ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே
1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே
3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-
4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே
6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–
7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –
9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே
ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-
———–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
———–
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-
———
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-
————
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
——–
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-
———–
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-
——–
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-
———
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
———-
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-
———
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-
——
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
—–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -95-பாசுரம்–
அவதாரிகை –
இதில்
பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும்
விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு
தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி
கொடு போக வேணும் என்று
தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும்
தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அருளால் அடியில் -தொடங்கி -என்கை –
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் – —————96-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –
வியாக்யானம்–
அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும்
அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே
இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-
இரு விசும்பில் –
பெரிய வானிலே
இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக-
இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும்
ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-
அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி
இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய்
நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –
விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply