ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்
பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை
——–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி
1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே
2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–
4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே
5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்
6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே
7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே
8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே
தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே
அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
——–
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
—————–
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
————
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
———–
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-
———
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-
———
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-
———
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-
——–
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-
——-
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-
———-
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-
——-
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-
——-
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -95-பாசுரம்–
அவதாரிகை –
இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————————
கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-
————————————————————-
வியாக்யானம்–
கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே
காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –
திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –
மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –
ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்
ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்
தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-
கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply