ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-8—நல்லதோர் தாமரைப் பொய்கை–

கீழில் திருமொழியில்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனோடு சங்கையாய்
அவனுக்கு சிறு பேரான நாராயணனுக்கு
மாலதாகி அவனோடே மகிழ்ந்தனள் -என்று
சங்கா நிவ்ருத்தி பூர்வகமாக ஸம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தமாயிற்று -என்று
திருத் தாயார் தெளிந்த பின்பும்
வரைவுக்கு இடம் கொடாமையாலே –

அவனும் அது தன்னை அறிந்து மிகவும் வருந்திப் பார்த்த அளவிலே -அது கூடாமையாலே
நம் கைப்பட்ட பொருளை விடக் கடவோம் அல்லோம் என்று
ததாமி –
ஸ்மராமி –
நயாமி –என்றவன்
தனக்கு அத்யந்த அபிமத ஸ்தானமான திருவாய்ப்பாடியிலே கொண்டு போனான் என்று
திருத் தாயார் படுக்கையிலே காணாமையாலே

இவனை ஒழியக் கொண்டு போவார் இல்லை என்றும்
திருவாய்ப்பாடி ஒழிய வஸ்தவ்ய பூமி இல்லை என்றும்
இது தான் பந்துக்களுக்கு ஏச்சாமோ –குணமாமோ -என்றும்
அங்குச் சென்றால் அவனும் அவனுடைய பந்துக்களும் ஆதரிப்பாரோ அநாதரிப்பாரோ -என்றும்
வழி இடைக் கண்டாரையும் வினவிக் கொண்டு சென்ற பிரகாரங்களை வ்யாஜமாக்கி
மங்களா ஸாஸன பர்யந்தமாக அனுசந்திக்கிறார் –

———-

படுக்கையைத் தடவிப் பார்த்துக் காணாமையாலே கிலேசித்துச் சொல்லுகிற பாசுரமாய் இருக்கிறது —

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –

பதவுரை

நல்லது ஓர் தாமரைப் பொய்கை–அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள)
நாள் மலர் மேல்–அப்போதலர்ந்த பூவின் மேல்
பனி சோர–பனி பெய்ததனால்
அல்லியும் தாதும்–(அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று
அழகு அழிந்தால் ஒத்தது–அழகு அழியப் பெறுவது போல
இல்லம்–(இவ்)வீடானது
வெறி ஓடிற்று–வெறிச்சென்றிருக்கிறது;
என் மகளை–என் பெண் பிள்ளையை
எங்கும்–ஓரிடத்திலும்
காணேன் –காண்கின்றிலேன்;
மல்லரை அட்டவன் பின் போய்–மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய்
மதுரைப் புறம்–மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில்
புக்கார்கொல் ஓ–புகுந்தாளாவள் கொல்?–

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
ஜல ஸம்ருத்தி மாறாமையும்
பூ ஸாரம் உண்டாகையும் இறே பொய்கைக்கு நன்மை ஆவது
இப் பொய்கை தன்னாலே இறே தாமரைக்கு நன்மை யுண்டாவது
(ஆச்சார்யாராலேயே சிஷ்யனுக்கு நன்மை )
ஓர் –உபமான ராஹித்யம்
இப்படி நாற்றம் செவ்வி குளிர்த்தி மார்த்தவம் –என்றால் போல் சொல்லுகிற நாண் மலர் மேல்

பனி சோர
அதுக்கு விருத்தமான பணியானது மிகவும் சொரிய

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
அத்தாலே அல்லியும் தாதும் செவ்வி கெட்டு உதிர்ந்து
ஸ்தாவர ஜாதிக்கு எல்லாம் உபகாரமாய் இருந்ததே யாகிலும் தாமரையை அழகு அழித்து
சத்தா ஹானியை விளைப்பிக்கை பிரதி நியத ஸ்வபாவமாய் இருக்கும் இறே

இல்லம் வெறி ஓடிற்று ஆலோ
அது போலே இப் பெண்பிள்ளையும் என் வயிற்றில் பிறப்பு ஒழுக்கம் குன்றாமல்
வர்த்தித்த இந்த க்ருஹமும்
முழுக்கக் குடி போனால் போலே வெறியானது தோன்றா நின்றது –

தாமரை குடி போன பொய்கை தான் இதுக்கு ஸத்ருசமோ
அது அல்லியும் தாதும் உதிர்ந்து அழகு அழிந்தாலும் காலாந்தர ஸ்திதி யுண்டு இறே -காரணம் கிடைக்கையாலே –
அதுவும் இல்லை இறே இந்த க்ருஹத்துக்கும் எனக்கும்

ராஜ ரிஷி ப்ரஹ்ம ரிஷியான பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டிற்று இல்லை இறே
ஜனகராஜன் திரு மகளும் பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்து இலள் இறே

ஆகையாலே ஆலோ என்கிற அசையாலே
உபமான ராஹித்யமும்
புநராவ்ருத்தி அபாவமும் -தோற்றுகிறது

இக் க்ருஹம் முழுவதும் இப் பெண்பிள்ளை ஒருத்தியுமே போலே காணும் இருந்தாள்

என் மகளை எங்கும் காணேன்
அவள் -தன் மகள் அன்று -என்று போனாலும்
இவள் என் மகள் -என்னும் இறே

எங்கும் பார்த்து காணாது ஒழிந்தாலும்
என் மகள்-என்று
க்ருஹாந்தரங்கள் தோறும் ஸ்வ க்ருஹம் போல் பார்த்தாள் ஆதல்
இவள் போன வடி பார்த்துப் போய் அங்கும் ஓர் இடத்தில் காணாமல்
வழி எதிர் வந்தவர்களும் கண்டமை சொல்லாமையாலே
மிகவும் கிலேசித்தாள்-என்னுதல்

பின்னையும் தன்னுடைய சபல பாவத்தாலே –
1-என் வயிற்றில் பிறப்பாலும் –
2-பெண் பிள்ளையுடைய பிரகிருதி ஸ்வ பாவத்தாலும்
3-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடைய தீம்பாலும்
4-அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக விரோதி நிரஸனம் செய்த ஸாமர்த்யத்தாலும்
அணி யாலி புகுவர் கொலோ -என்னுமா போலே
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ-என்கிறாள்

புறம் -திருவாய்ப்பாடி
ஒருவருக்கு ஒருவர் ஊமத்தங்காய் ஆகையாலே கம்ச நகரியான மதுரையில் புகவும் கூடும் இறே

அன்றிக்கே
தன்னதான திருவாய்ப்பாடியிலே புகுந்தாளோ என்று சம்சயிக்கிறாள் –

மல்லர் முடிந்த போதே
கம்சனும் முடிந்து
உக்ரசேனனும் சிறைவிட்டு ராஜாவாய்
நகரத்தில் உள்ளாறும் அனுகூலரான பின்பும்
மதுரை என்றவாறே பயப்பட வேண்டி வரும் இறே
பிணம் எழுந்தாலும் தெரியாது என்னும் பயத்தாலே

இத்தால்
ஆச்சார்யனானவன் பனியாலே தாமரை குடி போன பொய்கையை
சவ் மனஸ்யத்தை யுடைய சிஷ்யனானவன் தன்னுடைய ஹித வசனத்தை அதிக்ரமித்து –
ஹித வசனத்தாலே கருகி -தன்னுடைய ஸந்நிதியை (ஆச்சார்யர் திருமாளிகையை )
ஈஸ்வரனுடைய தண்ணளியாலே பொகட்டுப் போனதுக்கு
ஸர்வதா ஸாத்ருஸ்யமாக அனுசந்திக்கிறான் என்று தோற்றுகிறது –

(ஆச்சார்யர் -பொய்கை
சிஷ்யன் -தாமரை
பகவான் -பனி )

வஸ்தவ்யமான தன்னுடைய ஸந்நிதியை விட்டால்
பின்னை வஸ்தவ்யம் பகவத் ஸந்நிதி யுள்ள பரத்வாதிகள் எங்கும் இறே
இவளுக்குப் பார்க்கவும் கண்டிலள் என்னவும் பிராப்தி உள்ளது –
ஆனால் சங்கித்த கோவிந்தன் பக்கலிலே இறே பிராப்தி –
இவனுடைய அபூர்த்தி தீரலாவது
அவனுக்கு அபிமதத்வேன வஸ்தவ்ய பூமியான திருவாய்ப்பாடியிலே இறே

(இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -274-

ஆக –
தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை
விவரித்தார் கீழ் –
சதாசார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –

இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –
1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் -ஹிதைஷியாய்-உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும் -அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு -அவனுக்கு உகந்த விஷயமாய் –
தன் பக்கலிலே விசேஷ கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்ச்யமும் அன்று -சம விகல்பமும் அன்று ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே -ஆசார்ய சந்நிதியை முற்பட அருளி செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்தி த்வ்ம மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –)

(ஆச்சார்யன் திருவடி )உத்தேச்யத்தைப் பிரித்து
உடன் கொண்டு போன அவனுக்கும்
கூடப் போன இவர்கள் தனக்கும்(பெண் -சிஷ்யர்கள் அனைவருக்கும் உப லக்ஷணம் )
ஸா வாதியாவதும் அது தானே இறே

புகுமூர் திருக்கோளூர் -என்றால் போலே
நாநாவான அனுமான ஸம்சயங்களாலே நிர்ணயிக்கிறது
ப்ரத்யக்ஷமும் (தர்க்க ) பிராமண அனுகூலமானால்
(தர்க்கத்தால் அனுக்ரஹிக்கப் பட்ட ப்ரத்யக்ஷம் போல்)
அனுமானமும் (தர்க்க ) பிராமண அனுகூலமாய் இறே இருப்பது –

——–

இவ் வுடன் போக்கு குணமோ தோஷமோ என்று சம்சயிக்கிறாள் –

ஒன்றும் அறிவு ஒன்றில்லாத உரு அறை கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 -2- –

பதவுரை

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத-பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும்
உரு அறை–ரூப ஹீநர்களுமான
கோபாலர் தங்கள்–இடையரானவர்கள்
கன்று கால் மாறும் ஆ போலே–கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல,
கன்னி இருந்தாளை–கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை
நன்றும் கிறி செய்து–நல்ல உபாயங்களைப் பண்ணி
கொண்டு போனான்–(தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன
நாராயணன்–கண்ண பிரான்
செய்த தீமை–செய்த தீம்பானது
எமர்கள் குடிக்கு–எங்கள் குலத்துக்கு
என்றும்–சாஸ்வதமான
ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ–ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?–

ஒன்றும் அறிவு ஒன்றில்லாத உரு அறை கோபாலர் தங்கள்
பொருந்தின அறிவு ஒன்றும் இல்லாத –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் இறே
தேஹ தர்மத்தோடே ஆதல்
ஆத்ம தர்மத்தோடே ஆதல்
பொருந்தின அறிவு அல்பமும் இல்லாத

அறிவு ஒன்றும் இல்லாத –
காட்டிலே பசு மேய்க்கப் போன இடங்களிலே வழி திகைத்தால் வழி காட்டுவது
பசுக்களாம் படி இறே இவர்கள் அறிவு இருப்பது –

வல்லாயானர் -இறே
குடுவையில் சோற்றையும் உண்டு புது மழைத் தண்ணீரையும் குடித்த செருக்காலே
தங்கள் திரள நின்றால்
இந்திரனை ஜெயித்து வந்த கம்சனை
இவனுக்கு குடிமை செய்வார் யார் –
இந்தப் பசு மேய்க்கிற கோல்களாலே அவனைச் சாவ அடித்து இழுக்கப் பாருங்கோள் -என்றால் போலே இறே
இவர்கள் அறியாமையாலே வந்த நெஞ்சில் வலிமை தான் இருப்பது –

உரு அறை கோபாலர் தங்கள்
அறிவைப் பேண மாட்டாதாப் போலே இறே தேஹத்தையும் அழுக்கு அறுத்துப் பேண மாட்டாமையும்
கோபாலர் -கோ வர்க்கத்தை ரக்ஷிக்கிறவர்கள்
அவை தன்னால் ரக்ஷை படுகிறவர்கள் -என்னுதல்

தங்கள் கன்று கால் மாறுமா போலே
தங்கள் கன்றுகள் விளைவது அறியாதே இருந்ததே யாகிலும் முன்னடியிலே பின்னடி யிட்டு
இரண்டு காலாலே நடந்தால் போலே இருப்பது
அப்படியே படி கடந்து புறப்படாமல் க்ருஹத்திலே இருந்த கன்னிகையைத்
தன்னோட்டைச் சுவட்டை அறிவிப்பித்துக் கொண்டு போன படி –

கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான்
பொல்லாங்கான கிரியைகளை செய்து
அதுவே பாதேயமாகக் கொண்டு போனான்
தானிட்ட அடியிலே இடும்படியாக நன்றான விரகுகளைச் செய்து கொண்டு போனான் –

அன்றியே
உருவறைக் கன்றுகளைக் காற்கடை கொண்டு நீக்கிக்
கால் ஒக்கமும் ஒழுகு நீட்சியும் மயில் புறச் சாயையும்
பொலியேற்றால் வந்த பிறப்பு அழகையும் யுடைத்தான கன்றுகளை
அடித் தெரியாமல் கொண்டு போவாரைப் போலே
தான் பண்டு விரும்பினவர்களை –
உருவறைகள் என்று பொகட்டு –
உருவான என் பெண்ணைக் கொண்டு போனான் -என்னவுமாம் –

நாராயணன் செய்த தீமை
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிறவன்
(வைத்தியோ நாராயண ஹரி )
ஒவ்ஷதம் அபத்யமாமா போலே தீமை என்கிறாள்
தன்னுடைமையைத் தான் கொண்டு போம் போது வரைந்து வெளிப்படவும் கொண்டு போகலாம் இறே

என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ
எமர்கள் குடிக்கு என்றும் ஏச்சு கொலோ
எங்கள் குடிக்கு என்றும் ஏச்சு ஆமோ
அன்றியே
வரைவு கருதிப் பெறாதாருக்கு உடன் போக்கு குணவத்தாயிடுமோ
கொல்லை என்பர் கொலோ குணம் மிக்கனள் என்பர் கொலோ –என்னக் கடவது இறே

இத்தால்
ஆச்சார்யரானவன் தனக்குப் பரதந்த்ரனாய் இருக்கிறவனை
ஈஸ்வரன் விஷயீ கரித்துக் கொண்டு போன பிரகாரங்களை
நினைத்தும்
சொல்லியும் வெறுத்தமை தோன்றுகிறது –

————–

போனவள் என் செய்தாளோ என்று அறிகிறிலோம் இறே -என்கிறாள் –

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தித்
தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதி உடைத் தேவி யரசாணியை வழி பட்டு
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும் கொலோ -3 -8-3 –

பதவுரை

குமரி மணம் செய்து கொண்டு–கன்னிகை யவஸ்தையிற் செய்ய வேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து
கோலம் செய்து–(ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து
இல்லத்து–விவாஹ மந்திரத்தில்
இருத்தி–உட்கார வைத்து
தமரும்–பந்து வர்க்கங்களும்
பிறரும்–மற்றுமுள்ள உதாஸீநர்களும்
அறிய–அறியும்படி
தாமோதரற்கு என்று சாற்றி–“(இவள்) கண்ண பிரானுக்கு (க்கொடுக்கப் பட்டாள்) என்று சொல்லி,
(பிறகு)
அமரர் பதியுடைய தேவி–தேவாதி தேவனான கண்ண பிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள்
(ஜாதிக்குத் தக்க ஒழுக்கமாக)
அரசாணியை–அரசங்கிளையை (அம்மி -என்றுமாம் )
வழிபட்டு–பிரதக்ஷிணம் பண்ண
துமிலம் எழப் பறை கொட்டி–பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி
தோரணம் நாட்டிடும் கொல் ஓ–மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?–

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தித்
குமரி -என்று கன்யகை
கன்யகையை ஜாதி உசிதமாக அங்க ராகாதிகளாலும் புஷ் பாதிகளாலும் அலங்கரித்து
ஸ்வர்ண நவ ரத்ன வஸ்த்ராதிகளாலே கோலம் செய்து

இல்லத்து இருத்தித்
கல்யாண கிருஹத்துக்கு உள்ளே துரு துருக் கைத்தலம் அறியாமல் இருத்தி

தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி
பந்துக்களுக்கும் மற்று உள்ளாருக்கும் பிரசித்தமாம் படி தாமோதரற்கு என்று சாற்றி
அப்ராப்த விஷயங்களுக்காகில் இறே அப்ரஸித்தமாக்கிக் கொடுக்க வேண்டியது –

தாமோதரற்கு
அபலையாய் மாதாவான வளுடைய வசன பரிபாலன பாசத்தாலே
பந்த பாச விமோசனம் செய்து கொள்ள மாட்டாமல்
யதி சக்நோஷி -என்ற பின்னும் அசத்தி தோன்ற இறே இருந்தது

இப்படிப்பட்ட குணவானுக்கு என்று சாற்றி
இத்தைப் பரத்வத்திலே ஆக்கில் இத்தனை கௌரவம் தோன்றாது இறே

அமரர் பதி உடைத் தேவி யரசாணியை வழிப்பட்டு
இந்திரனுடைய ஸ்திரீயான ஸசீ தேவியை
ச ப்ரஹ்ம ச ஈஸ ச சேந்த்ர -என்ற நியாயத்தாலே வழிப் படுமவள் அன்றே

இவன் இந்திரனுக்கும் இந்த்ரனாய் –
ஸூரி நிர்வாஹனாய்-
ஸ்ரீ யபதித்வமே நிருபகமாய் யுடையவனுடைய தேவி
விஷ்ணு பத்நீ
அநபாயினி -என்கிறபடியே அவனை நிரூபகமாக யுடையவள்
உன் திரு -என்னக் கடவது இறே

இது (ஸ்ரீ யபதித்வம் )விசேஷண நிரூபகமே யாகிலும்
ஸ்ரீ யபதியானவன் திரு என்கையாலே ஸ்வரூப நிரூபகமாம் இறே
(அவள் இருப்புக்கு சத்தைக்கு இவன் காரணம்
அவனது ப்ரதர்சனத்துக்குக் காரணம் இவள் )

சதுர்த்தியில் சேஷத்வத்துக்கு பத சாமர்த்தியத்தாலும்
ராஜ புருஷ நியாயத்தாலும்
சேஷியானவன் தானே நிரூபகனும் ஆனான் இறே –

(சம்பந்தம் சேஷத்வம் ஆஸ்ரயத்தை எதிர் பார்க்கும்
அனு சம்பந்தி ஜீவன்
ஏற்பவன் சேஷி பிரதி சம்பந்தி நிரூபகன்
ராஜ சேவகன் சொல்லைப் பார்த்தால் சேவகன் முக்யத்வம் சாரும்
பிரதி சம்பந்தி ராஜா -அர்த்தமாகப் பார்த்தால் ராஜாவுக்கு முக்யத்வம் வருமே )

அமரர் பதி உடைத் தேவி
அவளைப் பெரும் தேவி( 3-10 )என்றும்
இவளை என் சிறுத் தேவி (நாச்சியார் 6-8) என்றும் -அருளிச் செய்தார்கள் இறே
ஆகையால் சிறுத்தேவி பெரிய தேவியை வழி பட வேணும் இறே

யரசாணியை வழிப்பட்டு
அம்மியை
அம்மி மிதிக்க -என்னும்படி மிதித்து வழி படும் அத்தனை இறே இங்கு

அரசாணி
அரைக்கப்பட்ட சாணை –
ஐ காரம் -இ காரமாய்க் கிடக்கிறது

பெரும் தேவியை வழிப்பட்ட போதே
நித்ய விபூதியும் அவள் இட்ட வழக்கு ஆகையாலே
இவள் தன்னை அமரர் பதியுடைத் தேவி என்னவுமாம்

துமிலம் எழ பறை கொட்டி
பெரிய வார்ப்பரவம் தோன்ற வாத்யாதிகளை முழங்கி
மத்தளம் கொட்ட -என்னக் கடவது இறே

தோரணம் நாட்டிடும் கொலோ
பஞ்ச லக்ஷம் குடியிருப்பான திருவாய்ப்பாடியில் தெருக்கள் தோறும்
நாற்சந்திகள் தோறும்
தோரணம் முதலான அலங்காரங்களைக் கற்பித்துக் கொண்டாடுவார் கொலோ
குடிப்பிறந்தார் கல்யாணத்துக்குக் கொண்டாட்டம் என் செய்ய என்பர்களோ

இத்தால்
தன்னளவிலே அற்றுத் தீர்ந்த சிஷ்யனை
ஈஸ்வரன் தன் அபிமானத்தாலே விஷயீ கரித்துக் கொண்டு போனாலும்
போன இடத்தில் என் செய்கிறானோ என்று ஆச்சார்யனானவன்
கரைகிற பிரகாரம் தோற்றுகிறது —

——–

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4-

பதவுரை

ஒரு மகள் தன்னை உடையேன்-–ஒரே மகளை உடையளாகிய நான்
உலகம் நிறைந்த புகழால்–உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு.
திரு மகள் போல–பெரிய பிராட்டியாரைப் போல்
வளர்த்தேன்–சீராட்டி வளர்த்தேன்;
(இப்படி வளர்ந்த இவளை)
செம் கண் மால்–செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன்
தான்–தானே (ஸாக்ஷாத்தாக வந்து)
கொண்டு போனான்–(நானறியாமல்) கொண்டு போனான்;
(போனால் போகட்டும்;)
பெரு மகளாய் குடி வாழ்ந்து–(இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை–பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள்
மருமகளை-(தன்) மருமகளான என் மகளை
கண்டு உகந்து–கண்டு மகிழ்ந்து
மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ–மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ?–

ஒரு மகள் தன்னை உடையேன்
தான் வளர்த்த அருமையைச் சொல்கிறாள்
உபமான ரஹிதையான என் பெண்

தன்னை என்கிற மதிப்பாலே
ஸூக தாதம் –என்னுமா போலே
குடிப் பிறப்பால் வந்த அளவே அன்றிக்கே
ஸுந்தர்ய குண பூர்த்திகளாலே இவளுக்குத் தாயார் என்கை தானே எனக்குப் பெரு மதிப்பாக யுடையேன்

உலகம் நிறைந்த புகழால் திருமகள் போலே வளர்த்தேன்
குக்ராம நிர்வாஹகனைத் தொடங்கி
அண்ட நிர்வாஹகன் முடிவான
அளவு அன்றிக்கே

ஸர்வ பூதாநாம் ஈஸ்வரீம் -என்கிறபடியே
ஸூரிகளுக்கும் அவ்வருகான புகழை யுடையாளாய்
அவன் தனக்கும் -திருமகளார் தனிக் கேள்வன்-(திருவாய் -1-6) என்னும் அது தானே பெருமையும் படியான திரு மகள் போலே

திருமகள் போலே வளர்த்தேன்
திருமகளுக்கு அவ்வருகு சொல்லலாம் படியானதொரு புகழ் இல்லாமையாலே
திருமகள் போல் வளர்த்தேன் என்கிறாள் –

ஆனால் குடிப் பிறப்பால் வந்த புகழ் குறைந்து இருக்குமே அவளுக்கு
ஒரு சமுத்திரம்
ஒரு ஜனகராஜன்
முதலானவர்கள் ஆகிலும்
ஆகை இறே ஒரு மகள் என்றது –

செம்கண் மால் தான் கொண்டு போனான்
ஸ்வா பாவிகமான சிவப்பாதல்
பக்கம் நோக்கு அறியாமல் இவள் தன்னையே பார்க்கும் படியான வ்யாமோஹத்தால் வந்த சிவப்பாதல்

தான் கொண்டு போனான்
ஆதி வாஹிகரை வரவிட்டுக் கொண்டு போதல்
பெரிய திருவடியை வரவிட்டுக் கொண்டு போகை அன்றிக்கே
கள்வன் கொல் -லில் பிராட்டியைப் போலே இறே கொண்டு போய்த்து –

இவ்விடத்தில்
ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது – உடையவர் -விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் –
ஒரு மகள் தன்னை உடையேன் -என்றும் –
உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -என்றும் –
செம்கண் மால் தான் கொண்டு போனான் -என்று அருளிச் செய்தார் -என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்

சாதி அந்தணர் -(திருமாலை-43 -பிள்ளைப்பிள்ளை ஆழ்வான் -கூரத்தாழ்வான் இடம் ஆணை ஐதிக்யம் இதில் )என்றும்
கலை யறக் கற்ற மாந்தர்(திருமாலை-7-கூரத்தாழ்வானையே -என்று வியாக்யானம் நிற்கலாமா கேட்கலாமா –
ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுத்து கூரத்தாழ்வார் பிள்ளையை புகழ்ந்து சொன்னாரே ) -என்றும்
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் (திருவாய் -7-10-5–பெரிய நம்பி பின் நிழல் போல் -அகங்கார மமகாரங்கள் இல்லாமல் )-என்றும்
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் -(ராமானுஜ -7–வாசா யதீந்த்ர -விம்சதி )-என்றும்
ஓரப்பால் கருதுவர் – என்றும்
உண்டாய் இருக்கையாலே உலகு நிறைந்த புகழ் உள்ளது ஆழ்வானுக்கே இறே
(அர்வாஞ்சோ -இவர் திருமுடி சம்பந்தத்தால் தனக்கு என்று சொல்லிக் கொண்டாரே )

லோகே
சாஸ்த்ரே
(லோகம் -ஸப்தம் ஸாஸ்த்ரம் –
லோக்யதே த்ருச்யதே இத்தால் பார்க்கப்படுவதால்-சசாஸ்த்ரம் முழுவதும் பாகவத பிரபாவம் சொல்லுமே )

பெரு மகளாய் குடி வாழ்ந்து
திருவாய்ப்பாடியிலே பஞ்ச லக்ஷம் குடிக்கு எல்லாம் ஸ்ரீ நந்தகோபர்
கர்த்ருத்வத்தால் வந்த பெருமையை யுடையரானால் போலே
இவளும் குடி வாழ்ந்து பெருமையை யுடையளானபடி –

பெரும் பிள்ளை பெற்ற யசோதை
தான் பெரு மகள்
பெற்றது பெரும் பிள்ளை
ஆகையால் பெருமைக்கு மேல் பெருமையாய்
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -என்று
இவன் பிறந்த பின்பு இறே அசோதை என்கிற பேர் நிலை நின்றது –

மருமகளை கண்டு உகந்து
அவன் கொண்டு போனான் என்று வெறுத்த காலத்திலும்
போனால் பிறக்கும் உறவு முறை சொல்ல வேண்டுகையாலே மருமகள் என்கிறாள் –

மணாட்டுப் புறம் செய்யும் கொலோ
பெண் பிள்ளையுடைய ஸுந்தர்யாதிகளையும் வ்யோமோஹாதி களையும் கண்டு
மடியிலே வைத்து அணைத்து -பெறாப் பேறு பெற்றோம் என்று உகந்து

மணாட்டுப் புறம் செய்யும் கொலோ
மணாட்டுப் பிள்ளையாக நினைத்து
புஷ்பாதிகளாலும் வஸ்திர பூஷணாதிகளாலும் நெஞ்சாலே செய்ய வேண்டுவன செய்யுமோ
ஜாதி உசிதமாகச் செய்ய வேண்டும் ஒப்பரவு செய்யுமோ

இத்தால்
ஆச்சார்யனானவன் தன் பக்கல் பவ்யதையாலே
அத்விதீயனான சிஷ்யனை
அது தானே -(ஆச்சார்ய அபிமானமே )_ -பற்றாசாக அங்கீ கரித்துக் கொண்டு போனாலும்
தன் இழவை மறந்து
அவனுடைய பேறு இழவுகளே தனக்குப் பேறு இழவுமாய் நடக்கும் என்னும் இடம் சொல்லிற்று யாய்த்து –

ஆச்சார்ய பரதந்த்ரன் சேஷ விசேஷத்துக்குப் போனால்
மதிமுக மடந்தையாரும் பிராட்டிமாரும் அங்கீ கரிப்பர்கள் என்னும் இடம் இங்கேயும் தோற்றுகிறது –

————

என்னுடைய இழவு ஸ்ரீ நந்தகோபர் நெஞ்சிலே படுமோ -என்கிறாள் –

தன் மாமன் நந்த கோபாலன் தழீ இக்கொண்டு என் மகள் தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மகளை பெற்ற தாயார் இனித் தரியார் என்னும் கொலோ -3 -8-5 –

பதவுரை

தம் மாமன்–என் மகள் தனக்கு மாமனாரான
நந்த கோபாலன்–நந்த கோபரானவர்
என் மகள் தன்னை–என் பெண்ணை
தழீஇக் கொண்டு–(அன்புடன்) தழுவிக் கொண்டு
செம்மாந்திரு என்று சொல்லி–(வெட்கத்தாலே தரையைக் கீறி முகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி
(பிறகு ஸர்வாங்க ஸெளந்தர்யத்தையுங் காணலாம்படி அவள் ருஜுவாக நிற்க)
செழு கயல் கண்ணும்–அழகிய மீன் போன்ற (அவளது) கண்களையும்
செம் வாயும்–சிவந்த அதரத்தையும்
கொம்மை முலையும்–(கச்சுக்கு அடங்காமல்) பெருத்திருக்கின்ற முலையையும்
இடையும்–இடுப்பினழகையும்
கொழு பணை தோள்களும்–பெருத்த மூங்கில் போன்ற தோள்களையும்
கண்டிட்டு– நன்றாகப் பார்த்து
இ மகளை பெற்ற தாயர்–“இப் பெண் பிள்ளையைப் பெற்ற தாயானவள்
இனி–இவளைப் பிரிந்த பின்பு
தரியார் என்னும் கொல் ஓ–உயிர் தரித்திருக்க மாட்டாள்” என்று சொல்லுவரோ?–

தன் மாமன் நந்த கோபாலன் தழீ இக்கொண்டு
தன்னுடைய மாமனாரான ஸ்ரீ நந்தகோபர்
பெண்ணை அணைத்து
மடியில் வைத்து

என் மகள் தன்னை
தம் மாமன் என்ற பின்பு இறே
என் மகள் -என்றதும் –
தம் மாமன் என்றதே இறே நிலை நிற்பது -ப்ரபஞ்ச அவலம்ப நியாயத்தாலே
(கோத்ரம் விஷயம் புகுந்த வீட்டார் படியே தான் )

அதுக்கு மேலே என் மகள் என்கையாலே
இது தானே போலே காணும் நிலை நிற்பது -மெய்மையை யுணர்ந்து -மிக யுணர்ந்தால் –
(ஆச்சார்ய அபிமானம் தான் நிற்கும்
ஆச்சார்ய சம்பந்தமே மிகவும் உணர்வது )

செம்மாந்திரே என்று சொல்லி
இவள் வ்ரீளை யால் நிலம் பார்க்க
செம்மாந்திரே என்று சொல்லி –
செம்மாப்பு -செவ்வாய்
முகம் முதலான அவயவங்களையும் ஸமுதாய சோபையையும் பார்த்தார் என்னும் இடம் தோற்றுகிறது
பரார்த்தமானால் வ்யக்தி தோறும் உபமான தர்சனமும் செய்யக்கூடும் இறே

செழும் கயல் கண்ணும்
அறாக் கயத்தில் தெளிந்த நீரில் மிளிர்ந்த கயல் போலும் பொருது நோக்கும் நோக்கும்

செவ் வாயும்
ஸ்வா பாவிகமாகச் சிவந்த வாய் இறே தனக்கு வசவர்த்தியான நான் கண்டு இருப்பதும்

கொம்மை முலையும்
பருவத்தின் அளவில்லாத பரிணாமத்தை யுடைய முலைகளும்

இடையும்
உபமான ரஹிதமான இடையும்

கொழும் பணைத் தோள்களும்
வளர் பணை போல் இருக்கிற தோள்களும்

கண்டு
கண்கள் நிறையும் அளவு கண்டு

இட்டு
ப்ரீதி தலையிட்டு
என்னுடைய இழவு நெஞ்சிலே தோன்றி

இம்மகளை பெற்ற தாயார் இனித் தரியார் என்னும் கொலோ
இவளைப் பிரிந்த பின்பு
இவளைப் பெற்ற தாயார் பிராணனோடு ஜீவித்து இருக்குமோ
அன்றியே
இவளுக்கு இத் தலையில் உண்டான நன்மைகளை நினைத்து ப்ரீதியாய் இருக்குமோ என்று கொலோ என்கிறாள் –

இத்தால்
ஆச்சார்ய பரதந்த்ரனானவனுடைய
ஞாத்ருத்வத்தையும் (செழும் கயல் கண்ணும் )
வாக்மித்வத்தையும் (செவ் வாயும்)
பக்தி பாரவஸ்யத்தையும் (கொம்மை முலையும் )
ஒன்றையும் பொறாத வைராக்யத்தையும் (இடையும்)
பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனத்தையும் (கொழும் பணைத் தோள்களும் )
(இது ஒரு அர்த்த பஞ்சகம் அன்றோ நமக்கு )
கண்டு
இவற்றை யுண்டாக்கின ஆச்சார்யனுடைய இழவு பேறுகளை நினைத்து
அவாக்ய அநாதர-என்று இருக்கிற வஸ்து விக்ருதி அடைந்து சொல்லும் பாசுரங்களை
அங்கு சேனை முதலி ஆழ்வார் தொடக்கமானவர்கள் கொண்டாடுவர் என்று காட்டுகிறது (என்னும் கொலோ)
இங்கு (சொல்லின் செல்வன் -பெருமாள் கொண்டாடிய ) திருவடியை நம் ஆச்சார்யர்கள் கொண்டாடுமா போலே –

(அருளிச் செயல்களில் பெண்ணைப் பெற்ற தந்தை பற்றிய பாசுரங்கள் இல்லையே
தாய்மாருக்கே ஏற்றம் )

—————-

ஸகடாஸூர நிரசன கர்வம் ஏதும் செய்யுமோ
அறிகிறிலேன் -என்கிறாள்

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழும் கொலோ
நாடு நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப் பற்றும் கொலோ – 3-8-6-

பதவுரை

சாடி இற பாய்ந்த பெருமான் சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான்,
வேடர்-வேடர்களையும்
மறக் குலம் போலே–மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே
என் மகளை–(ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை
வேண்டிற்று செய்து– தன் இஷ்டப்படி செய்து
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு–தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு
குடி வாழும் கொல் ஓ–குடிவாழ்க்கை வாழ்வனோ?
(அன்றி)
நாடும்–ஸாமாந்ய ஜனங்களும்
நகரும்–விசேஷஜ்ஞ ஜனங்களும்
அறிய–அறியும்படி (பஹிரங்கமாக)
நல்லது ஓர் கண்ணாலம் செய்து–விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து
தக்க ஆ–(ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக
கைப்பற்றும் கொல் ஓ–பாணி க்ரஹணம் பண்ணுவனோ?–

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்று செய்து
பர்வத சாரிகளையும்
பூமியிலே வன சாரிகளாய் வர்த்திக்கிறவர்களையும்
போலே ஸ்வைர சரியாய்

என் மகளை
என் வயிற்றில் பிறப்பையும்
தன் பிறப்பையும் நினையாமல்

கூடிய கூட்டமே யாகக் கொண்டு
தாங்கள் இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடினதே புருஷார்த்தமாகக் கொண்டு

குடி வாழும் கொலோ
குடிக்குத் தகுதி இல்லாத வாழ்க்கையிலே நிலை நிற்குமோ

சாடிறப் பாய்ந்த பெருமான்
சாடு இறப் பாய்ந்த பெருமான் ஆகையால்
அரு வழியான மதர் பட –தேர் வலம் கொண்டு செல்லும் செரு அழியாத மன்னர்கள்
மாளச் செய்த ஆண்மை கொலோ-(திரு மொழி -10 ) என்னுமா போலேயிலே
ஸகடாஸூர நிரஸனம் செய்த கர்வம் தான் குடிப் பிறப்பை மதியாது இறே

இந்த விரோதி நிரஸனம் தன்னாலே
தன்னையும் பொகட்டுப் போன மாதா பிதாக்கள் மேலே
அபவாத விரோதத்தையும் போக்கினவன் ஆகையாலே –

நாடு நகரும் அறிய
திருவாய்ப்பாடி சூழ்ந்த நாடும்
திருவாய்ப்பாடி தானும் அறிய
ஸ்ரீ நந்தகோபர் இருக்கையாலே திருவாய்ப்பாடியை நகரம் என்னலாம் இறே

நல்லதோர் கண்ணாலம் செய்து
உக்த லக்ஷணமும் லோகப் பிரஸித்தி யுண்டாகும் படி கல்யாணம் செய்து –

தக்கவா கைப் பற்றும் கொலோ
ஜாதி உசிதமான தர்மத்துக்குத் தகுதியாகப் பாணி கிரஹணம் செய்யுமோ

சாடிறப் பாய்ந்த பெருமான்
என் மகளை
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்று செய்து
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
தகாதவர் குடி வாழும் கொலோ
நாடு நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து
தக்கவாறு கைப் பற்றும் கொலோ –என்று அந்வயம்

இத்தால்
செடியார் ஆக்கையைப் பற்றி மற்ற ஒன்றும் அறியாத தேஹாத்ம அபிமானிகளும்
பர்வத சாரிகளாய் உயர்ந்த நிலத்திலே வர்த்திக்கிற ஸ்வ ஸ்வா தாந்தர்ய பரரும்
காம்ய தர்மாக்கள் ஆகையாலே
வேண்டிற்றுச் செய்யும் என்கிறது –

————-

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ – 3-8- 7-

பதவுரை

அண்டத்து அமரர்–பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
பெருமான்–தலைவனும்
ஆழியான்–திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான்
என் மகளை–என் பெண் பிள்ளையை
இன்று–இப்போது
பண்டம் பழிப்புக்கள் சொல்லி–பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி
பரிசு அற–வரிசை கெடும்படி
ஆண்டிடும் கொல் ஓ–ஆளுவனோ?(அன்றி,)
பண்டை மணாட்டிமார் முன்னே–முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே
கொண்டு–இவளைக் கொண்டு
குடி வாழ்க்கை வாழ்ந்து–(தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி
கோவலர் பட்டம் கவித்து–“இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி,
பாதுகாவல் வைக்கும் கொல் ஓ–அந்தப்புறக் காவலிலே வைப்பனோ?–

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான்
நித்ய விபூதியில் வர்த்திக்கிற ஸூரிகளுக்கு நிர்வாஹகனுமாய்
உப ஸம்ஹர என்னும்படி திவ்ய ஆயுதங்களோடே இறே திரு அவதரித்தது –
திரு அவதரித்த அன்றே மாத்ரு வசன பரி பாலனம் செய்தவன் –

இன்று என் மகளைப்
அன்று அங்கனம் வசன பரிபாலனம் செய்தவன்
தத் துல்ய மங்கள பரையாய் இருக்கிற என் வசன பரிபாலனம் செய்தானாகில் இப்பிரிவு வேண்டா இறே

பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
என் மகளைப் பிரித்துக் கொண்டு போனவன்
தான் பண்டப் பழிப்புகள் சொல்லாமல் பரிசு கொடுத்து ஆண்டு கொண்டு போருமோ

பண்டப் பழிப்புக்கள் சொன்னாலும் பரிசு கொடுத்து ஆண்டாரும் உண்டு இறே
பண்டத்துக்கு பழிப்பாவது -சேஷத்வ லக்ஷணம் குறை என்னலாம் இறெ
பரிசாவது தன்னைக் கொடுக்கை இறே
இரண்டும் தவிர்த்தால் ஆகலாம் விரகு இல்லை இறே

கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து
பாணி கிரஹணம் செய்து கொண்டு
குடிக்காத தகுதியாக வாழ்ந்து

கோவலர் பட்டம் கவித்துப்
கோபால ஸ்திரீகளுக்கு எல்லாம் நப்பின்னைப் பிராட்டி போலே யாகிலும்
பிரதான மஹிஷியாகப் பட்டம் கட்டி

பண்டை மணாட்டிமார் முன்னே
பண்டே பட்டம் கட்டி
வல்லபைகளாய் இருப்பார் முன்னே

பாது காவல் வைக்கும் கொலோ
பெரிய விருப்பத்தோடு அந்தப்புரக்காவல் வைக்குமோ
பாது -பாடு

இத்தால்
ஆச்சார்யனைப் பிரித்து -தேச விசேஷத்திலே கொண்டு போனாலும்
ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்கிற நேரிலே
பணையம் கொடுக்கிலும் இத் திசைக்குப் போக ஒட்டாத விருப்பத்தைக் காட்டுகிறது –
(நச புந ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் )

————-

தார்மிகரான ஸ்ரீ நந்தகோபருக்குத் தகுதியானவை செய்தால் ஆகாதோ என்கிறாள்

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும் கொலோ – 3-8-8-

பதவுரை

நங்காய்–பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான் மகன்–நந்தகோபருடைய பிள்ளையாகிய
குடியில் பிறந்தவர் செய்யும் குணம்– உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்
ஒன்றும்–ஒருவகைக் குணத்தையும்
செய்திலன்–செய்தானில்லை;
நடை–உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும்
ஒன்றும் செய்திலன்;
அந்தோ! அஹோ!
என் மகள்–என் மகளானவள்
(தயிர் கடையும் போது)
இடை–இடுப்பானது
இரு பாலும்–இரு பக்கத்திலும்
வணங்க–துவண்டு போவதனால்
ஏங்கி–மூச்சுப் பிடித்துக் கடைய மாட்டாள்) நடுநடுவே ஏக்கமுற்று
இளைத்து இளைத்து–மிகவும் இளைத்து
கடை கயிறே–கடைகிற கயிற்றையே
பற்றி வாங்கி–பிடித்து வலித்திழுப்பதனால்
கை தழும்ப ஏறிடும் கொல் ஓ–(தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?–

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ நடை ஒன்றும் செய்திலன்
ஒரு குடியில் பிறந்தவர்கள் செய்யும் கார்யம் செய்யா விட்டால்
மேல் நடக்கும் கார்யங்கள் குடி பிறப்பு இல்லாதார்க்கும்
லோக ஸங்க்ரஹ தயா செய்ய வேண்டி வரும் இறே
அவற்றில் ஏக தேசமும் செய்திலன்

நங்காய்
குடியில் பிறந்து
நடையில் தவறாத குண பூர்த்தியை யுடையவளே
இது எங்குத்தைக்கும் முன்னிலை

நந்தகோபன் மகன் கண்ணன்
குடிப் பிறப்பில் தாசாரதியும் ஒப்பல்ல
மண்ணும் விண்ணும் அளிக்கும் குண பூர்த்தியை யுடைய கண்ணன்
(வேடர் குல தலைவன் குகன் -குரங்கு குல தலைவன் ஸூ க்ரீவன் –
ராக்ஷஸ குல தலைவன் விபீஷணன் கூட நட்பு அவன் = )

மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் -என்னுமா போலே
இதுக்கு ஹேது என் பக்கலிலே இறே
(இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை என்னாதே நானே தான் ஆயிடுக என்ன வேணுமே
அந்தோ என்றதுக்கு இவ் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் )

இடை இருபாலும் வணங்க -இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி-கடை கயிறே பற்றி வாங்கி
இடம் வலம் கொண்டு கடைகை இறே
பற்றி இளைத்து ஏங்கி வாங்குகையாலே
என் மகளிடை இரு பாலும் வணங்க

கை தழும்பு ஏறிடும் கொலோ
கோவலர் பட்டம் கட்டினாலும் கடை கயிறு வலிக்க வேணும் இறே இடைச்சிகளுக்கு
தான் தன் பெண்ணின் அருமை சொல்லுகிறாள் அத்தனை –

இத்தால்
ஆச்சார்ய பரதந்த்ரரானவனை ஈஸ்வரன் விஷயீ கரித்து தன் நினைவாலே ஆச்சார்யன் ஆக்க
இவனும் பிரதம பதத்தில் மகார பிரதானமான ப்ரணவத்தில் ப்ரக்ருதி ஆத்ம விபாகம் செய்விக்கக் கடவோம்
(சாப்த ப்ராதான்யம் மகாரத்துக்கு -அர்த்த பிரதானம் அகாரத்துக்கு
சேஷ பூதன் என்று அறிய வேண்டியது ஜீவனுக்குத் தானே
ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -ப்ரக்ருதி ஜடம் -தேகம் வேறு ஆத்மா வேறு –
உபதேசித்தாலும் அறிவார் அல்பம் தானே )

என்று பலகாலும் சங்கல்பித்து உபதேசித்தாலும்
கைக் கொண்டு தன்னிஷ்டர் ஆவார் இல்லாமையாலே
இதர உபாய ஞான பக்திகளையும் (இடை இருபாலும் வணங்க)
பூர்வ சங்கல்பம் பலியா நிற்கச் செய்தேயும்
விவேக ஸூத்ரத்தைப் பற்றி (கடை கயிறே பற்றி வாங்கி )
உபதேசித்து இளைத்துச் செல்லுகையாலே
ஸ்வ ஸங்கல்பம் ஸங்கல்பிக்க ஸங்கல்பிக்கப் பழகிச் செல்லுமோ -கார்ய கரமாமோ -என்று
(கை தழும்பு ஏறிடும் கொலோ)
பிரதம ஆச்சார்யனானவன் சம்சயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது —

—————-

வெள் நிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள் கொலோ
ஒண் நிறத் தாமரை செம் கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-9-

பதவுரை

என் மகள் தான்–என் மகளானவள்
வெளிவரைப் பின் முன் எழுந்து–கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து
கண் உறங்காதே இருந்து– கண் விழித்துக்கொண்டிருந்து
வெள் நிறம் தோய் தயிர் தன்னை–வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை
கடையவும் வல்லன் கொல் ஓ–கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ?
ஒண் நிறம் செம் தாமரை கண்–அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும்
உலகு அளந்தான்–(திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான்
என் மகளை–என் பெண்ணை
பண் அறையாய் கொண்டு–(பண்பாடு இல்லாமல் ) தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு
பரிசு அற–(அவளுடைய) பெருமை குலையும்படி
ஆண்டிடும் கொல் ஓ–ஆளுவனோ?-

வெள் நிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன்
பூர்வமே உண்டான வெண்மை குன்றாமல் காய்ச்சிப்
பக்குவம் அறிந்து உறையிட்டுத் தோய்த்து வைக்கத் தோய்ந்த தயிரை
பூர்வ திக்கில் ஆதித்யன் வரவுக்கு ஹேதுவான வெள் வரை தோற்றுவதற்கு முன்னே
வெள் வரை பின்னாம்படி முன்னே

எழுந்து
துணுக் என்று எழுந்து இருந்து
ப்ராஹ்மணர் உபய சந்தியும் பார்த்து உதய அஸ்தமங்கள் பிற்பட எழுந்து இருக்குமா போலே இறே
இடைச்சிகளும் எழுந்து இருப்பது –
எழுந்து இருந்தாலும் நித்ரை பகை பாடும் இறே

கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள் கொலோ
அத்தையும் தவிர்க்கும் இறே கடைகையில் உண்டான ஊற்றத்தால் (த்வரையால் )

ஒண் நிறத் தாமரை செம் கண் உலகு அளந்தான்
ஒள்ளிய நிறத்தை யுடையதாய்
செவ்வி குன்றாமல் அப்போது அலர்ந்த தாமரை போலே சிவந்த திருக்கண்களை யுடையனாய்
லோக த்ரயத்தையும் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்டவன்

என் மகளைப் பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ
என் மகளைத் தனக்குப் பரதந்தரையாக்கி
இவளுடைய பண்பு பாராமல் தாழ்ந்த பணிகளில் ஏவிக் கொண்டு
இவள் பெருமை சிறுமை யாம் படி ஆளுமோ
பெருமை குன்றாத படியாக பரிசு இட்டு ஆண்டு போருமோ

இத்தால்
விஹித தர்மம் ருசி உத்பாதன ஹேதுவான பிரரோசக விதிகளிலும்
காம்ய விதிகளிலும் செல்லாமல் நிறம் பெறும்படி (வெள் நிறத் தோய் தயிர் தன்னை)
(விஹித தர்மம் -வர்ணாஸ்ரமம் -ருசி உத்பாதன ஹேதுவான -ருசி விளைக்க -பிரரோசக–தூண்டும் விதிகளிலும்-
காம்ய விதிகளிலும் செல்லாமல் நிறம் பெறும்படி -பகவத் கைங்கர்யம் ஒன்றே நோக்காக இருக்க வேண்டுமே )

உபதேச முகத்தாலே ஓர் அளவிலே வியவசாயத்தை நிறுத்த
சங்கல்ப பரதந்த்ரரான(அவனுக்குப் பயந்தே தேவர்கள் கார்யங்கள் )
தேவதாந்த்ர பிரகாசம் உண்டாவதற்கு முன்னே( வெள் வரைப்பின் முன் எழுந்து)

நிர் பரத்வ அனுசந்தானம் செய்யாது இருந்து (கண் உறங்காதே இருந்து)
மகார பிரதானமான மந்த்ர உபதேசத்தாலே ( கடையவும் தான் வல்லள்  கொலோ)
ப்ரக்ருதி ஆத்ம விபாகம் செய்ய வல்லனோ

அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வாதந்தர்யமும் அரும்படியான வியாபாரங்களைச் செய்து
அநந்யார்ஹ சேஷத்வமும் அத்யந்த பாரதந்தர்யமும் உண்டாக்க வல்லார் யாரோ
என்று எங்கும் பார்க்கையாலே (ஒண் நிறத் தாமரை செம் கண்)
அப்போது அலர்ந்த செந்தாமரை போலே சிவந்த திருக்கண்களை யுடையவனாய் இறே உலகு அளந்ததும் –

என்னுடைய சிஷ்யனை ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களைக் கொள்ளாதே
விஷய அனுரூபமான வ்ருத்திகளை (பண்ணறையாப் பணி கொண்டு-த்வரை மிக்கு மேல் விழுந்து வ்ருத்திகள் )
ஸங்கல்ப அனுரூபமாகவும் கொண்டு
தத் ஆநந்தா அநு மோதனம் -என்கிற பரிசில் இடாமல் ஆளுமோ
பரிசில் இடாமை -அநாதாரம் இறே –

———

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக்கட்டுகிறார் –

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 -10-

பதவுரை

வழி இடை–போகிற வழியிலே
(அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக)
மாற்றங்கள் கேட்டு–வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
மாயவன் பின் வழி சென்று–கண்ண பிரான் பின்னே போய்
ஆயர்கள் சேரியிலும் புக்கு–திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு
அங்குத்தை மாற்றமும் எல்லாம்–அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து
தாய் அவள்–தாயானவள்
சொல்லிய–சொன்ன
சொல்லை–வார்த்தைகளை
தண் புதுவை பட்டன் சொன்ன–குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவை யாகிய
தூய–பழிப்பற்ற
தமிழ் பத்தும்–தமிழ் பாட்டுக்கள் பத்தையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
தூ மணி வண்ணனுக்கு–அழகிய மணி போன்ற நிறத்தை யுடைய கண்ண பிரானுக்கு
ஆளர்–ஆட் செய்யப் பெறுவர்–

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
உடையவன் உடைமையைக் கொண்டு போகையாலும்
உடையவன் காட்டிக் கொடுக்கக் கொண்டு போகாமையாலும்
குண தோஷங்கள் இரண்டும் உபாதேயமாத் தோற்றுகிற
ஆச்சர்யத்தை நினைத்து மாயவன் என்கிறாள்

அவன் போன வழியில் தானும் வழிப்பட்டுச் சென்று
வழி எதிர் வந்தாரை
முன் போனவர்களுடைய ஸ்திதி கமன சயன பிரகாரங்களை வினவிக் கேட்டு

ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்-தாயவள் சொல்லிய சொல்லை
வழி எதிர் வந்தாரை
மதுரைப் புறம் புக்காள் கொலோ -என்று கேட்டும்
எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சாமோ குணமாமோ -என்றால் போலே கேட்டும்
திருவாய்ப்பாடியில் தோரணம் முதலான அலங்காரங்களும் வாத்ய கோஷங்களும் கண்டு கேட்டி கோளோ -என்று கேட்டும்
ஆயர்கள் சேரியிலே சென்று யசோதை ஸ்ரீ நந்தகோபருடைய ஆதார அநாதாரங்கள் எல்லாம் வினவி வினவிக் கேட்டும்
அவர்கள் சொன்ன விசேஷங்களும் எல்லாம்
திருத் தாயாரானவள் சொன்ன பிரகாரங்களை –

அவள் என்று -விசேஷித்த தச் சப்தத்தால்
அதி குஹ்ய பரம ரஹஸ்யம் என்று தோற்றுகிறது

இவற்றை வியாஜமாகக் கொண்டு
தம்முடைய பக்தி ரூபா பன்ன ஞானத்தை மங்களா ஸாஸன பர்யந்தமாக –

தண் புதுவை பட்டன் சொன்ன
போக்யாதிகளால் குறைவற்று இருக்கையாலும்
அவை தான் மங்களா ஸாஸன உபகரணங்கள் ஆகையாலும்
திரு மாளிகைக்கு உண்டான குளிர்த்தியைத் தம்மோடே சேர்த்து அருளிச் செய்கிறார்
இப்படிப்பட்ட திருமாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

தூய தமிழ்
தமிழுக்குத் தூய்மை யாவது
ஸாஸ்திரங்கள் போலே வாசகத்துக்கு வாஸ்யம் அன்றிக்கே வாசகத்துக்கு வாசகமாய்
நடை விளங்கித் தோற்றுகையும்
அநுதாப ப்ரதாநம் ஆகையும் (வல்வினையேன் போல் அநுதாப ப்ரதாநம் )
ப்ரக்ருதி ப்ரத்யய தாதுக்களாலே ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் போல் விகல்பிக்க ஒண்ணாது இருக்கையும்
ப்ரக்ருதி ப்ரத்யய விகல்பம் உண்டே யாகிலும் தாது அர்த்த விகல்பம் இல்லாமையாலே
க்ரியா விகல்பங்களும் வாசக ஸித்தி நிர்ணா யகங்களாய்
நின்றனர் இருந்தனர் -என்று க்ரியா விசிஷ்டமாய்த் தோற்றுகையாலும்
சப்த ரூபமான ப்ரக்ருதி லிங்க த்ரயாத்மகமாய் நாம் அவர் என்று விசேஷித்துத் தோற்றுகையாலும்
ஸகல ஸாஸ்த்ர நிபுணராய் இருக்கிற நம் ஆச்சார்யர்களும் இவ்வாழ்வார் பாசுரங்களே நிர்மலங்கள் என்று
விசேஷித்து ஆதரிக்கையாலும் தூய தமிழ் என்னலாம் இறே —

பத்தும் வல்லார்
உஜ்ஜீவனத்துக்கு ஓர் ஒன்றே போந்து இருக்கச் செய்தேயும் -பத்தும் வல்லார் -என்கிறது –
அதனுடைய ரஸ்யதையாலே —
வல்லார் என்றது
இவர் தம்மைப் போலே மங்களா ஸாஸன பர்யந்தமாக அனுசந்திக்க வல்லார் என்றபடி –

தூ மணி வண்ணனுக்கு ஆளரே
ப்ரமாணத்துக்கு உண்டான தூய்மை ப்ரமேயத்திலும் காணலாம் –
தூ மணி வண்ணன் என்கையாலே

இதில் சதுர்த்தி –
கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு என்னுமா போலே –
ஆளரே -என்ற
ஏவகாரத்தாலே பத த்ரயமும் சதுர்த்தி பிரதானமாய் இருக்கிறது

இது மங்களா ஸாஸனமான படி என் என்னில்
ஆச்சார்ய பரதந்த்ரனாய்ப் போரு கிறவனை ஈஸ்வரன் இதற்கு பூர்வமேவ கிருஷி பண்ணினான் தான் ஆகையாலே
தன்னளவில் சேர்த்துக் கொண்டு போக
அத் தலைக்கு மங்களா ஸாஸனம் செய்ய வல்லனோ மாட்டானோ என்று ஆச்சார்யனானவன் பின் சென்று
எதிர்வந்தாரையும் ஊரில் நின்றாரையும் வினவிக் கேட்கையாலே இது மங்களா ஸாஸனமாகக் கடவது

வழி எதிர் வந்தார் என்கிறது
உபாதேய தசை மூட்டி மீண்டவர்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: