ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-10–உலகம் உண்ட பெரு வாயா!–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆவேத்யா ஸ்வயம் ஆகிஞ்சன்யம்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம்
முனி ஆர்த்தே -ஸ்தாதாதய கதா
அப்ஜவாசாம் சங்கடந கர்ம ஜாத ரூபாம்

அப்ஜவாசாம் -தாமரையாள்- பிராட்டி
சங்கடந கர்ம ஜாத ரூபாம் -புருஷகார கர்த்தவ்யத்தில் ஆழ்ந்து –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

———

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகடித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்
த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

ஷஷ்ட்யயே–ஆறாவது சதகத்தில்
1-இத்தம் சத்வார கம்யம் –அபிகம்யன் -ஆச்சார்ய புருஷகாரமாக – -பக்ஷிகள் -மூலம் –-பொன்னுலகு ஆளீரோ பதிகம்

2-ஸ்வயம் இதம் -தானே ஆஸ்ரிதர் மேல் விழுந்து மின்னிடை மடவார் –

3-அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்–விருத்தங்கள் வஸ்துக்கள் கடிப்பித்து சேர்ப்பித்து–சேராதார்களை சேர்ப்பித்து-

4-ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை –ஸ்வ கீய சரித்திரம் சர்வ சித்த ஆகர்ஷந்தம்-குரவை கோத்து உட்பட மற்றும் பல

5–விகடித விஜநம் –சோபாதிக-கர்மம் அடியாக வந்த – பந்து ஜனம் பிரித்து –

6–ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்–ஆஸ்ரித அகங்கார மம கார மோசகம் -மாலுக்கு -இழந்தது -இவை தானே அகங்கார மமகார ஹேதுக்கள்

7-த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் — -விஸ் லேஷ சமயத்திலும் நடக்க தைர்யம் அருளி -உண்டாக்கி –

கடக வச மஹாபுதி யுகமம் –பொன் உலகு ஆளீரோ –

சடாரி வைகத்யஸ்யாப்யன் அர்ஹம் –விஸ்லேஷத்துக்கு அர்ஹம் இல்லாமல் -நீராய் நிலனாய் —

பிரபதன சுலபம் –திருவேங்கடத்தான் -சர்வ லோக சரண்யன்-

பிராஹா சரணம்

——–

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

——–

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

————-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

———-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

————

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

———-

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

——–

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

——–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

——–

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

———

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

———

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

———

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -60-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெரு வாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

——————————————————-

வியாக்யானம்–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-

அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-

அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
1-குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
2-ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
3-அண்ணலே உன் அடி சேர -என்றும்
4-பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
5-திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
6-எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
7-உன பாதம் காண -என்றும்
8-நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
9-அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
10-உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –

அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
ச க்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –

சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே-(2-6-11-)
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்

நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: