ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-2–மின்னிடை மடவார்கள்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாவது விளம்பம் அசஹன் பிரணய கிருஷ்ணம்
சமாஹதம் அபி த்வரயா விநிந்த்ய தேன
ஸூ சங்கம மனோ ரத அத்விதீய சாந்த்வ
உக்தி பிஸ் சமாஹிதோ பூத்

தாவது விளம்பம் அசஹன் -தூது விட்டு வருவது வரை பொறுக்காமல்
பிரணய கிருஷ்ணம் சமாஹதம் அபி -வந்தாலும் கூட
த்வரயா விநிந்த்ய -த்வரை விஞ்சி
தேன ஸூ சங்கம மனோ ரத அத்விதீய -எப்படியும் கூடுவேன் என்கிற மனம்
சாந்த்வ உக்தி -வன்மம் பேசியும் கூட
பிஸ் சமாஹிதோ பூத் -சமாதானம் அடைந்தார்

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பூர்ணத்வாத் கோப நாரீ ஜன சுலபதயா லோட நாத் அம்புராசி
நிக்ரோத அக்ரே சயநாத் ஹரி சுபகதையா ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்
நிர் தோஷ உத்துங்க பாவாத் நிரவதிக யசஸ்
சத்வ வசீகாரீ த்ருத்வாத் மோஷ ஸ்பர்சம் ஸ்வயம் அபிசரதி

1-பூர்ணத்வாத்–என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–அவாப்த ஸமஸ்த காமன் -பந்தும் கழலும் கிடைத்தால் தான் பூர்ணன் ஆவேன் என்கிறான்

2-கோப நாரீ ஜன சுலபதயா–தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே

3-லோட நாத் அம்புராசி–இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,-மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-

4-நிக்ரோத அக்ரே சயநாத்–வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே

4-ஹரி சுபகதையா—-திண் சக்கர நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்–விரோதி நிரசன பரிகரம் ஆழி

5–ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்—-அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;–பூமா -ஸ்ரீ தேவி -நீளா -இங்கு -தேவிமார்களுக்கு சாம்யம்

6–நிர் தோஷ உத்துங்க பாவாத்–கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா! நெடியாய்! –

7–நிரவதிக யசஸ்–கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-

8-சத்வ வசீகாரீ த்ருத்வாத்–உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– -வசீகரிக்கும்-

9-மோஷ ஸ்பர்சம்–இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!

10-ஸ்வயம் அபிசரதி—-ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்த அப்பன்

மேல் விழுந்து ரஷிக்கும் குணம்

———-

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

——–

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

———-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

———

கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

——–

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

———

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

——-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-

————

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

——–

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

——-

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -52-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூஹ்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

———————————————————–

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -53–என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: