ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-9–நீராய் நிலனாய்த் தீயாய்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம்
ச விபக்னரூபே ஹரே சகல லோகே
மயம் நிராசா அப்ராக்ருத வபுஷி
லோக மனனா பிரலாபம் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம் ச விபக்ன- விஷயம் பார்க்க முடியாதபடி நெஞ்சு அழியும் படி
ரூபே ஹரே சகல லோகே மயம் நிராசா – ஜகதாகரத்தில் ஆசை அற்று
அப்ராக்ருத வபுஷி லோக மனனா-அசாதாரண திவ்ய மங்கள ஆசையால்
பிரலாபம் உச்ச சுரத்தால்

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சர்வாத்மாத்வாத் ஜகத்யாத் க்ரமனாத் சம்ரக்ஷணாத்
சத்ரு த்வம்சாத் பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்
நிர்வாகத் அண்ட கோடி யாத் புத தய்யி தத்தாயா
சர்வ ஷீஷ்ண மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்

1-சர்வாத்மாத்வாத் —-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச்
சிவனாய் அயனானாய்-சர்வ பூத அந்தர் பாவம்-

2-ஜகத்யாத் க்ரமனாத் –மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே

3-சம்ரக்ஷணாத் –ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!

4–சத்ரு த்வம்சாத் –தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!

5-6-பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்–விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!–என்றும்
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-என்றும்

7-நிர்வாகத் அண்ட கோடி யாத் –உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்!

8-புத தய்யி தத்தாயா–அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!

9-சர்வ ஷீஷ்ண –தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-

10-மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்–குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ!

கைவல்யம் அற்று மோக்ஷம் ஒன்றிலே இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக
விஸ்லேஷ அநர்ஹஹத்வம் -கல்யாண குணம் -இப்பதிகத்தில்

———-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

———–

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-

————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

————-

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-

———-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

——–

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

———-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7-

———–

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

———

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

———-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -59-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-

—————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும்
அசேதனங்களோடு –
சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
1-வாராய் -என்றும்
2-நடவாய் -என்றும்
3-ஒரு நாள் காண வாராய் -என்றும்
4-ஒளிப்பாயோ -என்றும்
5-அருளாயே -என்றும்
6-இன்னம் கெடுப்பாயோ -என்றும்
7-தளர்வேனோ -என்றும்
8-திரிவேனோ -என்றும்
9-குறுகாதோ -என்றும்
10-சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: