ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –30–க்ரியா சக்தி —

ஸ்ரீ உவாச
ஏஷா தே கதிதா சக்ர மயா சக்தி க்ரியாத் மிகா
தஸ்யா வ்யாப்திம வோசம் தே ஸூர்ய ஸோம அக்னி பேதிதாம் –1-
வ்யூஹி நீம் அப்யவோசம் தே பீஜ பிண்ட தாநத
பத மந்த்ர ஸ்வரூபம் ச தஸ்யா சக்ர நிபோத மே –2-
அஜித் அநில ஸர்காணாம் ஸம்யோக பிண்ட ஆதிம
கமல அனல சர்காணாம் யோக பிண்டோ த்வி தீயக –3-

முதல் பிண்டமானது -ஜ்ர -அஜித-அநில-சர்கம் -ஆகியவற்றின் கூட்டாக உள்ளது -ஜ -ர -ஹ –
இரண்டாவது பிண்டமானது -க்ர –கமல = அநல-சர்கம்-ஆகியவற்றின் கூட்டாக உள்ளது -க -ர -ஹ –

ஸ்வேத ஆஹ்லாதி ஸம்யோக த்ருதீய பிண்ட உச்யதே
ஸூர்ய ஊர்ஜ வியாபி நாம் பிண்டச் சதுர்த்தஸ் தேந மத்யத –4-
த்ரீண்யஸ் த்ராணி தத கால சக்ராய ஹுத புக் ப்ரியா
தார கேணாந் விதச்சாதவ் சக்ரோயம் பத மந்த்ராட் –5-

ஸ்வேதம் ஆஹ்லாதம் இவற்றின் கூட்டாக மூன்றாவது பிண்டம் பட்
நான்காவது பிண்டம் – ஸூர்ய ஊர்ஜ வியாபி ஹூம் -என்பதன் கூட்டாக உள்ளது –
இவைகளுக்கு நடுவில் மூன்று அஸ்திரங்கள் -பட் -என்பது சேர்க்கப்படுகிறது
இத்தைத் தொடர்ந்து கால சக்ராய என்பதும் அக்னியின் பெயரான ஸ்வாஹா சேர்க்கப்பட்டு
இதன் தொடக்கத்தில் தாயகம் -ஓம் -உள்ளது
இப்படி உள்ளதே பத மந்த்ர அரசனாக –
ஓம் ஜ்ர கர பட் ஹும் பட் பட் பட் கால சக்ராய ஸ்வாஹா –என்பதாகும்-

நைவ கிஞ்சித் அஸாத்யம் ஹி மந்த்ரேணாநேந வாஸவ
அபியுக்த மநா அஸ்மின் ந கச்சதி பராபவம் –6-

இந்த மந்த்ரம் மூலம் பெற இயலாதது ஒன்றும் இல்லை –
இத்தை மனதில் நிலை நிறுத்துபவர்கள் ஒரு போதும் தோல்வியை சந்திப்பது இல்லை –

யஸ்து தே கதிதஸ் பூர்வம் த்ரியு கார்னோ மநு உத்தம
ப்ரபாவம் அகிலம் தஸ்ய பூயோ வ்யாக்யாமி வாஸவ –7-

வாஸவனே மூன்று ஜோடி எழுத்துக்களைக் கொண்ட -ஸஹஸ்ரார ஹும் பட் –
முன்பே சொல்லப்பட்ட பிரபாவம் மீண்டும் கூறுகிறேன் –

அ நாம ரூப வச் சக்ரம் ஷாட் குண்ய மஹிம உஜ்ஜ்வலம்
த்யாயன் ஸ பீஜமா வ்ர்த்ய மந்த்ரம் பந்தாத் ப்ரமுச்யதே –8-

இந்த சக்கரத்துக்கு பெயரோ ரூபமோ இல்லை -ஆறு உயர்ந்த குணங்களால் பிரகாசிக்கும் –
பீஜத்துடன் உச்சரிக்கும் உபாசகன் ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான் –

க்ரியா சக்தேர் மதீயா யாஸ்தநு ஸாஷாத் மஹா மநு
ஷட னோர் அதர்வ வேதாந்த ஸம்ஸ்திதச் சக்ர ப்ரும்ஹித–9-

இந்த மந்த்ரம் க்ரியா சக்தியின் வடிவம் –

ஷடத்வ மயமோ ஜஸ்வி சக்ரம் ஸுவ் தர்சனம் பரம்
பாவயே தக்ஷ நாப்யாதி விபக்த அவயவ உஜ்ஜ்வலம் –10-

ஸ்ருஷ்ட்டின் ஆறு நிலைகளிலும் இந்த ஸூ தர்சன சக்ரம் தொடர்ந்து நிற்கும் –
ஒவ் ஒரு பாகத்தையும் தியானிக்க வேண்டும் –

அம்ருதாதீன் மநோ ரர்ண அக்ஷராதி அங்கே ஷு சிந்தயேத்
அஷே நாபவ் ததாரேஷு நேமவ் பிரதித தந்தயோ –11-

அம்ருதம் -ஸ -என்னும் எழுத்து தொடக்கமான உள்ள மந்திரத்தில் எழுத்துக்கள் ஸூதர்சன சக்கரத்தின்
அச்சு ஆரம் உள் வட்டம் -என ஒவ்வொரு பாகமாக எண்ண வேண்டும்

ப்ரக்ருதியாதி விசேஷான் தைஸ் தத்த்வை ஸம் பிரதித பிரதி
மாயா ப்ரஸூதிஸ் த்ரை குண்யம் அபி நேமி ஸூ தர்சன –12-

வெளிவட்டம் ப்ரக்ருதியையும் உட்பாகம் மாயை ப்ரஸூதி முக்குணங்களைக் குறிக்கும்

பதாத்வ ரசி தாராந்தா மந்த்ரா அர ஸஹஸ்ரகம்
அராந்தோ வ்யூஹ மார்கஸ்தோ நாபிஸ் தத்ர கலாமயீ –13-

ஆரங்கள் வந்து இணையும் வெளி வட்டம் -பதங்கள் -மந்த்ரங்கள் ஆயிரக் கணக்கான ஆரங்கள் –
ஆரங்கள் வந்து இணையும் உட்பகுதி வ்யூஹ மார்க்கம் -நடுப்பகுதி கலை

வர்ணாத்வா ஹ்யஷ பர்யந்தோ மத்யே சக்தி ரஹம் பரா
மதந்த பரமம் ப்ரஹ்ம க்ராஹ்ய க்ராஹ கதோ ஜ்ஜிதம்–14-

வர்ணங்கள் அச்சாணி -அதன் நடுவில் உயர்ந்த சக்தியாக நான் -எனக்குள் பர ப்ரஹ்மம் –
இது அறிபவன் அறியப் படும் பொருள் போன்றதான வேறு பாடுகள் இன்றி உள்ளன –

மத்யே து சிந்தயேத் தாரம் தாரிகாம் தத் பஹி ஸ்மரேத்
தத் பஹிச்ச க்ரியா பீஜம் தத் பஹிச்சாதிம் அக்ஷரம் — 15-

எனது தார மந்த்ரம் ஸூ தர்சன நடுவில் -வெளிப்புறத்தில் தாரிகா மந்த்ரம் –
கிரியா சக்தியின் பீஜ மந்திரத்தையும் -அதனைத் தொடர்ந்து வரும் முதல் எழுத்தையும் தியானிக்க வேண்டும் –

இதி அக்ஷர குஹரே ஜ்ஜேயம் க்ரமாத் பீஜ சதுஷ்டயம்
நாபி ஓவ்ராதவ் து ஸூர்யா தீநிதி பூர்வோக்தயா திசா –16-

இந்த சக்கரத்தில் நான்கு பீஜங்களும் சரியான வரிசையில் அமைந்துள்ளன என்று அறிய வேண்டும் –
வெளி வட்டமும் ஆரங்களும் ஸூர்யன் முதலானவற்றைக் கொண்டு இருக்க வேண்டும் –

ஹ்ர ஸ்ர ஆகார ஸ்வரூபோ யஸ் ஸ ஸஹஸ்ர விதாந் வயீ
ஸூர்யா காலா நல த்வந்தைர் அப்ரமேயாதி பேதிதை –17-
அம்ருதாநல யுக்மைச்ச தாவத் பிஸ் தாத்ருசைரபி
ஸம் ஹத்ய பேதயேத் காதீ நக்நீ ஷோமமயை ஸ்வ ரைஸ் –18-
ஸூர்ய ஸோம அநிலாந் ஹித்வா த்ரிம் சதம் சைகமேவ ச
அஷ்டந் யூந ஸஹஸ்ரம் தத் அக்ஷராணி ஸ்யுரஞ்ஞனம்–19-
ஈசாத் யநு ப்ரதேசஸ்தம் வஹ்நேர் வாயு பதா வதி
தத்த்வா ஸூத்ர யுகம் சாரீம் சதுர்த்தா விப ஜேத்துவம் –20-

ஆயிரம் ஸ்வரூபங்களைக் கொண்ட மந்த்ரம்
அ முதலான 16 அக்ஷரங்களை ஒவ்வொன்றாக ஸூர்யன் (ஹ )-காலா நலன்( ர )அம்ருதம் (ஸ ) அநலன் (ர )
ஆகியவற்றுடன் இணைந்து உண்டாக்கப் படுகிறது
அக்னி மற்றும் சோமன் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த ஒவ்வொரு அஷரத்துடன்
ஸூர்யன் (ஹ )சோமன் (ஸ ) அக்னி (ய )ஆகியவை நீங்கலாக உள்ள 31 எழுத்துக்கள் சேர்க்கப் படுகின்றன
இவை ஹ தொடங்கி ம முடிய -25-
இவற்றுடன் ய ல வ ச ஷ க்ஷ சேர்ந்து -31-
இவை ஒவ்வொன்றும் ஸூர்யன் சோமன் என்று இரண்டு வகை
ஆக 31 times 16 times 2=992
இவற்றுடன் ஹ்ர ஸ்ர ஆகியவை உள்ளடங்கிய அஷ்ட பீஜங்கள் -ஏழு பீஜங்கள் -26 அத்யாயம் –
அத்துடன் ஸூ தர்சன பீஜம் சேர்த்து 1000 ஆகும்
இந்த ஆயிரம் எழுத்துக்களும் ஒரு வட்ட வடிவில் வடகிழக்கு தொடங்கி தென்கிழக்கு வழியாக
வடமேற்கு முடிய அமையப் படுகின்றன –

தத்த்வா ஸூத்ர யுகம் சாரீம் சதுர்த்தா விப ஜேத்துவம்
பஞ்ச பஞ்சா சதம் குர்யா தராணம் ப்ரதி பூமிகம் –21-
ஸஹஸ்ரம் தான்ய ராணி ஸ்யுஸ் தேஷு வர்ண ஸஹஸ்ரகம்
ந்யசேத் ப்ராகாதி ஸோ மாந்தம் கோண ஸூத் ரேஷு வை தத –22-
ந்யசேத் மந்த்ராத் வவரத்தின் யச் சதுஸ்ர அக்நிகுணா க்ரமாத்
ஐயா ச விஜயா சைவ அஜிதா ச அபரிஜதா –23-
அக்ந்யா தீசாந பர்யந்த ஸூத்ரஸ்தா மந்த்ர தேவதா
அராணி பூரயந்தீ சா நேமி ஸுவ் தர்சநீ ஸ்திதா –24–

இந்த வட்டத்தின் குறுக்கு வாட்டில் இரண்டு நூல்களை வைத்து வட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்
ஒவ்வொரு பகுதியில் ஐந்து மடங்கு ஐம்பது ஆரங்களை வைக்க வேண்டும் –
இதன் மூலம் ஆயிரம் ஆரங்கள் கிட்டுகின்றன –4 .5-50
அதன் பின்னர் இந்த ஒவ்வொரு ஆரத்தின் மீதும் ஆயிரம் அக்ஷரங்களை சரியான வரிசையில் எழுத வேண்டும் –
இவற்றைக் கிழக்கு மூலையில் தொடங்கி சாமானின் வடக்கு மூலையில் முடிக்க வேண்டும் –
அதன் பின்னர் தென் கிழக்கு தொடங்கி வட கிழக்கு முடிய குறுக்குவாட்டில் வைக்கப்பட்ட நூல் மீது
அக்னியின் நான்கு தன்மைகளை வைக்க வேண்டும்
இவை ஐயா விஜயா அஜிதா மற்றும் அபராஜிதா ஆகும் –
இவையே மந்திரத்தின் அதிபதி தேவதைகள் ஆவார்கள் -இந்த ஆரங்களைச் சுற்றி ஸூ தர்சன சக்கரத்தின் வெளி வட்டம் உள்ளது –

அர நேமி அந்தரஸ் தாநி ஸர்வாஸ் த்ராணி ச வாஸவ
ப்ரவர்த்தகாநி புரதஸ் ஸர்வாஸ் த்ராணி புரந்தர –25-
நிவர்த்தகாநி புரதஸ் சிரோபிஸ் ஸஸ்த்ர சிஹ்னிதவ்
க்ருதாஞ்சலீ திருப்தாநி த்யாயேது பயதஸ் சமம் –26-

வாஸவனே -இந்த ஆரங்களுக்கு நடுவில் அனைத்து ஆயுதங்களும் அடங்கி உள்ளன —
இந்திரனே இந்த ஆயுதங்களின் முன்பும் பின்பும் வைக்கப்பட்டுள்ள அனைத்து மந்திரங்களையும் உபாசகன் த்யானிப்பானாக –
இவை இரண்டு பக்கங்களிலும் சமமான எண்ணிக்கையில் உள்ளதாகக் கொள்ள வேண்டும் –
இவற்றின் தலைப்பாகமானது வாள் வடிவமாகவும் கைகளைக் குவித்தபடியும் தாக்குவதற்குத் தயாராக உள்ளபடியும் உள்ளன –

நேமி க்ஷேத்ரே மஹா லஷ்மீ பூர்வ ஸ்யாம் திசி ஸம்ஸ்திதா
தக்ஷிண ஸ்யாம் மஹா மாயா பச்சி மாயம் சரஸ்வதீ –27-
ஸும்யாயாம் திசி விஜ்ஜேயா மஹிஷா ஸூர நாஸநீ
தத் பஹிஸ் பரிதோ தேவா ப்ரஹ்மாத் யாஸ்து த்ரி மூர்த்தய –28-

ஸ்ரீ ஸூ தர்சன -வெளிவட்டத்தில் -கிழக்கே மஹா லஷ்மியாலும் -தெற்கே மஹா மாயையாலும் –
மேற்கே ஸரஸ்வதி -வடக்கே மஹிஷி மர்த்தினி யாலும் சூழப் பட்டு
அவர்களை சுற்றி ப்ரஹ்மாதி த்ரிமூர்த்திகள் உள்ளனர் –

துர்யாதி சக்தி ஸம் யுக்தா அவதாராஸ் ததஸ் பரம்
ப்ரக்ருத்யாதி விசேஷாந்தம் சதுர் விம்சதி ஸம்மிதம் –29-
பிரதி பூர்வே ஸ்திதம் பாகே தத்துவ ஜாதம் அநு க்ரமாத்
பாவோ பகரணா தேவா மத்யமே பரி நிஷ்டிதா –30-
ப்ருதுக் சரம பாகஸ்தா பவ்வநா புவனைஸ் ஸஹ
ப்ரஹ்மாண்ட உதர ஸம்ரூடா பூர்வஸ் ஸூவ ராதிகா –31-
மேர் வாதயஸ் அகிலாஸ் சைல கங்காத்யாஸ் சரிதஸ்ததா
ஷீராப்த் யாத்யாஸ் ஸமுத் ராச்ச த்வீபா ஜம்ப்வாதி சம்ஜ்ஜிதா –32-
வைமானி கணாஸ் ஸர்வே க்ரஹாஸ் ஸூர்யாத யஸ்ததா
நக்ஷத்ர தாரகா தாரா பூத ப்ரேதாதயஸ்ததா -33-

அடுத்து துர்யம் முதலிய -வாஸுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன -இவர்கள் பத்னிகளும் உள்ளனர்
சக்கரத்தின் வெளி விளிம்பில் பிரகிருதி தொடக்கமான -24-தத்வங்கள்
வெளி வட்ட நடுப்பகுதியில் ஸ்ருஷ்டிக்கும் தேவதைகள்
வெளி வட்டத்தின் உள் பகுதியில் பூ புவ ஸூவ -லோகங்களும் வஸ்துக்களும் -மேரு தொடக்கமான மலைகள் –
கங்கை தொடக்கமான நதிகள் -திருப்பாற் கடல் தொடக்கமான சமுத்திரங்கள் -ஐம்பூ த்வீபங்கள்
கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் போல்வன -காணப்படுகின்றன –

திஸ்ரஸ் த்ரிம் சச்ச யா கோட்யஸ் த்ரிசதா நாம் புரந்தர
ஸமாச்ரித ப்ரதிதம் தாஸ்து சரகா இவ சாரகம் —

தேன் கூட்டில் தேனீக்கள் போல் 33 கோடி தேவர்கள் சுற்றிலும் உள்ளனர் –

அயுதே த்வே ஸூரேசாந ஹ்யு பயோஸ் ப்ரதி பார்ஸ்வயோஸ்
அக்நயஸ் பரிவர்த்தந்தே ப்ரவர்த்தக நிவர்த்தகா –35–

இரண்டு பக்கங்களிலும் போறவர்த்தகம் நிவர்த்தகம் என்னும் பெயர் கொண்ட பத்தாயிர அக்னிகள் உள்ளன –

காலா நல ஸஹஸ்ர பாஸ் ஸ்பூர்ஜ்ஜவாலா குலா குலா
ப்ரவர்த்தக அனலாஸ் தத்ர தைத்ய தாந வதாஹிந –36-

பிரளய கால அக்னி போல் பிரவர்தக அக்னி தானவர்கள் தைத்யர்களை எரிக்கிறது –

தீராஸ் பிரசாந்த கம்பீராஸ் ப்ரசன்னாஸ்திக்ம தேஜச
நிவர்த்தகா மம இச்சத சமயந்தி ப்ரவர்த்தகான் –37-

நிவர்த்தக அக்னி என்னால் நடத்தப்பட்டு அமைதியாக ப்ரவர்த்தக அக்னியை சாந்தப்படுத்துகிறது –

ஸூ தர்சன மநோ ரந்தே யத்தத் ஸங்கர்ஷண உத்பவம்
லாங்கலாஸ்த்ரம் மஹா கோரம் ஸர்வ ஸம்ஹார காரகம் –38-

ஸூ தர்சன மந்த்ரத்தை தொடரும் லாங்கலாஸ்த்ர மந்த்ரம் -பட் -சங்கர்ஷணன் சம்பந்தம் கொண்டு
சக்தி வாய்ந்து அனைத்தையும் அழிக்க வல்லது –

திர்யக் ஸ்தி தஸ்ய நேம் யந்தே தஸ்ய பூர்வார்த்த ஸம்பவா
ப்ரவர்த்தகாஸ்த தூர்த்வாம்ச ஸம்பவாஸ்து நிவர்த்தகா –39-

அந்த அஸ்திர மந்திரத்தின் -பட் -முற்பகுதியில் இருந்து ப்ரவர்த்தக அக்னியும்
பிற்பகுதியில் இருந்து நிவர்த்தக அக்னியும் வெளிப்படுகிறது –

அக்னீ ஷோம மயா ஏதே ப்ரவர்த்தக நிவர்த்தகா
அக்னீ ஷாம மயாஸ்த் ரோத்தா ததுத்தா ஸாஸ்த்ர ஸம் ததி–40-

ப்ரவர்த்தகத்தில் அக்னி எரிக்கும் -நிவர்த்தகத்தில் சோமன் உள்ளதால் இனிமையாக இருக்கும் –
இந்த அஸ்திரங்கள் பல்லாயிரக்கணக்கான அஸ்திரங்களை உண்டாக்கும் –

த்வே யுதே ஸ்ருணு மூர்த்தீஸ் த்வம் வஹ்நீநாம் விவிதாத்ம நாம்
யஸ் ஸ்ம்ருத்வா புருஷோ கோரமாப தர்ணவம் உத்தரேத் –41-

அடுத்து அக்னி ரூபம் பற்றி சொல்கிறேன் -இத்தை அறிந்து ஸம்ஸாரம் கடக்கிறோம்

அசேஷ புவன ஆதாரச் சதுர் கதி ஊர்ஜ பிந்து நாம்
பிண்டோ அயம் தாரக பூர்வம் வஹ்நீ நாம் வபுருஸ்யதே –42-

அசேஷ புவன ஆதார–ர காரம்
சதுர் கதி -ய காரம்
ஊர்ஜ -ஊ காரம்
பிந்து -ம் காரம்
ஓம் ர்யூம் -தாரகத்தைக் கொண்ட பிந்து மந்த்ரம் =ப்ரவர்த்தக அக்னியின் வடிவம் ஆகும் –

அம்ருத ஆதார வஹ்நீ ஊர்ஜ பிந்து மாம்ஸ் தாரபூர்வக
பிண்டோ நிவர்த்தகாதீநாம் திவ்யா மநு ருதீர்யதே –43-

அம்ருத ஆதார -வ
வஹ்நீ –ர
ஊர்ஜ -ஊ
பிந்து -ம்
ஓம் வ்ரூம் -தாரம் கொண்டுள்ள பிந்து மந்த்ரம் நிவர்த்திக்க அக்னியின் வடிவம் ஆகும் –

ப்ரதிம் காலபு மவ்யக்த வ்யக்த ஸப்தக ரூபத
விபஜ்ய தசதா தத் ரூப வர்ண புரோகமை –44-
ப்ராக் பாகாதி க்ரமேணைவ ஸ்வர பூர்வை ஸ்வ ராந்தி மை
ஸூர்ய அனலை யுக காத்யைர் அஷ்டாபிர் பீஜ நாயக்தை –45-
யுக்தாஸ் தார நாமோ அந்தாஸ்தா ப்ரவர்த்தக தநூர் லிகேத்
அம்ருத அக்னி யுகைரேவ நிவர்த்தக தநூஸ் ததா –46-

ப்ரவர்த்தக சக்ரத்தின் வெளி வட்டத்தை -காலம் -புருஷன் -அவ்யக்தம்-ஸப்த ஸ்வரங்கள் -என்ற பத்தாகப் பிரித்து –
ப்ரவர்த்தக மந்த்ரத்தை ஸூர்யன் மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் எழுத்துக்களைக் கொண்டு எழுத வேண்டும் –
இவற்றுக்கு முண்டு அவற்றின் ரூபத்தை -அதாவது -ர்யும் -குறிக்கும் அக்ஷரங்கள் முன் பின் எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் –
அதற்குப் பின் பிரவர்த்தக மந்த்ரத்தை கிழக்கு திசை தொடங்கி அந்த வட்டத்தின் விளிம்பில் வரிசையாக எழுத வேண்டும் –
இவற்றுடன் க முதலான எட்டு முதன்மையான பீஜங்களை -அதற்கு முன்பாக தாரக மந்த்ரம் –
மற்றும் பின் பகுதியில் நம -என்பதைச் சேர்த்து எழுத வேண்டும் –
நிவர்த்தக அக்னியின் ரூபத்தையும் இவ்வாறே எழுத வேண்டும் –
ஆனால் ஸூர்யன் -அக்னி -என்பதற்குப் பதிலாக -அம்ருதம் -அக்னி -எனக் கொள்ள வேண்டும் –

ஏகை காக்நே ஸிகா ஸப்த கோரா சாந்தாச்ச ஸம்ஸ்மரேத்
ஆதித ஸப்த யுக்மாத்யா ஸ்வர ஸம்பேதிதா க்ரமாத் –47–
ஸூர்ய அக்னி யுக ஸம் பூதா அம்ருத அக்னி யுகோத்திதா
வர்க்காந்தச்ச ப்ரதா நச்ச ஸித்திதோ வாமநஸ் ததா –48-
ஸ்வே தச்ச தத்வ தாரச்ச ஜஷ ஸாஸ்வத ஏவ ச
சாந்த பதிஸ் ததா சக்ரீ காலாக்யர் ணா ஸ பிந்து கா –49-

ஏழு ஜோடி ஸ்வர அக்ஷரங்களுக்கு ஏற்ப -ஒவ்வொரு அக்னி கூட்டமும் –
ஏழு கடுமையான மற்றும் ஏழு அமைதியான ஜ்வாலைகளைக் கொண்டு உள்ளன –
இந்த மந்த்ரங்களை அமைப்பதற்கு பின்வருமாறு அக்ஷரங்களைச் சேர்க்க வேண்டும் —
ஸூர்யன் -அக்னி –ஜோடிகள் -ஹ்ர
அம்ருதம் -அக்னி ஜோடிகள் -ஸ்ர
வ்ரகாந்தம் -ஹ –
ப்ரதானம் –ம —
ஸித்திதா –காபந்து -இதில் இல்ல ப
வாமனா -பலம் இதில் உள்ள ப
ஸ்வேதா –பல்லி -இதில் உள்ள ப
தத்வதார -ந்
ஜஷ-ஷ
ஸாஸ்வத -ஷ
சாந்த பதி -ச
சக்ரீ –ச
கால –ம
இவை ஒன்றுடன் பிந்துவாகிய ம என்பதை சேர்க்கப் பட வேண்டும் –

நாபி அராந்தஸ்த ஸூத்ரஸ்த ரூபாச் ஸத்வார ஐஸ்வரா
அரே ஷா பரிதோ தேவா கேஸவாத்யா வ்யவஸ்திதா –50-

எந்த இடத்தில் அனைத்து ஆரங்களும் வெளி வாட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளனவோ
அங்கு கேசவனின் நான்கு வ்யூஹங்கள் அமைந்துள்ளன —

ஸ்வைஸ் ஸ்வைஸ் ஸிஹ்நை ஸரோஜாத்யைர் த்யேயா தாமோதர அந்திமா
அரநேம் யந்த ஸூத்ரஸ் தா பத்ம நாபா தயா அகிலா –51-
ஸர்வே ஸமந்விதா தேவா ஸ்வாபி ஸ்வா பிச்ச சக்திபி
ப்ராக் பாகே கமலா தேவீ தஷிணே கீர்த்தி ருஜ்ஜ்வலா –52-
ஜயா து பச்சிமே பாகே மாயா பாகே ததோத்தரே
ப்ரத்யேகம் கோடி சம்க்யாபி பரிவாரிதா –53-
அதி திஷ்டந்தி தே அபீஷ்ணம் ஸஹஸ்ராரம் ஸூ தர்சனம்
கால சக்ரம் அநாத் யந்த மஸ்ய தேஜஸ் ப்ரகீர்த்திதம் –54-

கேசவன் தொடங்கி தாமோதரன் வரை 12 விபவங்களும் –ஆரங்கள் இணைக்கப்பட்டுள்ளன சக்ரத்தின் வெளி வட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன –
அவை ஒவ்வொன்றையும் தாமரைச் சின்னம் போன்ற அடையாளங்களுடன் தியானிக்க வேண்டும்
வெளி வட்டத்தைச் சுற்றி உள்ள பகுதியில் பத்ம நாபன் முதலானவர்கள் தங்கள் சக்திமார்களுடன் கூடி உள்ளனர்
சக்கரத்தின் கிழக்குப்பகுதியில் கமலா -தெற்கில் கீர்த்தி -மேற்கில் ஜெயா வடக்கில் மாயா -உள்ளனர்
அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி கோடிக்கணக்கான பரிவார சக்திகள் உள்ளனர் –
அவர்கள் அனைவரும் ஆயிரம் ஆரங்கள் கொண்ட -ஸூ தர்சன -சக்கரத்தில் உள்ளனர் -அதுவே கால சக்கரம் -ஆதி அந்தம் இல்லாதது –

ஸம்வத்ஸரர்து மாஸார் தமாஸ அஹோ ராத்ரா ஸம்ஜ்ஜிதை
அஷ நாபி அர நேபி அந்தைஸ் க்ல்ருப்த பஞ்ச விபக்திம் –55–

காலத்தின் ஐந்து பிரிவுகள் -வருடம் ருது மாதம் ஆறுமாதங்கள் கொண்ட அயனம் மற்றும் இரவு பகல் இவை
சக்கரத்தின் அச்சு மையம் ஆரம் வட்டத்தின் உள் பாகம் வெளிப்பக்கம் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாக உள்ளன –

த்ரியந்தே கால சக்ரேண புமாத்யா பஞ்ச பஞ்ச ச
ஸஹஸ்ராரேண சக்ரேண நேமி அர ப்ரதி ஸோபிந –56–
த்ரியந்தே ச ஷடத்வாநோ வர்ண தத்வ கலாதய
ஸர்வ தத்வ மயம் தேகம் வைஷ்ணவம் புருஷோத்தமம் –57-
தார்யதே ப்ராம்யதே சைவ யந்த்ரா ரூடம் இதம் பரம்
நாபி கந்தஸ்திதே நைவ ஸஹஸ்ராரேண நேமிநா –58-

புமான் -ம முதல் க வரை ஐந்து எழுத்துக்கள் -அதாவது 25–ஆயிரம் ஆரங்கள் கொண்ட கால சக்ரத்தால் தாங்கப்பட்டுள்ளன
இந்த சக்கரம் வட்டத்தின் உட்பாகம் – ஆரம் -வட்டத்தின் வெளிப்பாகம் -இவற்றுடன் கூடி
வர்ணம் தத்வம் கலை -முதலான ஆறு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது
அனைத்து தத்துவங்களையும் உள்ளடக்கி -மஹா விஷ்ணுவின் சரீரமாக உள்ள யந்திரத்தை முழுவதும் மஹா விஷ்ணு வியாபித்து உள்ளார்
ஆயிரக் கணக்கான ஆரங்கள் கொண்டு தேஜஸ்ஸூ மிக்கு உள்ளது –

சக்ரேண அநேந ஹன்யந்தே ரஷோதை தேய தாநவா
நாநா மந்தராத்மநா தேந த தந்த ஸூஸ்தி தேந ச –59-
வித்வம் ஸயதி ஸத்ரூம்ச் சா ஸ்ம்ருத மாத்ரம் அநந்தரம்
அப்யஸ்ய மாநமநிசம் ஸஹஸ்ர ஆரம் இதம் நரை –60-
க்லேச கர்மா சயான் தோஷா ந சேஷான் ஷபயேத் க்ஷணாத்
பீஜம் பிண்டம் ச ஸம்ஜ்ஞாம் ச மூர்த்திம் சேத்தி சதுஷ்டயம் –61-
புஷ்யத்யே தத் ஸஹஸ்ர ஆரம் சக்ரம் அத்யந்த வர்ஜிதம்
ஸூர்ய இந்து வஹ்னிபிர் வியாப்ய விஸ்வம் ஏதத் சராசரம் –62-

இந்த சக்ரத்துக்குள் பகவானால் வீழ்த்தப்பட்ட ராக்ஷசர் தானவர் முதலானோர் உள்ளனர் –
பலவித மந்த்ரங்கள் உள்ளடக்கிய இந்த சக்கரத்தை தியானித்த மாத்திரத்திலே உபாசகனுடைய
அநேக சத்ருக்களும் வீழ்கிறார்கள் – தோஷங்கள் விளக்குகின்றன –
முடிவு அற்ற இதுவே அனைத்தையும் பீஜம் பிண்டம் சமஜ்ஜை மூர்த்தி -நான்கு தூண்களால் அனைத்தையும் தாங்குகின்றன –

அக்நேயீ ப்ரதமா மூர்த்தி சக்திர் திவ்யா க்ரியாஹ் நயா
ஸஹஸ்ர ஆர ஸ்வரூபேண ஸ்ருஜத் யவதி ஹந்தி ச –63-

சக்தியின் முதன்மையான வடிவமும்-அக்னியாகவும் உள்ளது -க்ரியா சக்தி ஸஹஸ்ர ஆரம் வடிவால்
அனைத்தையும் – படைத்து காத்து அழிப்பதாக உள்ளது –

ஸூர்ய இந்து வஹ்னிபிர் வ்யூஹ்யேயம் ஹி க்ரியா பிதா
உதிதா தே ஸூரே சந பூயச்சை நாம் நிபோத மே –64-

ஸூ ரேசா -க்ரியா சக்தி -ஸூர்யன் சந்திரன் அக்னி உடன் சேர்ந்து அத்புத வடிவம் கொண்டது -அப்போது படைக்கும் நிலை –

இதி ஏவம் கதிதோ வ்யூஹ ஸூர்ய ஸோம அக்னி ரூபக
வ்யூஹி நீம் தாம் இமா மத்ய க்ரியா ஸக்திம் நிபோத மே –65-

இவ்வாறு சக்தி பற்றி நான் அருளிச் செய்தவற்றைக் கேட்டாய்
மேலும் க்ரியா சக்தி பற்றி மேலும் நான் சொல்லப் போவதைக் கேட்ப்பாயாக –

முப்பதாம் அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: