ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — நான்காம் அத்யாயம்–

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

———

4-1-ஆவ்ருத்தி பாதம் –11- அதிகரணங்கள்

இடைவிடாமல் த்யானம் -சாதனமாக இருந்தாலும் இங்கு பல அத்தியாயத்தில் —
திவ்ய மங்கள விக்ரஹம் கல்யாண குணங்கள் ஸ்வரூபம் விபூதி -இவற்றை
தியானிப்பது மனஸ் ஸூக்கு போக்யமாக இருப்பதால் –

4-1-1-ஆவ்ருத்தி அதிகரணம்
பூர்வபக்ஷம் -ஐஹிக பலன்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் -உமியில் இருந்து நெல்லை எடுப்பது போல்
அம்முஷ்மிக அத்ருஷ்ட பலன்களுக்கு ஒரு தடவை போதும் –
ஸூத்ரகாரர்
ஆவ்ருத்தி அஸக்ருத் உபதேசாத் -என்று அத்தை நிரசிக்கிறார் –

தைத்ரியம் -ப்ரஹ்ம வித் ப்ரஹ்மத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைகிறான் -த்யானம் உபாசனம் வேதனம் –
அஸக்ருத் ஆவ்ருத்தி -மீண்டும் மீண்டும் -இடைவிடாமல் தைலதாராவத் –

4-1-2-ஆத்மாத்ம உபாசன அதிகரணம் –
ப்ரஹ்மம் தனியாக ஜீவனில் வேறுபட்டதாகஉபாசனமா -ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக எண்ணி உபாசனமா -என்று விசாரம் –
பூர்வ பக்ஷம் -தனித்து வேறுபட்டதாக –
ஸூத்ரகாரர்
ஆத் மேதி து உப கச்சந்தி க்ரஹயந்தி ச
ப்ரஹதாரண்யம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம்

——–

4-1-3-ப்ரதீக அதிகரணம்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம்
ப்ரதீக உபாசனம் -3-3- பார்த்தோம் -மனசை ப்ரஹ்மத்துக்கு பிரதியாக நினைத்து உபாசனம் -த்ருஷ்ட்டி விதி –
இது ஐஹிக பலன்களுக்கு உபாசனம் -மோக்ஷத்துக்கு அல்ல –
இதே போல் முக்ய பிராண உபாசனமும் ப்ரதீக உபாசனமே –
ப்ரஹ்மத்தை ஆத்மாவாக எண்ணி உபாசனமும் ப்ரதீக உபாசனம் தான் என்று பூர்வ பக்ஷம் –
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
ந ப்ரதீகே ந ஹி ச –
ஸூத்ரகாரர் -ஒன்றை ப்ரஹ்மமாக நினைத்து உபாசித்து சிறந்ததே -என்றும் சொல்கிறார் –

—–

4-1-4-ஆதித்ய தீமிதி அதி கரணம்
சாந்தோக்யம் –உத்கீத உபாசனம் –
ஆதித்ய உபாசனமும் உத்கீத உபாசனம் போல் செய்வதே உசிதம் பூர்வ பக்ஷம்
ஸூத்ரகாரர்
ஆதித்ய தீமத ய ச அங்க உபபத்தே —
ஆதித்ய உபாசனமே சிறந்தது -உத்கீதா உபாசனம் இதுக்கு அங்கம்

——-

4-1-5-அஸீன அதிகரணம்
உபாசனம் ஆசனத்தில் இருந்தா நின்றா நடந்தா தூங்கும் பொழுதா -விசாரம்
ஸூத்ரகாரர்
அஸீன ஸம்பவத் -ஆசனத்தில் இருந்தே செய்ய வேண்டும் –
ஆழ்ந்த தியானத்துக்கு அசையாமல் இருக்க வேண்டும் –
ஸ்ரீ கீதா- ஸ்வேதேஸ்வர உபநிஷத் பிரமாணங்கள் –

——

4-1-6-ஆ பிரயாண அதிகரணம்
ஆ ப்ரயாணாத் தத்ர அபி த்ரிஷ்டம்
ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கிட்டும் வரை -என்றவாறு
பக்தி யோகம் -பல பிறவிகளில் பின்பே பலம் கிட்டும் –

——

4-1-7—ததிகம அதிகரணம்
தர்சன சாமான ஆகாரம் –
பூர்வாக உத்தராக கர்ம விநாச விசாரம்

——-

4-1-8—இதர அதிகரணம்
கீழே பாப விநாச விசாரம்
இங்கு புண்ய விநாச விசாரம்

———

4-1-9-அநாரப்த கார்ய அதிகரணம்
சஞ்சிதம் -அநாரப்தம்
ப்ராரப்தம் -முழுவதும் கழிந்தால் தானே மோக்ஷம் -சாந்தோக்யம் -ஆறாம் அத்யாயம் –
ததிகமன அதிகரணம் போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றது சஞ்சிதம்
ப்ராரப்தம் அனுபவித்தே கழிக்க வேண்டும் பக்தி யோக நிஷ்டனுக்கு –


4-1-10-அக்னி ஹோத்ராதி அதிகரணம்

அக்னி ஹோத்ராதி து தத் கர்யாய ஏவ தத் தர்சநாத்
நித்ய நைமித்திகாதி கர்மங்களை விடாமல் பக்தி யோக நிஷ்டனும் செய்ய வேண்டும் –
புண்யங்கள் அனுகூலருக்கும் பாபங்கள் பிரதிகூலருக்கும் சென்று சேரும் -கர்மங்கள் கழிந்த பின்பே மோக்ஷ பிராப்தி –

——–

4-1-11-இதர ஷபனாதி கரணம்

போகேந து இதர ஷபயித்வ அத சம்பத்யதே -என்று ப்ராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பிராப்தி
ஜென்மங்கள் பல பல எடுக்க வேண்டி இருக்கும் –

——-

4-2-உதக்ரந்தி பாதம் –11 அதிகரணங்கள் –
ஜீவன் முக்த வாத நிரஸனம்
சாந்தோக்யம் 6 அத்யாயம் ஸத் வித்யை

4-2-1- வாக் அதிகரணம் –
வாக் இந்திரியம் மனசிலும் மனஸ் முக்ய ப்ராணனிலும் -முக்ய பிராணன் ஜீவனிலும் –
ஜீவன் ப்ரஹ்மத்திலும் சேர்ந்து -சம்பத்தி
இங்கு பூர்வ பக்ஷம் -வாக்குக்கு மனஸ்ஸூ காரணம் இல்லையே எவ்வாறு –
எனவே இங்கு வாக் இந்திரியத்தை சொல்ல வில்லை -வாக்கையே சொல்லும் என்பர்
இதை நிரஸித்து ஸூத்ரகாரர்
வாக் மனசி தர்சநாத் சப்தாச் ச -என்று வாக் இந்த்ரியத்தையே சொல்லுகிறது –
அனைத்து இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்

————–

4-2-2-மநோ அதிகரணம்
தன் மான பிராண உத்தர
உத்தர என்றது உபநிஷத் வாக் மனசி ஸம்பத்யதி என்றதன் பின் மன பிராண என்பதால்- –
இந்த அதிகரணத்தில் மேலும் ஒரு சங்கை நிவர்த்திக்கப் படுகிறது –
உபநிஷத் —அன்ன மயம் ஹி சவும்ய மன–அன்னம் அஸ்ரு ஜந்த — ஆபோ மய பிராண –என்பதால்
மனதுக்கு அன்னமும் அன்னத்துக்கு நீரும் -ப்ராணனுக்கும் நீரும் காரணம் என்பதால் -மனசு தண்ணீரில் சேரும் என்பர் பூர்வ பக்ஷம்
இவை காரணம் அல்ல -நல்ல செயல்பாட்டுக்கு உதவும் என்பதையே உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன –

—–

4-2-3-அத்யக்ஷ அதிகரணம்
சாந்தோக்யத்தில்
பிராண தேஜஸி தேஜஸ் பரஸ்யாம் தேவதயம் -என்பதில் ஜீவ -ஸப்தம் இல்லாததால்
பூர்வ பக்ஷம் முக்கிய பிராணன் இந்திரியம் மனஸ் நேராக தேஜஸ் பஞ்ச பூதங்கள் உடன் சேர்ந்தன என்பர் –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
சோதியஷே தத் உப கம திப்ய
யமுனை கடலில் கலக்கிறது–கங்கையில் கலந்து பின் கலக்கிறது – என்பது போல்
ஆதி சப்தத்தால் முக்கிய பிராணன் ஜீவனுடன் சேர்ந்து
இதே போலே மேலும் உபநிஷத் வாக்கியங்கள் உண்டே

—-

4-2-4-பூதோதி கரணம்
இதில் தேஜஸ் மட்டுமா அனைத்து பூதங்களுமா என்கிற சங்கை தீர்க்கிறார்
பூர்வ பக்ஷம் பிராணா தேஜஸ் சாந்தோக்யம் என்பதால் தேஜஸ் மட்டுமே
ஸூத்ரகாரர்
பூதேஷு தஸ் ஸ்ருதே —
எல்லா பூதங்களுடனே -ப்ரஹதாரண்யம் சொல்லுமே
பூர்வ பக்ஷம் மீண்டும் ஜீவன் ஒவ்வொரு பூதமாக என்று கொள்ளலாமே –
அனைத்தும் சேர்ந்து என்று கொள்ள வேண்டாமே என்ன
நைகஸ்மின் தர்ஷ யதோஹி –தனியாக பூதம் செயல்படாதே –
பஞ்சீ கரணம் த்ரவீ கரணம் ஏற்பட்டால் தானே செயல்பாடு –

———-

4-2-5-அஸ்ருத்யுப க்ரம அதிகரணம்
ஜீவமுக்தி வாதம் நிராசனம் இதில் –
கீழ் சொன்ன க்ரமம் அவித்யை உள்ள ஜீவாத்மாவுக்கே -அவித்யை இல்லா ஜீவாத்மா ஞானம் வந்தது முக்தி என்பர் பூர்வ பக்ஷம்
இத்தை ஸூத்ர காரர் நிரசிக்கிறார்
ஸமானச் ச அஸ்ருத்யுப க்ரமாத் அமிர்தத்வம் ச அநு போஷ்ய
அர்ச்சிராதி மார்க்கம் வழியே தான்
கட உபநிஷத்
யதே ஸர்வே ப்ரமுச்யந்தே காம யஸ்ய ஹ்ருதி ஸ்ரீதஸ் அத மர்த்ய அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸம்ஷ்னுதே
அநு போஷ்ய-என்று சரீரம் எரிப்பதுக்கு முன்பே அம்ருதத்வம் அடைகிறான் –
மேலும் ஸூஷ்ம சரீரம் கொண்டு விரஜையில் நீராடி வாஸனா ருசிகளைப் போக்கி ப்ரஹ்ம பிராப்தி –

——–

4-2-6-பர சம்பத்தித்த அதிகரணம்
இது நான்காவதுக்கு அடுத்து இருக்க வேண்டும்
ஜீவமுக்தி நிரஸிக்க த்வரித்து கீழ் அதிகரணம்
இதில் ஜீவாத்மா அந்தராத்மாவாய் உள்ள ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் அடைவதைச் சொல்கிறது –
பூர்வ பக்ஷம் -உபநிஷத்
தேஜஸ் பரஸ்யம் தேவதயம் -என்று பூத சூஷ்மம் இந்திரியம் மனஸ் முக்ய பிராணன் இவற்றை மட்டுமே சொல்லிற்று –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
தானி பர தத ஹி அஹ –என்று
இவை அனைத்தும் பரமாத்மா இடம் ஒன்றி –
இது ஸ்வர்க்கம் நரகம் போகும் ஜீவாத்மாவுக்கும் ஒய்வு எடுத்துக் கொள்ள உண்டே –

———–

4-2-7-அவி பாகதி கரணம்
இதில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்யம் பூர்வ பக்ஷம்
அவி பாகோ வஸனாத் –சம்பத்யதே –என்று இரண்டும் அப்ருதக் சித்தம் தானே ஒழிய ஒன்றே அல்ல –

——-

4-2-8- ததோகோ அதிகரணம் –
ப்ரஹ்ம வித் ப்ரஹ்ம நாடி வழியாகவும் மற்றவர்கள் வேறே நாடி வழியாகவும்
கீழ் வரை அனைவருக்கும் பொது
உபநிஷத் -ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாட்யா –தசம் மூர்த்தானாம் அபி நிஸ்ருதைக
தய ஊர்த்வ மயன் அம்ருதத்வ மேதி விஸ்வ ஞாந்ய உத் க்ரமண பவந்தி -என்று
மூர்த்நா நாடி வழியே தற்செயலாகச் செல்கிறான் என்கிறது
ஸூத்ர காரர்
ததோகோ அக்ர ஜ்வலனம் தத் ப்ரகாசிதா த்வாரா வித்யா சமர்த்யத் தத் சேஷ கதி அநு ஸ்ம்ருதி –
யோ கச்ச ஹார்த்ந அநு க்ருஹீத — இதுவே அதிக நீளமான ஸூத்ரம்
அவனது அனுக்ரஹத்தாலே 101 நாடி மூலம் செல்கிறான் -என்கிறது –

———–

4-2-9-ரஸ்மி அதிகரணம்
சாந்தோக்யம் -அத யத்ர ஏ தஸ்மாத் சரீரத் உத் க்ரமாதி அத எதைரேவ ரஸ்மி அபி ஊர்த்வம் அ க்ரமதே —
பூர்வபக்ஷம் இரவில் ரஸ்மி இல்லையே –
ஸூத்ர காரர்
ரஸ்மி அநு சாரி –ஸூர்ய கிரணங்கள் மூலமே செல்கிறான் –
மேகங்கள் கிரணங்களை மறைத்தாலும் இரவிலும் நாம் காணாமல் இருந்தாலும் எப்பொழுதும் கிரணங்கள் உண்டே –

———-

4-2-10-நிஷாதி கரணம்
பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் இல்லாமல் இரவு கிருஷ்ண பக்ஷம் தஷிணாயணம் -என்றால்
மோக்ஷ பிராப்தி இல்லை பூர்வ பக்ஷம்
அத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
நிஷி நேதி சேதன சம்பந்தஸ்ய ஏவத் தேஹ பவித் வத் தர்சய யதி ச –
சாந்தோக்யம்
தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவத்ந வி முக்ஷ்யே அத சம்பத்ஸ்யே –என்று
பிராரப்த கர்ம அவசானத்தில் மோக்ஷ பிராப்தி என்கிறதே -அதனால் தர்சயதி ச என்கிறார் –

————

4-2-11-தஷிணாய அதிகரணம்
தைத்ரியம்
அத்ய தக்ஷிண ப்ரமியதே பித்ருநாம் ஏவ மஹிமானாம் கத்வ சந்த்ர மாச சாயுஜ்யம் கச்சதி –
பித்ரு லோகம் வழியாக சந்த்ர போவதாக உள்ளது
பீஷ்மர் இதற்காகவே உத்தராயணத்துக்கு காத்து இருந்தார் – -பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
அத ச அயனே அபி தஷிணே —
சந்த்ர லோகத்தில் ஒய்வு எடுத்து கொண்டு
தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமானாம் ஆப்நோதி -என்கிறது அதே தைத்ரியம் –
யோகின பிரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே -என்று ஒரு ஸூத்ரத்தால்
மேலும் தூமாதி மார்க்கம் வழியாக செல்பவனே திரும்புகிறான்
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக சென்றவன் திரும்ப மாட்டான் என்கிறது –

——

4-3-கதி பாதம் –இதில் ஐந்து அதிகரணங்கள் –

அர்ச்சிஸ் ஜ்வல்நா –அஹா திவச –ஜ்யோத்ஸ்ன பக்ஷம் -உத்தராராயண –ஷட் அங்கீத மாஸே —
ஸம் வத்ஸர –வாயு பாவன –ஸூர்ய ஆதித்ய தாபன –சந்த்ரமாஸ –
வித்யுத் அமானவ புருஷன் -வருண -இந்திர-பிரஜாபதி
நால்வரும் விரஜா நதி வரை கூட்டிச் செல்வர் என்பவர்

—-

4-3-1-அர்ச்சிராதி அதி கரணம்
சாந்தோக்யம்–4-14- / 8-4-உபகோஸல வித்யையிலும் –
கௌஷிகி ப்ருஹதாரண்யம்
இந்த மூன்றிலும் சில -வேறுபாடுகள்-
ஏதாவது ஒரு வழியை முக்தாத்மா எடுத்துக் கொள்ளலாம் பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து –ஸூத்ரகாரர்
அர்ச்சிரதின தத் பிரதிதே -ஒரே ஒரு மார்க்கமே
குண உப ஸம்ஹார பாதம் படியே சமன்வயப்படுத்தி கொள்ள வேண்டும் –

——

4-3-2-வாயு அதிகரணம்
இந்த சாந்தோக்யம் சம்வத்சரத்துக்கு பின் ஸூர்யன்
ப்ரஹதாரண்யம் -வாயு லோகம் -இதுவே தேவ லோகம் -சம்வத்சரத்துக்கும் ஸூர்யனுக்கும் நடுவில் –
பூர்வ பக்ஷம் இந்த வேறுபாட்டால் -ஏதாவது ஒன்றை முக்தாத்மா கொள்ளலாம் என்றும்
வாயு லோகமும் தேவ லோகமும் ஓன்று அல்ல என்றும் சொல்வர் –
ஸூத்ரகாரர் இதுக்கு
வாயும் அப்தத் அவி ஷேஷவிஷே ஸப்யம் -என்று
வாயு லோகம் சம்வத்சரத்துக்கு மேலும் ஸூர்யனுக்கு கீழும் கொள்ள வேண்டும் என்றும்
தேவ லோகமும் வாயு லோகமும் ஒன்றே என்றும்
பத க்ரமம் வேறே அர்த்த க்ரமம் வேறே என்றும் அர்த்த க்ரமம் படியே கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் –

———–

4-3-3-வருண அதிகரணம்
கௌஷிதகி உபநிஷத் -அக்னி லோகம் -வாயு லோகம் -வருண லோகம் -ஸூர்ய லோகம் –
இந்திர லோகம் -பிரஜாபதி லோகம் -ஸ்ரீ வைகுண்டம்
கீழே தேவ லோகம் -வாய் லோகம் சம்வத்சரத்துக்கும் ஸூர்ய லோகத்துக்கு நடுவில் என்றது
ஸூத்ரகாரர்
ததிஹ ஆதி வருண சம்பந்தாத் –
வருண லோகம்-ததிஹ– வித்யுத் -மின்னல் புருஷனுக்கு மேலே கொண்டு
இந்திர ப்ரஜாபதியும் வருண லோகத்துக்கு மேலே கொள்ள வேண்டும் என்கிறார் –
.
——–

4-3-4-ஆதி வாஹிக அதிகரணம்
பூர்வ பக்ஷம் -12 இடங்களும் போகம் அனுபவிக்கும் இடங்கள் என்பர்
ஸூத்ரகாரர் —ஆதி வாஹிக தல் லிங்காத்
வித்யுத் புருஷன் பற்றி உபநிஷத் -ச ஏநன் ப்ரஹ்ம கமயதி -என்கிறது
இங்கு சொன்னது மற்ற 11 புருஷர்களும் கூட்டிச் செல்பவர்கள் என்பதற்கு உப லக்ஷணம்

————

4-3-5-கார்ய அதிகரணம்
முக்தாத்மா மட்டுமே ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்
கூட்டிச் செல்லும் இவர்கள் அல்ல என்கிறது –
பாதராயணர் தமது சிஷ்யர்களான பதரி -ஜைமினி இருவரையும் அவர்கள் கருத்துக்களை சொல்லக் சொல்கிறார் –
கார்யம் பதரி அஸ்ய கதி உப பத்தே
கார்யம் என்று ஹிரண்யகர்பன் -நான்முகனை சொல்கிறது -காரணம் ப்ரஹ்மம் கார்யம் நான் முகன் என்றவாறு

பர ப்ரஹ்மம் விபு எங்கும் இருப்பவன் -எவ்வாறு இவர்கள் அழைத்து செல்ல முடியும்
புருஷ அமானவ ஏத்ய ப்ரஹ்மா லோகன் கமயதி -என்றும் உபநிஷத்
லோகன் -லோகங்கள் -பல அண்டங்கள் -பல பிரம்ம லோகங்கள் –
மேலும் உபநிஷத் —பிரஜாபதி சபம் வேஷ்ம ப்ரபத்யே -பிரஜாபதி லோகம் அடைகிறான் –
ஆதிவாஹிகர் இங்கு தான் கூட்டிச் செல்கிறார்கள் -ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்கிறார் பதரி –
ஐந்து ஸூத்ரங்களால் மேல் சொன்னபடி பதரி
பின்பு ஜைமினி மூன்று ஸூத்ரங்களால் –
பரம் ஜைமினி முக்யத் வத் –பர ப்ரஹ்மம் இடம் கூட்டிச் செல்கிறார்கள்
சாந்தோக்யம் 8 அத்யாயம் -பரஞ்சோதி இடம்
மேலும் இரண்டு ஸூத்ரங்களால்
தர்சனச் ச –என்றும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -என்றும்

அடுத்து பாதராயணர் பத்ரி கூற்றைத் தள்ளி ஜைமினி கூற்றை கொஞ்சம் கொண்டு
அப்ரதி கலம்பனம் நயதீதி பாதராயண உபயத ச தோஷாத் தத் க்ரது ஷ -என்கிறார்

ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உபாசகர்கள் இரண்டு வகை
பிரதிக ஆலம்பனர்
அப்ரதிக ஆலம்பனர்
சாந்தோக்யம் 7 அத்யாயம் -சனத்குமாரர் -நாரதருக்கு உபதேசம்
நாமம் -வாக்கு -மனஸ் -சங்கல்பம் -சித்தம் -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம்-நீர் -தேஜஸ் –
ஆகாசம் -ஸ்ம்ருதி -ஆசை -பிராணன் -இப்படி 15 -ப்ரஹ்மாத்மக வஸ்து உபாசனம் ஐஹிக பலன்களுக்கு
அப்ரதிக ஆலம்பனர் -மோக்ஷ பலனுக்காகாவே
“Svatma Sariraka Paramatma upasaka:
ஸ்வாத்ம சரீரிக பரமாத்மா உபாசகர்கள் –
உபநிஷத் -ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் உத்தய பரஞ்சோதி உப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே
ப்ரஹமாத்ம க ஸ்வாத்ம உபாஸகர்-அதாவது – பஞ்சாக்னி வித்யா நிஷ்டர்கள்
உபநிஷத் –
தத் யா இத்தம் விது ஏ சேமே அரண்யே ஸ்ரத்தா தப இத்யுபசதே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி
இவர்களும் அர்ச்சிராதி வழியாக ஸ்ரீ வைகுண்டமே செல்கிறார்கள்
தத் க்ரதுஷ –உபாசித்த படியே ப்ரஹ்மத்தை காண்கிறார்கள் –

——-

அதிகரண சாராவளி–496-ஸ்லோகம்
பீஷ்மர் -அஷ்ட வசுக்களில் ஒருவர் -ஆகவே மீண்டும் வசு பதவிக்கு சென்று
மது வித்யை அனுஷ்ட்டித்து பின்பே மோக்ஷம் அடைந்தார் என்கிறார்
498-502-ஸ்லோகங்கள் மது வித்யை பற்றியவை
சிசு பாலன் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் செல்ல வில்லை
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -ராவணன் கும்பகர்ணன் -சிசுபாலன் –தந்தவக்த்ரன்
ராமர் அயோத்யா பிரஜைகளை சாந்தாநிக -கார்ய ஸ்ரீ வைகுண்டம் –
இந்த்ரர்களும் சதுர்முக ப்ரம்மாக்களும் ப்ரஹ்ம வித்யை அனுஷ்ட்டித்து அர்ச்சிராதி மார்க்கம்
இவர்கள் லோகம் தொடங்கியே செல்கிறார்கள்

——

4-4-பல பாதம் –ஆறு அதிகரணங்கள் இதில் –

கௌஷிதகி உபநிஷத் -சாந்தி பர்வம் -பாஞ்சராத்ர சம்ஹிதை -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
அஷ்டாதச ரஹஸ்யங்களில் ஒன்றான அர்ச்சிராதி கதி பிரபந்தம் –
இவை ஸ்ரீ வைகுண்டம் பற்றி விளக்கும் –

ஆதார சக்தி க்ரமம் -ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் காட்டி அருளியது

1-ஆதார சக்தி
2-மூல பிரகிருதி
3-அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி -நாராயணன் –
4-ஸ்ரீ அநந்தன் -சேஷன்
5- பூ லோகம்
6- ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்
7- ஸ்ரீ வைகுண்ட திவ்ய பதம்
8- ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர்
9- ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம் –
10-ஆனந்தமய மண்டபம்
11-மண்டபத்தில் ஆதி சேஷன்
12- தர்ம பீட பதம் -திவ்ய சிம்ஹாசனத்தில் தென் கிழக்கில்
13-ஞான பீட பதம் -தென் மேற்கில்– நிரு ருதி
14-வைராக்ய பீட பதம் வட மேற்க்கில் -வாயவ்ய –
15-ஐஸ்வர்ய பீட பதம் -வட கிழக்கு -ஈசான்யம்
16–அதர்ம -கிழக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
17-அஜன –தெற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
18-அவைராக்யா -மேற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
19-அ நைஸ்வர்யா -வடக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
20-அநந்தா -ஸர்வ அவஸ்த்தை கைங்கர்ய பரன்
21)ஸ்ரீ பத்மம் அதுக்கு மேல்
பரம பத சோபனத்தில் ஸ்ரீ பத்மத்துக்கு மேல் ஆதி சேஷன் என்று மாறி உள்ளது –
22-விமல சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
23-உத் கர்ஷிணை சரம ஹஸ்தம் -தென் மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
24-ஞான சரம ஹஸ்தம் -தெற்கு பக்க சாமரம் வீசுபவர்
25-கிரியா சரம ஹஸ்தம் -தென் கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
26-யோக சரம ஹஸ்தம் -மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
27-பிரஹ்வ சரம ஹஸ்தம் -வடகிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
28-ஸத்ய சரம ஹஸ்தம் -வடக்கு பக்க சாமரம் வீசுபவர்
29-ஈஸந சரம ஹஸ்தம் -வட கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
30- அனுக்ரஹ சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
31-ஜகத் ப்ரக்ருதி யோக பீடம் -ப்ரஹ்மாண்டங்களுக்கும் திருப்பாற் கடலுக்கும் காரணம்
32-திவ்ய யோக பீடம் -மெத்தை
33-ஸஹஸ்ர பணா மண்டித ஆதி சேஷன்
34-பாத பீட ஆதி சேஷன்
35-அநந்த கருட விஷ்வக் சேனாதிகள் –நித்ய ஸூரிகள் பத்மாஸனத்தில் எழுந்து அருளி
36- அஸ்மத் ஆச்சார்யர்கள் எழுந்து அருளி
37-ஸ்ரீ மன் நாராயணன்
38-ஸ்ரீ மஹா லஷ்மி வலப்புறம்
39-ஸ்ரீ பூமா தேவி இடப்புறம்
40-ஸ்ரீ நீளா தேவி இடப்புறம்
41–க்ருத மகுடாதி பதி
42-க்ருத மாலா அபீடகாத்ம –
43-தக்ஷிண குண்டல மகரம் -வலது திருக்காதில்
44- வாமன குண்டல மகரம் -இடது காதில்
45-வைஜயந்தி வனமாலா
46-திருத்துளசி மாலா
47-ஸ்ரீ வத்ஸம்
48-ஸ்ரீ கௌஸ்துபம்
49- காஞ்சி குண உஜ்வல பீதாம்பரம்
50-ஸ்ரீ ஸூ தர்சன ஹேதி ராஜன்
51- ஸ்ரீ நந்தக ஷட்கதிபதி
52- ஸ்ரீ ஹஸ்தபத்மம்
53-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய சங்காதிபதி
54-ஸ்ரீ கௌமோதகி கட்க அதிபதி
55-சார்ங்க்ய ச அதிபதி
56- ஸ்ரீ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹினி
57-ஆதி சேஷன் பின் புறமும்
58-ஸ்ரீ பகவத் பரிஜனங்கள்
59- ஸ்ரீ பகவத் பாதுகா
60-ஸ்ரீ பகவத் பரிச் சேதங்கள் –வெண் கொற்றக் குடை போல்வன
61- வைநதேயன் முன் புறம்
62- விஷ்வக்சேனர் திருக்கை பிரம்புடன் வாடா கிழக்கில் தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
63- கஜானனன்
64-ஜயத் சேனன்
65-ஹரி வக்த
66-கால ப்ரக்ருதி சம்ஞான

67-சண்ட ப்ரசண்ட -கிழக்கு வாசல் காப்போர்
68-பத்ர ஸூ பத்ர –தெற்கு பகுதி வாசல் காப்போர்
69-ஜய விஜய -மேற்கு பகுதி வாசல் காப்போர்
70-தத்ர விதத்ர -வடக்கு பகுதி வாசல் காப்போர்
அனைவரும் சங்கு சக்கரம் கதை ஏந்தி நான்கு திருக்கரங்களுடன்

71-குமுத கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –கிழக்கே
72-குமுதாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் கிழக்கே
73-புண்டரீகாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தெற்கே
74-வாமன கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் மேற்கே
75-சங்கு கர்ண கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –மேற்கே
76-சர்ப நேத்ர கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வட மேற்கே
77-சுமுக கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வடக்கே
78-ஸுப்ரதிஷ்டய–கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத — வட கிழக்கே

—–

4-4-1—ஸம்பத்ய ஆவிர்பாவ அதி கரணம்
சாந்தோக்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண ஸாம்யம் –
தர்மபூத ஞான விகாசம்
பூர்வ பக்ஷம் இவை புதிதாக உண்டாவது –
ஸூத்ரகாரர் முதல் ஸூத்ரத்தில்
ஸம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந ஸப்தாத் -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் தான் -புதிதாக வந்தவை அல்ல –
உபநிஷத் சொல்வதும்
ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் ஸமுத்தய பரஞ்சோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே –
இரண்டாம் ஸூத்ரத்தில் –முக்த ப்ரதி ஞானத் –என்றும்
மூன்றாம் ஸூத்ரத்தில் –ஆத்ம ப்ரகாரணாத் –என்றும் –
அஷ்ட குண ஸாம்யம்
மாணிக்கம் சேற்றில் விழுந்தால் கழுவிய பின்பு அதன் முன்புள்ள தேஜஸ் மீண்டும் பெறுவது போலவும்
கிணறு தோண்ட இருக்கும் நீர் கிடைப்பது போலவுமே இங்கும் –

—-

4-4-2—அவி பாகேந த்ருஷ்டவத் அதிகரணம்
ப்ரஹ்மத்தை பரஞ்சோதியாக அனுபவம் –
தைத்ரியம் -முண்டகம் -ஸ்ரீ கீதை –
பூர்வ பக்ஷம் -ப்ருதக் சித்தம்
ஸூத்ரகாரர் -அப்ருதக் சித்தமே –ஸூத்ரம் –அவி பாகேந த்ருஷ்டவத்–
சரீரீ சரீரம் பாவம் — விட்டுப் பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே –
தத்வமஸி -என்றும்
அயம் ஆத்மா ப்ரஹ்மம் –என்றும்
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -என்றும் இத்தையே சொல்கிறது
அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே —
மேலும்
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மன அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்ம அந்தர்யாமி அம்ருத -என்றும்
அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -என்றும் –
வாக்ய அந்வய அதிகரணத்திலும் -அவஸ்திதே இதி கஷ க்ருத்ஸன –உண்டே

————-

4-4-3-ப்ரஹ்ம அதிகரணம்
முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு இதற்கு
அஷ்டகுண சாம்யமும் தர்ம பூத ஞான விகாசமும் –
ஜைமினி ஓவ்டோல்மி–இருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லி பின்பு பாதராயணர் ஸித்தாந்தம்
ப்ரஹமேந கைமினி உபந்யாசதிப்ய –என்றும்
சித்தி தன் மாத்ரேண ததக்த்மத்வத் இதி ஓவ்டோல்மி–என்றும்
ப்ரஹதாரண்யமும்
ச எத சைந்தவ கண அனந்தர அபாஹ்ய க்ருத்ஸனஹ் ரஸ ஞான ஏவ விஞ்ஞான கண ஏவ -என்கிறது
சித்தாந்த ஸூத்ரமாக மூன்றாவது
ஏவம் அபி உபந்யாசத் பூர்வ பாவத் அவிரோதம் பாதராயண
இரண்டும் ஒன்றே -விரோதம் இல்லையே –

————

4-4-4-ஸங்கல்ப அதிகரணம்
சாந்தோக்யம் சொல்லும்
ச உத்தம புருஷ சதத்ர பரேயேதி ஜக்க்ஷத் க்ரீடன் ரமமாண ஸ்த்ரீ பிர்வ யேனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் இதம் சரீரம்
கைங்கர்யம் செய்து உகக்கிறான் -சம்சாரத்தை நினைத்தே பார்ப்பது இல்லை
மீண்டும்
ச யதி பித்ரி லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ பிதர ஸமுத் திஷ்டந்தி தேன பித்ரு லோகேந ஸம் பன்னோ பவதி
ச யதி மாத்ரு லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ மாதர ஸமுத் திஷ்டந்தி–என்றும்
முக்தாத்மா நினைத்தால் முன்னோர்களை காணலாம் -என்றும் -ராமன் கிருஷ்ணன் போலே
தாய் தந்தையை தேர்ந்து எடுத்து மீண்டும் இச்சையால் பிறக்கலாம் அவன் அவதாரம் போலவே -என்றும் சொல்கிறதே –
பூர்வ பக்ஷம் -யத்னம் பண்ணியே நடக்கும்
ஸூத்ரகாரர்
ஸங்கல்பத் ஏவ தத் ஸ்ருதே –யத்னம் வேண்டாம்
மீண்டும்
அத ஏவ ச அநந்யதிபதி
விதி நிஷேதம் இல்லாமல் ஸத்ய ஸங்கல்பம் கொண்டவன் –
ஸ்வராட் -ஆகிறான் —

————

4-4-5- அபாவ அதிகரணம்
கைங்கர்யம் செய்ய தேகம் கொள்வானா இல்லையா விசாரம்
பதரி -தேகம் கர்மம் அடியாக போகம் துக்கம் அனுபவத்துக்கு தானே ஆகவே வேண்டாம்
அபாவம் பதரி அஹாஹி ஏவம்
ஜைமினி உபநிஷத் படி
ச ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா பவதி ஸப்ததா பவதி –
பாவம் ஜைமினி விகல்ப அமனாத்
பின்பு ஸூத்ரகாரர்
த்வாதஸ யாஹ வத் உபய விதம் பாதராயணா அத –இரண்டும் கொள்ளலாம் –
த்வாதஸ யாஹம் -ஸத்ரயாகம் -ஒருவரும் செய்யலாம் பலரும் செய்யலாம் –
பலர் செய்தால் லோக க்ஷேமம் -அப்பொழுது சத்ர யாகம் பெயர்
ஒருவர் செய்தால் -அஹீனம் இதற்கே பெயர் ஆகும்
கல்யாண குண அனுபவத்துக்கு சரீரம் தேவை இல்லை
கைங்கர்யங்களுக்கு சரீரம் வேண்டும் –
அடுத்த ஸூத்ரம்
தன்வ பாவே ஸந்த்யாவத் உபபத்தே –என்று
ஸ்வப்னத்தில் ஸ்ருஷ்ட்டி போல் உருவம் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
பாவே ஜாக்ரத்வத்–ஸ்வப்னத்தில் இருந்து எழுந்து அனுபவம் போல் இவனும் கைங்கர்யம்
தாய் தந்தையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
ப்ரதீப வத் அவேஷ ததேஹி தர்ஷயதி –என்று அணுவான ஜீவாத்மா எவ்வாறு பல சரீரம் கொண்டு கைங்கர்யம்
என்பதற்கு விளக்குக்கு ப்ரதீபை போல் என்கிறது –
அடுத்து
ஸ்வப்யய சம்பத்யோ யத்ர பக்ஷம் ஆவிஷ் கிருதம் ஹி –என்று
தூங்கி எழுந்த ஜீவனைப் பற்றியே உபநிஷத் வாக்கியம் -முக்தாத்மாவைப் பற்றியது அல்ல –

——-

4-4-6-ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
ஜகத் காரணத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ தாரத்வம்
ஸர்வ நியந்த்ருத்வம்
ஸர்வ ஸரீரத்வம்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம்
ஸர்வ வேத வேத்யத்வம்
ஸர்வ லோக சரண்யத்வம்
ஸர்வ முமுஷு உபாஸ்யத்வம்
ஸர்வ பல பிரதத்ரித்வம்
ஸர்வ வியாபத்வம்
ஞான ஆனந்த ஸ்வரூபத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
ஸ்ரீ பூமி நீளா நாயகத்வம்
ஆதிசேஷ பர்யங்கத்வம்
கருட வாஹனத்வம்
புண்டரீகக்ஷத்வத்ம்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரண்யம் –

பூர்வ பக்ஷம்
முண்டகம் –நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபபத்தி –ஸத்ய ஸங்கல்பத்வம் இருப்பதால்
இவை அனைத்தும் இவனுக்கும் உண்டு
இத்தை நிரஸித்து ஸூத்ரகாரர்
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹதத் வாச்ச —

யதோவ இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்தி அபி ஸம் விஷந்தி
தத் விஞ்ஞான சக்வ ப்ரஹ்ம –என்றும்

சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் ததைக ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜா ஏயேதி தத் தேஜோ அஸ்ருஜத் –என்றும்

ப்ரஹ்மம் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றும்

ஆத்ம வா இதம் அக்ரீ ஆஸீத் -என்றும்

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் –என்றும் –

ய ஆத்மநி திஷ்டன் –என்றும்

அஸந்நிஹிதத் வாச்ச –என்றும் -உண்டே –

பூர்வ பக்ஷம்
ச ஸ்வராட் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சாரே பவதி–
இமான் லோகானி காம ரூப்யானி ஸஞ்சரன்

அடுத்த ஸூத்ரம்
ப்ரத்யக்ஷ உபதேசாத் ந இதி சேத் ந அதி காரிக மண்டலஸ்த யுக்தே

மூன்றாவது ஸூத்ரம் –விகார வர்த்திச் ச ததாஹி ஸ்திதிம் அஹ
உபநிஷத் வாக்கியங்கள் –
யத ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந் அத்ருஷ்யே அநந்தம்யே அ நிருக்தே-
அ நிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே — என்றும்

ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வ ஆனந்தி பவதி– என்றும்

தஸ்மின் லோகா ஸ்ரித ஸர்வே -என்றும்
முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபார வர்ஜம் சொல்லிற்றே

நான்காம் ஸூத்ரம்
தர்ஷயதஷ ஏவம் ப்ரத்யக்ஷ அநு மானே –என்று
பரமாத்மாவுக்கு இவை அசாதாரணம் என்கிறார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே

ஸ்ருதி வாக்யங்கள் –
பீஷாஸ் மத் வாத பவதே பிஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத்
அக்னி ச இந்த்ர ச மிருத்யு தவதி பஞ்சம –என்றும்

ஏதஸ் யவ அஷரஸ்ய பிரஷசநே கார்கி ஸூர்ய சந்த்ர மச வித்ரு தவ் திஷ்டத-என்றும்

ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதி ஏஷ பூத பல ஏஷ சேது விதர்சன ஏஷாம் லோகநாம் அசம் பேதய –என்றும்

ஸ்ம்ருதி வாக்யங்கள்

மயா தஷேந ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் —
விஷ்டப்யஹம் இதம் க்ரித்ஸ்னம் ஏகம் ஷேந ஸ்திதோ ஜகத் –ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள்

ஐந்தாவது ஸூத்ரம்
போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
உபநிஷத்தும்
ச அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபஸ்ச்சித –

நிகமனத்தில் ஆறாவது ஸூத்ரம்
அநா வ்ருத்தி சப்தாத் –அநா வ்ருத்தி சப்தாத் –

நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணைக தான –ஜகத் ஜன்மாதி காரணம் –ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதி –பரம காருணிகா —
நிரஸ்த சம அப்யதிக சம்பவன –பர ப்ரஹ்ம பிதான -பரம புருஷ அஸ்தீதி ஸப்தாத் -அவகம்யதே

ஏவம் அஹ அஹ அனுஷ்ட்டியா மான வர்ணாஸ்ரம தர்மனு க்ரிஹித தத் உபாசன ரூப தத் ஸமாராதன ப்ரீத

உபாசநேந அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த துஷ் க்ருத கர்ம ஸஞ்சய ரூப அவித்யாம் விநிவ்ருத்ய ஸ்வ யதாத்ம்ய
அனுபவ ரூப அநவதிக அதிசய அநந்தம் ப்ராப்யய புநர் அநாவர்த்த யதி இதி ஸப்தாத் அவகம்யதே

சப் தச ஸகலவ் ஏவம் வர்த்தயன் யாவத யுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே தே இத்யதிக –

பகவத ஸ்வயம் ஏவ யுக்தம் -மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷஷ்வதம் ந ஆபுன வந்தி மஹாத்மன ஸம் சித்திம் பரமம் கத
ஆ ப்ரஹ்ம புவநாத் லோகா புனரா வர்தினா அர்ஜுனா மாம் உபேத்யே து கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே இதி –

ந ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சங்குசித ஞானஸ்ய பர ப்ரஹ்மணே பாவ ஸ்வ பாவைகஸ்ய தத் ஏக ப்ரியஸ்ய
அனாவதிகாதி ச வ அநந்தம் ப்ரஹ்மணவ் பவத அந்நிய அபேக்ஷ தத் அர்த்த அசம்பவாத் புனர் ஆவ்ரிதி சங்க

ந ச பரம புருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்த்வ கதாசித் ஆவர்த்த யிஷ்யதி

ப்ரியோகி ஞானினா அத்யர்த்தம் அஹம் மம ச ச ப்ரிய உதார ஸர்வ இவைத் ஞானி து ஆத்மைவ மே மதம்
ஆஸ்தித ஸஹி யுக்தாத்மா மாம் ஏவ அநுத்தமம் கதிம் பஹுனாம் ஜன்மானாம் அந்தே ஞானவான்
மாம் பிரபத் யதே வாஸூ தேவ சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர் லப -இதி –

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் –
ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: