ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
திவ்ய தேசே யாத்ரா மநோ ரதம்
தத் ஆதரண சாலின
ஆனந்த ஆகலயிதம் கமலா சகன்
தத் கருணையா ஸூ க்ருதம் பிரபந்தம் ஸம்ஸராவ்ய
ஆனந்த வ்ருத்தி -நீள் நகரிலே –
———-
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
வைகுண்டே நித்ய யோகாத் ஆஸ்ரித விவிசத்தயா அனந்த கீர்த்தி உஜ்வலாத்
கீர்த்தி உஜ்வலேனா சேஷே சாய்த்தவ ருக்மிணி அபிமத
ஸூ ரஜித் பாணன் கண்டனாத் அபி ருசித்த விஜயே
சந்நிஹிதான் சுசித்வாத் தீர்த்த பாதோப்யதாதி-
1–வைகுண்டே நித்ய யோகாத்–இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
2-ஆஸ்ரித விவிசத்தயா -ஆஸ்ரித பவ்யன் —ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும்
ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் –
3-அனந்த கீர்த்தி உஜ்வலாத்–கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது-
4–கீர்த்தி உஜ்வலேனா –பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே-
5–சேஷே சாய்த்தவ–பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின்
மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
6–ருக்மிணி அபிமத–அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்-என்றும்
எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
7–ஸூ ரஜித் பாணன் கண்டனாத்–வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே
8–அபி ருசித்த விஜயே சந்நிஹிதான்–தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்று
அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–என்றும்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-என்றும்
9–சுசித்வாத் -தீர்த்தன்—சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு
10-தீர்த்த பாதோப்யதாதி-தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்து-
———–
ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-
1-ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும்
2-பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் –முகில் வண்ணன் அடி அடைந்து
3-ஸ்பஷ்ட ரஷாம்–திருப் பேரியில் சேர்வன் நானே
4-வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் –ஆழி எழ-
5-அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
6-ஸ்வீயா கிரந்த சித்தோதகம்
7-ஸ்மரண ஸூ விசதம்
8-விஸ்மயார்ஹத் விபூதிம்–விசித்திர விவித விபூதிமான்–
9-ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக
10-ஸ்துதி கிருத் தகஹரம்
சப்தமே அநிஷ்டாசோராம் –
—————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா ஸ்மரண விசதச் சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி
——–
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
———-
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-
———
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-
——–
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
———
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-
———–
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
———
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-
———
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-
———
‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-
——–
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-
——–
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-
———-
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி –70-பாசுரம்–
அவதாரிகை –
இதில்-திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பாரித்த ஸ்ரீ திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே
ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————
இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-
————————————————-
வியாக்யானம்–
இன்பக் கவி பாடுவித்தோனை –
இன் கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-
இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-
திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு –
அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான கைங்கர்யம் செய்கையிலே மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில் கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-
உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்