ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-1–தாள தாமரைத் தட மணி வயல்—சாரங்கள்—

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்யே அந்திம சதகம் முனி ஸூ யாத்ராம் நிச்சிதய
சகாயம், அபேக்ஷமான ஆப்தம் ஹிதஞ்ஞாம்
அஹித சிதம் அம்புஜாக்ஷம்
மோகூர் அதிசம் முராரி ஆஸ்ரய சஹா –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

தைத்யா நாம் நாசகத்வாத்- வித்திருத்த துளசிதாயா மவ்லி
ஜையித்வாத் சார்பாதீஸே சயதவாத நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி
உல்லாச பாவாத்யாத் லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்
தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத் ஆகாரதை சத் கதி ஜலத தனு ருசி

1–தைத்யா நாம் நாசகத்வாத்–திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்

2–வித்திருத்த துளசிதாயா மவ்லி–ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்

3-ஜையித்வாத்–நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான்

4–சார்பாதீஸே சயதவாத–சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்

5–நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி–நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்

6–உல்லாச பாவாத்யாத்–கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்

7–லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்–சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-

8–தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத்–திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே

9–ஆகாரதை சத் கதி–திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–

10–ஜலத தனு ருசி–காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-

——-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

————-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

————

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-

——–

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

———-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

———-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

————-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-

——–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

————

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

———-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

———

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -91-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

————————————————————-

வியாக்யானம்–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –

காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –

அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய

மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: