ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-7–உண்ணும் சோறு பருகு நீர்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி
ப்ராப்தவ் அது த்வரித்த் தீ அகிலான் விகாய ஸ்யாத்
அலப்த பல பார்ஸ்வத் ஸ்திதி இத் அவதீயகமன
முனி அபூத் அதி சப்தமம் சக

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி ப்ராப்தவ் -தசையை அடைந்தார்
அது த்வரித்த் தீ -துடிப்பான புத்தியால்
அகிலான் விகாய -அனைவரையும் விட்டு
ஸ்யாத் அலப்த பல-சேரும் கொலோ -கிட்டுவாளோ இல்லையோ
இத் அவதீய கமன பார்ஸ்வத் ஸ்திதி -பக்கத்தில் உள்ள தாய் சங்கை –

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பாரம்யாத் பவ்ய பாவாத் ஸ்ரக் அபி ஹிதி முகத்
ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா ஸ்நேஹித்வாத்
ஆபி ரூப்யாத் ஆஸ்ரித பர வசதா சர்வ லோகேசதா
த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ

1-பாரம்யாத் பவ்ய பாவாத் —-உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே–உயர்ந்த -அடங்கிய -கண்ணன் எம்பெருமான் -பரத்வமும் ஸுவ்லப்யமும்-

2-ஸ்ரக் அபி ஹிதி முகத்–பேரும் தார்களுமே பிதற்ற–

3–4-5-6–ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா –3/4/5/ 6–அர்த்தம் யூகித்து -ஸங்க்ரஹமாக –
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் –என்றும் –
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே–என்றும்
இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-என்றும்
தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு–என்றும் —
ஸ்ரீ யபதி -யானபடியால் -செல்வம் நீர் நிலைகள் –நித்ய வசந்தம் -தடா –தத் சம்ஸ்லேஷத்தால்
புதுக்கணித்த திவ்ய அவயவ சோபைகள்-இப்படி நாலையும் சேர்த்து

7-ஸ்நேஹித்வாத்–அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்-

8-ஆபி ரூப்யாத் –ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்

9—ஆஸ்ரித பர வசதா –என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள்–

10-சர்வ லோகேசதா –அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை—புண்டரீகாஷன் ஆதி சப்தத்தால் –

த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ-
ஆஸ்ரிதற்கு -விஸ்லேஷத்தில் -அபவாத பீதி இல்லாமல் தைர்யம் அருளுகிறான் –
கவலைப்படாமல் நடக்கப் பண்ணி அருளினான்

கை முதல் இழந்தார்க்கு-உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூர் திருக் கோளூரில் பிரஸித்தம் -நாயனார்
சங்கு -பிராப்ய பிராபக ஆபாசம் -இழந்தது சங்கே -சாதனங்கள் இல்லை
இப்படிப் பட்டவர்களுக்குத் தான் தன்னை ஆபத் சகன் என்று காட்டுவார் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
உண்ணும் சோறு -இழந்ததுக்கு பதில் இவையே தாரக போஷக போக்யங்கள் –

———

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

———

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

———-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

——-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

———

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

———–

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6-

————–

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

———-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

——–

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

——-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

———

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -57-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-
பரவசையாய்க் கிடந்து உறங்க

ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக

அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை
உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —

————————————————————

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

————————————————————–

வியாக்யானம்–

உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற
முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி த்ரயமும்

ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –

எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணன் என்றே அனுசந்தித்து –

நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே கண் இணைகள் நீராலே நிறைந்து ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணை
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தாலே இறே சமிப்பது –

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்த மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம்
–என்னக் கடவது இறே

மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
1-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற போரும் கொல் -என்றும்
2-திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
3-செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
4-ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
5-தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
6-செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
7-கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
8-என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
9-திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தாள் -என்றும்
10-மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று

இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-
அவனையும் வாழ்வித்து-
தானும் வாழும்படி போனாள்
என்றது ஆயிற்று –

இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்–
நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –

கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: