ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-8–பொன்னுல காளீரோ?–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம்
வந்தம் சௌரிம் எத்ரச் ச குத்ர
சாபி ஆலோக்ய ஆவேத்ய மத ஸ்திதிம்
அதீன விபூதி உக்மம் ஆயாசத முனி

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம் வந்தம் –தன்னைக் கொடுப்பதில் நாள் கடத்தி இருக்கும்
சௌரிம் எத்ரச் ச குத்ர சாபி ஆலோக்ய -எங்குச் சென்றாகிலும் கண்டு –
ஆவேத்ய-இப்படி என்று சொல்லி
மத ஸ்திதிம் அதீன விபூதி உக்மம் -உபய விபூதியையும் தருவதாக
ஆயாசத முனி

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா ஆயுத ஸூப தய கதா
ஜிஷ்ணு சாரத்திய யோகாத் ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்
கருட ரத தயாத் ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத் காந்த்யா
சாம்ராஜ்ய யோகாத் அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச ஸ்வ கீய

1-லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா–முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான்

2-ஆயுத ஸூப தய கதா–கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்!

3–ஜிஷ்ணு சாரத்திய யோகாத்–ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.

4-ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்–மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே

5–கருட ரத தயாத்–வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலை

6-ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத்–என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்

7-காந்த்யா–பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்-யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்

8-சாம்ராஜ்ய யோகாத்–மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு-

9-அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச–கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-
ச காரம் – ஸ்ரீ யபதித்தவம்-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே

ஸ்வ கீய கடக ஜனங்கள் இட்ட வழக்காம் படி விபூதி த்வயம் உடையவன்
ஸ்வீய ஆய்த விபூதி த்வயமத்வம் -கடகருக்கு இஷ்ட விநியோக உபய விபூதி கொடுக்கும் குணமே இதில் —

———-

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

———

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

————-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3-

———–

தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

———–

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

——-

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

——–

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

————-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

————

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

———–

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-

————

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -58-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————–

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

—————————————————

வியாக்யானம்–

பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி –

பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி-நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –

புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-

வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று

என் இடரை –
என்னுடைய துக்கத்தை -அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்-சொன்ன இவை -என்கை –

என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்-அருளிச் செய்தவை -என்கை –

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே –

நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண-நித்யமான சகத்திலே வர்த்திகிறவர்களே நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –

ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே
ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: