ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –
ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி
1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்
2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து
3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்
4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்
7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்
ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–
———
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-
————–
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-
——–
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-
——–
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-
——–
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
———–
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
———–
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
——–
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
———
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-
——–
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
——–
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
—–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -97-பாசுரம்–
அவதாரிகை –
இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————————–
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-
———————————————————–
வியாக்யானம்–
செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –
தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –
கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –
கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –
நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply