ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-6–மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தஸ்மாத் முனி பிரவணதா விபவாத் பரஸ்மின்
ஸ்வீயத்வ புத்தி அவசாத் கலீதாபிரவணதா
விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ ஸ்வஸ்ய
ஸ்வகீய விஷயேஷூ அகிலேஷூ-

ஸ்வீயத்வ புத்தி –தன்னுடையவை என்று நினைக்கும் புத்தி
அவசாத் கலீதா —தன்னடையே விலகிற்று அன்றோ
அஹங்காரம் மமகாரம் எப்போதே போனதே -நீர் நுமது இல்லை இவை
இதில் அவன் விரும்பிய ஆத்மீயங்கள் –
அவன் உகக்க வில்லை என்றால் ஆத்மாத்மீய வைராக்கியம் ஏறாளும் இறையோனில் பார்த்தோம் –
இங்கே தனது முயற்சி இல்லாமல் தன்னடையே விலகிற்று
பிரவணதா விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ -அவன் இடம் ஈடுபட்ட நெஞ்சு–புருஷார்த்த சாரம் -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
புருஷோத்தமன் விரும்பிய அனைத்தும் புருஷார்த்தம்
அவனால் விரும்பியவை அனைத்துமே இவருக்கு புருஷார்த்தம்
ஸ்வஸ்ய ஸ்வகீய -விஷயேஷூ அகிலேஷூ -தான் தன்னுடைய அனைத்திலும் –
தன்னடையே தனது என்னும் புத்தி விலகிற்றே

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் பஞ்சாயுத விக்ருதி முகையி
ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் தேவானாம் ஸ்வாமி பாவாத்
அபி ஸூ பக்தம் அலங்க்ருதே குந்த பங்காத் ப்ராதுர் பாவஸ்ய
சர்வ அந்தர நிலயதயா அஹம் மம தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர்

1-பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் –மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-

2-3-பஞ்சாயுத விக்ருதி முகையி—-சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு–என்றும் –
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு-என்றும்
விகாரம் பண்ண-முக சப்தம் -வாயிலே தெரியும் படி உண்டான் -வட தள ஸாயித்வமும்
ரிஷிகளும் பாடும் படி என்றுமாம் –

4–ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் –பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு

5–தேவானாம் ஸ்வாமி பாவாத் –எம் தேவ பிரானுக்கு-

6-அபி ஸூ பக்தம் —-கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு–பக்தாநாம் –திவ்ய அவயவம் சௌபாக்யம் –

7-அலங்க்ருதே –மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-

8-குந்த பங்காத் –சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு–

9–ப்ராதுர் பாவஸ்ய–காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு-ஆவிர்பாவம்– ப்ராதுர்பாவம்

10-சர்வ அந்தர நிலயதயா –நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு

அஹம் மம -தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர் –அஹங்கார மமகார தைர்யம் மாதுர்யம் –
அனைத்தையும் ஹரி அபகரித்தான் என்று சடாரி அருளிச் செய்கிறார் –

——

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

———-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

———-

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

———

பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

——–

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

——–

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

——–

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

———-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

——–

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

———-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

———-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -56-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் -4-8-தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

———————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -6-5-11-என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில்-4-8- அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி-கிஷ்கிந்தா -என்னும் படி
1-ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
2-என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
3-என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
4-என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
5-என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
6-என் விற் புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
7-என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
8-என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
9-என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
10-என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -பெரிய திருவந்தாதி -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: