ஸ்ரீ அருளிச் செயல்களில் -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை —

ஸ்ரீ வராஹ ஜெயந்தி-சித்திரை உத்திரட்டாதி – -சிலர் ரேவதி என்பார்
அனைத்து ஆழ்வார்களும் ஈடுபட்ட திரு அவதாரம் –

————-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –திருப்பல்லாண்டு-6-

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்

——-

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6-தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்

—————-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி– 4-10- 7-

என்னப்பா –
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்குகையாலே-எனக்கு சத்தாகாரணம் ஆனவனே

——–

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-

திரு மால் இரும் சோலை எந்தாய் –
ரஷகாந்தரமும்
உபாயாந்தரமும்
என் நெஞ்சை விட்டு
இம்மூன்றும் நீயே என்னும் தெளிவைப் பிறப்பித்தது இந்நிலை அன்றோ -என்கிறார்

எந்தாய் –
விரோதியில் அருசியும் –
உபாயமும் –
ஞானமும்
ப்ராப்தியில் ஆர்த்தியும்
ப்ராப்யத்தில் போக்யதையும்
த்வரையும்
விளைப்பித்தவனே

எந்தாய் –
இவற்றுக்கு அடியான பந்தம் இருக்கிறபடி

——–

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5-

என்னப்பா –
எனக்கு ஜனகன் ஆனவனே

—-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -திருச்சந்த விருத்தம்–64-

எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக
திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணி அருளி –
உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம்
ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –
என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில்
கடாஷம் தனக்கு தேட்டமாவதே –
எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின
செயல்கள் எல்லாவற்றையும் -திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய
ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-
முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள
என்னையும் உளனாம்படி பண்ணி -தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து –
அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து –

———–

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி
பரமபத ப்ராப்தி பர்யந்தமாக
நம் பேற்றுக்கு உபாயம்
நஷ்டோத்தரணம் பண்ணின ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து
சரீர அவசாநத்து அளவும்
காலஷேப அர்த்தமாக
அவனை வாழ்த்தப் பார் –
என்கிறார் –

——–

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக
ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார் –
அத்தனாகி –
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –
அன்னையாகி-
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –
மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –
இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –
சர்வேஷமேவா லோகாநாம் பிதர மாதர ச மாதவ -என்றும் –
உலக்குக்கோர் முத்தைத் தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இ றே
அதவா –
அத்தனாகி அன்னையாகி –
ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –
உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –
இருக்குமவன் -என்னவுமாம் –
க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

———-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே-திரு மாலை–9-

கிருஷ்ணன் -என்னாதே -கற்றினம் மேய்த்த -என்றது
தேவதாந்தரங்களை போலே துராரதன் அன்றிக்கே
சர்வ சுலபன் என்கைக்காக
பசு மேய்க்கை -அயர்வறும் அமரர்கள் அதி பதியாய் இருப்பதோடு ஒக்கும் –
கன்று மேய்க்கையிலே யாய்த்து திரு உள்ளம் உகந்து இருப்பது –
ஸ்வ ரஷணத்தில் குறைய நின்றார் பக்கலிலே இ றே திரு உள்ளம் மண்டி இருப்பது –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்கிறபடியே பசு மேய்க்கையிலே உகப்பு
கன்றுகளை மேய்க்கும் இடத்தில் இனிது உகந்து இருக்கும்
கற்று -கன்று
எந்தை –
நான் அகப்பட்ட துறையிலே நீங்களும் அகப்பட பாரும் கோள்-

———

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-

ஒளி உளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் –
அவதாரண்த்தாலே –
மாதா -பிதா என்று தொடங்கி –நாராயணா –என்கிற பொதுவில் அன்று
வ்யூஹ அவஸ்தையிலும் அன்று
விபவ அவஸ்தையிலும் அன்று
இனி எனக்கு தந்தையும் தாயும் ஆவார் பெரிய பெருமாளே -என்கிறார்
தம்மை ஒழிய வ்யக்த்யந்தரத்திலேயும் ஒருவர் உண்டு என்று ஆறி இருக்கிறீரோ-

சர்வேஷா மேவ லோகாநாம்-இத்யாதி
இஸ் ஸ்லோகம் தான்
தர்மபுத்ரர்கள் வனவாசம் பண்ணுகிற ஆபத் தசையிலே
கிருஷ்ணனும் சாத்யபாமை பிராட்டியும் எழுந்து அருள
அத்தைக் கேட்ட பராசராதி மக ரிஷிகள் வந்து மார்கண்டேய பகவானைக் கண்டு
பேர் ஒலக்கமாக இருக்க -தர்ம புத்திரன் இவ்வாபத்துக்கு ஆயாச ஹேதுவாக எனக்கு ஒரு நல்ல வார்த்தை
அருளிச் செய்ய வேணும் -என்று ரிஷிகளைக் கேட்க
அவர்கள் சொன்னவை அடங்க பூர்வ பஷித்து –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் எழுந்து அருளி இருந்து சொன்னதாய் இருக்கும் இஸ் ஸ்லோகம் –
பின்பு சீராம பிள்ளை உடைய ஆபத் தசையிலே பட்டர் அருளிச் செய்ததாய் இரூக்கும் –

தந்தையும் தாயும் ஆவார்
பிரியத்துக்கும் கடவார்
ஹிதத்துக்கும் கடவார்-

அளியல் நம் பையல் என்னார்
அளி -என்று தண்ணளி –
இவன் நமக்கு நல்லன்
நம்முடைய பையன்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய கேட்க வாய்த்து இவர் ஆசைப் படுகிறது
ஆழ்வீர் -எனுமது இவர்க்கு அசஹ்யம் ஆய்த்து –

———

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–45-

எம்பிராற்கு இனியவாறே –
எம்பிரானுக்கு இனிதாய் இருக்கும் இறே –
கிம்ம்ர்ஷ்டம் ஸூ தவசனம் -என்கிறபடியே
பெரிய பெருமாள் இத்தை உகந்த படி என் என்கிறார் –
பிரஜை மழலைச் சொல்லு தமப்பனார்க்கு இனிதாய் இருக்கும் இறே –
ப்ரஹர்ஷ யிஷ்யாமி சநாத ஜீவித – என்கிறபடியே
இவ் உகப்பு தானே புருஷார்த்தம் –
இவன் சத்தை யாவது
அவன் ப்ரீதிக்கு கை தொடுமானமாகை-

———–

அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—திருப்பள்ளி எழுச்சி-

சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-நிகமனத்தில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
நிகமனத்தில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார்-
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள்–
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

———–

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-6-–

எந்தை
எனக்கு ஜனகன்
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –

————–

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

அத்தன் எந்தை யாதி மூர்த்தி
அங்குத்தை ஸ்வாமி யானவன் எனக்கு ஹித காமன் ஆனவன்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் –

———–

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

எனக்கு தந்தை
காரண பூதன்
எனக்கு ஸ்வாமி
இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்

————-

நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

நைமி சாரணி யத்துள் எந்தாய் –
அவன் பக்கல் பிரயோஜனம் உள்ளன வாங்கி கை விடுமாகில்
இவனுக்கு அல்லாதாரில் வாசி இல்லை இறே –
அங்கன் இன்றிக்கே
நிருபாதிக பந்துவாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் –
வகுத்த ஸ்வாமியாய் –
இவன் தான் நெடு நாள் இழவை யநுசந்தித்து வெறுத்தால்
பிழை புகுந்தது ஆகில் அதுக்குப் பரிஹரிக்கைக்கு நான் இருந்தேன்
செய்யலாவது உண்டோ என்று எடுத்து
முகத்தை துடைத்து
குளிர முகம் தருமவனாய் இருந்தான் –

அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2-

நைமி சாரணி யத்துள் எந்தாய் –
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யனாய் கொண்டு
அவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கக் கடவ
நீ எனக்கு உன் திருவடிகளிலே வந்து சரணம் புகலாம் படி
சந்நிஹிதன் ஆகையாலே சரணம் புகுந்தேன் –

நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு
அவர்கள் உடைய கூக்குரல் கேட்க்கைகாக அங்கே
திருப்பாற் கடலிலே சாய்ந்தாற் போலே
எனக்கு வந்து சரணம் புகலாம் படி
இங்கே வந்து சந்நிதி பண்ணி அருளிற்று –
(நிருபாதிக ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -நாதன் )

நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4-

நம்பனே -திரு நாமம் சாதிக்கிறார்
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் –
ஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி
சரண்யனான நீ வந்து
சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

நைமிசாரண்ய எந்தை -ஒதுங்க இடம் -வெப்பம் தவிர்த்து காதலே நிழல் அவனுக்கு
வா ஸூ தேவாய தருச் சாயா
கோவர்த்தனம் எடுத்து நிழல் கொடுத்தவன்
நம்மிடம் நிழல் தேட கொடுக்க வேண்டாமோ

———

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-5-

என்னுடைய பாப அநு கூலமாக வன்றிக்கே
உன்னோடு உண்டான நிருபாதிக பாந்தவ
அநு ரூபமான கைங்கர்யத்தில் என்னை மூட்ட வேணும் –

———–

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

வெந்தை-
எனக்கு ஜநகன் ஆனவன் –
யெம்பெருமான்-
எனக்கு ஸ்வாமி ஆனவன் –
எவ்வுள் கிடந்தானே –
எழுப்பிக் கார்யம் கொள்வார் தாழ்வே உள்ளது –
அவன் வந்து சாய்ந்தான்-

எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-4-

எந்தை தந்தை தம் பெருமான்
நமக்கு நாதன்
நம் குல நாதன் ஆனவன் –
எவ்வுள் கிடந்தானே –
சர்வ வித பந்துவானவனை காணலாவது பரம பதத்திலே என்று
அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி
திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –

எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7-

எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-

தன்னடியார்க்கு இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—–2-2-8-

தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –எனக்கு ஜநகனுமாய்–ஸ்வாமியுமானவன் –

———-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –
தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

————-

எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்–கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

எந்தை என் வணங்கப் படுவானை –
எனக்கு ஜனகனாய்–எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி–சீலவானாய் உள்ளவனை –

—–

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை–2-7-10-

அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

——–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்–3-8-1-

எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்
தேவானாம் தானவானாம் ச சாமான்ய மதிதை வதம் -என்கிற சம்பந்த சாமான்யத்தைப் பார்த்து
அசுரர்களுக்கு அருள் செய்கை தவிர்ந்து
அனுகூலராய் அநந்ய சரணரான எங்களுக்கே பிரசாதத்தைப் பண்ணி அருள வேணும் என்று
தேவர்கள் வந்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி ஆஸ்ரயிக்கிற ஸ்தானம்–

——–

எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-

எங்களுக்கு ஸ்வாமியான நீ
எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன

———-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்–4-2-7-

சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்

——-

குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை–4-5-1-
இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை-4-5-2-
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை-4-5-3-
புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை-4-5-4-
செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை-4-5-5-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை-4-5-6-
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை-4-5-7-
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை-4-5-8-
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை-4-5-9-

——

செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-

——–

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே–4-9-1-

எந்தாய் இந்தளூரீரே
அதுக்கடியாக ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
எந்தாய்-
இவ் வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ
முன் தீம்பு செய்து
சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்-

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-

தாய் எம்பெருமான் –
தேவர் நெகிழ இருந்தால்
புறம்பு போகைக்கு ஓரிடம் உண்டோ –
(தரு துயரம் –அவள் நினைந்தே அழும் குளவி )

தந்தை தந்தையாவீர் –
இது தான் என் அளவிலேயுமாய் இருந்ததோ –
(எந்தை தந்தை தந்தைக்கும் முந்தை அன்றோ )

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
என்னுடைய் குலகுரு என்று ஏழு படி கால் தேவரீர் திருவடிகளில்
கைங்கர்யத்தை பேதித்துச் செல்லாதே வந்து நிற்கிற எங்களுக்கே
நேராக கணக்கிட வல்லீராகா நின்றீர்

——–

அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
கழித்து அருள வேணும் -என்கிறார் –

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

நம்பி-கல்யாண குண பூர்ணனே சம்வாதம் இதில்-

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் –
கறக்கப் பெறாத நாகினுடைய கன்று தன் தாயை நினைக்கும போலே –
கறவா மட நாகானது-தன் கன்றை உள்ளினால் போலே
என்று சொல்ல நினைத்து
அர்த்தத்துச் சேராமையாலே
மிடி பட்டார் பிள்ளை அமுதனார் –
அது தான் அபஷ தர்மமாம் இறே –
ஆகையால் பட்டர் அருளிச் செய்யும் படி -கறவா மட நாகை (தாய் பசுவை ) தன் கன்று உள்ளினால் போலே என்று –
கறக்கப் பெறாமையாலே முலைக் கடுப்பாலே வந்த நோவு உண்டு இறே அதுக்கு –
அத்தாலே அவன் உடைய ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே –
(இரண்டு இடத்திலும் ஆற்றுமை உண்டே -பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் -நாகுக்கும் கன்றுக்கும் )

(வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் 14 போல் -18 என்று இல்லாமல் –
மா முனிகள் -வேத சதுஷ்ட்யத்துக்கு – உருபு சேர்த்தது போல்
இங்கு நாகு -நாகை -உருபு சேர்த்து பட்டர் அருளிச் செய்யும் படி)

தன் கன்றுள்ளினால் போல் –என்கையாலே
முலை உண்ணப் பெறாமையாலே வந்த நாக்கு ஓட்டுதல் தோற்றும் இறே –
அத்தாலே இத்தலை ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே
கறக்கப் பெறாத நாகின் உடைய கன்று தன் தாயை நினைக்குமா போலே –
எந்தை பிரானே –
கடவ நீயே என்னுடைய விரோதியைப் போக்கா விட்டால்
வேறு சிலர் கடவார் உண்டோ –
நீயே நினைத்து கார்யம் செய்யில் உளேனாய்
இல்லையாகில் இல்லை யாம் படி
அநந்ய கதியாய் இருக்கிற நான்
ஸ்வாமியான உன்னையே
நினைத்துக் கூப்பிடா நின்றேன் –
என்னுடைய விரோதியை நீயே போக்கா விடில் வேறு சிலர் போக்குவார் உண்டோ –

ப்ரத்யக்ஷமாய் இருக்கும் மாதா பிதாக்கள் அன்றோ என்று பிறர் ஏசத் தொடங்க
சாஸ்திரத்தில் சொல்லிய என்னை விட வேண்டி வரும்
ஹர்ஷம் பிரயோஜனம் ஆகாதே என்ன
நீ சர்வ பிரகாரத்தாலும் சர்வ வித பந்துவாக இருந்தாலும்
நீ மாத்ராதிகளைக் காட்டிலும் அணித்தாக இருந்தாலும்
பாஹ்ய ஹீனர்கள் அறியாதபடி அன்றோ உள்ளார்கள் –

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9-

சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா-
சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய
பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும்
தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த
திருக் கண்களை உடையவனே -என்று
திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –
அன்றிக்கே
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் –
அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும்
திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

————–

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே–7-2-3-

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும்
நாட்டார் உபகரிக்கும் அளவிலே உபகரித்தாயாகில் அன்றோ உன்னை மறக்கல் ஆவது –
தாய் அளவிலே உபகரித்தான் –
தமப்பன் அளவில் உபகரித்தான் -என்ன ஒண்ணாதே –
அவர்கள் கை விட்ட அளவிலே முகம் காட்டின உன்னை –

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் –
நான்
என்னுடைய தமப்பன்
அவனுடைய ஜநகன்
இவர்களோடு கூட அவ்வருகே எழுவர்
(மேல் பத்து கீழ் பத்து -21
என் தாதை -அர்த்த சித்தம்
தச பூர்வம் -உத்தரம்
கன்யாதான பல தயா -21 தலைமுறை பலம்
கேசவன் தமர் படி சம்பந்திகள் பலித்தமை -இங்கும்)
சப்த சப்தஸ சப்தஸ –என்னக் கடவது இறே
ஒருவருக்கு உண்டான நன்மை அசல் காக்கும் இடத்தில்
ஏழ் படி கால் சொல்லும் இறே –
இத்தால் குலமாக அனந்யார்கள் என்றபடி –

——

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

ஒரு நல் சுற்றம் –
தானே ஆபத்துக்கு வந்து உதவும்
சர்வவித பந்துவான ஸ்வ பாவனுமாய் –

சுற்றம்
நல் சுற்றம்
ஒரு நல் சுற்றம்
குடல் துவக்கு –
தன்னை அழிய மாறியும் ரஷிக்கும் சுற்றம்
சுற்றம் என்றால் வேறு ஒரு இடத்தில் போகாச் சுற்றம் – சுற்றம் -சுற்றம் அல்லாதாரை வ்யாவர்த்திக்கிறது
நல் சுற்றம் -ஸ்வ பிரயோஜனரை வ்யாவர்த்திக்கிறது
ஒரு நல் சுற்றம் -ஒரோ பிராப்தி அன்றிக்கே எல்லா பிராப்தியும் ஏக ஆஸ்ரயத்திலேயாய் இருக்கிறபடி
மாத்ருத்வம் பிதாவுக்கு இல்லை
பித்ருத்வம் மாதாவுக்கு இல்லை –

———

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-

நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
இப்படி ஓர் இடத்திலே பிறந்து
ஓர் இடத்திலே வளருகிறவன்
பிறப்பும் ஓர் இடத்திலே வ்யவஸ்திதமாய்
நாட்டார் -அஜன் -என்று சொல்லும்படியாய் இருக்கிற ப்ரஹ்மாவுக்கும்-

தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே
ஜனகன் காண்
இஸ் ஸ்வ பாவத்தை அனுசந்தியா என் குல நாதன் -என்கிறாள் –

1-அவன் அகர்ம வச்யனாய் இருந்து வைத்து
2-கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும்
3-அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்
நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது –

————–

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-

தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான் –
பிரஜையைப் பெறுகைக்கு
நோன்பு நோற்று
அப் பிரஜையை வயிற்றிலே வைத்து கொடு இருக்கும் தாயைப் போலே
உம்மை வயிற்றிலே வைத்து உய்யக் கொண்டவன் –

—————-

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி யென்தலை மேலவே.–திரு நெடும் தாண்டகம்–1-

மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கி னேனே.5-

———–

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-

———

நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையுமாய் இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணி வண்ணன் எந்தையே–1-10-6-

எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே–1-10-7-

————

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2-

————

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண் வேங்கடம்
மேகின்றாய்! தண் துழாய் விரை நாறு கண்ணியனே!–2-6-10-

————-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-

———

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே–3-4-4-

———

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

————

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடிஎன்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

———-

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசககம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேச மான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே–4-3-2-

——

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே–4-7-5-

———

மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

———-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றா ரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே–5-6-7-

—————

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–6-3-9-

———–

அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக் கென்ன மனப் பரிப்பே–6-4-6-

புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே–6-4-7-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

——–

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே–6-5-11-

————-

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என் கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-

————-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே–7-4-2-
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-
அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே–7-4-4-
அப்பன் காணுடைப் பாரதம் கை யறை போழ்தே–7-4-5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–7-4-6-
அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே–7-4-7–
அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-
அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே–7-4-9-
அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

——–

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

———

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

———-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினை யேனை உயக் கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே–7-9-4-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே–7-9-10-

————-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

மலரடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பல ரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந் துறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே–7-10-5-

———

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

———-

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

———-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

————

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

————–

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

————–

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன் கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன் சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-
தென் காட்கரை என் அப்பன் கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-
தென் காட் கரை என் அப்பற்கு ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

———;

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே–9-10-7-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

————-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

———

தெளிதாக வுள்ளத்தைச் செந்றீஇ, ஞாலத்து
எளிதாக நன்குணர்வார் சிந்தை, எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்டுழா யான் அடிக்கே,
போய் நாடிக் கொள்ளும் புரிந்து-முதல் திருவந்தாதி–30-

தாய் நாடு கன்றே போல் –
ஒரு திரள் பசு நின்றால்–அதிலே ஒரு கன்றை விட்டால் -கன்றானது திரளில் மற்றைப் பசுக்களைப் பாராதே
தன் தாய் முலையைச் சென்று பற்றுமா போலே
ஆபாச ஆஸ்ரயணீயரை விட்டு அவனையே பற்றும்
தண் துழாயான்—தாயாய் இருக்கிறபடி
அடிக்கே- அல்லாத ஸ்தலங்களைக் கடந்து
தண் துழாயான் அடிக்கே எளிதாகப் போய் நாடிக் கொள்ளும்
பரம ப்ராப்யனான சர்வேஸ்வரன் உடைய திருவடிகளைச் சென்று கிட்டும்
போய் நாடிக் கொள்ளும் புரிந்து- புரிந்து -விரும்பி என்னுதல்
நடுவில் மிறுக்குகளைப் பாராதே -என்னுதல்
தாய் நாடு கன்றே போலே -என்கிறது திருஷ்டாந்தம் –

—————-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –இரண்டாம் திருவந்தாதி-70-

இவற்றை எல்லாம் பிரதிபஷத்தைப் பக்க வேரோடு வாங்கிப் பொகட வல்ல என் ஸ்வாமியான தசரதாத் மஜனுக்கு
வாஸ ஸ்தானம் என்னா நின்றார்கள் –
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் -அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –
எந்தை திறம் –என் ஸ்வாமி இடையாட்டம் –

—————-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது

—————–

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று -மூன்றாம் திருவந்தாதி —-16–

திரு வல்லிக் கேணியிலே எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –
எந்தை–பெறாப் பேறு பெற்றாப் போலே

———-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

எங்கும் ஒக்க சூழ்ந்த அருவிகள் திரண்டு பாயா நின்றுள்ள திருமலையிலே நின்றுள்ள
என் நாயனானவனுக்கு -என் அப்பனுக்கு –
அவ்விரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருந்ததீ-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும் அசாதாராண விக்ரஹம் போலே இரா நின்றதீ –
ஓன்று சாதக வேஷமாய்–ஓன்று ஒப்பனைக்குக் கண்ட வடிவாய் இருக்கை அன்றிக்கே
இரண்டும் ஓன்று என்று சொல்லலாம் படி தகுதியாய் இருந்ததீ –
இது ஒரு சௌசீல்யம் இருந்தபடியே -என்கிறார் –
கண்ணுதல் கூடிய அருத்தனை –பெரிய திருமொழி -7-10-7- என்னக் கடவது இறே –

————-

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

ராஜாக்களாய்-தேவர்களாய் -ஸ்வர்க்காதிகளாய்-அனுக்ரஹமாய்-தண்ணளியாய் –அங்குள்ள ஸூகமுமாய் -என்றுமாம்
பந்துவான மனுஷ்யராய் மாதாவாய் ஸ்த்ரியாதி களான மற்றும் எல்லாமாய்
பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவன்-

————-

சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் ,இந நோய் இனது என்று
இன் மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது வேலன் நில் நீ
என் மொழி கேண்மின் என் அம்மானை ஈர் உலகு ஏழும் உண்டான்
சொன் மொழி மாலை அம் தன் துழாய் கொண்டு சூடுமினே –ஸ்ரீ திரு விருத்தம்–20–வெறி விலக்கு துறை –தீர்ப்பாரை யாமினி -4-6-

மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-இத்தசையைக் கண்டு சோகித்து இருக்கிற
திருத் தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய்
இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் இந்நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ
இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் -தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று மேல் பூசும் மருந்தும் –
தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

———

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 – –
பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு –துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் -திருமாலிருஞ்சோலை   -10-8-

நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின -தன் பக்கல் ருசி-முன்னாக
இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின  மாதாவினைப்  பிதுவை -சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே
யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று -இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான் என் என்னில்
திருமாலை -ஸ்ரீ ய பதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே

வணங்குவனே இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து -தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த –
இவ் உபகாரத்துக்கு  சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு  உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே – 
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே

——–

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே–ஸ்ரீ திருவாசிரியம்–6-

பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும்
குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அவளைத் திரஸ்கரித்து விட்டு
உபயோகமற்றவொரு மணைக்கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே
இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு
ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே!

—————

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையார் ஆவாரும் நீபேசில், எற்றேயோ
மாய! மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி?–ஸ்ரீ பெரிய திருவந்தாதி –5-

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
மாதா பாஸ்த்ரா பிது புத்ரா -மாதா பாத்திரம் போலே புத்ரன் பிதுவுக்கே-
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

————-

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்–23-

சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களம் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” (திருவாய்மொழி 5-1-8) என்றபடி
அவனையே நாம் ஸகலவித பந்துவுமாக விச்வஹித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்க வேண்டியது, உபேக்ஷித்த காலத்தில் நாமும் அவனை
உபேக்ஷித்து விட வேண்டியது என்று ஒருகாலும் கருதவொண்ணாது.
எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால்
நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்;

————

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 13-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: