ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -இரண்டாம் அத்யாயம்–

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் –பத்து அதிகரணங்கள்

2-1-1-ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
கபில மத நிரஸனம்

அநவகாச தோஷம் -வேதத்துக்கு புறம்பாக சொல்லும் ஸ்ம்ருதி வாக்கியங்கள் கொள்ளத் தக்கவை அல்லவே –
ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத் இதி சேத் நான்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத்
வேறே ஸ்ம்ருதி -மனு ஸ்ம்ருதி-பராசர ஸ்ம்ருதி -வாக்யங்களுக்கும் இவை விருத்தம்
மனு ஸ்ம்ருதி – ஆபோ நர இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவ
தா யதஸ்ய அயனம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருதி -என்று சொல்லும்

2-1-2-யோக ப்ரத்யுக்த அதிகரணம் –ஒரே ஸூத்ரம் -எர்த்தேன யோக ப்ரத்யுக்த –
ஹிரண்யகர்ப வாத நிரஸனம்
சதுர்முகனும் கர்ம வஸ்யன்-முக்குணங்களுக்குள் அகப்பட்டவன்
த்ரிவித காரணமும் அவனே

2-1-3-விலஷணத்வாதிகரணம் –முதல் இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் -அடுத்த ஏழும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
கார்ய பொருள்களில் -காரண குணங்கள் இல்லையே
சாணியில் புழுக்கள் உள்ளனவே
முதல் ஸூத்ரம்
ந விலக்ஷணத்வத் அஸ்ய தத்வம் ச ஸப்த –
முக்குண வசமான ஜகத் ப்ரஹ்மம் போல் இல்லையே -ஆகவே உபாதான காரணம் ப்ரஹ்மம் அல்ல –
இதற்கு சித்தாந்த பதில்
த்ருஷ்ய தேது —
காரண கார்ய பாவம் -சாணியில் புழுக்கள் சிலந்தி போல்வன பார்க்கிறோமே
பால்ய யவ்வன அவஸ்தை மாற்றங்கள் குழந்தை உயிர் உடன் இருக்கும் பொழுது தானே நடக்கும் –
சரீர மாற்றமாக இருந்தாலும் ஜீவன் இருந்தால் தானே நடக்கும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருக்கவே மாற்றங்கள்
ஸங்கல்பித்து நடத்துகிறான்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -தனது சங்கல்ப ஏக தேசத்தால் ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமாக மாறுகிறது
மாற்றம் சரீரத்துக்கே தானே ஒழிய ப்ரஹ்மதுக்கு இல்லையே

2-1-4-ஸிஷ்ட அபரிக்ரஹாதிகரணம் -ஒரே ஸூத்ரம் –
வைசேஷிக நியாய புத்த ஜைன பரம அணு காரண வாதிகள் நிரஸனம்

2-1-5-போக்த்ராபதி அதிகரணம்
விலக்ஷணத்வ அதிகரணத்துடன் நேராக தொடர்பு
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அவன் சரீரமே
பூர்வ பக்ஷிகள் ஆத்மா கர்ம பலனால் ஸூக துக்கங்கள் அனுபவிப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் உண்டே
எனவே பிரக்ருதியே காரணம் என்பது மிக பொருந்தும் என்பார் –
போக்த்ரபத்தே அவி பாக சேத் ஸ்யாத் லோகவத் –ஸூத்ரம்
சரீரம் இருப்பதால் ஸூக துக்கங்கள் என்பது இல்லை -கர்மங்கள் அடியாகவே –
சிறைக்குள் கைதியும் காவலாளியும் இருப்பது போல் -அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மம் ஸூக துக்கம் அனுபவிக்க வேண்டாமே –

2-1-6-ஆரம்பண அதிகரணம்
கார்ய காரணங்களுக்கும் வேறுபாடு
பெயரில் வேறுபாடு -மண் -குடம்
ரூபத்தில் வேறுபாடு
பயனில் வேறுபாடு
குயவனின் வேலைப்பாட்டு நேரம்
இரண்டும் ஒன்றே என்றால் அவன் செயலால் பயனே இல்லாமல் போகுமே –
ஜகத் ப்ரஹ்மம் வேறுபாடு பார்க்க ப்ரஹ்மம் காரணம் ஆக மாட்டாதே பூர்வ பக்ஷம் –
இதுக்கு பதில் ஸூத்ரம்
தத் அந்நயத்வம் ஆரம்பண ஸப்தாபிப்ய
உத் கலர் ஸ்வேதகேது சம்வாதம் –மண் -தங்கம் -இரும்பு இவை காரணமாக பொருள்கள்
ப்ரஹ்மம் சத்தாகவே ஒன்றாகவே வேறு ஒன்றும் இல்லாமலே இருந்தது -சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -ஏகம் ஏவ -அத்விதீயம் –
பஹுஸ்யாம் பிரஜாயேய-சங்கல்பித்து
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர சரீரமாக படைத்து -அநு பிரவேசித்து –
அநந்ய -பிரிக்க முடியாமல் -சரீரமும் ஜீவனும் போல் –
சில உபநிஷத் அஸத் -அவ்யக்ருத -என்று சொல்லும் பொழுது ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மத்தை சொன்னபடி –

2-1-7- இதர வியபதேஸ அதிகரணம்
தத் த்வம் அஸி–அத்வைதி வாத நிரஸனம்
முதல் ஸூத்ரம் பூர்வ பஷ ஸூத்ரம்
இதர வியபதேஸத் ஹித அகரணாதி தோஷ ப்ரஸக்தி
இதுக்கு பதில் சித்தாந்த ஸூத்ரம்
அதிகம்து பேத நிர் தேஸாத்
ப்ரஹ்மம் அதி விலக்ஷணம் -ஜீவ ரூபம் எடுத்து மாயைக்குள் சிக்க வேண்டாமே –

2-1-8- உப ஸம்ஹார அதிகரணம்
நிரீஸ்வர வாதி மீண்டும் -ஒன்றுமே இல்லாத போது -சஹகாரி இல்லாமல் ப்ரஹ்மம் எப்படி ஸ்ருஷ்டிக்க முடியும் –
இதற்கு பதில் ஸூத்ரம்
உப ஸம்ஹார தர்ஷணாத் நைதி சேத் ந ஷீராவதி —
பால் தயிராக ஸஹகாரி ஒன்றும் இல்லையே –
விசுவாமித்திரர் திரிசங்கு சுவர்க்கம் ஸஹகாரி ஒன்றும் இல்லாமல் ஸ்ருஷ்டித்தாரே

2-1-9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணம்
மண் குடமானால் மண் இல்லையே
ப்ரஹ்மமும் ஜகத்துக்கும் சேர்ந்து எவ்வாறு இருக்க முடியும்
க்ருத்ஸன ப்ரஸக்தி நிரவயவத்ய ஸப்த கோபாவ -பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதற்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத் வாத்
அவயவம் இல்லாதவன் தான் ப்ரஹ்மம் -ஆனால் சர்வ சக்தன் -ஸங்கல்ப ஏக லவ தேசத்தாலே செய்ய வல்லவன்
லோக த்ருஷ்டாந்தங்கள் இவனுக்கு ஒவ்வாது –

2-1-10-ப்ரயோஜனத்வ அதி கரணம்
அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்து வைத்தும் ஸ்ருஷ்டிக்க ஹேது பிரயோஜனம் என்ன பூர்வ பாஷா இறுதி வாதம்
தனக்கு பிரயோஜனம் இல்லை -ஜகத்தில் துன்பப்பட பிறந்து அவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை -என்பர்
ந ப்ரயோஜனத்வத்–பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதுக்குப் பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
லோக வத்து லீலா கைவல்யம் –
ஆனால் பக்ஷ பாத குற்றமும் கருணை இல்லாக் குற்றமும் வருமே என்னில்
கர்மம் அடிப்படியில் ஸ்ருஷ்டிப்பதால் இவ்வித குற்றங்கள் வராதே
லயம் அடைந்த பின் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது – ஜீவர்களோ கர்மங்களோ இல்லையே என்னில்
ஜீவர்கள் நித்யம் -கர்மங்களும் அநாதி -ஆதி இல்லாதவை –

————

2-2-தர்க்க பாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -வைசேஷிகர் -நியாயம் -நான்கு வித புத்தர் -ஜைனர் -பாசுபத மதங்கள் நிரஸனம்
இதில் எட்டு அதிகரணங்கள்

2-2-1-ரசன அநு பபத்தி அதிகரணம் –ஒன்பது ஸூத்ரங்கள் –
நிரீஸ்வர சாங்க்ய மத நிரஸனம்-
ஈஸ்வர கிருஷ்ணர் சாங்க்ய காரிகை எழுதி உள்ளார்

முதல் ஸூத்ரம் –ரசன அநுப பத்தேச்ச நநு மானம் ப்ரவ்ருத்தேச்ச —
அவன் அந்தர்யாமியாக இல்லாமல் பிரகிருதி தானே காரணம் ஆக மாட்டாதே –

இதுக்கு பூர்வ பக்ஷம் -பால் தானாகவே தயிர் ஆவதை பார்க்கிறோம்
தென்னை மரத்துக்கு நீர் பாய்ச்ச இளநீர் கிடக்கிறதே
மா மரத்துக்கு நீர் பாய்ச்ச மாம்பழம் கிடக்கிறதே
இவற்றுக்கும் அந்தராத்மாவாக ப்ரஹ்மம் இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றன என்பதே பதில்

மூன்றாவது ஸூத்ரத்தில் ப்ரஹ்மம் அந்தர்யாத்மாவாக இருப்பதால் தான்
ஸ்ருஷ்டி பிரளயம் அந்த அந்த காலங்களில் சரியாக நடக்கின்றன –

பூர்வ பக்ஷி -பசு புல்லை உண்டு தானே பால் தருகிறதே
இதுக்கு பதில் எருது புல்லை உண்டு பால் தரவில்லையே –
இதனாலும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து நியமிக்கிறார்

2-2-2-மஹத் தீர்க்க வத்வ அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
கணாதர் -பரம அணு வாதி -நிரஸனம்
முதல் ஸூத்ரம் -பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-16-
மஹத் தீர்க்க வத்வ ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யம்
த்வி அணுவே ஹ்ரஸ்வம் –நிர் அவயவமாய் இருக்கும் –த்ரி அணு பரிமண்டல -அவயவங்கள் உடன் கூடி இருக்கும் –
இதுவே பரிணாமம் என்பர்
நூல் துணையாகும் பொழுது உண்டை பாவு -அநவஸ்தா தோஷம் வருமே –

வைசேஷிகர் அணுக்கள் பரிமாணம் அதிருஷ்ட கர்மம் அடியாக என்பர் –
கர்மங்களும் அத்ருஷ்டமும் நித்யம் என்பதால் எப்பொழுதும் ஸ்ருஷ்டியே நடந்து கொண்டு இருக்க வேண்டும் -என்கிற தோஷம் வருமே –

மூன்றாம் ஸூத்ரம் -வைசேஷிகர் -ஸமவாய சம்பந்தம் -காரணமாக பரிணாமங்கள்
இது குணம் குணி -அப்ருதக் ஸித்த சம்பந்தம் போல் அல்ல –
இதிலும் ஒரு சமவாயத்துக்கு காரணம் வேறே ஒரு சமவாயம் என்று சொல்லும் தோஷம் வரும் –

இதுக்குப் பதிலாக சமவாயம் சம்பந்தம் நித்யம் என்பர் –
அப்படியானால் குடத்துக்கும் பூமிக்கும் உள்ள சமவாய சம்பந்தம் நித்தியமாக இருக்க வேண்டும் –
பரிணாமம் நடக்காதே –

அடுத்து ஐந்தாம் ஸூத்ரம் -பானைக்கு நிறம் அணுவில் இருந்தே வரும் என்பர் –
அணு நித்யம் மாறாது என்று முன் சொன்னதுக்கு விருத்தமாக சொல்வர் –

கணாதர் நிறம் அணுவில் இல்லை என்று கொள்வர்
காரணத்தில் இல்லாத நிறம் கார்யமான குடத்தில் எவ்வாறு என்பதுக்கு அவர்கள் இடம் பதில் இல்லை

2-2-3-ஸமுதய அதிகரணம்
2-2-4-உப லப்தி அதிகரணம் –இதில் மூன்று ஸூத்ரங்கள் –
2-2-5-ஸர்வதா அநு பபத்தி அதிகரணம்
மூன்றும் நான்கு வித புத்த மத நிரஸனம்

இவர்களும் பரம அணு காரண வாதிகளே –
அனைத்தும் க்ஷணிகம் என்றால் அவை எவ்வாறு சேர்ந்து பரிமாணம் அடையும்
ஆகாசம் என்ற தத்துவமே இல்லை என்பர் இவர்கள் –
இல்லாத ஒன்றால் இருக்கும் ஜகத் எவ்வாறு உண்டாகும் –
நிரன்வய விநாசம் -அனைத்துமே க்ஷணிகம் என்றால் ஒன்றையுமே செய்ய வேண்டாமே –

நான்காம் அதிகரணம் -முதல் ஸூத்ரம் -ந பாவ உபலப்தே
ஸஹோ பாலம்ப -பொருள் இருப்பதும் இருப்பதை உணர்வதும் ஒரே சமயத்தில் –
இரண்டும் ஓன்று அல்லவே -நான் அறிகிறேன் வேறே பொருள் உள்ளது வேறு –

———

2-2-6-ஏகஸ்மின் அஸம்பவதி கரணம் -நான்கு ஸூத்ரங்கள்
ஜைன மத நிரஸனம் இதில் -இவர்களும் பரம அணு காரண வாதிகள் –
ஸப்த பங்க வாதிகள் –
ஸூத்ரகாரர் -நை கஸ்மின் அசம்பவத் –இருளும் ஸூர்யனும் சேர்ந்து இருக்க முடியாதே –
ஜீவாத்மாவின் அளவும் சரீரத்து அளவு மாறும் என்பர் இவர்கள் -இதுவும் ஒவ்வாதே

—–

2-2-7-பசுபதி அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
நிமித்த காரணம் சிவன் என்றும் உபாதான காரணம் பிரகிருதி என்பர்
பத்யு அஸமஞ்ச ஸ்யாத் -என்கிற ஸூத்ரத்தால் இது நிரஸனம் -வேதங்களுக்கு புறம்பாய் இருப்பதால் தள்ளத் தக்கது –
ஸாஸ்த்ர த்ருஷ்யது உபதேச வாமதேவ தத் –இந்திரா பிராண அதிகரண ஸூத்ரம் முன்பே பார்த்தோம் –
வேதம் வேறே தேவதா உபாசனம் சொல்லும் பொழுது அவற்றுக்குள் அந்தர்யாத்மாவாக இருக்கும் ப்ரஹ்மத்தையே சொல்லும் –

த்வாபர யுக ஸூத்ர காரர் எவ்வாறு கலியுக புத்த ஜைன மத நிரஸனம் செய்ய முடியும் கேள்விக்கு
சதுர்யுக நியாயம் என்பதாலும்
சித்தாந்தங்களும் அநாதி என்பதாலும் சமாதானம் –

——–

2-2-8-உத்பதி அஸம்பவ அதிகாரணம் —
பாஞ்சராத்ர ஸாஸ்த்ர நிரசன வாதிகள் நிரஸனம்
நாராயணனனே -அநந்தன் -கருடர் -விஷ்வக்சேனர் -ப்ரம்மா இந்திரன் -ஐவருக்கும் ஐந்து இரவில் உபதேசம்
அபி கமனம் -உபதானம் இஜ்யா ஸூவத்யாயம் யோகம் ஐந்தையும் செல்வதாலும் பாஞ்சராத்ரம்
108 ஸம்ஹிதைகள் -நான்கு பகுதிகள்
ஆகம ஸித்தாந்தம் -மந்த்ர ஸித்தாந்தம் –தந்த்ர ஸித்தாந்தம் -தந்த்ராந்த்ர ஸித்தாந்தம்

சங்கர்ஷண நாம ஜீவோ ஜாயதே -போன்ற வாக்கியம் வேதத்துக்கு புறம்பாக ஜீவர் பிறக்கிறார் என்பதால்
சிலர் இத்தை பிரமாணம் அல்ல என்பர்

முதல் இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்
அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்

முதல் ஸூத்ரம்
உத்பத்தி அசம்பாவத்
இதுக்கு பதில் ஸூத்ரம்
விஞ்ஞானாதி பவே வாதத ப்ரதிஷேத
சங்கர்ஷணன் -வ்யூஹ -ஜீவர் பிரதிநிதி -ஸம்ஹார கர்த்தா
ப்ரத்யும்னன் -இந்திரியங்கள் பிரதிநிதி -ஸ்ருஷ்டி லர்த்தா
அநிருத்தன்–ஸ்திதி -ரக்ஷணம்

——–

2-3-வ்யுத் பாதம் –இதில் ஏழு அதிகரணங்கள் –

1-வேதங்களில் சில இடங்களில் ஆகாசம் நித்யம் ஸ்ருஷ்ட்டிக்கப் படாதது என்றும் சொல்லும்
2- சில இடங்களில் ஜீவர்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகிறார்கள் என்றும் சொல்லும்
3-ஜீவர்களின் ஞானம் -அளவு பற்றியும் விசாரம்
4-ஜீவர்களை கர்த்தா என்றும் கர்த்தா அல்ல என்றும் சொல்லும்
5- ஜீவர்கள் கர்த்தா என்றால் ஸ்வதந்த்ரர்களா பரதந்த்ரர்களா
6- ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் ஸ்பஷ்டமாக வேதங்களில் சில இடங்களிலும் அஸ்பஷ்டமாக சில இடங்களிலும் உண்டே
7-இந்திரியங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகின்றன என்றும் இல்லை என்றும் சுருதியில் உண்டே
8-முக்ய பிராணன் ஸ்ருஷ்டிக்க பட்டது என்றும் இல்லை என்றும் சொல்லும்
9-இந்திரியங்களின் அளவு பற்றியும் வேறுபட்ட சுருதிகள் உண்டே
10-நாம ரூப வியாகரணம் நான்முகன் செய்வதாகவும் நாராயணன் சேருவதாகவும் சுருதிகள் உண்டு

இவற்றை வ்யுத் பாதமும் அடுத்த இந்திரிய பாதமும் -விளக்கும்

—–

2-3-1- வ்யுத் அதிகரணம்
வ்யுத் -ஆகாசம் -இது நித்யமா ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதா
அந்தரிக்ஷம் ஆகாசம் நித்யமே என்பர் பூர்வ பக்ஷி
சாந்தோக்யத்தில் ஸத் வித்யையில் சத்தான ப்ரஹ்மம் சங்கல்பித்து அக்னி நீர் பிருத்வி இவற்றை
ஸ்ருஷ்டித்தது பற்றி சொல்லி ஆகாசம் பற்றி சொல்லவில்லை
இவற்றை நிரஸித்து ஸூத்ரகாரர் ஆகாசமும் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதே
தைத்ரியம் முண்டக உபநிஷத் ஆகாசம் -வாயு -முக்கிய பிராணன் ஸ்ருஷ்டிக்கப்பட்டதை ஸ்பஷ்டமாகவே காட்டும்
ஸத் வித்யையில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்து அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தது என்ற போதே இவையும் அவற்றுள் அடங்கும் –

——-

2-3-2- தேஜோ அதிகரணம் –எட்டு ஸூத்ரங்கள் -நான்கு பூர்வ பக்ஷம் -நான்கு சித்தாந்தம் –
ஸ்ருஷ்ட்டி க்ரமம் -தன்மாத்ரை இவற்றைச் சொல்லி –இவற்றுக்கும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் இருப்பதை
நேரடியாக ஸ்பஷ்டமாக சொல்லாததால் பூர்வ பக்ஷம்
பால் தானாகவே தயிர் ஆவது போல் இவையும் என்பர் –
அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருந்து சங்கல்ப ஏக தேசத்தாலே செய்விக்கிறான் என்று காட்டி அருளுகிறார் –
அபர்யவசான வ்ருத்தி –அனைத்து சொல்லும் ப்ரஹ்மம் வரை செல்லுமே –

———

2-3-3-ஆத்ம அதிகரணம்
தைத்ரியம் யஜுர் வேத சம்ஹிதையில் -ஆத்மாவும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதாக சொல்லப்பட்டுள்ளது
ஆகவே நித்யம் அல்ல பூர்வ பக்ஷம் –
தத்வமஸி –அத்வைதிகளும் மாயை -ப்ரஹ்மம் ஒன்றே ஸத் -போன்ற தப்பான அர்த்தங்கள் –
இத்தை நிரசிக்க சித்தாந்த ஸூத்ரம்
ந ஆத்ம ஸ்ருதே நித்யவச் ஸதப்யா –ஆத்மா நித்யமே -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது அல்ல –
கட உபநிஷத் ஆத்மா நித்யம் என்றும் பல என்றும் ஸ்பஷ்டமாகக் காட்டும்
அப்படி என்றால் ஏக விஞ்ஞான ஸர்வ விஞ்ஞானம் எவ்வாறு பொருந்தும் –
ஸ்வரூப அந்யதா பாவம் -அசேதன அவஸ்தா பேதங்கள் -மண் -குடம் -மடக்கு போல் –
ஸ்வபாவ அந்யதா பாவம் -தர்ம பூத ஞான சுருக்கம் விரிவு –
கர்மம் அடியாகவே இந்த சுருக்கமும் விரிவும்

——-

2-3-4-ஞானாதி கரணம் –இதில் 14-ஸூத்ரங்கள்
இது முதல் நான்கு அதிகரணங்கள் ஜீவர்கள் பற்றியும் -அளவு -தர்ம பூத ஞானம் –
ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் போன்ற விஷய விசாரம் –

இந்த அதிகரணத்தில் -ஜீவன் ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -தர்மி ஞானம் –
வேறே ஒன்றின் உதவி இல்லாமல் தன்னையே காட்டும் –
முதல் ஸூத்ரம் ஞாதா ஏவ –
ஞான மயமாகவும் ஞான குணகனாகவும் ஜீவன் –
தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே –
அடுத்த ஸூத்ரங்களின் மூலம்
1- ஆத்மா அணு
2-ஆத்மாவுக்கு இறப்பும் பிறப்பும் தேக நாசமும் தேக சம்பந்தமும்
3-சந்தனம் உடலில் ஓர் இடத்தில் பூசினாலும் எங்கும் பரவுவது போலவும் விளக்கின் பிரபை எங்கும் பரவி இருப்பது போலவும்
தர்ம பூத ஞானத்தால் உடலில் எங்கு வலித்தாலும் ஆத்மா உணருகிறது –

————-

2-3-5-கர்த்ரு அதிகரணம்
இதில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும் –
கட உபநிஷத் கீதா வாக்கியம் -கொல்லப்படவும் இல்லை கொல்லவும் இல்லை —
முக்குணங்களே செய்விக்கின்றன போன்றவை நித்யத்வத்தைக் காட்டவே ஒழிய
கர்த்ருத்வம் இல்லை என்பதைக் காட்டவில்லை –

இதில் முதல் ஸூத்ரம்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வ –என்று
ஜீவாத்மாவுக்கு கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இரண்டுமே உண்டு –
சுவர்க்கம் அடைய ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
மோக்ஷம் பெற பக்தி -சரணாகதி செய்ய வேண்டும்
மேலே ஆறு ஸூத்ரங்களால் கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும்
தைத்ர்யம் விஞ்ஞானம் யாகம் செய்கிறது என்பதை புத்தி என்ற அர்த்தம் கொள்ளாமல்
ஆத்மாவையே சொல்லுவதாகக் கொள்ள வேண்டும் -விஞ்ஞானத்தால் -மூன்றாம் வேற்றுமை உருபு –

—————-

2-3-6-பராயத் அதிகரணம்
ப்ரஹ்மமே செய்விக்கிறான் -நியாந்தா -என்கிறது –
விதி நிஷேத இரண்டும் ஸாஸ்திரங்களில் உண்டே –
முதல் ஸூத்ரம் –பராத்து தத் ஸ்ருதே
கர்மம் அடியாக உசித சரீர சம்பந்தம் –
உடலும் இந்திரியங்களும் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொத்து என்றால் இருவர் சம்பந்தமும் வேண்டுமே செயல்பாட்டுக்கு –
விதி நிஷேத வாக்கியங்களும் ப்ரஹ்மமே நியாந்தா என்பதற்கும் விருத்தம் இல்லையே –

——-

2-3-7-அம்ச அதிகரணம் –11-ஸூத்ரங்கள் இதில் –
ப்ருதக் சித்தம் -ஜீவ ப்ரஹ்ம சம்பத்தம் விளக்கும் –
இரண்டும் வெவ்வேறா ஓன்று மித்யையா ப்ரஹ்மமே ஜீவனா போன்ற சங்கைகளை நீக்கி –
ப்ரஹ்மம் சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்றும் ஜீவன் அஞ்ஞன் அசக்தன் என்பதால் வேறு வேறே
இதில் முதல் ஸூத்ரம்
அம்ஸோநந விபதேசாத் அந்யத ச அபி தசகித வதித்வம் அதீயதே ஏக —
ஜீவன் அம்சமே -ப்ரஹ்மம் அம்சி -அம்ச அம்சி பாவம் –சரீர சரீரீ பாவம் –
ஜீவர்களுக்குள் வேறுபாடு -கர்மத்தால் சமையல் உள்ளில் அக்னியும் இடுகாட்டில் அக்னியும் ஒன்றாக
இருந்தாலும் இருக்கும் இடத்தால் வேறுபாடு போல் சரீரம் வாசியால் ஜீவர்களுக்குள் வாசி –
அத்வைத பாஸ்கர த்வைத மத நிரசனங்கள் இதில் –

————

2-4-இந்த்ரிய பாதம்

2-4-1-பிராண உத்பத்தி அதிகரணம்
முதல் ஸூத்ரம் –தத பிராணா
இங்கு பிராண -என்று இந்திரியங்களைச் சொன்னவாறு –
பிராண சப்தத்தால் ப்ரஹ்மத்தையே சொல்லும் -ஸத் மட்டுமே இருந்தது –

2-4-2- ஸப்த கதி அதிகரணம்

தைத்ரியம் ஜீவன் வேறே சரீரத்துக்கு ஏழு இந்திரியங்களை கூட்டிச் செல்கிறான் என்பதால்
இந்திரியங்கள் 7 தான் 11 அல்ல பூர்வபக்ஷம்
இவை மனஸ் புத்தி கண் காத்து மூக்கு நாக்கு தோல்
இந்த பூர்வ பக்ஷமே முதல் ஸூத்ரம்
ஸப்த கதே விசேஷிதத் வச்ச
இதுக்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம் அடுத்து
ஹஸ்த தயஸ்து ஸ்திதே அதோ நைவம்
கர்ம ஞான உள் இந்திரியங்கள் -11- புத்தி இந்திரியம் அல்ல -மனதின் வேறே அவஸ்தை தான் –

—–

2-4-3-பிராண அணுத்வ அதிகரணம்
இதில் இந்திரியங்களின் அளவு சொல்கிறது –
ப்ரஹதாரண்யம் இந்திரியங்கள் அனைத்தும் சமம் விபு
அணு தான் –
ஆனால் தோல் அணுவா என்ன
முக்கிய பிராணன் பொழுது 11 இந்திரியங்களும் கூட செல்லும் -செல்வதை அறியாமல் இருப்பதால் அணுவே –

இந்த அதிகரணத்திலே முக்ய பிராணனும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதே என்பதை
ஸ்ரஷ்டஷ் ச
முக்ய பிராணனும் ஸ்ரஷ்ட பிராணன் என்றும் சொல்லப்படும் –

———-

2-4-4-வாயு க்ரிய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இந்த முக்ய பிராணன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவே தானா -அல்லது அதன் ஸஞ்சாரமா —
இல்லை வேறே விசேஷ வாயுவா –
முதல் இரண்டும் அல்ல -மூன்றாவதே என்று முதல் ஸூத்ரத்தில் –நவயு க்ரியே ப்ருதக் உபதேசாத் —
முண்டகம் சொல்லும் -நாராயணன் இடம் இருந்து முக்ய பிராணன் மனஸ் பத்து இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் –
என்று தனியாக அருளிச் செய்வதால் -கண் போல் இதுவும் ஜீவாத்மாவுக்கு உப கரணம்
சாந்தோக்யம் கதை -யார் பெரியவர் என்று -அனைத்தும் ஒவ்வொன்றாக விலகி முக்ய பிராணனே
உயர்ந்தது இன்றியமையாதது என்று உணர்ந்தனவே –
இதுவே ஐந்தாக -பிராண அபான சமான உதான விதான -என்று பிரிந்து கார்யம் செய்கிறது –

—————

2-4-5-ஸ்ரேஷ்ட அணுத்வாதி கரணம்
இந்த முக்ய பிராணன் -அணு அளவு என்கிறது –
சில உபநிஷத் வாக்கியம் இது விபு -அநந்தம் -அனைத்தும் இதுக்குள் என்றும்
இது அனைத்துக்குள்ளும் என்பன -போல் சொல்லுகிறதே என்னில்
அணுச் ச
சரீர வியோகத்தில் பிரிந்து போவதால் விபுவாக இருக்க முடியாதே –

———

2-4-6-ஜ்யோதிராதி அதிகரணம்

அபி மாநி வியபதேஸஸ் து விசேஷ அணு கதிப்யம் -2-1-பாத ஸூத்ரம் –என்று அனைத்துக்கும் அவனே நியாந்தா
அபிமானி தேவதா விசேஷம் -அதிஷ்டான தேவதா விசேஷம் –
வாக்குக்கு அக்னி என்றும் -கண்ணுக்கு ஸூர்யன் என்றும் -முக்ய ப்ராணனுக்கு வாயு தேவதா –
அனைத்து இந்திரியங்களுக்கும் ஜீவாத்மா -இவற்றை அனைத்தும் நியமிப்பவன் ப்ரஹ்மமே என்று
ஜ்யோதிராதி அதிஷ்டானம் து ததமானாத் பிராணவத ஸப்தாத் -அவன் சங்கல்பம் அடியாகவே என்கிறார் –
இங்கு பிராணவத என்று ஜீவனையும்
ததமானாத் என்று ப்ரஹ்மத்தின் சங்கல்பத்தையும் சொல்கிறது –
சப்தாத் -என்றது உபநிஷத் சொல்வதால் என்றபடி –
அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம் மூன்றாம் அத்தியாயத்தில் –யஜ்ஜ்வல்க்யர் உத்கலருக்கு உபதேசம்
யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி –21- தடவை -ப்ரஹ்மமே நியாந்தா என்கிறது –

——–

2-4-7-இந்திரியாதி கரணம்
முக்ய பிராணன் இந்த்ரியமா வேறா –
த இந்திரியாணி தத் வியபதேசத் அந்யத்ர ஸ்ரேஷ்டா –என்கிறது –
இரண்டாவது ஸூத்ரம் –பேத ஸ்ருதே வை லக்ஷண்யச் ச —
எனவே வேறே தான் –

——-

2-4-8-ஸம்க்ண மூர்த்தி க்லிப்தி அதிகரணம்
ஸம்க்ண –என்று பெயர் –மூர்த்தி என்று ரூபம் –
நாம ரூபங்கள் வஸ்து வ்யாவ்ருத்தியைக் காட்டும் –
இதில் முதல் ஸூத்ரம்
ஸம்க்ண மூர்த்தி க்லிப்திஸ் து த்ரிவித் குர்வத உபதேசாத் –
த்ரிவிக் கரணம் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம்
நாம ரூப வியாகரணம் செய்பவன் ப்ரஹ்மமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: