ஸ்ரீ மாறன் அலங்காரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

திருக் குருகை பெருமாள் கவி ராயர் -16- நூற்று ஆண்டில்
மாறன் அலங்காரம்
மாறன் அகப்பொருள்
மாறன் பா இனம் அணி யாப்பு

————-

மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.
இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இது எழுதப்பட்ட
மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்
மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

மாறன் அலங்கார உரை
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.
பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.

அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்) இதில் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. [2]

அசங்கதி 2
அதிகம் 1
அபநுதி 4
அற்புதம் 2
ஆசி 2
ஆர்வமொழி 1
இணையெதுகை 2
இலேசம் 1
இறைச்சிப்பொருன் 1
உதாத்தம் 9
உபாயம் 1
உருவகம் 26
உல்லேகம் 4
உவமை 46
உள்ளுறை 5
உறுசுவை 1
ஏகாவளி 1
ஏது 24
ஒட்டு 6
ஒப்புமை 2
காரணமாலை 1
காரியமாலை 1
காவியலிங்கம் 1
சங்கரம் 1
சங்கீரணம் 1
சந்தயம் 3
சமாயுதம் 1
சமுச்சயம் 2
சிலேடை 18
சுவை 18
தடுமாறுத்தி 1
தற்குணம் 1
தற்குறிப்பேற்றம் 2
தற்பவம் 1
தன்மை 12
திட்டாந்தம் 1
தீபகம் 18
நிந்தாத்துதி 1
நிரல்நிறை 13
நெடுமொழி 1
பரிகாரம் 4
பரிசங்கை 2
பரியாயம் 1
பரிவர்த்தனை 1
பாவிகம் 1
பிரத்தியனீகம் 1
பிரதீபம் 1
பிறவணி 1
புகழ்வதின் இகழ்தல் 1
புணர்நிலை 2
பொருள்மொழி 1
மாறுபடு புகழ்நிலை 1
மின்வருநிலை 3
முன்னவிலக்கு 21
வகைமுதலடுக்கு 1
விசேடம் 6
விதர்சனம் 2
விநோத்தி 1
விபாவனை 4
விரோதம் 7
விற்பூட்டு 1
வேற்றுப்பொருள் வைப்பு 8
வேற்றுமை 5

——–

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.
இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.
பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய
நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–

அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்
தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.
இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

——-

http://www.tamilvu.org/ta/library-l0O00-html-l0O00ind-243038

சிறப்புப்பாயிரம்

உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா
னலகில்சோதியணிகிளர்திருவுரு
வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர்
கணமகலாதபொற்கவின்பதிநின்று
முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப்
பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும்
விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந்
தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை
யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத்
தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு
முதுமொழித்தண்டிமுதனூலணியொடும்
புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந்
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு
மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும்
பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச்
சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க்
காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்
தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன்
சிற்குணச்சீநிவாதனின்னருளா
னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன்
பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா
ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்
திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.

———–

நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே–யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம். (132)

இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.
இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.

——-

கருத்தகலாக்கண்ணனெனக்காவலருள்வானை
யுருத்திரனாமென்பதனோடொண்மைப்-பொருட்பரத
கண்டத்தாகிச்சிறந்தகங்கைக்கோடுற்றவிடக்
கண்டத்தானென்னுமுலகம். (354)
என்பது, திருவுள்ளத்தைவிட்டுநீங்காத கண்ணோட்டமுடையானென்று சொல்லும்படிக் குலகுயிர்களைக் காவல்செய்வானைத்
திவ்வியாத்தும சொரூப மழிவிலானென்பதோடு நல்லபயனைத்தரும் பரதகண்டத்தாகி யழகெய்திய க
ங்கைக்கரையையுற்றவிடமாகிய கண்டத்தானுமாமென்று உலகங் கூறாநிற்கு மென்றவாறு.

கங்கைக்கோடுற்றவிடக்கண்டமென்பது கங்கைக்கரைக்கண்ட மென்னுந் திருப்பதி.
ஆதலால் அங்ஙனங் கண்ணோட்டமுடன் காவல் செய்வானை நெஞ்சமே! என்னுடன்கூடிப் பற்றுவாயாக;
நமக்கு முத்தியெய்து மென்பது பயன். ஒண்மை – நன்மை.
பொருள் – இனிக் கண்ணனென்னுந் திருநாமமுடையானென் றுலகங்குயிர்களைக் காவல்செய்வானைச்
சங்காரமூர்த்தி யென்பதனோடும் பிரமசிரத்தை யிரத்தற்குக் கையிலோடாகவுடையனுமாகி நஞ்சையணிந்த
மிடற்றையுடையனுமாமென் றுலகங் கூறாநிற்கு மென்னும் பொருடோன்றுதலா லிது கிரியைக்குப் பொருளோடே விரோதச்சிலேடையாயிற்று.
உருத்திரன்-சொரூபமழிவிலாதான்; சங்காரமூர்த்தி என்றும், கம்- சிரம். கைக்கோடுற்ற- கைக்கோடாகவெய்திய.
இடக்கண்டத்தான்-இடமாகிய கண்டமென்னுந் திருப்பதியான்;
விடக்கண்டத்தான் – நஞ்சையணிந்தமிடற்றான் எனவுங் கொள்க. திணை-பாடாண். துறை-ஓம்படை.

———-

பொன்போற்சுடர்பல்கதிரோனடைத்தமென்போதிருக்கை
நன்போதகற்றுந்திறங்கற்றிடர்நள்ளிருளிடையோர்
மின்போற்றமிவந்தருள்செய்ததாலின்பமெல்லியலா
யென்போற்றவஞ்செய்ததாரருளாளரிபகிரிக்கே. , (508)
இதுவுமது. இதன்பொருள் உரையிற்கொள்க. பகுதி – இரவிற் குறி. துறை – தளர்வகன் றுரைத்தல்.

————

சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ
1ழட்டபுயகரத்துளாயிழையார்க்–கிட்டிடைதான்
சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு
மத்திரமோகண்ணென்பவை. (626)
இது மூன்றாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.
சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.

———-

நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர்
மன்கார்வரைமயிற்குமன்னவா–மென்கோங்
கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற்
சுரும்பாநயனத்துணை.-627

இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.

———

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்–வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம். (628)
இது நாலாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.
சேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.
வானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.

உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.

————-

நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்–புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர். (629)
இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.
அலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.

————-

வெங்களபமூர்தரவீதியிற்பனித்தமதத்திடைமென்
பிடியிற்செல்வார்
செங்களபந்திமிர்ந்தளறாய்ச்சேந்தனவாஞ்சேந்தனவாஞ்
சிறுவர்தேர்தே
ரங்குறமண்மகளகலத்தளங்குறுகாதுருளுருளா
வரங்கத்தாய்நீ
யெங்குளனென்றவன்முனமற்றங்குளனானதைப்புகழ்வா
ரெமையாள்வாரே. (701)
இஃ திரண்டாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய
மதப்பெருக்கிற் களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத்
திமிர்ந்திட்டதா லக் கரியமதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார்
தமக்கேற்றமாமென விசாரித்தூருஞ் சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா
தச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே !
நீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற
அவ னிங்குளனோவென்றடித்ததூணத் தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

புத்தமிர்தந்தனிற்பிறந்தபொன்கொடியையகலாத
புனிதனாகி
யத்திகிரிதனிலுதித்தகைத்திகிரிப்பரன்பரனென்
பதனைநாடி
யுத்தமநான்மறைகண்மதித்தொன்றுரைதொன்றுரையணங்கே
யோதியோதி
மொய்த்துயர்வன்பரற்கடஞ்சென்றழுந்தவுணர்வதற்கிறைவர்
முயல்கின்றாரே. (702)
இது மூன்றாமடி யிடையொடுகடைமடக்கு.

———

காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
வாவியும்புடைசூழரங்கேசனென்மனத்தான். (742)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) வாவியும் – வாவிகளும். விரிகாவியங்கணல்லார்படி காவிரி -மலர்ந்த நீலோற்பலம்போலும்
அழகிய கண்ணையுடைய மகளிர் புனல் குடையுங் காவிரியும்.
விரிகாவியங்க ணல்லார் படி கா – அறமுதலிய நாற்பொருளுங் குறைபாடின்றிப் பரந்த காப்பியங்களை நல்லோ ரிருந்து கற்பனசெய்யுங் காவும்.
படிகா – ஊரைக்காக்கப்பட்ட. காவியம் – வாரினாற்கட்டித் தோளிற் காவிய வாச்சியங்கள்.
அல் ஆர் கண் – இரவின் கண் ணாரவாரிக்குமிடங்களும்.
புடை…… மனத்தான் – பக்கமெல்லாஞ் சூழப்படாநின்ற திருவரங்கேச னென்மனத்துளா னென்றவாறு.

இதனுள், சூழ், படி, படி, விரி, விரி என்பன இறந்தகாலமு நிகழ்காலமுங் கரந்துநின்ற பெயரெச்சவினைத்தொகைவாய்பாடு.
“எஞ்சுபொருட் கிளவி ச லாயிற், பிற்படக் கிளவா முற்படக் கிளத்தல்” என்பதனாற்
காவிரியும் காவும் அல்லார்கண்ணும் என்பனவற்றிற் கும்மைகொடாராயினார். திணை – பாடாண்.
துறை – கடவுள்வணக்கம். பா – கலித்தாழிசை ; என்னை? “அந்தடி நீண்டிசைப்பிற், கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்” என்பவாகலான்.

———–

வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ;
என்னை? “எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

———-

முன்னைமுன்னைநாட்டுறந்தவனவனியைமுதலானான்
றன்னைவந்தடைக்கலம்புகக்கொடுத்தமெய்த்தண்காவா
னென்னையென்னையெண்ணுவதினியினியவரென்கேள்கேள்
உன்னையந்தகாமதிக்கிலன்பிறருளருனக்கன்றே. (720)
இது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன்.
தன்னைவந் தடைக்கலம்புக முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன அந்த
மூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய
திருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி. இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம்.
ஆகையால், கேள் அந்தகா – அந்தகனே ! கேட்பாயாக என்னை ? எண்ணுவதினி – என்னைக்குறித்து
நீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,
பிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;
உன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.

அன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.
முதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.
திணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

———

‘மாறன் ‘ என்ற சொல் உள்ள பக்கங்கள்
61 97 102 115 132 143 164 177 222 229
247 248 252 310 383 435

—–

நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து
போதந்தழைந்தபுனிதர்தாம்–வேதம்
விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான்
மதித்தொருநூலோதார்மறித்து. (102)

இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர
வேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க.
வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை. உணர்வான் – உணரவேண்டி.
மதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

———

காழில்கனியுண்கடுவன்களங்கனியை
யூழிற்பருகியுருகுதிரு–மூழிக்
களத்தாதியைமதங்காகாமக்குழவி
வளத்தாரிடந்தேடுவாய். (103)

என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய
அரம்பைக்கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய
களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்
காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.

——

ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ–மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து. (109)

என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்
சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டியளந்துகொண்ட
தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார் வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.

ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்
இது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

———

பூரித்துடலம்புளகித்திடப்புலமை
சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்–பாரித்த
முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு
முத்தமராய்வாழ்வாருளம். (128)
இது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.
சீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.
பாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.
உளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது
முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற
பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.

————

மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி–லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம். (160)
என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;
இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;
சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.

———-

ஒன்றாயநின்முகத்ததொண்டமிழ்வேதங்குரவ
னன்றாயுநான்முகத்ததவ்வேத–மென்றாலும்
வண்டமிழ்மாறாவண்டமிழ்மறைக்கொப்பன்றிமறைக்
குண்டெனலாமோவேறுயர்பு.–180-

படர்புகழ்மாறன்பராங்குசன்
றுடரிமால்வரைவளர்தோகையதியலே. (182)

நடுக்கற்றறைவளத்தினன்பொருள்களெல்லா
மிடுக்கற்றுதவுமியல்சான்–றொடுக்கமற
வேய்ந்தமலையமெனவளர்கின்றான்பரன்சீ
ராய்ந்ததமிழ்மகிழ்மாறன். (213)
இஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து
மூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு
மூன்றுபொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.

—–

அறியாமையென்னுமகவிருளைச்சீக்கப்
பிறியாதறிவிருக்கப்பெற்றுங்–குறியாத
தீச்சொற்பயில்வரேசெண்பகமாறன்பவள
வாய்ச்சொற்றிறம்பயிலாமல். (234)
இஃ தேகதேசவுருவகம். இதனுள் அறியாமையென்னு மகவிருளை யென மாட்டேறுபெற வுருவகஞ்செய்ததனோடு
மெதிராகச் சம்பந்தமுற ஞானமாம்விளக்கென மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகை நிலைவாய்பாட்டா னறிவெனக் கூறியவாறு காண்க.

செண்பகமாறன் பவளவாய்ச்சொல்-திருவாய்மொழி. திறம் – சித்த சித்தீச்சுரத்தை மயக்கமறவிளங்கக்கூறுங்கூறுபாடு.
பயிலாமல் – இடைவிடா துணர்வினாற் சிந்தியாமல். இது, உவமேயமு முருவகவுருபுமாகிய இரண்டுதொக்க தொகையுருவகம்.
ஞானவிளக்காவது திருவாய்மொழி ; பிறரறியாமையென்னு மிருட்டறக் கூறிய ஞானமாகிய விளக்கு.
பயில்வரே யென்பது பரசமயவாதியரை. ஏகாரம் – இரக்கத்தின்கட் குறிப்பு. துறை – இதுவுமது.

————

ஊர்தியனமம்போருகமாசனஞான
நீதிவழுவாநெறிபடைத்தும்-வேதநெறி
யோதிப்பொறியிழந்தானொண்குரவனெங்கோமா
னாதித்திருமகிழ்மாறன். (309)
இது, சிலேடைவேற்றுமை. பொறியிழத்தல்-பிரமன் றலையிழத்தல். எங்கோமானாகிய மாறன் பொறியென்னும்
பெயரையுடைய பெரிய பிராட்டியருளையெய்தினவ னென்றமையாற் சிலேடையால் வேற்றுமையாயிற்று.
திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

ஓவாதசெம்மையுதயத்துளதெனினுந்
தாவாமறுப்படைத்ததன்மையான்-மூவா
முதனமதுகண்ணனெனுமுத்திரைக்கைம்மாறன்
வதனமதுநேராமதி. (310)
இது விலக்குவேற்றுமை. திணையுந் துறையுமது. இன்னும்வேறுபடவரு வனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

———-

மெய்த்தமிழ்மாறன் றுடரிவெற்பிலெதிர்நின்றதுபூங்
கொத்தமைந்தபொன்னங்கொடியோகொ-லித்தரணி
மீதாயுடுத்தொடுத்துமேயதகைமின்னுருவோ
யாதாயதொன்றோவிது. (318)

இதுவுமது. இதனுள், பூங்கொத்தென்றது கோடு, கொடி, நீர் என்னும் பல்வகைப்பூக்களை. அமைந்தது – மிகுந்தது.
இத்தரணி—மின்னுருவோ-மேகத்தைவிட்டுப் புவியிடத்தாய் மேக படலத்தின்மேலாய வுடுக்கணத்தினைத்
தனக்குறுப்பாந்தொடர்படுத்திப் பொழிலிடத்தடைந்ததொரு மின்னுருவமோ. யாதாயதொன்றோவிது என்பது
எவ்வுருவ மவ்வுருவாயதொன்றெனத் தெரிதற்கரிதென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – ஐயுறுதல்.

——–

கோபம்பயின்றவிடங்கூர்தாபரங்குறுகத்
தாபந்தவிர்ந்துயிருந்தண்ணென்ற-பூபதிகைத்
தூரிகையாலேயமைத்தசொற்றமிழ்மாறன் றுடரிக்
காரிகைசெவ்வாயெனவேகண்டு. (350)

(இ-ள்) இந்திரகோபங்கள்விட்டு நீங்காத இடமிகுந்தசோலையைக் குறுகினகாலத்து விரகாக்கினியினாலுண்டான
எனதுவாட்ட நீங்கியுயிர்தண்ணென்று குளிர்ந்தது. நெஞ்சமே! யங்ஙனம் நீங்குதற்கேது யாதெனில்,
தாமரையையிடவகையாயுள்ள பிதாமகன் கையினாற் றூரியக் கோலையெடுத்தெழுதியுண்டாக்கின
வழகினையுடையாள் செவ்வாய்க் கொப்பெனவேகண் டென்றவாறு.

சொற்றமிழ் மாறன்றுடரிக்காவெனக் கூட்டுக. நெஞ்சமே யென்னுமெழுவாய் முன்னிலையெச்சம்.
கோபம்பயின்றவென்பது சினம்விட்டு நீங்காதவென்பதாய், இடங்கூர்தாபரம் விடங்கூர்தாபரமெனத் திரிந்து,
தாபரமென்பது ஆகுபெயராய்ச் சினமிகுந்த நச்சுமாமரச்சோலையைமுடுக வாட்டந்தீர்ந் துயிர் தண்ணென்றது
எனவே இது சாதிக்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. பகுதி – இடந்தலை. துறை-பொழில்கண்டுமகிழ்தல்.

————-

திருமகிழ்மாலையனாமென்பர்மெய்யைச்சிறைப்படுத்திப்
பொருதளைகட்டுண்டறியானளியுறும்போதனென்பா
ருருவளர்பாரிபடைத்தறியானொண்புனிதனென்பா
ரருள்புரிவாய்வைத்தருந்தான்மின்சொர்க்கத்தமிர்தினையே. (358)

இதனுள், திருமகிழ்மாலையனாமென்பர் என்பது திருமகள் விரும்புமியல்பையுடைய திருமாலுக்கும்,
அழகியவகுளமாலிகையினையுடைய மாறனுக்கும் பெயராமென்றுகூறுவர் பெரியோர்.
திருமால் திருமேனியை யொளித் துறியினையெதிர்ந்து தயிரைக் களவுகண்டறிவான்;
மாறன் ஞானத்தைத் தனக்காணாக்கிக்கொண்டு தன்னோடு பூசல்பெருக்கும் பாசத்தளையிற் கட்டுப்பட்டறியான்; என்றும்,
அளியுறும்போதனென்பார் என்பது வண்டுகள்சென்று முடுகும் பூவிலுள்ள பிரமனுக்கும்,
தண்ணளிமிக்க ஞானத்தையுடையமாறனுக்கும் பேர். பிரமன் வடிவகன்ற பூமியைப் படைத்தறிவன்;
மாறன் காந்திதழையாநின்ற இல்லறக் கிழத்தியைக் கொண்டறி யான்; என்றும்,
ஒண்புனிதனென்பார் என்பது நல்ல இந்திரனுக்கும், ஒள்ளியஞானத்தோடுங்கூடிய பவித்திரவானாம் மாறனுக்கும் பேர்.
இந்திரன் திருமால்கருணைபுரிந்துகொடுப்ப வொளிருஞ் சுவர்க்கத்திருக்கு மமிர்தினை வாய்வைத்துண்டறிவான்;
மாறன் மின்போலு மிடையையுடைய நங்கை யிரங்கிக்கொடுக்குந் திருமுலைப்பாலினைத்
திருப்பவளவாய்வைத்துண்டறியா னென்றுங் கூறியவாறாக வுணர்க.

இங்ஙனஞ் சிலேடை நிகழ்த்தலா லிதுவும் பொருளோடே கிரியைக்கு விரோதமாகவந்த சிலேடைவேறுபாடெனக் காண்க.
இன்னும் வேறுபடவரு வனவெல்லாம் பொருணோக்கமறிந்து கொள்க. அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.
திணை – வாகை. துறை – தாபத வாகை.

———-

அன்றுமலரிலமிர்திற்கொழுமுனையிற்
றுன்றுதுழாய்க்காட்டிற்றோன்றியே–யின்று
நினையிற்றமிழ்மாறனீள்குன்றவாணர்
மனையிற்பிறந்தனள்பூமாது. (482)

இது பரியாயம். பரியாயமென்பது பலமுறை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.
பயின்றதெனலும் என்னும் உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குநின்றுவிரிந்தமையால்,
தண்டியாசிரியர், “கருதியது கிளவா தப்பொரு டோன்றப், பிறிதொன்று கிளப்பது பரியா யம்மே” என்றார்;
அவ்வாறு புணர்ப்பதும் பரியாயமாமெனக் கொள்க. அதற்குச் செய்யுள் :-

சொற்பாவலர்தம்பிரான்மகிழ்மாறன்றுடரிவெற்பிற்
பொற்பார்பிறைநுதற்பூண்முலையாயிப்பொதும்பரின்வாய்
நிற்பாய்நறுமென்மலர்கொணர்கேனவணீபெயரிற்
கற்பாய்தரக்கன்றுநூபுரபாதகமலங்களே. (483)
என்பதனாலறிக. பகுதி – பகற்குறி. துறை – இடத்துய்த்துநீங்கல்.

(இ-ள்) புவிப்பாவலர்தம்பிரானாகிய திருமகிழ்மாறன் றுடரி வெற்பினிற் பொலிவுநிறைந்த இளம்பிறைபோன்ற நுதலினையும்
பூண் அணிந்தமுலையினையு முடையாய்! இச்சோலையின்கண் நிற்பாயாக, நின் குழன்மேற்சூட்ட நறுவிதாகிய
மெல்லியமலர் கொய்து கொண்டுவருவன், நீ என்னோடும் அவணேகுவையெனில் உனது சிலம்பணிந்த பாதகமலமானது
சிறுபரலுறுத்தக் கன்றுமாதலா னென்றவாறு.

———

மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு–முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம். (631)
இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்— மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய
காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான். மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை
விரும்பின விவளுடையமனமானது. மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த
நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்
ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு. திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

————-

ஏதுகொண்டுமானிடர்தமைப்பாடுதலிழிபென்றெப்
போதுமாறனைப்போற்றுதற்கென்னொடின்புறுநெஞ்சே
யாதுமாதுமென்முல்லைமுல்லையினிறையாவான்வா
னீதியாய்ந்தனமாகையான்முத்திநிச்சயமன்றே. (717)
இது மூன்றாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,
அதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து, அவர்களைப் பாடா தெப்போதும்
காரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே !
ஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ; பசுக்கள் பொசிப்பாகமெல்லும்
முல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.
வான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.
முத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.

ஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;
என்னை? “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக. திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

வீடாளிவீட்டினுக்குவீடாயதனைநிலையாய்விழுமிதாக்குங்
கேடாளர்கேண்மையினைப்பிரித்தெனையுந்தனதடியார்கேண்மையாக்கும்
வாடாதமகிழ்மாலைப்பெருமானைத்துணைநெஞ்சேமதித்துவிண்மே
னாடாளநாடாளரியையுநினைநினையினித்தென்னாட்டானாட்டான். (718)
இது நாலாமடி மூன்றிடத்துமடக்கு.

இ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும் நிலையிற்றாகும்
முக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி, அறிவிலியாகிய வென்னையுந்
தன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை, எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே!
இவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;
அவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகியநாட்டினையுடைய
நமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.

நம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை, முத்தியையு மெய்தலா மென்பது பயனாம்.
திணை – காஞ்சி. துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.
இவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு. இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-

தாம்பரியதாம்பரியதிரைதிரைத்தபொனங்கொடியிற்
சங்கஞ்சங்கந்
தேம்பணைத்தேம்பணைத்தெறியும்விண்ணகராய்விண்ணகராய்
செல்வாசெல்வா
யாம்புகழ்செண்பகமா றன்கொழித்ததமிழ்மறையினைக்கற்
றிறைவனீநீ
யாம்பரிசுற்றவரிதயத்தினிற்குடிகொண்டிருப்பதற்கென்
னாகத்துள்ளே. (719)
இது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகியகொடியினோடுஞ்
சங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந் திருவிண்ணகரின்கண் ணுறைபவனே !
பரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே ! எம்மனோர் புகழ்பவனாஞ் செண்பகமாறன்
வேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,
நீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ என்னிதயத்துள்ளுங்
குடிகொண்டிருப்பதற்கு வருவாயாக வென்றவாறு.

———–

நந்துவராயர் அருளிய சிலேடை உலா ‘சடகோபன் செந்தமிழை’ப் போற்றுகின்றது.

எண்ணார் மறைப் பொருளை எல்லாரும் தாம் அறியப் பண்ணார் தமிழால் பரிந்து–எனப் புகழ்கின்றது.

——-

வேதத்திலும் மேலான பாடல்களைத் தம் மீது பாடும்படி, திருமாலே
நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்திற்கு, நடந்தார்’
என அழகர் பிள்ளைத்தமிழ் நம்மாழ்வார் பெருமையைப் பேசுகின்றது.

———–

திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) எழுந்தருளி இருக்கும் சௌந்தரராகவப் பெருமாள் உலா வந்ததைக் கண்ட
தலைவி, அவர் மீது காதல் கொண்டு, ‘அழகரிடம் சென்று மாலை வாங்கிவா’ எனக் கிளியைக் தூது விடுத்ததாக அமைந்த
நூல் ‘அழகர் கிள்ளை விடு தூது’ ஆகும்.
இதன் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

கிளியிடம் “நீ திருமால் பெயராகிய ‘அரி’ என்ற பெயர் பெற்றிருக்கின்றாய்; திருமால் நிறம் பெற்றாய்;
திருமகள் உன்னைத் தன் கையில் பிடிக்கின்றாள்; உன் சிறகு கண்ணன் குழல் ஊதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின் நிறம்.
இராமன் இராவணனை அழித்த பிறகு வீடணன் இலங்கையில் புதியதாகக் கட்டிய தோரணமோ அது?
நீ பேசும் மொழி கண்ணனின் புல்லாங்குழல் இசையோ? எனப் பறவையில் பெருமானைக் காண்கின்றாள் தலைவி.

பாட்டுடைத் தலைவன் ஆன அழகரின் அவதாரப் பொலிவைப் பேசுகின்றாள்;
இறைவனின் அருளையும் ஆட்கொள்ளும் பண்பையும் சொல்லிச் சொல்லி அரற்றுகிறாள் தலைவி.

பைந்தமிழால் ஆதி மறை நான்கையும் நாலாயிரத்து நற்கவியால் ஓதும்
பதினொருவர் உள்ளத்தான்–(கண்ணி 86-87)(பதினொருவர் ஆழ்வார்கள்

எங்கும் இலாதிருந்தே எங்கும் நிறைந்திருப்போன்
எங்கும் நிறைந்திருந்தே எங்குமிலான் – அங்கறியும்
என்னை எனக்கொளித்தி யான் என்றுங் காணாத
தன்னை எனக்கருளும் தம்பிரான்’–(கண்ணி 86-87)

மேற்காட்டிய சான்றுகள் தலைவியின் காதல் நோயோடு இறைவனின் சிறப்பையும் வெளிப்படுத்துவன.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல வைணவத் தூது நூல்களுள் ஒன்றான அழகர் கிள்ளை விடு
தூது திருமாலின் பெருமை பேசும் சமயக் களஞ்சியம் எனலாம்.

——–

வேளாளர்கள் தம் திருக்கையால் வழங்கும் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறும் நூல் திருக்கைவழக்கம்.
இந்நூல் கம்பநாடரால் 59 கண்ணிகளில் கலிவெண்பாவால் பாடப்பட்டது.

பண் அமைந்த,
வேதம் ஒருநான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை–(42)

பண் அமைத்து ஒதவேண்டிய வட மொழி வேதங்கள் நான்கையும் நாலடிப் பாசுரங்கேளாடுத் தமிழில் பாடிய
கருணை மிகுந்த கை வேளாளர் கை என நம்மாழ்வாரின் சிறப்பையும் அருளிச் செயல்களையும் போற்றுகின்றார்.

———

சித்தர்க்கும் வேதச் சிரந்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந் தோர்கட்கும் தொண்டுசெய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றிப் பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்தொகையே

கவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பன் நம்மாழ்வாரை இப்படிப் புகழ்கிறார்.

அதாவது சித்தர்களுக்கும், வேதம் அறிந்தோர்க்கும், வேத வாழ்வைச் செய்பவர்கட்கும், சுத்தமான நடத்தை உடையோர்கட்கும்,
துறவிகளுக்கும், தொண்டு செய்யும் அடியார்கட்கும், ஞான முனிவர்கட்கும், ஜீவன் முக்தர்களுக்கும் இன்னமுதம் போன்றது
நம் மாறன் சடகோபன் செய்த திருவாய்மொழித் தொகையே என்பது சாரம்.
அதை எழுதும் எனக்கும், ரசிக்கும் உங்களுக்கும் அமுது போன்றதுதான் திருவாய்மொழி–

அவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

———

தாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ
கலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண!
க்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச
ப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா!

தாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே
கலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்!
அங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்!
பக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் “ஆழ்ந்து” போவார்கள்!

பின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்!

————-

“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்!”

————

காய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி,
பின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்! நம்மை அவனுக்கு உடையவராக்கினார்!

குலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்!
இன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்!

இன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால்,
ஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்!
“பின்னாள் ஆசான்” என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்!
* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை!
* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே!

—————————

தமிழ் இனிமை நீர்மை நிகண்டு
ஒண் தமிழ் ஆயிரம் பாடினான் -வண்மை தமிழுக்கும் பாசுரங்களுக்கு ஆழ்வாருக்கும்
ஆயிரம் பதிகம் தோறும் அருளிச் செய்ததால் நாலாயிரமும் கிடைக்கப் பெற்றோமே –

சிலைக்கோல நெற்றித் திரு மாது கேள்வர்
இலைக்கு ஒருவராக என்னைப் பாடு என்னைப் பாடு -என்ன
இவர் மங்களா சாசனம் செய்து அருளிய -36 திவ்ய தேசப் பெருமாள்களையும்
இன்றும் திருப்புளி ஆழ்வார் பிரதேசத்தில் சேவிக்கிறோமே

நம்பெருமாள் இவர் சென்னியில்
பூதத்தாழ்வார் சிரஸ்ஸூ
பொய்கை பேயாழ்வார் -கண்கள்
பெரியாழ்வார் -முகம்
திரு மழிசை ஆழ்வார் கழுத்து
குலசேகரர் -திருப்பாண் ஆழ்வார் -கைகள்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -மார்பு
திருமங்கை மன்னன் -நாபி கமலம்
திருவடிகள் – மதுர கவி -நாத முநிகள் -ராமானுஜர்

——

மா முனிகள் அபிமானித்த ராஜ மன்னார்குடி ஹார்த்ரா நதி -மஞ்சள் குளித்து லீலா ரசம் –
தீர்ப்பாரை யாம் இனி -4-6-பதிகம்
வண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே –4-7-10–
மாசறு சோதி –5-3-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

மூலவர் பர வாஸூ தேவன் –முன்னை அமரர்முதல்வன்-முதல் ப்ரஹ்ம வித்யை விஷயம்
உத்சவர் -வண் துவராபதி மன்னன்-32 வது ப்ரஹ்ம வித்யை விஷயம்
பேரர் -மணி வண்ணன்

——-

‘மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்’–என மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது-

——–

ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
இங்கே, வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.
11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி.

இந்தக் கோபுரத்தைப் பற்றி கம்பர், “திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்” என
மேருமலை சிகரத்திற்கு இணையாகக் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும்.
ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இந்தக் கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும்
பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்
ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள்.

————–

நெஞ்சுக்கு உபதேசம் -ஆழ்வார்கள் -உசாத்துணை இதுவே

ஆதி -மனஸ்ஸூ உளைச்சல்
வியாதி -விசித்திர ஆதி -வித விதமான மனஸ்ஸூ உளைச்சல்

மனம்– சம்சயம்
புத்தி -நிச்சயம்
அஹங்காரம் -கர்வம் -ஆணவம்
சித்தம் – ஸ்ரவணம் -நினைவு

பஞ்ச வ்ருத்தி பிராணன் போல்
மனஸ் -10 சிதறல் -வேலைகள் –கீதை ப்ரஹ்ம ஸூத்ரம் ப்ருஹதாரண்யம் சொல்லுமே

1-காமம் -விருப்பம்
2-சங்கல்பம் –முடிவு
3-விஸிகித்சா -சந்தேகம்
4–ஸ்ரத்தா –ஈடுபாடு
5–அஸ்ரத்தா -சுணக்கம்
6-த்ருதீ –உறுதி -ஈடுபாடு இன்மை
7-அத்ருதீ -உறுதி இன்மை
8-க்ருஹீ -வெட்கம்
9-தீஹீ -சிந்தனம்
10-பீஹீ -அச்சம்

——

ஸ்ரீ கீதை -2-11-எதைக் கண்டு கவலைப்படக்கூடாதோ -அதைக்கண்டு -பீத ராக -வசம் இல்லாமல் –
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பற்றியே கவலைப்பட வேண்டும் -சோகம் கூடாது
அடுத்து தேவ அஸூர விபாகம் பற்றி அருளிச் செய்ய அடுத்த சோகம்
மூன்றாவது பக்தி ஆரம்ப விரோதிகளை நினைத்து சோகம்
ஸ்ரீ கீதை 18-66-
பொறுத்தார் பூமி ஆள்வார்

———–

ஆ லயம் –அனைத்தும் லயம் அடையும் இடம் -ஆ சேது ஹிமாலயா போல் ஆ -அனைத்துக்கும் –

———

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: