ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–சுருக்கம் —

1-ஸ்ரீ ஈஸா வாஸ்ய உபநிஷத்–ஸ்ரீ ஈஸா வாஸ்ய வித்யை

ஸ்ரீ வேத புருஷன்-மக்களுக்கு உபதேசம் –

இவ்வுலகம் முழுவதும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப்பட்டபடியால் அவர் சொத்து என்று அறிந்து, வைராக்யத்தோடு, தனக்கு
விதிக்கப்பட்ட கர்மங்களைத் தவறாமல் செய்து கொண்டு, பரமாத்மாவையே அனைத்து ஜீவர்களிலும் காண்பவனாக,
ஸ்வயம் ப்ரகாசமாய், ப்ராக்ருதமான உடல் இல்லாதவராய்,
அவித்யை மற்றும் புண்ய பாபங்கள் அற்றவராக அவரை த்யாநிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட உபாஸகன் தன் நற் செயல்களால் ஸம்ஸாரத்தைத் தாண்டி உபாஸநத்தால் முக்தி அடைகிறான்.

——-

2-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ நாசிகேத வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசம்

தந்தையால் யமனுக்கு தானம் செய்யப்பட்ட நசிகேதஸ் யமனிடம் மூன்றாைவது வரமாக
வித்யை உபதேசம் பெருதல்
முக்தியைப் பற்றிக் கேட்ட நசிகேதஸ்ஸைக் குறித்து யமன் கூறியது
ஜீவாத்மா நித்யமானவர்
அவரது ஹ்ருதயத்தினுள் பரமாத்மா இருக்கிறார்
அவர் எந்த ஜீவாத்மாவைக் குறித்துத் தன்னைக் காட்டுகிறாரோ அவன் தான் இவ்விரண்டையும் அறிந்து
பரமாத்மாவை உபாஸித்து இன்ப துன்பங்களைத் தாண்டுகிறான் –

————-

3-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ பரம புருஷ வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி –

உடல் என்ற தேரில் இருக்கும் ஆத்மா என்ற ரதீ,
புத்தி என்ற ஸாரதியைக் கொண்டு,
மனது என்ற கடிவாளத்தால்
இந்த்ரியங்கள் என்ற குதிரைகளை
உலக விஷயங்கள் என்ற வழிகளில் செல்ல
விடாமல் பரமபதத்தை அடைய வேண்டும்
புலன்கள் அர்த்தங்கள் மனது புத்தி ஆத்மா உடல் ஆகியவற்றை விட உயர்ந்தவர் பரமாத்மா

————

4-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ அங்குஷ்ட ப்ரஹ்ம வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி

அனைவருக்குள்ளும் இருக்கும் பரமாத்மா ஒருவரே .
அவர் உபாஸகன் நன்மைக்காக கட்டை விரல் அளவில் ஒளி மயமானவராக
வெறுப்பில்லாமல் முக்காலத்திலும் ஹ்ருதயத்துக்குள் இருந்தாலும் இங்குள்ள தோஷங்கள் அவரைத் தீண்டா.
தூய மனதால் அவரை அறிபவன் இங்கேயே அவரை அநுபவித்து,
பின்னால் முக்தி அடைந்து நிரந்தரமான சாந்தி அடைகிறான் –

————-

5- ஸ்ரீ முண்டக உபநிஷத்– ஸ்ரீ அக்ஷர பர வித்யை

ஸ்ரீ அங்கிரஸ் என்ற ரிஷி ஸ்ரீ சௌநகரைக் குறித்து உபதேசம்
ஸ்ரீ சௌநகர் ஸ்ரீ அங்கிரஸ்ஸிடம் எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று
கேட்க, அவர் உபதேசித்தார்

எந்தப் பொருளை அடைய நூல்களால் எற்படும் வித்யையும்
உபாஸநம் என்ற வித்யையும் தேவையோ அவரே சிலந்தி போல் இருந்து உலகைப் படைக்கிறார்.
கர்மங்களால் மட்டும் அவரை அடைய முடியாதபடியால் ஆசார்யனிடம் சென்று,
அக்ஷரம் என்ற ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவனையும் விட உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கற்க வேண்டும்.
அவர் ஜீவனோடு இவ்வுடலிலேயே இருக்கிறார்,
ஆனால் கர்ம பலன்களை அநுபவிக்காமல் அவரைக் காண்பவன் பாப புண்யங்கள் நீங்கி அவருக்கு ஸமமாக ஆகிறான்.

———————

6 –ஸ்ரீ தைத்ரிய உபநிஷத்–ஸ்ரீ ஆனந்த மய வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

என்றும் மாறாததாய், ஜ்ஞாந வடிவமாய் எல்லை யற்றதாய் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிபவன்
அவரைக் குணங்களோடு ஸ்ரீ வைகுந்தத்தில் அநுபவிக்கிறான்.
அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் உடல் ப்ராணன் மனது ஜீவாத்மா ஆகியோருக்கும் உள்ளிருக்கும் ப்ரஹ்மம்
வேதமும் அளக்க முடியாத ஆநந்தத்தை உடையவர் (ஆநந்த மயன்).
அவரை அறிந்தவன் ஸத், ஆநந்திக்கிறான், பயமின்றி இருக்கிறன்.

————-

7–ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ வாருணீ வித்யை

ஸ்ரீ வருண பகவான் தன் மகனான ப்ருகுவைக் குறித்து உபதேசம்

யாரிடமிருந்து அனைத்து ஜீவ ராசிகளும் தோன்றுகின்றனவோ – யாரால் வாழ்கின்றனதோ , யாரிடம் லயம் அடைகின்றனதோ –
யாரால் முக்தி அடைகின்றனதோ – அவரே ப்ரஹ்மம் என்று ஸ்ரீ வருணன் உபதேசிக்க,
ப்ருகு தபஸ் செய்து, அன்னம் ப்ராணன் மனது ஆத்மா ஆகியவை ப்ரஹ்மம் அல்ல,
ஆநந்தமுடைய பரமாத்மாவே ப்ரஹ்மம் என்று அறிந்தார்.
இப்படி அறிபவன் ப்ரஹ்மத்தை அடைந்து, பின் தொடர்ந்து, ஆசைப்பட்ட இடங்களில் உருவங்களோடு
அவரை உண்டு -அனுபவித்து ஸாமகானம் செய்து, தானும் ப்ரஹ்மத்துக்கு உணவாகிறான்.

————

8- ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ ந்யாஸ வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

ஸ்ரீ பரமபதத்தில் இருக்கும் மிக இனிய பரமாத்மாவை அடைய ந்யாஸம் என்ற சரணாகதியே வழி;
கர்மங்கள், செல்வம் முதலானவை யல்ல.
வேதாந்தத்திலிருந்து தத்வங்களை நிச்சயித்து, இந்த்ரியங்களை அடக்கி, சரணாகதி செய்தவர்கள் முக்தி அடைகிறார்கள்.
ப்ரணைம் கொண்டு அவரை அடைய அவரையே உபாயமாகப் பற்ற வேண்டும்.

—————-

9–ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பர்யங்க வித்யை

சித்ரன் அன்ற அரசன் ஆருணி மற்றும் அவர் மகனான ஸ்வேத கேது என்பவர்களைக் குறித்து உபதேசம்

சித்ரன் என்ற அரசன், தனக்காக யாகம் செய்ய வந்த ஸ்வேத கேதுக்கும் அவருடைய தந்தை ஆருணிக்கும்,
அந்த யாகத்தால் தான் அடைய இருக்கும் உலகத்தின் ரஹஸ்யத்தைக் கூறினார்.

கர்மங்களையோ உபாஸநமோ செய்தவன் சந்த்ரனை அடைய , அவர் இவனிடம் “நீ யார்” என்று கேட்க,
“நான் இதுவரை பலமுறை பிறந்துள்ளேன், எனக்குள் இருக்கும் பரமாத்மாவை அறிந்தேன்,
இனி ஸம்ஸாரம் வேண்டாம்,” என்று சொல்பவர்களை மேலே பரமபதத்திற்கும்,
இப்படிச் சொல்லாதவர்களைப் பூவுலகுக்கும் அனுப்புகிறார்.
முக்தி அடைபவன் திவ்யமான உருவத்தோடு விரஜா நதீ, குளங்கள், நகரங்கள், மண்டபம், ஆஸநம், படுக்கை எல்லம்
கடந்து பரமாத்மாவின் மடியில் ஏறி அமர்ந்து, நீரே எனக்கு ஆத்மா என்று கூறி அவரோடே சேர்ந்து ஆநந்தமாக இருக்கிறான்.

————

10-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ ப்ரதர்தந வித்யை –

இந்த்ரன் ஸ்வர்கத்தில் ப்ரதர்தநன் என்பவரைக் குறித்து உபதேசம்

இந்த்ர லோகத்துக்குச் சென்ற ப்ரதர்தநனுக்கு இந்த்ரன் வரம் வழங்க,
தனக்கு மிக்க நன்மையை விளைக்கக் கூடிய ஒன்றை அவரே உபதேசிக்க வேண்டும் என்று ப்ரதர்தநன் கேட்டான்

இந்த்ரன் கூறியது – “என்னையே உபாஸிப்பாய். அதன் மூலம் முக்தி அடையலாம் என்ற படியால்
அதுவே உனக்கு நன்மை தருவது. நானே ப்ராணனாகவும் ஜீவாத்மாவாகவும் உள்ளேன்.
சக்கரத்தின் விளிம்பு அதன் குச்சிகளிலும், அவை அதன் நடுவிலும் தாங்கப் படுவது போல்
அசேதநப் பொருட்கள் சேதநர்களாலும், சேதநர்கள் ப்ராணனாலும் தாங்கப்படுகின்றன” என்று.
இங்கு இந்த்ரன் ’நான்’ என்று சொல்வது தன்வன மட்டும் அல்ல.
தனக்குள் பரமாத்மா இருப்பதை நன்றாக உணர்ந்தபடியால் தன்னைக் குறிக்கும் ’நான்’ என்ற சொல்
பரமாத்மா வரையில் குறிக்கும் என்று அறிந்து, அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

———

11-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பாலாகி வித்யை

அஜாதசத்ரு என்ற அரசன் பாலாகியைக் குறித்து உபதேசம் –

பாலாகி என்பைர் காசியின் அரசனான அஜாதசத்ரு என்பவரிடம் ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறேன் என்று
கூறி, இறுதியில் அவரிடம் உபதேசம் பெற்றார்

ஸூர்யன், சந்த்ரன், மின்னல், மேகம், ஆகாசம், வாயு, நெருப்பு, ஜலம், கண்ணாடி, திசைகள், நிழல், மனது, வலது கண், இடது கண்
ஆகியவற்றுக்குள் இருக்கும் புருஷன், எதிரொலி, உடலில் இருக்கும் ஆத்மா முதலானவர்களை ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல,
அதை நிராகரித்து, இவை அனைத்தையும் , ஏன் உலகனைத்தையும் கூடப்,படைப்பவர் தான் ப்ரஹ்மம் என்று அஜாத சத்ரு கூறினார்.
மேலும் , உறக்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்கிறார்,
பரமாத்மா அவனத்து ஜீவர்களோடும் சேர்ந்து ஆநந்திக்கிறார் என்று கூறினார்

————–

12-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்– மைத்தரயீ வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி மைத்தரயீ என்ற தன் மனைவியைக் குறித்து உபதேசம் –
யாஜ்ஞவல்க்யர் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை விடுவதற்காக தன் சொத்தை மைத்தரயீ காத்யாயனி என்ற இரு மனைவிகளுக்கும் பிரித்துக்
கொடுக்க, மைத்தரயீ அதை ஏற்காமல் அவர் அறிந்த ப்ரஹ்மத்தை உபதேசிக்கக் கேட்டாள்-

யாஜ்ஞவல்க்யர் உபதேசித்தது – “கணவன், மனைவி, மக்கள்,செல்வம் , ஸ்வர்கம், தேவதைகள் ஆகியவர் யாருமே தங்கள்
ஸங்கல்பத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின்
ஸங்கல்பத்தால் தான். அந்த ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, ஆராய்ந்து, நேரே காண்பது போல் த்யாநித்தால், அவனத்தையும் அறிந்தவன்
ஆகிறான். அப்படிக் காண்பவன் இனி ஸம்ஸாரத்தில் பிறப்பதில்வல,
ஆசைப்பட்ட அவனத்துமாகவும் ப்ரஹ்மத்தையே அடைகிறான்.
அப்பொழுது இவனுக்கு தேஹாத்ம ப்ரமமோ ஸ்வாதந்த்ர்ய ப்ரமமோ இருக்காது. அவரை அவரருளில்லாமல் அறிவது அரிது.

————

13–ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–ஸ்ரீ சர்வ அந்தராத்ம வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உஷஸ்தர் கஹோர் என்ற இரு ரிஷிகளைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் பல ரிஷிகள் சேர்ந்து யாஜ்ஞவல்க்யரின் அறிவை பரீஷை செய்யக் கேள்விகள் கேட்டனர்.
அப்பொழுது இருவர் கேட்ட கேள்விகளுக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை –

முதலில் உஷஸ்தர் “ப்ரஹ்மம் யார்?” என்று கேட்க,
“ப்ராண வாயு கொண்டு வாழ வைப்பவர் ப்ரஹ்மம்” என்று கூறி, உடல் புலன்கள் ப்ராணன் முதலானவற்றிலிருந்து வேறு பாட்டையும்,
“இந்த்ரியங்களின் உதவியால் அறிவு பெரும் ஜீவனை இங்கு நினைக்க வேண்டாம்”என்று ஜீவனைக் காட்டிலும் வேறுபாட்டையும் கூறினார்.
அதுவும் புரியாமல் கஹோளர் “ஜீவனே ப்ரஹ்மமா?” என்று மறுபடியும் கேட்க,
“சோகம் பசி தாகம் அறிவின்மை மூப்பு மரணம் இவை அனைத்தையும் கடந்தவரே ப்ரஹ்மம்” என்று கூறி ஸ்பஷ்டமாக
ஜீவனைக் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே ப்ரஹ்மம் என்றார்.

14-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அந்தர்யாமி வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உத்தாலகர் என்ற ரிஷியைக் குறித்து உபதேசம்
உத்தாலகர் கல்வி கற்ற காப்யர் என்ற ஆசானிடம்
ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விகளை அவர் ஜநகனின் சபையில்
யாஜ்ஞவல்க்யரிடம்
கேட்க, அவர் அவற்றுக்கு
பதில் உரைத்தார்.

“உலகங்கள் அனைத்தையும் கட்டி வைக்கும் கயிறு எது? உலகங்கள் அனைத்துக்கும் அந்தர்யாமி
(உள்ளே புகுந்து செலுத்துபவர்) யார்?” என்று உத்தாலகர் கேட்க,
“வாயு (காற்று) தான் அனைத்தையும் கட்டும் கயிறு என்றும், ப்ருதிவீ ஜலம் அக்நி வான், காற்று, ஸ்வர்கம்,
ஸூர்யன், திசைகள், சந்த்ரன், ப்ராணன், வாக், கண், காது, மனது,தோல், ஜீவாத்மா
ஆகிய அனைத்துக்குள்ளும் இருந்து அவற்றை இயக்குபவர், என்றுமே தானாக மரணமற்றவராய்,
தான் மற்றவரால் அறியப்படாமல் தான் அனைத்தையும் அறிபவரான இவணயற்ற ப்ரஹ்மமே ” என்று கூறினார் யாஜ்ஞவல்க்யர்.

——-

15 –ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அக்ஷர வித்யை

ஸ்ரீ யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி கார்கீ என்ற பெண்ணைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் கார்கீ என்ற பெண் கேட்ட கேள்விக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை

கார்கீ ஒவ்வொன்றாகக் கேள்விகளைக் கேட்க, பூமி ஜலம் காற்று ஸூர்யலோகம், சந்த்ரலோகம், நக்ஷத்ர லோகம், தேவ லோகம் ,
இந்த்ரலோகம், ப்ரஜாபதிலோகம், ப்ரஹ்மாவின் லோகம், அவ்யாக்ருதமான ஆகாசம் ஆகியவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த
உலகால் தாங்கப்படுகின்றன என்று கூறி,
அவ்வாகாசம் அக்ஷரம் என்று சொல்லப்படும் பரமாத்மாவால் தாங்கப்படுகிறது, அந்த பரமாத்மாவின் கட்டளையால் தான்
ஸூர்யன் சந்த்ரன் காலம் நதிகள் ஆகிய அனைத்தும் இயங்குகின்றன,
அவரை உபாஸிப்பவன் அவரையே அடைகிறான் என்று யாஜ்ஞவல்க்யர் கூறினார்.

————

16-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக–உபநிஷத்–ஜோயோதிஷாம் ஜோதிர் வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி ஜநக மஹாராஜனைக் குறித்து உபதேசம் –
இந்த உலகத்தில் ப்ராணிகள் அனைத்தும் எந்த ஒளியின் உதவியால் செயல் படுகின்றன என்று ஜநகன் கேட்க,
அதற்கு பதில் உரைக்கிறார் யாஜ்ஞவல்க்யர்

ஸூர்யனும் சந்த்ரனும் அஸ்தமிக்கிற படியாலும், அக்நியும் பேச்சும் நின்று விடுகிற படியாலும்,
ஜீவாத்மாவின் ஜ்ஞாநமும் குறைந்த சக்தியை உடைய படியாலும் எப்பொழுதும் ப்ராணிகளுக்குப்
ப்ரகாசகம் ஆக முடியாது.
இந்த ஜ்யோதிஸ்ஸுகளை விட உயர்ந்த ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவே ப்ராணிகள் செயல்பட உதவும் ஒளி ஆவார்.
ஸ்வப்நத்தில் நாம் பார்க்கும் பொருள்களை எல்லாம் அவரே படைக்கிறார்
அவரை உபாஸித்தால் அவரை அடையலாம்.

———-

17-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–அந்தராதித்ய வித்யை –

வேத புருஷன் உபதேசம்

ஸூர்ய மண்டலத்துக்குள்ளும் நம் கண்ணுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா பொன் மயமான திருமேனியும்,
தாமரை போன்ற திருக்கண்களும், உத் என்ற திருநாமமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பாபங்களைக் கடந்தவர், அவரை உபாஸிப்பவர்களும் தங்கள் பாபங்களைக் கடக்கிறார்கள்,
பரமாத்மாவையே அடைகிறார்கள் –

————–

18-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஆகாச வித்யை

ப்ரவாஹணர் என்ற அரசன் தால்ப்யர் மற்றும் சிலகர் என்ற ரிஷிகளைக் குறித்து உபதேசம்

மூன்று ரிஷிகள் ஸாமத்தின் முடிவைப் பற்றி விவாதிக்க,
மற்ற இருவரும் அறியாத ப்ரஹ்மத்தை ப்ரவாஹணர் அவர்களுக்கு உபதேசித்தார்

சிலகர் தால்ப்யரிடம் வரிசையாகக் கேள்விகள் கேட்க,
தால்ப்யரும் ஸாமம், ஸ்வரம், ப்ராண வாயு, அன்னம், ஜலம், ஸ்வர்கம், பூமி ஆகியவற்றில் ஒவ்வொன்றும்
அடுத்தடுத்தை அண்டி உள்ளது என்று கூற, அதற்கு மேல் தால்ப்யருக்குத் தெரியாததால்,
பூமிக்கும் ஆதாரமாய் இருப்பவர் எங்கும் ஒளி பொருந்தியபடியால் ’ஆகாசம்’
என்று சொல்லப்படும் பரமாத்மா என்று ப்ரவாஹணர் கூறினார்.

————-

19-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ப்ராண வித்யை

உஷஸ்தி என்ற ரிஷி யாகம் செய்யும் மூவரைக் குறித்து உபதேசம்

உஷஸ்தி என்பவர் அருகில் அரசனின் யாகத்தைச் செய்து கொண்டிருந்த மூவரைப் பார்த்து,
அவர்கள் புகழும் தேவதை யார் என்று கூறினார்.

யாகத்தில் ப்ரஸ்தோதா உத்காதா ப்ரதிஹர்தா என்று மூவர் ஸாமம் என்ற இசையோடு மந்த்ரங்களைப் பாட வேண்டும்.
அவர்களால் பாடப்படும் தேவதைகள் முறையே ப்ராணன், ஆதித்யன் மற்றும் அன்னம் என்று உஷஸ்தி கூறினார்.
இங்கு ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா,
அவரே அனைத்து உயிர்களையும் படைத்து அழித்து வாழ வைக்கும் ப்ராணனானபடியால்.

———

20-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–மது வித்யை

வேத புருஷன் உபதேசம்

ஸூர்யனே தேனாகவும் -ஆகாசத்தையே தேன் -அடையாகவும் ,
வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் என்ற பூக்களிலிருந்து வேத மந்த்ரங்கள் என்ற வண்டுகள் ஹவிஸ்ஸின் ரஸத்தை
ஸூர்யனின் கதிர்கள் என்ற ஓட்டைகள் மூலம் ஸூர்யன் என்ற தேனாக சேமித்து வைப்பதாகவும்,
அதை வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் ஸாத்யர்கள் ஆகிய தேவதைகள் ஒவ்வொரு
திசையிலிருந்து உண்பதாகவும்,
அந்த ஸூர்யனுக்குள் பரமாத்மா இருப்பதாகவும் த்யாநம் செய்தால் பரமாத்மாவையே அடைந்து
என்றும் அளவற்ற ஜ்ஞாநத்தோடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

————-

21-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–காயத்ரீ வித்யை

வேதபுருஷன் உபதேசம்

நான்கு பாதங்களும் ஆறு தன்மைகளும் கொண்ட காயத்ரீ என்ற
சந்தஸ் (விருத்தம்) போல் இருப்பவர் பரமாத்மா என்று த்யாநிக்க வேண்டும்.
பரமாத்மாவுக்கும் உயிரினங்கள், ப்ருதிவீ, உடல்கள், ஹ்ருதயம் என்று நான்கு பாதங்களும், ஆறு தன்மைகளும் உள்ளன.
இவை அனைத்தும் அவருடைய செல்வத்தின் சிறு பகுதியே
இதை விட பன்மடங்கு அதிகமான செல்வம் பரமபதத்தில் உள்ளது

————–

22-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பரம் ஜ்யோதிர் வித்யை

வேதபுருஷன் உபதேசம்

ஸம்ஸாரத்தையே தாண்டி, ஶ்ரீவைகுண்டத்தில் ஒளிவிடும் மிக உயர்ந்த ஒப்பில்லாத ஜ்யோதிஸ்ஸான பரமாத்மா தான்
நமது இந்த உடலுக்குள் இருந்து நாம் உண்ணும் உணவைச் சமைக்கக் கூடிய வைச்வாநரன் என்ற நெருப்பாகவும் உள்ளார்.
அந்த நெருப்பின் ஒலியைக் தகட்டு, வெப்பத்தை அறிந்து, அதற்குள் இருக்கும் பரமாத்மாவை த்யாநிக்க வேண்டும் –

———-

23–ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–சாண்டில்ய வித்யை

சாண்டில்யர் என்ற ரிஷி உபதேசம்

இவ்வுலகம் அனைத்தும் ப்ரஹ்மத்தாலேயே படைத்து அழித்து காக்கப்படுகிறபடியால் இவ்வுலகம் அனைத்தும் அவரே
என்று அறிந்து, அதனால் தேவையில்லாத விருப்பு வெறுப்புகளில்லாமல் சாந்தி அடைந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.
ஒருவன் இவ்வுலகில் எவ்வாறு பரமாத்மாவை உபாஸிக்கிறானோ அவன் ஸ்ரீ வைகுந்தத்தில் அவ்வாறே அவனை அநுபவிக்கிறான்.
பரமாத்மா தூய மனதால் மட்டும் அறியப்படுபவர், ஒளிமிக்கவர், எல்லாச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர்,
இயற்கையில் இவ்வுலகங்கள் அனைத்தையும் காட்டிலும் பெரியவர், உபாஸநத்தை எளிமை யாக்க நம் இதயத்தில்
மிகச் சிறியவராக உள்ளார் என்று த்யாநித்து அவரை அடையலாம் –

———–

24-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஸம்வர்க வித்யை

ரைக்குவர் என்ற ரிஷி ஜாநச்ருதி என்ற அரசனைக் குறித்து உபதேசம்

ஜாநச்ருதி என்ற அரசன் தர்மங்களைச் செய்தாலும் ப்ரஹ்மத்தை அறியாதவன்.
அவனுக்கு அதை போதிக்க இரண்டு ரிஷிகள் பறவை உருவம் கொண்டு, அவனை விட ரைக்குவர் உயர்ந்தவர் என்று சொல்ல,
அதைக்கேட்ட அரசன் ரைக்குவரைத் தேடித் சென்று ப்ரஹ்ம உபதேசம் பெற்றான்.

ஸம்வர்கம் என்றால் அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடியது.
தேவதைகளுக்குள் வாயு தான் ஸம்வர்கம் என்றும்
ஆத்மாவோடு தொடர்பு யுடையவற்றுள் ப்ராணன் தான் ஸம்வர்கம் என்றும் ரைக்குவர் கூறினார்.
இங்கு வாயு ப்ராணன் என்ற சொற்கள் அவற்றுக்குள் இருக்கும் பரமாத்மாவைக் குறிக்கின்றன.
சௌநகர் அபிப்ரதாரி என்ற ரிஷிகளிடம் ஒருவர் வந்து நான்முகக் கடவுளே ஸம்வர்கம் என்று சொல்ல,
சௌநகர் பதிலுக்கு “தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய், தான் அழியாமல் மற்றவற்றை அழிப்பவராய்,
ந்ருஸிம்ஹ அவதாரம் செய்தவரான பரமாத்மாவே ஸம்வர்கம்” என்று கூறினார் என்ற கதையையும்
ரைக்குவர் ஜாந ச்ருதிக்கு விளக்கினார்.
இதை அறிந்து உபாஸிப்பைன் முக்தி பெற்று ஸர்வஞ்ஞன் ஆகிறான் —

———

25 -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ஸத்யகாம வித்யை / ஷோடச கல ப்ரஹ்ம வித்யை –

ஹாரித்ருமதர் என்ற ரிஷி ஸத்யகாமன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்

ஹாரித்ருமதரிடம் கல்வி கற்க வந்த ஸத்யகாமன், தன் கோத்ரம் அறியாததை நேர்மையாகச் சொல்ல
அவரும் அவனுக்கு 400 மாடுகளைக் கொடுத்தார்
அந்த மாடுகளை 1000ஆக வளர்த்து வரச் சொன்னார். அவனும் செய்தான்.
அதனால் த்ருப்தி அடைந்து காளை , அக்நி, ஹம்ஸம்,மத்கு பறவை ஆகிய நால்வரும்
ப்ரகாசவான், அநந்தவான், ஜ்யோதிஷ்மான், ஆயதநவான் என்ற நான்கு கால்களையும், அவை
ஒவ்வொன்றிலும் நான்கு கலைகளையும் கொண்டவர் பரமாத்மா என்று உபதேசித்தனர்.
ஆசார்யனும் அதையே உபதேசித்தார்.

————–

26-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–உபகோஸல வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம் –

வெகு காலம் குருகுலத்தில் இருந்த போதிலும் உபகோஸலனுக்கு ஸத்யகாமர் ப்ரஹ்மத்தை உபதேசிக்காததால்,
அக்நிகள் கருணையோடு அவனுக்கு உபதேசித்தனர்
அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும் ப்ராணனாகவும், அளவற்ற ஆநந்தத்தை உடையவராகவும் இருப்பவரே பரமாத்மா
என்று பரமாத்மாவை உபாஸிக்கும் முறையையும் , அந்த உபாஸநத்தின் அங்கமாகத் தங்களை உபாஸிக்கும் முறையையும்
கூறிவிட்டு, மீதமிருப்பதை உன் ஆசார்யரே உபதேசிக்க வேண்டும் என்று அக்நிகள் மூவரும் கூறினர்.
ஆசார்யரும் குருகுலம் திரும்பி, நடந்ததை அறிந்து, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல்
பரமாத்மாவை உபாஸிப்பவனிடம் அவன் கவனக் குறைவால் செய்யும் பாபங்கள் ஒட்டாது என்று முக்தியை உபதேசித்தார்.

————

27-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அக்ஷி வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்
மேற்கண்ட உபதேசத்தின் தொடர்ச்சியே இது

பரமாத்மாவை நம் கண்ணில் இருப்பவராகவும், அனைத்து கல்யாண குணங்களையும் உடையவராகவும்,
தன் அடியார்க்கு மேன்மை ஏற்படுத்துபவராகவும், அழகிய ஒளி பொருந்திய திருமேனி உடையவராகவும் த்யாநிக்கும் உபாஸகன்,
அர்சிஸ் பகல் சுக்லபக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் ஆதித்யன் சந்த்ரன் மின்னல் முதலான தேவதைகளின்
லோகங்கள் வழியாகச் சென்று பரமபதத்தை அடைகிறான். அவன் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பதில்லை

————-

28-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பஞ்சாக்நி வித்யை

ப்ரவாஹணர் என்ற ரிஷி ஆருணி என்பவரைக் குறித்து உபதேசம்

ப்ரவாஹணர் என்ற அரசன் சபையில் தன் மகனிடம் கேட்ட ஐந்து கேள்விகளின் விடைகளைத் தானும்
அறியாததால், தந்தையான ஆருணி ப்ரவாஹணரிடம் சென்று கேட்டு அறிந்தார்

பரமாத்மாவின் உடலான ஜீவாத்மா ஸவர்கம், மேகம், பூமி, ஆண்,பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு,
ஸோமன் மழை செடிகள் ரேதஸ் கர்ப்பம் என்ற ஐந்து வடிவங்களை எடுக்கிறார். இதை அறிந்தவனும் ப்ரஹ்மத்தை உபாஸிப்பவனும்
தேவ யாநம் என்ற வழியால் முக்தி அடைகிறான்.
வேதம் சொன்ன கர்மங்களை மட்டும் செய்பவன் பித்ருயாணம் என்ற வழியால் சந்த்ரனை அடைந்து,
புண்ணியம் உள்ள வரை அங்கு ஸுகம் அநுபவித்து, பின்பு ஆகாயம், வாயு, புகை , மேகம், மழை மூலமாக பூமியை அடைகிறான்.
உபாஸநமும் செய்யாமல் கர்மங்களையும் செய்யாதவன் இந்த இரண்டு வழிகைளாலும் செல்லாமல்,
ஸ்வர்கத்தை அடையாமல் தாழ்ந்த பிறவிகளை எடுக்கிறான்.

————-

29-ஸ்ரீ சாந்தோக்ய–உபநிஷத்–வைச்வாநர வித்யை

அச்வபதி என்ற கேகய தேசத்து அரசன்–
ப்ராசீநசாலர் ஜநர் ஸத்யயஜ்ஞர் புடிலர் இந்த்ரத்யும்நர் உத்தாலகர் என்ற அறுவரைக் குறித்து உபதேசம்

ஐவர் சேர்ந்து வைச்வாநரர் என்ற பரமாத்மாவைப் பற்றி விவாதம் செய்து, தெளிவு பெற உத்தாலகர்
என்பவரிடம் செல்ல,
அவரும் அவர்களோடு சேர்ந்து அச்வபதியிடம் உபதேசம் பெற்றார்கள்.

ஆறு ரிஷிகளும் தனித்தனியாக த்யு லோகம், ஸூர்யன்,,வாயு ,ஆகாசம், ஜலம், பூமி ஆகியைற்றையே பரமாத்மா என்று
உபாஸிப்பதை அறிந்து கொண்ட அச்வபதி, ப்ரஹ்மம் அப்படி அளவு பட்டவர் அல்ல -அளவற்றவர் , இவை அனைத்தும் அவர்
உடலின் சிறு பகுதிகளே என்றும், முழுமையான ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் அந்த ப்ரஹ்மம் தன் உடலின் பகுதிகளிலும்
இருப்பதாக எண்ண வேண்டும் என்றும் கூறி, அந்த உபாஸகன் முற் செய்த பாபங்கள் அவனத்தும் எறிக்கப்படுகின்றன என்றார்.

————

30-ஸ்ரீ சாந்தோக்ய-உபநிஷத் –ஸத் வித்யை

உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேதகேது என்ற தன் மகனைக் குறித்து உபதேசம்
ஸ்வேதகேது குருகுலம் சென்று வந்த போதும் ப்ரஹ்மத்தை அறியாமல் கர்வத்தோடு
இருந்தபடியால் அவனுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார் தந்தையான உத்தாலகர்

உலகம் அனைத்தையும் இயக்கும் எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அதை நீ அறிந்தாயா என்று தந்தை மகனிடம் கேட்டு, அவன் அறியாதபடியால் அப்படிப்பட்ட பரமாத்மாவை உபதேசித்தார்.

மண் என்பது குடம் முதலானவற்றின் உபாதாந காரணம் ஆனபடியால் மண்ணை அறிந்தால் அவை அனைத்தையும்
அறிந்ததாவது போல்,
ப்ரஹ்மமே இவ்வுலகின் உபாதாந காரணமானபடியால் அவரை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.

அவரே தான் உலகுக்கு நிமித்த காரணமாகவும் உள்ளார், அதாவது அவர் தான் வேறே ஒருவரை எதிர்பார்க்காமல்
தானே ஸங்கல்பம் செய்து உலகைப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதுமே அவரை ஆத்மாவாகக் கொண்டது தான் -அவரால் வ்யாபிக்கப்பட்டது தான்.
ஆகவே , ஸ்வேதகேது என்ற உனக்குள்ளும் அதே பரமாத்மாவே இருக்கிறபடியால் அவரே தான் நீ
என்று தந்தை உபதேசித்தார். மகனும் ப்ரஹ்மத்தை அறிந்தான்.

————

31-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பூம வித்யை

ப்ரஹ்மாவின் மகனான ஸநத்குமாரர் நாரதரைக் குறித்து உபதேசம்

தான் வேதங்கள் முதலான அனைத்து நூல்களையும் அறிந்திருந்தாலும்
பரமாத்மாவை அறியாதபடியால் சோகம் நீங்கவில்லை என்று நாரதர் கூற, அவருக்கு ப்ரஹ்மத்தை
உபதேசித்தார் ஸநத்குமாரர்

சொற்கள், பேச்சு, மனது, உறுதி, சித்தம், த்யாநம், அறிவு, பலம்,
அன்னம், ஜலம், தேஜஸ், ஆகாசம், நினைவு, ஆசை , ப்ராணன் என்று வழக்கப்படும் ஜீவாத்மா ஆகியவற்றில் ஒவ்வொன்றைக்
காட்டிலும் அடுத்தடுத்தது உயர்ந்தது என்று உபதேசித்துவிட்டு,
அந்த ஜீவனையும்விட உயர்ந்த பரமாத்மா ஸத்யம் என்று அழைக்கப்படுகிறார் என்றும்,
அவரை அறிபவன் அவரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றும், அந்த பரமாத்மா அளவற்ற ஸுகமே வடிவானவர் என்றும்,
அவரை ஒருவன் கண்டால் வேறே எதையும் காண மாட்டான் என்றும்,
அந்த ப்ரஹ்மம் நமக்கும் ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும் என்றும்,
இப்படி உபாஸிப்பவன் கர்மங்கள் நீங்கி, முக்தி அவடந்து, வேண்டிய உருவம் எடுத்து பரமாத்மாவுக்கு
கைங்கர்யம் செய்கிறார் என்றும் ஸநத்குமாரர் உபதேசித்தார்.

——————

32-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–தஹர வித்யை

வேதபுருஷன் உபதேசம்

இந்த உடல் பரமாத்மாவின் இருப்பிடமான பட்டணம் ஆகும்.
இதற்குள் தாமரை வடிவத்தில் இருக்கும் ஹ்ருதயத்திற்குள் இருக்கும் நுண்ணிய ஆகாசம் தான் பரமாத்மா. அவர் சிறியவரல்ல,
ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசத்வத விடப் பெரியவர். உபாஸகன் அடைந்த பொருட்கள், அடைய ஆசைப்படும் பொருட்கள்
அனைத்தும் இவருக்குள் உண்டு.
அந்த பரமாத்மாவையும், அவரிடம் இருக்கும் எட்டு கல்யாண குணங்கவையும் உபாஸிக்க வேண்டும்.
அவையாைன –
பாபங்களால் தீண்டப்படாமை , மூப்பின்மை , மரணமின்மை , சோகமின்மை , பசியின்மை , தாகமின்மை ,
நித்ய விபூதிக்குத் தலைவனாய் இருத்தல் மற்றும் தடையற்ற ஸங்கல்பம் என்பவையாம்.
ஜீவாத்மாவுக்கும் இந்த எட்டு குணங்களும் உண்டு என்று ப்ரஜாபதி இந்த்ரனுக்கு உபதேசித்தார்.
இப்படிப்பட்ட பரமாத்மாவை அறிந்து த்யாநம் செய்பவன், பாபங்கவைத் தள்ளி, சரீரத்தைத் துறந்து,
ப்ரஹ்ம லோகம் என்ற ஶ்ரீவைகுண்டத்தை அடைந்து, என்றும் மீண்டு வராமல் இன்பப்படுகிறார்கள்.

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: