ஸமஸ்கிருதச் சொற்கள்—-தமிழ்ச் சொற்கள்– Dr. அரங்கராஜன் M.A., P.hd. மதுரை

ஸமஸ்கிருதச் சொற்கள்————-தமிழ்ச் சொற்கள்

அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு
அஜ்ஞானப்ரதமான சரீரம்- அறிவின்மையைத்
தரும் உடல்
அதிகாரம் தகுதி
அத்ரிஸுநு அத்ரி மஹரிஷியின்
மகனான தத்தாத்திரேயர்
அநதிகாரி தகுதியற்றவன்
அநர்த்தப்படுதல் கேடு அடைதல்
அநஸூயை பொறாமையின்மை

அநுகுணமாக பொருத்தமுற
அநுவர்த்திக்க பின் சென்று வேண்டிக்
கொள்ள

அந்தரங்கரான இதயத்தில் இடம்
பெற்றவரான
அந்திம ஸ்ருதி இறுதியில் நினைவு

அந்திமோபாயம் இறுதியான நெறி
(ஆசார்ய அபிமானம்)
அந்திமோபாய நிஷ்டன் இறுதியான நெறியில்
ஊற்றமுடையவன்
அந்வயித்து தொடர்புகொண்டு
அபயப் ப்ரதானம் பெருமாள் விபீஷண
னுக்கு அபயமளித்தது
அபிமதசிஷ்யர் மிகவும் இஷ்டமான
சிஷ்யர்
அபேக்ஷை விருப்பம்
அப்ராக்ருதம் பிரகிருதிக்கு எதிரான
இயல்பு
அப்ராக்ருத சரீரம் பரமபதத்து அழிவற்ற
உடல்
அம்சம் பங்கு
அலேகம் எழுதப்படாத ஓலை
அஹங்காரம் ’யான்’என்றிருப்பது
ஆசார்யத்வம் ஆசானாயிருக்கும்
தன்மை
ஆசார்யாபிமானம் ஆசாரியான்
சிஷ்யனிடத்துக்
கொள்ளும் அன்பு

ஆசிரயித்தல் பற்றுக்கோடாகக்
கொள்ளுதல்
ஆதித்யன் சூரியன்
ஆத்மவான் ஆன்ம அறிவை
உடையவன்
ஆநந்த மக்நராய் ஆனந்தத்தில்
மூழ்கியவராய்
இஷ்ட விநியோகம் விருப்பப்படி
பயன் கொள்கை
இஹலோக பரலோகங்கள்-இம்மை மறுமை
உலகங்கள்
உசிதமான ஸ்தலங்கள்– பொருந்திய இடங்கள்
உத்தாரகம் கரையேற்றுவது
உத்தேச்யம் இலக்கு
உபகாரஸ்ம்ருதி செய்நன்றி அறிதல்
உபத்ரவம் ஊறுபாடு
உபயவிபூதி விண்ணுலகும்
மண்ணுலகும்
உபேக்ஷித்து வெறுத்து
ஏகாந்தம் தனிமை
கடாக்ஷம் நல்நோக்கு
கரதலாமலகமாக கையிலங்கு
நெல்லிக்கனியாக
கலாபம் கலகம்
காம்பீர்யம் மிடுக்கு
கிலேசிக்க துன்பப்பட
குருபரம்பராபூர்வகம் குருபரம்பரையை
முன்னிட்டு
கூடஸ்தராக முதல்வராக
க்ருதஜ்ஞ்ஜர் செய்நன்றி மறவாதவர்
க்ருபாமாத்ர ப்ரஸன்னாச்
சார்யன்– கிருபையினாலே
மகிழ்ச்சியடையும்
ஆசார்யன்
க்ருஷி பரம்பரைகள் அடுத்தடுத்துச் செய்த
முயற்சிகள்
சடங்கியாய் சடங்குகளில் ஊற்ற
முடையவனாய்
சரமோபாயம் அந்திமோபாயம்,
ஆசார்ய பக்தி
சரீரஸமன் உடலுக்கு ஒப்பானவன்
சரீரிஸமன் ஆத்மாவுக்கு ஒப்பானவன்
சாஸநீயன் ஆணையிடத்தக்கவன்
சிஷ்யப் பிரசிஷ்யர்கள் சிஷ்யர்களும் அவர்க
ளுக்கு சிஷ்யர்களும்
சுஷ்க ஹ்ருதயராய் இதயத்து வற்றியவராய்
ஜமதக்நிஸுநு ஜமதக்னி முனிவரின்
மகன் பரசுராமர்
ஜ்ஞாநாதிககை பேரறிவுடையாள்
ஜ்ஞான வ்ருத்தர் அறிவால் முதிர்ந்தோர்
தத்கால வர்த்திக்கும் அக்காலத்தில் வாழ்ப
வர்க்கும்
தத்வ ஸ்த்திதி உள்ள தன்மை
தத்ஸம்பந்திகளும் அவளுடைய சம்பந்தம்
உடையவர்களும்
தப்தமுத்ராதாரணம் திருவிலச்சினை
பொறித்தல்
தர்க்க கோஷ்டி சொற்போர் நிகழும் அவை
தர்சனப்ரவர்த்தகர் தரிசனத்தை வளர்ப்பவர்
தர்மஸமன் தர்மத்திற்கு ஒப்பாவான்
தாத்பர்யம் கருத்து
தாஸக்ருத்யம் தாசர்களின் செயல்
திருவுதரத்தை திரு வயிற்றை
திவாகரன் சூரியன்
திவ்யமங்கள விக்ரஹம் திருமேனி
திவ்ய ஸுக்தி தெய்வீகமான
வார்த்தைகள்
திவ்யாஜ்ஞை அரசன் ஆணை
தீர்த்தவாஸி புண்ணிய தீர்த்தங்களில்
நீராடி
துல்யம் சமம்
தூரஸ்தையாய் வீட்டுக்கு விலக்காய்
தேசாந்திரம் வேறு தேசம்
த்யாஜ்யோபாதேயங்கள் விடவும் கொள்ளவும்
தக்கவை
நந்தஸுநு நந்தகோபன் குமாரனான்
ஸ்ரீகிருஷ்ணன்
நாவகார்யம் நாவுக்கு அகாரியம்
நித்யவிபூதி பரமபதன்
நிர்வாஹகர் நிருவகிப்பவர்
நிஷ்டை ஊன்றியிருத்தல்
நைச்யாநுஸந்தானம் ’நீசனேன்’ என்று
அநுஸந்தித்தல்
பங்க்திரருதஸுநு தசரத குமாரனான
ஸ்ரீராமன்
பந்தம் பிறவித்தளை
பயாநுதாபம் அச்சமும் கழிவிரக்கமும்
பரகத ஸ்வீகாரம் இறைவனே பற்றும் பற்று
பரிபவித்து அவமானப்படுத்தி
பர்த்ருஸமன் கணவனுக்கு ஒப்பான
பஹுமானம் ஸன்மானம்
பாக்யாதிகர் மிகவும் பாக்கியம்
செய்தவர்
பாடப்ராயம் முழு மனப்பாட அளவாக
பாத்ராந்தரம் வேறு பாத்திரம்
பாநு சூரியன்
பார்யாஸமன் மனைவிக்கு ஒப்பான
பாஷாண்டி அவைதிகர்
பாஷ்யகாரர் எம்பெருமான்
பாஸ்கரன் சூரியன்
பிரதிஜ்ஞை உறுதி
பிரத்யுபகாரம் பிரதியாகச் செய்யும்
உதவி
பிரமாணம் சான்று
புத்தி விசேஷம் சீரிய அறிவு
புத்ர ஸ்வீகாரம் மகனாகப் பற்றுதல்
பூர்வாவஸ்தை முன் நிலைமை
பேதம் வேறுபாடு
ப்ரகாரம் முறைமை
ப்ரக்ருதிமான் உலகில் உழலுபவன்
ப்ரணாமம் தண்டன் ஸமர்ப்பித்தல்
ப்ரதிபக்தி சீரிய பற்றுடைமை
ப்ரத்தியக்ஷம் கண்ணுக்கு இலக்காதல்
ப்ரபாவம் மேன்மைப் பண்பு
ப்ரமாண பரதந்ரராய் பிரமாண சாஸ்த்திரங்க
ளுகுக் கட்டுப் பட்டவராய்
ப்ரஸங்கம் இடைப்பிறவரலான
செய்தி
ப்ரஸந்த கம்பீரராய் மிடுக்குத் தோற்றி
யுள்ளவராய்
ப்ரஸாதித்தருளி வழங்கி
ப்ரஸித்தம் வெளிப்படை
ப்ராக்ருத சரீரம் இவ்வுடற்பிறவி
ப்ராதா உடன் பிறந்தோன்
ப்ராந்தர் மயங்கியவர்
ப்ராப்ய பூமி இலக்கான இடம்
ப்ரீதரானார் மகிழ்ச்சியடந்தார்
ப்ருத்யர்கள் தாசர்கள்
மமகாரம் ’எனது’ என்றிருப்பது
மஹாத்ம்யம் மஹிமை,பெருமை
மாதூகரம் பிக்ஷை
மாநுஷம் மானிடற்குரிய இயல்பு
மிதுனம் சேர்த்தி
முகோல்லாஸம் முகமலர்த்தி
மூர்த்திகரித்து உருவெடுத்து
யத்னம் முயற்சி
யாத்ருச்சிகமாக தற்செயலாக
யாவதாத்மபாவி ஆத்மா உள்ளவரை
யுகவர்ணக்ரம அவதாரம்—–யுகந்தோறும் ஒவ்வொரு
வர்ணத்திலும்
எடுக்கும் அவதாரம்
யுக்தி பொருந்தும் வழி
ரக்ஷகம் பாதுகாப்பானது
ரக்ஷகாந்தரம் வேறு ஒரு காப்பு
லஜ்ஜாபயங்கள் நாணமும் அச்சமும்
லீலாவிபூதி மண்ணுலகு
லீலை திருவிளையாட்டு
லோக ப்ரிக்ரஹம் உலகினர் ஏற்றுக்
கொள்ளுதல்
வகுள பூஷணம் மகிழ மலராகிய
அணிகலன்
வபனம் மயிர் மழித்தல்
வம்ச்யரான வமிசத்திலே
பிறந்தவரான
வயோவ்ருத்தர் வயதால் மூதிர்ந்தோர்
வர்ண தர்மிகள் வர்ண தர்மங்களை
இயற்றுவதில்
பற்றுடையோர்
வர்த்திக்கிற வாழ்கிற
விக்நமற இடையூறின்றி
விச்வஸித்தல் உறுதியாக நம்புதல்
விச்லேஷம் பிரிவு
விதேயனான பணிவுடன் கூடியவனான
வித்தராய் ஈடுபட்டவராய்
வித்யை கல்வி
விநியோக ப்ரகாரம் பயன் கொள்ளும் முறை
விநியோகம் கொண்ட பயன்கொண்ட
விபூதி ஐசுவரியம்
விருத்தாந்தம் வரலாறு
விஷமத்துக்காக மாறுபட்ட செயலுக்காக
வைலக்ஷண்யம் வேறுபாடு
வ்யதிரேகமாக மாறுபட்டு
வ்யாகுலம் துன்பம்
வ்யாவ்ருத்தி வேறுபாடு
ஷட்தரிசனம் ஆறு தரிசனங்கள்
ஸச்சிஷ்யன் நல்ல சிஷ்யன்
ஸதாசார்ய தத்துல்யர் ஸதாச்சார்யாருக்கு
ஒப்பானவர்
ஸதாநுஸந்தானம் எப்போதும் நினைத்தல்
ஸத்கரித்து பெருமைப்படுத்தி
ஸத்ர போஜனம் சத்திரத்தில் பிராம்மண
போஜனம்
ஸத்ராசி ஸத்திரத்தில் உண்பவர்கள்
ஸபாதலக்ஷம் ஒன்றே கால் லக்ஷம்
ஸப்ரஹ்மசாரி உடன் பயிலுபவன்
ஸமாதிபங்கம் நிஷ்டையை குலைத்தல்
ஸம்பத் செல்வம்
ஸம்ப்ரமம் ஆடம்பரம்
ஸம்புடம் ஓலைக்கட்டு
ஸம்ரக்ஷணம் நன்கு காப்பது
ஸ்ம்ருத்தி நிறைவு
ஸம்வத்ஸரம் வருடம்
ஸம்ஜ்ஞை கையால் குறிகாட்டுதல்
ஸம்ஸார நிவர்த்தகம் பிறவித் துயரை
போக்குவது
ஸம்ஸாரி சேதனன் பிறவிப் பெருங்கடலில்
விழுந்து உழல்பவன்
ஸர்வஜ்ஞர் முற்றறிவினர்
ஸர்வதேச,ஸர்வகால எக்காலத்தும் எவ்விடத்தும்
ஸர்வாவஸ்தைகள் எந்நிலையிலும்
ஸவாஸனமாக விட்டு இருப்புடன் திறந்து,
வாசனையோடு
அறவே துறந்து
ஸாதநாநுஷ்டானம் கருவியைப்
பயன்படுத்தல்,
மேற்கொள்ளல்
ஸாத்விகை ஸாதுவானவள்
ஸாக்ஷாத் நேரே கட்கூடான
ஸித்தியாத கிடைக்கப் பெறாத
ஸித்தோபாயம் முயன்று பெற வேண்டிய
தன்றி முன்பே
உள்ளதான வழி
ஸுகோத்தராய் மிக்க சுசுத்தை
யுடையவராய்
ஸுஸ்பஷ்டம் மிகத் தெளிவு

ஸ்காலித்யே சாஸிதாரம்—சிஷ்யன் வழுவும் போது
நியமித்தல்
ஸ்பர்சித்து தொட்டு
ஸ்வகத ஸ்வீகாரம் தான் பற்றும் பற்று
ஸ்வஜாதீய புத்தி தன்னுடைய ஜாதி
எனற அறிவு
ஸ்வபாவம் பிறவிப் பண்பு
ஸ்வரூபம் இயல்பு
ஸ்வாநுவ்ருத்திப்ரசன்னாசாரியன் —-நம்மால்
பணிவிடை செய்யப்
பெறுவதால் மட்டும்
மகிழ்ச்சியடையும் ஆசாரியான்
ஸ்வாபிமானம் தன்னிடத்துப் பற்றுக்
கொள்ளுதல்
ஹேயமான இழிவான
ஹ்ருஷ்டராய் மகிழ்பவராய்
க்ஷமிப்பிக்க பொறுக்கும்படி செய்ய
ஸ்ரீகோசம் புத்தகம்

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: