ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-3–நல் குரவும் செல்வும்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கோபம் மம ப்ரணயஜம் பிரசமைய ஸ்வாதீனதாம்
அத நுத இதி ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த
ஜகத் ஆக்ருதிதா தேன சந்தர்சிதாம்
அனுபவ பூவ முனி திருதிய –

கோபம் மம ப்ரணயஜம் -ப்ரணய ரோஷத்தால் பிறந்த கோபத்தை
பிரசமைய -அடக்கி
ஸ்வாதீனதாம் அத நுத இதி -அவனுக்கு அதீனம் என்று காட்டி அருளி
ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த ஜகத் ஆக்ருதிதா -தன்னுடைய வ்ருத்த ஆகாரத் தன்மையை
தேன சந்தர்சிதாம் -அவனாலேயே காட்டப்பட்டு
அனுபவ பூவ -ஆனந்தமான அனுபவம்
முனி திருதிய

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சம்பத்து தாரித்ர்ய பாவாத் அஸூக ஸூக க்ருதே பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்ய பாவாத் கபட ருஜூ தயா சர்வ லோகாதி பாவாத்
திவ்ய அதிவ்ய அங்கவத்வாத் ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு
சாயா அச்சாயா ஆதி பாவாத் அர்த்தாத் பிரிய ஹிதம்

1–சம்பத்து தாரித்ர்ய பாவாத் –நல் குரவும் செல்வும்–இத்யாதி

2–அஸூக ஸூக க்ருதே–கண்ட இன்பம் துன்பம்–இத்யாதி

3-பட்டண கிராம பாவாத்–நகரமும் நாடுகளும் இத்யாதி

4-புண்ய அபுண்ய பாவாத்–புண்ணியம் பாவம் இத்யாதி

5-கபட ருஜூ தயா–கைதவம் செம்மை இத்யாதி

6–சர்வ லோகாதி பாவாத்–மூவுலகங்களுமாய் அல்லனாய் இத்யாதி

7-திவ்ய அதிவ்ய அங்கவத்வாத்–பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–இத்யாதி

8-ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு—-வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்–
திதி பிள்ளைகள் அசுரர்கள் -தேவர்களுக்கு நண்பனாயும் அசுரர்களுக்கு சத்ருவாயும்-

9—சாயா அச்சாயா ஆதி பாவாத்–நிழல் வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்–

10-அர்த்தாத் பிரிய ஹிதம்—-என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–என்றும் — -சப்தத்தால் ஸங்க்ரஹம்

வ்ருத்த விபூதிகன் அகடி கடநம் -பாவம் காட்டி அருளுகிறார் –

——–

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

———

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

———-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

—————–

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

———-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

———

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

——–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

———

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

———

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

——–

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

——-

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

—–

விளம்ப விரோதம் அழிக்கும்-வ்ருத்த கடநா – சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்
நன்னகரிலே-தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-
விஸ்தீரணம் -பல் வகையும் பரந்த பெருமான்-6-3-1-

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -53-பாசுரம்–

அவதாரிகை –

இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

——————————————————

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

——————————————————-

வியாக்யானம்–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் –வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்

அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-

இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் – இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –

தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –

வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை அருளிச் செய்த படி –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: