ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
பிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய
அந்நிய உபதேசம் ஹர்ஷத் ஈசன் யதா சாதனம்
ஆஸ்ரயத இதி மஹதி கிருஷ்ண புரி
வசந்தம் ஈசன் தசமே முனிந்தரே –
————
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது ஸ்வ கீய அண்ட ஷாண்டாதி பத்யாத்
நீளே வல்லபத்யாத் அம்ருத விதரணாத் பக்த ஸூஸ் முக்த பாவாத்
தாஸானாம் சத்ய பாவாத் அதி ஸூலபதய ஜகத் காரணத்வாத்
ஸ்ரீ மான் வேலா பிரதீஷா பவ பய ஹரனே
1–ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது–மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர்
2–ஸ்வ கீய-திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே
3–அண்ட ஷாண்டாதி பத்யாத்–திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–
4–நீளே வல்லபத்யாத்–மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
5–அம்ருத விதரணாத்—சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–
6–பக்த ஸூஸ் முக்த பாவாத் –திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே
7–தாஸானாம் சத்ய பாவாத்–மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
8–அதி ஸூலபதயா–அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
9–ஜகத் காரணத்வாத் –திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
10-ஸ்ரீ மான்–இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
வேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –
———
இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் ஸீல சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ் அநேகக ப்ரதீஷம் சுமித்ரம் –
சர்வ பந்து
கிருபாவான்
குண சாகரம்
ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி
1–சர்வைக பந்தும்–கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
2-சிர க்ருதக்ருநாம்–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
3–ஸீல சிந்தும்-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
4–பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
5–ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம்–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
6–ப்ராஹ நாதம் விஸ்ம்ருத சாப்ய சக்யம்—உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
7–கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம்–எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
8–லஷ்ம்யாய ஸஹாயன்–அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
9-ஸ்வ சித்தி உன்முகாஸ்–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
10–அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-
நிருபாதிக ஸூ ஹ்ருத்
நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம்
———
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
———
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-
———
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-
———
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-
———
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
——–
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-
———
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-
———
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-
——–
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-
———-
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-
———
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -90-பாசுரம்–
அவதாரிகை –
இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————–
மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-
————————————————
வியாக்யானம்–
மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —
இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –
மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –
மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –
சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –
மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-
ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –
நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –
ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply