ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-7—ஐய புழுதி உடம்பு அளைந்து–

இப்படி சதாசார்ய பரதந்த்ரரானவர்களை
அந்த ஸஜாதீயர் முகத்தாலும்
ஈஸ்வரனுடைய ப்ராவண்ய வ்யாமோஹ அதிசயத்தாலும்
இவர்கள் தங்களுக்கு அவன் பக்கல் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலும்
மீட்க அரிதாயத் தோன்றுகையாலும்
மீளாது போது வரும் அவத்யத்தாலும்
அபாய பாஹுள் யத்தாலும்
ஹித காமனுமாய்
பரம க்ருபாளுவுமான ஆச்சார்யன்
போர வெறுத்து அருளிச் செய்கிற பாசுரத்தை
அந்யாபதேச வ்யாஜத்தாலே அருளிச் செய்கிறார் இத் திரு மொழியிலே –

இது தானே
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை
முதலாக இவ்வர்த்தம் வந்த வந்த இடங்களிலும் துல்ய விகல்பமாகவும் சென்றது இறே
(பாகவத அனுபவம் சொல்ல வந்த இடங்களிலும் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் என்பதால்
துல்ய விகற்பம் இங்கு -வ்யவஸ்தித விகற்பம் இல்லையே )

இது தான்
யோக ப்ரஷ்டர் ஊர்வசியை வர்ணிக்குமா போலே இருப்பது ஓன்று இறே
(அதே போல் பாகவத அனுபவம் நழுவினாலும்
பகவத் அனுபவத்தில் விழுவது ஊர்வசி மடியில் விழுமா போலே
இந்த நிலை புரிந்தால் தான் திருத்தாயார் இங்கு பயப்பட்டது புரியும் )

இது தான் (கேவல பகவத் அனுபவம் )அநு ப்ரவேச அந்வய சக்தியாலே விஷய வஸ்திதமாய் இறே இருப்பது –
(பகவான் தானே அனுபிரவேசம் பண்ண வல்லவன்
பாகவதர்கள் அப்படி இல்லையே
உலக விஷய தோஷம் சொல்லி பகவத் விஷயத்துக்குச் செல்லலாம்
இங்கு அவன் ஸ்வா தந்திரம் ஒன்றையே கண்டு பாகவதர்களைப் பற்ற வேண்டுமே )

இது தான் சாதாரணத்திலும் உண்டு இறே
ஆனாலும் அது உபாஸக அனுக்ரஹ ஹார்த்தமாகையாலே வ்யவஸ்திதிதம் அன்று இறே –
(ப்ரஹ்ம வித்யை அறிந்தவர்கள் உபாசனத்தில் இழிவார்கள்
அந்தர்யாமி அனுபவிக்கும் எல்லார் இடத்திலும் உண்டு
நாரதர் ஸூ கர் போல்வார் -வசிஷ்ட வாமதேவர்களை விட ஏற்றம்
பாகவத பெருமை பேசிய இவர்கள் அவர்களில் ஏற்றம் என்றவாறு )

———

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலைந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்தும் இலள்
பைய அரவணைப் பள்ளியானோடு கை வைத்து இவள் வருமே -3 -7-1 –

பதவுரை

இவள்–இச் சிறு பெண்ணானவள்
ஐய புழுதியை–அழகிய புழுதியை
உடம்பு அளைந்து–உடம்பிலே பூசிக் கொண்டு
பேச்சும் அலந்தலை ஆய்–ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய்
செய்ய நூலின் சிறு ஆடை–சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை
செப்பன்–செம்மையாக
[அரையில் தங்கும்படி]
உடுக்கவும் வல்லள் அல்லள்–உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்;
இவள்–இப்படியொரு பருவத்தை யுடையளான இவள்
சிறு தூதையோடு–(மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும்
முற்றிலும்–சிறு சுளகையும்
கையினில்–கையில் நின்றும்
பிரிந்து இவள்–விட்டொழிகின்றிலள்;
இவள்–இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள்
பை அரவு அணை பள்ளியானொடு–சேஷ சாயியான எம்பெருமானுடனே
கை வைத்து வரும்–கை கலந்து வாரா நின்றாள்–

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலைந்தலையாய்
ஐய –
அழகாதல்
அந்வயம் ஆதல்
அந்ந்வயமானால் மணலைக் காட்டும் இறே
(மணலில் சேறு படிந்து புழுதி ஆகும் அன்றோ )

உடம்பு எல்லாம் புழுதி ஆவான் என் என்றால் –
விளையாடிக் புழுதி அளைந்தேன் -என்று சொல்லலாம் இறே
அது சொல்லாமல்
பந்து கழல் அம்மானை என்றால் போலே சில அநந்வய பாஷாணங்களைக் கேட்க்கையாலே
இவள் பேச்சும் அலைந்தலையாய் -என்கிறாள்

இவள் -என்று
பருவத்தை உறைக்கப் பார்க்கிறாள்

பேச்சும் -என்ற அபி யாலே
(உள்ளம் கலங்கியது நிச்சயம் -அதுக்கும் மேலே )
இவள் ஒப்பனை குலைந்து வந்த விக்ருதியையும் காட்டுகிறது

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்
சிவந்த நூலாலே சமைக்கப்பட்ட சிறிய ஆடை உடுக்கவும் வல்லள் அல்லள்-
அதாவது
அவயவாந்தரத்தில் வாசி அறியாமல் சுற்றுகையும்
மத்யம அங்கம் பேணிச் சுற்ற அறியாமையும்

அபியாலே
செவ்வியாக உடுத்து விட்டாலும் பேண அறியாள் என்னும் இடம் தோற்றுகிறது
பட்டு உடுக்கும் -என்னக் கடவது இறே

கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்தும் இலள்
விளையாடு சிறு தூதையும் சிறு சுளகும் கை விடாதவள்
கையில் இரண்டும் காண்கிறிலோம்
இவள் இங்கனே யான பின்பு இவள் மாட்டாது இல்லை இறே

பைய அரவணைப் பள்ளியானோடு கை வைத்து இவள் வருமே
கிருஷ்ணன் அளவே அன்றிக்கே
அழகிய திரு அனந்தாழ்வான் மேலே பள்ளி கொள்கிற ஷீராப்தி நாதன் அளவும் சென்று
க்ருத சங்கேதியாய்
பூர்வ ஸ்ம்ருதி தலையெடுத்து வரவும் வல்லள் என்று தோற்றா நின்றது

வருமே
அபி என்று
பரத்வத்து அளவும் காட்டும் இறே –

இத்தால்
தேஹ தாரண ஹேதுவாக பின்ன விஷய க்ரஹணத்தாலே
(உலக விஷயத்தில் மாறின பகவத் விஷய க்ரஹணத்தாலே )
பின்ன பிரகாச த்வார இந்திரிய ரசம் ஒழிந்த
விஷய இந்த்ரியப் போகம் இறே த்யஜிக்கலாவது

ப்ராப்த விஷய தோஷம் உண்டானால் இந்திரியங்களும் தேகமும் போரச் சேரும் இறே
(பகவத் விஷயத்தில் அவன் அனுபவம் அவன் சந்தோஷம் உண்டானால் -அப்பொழுது சேரும் -பயன் பெரும் )

ஆனால் அது தன்னை ஆச்சார்ய முகத்தால் சொல்லாதே அந்நிய பரமாகச் சிலவற்றைச் சொல்லலாமோ என்னில்
அவன் தான் ப்ராப்த விஷய தோஷத்தால் வருமவையும்
தூரத பரி ஹரணீயம் என்று இறே சொல்லி வைப்பதும் –
அதுக்கு அஞ்சி அந்நிய பரமாய் அநந்வயங்களும் ஆனவற்றைச் சொல்லி யாகிலும்
தத் கால உசிதமாகப் பிழைக்கவும் வேணும் இறே –
(வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமானைப் பற்ற வேண்டுமே )

(ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்கச் செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

இப்படி பர தாராதி போகம் -ஸ்வ -பர -விநாச ஹேது வாகைக்கு அடி -சாஸ்திர நிஷித்தமாகை -இறே –
இங்கன் அன்றிக்கே -சாஸ்திர விஹித விஷயமான -ஸ்வ தார போகத்துக்கு குறை இல்லையே -என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
விசிஷ்ட வேஷ விஷயீயான சாஸ்த்ரத்தாலே விதிக்கப் பட்ட -ஸ்வ தாரத்தில் போகம் –
தாத்ருச சாஸ்திர நிஷித்தமான -பர தார போகம் போலே –லோக விருத்தமும் -அன்று –
செம்பினால் இயன்ற பாவையை தழுவுகை முதலான கோர துக்க அனுபவம் பண்ணும் நரக ஹேதுவும் அன்று —
இப்படி ப்ரத்யஷ பரோஷ சித்தங்களான லோக விருத்த நரக ஹேதுக்கள் இரண்டும் அற்று இருக்கச் செய்தே –
அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய் –
சாந்தோதாந்த உபதர ஸ்திதி ஷூச்சமாஹிதோ பூத்வாத்மந்யே வாத்மானம் பச்யேத்-இத்யாதிகளாலும் –
திருமந்த்ராதிகளாலும் -உபாசகனோடு பிரபன்னனோடு வாசி அற-இருவருக்கும் -விஷய போகம் ஆகாது என்னும்
இடத்தைப் பிரதிபாதிக்கிற -வேதாந்தத்துக்கு விருத்தமாய் -தோஷ தர்சனத்தாலும் -அப்ராப்த்த தர்சனத்தாலும் –
விஷய போகத்தை அறுவறுத்து இருக்கும்
ஆசார்ய பிரதானரான சிஷ்டர்களாலே ஹேயம் என்று நிந்த்திகப் பட்டு இருக்குமதாய் –
அப்ராப்த விஷய விரக்தி பிரியனான ஆசார்யனுக்கு அநபிதம் ஆகையாலே –
ஆசார்ய முக கமல விகாச அனுபவ ரூப ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமாய் –
இப்படி அநேக அநர்த்தா வஹமாய் இருக்கையாலே -இவ் அதிகாரிக்கு
பரித்யாஜ்யம் -என்றபடி –

சாஸ்திரம் விஹிதம்-விசிஷ்ட விஷயம் -வர்ணாஸ்ரமம்-சரீரத்துடன் உள்ள ஆத்ம வேஷம் –
நிஸ்க்ருஷ்ட சாஸ்திரம் ரஹஸ்ய த்ரயம் தானே –
கணவனும் மனைவியும் -நிலம் கீண்டதும் -சொல்லிப்பாடி -அது குற்றம் இல்லை -அநந்ய போகத்வ ரூபம் -ஸ்வரூபம் விருத்தம் ஆகக்கூடாதே
நிரந்தர ஸ்னேஹ ரூபம் -பக்த்யா அநந்யா ஸ்நேஹம்-வேதாந்தம் விதிக்கும் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சிந்தனை வேணும்
அந்தரம் -நடுவே குறுக்கே -அநந்தரம் தடங்கல் இல்லாமல் – அநந்யத்வம் பங்கம் உண்டாகும் –
எம்பார் போல்வார் -விசிஷ்ட வேஷத்திலும் -எங்கும் இருட்டு காண வில்லையே விரக்த அக்ரேஸர்
கைங்கர்யம் முகப்பே கூவி பணி -அர்த்தி அபேக்ஷ நிரபேஷமாய் இருக்குமே

ஞாலம் உண்ட வண்ணத்தைத் தான் பல காலும் சொல்லிச் சொன்னேனோ என்று
அஞ்ச வேண்டும்படி இறே அம்மனை சூழ்ச்சி இறே
இது தான் பக்தி ரூபா பன்ன ஞானம் கை வந்தார் வார்த்தை இறே
இதுக்கு எல்லாம் ஸம்ஸ்காரம் எங்கே
விஷய அனுரூபம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்து சேஷத்வ அனுரூப ஸ்வரூபத்தை
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே மறைக்க வல்ல பரிபாகம் உண்டோ என்று தோற்றுகிறது –
விஷய தோஷ போகம் உண்டானாலும் லீலா ரஸ போக உபகரணங்களாக இறே இவள் புத்தி பண்ணுவது
லீலா உபகரணங்கள் போக உபகரணங்களோடு அவன் தன்னையும் ஒன்றாக இறே பிரதிபத்தி பண்ணி இருப்பது –
உக்கமும் தட்டு ஒளியும் –என்றவை முதலான உபகரணங்களோடே அவன் தன்னையும் கூட்டித் தர வேணும் என்றது இறே
அன்றியே
ஸ்வரூப விவேக உபகரணத்தையும் (ஆத்ம ஞானத்தையும் )
உண்ணாச் சோற்றிலே(லௌகிக விஷயம் -உண்ணும் சோறு தானே கண்ணன் ) வ்யாவ்ருத்தி யாகவுமாம்
இரண்டு இடத்திலும் கை வைத்து என்னையும் அவனையும் சேர்க்கிற பிரகாரம் எங்கனேயோ தான் –
(உலகத்துக்கு பயப்பட்டு அவனை அடைய த்வரை கூடாது என்கிறீர்களே -இது சேருமோ என்றவாறு )

———————-

இவள் சொலவும் செயலும் மிகவும் வேறுபட்டு இரா நின்றதீ என்கிறாள் –

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு இணங்கித்
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே – 3-7 -2- –

பதவுரை

வாயில்–(இம் மகளுடைய) வாயில்
பல்லும் எழுந்தில–பற்களும் முளைக்க வில்லை;
மயிரும் முடி கூடிற்றில–மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.
இவள்–இப்படிப்பட்ட இவள்
இவண்–இந்தப் பருவத்தில்
சாய்வு இலாத–தலை வணக்கமில்லாத
குறுந்தலை–தண்மையில் தலை நின்ற
சில பிள்ளைகளோடு–சில பெண் பிள்ளைகளோடு
இணங்கி–ஸஹ வாஸம் பண்ணி
(அதற்குப் பலனாக)
தீ இணக்கு இணங்காடி வந்து–பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து
(இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்)
தன் அன்ன–தனக்கு ஒத்த வார்த்தைகளை
செம்மை சொல்லி–கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்;
மாயன் மா மணி வண்ணன் மேல்–அற்புதச் செய்கைகளையும் நீல மணி நிறத்தை யுமுடையனான கண்ண பிரான் விஷயத்தில்
மாலுறுகின்றாள்–மோஹப்படுகிறாள்–

வாயில் பல்லும் எழுந்தில
வாயில் பல் என்றது முன் வாயில் பல் என்றபடி –
அது விறே முற்படத் தோற்றுவது –

மயிரும் முடி கூடிற்றில-
மயிரும் சேர்ந்து முடிக்கக் கூடிற்று இல

சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு இணங்கித்
தாய்க்கு அடங்காமையிலே தலை நிற்க வல்ல சிறுப் பெண்களோடே இணங்கி

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து
ஜாதி உசிதம் இல்லாத விளையாட்டில் நெஞ்சு பொருந்தி
அவன் ஸுந்தர்யத்திலே போக்ய புத்தி பண்ணி வந்து
அதிலே முதிர நடந்து வந்து –
(ஸ்வரூபத்தில் ஈடுபட்டு கைங்கர்யமே புருஷார்த்தம் என்று தானே ஆச்சார்யர் உபதேசம் )

இவள்
அம்மே இது இறே பருவம்

தன் அன்ன செம்மை சொல்லி
தன் செயலுக்குத் தகுதியான செவ்வைக் கேட்டை செவ்வையாகத் தானே
பிரதிபத்தி பண்ணிச் சொல்லிச் சொல்லி

மாயன் மா மணி வண்ணன் மேல்
இவளை இப்படி அநந்வயமாகப் பேசுவிக்க வல்ல ஆச்சர்யத்தை யுடையவன்
இது தான் விளைத்ததும் மேலீடான வடிவு அழகைக் காட்டி இறே

இவள் மால் உருகின்றாளே
அவன் இவள் மேல் மாலுறுகை கர்தவ்யம்
அது காணாது ஒழிந்தால் இவள் பக்கல் எனக்கு உண்டான ஆபி மாநிக பிராந்தி தான் ஒழியுமாம் இறே
இவள் பக்கல் தோஷ குண ஹானிகள் மிக மிக (வளர்ந்து வர )
(சேராச் சேர்க்கை தோஷம் -அவன் இவள் மேல் மால் இன்றி இவள் அவன் மேல் மாலுறுகை குண ஹானி )
இவள் பக்கல் எனக்கு உண்டான வ்யாமோஹமும் மிகுந்து செல்லும் அத்தனையோ தான் –

இத்தால்
பூர்வ வியவசாய லேச அங்குரமும் இவள் வாக் மித்வத்திலே காண்கிறிலோம் (வாயில் பல்லும் எழுந்தில)
மதி எல்லாம் உள் கலங்குகையாலே நாநா விஷய ஸா பேஷமான நாநா ரூப ப்ரதி பத்திகளும்
ஏக விஷய நிகமனமாம் படி கூடிற்று இலை (மயிரும் முடி  கூடிற்றில)
மொய் பூங் குழற்குறிய -(திரு விருத்தம் )-என்னுமா போலே

சதாசார்யன் கையிலும் அடங்காமையாலே நிலை நின்று நின்றோம் என்கிறது
(தாயாரே சதாச்சாச்சார்யார்-சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு)
தன்னையும் அறியாத சிறுமை யுடையரான பரதந்த்ரரோடே ஸஹ வாஸம் செய்து
அவர்கள் கொண்டு போய் அவனோடே சேர்க்க (தீ இணக்கு  இணங்கு ஆடி)

அவன் நல் இணக்கிலே இன்றியிலே தீ இணக்கிலே சேர்த்து
ஸ்வரூப அநு ரூபமான போக்ய போக்த்ரு வர்க்கங்களை
(அஹம் அன்னம் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் )
மாறாடும்படியான ருசியிலே அவகாஹிப்பிக்க

அதிலே நெஞ்சு பொருந்தி வந்து வேறுபாடு ஆஸ்ரயத்தில் பொருந்தாமை தோன்றி இருக்கச் செய்தேயும்
அதுக்குத் தகுதியான வியாபாரங்களை ஸ்வரூபமாகச் சொல்லிச் சொல்லி (வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி)
ஸதாசார்ய பர தந்த்ரையான இவளை
இப்படி பிரமிக்கும் படி பண்ணின ஆச்சர்ய சக்தி யுக்தனுடைய ஸுந்தர்யத்திலே காணும்
இவள் வ்யாமோஹம் மிகுந்து செல்கிறது (மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே)
என்று ஸதாசார்யனானவன் ஸச் சிஷ்யனை நியமிக்க

அதிலே கருதினவனை
ஸ ப்ரஹ்மச்சாரிகள் தங்களுடன் சேர்த்து பகவத் விஷயத்திலே மூட்ட
மூட்டின பிரகாரங்களைப் பல பல பிரகாரங்களாலும் அறிந்த ஆச்சார்யனானவன்
பரிபாகம் பிறப்பதற்கு முன்னே மூட்டினவர்களையும்
மூண்ட சிஷ்யனையும்
கர்ஹிக்கிறானாய்ச் செல்லுகிறது –

————

சங்கை ப்ரத்யக்ஷம் போலே தோற்றா நின்றது என்கிறாள் இப் பாட்டில் –

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கல் உறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை
சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே – 3-7-3- –

பதவுரை

(இவள்)
பொங்கு–நுண்ணியதாய்
வெள்–வெளுத்திரா நின்ற
மணல் கொண்டு–மணலாலே
முற்றத்து–முற்றத்திலே
சிற்றில்–கொட்டகத்தை
இழைக்கலுறிலும்–நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது–சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்)
இழைக்கலுறாள்–இழைக்க நினைப்பதில்லை;
(இவளுக்கோ வென்றால்)
இன்னம்–இன்றளவும்
கொங்கை–முலைகளானவை
குவிந்து எழுந்தில–முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை;
இவளை–இப்படி இளம் பருவத்தளான இவளை
கோவிந்தனோடு சங்கை ஆகி–கண்ண பிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து
என் உள்ளம்–என் நெஞ்சமானது
நாள் தொறும்–ஸர்வ காலமும்
தட்டுளுப்பாகின்றது–தடுமாறிச் செல்லா நின்றது-

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கல் உறில்
முன்னே
கை வைத்து இவள் வரும் (1)என்றும்
மால் உறுகின்றாளே (2)-என்றும்
சொல்லிப் போந்தவை எல்லாம்
இவள் சிற்றிலிலே பிரத்யக்ஷமாகா நின்றது இறே

வண்டல் நுண் மணல்
எக்கலிடு நுண் மணல் -என்னுமா போலேயும்
தாவள்யத்தையும் சுத்தியையும் யுடைத்தான மணலைக் கொண்டு –

முற்றத்து சிற்றில் இழைக்கல் உறில்
முற்றத்திலே கொட்டகம் இடுகையில் ஒருப்படில்

இடில்
சங்கை பரிஹரிக்கைக்காக ஒருப்படில்
சங்கை பரிஹரிக்கிறதும் தன் நினைவாலே இறே

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள்
சங்கும் -மடுத்தூதிய சங்கும்
சக்கரமும் -அருளார் திருச்சக்கரமும்
தண்டு -அருள் என்னும் தண்டும்
வாள் -நாந்தகம் என்னும் ஒண் வால்
வில் -நாண் ஒலிச் சார்ங்கம் என்னும் வில்
இவை முதலான அசாதாரண சிஹ்னங்களைத் தன் பருவத்தார்க்கு உதவினவை -என்று இழைக்குமது ஒழிய
வேறு தானும் நானும் போந்த ஸ்வரூப அனுரூப ப்ராவண்யமும் இழைக்கலுறாள்
தன்னுடைய பூர்வ அவஸ்தையையும் உபகார ஸ்ம்ருதியையும் நினைக்கில் இறே இழைக்கல் ஆவது –

உறில்-என்ற யதியாலே
ஸ்தப்த்தையாய் நிற்றல்
சில அநந்வய பாஷாணங்களைச் சொல்லுதல்
செய்யும் என்னும் இடமும் தோற்றுகிறது

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
முலைகள் ஆனவை வாசி தோன்றின வில்லை -ஒரு வெளுப்பானது ஒழிய
முழு முலை முற்றும் போந்தில -என்னக் கடவது இறே
இவள் தான் யுவதி யானாலும் தாயாருக்கு இவளுடைய சைஸவம் இறே தோற்றுவது –

கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி
அத்யந்தம் ஸூலபனாய்
ரக்ஷகனானவனோடே ரஷ்யமாகவும் ஸூலபை யாகவும் மாட்டாத இவளை
ஸம்ஸ்லிஷ்டையாக ஸம்சயித்து

என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பாகின்றதே
என்னுடைய மனஸ்ஸானது நாள் தோறும் தடுமாறிச் செல்லா நின்றது

தட்டுளுப்பு -தடுமாற்றம்

அன்றியே
ஜல பாத்ர கதமான லவணம் போலே கரையும் என்னுதல்

அன்றியே
தட்டுளுப்பு
உளுவுடைய மரத்தை உளுப்பு என்றதாய்
அம் மரத்தைத் தட்டும் தோறும் சிதிலமாமா போலே என்னுதல் —

இத்தால்
விஷயங்களில் கிளம்பி பிரகாசிக்கிற இந்திரியங்களை உபகரணம் ஆக்கிக் கொண்டு (பொங்கு வெண் மணல் கொண்டு)
பின்னானார் வணங்கும் பிரதம பதத்தில் நின்று நினைக்கப் புக்காளாகில்
(மத்யம பாகவத -சரம ஆச்சார்ய பரம் இல்லாமல் பிரதம பதத்தில்
முற்றம் -திவ்ய தேசம் -அரங்கன் திரு முற்றம் -நின்று
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள்)

அவளிலும் காட்டில் அவனுக்கு அநந்யார்ஹரான மத்யம பத த்வய நிஷ்டயையும்
சரம பத த்வய நிஷ்டையையும் யுடையவர்களை உத்தேச்யராக த்ரிவித கரணத்தாலும் பிரதிபத்தி பண்ணி
சேஷத்வ அனுரூபமாக பரதந்த்ரையான தன்னையும்
இவ் வர்த்தத்தை உபதேசித்த என்னையும்
இத்தால் வந்த உபகார ஸ்ம்ருதியையும் பிரதிபத்தி பண்ணா விட்டால்
சந்தேகமும் ஈடுபாடும் போனால் ஆகாதோ என்று ஆச்சார்யன் மிகவும் வெறுத்தான் என்னும் இடம் தோற்றுகிறது

(மத்யம பத த்வய நிஷ்டயையும்-நமஸ் அர்த்தம் அறிந்து பாரதந்தர்யம் அறிந்து
சரம பத த்வய நிஷ்டை -அவன் உகப்புக்காகவே கைங்கர்யம் )

இதுக்கு எல்லாம் பரிபாகம் எங்கே
நாநாவான பக்தி விசேஷங்கள் எல்லாம் ஒருத்தலைத்தால் இறே பக்தி விசேஷம் தான் உண்டாவது
இன்னம் -என்கையாலே
சேதனனிலும் ஈஸ்வரனிலும் காட்டிலும் பரிபாக சா பேஷன் ஆச்சார்யன் என்று தோற்றுகிறது –

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கல் உறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள்
கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே –என்று அந்வயம்

—————-

இப்பாட்டால்
தத் துல்யரான அனுகூல ஜனங்களை வெறுத்த பாசுரத்தை
தோழிமார் மேலே வைத்து அருளிச் செய்கிறார் –

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே – 3-7- 4-

பதவுரை

ஏழை–சாபல்யமுடையவளும்
பேதை–அறியாமை யுடையவளும்
ஓர் பாலகன்–இளம் பருவத்தை யுடையளுமான
என் பெண் மகளை–எனது பெண் பிள்ளையை
தோழிமார் பலர் வந்து–பல தோழிகள் அணுகி வந்து
எள்கி–(விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து
கொண்டு போய்–அழைத்துக் கொண்டு போய்
ஆழியான் என்னும்–ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான
ஆழம் மோழையில்–ஒருவராலும் நிலை கொள்ள வொண்ணாத கீழாற்றில்
பாய்ச்சி–உள்ளுறத் தள்ளி
அகப்படுத்தி–(அதிலே) அகப்படுத்தி
செய்த சூழ்ச்சியை–(இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை
ஆர்க்கு உரைக்கேன்–யாரிடம் முறையிடுவேன்?;
(இம் மகளோ வென்றால்)
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்–“அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற
பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள்–

ஏழை
பற்றித்து விட மாட்டாத சபலை
இது சபல பாவம் என்னுமதும் அறியாதவள்

பேதை
தான் பற்றினவன் தன்னை விட்டாலும் தான் விட மாட்டாமை இறே சபல பாவமாவது

என் துணை
தன் துணை என்றது இறே ஏழைத்தனம் ஆவது

ஓர் பாலகன்
அத்விதீயமான பிள்ளைத் தனத்தை யுடையவன்

வந்து பெண் மகளை
என் பெண் மகளை வந்து கிட்டி

எள்கித்
எத்தி ஸ்பர்சித்து
தோழிமார் பலர் கொண்டு போய்ச்
தோழிமார் நால்வர் ஐவர் பதின்மர் என்னும் அளவன்றே
அநேகர்
இவர்கள் எத்திக் கொண்டு போய்

செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
கிரியா பர்யந்தமாகச் செய்த க்ருத்ரிம வியாபாரங்களை யாருக்குச் சொல்லுவேன்

ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
1-ஷீராப்தியிலே கண் வளருகிறவன் -என்னுதல்
2-கருதுமிடம் பொருகிற திருவாழியை யுடையவன் என்னுதல்
3-ஆஸ்ரித விஷயத்தில் செய்ய நினைத்து இருக்குமவை
துர் அவகாஹனமாய் இருக்கையாலே ஒருவராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதவன் என்னுதல்
(உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -ருணம் ப்ரவர்த்ய இத்யாதி -நெடியோன் )

என்னும்
இப்படி பிள்ளை கொல்லி மடு என்னும் பிரஸித்தியை யுடைத்தான

ஆழ மோழை
சுழியும் குமுழியும் கிளம்பும் படி ஆழ்ந்த மடு
ப்ரவாஹத்திலே சுழி
தேக்கத்திலே குமிழி
இப்படிப்பட்ட வற்றுக்குள்ளே அழுத்தித் தரைப்படுத்தி

மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே
உப்பு அறியாத மூழை
நித்தியமாக வளர்ந்தாலும் அதன் ரசம் அறியாத மூழை

என்னும் மூதுரை
பழையதாக முன்னோர் சொல்லிப் போருகிற ப்ரஸித்தியும் இலளே

ஏழை பேதை
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே
என்னும்
என் பெண் மகளை
தோழிமார் பலர் வந்து எள்கிக் கொண்டு போய்
ஆழியான் ஓர் பாலகன்
என்னும் ஆழம் மோழையில்
பாய்ச்சி அகப்படுத்தி
செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்–என்று அந்வயம்

இத்தால்
சதாச்சார்யனானவன் எல்லா அவஸ்தையிலும் சிஷ்யன் தவறுதல் கண்டாலும்
கை விட மாட்டான் என்னும் ஆகாரம் தோன்றுகிறது
ஏழை என்கையாலே

அந்த ஏழைத் தனத்தை உபபாதிக்கிறது மேல்
அதாவது
ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களில்
அந்த ஆச்சார்யனுடைய மநோ பூர்வ வாக் உத்தர என்னுமா போலே
பிராமண அனுகூலமான நினைவும் சொலவும் செயலும் ஒழிய
ஸ்வ போக்த்ருவாதிகள் இல்லை என்கிறது –

மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே -என்னும் ப்ரஸித்தியாலே
மூதுரையும் இலளே -என்கையாலே
பூர்வாச்சார்யர்களுடைய வசனம் ஒழிந்தவை எல்லா பிரகாரத்தாலும் கொண்டாட ஒண்ணாது
கொண்டாடில் -ஏவம் பிரகார பூதையான என் பெண் மகள் என்று -அவன் அபிமானிக்கும் படி
ஜென்ம ஸித்தமான பாரதந்த்ரத்தை யுடையவளை
அந்த ஆச்சார்யர் திருவடி சம்பந்தம் என்று சொல்வதே கொண்டாட்டம் –
என் பெண் மகள்-பாரதந்த்ரத்தை யுடையவள் )

சம்பந்த ஞானத்தில் உணர்த்தி யுடையார் வந்து எத்திக் கொண்டு போய்
அடியார்க்கு என் செய்வன் என்றே இருக்கும் கல்யாண குணங்களைப் பிரகாசிப்பித்து
அத்விதீயமான பருவத்தையும் வ்யாமோஹத்தையும் யுடையவன் என்னும் அவதார விசேஷத்தையும் பிரகாசிப்பித்து
அதிலே ப்ராவண்யத்தையும் நடத்துவித்து
அஹம் அர்த்த பர்யந்தமான ஸம்பந்தத்தையும் இனி மீட்க அரிதாம் படி நிலமாக்கி
இவர்கள் செய்த பிரகாரங்களை

இவர்கள் தங்களுக்குச் சொல்லவோ
அந்த வ்யாமுக்தனுக்குச் சொல்லவோ
அதிலே அகப்பட்ட இவள் தனக்குச் சொல்லவோ
சனகாதிகளுக்குச் சொல்லவோ
வ்யாஸாதிகளுக்குச் சொல்லவோ
விஹித பரதந்த்ரரான சம்சாரிகளுக்குச் சொல்லவோ
அவிஹித விஹித காம்ய பரருக்குச் சொல்லவோ
யாருக்கு உரைக்கேன் –

————-

கொண்டு போன தோழிமார் நீக்கப் பார்த்தாலும்
அவனை விடாதபடி ஆனாள் -என்கிறாள் (திருத்தாயார் )

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

பதவுரை

நாடும்–விசேஷ ஜ்ஞாநிகளும்
ஊரும்–ஸாமான்ய ஜ்ஞாநிகளும்
அறிய–அறியும்படியாக [பஹிரங்கமாக]
போய்–வீட்டை விட்டுப் புறம்பே போய்
நல்ல–பசுமை மாறாத
துழாய் அலங்கில்–திருத் துழாய் மாலையை
(பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு)
சூடி–தரித்துக் கொண்டு
நாரணன் போம் இடம் எல்லாம்–எம்பெருமான் போகிற இடம் முழுவதும்
சோதித்து உழி தருகின்றாள்–தேடித் திரியா நின்றாள்;
கேடு வேண்டுகின்றார்–“இக்குடிக்குக்) கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள்
பலர் உளர்–பல பேருண்டு;
(ஆகையால்)
இவளை–எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை
கேசவனோடு–(அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.)
பாடு காவல் இடுமின்–அருகு காவலிடுங்கள்”
என்று என்னை–என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு
பார்–பூமியிலுள்ள அநுகூல ஜநமானது
தடுமாறினது–மனங்குழம்பிச் செல்லா நின்றது–

நாடும் ஊரும் அறியவே போய்
திருவாய்ப்பாடி சூழ்ந்த நாடும்
திருவாய்ப்பாடியான ஊரும்
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா (திருப்பல்லாண்டு )-என்னுமா போலே

அன்றியே
நாடுகிற ஓர் இருவர் அன்றியே
இருக்கிற ஊரில் உள்ளார் எல்லாரும் அறியப் போய்

நல்ல துழாய் அலங்கல் சூடி
ஸம்ஸ்லேஷத்தாலே பிசகின திருத்துழாய் மாலையைச் சூடி
அலங்கல்-மாலை

நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
(கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே)
உள்ள எழுத்தைக் குறைத்தது வாஸ்ய ப்ரதானத்தாலே
வாசக பூர்த்தியிலும் காணலாவது நிரூபக குண- ரூபக குண -விபூதிகளை இறே
(நிரூபக குண-ஸ்வரூப நிரூக குணங்கள் –
ரூபக குண-நிரூபித்த ஸ்வரூப குணங்கள் -விசேஷணங்கள் )
அவை எல்லாம் வாஸ்ய பிரதானம் கொள்ளும் போதும் விசிஷ்ட ரூப பிரகாச மாத்ரத்தாலேயும் காணலாம் இறே
(ப்ரஹ்மம் எப்பொழுதுமே விசிஷ்டமே -பிராட்டிமார் குணங்கள் -அனைத்தும் சேர்ந்தே இருப்பார் )

போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
திருக் குழல் ஊதினது அடியும் சுவடும் பார்த்து அவன் போன இடம் காண மாட்டாமல் மீண்டு
அனுகரித்தவர்களைப் போல் அன்றியே
போவதாக கோலின இடங்கள் எல்லாம் அறிந்து முற்பாடையாய்ச் சென்று
அக்ரதஸ் தேக மிஷ்யாமி –என்கிறபடியே
படுகிற அளவும் இன்றிக்கே நினைவே பிடித்து சோதித்து
அவ்விடங்களிலே நின்று வரவு பார்த்து ஸஞ்சரியா நின்றாள்

கேடு வேண்டுகின்றனர் பலருளர்
இந்தச் சேர்த்தியும் ப்ராவண்யமும் காண வேண்டாதர் ஏகாயனரே அன்றிக்கே
(ஏகாயனர் -அயனம் ஆஸ்ரயம் -இந்த சம்ப்ரதாயம் பிராட்டி இல்லாமல் ஏக ப்ரஹ்மம் )
திருக் குரவையிலும் யுண்டான போக்கிலும் நலிய நினைப்பாரும் நலிந்தாரும் உண்டு இறே
கஞ்சன் கடியன் -(2-3-1-காப்பாறும் இல்லை )
ஏஹீ பஸ்ய சரீராணி (தண்டகாரண்ய ரிஷிகள் -பெருமாள் திரு உள்ளம் புண் பட்டு )

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

பாடு காவல்-
பாது காவல் -அதாவது –
அருகு வைத்தல் வைப்பது அந்தப்புரக் கட்டிலிலே இறே

கேடு வேண்டுகின்றனர் பலருளர் -என்கையாலே
தாய்மார்க்கு அவனோடே சேர்த்து விடுகையிலே தாத்பர்யமாய்த் தோற்றுகையாலே
இவர்களுடைய பந்து வர்க்கங்களும் அவன் போம் இடம் எல்லாம்
ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்-என்று சொல்லி முன்னோடித் திரியாமல்
பாடு காவலிட்டு அவன் வரவு பார்த்து
அந்தப்புரக் கட்டிலிலே சிஷித்து இருத்துங்கோள் என்கிறார்கள் -என்னுதல்

அந்வய ப்ராதான்யத்தாலே
கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று
பந்து வர்க்கம் சொல்லும் இறே பல காலும்

அன்றியே
கேசவனை விட்டுப் புறப்படாமல் பாடு காவல் இடில் காக்கலாம் –
என்று ஷேபம் ஆகவுமாம்

பார் தடுமாறினதே
பூமியில் உள்ளாறும் தாய்க்கு அடங்காமையைக் கண்டு
நாமும் சில பெண்களைப் பெற்று அன்றோ இருக்கிறோம் நமக்கும் இங்கனே
குடிப்பழி விளையுமோ விளையாதோ என்றால் போலே தடுமாறிற்றே அன்றோ

தன்னுடைய தடுமாற்றமும்
பந்து வர்க்கத்தினுடைய தடுமாற்றமும்
எல்லாருக்கும் ஒக்கும் என்று இருக்கிறாள் –

இத்தால்
வானவர் நாடு
கண்ணன் விண்ணூர் -என்னுதல்

அதுக்கும் அவ்வருகான
திருவழுதி வள நாடு
திருக்குருகூர் என்னுதல்

திரு மல்லி வள நாடு
ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று முமுஷுக்களைச் சொல்லுதல்

ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்திலும் விஷய அனுரூபம் புருஷார்த்தம் என்று நிச்சயித்து
ஸூ மனாக்களாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை சிரஸா வஹித்து
சிறுப் பேர் அன்றிக்கே
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனான ப்ரசஸ்த கேஸன் போம் இடம் எல்லாம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்பாரைப் போலவும்
ஸாயுக்கானாரைப் போலவும்
சோதித்து உழி தருகின்றார்

(சாயுஜ்யம் -சமான போகம் -யுஜ் -கூடியவன்
1-ஆத்ம அனுபவம் -கைவல்யம் -ஆத்ம அனுபவம் –
2-ஸ்வார்த்த பகவத் அனுபவம் –
3-ஸ்வார்த்த பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் மூன்றாவது நிலை
4-நான்காவது நிலை தான் பகவத் பரார்த்த அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இதுவே சாயுஜ்யம்
முதல் இரண்டுக்கும் சரீரம் இருந்தாலும் இல்லாமலும் அனுபவிக்கலாம்
அடுத்த இரண்டுக்கும் கைங்கர்யம் செய்ய சரீரம் வேண்டுமே )

பலருளர்
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண வேண்டாதாரும் உளராய் இறே இருப்பது –
தேசோ விசால
புடை தான் பெரிதே புவி (பெரிய திருவந்தாதி -ஆட்படாதார் பலர் உளர் வியாக்யானம் )

இல்லை அல்லர்
இப் பரப்பில் கூடாதது உண்டோ
கூடாதாகில் வை தரணி மார்க்கம் துகிர்ந்து போகாதோ

அன்றிக்கே
ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொண்டு
ஸ்ருஜ்ய யோக்யர் ஆகாதாரும் உளர் இறே என்னவுமாம்

ஒரு நிபுணாச்சார்ய விஷயத்திலே அற்றுத் தீர்ந்த யுணர்த்தியை யுடையவர்கள்
பகவத் விஷயத்திலும் அவன் காட்டிக் கொடுக்கப் போதல்
உபகார ஸ்ம்ருதியால் போதல் ஒழியத்
தானே போகை மிகை (தவறு ) என்று தோற்றுகிறது –

உயர்ந்தோர் மாட்டு லோகம் ஆகையாலே
லோகம் சிஷ்ய ஆச்சார்ய க்ரமத்தால் அல்லது நில்லாது என்னும் உணர்த்தியாலே தடுமாறுதல்
இவ் வர்த்தத்தில் உணர்த்தி இல்லாத அவிவஷதரையும் (அஞ்ஞரையும்) இத் தோஷம் தடுமாறப் பண்ணும் என்னுதல்
இது தான் சமர்ப்பண வாக்ய பிரசித்தம் இறே
(நம –பாகவத சேஷத்வ பர்யந்தம் சொல்லுமே )

———-

இவள் படியை வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள் –

பட்டம் கட்டப் பொன் தோடு பெய்திவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய் புறப்பட்டு நின்று இவள் பூவைப் பூ வண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மால் உருகின்றாளே -3 -7-6 –

பதவுரை

வட்டம் வார்–சுருட்சியையும் நீட்சியையும் உடைய
குழல்–கூந்தலையுடைய
மங்கைமீர்–மாதர்காள்!,
(இம் மகளுக்கு)
பட்டம் கட்டி–(நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும்
பொன் தோடு–(காதுக்கு அணியான) பொன் தோட்டையும்
பாடகமும் சிலம்பும்–(கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும்
பெய்து–இட்டும்
இவள் இட்டம் ஆக–இவளுடைய இஷ்டாநுஸாரமாக
வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு–(இவளை) வளர்த்தெடுத்த என்னோடு
இவள் இருக்கலுறாள்–இவள் இருக்க மாட்டேனென்கிறாள்;
(பின்னை என் செய்கின்றாளெனில்;)
பொட்ட–திடீரென்று
போய்–என்னைக் கைவிட்டுப் போய்
புறப்பட்டு நின்று–(எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று
பூவைப் பூ வண்ணா என்னும்–“காயாம்பூப் போன்ற மேனி நிறமுடைய கண்ண பிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்;
(அவ்வளவில் அவன் அருகு வாரா தொழியில்)
இவள் மாலுறுகின்றாள்–இவள் மோஹத்தை யடைகின்றாள்–

பட்டம் கட்டப் பொன் தோடு பெய்திவள் பாடகமும் சிலம்பும்
பட்டம் -தலை அலங்காரம்
தோடு -காதுப் பணி
பாடகமும் சிலம்பும்-காலில் இடுமவை
கேசாதி பாதமாக எல்லா ஆபரணங்களும் உப லக்ஷணம்

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு பொட்டப் போய் இருக்கலுறாள்
இவை எல்லாம் குறைவறச் சமைத்திட்டு
இவளை நியமியாமல்
இவள் இஷ்டத்துக்கு வளர்த்து எடுத்த எனக்கு
தனக்கு என்னளவில் பிரியம் இல்லையானால் —
எனக்கு தன்னளவில் பிரியமானால் –
தன் நெஞ்சு புறம்பே போனாலும் தான் என்னருகிலே இருக்கலாம் இறே
அதுவும் காண்கிறிலோம்

அதுவும் காணா விட்டால்
தனக்குப் பொருந்தின தோழிமாரோடு தான் போது போக்கவுமாம் இறே

அது தவிர்த்தால் தான்
இருந்த இடத்தே அவர் வர இருக்கலாம் இறே

அதுவும் ஒழிந்து அவன் இருந்த இடம் தேடிப் போம் போது
த்யாஜ்யங்களை த்யாக பிரகாரங்களாலே த்யஜித்துப் போவாரைப் போலேயும் போகாமல்
நிஷித்த நிந்திதங்களைப் பாராமல் போவாரைப் போலே
நான் எடுத்து வளர்த்த நாளைக்கும் லஜ்ஜித்து
பாதகாதிகளை விட்டுப் போவாரைப் போலே
சடக்கென் போக வேணுமோ

புறப்பட்டு நின்று இவள் பூவைப் பூ வண்ணா என்னும்
சடக்கெனப் புறப்பட்டு நின்றால் மேலீடானவன் வடிவழகிலே ஈடுபட்டு
காயம் பூ வண்ணா என்பாரும் உண்டோ –
பூவை -காயாவிலாந்தரம்

வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மால் உருகின்றாளே
சுருண்டு நீண்ட குழலையும் பருவத்தால் வந்த இளமையும் யுடையவர்களே
நீங்களும் எல்லாம் சில தாய்மார்களுக்கு நியாம்யையாய் போரு கிறி கோளே
தனக்கு நான் நியாம்யையாய் இருக்கச் செய் தேயும் என்னோடு இருக்க லுறாள்
தன்னோடு இருக்க லுறாத அவனோடே தான் இருப்பதால மாலுறுகின்றாளே
அவன் தன்னோடு இருக்கலுற்றால் நான் தான் என்னோடே இருக்கை கர்த்தவ்யம்

இத்தால்
ஆச்சார்யனானவன் சிஷ்யனுக்கு வேண்டுவன பூஷணங்களையும் உண்டாக்கி
ஹிதத்தைப் பிரியமாக்கி நடத்திக் கொண்டு போந்த அளவிலும் தனக்கு வச வர்தியாகை தவிர்ந்து
பகவத் விஷயத்தில் செல்லும்படியான ப்ராவண்ய அதிசய பிரகாரத்தை
ஆச்சார்ய பரதந்த்ரர் ஆனவர்களுக்குச் சொல்லி ஈடுபட்டமை தோற்றுகிறது

பட்டம் -ஆச்சார்ய பரதந்த்ர பூர்த்தி
பொன் தோடு -அப் பூர்த்தி குலையாமைக்கு அவன் உண்டாக்கின ஸ்ருத பலம்
பாடகம் -அநந்ய கதித்வம்
சிலம்பு -அதனுடைய பிரகாசம்

———

குண ஹானி சொல்லி நியமிக்கப் பொறாத அளவே அன்றிக்கே
குணம் சொல்லிக் கொண்டாடினாலும் (கிஞ்சுக வாய் மொழியாள்)
நெஞ்சு அல்ப காலமும் தரியாத படி யானாள் -என்கிறாள் –

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

பதவுரை

வாசம் வார்–வாஸனையையும் நீட்சியையுமுடைய
குழல்–கூந்தலை யுடைய
மங்கைமீர்–பெண்காள்!
பேதையேன்–பேதைமையை யுடையளான என்னுடைய
பேதை–பெண் பிள்ளையும்
பேசவும் தெரியாத- பெண்மையின்–(தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்)
ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும்
கிஞ்சுகம் வாய் மொழியாள்–கிளியினுடைய வாய் மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான
இவள்–இவள்,
நின்றார்கள் தம் எதிர்–ஸ்த்ரீத்வ மரியாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே,
கூசம் இன்றி–கூச்சமில்லாமல்
கோல் கழிந்தான் மூழை ஆய்–கோலை விட்டு நீங்கின அகப்பை போல
(என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு)
கேசவா என்றும்–கேசவனே! என்றும்
கேடு இலீ என்றும்–அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி
இவள் மாலுறுகின்றாள்–இவள் மோஹமடையா நின்றாள்;
ஏ–இரக்கம்–

பேசவும் தெரியாத பெண்மை என் பேதை
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்றால் போல் சொல்லுகிற ஸ்த்ரீத்வங்களை இறே பெண்மை என்கிறது
அன்றிக்கே
பேதை மயில் போலே இருக்கிற பெண் என்னவுமாம் –

என் பேதை இவள்
என் வயிற்றில் பிறப்பால் பேதை யானவள்

பேதை வயிற்றில் பேதை
திருத் தாய்மார்க்குப் பேதமையாவது
இவள் தன்னை விட்டால் தான் பின்னும் விட வேண்டுமவளை விட மாட்டாமை இறே

இவள் –
பருவத்துக்குத் தக்க தலைமை யல்ல கிடீர் -என்று உறைக்கப் பார்க்கிறாள் –

கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கூச வேண்டுவார் அளவிலும் கூசமின்றி
கூச வேண்டுவார் ஆகிறார் -தம் தாம் தாய்மாருக்கு பவ்யரானவர்கள்

ஸ்வாபதேசத்தில் –
கூச வேண்டுவார் ஆகிறார் –
ஸ்வரூப அநுரூப ப்ராப்யம் – வஸ்து நிர்தேசத்தில் ஒழியச் சேராது என்னும் உணர்த்தி யுடையராய் –
அதிலே நிலை நின்றவர்கள் –

அன்றிக்கே
நின்றார் ஆகிறார் –
உத்தமனின் கிரியா பதத்தையும் வஸ்து நிர்தேசத்தில் சேர்த்து நிலை நின்றவர்கள் என்னவுமாம்

(கூச்சம் இருப்பார் இல்லார் என்றும்
நின்றார் நில்லார் என்று இரண்டு நிர்வாகங்கள் )

இது நிலை நிற்பது உடையாளவும் இறே
இவ் வருகு உள்ளவையும் நிலை நில்லாதது இறே -இது தான் விஷய ஸா பேஷமாய் இருக்கையாலே

(பற்றுகிறேன் -ஏக வசனம் உத்தமன் –
வாஸ்து அவன் திருவடி
சரணாகப் பற்றி பற்றுவிப்பவனும் அவனே என்றே இருக்க வேண்டும் –
இது கூச்சமானது -உடை கழுவினால் கூச்சம் இல்லை )

நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
முன்னே –மூழை உப்பு அறியாது -என்றாள்
இப்போது –கோல் கழிந்தான் மூழையாய்-என்னா நின்றாள்
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில்
அது குண பாவம்
இது தோஷ தர்சனம்

கோல் கழிந்த–ஆன்-சாரியை
கோல் கழிந்த மூழையால் ஒரு பிரயோஜனம் இல்லை இறே -இரண்டு தலைக்கும்
அன்றியே
முகப்பான் கையில் கோல் கழிந்த மூழை போலே ஆனாள் -என்னவுமாம்

இத்தால்
திருத் தாயாருக்கு நியந்த்ருத்வம் போய்
ஸ்வ கரண நியாம்யை -என்கை
இது ஆச்சார்ய விசேஷத்துக்கு ஒக்கும் –

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும்
உன்னால் அல்லது செல்லாமை பிறந்தவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்னும்

கிஞ்சுக வாய் மொழியாள்
முருக்கிதள் போல் இருக்கிற அதரத்தையும்
கிளி மொழி போலே இருக்கிற வார்த்தையும் யுடையவள்
கிஞ்சுகம் -என்று கிளிக்குப் பெயர்

இவ்விரண்டாலும் –
திரு வருள் கமுகு ஒண் பழத்தது-(திருவாய் -8-9)- -என்ன ஒண்ணாத இவளையும்
(முருக்கிதள் போல் இருக்கிற அதரம் -பழுக்க வில்லை -இன்னம் இளமை )
தான் கற்ப்பித்தது ஒழியத் தான் ஒரு வார்த்தை ஏறக் குறைய முன்பு சொல்ல மாட்டாதவள் -என்கை
(ஆச்சார்யர் சொன்னதையே சிஷ்யன் சொல்ல வேண்டுமே )

வாசவார் குழல் மங்கை மீர்
நறு நாற்றத்தையும்
ஒழுகு நீட்சியையும் யுடைத்தான குழலையும் யுடையராய்
பருவத்தாலும் இளையவர்களை மங்கை மீர் என்கிறாள் –

இவள் மாலுருகின்றாளே

———–

தன்னுடைய ஆர்த்தி அதிசயத்தாலே அவன் வரவு தப்பாது என்று அறுதியிட்டு
அவன் ஸூப தர்ஸியாய் இருக்கும்
அவன் நம்முடைய கார்ஸ்ய சேஷம் காண ஒண்ணாது -என்று தன்னை அலங்கரிக்கிறாள்

கண்டால் தான் வந்தது என் என்னில்
நாம் பாக வாசி அறியாமை தாழ்க்கை அன்றோ இங்கன் விளைய வேண்டிற்று -என்று
லஜ்ஜையாலும்
சோகத்தாலும் ஈடுபடும் என்று
அதுக்குப் பரிஹாரமாகவும்
போக ஹேதுவாகவும் இறே இங்கன் அலங்கரிக்கிறது

இந்த மநோ ரத அலங்காரம் அவன் வந்திலனாகில் செய்வது என் என்னில்
இம் மணக் கோலம் பிணக் கோலம் ஆகிறது என்று இறே இவள் நினைத்து இருப்பது –என்று
நாலூர் பிள்ளை அருளிச் செய்தாராக
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –

பதவுரை

இவள்–இப் பெண் பிள்ளையானவள்
காறை–பொற் காறையை
பூணும்–(தன் கழுத்தில்) பூணா நின்றாள்;
(அக்காறையுங் கழுத்துமான அழகை)
கண்ணாடி காணும்–கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்;
தன் கையில்–தன் கையிலிருக்கிற
வளை குலுங்கும்–வளையல்களை குலுக்கா நின்றாள்;
கூறை–புடவையை
உடுக்கும்–(ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்;
(அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,)
அயர்க்கும்–தளர்ச்சி யடையா நின்றாள்;
(மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி)
தன் கோவை செம் வாய் திருத்தும்–கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்;
தேறித் தேறி நின்று–மிகவுந் தெளிந்து நின்று
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்–ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்;
(அதன் பிறகு)
மாறு இல்–ஒப்பற்றவனும்
மா மணி வண்ணன் மேல்–நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல்
மாலுறுகின்றாள்–மோஹியா நின்றாள்–

காறை பூணும் கண்ணாடி காணும்
பூண்பதற்கு முன்னும் பின்னும் உண்டான வாசி கண்ணாடியில் கண்டால்
காறை மிகையாகத் தோற்றும் இறே தனக்கும் –

தன் கையில் வளை குலுக்கும்-
தானே கழலுகிற வளைகளும் குலுக்கினால் மிகவும் விழ விறே ப்ராப்தம் –
விழுந்தவை விழுந்தே போயிற்றன
விழாதவை கழலா நிற்கச் செய்தே மநோ ரத சமயத்திலே பூரித்தன இறே
அவன் குணங்களை நினைத்து இருந்த கனத்தாலே குலுக்கக் குலுக்கப் பூரித்தன என்னுமது ஒழிய
சிதிலமாய் விழுந்தன என்கை மார்த்தவதுக்குப் போராதே –

கூறை உடுக்கும்
பரி யட்டம் அரையிலே தொங்கிற்று -இம் மநோ ரதத்தாலே என்னில் -உடுக்கவுமாம் இறே
அல்லாத போது கையிலே ஒரு தலையும் காலிலும் தரையிலும் ஒரு தலையுமாம் இறே

காறை பூணும் -என்றது
ஆபரணங்களுக்கு எல்லாம் உப லக்ஷணமாய் -ஆஸ்ரயம் பெற்றது என்றபடி –

பூணும் உடுக்கும் என்ற வர்தமாநம்
ஒப்பணிதலில் அவன் பூட்டியும் உடுத்தியும் செய்த நேர் வரும் அளவும்
கழற்றுவது பூண்பது குலைப்பது உடுப்பதாய்ச் செல்லும் என்று தோற்றுகிறது –

அயர்க்கும்
இந்த அலங்கார கௌரவ மநோ ரதத்தாலே
முன்பு கேசவா -என்று அழைத்த போதை ஸம்ஸ்லேஷ மநோ ரதத்தையும் மறக்கும் என்னுதல்
அன்றியே
மநோ ரத கௌரவ ப்ராந்தி தலையெடுத்து
காறை பூண்பது
பூண்டிலோமோ என்று தொட்டுப் பார்ப்பது
கண்ணாடி காண்பது
அதிலே தோற்றின காறையைக் கண்ணாடி என்று அறியாதே அத்தை ஸ்பர்சித்துப் பார்ப்பது
பதம் தோறும் இவ்வயர்ப்புச் செல்லா நிற்கும் என்னவுமாம்

தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
கோவைக் கனி போலே ஸ்வா பாவிகமாய் இருக்கிற அதரத்தைப் பலகாலும்
கண்ணாடி கண்ணாடி பார்த்துப் பார்த்துக் கன்றப் பண்ணா நின்றாள் –

இவள் தான்
அமுதுபடி திருத்துவது –
சாத்துப்படி திருத்துவதாகா நின்றாள்
என்று பிள்ளை அருளிச் செய்வர் –
அவனுக்குப் படி யாவது -கூறை இறே

தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
தேறித் தேறி என்கையாலே
அயர்த்து அயர்த்து என்னுமதும் தோற்றும் இறே
ஜாக்ரத் ஸ்வப்ன தசையில் கலக்கமும் தெளிவும் போலே இறே மநோ ரதம் தான் இருப்பது –
ஸ்வப்னம் கண்டவன் இது ஸ்வப்னம் என்று அறியாதாப் போலே இறே மநோ ரதமும்

நின்று
அந்த மநோ ரதம் நிறுத்த நின்று

ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
அவனுடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வாசகமுமாய்
த்யோதமா நமுமான குணங்களை யுடையவனுடைய
அஸங்க்யாதமான திரு நாமங்களையும்
அவனுடைய பரிஜன பரிச்சதாதிகளையும் அக்ரமமாகச் சொல்லா நின்றாள் –

மாறு இல் மா மணி வண்ணன் மேல்
அத்விதீயுமுமாய்-மஹார்க்கமுமான நீல ரத்னம் போன்ற வடிவழகை யுடையவன் விஷயமாக

இவள் மாலுருகின்றாளே
இவள் பிராந்தி முதிர்ந்து மேன்மேலும் செல்லா நின்றது -என்கிறாள் –

இத்தால்
உபாசன ரூபமாக விஹிதைகளாய் த்யாஜ்ய ஸ்வீ கார பிரகாசிகைகளான
பக்தி பிரபத்திகள் அன்றிக்கே
உபாதேய தமமாய் –
துல்ய விகல்பம் தோன்றும் படியாய்த் தலைக்குக் கீழ் ஆகையாலே
பக்தி பிரபத்திகளை ஆத்ம பூஷண பிரதானமாகப் பிரகாசிக்கிறது –காறையால்

(வனக்குடை தவ நெறி
சார்வே தவ நெறி
தலை வணங்க காறையிலே தானே மூட்டும்
பக்தி பிரபதிகளில் இரண்டு வகைகள் உண்டே
சாதன பக்தி -உபாயாந்தரம் ஆகுமே
விதிக்கப்பட்டுள்ளவை தான் இவையும்
உபாய பிரபத்தகியும் தாழ்ந்ததே –
அவனை அடைய பிரபத்தி உட்பட எதுவும் உபாயம் அல்ல -அனுபாய பிரபத்தி -பல பிரபத்தி தானே உயர்ந்தது –
பற்றிய பற்றுதலும் உபாயம் இல்லையே -அவனைத் தவிர எத்தை உபாயம் என்றாலும் தாழ்ந்ததே
அதிகாரி விசேஷணமான பக்தியும் பிரபத்தியுமே இவளது
தலைக்கு கீழே
நம -பிரத்வீ பாவம்
பக்தி பிரபத்தி இரண்டுமே வணக்கம் -ஆத்ம பூஷணம் )

(வியவஸ்தித விகல்பம் -துல்ய விகல்பம் இரண்டு வகை
ஆச்சார்ய ஹ்ருதயம் –100-
பிரபன்னர்களும் பக்தி -கைங்கர்ய ருசிக்கு சாத்தியமாக வேண்டிக் கொள்வார்களே
பக்தியும் வேண்டும் என்று தெரிந்தது
சரணாகதி உபாயம் இல்லை
சைதன்ய காரியமாக -புத்தி சமாதானார்த்தமாகவே இருக்கும் )

இப்படி (காறையால்) பிரகாசிதமான வதிகாரம் பூர்வாச்சார்யர்களுடைய வசன அனுஷ்டானங்களோடே
(அகாத பக்தி பந்த சிந்தவே )
ஒப்புப் பார்த்தமை தோற்றுகிறது –
கண்ணாடி காணும் என்றத்தாலே

ஆச்சார்ய வசன அபிமானத்தாலே இதர அபிமானம் குலைந்து
ப்ராப்த அபிமானத்துடைய மிகுதி
இவள் தன்னாலும்
ஆச்சார்யன் தன்னாலும் குலைக்க ஒண்ணாது என்னும் இடம் தோற்றுகிறது –
கையில் வளை குலுக்கும் -என்கையாலே –

விஷய அனுரூபம் ப்ராப்யம் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
ஸ்வரூப அனுரூப ப்ராப்யம் தோன்றுவது ஒழிவதாகா நின்றது என்னும் இடம் தோன்றுவது
கூறை யுடுக்கும் அயர்க்கும் -என்கையாலே –

(ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுவார்களே ஆழ்வாராதிகளும்
சேஷத்வத்துக்குத் தக்க ஆறி இருந்து அவரே வருவார் ப்ராப்யம் இருக்க ஒட்டாமல்-ஸ்வரூப அனுரூபம் இது
அவனைப் பார்த்து த்வரை விஞ்சி விஷய அனுரூபம் )

ப்ராப்யத்துக்குப் பூர்வ க்ஷண பக்தி –
பின்னானார் வணங்கும் சோதியிலே சென்று சேருகை தானே ப்ராப்யம் என்னும் அளவும்
மேன் மேலும் தனக்குப் பிறந்த பரிபாக பரீஷா தர்சனம் செய்து போர வேணும் என்று தோற்றுகிறது –
கோவைச் செவ்வாய் திருத்தும் என்கையாலே –

(ராகம் -பக்தி சிகப்பு
கூட்டிப் போவது பர பக்தி பர ஞானம் பரம பக்தி –
காதல் கடல் புரைய -மேலும் மேலும் வளர்த்து தத்வ த்ரயங்களையும் விஞ்சும் படி வளர்த்து –
பரிபாக பரீஷா தர்சனம் செய்து போர வேணும் )

அவன் தன்னைப் பெற்று அனுபவிக்குமதிலும் காட்டிலும்
அவனுக்குத் த்யோதகமான கல்யாண குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களும்
அவனுடைய சம்பந்திகளான பரிஜன பரிச்ச தாதிகளும் உத்தேச்யம் என்னும் இடம் தோற்றுகிறது –
தேவன் திறம் பிதற்றும் -என்கையாலே –
இவள் வாயனகள் திருந்தவே- (திருவாய் -6-5-)-என்னக் கடவது இறே

இத் திரு நாமங்கள் தானே
அவன் விக்ரஹ வை லக்ஷண்யத்தைக் காட்டக் கடவதாய்
அதில் பக்தியையும் செலுத்தக் கடவதாய் இருக்கும் என்கிறது –
இவள் மாலுறுகின்றாளே -என்கையாலே –

—————-

கீழில் பாட்டில்
தமக்குப் பிறந்த மநோ ரத விக்ருதியை –
பெண் பிள்ளை விக்ருதியைக் கண்ட திருத்தாயார் -பாசுரத்தாலே அருளிச் செய்தார்
இப் பாட்டில் –
பெண் பிள்ளை விக்ருதியைக் கண்டு வினவப் புகுந்தவர்கள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள
மைத்தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-

பதவுரை

கைத்தலத்து உள்ள மாடு அழிய–கையிலுள்ள பணத்தைச் செலவழித்து
கண்ணாலங்கள் செய்து–(இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி
இவளை–(நமக்கடங்காத) இவளை
வைத்து வைத்துக் கொண்டு–நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால்
என்ன வாணிபம்–என்ன பயனுண்டாம்;
(பயனுண்டாகாதொழிவது மன்றி)
நம்மை வடுப்படுத்தும்–நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;
(என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்)
செய்தலை எழு நாற்று போல்–”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல,
(இவளையும்)
அவள் செய்வன செய்து கொள்ள–(ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (த் தடையற)ச் செய்து கொள்ளும்படி
மை தட முகில் வண்ணன் பக்கல்–கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில்
வளர–(இவள்) வாழும்படி
விடுமின்கள்–(இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள்”
(என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)–

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
இவள் பிறந்த நாள் முதலாக வந்த நாட்களில் விசேஷங்களாலும் –
இவள் பருவம் குறித்த நாட்களாலும்
பந்து வர்க்கத்துக்கு ஈடாகவும் –
ஐஸ்வர்யத்துக்கு ஈடாகவும்
லோக அபவாத பீதி பரிஹார அர்த்தமாகவும்
லோகம் கொண்டாடும்படியாகவும்
இது ஒரு பெண்ணும் அன்றோ நமக்கு உள்ளது என்னும் தங்கள் ஸ்னேஹ அதிசயத்தாலும்
ஜாதி உசிதமாக வந்த உத்சவங்களை
தம் தாம் கையிலுள்ள வர்த்தங்களும் பூத கதமாக்கி வைத்த வர்த்தங்களும் என்னுதல்
(மாடு சொத்து -தம் கையில் உள்ளது பூமிக்கு அடியில் புதைத்து வைத்தவை என்றவாறு )

மாடு என்று
கன்று காலிகளுக்குப் பேராய்
கோ தனராகையாலே கற்றாக்களையும் வரட்டாக்களையும் சொல்லிற்று ஆகவுமாம்

இவளை இத்யாதி
இவளை என்றது
பருவத்தால் வந்த அடங்காமையை உறைக்கப் பார்க்கிறாள்

வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
கீழ் நாள் இவளைக் கொண்டாடி மடியிலும் அருகும் வைத்துக் கொண்டு போந்ததாலும்
இப்போது இவளை சிறை செய்து காவலிட்டு கர்ஹித்துக் கொண்டு போருகிறதாலும்
என்ன பிரயோஜனம் உண்டு
உங்களுக்கும் இவள் தனக்கும் ஜாதி உசிதமாகக் காணலாவது ஓன்று இல்லை
தனக்கு நன்மை தேடுகிற நமக்குக் குடிப்பழி இறே இவளால் உண்டாவது –

செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற திரு நிறத்தையும்
தன் பக்கல் ஸ்நேஹ லேச முடையாரையும் விட மாட்டாத கல்யாண குணங்களாலே
தனக்கு இஷ்ட விநியோக அர்ஹராம்படி செய்ய வல்ல விவசாயத்தையும் யுடையவனாய்
முற்றீம்பு செய்து சிறியதுக் கினியதிட்டு
இவளுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன் பக்கல் இனி இவள் வர்த்திக்கும்படி
நீங்கள் ஒருமித்து விடுங்கள் என்று
இவள் பிரகிருதி அறிந்தவர்கள் சொல்லி நியமிக்கிறார்களாய் இருக்கிறது

இத்தால்
சதாச் சார்யனானவன் சச் சிஷ்யனைப் பார்த்து
தனக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கர்ண பரம்பரையாக வந்த
அதி குஹ்ய பரம ரஹஸ்ய அர்த்த விசேஷங்களை உபதேசித்து
அந்த உபதேசத்தால் வந்த பரிபாக விசேஷங்களைக் கண்டு
இவனாக்கம் கருதிக் கொண்டாடி
வஸ்தவ்ய பூமியும் மென் மேலும் கற்பித்துக் கொண்டு போந்ததால்
என்ன பிரயோஜனம் பெற்றது
இவ் வர்த்தங்களை பரம ரஹஸ்யமாக்கி அழித்து இறே உள்ளது

இவ் வர்த்த விசேஷம் உடையவரைப் பல காலம் நடை கொண்டு பரீக்ஷித்து உபதேசித்த
திருக் கோட்டியூர் நம்பி போல்வாருக்கு இறே தெரிவது –
இப் பிரபன்ன குலமான தொண்டக் குலத்துக்குச் சேராதவை இறே-

(அவன் திருவடி ப்ராப்யம் -ப்ரபந்ந குல அத்யவசாயம்
அதுக்கும் மேலே அன்றோ
தொண்டர் குலத்துக்கு -அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டுமே )

இத்தால் விளைவது எல்லாத்துக்கும் பரிஹாரமாக
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
இது விளைப்பதாக எதிர் சூழல் புகுத்தி திரிந்த
ஆத்ம குண வைலக்ஷண்யத்தையும் யுடையவன் பக்கலிலே
அவன் தனக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆக்கிக் கொள்ளும்படி
நீங்கள் கர்ஹிக்க நினையாதே
விஷய அனுரூப பிராப்தி வர்த்திக்கும்படி விடப் பாருங்கோள் என்கிறது –

(ஸ்வரூப அனுரூப ப்ராப்யம் கீழ்ப்படி
விஷய அனுரூப ப்ராப்யம் மேல் படி )

————

இப் பாட்டாலும் அவர்கள் த்வரிப்பவர்களாகத் திருத் தாயார் சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நான் இருக்க இவளும் ஓன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –

பதவுரை
(இவளுக்கு)
பெருபெருத்த–மிகவும் விசேஷமான
கண்ணாலங்கள் செய்து–கல்யாண காரியங்களைச்செய்து
பேணி–அன்பு பூண்டு
நம் இல்லத்துள்ளே–நம் வீட்டுக்குள்ளேயே
இருந்துவான் எண்ணி நாம் இருக்க–(இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க
இவளும்–இவளொ வென்றால்
ஒன்று எண்ணுகிறாள்–(நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள்.
(என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்)
மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன் –வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில்
அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன்.
(அந்நாளில் கல்யாணம் சின்ன வயசில்
பருவம் பந்த உடனே அவன் இடம் சேர்ப்பார்கள்
இவள் பருவம் பார்த்து -அவன் இடம் அனுப்ப வேண்டும்
தாண்டி இருத்தினால் காரா க்ருஹம் போல் ஆகும் )
இவளை–இவளை
உலகு அளந்தானிடைக்கே–உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்)
ஒருபடுத்திடுமின் –சேர்த்துவிடுங்கள்
(என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்)–

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி
ஐஸ்வர்ய செருக்காலே ஒருவருக்கு ஒருவர் மேலான கல்யாணங்களை செய்து கொண்டு
போருகிறவர்களுக்கும் மேலான கல்யாணங்களையும் செய்து
ஜாதி உசிதமான தர்மங்களையும் இப் பெண்பிள்ளை தன்னையும் பேணி

நம் இல்லத்துள்ளே இருத்துவான் எண்ணி நான் இருக்க
நம்முடைய க்ருஹத்துக்குள்ளே இருத்துவதாக நாம் எண்ணி இருக்க

இவளும் ஓன்று எண்ணுகின்றாள்
இக் கிருஹத்தை காராக்ருஹமாக நினைத்து இரா நின்றாள்
தனக்கு வஸ்த்வய பூமி அவன் இருக்கும் இடமேயாக நினைத்து இரா நின்றாள்

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஆரோக்யாதிகளுக்கு(ஆதி -ஆயூஸ்ஸூக்கள்-உயர -இளைக்க -இத்யாதிகள் ) ஹேதுவாக ஓவ்ஷதங்கள்
சமைப்பார் பாகம் பார்க்குமா போலே
பருவம் தப்பாமல் பார்க்க வேணும் இறே பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு
அது தப்பினாள் என்னும் வார்த்தை பிறப்பதற்கு முன்பே

ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே
வரையாதே திரு உலகு அளந்து ரஷித்த ஸர்வ ரக்ஷகன் பக்கல் நெஞ்சு
ஒருமித்துக் கொண்டு போய் விடப் பாருங்கோள்

இடுமின்
கொண்டு போய் இட்டு வைக்கப் பாருங்கோள் -என்னுமாம் –

இத்தால்
சதாசார்யனானவன் ஸச்சிஷ்யனைத் தன் உபதேசத்தால் திருத்தி–
திருந்தின அம்சத்தை கிரியா பதத்துடனே சேர்த்து
(ஸ்யாம் – திருமந்திரத்தில் தொக்கி உள்ள -நாராயணனுக்கு அடியேன்
ஸகல வித கைங்கர்யங்களையும் செய்யப் பெறுவேனாக ஆக வேண்டும் )
மிகவும் கொண்டாடிக் கொண்டாடி
(ஸ்வரூப அனுரூப ஆச்சார்ய பாரதந்த்ர்ய பத அந்தர் கத ஸ்தானத்தில் வைப்பதாக விசாரித்து
நம -ததீய பர்யந்தம் –பாகவத சேஷத்வ பாரதந்தர்ய -ஆச்சார்யர் திருவடிகளில் கைங்கர்யம்
ஸ்வரூப யாதாத்ம்யம் -ஆச்சார்ய பாரதந்த்ர்ய பத அந்தர் கத ஸ்தானத்தில்
வைகுண்ட மா நாடும் –எல்லாம் உன் இணை மலர்த்தாள்
பாட்டுக்கேட்க்கும் இடமும் –இத்யாதி அனைத்துமே வகுத்த இடம் )
இது தானே புருஷார்த்தமாக நினைத்து நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணி நாம் இருக்க

இத்தைக் காற்கடைக் கொண்டு
விஷய அனுரூபம் ப்ராப்யமாக நினைத்து
அதிலே அத்யசித்துப் போருகிற பிரகாரத்தைக் கண்டு
(இவளும் ஓன்று நினைக்கின்றாள் இதுவே )

ஆளும் பரமனைக் கண்ணனை -(திருவாய் -3-7-2)-என்றால் போலே சிலவற்றைச் சொல்லி
இப் பாரதந்தர்ய பரிபாகத்தைக் கடந்த ப்ரஸித்தி யுண்டாவதற்கு முன்னே
தேவாஸூர வ்யாஜத்தாலே வாமன வேஷ பரிக்ரஹம் செய்து தன் சொத்துக்குத் தானே இரப்பாளனுமாய்

திரு உலகு அளந்த வ்யாஜத்தாலே அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களைப் பிரகாசிப்பித்துத்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே-(திருவாய்-2-9-4) -என்று பிரார்த்தித்து
வியக்க இன்புறுதும் -(திருவாய்-10-3)-என்னும்படி பண்ணுவதாக
ஆள் பார்த்து உழி தருகிறவன் -பக்கலிலே நீங்கள் நெஞ்சு ஒருமித்து

ஸ்வரூபானுரூபமான புருஷார்த்தத்திலும் காட்டில்
விஷய அனுரூப புருஷார்த்தம் உத்தேச்யம் என்று அறுதியிட்டுச்
சரம பர்வ ஸ்திதியை பிரதம பர்வத்திலே கொண்டு போய்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
சேர்க்கப் பாருங்கோள் என்கிறது –

(சரம பர்வ ஸ்திதியை பிரதம பர்வத்திலே கொண்டு போய்
ஆச்சார்யர் உகப்புக்குச் செய்யும் கைங்கர்யம் தான் நிற்கும் –
அத்ர பரத்ர ஸாபி நித்யம் யதீய சரணம் சரண மதியம் -உபாய பாவத்தில் அது
ப்ராப்யம் மிதுனம் தானே
அங்கு உபாயம் பாவம் எதற்கு என்னில் அங்கும் அவரை முன்னிட்டுக் கொண்டே கைங்கர்யம் செய்ய வேண்டும்
லஷ்மீ நாத-ஸ்லோகம் அங்கும் உண்டே )

———-

நிகமத்தில் இத்திருமொழி கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

பதவுரை

இவள்–“இப்பெண்பிள்ளை யானவள்,
ஞாலம் முற்றும் உண்டு–எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி
ஆல் இலை துயில்–ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின
நாராயணனுக்கு–எம்பெருமான் விஷயத்தில்
மால் அது ஆகி–மோஹத்தை யுடையளாய்
(அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்)
மகிழ்ந்தனள் என்று–மனமுகந்தாள்” என்று
தாய் உரை செய்ததனை–தாய் சொல்லியதை
கோலம் ஆர்–அழகு நிறைந்த
பொழில் சூழ்–சோலைகளாலே சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான
விட்டுச் சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
பத்தும்–இப்பத்துப் பாட்டையும்
வல்லவர்கட்கு–ஓத வல்லவர்களுக்கு
வரு துயர் இல்லை–வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை–

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு
பஞ்சாசத் கோடி விஸ்தீரமான அண்டாந்தர கத லோகங்களை எல்லாம் அத்யல்பமான வடிவைக் கொண்டு
திரு வயிற்றிலே வைத்து முகிழ் விரியாத ஆலிலையில் கண் வளர்ந்து அருளுகிற அகடிதமும் கடிதமாம் படி இறே
நாராயணன் என்கிற ஸமாஸ த்வயத்தில் பஹு வ்ரீஹியாலே
அணோர் அணீ யான் -என்கிற மாத்ரமும் இன்றிக்கே
இடம் திகழ் பொருள் தோறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிறது இறே அகடிதம் ஆவது
இது தான் கடிதமாகவும் இவை யுண்ட கரனே என்கிறது அகடிதமாகவும் இறே இப்பாட்டில் தோற்றிக் கிடக்கிறது

இவள்
பருவத்தால் வந்த சைஸத்வத்வம் தோற்றுகிறது

மாலதாகி
பருவம் நிறைந்தாலும் கூடாத வ்யாமோஹம் சொல்லுகிறது

அது -என்று
உபமான ராஹித்யம்

மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
வியாமோஹ கார்யமான புருஷார்த்தம் ஸித்தித்து மகிழ்ந்தனள் என்று
தாய்மார் க்ருதார்த்தைகளான பிரகாரத்தை

தாய் -ஜாதி ஏக வசனம்
வளர விடுமின்
ஒருப்படித்திடுமின் -என்றவர்களும் தாய்மார்கள் இறே

இவள்
கைங்கர்ய ப்ராப்திக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பக்தியும் உண்டாய்
கைங்கர்யமும் பிரவ்ருத்தி யானாலும்
அது தன்னையும் ஆஸ்ரயத்திலே சேர்த்துத் தன்னைப் போக்யம் ஆக்குகை தானே
ப்ராப்தமாய் இருக்கிற இவள் –
இவள் மாலதாகி மகிழ்ந்தனள் -என்று திருத்தாயாரான ஆச்சார்யன் தானே
சொல்லும்படி காணும் பரிபாகம் முதிர்ந்த படி

தாயுரை செய்ததனைக் கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன்
தர்ச நீயமான புஷ்ப பலாதிகளாலே நிறைந்த பொழிலாலே சூழப்பட்ட
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

விட்டு சித்தன்
விஷ்ணுவை சித்தத்தில் யுடையவர் என்னுதல்
விஷ்ணுவுடைய சித்தத்தில் வஸிக்கிறவர் என்னுதல்
இதுவும் ஒரு ஸமாஸ த்வயம் என்னலாம் இறே -துல்ய விகல்பகமாகத் தோற்றுகையாலே

சொன்ன மாலை
மங்களா ஸாஸன பர்யந்தமாக ஸப்தார்த்தமும்
அந்யாபதேச
ஸ்வாபதேஸங்களும் இவை என்று
பர வேத்யமாம் படிக் கொண்டாடி அருளிச் செய்த

பத்தும் வல்லார்க்கு
இப் பத்துப் பாட்டையும் ஸா அபிப்ராயமாக அனுசந்திக்க
வல்லவர்களுக்கு

இல்லை வரு துயரே
துயர் வருக இல்லை என்னாதே –
இல்லை வரு துயரே -என்கையாலே
இதுவும் ஒரு நமஸூ இருக்கிற படி –
(வீடுமின் சொல்லி பின்பு முற்றவும் சொன்னது போல் இங்கும் )

துயராவது
மங்களா ஸாஸன ரஷ்ய ரஷக பாவத்துக்கு வருகிற மாறாட்டம் வாராது என்றபடி
பழிப்பிலோம் -என்றதும் இது தன்னை இறே
அந்நிய சேஷத்வம்
ஸ்வ ஸ்வா தந்தர்யம் நேராக வருவதும் இது தன்னாலே இறே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: