ஸ்ரீ அருளிச் செயல்களில் -இரண்டாம் பத்தில் -கிளி -குயில்–கோழி-வண்டு–எம்பெருமான் குணம் பாடி – இன்னிசைக்கும் பாசுரங்கள் –

வண்டு இசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-3–

சில ராஜ புத்ரர் துடை குத்த விட்டு உறங்குமா போலே
விரோதியான ருஷபங்களைப் போக்கி -ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியோடே
பரம ரசிகன் வர்த்திக்கிற தேசம் ஆகையாலே
அங்குத்தை திர்யக்குகளும் ஸ்ருங்கார ரச பிரதாநமாய் இருக்கும் –
இவை போகத்திலே அந்வயித்து பல அனுபவம் பண்ணி வர்த்தியா நிற்கும் ஆயிற்று –

————

பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-

அப்பூவில் மது பானம் பண்ண நினைத்த வண்டுகள் ஆனவை
அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து புக்கு மது பானத்தை பண்ணிக் களித்து
அச் செருக்குக்கு போக்கு விட்டு ஆளத்தி வைத்து இசை சொல்லா நிற்கும்
அச் சோலை அடைய மது பானம் பண்ணிக் கழித்துப் பாடுகிற வண்டுகளின் உடைய
இசை ஆரவாரமாய் இருக்கும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கொடி பிரஜைகளை ரஷிக்க வேண்டும் என்று இசிக்க
செய்கிறோம் இறே என்று அவன் இசிக்க
உள்ளாடைய தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிற ஆரவாரமாய் இருக்கும் –

ஸ்ரீ அலர் மகளை கொடியாகவும்
ஸ்ரீ எம்பெருமானை முகிலாகவும்
புஷ்பங்களை பிரசாத விசேஷங்கள் ஆகவும்
வண்டுகள் தேவ கணங்கள் ஆகவும் -உரூபகம்

—–

எம்பெருமானை வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை–1-2-10-

வரியை உடைத்தாய் -தர்ச நீயமாய் இருந்துள்ள வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணிக் களித்து த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை உடைத்தாய்
ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று-

———-

அன்பாய் யாயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

பரிமளத்தை வகுத்தாப் போலே இருக்கிற வண்டுகள்
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடுகிறன வாயிற்று –

————

வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-

என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –
சில நாள் அனுபவித்து பின்பு இருந்து வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா

———–

பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

நெருங்கி இருந்துள்ள சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள மாலையை உடையவன்

—–

மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

மருள் இந்தளம் என்கிற பண்ணை வண்டுகள் பாடா நின்ற திருமலையை
வாஸஸ் ஸ்தானமாகக் கொண்டு –

———

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்–2-2-10-

முக்தர் சாம கானம் பண்ணுமா போலே மது பான மத்தமாய் வண்டுகள் பாடா நின்றுள்ள
பரந்த பர்யந்தத்தை உடைத்தான திருமங்கைக்கு ராஜாவான ஆழ்வார் –

———

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண

———

வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

செவ்விப் பூக்களின் மேலே படிந்து பரி மளிதமான வண்டுகள் த்வனியா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைத்தான மா மலையாவது –

———

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

திரண்ட வண்டுகளானவை மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –
நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று
(கான ரூபமான திருவந்தாதிகளே நீராக விளைந்த கரும்பு தானே கண்ணன் )

———-

கமல நன் மலர்த் தேறல் அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

ஷட் பத-ஸ்ரீ த்வயம் – ஏக நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில்
தேனைக் குறைவற உண்டு-ஆசையாலே-
ஆகையாலே நித்யஸூரி பரிஷத் கதனான வாஸூதேவ தருவின் பாத மலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்-

——–

செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள தில்லை-

——

சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-

சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மதுபானத்தாலும் பரிமளத்தாலும் களித்து பாடா நின்றுள்ள –

——–

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

செருக்கராய் இருக்கும் ராஜ புத்ரர்கள் முசிந்த படுக்கையை காற்கடை கொண்டு
செவ்விப் படுக்கையிலே செண்டேறுமா -சென்று ஏறுமா -போலே
கழிய அலர்ந்த பூவில் நின்றும் போய் செவ்விப் பூவிலே
படிந்து காணும் மது பானம் பண்ணுகிறது –
கொடு வர வேண்டா
அறிவிக்கும் அத்தனை இறே இத் தலைக்கு வேண்டுவது –
கிருபை வருகை-அவன் பணியே வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-

——–

பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-

புருஷகார வாசனையால் பெண் வண்டை முதலில்
இதில் ஆண் வண்டை தூது
வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு
சொல்லவற்றுக் காணும் இவை தான் –
(ஆச்சார்யர் பிரபாவம் இது அன்றோ )

———

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !–3-6-8-

அவ் ஊரில் குயில்கள் ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணா நிற்கும் ஆயிற்று
அவ் ஊரில் குயில்கள் ஆனவை மது பானம் பண்ணி களித்து ஆலியா நிற்கும் ஆயிற்று –
இவ் ஊரில் குயில்கள் ஒன்றும் இறே உறாவிக் கிடக்கிறது

——-

எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

பார்த்த பார்த்த இடம் எங்கும் காந்தாரம் என்கிற பண்ணை-அந்தேனை உண்டு
தர்சநீயமான வடிவை உடைத்தாய் -தேன் என்று பேரை உடைத்தான
வண்டுகள் ஆனவை மதுபானம் பண்ணி இசை சொல்ல –
மாடே களி வண்டு –
அதனுடைய பர்யந்த்தே சம்ச்லேஷத்தால் ஹ்ருஷ்டமாய் களிக்கிற வண்டுகள் ஆனவை –
மிழற்ற –நிரம்பா மென் சொல்லாலே ஆலத்தி வைக்க

——–

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

இவற்றிலே புக்கு மது பானம் பண்ணி உள்ளு புகுந்த த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
வண்டுகள் ஆனவை பல இசைகளையும் பாட அவற்றைக் கேட்டு மயில்கள் ஆடா நின்றுள்ள திரு நாங்கூர்-

———

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

வரியை உடைத்தான வண்டானது முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
தேதென என்று இசை பாடா நின்றுள்ள திருத் தேவனார் தொகை
தென்ன தென்ன என்று இங்கனே சொல்லக் கடவது
ஆளத்தி வைக்கையைச் சொன்னபடி

———-

கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-3-

மேகங்களின் உடைய மிக கோஷமான அதுவே வாத்தியமாக
ஸ்ரமஹரமாய் பரந்து இருந்து உள்ள பொழிலின் நடுவே மயிலின் உடைய சங்கமானது ஆட
அங்கே மது பானம் பண்ணுகிற வண்டுகள் ஆனவை
இவற்றின் இடைய காலுக்கு ஈடாக இசை பாடா நின்றுள்ள திவ்ய தேசம்

——-

நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

நெல்லின் மேல் தொடுத்த பூக்களை உடைத்தான குவளையானது நிறைந்த சூழலிலே
அழகிய சிறகை உடைத்தான வண்டின் உடைய ஒலியும்
விலஷணமான கண்ணை உடையரான ஸ்திரீகள் உடைய சிற்றடிமேல் சிலம்பு ஒலியும்
இரண்டும் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாத நிரம்பா மென் சொற்கள் ஆகையாலே
சிலம்பு ஒலிக்கும் வண்டின் உடைய ஒலிக்கும் வாசி தெரிக்கப் போகிறது இல்லை-

——–

பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-

நிரை நிரையான பூக்களை உடைத்தான செருந்தி அரும்பின முத்தை உடைத்தான புன்னை
இவற்றில் உண்டான -பொதும்புகளிலே -த்வாரங்களிலே –
தர்ச நீயமான வடிவை உடைய வண்டுகள் நெருங்கிக் கொண்டு
மது வனத்தில் புக்க முதலிகள் போலே (மது வனத்தால் ராமன் முதுகு பிழைத்ததே )
பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே
ஆலத்தி வையா நிற்கும் ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –

——-

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

பரிமளத்தை உடைத்தான மலரின் மேலே
சுரும்பு -என்று வண்டிலே ஒரு அவாந்தர ஜாதி-அவை ஆரவாரத்தைப் பண்ண
அழகு மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆட
வரியையும் சிறகையும் உடைத்தான வண்டுகள் ஆனவை
அவற்றின் காலுக்கு ஈடாகப் பாடா நிற்கும் ஆயத்து –

——-

மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

மாறாத முது நீரில்–தாமரைப் பூவின் மேலே–வரியை உடைத்தான வண்டு
மது பான மத்தமாய்க் கொண்டு இசை பாட –

——–

நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-

நறுவியதாய்-குளிர்ந்து-இனிதாய் இருந்துள்ள தேனைப் பானம் பண்ணின வண்டுகள்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
கால நியதி பாராதே-எப்போதும் ஒக்க குறிஞ்சி என்கிற பண்ணைப் பாடா நிற்கும் ஆய்த்து –

——

மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

ஒப்பிலாத புகரை உடைய வாய் மரகதம் போலே இருந்துள்ள
பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –
ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி வண்டுகள் ஆனவை
இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

———-

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

மாறாத பூக்களை உடைத்தான தாழை தேமா என்கிற இவற்றாலே
நெருங்கின சோலையின் உள்ளே சுரும்புகள் ஆனவை
மதுபானம் பண்ணி–உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாமையாலே
தென்ன தென்ன -என்று ஆளத்தி வைக்க
வண்டுகள் ஆனவை அதில் முறுகின பாட்டை -பரி பக்குவமான பாட்டை பாடா நிற்கும் ஆய்த்து –

——–

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

ஆகாச அவகாசம் வெளி யடையும் படி வளர்ந்த அசோகம் ஆனது சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே -அவ்யக்தமான பேச்சாலே -படு கொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -(படப்பை –கொடித் தோட்டம் )

——–

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

ஜலத்தில் உண்டான ரஸ்யதையாலே வண்டுகள் ஆனவை மொய்த்துக் கிடக்கும் யாய்த்து –
வண்டுகள் ஆனவை மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகைக்கு ஈடான
மது ஒழுகா நின்றுள்ள புனல் ஆனது வந்திழி காவிரியாலும்
அண்ட அவகாசம் அடைய காந்தியா நின்றுள்ள பொழிலாலும்
சூழப் பட்டு தர்ச நீயமான தென்னரங்கமே

—–

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள்
தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை
அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம் –

——-

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரப்பு மாறப் பூத்த பொழில்களின் மேலே நாநா வர்ணமான மயில்கள் ஆனவை ஆலியா நிற்கும் –
செவ்வித் தாமரைப் பூவிலே மது பான அர்த்தமாக இழிந்த வண்டுகள் ஆனவை
அவற்றின் உடைய காலுக்கு இசையப் பாடா நிற்கும் –

——

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-

சிஷா பலத்தாலே மது பாநமத்தமாய் பாடும் போது பண்ணிலே ஆளத்தி வையா நின்றுள்ள
வண்டுகளை உடைத்தான மயிர் முடியை உடைய –

——-

பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

பண் பேராத படி வண்டுகள் த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை உடைய
தண் சேறை அம்மான் தன்னை –

——

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் மதுபான மத்தமாய்த் த்வநிக்க –
கமுகுகள் திரண்ட சோலைகள் தோறும் குயில்கள் ஆனவை முக்தர் சாமகானம் பண்ணுமா போலே கூவ –
அதினுடைய பாட்டுக்கு ஈடாக மயில்கள் ஆலிக்க –

——-

களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

——

தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-7-

மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள
ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –

—–

துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-9-

நெருங்கின மாதவியும் சுர புன்னை பொழிலும் சுற்றிலே ஓங்கின செண்பங்களையும் உடைத்தாய் –
அவற்றிலே படிந்த வண்டுகள் ஆனவை முரன்று இசை பாடா நின்றுள்ள
திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
(செண்பகங்களில் வண்டுகள் படிந்தால் உயிர் இழக்கும் என்பர் கவிகள்
இங்கு தேனைக் குடித்து தென்னா தென்னா என்கிறது
திவ்ய தேசத்தில் பிரதிகூலர் இல்லையே
வானரங்கள் பூஞ்சுனை புக்கு -திவ்ய தேசம் முயலை இருக்காதே -போல் இங்கும் )

———

உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

சோலை மேல் உயர இருக்கும் யாயிற்று வண்டினங்கள்
தேவர்கள் சம்சார வெக்காயம் தட்டாமல் இருக்குமா போலே
மதுபான மத்தமாய்க் கொண்டு செருக்கி வருகிற வண்டினங்கள் ஆனவை
அதுக்கு போக்கு வீடாக அங்கே இருந்து இசை பாடா நிற்கும் ஆயிற்று –
இசை கேட்டால் பொறுக்கும் படியான தேசத்து ஏறப் போவோம் -என்றபடி –

—–

என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

இரவு பகல் என்று வாசி அன்றிக்கே என்றும் ஒக்க மது பானத்தை பண்ணி வந்த பௌஷ்கல்யம்
வடிவிலே தோற்ற இருக்கிற வண்டானது
உள்ளு புக்க த்ரவ்யம் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே இசை பாட –
அது தனக்கு என்னத் தேடித் போக வேண்டாதே இருந்த இடத்தே வந்து கந்தியா நிற்கும் ஆயிற்று –
(இங்கு உள்ளாருக்கு பரகத ஸ்வீ காரமே நிஷ்டை )

———–

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

பகவத் விஷயத்தில் உபகாரகராய் இருப்பாரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவதாய் இறே இருப்பது –

—————–

கூவாய் பூங்குயிலே
குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

தர்ச நீயமான உன் படியைக் காட்டி கண்ணுக்கு இரை இட்டாப் போலே
செவிக்கும் இரை இடப் பாராய் –

——-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

என்றும் ஒக்க பர ஹிதமே பண்ணிப் போருகை உனக்கு சத்தா பிரயுக்தம் அன்றோ –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்னுமா போலே இருக்கிறது –

——-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

உன் வடிவைக் காட்டி ரஷித்தால் போலே உன்னுடைய பேச்சாலும் ரஷிக்கப் பாராய் –

—–

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14–

திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே
என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –
ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு-
சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –
இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரை பெற்றது என்கிறாள் –
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் –
ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்
அத்தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்
வருக வென்று
முன்கை முப்பத்தின் காதமாய் இருக்கிறபடி
மடக்கிளியை
லஜ்ஜா விஷ்டமான கிளி -என்னுதல்-
பவ்யமான கிளி என்னுதல்-

வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று –
தன்னோட்டை சம்பந்தத்தை ஔ பாதிகம் ஆக்குவதே –என்றும்
சேஷ பூதரான நாம் ஸ்வரூப ப்ராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
உபகாரம் கொண்டால் போலே சொல்லுவதே -என்றும்
லஜ்ஜாவிஷ்டமாய் இருந்தது –
சேஷ பூதன் ஸ்வரூப பிராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
தர்மதம் பரிரஷித -என்றான் இறே –
சேஷி பவ்யதையான போது இவள் கொண்டாடப் புக்க வாறே தன்னுடைய சேஷத்வம் தோற்ற
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது

கை கூப்பி வணங்கினாளே –
அந்த உபகார ச்ம்ர்தியானது அவ்வளவில் பர்யவசியாமையாலே அஞ்சலியைப் பண்ணினாள் –
லஜ்ஜை தன்னையும் கை விட்டது
அதுக்கு ஹேது என் என்னில் –
வாத்சல்யத்தாலே செய்ததுக்கு வழக்கு பேசக் கடவோமோ என்னும் நினைவாலே
வணங்கினாளே-
அஞ்சலி சாத்மித்தது இறே என்னா -காலிலே விழுந்தாள்-
உடையவர் முதலிகளும் தாமுமாக நீராட எழுந்து அருளுகிற போதை
சமூஹத்தைக் கண்ட ப்ரீதியாலே பெரிய நம்பி தெண்டன் இட
விநயம் பாவிப்போம் ஆகில் தெண்டனை ச்வீகரித்தோம் ஆவுதோம் என்று பேசாதே எழுந்து அருளினார் இறே –

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: