகிருத பதார்த்தங்களில் ஆசையை வளர்த்து
அவையே மிகவும் சிறந்தவை என்று எண்ண வைக்கிறது –
உடல் புலன்கள் உலகப் பொருள்கள் -நுண்ணிய வடிவங்களில் உள்ளது
முக்குணங்களை உடையது
பகவானாலே செலுத்தப்படுவது –

ப்ரக்ருதிக்குப் பல பெயர்கள் உண்டு
1- ப்ரக்ருதி -இந்த உலகில் எல்லாப் பொருள்களும் இதில் இருந்து தோன்றுகிற படியால் இது பிரகிருதி என்னப் படுகிறது
2-அவித்யை -வித்யை என்னும் அறிவைக் கெடுக்கிற படியால்
3-தமஸ் ஸூ -வெளிச்சத்துக்கு நிகரான அறிவுக்கு எதிராக உள்ளபடியால் இருட்டு
4-பிரதானம் -முக்கியமான பொருள் -அனைத்தும் இதில் இருந்து மாறுவதால்
5-மாயா -விசித்திரமான ஆச்சர்யமான பொருள்களை உண்டாக்குகிற படியால்
பொய் என்ற பொருளில் அல்ல -நமக்குத் புரியாதபடி ஆச்சர்யமாக உள்ளது-

பரமாத்மா ஜீவாத்மா -அறிவுடைமை ஒற்றுமை
ஜீவாத்மா ப்ரக்ருதி -இரண்டும் சொத்து ஸ்வாமிக்கு
பரமாத்மாவுக்கு ப்ரக்ருதிக்கும் -ஒற்றுமை -தன்னோடே சேர்ந்தவர்களைத் தன்னைப் போல் ஆக்கும் –
சமதர்ம முக்தி அவன் தருவான் –
தன்னளவுக்கு கீழே இழுத்துச் செல்லுமே -பிரக்ருதியும்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: