ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தாத்ரு குண பிரவ்சித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே
விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவ்சித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -என்று
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் –
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –
1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை
2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-
3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-
4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்
5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்
6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –
7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ
8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்
9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–
10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்
பதிஐ பகவான் –
——–
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-
———–
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-
——–
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-
—–
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-
——–
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-
——-
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-
———
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-
———-
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-
———
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-
——-
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-
———-
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
———
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -66-பாசுரம்–
அவதாரிகை –
இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————-
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-
பா மருவு வேதம்-சந்தஸ் ஸூக்கள் கூடிய வேதம்
—————————————————-
வியாக்யானம்–
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –
தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –
அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –
நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகதலோடே கூப்பிட்ட –
அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணங்கள் –
அவை தான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகத்வம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
1-பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
2-என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்
1-காத்த எம் கூத்தாவோ -என்று தொடங்கி உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
2-எங்குத் தலைப் பெய்வன் நான் என்று தொடங்கி என்னுடைக் கோவலனே -என்றும்
3-என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
4-வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
5-என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-
1-ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
2-காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
3-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –
இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்
பற்ப பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தாமரைக் கையாவோ- செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்
காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்
பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்
என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்
என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-
அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்
மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்
அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –
தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட
அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-
இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply