ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-5–துவளில் மா மணி–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ
ஆத்மா அனுரத்த ஜனம் ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய
பாக்ய சம்ஸ்லேஷ திபி சித்த மனஸ் சரீர

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ ஆத்மா அனுரத்த ஜனம் -தன்னிடம் ஈடுப்பட்ட தாய்மார்கள்
ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்-தன்னிடம் ஆசை அறுத்து -தோழி பாசுரம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய -கீழே கிருஷ்ண சேஷ்டிதங்களை பூர்ணமாக அனுபவித்து –
பாக்ய சம்ஸ்லேஷ திபி -பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்காமல்
சித்த மனஸ் சரீர -முக் கரணங்கள் -மூன்றுமே ஆசைப்பட -சிந்தை சொல் செய்கை

பூர்வர் நிர்வாகம்-மானச சம்ஸ்லேஷம் -பாஹ்ய ஆசைப்பட்டு
ரசாந்திர அனுபவம் விபவம் -6-4- அர்ச்சை 6-5 பட்டர் நிர்வாகம் பார்த்தோம்
இதில் பூர்வர் நிர்வாகப்படி

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சங்காது சக்ராது ததாக த்ரிதச ஸூ ரதயா சிந்து சாயித்வ பூம்நா
தத்வஜ உதார பாவாத் அருண சரசிஜ அஷயத்வா
சின்நேன தேவ தேவிபி சேவ்ய பாவாத்
அதி ஸூ லபதயா ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்

1–சங்காது சக்ராது–தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே

2–ததாக த்ரிதச ஸூ ரதயா–தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே-

3-சிந்து சாயித்வ பூம்நா–திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே

4-தத்வஜ உதார பாவாத்–கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே

5–அருண சரசிஜ அஷயத்வா–இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்

6–7–சின்நேன தேவ–சின்னமும் திரு நாமமும் –வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–என்றும்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–என்றும்
-மணி வண்ணன் நாமம்- ஆறாவது ஏழாவது பாசுரம் சுருக்கம்

8-தேவிபி சேவ்ய பாவாத்–கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே–ஸ்ரீ பூமி நீளா -பிறந்திட்டாள்

9–அதி ஸூ லபதயா–துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே

10-ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்–பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்–

விகட நா பாந்த்வம் -திருக் குணம் -நெருக்கமான உறவைக் காட்டி ஔபாதிக உறவை அறுத்து அருளினான் –

———

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

———

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

———–

கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3-

———-

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

———

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

—–

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

——

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

———

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

———-

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

———

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

———

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -55-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க (6-4)புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

———————————————————–

வியாக்யானம்–

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்–மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்- என்று அந்வயம்
(தனது சீலத்தை தானே சொல்லிக் கொள்கிறார் -பூர்வர் போர மகிழ்ந்த பதிகம் இதனாலே )

துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே-என்னுதல் –

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே-1-7-10- -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -2-3–என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல் வாய் வெரீஇ -2-7–என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் 3-10–என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -4-5–என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-5-5- -என்றும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -6-4–என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–
இணை அடிக்கே அன்பு சூட்டி-
அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –

நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபஸ்யதி -என்றும் சொல்லுமா போலே

1-தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
2-தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
3-நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
4-கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
5-அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
6-வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
7-அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -என்றும்
8-இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
9-துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும் அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
10-துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
11-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார் -என்கை –

இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று
இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: