ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-4–குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய ஆதாரேனே
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் அஹம் ஆதாரேனே
இத்தம் புரா ஸ்வயம் அபேஷிதாவான்
முனி தல் லப்த்வா சமோஸ்தி ந மம

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய -ஆனந்த -குளிர்ந்த -வாக்கு -அனுசந்தானம்
ஆதாரேனே -ஆதாரத்தோடு
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் -வீர்ய சரித்திரம் -சேஷ்டிதங்கள்
அஹம் ஆதாரேனே -ஸங்கல்பித்து
இத்தம் -இப்படியாக
புரா ஸ்வயம் அபேஷிதாவான் -கீழே தானே மநோ ரதித்தவற்றை –
உருகாமல் நின்று அனுபவிக்க பிரார்த்தனை ‘-நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்
முனி தல் லப்த்வா -அந்த பிரார்த்தனை ஈடு ஏறப் பெற்று
சமோஸ்தி ந மம -பாடுவதில் சமமானவன் இல்லை
5-10-எல்லா அவதாரம் சேஷ்டிதம் தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்தாரே
இங்கு கிருஷ்ண -இங்கு தானே தைரியமாக பாடுகிறார்

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ராஸக் கிரீடாதி க்ருத்யை விவித முரளிகா வாதனை மல்ல பங்கை
கோபீ பந்தார்க பாவாத் விரஜ ஜனன முகைகி
கம்ஸ தைத்யாதி பங்ககைகி பிராதிர் பாவை விஹிநேஷூ
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம் அசுர புஜ வன சேதம் முக்யையி

1-ராஸக் கிரீடாதி க்ருத்யை–குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
ஆதி– கோவர்த்தனம் உதாரணம் காளிய நிரசனம் இத்யாதிகள்

2-விவித முரளிகா வாதனை–கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல–

3-மல்ல பங்கை–நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்-

4–கோபீ பந்தார்க பாவாத்–நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்–யசோதை கட்டுண்ண ஈடு பாடு–

5–விரஜ ஜனன முகைகி–வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்–

6–கம்ஸ தைத்யாதி பங்ககைகி—இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல—திதி பிள்ளைகள் -புள்ளின் வாய் பிளந்தது-

7–பிராதிர் பாவை விஹிநேஷூ–மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்

8–ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம்—-நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து–வியாப்த கத தோஷம் தட்டாமல்

9–அசுர புஜ வன சேதம் முக்யையி–வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல–

10- அபி சப்தார்த்தங்கள் —-கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல-என்று வைதிக புத்ர மீட்டு —
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட -என்றும் –

மநோ ஹாரி சேஷ்டிதங்கள்-பிரகாஸிப்பித்து -இதுவே இப்பதிக குணம்–

——

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

———

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

———

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

———

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

———

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

———–

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

———

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

———–

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

———–

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

———

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

——–

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -54-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி-5-3-
மானேய் நோக்கு -5-9-
பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9-
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10-
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

———————————————————

வியாக்யானம்–

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
1-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
2-கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
3-நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
4-நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
5-வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
6-இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
7-மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
8-நீணிலத் தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
9-கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
10-மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று

முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –

கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-

இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ
பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
1-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
2-நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
3-நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
4-மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
5-ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
6-பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
7-நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
8-என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
9-மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
10-நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–
பேசின இவை -என்கை –

உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே
ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-(224)

களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –
(திகழக் கடந்தான் ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் திருக்குமாரர் அன்றோ மா முனிகள்)

பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூக முகா தம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென் மொழி யாகையாலும்-
தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: