Archive for June, 2021

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -51-60–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )

சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-

பதவுரை

மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம் மேய தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற் குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.

மனமாளும் ஓர் ஐவர்
பள்ளிகள் கலஹம் போலே –
ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்
மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே
மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை

வன் குறும்பர்
மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை
இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே

ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து –
கர்ம பலமான க்ரோதத்தை முடித்து
காமாத் க்ரோதோபி ஜாயதே (2-62 )
(காமம் க்ரோதம் இரண்டும் ரஜோ குண பிள்ளைகள் –
நிறைவேறாத காமம் க்ரோதத்தில் கொண்டு போய் விடுமே )
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் எல்லாம் இந்திரியங்களுக்கு இரை போராது இறே
எல்லா இந்திரியங்களும் அனுபவிக்கப் புக்கால் அனுபாவ்ய அம்சம் பெருத்து இருப்பது பகவத் விஷயம் இறே

இன்னம் கெடுப்பாயோ –திருவாய் -6-9-8-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -திருவாய் –6-9-9- என்றும்
சிற்று இன்பம்–திருவாய் –6-9-9-என்றும் இறே இதர விஷயங்கள்
எல்லா இந்திரியங்களும் புஜித்தாலும் போக்யதை அளவிறந்து இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது

சினம் ஆள்வித்து -சினத்தை முடித்து –
அத்தால் வந்த க்ரோதத்தைப் போக்க என்றபடி
புனமேய தண் துழாயான் அடி -என்று

வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து
ஓர் இடத்தே சேர்த்துப்
புனமேய தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
என்று அந்வயம்

ஆத்ம குண உபேதர்க்கு –வண்மை -துழாவின -சீரை யுடையவர்களுக்கு அழகாவது
இந்திரியங்களை ஜெயித்து (சினமாள்வித்து )
அவ்விந்திரியங்கள் எல்லாவற்றையும் பகவத் விஷயத்திலே சேர்த்து (ஓர் இடத்தே சேர்த்து)
செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையனாய் இருந்துள்ள ஸர்வேஸ்வரன்
திரு வடிகளைக் காண்கை அன்றோ முறை
அந்தோ வலிதே கொல் (50)-என்று வெறுக்கக் கடவதோ

வண் துழாம் சீர் என்கையாலே
சேஷி செய்தபடி கண்டிருக்கை ஒழிய வெறுக்கக் கூடாது என்கிறது

மாண்பு -அழகு -முறை என்றாய் பிராப்தம் என்றபடி –

————

(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத்தவிர வாழ்த்தாது போல் இங்கும் )

பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –

மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பதவுரை

அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமந வேஷத்தை
பாவித்து–பாவனை செய்து கொண்டு-ஏறிட்டுக் கொண்டு என்றபடி
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவள்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது கண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய் தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக் குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான்
மஹா பலி நான் தருவேனானால் இன்னும் அகல இரக்க மாட்டாயோ என்ன
இரந்ததுக்கு மேலே வேண்டா -என்று இருக்கிற
பால்யம் பாவித்து
அத்தைப் பொய் -என்கிறது அன்று –
அத்தையும் மெய்யாக்குகை

மாயவள் நஞ்சு ஊண் பாவித்துண்டானதோ ருருவம்
தாய் வேஷத்தைக் கொண்டு இவனுக்கு முலை கொடா விடில் தரியேன் -என்று
அவள் முலை கொடுத்தால் போலே
இவனும் உண்ணா விடில் தரியேன் என்று தாரமாகவே யுண்டான்
பேய் முலை நஞ்சு ஊணாக யுண்டான் -முதல் திரு -11-என்னும்படியே

காண்பான் நம் கண் அவா
கண்ணுக்கு அவா ஊண் பாவித்து உண்டானதோர் உருவம் காண்பான்

மற்று ஓன்று காணுறா
அது ஒன்றும் காண்கை செய் -என்று காண்கை
நாணி வேறே ஓன்று காணாமையே முடியும்
நயன இந்த்ரியத்துக்குகே யன்று
இந்த அர்த்தம் வாக் இந்த்ரியத்துக்கும் ஒக்கும்

சீர் பரவாது உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –

——————

(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )

என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

பதவுரை

செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செய்வன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக் குணங்களிலேயே ஊன்றி யிருக்கப் பெற்ற
தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது
ஆரேனுமாகத் தெளிந்தார் கலங்கினார்க்குச் சொல்லக் கடவது இறே

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
நிரபேஷர்க்கு–என் செய்வன் -என்று இருக்கிற தர்மம் தான் எப்போதும் ஒருபடிப் பட்டு இருக்கும்
தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாபசர்பதே –
பாண்டவர்கள் முடி சூடின அன்றும்
திரௌபதி குழல் முடித்த பின்பும்
பார்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க அவர்களை ரக்ஷகர் என்று நினையாதே
தன் பேர் சொன்னவளுக்குத் திரு உள்ளத்திலே தனிசு -ருணம் – பட்டு இருக்குமா போலே
அந்த ஆனு கூல்யமுடையார்க்கு என்றும் என் செய்வேன் என்று இருத்தி –

நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்
உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்
ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்

(குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம்
பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் )

—————-

உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பதவுரை

ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளா மரத்தின்) மேலே வீசி யெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளா மரத்தின்) காய்களை உதிர்த்த கண்ண பிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆஸ்ரயித்தோம் (அதன் பிறகு)
(கன்று குணிலா எறிந்த கழல் போற்றி )
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப் பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலை யெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்ன விடத்தில் மறைந்து போயின வென்று தெரிய வில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ
ஆகாஸ கமனம் பண்ணிற்றோ
மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ

ஒருங்கிற்றும்
இவற்றில் எங்கே சேர்ந்தது

மருங்கும் கண்டிலமால் –
(கீழ் உள்ள உம்மைத் தொகை இங்கும் சேர்த்து )
சமீபத்திலே காணாது ஒழிகையால்
ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே
மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும்
என் அருகில் காணோம் என்றபடி –

ஆ ஈன்ற கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரை ஆ ஆ மருங்கு
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்
நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்
இவர் எங்கே புக்கு முடித்தார்
ஐயோ ஐயோ என்கிறார் –

—————-

(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

பதவுரை

வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வ ப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப் பெருமானை
உள்ளால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

வரவு மனக் கவலை தீர்ப்பார்
அருகே கடலில் திரைத் திவலை துடை குத்தத் திருவனந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவர்
அருகே செல்ல அரியரேலும் நமக்கு ஒருபடிப்பட ஹ்ருதயத்திலே எப்போதும் உளர்

வரவு
மனக் கவலை தீர்ப்பார்
மருங்கோத மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும்
நமக்கு
ஒருங்கே
உள்ளால்
அவரை எப்பொழுதும் காணலாம்
என்று அந்வயம்

மனஸ்ஸிலே ஒருபடிப்பட எப்போதும் காணலாம் என்றபடி

(பிரஜாபதி தும் வேத –இத்யாதி –நாம் அறிந்து பற்ற அடைந்தாலும் அடையலாம் அடையாமலும் போகலாம்
யார் ஒருவனை அவன் வரிக்கிறானோ அவன் நிச்சயமாக அடைகிறான் )

————–

(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )

எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

பதவுரை

ஒருவன்–எந்த சேதனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
(தூதன் சாரதி மாணிக்குறள் போல் உரு மாறினவன் அவன் தானே )
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்

வரவால் என் மனக் கவலை தீர்ப்பார் -வரவாறு ஓன்று இல்லையால்
அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்

வாழ்வு இனிதால்
பலம் அதிகமாய் இருக்கும்

எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும் ஆயவர் தாம்
நமக்கு அடி யில்லை -என்று ஆராய வேண்டாதபடி
ஒரு வழியில் ஒருவனைப் புகாதபடி
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்
எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை
போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து
எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்

சேயவர் தாம்
அர்ஜுனனுக்குக் கையாளாய் இருக்கச் செய்தேயும்
துர்யோத நாதிகளை அம்புக்கு இரையாக்கி அவர்களுக்குத் தூரியராய் இருக்குமவர்

அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்

இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்

—————–

வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

பதவுரை

நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக் கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும் படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய செல்வச் செருக்கு ) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல் வினையை–இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கி யருள மாட்டானோ? (போக்கியே விடுவன்.)

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ
வந்தேறிகளான அவித்யாதிகளையும்
ப்ராப்ய ஆபாசங்களையும் போக்கானோ
ஹிரண்யனைப் போக்கினவனுக்கு இது ஒரு பொருளோ

நெஞ்சே தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து
முரட்டு ஹிரண்யனை ஸ்பர்சித்துப் பள்ளம் எல்லாம் ருதிர வெள்ளம் சுழிக்கும் படி

எங்கும் தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால்
பெரு நீரில் மும்மை பெரிது (பெரிய திருமொழி -11-4-4) -என்னும்படி
ருதிரம் வெள்ளம் இட அவன் ஐஸ்வர்யம் ஒடுங்க மார்விடந்த ஸர்வேஸ்வரன்
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே

போர் அவுணன் -யுத்த உன் முகன்
தாழ்விடம் -தாழ்ந்த இடமாய் பள்ளம் என்றபடி
புலால் வெள்ளம் -ரக்த வெள்ளம் –

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4-

———–

இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பதவுரை

மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால் போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால் போலப் பரம போக்யாமன திருக் கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
கல்யாண குணங்கள் -இது தானே ஆழ்ந்து அனுபவிக்க முடியும் -பால் போல் ருசிக்கும்
தேஜஸ் சேவிக்க திருமேனி
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடு பெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடி வாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்வை
சோதியை யுடைய படி -திவ்ய மங்கள விக்ரஹம்
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நித்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ண வேணுமென்று அடியேன் ஆசைப்பட வில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.

மாலே படிச் சோதி
ஸர்வேஸ்வரத்வத்தையும்
ஸ்வா பாவிகமான விக்ரஹத்தையும் சொல்லுகிறது

ஆசா லேசமுடையார் பக்கல் வ்யாமோஹத்தையும்
த்வேஷம் பண்ணினாலும்
விடப் போகாத படியையும் சொல்லுகிறது என்றுமாம்
(யதிவா ராவண ஸ்வயம் என்றவர் தானே )

ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் சொன்னதாகவும்
ஸ்வரூபம் ரூபம் இரண்டையும் சொன்னவாறு

படிச் சோதி –
ஸ்வா பாவிகமான விக்ரஹம் -என்னுதல்
விக்ரஹத்தினுடைய காந்தி என்னுதல்

மாற்றேல் இனி
வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்
(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )

இறையிலி ஏது என்னில்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
இவ்விறையிலியை மாற்றாதே கொள்

மேலால் பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு
ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது

(பாவியேன் என்று சொல் பாவியேன் காண வந்தே -சமத்காரமாக அருளியது போல்
சேவித்த மாத்திரத்திலே தொலையுமே
நித்தியமான அனுபவம் கொடு என்றாலே நித்ய விபூதியில் தானே நடக்கும் )

ஸாவித்ரியினுடைய பார்த்தாவை மிருத்யு கொடு போக என் பர்த்தாவைத் தர வேணும் -என்று அவனை அபேக்ஷிக்க
இது ஒன்றும் ஒழிய வேறே சில வேண்டிக் கொள் என்ன
இவன் வயிற்றிலே எனக்கு ஒரு பிரஜை யுண்டாக வேணும் -என்று வேண்டிக் கொண்டால் போலே –

இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்
ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்
ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

——————-

(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே -தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

பதவுரை

பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடே போய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
மா கடல் நீருள்ளான் -என்றும் ஷீராப்தி நாதன் என்றும்
பேராளன்–எம்பெருமானுடைய-ஆஸ்ரித பக்ஷபாதத்துக்கு எல்லை இல்லாதவன் –
பேர்–திரு நாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல் வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மை விட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப் பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப் பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

கடலில் திரைகள் முறிந்து வந்து சிறு திவலை யாய்த் துடை குத்தக் கண் வளரா நின்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை இன்றிக்கே இருக்கிறவருடைய
திரு நாமம் சொல்ல நினைத்தது அறிந்தால்
வல் வினையார் இங்கு நின்றும் போந்து தமக்குப் புகலாக
மலையாகிலும் கடலாகிலும் ஏதேனும் ஓன்று கைக் கொள்ளுகிறிலர்
கைக்கொள்ளாது ஒழிகிறது என்னருகே வரலாம் என்றே

ஊடே போய் –
உள்ளே போய் -திருமேனி அண்டையிலே போய் என்றபடி

ஊடே போய் பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து
வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்
மாடே வரப் பெறுவாராம் என்றே
என்று அந்வயம் –

—————

(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின் நிற்பாய்–போக்யமான திருத் துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லை கிடாய்.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
வேறே ஒரு பதார்த்தத்தை நோக்காதே
அவனை அநு வர்த்திக்கிலும் அநு வர்த்தி
உனக்கு உரியையாய் அநர்த்தப் படிலும் படு
ஸ்வா தந்தர்ய அபிமானத்துடன்-விஷயாந்தர படு குழியில் விழுந்தாலும் விழு

ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும் தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை
ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை
அவனை அநு வர்த்தி
ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –

என்னெஞ்சே
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
எங்கும்
பேர்ந்து
மற்றோர் இறை
இல்லை காண்
ஆன பின்பு
பேர்ந்து ஓன்று நோக்காது
ஈன் துழாய் மாயனையே
பின்னிற்பாய்
நில்லாப்பாய்
என்று அந்வயம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -41-50–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –

(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
பரம சுகுமாரமான திருக்கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் –
என்று மூன்று நிர்வாகங்கள்)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

பதவுரை

வலியம் என நினைந்து–நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு
வலிய முடி–வலிதான தலைகள்
இடிய–சிதறி யொழியும்படி
வாங்கி–போக்கடித்து
நின்–உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால்–வலிதாயும் அழகிய திருவாழியை யுடையதாயுமுள்ள திருக் கையாலே
புடைத்திடுதி–(அந்த மல்லர்களை) அடித்து விட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர்–எதிரிட்டு வந்த -சாணூர முஷ்டிகர் -மல்லர்களுடைய
(நீ கை நோவக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
இப் பார்–இவ் வுலகமானது
கீளாதே–-கேசி பகாசூரர்களை போல் -வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும்–சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி யிடிய வாங்கி –
வெல்வோம் என்று நினைத்து வந்து எதிர்த்த மல்லருடைய
திண்ணியதான முடியை வாங்கி

முடியிடிய-
முடி யிடியும்படி -புடைத்திடுதி

வலிய நின் பொன்னாழிக் கையால் புடைதிடுதி
மிடுக்கை யுடைத்தான திருவாழியைப் பிடித்த கையாலே
கேசியைப் போலே வாயைக் கிழியாதே
மல்லுக்கு ஈடாகப் புடைத்திடுதி

பல் நாளும் நிற்குமிப்பார்
தனியே முறட்டு மல்லரை வென்ற வெற்றிக்கு என்றும் ஸாக்ஷி பூமி இறே
அம் மல்லரை ஜெயித்த ஜெயத்தாலே இறே பூமி நிலை நின்றது என்றுமாம்

கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு முரட்டு மல்லரோடே பொருகிற படி கண்டால்
இப் பூமியில் சேதனர் முடிய வேண்டாவோ
அது கண்டு ஸஹித்து இருந்த இவர்களுக்கு நூறே பிராயம்
ந சமம் யுத்த மித்யாஹு என்ற மாத்ரமும் சொல்லாத இவர்களுக்கு
ஒரு நாளும் அழிவு இல்லை என்றுமாம்

(யுத்த காண்ட ஸ்லோகம்
ராக்ஷஸன் ராவணன் தேரில் இருந்து -மாயா யுத்தம் -அதர்ம யுத்தம்
ராமனோ மனுஷ்யன் பூமியில் இருந்து தர்ம யுத்தம்
என்று மேலைத்தேவர் கந்தர்வர்கள் சொன்னார்களே )

இப் பார் –
பாரில் உள்ளார்

நிற்கும் –
சாக்ஷியாக நிற்கும் என்னுதல்
சத்தை நிற்கும் என்னுதல்
ஈடுபட்டு அழியாதே நிற்கும் என்னுதல்

——–

ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –

(கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ
இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே
முன் படைத்தான் -பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மஹா பிரளயம் -அவாந்தர பிரளயம் இல்லை )

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பதவுரை

(ஸ்ரீமந் நாராயணனே)

பார் உண்டான்–(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்;
பார் இடந்தான்–(மஹா வராஹமாகிப்) பூமியை ஒட்டு விடுவித் தெடுத்தான்;
பார் அளந்தான்–(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன்–முதல் முதலாக
பார் இடம் படைத்தான்–இப் பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர்–என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான்–(பிறகு) அதைப் புறப்பட விட்டான்;
பார் இடம் ஆவானும் தான்–அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வருபியாகவுமிருக்கிறான்;
ஆனால்–ஆன பின்பு (நமக்கு)
இடம் ஆர்–ஆஸ்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை–இவ் வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு–ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா–சேஷப் பட்டிருக்க மாட்டா.
ஆவான் புகவாலவை-அவை -ஆவான் -புகா -ஆல்
ஆல் -அசைச் சொல்

பாருண்டான்
பிரளயம் வருகிறது என்று தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும்

பாருமிழ்ந்தான்
வெளி நாடு காண உமிழ்ந்தும்

பாரிடந்தான்
அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்

பாரளந்தான்
மஹா பலி அபஹரிக்க எல்லை நடந்தும்

பாரிடம் முன் படைத்தான்
கரண களே பர விதுரமாய்
போக மோக்ஷ ஸூன்யமான இவற்றை ஸ்ருஷ்ட்டித்தும்

என்பரால் –
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று
நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் (பிரமாதாக்கள் )
சொல்லுகையாலே

பாரிடம் ஆவானும் தானானால்
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் -ஆவேனும் யானே என்னும் )

ஆனால் ஆரிடமே
இப்படி யானால் இஜ் ஜகத்துக்கு ஆஸ்ரயம் ஆவாரார்

மற்று ஒருவர்க்கு ஆவான் புகவாலவை
ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்

புநா (புகா)
உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா என்றுமாம் –

அவை -சேதனர் ஆதல்
கீழ்ச் சொன்ன வியாபாரம் ஆதல்

———–

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-

பதவுரை

அவயம் என நினைத்து வந்த–அபயம் வேண்டி வந்து சரணமடைந்த
சுரர் பால்–தேவதைகளிடத்திலுள்ள
நவையை–குற்றங்குறைகளை-காரணமான பாபங்களை என்றுமாம்
நளிர்விப்பான் தன்னை–போக்கடிக்கு மெம்பிரானை
கவை இல் மனத்து–ஒரு படிப்பட்ட மனத்திலே-கவை -சம்சயம் –
உயர வைத்து இருந்து–பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு–மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?– தங்கள் மனத்திலே யுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே நவையை நளிர்விப்பான் தன்னை –
பராவரேசம் சரணம் வ்ரஜஸ் த்வம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும்படி
அபயம் என்று நினைத்து வந்த தேவதைகளை
அந்த துக்கத்தை நடுங்கப் பண்ணிப் போக்குமவன் தன்னை

நவை -என்று
துக்க ஹேதுவான குற்றம் ஆகவுமாம்
(நவை -துக்கமாதல் -பாபமாதல் )

கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
இவ்விஷயங்களைப் பற்றுவோமோ
ஈஸ்வரனைப் பற்றுவோமோ
அயோக்யன் என்று அகலுவோமோ
அகலாது ஒழிவோமோ
என்று இரண்டும் இன்றிக்கே இருக்கிற மனஸ்ஸிலே
இவனை உயர வைத்து
மங்களா ஸாஸனம் பண்ணார்த்தாருக்கும் உண்டோ

(அவனே ப்ராப்யம் பிராபகம்—
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை —
தாரகம் போக்யம் போஷகம்-
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல்
என்று நினைத்து உயர வைத்து )

மனத் துயரை மாய்க்கும் வகை
மனத் துயர் மாய்க்கும் பிரகாரம்

——————

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

பதவுரை

வகை சேர்ந்த நல் நெஞ்சும்–(ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும்–(எம் பெருமானை) நன்றாகக் கிட்டி அநுபவிக்கா விட்டாலும்,
தாம்–சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து–நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும்–(எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை–எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர்–வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே–மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத்
தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
சரீர பரிக்ரஹம் பண்ணின ஆத்மாவுக்கு
ஞானப் பிரசரத்துக்காகச் சேர்ந்த நெஞ்சம்

நாவுடைய வாயும்
ஸர்வேஸ்வரனை ஸ்துதிக்கக் கண்ட வாயும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
குண த்ரய வஸ்யராகையாலே
ரஜஸ் தமஸ்ஸூக்கள் வர்த்தித்த போது
(நெஞ்சும் வாயும் )இவன் பக்கலிலே வந்தன வில்லை யாகிலும்

மிக வாய்ந்து மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார்
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்-(ஸ்ரீ கீதை -14 -ரஜஸ் லோபம் -பிரமாதம் லோகம் தபஸ் )என்று
ஸத்வ கார்யமான ஞானத்தாலே ரஜஸ் தமஸ்ஸூக்களைத் தள்ளி
ஸர்வேஸ்வரனை வாழ்த்தாதே இருப்பர்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்

மேலை –
மேலைக்கு -சம்சாரம் நித்யமாக

வினை –
பாபமாதல் –
பாப பலமாதல்

(இதுவரை பராசர பட்டர் நிர்வாகம்
மேல் அரையர் நிர்வாகம்
சேர்ந்த நெஞ்சும்-ஞான பிரசுரத்துக்காக பட்டர்
குணங்களில் சேர்ந்த நெஞ்சும் -அரையர்
மிக வாய்ந்து -எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து
பாப பலமே வினை அரையர்
மேலை –பண்டு -அரையர் )

ஈஸ்வரனுடைய குணங்களில் சேர்ந்த நெஞ்சும்
குணம் ஒன்றையுமே ஏத்தும் வாயும்
அல்லாத குணங்களிலும் உள் புக்கதில்லை யாகிலும்
எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து ஸர்வேஸ்வரனை ஏத்தாது இருப்பர்கள்
இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்

————-

நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்

(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )

பதவுரை

வினையார்–பாவங்கள்
தர முயலும்–நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி–கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும்–தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது–வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே,
நான்–அடியேன்
வானோர்–நித்ய ஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான்–தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
மநோ காய வாக் கார்யங்கள் –
பொன் அடிகள்–திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேன்–சொற்களாலே துதிக்கின்றேன்.
கீழே வாயில் நா என்றாரே -ஸ்துதிக்கவே கொடுத்த வாய் அன்றோ

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது வாசகத்தால் ஏத்தினேன்
பிரிவாலே பிறக்கும் வெம்மையை அஞ்சி
க்ஷண மாத்ரமும் அவனை ஒழியக் காலம் செல்லப் பாராதே
வாக் இந்த்ரியத்தைக் கொண்டு ஏத்தினேன்
(ஞானி நித்ய யுக்தர் -கூடவே இருக்கும் அபி நிவேசம் கொண்டவர்கள் தானே )

வினையார் –வினை -என்று -பாப கார்யமான விஸ்லேஷம்
தர முயலும் -கொடுக்க உத்யோகிக்கும்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான் பொன்னடிகள் நான்
நித்ய ஸூரிகள் மநோ வாக் காயங்களாலே அடிமை செய்யும் ஸர்வேஸ்வரனுடைய
விலக்ஷணமான திருவடிகளைப் பெற்று
அதைப் பிழைக்க ஒண்ணாது என்று ஏத்தினேன்

(இறைஞ்சி வாயினால் பாடி –
தொழுது -மனதினால் சிந்தித்து தொழுது என்றும் தூ மலர் தூவித் தொழுது -இரண்டும்
பொன் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே )

————

கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –

(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூ ஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே

(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்–ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்.
செம் கண்-செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான
மால்–ஸர்வேச்வரன்
நீங்காத–ஒருநாளும் விட்டுப் பிரியக் கூடாத
மா கதி ஆம்–சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே
சேராமல்–பொருந்தாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம்–உபாயமாகவும் இரா நின்றான்;
நெஞ்சே நினை–நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக் கடவை;
நாள் நாளும்–நாள்தோறும் (உனக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே–சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

நான் கூறும் கூற்றாவது இத்தனையே
ஒரு நாளையோ இப்படிச் சொல்லுவது என்னில்

நாள் நாளும்
என்றும் இத்தனையே

தேங்கோத நீருருவம்
தேங்கின கடல் போலே இருந்த திரு மேனியையும்

செங்கண் மால் –
ஐஸ்வர்ய ஸூசகமான கண்களை யுமுடைய ஸர்வேஸ்வரனை

நீங்காத மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை
மீட்சி இல்லாத ப்ராப்யமாகவும்
ஸம்ஸாரத்திலே சேராத படிக்கு ஈடான ப்ராபகமாகவும்
நெஞ்சே நினை

இத்தால்
ப்ராப்ய ப்ராபகங்களும் அவனே என்னும் இடமும்
ப்ராப்தாவுக்கு பிரதிபத்தி மாத்ரமே என்னும் இடமும்
ப்ரபன்னனுக்கு இரு காலும் -மற்று ஒன்றும்- சொல்ல வேண்டுவது இல்லை என்னும் இடமும் சொல்லுகிறது

நினை என்கையாலே
பிரதிபத்தியும் –
அது தான் (அந்த நினைவும் )ஒரு கால் என்னும் இடமும் தோற்றுகிறது

—————-

நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –

(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

பதவுரை

மாலே–அளவிட்டு அறிய முடியாத ஸர்வேச்வரனே!
மானிடவர்–“இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி–நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று–ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர்–நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும்–என்று கூட
நீ நினைத்திட வேண்டா–நீ நினைக்க வேண்டா;
(இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய
அவற்றுக்காகவும் உன்னருகு வர மாட்டார்கள்; இப்படியான பின்பு.)
நேரே நினைத்து இறைஞ்ச–(இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர்–என்ன அறிவுள்ளவர்கள்?
எவ் இடத்தோர்–அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ?
(இருள் தரு மா ஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு–உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோ வென்றால்
எமக்கே -பத்து ஆழ்வார்களும் -அவரே குல கூடஸ்தராகக் கொண்ட நமக்கும்
அது தானும்–கீழ் சொன்ன மானிடவர்களுக்குமான -ஷூத்ர பலன் வேண்டி நிற்கும் -துர்ப் புத்தி
எவ்வளவும்–சிறிதேனும்,
உண்டோ–உண்டாகக் கூடியதோ?
(உபாயமும் உபேயமும் நீயே யென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ
நம்மை நினைத்து
நம் காலிலே விழுந்து
உம்மைப் போலே நம்மையே பிரயோஜனமாகப் பற்றாதே
ப்ரயோஜனாந்தரத்துக்கும் அடி ஒப்பர் என்று நினைக்க வேண்டா –

நேரே நினைத்து இறைஞ்ச எவ்வளவர் எவ்விடத்தோர்
நீயே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று நினைத்து இறைஞ்ச
எங்கு உள்ளார்க்குப் போம்
எவ்வளவில் உள்ளாருக்குப் போம்

எவ்வளவர்
எவ்வளவில் உள்ளார்
எப்படிப்பட்ட ஞானத்தை யுடையார்
அது தானும் அந்த ப்ரயோஜனத்தைக் கொள்ளுகை –

மாலே
உன்னைச் சிலவராலே பரிச்சேதிக்கப் போமோ

அது தானும் எவ்வளவும் உண்டோ எமக்கு
உன் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரயோஜனாந்தரத்திலே முதலடி இட வேண்டா
உன் கடாக்ஷம் இல்லாதார் இப்படிச் செய்தார் என்று உனக்கு வெறுக்க ஒண்ணுமோ

——————

எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

பதவுரை

அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ–மூங்கில் போல் பருத்து விளங்குகின்ற
மெல்லிய தோள்களை யுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு–கொடிய கொம்புகளை யுடைய ஏழு காளைகளை
உடனே–ஒரு நொடிப் பொழுதில்
கொன்றானையே–முடித்த எம்பெருமானையே
மனத்து கொண்டு–சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம்–அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை–மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரம பதத்தை
எமக்கு அமைத்திருந்தோம்–எமக்கு (ப்ராப்ய பூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆறு–அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
நமக்கு நாம் ப்ரஹ்மாதிகளுடைய -ப்ரஹ்மாதிகளுக்கு -மேலான
பரம பதத்தைப் பாரித்து இருந்தோம்

இது அன்றே செய்யும் வழி
ப்ரஹ்மாதிகளுடைய லோகத்துக்கு மேலாய்
பரம பதத்துக்குப் புறம்பாய் இருக்கும் கைவல்ய மோக்ஷத்தை
உச்சமதாம் -மேலான வீட்டை

அமைத்து இருந்தோம்
வேண்டா என்று இருந்தோம் என்றுமாம்

அமைத்து இருந்தோம் –
அமைவு -சமைவாய் -பாரித்து இருந்தோம் -என்னுதல்
அமைவு -அமையும் என்றாய் -வேண்டா என்னுதல்
பரம பதம் தன்னையும் வேண்டா என்னுதல்
இவ்வர்த்தத்தைத் திருவடியை த்ருஷ்டாந்தம் ஆக்கி அருளிச் செய்கிறார்

அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு
பெருமாள் குணங்களிலே பழகின உடம்பு ஒழிய பரம பதம் வேண்டா என்று இருந்தால் போலே
அசாதாரணையாய் வேய் போலே விளங்கி மிருதுவான தோளை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
வெவ்விய கோட்டை யுடைய எருதுகள் ஏழையும் உடனே செற்றவனையே நெஞ்சிலே கொண்டு
இவ் வனுபவத்தில் காட்டில் பரம பதம் வேண்டா என்று இருந்தோம் என்றுமாம் —

கோடு -கொம்பு –

(அச்சுவை பெறினும் வேண்டேன்
பாவோ நான்யத்ர கச்சதி
நப்பின்னை மணந்த கண்ணனை -உன்னைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா -என்கிறார் )

————————-

அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது

(இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதில் அனுபவம் சொல்கிறது
யுத்த க்ருத்யம் ரஹஸ்யத்ரய சாரத்தில் தேசிகர் )

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

பதவுரை

கொண்டல் தான்–மேகங்களையும்
மால் வரை தான்–பெரிய மலைகளையும்
மா கடல் தான்–பெரிய கருங்கடலையும்
மற்று கார் உருவம் தான்–மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள்–பார்க்குங் காலத்தில்
காண் தோறும்–பார்க்கும் போதெல்லாம்
கூர் இருள் தான்–செறிந்த இருளையும்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருட்டை சேவிப்பாரே கண்ணனை ரக்ஷித்ததால்
வண்டு அறா பூவை தான்–(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு–என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று–இவை கண்ண பிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து–என்னை விட்டு நீங்கி
ஓடும்–அங்கே ஓடும்.

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான் வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
உபமானங்களைக் கண்டால் உபமேயம் என்று நம்மை விட்டு நெஞ்சு ஓடா நின்றது
மேகத்தை – கறுத்த மலையை -கடலை -கூரிய இருளை -வண்டு மாறாத பூவை -என்கிற வ்ருக்ஷத்தைக் கண்ட போது –

காருருவம் காண்டோறும் நெஞ்சோடும்
(மாற்றுக் கார் உருவம் என்று கூட்டி அருளிச் செய்கிறார் )
அனுக்தமான கருத்த பூங்குவளை நீலம் காயா இத்யாதி காணும் தோறும் என்றுமாம்
வடிவு கண்டால் இதுக்கு அவன் அன்று காண் -என்று கேட்டு அறிந்தாலும்
பின்னையும் கண்ட போது எல்லாம்

(ஸ்மாரக -ஸத்ருச பதார்த்தங்கள் -நினைவூட்டும்
இது அவன் அல்ல -மலை இத்யாதி அவன் இல்லை
இதுக்கு அவன் அல்ல -நெஞ்சுக்கு சொன்னதாக )

கண்ணனார் பேருருவம் என்று எம்மைப் பிரிந்து
இதன் நெடு வாசி அறிகிறதில்லை
பேர் உருவம் என்று ஓடா நின்றது

(இவை சிற்று உருவம்-அவன் பேர் உருவம் என்று அறியாமல்
வர்த்தமானத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் )

—————-

உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்

அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே

(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-

பதவுரை

பிரிந்து–தம்மை விட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது–வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே–தம்மோடு கூடவே
திரிந்து உழலும்–அலைந்து கொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை–என் நெஞ்சினாரை
ஒரு கால்–ஒரு காலாகிலும்
புரிந்து–அன்பு கூர்ந்து
ஆ ஆ என இரங்கார்–ஐயோ வென்று அருள் புரிகின்றலர் (பகவான்);
அந்தோ–கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம்–கேசி யென்னும் குதிரையின் வாயைக் கீண்டொழித்த அப் பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல்–கடினமோ;

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்து உழலும்
வேறு ஒன்றை அநுஸந்தியாதே தம்மையே பற்றித் திரிகிற

சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால் ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
தம்மை ஒழிய வேறே ஒருத்தர் இல்லை என்று புரிந்து பார்த்து
ஐயோ என்று இரங்கு கிறிலர்

மாவாய் பிளந்தார் மனம்
ஆஸ்ரிதருக்காக விரோதி நிரஸனம் பண்ணிப் போந்தவருடைய மனஸ்ஸூ
இப்போது திண்ணிதான படி என்
மாவாய் பிளந்தாருடைய மனம் அந்தோ வலிதே கொல்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -31-40–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி -நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

பதவுரை

நல் வினையை தீர்ப்பான்–வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக
அழகும் அறிவோம் ஆய்–அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள்–குடங்களை
தலை மீது எடுத்துக் கொண்டு–தலையின் மேலே எடுத்து வைத்துக் கொண்டு
சுழல ஆடி–ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று–முற்காலத்திலே (அக் குடக் கூத்தாடின விடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு–(முதலில் விட்டு வந்த) அப் பெரிய திருப்பாற் கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம்–பாத நிழலாகவும் பாத ரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
(வல் வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்
வல் வினையும் -பாட பேதம்
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே
எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே
ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய்
ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்
(அடி தாறு -பாதுகை யாதல் -பாத ரேகை யாதல்
பாதுகை யானது எப்படி என்ன அருளிச் செய்கிறார்
இரண்டுமே திருவடிக்கு அளவாகவே தானே இருக்கும் )
அடி தாறு -அடிக்கு அளவாய் இருக்குமது

சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத் தடங்கடலை மேயார் தமக்கு
ஆகாசத்திலே சுழலும் படிக்கு ஈடாகக் குடங்களை எடுத்தாடி
தன்னை -மன்றிலே -நாற்சந்தியிலே –
ஸர்வ ஸ்வ தாநம் பண்ணிக் குடமாடின வேர்ப்புப் போகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனுக்குச்
சாயை போலவும் ஆனோம்

(குடங்கடலை -குடங்கள் தலை
ஆடினவன் என்கையாலே வேர்ப்புப் போக –என்கிறது )

இளைய பெருமாள் படை வீட்டிலும்
காட்டிலும் ஓக்க அடிமை செய்தால் போலே
கிருஷ்ண அவதாரத்திலும்
திருப்பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற இடத்திலும்
ஓக்க அடிமை செய்யும் படி யானோம் –

அவனைக் கொண்டே பாபத்தைப் போக்கிக் கொள்ள வேணும்
என்கிற ஞானத்தை யுடையோம் என்றபடி –

————–

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –

(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

பதவுரை

தமக்கு அடிமை வேண்டுவார்–தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
ஆசா லேசம் உள்ளாருக்கும் அடிமை செய்ய வேண்டுவானே
தாமோதரனார் தமக்கு–தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால்–(நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார்–எனது நெஞ்சானது
செய்யாது–அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று–என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே–(வெகு காலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர்–ஊன்றியிருக்கின்றது;
நைச்யம் பாவித்து விலக்குவதே ஸ்வ பாவம்
அவன் ஒட்டி வர தம் மனம் போல் வெட்டிக் கொண்டு போவதே –
பெரிய நெஞ்சினார் குத்தலாக ஆர்
இங்கு–இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது–நான் செய்யத்தக்கது என்னோ?

தமக்கு அடிமை வேண்டுவார்
(தாம் ஆஸ்ரிதற்கு அடிமை செய்கையை வேண்டி இருப்பார் என்றபடி )
கைத்தது உகப்பார் புளித்தது உகப்பார் என்னுமா போலே
தமக்கு அடிமையை உகக்குமவர்
அது எங்கே கண்டோம் என்றால்

தாமோதரனார்
அநு கூலையான தாயார்க்கு
அடி யுண்பது
கட்டு யுண்பது ஆன இடத்திலே கண்டோம்

(தமக்கு ஆஸ்ரிதரை அடிமை கொள்ள வேண்டி இருப்பவர் என்று அர்த்தமாக்கி )
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
எம்மை விட்டுத் தமக்கு என்னவே ஒரு நினைவுடையராய்

தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
முதலியார்

(நெஞ்சு கருவி நான் கர்த்தா –
இங்கு நெஞ்சுக்கு நெஞ்சு –
தமக்கு என்று ஒரு நினைவு கொண்ட முதலியார் பெரியவர் )

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது
நம்முடைமையான நெஞ்சுக்கு ஆவோமோ
நம்மை யுடையவர்க்கு ஆவோமோ

—————

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

பதவுரை

யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை–கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை
(எப்போதும் தீங்கையே செய்பவர்களை)
நேமியால்–திருவாழியினாலே
பாறு பாறு ஆக்கினான் பால்–துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து–எதையாவது ஸமர்ப்பித்து-தன்னுடையது அல்லாத ஏதேனும் சமர்ப்பித்து -நேர்ந்து -பெரிய கார்யம் -ஆத்ம சமர்ப்பணம்
அணுகா ஆறுதான் என் கொல்–கிட்டாமலிருப்பது என்னோ?
(சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்)
யாதானும் ஒன்று அறியில்–எதையாவது ஒரு வஸ்துவை அறியக் கூடிய சைதந்யத்தை யுடைத்தாயிருந்து வைத்தும்
தான் உகக்கில்–தான் ஆநந்தப் படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
அணுகாவாறு தான் என் கொல்?

(நமக்கு நல்லது நம்மால் செய்ய முடியாதே
அவனது அன்புக்குப் பாத்திரமாகவே வேணும்
அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்வதே நமக்கு நன்மை
நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா -பிறர் சொல்லுக்குள் நாமும் உண்டே அவன் தானே அருள வேணும் )

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில்
ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே
ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே
அவனை அறிந்ததாய் விடும் –

இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும்
ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால்
இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

தன் உகக்கில்
ஒன்றை அறியா விட்டாலும் தன்னை யுகக்க வேணுமே
தன்னை யுகக்கை யாவது -அவனை யுகந்ததாய் விடும்
அவன் உகப்பு ஒழியத் தனக்கு ஒரு நன்மை இல்லாமையாலே

என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் –
யாதானும்
அவனதை அவனுக்குக் கொடுத்தே யாகிலும் அவனைக் கிட்ட வேண்டாவோ

நேர்ந்து என்பான் என் என்னில்
பிராந்தி தசையிலே கண்டது எல்லாம் எனக்கு என்னும் அத்தனை
ஸ்வ தந்த்ரனாகவும் இறே நினைத்து இருப்பதும்
இத்தை எல்லாம் அழிக்கிறான் ஆகையால்
நேர்ந்து என்னலாம் இறே

(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை
அஹங்காரம் மமகாராம் தொலைத்து அன்றோ ஆத்ம சமர்ப்பணம்
நம்முடையது அல்லாதவற்றை சமர்ப்பித்தால் அலாப்ய லாபம் பெற்றதால்
இவன் மகிழ -பித்து இவனும் அவளும் பித்து -மயல் முற்றிய சம்ப்ரதாயம் )

தோள்களை ஆர –திருவாய் -8-1-10-என்று தொடங்கி
கண்கள் ஆயிரத்தாய் என்று உபகார ஸ்ம்ருதியாலே
இவர் அவன் உடைமையைத் தம்மது என்று கொடுக்க
அவனும் தன்னது அல்லாதது பெற்றால் போலே விஸ்திருதனானான் இறே
ஆகையால் அத் தலைக்கு அவத்யத்தை விளைத்தே யாகிலும் கிட்ட வேண்டாவோ

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

யாதானும் இத்யாதி
தன் விரோதியைப் தான் போக்கிக் கொள்ளத்
தானும் கையிலே திருவாழியைப் பிடித்தானோ

யாதானும் இத்யாதி
அஸூர வர்க்கத்திலே ஒருத்தன் அனுகூலிக்குமாகிலும் அவ் வர்க்கமாக நோக்கும்
(ப்ரஹ்லாதனுக்காக மகாபலி வாணன் போல் வர்க்கம் ரஷித்தான் அன்றோ )
இவனுக்கு ஒரு படியும் விஸ்வசிக்கப் போகாதபடி செய்த அஸூரர்களைத் திருவாழியாலே துணித்தால் போலே
தன் விரோதியைப் போக்கின என் பக்கலில் எல்லாம் நேர்ந்தாலும் கிட்ட வேண்டாவோ
அசக்தனுக்கு சர்வ சக்தியைப் பற்ற வேணும்
ஆகையாலே அவனையே பற்ற வேணும் –

ஒன்றை அறியவே தன்னை அறியப்படுமவனாய்
ஒன்றை யுகக்கவே தன்னை யுகக்கப் படுமவனாய்
விரோதி நிரஸனத்தைப் பண்ணுமவனாய்
இருக்கிறவன் பக்கலிலே
யாதானும் நேர்ந்து அணுகா வாறு என் கொலோ -என்று அந்வயம் –

———-

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

பதவுரை

நீலாழி சோதியாய்–நீலக் கடல் போன்ற நிறத்தை யுடையவனே!
ஆதியாய்–முழு முதற் கடவுளே!
எம் பால் தொல் வினை கடியும் நீதியாய்–எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்கு மியல்வுடையவனே!
யாம்–அடியோம்
நின்-உன்னை
சார்ந்து நின்று-அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை–நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும்–காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும்–கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும்–நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும்–கண்கள் சுழல விடா நின்றன.

நீலாழிச் சோதியாய் பாலாழி நீ கிடக்கும்
ஒரு வெள்ளைக் கடலிலே
ஒரு கருங்கடல் சாய்ந்தால் போலே இருக்கிறபடி

நீ கிடக்கும்
கிடந்ததோர் கிடக்கை (திருமாலை )-என்னும்படியே

பண்பை யாம் கேட்டேயும்
அழகைக் கேட்டும்
ஸ்ரவண மாத்ரத்திலே இப்படி அழிகிறவர்
ஸாஷாத் கரித்தால் என் படுகிறாரோ

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 5-3- 5-

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் ஆதியாய்
வடிவு அழகேயாய் பிராப்தி இன்றிக்கே இருக்கிறதோ
இதுக்குக் காரணமானவனே

தொல்வினை எம்பால் கடியும்
உபகாரகனுமானவனே
என்னுடைய விரோதியை என் பக்கலில் நின்றும் போக்குகையே
ஸ்வ பாவமாக யுடையவனே

நீதியாய் நின் சார்ந்து நின்று
உன்னைப் பற்றி நின்று
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-

————–

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
அம் கை வன் புடையால்–அழகிய திருக் கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து–இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும்–(என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும்–வீற்றிருந்தும்
கிடந்தும்–சயனித்திருந்தும்
திரி தந்தும்–எழுந்து உலாவியும்
ஒன்றும்–கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன்–(அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே–(ஆச்ரிதர் திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ;
(ஆனது பற்றியே)
ஓவாற்றான்–திருப்தி யடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான்–என்னுடைய நெஞ்சை விட்டு நீங்குகிறானில்லை.

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
உகந்து அருளினை தேசங்களிலே
நிற்கிறதும்
இருக்கிறதும்
கண் வளர்ந்து அருளுகிறதும்
உலாவுகிறதும்
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே

ஒன்றுமோ வாற்றான்
எல்லாம் செய்தும்
ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

ஓ -என்று
ஆச்சர்யத்திலே
அசைச் சொல்லாய்க் கிடக்கவுமாம்

என் நெஞ்சு அகலான் –
என் நெஞ்சுக்குப் புறம்பு காட்டுத் தீயோடே ஒக்கும்

அன்று அம் கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
பிராட்டி பக்கல் பரிமாறும் போது கூசிப் பரிமாற வேண்டும்படியான
திருக் கையைக் கொண்டு
முரட்டு ஹிரண்யனுடைய பண்ணின ப்ரதிஜ்ஜையை இல்லை என்ற வாயை நெரித்து
அவன் மார்பைக் கீண்டவன் அன்புடையவன் அன்றோ

பிதா பகையாக அவனில் அண்ணிய உறவாய் வந்து உதவினவன் அவனோ அன்புடையோன்
அயோக்யன் என்று அகலுகிற நாமோ அன்புடையோன்
அன்புடையன் அன்றே அவன்

(அவனே மிக்க அன்புடையவன் என்றவாறு
யாதானும் பற்றி நீங்கும் நாம் அன்புடையோன் அல்லோம் )

புடை என்று வழியாய்
வலிய ஸ்தானமான அழகிய திருக் கையாலே என்றபடி –

————

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பதவுரை

அவன் ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம்–துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம்–ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம்–மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம்–அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ–என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து–எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால்–அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே–அப்பெருமானே
எவனேலும் ஆம்–எல்லா வுறவு முறையுமாவன்.
எல்லாவித ரக்ஷகன் ஆவான்
பாலன சாமர்த்தியம் இவன் ஒருவனுக்கே

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
திருப்பாற்கடல் நாயகன் -துர்லபனாய் இருக்கும்
அர்ச்சாவதாரம் ஸூல பனாய் இருக்கும்
அப்படியே இருக்கும் -உம்பர் மேலாய் -பரமபத நாதன்
இப்படியே இருக்கும்
அதுக்கு மேலாய் இருக்கும் என்று சம்சயித்துக் கை விடப் பாராதே

(அப்படியும் இருப்பார் இப்படியும் இருப்பார் எப்படியும் இருப்பார்
பரத்வமும் ஸுலபயமும் சேர்ந்து
உவனாம் -ரிஷிகளுக்கு அந்தர்யாமி இவனாம் -அல்லாருக்கு அவனால்
வைக்கிற வாதம் இல்லை கிட்டாது என்று இல்லாமல்
கிட்டும் என்றே இருக்க வேண்டும் )

அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே அவனால் என்றாய்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
ஆத்மாநம் ந அதி வரத்தேதா (பரதன் சொல் படி ராகவா நட -உன்னை நீ மீறி நடக்காதே )என்னும்படியே
ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்

அவனே எவனேலுமாம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

———-

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்

(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ புதராக அற்றுத்தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப்பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் -முந்துற்ற நெஞ்சு அன்றோ )

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது–யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே–(உலகில் யார்க்கும்) அருமை யன்றோ;
அது–அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம்–(பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
(ஆகையால் நீ செய்யத் தக்கது என்ன வென்றால்)
பூ மேய் மதுகரம் மே தண் துழாய்–பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயை யுடையனாய்
மாலாரை–(ஆஸ்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது–வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால்–பக்தியுடன்
கரமே–திண்ணமாக
அமை–ஊன்றியிரு.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே
யுக்தமான அறிவுடையாராகை கிடையாது
ஆமாறு -ஆறு -வழி

நாமே யதுவுடையோம்
நாம் நல்ல அறிவுடையோம்
(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

நன்னெஞ்சே –
எல்லாத்துக்கும் ஒரு மிடறாகை இறே இது ஸித்தித்தது
மிடறு -சாடு (கழுத்து கருத்து )
மந ஏவ மனுஷ்யாணாம் -இத்யாதியாலே
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் அடி இது இறே

பூ மேய மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம் அது கரமே அன்பால் அமை
பூவிலே பொருந்தும் வண்டு மேவின திருத்துழாய் மாலையை யுடைய ஸர்வேஸ்வரனை
அன்பாலே வாழ்த்துதலாகிற இத்தை த்ருடமாக அமை

மேய -மேவி
அமை -சமைவாய் -பொருந்து -என்றபடி –

———–

தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்

(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆராயில்–ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும்–ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே–வீண் போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள்–யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவு பட்ட பாடுகளை
குமை -தண்டித்தல்
ஏசியே ஆயினும்–பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயனையே–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
மாயன் -ஆச்சர்ய பூதன்
பேசியே–(எதையாவது) பேசிக் கொண்டே
பிழை–உனது பாவங்களை
போக்காய்–போக்கிக் கொள்ளப் பார்.

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
நெஞ்சே ஒரு ஆபாத ப்ரதீதி இன்றிக்கே உள்ளே ஆராயப் புக்கால்

இமைக்கும் பொழுதும்
ஒரு க்ஷண மாத்ரமும் ஆறி இருக்கப் போது உண்டோ

இடைச்சி குமைத் திறங்கள்
பரம பதத்திலே சென்று சாஷாத் கரித்தார்க்கு அன்றோ விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கலாவது என்னில்
அது வேண்டா
தன்னை இதர ஸஜாதீயனாக்கி
ஸூலபனாக்க
என் மகன் -என்று
எடுத்ததே குடியாக தாயார் குமைக்கும் திறங்களை

ஏசியே யாயினும்
ஏசியே யாயினும் பேசிப் போக்குகிறிலை

ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை
பிழை -தப்பு
ஈன் துழாய் மாயனையே பேசிப் பிழையைப் போக்காய் -என்னவுமாம்

ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில்
ஏச்சாகிலும் அவனைப் பேசாதே இருக்கும் இடமே தப்பு

நெஞ்சமே ஆறாயில் இமைக்கும் பொழுதும் அமைக்கும் பொழுது உண்டே
ஏசுகை -ஸ்நேஹம் இன்றிக்கே சொல்லுகை –

(தேனே இன்னமுதே –கூத்துக்களை சொல்ல
பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் )

———–

பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்யவில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –

(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை–தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத்
திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து–கூப்பிட்டு
ஒரு கால்–அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய்–பரமபதத்திலே சென்று
பொலிய–நன்றாக
உபகாரம்–கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது–கொள்ள முயலாமல்
அவன் புகழே–அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட–வாயாலே சொல்லிக் கொண்டருக்கையாகிற
வாய்ப்பு–இந்த நேர் பாடு
பிழைக்க முயன்றோமோ–தப்பு செய்ததாமோ?
பேசாய்–நீ சொல்வாய்.

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு
ஒரு வாடல் மாலையை இட்டாலும் தழைக்கும் துழாய் மார்வை யுடையவனை அழைத்து
அவன் கிட்டக் கொண்டு
பரமபதத்தில் வந்து-(போய் என்றபடி ) அசங்குசிதமான போகத்தைப் புஜிப்பிக்கிறேன் என்னாதே
வாய்க்கு உபகாரகமாய்க் கொண்ட இந்த வாய்ப்புத் தப்ப முயன்றோமோ
சொல்லாய் என்கிறார்

(பரமபதத்துக் கைங்கர்யம் இங்கே கூடுமோ என்ன அருளிச் செய்கிறார் )

ஞானம் உண்டாய் இருக்க
சரீர சமனந்தரத்திலே கைங்கர்யம் பண்ணுகை யாவது –
பகவத் விஷயத்தில் ருசி இல்லாமை இறே

—————

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

பதவுரை

வா நெஞ்சே–வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை–இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்க மாட்டாது காண;
வெம் நரகில்–(நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல்–கொண்டு தள்ளி விடாதே;
தீ பால–தீயதான தன்மையை யுடையளான
பேய் தாய்–தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர்–பிராணனை
பால்–அவளது முலைப் பாலோடே
கலாய்–கலந்து
உண்டு–அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை–அப் பூதனை யினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே–வாழ்த்துதலே
வலி–நமக்கு மிடுக்காம்.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
இத்தோடு ஒக்கும் நேர் பாடு மற்று இலை நெஞ்சே

போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-
அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்
நிரயோ யஸ் த்வயா ஸீதா

(சம்சாரமே வெந்நரகம் -வெந்நரகம் நகு நெஞ்சே
நைச்யம் பாவித்து அகலுகையும் கொடிய நரகம்
கச்ச ராம மயா ஸஹ என்று முன்னே சென்றாள் அன்றோ ஸ்ரீ சீதா பிராட்டி )

தீப்பால பேய்த் தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி
தீப்பால பேய்த்தாய்-பொல்லாத ஸ்வ பாவத்தை யுடைய பேய்ச்சி
கலாய்-கலசி-
பெற்ற தாய் வேஷத்தைக் கொண்டு வந்த பேயினுடைய
உயிரைப் பாலோடே கலசி யுண்டு அவள் உயிரை முடித்தவனை
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு
வாழ்த்துகையிலே துணி என்றுமாம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -21-30–

June 29, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)

(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

பதவுரை

அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜல தத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி
என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.

சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
வெந் நரகு -என்று அகலுகைக்குப் பேர்
சம்சாரத்துக்கும் பேர்
அறிவார்க்கு நரகமாவது -ஸம்ஸாரம் இறே
(நின் பிரிவிலும் சுடுமோ காடு -உன்னை விட்டுப் பிரிவதே நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார் )

இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட –
நினைவு இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நெருக்குண்டது
(என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கன் நெஞ்சால் இடுக்குண்டது
(அன்று அங்கு) பூமியும் பூமியடையச் சூழ்ந்த ஜலங்களும் மறையும்படி பரம்பின மேகம் போலே ஸ்யாமமான
வடிவை யுடையவனுடைய திருவடிகள் (இன்று இங்கன்) என் நெஞ்சிலே இடுக்குண்டது

(அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
தான் நிமிர்த்த
காருருவன்
கால்
அங்கு
சென்று வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட
என்று அந்வயம்

————

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

பதவுரை

என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால்-ஸர்வேஸ்வரன் – வந்து சேர்ந்து விட்டார்;-பரிகரங்களோடே வந்து சேர்ந்தார் –
வல் வினையார் தாம்–(இது வரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வல்வினையார் -கொடுமைக்குக் கொடுத்த மதிப்பு / மாலார் பெருமைக்கு கொடுத்த மதிப்பு
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனி மேலும்) அதிகாரம் செலுத்திக் கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
வீறு கொண்டு வேற்றுமை தோன்ற இருத்தல் வீற்று இருத்தல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்-அவனை விலக்கி புக ஒட்டாமல் பழுதே போன பல காலம் முன்பு எல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப் படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே-செல்வச் செருக்குடன்
இளைத்து–வருத்தமுற்று
இன நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –
அரவத்து அமளியினோடும் இத்யாதிப்படியே
ஸர்வேஸ்வரன் என் மனஸ்ஸிலே புகுந்தான்

மேலால் தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
பண்டு நம்மை ஹிம்ஸித்துப் போந்த அளவுடைமையோடே கூட வல் வினையார் விஸ்திருதமாக
இருக்கும் இடம் காணாதே இளைத்துக்
கால் தேயும்படி தடுமாறிக் கூப்பிட்டுக்
கொடு திரியும் அத்தனை இறே இன நாள்

தருக்குகை -நெருக்குகையாய்
ஹிம்ஸிக்கை –

என் மனத்தே
மாலார் குடி புகுந்தார்
வல் வினையார் தாம்
மேலால்
தருக்கும் இடம்
பாட்டினொடும்
வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
காலே பொதத் திரிந்து
இன நாள்
கத்துவராம்
என்று அந்வயம்

———

(இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )

(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யம படர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய் தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யா விட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான் தான்
எவ் வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;-ஸ்வா பாவிக பந்துத்வம் இவன் இடம் தானே –
சொன்னேன்–(இவ் வுண்மையை உனக்குச்) சொல்லி விட்டேன்;
இளைப்பாய் இளையாப்பாய்–இனி நீ அநர்த்தப் பட்டாலும் படு; சுகப் பட்டாலும் படு.

இளைப்பாய் இளையாப்பாய்
பற்றுவாய்
பற்றாது ஒழிவாய்

அவனைப் பற்றிலும் பற்று
விஷயத்தைப் பற்றிலும் பற்று

நெஞ்சமே சொன்னேன்
ஈஸ்வரனே சர்வ வித பந்து -என்னும் இடம் ஒருத்தருக்கும் சொல்லுமது அன்று
அத்தை யுனக்குச் சொன்னேன்

இளைக்க நமன் தமர்கள் பற்றி –
பற்றும் போதே இளைக்கும்படிக்கு ஈடாகப் பற்றி

இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்
இளைக்கும் படிக்கு ஈடாக நாய்களை விட்டு மோதாதபடி

நல்குவான் நல்காப்பான்
ரக்ஷிக்கிலும் ரக்ஷிக்கிறான்
ரஷியாது ஒழியிலும் ஒழிகிறான்

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே –

(வேறே ஒருவரை ரக்ஷகராகப் பற்ற ஒண்ணாது என்னாமல் அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
என்பதால் இவரை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபந்த பரித்ராணத்தில் அருளிச் செய்தார் )

(ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை–நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் —
பெரிய பிள்ளையையும் -(பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் )-
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் –
இவள் சோகார்த்தையாக —

ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன

அநாதி காலம் பாப வாசனைகளாலே –
ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன

கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் –
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் -)

————–

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

பதவுரை

தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;-
இவர் ஒருவரே கர்மாதீனமாக தோன்றாமல் கிருபாதீனமாக
இச்சா பரிக்ருஹீத பிறப்பில் பல் பிறவி பெருமான் அன்றோ
ஒப்பற்ற அவதாரங்கள் உடையவன் -இதில் ஒப்பற்றவன்
தானே தன் அளப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;அளவு என்பதே அளப்பு -விகாரம்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
உள்ளே அந்தர்யாமியாய் இருந்து ஸர்வ நியாமகனாய் இருந்து ரக்ஷிக்காமல் போவானோ
ஸர்வஸ் அஹம் ஹ்ருதய நிவாஸி
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ் மேல் ஆம்–தலை கீழாக விபரீதமாய் விடும்;
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப் புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப் பூமியில் ஆர் தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிட வுரியர்?
அவனது ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே

தானே தனித் தோன்றல்
ஒரு ஹேத் வந்தரத்தாலே-(கர்மத்தால் பிறக்குமவன் அன்றே)
தோன்றுமவன் அல்லன்

தன் அளப்பு ஓன்று இல்லாதான்
உபமான ரஹிதன்

தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அல்லாதார்க்கும் சத்தை அவனே
தச் சப்தம் -அந்தர்யாம் யம்ருத-என்ற ப்ரஸித்தியைப் பற்ற
(சத்தை என்றாலே ஸ்திதி நிவ்ருத்தி பிரவிருத்தி அனைத்துமே இவன் அதீனமே )

தானே இளைக்கில் பார் கீழ் மேலாம்
அவன் ரக்ஷணத்திலே நெகிழ நிற்கில் பூமி அத ரோத்தரையாம் (அதர உத்தரமாகும் )

மீண்டு அமைப்பான் ஆனால்
அவன் தானே திரியட்டும் ரக்ஷிப்பானாகில்

அளக்கிற்பார் பாரின் மேலார்
பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )

———–

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

பதவுரை

ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவது செய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப் பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோ வென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிறந்த மனத்திலுள்ள
பகவத் குணங்கள் இருக்கும் இடம் சீரார் மனம்
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்ய ஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ண பிரானால்
மாற்றினேன்–நீக்கிக் கொண்டேன்.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே –
எல்லாரும் ஏதேனும் செய்க
பூமிப் பரப்பு எல்லாம் நம்மாலே ஆராய்ந்து திருத்தப் போமோ

சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

(திருவாசிரியத்திலும் ஓ ஓ உலகின் இயல்பே என்று தொடங்கி
தாம் தப்பினோமே என்று நிகமிக்கிறார் )

வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன்
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே
என்று அந்வயம்

————–

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

பதவுரை

ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள் தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியை யுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல் வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–துரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மனமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்
இத் தலையில் குறைவற்றது
பொருந்தாத தலையும் பொருந்திற்று
பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே

தானோர் இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய
ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து
(மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல்
அவன் அருளாலே போக்கினான் என்றபடி )

வல் வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்
அவன் பிரிவாகிற மஹா பாபத்தைக்
காட்டிலும்
மலையிலும் புகும்படி ஒட்டும்படிக்கு ஈடாக
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –

(மற்றை நம் காமன்கள் மாற்று பிரபல தர விரோதி -கைங்கர்யத்தில் ஸூவ போக்த்ருத்வ புத்தி
இங்கும் நைச்யத்தால் பிரிந்த வல்வினை
பரிமித ஸ்வா தந்தர்யமே ஜீவனுக்கு இசைவது மாத்திரமே )

————–

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பதவுரை

நெடியாய்–பகவானே!-த்ரிவிக்ரமனே -சர்வாதிகனே-
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரி விக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
ஆமோதம் -முத்தோ
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தை யெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே

அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ

அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-

செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்

நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்

அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ

சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்

அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்

முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்

—————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு கங்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பரஞானம்
முனியே நான் முகனே-பரமபக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பரபக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பதவுரை

என்றேனும்–எக் காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக் கண்ணாலே(பெயர் மட்டும் உடைய கண் )
காணாக–காணக் கூடாத
அவ் வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திரு வுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக் கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாக வுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக் கண்ணும் காணப் பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ் வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக் கண் மலராத இப்போது மாத்திரமே.

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
ஸர்வேஸ்வரன் கறுத்த திருமேனியை நம்முடைய கண் அன்றே காணும்

என்றேனும் கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து
ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே
பீலிக்கண் -என்றவோபாதி
கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்

(கட் கண் -மீமிசையாலே கண் என்று பேராய் இருக்கிற கண் என்றபடி
ஞானம் உண்டால் காணலாம்
இல்லாத போது காணப் போகாது என்றபடி )

இன்றே நாம் காணாது இருப்பதுவும்
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணாத இன்றே நாம் காணாது இருப்பது
உணர்ந்து காணும் அன்று நம் கண் காணும்

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது
கட் கண் என்றது -பீலி போலேயான புறக்கண்

நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண உணர்ந்த
அன்றே நம் கண் காணும்
உணராத இன்றே நாம் காணாது இருப்பதுவும்
என்று அந்வயம்

————

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

பதவுரை

இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன் மேலும் தழைத்தோங்கு கின்ற
திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப் பட்டவர்கள்
எவ் வளவர்–(தன் மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ் வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக் கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக் கூடியவனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னால் வறிந்து
உணர எளியன்–கொள்ளக் கூடியவன்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
ஒருத்தருக்கும் ஈத்ருக் தயா-த்ருஷ்டாந்த தயா –
இயத்தயா-இவ்வளவு என்று
பரிச்சேதித்து – உணரப் போகான்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஞ்ஞாதம் விஜாநதாம்
(உபமான ராஹித்யன்
த்ரி வித அபரிச்சேத்யன் அன்றோ )

இணரும் துழாய் அலங்கல் எந்தை –
அபரிச்சின்ன வஸ்துவினுடைய லக்ஷணம்
திருத் தோளில் திருத் துழாய் மாலையை யுடையவனாகை

இணரும்
தன் நிலத்திலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்
தேவர்கள் தோளில் மாலை வாடாது
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்

உணரத் தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர்
தனக்கு நல்லவர்கள் உணர எவ் வளவர்-அவ் வளவனாய் நிற்கும்
ப்ரியோ ஹி ஞாநிநோத் யர்த்தம் 7-14-
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் -என்னும்படியே

ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு
தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன் –

(தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:–7-14-

தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு,
ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்,
ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு,
அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன்,
ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன்.

அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்.
ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.

————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

பதவுரை

இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டு போல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என் மேல் வாத்ஸல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம் போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்த விடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கி யிருக்க முடியாது (ஏனென்றால்)
வல் வினையார் தாம்–கொடிய பாவங்கள்

மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதை விட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல்
பண்டு போல் இங்கு விஸ்திருதமாக இருக்க ஒண்ணாது
வீற்று இருக்க ஒண்ணாது

என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் –
வகுத்த விஷயத்துக்கு இடம் போராது
ஐஸ்வர்ய வாத்ஸல்ய ஸூசகமான கண்களை யுடைய ஸர்வேஸ்வரனுடைய
குணங்களுக்கு என்னுள்ளம் சிறிது

(சீர்க்கும் -குணங்கள் இருக்க இடம் ஒழிய பாபத்துக்கு இடம் இல்லை -என்றபடி
குண ஸ்மரணத்தாலேயே பாபம் போம் என்று தாத்பர்யம் )

அங்கேமடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு

மடி -முந்தானை –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -11-20–

June 29, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

பதவுரை

ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜல தத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ் தத்வமும் நீ;
காலும் நீ–வாயு தத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாக வுடைய நீ,
சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் -பாராய் நீராய் தீயாய் காலாய் வானாய் நின்ற நீ அன்றோ
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கை வைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின் வலியே–உனக்கு ஒரு சூரத் தனமோ? –அல்ல.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –
ராக்ஷஸ ராஜன் என்கிற அபிமானத்தாலே –
பெருமாளோடே எதிரிடுவோம் அல்லோம் -என்னாதே –
யுத்தத்தில் யத்னம் பண்ணி மிடுக்கனான ராவணன் பேணின உயிரை
வாழா வகை உனக்கு ஒரு மிடுக்கோ

அயோக்யன் என்று அகலுமவர்கள்
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒப்பார்கள்
(பிராட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனையும் விரும்பும் அவன் அன்றோ
கிம் கார்யம் சீதையா மம என்னுமவன்
கடிமா மலர்ப்பாவையோடே சாம்ய ஷட்கம் உண்டே )

ஆழாத பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய் நின்ற
விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற
உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ

அக்னிக்கும் ஜலத்துக்கும் சேராதால் போலே
பரஸ்பர வ்ருத்தமான பஞ்ச பூதங்களையும் கொண்டு
கார்யம் கொள்ளும் உனக்கு -என்றபடி –

விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்
அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற உனக்கு
உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேர விடுகை பணியோ என்றுமாம்

————-

கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்

(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீ யன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயே யன்றோ.)
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம் தரினும்-(எம்பெருமானுக்கு நம் பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ் துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாத ப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச் சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவது தான்-மங்களா சாசனம் பண்ணுவதே
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
ஆழ் துயர் என்றது –
1-அயோக்யர் என்று அகன்ற கிலேசமாகவுமாம்
2-விஷய ப்ராவண்யம் ஆகவுமாம்

போ என்று சொல்லி என் போ நெஞ்சே
நெஞ்சு நீர் அன்றோ ஆழ் துயரிலே விழும் படி பண்ணினீர் என்று சொல்ல
நீ ஒன்றைச் சொல்ல நான் ஒன்றைச் சொல்லுகிறது என் –
அத்தைப் பொகடு -என்கிறார்

நீ என்றும் காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய்
நீ உபதேசம் தரினும் என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்
ஸர்வேஸ்வரனுக்கு ஐஸ்வர்யமே அன்று காண் விஞ்சி இருப்பது –
நீர்மையும் விஞ்சி இருக்கும் காண் என்று நான் சொன்னாலும்
அழன்று-சீறி – அத்தைக் கொள்ளாய்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க
அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க
நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்
அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம்
(அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் )

——————

அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

பதவுரை

வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
ஓடு- ஓட்டுவதும் சேர்வதும்- வழக்கு அன்று
மாறுகொள் அன்று-கைம்மாறு கொள்வதும் வழக்கு அன்று
அடியார் வேண்ட–(மேன் மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன் மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(அநந்ய ப்ரயோஜனான -என் வேண்டு கோளை நிறைவேற்றுதற்காக)
கஷ்டப்பட வேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
யுக்தி மாத்திரத்தாலே பிரார்த்தனை ஒன்றாலே
சரண வரணம் வா -இதுவும் உன்னாலேயே –
அதுவும் அவனது இன்னருள்
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப் படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன் மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டி யருள வேணும்

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் கண்டு –
(ஓடு வழக்கு அன்று மாறு கொள் வழக்கு அன்று என்று கூட்டி அருளிச் செய்கிறார்
ஓடு என்று ஸம்பந்தமாய் -ஸம்ஸாரிகள் என்று அத்யா ஹரித்துக் கொண்டு
ஸம்ஸாரிகள் முன் நிற்கை என்பது பலித்த தாத்பர்யம் )
1-ஸம்ஸாரியினுடைய முன்னே நிற்கையும் வழக்கு அன்று
2-சாதன அனுஷ்டானம் பண்ணினாரைப் போலே உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் கொள்ளுகையும் வழக்கு அன்று
(ஒன்றும் அறியாத சம்சாரிகள் முன்னே அவதரித்து நிற்கையும்
நீ ஒன்றைச் செய் நான் ஒன்றைத் தருகிறேன் என்கையும்
உனக்கு வழக்கு அன்று பிரயோஜனம் இல்லை என்றபடி )

(வழக்கு ஏது என்று சங்காபிப்ராயம்
அடியார்க்கு அபேஷா மாத்திரத்தாலே கார்யம் செய்கை வழக்கு என்று உத்தரம்
அது காணோம் )
ஆகில் -நீர் சொல்லுகிறது என் என்னில்

அடியாரானவர்கள் வேண்ட ஸ்வாமி இழக்கக் கண்டோம்
(நீ உன்னையே அழிய மாறி கார்யங்கள் செய்தவற்றைக் கண்டோமே )

இறைவ –
நீர் அடியாராக வேணுமே என்ன
என் பக்கலில் உள்ளது அழிந்ததாகிலும்
உன் பக்கலில் உள்ளது அழியாது இறே
உன் ஸ்வாமித்வம் உண்டாக என் சேஷத்வம் தன்னடையே கிடவாதோ

(நான் சொத்து அல்ல என்று வழக்கு பேசினாலும் உன் ஸ்வாமித்வம் இல்லாமல் போகாதே
ஸ்வா பாவிக ஸ்வாமித்வம் உன்னது அன்றோ
ஆகவே வேறே வழியே இல்லை -அடியேன் சொத்தாகவே ஆக வேண்டும் )

இழப்புண்டே
நாட்டு அடியாருக்கு இழப்பு யுண்டாகிலும் உன் அடியார்க்கு இழப்பு உண்டோ
நாட்டு அடியார் -இதர சேஷ பூதர்

எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட
இழப்பு இன்றிக்கே ஒழியும் போது
உமக்கு அடிமையிலே சிறிது அந்வயம் வேணுமே என்ன
என்னுடைய யுக்தி மாத்ரத்தையே பரிபூர்ண கைங்கர்யமாகக் கொண்டு செய்ய வேணும்

என் கண்கள் தம்மாற் காட்டுன் மேனிச்சாய்
செய்ய வேண்டுவது என் என்ன
ஒருத்தன் பட்டினி விட ஒருத்தன் உண்டால் பசி கெடாது இறே –
காத்ரைஸ் சோகாபி கர்சிதை (ஸூந்தர )-என்னும்படியே
தேஹாந்த்ரே தேசாந்தரே (காலாந்தரத்தில் )காண ஒண்ணாது

(காத்ரைஸ் சோகாபி கர்சிதை-துன்பப்பட்ட இந்த அவயங்களோடே
புருஷ வியாக்ரமான பெருமாளைக் காணும் படி வார்த்தை சொல்ல பிராட்டி திருவடி இடம் வார்த்தை
ஞானிகளை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் -மண் பற்றோடு வேர் சூடுமா போலே )

விடாய்த்த கண்களாலே காண வேணும்
உன் மேனிச் சாயை -நிறத்தை
யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு -கண்கள் தனக்கு காட்டு -என்றபடி

————–

காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –

(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ண பிரானை
உள் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப் பெருமானைக் கொன்று விட நினைத்து)
பேயார் ஆய்–அறிவு கெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
பேயரான பூதனை பேயான படியால் பால் கொடுத்தாள்
ராக்ஷசனான விபீஷணன் நல்லவனாக திருவடி அடைந்தான் அன்றோ –
ஆகவே இரண்டாலும் பிறப்பையும் அனுஷ்டானத்தையும் சொன்னபடி
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆக வேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப் போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறா யென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
விளையும் அநர்த்தம் அறிந்தும் அன்றோ செய்கிறோம்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான (சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்-பலகாலும் சென்று ஆழ்ந்து
கீழே விஷயாந்தர ப்ரவணராய் பலகாலும் சென்று ஆழ்ந்து அநர்த்தப் பட்டு என்றுமாம்
தீ வினை ஆம் பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே கை நீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.-அவளை விட தாழ்ந்தவன் என்றவாறு
பேயாக அவள் வஞ்சிக்க மநுஷ்யராய் அன்றோ நாம் அநர்த்தப்படுகிறோம்

சாயல் கரியானை
நிறத்தால் கரியனாய் யுள்ளவனை

உள்ளறியாராய்
ஆழ வநுபவிக்க அறியாராய்
(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் )
ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்

நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே
பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே

தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து
(வெட்டவும் நினைக்கவும் முடியாது -அநர்த்தத்தை-ஸ்வரூப நாசம் அடையுமே )
அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து
அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார்
உனக்கு அண்ணியளோ பூதனை

(முன்புற்ற நெஞ்சை நீ என்று விளிக்கிறார்
எடுப்பும் சாய்ப்புமாகவே போகும்
தன்னைப் பார்க்க விலகுவார்
அவனைப் பார்க்க அணுகுவார் )

அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் –
ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து)
உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை
அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —

நெஞ்சே போய் –என்று தொடங்கி —
நீட்டல் பார்த்து அவளுக்கு நீ யார் -என்று அன்வயம்

(போய் பதம்
மீண்டும் மீண்டும் சுவைத்து என்றும்
மீண்டும் மீண்டும் பாபர் வாயில் கை நீட்டி என்றும் அந்வயம் )

ஸாஸ்த்ர வஸ்யமான உன்னைப் பார்த்தால்-அறிவு கெட்டு ஈஸ்வரனை அழித்தாள் அவள் –
நீ சாஸ்த்ர வஸ்யமாய் இருக்கச் செய்தேயும் விஷயங்களிலே ஆத்மாவை மூட்டி
நசிப்பிக்கையாலே உனக்கு சமள் அன்று என்றபடி

அன்றியே
தேம் பூண் -ஈஸ்வரனுக்கு அவத்யம் வரும்படி
சுவைத்து -அவனை அணைந்து என்று ஈஸ்வர பரமாகவுமாம்

அப்போது தீ வினையாம் என்று அறிந்து அறிந்து -பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
பாம்பின் வாயிலே கை நீட்டுமா போலே நாம் அவனைக் கிட்டுகை அவத்யம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கிட்டுகிற உனக்கு பூதனை சமளோ -என்றபடி –

————–

(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!-அயோக்கியன் என்று அகல நினைக்கும் நெஞ்சே
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக் கொண்டு
தம் மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும் (சிவந்த திருவடிகள் என்றுமாம் )
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும் படியாக
தாம் கிடந்து–(அக் கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர்வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப் பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக் குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
துன்பங்களை நினையாமல் சீர் ஓத
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய் விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ் விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்து கொள்.
(செருப்பு வைத்து திருவடி தொழாமல் நம்முடைய துயர்களை நினைத்துக் கொண்டே
அவனது சீரான குணங்களை அனுபவிக்கப் பாராதே )

பார்த்தோர் -எதிரிதா நெஞ்சே-
அணுகி எதிரிதாப் பார்த்து ஓர்
முன்னிட்டுப் பார்த்து விசாரி

ஆர்த்தோதம் தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர்
கடலானது ஆர்த்துக் கொண்டு தம்முடைய சிவந்த திருவடிகளை வருட
அவசர பிரதீஷனாய்க் கண் வளருகிறவருடைய குணங்களை
(ஆஸ்ரிதர் கிடைப்பாரா என்று எதிர் பார்த்து கண் வளர்கிறான் அன்றோ
சிவந்த கண் -எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் அநாதி காலம்
ஐஸ்வர்யம் வாத்சல்யம் ப்ரேமம் -கண் பூத்துப் போம் படி கிடக்கிறான் )

படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –
தான் படுகிற துயரத்தைப் பொகட்டு அக் குணங்களை ஓத
அவனுடைய பெருமைக்கு அழிவு என்னும் பேச்சில்லை
இத்தை முன்னிட்டு அறிந்து விசாரி –

ஓதம் ஆர்த்துத் தம் மேனியையும் தம்முடைய செம்மேனித் தாளையும் தடவத்
தாம் கிடந்தது கண் வளருகின்ற வருடைய சீரை
படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சு இல்லை
நெஞ்சே எதிரிதாப் பார்த்து ஓர் –
என்று அந்வயம்

———–

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

பதவுரை

பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும்
வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப் படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப் பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப் பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ் விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

சீரால் பிறந்து
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ

(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )

சிறப்பால் வளராது
ஸ்ரீ ஸூ மித்ரையாரும் வசிஷ்டாதிகளும் பேணி வளர்க்க வளர்ந்தால் போலே யாதல்
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ

பேர் வாமன் ஆக்காக்கால்
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளினவோ பாதியாக வாமனனாக வேணுமோ
ஸ்ரீ யபதி என்ற ஒரு பேர் ஆனால் ஆகாதோ
ஒரு ருஷி பத்னி பக்கலிலே பிறந்து (அதிதி ஆஸ்ரமம் தானே )
பேணுவார் இன்றிக்கே வளர்ந்து
பேரும் வாமனனாகா விட்டால் உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டு
அணைவது உண்பது உமிழ்வதான இந்த பூமி நீர் ஏற்பதாய் பட்டாயோ

பேராளா –
கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ

(உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார் )

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து
நீ இப்படி எளியையாய்
அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை

வேதமும் பேசப் புக்கால்
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் –
சூழ்ந்து -விசாரித்து

(த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 16-)

(ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும் )

————-

அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது

(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-

பதவுரை

எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரை வில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப் பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திரு வுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தே யிருப்பர்;
பின்னும்–எக் காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார்.

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் –
எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே
இவர்களை சூழ்ந்து
அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –

வை முக்யம் பண்ணினார் என்று தனி இருப்பிலே பிராட்டிக்கு வாய் திறவார்
பிரஜைகள் குற்றம் செய்யத் தாய்க்கு இறே சொல்லுவது
அவளுக்குச் சொல்லார்
தோன்றா விடுகை -ஆபி முக்யம் பண்ணா விடுகை

சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய தாள்வரை வில்லேந்தினார் தாம்
பார்த்த இடம் எல்லாம் ராம சரம் என்னும்படி சூழ்ந்து
ஒளியை யுடைய மலை போலே இருந்துள்ள ராக்ஷஸனுடைய தலைகள்
இடியும்படி திண்ணிய வில்லை ஏந்திய சர்வ ரக்ஷகர்

சக்தராய் இருக்கச் செய்தே அஸக்தரைப் போலே இருப்பர்
இவர்கள் உபேக்ஷித்தார் என்று பிராட்டிக்கு வாய் திறவார்

ஈஸ்வரன் வெறான் என்றது கீழ்
அடியார் பரமாக்கி அருளிச் செய்கிறார் மேல்

அடியார் சூழ்ந்து வேண்டினக்கால் –
அடியாரானவர்கள் புத்தி பண்ணி உபாஸித்தாலும் தோன்றிற்று இலராகில்
சேஷ பூதன் சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை அன்றோ -என்று வெறார்கள்

பின்னும் வாய் திறவார்
பகவத் குண ஹானி சொல்லுமவர்களுக்கும் வாய் திறவார்

சூழ்ந்து எங்கும் இத்யாதி
ராமாவதாரமாய்த் தோன்றுமவர் நமக்குத் தோன்றிற்று இலர் என்று வெறார்கள் –

———–

உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது

(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–

பதவுரை

தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டி யடிக்கப் பெற்றாலும்
அத் தழும்பு தான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப் புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களை யடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல் படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ் வுலகில் காணப்படுகிற பல பல பிராணிகளை யெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதி மூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் –
என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லள்-என்று
யசோதைப் பிராட்டி தாம்பாலே கட்டினாலும்
அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ சிஹ்னம் போலே இறே
அத் தழும்பு ஏதும் இல்லாதபடி காளியனாலே படாதது பட்டாலும்

தழும்பு தானிளக-
தழும்பு தான் இல்லாத படி

சோம்பாது இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல்லுருவை யார் அறிவார் சொல்லு
இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே
நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )
காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு

வடிவை -ஸ்வரூபத்தை

பரிபவம் பண்ணின போதோடு
பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான
உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ –
நீயே சொல்லு

———-

கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பதவுரை

சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
நன்மை தீமை அறியாத மனமே
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை;
அஸங்க்யேயமான அளவில்லா கல்யாண குணாத்மகன் அன்றோ
(அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப் பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்ச பாண்டவர்களே எதிரிகளாம் படி
ஓர் நிகர் அற்ற என்று சொல்ல விலை துணை அற்றவர்கள் என்றவாறு
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவு பகலென்னாமல் எக் காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
அஹோ ராத்ர விபாகம் இல்லாத போர் ராவண வதம்
இங்கு இரவில் இல்லை -இரவிலும் தூங்காமல் ரக்ஷத்தவன் இவனே
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.

சொல்லில் குறையில்லை
பகவத் விஷயத்தைப் பேசப் புக்கால் பேச்சில் குறையில்லை
பேசி முடியாது
எத்தனை பேசினாலும் விஷயத்தைப் பரிச் சேதிக்கப் போதாது என்றபடி
(பேசினார் பிறவி நீத்தார் பேருளார் பெருமை பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே )

சூதறியா நெஞ்சமே
பகவத் விஷயம் நன்று என்றும்
விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும்
விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு
(விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண் மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
(11 அக்ஷவ்ணி அங்கும் 7 அக்ஷவ்ணி இங்கும் )
பழையதாக பூமி நெளியும்படியான மஹா சேனைக்கு எல்லாம் தானே காத்தான் என்னில்
தங்களுக்குத் தோல்வி என்று அவர்கள் இசையார் என்று
பாண்டவர்கள் ஐந்து பேரும் எதிராக

கண் -என்று இடமாய் பூமி
தானை -சேனை

காத்தானைக் காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கால்
அவர்கள் பகல் யுத்தம் பண்ணி இரவு உறங்கினாலும்
இரவும் பகலும் உறங்காதே அர்ஜுனன் தோள் பிடிப்பதும் வெல்லும்படி மநோ ரதிப்பதும்
செய்து கொடு நின்று காத்தவனை

காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கது உள்ள படியே காணலாம் காண் –

———-

நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி

(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

பதவுரை

அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக் கொண்டு–வாமந ரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம்–தனது திருமேனியினாலே-அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்தாலே –
தீண்டிற்று–உலகங்களை யெல்லாம் தீண்டினானென்பதை
காணப் புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப் படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)

காணப் புகில்
நாம் பேசில்
அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
மாணி யுருவாகி
நீரேற்று
உலகம்
கொண்ட
சீரான்
திருவாகம்
சென்று
தீண்டிற்று
நாணப் படும் அன்றே
என்று அந்வயம் –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–அவதாரிகை /பாசுரங்கள்- 1-10–

June 28, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

அவதாரிகை

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களையும் விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தன்னை அனுபவிக்கைக்கு அநு கூலமான தேசத்தையும் –
அநுகூலமான ஞான வ்ருத்த தேஹங்களையும் யுடையராய்
ஸதா அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோ பாதி பிராப்தியும் உணர்ந்து
இவ் வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேஹங்களைத் தாம் யுடையராய் இருக்கிறபடியையும்
பிரதிகூலமான சம்சாரத்தில் தாம் இருக்கிறபடியையும் உணர்ந்து
த்வத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்
என்றார் திரு விருத்தத்தில்

(இனி யாம் உறாமை -என்று
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை அவனால் காட்டக்கண்டு
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும்
அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா-என்றார் திரு விருத்தத்தில்)

நூறு பாட்டுக்குமே இதுவே அர்த்தமாக வேணும் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை (1)-என்று உபக்ரமித்து
இது கற்றவர்களுக்குப் பலமாக
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வரு வினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே (100)-என்று
உப ஸம்ஹரிக்கையாலும்

அடியேன் செய்யும் விண்ணப்பம் (1)-என்று உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த (100)-என்று தலைக் கட்டுகையாலும்
அபேக்ஷித்த போதே செய்யப் பெறாமையால் பிறந்த ஆற்றாமையாலே சொல்லிற்றன
நடுவில் பாட்டுக்கள் –

(உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல்
கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்)

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –ஆர்த்தி பூர்த்தி ஆக்கவும்
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக் கட்டவே ஸ்ரீ பீஷ்மர் சர கல்பத்தில் கிடக்க
அவரைக் கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம் சொல்லுவித்தால் போல
(தர்ம புத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே)
ஆழ்வாரை திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே வைத்ததும்

இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய்
விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலை மக்களாக சொல்லுவான் என்

1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருகைக்கு உபகாரகர்கள் என்பதாலும்
(த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற-புருஷகாரம் பண்ணுபவர்கள் )
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – –
பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
(இங்கே உபகாரகர் -புருஷகார பூதர் -அங்கு ப்ராப்யர்)
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை என்றபடி
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத் துணை ஆவார்கள் என்பதால்
அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் பக்த்யா நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக் கட்டவும்
ப்ரக்ருதி சம்பந்தம் அறுத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக் கொடா விடில் இவர் தரிக்க மாட்டாரே
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
இது ஸாஸ்த்ர புறம்பானாலும் ஸத்ய ஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து
திருவாசிரியம் அருளிச் செய்தார்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-
அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-
ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –

ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே

ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
(ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே-)

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே )

————————————

நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

பதவுரை

முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே-அடிமை செய்வதிலே – உத்ஸாஹம் பூண்டு
எழுந்து–கிளம்பி
முந்துற்ற நெஞ்சே–(அவ் விஷயத்தில் என்னை விட) முற்பட்டிருக்கிற மனமே!
ஸ்ரீ சீதாபிராட்டி முன்னே சென்று பெருமாளை பின்னே வரச் சொன்னாளே -அதே போல் இங்கும்
நீ எம் எம்மொடு கூடி–நீ (தனிப் பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய்–காரியத்தை நடத்த வேணும்;
(நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்ன வென்றால்)
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன்–(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தை யுடையனான எம்பெருமானுடைய
நல் -வை லக்ஷண்யம் சொல்லியே உவமானம் சொல்ல முயல வேண்டும்
புகழ்–திருக் கல்யாண குணங்களை
நயப்பு உடைய–நயம் உடைய -அன்பு பொதுந்திய
நா ஈன்–நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற-உண்டாக்கப் பட்டதாய் –
(மனஸ்ஸூ சஹகாரி இல்லாமலே நாக்கே பாடுமே ஆழ்வாருக்கு -நெஞ்சுக்கு முன்பே நாக்கு பாடுமே
யானாய்த் தன்னைத் தான் பாடுவான்
என் நாவில் இந்த கவி மற்ற யாருக்கும் கொடுக்ககிலேன்
பாட்டினால் என் நெஞ்சுள் இருந்தமை காட்டினாய் )
தொடை கிளவியுள்–சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே-அழகிய ஸப்த சந்தர்ப்பங்கள் –
பொதிவோம்–அடக்குவோமாக.
(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.
யதோ வாசோ நிவர்த்தக்கே வேதம் மீண்ட ஒன்றை அடக்க உத்ஸாகத்துடன் முயல்கிறார் )

முயற்றி சுமந்து
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

எழுந்து
விஸ்திருகமாய் (கிளர்ந்து எழுந்து )

முந்துற்ற நெஞ்சே
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்னும்படியே முற்பட்ட நெஞ்சே

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –
க்ருதஜ்ஜமாக வேணும் காண்
பார்த்தபடி அழகிது
பிற்பட்ட என்னையும் கூட்டிக் கொண்டு போ

நயப்புடைய
நீரும் நானும் கூடிச் செய்யப் புகுகிறது என் என்ன
அங்குத்தைக்கு அடிமை செய்வோம் என்கிறார் –

நயப்புடைய
என்னால் தன்னைப் பதவிய வின்கவி பாடிய(7-9-10)-என்னுமா போலே
கவிக்கு நயப்புடைமை யாவது
நாயகனுக்கு முன்பு இல்லாத நீர்மை இக் கவியாலே யுண்டாகை

நாவீன்
நீயும் வேண்டா என்கிறார்
உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா
நெஞ்சிலே யூன்றி அனுபவிக்கைக்கு நீ யுண்டாக அமையும்

(பாட்டுப் பாட நீ வேண்டாம்
அவன் நாவில் இருந்து
பாட்டினால் உன்னை என் நெஞ்சில் இருந்தமை காட்டினான்
அனுபவிக்கவே நீ வேண்டும்
மநோ பூர்வ வாக் உத்தரம் அல்லவோ என்னில்
பக்தனுக்கு ந ஸாஸ்த்ரம் நைவ க்ரம )

(மநோ பூர்வ வாக் உத்தர அன்றோ )
நெஞ்சு இன்றிக்கே கவி பாடப் போமோ என்னில்
நெஞ்சுடைய ஸ்தானத்தில் சர்வேஸ்வரன் நின்று கவி பாடுவிக்கும் என்று கருத்து –
(கவி பாடும் சொல்லாமல் பாடுவிக்கும்
அவர் பங்கு முக்கியம் பிரதானம் -நம்மதும் உண்டு அமுக்கியம் )

தொடை கிளவி
அழகிய சந்தர்ப்பத்தை யுடைய சொல்லு
நெஞ்சு கன்றிச் சொல்லாமையாலே சொல்லில் வெட்டிமை இன்றிக்கே இருக்கை

யுள் பொதிவோம்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -என்று வேதங்கள் வாஸ்யத்தை அடைந்து
நிலை நில்லாமையாலே மீளவும்
இங்கு வாஸ்யம் வாசகத்தை விட்டுப் போக மாட்டாது –
(சொல் பொதிகை -சொல்லுக்கு உள்ளே அடக்குகை
யத் கோ சஹஸ்ரம் இத்யாதி -வாக்கிலே உறைகிறான் அன்றோ )

நற் பூவைப்
வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே )
உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது

பூ வீன்ற வண்ணன்
பூவைப் பூ
காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –
கோ சத்ருஸோ கவய
கவய சத்ரூஸோ கவ் -என்னுமா போலே

(ஈன்ற -பூ வாதல் -வண்ணமாதல்
பூ வண்ணத்தைக் காட்டுதல்
வண்ணம் -பூவைக் காட்டுதல் )

புகழ்
திவ்ய தேஹ குணங்களையும்
திவ்ய ஆத்ம குணங்களையும் –

நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ்
நயப்புடைய நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-

———

(தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிர பத்ரபாய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.)

நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்

கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

பதவுரை

எங்கள் மால் எம் கண்–எங்களிடத்தில்-வேற்றுமை உருபு
மால்–வ்யாமோஹகத்தை யுடைய
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான பெருமானே,
இரண்டாலும் ஸுலப்யம் பரத்வம் இரண்டிலும் அப்ரமேயன் என்றதாயிற்று
புகழ்வோம்–(ஒருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம்–(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி யன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய் விடுவோம்;
புகழோம்–(இவ் வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம்–உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
தாழ்ந்த வாக்கு ஸ்பர்சம் இல்லாததால் -ஈனச் சொல்லாலுமாக –நான் கண்ட நல்லது என்றார் அன்றோ
இது வாசிகம் -மேலே மானஸ வியாபாரம்
மதிப்போம்–உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம்–உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆய் விடுவோம்;
மதியோம்–அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம்–அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்;
(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது
இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத் தான் போகிறோம்.)
நீ சீறல்–நீ கோபங்கொள்ளலாகாது;
பாடுவதால் சீறாதே மேலான அர்த்தம் -பாடாமல் விலகுவதால் சீறாதே ஆழ்ந்த அர்த்தம்
அளியல் நம் பையல் அம்மவோ கொடியவாறே
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே
இவை–புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்–மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

புகழ்வோம் பழிப்போம்
அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்

புகழோம் பழியோம்
புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில்
அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால்
அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு என்று சொன்னார்

(நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்–ஸ்ரீ பகவத்கீதை — இரண்டாம் அத்தியாயம் –12-
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.
இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.)

இகழ்வோம் மதிப்போம்
நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று
மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே
புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்

நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம் என்கிறார் –

மதியோம் -இகழோம்
நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்

மற்று
மற்று -என்கிறது
புகழோம் என்கிறதில் காட்டில்
இகழ்வோம் என்றதினுடைய பிரிவைக் காட்டுகிறது
மற்று இகழ்வோம் என்ற படி
(வாக் வியாபாரத்தில் மாறி மானஸ வியாபாரம் என்கிறது )

எங்கள் மால்
இகழப் போகாத படி தம்முடைய பக்கலிலே வ்யாமுக்தனாய்

செங்கண் மால் -எங்கள் மால்
யதா கப்யாஸம் -என்று ஸ்ருதி ஸித்தமாய்
ஐஸ்வர்ய ஸூசகமான கண்ணை யுடையவனாய்
அபரிச்சேத்யனானவன்
என் பக்கலிலே வ்யாமுக்தனானான்

நீ சீறல்
நம் வை லக்ஷண்யத்தை அறியாதே இவர் இழிவதே -என்று
தம் பக்கலிலே சீறினானாகக் கொண்டு
சீறாதே கொள் என்கிறார்

அன்றியே
தாம் புகழப் புக்கவாறே புசியர் உண்ண என்று இலை யகலப் படுக்குமா போலே
தன் குணங்களைக் கேட்கப் பாரிக்கப் புக
தாம் மாறினவாறே சீறினதுக்கு
சீறாதே கொள் -என்றுமாம் –

தீ வினையோம்
நீ யுகந்தபடி பரிமாறப் போகாத பாபியோம்
விஷய வை லக்ஷண்யம் அறியாதே புகழ இழிந்த பாவியோம் என்றுமாம்

எங்கள் மால் கண்டாய் இவை
வை லக்ஷண்யத்தைக் கண்டு இழிவது
அயோக்யன் என்று அகல்வது
இவை எங்களுடைய பிராந்திகள் இறே

————-

இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று

(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

பதவுரை

இறையவனே–எம்பெருமானே!
இவை அன்றே நல்ல–உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவை யன்றோ நல்லது;
இவை அன்றே தீய–உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவை யன்றோ கெட்டது;
இவை இவை என்று அறிவனேலும்–(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம்–புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவை யெல்லாம்
என்னால்–என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது–பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என்–(சபலனான) என்னாலே செய்யக் கூடியது என்ன இருக்கிறது?

இவை அன்றே நல்ல
புகழோம் மதியோம் –
மதியோம் இகழோம் –
என்கிற இவை நல்ல

இவை அன்றே தீய
புகழ்வோம் பழிப்போம்
என்கிற இவை பொல்லாது

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்

இவை எல்லாம்
த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா
என்னால் பரிக்ரஹவும் போகாது
த்யஜிக்கவும் போகாது

இறையவனே
பரிக்ரஹவும் த்யஜிக்கவும் இது தன்னரசு நாடோ

என்னால் செயற்பாலது என்
கர்மண்யே வாதி காரஸ்தே மா பலே ஷு கதாசந
மாம் நமஸ்குரு -என்று
நீ அருளிச் செய்ய என்னால் செய்யப்படுவது உண்டோ
நீயே பற்றுவித்து விடுவிக்கிறவனாய் இருக்க
நம்மால் செய்யத் தக்கவை ஒன்றுமே இல்லையே –

(கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி–ஸ்ரீ பகவத்கீதை–2-47

தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.
செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

————

நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

பதவுரை

என்ன–என்னுடையவனான
கரும் சோதி கண்ணன்–கறுத்த நிறத்தை யுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல் புரையும் சீலன்–கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சோதிக்கு–மிகப் பெரிய சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று–என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதனால்
என்னில்–என்னை விட-விசிஷ்ட- நிஷ்க்ருஷ்ட -இரண்டிலும்
மிகு புகழார் யாவரே–மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பின்னையும் எண்ணில்–இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால்–மிக்க புகழுடையவன்-மேலான கீர்த்தி யுடையவன் – தவிர வேறு யாருமில்லை.
(மத்தத் பரம் நாஸ்தி கண்ணன் கீதையில்
இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும் )

என்னின் மிகு புகழார் யாவரே
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது
என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் )

ஆஸ்ரயத்தில் (ஆத்மாவிடத்தில் ) மிஞ்சின புகழை யுடையார் எவர் என்னவுமாம்

என்னில் –
விசிஷ்டத்தில் என்னில் காட்டில் இல்லை என்றும்
நிஸ்க்ருஷ்டத்தில் அணுவான ஆத்மாவிலும் விஞ்சின புகழை யுடையார் யார் என்னுதல் என்றுமாம்

அலாபத்தில் -சீலம் இல்லாச் சிறியனேலும் செய் வினையோ பெரிதால் என்று
சொல்லுமா போலே இறே
பேற்றிலும் சொல்லுவது
(ப்ராப்த அவன் விஷயத்தில்
உண்ணும் போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை சொல்பவர் தானே )

பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால்
ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ

என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று
தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்
அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே
இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )

————–

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

(இல்லை என்று அறிந்தவன் இல்லையாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பதவுரை

மாய–மாயவனே!-ஆச்சர்ய சக்தி உக்தனே
அம்மா–ஸ்வாமியே!
இரண்டு விழிச் சொற்கள் பரத்வமும் ஸுலப் யமும்
பேசில்–உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே–பெற்ற தாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ–உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ–மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய–மஹத்தான வஞ்சனையை யுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை–(அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ–அமுது செய்த நீ
காட்டும் நெறி–எனக்குக் காட்டின வழிகள்-
விரோதங்களைப் போக்கி கிட்டும்படி -ஞான காரியமாக விலக்க மாட்டாமல் சேர்த்துக் கொண்டாயே
போதரே –புந்தியில் புகுந்து ஆதரம் பெருக வைத்த அழகன் -முதல் படி
அஞ்ஞானத்தால் விலகியது முதல் படி
ஞானத்தால் விலகியது அடுத்த படி
தாவி அன்று -உலகம் -மழைக்கன்று வலையுள் பட்டு -என்றதும் –சிக்கென செங்கண் மாலே போல் -இரண்டாம் படி
இதுவே பெரும் மாயம்
எற்றே ஓ–என்ன ஆச்சர்யமானவை ( என்று உருகுகிறார்.)

பெற்ற தாய் நீயே
பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால்
ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து
பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து
இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே
(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )

பிறப்பித்த தந்தை நீ
ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது
உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே

மற்றையர் யாவாரும் நீ –
ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று
இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே

(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே
அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்
உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி
அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )

பேசில் –
நீ செய்யும் இவை பேசப் போகாது இறே

எற்றேயோ
என்னே

மாய
ஆச்சர்ய சக்தி யுக்தனே
செய்யப் போகாதவையும் செய்யுமவனே
செய்யப் போகாதாவை -என்றது
அயோக்கியன் என்ற என்னை அகலாதபடி பண்ணுகை

மா மாயவளை மாய முலை வாய் வைத்த
மஹானான மாயத்தை யுடைய பூதனை முடிய முலையை வாயிலே வைத்த

நீ யம்மா காட்டும் நெறி எற்றேயோ
அயோக்கியன் என்று அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –

மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
யம்மா
நீ காட்டும் நெறி
எற்றேயோ–என்று அந்வயம்

———–

நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்

(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப்பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

பதவுரை

கண்ணனே–எம்பெருமானே!-கிருஷ்ணனாய் அவதரித்த ஸ்வாமியே
இவன் தானே உபாயாந்தரங்களைப் பரக்க அருளிச் செய்து
மேலே சரம ஸ்லோகமும் அருளிச் செய்தான்
நெறி காட்டி நின் பால் நீக்குதியோ–கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி
(இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கை விட்டு விடப் பார்க்கிறாயோ?
(அல்லது)
நின் பால்-கரு மா முறி மேனி காட்டுதியோ–கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற
(உனது மாந்தளிர் பச்சை பசுமை ) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுக்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள்–அநாதி காலமாக
அறியோமை–அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய்–என்ன செய்வதாக திரு வுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய்–தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
மாஸூ ச என்ற வார்த்தை அருளிச் செய்து அருள வேணும்
என் செய்தால்–நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம்–யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

நெறி காட்டி நீக்குதியோ நின் பால்
நெறி காட்டுகை என்றும்
நீக்குகை என்றும்
பர்யாயம்
(தொழுதால் எழலாம் -தொழுகையும் எழுகையும் பர்யாயம் )

மத்யாஜீ மாம் நமஸ்குரு என்ன
அர்ஜுனனுக்கு சோக விஷயமாயிற்றே

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65-

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

நீ உன் கார்யத்தைச் செய் என்பது விட நினைத்தாரை இறே
ஏஷ பந்தா விதர்ப்பாணா மேஷ யாதி ஹி கோஸலவான் (பாரதம் )-என்று
தன்னுடனே கிடந்த தமயந்தியை உடுத்த புடவையில் ஒரு தலையை அறுத்து
வழி இது -இங்கனே போ -என்று விட்டால் போலே இறே
தன் பக்கலிலே ந்யஸ்த பரனானவனை
உன் ஹிதத்துக்கு நீயே கடவை -என்கை

நின் பால் கருமா முறி மேனி காட்டுதியோ
என்றுமாம் –
விவ்ருணுதே –என்னுமா போலே

(நின் பால்–ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம்
ந அயம் ஆத்மா ப்ரவசனே அப்ய -விவ்ருணுதே-தேன லப்ய -அவன் காட்டவே லாபம் )

கரு மா முறி மேனி
அஞ்சனத்தில் புழுதி படைத்த புறவாயை நீக்கி முறித்த முறி போலே
திருமேனி நெய்த்து இருக்கிறபடி –

மா முறி
மாந்தளிர் என்று ஸுகுமார்யத்தைச் சொல்லி

கரு
அதிலே கறுப்பையும் கூட்டி
ஸ்யாமமாய் ஸூ குமாரமான திருமேனியை
(இல் பொருள் உவமை )

காட்டுதியோ
நீயே காட்டி அனுபவிப்புத்தியோ

மேனாள் கரு மா முறி மேனி காட்டுதியோ -என்றுமாம்
பழையதான அசாதாரண மான திவ்ய மங்கள விக்ரஹம்
(மேல் நாள்-ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம் )

மேல் நாள் அறியோமை –
பழையதாக அறியாதே போருகிற என்னை

மேல் நாள் அறியோமை நெறி காட்டி நீக்கிதியோ –
ஒருத்தனுக்கு திங் மோஹம் பிறந்தால்
வழி அறியுமாவன்
நீயேயோ என்னக் கடவதோ
வழி காட்டி விடக் கடவனோ
பதஸ் ஸ்கலிதம் (நல்ல மார்க்கத்தில் இருந்து நழுவும்படி ) என்னும்படி இறே
என்னுடைய அவஸ்தை

(அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —49

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

என் செய்வான் எண்ணினாய்
மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ

கண்ணனே ஈதுரையாய்
மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –
மாஸூச -என்று சொல்லுகையாம் இறே
(ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )

என் செய்தால் என் படோம் யாம் —
எல்லா உயர்த்தியையும் செய்து
பரம பதத்திலே கொடு போய் வைத்தால்
நீ தவிர்த்த பிராதி கூல்யத்திலே போய் நில்லேனோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால் –
(பிராதி கூல்யத்திலே போய்-ஸம்ஸாரத்திலேயே -அத்வேஷம் தவிர்த்தாய் முதலில்- த்வேஷிக்கப் போவேன் )

————

அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ச்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

பதவுரை

பூ மேய–தாமரைப் பூவில் பொருந்தி யிருக்கிற
செம் மாதை–*ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து–உனது திரு மார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
அம்ருத மதன காலத்தில் பெண் அமுதம் கொண்ட -லஷ்மீ கல்யாணம் ஆதி அன்றோ
சீதா ருக்மிணி ஆண்டாள் ஸ்ரீனிவாச கல்யாணம் எல்லாம் பின்பே
பார் இடந்த–(பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தி யெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா–ஸ்வாமீ!
ஸ்ரீயபபதியாயும் -ஸ்ரீ பூமா தேவி இடந்து -அம்மா ஸ்வாமி -பரத்வம் ஸுலப்யம் –
விலகவும் மேல் விழவும் இவையே காரணம்
கரு மா மேனி காட்டி -மானஸ அனுபவம் மாத்திரம் -அணைக்க முடியவில்லையே
நின் பாதத்து அருகு–தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே–என்னுடைய நெஞ்ச தானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார்–அந்தரங்கமாகச் சென்று சேர்ந்து விட்டது;
அரு வினையோம்–போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள
யாமே–நாங்கள் மாத்திரம்
சேயோம்–தூரத்திலிருக்கிறோம்.
நெஞ்சினார் -கொண்டாடி -தான் அணைக்க முடியாமல் கொடிய வினையேன்

யாமே அருவினையோம் சேயோம் –
மஹா பாபியாய் இருந்த நாம் துரியோம்
ஸம்ஸாரிக்கு பகவல் லாபம் என்கிறது ஓர் அர்த்தமோ

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
என்னுடைய நெஞ்சினார் பண்ணின உபகாரம் இறே
தன் ஸ்வரூபம் அறியாதே மேல் விழுந்து செய்வது ஓன்று இறே

பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து –
அயோக்யர் என்று பிற்காலிக்கைக்கும் மேல் விழுகைக்கும்
ஹேது சொல்கிறது

1-பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
என்ற ஸ்ரீ லஷ்மீ பதித்வமும்

2-பாரிடந்த
அதி மானுஷ சேஷ்டித்வமும்

3-அம்மா
என்ற சர்வேஸ்வரத்வமும்

பிற்காலிக்கைக்கும் ஹேது

1-பெரிய பிராட்டியார் திரு மார்பிலே இருக்க நமக்கு இழக்க வேணுமோ என்றும்
2-பார் இடந்த-என்றத்தால் தளர்ந்தார் தாவளம்
(புகல் அற்ற நமக்கு ஒரே புகல் இடம் –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே )என்றும்
3-அம்மா என்று வகுத்தவன் என்றும்
மேல் விழுகைக்கும் இவை தான் ஹேதுக்கள்

அம்மா நின் பாதத்தருகு
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார்

———

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பதவுரை

பருகலாம் பண்பு உடையீர்–வாய் மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக் குணங்களை யுடையவரே!
பார் அளந்தீர்–(த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமளந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்–பாவிகளான எங்களுடைய கண்களாலே
காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!-நுண்பு-ஸூஷ்மத்தன்மை
நும்மை–உம்மை
அருகும்–கிட்டுவதையும்
சுவடும்–கிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம்–(நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை;
(அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே–உம் விஷயத்திலேயே
அன்பு மிக பெருகும்–(எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என்–இதற்கு என்ன காரணம்?
பேசீர்–நீர் தாம் சொல்ல வேணும்.

அருகும் சுவடும் தெரி யுணரோம்
பன்னீராண்டு கலந்த பிராட்டியைப் போலே
உம்மோடே கலந்து உம்முடைய சுவடு அறிகிறிலோம் –
நீர் வருகைக்குச் சுவடு அறிகிறிலோம் -என்றுமாம்

(அருகும் சுவடும்-
1–நெருக்கமும் அதனால் பெற்ற இனிமையும்
2-அடைவதும் அதுக்கு உபாயமும் என்றுமாம் )

அன்பே பெருகும் மிக இது என் பேசீர் –
ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்
(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )

பருகலாம் பண்புடையீர்
பருகலாம் என்று ஒரு த்ரவ்ய த்ரவ்யத்தைச் சொல்லுமா போலே சொன்னபடி என்
பருகலாம் நீர்மையை யுடையீர் (ஸுலப்யம் நீர் தன்மை உருகும் தன்மை )

பாரளந்தீர்
சொன்ன நீர்மைக்கு உதாஹரணம்

பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்
பாவியோமாய் இருந்த எங்கள் கண்ணால் காணப் போகாத
வை லக்ஷண்யத்தை யுடையீர்

நும்மை நுமக்கு
நும்மை -அருகும் சுவடும் தெரிவுணரோம்
நுமக்கு அன்பே பெருகும் மிக
இது என் பேசீர்
இது ஜீயர் பிள்ளை திரு நறையூர் அரையர் பக்கல் கேட்டதாகப்
பிள்ளை அருளிச் செய்தார் –

(நஞ்சீயர் அருளிச் செய்ததை நம்பிள்ளை அருளிச் செய்ய
பெரியவாச்சான் பிள்ளை ஏடு படுத்தி அருளிச் செய்கிறார் )

(நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும்
நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க–ஆச்சார்ய ஹிருதயம்-228

நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்-
உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க –
உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-
முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –
இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க )

————-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
(மாலார்) அவர் தாம்–எம்பெருமானாகிற அப் பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால்–நமக்குக் கிட்ட முடியாதவராயிருக்கும் போது
நொந்து உரைத்து என்–வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி–இன்று முதலாக
எமக்கு ஆதானும் ஆகிடு காண்–நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு–அவ் வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று–“நாங்கள் உமக்கு அடிமைப் பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே–அப் பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு–எதையாவது சிந்தித்துக் கொண்டு கிடப்பாயாக.
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -அவனாகவே நின்றாலும் -போல்
இங்கு யாதானும் -பாவி நீ என்ற நிந்தையாகிலும் -அவன் விஷயமாக ஏதானும்

நுமக்கு அடியோம்
இதுவே போரும் அவன் இரங்குகைக்கு

என்று என்று
அதுக்கும் மேலே
அத்தைப் பலகால் சொல்லுகையும்
திரு உள்ளத்தைப் புண் படுத்துக்கைக்கு உடல்

நொந்து உரைத்தென்
ஆர்த்தோ வா யதி வா திருப்த ஹரி பரேஷாம் சரணாகத பிராணன் பரித்யஜ்ய
ரஷிதவ்ய க்ருதார்த்தமநா (யுத்த )-என்றதுவும்
பொய் போலே

மாலார் தமக்கு
பண்டு (ஸம்ஸ்லேஷித்த தசையில் )இவை எல்லாம் செய்து வர்த்தித்தவருக்கு

(நம்மிடத்திலே முன்பு அடியோம் என்பது
நொந்து உரைப்பது
பல் காட்டுவதாய்ச் செய்து வர்த்தித்தவர்க்கு -என்றபடி )

அவர் தாம் சார்வரியரானால் –
கையாளாய் வர்த்தித்தவர் கிட்ட அரியவரானால்
அவர் செய்வோம் என்று நினைத்த வன்று போலே காணும்
இங்குச் சொன்னவை (நுமக்கு அடியோம் போல் சொன்னவை )எல்லாம் பலிப்பது

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

நெஞ்சே
அவர் தாம் சார்வரியரானால்-சார்வு அரியரானால்-
மாலார் தமக்கு
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென்
எமக்கு இனி -இனி எமக்கு –
யாதானும் ஆகிடு காண்
அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
என்று அந்வயம் –

இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம்.
‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை;
அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?
“எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்;
அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.

திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத்தக்கது.
எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை;
கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ.

ஆண்டாளும் ·“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; –
கண்ணபிரான் தனது திரு மார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று;
அப்படி அணைத்துக் கொள்ளத் திருவுள்ளமில்லையாகில், என் முகத்தை நேராகப் பார்த்து
‘எனக்கு உன் மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கை விட்டேன், நீ போ’
என்று வாய் திறந்தொன்று சொல்லி விடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ.

உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில்
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன் பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.

அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதை யாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது-
நல்ல படியாகவோ தீய படியாகவோ ஏதேனுமொரு விதமாக நம்மைப் பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே
பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது
நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

————-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

பதவுரை

இரு நால்வர்–அஷ்ட வஸுக்களென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர்–ஏகாதச ருத்ரர்களென்ன
எட்டோடு ஒரு நால்வர்–த்வாதச ஆதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால்–அச்ஸிநீ தேவர்களென்ன
ஆகிய முப்பத்து மூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம்–நாம்
திருமாற்கு–எம்பெருமானைப் பணிவதற்கு
ஆர். எவ்வளவு மனிசர்?–
வணக்கம் ஆர்–நம்முடைய பணிவு தான் எத்தன்மையது!
ஏ பாவம்–அந்தோ!;
நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாமா–நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம்–மிகவும் குற்றமுள்ளவர்களா யிருக்கிறோமிறே.
வீண் ஆசையை யுடையவர்களாய் இருக்கிறோம் அன்றோ

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ டொரு நால்வர் ஓர் இருவர்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வினிகள்

அல்லால்
இம் மதிப்பர்களை ஒழிய

திரு மாற்கு யாமார் வணக்கமார்
ஸ்ரீ யபதிக்கு நாமார்
அங்கு பரிமாறுவாரார்
நம்முடைய செயல் எது

ஏ பாவம்
அவன் அருகே இருக்க இழக்க வேண்டினது
நம்முடைய பாபம்

(1-அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யராய் இருந்த பாபம் என்றும்
2-அயோக்கியன் விலகிய பாவம் என்றும்
3-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாத பாவம் என்றுமாம் )

நன்னெஞ்சே
லாபம் அலாபம் இரண்டுக்கும் கூட்டான நெஞ்சே

நாமா மிகவுடையோம் நாழ்–
நாம் நறு வட்டாணித் தனத்தை மிக யுடையோம்
ஸ்ரீ யபதி என்றால் நம் ஸ்வரூபத்தைப் பார்த்து அகல இறே அடுப்பது
ஸ்வரூபத்தைப் பாராதே கிட்டிற்று நம் அளவில் இல்லாமை இறே

நாழ்-
நறு வட்டாணித் தனமாய் (நிரர்த்தமான வாக் ஸாமர்த்யம் )

நாமாகில் நாழ் மிக யுடையோம் –
ஆகையாலே
யாமார் வணக்கமார் -என்று அந்வயம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபம் -தத்வ ஜ்ஞானம்-விசிஷ்டாத்வைத -அத்வைத -த்வைத ஸித்தாந்தங்கள் —

June 27, 2021

ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்

இதன் ப்ரவர்தகர் – ஸ்ரீ பகவத் ராமாநுஜர்.

ஸ்ரீமல் லக்ஷ;மண — யோகிநஸ்து புவநம் ஸத்யம் ததீச:
ஸ்ரீய:காந்தோ ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில-தந{: பிந்நாஸ் தத: சேதநா:!
ஸத்யா ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா முக்கிஸ்து பக்த்யாதிநா
தத்-ப்ராப்தி: பரமே பதே ததநு-பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே!! !

இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ ச்லோகம்.

இதனர்த்தம் :—

ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார் :—
“புவநம் ஸத்யம்…—ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று.
அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று.
கடையில் காணப்படும் வெள்ளிபாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்த பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது.
ஆகையால் இது பொய்யன்று, மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை
தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது.
பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்.
“மாயையாவது ப்ரக்ருதி என்று ச்ருதி சொல்லுகிறது இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும்,
அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச்சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான
ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய,
அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.

மமயோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம்!
ஸம்பவஸ்ஸர்வ ப10தாநாம் ததோபவதி பாரத (பகவத்கீதை அத். 14 ச்லோ. 3 )

ஜகத்துக்கு மூலகாரணமான என்னுடையதான ப்ரக்ருதி என்கிற வஸ்துவில் ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன்.
இந்தக் காரணத்தால் ஸர்வபூதங்களும் உண்டாகின்றன என்று இந்த ச்லோகத்தின் அர்த்தம்.
இதில் அசேதனமான ப்ரக்ருதியோடு சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால் இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது என்று
சொல்லியிருப்பதால் இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.

„ததீச :—காந்த :… —ஸ்ரீய: பதியான ஸ்ரீமந்நாராயணன் அந்த ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.

„ப்ரஹ்ம ஸ ஏவ… — அவன்தான் பரப்ரஹ்மம். தைத்ரீயோபநிஷத்தில் ப்ருகுவல்லியில், „
எது ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாராயணோபநிஷத்து
முதலான சில உபநிஷத்துக்களில் „நாராயணன் ஜகத்காரணம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால் நாராயணன்தான் ப்ரஹ்மம் என்று கிடைக்கிறது. நிர்குணப்ரஹ்மம் என்று வேறொன்று கிடையாது.
உபநிஷத்தில் ப்ரஹ்மம் என்று எதனால் சொல்லப்படுகிறது ? என்;று ஒரு கேள்வியைக் கேட்டு,
இதனிடத்தில் பெரியதான குணங்கள் இருக்கிறபடியால், இது ப்ரஹ்மம் என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகையால், ப்ரஹ்ம சப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால்,
குணமில்லாத வஸ்துவை இது சொல்ல மாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனான
ஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன்தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.

ஸ: அகிலதனு: — அந்த ஈச்வரன் சேதனர்கள், அசேதன வஸ்துக்கள் இவை எல்லாவற்றையும் சாPரமாக உடையவன்.
ஒரு சேதனனுக்கு – நியதாதேயமுமாய், நியத சேஷமுமான த்ரவ்யம் அந்த சேதனனுக்கு சாPரம் என்று சொல்லப்படுகிறது.

நியதாதேயமாகையாவது — அந்த சேதனனுடையஸ்வரூபத்தை எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை,
அதாவது, அவன் ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமலிருக்கை.

நியதநியாம்யமாகையாவது —- சேதனனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.

நியத சேஷத்வமாவது — அந்த சேதனன் ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கை.

நம்முடைய சாரீரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போன போது அழிந்து போகிறது.
ஆகையால் இந்த சரீரத்துக்கு சேதன ஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சாரீரம் ஆதேயமாய் இருக்கிறது.
விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது.
அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸூக துக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே
இந்த சரீரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சரீரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம்,
ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல் அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலாரசம் போகரஸம்
ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சரீரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிந்நா : ……………..சேதனா : —- இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக் காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.

„ஸத்யா ……………..க்ருதா… இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம்.
அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்;ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது.
அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸ{கம், துக்கம், இவை முதலானவைகளும்,
அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.

„முக்திஸ்து ………………ததநுபூத்யாக்யா… —- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி
இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக்கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.

ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத்தொடங்கி „ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி… என்றும் „
ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துதக்கும் ஹேதுவானவன்… என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்;கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப்படுவதற்கும் காரண பூதன் என்று
சொல்லுகிறபடியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.

“தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷ{ நராதமாந் !
க்ஷpபாம்யஜஸ்ரமசுபாநாஸ{ரீஷ்வேவ யோநிஷ{……–ப.கீ.16-19.
இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன்.
அதிலும், அஸ{ர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும்,

‘தேஷாமஹம் ஸமுத்தர்த்தாம்ருத்யு —ஸம்ஸார-ஸாகராத்!
பவாமி நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம் ! ! “.ப.கீ-12,ச்லோ-7.

இந்தச்லோகத்தில், ‘என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன்
மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்றுபகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு
அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி ;பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான்
என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால், பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்சாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது.
ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.

தைத்ரீயோப நிஷத்தில் ஆநந்த வல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்)
ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிறபடியால் ஸ்ரீ வைகுண்டத்தில் பகவானையும்,
அவனுடைய கல்யாணகுணங்களையும் அனுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது.
ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும்,
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரம நிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம்,
ச்ருதிஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.

ஜகத்-ஸத்யத்வ-நிரூபணம்

ப்ருதிவீ, ஜலம், தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும்,
அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது.
கானல்நீர்போல் (பாலைவனத்தில் மத்யானத்தில் ஸ_ர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம்)அஸத்யமன்று.
கானல் நீரில் ஸ்நாநம், பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம்
முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது.
ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானால், ப்ரவாஹத்திற்கு (வெள்ளம்) முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே,
அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம்
அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது.
அஸத்யமாவது—ஒரு கார்யத்திற்கும் உதவாதது.
அநித்யமாவது—கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது.
இதற்கு த்ருஷ்டாந்தம்—
மண்ணை ஜலத்தைச் சேர்த்து பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது.
அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப்படுகிறது.
கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் ஆகார(உருவம்)த்தைவிட்டு ஓடாகிறது.
அந்த ஓட்டை உடைத்தால் பொடியாகி மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது.
இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான்.
ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்க வேண்டாவோவென்றால்—அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும்,
சிறிது ஸ_ர்யகிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான்.
ஆனால் ப்ரவாஹமாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் கார்யகாரி
(குளிப்பது, குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது) ஆவதில்லை.
இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து.
ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது.
இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப் போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டுகொள்வது.
அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப் பட்ட அஸத்யமாகை விருத்தமன்று.
இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை.

ஸத்யமாவது-எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. இது இரண்டு விதம்–
ஒன்று ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல் அநுவர்த்திக்கும் ƒ மற்றொன்று ஸ்வரூபத்தின் மாறு பாட்டோடு அநுவர்த்திக்கும்.
முதலில் சொல்லியது அபரிணாமி-நித்யம். பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன.
இரண்டாவது (மாறுதல் அல்லது விகாரத்தையுடையது பரிணாமி-அதில்லாதது அபரிணாமி)
பரிணாமி-நித்யம்ƒ ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

ப்ரக்ருதியாவது ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ முதலிய விகாரங்களை அடைந்து கொண்டு
இவைகளுக்கெல்லாம் மூலகாரணமான வஸ்து. உலகில் காணப்படும் எல்லாப் பதார்த்தங்களும் இதன் விகாரங்களேயாகும்.
ப்ரக்ருதி-ஸ்வரூபம் எப்போதும் அநுவர்த்திக்கும் ƒ அதன் விகாரங்கள் அவ்வப்போது உண்டாய் சிலகாலமிருந்து பிறகு கழியும்.
அவைகளைக் கொண்டு காரியங்கள் நடக்கிறபடியால் அவைகளெல்லாம் ஸத்யம்.
ஆனால் ஸ்வப்நத்தில் ஒரு மனிதன் பொன், வெள்ளி முதலியவைகளைக் காண்பதாகவும், அவைகளைக் கொண்டு காப்பு, கடுக்கன்
முதலியவை செய்து தரிப்பதாகவும் காண்கிறான். இப்படி ஸ்வப்நததில் காணப்பட்ட வெள்ளி முதலானவைகளைக் கொண்டு
நகை செய்வது தரிப்பது முதலிய காரியங்கள் நடக்கிறபடியால் அவை ஸத்யமாகத் தடையென்ன என்றால்,
ஸ்வப்நகாலத்தில் அவைகளால் சில கார்யங்கள் நடந்ததாகக் கண்டாலும், து}ங்கி எழுந்ததும், தன் கையிலும் காதிலும்
பூண்டு கொண்டதாகக் கனவு கண்ட காப்பு கடுக்கன் முதலியவைகள் காணப்படுவதில்லை. ஸ்வப்நம் கண்டேன், ஒன்றுமில்லை என்று
அந்த வஸ்துக்களுக்கு இல்லாமை காண்கிறபடியால் ஸ்வப்நத்தில் கண்ட வஸ்துக்களும் அதனால் உண்டானதாகக் கண்ட காரியங்களும் பொய்யாகின்றன. …. ஜாக்ரத்தசையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் காலம்) நடுப்பகலில் கானல் நீரைக் கண்டு, பின்பு கிட்டப்போய்ப் பார்த்தால்,
இது ஜலமன்று நாம் ப்ரமித்தோம் என்று புத்தி உண்டாகிறபடியால் இது மித்யை.
உண்மையான நதீ ஜலத்தில் ஜாக்ரத்–தசையில் நாம் ஸ்நாநபானம் செய்தர்லும், செய்தது பொய்யென்று பின்னால் தோன்றாதபடியாலும்,
ப்ரத்யக்ஷத்தால் காணப்படுகிற சராசர ரூபமான ப்ரபஞ்சம் ஒன்றுமில்லை என்கிற ஞானம் உண்டாகாமையாலும் இவை உண்மையாக உள்ளவை.
இங்கு இது அறியத்தக்கது—-சில இடங்களில் இல்லாத வஸ்துக்கள் தோன்றுகின்றன. சில இடங்களில் இருக்கிற வஸ்துத்தான் தோன்றுகிறது.
ஆகையால் ஒரு வஸ்து தோன்றுகிறது என்கிற இவ்வளவு மாத்திரத்தைக் கொண்டு வஸ்து உண்மையாகவே உள்ளது என்று நிச்சயிக்கக் கூடாது.
கண்டபின் கிட்டப் போய்ப் பார்த்து, வஸ்து அங்கே இல்லாமற்போனால், „வஸ்து இல்லை, இருப்பதாக நாம் ப்ரமித்தோம்…
என்று ஞானமுண்டானால் முன் பிறந்த ஞானம் ப்ரமமென்றும், கண்டது மாத்ரமேயொழிய இங்கே ஒன்றுமில்லை
என்று ஞானமுண்டாகாதபோது முன்புண்டான ஞானம் …… யதார்ததமென்றும் நிச்சயித்து,
இவைகளைக் கொண்டு வஸ்து உண்டு இல்லை என்று நிச்சயிக்கவேண்டும்.

ஸ்வப்நத்தில் கண்ட வஸ்து து}ங்கி எழுந்த பின் கண்டதொழிய ஒன்றுமில்லை யென்றும், பாலைவனத்தில் தோன்றியது
ஜலம் இல்லை என்று உறுதியாகத் தெரிகிறபடியாலும், முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய், அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகிறது.
ப்ரத்யக்ஷத்தில் காண்கிற ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களில் இவை ஒன்றுமில்லை என்கிற புத்தியுண்டாகக் காணாமையால்
இந்த ப்ரத்யக்ஷம் யதார்த்தமாகி அதில் காணும் வஸ்துக்களும் ஸத்யமாக ;இருக்கின்றன. இது ஸத்யம், இது மித்யை, என்று அறிவதற்கு இது வழி.

சராசரரூபமான உலகம் ப்ரத்யக்ஷத்தால் அஸத்யம் என்று ஏற்படாவிட்டாலும், ச்ருதியில் „ப்ரபஞ்சமொன்றும் ஸத்யமன்று…
என்று சொல்லப்படுகிறபடியால், இந்த ப்ரபஞ்சம் அஸத்யம் என்று ஒப்புக் கொள்ள வேண்டாவோ என்றால் ஸர்வஸம்மதமான
ச்ருதிகளில் அப்படிச் சொல்லியிருப்பதாகக் காணவில்லை. மேலும் ப்ரத்யக்ஷ விருத்தமான விஷயத்தை ச்ருதி சொல்லவும் மாட்டாது.
மேல் பார்வையில் சில ச்ருதிகளுக்கு அப்படி அர்த்தம் தோன்றினாலும், ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமில்லாமல் அவைகளுக்கு
அர்த்தம் சொல்ல முடியுமாயிருக்க, ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாக அர்த்தம் செய்வது உசிதமன்று.

ப்ரத்யக்ஷத்தால் அறிந்து கொள்ள முடியாத அத்விதீய- ப்ரஹ்ம-ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கவே ச்ருதி அவதரித்திருக்கிற படியால்
இவைகளுக்கு ப்ரபஞ்சம் மித்யை என்பதிலேயே நோக்கம். ஆகையால் ப்ரத்யக்ஷத்திற்கு விருத்தமாயிருந்தாலும்
ப்ரபஞ்ச மித்யாத்வமே (உலகம் பொய் என்பது) ச்ருதிக்குப் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டாவோ என்னில் –
அத்விதீய-ப்ரஹ்ம – ஆத்மைக்ய – ஞானத்தை உண்டாக்குவதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஸித்தித்தாலன்றோ
ச்ருதிக்கு ப்ரபஞ்ச – மித்யாத்வம் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அது அப்படி இல்லை.
ப்ரத்யக்ஷத்திற்கு எட்டாததாய் ஸம்ஸாரிகள் (கர்மத்தால் இவ்வுலகில் உழலும் ஜீவன்கள்) அவசியம் அறியவேண்டிய
அநேகார்த்தங்களை தெரிவிப்பதற்காகவே ச்ருதிகள் தோன்றியிருக்கின்றன. ஜகதீச்வரன் ஒருவன் இருக்கிறான் என்றும்,
அவனை ஆராதித்தால் நமக்கு இஷ்டமான பலன்களை கொடுக்கிறான் என்றும்,
இது முதலான பல விஷயங்களைத் தெரிவிப்பதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது – ஈச்வரன் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷpக்கிறான் ,
ஜகத்திற்குள் புகுந்து அதை நியமிக்கிறான், தன் ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிக்கிறான், தன்னை ஆராதித்தவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறான்
என்று இது முதலான ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாத பல அர்த்தங்களைத் தெரிவிக்கிறது என்று ஒப்புக்;கொண்டால்
ச்ருதியின் ஆவிர்பாவம் ப்ரயோஜனமுள்ளதாயாகவில்லையா?
இப்படியிருக்க, அத்விதீய – ப்ரஹ்ம – ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கைக்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஒப்புக்கொண்டு,
ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறாப்போல் (இல்லையென்று சொல்வது) மேல் பார்வைக்கு தோன்றும் சில ச்ருதிகளுக்கு
அதுவே அர்த்தமென்று சொல்லுவது உசிதமன்று. அப்படி ஒப்புக்கொண்டால் ஜகத் ச்ருஷ்டியாதிகளைச் சொல்லும்
ச்ருதிகளுக்கு வையர்த்யம் (ப்ரயோஜனமின்மை) வரும்.

இங்கே இது தெரிந்து கொள்ளவேண்டும் — ச்ருதிகளில் சில, ‘ஈச்வரன், ரக்ஷகன், ஜகத்து ரக்ஷpக்கப்படுகிறது,
ஈச்வரன் நியமிக்கிறவன், ஜகத்து நியமிக்கப்படுகிறது, அவன் தரிக்கிறவன், இது தரிக்கப்படுகிறது” என்று
இவ்விதமாக ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள பலவித ஸம்பந்தங்களைச் சொல்லுகின்றன. சில ச்ருதிகள் ஜகத்து இல்லை
என்று நிஷேதிக்கிறாப்போல் தோன்றுகின்றன. இப்படி ச்ருதிகள் இரண்டுவிதமாக இருக்கிறபடியால்,
ச்ருதிக்கு ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் உள்ள முன் கூறப்பட்ட ஸம்பந்தங்களை சொல்வதில் நோக்கா,
அல்லது ஜகத்தை இல்லை என்று சொல்வதில் நோக்கா என்று விசாரிப்போம். ஜகத்தை நிஷேப்பதில்தான் நோக்கம் என்று
ஒப்புக்கொண்டால் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் ஸம்பந்தங்களைச் சொல்லும் ச்ருதிகள் வ்யர்த்தமாய் விடுகின்றன.
ஏனெனில், ப்ரத்யக்ஷத்தினால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் ஒரு ஸம்பந்தம் தோன்றுகிறது.
அந்த ஸம்பந்தத்தை இந்த ச்ருதிகள் அநுவாதிக்கின்றன (வேறொன்றினால் தெரிந்துகொண்டதை மறுபடி சொல்வது) என்று சொல்ல ஒண்ணாது.
அந்த ஸம்பந்தங்கள் ப்ரத்யக்ஷத்திற்கு எட்டினாலன்றோ அதற்கு அநுவாதம் என்று சொல்லலாம்.
ஈச்வரனே கண்ணுக்கு எட்டாதவனாயிருக்க அவனோடு ஸம்பந்தம் எப்படி கண்ணுக்குத் தெரியும்?
இனி அந்த பலவிதமான ஸம்பந்தங்களை ஜகத்தோடு நிஷேதிக்கைக்காக இந்த ஸம்பந்தங்களை ச்ருதி விதிக்கிறது
(ஏற்கனவே தெரியாததை தெரிவிக்கிறது, அல்லது ஒரு கார்யத்தில் ஈடுபடாத ஒருவனை அதை செய்யும்படி து}ண்டுவது.)
என்று சொல்வோமானால், அப்போது கண்களுக்கு எட்டாத அர்த்தங்களை ச்ருதி தானே சொல்லி தானே நிஷேதிக்கின்றது
என்று சொன்னதாக ஆகும். இது பைத்தியக்காரனுடைய வ்யாபாரம் போலாகும்.

ஈச்வரனுக்கும் தனக்கும் உள்ள ஸம்பந்தத்தை அறிந்து அவனை உபாஸித்து இஷ்ட பலன்களை அடைவதற்காக
இந்த ஸம்பந்தங்களை ச்ருதி சொல்கிறது என்றும் சொல்லக் கூடாது.
ஏனென்றால் அப்போது ப்ரபஞ்ச – நிஷேத – ச்ருதிகள் (ப்ரபஞ்சத்தை இல்லை என்று சொல்லும் ச்ருதிகள்)
ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறதா அல்லது ப்ரபஞ்சத்தோடு கூட ஈச்வரனுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை)
முதலிய குணங்களையும் நிஷேதிக்கிறதா என்று விசாரிப்போம்.
ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறது என்றால் ஈச்வரனுடைய ரக்ஷகத்வாதி குணங்களுக்கு நிஷேதமில்லை என்று கிடைக்கும்.
இதனால் ப்ரஹ்மம் நிர்குணம் (குணமற்றது) அத்விதீயம் (இரண்டாவதாக ஒன்று இல்லாதது) என்று சொல்லுவது ஸித்தியாமல்
உத்தேச்ய ஸித்தி (விருப்பத்தினுடைய நிறைவேறுதல்) பிறவாது. அந்த குணங்களையும் நிஷேதிக்கிறது என்று ஒப்புக்கொண்டால் ,
அப்போது ஈச்வரனுக்குச் சொன்ன ரக்ஷகத்வாதி குணங்கள் ஒன்றுமில்லை என்று கிடைக்கும்.
ஆகையால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் கீழ்ச்சொன்ன ஸம்பந்த விசேஷங்களை விதிக்கிற வாக்யங்களுக்கு உத்தேச்யம் ஸித்தியாமல்,
அவைகள் வ்யர்த்தமாய் விடும். தன் ரக்ஷணார்த்தமாக ஈச்வரனை உபாஸிப்பதில் ப்ரவ்ருத்திப்பிப்பதன்றோ
அந்த வாக்யங்களுக்கு உத்தேச்யம்? ரக்ஷகத்வாதி – குணங்கள் அவனுக்கு இல்லை என்று தெரிந்தால்,
தன் ரக்ஷணத்திற்காக சேதநர்கள் எப்படி முயலுவார்கள்? ஆகையால் ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறது போல் தோன்றும்
வாக்யங்களுக்கு ப்ரபஞ்ச நிஷேதத்தில் தாத்பர்யம் கொள்ளுகை அநுபந்நம் (உடன்பாடில்லை).
ஆகையால் சில வாக்யங்கள் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் பலவித ஸம்பந்தங்களை சொல்லி,
அதனால் ப்ரபஞ்சத்திற்கு ஈச்வர பாரதந்த்ர்யத்தை (ஈச்வரனுக்கு அதீனமாய் இருத்தல் – கட்டுப்பட்டதாய் இருத்தல்) அறிவிக்கின்றன.
இந் நிஷேத வாக்யங்கள் ப்ரபஞ்சத்திற்கு ஸ்வாதந்த்ர்யத்தை (சுதந்திரத்தை) நிஷேதிக்கின்றன என்று கொள்ளுகை உசிதம்.
அப்போது ஸ்வாதந்த்ர்ய நிஷேத முகத்தால் (தன்னிஷ்டப்படி நடக்கச் சக்தியற்றது என்று சொல்லுகிற வழியால்)
ஜகத்துக்கு ஈச்வரனோடு ஸம்பந்தம் சொல்லும் ச்ருதிகளால் கிடைத்த ஈச்வர பாரதந்த்ர்யத்தை நிலைப்படுத்தியதாய்
எல்லா வாக்யங்களும் ஸார்த்தகமாகின்றன (ப்ரயோஜனத்தோடு கூடியதாகின்றன). ஆகையால் ச்ருதிகளில் ஜகத்துக்கு நிஷேதம் இல்லை.
ச்ருதி ப்ரஹ்மம் அநந்தம் (அளவற்ற தன்மை) என்று சொல்லுகிறது.
அநந்தமாகையாவது இங்கே இல்லை, இப்பொழுது இல்லை, இதுவன்று என்கிற அளவு இல்லாமலிருக்கை.

ஜடமான (ஞானமில்லாதது) ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்ததேயாகில் அஜடமான ப்ரஹ்மம் ஜடமான ப்ரபஞ்சமன்று என்று
அளவுவரவேண்டி இருப்பதால் ச்ருதியில் ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஆநந்த்யம் (அளவற்ற தன்மை) அநுபந்நம் (அயுக்தம்) ஆகிறது.
ப்ரஹ்மம் அத்விதீயம் என்று ச்ருதி சொல்லுகிறபடியால் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் இரண்டாவதான வஸ்து இல்லை என்று கிடைக்கிறது.
இந்த த்வைத (பல பேதங்களை உடைய உலகம்) ப்ராந்தி (கற்பனை) மாத்திரமாயுள்ளது,
அத்வைதமே பரமார்த்தமாயுள்ளது என்று சில ச்ருதிகள் சொல்லுகின்றன. இப்படியே சில புராணங்களும் சொல்லுகின்றன.
இவைகளால் ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கவில்லையோ என்றால் :-

அநந்தமாகையாவது – தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் அளவில்லாமலிருக்கை. இவைகளில் மூன்றாவது தனக்கு மேற்பட்ட
ஒரு வஸ்து இல்லாமலிருக்கையே ஒழிய அந்த வஸ்துவன்று என்னுமளவில்லாமல் இருக்கையன்று.
ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்தாலும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் ஒரு ப்ரகாரத்தாலும் உயாந்த வஸ்து வேறொன்று இல்லாமையால்
அதற்கு ஒருவித அனுபபத்தியும் இல்லை. சிலவிடங்களில் அத்விதீயம் என்கிற ச்ருதிக்கு தன்னோடு ஸமமான
இரண்டாவது இல்லை என்று பொருள். ஜகத் காரணத்தைச் சொல்லுமிடத்தில் இந்த அத்விதீய பதத்திற்கு தன்னை ஒழிய
நிமித்த காரணம் (பானைக்கு குயவன் நிமித்த காரணம்) வேறில்லை என்று பொருள்.

எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ச்ருதியில் ப்ரபஞ்சம் மாயாமாத்ரமென்று சொல்லப்பட்டவில்லை.
அப்படிச்சொல்லும் வாக்யத்தை ச்ருதியென்று ஒப்புக்கொண்டாலும், ஜீவாத்மாக்களில் தோன்றும் தேவன், மனுஷ்யன்
முதலிய பேதங்கள் பொய்யானவை, எல்லா ஜீவன்களும் ஞானைக – ஆகாரர்களாய் ஸமானர்களர்யிருப்பார்கள்,
அவர்களுடைய ஆகாரத்தில் பேதம் கிடையாது என்று பொருள். புராணங்களில் சொல்லப்படும்
ஸ்வப்ந – த்ருஷ்டாந்தத்திற்கு, ஸ்வப்நத்தில் காணப்படும் வஸ்துக்கள் போல, இந்த உலகம் தோன்றுவதும்
மறைந்து போவதுமாய்க் கொண்டு, அஸ்திரம் (நிலையற்றது) என்பதில் தாத்பர்யம்.
ஆகையால் ஒரு ப்ரமாணத்தாலும் ப்ரபஞ்சம் இல்லை என்று புத்தி பிறக்கிறதில்லையாதலால், இது ஸத்யமென்று ஸித்திக்கிறது.

—–

அத்வைத ஸித்தாந்தம்
இதற்கு ப்ரவர்த்தகர் – ஸ்ரீசங்கராச்சாரியார்

“ப்ரஹ்மைகம் பரமார்த்த – ஸத் ததிதரன் – மாயா மயத்வான் – ம்ருஷா
ப்ரஹ்வைகமுபாதி – பிமபித – மதோ ஜீவேச – பாவம் கதம்!
ப்ராந்திஸ் – ஸம்ஸ்ருதி – ரஸ்ய தத் – ப்ரசமனம் முக்திஸ் – ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி – ச்ரவண – ஜாத் இத்யாஹ{ரத்வைதிந:!!”

இது இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ ச்லோகம்.
ஏகம் – தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும் ஒரு தர்மமும் இல்லாததான,
ப்ரஹ்ம – ஆத்ம வஸ்து, பரமார்த்த ஸத்பரமார்த்தமாயுள்ளது
(ஆத்ம வஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது.)
இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மா தவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும்,
ஆத்ம வஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது.

இங்கு ‘ப்ராதிபாஸிகஸத்” ‘வ்யாவஹாரிகஸத்” இவைகளைக் காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக
‘பரமார்த்தஸத்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ததிதரன் …. ம்ருஷா” – ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது
மாயையின் கார்யமானதால் பொய்;. ‘ப்ரஹ்மை …. கதம்” – ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய்
அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும், ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

‘ப்ராந்தி …. அஸ்ய”- ஜீவாத்மாவுக்கு நான் ஞாதா, நான் கர்த்தா, நான் போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

‘தத்ப்ரசமனம் முக்தி:” அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்.

‘ததபி …. ச்ரணஜாத்” தத்வமஸி என்கிற வேதாந்த வாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால்
(தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்ய ஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி உண்டாகிறது.

‘இத்யா … ந:” என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்கிறார்கள்.

1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிரூபண ப்ரகரணம்
ப்ருதிவீ (பூமி), ஜலம், தேஜஸ் (ரூபம்), வாயுஈ ஆகாசம் என்று பெயருடைய பஞ்ச பூதங்களும்,
அவைகளுடைய கலப்பாலுண்டான ‘பௌதிகம்” (பூதங்களிலிருந்து உண்டானவை), என்று பெயருடைய
சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் ;எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமாவையன்று.
பாலைவனத்தில் மத்யாஹ்னத்தில் ஸ_ர்ய க்ரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத (உண்மையற்ற)
ஜலப்ரவாஹமும் (கானல் நீரோட்டம்) அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையில்லாதபோதிலும்
உள்ளதுபோல் தோன்றுகிறது. அங்கே பரவிய சூரிய க்ரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல,
இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்ச ரூபமாய் காணப்படுகிறது. இதுதான் ப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்ம ஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படுவானேன்? எனில்–
வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது.
இந்த மாயைக்கு தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம்.
அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.

இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு.
அதனால்தான் இது ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று.
இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று
‘ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்” என்றிது முதலிய ச்ருதிகளாலும்
அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் — முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில்
(உதாரணத்தில்) பாலைவனத்தில் பரவின ஸ_ர்ய க்ரணத்தில் ஜலப்ரமம் (ஜல உள்ளது போன்ற ப்ரமை) உண்டாகிறது.
இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது.
அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும்.
அந்த வஸ்து ஸத்யமென்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும்.
இப்படியே மேல் மேல் ஆதார (எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது அதற்கு ஆதாரம்) பரம்பரை
(ஒன்றின்மேல் ஒன்றாக தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.) ஒப்புக்கொள்ள வேண்டியதாக வருகிறது.
ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

ப்ரபஞ்ச மித்யாத்வ நிரூபணம்

ச்ருதி ப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறார்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம்
ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால் — இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை.
இது ஸத்யமென்றால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த ஸத்யமாக ஆகும்.
ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்கு பனின்னும் காணப்படுவதில்லை.
ஸத்யமாய் இருந்தால் இறந்தகாலம், நிகழ் காலம், எதிர் காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப்படவேண்டும்.
அப்படியன்றிக்கே ஒரு காலத்தில் உண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத
வஸ்துக்கள் பரமார்த்த ஸத்யமாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள்
தோன்றுகிறதுபோல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது.
இந்த அர்த்தம் ‘மாயையை உடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்” என்றும்,
‘பரமாத்மா மாயைகளால் அனேக ரூபமுள்ளவனாய்;த் தென்படுகிறான்” என்றும் சொல்லும் பலச்ருதிகளால் கிடைக்கிறது.

மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமாயும்,
ஸத் (ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்லவொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை) என்றும்,
அஸத் (ஒரு காலத்திலும் இல்லாத முயல் கொம்பு போன்றவை) என்றும் சொல்ல முடியாததாயும்,
தன் ஆச்ரயத்தை(தான் சார்ந்துள்ளதை) மறைக்கும் ஸ்வபாவம் உள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை அடைவதுமான ஒரு வஸ்து.
இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும் (கையாளப்படும்).
சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று.
இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும்,
அதிலிருந்து உண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது.
காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறது போல, ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும்.
இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.

அன்றிக்கே ச்ருதிகள், ‘பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை” என்று சொல்லுகிறபடியாலும்,
இந்த ப்ரபஞ்சம் மித்யை (பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸ_ர்ய கிரணத்தில்
தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசியுண்டு (வித்யாசம் உண்டு).
அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்ƒ ப்ருத்வீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத்.
ஸத் என்பது ப்ராதிபாஸிகம், வ்யாவஹாரிகம், பரமார்த்திகம் என்று மூன்று வகைப்படும்.
இதில் ப்ராதிபாஸிக ஸத்தாவது ப்ரஹ்மம் தவிர வேறு வஸ்துக்களில் தோன்றி,
அந்த வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதினால் நிவ்ருத்திப்பது.
அதாவது து}ரத்திலிருந்து பார்க்கும்பொழுது முத்துச்சிப்பியின் ஸ்வரூபம் மறைந்து அது வெள்ளி என்று ப்ரமம் உண்டாகிறது.
பின்பு ஸமீபத்தில் போய் பார்த்தால் இது வெள்ளியன்று சுக்தி (முத்துச்சிப்பி) என்று தெரிகிறது.
இங்கு ப்ரமத்திற்கு ஆதாரமான சுக்தியினுடைய ஸ்வரூப ஜ்ஞானத்தால் வெள்ளி நிவ்ருத்திக்கிறது.
இவ்வாறு முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளிதான் ‘ப்ராதிபாஸிக ஸத்” என்று சொல்லப்படுகிறது.

வ்யாவஹாரிக ஸத்தாவது, ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூத பௌதிக ப்ரபஞ்சம்.
ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி ப்ரபஞ்சம் ஏற்படுகிறது.
வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் ஸாக்ஷhத்காரம் உண்டாகும்போது
முன் ஏற்பட்ட ஆகாசாதி ப்ரபஞ்சம் நசித்துப்போகிறது. இதனால் ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர
மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும்,
ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்திரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.

பரமார்த்தஸத்தாவது-ஒரு காலத்திலும் நிவ்ருத்தியாமல் (நீங்குதல்) எல்லா காலங்களிலும் அநுவர்த்திக்கும்
(இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர்குண ப்ரஹ்மம்.

ஜீவ ஈச்வர பேத ப்ரம நிரூபணம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதான மாயைக்கு இரண்டு அம்சமுண்டு.
ஒன்று தலையெடுத்த ஸத்வகுணத்தை உடையதாயும், மற்றொன்று குறைந்த ஸத்வமுடையதாயும் இருக்கும்.
இவ்விரண்டில் முதலாவது மாயை என்றும், இரண்டாவது அவித்யை என்றும் சொல்லப்படும்.
இந்த இரண்டும் கண்ணாடிபோல் பிம்பத்தை க்ரஹிக்க சக்தியுள்ளது. ஆகையால் ப்ரஹ்மம் இவைகளில் ப்ரதிபலிக்கிறது.
இதில் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், அவித்யையில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் ஒரே ப்ரஹ்மத்தில் பேதம் உண்டாகிறது.
சிலர் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், மாயா பரிணாமமான அந்தக் கரணத்தில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் சொல்லுகிறார்கள்.
அவித்யா அம்சங்களும் அந்தக்கரணங்களும் அநேகங்களாகையால் அவைகளில் ப்ரஹ்ம – ப்ரதிபிம்பத்தால் பல ஜீவர்கள் ஏற்படுகிறார்கள்.

கண்ணாடியில் ப்ரதிபலிக்கிற முகம் நேரிலிருக்கும் முகத்தைக் காட்டிலும் உண்மையில் வேறன்று, ஆகிலும் வேறாகத் தோன்றுகிறது.
அப்படியே இரண்டு கண்ணாடிகளில் ஒரு முகம் ப்ரதிபலித்தால் கண்ணாடியின் பேதத்தால் ப்ரதிபலிக்கும் முகங்கள் வேறு வேறாகத் தோன்றுகின்றன.
வாஸ்தவத்தில் எல்லாம் ஒன்றே. இவ்விதமே ஒரே ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்களில் ப்ரதிபலிப்பதால் மூன்றும் வேறு வேறாகத் தோன்றுகின்றன.
அவற்றில், ஈச்வரரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான மாயையில் அதிகமான ஸத்வகுணமிருப்பதால்,
அது அதிகமான ஞானம், சக்தி, முதலியவைகளை உள்ளதாயிருக்கும். கண்ணாடியிலுள்ள தோஷங்களெல்லாம்
அதில் ப்ரதிபலித்த முகத்தில் தோன்றுகிறதுபோல, மாயையிலுள்ள அதிகமான ஞானம், சக்தி முதலியவை
அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மத்தில் தோன்றுகிறது, அதனால் ஈச்வரன் ஸர்வஜ்ஞன், ஸர்வஸக்தன், ஸத்யஸங்கல்பன்
முதலான வ்யவஹாரங்கள் நடந்து வருகின்றன. இவனுக்கு அதிகமான ஞான சக்திகள் இருப்பதால்
இவன் ஆராத்யனாயும் (பூஜிக்கப்படுபவனாய்) தன்னை ஆராதிப்பவர்களுக்கு பலப்ரதனாயும் ஆகிறான்.
இந்த ஈச்வரன்தான் ஸகுண ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவ ரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான அவித்யை அல்லது அந்தக்கரணம் ஸத்வகுணம் குறைவாயிருப்பதால்
அல்பமான ஞான சக்திகளை உடையதாயிருக்கும். அதனால் அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மம்
அல்பஜ்ஞமாய் அல்பசக்திகமாய்த் தோன்றுகிறது. இதனால் ஜீவன் அல்பஜ்ஞன் அல்பசக்திகன் என்கிற வ்யவஹாரம் நடந்து வருகிறது.

மாயா பரிணாமமான அந்தக்கரணத்தின் விகாரங்களான ஞானம், இச்சா (ஆசை), க்ருதி (முயற்சி), த்வேஷம், ஸ{கம், துக்கம்
முதலானவைகள் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கிற ஜீவனிடத்தில் தோன்றுகிறபடியால் ஜீவனுக்கு நான்
ஞாதா (அறிபவன்), போக்தா (அனுபவிப்பவன்), கர்த்தா (செய்பவன்) ஸ{கீ, துக்கீ முதலிய வ்யவஹாரங்கள் நடக்கின்றன.

ஜலத்தில் ப்ரதிபலித்த சந்திரனிடத்தில் ஜலத்திலுண்டாகும் அசைதல் முதலியவை தோன்றி, சந்திரன் அசைகிறான் என்று
ப்ரமத்தால் சொல்லப்படுவதுபோல் அந்தக்கரணத்தில் உண்டாகும் சலநாதிவிகாரம் (அசைதல் முதலிய செய்கைகள்)
அதில் ப்ரதிபலித்த ப்ரஹ்மத்தில் தோன்றுவதால், ஜீவன் இகலோக, பரலோக ஸஞ்சாரம்
(இவ்வுலகம் மேலுலகம் இவைகளுக்கு போவது, வருவது) செய்கிறான் என்கிற வ்யவஹாரம் உண்டாகிறது.

ஜீவனுக்கு ஞானம், சக்தி முதலியவை குறைவு. அதனால் ராகத்வேஷாதிகளாலே தனக்கு இஷ்டமான வஸ்துவை
அடைவதற்கும் சக்தியற்றவனாய், அதற்காக ஈச்வரனை உபாஸித்து, அவனுடைய அநுக்ரஹத்தால் ஐச்வர்யம் முதலான
ஸம்ஸாரிக பலத்தை (ஸ்வர்கம் பூமி இவைகளிலேயே அனுபவிக்கக்கூடிய பலம்) அடைகிறான்.
நிஷ்காமனாய் (பலனில் ஆசையற்றவனாய்) ஈச்வரனை உபாஸித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி உண்டாகி
வேதாந்த ச்ரவணத்திற்கு அதிகாரியாகிறான் (ஒரு காரியத்தைச் செய்வதற்கு யோக்யதை உடையவனாகிறான்).

பந்த மோக்ஷ நிரூபணம்
இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே.
இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தின் அருகில் வைக்கப்பட்ட செம்பரத்தம் பூவின் சிவப்பு தோன்றுவது போல,
இந்த ஜீவனுக்கு உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன.
இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய
வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி பிறக்கிறது.
பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய் , அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான்.
பிறகு குருவின் உபதேசத்தால் ‘தத்வமஸி” என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்த ஜ்ஞானம் உண்டாகிறது.
இந்த வாக்யத்தில் ‘தத்” என்கிற பதத்துக்கு ஸச்சிதானந்த ரூபமாய், ஸர்வ விகார ஹிதமாய்
அத்விதீயமான பொருள் ப்ரஹ்மம். ‘த்வம்” என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து
அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்த்ரியம் முதலிய உபாதிகளோடு கலந்திருக்கும்
ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள்.
இவையிரண்டுக்கும் அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

இப்படி குரு உபதேசத்தாலே பரோக்ஷ ரூபமான நிர்விசேஷ சிந்மாத்ர ப்ரஹ்மாத்ம ஐக்ய ஜ்ஞானம் உண்டாகிறது.
பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், ‘தத் த்வமஸி” வாக்யத்தால்
ஸாக்ஷாத்கார ரூபமான முன் சொன்ன ஜ்ஞானம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து
ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தைச் சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்து விட்டாலும்
சுழலுவது சில காலம் அநுவர்த்திக்கிறாப்போலே, இந்த கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்ரம் சிலகாலம் நிற்கிறது.
இந்த நிலைதான் ஜீவன் முக்தியவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு ப்ராரப்த கர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்துவிடுகிறது.
இந்த நிலை விதேஹ முக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம்.
அதாவது அவித்யா ரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்ம ஸ்வரூப ஆவிர்பாவம்.
இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.

இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும்,
ஜீவப்ரமங்கள் அபின்னமென்றும் ஒப்புக்கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

———

த்வைத ஸித்தாந்தம்
இந்த ஸித்தாந்த ப்ரவர்தகர் – ஸ்ரீ ஆநந்த தீர்த்தர்

“ஸ்ரீமந் மத்வ – மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ
பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா:!
முக்திர் – நைஜ – ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் – ஸாதனம்
ஹ்யக்ஷாதி – த்ரிதயம் ப்ரமாணமகில – ஆம்நாயைகவேத்யோ ஹரி:!!”

த்வைத ஸித்தாந்தம்
மஹாவிஷ்ணு ஸர்வேச்வரன் – ஸர்வசக்தன், முக்தியளிப்பவன் தோஷமற்றவன்.
மஹாலக்ஷ்மி – விஷ்ணுவின் பத்னி, அவனுக்கு மட்டுமே அடங்கியவள். எல்லாவிடத்தும் வ்யாபித்திருப்வள்.
இவர்கள் இருவர்தான் நித்ய – முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது. எல்லாருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தியடைகிறார்கள்.
சராசர ரூபமான ஸகல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது. அஸத்யமன்று.
ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள்.
ஜீவர்கள் பும் ஜாதி, ஸ்த்ரீ ஜாதி என்று இருவகைப் பட்டவர்கள்.
புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ – சரீரத்தை அடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ ஜாதியராகவே இருப்பர்.
ஸ்த்ரீ ஜாதியர் ஸம்ஸார தசையிலும், மோக்ஷ தசையிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பர்.

இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்ய ஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப்பட்டிருப்பார்கள்.
இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி-கணம், பித்ரு-கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தம-கணம் என்று ஐந்து வகையினர்.
அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை உண்டு.
ப்ரஹ்மா, வாயு முதலானோர் தேவ கணங்கள். நாரதர் முதலியவர் ரிஷி கணங்கள்.
சிராதிகள் பித்ரு கணங்கள். ரகு, அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி கணங்கள்.

மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த-ஜீவர் என்று இருவகைப்பட்டிருப்பார்கள்.
த்ருண ஜீவர் ப்ரஹ்மத்தின் ‘ஆத்மா” என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள்.
இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹ-நாசநாந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள்.
த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள்.
இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன-அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதை உடையவர்கள்.
இவர்கள் ஸதாசாரம், பகவத்-பக்தி முதலான நல்ல குணங்களை உடையவராயிருப்hர்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

எப்போதும் ஸுக-துக்கங்களை கலந்து அனுபவிப்பார்கள் நித்ய-ஸம்ஸாரிகள்.
இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்கம் போவதும், பாப கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்துக்கு வருவதுமாக சுற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யோத்தமர் என்று நான்கு விதம்.
இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள்.
இவர்கள் பகவானிடத்திலும், பகவத்-பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்குணங்களையுடையவராய் இருப்பார்கள்.

ஜீவாத்மாகள் எல்லோரும் ஞான-ஆநந்த ஸ்வரூபர்கள். மிகவும் அணு பரிமாணமுடையவர்கள். பகவானுக்கு கிங்கரர்கள்.
முக்தியோக்ய ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு பக்ஷ்யாதி -ஜங்கம ஜீவர்கள் பக்தி, பகவத்
மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவத் உபாஸனம் ஸாதனம்.
இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ – ஈச்வரர்களுக்கு ஸ்வரூப பேதம் ஒப்புக்கொள்ளப்படுகிறபடியால் இது த்வைத ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

———

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மதுரை கள்ளழகர் திருக்கோவில்–

June 26, 2021

ஸ்ரீ மதுரை கள்ளழகர் திருக்கோவில்

மூலவர் ஸ்ரீ பரம ஸ்வாமி
உற்சவர் ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபாத்ரி நாதர்), ஸ்ரீ கல்யாணசுந்தர வல்லி
அம்மன்/தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் ஜோதி விருட்சம், சந்தனமரம்.
தீர்த்தம் நூபுர கங்கை
புராண பெயர் திருமாலிருஞ்சோலை
ஊர் அழகர்கோவில்
மாவட்டம் மதுரை

அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.
இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும்.

இந்த மலையில் திருமால், “அழகர்”ன்ற பெயரில் கோவில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது.
இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி,
விருஷபாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.

இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது.
அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.
இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோவில் இருக்கிறது.
இம்மலையில் பலவகை மரங்களும், செடிகொடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கின்றன.
இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலை சுற்றி நிறைய வளர்ச்சிப்பணிகள், மாற்றங்கள் எல்லாம் நடந்ததிருக்கு.
இந்த கோவிலின் காலம் சரியாக தெரியவில்லை என்றாலும் இந்த திருக்கோவிலை பாண்டிய மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
கி.பி 1251 முதல் 1563 வரை இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னர்களின் வசம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் காலக் கட்டத்தில்தான் இந்தத் திருக்கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன்
புதுப்பித்தாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
அதன்பிறகு கி.பி1251 முதல் 1270 வரை மதுரையை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தாராம்.
அதன்பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வந்தபோது, கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் பல புணரமைப்பு பணிகள் செய்து,
ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தாராம். அதன்பின் ஆட்சி செய்த நாயக்கர்கள் அழகர் கோவிலை
பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நன்றாக பராமரித்தார்கள்.
அதன்பிறகு கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்தக் கோவிலில் பல திருப்பணிகளை செய்தாராம்.
சங்க சிறப்புப் பெற்ற இத்தலத்தைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர்.
நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.

எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில்.
மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கு.
இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய வராக புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம்,
ஆக் நேய புராணம் முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை
விரிவாக எடுத்து சொல்லப்பட்டு இருக்கு. இங்குக் கோவில் கொண்டு உறைகின்ற இறைவன் அழகர் என்று சொல்லபடுகிறார்.
இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த திருத்தலம் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டு இருக்கு.
கோவில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும்,
வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் சொல்லப்படுகிறது.
நாட்டுப்புறப் பாடல்களில் உட்கோட்டையை நலமகராசன் கோட்டை என்று இத்தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால்
அவர் காலத்திலேயே இக்கோவிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது.
இங்குள்ள வெளிக்கோட்டை கி.பி. 14 – ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது.

பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியம் கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாகும்.
இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தததாம்.
அது சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாம். வெளிக்கோட்டைப் பகுதியில் தேர் மண்டபம் இருக்கு.

தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் உட் கோட்டையின் தெற்கு வாசலான இரணியம் வாசலை அடையலாம்.
இவ்வாசலை தாண்டி உள்ளே நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானை வாகன மண்டபம்.
இந்த மண்டபத்தின் வடக்கே கோபுரம் அமைந்திருக்கிறது.
இந்த கோபுரவாசலில் உள்ள கல்வெட்டுகளில் கி.பி. 1513 – ல் ஆண்ட விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே முக்கியமானதாகும்.
எனவே இக்கோபுரம் 16 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இக்கோபுர வாசலை மக்கள் பயன்படுத்த முடியாது.
எப்போதும் அடைத்தேக் கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச் சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன.
இவையே பதினெட்டாம் படிக் கருப்பணசாமியாக வழிப்படப்படுகிறது.

இதன் எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஆண்டாள் மண்டபம், அல்லது சமய மண்டபம் எனப்படுது.
ஆடி, சித்திரை, திருவிழாக்களில் இக்கோவில் ஆச்சாரியர்களான ஆண்டாள் இம்மண்டபத்தில் வீற்றிருப்பார்.
இதற்கு வடப்புறத்தில் உள்ளது கொண்டப்பநாயக்கர் மண்டபமாகும்.
இதற்கு வடப்புறம் சென்று மேற்கே திரும்பினால் வண்டிவாசல் என்ற வாசல் காணப்படுகிறது .
இதன் வழியாக நுழைந்து மேற்கு நோக்கி சென்றால் எதிராசன் திருமுற்றம் என்று வழங்கப்படும் பரந்த வெளியை அடையலாம்.

இங்கே பெருமாள், சுந்தரராஜராக அருள் பாலிக்கிறார். இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும்
பரமஸ்வாமியும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர்யும் தங்கத்தினால் ஆனதாகும்.
பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக
புராணங்களில் சொல்லப்படுகின்றது. இக்கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு
தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது.

அடுத்து வருவது எதிராசன் திருமுற்றம். இம்முற்றம் ஸ்ரீ ராமானுஜர் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த முற்றத்தின் நடுவில் திருக்கல்யாணமண்டபம் உள்ளது.
பங்குனி உத்திரத்தில் இங்குதான் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது.
இம்மண்டபத்தை விஜயநகர மன்னர் காலச்சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு பார்ப்பதற்கு கலைநயத்தோடு இருக்கிறது .
இத்திருமுற்றத்தில் பல மடங்கள் சமயப் பணியாற்றின. அதில் முக்கியமானது இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட
திருமாலிருஞ்சோலை ஜூயர் மடம் இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்து பல ஜீயர்கள் இங்கே தொண்டாற்றினார்களாம்.

திருக்கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள தொண்டைமான் கோபுரம், செல்வத்தூர் காதியந்தர் மகனான தொண்டைமான்
என்பவரால் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு கல்வெட்டு குறிப்புகள் இருக்கு.
இந்த கோபுரவாசலை அடுத்து உள்ளே காணப்படும் மண்டபத்தை சுந்தரபாண்டியன் கட்டினான் என்றும்,
அதனால் இவருக்கு பொன் மேய்ந்த பெருமாள் என்றும் அழைக்கபட்டாராம்.

கொடிக்கம்பத்தை அடுத்து இருக்கும் கருடமண்டபம், ஆரியன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.
இதற்கு படியேற்ற மண்டபம் என்றும் பெயர் உண்டு. இந்த மண்டபத்தை தோமராச அய்யன் மகனான ராகவராஜா என்பவர் கட்டி முடித்தாராம்.
படியேற்ற மண்டபத்தை அடுத்துள்ளது முனைய தரையன் திருமண மண்டபமாகும்.
இதற்கு அலங்கார திருமண மண்டபம் என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது.
இம்மண்டபத்தைக் கட்டியவன் ”மிழலைக் கூற்றது நடுவிற் கூறு புள்ளுர்க் குடி முனையதரையனான பொன் பற்றுடையான்
மொன்னப் பிரான் விரதம் முடித்தப் பெருமான்” என்று கல்வெட்டுக்கள் மூலம் சொல்லப்பட்டு இருக்கிறது.

மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.
மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் இங்கு அமர்ந்தக் கோலத்தில் காட்சித் தருகிறார்.
பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம். சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் முக்கியமானது மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஆகும்.
அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பது மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார்.
அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின்
கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது.
கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார்.

அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை.
கோபமடைந்த துர்வாசரோ, “மண்டூக பவ” அதாவது “மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ” என சாபமிட்டார்.
சாபம் பெற்ற சுதபஸ், “துர்வாசரே! பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை.
எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்”, என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய்.
அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும், என்றார்.
அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு
குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில்
மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்.
அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.

மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில்,
சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.
சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனிவிழா என கொண்டாடப்பட்டு வந்தது.
திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கிவிட்டார்.
அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்று முதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர்பெற்றாள் அன்னை.
இந்தத் திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் “கள்ளழகர்” ஆனார்.

அழகரின் அபூர்வ வரலாறாக சொல்லப்படுவது, ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது.
ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும்போது,
அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு.
எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும்படி
ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன.
நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.

சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும்
என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு,
இவனுக்கு காட்சி கொடுத்து “வேண்டியதை கேள்” என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்தபோது காட்சி கொடுத்தீர்கள்.
எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு
பூஜை செய்யும் பாக்கியத்தை எனக்குத் தரவேண்டும் என்றான்.

தர்மதேவனின் வேண்டுக்கோளின்படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார்.
சுந்தரம் என்றால் “அழகு”. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது.
அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

அழகர்கோவிலின் சிறப்பம்சம் கருப்பண்ணசுவாமி இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.
பதினெட்டாம் படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
இப்பகுதி விவசாயிகள் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி
அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

வசந்த மண்டபத்திற்கு கிழக்கே சற்றுத் தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் அரை குறையாக ஒரு கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசய நகர மன்னர்களின் வம்சத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது.
இதன் காலம் கி.பி. 1646 ஆகும். எனவே கி.பி. 16 – ஆம் நூற்றாண்டு தொடங்கப் பெற்று பாதியிலேயே நின்று விட்டது என்று அறியலாம்.
இதனை இராய கோபுரம் என்று மக்கள் வழங்குவர்.

நேர்த்திக்கடன்: தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர்.
எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.
பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.
ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம்.
பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

————–

புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர்.
சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என
விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.
வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார்.
திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று
மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது.
மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது.
முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.

தேரோட்டம்
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.

தலவரலாறு
சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது
எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை
மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில்
நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார்.
முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

சிலப்பதிகாரத்தில்
அவ்வழி படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு
தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு. என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

மேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில்
புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் .
ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை.
இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது.
ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஜ்வலா நரசிம்மர்

ஜ்வால நரசிம்மர், அழகர் கோவில்
கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும்.
இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன்
முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது .
யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.
மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்

தலத் தகவல்
மூலவர் – அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
தாயார் – சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
காட்சி – சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
திசை – கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் – நூபுர கங்கை எனும் சிலம்பாறு
விமானம்- சோமசுந்தர விமானம்
உற்சவர் – கள்ளழகர்
மூலவர் சிறப்பு
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நடத்தப்படும் தைலப் பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும்.
இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

நைவேத்தியம்
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது.
அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.

பாடல்கள்
பெரியாழ்வார் – 24 பாடல்கள்
ஆண்டாள் – 11 பாடல்கள்
பேயாழ்வார் – 1 பாடல்
திருமங்கையாழ்வார் – 33 பாடல்கள்
பூதத்தாழ்வார் – 3 பாடல்கள்
நம்மாழ்வார் – 36 பாடல்கள்

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. -நாச்சியார் திருமொழி

ஆக மொத்தம் 108 பாடல்கள்.
இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பரிபாடலில்
இக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர்.
இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்

பாடல் (மூலம்) செய்தி
கள்ளணி பசுந்துளவினவை கருந்துளசி மாலை அணிந்தவன்
கருங்குன்று அனையவை கருங்குன்றம் போன்றவன்
ஒள்ளொளியவை ஒளிக்கு ஒளியானவன்
ஒரு குழையவை ஒரு காதில் குழை அணிந்தவன்
புள்ளணி பொலங்கொடியவை பொலிவுறும் கருடக்கொடி உடையவன்
வள்ளணி வளைநாஞ்சிலவை மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
சலம்புரி தண்டு ஏந்தினவை சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
வலம்புரி வய நேமியவை சங்கும், சக்கரமும் கொண்டவன்
வரிசிலை வய அம்பினவை வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
புகர் இணர் சூழ் வட்டத்தவை புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
புகர் வாளவை புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-10–நெறிந்த குழல் மடவாய்–

June 26, 2021

கீழில் திருமொழியில்
விண்ணுளாரிலும் சீரிய முமுஷுவானவன் தன்னையே இரண்டு கூறாக
அநேகதா பவதி -பண்ணி
அனுசந்திக்க வல்லன் என்னும் பிரகாரத்தைத்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் ஒருவருக்கு ஒருவர்
நந்தன் மதலையைக் காகுத்தனை -என்று
உந்தி பறந்த வ்யாஜத்தாலே அனுசந்தித்தார் –

இத் திரு மொழியில்
இந்த முமுஷுத்வத்துக்கு ஹேதுவான ஈஸ்வரன்
பூர்வமே கிருஷி பண்ணி விளைத்த பிரகாரத்தைத்
திருவடி தூது போய்
சங்கா நிவ்ருத்தி பண்ணித்
திருவாழி மோதிரம் கொடுத்த வ்யாஜத்தாலே அருளிச் செய்கிறார் –

அவன் தான் விஷயீ கரித்த பிரகாரம் தான் என் என்னில்
நாநாவான அஞ்ஞாத ஸூஹ்ருத்தளவு வன்றிக்கே –
பாப விமோசந ஸூஹ்ருத தர்மத்திலே நின்று புண்ய பாபங்கள் புஜித்து அறும் அளவன்றிக்கே
ஸ்வீகார விஸிஷ்ட த்யாகமாய்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விடுகையும் அன்றிக்கே

(தியாகமே பிரதானம் -ஸ்வீ காரம் அப்ரதானம் -அஜீரணம் போவதே -பிரதானம் –
அவன் உபாயம் -எதிர் சூழல் புக்கு நம்மைப் பெற இருக்க
விட்டே பற்ற வேண்டும் –
இதுவும் இல்லை இங்கு -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )

முந்துற யுரைக்கேன் (9-8-1)-என்கிறபடியே
சம தமதாதிகளை யுடையவனுக்கு ஆச்சார்யன் ஸந்நிஹிதனாய்த்
தன்னுடைய ஞான அனுஷ்டானங்களாலே சங்கா நிவ்ருத்தியைப் பிறப்பித்து
(திருவடி தானே வந்து சங்கா நிவ்ருத்தி பிறப்பித்து )

இந்த ஞான அனுஷ்டானத்துக்கு வாசகமுமாய்
சம்பந்த பிரதானமுமான திருமந்திரத்தையும் உபதேசித்துத்
(பிரணவம் பிரதானம் -சம்பந்தம் சொல்லவே திருவடி வந்தார் )
தன்னோடே சேர்த்துக் கொள்ளும் என்றும்

கார்யப்பாடுகளாலே அல்பம் பிரிவு உண்டானாலும்
ஆச்சார்யனுடைய தாழ்ச்சியாலும் -(நீர்மையாலும் )
மந்திரத்தில் உண்டான கௌரவ அர்த்த பிரகாசாத்தாலும் மீண்டும் கூட்டிக் கொள்ளும்
என்றும் அளவு இறே திருவடி முகத்தால் காணலாவது –

பிராட்டிக்கு சம தமதாதிகள் நித்யமாகையாலும்
கார்யப்பட்டாலே வந்த பிரிவுக்குத் திருவடியை வர விட
(ராவண வதம் -தேவர்கள் கார்யப்பட்டாலே தானே பிரிவு )

அவரும் இவரை
வா நராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத் ஸமா கத –என்று சங்கிக்க
(நீசனேன் -சர்வஞ்ஞன் சர்வேஸ்வரன் பொருந்துமோ நமது சங்கை
ஞானம் ஆனந்தம் சாம்யம் மனம் ஒற்றுமை )

ராம ஸூக்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம ஜாயதே -என்று
தம் பின் பிறந்த இளைய பெருமாள் அந்தப்புரக் கார்யத்துக்கு ஆளாவாரோ என்று
பூர்வ மேவ உண்டான சங்கை நடைக்கையாலே அவர் நிற்க
(தேவரீர் இளைய பெருமாள் மேல் பூர்வமே சங்கை கொண்டீரே
பெருமாள் திரு உள்ளத்தில் சங்கை நடக்கையாலே –
மீண்டும் தேவரீர் பாகவத அபசாரம் படக்கூடாதே என்று அன்றோ பெருமாள் திரு உள்ளம் )

தேவரீர் அளவிலே என்னை வரவிடும்படி இறே மஹா ராஜருக்கும் பெருமாளுக்கும் பிறந்த ஐக்யம்
அதுக்கு ஒரு ஹேது அறியேன் என்ன

இவன் ராக்ஷஸ கந்த ரஹிதன் -என்று விஸ்வஸித்துத்
திருவாழி மோதிரத்தையும் பெருமாள் திரு விரலின் சேர்த்தியையும்
நினைத்துக் கைக் கொண்டாள் இறே

இப்படித் தெளிவித்தான் இறே

ஆரேனாகிலும் தெளிவித்தவன் ஆச்சார்யனாகவும்
தெளிந்தவன் சிஷ்யனாகையும் இறே உள்ளது –

(சாரதி ரதிக்குத் தெளிவித்து கீதாச்சார்யன் அன்றோ
ரிதியான அர்ஜுனன் தன்னை சிஷ்யன் என்றே சொல்லிக் கொண்டானே
இங்கு திருவடி -சீதா பிராட்டி )

அவர் (பெருமாள் )தாமும்
வசிஷ்டாதிகளுக்கு சிஷ்யருமாய் இறே இருப்பது –

———-

இப் பாட்டு பிரதம விஷயீ காரமே பிடித்து அருளிச் செய்கிறார் –
(பிராட்டி திருவடியை பிரதம விஷயீ காரம்
பெருமாள் பிராட்டி பிரதம விஷயீ காரம் என்றுமாம் )

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

பதவுரை

நெறிந்த கருங்குழல்–நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்–மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
பிரானைப் பிரிந்து தனிமையில் துவண்டு இருப்பதையே மடப்பம் இங்கு
நின் அடியேன்–உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்–விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த–நெருங்கின
மணி–ரத்நங்களை யுடைய
முடி–கிரீடத்தை அணிந்த
சனகன்–ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை–ருத்ர தநுஸ்ஸை
இறுத்து–முறித்து
நினை–உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது–மணம் புரிந்து கொண்டதை
அறிந்து–தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட–(துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்–அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை–விலங்க
நடு வழியில் தடுக்க–செறிந்த சிலை கொடு
(தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை–(அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்–அழித்ததும்
ஓர் அடையாளம்–ஒரு அடையாளமாகும்–
அடியேன் ராம தூதன் தாசன் என்று தேவரீர் அறிய அடையாளம்
பெருமாளுடைய சர்வாதிகத்வத்துக்கு இது அடையாளம் –

நெறிந்த குழல் மடவாய் –
நெறி பிடித்து -மிகவும் இருண்டு தோன்றுகைக்குத் தகுதியான குழல் இறே கிடக்கிறது
பெருமாள் அருகே செல்வு தோன்ற மேநாணிப்போடே இருக்கக் கடவ இவள் ஓடுக்கைத்தைக் கண்டு
மடவாய் -என்கிறான்

நின்னடியேன் விண்ணப்பம்-
ஒரு வார்த்தை ஒப்பிக்கும் போது தாழ்ச்சி சொல்லி நின்றால் இறே சொல்லலாவது
இமவ் முனி சார்தூலவ் கிங்கரவ் ஸம் உபஸ்திதவ்—என்று
நான் உன் அடியான் -என்னை ஏவிக் காரியம் கொள்ள வேணும் என்பது –
லோக நாதம் புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -என்பது –
இன்னார் தூதன் –என்றால் போலே
தன்னை விஸ்வசிப்பிக்கைக்காக அவன் தானும் சொன்னான் இறே
உனக்கு அடியானான நான் விண்ணப்பம் செய்யும் வார்த்தையைக் கேட்டு அருள வேணும் –

செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து
அபிஷேகம் பொருந்தும் படி –
பிராப்தனான ஜனக ராஜனுடைய ரத்னம் செறிந்த அபிஷேகம் என்னவுமாம் –
வீர சுல்கமான வில்லை முறித்து

நினைக் கொணர்ந்த தறிந்து
இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-என்னும்படி
பாணிக் கிரஹணம் செய்து கொண்டு போகிறது அறிந்து –

அரசு களை கட்ட அரும் தவத்தோன் இடை விலங்கச்
இருபத்தொரு படிகால் ஷத்ரிய வம்சத்தை நசிக்கும் படி சக்தனாம் படி செய்த தபஸ்ஸை யுடைய
பரசு ராமன் அத்யுத் கடமாகச் சில பருஷ பாஷணங்களைச் செய்து
வழி யிடையிலே போகாதே கொள் -என்று விலக்குகையாலே
அவன் தபஸ் பலம் புஜிக்காமல் நீங்கி -ஷிபாமி (ஸ்ரீ கீதை -16-19)-என்ற மாத்ரத்தாலே சிதைந்தது இறே

(பரசுராமன் தன்னுடைச்சோதி எழுந்து அருளுவது ஸ்ரீ மத் பாகவதம் சொல்லும்
அவ்வாறு பரசுராமனுக்கு இல்லையே
ஸ்வரூப ஆவிர்பாவம் அடையாமல் -தபஸ்ஸூ பலம் புஜிக்காமல் அனுபவிக்காமல் முடிந்ததே )

களை கட்டல் -கொலை

விலங்க-விலக்க என்றபடி

செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
ஸ்ரீ பஞ்சாயுத பரிகணநையிலே செறிந்தது இறே -இந்தச் சிலை
(சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் –8-1–
அடை மொழி இல்லாமல் சிலைக்கும் தண்டுக்கும் -அதில் முதல் சிலை தானே )
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் (பெரியாழ்வார் )-என்னக் கடவது இறே
இப்படி இருக்கிற வில்லாலே அவனுடைய தபஸ்ஸைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்

சோகம் நிவ்ருத்தமாம் அளவும் மாஸூச என்றால் போலே
சங்கை நிவ்ருத்தமாம் அளவும் அடையாளங்கள் சொல்ல வேண்டி வரும் இறே
(முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் விஷாத யோகம் –
16 அத்யாயத்தில் -தேவாசுர ஸ்ரவண ஜனித சோகம் —
18 அத்யாயத்தில் -பிராயச்சித்த தர்மம் செய்வதில் அருமை உணர்ந்த சோகம்
இப்படி மூன்று இடங்களில் சோக நிவ்ருத்தி உண்டே )

இத்தால்
அசாதாரண ஸந்நிதியில் சாதாரண ஸ்வரூப ஆவேச சக்தித்தினுடைய நில்லாது என்னும் இடம் தோன்ற
ஆவேச முகத்தாலே அத்யுத்கட பாபத்தையும்
ஆவேச கார்யம் தலைக் கட்டினவாறே தானே விளைத்து
தபஸ் சக்தியையும் வாங்கி
இவனுக்கு வெளிச் சிறப்பை யுண்டாக்கி
உபகார ஸ்ம்ருதியும் நடக்கும்படி பண்ணினான் என்கிறது –

இப்படி ஆசரித்துக் காட்டினால் இறே
அசாதாரணத்துக்கும் சாதாரண ஸ்வரூப ஆவேசத்துக்கும் வாசி தெரிவது —

———

இதுவும் அத்யந்த ரஹஸ்யமாய் இருபத்தொரு அடையாளம் –

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

பதவுரை

அல்லி–அகவிதழ்களை யுடைய
அம் பூ–அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய் பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்–(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்–விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்–(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்–ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்–மடப்பத்தையு முடைய
மானே–மான் போன்றவளே!
கேட்டருளாய்–(அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது–அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்–இனிமையான இருப்பாக
இருந்தது–இருந்ததான
ஒர் இடம் வகையில்–ஓரிடத்தில்
மல்லிகை–மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு–சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்–(நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்–

அல்லியம்பூ மலர்க் கோதாய்
அல்லி தோன்றும் படி சற்றே மலர்ந்து
அழகிய பூவாலே கட்டப்பட்ட மாலை போலே ஸுமநசம் தோன்றும் படி இருக்கையாலே
கோதாய் -என்கிறான் –

அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய்
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவர் திருவடிகளிலே பணிந்து –
என் தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன் –
வாய் படைத்த ப்ரயோஜனம் பெறும் படி
ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறேன் -என்கிற அளவிலே

துணை மலர்க் கண் மடமானே
திரு உள்ளம் ப்ரஸன்னமாய்
புத்ரவத் கடாக்ஷித்ததாலே பவ்யமான மான் போலே இருக்கிறவளே

அன்றிக்கே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்
மடமான போலே கண்ணை யுடையவள் -என்னவுமாம்

எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
நல்ல ராத்ரியிலே
போக யோக்யமான போதிலே
போக ப்ராவண்ய வர்த்தகமாக இருக்கைக்கு சமைந்த இடத்திலே
ஓர் பார்ஸ்வத்திலே நான் இருத்தலாலே தான் இருந்த
அத்விதீயமான படுக்கையிலே

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம்
தூராத் கந்தியான மல்லிகையாலே
தான் என்னைப் பந்திப்பது
நான் தன்னைப் பந்திப்பதாய்
ஒருவருக்கு ஒருவர் ஊமத்தங்காயாம் படி இறே படுக்கை வாய்ப்பும் தான் இருப்பது –

தானும் நானும் அறியுமது ஒழிய இளைய பெருமாளும் அறியாத அடையாளம் –
எங்கள் மாமனார் தண்ணீர் துரும்பு அறுத்துத் தரப்
(பரசு ராமன் தடை நீக்கியது பெருமாள் செய்து இருந்தாலும் மாமனார் காரியமாக அன்றோ இவள் திரு உள்ளம் )
பெருமாளோடே சிறிது காலம் (ஸமா த்வாதச தத்ராஹம்) ஒரு படுக்கையில் இருந்து
போந்தவள் அன்றோ நான் – என்று ஒரு தஸா விசேஷத்தில் தாமே அருளிச் செய்தார் இறே

இது தன்னை தமிழர் சொன்ன
ஒப்பணிதல் நேர் -என்னவுமாம் இறே –

——–

ராஜ்யத்துக்கு அபிஷேகம் செய்வதாக உபக்ரமித்துத்
திருக் காப்பும் நாணும் சாத்திக் குறை வற்ற காலத்திலே
வந்ததொரு விக்நம் சொல்லுகிறது —

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

பதவுரை

கைகேசி–கைகேயி யானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்–(மந்தாரையினாள்) கலக்கப் பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட–(தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய–(அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்க மடைந்த
மா மனத்தனன் ஆய்–சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும் – தசரத சக்ரவர்த்தியும்
மறாது–மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய–வெறுமனே கிடக்க,
(அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயி யானவள்,)
குலம் குமரா–“உயர் குலத்திற் பிறந்த குமாரனே)
காடு உறைய–காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று–போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப–விடை கொடுத் தனுப்ப
அங்கு–அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்–லக்ஷ்மணனோடு கூட
ஏகியது–(இராம பிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்–

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தன
ந சாஹம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
முன் வழிப் பட்ட இளைய பெருமாளோடே எழுந்து அருளினதே
(கைங்கர்யம் செல்வன் -விட்டுப் பிரியாமல் இருபவன் –
அனைத்து கைங்கர்யங்களையும் செய்வேன் -என்பதற்கு மூன்று பிரமாணங்கள் )

ஓர் அடையாளம்
லோக ப்ரஸித்தமான அடையாளம்
ஏகுதல் -போகை –

———–

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்த
முலை–முலையையும்
மடவாய்–மடப்பத்தை யுமுடைய பிராட்டீ!
வைதேவீ–விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்–ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த–தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்–அயோத்தியி லுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ–பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்–அவ் விண்ணப்பத்தைக் கேட்டருள வேணும்;
கூர் அணிந்த–கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்–குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்–கங்கை கரையிலே-சிங்கி பேர (மான் கொம்பு ) புரத்திலே –
சீர் அணிந்த தோழமை–சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்–பெற்றதும்
ஓர் அடையாளம்–

வாரணிந்த முலை மடவாய்
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில்
நாணும் கொங்கைத் தலம் (நாச்சியார் )-என்னுமா போலே
இப்போதும் கச்சுக்குள்ளே கிடக்கிற ஒடுக்கத்தோடே கிடக்கையாலே
வாரணிந்த முலை மடவாய் -என்கிறான்

வைதேவீ விண்ணப்பம்
விதேக ராஜன் பெண் பிள்ளை யாகையாலே இறே -இவ் விருப்பு இருக்கலாய்த்து
இப் பிறப்பு யுடையார் தேஹத்தை ஒன்றாக விரும்புவார்களோ –

தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
பத்துத் திக்கிலும் தடையற வூர்ந்த தேர் இறே ( தச ரதன் அன்றோ ) இவ் வூருக்கு அலங்காரம் –

ஸத்ரு சங்கா பரிஹாரமான தேர்களும்
யாகாதிகளுக்குச் சமைந்த தேர்களும்
பிள்ளைகள் விளையாடும் தேர்களும்
அலங்காரமான திரு அயோத்யைக்கு நிர்வாஹகரான பெருமாளுக்கு

துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற அளவே அன்றிக்கே
தஞ்சேயம் அஸி தேஷணா –என்னும்படி
சிறுத் தேவி யல்லாத பெரும் தேவீ விண்ணப்பம் கேட்டு அருளாய்
(அவனுக்கு பெருமை கொடுக்கும் தேவி என்றவாறு
அவன் பெருமைக்குத் தக்க தேவி என்றுமாம் )

கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
மிக்க கூர்மையை யுடைய வேல் வலவன்
ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி இறே
இவருடைய ஸுவ்ர்யமும் வேல் கூர்மையும் இருப்பது –
இப்படிக்கு ஒத்தவரோடே ஸ்ருங்கி பேர புரமான படை வீட்டிலே இவரோடு கூட வேணும் என்றே பிரார்த்தித்துச் சென்று
திரு அயோத்யையில் பிறந்த ஸ்ரமம் ஆறும்படி சென்று

குஹேந ஸஹி தோராமோ லஷ்மனே நச சீதயா -என்னும்படி சென்று
உன் தோழி என் தோழி உம்பி எம்பி -என்று
ஸீதா லஷ்மண சம்பந்தமும் அவரோடே ஆக்கின பின்பு இறே தம்மோடு உண்டாக்கிக் கொண்டது –
அதுக்கு அடி
அவருடைய நிலையிலே தவறாமை இறே
இப்படி செய்ய வேண்டினதுக்கு அடி அவ்வூரில் பிறப்பும் வாஸமும் இறே
இதனால் தான் அயோத்தியார் கோன் என்றது
பாகவத -ததீய -வைபவம் அறிய இங்கு அவதாரம்

நாய்ச்சி மாரையும் பிராதாக்களையும் இங்கனே திரு உள்ளம் பற்றினால்
மற்று உள்ளவர்களைச் சொல்ல வேண்டா இறே அவ்வூரில்
இப்படி திரு உள்ளம் பற்றுகை அவருக்குச் சேராதது ஆகிலும்
(சர்வேஸ்வர நிரங்குச ஸ்வா தந்த்ரத்துக்கு சேராதே தேவை இல்லை அன்றோ
இவள் அவனை அடைய ஆச்சார்யர் வேண்டும்
அவனுக்குத் தேவை இல்லை )
நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளம் பற்றுவது இப்படி இறே –
(இவன் முன்னிடுவர்களை அவன் முன்னிடுவது இருவர் குற்றங்களையும் சமிப்பிக்கைக்காக
பாணனார் திண்ணம் இருக்க நாணுமோ )

சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
நான் உகந்த தோழன் நீ என்னுமது ஒழிய
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் (நாச்சியார் )-என்ன ஒண்ணாதே
ஆகை இறே -சீரணிந்த தோழமை-என்றது
சீர் -கல்யாண குணங்கள் –

————

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பதவுரை

மான் அமரும்–மானை யொத்த
மென் நோக்கி–மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்–பால் போல் இனிய பேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;
கான் அமரும்–காட்டில் பொருந்திய
கல் அதர் போய்–கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து–காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்–வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்–தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து–சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப–நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி–பரதாழ்வான்-பாரதந்தர்யத்தால் பூர்ணன்
பணிந்ததும்–வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்–

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
தன்மையிலே அமர்ந்த நோக்கை யுடைத்தான மான் போலே இருக்கிறவளே –
இக் கண்ணுக்கு இலக்காமவர் இலக்கானால் மான் பார்வை உபமானத்தால் வந்த மிகை அமரும்படி -என்னுதல்
மானை விட்டு இங்கே அமரும்படி இறே கண் அழகு தான் -என்னுதல்
(உபமானம் தாழ்ச்சியாகவே தோன்றுமே -ஏணி வைத்தாலும் எட்டாதே )

வைதேஹியை வேதேவி என்கிறது –
தேஹ நிபந்தமான த்யோதமாநாதி( பிரகாசம் -தேக காந்தி முதலியவை )குணங்களைப் பற்ற

கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
அமரும் கல் கான் அதர் போய்
பொருந்தின கல் காட்டு வழி போய் வன வாஸம் செய்கிற காலத்திலே

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

பான் மொழியாய்
பால் போலும் ரஸா வஹமான வார்த்தையை யுடையவளே

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

————-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

பதவுரை

சித்ர கூடத்து சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப–நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை–சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட–(உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
(அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்)
அத்திரமே கொண்டு–ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய–பிரயோகிக்க,
(அக் காகம் அதற்குத் தப்புவதற்காக)
அனைத்து உலகும்–உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி–திரிந்து ஓடிப் போய்
(தப்ப முடியாமையால் மீண்டு இராம பிரானையே அடைந்து)
வித்தகனே–“ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா–ஸ்ரீ ராமனே!
ஓ–ஓ !!
நின் அபயம்–(யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப என்று கூப்பிட
அத்திரமே–(உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை–அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்–அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்–

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அந்தச் சித்ர கூடம் தன்னிலே பெருமாள் மடியிலே கண் வளரா நிற்கச் செய்தே
இந்திரன் மகனான தமோ குண பிராஸுர்யத்தால்
அறிவால் சுருங்கி
சுருக்கம் உணரும்படி பேர் அளவில்லாத காக வேஷத்தை ஆஸ்த்தானம் செய்து
திரு முலைத் தடத்திலே நலியப் புக

அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
பெருமாளும் இவ்வளவிலே உணர்ந்து
இவனைச் செருக்கு வாட்டுகைக்காகவும்

மாதா பிதாக்கள் தேவர்கள் ருஷிகள் மற்றும் ஆன்ரு சம்ஸயம் நோக்கி
மூன்று லோகத்திலும் ப்ரஸித்தராயும்
அப்ரசித்தராயும் உள்ளவர்களுடைய அளவு அறிகைக்காகவும்

ஸ பித்ரா ச பரித்யக்தா –
பிதாவும் கைவிட்டான் என்கையாலே ஸசீ தேவியும் மஞ்சள் கீறிப் புறப்பட்டு
பிதா கைக் கொள்ளிலும் ராம அபராதியை நான் கைக்கொள்ளேன் -என்றாள்
என்னும் இடம் தோற்றுகிறது

ஸூரைஸ் ச
மாதா பிதாக்கள் சிஷா ரூபத்தால் கைவிட்டார்கள் ஆகில் அவர்கள் கோபம் தீர்ந்தவாறே
காட்டிக் கொடுக்கிறோம் என்பார்களோ
நாம் ஆண்ட பரிகரம் அன்றோ என்று அங்கே ஒதுங்கப் பார்த்தான்
அவர்கள் கைக் கொள்ளோம் என்றார்கள்

ஸ மஹர்ஷிபி
ப்ரஹ்ம பாவனையில் ஊன்றினவர்கள் ஆகையாலே செல்ல-அவர்களும் கை விட்டார்கள்

த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய
அறிந்தவர்களோடே அறியாதவர்களோடே வாசி யறத் திறந்து கிடந்த வாசல்கள் தோறும்
ஒரு கால் போலே ஒன்பதில் கால் சென்று இரந்த அளவிலும் கைக் கொள்ளாமல் தள்ளிக் கதவடைத்தார்கள் –

இப்படிச் செய்ய வேண்டுவது என் என்னில்
அத்திரமே கொண்டெறிய
கிடந்ததொரு துரும்பை ப்ரஹ்மாஸ்த்ரமாக்கி
மந்தகதி யாக்கி விட்ட அளவிலே
நின்றது இல்லை இறே இது

அனைத்துலகும் திரிந்தோடி
எல்லா லோகத்திலும்
சரணம் புகுவார் உண்டாகிலும்
சரண்யர் இல்லை என்னும் இடம் தோற்ற அனைத்துலகும் -என்கிறார்
அனைத்துலகும் திரிந்து மீண்டு ஓடி வந்து

வித்தகனே
சர்வத்துக்கும் காரண பூதனுமாய்
சமர்த்தனும் ஆனவனே

இராமா
ரஞ்ச யதீதி ராஜா
ரமய தீதி ராம

ஓ நின்னபயம் என்று அழைப்ப
உன்னை ஒழிய வேறே அபய பிரதானம் செய்வார் இல்லை என்று
உள் அழற்றியோடே வந்து
அஸ்திரம் நலியாமல் காக்க என்று திருவடிகளிலே விழ

அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
இத்தை முன்பே செய்யாமையாலும்
இவன் பின்னே திரிந்த வேகத்தாலும்
பெருமாளைக் கேள்வி கொள்ளாமல் அஸ்திரம் தானே ஒரு கண் அழிவு செய்து விட்டது

அஸ்திரம் தானே செய்கைக்கு அடி இது தான் கண்டக பிரபத்தி யாகையாலே இறே
அதாவது
ரஷித்தான் ஆகில் ப்ராணனைப் பெறுகிறோம்
இல்லை யாகில் அவனுக்கு ஒரு தேஜோ வதத்தை யுண்டாக்குகிறோம் -என்றால் போலே இறே இதில் நினைவு
லகுர் தண்ட ப்ரபந்நஸ்ய -என்றும் உண்டு இறே

அன்றிக்கே
கார்யப்பாடு அறிந்தான் ஒரு திருப்பணி செய்வான் செய்தான் என்று
நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –
(கருதும் இடம் பொருதும் சக்கரம் அம்சம் தானே )

———-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

பதவுரை

மின் ஒத்த–மின்னலைப் போன்ற
நுண் இடையாய்–மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்–உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்–விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
அடியேனுடைய மெய்யான விண்ணப்பம் என்றுமாம் –
பொன் ஒத்த–பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று–(மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து–(பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட–அழகாக விளையாடா நிற்க,
(அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்)
நின் அன்பின் வழி நின்று–உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து–வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்–இராமபிரான்
ஏக–அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே–பிறகு
அங்கு–அவ் விடத்தில்
இலக்குமணன்–இளைய பெருமாளும்
பிரிந்ததும்–பிரிந்ததுவும் ஓர் அடையாளம்–

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
மின் உபமானம் போராமையாலே -நுண்ணிடையாய்-என்கிறார் –
பாரதந்தர்ய பூர்த்தியாலே வந்த வைராக்யம் இறே –
(வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நீ ஸூய ரக்ஷணத்தில் கை வாங்கி உள்ளாய்
உம்மை ரக்ஷிக்கவே அஷ்ட புஜங்கள் கொண்டுள்ளேன் )

மெய்யடியேன் விண்ணப்பம்
இளைய பெருமாளுடைய துறையிலே
அவருடைய பிரியத்திலே வந்தவர் ஆகையாலே -மெய்யடியேன்-என்கிறார் –
(பாகவத சம்பந்தத்தால் சேஷ பூதன் மெய்யடியன் )

மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம் பரிசு அறியாது ஒழிந்தாலும் (திருமாலை -38 )
ஸாத்விக புராண வாஸனையாலும்
திருவாழி மோதிரம் அவன் கையிலே இருக்கையாலும்
இந்த ஸந்நிதி விசேஷத்தாலும்
ப்ரஹ்ம பாவனை தலை எடுத்தால் இங்கனே சொல்லலாம் இறே

அடியேன் மெய் விண்ணப்பம் என்னில்
பல இடங்களிலும் காணலாம் இறே
இது தன்னை ஆழ்வார் அருளிச் செய்யவும் பெற்றது இறே
(திரு விருத்தத்தில் உண்டே
சத்யம் விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் )
இவருடைய உறகல் உறகலுக்கு எது தான் சேராது
அவனையே பார்த்து பரிவர் தானே மெய்யடியான்

பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
ஸூ வர்ண ரத் நாதி களாலே -நாநா வர்ணமாய் இருப்ப தொரு மானின் வேஷத்தைக் கொண்டு
மாரீசனானவன் ஜாதி மிருகங்கள் நடுவே புகுந்து அவை விஸஜாதீயம் என்று வெறுத்துப் போகச் செய்தேயும்
இது ஒன்றும் தனியே நின்று இஷ்டத்திலே விளையாடுகிறதாகப் பாவித்து நிற்க

நின் அன்பின் வழி நின்று
தேவரீர் பக்கலில் உண்டான ஸ்நேஹத்தினுடைய வழியாக
மற்ற ஓன்று திரு உள்ளம் பற்றாமையாலே நிலை நின்று

சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
தமக்குச் சிலையும் கணையும் துணையாக
உமக்கு இளைய பெருமாள் துணையாக
எழுந்து அருள

பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்-
க்ருத்ரிம ரூபமான ராக்ஷஸ யுக்தி விசேஷத்தாலே தேவரீர் திரு உள்ளம் கலங்கி
அங்கே சீக்ரமாகச் சென்று அறியீர் -என்று நியமிக்கவும்

அவர் மறுக்க மறுக்க –
அவரால் மறுக்க ஒண்ணாத படி அருளிச் செய்த பின்பாக
அத் தனி இடத்திலே பிரிந்தது என்னுதல்
பெருமாள் முன்னே பிரிகையாலே பின்னே பிரிந்தது என்னுதல் –

பெருமாள் பிரிந்த போது இளைய பெருமாள் உண்டு
இவர் பிரிந்தது இறே அரிதாயத் தோற்றுகிறது
ந ச ஸீதா த்வயா ஹீநா -என்னவும் பொருந்தாமையோடே கொண்டு போருவது

ஸ்ரீ குகப் பெருமாளோடே கூடின போது பாகவத லாபத்தாலே உருக் காண்பது
(பாகவத சம்ச்லேஷம் பெற்ற பின்பு அன்றோ இவருக்கு பொருந்திற்று)

அதனுடைய அலாபாமே ஸித்திக்கில் –
கிம் கார்யம் சீதையா மம -என்பது முதலாகக்
கார்யப்பாடு ஒழிய அறியாதவர்க்கும் (பெருமாளுக்கும் )
இவருடைய வசன பரிபாலனம் செய்கிறவருக்கும்
(இவள் வார்த்தை கேட்டு சென்ற இளைய பெருமாளுக்கும் )
இக் கலக்கம் பைத்ருகமாம் இத்தனை இறே
(கைகேயி சொல் கேட்டு கலங்கிய சக்ரவர்த்தி போல் இவர்களும்
வசன -பரிபாலனம் தந்தை வழி சொத்து அன்றோ )

————

நீ இவை எல்லாம் அறிந்தபடி என் -என்று அருளிச் செய்ய
அதுக்கு ஹேது இன்னது என்கிறது இப் பாட்டில்

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

பதவுரை

மை தகு–மைபோல் விளங்குகிற
மா மலர்–சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்–கூந்தலை யுடையவளே!
வைதேவி–வைதேஹியே!
ஒத்த புகழ்–“பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட–உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்–(பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை–இவ் வடையாளங்களை
மொழிந்தான்–(என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
(ஆதலால்)
அடையாளம்–(யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்–இவ்வழியால் (வந்தன);
இத்தகை-இவ்வண்ணம் -ஆல் -அசைச்சொல் (அன்றியும்)
ஈது–இதுவானது
அவன்– அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்–திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்–

மைத்தகு மா மலர்க் குழலாய்
திருக்குழல் இருட்சிக்கு மை ஒரு புடைக்கு ஒப்பாக்கி
அதின் மேல் மலரையும் கூட்டுகையாலே
இப்போது கண்டது அன்றே

கீழே -நெறிந்த கரும் குழல் -என்கிறாப் போலே இப்பொழுது
பொலிவு இழந்து ஆர்ப்பேறிக் கிடக்கச் செய்தேயும்
இதுக்குப் ப்ராப்தமாகத் தகுவன தேடிச் சொல்லலாவும் இறே – நல் சரக்குக்கு வந்த அழுக்கு -ஆகையாலே –

இக் குழல் -மைத்தகு மா மலர்க் குழலாக வன்றோ புகுகிறது -என்று
மங்கள வாசகமாவுமாம்

வைதேவீ
இதுவும் (தேகத்தைப் பேணாமை )பைத்ருகம்

விண்ணப்பம்
முறைமை தோன்றச் சொல்லுகிறான்

ஒத்த புகழ்
ஸக்யராய் சோக ஹர்ஷங்கள் ஒத்து இருக்கையாலே
ஒத்த புகழ் -என்கிறது

வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
வானர ராஜன் சேர இருந்து தேவரீரைத் தேடிக் கொண்டு வருவதாக

அத் தகு சீர் அயோத்தியர் கோன்
இந்த சோகத்துக்குத் தகுதியான வந்த சோகத்தை யுடையவராய்
திரு அயோத்யைக்கு நிர்வாஹகராக ப்ராப்தரானவர்

அடையாளம் இவை மொழிந்தான்
அவன் மொழிந்த அடையாளங்கள் இவை

இத் தகையால் அடையாளம்
என்னால் விண்ணப்பம் செய்யலாம் அடையாளம் இவ்வளவு
அவர் அருளிச் செய்தவற்றில்
என்னால் தரிக்கலாவதும்
விண்ணப்பம் செய்யலாவதும்
இவ்வளவே

ஈது அவன் கை மோதிரமே
அவர் திரு விரலில் சாத்தின அறு காழி இது -என்று
அடையாளங்களில் சங்கை இல்லை
சங்கை உண்டாய்த்தாகிலும் தேவரீருக்குத் தெளிய வேண்டுவது எல்லாம் போரும் இது -என்று
திருவாழியாலே பிராண பிரதிஷ்டை பண்ணுகிறான் –

———-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

பதவுரை

திக்கு–திக்குகளிலே
நிறை–நிறைந்த
புகழ் ஆனன்–கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
ராமன் ஜனகன் விசுவாமித்திரர் மூவருக்கும் இந்த விசேஷணம் ஒக்குமே
தீ வேள்வி-அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற–(விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெரும் சபை நடுவே–மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்–ருத்ர தநுஸ்ஸை முறித்த இராம பிரானுடைய
மோதிரம்–மோதிரத்தை
கண்டு–பார்த்து
மலர் குழலாள்–பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்–ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்–‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?–(நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்–ஒத்திரா நின்றுள்ளவையே
என்று–என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திரு வாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு–தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்–மகிழ்ந்தான்–

திக்கு நிறை புகழாளன்
திக்கு நிறைந்த புகழை யுடையவன் என்று விச்வாமித்ரனுக்குப் பேரான போது
பஞ்சா ஸத் கோடி விஸ்தீர்ணமான அண்ட நிர்வாஹகன் முதலானோர் அநு வர்த்திக்கும் படியாகவும்
ஒரு ரிஷியாலே ஒரு ராஜா சண்டாளனாக -அந்த சண்டாளம் தன்னையே வாரே உறுப்பாக யஜிப்பித்து
அந்த ஸரீரத்தோடே ஸ்வர்க்கம் ஏற்றி
த்வம்ஸ -என்கிற அளவிலும்
நில் -என்ன வல்லனாகையாலும்
ராஜ ரிஷியான தான் ப்ரஹ்ம ரிஷி யாகையாலும்
ஷத்ரியத்வம் பின்னாட்டாமை யாலும்
அண்டாந்தர கதமான இந்தத் திக்குக்குகள் எல்லாம் தபஸ் பலமாக நிறைந்த புகழை யுடையவன் -என்னவுமாம்

ஒரு ராஜாவை சண்டாளனாக்கி
ஒரு சண்டாளனை ப்ராஹ்மணன் ஆக்க வல்ல வனுடைய சாபத்தை இறே இவன் இப்படிச் செய்தது
ஆகையால் தபஸ்ஸூக்கள் ஓவ்பாதிகமானால் எல்லாம் செய்யலாம் இறே
(உபாதி அந்நிய பல இச்சா -உபாதிக்காக உள்ள தபஸ்ஸூக்கள் இப்படி ஆகும் )

அன்றிக்கே
பெருமாளான போது
அண்டாந்தர கதமாய் அன்றே புகழ் இருப்பது

அந்த விச்வாமித்ரனும் பெருமாளை
அஹம் வேத்மி–என்கிற போது
மஹாத்மா
ஸத்ய பராக்ரமா -என்று அறிவேன்
மஹா தேஜஸ்விகளான வசிஷ்டாதிகளும்
மற்ற ஓரோர் தபஸ்ஸூக்களில் நிலை நின்றவர்களும் அறிவார்கள் என்றான் இறே

தீ வேள்விச் சென்ற நாள்
யஜ்ஜத்தில்-அக்னி ஹோத்ர ரக்ஷண வ்யாஜமாக
விச்வாமித்ரன் பின்னே சென்ற நாள்

மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ப்ராஹ்மணரும் ஷத்ரியரும் திரண்ட பெரிய திரள் நடுவே சென்று
வில்லை முறித்து
பாணி கிரஹணம் செய்கிற போது
திருக் கண்களாலே ரூபமும்
திருக் கைகளாலே ஸ்பர்ஸமும் கண்டு

ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே
நீ முன்பு சொன்ன அடையாளங்களும்
நான் பாணி கிரஹண காலத்தில் கண்டதும்
பர்த்ரு கர விபூஷணம் –
இது அவன் கை மோதிரம் என்று தந்த பின்பு

அனுமான் என்று ப்ரீதியோடே வாங்கித்
திருக் குழலிலே வைத்துக் கொண்டு
பெருமாளோடே ஒரு படுக்கையில் இருந்து
அவர் அலங்கரிக்க
பூ முடித்தால் போலே இருந்தாள்

மண்ணில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இறே வடிவு தான் இருப்பது –
மணம் தானே கந்த குணியாய் இறே இருப்பது

அபியாலே –
இருவரையும் காட்டுகிறது –

————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

பதவுரை

வார் ஆரும்–கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை–முலையையும்
மடலாள்–மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை–ஸீதா பிராட்டியை
கண்டு–பார்த்து
சீர் ஆரும்–சக்தியை யுடையவனான
திறல்–சிறிய திருவடி
தெரிந்து–(பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து–(பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்–அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்–பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்–பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்–ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து–வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு–நித்ய ஸூரிகளோடு
இருப்பார்–கோவையா யிருக்கப் பெறுவார்கள்–

வாராரும் முலை மடவாள்
முன்பு எல்லாம் நெகிழ்ந்து கிடந்த கச்சு
திருக் குழலிலே திருவாழி மோதிரம் சேர்ந்த பாவநா ப்ரகர்ஷத்தாலே
திரு முலைத் தடங்கள் விம்மி நிறைந்தது என்று தோற்றுகிறது

மடவாள்-என்று
முற்பட்ட ஒடுக்கமாதல்
ஸ்த்ரீத்வம் ஆதல்

வைதேவி தனைக் கண்டு
தேஹ நிபந்தநமான ஸ்தூல கார்ஸ்யங்களை மதியாத குடிப் பிறப்பை யுடையவள்

தனைக் கண்டு
அந்தப் புர கார்யம் தலைக் கட்டுகை யாகையாலே
ராம தாஸன் என்று தன்னையும் கண்டு என்னுதல்
இவளைக் கண்டால் அல்லது பெருமாளையும் காண ஒண்ணாமையாலே இருவரையும் கண்டு என்னுதல்

சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
நச சங்குசித பந்தா யேந வாலி ஹதோ கதா -என்ன பயப்படுத்த வேண்டாத சீர்

நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத் யபி தஸ்ய ஸ்யாத் ஸ்தா மேதத கர்ஹிதம் -என்றவர்க்குப்
பிராண பர்யந்தமாகப் பிரியாத சீர்

வத்யதாம் -என்ற பரிவருக்கும்
பெருமாள் தமக்கும்
பிராணனை யுண்டாக்கின சீர்

கிம் கோப மூலம் மனு ஜேந்த்ர புத்ரம் -என்று
இளைய பெருமாள் ஸந்நிதியில் நிற்கும்படி தம்பதிகளை சரணாகதம் ஆக்கின சீர்

ஆரும் –
நிறையும்
ஆஸ்ரயத்திலே சேருவதற்கு முன்னே -ஆர்ந்த – (ஆராய்ந்த )என்னலாய் இறே தோற்றுகிறது

திறல்
ஓவ்ஷத பர்வதங்கள் நிமித்தமாகச் செய்த ஸாமர்த்யங்கள் -என்னுதல்
வழியில் உண்டான விரோதி வர்க்கங்களை நீக்கிப் போந்த ஸாமர்த்யம் என்னுதல்

அனுமன்
வீரத் தழும்பு சுமக்க வல்லவன்

தெரிந்து உரைத்த அடையாளம்
பெருமாள் அருளிச் செய்தவற்றில்
தான் தரித்தவற்றில்
சொல்லலாமவற்றில்
சொல்ல வேண்டிய அடையாளம் தெரிந்து உரைத்ததும்

பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
உபய விபூதியும் நிறைந்த புகழையும்
திரு மாளிகையும்
பட்டர் பிரான் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்

பட்டர் பிரான் பாடல் வல்லார்
பெருமாளுக்கும்
நாய்ச்சிமாருக்கும்
திருவடிக்கும்
உண்டான விசேஷ குணங்களைச் சேர்த்து அருளிச் செய்த
இப் பத்துப் பாட்டையும் ஸ அபிப்ராயமாக வல்லார்

ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே
நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-9–என் நாதன் தேவிக்கு–

June 25, 2021

கீழில் திருமொழியில் (3-8 )
கிருஷ்ணாவதாரத்தைப் பல இடங்களிலும் ப்ரஸ்துதமாக்கி
ஆச்சார்ய பரதந்த்ரன் ஈஸ்வரனைப் பற்றிப் போன பிரகாரங்களை அனுசந்தித்தார் –

போன சேதனன்
மேன்மையும் நீர்மையும் தோற்றின அவதார அபதான விசேஷ குணங்களையும்
நீர்மையே விஞ்சித் தோற்றின ராமாவதார விசேஷ குணங்களையும்
தன்னையும் இரண்டு வகையாக்கி அனுசந்தித்த பிரகாரத்தைத்

திருவாய்ப் பாடியில் உள்ள பெண்கள்
இரண்டு வகையாய் இரண்டு அவதாரத்தையும் புகழ்ந்து உரைத்து
விளையாடி
உந்தி பரந்த பாசுரத்தாலே அனுசந்தித்து
மங்களா ஸாசனத்தோடே சேர்த்துப் ப்ரீதர் ஆகிறார் –

இரண்டு வகையான குணங்களும் மங்களா வஹம் இறே
சேதனனுக்கு ஏக காலத்தில் இரண்டு சரீரமாகை கூடுமோ என்னில்
தேச விசேஷத்தில் அநேகதா பவதி -என்று நடவா நின்றது இறே
விண்ணுளாரிலும் சீரியர் என்று இங்குள்ளாரையும் ஸ்லாகியா நின்றால் எது தான் கூடாது

திருச் சாழலிலே( 11-5 ) இரண்டு பிராட்டிமார் அவஸ்தை
ஏக காலத்தில் கூடுமோ என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே
அநேகதா பவதி கண்டீரே -என்று அருளிச் செய்தார் என்று
ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –

—————–

ஒரு வகையில் உள்ளார் எல்லாரும் கிருஷ்ண அவதாரத்தில்
அவகாஹித்த பிரகாரத்தைச் சொல்லுகிறது –

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9-1-

பதவுரை

என் நாதன்–எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய
தேவிக்கு–தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இன்பம் பூ–மனோ ஹரமான கற்பகப் பூவை
அன்று–(அவன் விரும்பின) அக் காலத்தில்
ஈயாதாள் தன்–கொடாத இந்திராணியினுடைய
நாதன்–கணவனான தேவேந்திரன்
காணவே–கண்டு கொண்டு நிற்கும் போதே
தண் பூ மரத்தினை–குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை
வல் நாதம் புள்ளால்–வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே
வலிய–பலாத்காரமாக
பறித்து–பிடுங்கிக் கொண்டு வந்து
இட்ட–(அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின
என் நாதன்–என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய
வன்மையை–வலிவை
பாடி–பாடிக் கொண்டு
பற–உந்திப்பற;
எம் பிரான் வன்மையை பாடிப் பற–

என் நாதன் தேவிக்கு
பிராட்டிமாருடன் உண்டான சம பாவத்தாலும்
மிதுனச் சேர்த்தி ப்ராதான்யத்தாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்னுமா போலே
என் நாதன் -என்று
அவன் தனக்கு சேதன விசேஷண நிரூபகமான பின்பு இறே
நாதன் தேவிக்கு -என்றது

(பிரணவம் போல்-அகாரத்துக்கே மகாரம் – நாதனுக்கு அடியேன் என்னாமல் –
என் என்று முன்னே சொல்லி
அவனுக்கு சேதனன் சேஷபூதன் என்று நிரூபகம் என்கிறார் )

உன் திரு (மார்பத்து மாலை நங்கை -10-10-நாதன் தேவி )என்னுமா போலே
ஆகிய அன்பே -என்று
ஆஸ்ரயம் தோற்றியும் தோற்றாததுமாய் இரா நின்றது இறே

(கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
அன்பன் -என்றால் அன்பு வேறே அன்பு உடையவன் வேறே
என்றாகும் அன்பே வடிவாக உடையவன் என்று காட்ட வேண்டுமே )

அன்று
அவளுக்கு அபேஷா நிரபேஷமாக
ஓரு மஹா நிதி கைப்பட்ட அன்று

இன்பப் பூ ஈயாதாள்
போக்யமான பூ வர
அத்தைக் கண்டு நாய்ச்சியார் அபேக்ஷிக்கவும் பெற்று வைத்து
நிர் பாக்யை யாகையாலே நிரார்த்தமாக சில ஹேதுக்களைச் சொல்லி ஈயாதாள்
தானே அபேக்ஷித்துச் சாத்த ப்ராப்தமாய் இருக்க
அபேக்ஷிக்கவும் கொடாதாள்-

தன் நாதன் காணவே
இத்தை இறே அவள் தனக்குக் கனக்க
பலமாக நினைத்து இருக்கிறது

ஈயாதாள் தன் நாதன்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -என்றும்
உக்கமும் தட்டொளியும் –உன் மணாளனையும் தந்து என்றும்
அநிஷ்ட நிவ்ருத்தியும்
இஷ்ட பிராப்தியும்
பண்ணுமவள் அன்றே
இவளுக்குத் தகுதியாக இறே அவனும் இருப்பது –

ஸ்ரீ யபதி -என்றால் போலே இறே
இவளை யுடையோம் என்று அவள் நினைத்து இருப்பது கர்ம பாவனையில்
ஆகை இறே தன் நாதன் என்றது
நான் இந்திரன் அல்லேனோ
நான் ஸூரி நாயகன் அல்லேனோ என்று இறே அவன் நினைத்து இருப்பது

காணவே
அவன் கண்டு கொண்டு நிற்கவே

தண் பூ மரத்தினை
குளிர்ந்து பரிமிளிதமாய் இருக்கிற பூவை யுடைத்தாய்
கல்பக தரு என்று பிரஸித்தமாய் இருக்கிற வ்ருக்ஷத்தை

வன்னாத புள்ளால்
நாதப் பிரதான வேத மயனாய் இருக்கிற பெரிய திருவடியாலே
நாதத்துக்கு வலிமையானது
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாமை

வலியப் பறித்திட்ட
அவன் தன்னை அபேக்ஷித்துத் தரக் கொள்ளுகையும் இன்றிக்கே
அவன் அபேக்ஷித்துத் தரக் கொள்ளுகையும் இன்றிக்கே
அவனுடைய அசந்நிதியிலே பிடுங்குகையும் இன்றிக்கே
அவன் தான் பார்த்து நின்று
வஜ்ரத்தை வாங்கி விலக்கா நிற்கச் செய்தே
பிடுங்கிக் கொண்டு போர
பின்னையும் தொடர்ந்து வாங்குவானாக வந்தான் இறே
முன்பு போர ஆதரித்தவன்

இத்தால்
உபய பாவநா நிஷ்டருக்குப் பிறந்த பகவத் ப்ராவண்யத்தால் வந்த அறிவும் ஆஸ்திக்யமும்
நிலை நில்லாதது என்னும் அளவும் இன்றிக்கே
அபிமத ஸித்திக்கு ஹேதுவான ராக த்வேஷங்கள் க்ரியா பர்யந்தமானாலும் ஜீவிக்கை யாகாமல்
வ்ரீளை யோடே தலைக் கட்டும் என்று தோற்றுகிறது
இது தான் இவன் அளவே அன்றிக்கே
கர்ம பாவனையில் எல்லார் அளவிலும் சுருக்கம் ஒழியக் காணலாம் இறே

என் நாதன் வன்மையை பாடிப் பற
அவனுடைய ஆஸ்ரித பஷபாதத்துக்குத் தோற்று
என் நாதன் -என்கிறாள்

அவனுக்கு வன்மையாவது
ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலையானால்
ஸ்வ சங்கல்ப பரதந்திரரையும்
ஸங்கல்பம் தன்னையும் பாரான் இறே

மயங்க வலம் புரி –இத்யாதி
இங்கு ஸ்வ சங்கல்ப பரதந்திரர் என்றது
காம்ய தர்ம பரதந்த்ரரான புண்ய தர்மாக்களை
ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யம் அவன் தனக்கும் உண்டு இறே

சங்கல்பம் ஆவது
அகரணே ப்ரத்யவாய பரிஹாரம் இறே
நியாய ஹானி உண்டானால் நிரங்குச ஸ்வா தந்தர்யம் இவற்றைப் பாராது இறே
இவ் வன்மை யுள்ளது இவன் ஒருத்தனுக்குமே இறே
(பீஷ்மர் திரௌபதி பரிபவம் கண்டும் -நியாய ஹானி உண்டாக இருந்தும்
தனது சங்கல்பத்தால் கட்டுண்டு இருந்தாரே
இவனோ தனது வாக்கு பொய்த்துப் போனாலும் நியாய ஹானி பொறுக்காமல் கார்யம் செய்வான் அன்றோ )

எம் பிரான் வன்மையை பாடிப் பற
இவ் வன்மை மங்களா வஹமாகையாலே
எம் பிரான் என்கிறார்

பற -என்றது
லீலா ரஸ விசேஷ வியாபாரமாய்
ஒருவரை ஒருவர் மிகுத்துச் சொன்னதாய்த் தலைக் கட்டுகிறது –

———-

இப்படி மங்களா ஸாஸன பரர்க்கும்
ஜனகராஜன் திரு மகளுக்கும் உதவினதாய் இருக்கிறது –

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –

பதவுரை

என் வில் வலி கண்டு போ என்று–‘என்னுடைய வில்லின் வலியைக் கண்டு போ’ என்று சொல்லிக் கொண்டு
எதிர் வந்தான் தன்–எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு–வில்லையும்
தவத்தையும்–தபஸ்ஸையும்
எதிர்–அவன் கண்ணெதிரில்
வாங்கி–அழித்தருளினவனும்
முன்–இதற்கு முன்னே
வில் வலித்து–வில்லை வளைத்து
முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடகையினுடைய
உயிர்–உயிரை
உண்டான் தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய
வில்லின்–வில்லினது
வன்மையை–வலிவை பாடிப் பற
தாசரதி–சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை–ஸ்வபாவத்தை பாடிப் பற–

என் வில் வலி கொண்டு போ என்று எதிர் வந்தான்
பெருமாள் திரு மணம் புரிந்து (புணைந்து) மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஒரு சொத்தை வில்லை வளைத்தாய் -முரித்தாய் -என்றால் போல் சொல்லுகிறது
இது ஓர் ஏற்றமோ -என்று சில வன்மைகளைச் சொல்லித்
தன் தப பலமாய் இருபத்தொரு ஆவேச சக்தி விசேஷத்தாலே
எடுத்த கார்யம் பலித்துப் போந்த கர்வத்தாலே எதிரே வந்து
என் வில் வலி கண்டு போனாயானால் நீ சமர்த்தன் -என்ற பரசுராமனுடைய

தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
இது ஒரு தபஸ்ஸை வியாஜமாக்கி பல பிரதானம் பண்ணின அவனை அறியாமை இறே
தன் வில் -என்ன வேண்டிற்று
தபஸ்ஸைத் தானும் இவன் தன்னது என்று நினைத்து இருக்கிறது
(கர்த்ருத்வ மமதா பல தியாகம் மூன்றும் இருக்க வேண்டுமே )

வாங்கும் போது
ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க
வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று
தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே

எதிர் வாங்கி
அவன் பார்த்து நிற்க வாங்கி
அவை தான் நியாயம் கண்டால் கொடுக்கவும்
நியாய ஹானி கண்டால் வாங்கவுமாய் இருக்கும் இறே அவனுக்கு –

(52 படிக்கட்டு கோமதி த்வாரகையில் -52 கோடி யாதவர்களைக் குடி வைத்து
அவர்கள் அனைவரையும் நியாய ஹானி கண்டு அழித்தார் அன்றோ -அதே போல் )

இது தான் வாங்கும் போது
தபஸ் பல போக ஆரம்ப மத்யம நிகமன (முக் ) காலங்களில்
அத்யுத்கடம் (நியாயம் மீறும் செயல்கள் )ப்ரவ்ருத்தமானால்
வாங்கலுமாய் இருக்கும் இறே

அதி மானுஷ சேஷ்டைகளிலே ஸ்ரத்தாளுக்களாய் (ஈடுபாடு கொண்டவர்களாய் )-
ஈஸ்வர சக்தி ஆவேச பல ஸா பேஷராய்த்
தபஸ்ஸூ பண்ணி
தபஸ் பலமான ஆவேசம் நீங்கினாலும்
ஸ்வயம் க்ருத கர்வத்தாலே தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேணும் என்னும் பீதியாலே
ஸ்வரூப ஆவேச ஸா பேஷனாய்
ஸ்வ விரோதி நிரசன சமநந்தர காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ கர்மம் உண்டானாலும்
தத் ப்ரவ்ருத்தி பாப பலம் அனுபவிக்கக் கடவன் அல்லேன் -என்று
இதுக்கு ஈடான துஷ்கர தபஸ்ஸைப் பூர்வ மேவ செய்கையாலே இறே
இவனை தசாவதார மத்யே பரிகணித்து

ராமோ ராமஸ் ச ராமஸ் ச -என்று
அவதார ரஹஸ்யத்தை விளக்குவிப்பதாக இறே
முன்னும் இராமனாய் பின்னும் இராமனாயத் தானாய் -என்றதும் –

சக்த்யாவேசத்துக்கும்
கார்ய காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ புத்தி உண்டானாலும்
கார்ய கால சமனந்தரம்
நாம் செய்த தபஸ்ஸை வ்யாஜமாக்கி ஈஸ்வரன் செய்தான் -என்னும் புத்தி உண்டாய்த்தாகில்
தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேண்டா இறே

கார்ய சமனந்தரமாக ஸ்வ கர்த்ருத்வ கர்வம் உண்டானாலும்
தத் பாப பலம் அனுபவிக்க வேண்டா என்று இறே
ஸ்வரூப ஆவேச தபஸ்ஸை செய்ததும் –
இதுக்கு (ஸ்வரூப ஆவேசத்துக்கு) வாசி சரீர அவசானத்து அளவும் (ஆவேசம் )நிற்கை –

ஆனால் மத்யே விக்நம் வருவான் என் என்னில் –
தானாய் என்று அசாதாரண விக்ரஹவானான சக்ரவர்த்தி திருமகனுடைய ப்ரவ்ருத்தியில்
அஸஹமானான் ஆகையாலே –
எல்லாத்தாலும் அசாதாரண சந்நிதியிலே ஆவேசம் குலையும் இறே –

(இதனால் தான் ஸ்வரூப ஆவேச பலம் பலராமன் இடம் இருந்தது
பரசுராமன் இடம் இல்லாமல் போனது )

இவ் வர்த்தம் உபதேசித்த ருத்ரனும்
(அத்ரி அநஸூயை -அவளுக்கு மூன்று குழந்தைகள் –
தத்தாத்ரேயர் விஷ்ணு அம்சம் -ருத்ரன் நான்முகன் அம்சம் இருவர் பிறந்தார்கள்
பரசுராமருக்கு ருத்ரன் உபதேசித்தார் என்பர் )
அசாதாரண ப்ரவ்ருத்தியில் அஸஹமாநத்வம் சொல்லித்திலன் இறே

சொன்னான் ஆகிலும்
அரன் அறிவானாம் -என்பார்கள் இறே (ஆழ்வார்கள் அநாதாரம் தோற்ற )
மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன் ஆகையாலே சொல்லவும் கூடும் இறே –

இவன் தானும்
எடுத்த கார்யம் இவ் விஷயத்தில் பலியாமையாலே இறே –
தொடுத்த அம்பை என் தபஸ்ஸிலே விடும் -என்றதும் –

இவன் தான் என் தபஸ்ஸை லஜ்ஜையாலே கர்ஹித்து
அதிலே அம்பை விடுவித்தவன் ஆகையாலே
இனி இதில் மூளான்

மூண்டானாகில் –
ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -என்கிற
ந்யாஸ ஸப்த வாஸ்யமான அசத்தி யோக தபஸ்ஸிலே மூளும் அத்தனை —

முன் வில் வலித்து
தவத்தை எதிர் வாங்கி -என்கிற இதுக்கு முன்னே என்னுதல்
திருமணம் புணர்வதற்கு முன்னே
இரண்டுமாம் இறே
மாத்ரு வசன வ்யாஜத்தாலே விரோதி நிரசன அர்த்தமான வனவாஸ ப்ராப்திக்கு முன்னே என்னுதல்
வில் எடுத்து முந்துற முன்னம் வில் வலி காட்டிற்று இவன் தன்னோடே இறே
(இது தானே கன்னிப் போர் பெருமாளுக்கு )

முது பெண் உயிர் உண்டான்
முதிர்ச்சியாவது
ராக்ஷஸ ஸ்த்ரீகள் அஸூர ஸ்த்ரீகள் போலே அன்றிக்கே
அஸூர ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே
மிகவும் யஜ்ஜாதிகளையும் ப்ராஹ்மணரையும் தபஸ்விகளையும் நலிந்து போருவாள் ஒருத்தி
இவளை ஸ்த்ரீ என்னலாமோ கடுகக் கொல்லீர் -என்ற விச்வாமித்ர வசன பரிபாலன அர்த்தமாக
முந்துற முன்னம் இந்த முது பெண்ணுயிரை நிரசித்தவன் –

தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
வில்லின் வன்மை உண்டானாலும்
ஐயர் மகன் என்னும் பிரதிபத்தி குலையாமையாலே
தாசரதி தன்மையைப் பாடிப் பற -என்கிறது

அந்யோன்யம் அவதார விசேஷங்களில் பிரதானமான இரண்டு அவதாரத்தையும் குறித்து
நியந்த்ரு நியாம்ய பாவம் உண்டாய்ச் சொல்லா நின்றது இறே

தன்மை
கல்யாண குணங்களுக்கு வாசகம் –

——————————

ஜனகராஜன் திரு மகளுக்குச் செய்த ஓரம் சொல்லிற்றுக் கீழ்
இங்கு ருக்மிணிப் பிராட்டிக்குச் செய்த உபகாரத்தைச் சொல்கிறது –

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 -3- –

பதவுரை

உருப்பிணி நங்கையை–ருக்மிணிப் பிராட்டியை
தேரின்–(தனது) தேரின் மேல்
ஏற்றிக் கொண்டு–ஏற்றிக் கொண்டு
விருப்புற்று–ஆசையுடனே
ஏக–(கண்ணன்) எழுந்தருளப்புக,
அங்கு–அவ்வளவில்
விரைந்து–மிக்க வேகங் கொண்டு
எதிர் வந்து–(போர் செய்வதாக) எதிர்தது
செருக்கு உற்றான்–கர்வப்பட்ட ருக்மனுடைய
வீரம் சிதைய–வீரத் தனம் கெடும் படியாக
தலையை–(அவனது) தலையை
சிரைத்திட்டான்–(அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய
வன்மையை–வலிவை பாடிப் பற
தேவகி சிங்கத்தை–தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை
பாடிப்பற–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக விரைந்து
சிசு பாலனுக்கு என்று கல்யாணம் செய்து காப்புக் கட்டின ருக்மிணி
சிசுபாலன் என்னை வந்து தீண்டும் போது என் பிராணன் போக வேண்டும் என்றும்
இல்லையாகில் கிருஷ்ணன் வந்து அங்கீ கரிக்க வேண்டும் -என்றும் தைவத்தை வேண்டிக் கொள்ள

ஸாஷாத் தைவ ஸப்த வாஸ்யனான தான் திரு உள்ளம் பற்றி அருளி
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
மடுத்தூதிய சங்கொலி செவிப்பட்டுத் தரிக்கும் படி தன் வரவை அறிவித்து
ராஜ சமூகமும் சிசுபாலனும் லஜ்ஜித்து தேஜோ ஹானி பிறக்கும்படி பெண் ஆளானாய்
அங்கு அவளை விருப்புற்றுப் பாணி கிரஹணம் செய்து தேரிலே எடுத்து வைத்து
பெரிய விரைச்சலோடே எழுந்து அருளா நிற்க

எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான்
எதிர் பொருது மீட்ப்பானாக விரைந்து வந்த ருக்ம ராஜன் மகனைக் கொல்லில்
நாய்ச்சியார் திரு உள்ளம் பிசகும் என்று
தேர்க்காலோடே கட்டிச் செருக்கு அழித்து இவனை நீக்கிக் கொண்டு போய்

வன்மையை பாடிப் பற
உக்த லக்ஷணம் தவறாமல் சிசுபாலனை நோக்கிச் செய்த சடங்குகளையும் விசேஷ்ய பர்யந்தமாக நினைப்பிட்டு
(விசேஷண விசேஷ்ய பாவம் -சிஸூபாலன் கண்ணன் அன்றோ -சரீர சரீரீ பாவம் உண்டே )
சிசுபால விசிஷ்டாய என்று பின்புள்ள சடங்குகளையும் தலைக் கட்டி
பெண்ணாளன் பேணுமூர் அரங்கமே -என்னும்படி பிரசித்தமான போக மண்டபம் ஏற்றி வைத்ததிலும்
(கோயிலிலே இன்றும் சேவை சாதிக்கிறார் அன்றோ)
பெண்ணாளன் ஆனதிலும்

செருக்குற்றான் வீரம் சிதைத்துத் தலையை அழித்த விரோதி நிரசனம் ஒன்றையுமே
எல்லாமாக நினைத்து
பாடிப்பற -என்று
ஜாதி அபிப்ராயத்தாலே மற்ற வகையை நியமித்துச் சொல்லுகிறது

தேவகி சிங்கத்தைப் பாடிப் பற
இவனைப் பெறாப் பேறு பெற்று வளர்த்த யசோதை இளம் சிங்கம் என்பதிலும்
பெற்று வர விட்ட தேவகி சிங்கம் என்கிறது
அடி யுடைமை தோற்றுகைக்காகவும்
மாத்ரு வசன பரிபாலனத்துக்காகவும் இறே –

———

மாத்ரு வசனத்தை வியாஜமாக்கிப் பிராட்டி நினைவின் படி
ஏகாந்த போக ஸித்திக்கும்
தேவ கார்யம் தலைக் கட்டுகைக்காகவும் போன
வன பிரவேசத்தை அனுசந்திக்கிறார்

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –

பதவுரை
மாற்று தாய்–தாயானவள்-தாய்க்கு ஒத்த சுமத்தரையார் -நாலூர் பிள்ளை நிர்வாகம் இது
மாறு-மற்றை – -ஒப்பு -சுமத்தரை – =மாற்று -வேறான கைகேயி
சென்று–சென்று.
வனம் போகே-வனமே போகு என்றிட–‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க
ஈற்றுத்தாய்–பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து–(தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்-“என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழ–என்று கதறி அழ
கூற்று தாய் சொல்ல–யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போன–கொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானை–சீற்றமற்ற இராம பிரானை
பாடிப் பற;
சீதை மணாளனை–ஸீதைக்கு வல்லபனானவனை
பாடிப் பற–

மாற்றுத் தாய்
ஸத்ருவான தாய் என்னுதல்
மற்றைத் தாய் என்னுதல்
சக்கரவர்த்திக்கு ஸ பத்ன்யத்தாலே ஸ்ரீ கோசாலையாருக்கு மாறான தாய் என்னுதல்
குப்ஜை தாசியாகையாலே வேறு பட்ட தாய் -மாறான தாய் என்னுதல்
ஸ்ரீ பரதாழ்வான் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலும் -மாற்றுத் தாய் என்னுதல்
மாறு -என்று சொல்லி -தாய் -என்று சொல்ல வேண்டுகிறது பெருமாள் நினைவாலே இறே

சென்று வனம் போகே என்றிட
வனமே சென்று போக என்று நியமிக்க –

ராஜ போகத்தில் நெஞ்சு வையாதே படைவீடு நீங்கும் அளவும் சென்று
வானமே போக வேணும் என்று நியமிக்க –
வா என்கிறாள் அன்றே
இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ என்கிறாள் அன்றே
அன்றிக்கே
வானம் போகவே நியமிக்க என்றுமாம் –

ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
பெற்று எடுத்த தாயாரான ஸ்ரீ கௌசலையார்
என் நாயந்தே -நான் ஏக புத்ரையாய் இருப்பவள் -உம்முடைய விஸ்லேஷ வியஸனம் பொறுக்க மாட்டேன்
நீர் போன இடத்தில் உமக்கு வரும் வியாஸந யாப்யுதங்களும் நான் அறிய மாட்டேன் –
பிதாவினுடைய நியந்த்ருத்வம் உமக்கு உபாதேயமானவோபாதி –
என்னுடைய நியந்த்ருத்வமும் உமக்கு உபா தேயமுமாய்க் காணும் இருப்பது –
அங்கன் அன்றியே மாதாவே சொன்னாள் -என்பீராகில்
நானும் மாதா வாகையாலே என் வசனமும் கேட்க வேணும் காணும்
அந்த நியாய நிஷ்டூரத்திலும் (விருத்தம் பொருந்தாமை )இந்த நியாயம் பிரபலமாய்க் காணும் இருப்பது –

அதில் நிஷ்டூரம் உண்டோ என்பீராகில்
ஸஹ தர்ம சாரிணிக்கு பர்த்ரு ஸூஸ் ரூஷணம் ஒழிய
வர பிரதானமாகக் கொள் கொடை சேருமோ –
ப்ரீதி தானமாகச் சேரும் என்னிலும் உனக்கு எனக்கு என்கை மிகை அன்றோ
பாணி கிரஹண வேளையில் ஏக மனாக்களாக அன்றோ பிராமாணிகரான வர்களுடைய கொள் கொடைகள்
பிராமண விருத்தமாயோ இருப்பது
பிதாக்கள் வானவம் (வனத்துக்குச் செல்லுகையை ) தாமும் முகம் பார்த்து நியமித்தமை தான் உண்டோ –
எல்லாப் பிரகாரத்தில் என் வார்த்தையும் கேட்க வேணும் காண் -என்ன

அவர் நியந்த்ருத்வத்தால் வந்த அனுமதியாக இருப்பதால் நீரும் ஏற்க வேணும் என்ன

உம்மால் வந்த ஆபத்து உம்மால் ஒழிய தீருமோ என்ன

ராமோ த்விர் நாபி பாஷதே -என்று
அந்த ப்ரதிஜ்ஜா சம காலத்திலே வருவேன் என்று நினைக்கவே தேறலாம் காணும் என்று
அருளிச் செய்கிற அளவிலே

கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
ஸ்ரீ ஸூமித்ரையார் சென்று
நான் தகைந்தாலும் இனி நில்லார்
வசிஷ்டாதிகளையும் மாதாவையும் விஞ்சிப் போகிறவர்க்கு ஒரு அபிப்ராயம் உண்டாய் அன்றோ இருப்பது -என்று அறிந்து
போகலாகாதோ என்று நியமித்த பின்பு

இன்னாப்போடே இவரும் (ஸ்ரீ கௌசல்யையார் ) நியமிக்கப் பெற்றோம் –
ப்ரீதியோடே அவர் (ஸ்ரீ கைகேயியார் )நியமிக்கப் பெற்றோம் –
மிக்க கிலேசத்தோடே இவரும் ஐயரும் அனுமதி செய்யப் பெற்றோமே யாகிலும்
இவர் (ஸ்ரீ ஸூமித்ரையார் )சொன்னது மிகவும் உத்தேச்யம் என்று இறே போவதாக ஒருப்பட்டது

கூற்றுத் தாய் சொல்ல
கூறுபட்ட ஹவிஸ்ஸை ஜீவிக்கையாலே கூற்றுத்தாய் என்னுதல் –
சக்கரவர்த்திக்கு மூவரும் ஸஹ தர்ம சாரிணிகள் ஆகையாலே அம்ச பாக்த்வத்தாலே கூற்றுத் தாய் என்னுதல்
ஸ்ரீ கௌஸல்யாரைப் போலே நிஷேதித்து அனுமதி பண்ணாமல்
அஹம் மமதைகளாலும் அந்நிய சேஷத்வத்தாலேயும் ஒருத்தி எனக்கு என்றது உமக்கென்றிய என்று
இவள் சொன்னதை மிகவும் திரு உள்ளம் பற்றுகை யாலே விஸ்லேஷ பீருக்கள் அபிப்ராயத்தாலே
கூற்றம் போன்ற தாய் என்னுதல்
சாஷாத் கூற்றம் அவளே இறே
ஸ்ருஷ்டத்வம் வனவாசாயா
அயோத்யாம் அடவீம் வித்தி -என்று இளைய பெருமாளையும் ஒருப்படுத்தார் இவரே இறே

கொடிய வனம் போன
பொருந்தார் கை வேல் நுதி போலே துன்னு வெயில் வறுத்த
நாட்டுக்கு அஞ்சி காட்டிலே புகுந்த மிருகங்களும் -க்ருத்ரிமரும் -ரிஷிகள் முதலான வன சாரிகளும்
துர்க த்ரய ஸா பேஷரும் விரும்பாத கான் விருப்பமாகச் செல்லுகிறது
எல்லாரும் விரும்பின தேசத்தில் கொடுமையாலே இறே

அவன் விரும்பிப் போன காட்டைக் கொடிய வனம் என்றதும்
அவன் கைவிட்ட தேசத்தை விரும்பியவர்கள் அபிப்ராயத்தாலே இறே

கலையும் கரியும் பரி மாவும் திரியும் கானம் இறே (சாளக்கிராமம் பதிகம் ) த்யாஜ்ய தயா ஞாதவ்யமானதும் –
திரு அயோத்யையிலே ஸ்வ இச்சா மாத்ரமே இறே உள்ளது –
த்யாஜ்யம் என்னாலாவது விதி நிஷேதமானது இறே
விதி நிஷேதம் இரண்டும் உண்டாயத்துக் காட்டுக்கே இறே
வென்றிச் செருக்களம் இறே உபா தேயமானது
(பெருமாள் வீர தீர பராக்ரமங்கள் காணலாய் இருப்பதால் உபாதேயம் அன்றோ )

அன்றிக்கே
மாற்றுத்தாய் தன்னையே
மாற்றுக் கூற்றுத் தாய் என்னுதல்
கூற்று மாற்றுத் தாய் என்னுதல்

அதாவது
கூற்றம் போல் இருக்கிற மாற்றுத் தாய் என்னுதல்
கூற்றத்தின் கொடுமையை மாற்றும்படியான கொடுமை யுடைய தாய் என்றபடி –

சீற்றம் இலாதானைப் பாடிப் பற
உங்கள் ஐயர் சொன்னார் போம் என்ன

நீர் சொன்னதே போராதோ எனக்கு
(மன்னவர் பணி அன்றாகில் உம் பணி மறுப்பனோ )
நான் உம்மளவில் போந்த பொல்லாங்கு இறே இங்கனே சொல்ல வேண்டிற்று
ஆனாலும் அவர் இதுக்குப் பொருந்தாமை கிலேசித்துக் கிடக்கிறார் என்றீரே
அவருடைய கிலேச நிவ்ருத்தியைப் பிறப்பித்து நியாய அனுகூலமாக இசைவித்துப் போகலாமோ என்ன

அது ஒண்ணாது –
நான் அவரைத் தேற்றிக் கொள்ளுகிறேன்-
புத்தி பேதம் பிறவாமல் நீர் சடக்கென போம் -என்ன
நம்மை இங்கனே சங்கிக்க வேண்டிற்றே என்று தம்மை வெறுத்தார் இறே

பிறரை வெறுத்து மிகவும் கோபிக்கிற காலத்தில்
ஸ்ரீ பரத்தாழ்வான் சகல ஸாஸ்த்ர நிபுணனாய் இருக்கச் செய்தேயும்
மாத்ரு வதம் பிராப்தம் என்று அறுதி இட்டு எழுந்து இருந்து –
அவன் அது தவிர்ந்தது-
மாத்ரு காதகன் என்று பெருமாள் நம்மைக் கைவிடுவார் என்று இறே

பரிவர் (ஸூக்ரீவராதிகள்)-வத்யதாம் -என்ன
நத்யஜேயம் என்று கிலேசித்து
இவர்களையும் சீற மாட்டாமை இறே
கபோத வியாக்யானம் அருளிச் செய்ததும் –

இளைய பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானை அதி சங்கையாலே கொலை கருத துணிந்ததே போரும் இறே சீற்றத்துக்கு
அவரையும் கோபிக்க மாட்டாமல் உமக்கு ராஜ்ய ஸ்ரத்தை உண்டோ என்றால் போலே இறே அருளிச் செய்ததும்

ஸ்ரீ பரதாழ்வான் மீள வேணும் என்னும் நிர்பந்தத்தோடே
ஸீதாம் உவாஸ என்னாமல் பிரபத்தி பண்ணவும்
அது தான் பெருமாள் அபிசந்தி அறிந்து இருக்கச் செய்தேயும் செய்தது ஆகையாலே
கண்டக பிரபத்தியாய்த் தோற்றிச் சீற வேண்டும் காலத்திலே சில நியாயங்களை அருளிச் செய்து
மீள விட்டார் என்றவை முதலாகப்
பல இடங்களிலும்
சீற்றம் இல்லாமை ப்ரஸித்தமாய்த் தோற்றும் இறே

இல்லாதவன் என்றது
சீற்றம் உண்டாய் பொறுத்து இருக்கிறான் என்றது அன்று
ஆஸ்ரயத்தில் கிடப்பது கல்யாணம் ஆகையாலே
சீற்றத்துக்கு இடம் இல்லை
காலாக்நி ஸத்ருச -என்றதும் குணமாம் அத்தனை
க்ரோதம் ஆஹாரயத் -என்று அருளப் பாடிட்டுக் கொண்ட சீற்றம் இறே

சீதை மணாளனைப் பாடிப் பற
இதுக்கு எல்லாம் அடி இந்த சம்பந்தம் இறே
மணாளன் -மணவாளன் –

———-

கிருஷ்ண அவதாரத்தில் போகிறார் –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-

பதவுரை

பஞ்சவர்–பஞ்ச பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அத் துரியோதனநாதிகள் தன் சொற்படி இசைந்து வாராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து,
கஞ்சு உமிழ்–விஷத்தைக் கக்குகின்ற
காகம் கிடந்த–காளியன் கிடந்த
நல் பொய்கை புக்கு–கொடிய மடுவிலே புகுந்து
அஞ்ச (அக் காளியன்) அஞ்சும்படி–பணத்தின் மேல் (அவனது) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து நடமாடி அக் காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட
அஞ்சன வண்ணனை பாடிப்பற;
அசோதை தன் சிங்கத்தைப் பாடிப்பற–

பஞ்சவர் தூதனாய்
தர்ம புத்ராதிகளுக்குத் தூதனாய்
இவர்கள் ஐவரிலும் இவனை ஏவ உரியர் அல்லாதார் இல்லை போலே
தூதனாக வேணும் என்றே திரு அவதரித்தது
இன்னார் தூதன் என நின்ற பின்பு இறே அவதாரம் நிலை நின்றது
தூது விட்டு வரும் அளவும் பார்த்து இருந்த குறை தீர்ந்ததும் –

ஆய்
தூத க்ருத்யம் வந்தேறியாய்த் தோன்றுகை அன்றிக்கே
ஸ்வா பாவிகமாய் வந்த படி –

பாரதம் கை செய்து
பத்தூர் ஓரூர் பெறாமையாலே யுத்த உன்முகனாய்ப் போந்து
கையும் அணியும் வகுத்து நின்ற பக்ஷ பாதத்தாலே –
பாரதம் கை செய்தது -என்கிறது –

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
சலம் கலந்த பொய்கை-(திருச்சந்த )-என்னும்படி இறே
நஞ்சை உமிழ்ந்து பசுக்கள் தண்ணீர் குடியாதபடி பண்ணிற்று –

நற் பொய்கை புக்கு
பண்டு நல்ல தண்ணீர் ஆகையாலே நல்ல பொய்கை என்கிறது –

அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அதுக்கு உள்ளே குதித்து அது கிளம்பின அளவிலே -அதின் தலையிலே பாய்ந்து –

நீருக்குள் கிளம்பின பாம்பின் தலையிலே பாயும் போது தானும் நீருக்குள்ளே நின்றால் பாயப் போகாது இறே
ஆயிருக்க கரை மரத்திலே நின்று பாய்ந்தால் போலே இறே
அதன் தலையிலே அது அஞ்சும்படியாக இறே உடலை முறுக்கி
அதின் தலையிலே பாய்ந்திட்டு
இளைப்பித்துப்
பின்னே இறே அதுக்கு அருள் செய்தது –

அஞ்சன வண்ணனைப் பாடிப் பற-
அதுக்கு பின்பு இறே ஸ்வா பாவிகமான நிறம் தோன்றினதும் –

வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற
தேவகி சிங்கம் என்பதிலும்
தங்கள் அறிந்த பிறப்பிலே பாடிப் புகழுமதே நல்லது –

———-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

பதவுரை

முடி ஒன்றி–‘திருமுடி சூடி
மூ உலகங்களும்–பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு–பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று–தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும்” என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த–பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு–ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று–அக் காலத்திலே
அடி நிலை–ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை–அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற….;
அயோத்தியர்–அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை–அரசனானவனை,
பாடிப்பற–

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்து
முன்பு போலே ஆகாமல் ஒரு விக்நம் அறத் திரு அபிஷேகம் சாத்தி அருளி
முன்பு விக்நத்துக்கு ஹேது என்னுடைய அந்நிய பரதை அன்றோ -என்ன

எனக்குள்ள அளவாலே காணும் அது குலைந்தது
அது தான் குலைந்ததோ –
ஐயர் உமக்குத் தந்து போன ராஜ்ஜியம் அன்றோ –
அவருடைய ப்ரதிஜ்ஜை அனுமதிகளை நோக்கிப் பாரீர்

நானும் அவருடைய ப்ரதிஜ்ஜை அனுமதிகளை அன்றோ நோக்குகிறேன்-என்றால் போலே
சிலவற்றை அருளிச் செய்ய

ஐயர் உமக்கு
உமக்குப் பின்பு அன்றோ நான்

அவ்வளவேயோ
உம்முடைய சிஷ்யனும் அன்றோ நான்
வசிஷ்ட சிஷ்யர் நீரே அன்றோ
ப்ராதுர் சிஷ்யஸ்ய -என்கிற அளவேயோ

தாஸஸ்ய
உம்முடைய அடியான் அன்றோ நான் –
ராஜ்யஞ்ச ஸ அஹம் ஸ ராமஸ்ய -என்று அன்றோ என் ப்ரக்ருதி என்ன

உமக்குத் தனியே ஒரு பிரதி பத்தி உண்டோ –ஐயர் ஏவினது ஒழிய –
என்ற அளவிலே
என்னுடைய அந்நிய பரதையைப் பொறுத்து மீண்டு எழுந்து அருளீர் என்று
பின் தொடர்ந்து வந்து
பரதநம்பி யானவன் சரணம் புக –

பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
உம்முடைய மநோ ரதத்தாலே தம்பி என்றீர் ஆகில் தமையன் சொன்னதைச் செய்யும்
சிஷ்யன் என்றீர் ஆகில் ஆச்சார்யன் சொன்னதைச் செய்யும்
தாஸன் என்றீர் ஆகில் நாயன் சொன்னதைச் செய்யும்
இப்போது அருள வேணும் என்றீரே
சரணாகதன் என்றீர் ஆகில் சரண்யன் சொன்னதைச் செய்யும் -என்று
சில நியாயங்களை அருளிச் செய்து
காட்டில் இவரை ரமிப்பித்து இறே
திருவடி நிலை கொடுத்தது –

படியில் குணத்து பரத நம்பி
இவரும் இதுவே நமக்குத் புருஷார்த்தம் என்று கைக் கொண்ட பின்பு இறே
படியில் குணத்து பரத நம்பி ஆய்த்தும்

படியில் குணம் என்றது
பித்ரு வசன நிர்தேசத்திலே நின்றவருடையவும்
பித்ருத்வம் நோப லஷ்ய -என்றவருடைய
குணங்களும் ஒப்பு அன்று என்றதாய்த்து

திருவடி நிலைகளை பரித்த பின்பு இறே
அடி சூடும் அரசாய் -பரதனாய்த்தும்

நம்பி
இவற்றால் இறே பூர்ணன் ஆய்த்தும்
(உகார விவரணம் -நமஸ் அத்யந்த பாரதந்தர்யம் )

ஸ்ரீ சத்ருக்கனன் நினைவாலும்
இளைய பெருமாளைப் போலே ந ஸ அஹம் -என்னாத நினைவாலும்
வந்த பூர்த்தி என்னவுமாம்

இது தான் உகார விவரணம் இறே

அயோத்தியர் கோமானைப் பாடிப் பற
பரத வ்யாஜத்தாலே திருவடி நிலைகள் தாமே ராஜ்ஜியம் செய்கையாலே
திருவடி நிலை ஈந்தவன் தன்னையே அயோத்யைக்கு ராஜா என்னுதல்
பின்பு திரு அபிஷேகம் செய்கையாலே கோமான் என்னுதல் –

———-

இதுவும் நஞ்சு உமிழ் நாகம்(3-9- 5)என்ற பாட்டோடே சேர்த்தி –

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-

பதவுரை

காளியன் பொய்கை–காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க–கலங்கும்படி
பாய்ந்திட்டு–(அதில்) குதித்து
அவன்–அக் காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து–ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள–அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு–அக் காளியனுக்கு
அருள் செய்து–(ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்–லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய
தோள் வலி–புஜ பலத்தையும்
வீரம்–வீரப் பாட்டையும் பாடிப் பற;
தூ மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையவனை பாடிப் பற–

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன் நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
பொய்கையில் கிடந்த காளியன் நெஞ்சு கலங்கும்படி
கிளம்பின தலையிலே பாய்ந்து
தலை ஐந்திலும் நின்று நடித்து -(நடனம் ஆடி )

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்-
அவன் சரணம் புக்கவாறே அவனுக்குப் பிராணனைக் கொடுத்து
ஸமுத்ரத்திலே போய்க்கிட என்ற சாமர்த்தியத்தை யுடையவனுடைய –

தோள் வலி வீரமே பாடிப் பற
மந்த்ர பர்வதத்தை வாஸூகி சூழ்ந்தால் போல்
திருமேனி முழுக்கச் சுற்றின நாகத்தின் தலையிலே நிற்கச் செய்தே
சுற்று விடுவித்துத் தூக்கிப் பிடித்து எடுக்கையாலே
தோள் வலி -என்கிறது –
(ஆடின தாள் வலி என்னாமல் தோள் வலி என்கிறார் )

தூ மணி வண்ணனைப் பாடிப் பற
காளியன் போன பின்பு பசுக்களுக்கும் இடையருக்கும் விரோதி போகப் பெற்றதால்
தூய்தான நீல ரத்னம் போன்ற திருமேனி புகர் பெற்ற படி –

———

இதுவும் அடி நிலை ஈந்தான் என்கிறது பின்னாட்டுகிறபடி

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

பதவுரை

தார்க்கு–மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு
இள–(தகுந்திராத) இளம் பருவத்தை யுடையவனான
தம்பிக்கு–பரதாழ்வானுக்கு
அரசு ஈந்து–(அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து,
நூற்றவள்–(இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய
நூல் சாஸ்திரம் நூற்றவள் விசாரித்தவள் -தனக்கு கொடுத்த வரங்களையே விசாரித்தவள்
சொல் கொண்டு–சொல்லை ஏற்றுக் கொண்டு
தண்டகம்–தண்ட காரண்யத்துக்கு
போகி–எழுந்தருளி (அவ் விடத்தில்)
நுடங்கு இடை–துவண்ட இடையை உடையனான
சூர்ப்பணகாவை–சூர்ப்பணகையினுடைய
செவியொடு மூக்கு–காதையும் மூக்கையும்
அவள் ஆர்க்க அரிந்தானை–அவள் கதறும்படி அறுத்த இராம பிரானை
ராமஸ்ய தக்ஷிண பாஹு -ப்ரயுக்தமான ஐக்யத்தைப் பற்ற
பாடிப் பற;
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற–

தார்க்கு இள தம்பிக்கு அரசு தந்து
மாலையிட்டு ராஜ்ஜியம் பண்ணப் பிராப்தன் நீ என்று வசிஷ்டாதிகள் சொல்லச் செய்தேயும்
இவ் வம்சத்தில் தமையன் இருக்கத் தம்பிமார் மாலையிட்டு ராஜ்ஜியம் பண்ணினார் இல்லை என்று
நெஞ்சு இளகி சபா மத்யே கர்ஹித்து மறுத்தவனை
ஒரு நியாயத்தாலே இசைவித்து
அவனுக்குப் பொருந்திய அரசைக் கொடுத்து
(இவனுக்குப் பொருந்திய அரசை அன்றோ-அடி சூடும் அரசை ஈந்து அருளினார் )

தார் -என்று சதுரங்க பரிகரத்துக்கும் பேராய்
அவர்கள் அபிஷேகம் செய்து எங்களை (சதுரங்க பரிகரமும்) ஆள வேணும் என்ன
நெஞ்சு இளகி வார்த்தை சொன்னான் என்னவுமாம் –

அன்றிக்கே
தார் என்று மாலைக்குப் பேராய்
அத்தாலே ராஜ்யத்துக்கு உப லக்ஷணமாய்
இளந்தம்பி என்று பெருமாளுக்கு நேரே இளையவன் என்று காட்டுகிறது –

தண்டக நூற்றவள் சொல் கொண்டு போகி
ராஜ்யத்தை விடு வித்து
தண்ட காரண்யத்திலே போக விடக் கடவோம் என்று விசாரித்தவள் சொல்லை அங்கீ கரித்துக் கொண்டு
வசிஷ்டாதிகள் திருத் தாய்மார் நகர ஜனங்கள் சொலவை
மறுத்துப் போனவன்

போகி-என்றது
போய் என்னுதல்
போகிறவன் என்று திரு நாமம் ஆதல்
(சோறு ஆக்கி -தளிகைப் பண்ணுபவர் போல் போனவன் என்றவனையும் காட்டும் _
அவள் சொன்ன எல்லை அன்றிக்கே அவ்வருகும் போக வல்லவன் என்னுதல் –
(அவ்வருகும்-தண்ட காரண்யம் தாண்டி இலங்கை வரை எங்கும் திருவடி சாத்தி அருளினார் அன்றோ )

நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
கிருத்ரிம ரூபையான சூர்பணகி தான் வந்து தன் வடிவு அழகைக் காட்டி
என்னை விஷயீ கரிக்க வேணும் என்ன
தம்முடைய பொருந்தாமை தோன்ற இளைய பெருமாளைக் காட்டி உபா லம்பிக்க

அவளும் அது தன்னை அறிந்து க்ருத்தையாய் பழைய வேஷத்தைக் கொண்டு எடுத்துக் கொண்டு போகப் புகுந்த அளவிலே
பெருமாள் திரு உள்ளத்தை நேராகக் கண்டு -தம்மையும் கரணவத் சேஷமாகக் கண்டு –
அவள் செவியோடு மூவகைக் கதறிப் பதறிப் போம்படி அறுத்தவனை

அறுத்தானை என்னாதே
அரிந்தானை -என்கையாலே
அரிகிற போதை உணர்த்தி இல்லாமையும்
பின்பு மிகுதி காண உணர்ந்தமையும் தோற்றுகிறது –

அன்றியே
ஆர்த்தல் -கர்வமாகில்
அபிமத ஸித்தி பெற்றார் பாவனையும் தோற்றும் இறே
(பெருமாளை ப்ரத்யக்ஷமாகக் காணப் பெற்றாளே )
தருணா –இத்யாதி

ராமஸ்ய தஷினோ பாஹு
இது ஸாமாநாதி கரண்யம் அன்று
ஸாயுஜ்யம் ( யுகு -தாது -இரட்டை )

அப்ராக்ருதமான ஞான சக்த்யாதிகளை உபாதானம் பேதிக்க மாட்டாதே
ப்ராக்ருதரை இறே பேதிக்கலாவது
பேதிக்கும் போது கார்ய காலத்தில் ப்ரேரகாதிகள் வேண்டுகையாலே ஸாமாநாதிகரண்யம் வேண்டி வரும்
அல்லாத போது வையதி கரண்யமாய்
விசேஷ்ய பர்யந்த அபிதான நியாயத்தாலே வையதி கரண்யமே இறே ஸித்திப்பது

(கடல் ஞாலம் செய்தேனே யானே என்னும் -அநுகாரம் -விசேஷணம் விசேஷ்யம் பர்யவசாயம் -ஆகுமே
லஷ்மணன் எடுத்துக் கொண்ட திரு மேனி மூலம் செய்வதாக சங்கல்பம் மூலம் இவள் காதும் மூக்கும் அரிந்தது
பர்ணசாலை அமைக்க -கைங்கர்யம் சித்திக்க அப்படி இல்லையே-வையதிகரண்யம் ஆகுமே
நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய் -ஆய் என்பதால் சாமானாதி கரண்யம்
பின்ன பிரவ்ருத்தி ஸப்தானாம் ஏக ஆஸ்ரயம்
தண்டவான் புருஷன் -குண்டலி புருஷ -இவை பிரிக்க வாய்ப்பு உண்டு -ப்ருதக்த்வம்
ப்ருதக்த்வம் இல்லாத போது -சுக்ல படம் -வெண்மையான வஸ்திரம் -தனியாகப் பிரிக்க முடியாதே –
இரண்டுமே பிரதம வியக்தி -வெண்மை நிறம் உடைய வஸ்திரம் -விசேஷ பர்யந்த அபிதான நியாயத்தாலே )

அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
இதுவும் முன்பு போலே –

———–

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற – 3-9 -9-

பதவுரை

மாயம்–க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது–இரட்டை மருத மரங்களை
இறுத்து–இற்று விழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு–இடையர்களோடு கூட
போய்–(காடேறப்) போய்
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரக்ஷித்தும்
அணி–அழகிய
வேயின் குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதியும்
வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை–இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற
ஆநிரை மேய்த்தானை பாடிப் பற–

(ஆ நிரை காத்து அணி-ரக்ஷணம்
ஆ நிரை மேய்த்தானை-திவத்திலும் ஆ நிரை மேய்ப்பு உகப்பானே
ஆகவே புநர் யுக்தி தோஷம் இல்லை )

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
கம்சன் வரவிட
மாயா ரூபிகளாய் வந்த அஸூரர்களை நிரஸித்து

ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
இடையரோடே போய் வ்யாக்ராதிகள் வர்த்திக்கிற காட்டிலுள் புகாமல் –
நாட்டில் மீளாமல் –
மேய்ச்சல் உள்ள இடங்களிலே போய் நின்று

வேயின் குழலூதி
பிரிந்து போனவையும் வந்து கூடும்படி அழகிய வேய்ங்குழலை யூதி

வித்தகனாய் நின்ற
எல்லாருக்கும் பிரதானனன் என்னுதல்
சமர்த்தன் -என்னுதல்

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
இடையருக்கு முன்னோடிக் கார்யம் பார்த்த மேனாணிப்பை யுடையவன்

ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற
இப்படிக் குழலூதிப் பசு மேய்த்தவனைப் பாடிப் பற–

————-

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

பதவுரை

கார் ஆர் கடலை–ஆழத்தின் மிகுதியால் கருமை பொருந்திய கடலை
அடைத்திட்டு–(மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி)
(அர்த்த ஸேது வழியாக)
இலங்கை–லங்கையிலிருந்து
புக்கு–(அவ் விடத்தில்)
ஒராதான்–(தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய
பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்–அழகிய தலைகள் பத்தையும்
நேரா–அறுத்துப் போகட்டு
அவன் தம்பிக்கே–அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே
நீள் அரசு ஈந்த–நெடுங்காலம் நடக்கும் படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின்
ஆரா அமுதனை–எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராம பிரானை
பாடிப்பற;
அயோத்தியர்–அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்க கடலை சீக்கிரமாக அடைத்து
அக்கரை ஏறி லங்கையில் வடக்கு வாசலிலே யுத்த உன்முகனாய் எழுந்து அருளி

ராக்ஷஸ வா அ ராக்ஷஸம் -(ஆரண்ய 44) -என்றும்
தான் போலும் -என்றும் –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்று
பெருமாள் ப்ரதிஜ்ஜையை நிரூபியாதே
யுத்த கண்டூதியோடே
நான் ராக்ஷஸ ராஜன் -அன்றோ என்ற கர்வத்தோடே கிளம்பினவனுடைய

ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
தாய் தலையான ஒன்றோடே உண்பதையும் சேர அறுத்து

ஓராதவன்
இவனுக்கு ஓராமை
வாலி வதம் -சேது நிபந்தனம் -லங்கா தஹனம் -முதலானவை எல்லாம் ஓராமை இறே

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ந து ராக்ஷஸ சேஷ்டித (சூர்பண கையே சொல்லுவது )
ராக்ஷஸா நாம் பலாபலம் -என்று
(பெருமாளே இஷ்வாகு குலத் தம்பியாக நினைத்துக் கேட்டது -நின்னோடும் எழுவர் ஆனோம் )
தம்முடைய தம்பியாக அங்கீ கரித்து இருக்கச் செய்தேயும்
(அவன் தம்பிக்கே-என்னலாமோ என்னில் )

ராவணன் பட்ட பின்பு
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப் யேஷ யதா தவ -என்றது
ராம அநு வ்ருத்தி புருஷார்த்தம் என்று வந்தவனுக்கு
ராஜ்ய பிராப்தி யுண்டாக்குவதாக்க திரு உள்ளம் பற்றி இறே

அன்றிக்கே
ராக்ஷஸர் வச வர்த்தியாம் போது அவனோடு ஒரு பிராப்தி உண்டாக வேணும் என்று
இவர் (பெரியாழ்வார் ) தாமும் அருளிச் செய்கிறார் -என்னுதல்

ராக்ஷஸ கந்தம் மாற மாட்டாதே என்னும் சங்கையாலும்
இளைய பெருமாளைப் போலே –
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி –
நவ ஸீதா -ந ஸ ஸீதா -என்றும்
அவன் நீக்க நினைத்தாலும் நீங்காமை அன்றிக்கே அவன் நீக்கின வழியே அவன் இசைந்து போகையாலும்
இவர் தாமும் -அவன் தம்பி -என்கிறார் –

நீள் அரசு ஈந்த
என்னிலங்கு நாமத்து அளவும் அரசு என்று ஈந்த
முன்பு அக்னி ஹோத்ராஸ் ச வேதாஸ் ச ராக்ஷஸாநாம் க்ருஹே க்ருஹே -என்று
விஷ்ணு வாதி நாமங்கள் நடந்து போரா நிற்கச் செய்தேயும்
தயா ஸத்யஞ்ச ஸுவ்சஞ்ச ராக்ஷஸா நாம் ந வித்யதே -என்று நடந்து போந்து இறே

அங்கன் ஆகாமல்
பரத்வாதி நாமங்களிலும் பிரகாசமாய் இருப்பது
ராமன் என்கிற திரு நாமம் ஆகையாலே இறே
என்னிலங்கு நாமம் -என்று விசேஷித்தது –

ஆராவமுதனைப் பாடிப் பற
ராவண வத அநந்தரம்
விரோதி போகப் பெற்றதாலே திரு மேனியில் பிறந்த புகர் தமக்குப் போக்யமாகத் தோற்றுகையாலே
ஆ திருப்த போகம் என்று மங்களா ஸாஸனம் செய்து
ஆராவமுதம் -என்கிறார் ஆதல்

விள்கை விள்ளாமை விரும்பி யுள் கலந்தார்க்கு ஓர் ஆரமுதே (திருவாய் )-என்கிறபடியே
அத்விதீயமான அம்ருதம் என்னுதல்

தாரா வாஹிக விஞ்ஞானத்தில் ( தைலதாராவத் -எண்ணெய் ஒழுக்கு )
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுது என்னுதல்

அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
அம்ருதத்தோடே உபமித்துத் (உபமானம் அருளிச் செய்தது )
தம்முடைய அமுதத்திலே சேராமையாலே
ஆஸ்ரயம் தன்னையே அருளிச் செய்கிறார் –

————

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9- 11- –

பதவுரை

நந்தன மதலையை–நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும்
காகுத்தனை–இராம பிரானையும்
நவின்று–(ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி
உந்தி பறந்து–உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்–அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய
சொல்–சொல்லி,
செம்தமிழ்–அழகிய தமிழ் பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த
ஐந்தினோடு ஐந்தும்–க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை–துன்பமொன்று மில்லையாம்–

நந்தன் மதலையை காகுத்தனை
நந்த கோப குமாரனை
காகுஸ்த்த குல உத்பவனை

நவின்று உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
ஒருவருக்கு ஒருவர்
மேன்மையும் நீர்மையுமான குணங்களை கிருஷ்ண அவதாரத்தில் தோன்றவும்
நீர்மையான குணம் ஒன்றையுமே ராமாவதாரத்தில் தோன்றவும்
சொல்லித் திருவாய்ப் பாடியிலே பெண்கள் இரண்டு வகையாக வகுத்து
உந்தி பறந்த பிரகாரத்தை வ்யாஜமாக்கி

செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஆர்ஜவ ரூபமான தமிழாலே
திருப் பல்லாண்டு பாடி
ஹித ரூபமான அடிமை செய்து இருப்பாராய்
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே
இரு வகையாகத் தோற்றச் செய்தேயும்
தர்மி ஐக்ய நியாயத்தாலே ஒரு வகையாகத் தோற்றின
ஐந்தினோடு ஐந்தும்
ஸ அபிப்ராயமாக வல்லார்க்கு
ஸங்கல்ப நிபந்தமான லீலா ரஸ வியசனம் இவ்வாழ்வார் பிரஸாதத்தாலே இனி உண்டாகாது

அல்லல் -ஆவது
பல பல மாய மயக்குகளால் இன்புறும் துன்பமும் இன்பமும் ஆகிய இவ் விளையாட்டு இறே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.