ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — மூன்றாம் அத்யாயம்–

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

3-1-வைராக்ய பாதம்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அருணி தன குமாரர் ஸ்வேதகேதுவை ஜிபிலை குமாரர் ப்ரவஹன அரசர் இடம்
உபதேசத்துக்கு அனுப்ப -அரசன் இவர் இடம் ஐந்து கேள்விகள்
ஜீவன் செல்லும் இடம் -மீண்டும் பிறக்கும் மார்க்கம் -தேவ யானம் பித்ரு யானம் -பஞ்ச அக்னி வித்யைகள் – பற்றி –
த்யு பர்ஜன்ய பிருத்வி புருஷ யோஷித் —

ஆறு அதிகரணங்கள் இதில்

3-1-1- தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
ஜீவாத்மா பூத ஸூஷ்மங்களுடன் செல்கிறானா –
இல்லை -பூர்வ பக்ஷம் –
ஸித்தாந்தம் -முதல் ஸூத்ரம் -தத் அந்தர பிரதி பத்தன் ரம்ஹதி ஸம் பரிஷ் வக்த ப்ரஸ்ன நிரூ பணப்யம் —
பூத ஸூஷ்மங்கள் உடனே தான் செல்கிறான்
முக்ய பிராணன் -11-இந்திரிய ஸூஷ்மங்கள் உடனே ஜீவன் உடலை விட்டு செல்லும் பொழுது செல்கிறது

3-1-2—க்ரதத்ய அதிகரணம்
ஸ்வர்க்க லோகத்தில் இருந்து திரும்பும் ஜீவன் கொஞ்சம் மீதி புண்ய பாபங்கள் மீதத்துடன் வருகிறானா -விசாரம்
பூர்வ பக்ஷம் -கர்மங்கள் இல்லாமல் வருகிறான் –
இதை மறுத்து ஸூத்ர காரர்
க்ரிதத்யயே அநு சயவன் ரிஷ்டஸ்ம்ரிதிப்யம் யதேதம் அநேவம்ச —
தூமாதி மார்கம் -பித்ரு யான மார்க்கம் -இதுவே -ஸ்வர்க்கம் போகும் வழி –தூமா -புகை -இரவு -கிருஷ்ண பக்ஷம் –
தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்திரன் -ஸ்வர்க்கம்
திரும்பும் பொழுது -சந்திரன் -ஆகாசம் வாயு -தூமா அபரம்-நீர் உண்ட மேகம் -மேகம்
போகும் பொழுது பித்ரு லோகம் வழி திரும்பும் பொழுது வாயு லோகம் -என்ற வாசி
வர்ணாஸ்ரம நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் பண்ண வேண்டும் –

———

3-1-3-அநிஷ்ட திகர்யதி கரணம் -இந்த அதிகரணத்தில் பத்து ஸூத்ரங்கள் -ஐந்து பூர்வ பக்ஷம் -ஐந்து சித்தாந்தம் –
இஷ்ட அதிகாரிகள் நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை பண்ணி தூமாதி மார்க்கம் வழியாக ஸ்வர்க்காதிகளுக்கு செல்கிறார்கள்
அநிஷ்ட அதிகாரிகள் -க்ருத்ய அகர்ண அக்ருத்ய கரண -பகவத் அபசாரங்கள் பாகவத அபசாரங்கள் அஸஹ்ய அபசாரங்கள் செய்பவர்கள் –
மோக்ஷ அதிகாரிகள் -காம்ய கர்மங்களில் ஆசை இல்லாமல் பக்தி பிரபத்தி மூலம் முக்தி அடைபவர்கள்
இந்த அதிகரணத்தில் அநிஷ்ட அதிகாரிகள் நரகம் செல்வதற்கு முன் சந்த்ர லோகம் செலிரார்களா என்று விசாரம்
கௌஷிகி உபநிஷத் -அனைவரும் இது வழியே போகிறார்கள் என்கிறது –

முதல் ஸூத்ரம் -பூர்வ பக்ஷம் –
அநிஷ்ட அதிகாரி ணாம் அபி ச ஸ்ருதம்
கௌசிக உபநிஷத் சொல்வதால் –
ஸூத்ர காரர் -இத்தை விளக்கி நரக அனுபவத்துக்கு பின்பே சந்த்ர லோகம் வழியாக திரும்புகிறான் என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்
அடுத்த ஸூத்ரத்தில் இந்த லோகத்தில் இருந்து செல்லும் ஜீவாத்மா யம வசத்திலே இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வதைக் காட்டுகிறார் –
“Vidyakarmanorithi thu Prakrathathvath”.
வித்ய கர்ம நோரிதி து ப்ரக்ரதத்வத் —
இந்த ஸூத்ரத்தில் வித்யா -மோக்ஷ அதிகாரி -கர்ம -இஷ்ட அதிகாரி –
நரக அனுபவத்துக்கு பின்பு மாரு பிறவிக்கு பஞ்ச அக்னி மூலம் இல்லாமல் புழு பூச்சிகளாகவே பிறக்கிறார்கள் –
அதிகம் புண்யம் செய்த சில ஜீவர்களும் பஞ்ச ஆஹுதி மூலம் வராமல் -திரௌபதி போல் அக்னி குண்டத்தில் இருந்து பிறப்பார்கள் –
ஜீவஜம் -அண்டஜம் -பஞ்ச ஆஹுதி மூலம்
ஸ்வேதஜம் உத்பிஜம் -பஞ்ச ஆஹுதி இல்லாமல்

———

3-1-4—தத் ஸ்வாபவ்ய பத்தி அதிகரணம்
ஜீவர்கள் திரும்பும் பொழுது ஆகாசம் வாயு தூமா கார் மேகம் வழியாக வரும் பொழுது அங்கு போகம் அனுபவிப்பார்களா -விசாரம்
இல்லை என்பதே ஸித்தாந்தம் –
தத் ஸ்வாபவ்ய பத்தி உப பத்தே -என்பது ஸூத்ரம்

——-

3-1-5-நதி சிர் அதிகரணம்
பஞ்ச ஆஹுதி -ஜீவாத்மா -ஆகாசம் வாயு தூமா கார் மேகம் -இங்கு எல்லாம் விரைவாக வந்தாலும் –
பல காலம் அன்ன தானியங்களில் இருந்தே பிறக்கிறான் என்கிறது

——–

3-1-6-அந்ய அதிஷ்டித அதிகரணம்
தானிய சரீரமாக கொள்வது அங்கு இருந்து அனுபவிக்க இல்லை என்கிறது –
முதல் ஸூத்ரம் -அந்ய அதிஷ்டித பூர்வ வத் அபிலபத்
தானியத்தில் வேறே ஒரு ஜீவன் கர்ம அனுகுணமாக உள்ளான் –

அஸூத்த மிச்சே ந ஸப்தத் -யாகங்களில் ஆஹுதி கொடுப்பது பாப செயல் இல்லை -அது ஸ்வர்க்கம் செல்லும் –

————

3-2-உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீக –அஸங்க்யேய கல்யாண குண மஹோததி —
ஜாக்ருத தசா தோஷங்கள் கீழே வைராக்ய பாதத்தில்
இதில் மற்ற மூன்றும் -ஸ்வப்ன -ஆழ்ந்த தூக்கம் -மூர்ச்சா அவஸ்தா தோஷங்கள்

3-2-1-ஸந்த்ய அதிகரணம்
ஸந்த்யா -ஸ்வப்ன ஸ்தானம்
ப்ரஹதாரண்யம் -யஜ்ஜ்வல்க்யர்
கட உபநிஷத்
ஸ்வப்னத்தில் உள்ளவற்றை ஸ்ருஷ்டிப்பது ஜீவனா ப்ரஹ்மமா விசாரம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -ஜீவனே
சந்த்யே ஸ்ருஷ்டிர் அஹாஹி
நிர்மதரம் ச ஏக புத்ர தயா ஷ
அடுத்த நான்கும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே பாப புண்யங்கள் அடிப்படையில் ஸ்ருஷ்டிக்கிறார் –
மாயா மாத்ரம் து கர்த்ஸ்ந்யேந அநபிவியக்த ஸ்வரூபத்வத் –
மாயங்கள் ஸ்ருஷ்டிக்க வல்ல ப்ரஹ்மமே ஸத்ய ஸங்கல்பன் –

தேஹ யோகத்வ சோபி —
ஆத்மாவின் ஸத்ய சங்கள்பாதி குணங்களுக்கு சுருக்கம் தேஹ சம்பந்தத்தால் தானே -என்கிறது –

———

3-2-2-தத் அபாவ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
ஆழ்ந்த உறக்கம் நிலை விசாரம்
சாந்தோக்யம் -6 அத்யாயம் -8 அத்யாயம்
ப்ருஹதாரண்யம் -4 அத்யாயம்
நாடியில் -பூரிததில் -பரமாத்மா இடம் ஒன்றியதாக இங்கு சொல்லும்
இவை விகல்பமா சமுச்சயமா என்று விசாரம்
பூர்வ பக்ஷம் விகல்பமே என்பர்
மூன்று இடங்களிலும் இருக்க முடியாதே என்பர் –
இத்தை நிரஸித்து முதல் ஸூத்ரம் -தத் அபாவ நாடீஷூ தத் ஸ்ருதே அத்நநி ச –
படுக்கையில் கட்டிலில் வீட்டில் போல் இவை மூன்றும் –
இரண்டாம் ஸூத்ரம் -ஆழ்ந்த உறக்கத்துக்குப் பின்பு பரமாத்மா ஜீவனை எழுப்புகிறார் என்கிறது –

——

3-2-3-கர்ம அநு ஸ்ம்ருதி அதி கரணம்
அதே ஜீவன் எழுந்து இருக்கிறாரா வேறயா
பூர்வ பக்ஷம் –வேறே என்பர் -பரமாத்மா இடம் சேர்ந்த பின்பு திரும்ப மாட்டாரே என்பதால்
இதை நிரஸித்து ஸூத்ர காரர்
ச ஏவ கர்ம அநு ஸ்ம்ருதி சபல விதிப்யா
கர்மங்கள் இன்னும் இருப்பதால் அதே ஜீவன் திரும்புகிறார்
தத்வ ஞானாத் ப்ராக் தேநைவ போக்தவ்யம் -என்கிறார் பாஷ்யகாரர்

——–

3-2-4–முக்தி அதிகரணம்
மூர்ச்சா அவஸ்தா விசாரம்

முக்தே அர்த்த ஸம் பதி பரி ஷேஷாத் –

————

3-2-5-உபய லிங்க அதிகரணம் –இதில் -15 ஸூத்ரங்கள்
பூர்வ பக்ஷம் -அந்தர்யாமியாக இருப்பதாலேயே ப்ரஹ்மமும் -சாக்கடைக்குள் விழுந்த மணி போல் -தோஷம் அடையும் –
இத்தை நிரசித்து முதல் ஸூத்ரம்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி –
எப்பொழுதும் அபஹத பாப்மா -உபய லிங்கம் எங்கு இருந்தாலும் மாறாமல் இருப்பான் –
சாந்தோக்யம் 8 அத்யாயம் –
அபஹத பாப்மா -விஜர -வி ம்ருத்யு -விசோக -விஜி கட்ச -அபி பாச
ஸத்ய காம -சத்யா சங்கல்ப
முண்டக ஸ்வேதேஸ்வர -ஸமான வ்ருஷ -இத்யாதி –
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
நேதி நேதி
ப்ரக்ருத ஏத வத் வம் ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதிச பூய
வேதைக சமைதி கம்யன்

—-

3-2-6-அஹி குண்டல அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இரண்டு பூர்வ பக்ஷம் -இரண்டு ஸித்தாந்தம் –
முதல் பூர்வ பக்ஷ ஸூத்ரம்
உபய வியபதேஷாத் அஹி குண்டலவத் –
இத்தை நிரசித்து
பூர்வ வத்வா -அம்ச அதிகரணம் -2 அத்யாயம் -3 பாதம் பார்த்தோம் –

ப்ரதி ஷேதச் ச –அம்ச அம்சி பாவம் போல் –

——–
3-2-7-பராதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள் -ஓன்று பூர்வ பக்ஷம் -ஆறு சித்தாந்தம்

பர மாத சேது உன்மான ஸம்பந்த பேத வ்யபதேசப்ய
சேது என்றால் இவன் மூலம் வேறே ஒன்றை அடைவது பூர்வ பக்ஷம்
சமன்யத்து –ஸினோதி -சேதன அசேதன -சேர்த்து
அபரிச்சேத்யன் நமக்காக நம்முள் அணுவுக்குள் அணு போல்
உபபத்தேச –

ஸ்வேதேஸ்வரம் தத யத் உத்தர தரம் -உள்ளே உயர்ந்த வஸ்து
தத அந்நிய ப்ரதிஷ்டாத்

அநேந ஸர்வ கதத்வம் அயம ஸப்ததிப்ய

——-

3-2-8-பல அதிகரணம் -நான்கு ஸூத்ரங்கள்
மூன்றாவது மட்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரம் -ஜைமினி தான் பூர்வ பக்ஷி இங்கு
முதல் ஸூத்ரம் –பலம் அத உப பத்தே -பலம் தருபவர் ப்ரஹ்மமே
ஜைமினி அபூர்வம் -பலம் கொடுக்கும் என்பர்
இறுதி ஸூத்ரம் –பூர்வந்து பாதராயண ஹேது வ்யபதேசாத்
அவனே பல ப்ரதன்
சாதனா ஸப்தகம்
விவேகம் -விமோகம் -அப்யாசம் – க்ரியா –கல்யாணம் -அவவசாதம் -அநுத்தர்ஷம் –

————-

3-3-குண உப ஸம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –

3-3-1-.–ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
வைச்வானர வித்யை -பல உபநிஷத்துக்களில் சொன்னது ஒன்றையே தானா -விசாரம்
வெவ்வேறே பூர்வ பக்ஷம்
ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் சோநாதி அவிசேஷாத் –
ஒன்றே ஆகும் தஹர அதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் ப்ரஹதாரண்யம் -ஒன்றையே சொல்கின்றன

——–

3-3-2-.–அந்யத்வ அதிகரணம்
உத்கீத வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம்
இரண்டும் வேறே வேறே தான்
சாந்தோக்யத்தில் முக்ய பிராணனையும் ப்ரஹதாரண்யத்தில் முழு கானத்தையும் சொல்வதால் –

———–

3-3-3- ஸர்வ அபேத அதிகரணம்
பிராண வித்யை -சாந்தோக்யம் -ப்ரஹதாரண்யம் -கௌஷதகி
மூன்றும் ஒன்றே -கௌஷதகியில் சொன்ன குணங்கள்கையும் சேர்ந்தே கொள்ள வேண்டும் –
இந்த்ரியங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாக விலகி –
பிராணன் உயர்ந்தது -இன்றியமையாதது -என்று அறிந்து கொண்ட வ்ருத்தாந்தம்
ஜ்யேஷ்டத்வம் -ஸ்ரேஷ்டத்வம் -வஸிஷ்டத்வம் -பிரதிஷ்டத்வம் -சம்பத்வம்–ஆயதனத்வம் –
அனைத்தும் உண்டு என்று அறிந்து கொண்டன –

————

3-3-4-ஆனந்த அதிகரணம்
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ஸத்யத்வம் ஞானத்வம் அநந்தத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் ஸ்ரீ யபதித்வம்–

———-

3-3-5–கார்யக்யநாதி கரணம்
முக்கிய ப்ராணனுக்கு துணியாக நீர் -ஆசமனம் செய்து பிராண வித்யை தொடங்கி முடிக்க வேண்டும் –

——

3-3-6-சமனாதி கரணம்
சாண்டில்ய வித்யை அக்னி ரஹஸ்யம் -ப்ருஹதாரண்யம் -இரண்டிலும் ஒன்றே -என்கிறது

——–

3-3-7-சம்பந்த அதிகரணம்
ஆதித்ய மண்டல மத்திய வர்த்தி உபாசனமும் கண்ணுக்குள் இருக்கும் ப்ரஹ்மம் உபாசனமும் -ஒன்றே –
பூர்வ பக்ஷம் ஸூத்ரம் -சம்பந்தத் ஏவம் அந்யத்ரபி –
ஸித்தாந்தம் ஸூத்ரம் நவ விசேஷாத் –வேறே வேறே தான் -ரூபம் வேறாக இருப்பதால் –

————–

3-3-8-சம்ப்ருதி அதிகரணம்
அனைத்தையும் தரிப்பவன்-விபு எங்கும் பரந்துள்ளான் ப்ரஹ்மம் –
இவற்றை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அனுசந்திக்க வேண்டும் -பூர்வ பக்ஷம்

சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அத
அல்ப ஸ்தான வித்யைகளில் த்யு வியாப்த குணம் அனுசந்திக்க வேண்டாம் –

————-

3-3-9-புருஷ வித்ய அதிகரணம்
தைத்ரியம் —நியாஸ வித்யைக்கு அங்கமாகவும் சாந்தோக்யம் -நீண்ட ஆயுஸ்ஸூக்காகவும்
ஒன்றே பூர்வ பக்ஷம்
ஸித்தாந்த ஸூத்ரம்
புருஷ வித்யயம் அபி ச இதரேஷாம் அநாம்நாத் –
பலத்தில் வேறுபாடு -எனவே ஓன்று அல்ல –

—————-

3-3-10- வேத அத்யாய அதிகரணம்
ஷாந்தி பாடம் -அங்கமா -இல்லையா விசாரம் –
வேதாதி அர்த்த பேதாத் –அங்கம் அல்ல ஸித்தாந்தம்

———-

3-3-11- ஹாநி அதிகரணம்
முக்தனுக்கு -இறுதியில் -பாப புண்யங்கள் தீர்க்கும் வழி
ஹாநி என்றும் உபாயானம் -என்றும் சில இடங்களில் உண்டு
இவை விகல்பமா சமுச்சயமா விசாரம்
சமுச்சயமே ஸித்தாந்தம்
ஹாநவ் து உபாயான ஸப்த சேஷத்வத் குஷச் சந்த ஸ்துதி உபகனவத் தத் யுக்தம் -ஸூத்ரம்

——
3-3-12-சம்பிரய அதிகரணம்
கர்மங்களைமுக்த ஜீவன் உடலில் பிரிந்த உடனே போக்குகிறானா விரஜையில் நீராடிய பின்பா -விசாரம்

ஸம்பரயே தர்தவ்ய பாவாத் ததாஹி அன்யே –பிரிந்த உடனே தான் -மீதம் உள்ள கர்ம பலன் அனுபவிக்காததால் –

———-

3-3-13- அ நியம அதிகரணம்
அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தி யோக நிஷ்டருக்கும் பிரபன்னருக்கும் பொதுவானதா இல்லையா
உபகோஸல வித்யையிலும் பஞ்சாக்னி வித்யையிலும் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் சொல்லப்பட்டுள்ளதால் இந்த சங்கை –
ஸித்தாந்தம் –
அ நியம ஸர்வேஷாம் அ விரோத ஸப்த அநு மானப்யம் –அனைவருக்கும் இதே மார்க்கம் –

——–

3-3-14-அக்ஷர அத்ய அதிகரணம்
அமலத்வ குண அனுசந்தேயம் யஜ்ஜ்வல்க்யர் கார்க்கி ஸம்வாதம்
திவ்யாத்ம ஸ்வரூபம் -அஸ்தூலம் –அ அணு –அஹ்ரஸ்வம் -அதீர்க்கம் –அலோஹிதம் –அஸ்நேஹம் –அச்சாயம் –அதமஸ் –
அவாயு -அனகாசம் –அசங்கம் -அரசம் –அகந்தம் -அ ஸஷு சம் -அ ஸ்ரோத்ரம் –அவாக் -அமநஸ் -அதேஜஸம் -அபிராணன் –
அமுக்தம் -அனந்தரம் – அ பாஹ்யம் –தத் ந கிஞ்சன அஸ்னாதி -ந தத் அஸ்னாத கச்சன —

ஸூத்ரம் –அக்ஷரதியம் து அவரோத சமன்ய தத் பாவ அபாவ்யம் ஓவ்ப ஸதவத் தத் யுக்தி–

———-

3-3-15-அந்தரத்வ அதிகரணம்
ப்ருஹதாரண்யம் -உஷஸ்த யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம்
கோகோல யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம் –
இரண்டும் வேறே வேறே ப்ரஹ்ம வித்யையா என்று விசாரம்
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்

———

3-3-16-காமாதி கரணம்
தஹர வித்யை -சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் வேறே வேறா விசாரம்
சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தை ஆகாச ஸப்த மாக அஷ்ட கல்யாணகுணங்கள் கொண்டவராகவும்
ப்ரஹதாரண்யம் ப்ரஹ்மத்தை ஆகாசத்தில் கண் வளர்ந்து வஸிப்பதாகவும் உள்ளது
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்
வஸித்வமும் அஷ்ட குணங்கள் உடன் சேர்ந்தே கொள்ள வேண்டும் –

———

3-3-17-தந் நிர்த்தன அதிகரணம் —
உத்கீத வித்யா விசாரம் -பிரணவ உபாசன அங்கம் -இது கட்டாயமா இல்லையா –
பூர்வ மீமாம்ஸையில்
கோ தாநேந பசு காம பிரணயேத் –என்று கோ தானத்துக்கு ப்ரோடாசம் -கட்டாயம் இல்லை என்றும்
பரணமயீ ஜூஹூ -கட்டாயம் என்றும் இரண்டும் இருப்பதால் சங்கை
கட்டாயம் இல்லை என்பதே ஸித்தாந்தம் —

—————

3-3-18-பிரதான அதிகரணம்
அபஹத பாப்மதாதி குணங்களை மட்டும் உபாஸிக்க வேண்டுமா -இவற்றுடன் சேர்ந்த ப்ரஹ்மத்தையா -விசாரம்
சேர்ந்த ப்ரஹ்மத்தையே -ஸித்தாந்தம் —

———-

3-3-19-லிங்க புயஸ்தவத் அதிகரணம்
நாராயண அநுவாகம் -தைத்ரியம் –தஹர வித்யைக்கு அங்கமா
சித்தாந்த ஸூத்ரம்
லிங்க புயஸ்த்வத் தத் ஹி பத்லியஸ் ததாபி —
லிங்கம் -அடையாளம்
இந்த அனு வாகத்தில் அக்ஷரம் ஷாம்பு இந்திரன் பிரம்மன் இவர்களுக்கு அந்தராத்மாவாக சொல்லும்
ப்ரஹ்ம வித்யையில் நாராயணனை நேராகவே தியானிக்க வேண்டும் –

———

3-3-20-பூர்வ விகல்ப அதிகரணம்
இது ப்ராசங்கிகம் -அக்னி ரஹஸ்ய விசாரம்

—-

3-3-21-சரீர பாவ அதிகரணம்
அநு மானிக அதிகரண ஸூத்ரம் —த்ரய நாம் ஏவ ச உபந்யாச ப்ரஸ்ன ச –என்று
உபாஸ்ய –உபாஸக –உபாஸனம் மூன்றையும் சொல்லி
உபாஸகர் -அறிந்து -செய்து அனுபவிப்பவனாக உபாஸிக்க வேண்டுமா –
அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டுமா என்ற விசாரம் –

ஸூத்ரம் –வியதிரேக தத் பாவ பவித்வத் ந து உபலப்திவத் –
என்று அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டும் என்கிறது –

——————-

3-3-22-அங்க வபத்த அதி கரணம்
உத்கீத வித்யை பற்றியது இதுவும்

—-

3-3-23- புமஜ்ய யஸ்த்வ அதிகரணம் —
வைச்வானர வித்யா விசாரம் -வ்யஸ்த உபாசனமா ஸமஸ்த உபாசனமா –
ஸமஸ்த உபாசனமே பண்ண வேண்டும் ஸித்தாந்தம்

———

3-3-24-ஸப்தத் பேதாதி கரணம் –
ப்ரஹ்ம வித்யைகள் 32- அனைத்தும் ஒன்றா வேறே வேறயா
வேறு வேறு தான் என்பதே ஸித்தாந்தம்

3-3-25-விகல்பாதி கரணம்
அனைத்தையும் பண்ண வேண்டுமா -விசாரம்

விகல்ப அ விஸிஷ்ட பலத் வத் —
ஒன்றையே பண்ணினாள் போதும் -பலத்தில் ஸாம்யம் என்பதால் –

—-

3-3-26–யத் ஆஸ்ரய பாவ அதிகரணம்

இது கீழே -3-3-17-தந் நிர்தன நியம அதிகாரணம் போல்
உத்கீத வித்யை கட்டாயம் என்று மீண்டும் பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கவே இந்த அதிகரணம்

———–

பஞ்ச அக்னி வித்யையில் மட்டும் -ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம உபாசனம்
மற்றவை ப்ரஹ்ம உபாசனம் -ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்மா உபாசனம்

———-

3-4- அங்க பாதம் –15-அதிகரணங்கள் இதில் –

3-4-1-புருஷார்த்த அதிகரணம் –இதில் 20 ஸூத்ரங்கள்
இந்த அதிகரணம் தான் மிக அதிகமான ஸூத்ரங்கள் கொண்டது –
கர்மத்தால் ப்ரஹ்ம வித்யை ஞானத்தாலா -புருஷார்த்தம் என்று விசாரம் –
முதல் ஸூத்ரம் –புருஷார்த்த அத சப்தாதி பாதராயண
பக்தி யோகத்தாலோ பிரபத்தியாலோ புருஷார்த்தம் ஸித்தம் என்கிறது –

ஜைமினி அடுத்த ஆறு ஸூத்ரங்களால் ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் தான் –
கர்மமே பிரதானம் என்கிறார்
1-அஸ்வபதி ஜனகர் போல்வார் கர்ம நிஷ்டர் ப்ரஹ்ம ஞானிகளாக இருந்தாலும் –
2-உத்கீத வித்யையில் கர்மத்துக்கு அங்கமாக ப்ரஹ்ம வித்யை –
3- சாந்தோக்யத்தில் ப்ரஹ்ம வித்யை அனுஷ்டிப்பவர் கர்ம அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்றும் உள்ளது
4-ஈசாவாஸ்ய உபநிஷத்தில் 100 வருஷம் இருந்து கர்ம அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்றும் உள்ளது
பாதராயணர் -இவற்றுக்கு பதில் –
ப்ரஹ்மம் நியாந்தா -ஸாஸ்த்ரம் மூலம் கர்ம அனுஷ்டான ஸாஸனம் தந்துள்ளார்
கர்மம் த்ரிவித த்யாகங்களுடன் செய்ய வேண்டும் -ப்ரஹ்ம வித்யை மோக்ஷ பலத்துக்காகவே –
ஸந்யாஸி போல்வார் கர்மங்களுக்கு -யாகாதிகளுக்கு அதிகாரி இல்லாமல் ப்ரஹ்ம வித்யையாலே பலம் பெறுகிறார்கள் –
எனவே ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் இல்லை –

——

3-4-2-ஸ்துதி மாத்ர அதிகரணம் –இதில் இரண்டு ஸூத்ரங்கள்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம் –

3-4-3-பரிப்ல வர்த்த அதிகரணம்
பரிப்ல வம் -என்று புகழ்வதை சொன்னபடி
பிரவர்தன வித்யையில் இந்திரனை புகழ்வது -ஸ்வேதகேது ஸத்வித்யையில் புகழ்வது –
அஸ்வமேத யாகத்தில் அரசரை புகழ்வது போல்வன
ப்ரஹ்ம வித்யைகளின் ஏற்றம் சொல்லவே –

—-

3-4-4-அக்னி இந்தந அதிகரணம்
இது முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது –
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லாத சந்யாசிகள் எவ்வாறு ப்ரஹ்ம உபாசனத்துக்கு
அதிகாரி ஆவார்கள் என்பதைக் காட்டவே இந்த அதிகரணம்
நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் த்ரிதண்டி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்

——

3-4-5- ஸர்வ அபேக்ஷ அதிகரணம்
கிரஹஸ்தர்களுக்கு அக்னி கார்யம் கட்டாயமா -விசாரம்
பக்தி யோகத்துக்கு அங்கமாக கர்ம யோகமும் வேண்டுமே –
உபாஸன மார்க்கமே வழி -தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷ ஹேது ஆகாதே —

——-

3-4-6- சம தமாதி அதி கரணம்
புலன் அடக்கம் மன அடக்கம்
இவை பக்தி யோகத்துக்கு வேண்டிய அங்கங்கள் என்றவாறு –

——–

3-4-7-சர்வ அன்ன அநுமதி அதிகரணம்
சாந்தோக்யம் -சத்வ அன்னம் -த்ருவனு ஸ்ம்ருதி –பக்தி யோகம் –
ஜாதி ஆஸ்ரய நிமித்த தோஷங்கள் இல்லாத அன்னம் –ஆகார நியமம் —
உஷஸ்தி பிராணன் தரிக்க உண்டு பின்பு நீர் கூட குடிக்க தவிர்த்த வ்ருத்தாந்தம் –

————-

3-4-8-விஹிதத் வாதி அதிகரணம்
நித்ய அநித்ய ஸம்யோக விரோதம்
ஸந்த்யாவந்தனாதிகள் முமுஷுகளுக்கு மட்டுமா அனைவருக்குமா -விசாரம்
ஸித்தாந்தம் -அனைவருக்குமே
விஹிதவச் ச ஆஸ்ரம கர்ம அபி -ஸூத்ரம்
இவை விநியோக ப்ருதக்தவம் கோடியிலே சேராது

3-4-9-விதுர அதிகரணம்
விதுர -மனைவி இழந்தவர் யாகாதிகளுக்கு அதிகாரிகள் இல்லை -நித்ய நைமித்தி கர்மங்களை செய்தே ஆக வேண்டும் –
இவர்கள் பக்தி யோகத்துக்கு அதிகாரிகளோ சங்கைக்கு ஆம் என்கிறார் ஸூத்ரகாரர்
அந்தர ச அபி து தத் த்ருஷ்தே :
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லை என்றாலும் காயத்ரி மந்த்ரம் அஷ்டாஷர மந்த்ர ஜபாதிகள் இவர்கள் மனசை ஸூத்தி பண்ணும்
அநாஸ்ரமியாக நீண்ட நாள் இருக்க வேண்டாம் என்றும் ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

——–

3-4-10-தத் பூதாதி கரணம்
ஆஸ்ரம ப்ரஷ்டர் -நழுவி இருப்பார் -ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரிகளோ என்ற விசாரம் –
பூர்வ பக்ஷம் இவர்கள் தானாதிகள் கொடுத்து பிராயச்சித்தம் செய்து ப்ரஹ்ம உபாசனம் செய்யலாம்
ஸூத்ரகாரர் -இவர்கள் அதமர்கள் -பிராயச்சித்தம் ஸாஸ்த்ரம் விதிக்க வில்லை என்கிறார் –
இவர்கள் பிரபன்னர் ஆகி ஆச்சார்யர் மூலம் ப்ரஹ்ம பிராப்தி பெறலாம்

———

3-4-11-ஸ்வாமி அதிகரணம்
ப்ராசங்கிகம் இது -உத்கீத உபாசன அதிகாரம் பற்றிய விசாரம் –
யஜமானா ஹோதா அத்வர்யு உத்காதா பிரஸ்தோதா ப்ரதிஹர்த்தா -ப்ரம்மா போன்ற ருத்விக்குகள்
உத்கீத உபாசனம் எஜமானர் செய்ய வேண்டுமா ருத்விக்குகள் செய்ய வேண்டுமா –
பாதராயணர் சிஷ்யர் ஆத்ரேயர் யஜமானாரே செய்ய வேண்டும் –
ஸ்வாமி யே ந பல ஸ்ருதே இதி ஆத்ரேய
ஒவ்டோல்மி -ருத்விக் யஜமானருக்காக பண்ணலாம் –
ஸூத்ரகாரர் இத்தை சம்மதித்து அருளுகிறார் –

——-

3-4-12-ஸஹ காரி அந்தர விதி அதிகரணம்
ப்ருஹதாரண்யம் –
பண்டிதர் மௌனமாக திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்துடனே ப்ரஹ்ம உபாஸனம்
மனன சீலத்தவம் ப்ரஹ்ம உபாசனத்துக்கு அங்கம் ஸஹ காரி என்றவாறு –

———-

3-4-13-அநவிஷ்கார அதிகரணம்
ப்ரஹதாரண்யம் -5 அத்யாயம்
ப்ரஹ்மவித் கர்வம் இல்லாமல் குழந்தை போல் இருக்க வேண்டும்
பூர்வ பக்ஷம் விளையாடி எல்லாம் உண்ணலாம்
தன்னை வித்வானாக காட்டிக் கொள்ளக் கூடாதே என்பதே தாத்பர்யம் –

——–

3-4-14-ஐஹிக அதிகரணம்
உபாசனம் முடிந்த பின்பே ஐஹிக பலனைப் பெறுவானா -இந்த ஜென்மத்திலேயா -மறு பிறவியிலா -விசாரம்
பூர்வ பக்ஷம் உபாசானம் முடிந்த உடனே
சித்தாந்தம் -வேறே பாப கர்ம தடங்கல் இல்லாமல் இருந்தால் தான் நடக்கும்
உத்கீத வித்யாதிகள் மூலம் பிரதிபந்தங்கள் கழிந்த பின்பே ஐஹிக பலன் கிட்டும் –

———-

3-4-15- முக்த பல அதிகரணம்
ப்ரஹ்ம வித் அபசாராதிகள் இருந்தால் முக்தி பலம் உடனே கிட்டாதே –
பாகவத அபசாரம் முக்தி பலனைக் கொடுக்காமலே போக வைக்கும்
தத் அவஸ்தா த்ருதே -தத் அவஸ்தா த்ருதே -மீண்டும் சொல்லி
அத்யாயம் நிகமனம் என்பதைக் காட்டி அருளுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: