ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 6—–பரதேவதாபாரமார்த்த்யாதிகாரம் —

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 6—–பரதேவதா பாரமார்த்த்யாதிகாரம் —

பரதேவதை யார் என நிர்ணயித்து விளக்குகிறது

திவ்ய தம்பதிகளே பரதேவதை –ப்ராப்யமும் , சரண்யரும்

அதிகாரத்திலிருந்து

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகஸமதிகதா துல்யதைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐச்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ :ஆத்ரியந்தே ந ஸந்த : |
த்ரயந்தை : ஏககண்டை : தத் அநுகுண மநு வ்யாஸ முக்ய உக்திபி : ச
ஸ்ரீமாந் நாராயணோ ந :பதி : அகிலதநு : முக்தித : முக்த போக்ய : ||

1.வ்யாக்யானம்

1. சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,
ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ;
த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;இவர்களின் ஆத்ம ஸ்வரூபமும்
ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன்.

ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து
அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை.
ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு
ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,
எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும்,
முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும்
பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும்
எஜமானன் –சேஷீ என்பதாகும் .

2.அதிகாரத்திலிருந்து

பரதேவதை யார் என்று ஏன் நிர்ணயிக்க வேண்டும் ?

உக்த வைதர்ம்யங்களாலே பொதுவிலே ப்ரக்ருதி —புருஷ –ஈச்வர –விவேகம்
பண்ணினாலும் , ஒன்றுந்தேவும் இத்யாதிகளிற்படியே பர தேவதா விசேஷ
நிச்சயமில்லாத போது , உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்
அவனை யல்லால் என்கிற பரமைகாந்தித்வம் கூடாமையாலும் ,
பரமைகாந்திக்கல்லாது வ்யவதாந ரஹிதமாக மோக்ஷம் கிடையாமையாலும்
ஈச்வரன் இன்ன தேவதா விசேஷமென்று நிஷ்கரிக்க வேணும்

2. வ்யாக்யானம்

இதுவரையில் சொல்லப்பட்ட பல விளக்கங்கள் /விவரங்கள் மூலமாக ,
எல்லாத் தத்வங்களும் , ப்ரக்ருதி—புருஷன் —ஈச்வரன் என்று
பிரிக்கட்டுள்ளதை அறிந்தோம்.இப்படியாகப் ,பிரித்து அறியும்
ஜ்ஞானம் இருந்தால் கூட , இவர்தான் யாவற்றிலும் உயர்ந்த தெய்வம்
என்பதை , திருவாய்மொழியில் ”ஒன்றுந்தேவும்…” அருளியதைப் போன்று
நம்மால் உணர இயலாது; இவர் தான் பரதெய்வம் என்று முடிவு காண ,
”உன்னித்து மற்றொரு தொழாள் , அவனை யல்லால் –” என்கிற அதே
திருவாய்மொழிப் பாசுரத்தின் ,ஜ்ஞானமும் அவச்யமாகும்.
இப்படியான, பரமைகாந்தி நிலையில் உள்ளார்க்கு அல்லாது,
வேறு எவருக்கும் மோக்ஷமானது கிடைப்பதில்லை. ஆகவே தான், இவர்தான்
பர தெய்வம் என்பது நிரூபிப்பது அவச்யமாகிறது.

திருவாய்மொழி ( 4–10–1 )
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான்
குன்றம்போல் மணிமாட நீடு திருக்குருகூரதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே

நீங்கள் நாடுகின்ற தேவதைகளும் ,வசிப்பதற்கு இடமான
உலகங்களும்
உயிர் உம் = வசிக்கும் பிராணிகளும், ஜந்துக்களும்
மற்ரும் =போக்யங்கள், அவற்றுக்கான உபகரணங்களும்
அன்று = அந்த மஹாபிரளயம் ஏற்பட்ட வேளையிலே
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் =
ஸமஷ்டியைப் படைத்து, ப்ரஹ்மாண்டத்தைப் படைத்து,
ப்ரஹ்மாவையும் படைத்து, அதோடு நிற்காமல்,
தேவருலகங்களையும் , தேவர்களையும் படைத்து ,
உயிர் படைத்தான் = மனுஷ்ய,திர்யக் , தாவரங்களையும்
படைத்தான்; ஸ்ருஷ்டித்தான்.
அவன்
மலைகள் போல மணிகளால் ஆன சிறந்த வீடுகளால் அழகு
பொருந்திய திருக்குருகூர் திவ்ய தேசத்தில் , எழுந்தருளியிருக்கின்ற
ஆதிப் பிரான் என்கிற ஸ்ரீமந் நாராயணன் .
நிற்க =நீங்கள் வந்து ஸேவிப்பீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்து நிற்க,
மற்று எத்தெய்வம் நாடுதிர் = மற்ற எந்தத் தெய்வத்தை
ஆச்ரயிக்கலாம் என்று தேடுகிறீர்கள் ?

நீங்கள் தேடும் தெய்வங்கட்குப் ”பரத்வம் ” இல்லை. உங்களைப் போலவே
அவர்களும் யுகப் ப்ரளயத்தில் அழிந்தவர்களே ! இப்படி, யுகப் ப்ரளயம்
முடிந்து எல்லாம் அழிந்து எதுவுமில்லாத சமயத்திலே , ஜீவாத்மாக்களிடம்
கருணையுடன் , மறுபடியும் ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்மா தேவர்கள் மநுஷ்யர்கள்
விலங்குகள் தாவரங்கள் இவர்கள் வசிக்க உலகங்கள்—எல்லாவற்றையும்
ஸ்ருஷ்டி செய்தான். ஸ்ருஷ்டி செய்துகொண்டுமிருக்கிறான் . அவர்கள்
அனைவர்க்கும், அந்தராத்மாவாகவும் இருக்கிறான். இப்படிப் படைப்பதற்குக்
காரணமானவனை விட்டு விட்டு அவனால் படைக்கப்பட்ட தெய்வங்களை
நாடுகிறீர்களே ? பரத்வம் இருக்கலாம்; ஸௌலப்யம் இல்லையே
என்று சொன்னால் அது தவறு—இவனை ஆச்ரயித்த பாகவதர்கள்
வசிக்கும் மணி மாடங்கள் மலை போல் விளங்குகிற ஊர்
உங்களுக்குத் தெரியவில்லையா ! அங்கு, உங்கள் வருகைக்காக
ஆதிப் பிரான் நிற்கிறான்; அவனை ஸேவித்து உய்வதை விட்டு விட்டு,
வேறு தெய்வங்களை நாடலாமா —என்கிறார் ஆழ்வார்.

ஈடு வ்யாக்யானம்
வாஸுதேவம் பரித்யஜ்ய யோந்யம்தேவம் உபாஸதே |
த்ருஷிதோ ஜாஹ்நவீதீரே கூபம் அநதி துர்மதி ||

கங்கை பெருகி ஓடுகிறது; தாகம் உள்ளவன் நீரை அள்ளிக் குடித்துத்
தாகம் தீர்த்துக்கொள்ளலாம் . அதன் கரையில் , குந்தாலி கொண்டு
கிணறு கல்லித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாப் போலே
ப்ராப்தனுமாய் ஸுலபனுமாய் , ஸுசீலனுமான இவனை விட்டு
திருவில்லாத் தேவரைத் தேடுதிரே —

திருவாய்மொழி ( 4–6–10 )

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைச் சொல்லி நும்தோள் குலைக்கப்படுமன்னைமீர் !
மன்னப்படு மறைவாணனை வண் துவராபதி
மன்னனை , ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே

அவனையல்லால் உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் =
அந்தப் பெரிய தெய்வத்தை விட்டுவிட்டு , வேறு ஒரு தெய்வத்தையும்
ஒரு பொருட்டாக நினைத்து, தொழாள் –நினைக்கமாட்டாள் —
கை கூப்பி வணங்க மாட்டாள் .
உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லி, உங்கள்
தோள்கள் குலுங்கி அதனால் ஆயாசப்படுபவர்களே !
எல்லாம் நிலைபெறத் தோன்றி யுள்ளவன்; வேதங்களில்
வாழ்கிறவன்; விலக்ஷணமான த்வாரகாநாதன் ; கண்ணன்;
அவனைத் துதிக்க வாருங்கள் ;நீங்கள் துதித்தவுடன்,
இவளும் அவனைத் தரித்து வணங்கி ஆனந்தமாக ஆடுவாள் .

இந்தப் பெண் வேறு தெய்வத்தை வணங்க மாட்டாள்; மனத்தில்
நினைக்க மாட்டாள்; த்வாரகாதீசன் கண்ணனைத்
தொழுகின்றாள்; நீங்கள் வேறு தெய்வத்தை அவளுக்குக்
காட்டாதீர்கள்; நீங்கள், உங்கள் மனஸ்ஸில் தோன்றிய
தெய்வத்தை யெல்லாம் , உங்கள் உடல் , தோள் குலுங்க
கைகளை ஆட்டிஆட்டிச் சொன்னாலும், அவள், அதை,
ஒரு பொருட்டாக மதிக்க மாட்டாள். ஆதலால், அதை விடுத்து,
க்ருஷ்ணனைத் துதியுங்கள் ; இவளும் உத்ஸாகமாக ஆடுவாள்.
அவன் விஷயத்திலே மோஹித்துக் கிடக்கிறாள் .
இதை நினைவு படுத்தினால், மகிழ்ந்து ,தெளிந்து, எழுந்து
உடனே தொழுவாள்; ஆடுவாள்; பாடுவாள்; ஆனந்திப்பாள்.

3.அதிகாரத்திலிருந்து

பகவான் விஷயமாகப் பல மதங்கள் கண்டன வாதங்கள்

அவ் விடத்தில் சேதநாசேதநங்களுடைய அத்யந்த பேதம் ப்ரமாண
ஸித்தமாகையாலே எல்லாம் பரதேவதையாயிருக்கிற
ப்ரஹ்ம தெய்வமென்கிற பக்ஷம் தடியாது .
ஸ்வபாவ ஸித்தமான ஜீவேச்வர பேதமும் அப்படியே தேவாதி ரூபரான
ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும் ஸுக துக்காதி வ்யவஸ்தையிலே
ப்ரமாணிகமாகையால் ஸர்வந்தர்யாமி ஒருவனே யாகிலும்
ப்ரஹ்ம ருத்ரேந்தாதி ஸர்வ தேவதைகளும் ஈச்வரனோடும்
தன்னில் தானும் அபிந்நர் என்கிற பக்ஷம் கூடாது.

3.வ்யாக்யானம்

சேதநங்கள் , அசேதநங்கள் –இவையெல்லாம் வெவ்வேறானவை
என்பதை , ப்ரமாணங்கள் மூலமாகத் தெளிந்து அறிந்ததால் ,
எல்லாமே ப்ரஹ்மத்தின் அங்கமென்பது ஏற்க இயலாததாக
ஆயிற்று. ப்ரமாணங்கள் மூலமாகவே ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும்
வேறுபாடு உள்ளதென்றும் , தேவர்களாக உள்ள ஜீவாத்மாக்களுக்கும்
இடையே வேறுபாடு உள்ளதென்றும் , எல்லா ஜீவாத்மாக்களுக்கும்
அந்தர்யாமியாக ஈச்வரன் இருக்கிறானென்றும் , உணரலாயிற்று
ப்ரஹ்மா , ருத்ரன் ,இந்த்ரன் இவர்களுக்கும் ஈச்வரனுக்கும்
பேதம் இல்லை என்கிற வாதமும் இவர்களுக்கு இடையேயும்
ஒருவருக்கொருவர் பேதமில்லை என்கிற வாதமும் ,ஏற்க முடியாததாயிற்று .

4.அதிகாரத்திலிருந்து
——————————-

ப்ரஹ்மன் , ருத்ரன் இவர்கள் –பர தேவதை யல்ல

இத் தேவதைகளில் ப்ரதானராகச் சொல்லுகிற ப்ரம்மருத்ரேந்தாதிகளுக்குத்
கார்யத்வ கர்மவச்யத்வங்கள் ப்ரமாணிகங்களாகையாலும் ,

ஆபூதஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீனே ப்ரக்ருதெள மஹாந்
ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண : ப்ரபு :

ஆத்யோ நாராயணோ தேவ : தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ :

பரோ நாராயணோ தேவ : தஸ்மாத் ஜாதச்சதுர்முக :
தஸ்மாத் ருத்ரோ அபவதேவி-இத்யாதிகளிலே

ததஸ்த்வமாபி துர்தர்ஷ : தஸ்மாத் அபவாத் ஸநாதனம்
ரக்ஷார்த்தம் ஸர்வபூதானாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்

என்கிறபடியே ஸ்வேச்சாவதீர்ணனாய் த்ரிமூர்த்தி மத்யஸ்தனான
விஷ்ணு நாராயணாதி சப்த வாச்யன் தானே தன்னுடைய பூர்வாவஸ்தையிலே
ஸர்வ ஜகத்துக்கும் காரணமென்கையாலும்

நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்
ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதனம்-என்கிறபடியே

அவனே நித்யனென்கையாலும் , த்ரிமூர்த்திகளும் ஸமரென்றும்
த்ரிமூர்த்திகள் ஏகதத்த்வமென்றும் த்ரிமூர்த்யுத்தீர்ணன் ஈச்வரனென்றும்
த்ரிமூர்த்திகளுக்குள்ளே ப்ரஹ்மாவாதல் ருத்ரனாதல் ஈச்வரனென்று
சொல்லுகிற ஸாம்ய ஐக்ய உத்தீர்ண வ்யக்த்யந்தர பக்ஷங்கள் தடியா

4. வ்யாக்யானம்

தேவதைகளில் ப்ரதானராகச் சொல்லப்படுகிற ப்ரம்மன் ,ருத்ரன் , இந்த்ரன் ,
ஆகிய எல்லோரும் கர்மத்தின் வசப்பட்டவர்களே என்பதைப்
பலப் ப்ரமாணங்கள் தெளியலாம்

மஹாபாரதம் —-
ஆபூத ஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீனே ப்ரக்ருதெள மஹாந்
ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண : ப்ரபு :

பஞ்ச பூதங்களும் லயத்தை அடைந்து, மஹத் என்பது
ப்ரக்ருதியில் லயத்தை அடைந்த போது , அனைத்துக்கும்
ஆத்மாவான ஒருவன் மட்டுமே இருக்கிறான்; அவனே
அனைத்துக்கும் ப்ரபுவான நாராயணன்

வராஹ புராணம் —–

ஆத்யோ நாராயணோ தேவ : தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ :

தொடக்கத்தில் , நாராயணன் மட்டுமே இருக்கிறான் ; அவனிடமிருந்து
பிரம்மனும் அவனிடமிருந்து ருத்ரனும் ( சிவன் ) தோன்றினார்கள்.

இதுவும் வராஹ புராணமே —

பரோ நாராயணோ தேவ : தஸ்மாத் ஜாதச்சதுர்முக :
தஸ்மாத் ருத்ரோ அபவதேவி

ஹே , தேவி, நாராயணனே எல்லோர்க்கும் மேலான தெய்வம்—
அவனிடமிருந்து நான்முகனும். நான்முகனனிடமிருந்து ,சிவனும்
தோன்றினர்.

மேலும்,

ஸ்ரீமத் ராமாயணம் –உத்தர காண்டம் –ப்ரஹ்மா சொல்கிறார்—

ததஸ்த்வமாபி துர்தர்ஷ : தஸ்மாத் அபவாத் ஸநாதனம்
ரக்ஷார்த்தம் ஸர்வபூதானாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்

அடியேன் உபாஸனையால் , ஒருவராலும் வெல்ல இயலாத தேவரீர் ,
எப்போதுமிருக்கிற அந்தப் பர ரூபத்திலிருந்து ,எல்லாப் பிராணிகளையும்
ரக்ஷிக்க , த்ரிமூர்த்திகளில் நடுவான ”விஷ்ணு ” வாகத் தோன்றினீர்
இவை போன்றவற்றின் மூலமும் , நாராயணன், விஷ்ணு போன்ற
பலத் திருநாமங்களால் அனைத்து நிலைகளிலும் இருக்கிறான்.

மஹா பாரதம்

நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்
ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதனம்

எப்போதும் இருக்கிற புருஷன் என்று சொல்லப்படுகிற
அந்த வாஸுதேவன் ஒருவனைத் தவிர , உலகில்,
ஸ்தாவரமோ ஜங்கமமோ , நிரந்தரமாக இருப்பதில்லை என்று கூறியதன்
மூலம், இவன் ஒருவனே நித்யன் என்று விளங்குகிறது.

இப்படியான ப்ரமாணங்களால், மும் மூர்த்திகளும் சமம்,
மும்மூர்த்திகளும் ஒன்றே, மும்மூர்த்திகளுக்கும் மேலானவன்
ப்ரம்மனோ ,ருத்ரனோ என்கிற வாதங்கள் தள்ளப்படுகின்றன .
இப்படிப்பட்ட வாதங்கள் மூலமாக வெளிப்படும் ”ஸமத்வம் ”
ஒரே தன்மை, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஒன்று
போன்ற கருத்துக்கள் எல்லாமும் ப்ரமாணங்களுக்கு விரோதமாக
உள்ளன.

5.அதிகாரத்திலிருந்து
———————————-
ப்ருஹ்ம ருத்ராதிகள் ஈச்வரனின் படைப்பே

ப்ரம்ம ருத்ராதிகள் ஸர்வேச்வரனுக்குக் கார்யபூதரென்னுமிடம் ,
தத்விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இத்யாதிகளாலும்
ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சாயாந : ஆப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந :

க இதி ப்ரஹ்மணோ நாம ஈச : அஹம் ஸர்வதேஹிநாம்
ஆவாம் தவாங்கே ஸம்பூதெள தஸ்மாத் கேசவ நாமவாந்

அஹம் ப்ரஸாத ஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வ ஸர்க்கே ஸநாதனே-என்று எதிரி கையாலே விடுதீட்டானபடியே அவர்கள் தங்கள்
பாசுரங்களாலும் ஸித்தம்

5.வ்யாக்யானம்

ப்ரம்மன் ,ருத்ரன் இவர்களெல்லாம் பகவானிடமிருந்து தோன்றியவர்கள்
என்று ”மநு ஸ்ம்ருதி கூறுகிறது

தத்விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே

நாராயணனிடமிருந்து உண்டான அந்தப் புருஷன், ப்ரம்மன் என்று
சொல்லப்படுகிறான் . என்கிற பிரமாணங்கள் மூலமும் அறியலாம் .

ஸ்ரீமத் ராமாயணம்

ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சாயாந : ஆப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந :

முன்பு தேவரீரே , உமது ஸங்கல்பத்தாலே உலகங்களை அழித்து,ப்ரளய
ஸமுத்ரத்தில் படுத்து இருந்து, முதலில் என்னைப் படைத்தீர்
( ப்ரஹ்மா , தன்னைக் குறித்து பகவானிடம் சொன்னது )

ஹரி வம்சம்
க இதி ப்ரஹ்மணோ நாம ஈச : அஹம் ஸர்வதேஹிநாம்
ஆவாம் தவாங்கே ஸம்பூதெள தஸ்மாத் கேசவ நாமவாந்

சிவன் சொல்வது–
”க ” என்று ப்ரம்மனுக்குப் பெயர்; நான் எல்லாப் பிராணிகளுக்கும்
ஈசன் ; நாங்கள் இருவரும், தேவரீருடைய திருமேனியிலிருந்து
உண்டானவர்கள் ; ஆதலால் , தேவரீர் ,”கேசவன் என்கிற திருநாமமுடையவர்

மஹாபாரதம்

அஹம் ப்ரஸாத ஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வஸர்க்கே ஸநாதனே

ப்ரம்மன் சொல்வது —-
குழந்தாய் —-எம்பெருமான் மகிழ்வுடன் இருந்த சமயம் ,நான் அவரால் தோன்றினேன் .
ஒரு சமயம் அவர் கோபத்தில் இருக்கும்போது நீ முன் ஸ்ருஷ்டியில்
அந்தக் கோபத்தால் உண்டானாய் .

மேலே சொல்லப்பட்டவை யாவுமே, பல தேவதைகளும் ,
தங்களுக்குத் தாங்களே பகவானால் படைக்கப்பட்டவர்கள் என்று
வாக்கு மூலம் கொடுப்பதைப் போன்று உள்ளதை உணர்க

6.அதிகாரத்திலிருந்து
————————————-

இவர்கள் கர்ம வச்யர்களாய் சில கர்ம விசேஷங்களாலே ஸர்வேச்வரனை
ஆராதித்துத் தத்தம் பெற்றார்களென்னுமிடம்

ஸர்வதேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே

ஸப்ருஹ்மகாஸ்சருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய :
அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம்

சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய : ப்ரபும்
நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத :

பத்மே திவ்யே அர்க்க ஸங்காசோ நாப்யாமுத்பாத்ய மாமபி
ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம்

யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும

விச்வ ரூபோ மஹாதேவ : ஸர்வமேதே மஹாக்ரதௌ
ஜுஹாவ ஸர்வ பூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா

மஹாதேவ : ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ ப்பூவ
விச்வான் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா :

யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ
ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸுத்ரே மயா க்ருத :–இத்யாதிகளிலே ப்ரஸித்தம்

6.வ்யாக்யானம்
———————

ஸர்வதேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே
எல்லாத் தேவர்களும் வாஸுதேவனையே ஆராதிக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் வாசுதேவனையே நமஸ்கரிக்கிறார்கள்.

மஹாபாரதம்
ஸப்ருஹ்மகாஸ்சருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய :
அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம்

ப்ரஹ்மா சிவன் இந்த்ரன் தேவர்கள் ரிஷிகள் யாவரும் தேவர்களுக்கெல்லாம்
தேவனான ஸ்ரீ ஹரியாகிய நாராயணனையே ஆராதிக்கிறார்கள்

மஹாபாரதம்
சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய : ப்ரபும்
நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத :

ப்ரஹ்மா ,சிவன் முதலானோர் நாராயணனை எப்போதும் ஆராதித்து வந்தாலும்
அவனது தன்மை இத்தகையது என்பதை இன்னமும் அறியவில்லை;
இப்படிப்பட்ட நாராயணனை வணங்குகிறேன்

ஸ்ரீமத் ராமாயணம் —
பத்மே திவ்யே அர்க்க ஸங்காசோ நாப்யாமுத்பாத்ய மாமபி
ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம்

ப்ரஹ்மா கூறுவதாவது —-
தேவரீரின் திருநாபியில் உண்டான ஸுர்யன் போல ஜ்வலிக்கும்
தாமரைப் புஷ்பத்தில் என்னையும் உண்டாக்கி , ப்ரஜாபதி என்னும்
அதிகாரி செய்யவேண்டிய காரியங்களையும் அடியேனை செய்விக்க வைத்து
பெரும் பாரத்தைக்கொண்டவனாக அடியேனை ஆக்கிய
ஜகத்பதியாகிய உன்னை, (வணங்குகிறேன் ) த்யானம் செய்கிறேன்

மஹாபாரதம்

யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும
ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து ப்ரஹ்மா மறுபடியும்
மூன்று உலகங்களைப் படைக்கும் அதிகாரத்தைப் பெற்றான் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம்

மஹாபாரதம்

விச்வரூபோ மஹாதேவ : ஸர்வமேதே மஹாக்ரதௌ
ஜுஹாவ ஸர்வபூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா

விச்வரூபன் என்கிற பெயர் கொண்ட ருத்ரன் ”ஸர்வமேதம் ” என்கிற
பெரிய யாகத்தில், எல்லாப் பூதங்களையும் , தன்னையும் ,மனத்தாலே ஹோமம் செய்தான்

மஹாபாரதம்

மஹாதேவ : ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ ப்பூவ
விச்வான் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா :

ஸர்வமேதம் என்கிற பெரிய யாகத்தில், ருத்ரன் இப்படியாகத் தன்னையும்
அர்பணித்துக்கொண்டு ,தேவர்களில் உயர்ந்தவன் என்கிற பெயர் பெற்றான்.
இதன்மூலமாக, யானைத் தோலைத் தனது வஸ்த்ரமாகக் கொண்டு ,தன்னுடைய
ஜ்ஞானம் மூலமாக எல்லா உலகங்களிலும் வியாபித்து, எட்டுவித மூர்த்திகளைத்
தாங்கி காந்தியுடன் கீர்த்தியுடன் ப்ரகாசிக்கிறான்

மஹாபாரதம்

யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ
ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸுத்ரே மயா க்ருத :

இப்படியான பெரிய யாகத்தில், யார் , எனக்குக் கொடுக்கவேண்டிய ஹவிர்பாகத்தை
முறைப்படி கொடுத்தாரோ , அவன் யஜ்ஞ பாகத்தைப் பெறுவதற்குத்
தகுந்தவன் என்று வேதத்திலும், ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும் சொல்லி ஏற்படுத்தியிருக்கிறேன்

.7.அதிகாரத்திலிருந்து
———————————

ப்ரஹ்ம ருத்ராதிகள் எம்பெருமானின் மாயைக்கு வசப்பட்டவர்;குணங்களுக்கு
வசப்பட்டவர்; அறிவின் ஏற்றச் சுருக்கமுடையவர்

இவர்கள் பகவந் மாயா பரதந்த்ர்ரராய் குண வச்யராய் ஞான ஸங்கோச
விகாஸவான்களாயிருப்பார்களென்னுமிடம் வேதாபஹராதி வ்ருத்தாந்தங்களிலும்

ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா
விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா :

ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச
உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா :–இத்யாதிகளிலும் ப்ரஸித்தம்

7. வ்யாக்யானம்

ப்ரஹ்மன் ,ருத்ரன் இவர்களெல்லாம் நாராயணனின் மாயைக்கு
வசப்பட்டவர்கள். இவர்களின் ஜ்ஞானம் விரிவதும் ,சுருங்குவதுமாகவே
உள்ளது. இவை அனைத்தையும் ப்ரஹ்மா ,வேதங்களைத் தொலைத்த
சம்பவம் மூலமாகவும் கீழே சொல்லப்பட்டவை மூலமாகவும் அறியலாம்

விஷ்ணு புராணம்
ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா
விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா :

பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், மனிதர்கள்,மிருகங்கள் ஆகிய எல்லாமும்
விஷ்ணுவின் மாயை ( மாயை என்பது ப்ரக்ருதி ) என்கிற இருளால் சூழப்பட்டுள்ளனர்

மநு ஸ்ம்ருதி
————————–

ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச
உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா :

முந்தைய ஜன்மத்தில் ஸத்வ குணத்தால் சிறந்த புண்யம் செய்தவர்களால்
பிரம்மா, ஒன்பது ப்ரஜாபதிகள், தர்மதேவதை , மஹத் தேவதை , அவ்யக்த தேவதை
என்கிற உயர்ந்த பிறவிகள் அடையப்படுகின்றன

8.. அதிகாரத்திலிருந்து
———————————–
ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானிடம் ஜ்ஞானம் பெற்றுக் கைங்கர்யம் செய்பவர்கள்

இவர்கள் தங்களுக்கு அந்தராத்மாவான அவன் கொடுத்த ஞானாதிகளைக்
கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறார்களென்னுமிடம்

ஏதௌ விபுதச்ரேஷ்ட ப்ரஸாத க்ரோதஜெள ஸம்ருதௌ
ததாதர்சித பந்நாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகெள–என்று சொல்லப்பட்டது

8.வ்யாக்யானம்
————————–
ப்ரம்மன் முதலானவர்கள் தங்களுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணன்
அளித்த ஜ்ஞானத்தைக் கைக்கொண்டு அந்த ஜ்ஞானத்தின் மூலம்
அவனுக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்துவருகின்றனர் .
இதை மஹாபாரதம் சொல்கிறது

ஏதௌ விபுதச்ரேஷ்ட ப்ரஸாத க்ரோதஜெள ஸம்ருதௌ
ததாதர்சித பந்நாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகெள

பகவானின் சந்தோஷத்தாலும், கோபத்தாலும் தோன்றியவர்களான
தேவர்களில் உயர்ந்தவர்களான பிரம்மனும் சிவனும் ,பகவான் அளித்துள்ள
ஜ்ஞானத்தின் மூலம் ஸ்ருஷ்டியையும் , ஸம்ஹாரத்தையும் செய்து வருகின்றனர் .

9.அதிகாரத்திலிருந்து
————————————–
ப்ரஹ்ம ருத்ராதிகள் த்யானிக்கத் தகுந்தவரல்லர்

இவர்களுக்கு சுபாச்ரயத்வமில்லை யென்னுமிடத்தை

ஹிரண்யகர்ப்போ பகவான் வாஸவோ அத ப்ரஜாபதி :-என்று தொடங்கி ,
அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா : கர்மயோநய : என்றும்

ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா :
ப்ராணின : கர்மஜனித ஸம்ஸார வசவர்த்திந : என்றும்

கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ : பராகதி : என்றும்

பராசர சௌநக சுகாதிகள் ப்ரதிபாதித்தார்கள்

9.வ்யாக்யானம்
————–

ப்ரம்மன் முதலான இவர்கள், தூய்மையற்றவர்கள் த்யானம்
செய்யத் தகுதி இல்லாதவர்கள் என்பவைகளை இப்போது
அறியலாம்

விஷ்ணுபுராணம்

ஹிரண்யகர்ப்போ பகவான் வாஸவோ அத ப்ரஜாபதி :-என்று தொடங்கி ,
அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா : கர்மயோநய :

ப்ரம்மன் இந்த்ரன் ப்ரஜாபதிகள் தேவர்கள் ஆகியோர் பூர்வகர்மத்தின்
பயனாக பிறவி எடுத்தவர்கள்—ஆதலால், தூய்மையற்றவர்கள்

யோகிகள் த்யானம் செய்வதாயிருந்தால் , ப்ராணாயாமத்தினால்
வாயுவையும், ப்ரத்யாஹாரத்தினால் இந்த்ரியங்களையும் வசப்படுத்தி
மனஸ்ஸைப் பகவானிடம் செலுத்தவேண்டும் . இப்படி த்யானிக்கப்படும்
எம்பெருமானின் ஸ்வரூபம் , மூர்த்தம் , அமூர்த்தம் என்று இரண்டு
வகையாக உள்ளது. இவை மூர்த்த ப்ரஹ்மத் த்யானம் ,அமூர்த்த
ப்ரஹ்மத் த்யானம் என்றும் சொல்லப்படும்.
மூர்த்தம் —-ஹிரண்யகர்பன் , ப்ரஜாபதி ,மருத்துக்கள்,வஸுக்கள் ,ருத்ரர்கள் ,
ஸூர்யன் ,நக்ஷத்ரங்கள் , கந்தர்வ,யக்ஷ தேவ வர்க்கங்கள், மனிதன், விலங்கு,
மலைகள் ,கடல்கள், மரங்கள், இவையெல்லாம் உள்ள பூமி –இவைகள்
யாவும் அசுத்தமானவை–”மூர்த்தம் ”.
இவை எல்லாமும் ,ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உடையதாகத் த்யானம்
செய்வது—-மூர்த்த ப்ரஹ்மத் த்யானம்

ப்ரஹ்மத்தை ”ஸத் ” ஸ்வரூபமாக தோஷங்கள் இல்லாததாக ,ஸ்வயம்
ப்ரகாசமான ஜ்ஞான ஸ்வரூபமாகத் த்யானம் செய்வது–அமூர்த்த ப்ரஹ்மத் த்யானம்

மேற்சொன்ன இருவிதத் த்யானங்களும் மிகக் கடுமையானவை எளியது, சிறந்தது எதுவெனில் அழகான திவ்யமங்கள விக்ரஹத்தோடு
அனந்தகல்யாணகுணங்களோடு , த்யானிப்பது . இது, சுபாச்ரய ப்ரஹ்மத் த்யானம் எனப்படும்.

விஷ்ணு தர்மம்

ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா :
ப்ராணின : கர்மஜனித ஸம்ஸார வசவர்த்திந :

ப்ரம்மன் முதலாகத் துரும்புவரை –சிறிய புல் வரை—-இருக்கிற
அனைத்து ஜீவன்களும் கர்மவினைகாரணமாகப் பிறவி எடுத்தவர்களே .
ஆதலால், அவர்களும் ஸம்ஸார சுழற்சிக்கு உட்பட்டவர்களே

ஸ்ரீமத் பாகவதம்

கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ : பராகதி :

உலகப் பற்றுக்களே இல்லாதவன், ப்ரம்மன் முதலானோர் ,எந்தப்
பாவத்தையும் போக்க வல்லமை இல்லாதவர்கள் என்று தெளிய வேண்டும்.
ஏனெனில், அவர்கள் தூய்மை யற்றவர்கள் . ஆதலால், வாஸுதேவனையே ,தங்களுடைய
உயர்ந்த லக்ஷ்யமாகக் கொள்ள வேண்டும்

இப்படியெல்லாமே பராசரர் சௌநகர் சுகர் முதலானோர் உபதேசித்தனர் .

10.அதிகாரத்திலிருந்து
————————————-
ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானை ஆச்ரயித்தவர்கள்

இவர்களுக்குப் பகவான் ஆச்ரயணீயனென்னுமிடத்தையும் ,பகவானுக்கு
ஓர் ஆச்ரயணீயர் இல்லையென்னுமிடத்தையும்

ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாச்ரித :
ப்ரஹ்மா மாமாச்ரிதோ ராஜந் அஹம் கஞ்சிதுபாச்ரித :
மமாச்ரயோ ந கச்சித்து ஸர்வேஷாமாச்ரயோ ஹி அஹம்
என்று தானே யருளிச் செய்தான்

10.வ்யாக்யானம்
——————————–

ப்ரஹ்மா முதலானோர் தங்களுடைய பாதுகாப்புக்கு ,பகவானையே
அண்டி யிருக்கின்றனர். ஆனால், பகவானோ,யாரையும் எதற்கும்
அண்டி யிருக்க வேண்டியதில்லை –இக்கருத்தை
மஹாபாரதத்தில் பகவானே சொல்கிறான் —
ஹே ராஜன்—தேவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு , ருத்ரனை
அண்டுகின்றனர்; ருத்ரன் ,ப்ரஹ்மனை அண்டுகிறான் ;
ப்ரஹ்மனோ ,தன பாதுகாப்புக்காக என்னை அடைகிறான்.
நான் எனது பாதுகாப்புக்கு யாரையும் அண்ட வேண்டியதில்லை.
நானே எல்லோருக்கும் புகலிடமாக இருப்பதால், என்னால்
அடையப்படும் இடம் என்று ஏதுமில்லை.

11. அதிகாரத்திலிருந்து
———————————–

ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானின் விபூதிகள்

இவர்கள் உபாயவிபூதிநாதனான ஸர்வேச்வரனுக்கு விபூதிபூதரென்னுமிடம்
ப்ரஹ்மா தக்ஷாதய : கால : ருத்ர : காலாந்தகாத்யாச்ச இத்யாதிகளிலே
மற்றுமுள்ளோரோடு துல்யமாகச் சொல்லப்பட்டது

11.வ்யாக்யானம்
—————————–

நித்ய விபூதி, லீலாவிபூதி இரண்டிற்கும் தலைவன் –எம்பெருமான். இவனின்
விபூதிகளாக, ப்ரம்மன் ருத்ரன் முதலானோர் இருக்கின்றனர் .
இதை , விஷ்ணு புராணம் சொல்கிறது

ப்ரஹ்மா தக்ஷாதய : கால
ப்ரம்மன் , தக்ஷன் ,காலம் போன்றவை எம்பெருமானின் விபூதிகளாக இருந்து
உலகை உண்டுபண்ணக் காரணமாக இருக்கிறார்கள்

ருத்ர : காலாந்தகாத்யாச்ச

ருத்ரன் யமன் போன்றவர்கள் பகவானின் விபூதிகளாக இருந்து,
நான்கு விதமான ப்ரளயங்களுக்குக் காரணமாக இருக்கின்றனர் .

12. அதிகாரத்திலிருந்து

இப்படி வஸ்த்வந்தரம்போல இவர்களும் ஸர்வ சரீரியான ஸர்வேச்வரனுக்கு
ப்ரகார பூதரென்னுமிடம் வஸ்த்வந்தரங்களுக்கும் இவர்களுக்கும் சேர
நாராயணாதி சப்த ஸாமாநாதிகரண்யத்தாலே ஸித்தம்

12.வ்யாக்யானம்

மற்ற பொருள்களைப் போலவே ப்ரம்மன் முதலிய அனைத்தையும் தனது சரீரமாகக்
கொண்டுள்ளவர் பகவான் . இவர்கள் எல்லாமும் ,அவனுக்கு விசேஷணமாக உள்ளனர்
இதனை,நாராயண என்கிற சப்தத்துடன் மற்ற பொருள்கள் கூறப்படுவதைப்போல
இவர்களும் அவ்வாறே கூறப்படுகின்றனர் என்பதை அறியலாம்

13.அதிகாரத்திலிருந்து
———————————
ப்ரஹ்மருத்ராதிகள் ,பகவானுக்கு சேஷர்கள்

இவர்கள் சரீரமாய் அவன் ஆத்மாவாயிருக்கிறபடியை ,

தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா :
ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத : அஸௌ ந க்ராஹ்ம : கேநசித் க்வசித்

என்று ப்ரஹ்மா ருத்ரனைக் குறித்துக் கூறினான்

13.வ்யாக்யானம்
——————————
ப்ரஹ்மா முதலானோர் பகவானின் சரீரமாக உள்ளத்தையும்,
அவன் இவர்களுக்கெல்லாம் ஆத்மாவாக இருப்பதையும்

மஹாபாரதம் சொல்கிறது —
தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா :
ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத : அஸௌ ந க்ராஹ்ம : கேநசித் க்வசித்

ப்ரஹ்மா ,ருத்ரனிடம் சொன்னதாவது—
உனக்கும் எனக்கும்,சரீரமெடுத்த எல்லோருக்கும் ஆத்மாவாக பகவான்
இருந்து, எல்லோருடைய செயல்களையும் எப்போதும் பார்க்கிறான்.
ஆனால், அவனை யாராலும் எளிதில் இயலாது.

14.அதிகாரத்திலிருந்து
———————————–

ப்ரஹ்ம ருத்ராதிகள் ,பகவானின் தொண்டர்கள்

இவர்கள் சேஷ பூதர் , அவன் சேஷி என்னுமிடத்தை

தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந : பரமாத்மந :
அத : அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம்

என்று மந்த்ர ராஜபத ஸ்தோத்ரத்திலே சர்வஜ்ஞனான ருத்ரன் தானே சொன்னான்

14.வ்யாக்யானம்
————————–

ப்ரஹ்மா முதலானோர் தொண்டர்கள் என்பதையும் பகவானே
இவர்களின் எஜமானன் என்பதையும் அனைத்துமறிந்த சிவன்
மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சொல்கிறான்

தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந : பரமாத்மந :
அத : அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம்

அனைத்து ஆத்மாக்களும் இயற்கையாகவே பகவானுக்கு அடிமைகள்.
இந்த ஜ்ஞானமுடைய நானும்,உன் தொண்டனான நானும் உன்னை வணங்கி நிற்கிறேன்

மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹனுக்கான மந்த்ரங்கள் நிறைய உள்ளன
ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரங்களை மனத்தில் பதியவைப்பது மிகக் கஷ்டம் .
ஆனால், ஸ்ரீ ருத்ர பகவான் , ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரமான ”அநுஷ்டுப் ”
மந்த்ரத்தை அநுஷ்டுப் சந்தஸ்ஸில் உள்ள
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

என்பதான மந்த்ரத்துக்கு ,பதம் பதமாக விவரித்து ஸ்தோத்ரம்
அருளியிருக்கிறார்.
மந்த்ரங்களுக்குள்ளே இது ராஜா .இதில் உள்ள பதினோரு
பதங்களுக்கு விவரம் உள்ள ஸ்தோத்ரம். 32 அக்ஷரங்கள் உள்ள
மந்த்ரம் . 32 ப்ரஹ்ம வித்யைகள் இதில் அடக்கம். 11 பதங்களுக்கு
11 ச்லோகங்கள் . பலச்ருதி ஒரு ச்லோகம் .ஆக 12 ச்லோகங்கள்.
இதில் 11 வது ச்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு சொல்கிறார்.
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் 54 முதல் 56 அத்தியாயங்கள் வரை
இந்த மந்த்ரத்தின் விளக்கத்தைச் சொல்கிறது

15.அதிகாரத்திலிருந்து
———————————–

ஸ்ரீமந் நாராயணன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்

இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் நாராயணன் ஸமாதிக தரித்ரன் என்னுமிடத்தை
1.ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப :
2.பரம் ஹி புண்டரீகாக்ஷாத்பூதம் ந பவிஷ்யதி :
3.ந விஷ்ணோ : பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம :
4.ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸுதேவாத் ப்ரணிபத்ய ஸீததி

5.த்ரைலோக்யே தாத்ருசா : கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே

6.ந தைவம் கேசவாத்பரம்

7.ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்மமயோ மஹாந்
ஈச்வரம் தம் விஜாநீம : ஸ பிதா ஸ ப்ரஜாபதி :–இத்யாதிகளாலே பலபடியும் சொன்னார்கள்

15.வ்யாக்யானம்
———————-

இப்படியாக எல்லா விதங்களிலும் தனக்கு ஒப்பாகவும் ,தனக்கு
மேலாகவும் யாருமே இல்லாதவனாகவும் நாராயணன் இருக்கிறான்
என்பதை இப்போது ப்ரமாணங்களில் பார்க்கலாம்

மஹாபாரதம்

1.ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப :

புருஷச்ரேஷ்டனே ! செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்தவன் எவருமில்லை

மஹாபாரதம்
2.பரம் ஹி புண்டரீகாக்ஷாத்பூதம் ந பவிஷ்யதி :

செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும்
உயர்ந்தவர்கள் இல்லை; இனியும் உண்டாகப் போவதில்லை.
3.ந விஷ்ணோ : பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம :

அரசர்களில் ச்ரேஷ்டனே ! காட்டிலும் உயர்ந்த தேவர் எவருமில்லை

4.ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம்

ந வாஸுதேவாத் ப்ரணிபத்ய ஸீததி

வாஸுதேவனை விடச் சிறந்த மங்களம் யாதுமில்லை ; வாஸுதேவனைக்
காட்டிலும் நமது பாபத்தை அழித்து தூய்மையாக்குபவர் யாருமில்லை;
வாஸுதேவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் யாருமில்லை
வாஸுதேவனைஅடைந்து ஒருவரும் வருத்தமடைகிறதில்லை

5.த்ரைலோக்யே தாத்ருசா : கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே

மூன்று உலகங்களிலும் பகவானுக்கு நிகராக யாரும் இல்லை ;-இனியும் உண்டாகப் போவதில்லை.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணம்
6.ந தைவம் கேசவாத்பரம்

கேசவனை விட உயர்ந்த தெய்வம் வேறு எதுவும் இல்லை

மஹாபாரதம்

7.ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்மமயோ மஹாந்
ஈச்வரம் தம் விஜாநீம : ஸ பிதா ஸ ப்ரஜாபதி :

அனைத்து உயிர்களுக்கும் அரசனைப் போன்றுள்ள ப்ரஹ்மாவுக்கும்
அரசனாக விஷ்ணு இருக்கிறான். அவனே ப்ரஹ்மம்; அவனே மிகவும்
உயர்ந்தவன்;ஆதலால், நாம் அவனை ஈச்வரன் என்று அறிகிறோம்;
அவனே அனைத்துக்கும் தந்தை;அவனே ப்ரஜாபதி–அனைத்தையும் படைப்பவன் அவனே.

16.அதிகாரத்திலிருந்து
———————————–
பகவானுக்கும் பிற தேவதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

கருவிலே திருவுடையார்களாய் ஜாயமான தசையிலே ராஜஸ் தம :
ப்ரசம ஹேதுவான மதுஸுதநனுடைய கடாக்ஷமுடையவர்கள்
முமுக்ஷுக்களாவார்களென்னுமிடமும் , ப்ரஹ்மருத்ர த்ருஷ்டரானவர்கள்
ரஜஸ்தம : பரதந்த்ரராவார்களென்னுமிடமும்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸுதந :
ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞ்ஏயஸ்ஸ வை மோக்ஷர்த்தசிந்தக :
பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர :அதவா புந :
ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் -என்று விபஜிக்கப்பட்டது

இவர்கள் முமுக்ஷுக்களுக்கு அநுபாஸ்யரென்னுமிடமும் ,இவர்களுக்குக்
காரண பூதனான ஸர்வேச்வரனே இவர்களுக்கும் மற்றுமுள்ள
முமுக்ஷுக்களுக்கும் உபாஸ்யரென்னுமிடமும்
ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்–என்றும்
ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம்–என்றும்
ஹரிரேக : ஸதா த்யேயோ பவத்பி : ஸத்த்வ ஸம்ஸ்திதை :
உபாஸ்ய : அயம் ஸதா விப்ரா உபாய : அஸ்மி ஹரே : ஸ்ம்ருதௌ–என்றும் சொல்லப்பட்டது

இத்தாலே இவர்களை மோக்ஷோபகாரகராகச் சொன்னவிடங்களும்
ஆசார்யாதிகளைப் போலே ஞானாதிஹேதுக்களாகையாலே என்றும் நிர்ணிதம் .

இவ்வர்த்தம்
ஸுர்யஸ்யைவ து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த : ப்ரஜாயதே
சங்கரஸ்ய து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த : ப்ரஜாயதே
வாசுதேவஸ்ய யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே–என்கிற இடத்திலும் விவ்க்ஷிதம் .

இப்படி ஸூர்யபக்தாயாதிகள் பரஸ்பரயா பகவத்பக்யாதிகளிலே
மூட்டுவதும் ,பராவர தத்த்வங்களிலே ஏக்யபுத்தியும் ,வ்யத்யயபுத்தியும்
ஸமத்வபுத்தியும் மற்றும் இப்புடைகளிலே வரும் மதிமயக்கங்களும்
ஆஸுரஸ்வபாவத்தாலே ஒரு விஷயத்தில் ப்ரத்வேஷாதிகளுமின்றிக்கே
ஸுர்யாதிகளைப் பற்றுமவர்களுக்கே என்னுமிடத்தை
யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம்
தே வை பாஷாண்டிதோ ஜ்ஞ்ஏயா : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா :–இத்யாதிகளிலே கண்டுகொள்வது

இப்படி ஞானாதிகளில் மாறாட்டம் உடையார்க்கு தேவதாந்தரபக்தி
உண்டேயாகிலும் பகவந் நிக்ரஹத்தாலே ப்ரத்யவாயமே பலிக்கும். ஆகையால்,
த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய
என்கிறபடியே மோஹனஸாஸ்த்ரங்களிலே த்ருஷ்டபல ஸித்தியை
உண்டாக்கினதுவும் அவற்றையிட்டு மோஹிப்பித்து நரகத்திலே விழவிடுகைக்காகவத்தனை

ஸத்யஸங்கல்பனான பகவான் , ஒருவனை நிக்ராஹவனாக்கக் கோலினால்
ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ
வா இந்த்ரோ மஹேந்த்ர : ஸுரநாயகோ வா த்ராதும் ந ஸக்தா யுதி ராமவத்யம்-என்கிறபடியே
தேவதாந்தரங்கள் ரக்ஷிக்க சக்தரல்லர்கள் . ஸர்வதேவதைகளும்
ஸுக்ரீவமஹாராஜாதிகளைப்போலே தனக்கு அந்தரங்கபூதராயிருப்பாரும்
தன்னையடைந்தானொருவனை நலிய நினைத்தால் ஸக்ருதேவ ப்ரபந்நாய-என்கிறபடியே
ஸத்யப்ரதிஜ்ஞநான தன் வ்ரதம் குலையாமைக்காக ராவணாதிகளைப்போலே
துஷ்ப்ரக்ருதிகளாய் நிராகரிக்க வேண்டுவாரை நிராகரித்தும் ,ஸ்ரீவானர
வீரர்களைப்போலே ஸத்ப்ரவ்ருத்திகளாய் அநுகூலிப்பிக்க வேண்டுவாரை
அநுகூலிப்பித்தும் ஸர்வேச்வரன் ரக்ஷிக்கும் .

தேவதாந்தரங்கள் பக்கல்
காங்க்ஷந்த : கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா :
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா-என்கிறபடியே
விஷமது துல்யங்களான க்ஷுத்ரபலன்கள் கடுக ஸித்திக்கும் .
அவை தாமும்
லபதே ச தத : காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ :
மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத :
அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய :ஸமுத்தித :
ப்ரஹ்மானுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத :-இத்யாதிகளிற்படியே பகவத்தீனங்கள் .
யஸ்மாத் பரிமிதம் பலம் ஸாத்விகேஷு து கல்பேஷு
மஹாத்ம்யமாதிதம் ஹரே : தேஷ்வேவ யோக ஸம்ஹித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம்–என்கையாலே அவர்கள் பக்கல் மோக்ஷம் விளம்பித்தும் கிடையாது

ஸர்வேச்வரன் பக்கல் யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
இத்யாதிகளிற்படியே அதிசயிதமான ஐச்வர்யாதிகளும் வரும்.
பின்பு விடாய்த்தீரக் கங்காஸ்நானம் பண்ணப் பாபம் போமாப்போலே
விஷயஸ்வபாவத்தாலே ஆனுஷங்கிககமாகப் பாபக்ஷயம் பிறந்து
ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து ஸத்த்வோந்மேஷமுண்டாய் ஜநக
அம்பரீஷ கேகயாதிகளுக்குப் போலே க்ரமேண மோக்ஷபர்யந்தமாய் விடும்.
மோக்ஷோபாய நிஷ்டனாம்போது

பஹுனாம் ஜன்மநாமந்தே ஞானவாத் மாம் ப்ரபத்யதே |

யே ஜந்மகோடிபி : ஸித்தா :தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி :

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி :
நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே-என்கிறபடியே விளம்பமுண்டு.

மோக்ஷருசி பிறந்து வல்லதோருபாயத்திலே மூண்டால்
தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம்-என்கிறபடியே மோக்ஷஸித்திக்கு விளம்பமில்லை

ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு தான் கோலினதேயளவு , வேறு விளம்பா
விளம்பங்களுக்குக் குறையில்லை . இந்நியமங்களெல்லாம்
ஸ்வாதந்தர்யமைச்வரமபர்யநுயோஜ்யமாஹு : என்கிற நிரங்குச
ஸ்வச்சந்ததையாலே ஸித்தங்களென்று ப்ரமாண பரதந்த்ரருக்கு ஸித்தம் .

இவ்வர்த்தங்கள் இப்படித் தெளியாதார்க்கே தேவதாந்தரங்கள்
ஸேவ்யங்களென்னுமிடம் ப்ரதிபுத்தவர்ஜம் ஸேவ்யந்து என்று வ்யவஸ்தை பண்ணப்பட்டது .

இத்தேவதாந்தரங்களை பகவச் சரீரமென்று அறியாதே பற்றினார்க்குச்
சார்வாகனாயிருப்பான் ஒரு ஸேவகன் ராஜாவினுடம்பிலே
சந்தனாதிகளைப் ப்ரயோகிக்க ராஜ சரீரத்தில் ஆத்மாப்ரீதனமாப்போலே
வஸ்து வ்ருத்தியில் ஸர்வேச்வரனே ஆராத்யனானாலும் ,
யே அப்யந்யதேவதாபக்தா : யஜந்தே ச்ரத்தயா அந்விதா :
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்-என்கிறபடியே சாஸ்த்ரார்த்த வைகல்யமுண்டானபடியாலே அவற்றிற்
சொன்ன பலம் விகலமாம் .

பகவச்சரீரங்களென்றறிந்து க்ஷுத்ர
பலங்களைக் கடுகப்பெறவேணுமென்கிற ராகவிசேஷத்தாலே
அவர்களை உபாஸிப்பார்க்கு அவ்வோ பலங்கள் பூர்ணங்களாம் .

இப்படி அறிந்தால் பகவான் தன்னையே ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தி
என்கிறபடியே பலாந்தரங்களுக்காகவும் பற்றினால் அந்த பலங்கள்
அதிசயிதங்களாம் . அநந்யப்ரயோஜனராய்ப் பற்றினார்க்கும்
சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம் ச்சைவ ஆநுஷங்கிகாந் ததாதி
த்யாயினாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி :
என்கிறபடியே பலாந்தரங்கள் ஆநுஷங்கிகமாக வரும்.
இவ்வர்த்தத்தை ஆநுஷங்க ஸித்தைச்வர்யரான ஸ்ரீ குலசேகரப்
பெருமாளும்
நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல்
என்று அருளிச் செய்தார்.
அபிலஷித துராப யே புரா காமயோகா ஜலதிமிவ ஜலெளதாஸ்தே
விசாந்தி ஸ்வயம் ந :
என்று ஈசாண்டாலும் தாமருளிச் செய்தஸ்தோத்ரத்திலே நிபந்தித்தார் .
இது வித்யாவிசேஷ ராகவிசேஷாதிநியதம் .

16.
வ்யாக்யானம்
————————–

மதுஸூதனனின் கடாக்ஷமானது , ராஜஸ தாமஸ குணங்களை அறுத்துவிடும் .
பாக்யவான் , தாயின் கர்ப்பவாஸத்திலேயே மதுஸூதனனின் கடாக்ஷத்தைப்
பெறுகிறான். –இதுவே ஜாயமான கடாக்ஷம் . இவன் முமுக்ஷுவாகவே இருப்பான்.
பிறக்கிறபோது ப்ரஹ்மன் , ருத்ரன் பார்வையைப் பெற்றவர்கள் ராஜஸ தாமஸ
குணம் உள்ளவர்களாக இருப்பர் .

மஹாபாரதம் சொல்கிறது

ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸுதந :
ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞ்ஏயஸ்ஸ வை மோக்ஷர்த்தசிந்தக :
பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர :அதவா புந :
ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் .

ஒருவன் பிறக்கும்போதே மதுஸூதனன் கடாக்ஷித்தால் அவன் ஸத்வகுணத்துடன்
மோக்ஷத்தைப் பற்றியே எண்ணியபடி இருப்பான். ஆனால்,ப்ரம்மனோ,
ருத்ரனோ பார்த்தால் ராஜஸ, தாமஸ குணங்கள் மேலோங்கி இருக்கும்.

முமுக்ஷுக்கள் –மோக்ஷத்தில் ஆர்வமுடையவர்கள்—ப்ரம்மன் ,ருத்ரன் போன்றோரை
வழிபட அவச்யமில்லை.இவர்களுக்கு எல்லாம் காரணமான நாராயணனையே
இவர்களும் முமுக்ஷுக்களும் உபாஸிக்கவேண்டும் என்பது ப்ரமாணங்களில்
காணலாம்

விஷ்ணுதர்மம்

ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்

ஸம்ஸாரக் கடலில் மூழ்கி உலக விஷயங்களில் அகப்பட்டுள்ள மனம்
படைத்தவர்களுக்கு இந்தக் கடலிலிருந்து கரையேற்றும் ஓடம் விஷ்ணுவைத்
தவிர வேறொன்றில்லை

மஹாபாரதம்

ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம்

நல்லறிவுள்ள முமுக்ஷுக்கள் , ப்ரம்மனையும் சிவனையும் மற்ற தேவர்களையும்
வணங்குவதில்லை; காரணம் ,இவர்கள் அளிக்கும் பலன் மிக அற்பமானதாகும்

ஹரிவம்ஸம்

ஹரிரேக : ஸதா த்யேயோ பவத்பி : ஸத்த்வ ஸம்ஸ்திதை :

சிவன் –சொல்வது-
ஸத்வ குணம் உள்ள அந்தணர்களே ! உங்களால் எப்போதும் த்யானிக்கப்பட
வேண்டியவன், ஸ்ரீ ஹரி ஒருவனே

ஹரிவம்ஸம்

உபாஸ்ய : அயம் ஸதா விப்ரா உபாய : அஸ்மி ஹரே : ஸ்ம்ருதௌ

சிவன் மேலும் சொல்வது —

ஸ்ரீ ஹரி ஒருவனே உபாஸிக்கத்தக்கவன்;அவனைத் த்யானம் செய்வதற்கு
ஏற்ற வழிகாட்டியாக நான் இருக்கிறேன்

ஒரு சில இடங்களில் ப்ரம்மன் ,சிவன் போன்றவர்கள் மோக்ஷத்துக்கான
உபாயங்கள் என்பதைப்போல சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள்
ஆசார்யனைப் போன்று மோக்ஷத்துக்கான ஜ்ஞானத்தை மட்டுமே
அளிக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
இதனை ,இந்த ச்லோகம் சொல்கிறது–

ஸுர்யஸ்யைவ து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த : ப்ரஜாயதே
சங்கரஸ்ய து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த : ப்ரஜாயதே
வாசுதேவஸ்ய யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே

ஒருவன் , ஏழு ஜன்மங்களில் ஸூர்யனிடம் பக்தி செலுத்தினால்,அவன்
ஸூர்யனின் அருளால் ருத்ரனின் பக்தனாகிறான். இவனே ,ஏழு பிறவிகளில்
ருத்ர பக்தனாக நீடித்தால், ருத்ரனின் க்ருபையால் , விஷ்ணுபக்தனாகிறான்.
இப்படி இவனே ஏழு ஜென்மங்களில் விஷ்ணு பக்தனாக இருந்தால்,
வாஸுதேவனின் அருளால் அவனையே அடைகிறான்.

இங்ஙனம் ஸூர்யனிடம் பக்தி முதலியவை ,பகவானை அடைய உதவும்
என்றாலும் இவனுக்கு பகவானின் மேன்மையைப் பற்றிய சந்தேகமோ
பகவானின் தாஸர்களான மற்ற ஜீவாத்மாக்களைப் பற்றிய சந்தேகமோ
இருக்கக்கூடாது. சந்தேகம் எதுவும் இல்லாமல் அவ்வாறு இருந்தாலே,
அவனது பக்தி வாஸுதேவனிடம் இட்டுச் செல்லும்.
சந்தேகங்கள் என்றால் —
பகவானும் இவர்களும் ஒன்றே ;ஜீவாத்மாவே பகவான்;இவையாவும்,
பகவானுக்கு நிகரான மேன்மை உடையவை;இவர்களிடம் அசுரகுணம்
கிடையாது —போன்றவையாகும்
இதைச் சொல்லும் ச்லோகம்

யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம்
தே வை பாஷாண்டிதோ ஜ்ஞ்ஏயா : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா :

புருஷோத்தமனாகிய எம்பெருமானும் மற்ற தேவதைகளும் ஒன்றே என
நினைப்பவர்கள் –பாஷாண்டிகள் –வேஷதாரிகள் என்று உணர வேண்டும்.
அவர்களுக்கு எவ்விதமான கர்மம் இயற்றும் அதிகாரமும் இல்லை என்பதை
அறியவேண்டும்

இப்படி உள்ளவர்கள் ,மற்ற தேவதைகளிடம் அறிவு மயக்கத்தால் ,
பக்திசெலுத்தினால் , பகவானால் தண்டிக்கப்படுவர்; பாவம் செய்தவர்களாவர்
வராஹ புராணம் இப்படிச் சொல்கிறது —–

த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய

நீண்ட கரங்களுடைய ருத்ரனே !நீ , ஜனங்களுக்கு மோஹமுண்டாகும்படி
மக்கள் மயங்கும்படியான சாஸ்த்ரங்களை இயற்றுவாயாக ! அவற்றில் உள்ள
கொஞ்ச ச்ரமத்தை அனுபவித்து,சீக்ரமாகப் பலனடையலாம் என்று காண்பி.

இவைபோன்றவை, மனிதர்களை மயக்கி நரகத்தில் விழவைக்கும் என்பதை
அறியவேண்டும்.

பகவான் ஸத்யஸங்கல்பன் அவன் ஒருவனைத் தண்டிக்கத் தீர்மானித்துவிடில்
அந்த மனிதனை,எந்தத் தேவர்களாலும் காக்க இயலாது.

ஸ்ரீமத் ராமாயணம் –ஸுந்தர காண்டச் ச்லோகம் சொல்கிறது

ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ
வா இந்த்ரோ மஹேந்த்ர : ஸுரநாயகோ வா த்ராதும் ந ஸக்தா யுதி ராமவத்யம்

யுத்தத்தில் ராமனால் ஒருவன் கொல்ல உத்தேசிக்கப்பட்டால் , அவனை,
நான்முகனான ப்ரஹ்மாவாலும் காப்பாற்றமுடியாது.முக்கண்ணனாய்
மூன்று பட்டணங்களை நாசம்செய்த ருத்ரனாலும் காப்பாற்றமுடியாது.
தேவர்களின் அதிபதியான இந்த்ரனாலும் ரக்ஷிக்க முடியாது.

ஆனால், ஒருவன் பகவானிடம் சரணம் என்று வந்துவிடில் ,அந்த மனிதனை
எல்லாத் தேவர்களும் , வானர அரசனான ஸுக்ரீவன்போன்ற நெருங்கிய நண்பரும்
எதிர்த்தாலும், பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான்

ஸ்ரீமத் ராமாயணம் யுத்தகாண்டத்தில் ” ஸக்ருதேவ ப்ரபந்நாய ——”
என்கிறபடியே ஒரு தடவை சரணாகதி செய்தாலும் –என்கிற சொற்களுக்கு
ஏற்ப ஸத்யத்தைக் காக்கவேண்டும்என்கிற உறுதி குலையாமல்
இருக்கவேண்டும் என்பதற்காக சரணம் என்றவரைக் காத்தே தீருவான்.
ராவணன் போன்று அழிக்கப்படவேண்டியவர்களை அழித்தும் , வானரர்கள்
போன்றவர்களிடம் ஹிதமாகப் பேசியும் விபீஷணனைக் காத்தான் அல்லவா !

மற்ற தேவதைகளைப் பூஜிக்கும்போது அற்பமான பலன்கள்விரைவில் கிடைத்துவிடும்;
ஆனால் அவை இனிப்பு மேலே தடவிய விஷம் போன்றவை.
ஸ்ரீமத் பகவத் கீதை —
காங்க்ஷந்த : கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா : |
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ||

மனிதர்கள் பலன் வேண்டுமென்று கோரி தேவதைகளை ஆசையுடன் கர்மாக்களைச்
செய்து பூஜிக்கிறார்கள் . இந்த உலகத்தில் ,இப்படிப்பட்ட தேவதைகளை
பலன் ஸித்திக்க வேண்டுமென்று கர்மாக்களை செய்து பூஜித்தால்
பலன் விரைவில் கிடைக்கிறது.

அந்தத் தேவதைகள் எல்லாமும் , மனிதர்களுக்குப் பலன் அளிக்க , பகவானையே
அண்டியிருக்கின்றன
இதை பார்க்கலாம்
ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–22 )
ஸதயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதந மீஹதே |
லபதே ச தத : காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந் ||

அந்த மனிதன் ச்ரத்தையுடன் அந்தத் தேவதையைப் பூஜிக்கிறான். நானே,அந்தத்
தேவதை மூலமாகப் பலனைக் கொடுக்கிறேன். பலனை என்னிடமிருந்து பெற்று
அந்தத் தேவதை அவனுக்குக் கொடுக்கிறது.

மஹாபாரதம் —
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ :
மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத :
அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய :ஸமுத்தித :
ப்ரஹ்மானுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத :

பகவான் தேவர்களிடம் சொன்னது —
இந்த நான்முகன் ,உங்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும்,பிதாமகனாகவும்
உள்ளான்;எனது கட்டளைக்கு ஏற்ப, எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிப்பான் ;
எனது நெற்றியிலிருந்து தோன்றியவனும் ப்ரம்மனுக்குப் பின்னால்
வந்தவனுமான சிவன்,ப்ரம்மனின் ஆணைக்கு ஏற்ப அனைவருக்கும்
வரங்களை அளிப்பான்.

மஹாபாரதம் —
யஸ்மாத் பரிமிதம் பலம் ——-
ப்ரம்மன் முதலானோர் அளிக்கும் பலன்கள் அற்பமானவை

மத்ஸ்ய புராணம்
ஸாத்விகேஷு து கல்பேஷு மஹாத்ம்யமாதிதம் ஹரே : தேஷ்வேவ யோக ஸம்ஹித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம் —

ஸத்வ குணம் மிகுந்த கல்பங்களில் பகவானுடைய பெருமை அதிகமென்று சொல்வர்.
அவைகளிலேயே மனதை நிறுத்தி சாஸ்த்ரவிஹிதமாக யோகம் செய்பவர்கள் மிக
உயர்ந்த கதியை அடைகின்றனர்.
இதன்மூலமாக எவ்வளவு காலம் ஆனாலும் மற்ற தேவதைகளால் மோக்ஷம்
அளிக்க இயலாது என்பது தெளிவாகிறது.

பகவானைப் பூஜித்தால் அளவற்ற ஐச்வர்யம் கிடைக்கும் என்பதை மஹாபாரதம் சொல்கிறது
யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :—-
ப்ரம்மன், ஆயிரம்கோடி யுகங்கள் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து ப்ரம்ம பதவி
பெற்றான்.
அதன்பின்பாக, தனது தண்ணீர்த் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள கங்கையில்
இறங்கியவனின் பாபம் , மறைமுகமாகக் கழிவதைப்போல ,இவனது பாபங்களும்
கழிகின்றன .அவனது ராஜஸ தாமஸ குணங்கள் மெதுவாக மறைந்து ,ஸத்வ குணம்
வளர்ந்து அந்த மனிதன், ஜநகன் , அம்பரீஷன் , கேகயன் போன்றவர்கர்களைப்போல
மோக்ஷம் பெறுகிறான். ஆனால், இவ்விதமான மோக்ஷம் வர ,தாமதம் ஏற்படலாம்

ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–19 )

பஹுனாம் ஜன்மநாமந்தே ஞானவாந்மாம் ப்ரபத்யதே |
வாஸுதேவா ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப : ||

பலப் பலப் பிறவிகள் எடுத்து ,புண்யம் செய்து செய்து கடைசியில்
”ஸகலமும் வாஸுதேவனே ” என்கிற ஜ்ஞானத்தைப் பெற்று ,என்னையே
சரணம் அடைகிறான் .அத்தகையவன் கிடைத்தற்கு அரியவன்

பௌஷ்கர ஸம்ஹிதை

யே ஜந்மகோடிபி : ஸித்தா :தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி :

பலகோடிப் பிறவிகளில் பகவானிடமிருந்து ஐச்வர்யம் போன்றவற்றைப்
பெற்றவர்களே பக்தி முதலியவற்றில் நிலைத்திருப்பர் .

பாஞ்சராத்ரம்

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி :
நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே

பல்லாயிரம் ஜன்மங்களில் செய்த தபஸ் ,த்யானம் , யோகம் ஆகியவற்றால்
தங்களின் பாபங்கள் யாவும் நீங்கப் பெற்றவர்களுக்கே ,க்ருஷ்ணனிடம்
பக்தி உண்டாகிறது.

ஆனால் மோக்ஷத்தில் மிகுந்த ருசி உண்டாகி சிறந்த உபாயத்தைக் கைக்கொள்ளும்போது
மோக்ஷம் உடனடியாகக் கிட்டுகிறது
கண்ணன் , ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 12–7 )
தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த்த மய்யாவே சித சேதஸாம்

என்னிடம் மனஸ்ஸைச் செலுத்தி, பக்தி செய்பவர்களை ஜனன ,மரணமாகிற
ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்க்கிறேன் —
என்கிறார்

இங்கு ஜநக,அம்பரீஷ கேகயாதிகளைச் சொல்ல வேணும் —

ஜநகன் —–சிறந்த கர்ம யோகி ;ராஜரிஷி;நிமி வம்சம் .பல யாகங்களைச்
செய்திருக்கிறார். ஆத்ம ஜ்ஞானம் நிரம்பியவர். மிதிலையை ஆண்ட போது ,
தினமும் வனத்துக்குச் சென்று யாஜ்ஞவல்க்ய மஹரிஷியிடம் வேதாந்தப்பாடம்
கற்றுக்கொண்டு வந்தார் . பலரிஷிகள் ,சிஷ்யர்கள் கூடவே கற்றனர் .
யாஜ்ஞவல்க்யர் , ஜநகர் வந்தபிறகுதான் பாடம் ஆரம்பிப்பார்.இது ,
சிஷ்யர்களுக்கு எரிச்சலாக இருந்தது.
ஒருநாள்—வேதாந்த பாடம் நடந்துகொண்டிருந்தது.ராஜதூதன் அந்தச்
சமயத்தில் பாடம் நடக்கும் இடத்துக்கு வந்து ”மிதிலா நகரமே தீப்பிடித்துப்
பற்றி யெறிகிறது என்று பதட்டத்துடன் கத்தினான்.
ஸந்யாஸிகள் ,சிஷ்யர்கள் உடனே அரக்கப்பரக்க எழுந்து ஓடினார்கள்.
தாங்கள் தங்கியிருக்கும் மடத்துக்கு ஓடினார்கள்.
ஆசார்யனிடம் எதுவும் சொல்லவில்லை. ஏன் இந்த அவசரம் தெரியுமா ?
பிக்ஷா பாத்ரம் , உலர்த்தியுள்ள வஸ்த்ரங்கள் இவையெல்லாம் தீயில் எரிந்து
சாம்பலாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து ,அவைகளை எடுக்க ஓடினார்கள்.

ஜநகர் , துளிக்கூட அசையவில்லை. யாஜ்ஞவல்க்யருக்கு ஆச்சர்யம் ,.
”ஹே—–ராஜன்-ஆண்டிகள் தங்கள் உடைமை என்று நினைத்து சிலவற்றைப்
பாதுகாக்க ஓடுகிறார்கள். மிதிலா நகரமே உம்முடையது—நீ , ஏன்
ஓடவில்லை –? ” என்று கேட்டார் .
அதற்கு ஜநகர் ,
” ஹே–ஆச்சார்ய—என்னுடைய சொத்துக்கள் அழிவில்லாதது.இவ்வுலக சொத்துக்கள்
என்னுடையதல்ல.மிதிலை தீக்கிரையானாலும் என்னுடையது கொளுத்தப்படவில்லை.
ஆத்மாவை எரிக்கவோ வெட்டவோ, நனைக்கவோ ,உலர்த்தவோ முடியாது.
அனைத்தும் பகவானின் சொத்து. ..” என்கிறார்.திரும்பி வந்த துறவிகளிடம் ,
யாஜ்ஞவல்க்யர் , வேதாந்தபாடம் கேட்கும் உங்களுக்கு தத்வ ஜ்ஞானம்
வரவில்லையே—அரசனைப்போன்று உங்களால் இருக்கமுடியவிலையே —
அரசர் கர்மயோகி மாத்ரமல்ல , ப்ரஹ்மஜ்ஞானி –அதனால்தான் எனக்கு
அவரிடம் பரிவு. ” என்றாராம்.

அம்பரீஷன் —ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது

அம்பரீஷர்–உலகம் முழுவதற்கும் சக்ரவர்த்தி. அதே சமயத்தில்
பகவானிடமும் ,பாகவதர்களிடமும் அசஞ்சலமான பக்திகொண்டவர்.
பற்பல யஜ்ஞங்கள் செய்து பகவானை ஆராதித்தவர்.
க்ரு ஹம் , தாரம்,புத்ரன் ,பந்து,ராஜ்யம் இவைகளை ஒதுக்கி
பகவத் பக்தி கொண்டவர். ஏகாந்த பக்தி. பகவான் இந்த பக்தியைப்
பாராட்டி , ஸ்ரீ ஸுதர்சன சக்ரத்தை இவருக்குப் பாதுகாப்பாக
அளித்திருந்தார்.
ஒரு சமயம்.த்வாதசீ வ்ரதம். உபவாஸம் . உபவாஸம் முடிந்து
பாரணைக்குப் போகும்போது , துர்வாஸ மஹரிஷி வந்தார்.
அவரைப் பாரணைக்கு அம்பரீஷர் அழைத்தார். தீர்த்தமாடிவிட்டு,
வருகிறேன் என்று போன ரிஷி ,ரொம்ப நாழிகை ஆகியும் வரவில்லை.
பாரணை காலம் முடிவதற்குள் ஆசார்யன் அநுமதி பெற்று ,
தீர்த்தத்தை ஸ்வீகரித்துக்கொண்டார் . பாரணை செய்தமாதிரி
ஆகும்.துர்வாஸர் , இதைத் தெரிந்து கோபம் கொண்டு , அதிதி ஸத்காரம்
தெரியாத உன்னை , இந்தப் பேய் அழிக்கும் என்று ஜடாமுடியினின்று
ஒரு கேசத்தை எடுத்து அம்பரீஷன் பேரில் ஏவினார்.பேய் துரத்திற்று.
ஸுதர்சன சக்ரம் வெறுமனே இருப்பாரா— சக்ரத்தாழ்வார் ,
பேய் ரிஷி இருவரையும் துரத்தினார்.
துர்வாஸர் , ஸத்யலோகம் சென்றார்;ப்ரஹ்மா என்னால் உம்மைக்
காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். கைலாஸம் சென்றார்.
ருத்ரனும் என்னால் காப்பாற்ற இயலாது என்று சொல்லிவிட்டார்.
நாங்களும் பகவானுக்கு உட்பட்டவர்கள். பகவானிடம் அடைக்கலம்
என்று சொல்லி அவரிடம் செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
ஸ்ரீ வைகுண்டம் சென்றார்.
பகவானிடம் ப்ரார்த்தித்தார்
பகவான், ”என்னைச் சரணம் என்று அடைந்த என் பக்தர்களுக்கு
நான் வசப்பட்டவன்;அம்பரீஷனிடமே சென்று மன்னிப்புக் கேளும் ”
என்றார்.துர்வாஸர் ,அம்பரீஷனை நமஸ்கரிக்க ,அம்பரீஷன்
ஸ்ரீ ஸுதர்சனரைப் ப்ரார்த்திக்க , துர்வாஸர் ஆபத்திலிருந்து
விடுபட்டார்.

கேகயன் –கேகய நாட்டு அரசன்.பெயர் யுதாஜித் .பரதனுக்கு அம்மான்.
கர்மயோகம் செய்து பரம பக்தராகி,மோக்ஷம் பெற்றார்.
————————————

ப்ரபத்தி செய்துகொண்டவன் , மோக்ஷத்தைத் தாமதிக்க நினைத்தாலோ
மோக்ஷம் வேண்டாம் என்று நினைத்தாலோ அல்லாமல் , மோக்ஷம்
கைகூடாமை என்பதில்லை.இவை ப்ரமாணங்களை ஏற்பவர்களால்
ஒப்புக்கொள்ளப்படும்.இவைபோன்றவை யாராலும் தடுக்க இயலாத
ஈச்வரனின் ஸங்கல்பத்தால் நடைபெறுகின்றன.
ஸ்ரீ வைகுண்டஸ்தவம் (55 ) இப்படிக் கூறுகிறது

ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த்தம்
விச்வம் விபர்யஸிதும் அந்யத் அஸத் ச கர்தும் |
க்ஷாம்யன் ஸ்வபாவநியமம் கிமுதீக்ஷஸே த்வம் ?
ஸ்வாதந்த்ர்யம் ஐச்வரம் அபர்யநு யோஜ்யமாஹு : ||

உரு மாறுவது,தன்மை மாறுவது என்ற வ்யவஸ்தைகளை உடைய
சேதநம், அசேதநம் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கும் வேறாகப்
படைப்பதற்கும் இல்லாமல் செய்யவும் தகுதி உள்ளவராக தேவரீர் ,
இது இது இந்த ஸ்வபாவத்தால் இப்படித்தான் ஆகும் என்கிற
வ்யவஸ்தையை ஏன் எதிர்பார்க்கிறீர் ? பகவானைச் சேர்ந்தவர்களை
அவர் விருப்பப்படி நடத்துவது என்பதை, ஏன் என்று கேட்கமுடியாது
என்று பெரியோர்களும் ,வேதங்களும் சொல்கின்றன.

கல் பெண்ணாவது ,கரிக்கட்டை குழந்தையாவது –இவை
ஸ்வபாவ நியமத்துக்கு மாறுபட்டு பகவானின் ஸ்வாதந்தர்யத்தில் நடந்தது.
பகவானின் ஸ்வாதந்தர்யம் =சிலரை ஸம்ஸார வாசனையே இல்லாமல்
நித்யராக்குவது.ஸம்ஸார பயங்களுக்கு அஞ்சி அடைக்கலம்
அடைந்தவர்களை முக்தர்களாக ஆக்குவது.சிலரை ஸம்ஸாரிகளாகவே
வைத்திருப்பது. பகவானின் ஈச்வரத்தன்மை சுதந்திரமானது.யாராலும்
கேள்வி கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஆழ்ந்த பொருளை அறியாதவர்களே
மற்ற தேவதைகளைப் பூஜிக்கின்றனர்.
தேவதைகளை ஆராதிப்பது—-ப்ரதி புத்தவர்ஜம் –விவேகம் இல்லாதவர்களாலே
மற்ற தேவதைகள் ஆராதிக்கப்படுகின்றனர்

ஒரு சிலர், மற்ற தேவதைகள் யாவும் பகவானுக்குச் சரீரம் என்பதை அறியாமல்
அந்தத் தேவதைகளைப் பூஜிப்பர் . இவர்கள், ஆத்மா என்று ஒன்றுமில்லை ,
உடல் மட்டுமே உண்மையானது என்று கருதுகிற அரச சேவகன் ,தன்னுடைய
அரசனுக்கு, சந்தனம் பூசுதல் போன்றவைகளைச் செய்யும்போது,
அரசனின் ஆத்மா மகிழ்கிறது என்று உணர்வதில்லை.மற்ற தேவதைகளைப்
பூஜிக்கும்போது, அந்தத் தேவதைகளைச் சரீரமாக உடைய பகவானே மகிழ்கிறான் .
ஆனால் இந்தத் தேவதைகள் மூலமாக அடையும் பலன்கள் மிகச் சொற்பமே.
அல்பமானவை;முழுமை இல்லாதவை.

ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–23 )

யே அப்யந்யதேவதாபக்தா : யஜந்தே ச்ரத்தயாந் விதா : |
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் ||

அர்ஜுனா—-யார் யார் வேறு தேவதைகளிடம் பக்திகொண்டு பூஜிக்கிறார்களோ
அவர்களும் முறைதவறி , என்னையே பூஜிக்கிறார்கள்

ஆனாலும் அவர்கள் ஸாஸ்த்ர நெறிகளின்படி செய்யாதவர்கள் .
ஆனால், இப்படிப்பட்ட தேவதைகள் பகவானின் சரீரம் என்று உணர்ந்து
பலன்களை சீக்கிரம் பெறவேண்டும் என்று எண்ணி அத்தேவதைகளின்
பூஜையின் மூலம் பெறப்படும் பலன்கள் மிக உயர்ந்தவை மற்றும் முழுமையானவை

ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–16 )

சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||

அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன்
பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –என்று
நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்

வேறு பலன் எதையும் கோராமல் மோக்ஷத்தை மட்டுமே விரும்பி பகவானை
அடைபவர்களைக் குறித்து
விஷ்ணு தர்மம் சொல்கிறது—

சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம் ச்சைவ ஆநுஷங்கிகாந்
ததாதி த்யாயினாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி :

தன்னைத் த்யானித்தபடி இருப்பவர்களுக்கு ஸ்ரீ ஹரி ,அவர்கள் வேண்டும் மோக்ஷம்
மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான ஆரோக்யம் , செல்வம்,
போகம் யாவையும் அளிக்கிறான் .ஆக , இவர்களுக்கு,இத்தகைய நலன்கள்
அவர்கள் வேண்டாமையிலேயே கிட்டுகிறது.

இத்தகைய செல்வங்கள் கிடைக்கப் பெற்ற குலசேகர ஆழ்வார் ,
பெருமாள் திருமொழியில் ( 5—9 ) கூறுகிறார்.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே , தான் வேண்டும் செல்வம்போல் , மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா ,
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே

ஸ்ரீ குலசேகரர் சேரநாட்டு மன்னர்.
பகவானைமட்டுமே வேண்டுகிறார்
நீ தான்வேண்டும், என்று வேண்டுகிறார் நீள் செல்வம் ==பட்டியலிடும்
செல்வம் வேண்டியதில்லை . அந்தச் செல்வங்கள், அப்போது உன்
கருணையால் ,தன்னைத்தானே வேண்டி அனைத்துச் செல்வங்களும்
தாங்களாகவே விரும்பி வந்து சேரும்.

ஈசாண்டன் —சொல்வது-

அபிலஷித துராப யே புரா காமயோகா
ஜலதிமிவ ஜலெளதாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந :

எந்தச் செல்வங்களெல்லாம் ,முன்பு நாம் விரும்பியபோது
கிடைக்காமல் இருந்தனவோ ,அவை யாவும் , நதிப் பெருக்கம்
தானாகவே கடலில் சென்று சேர்வதைப்போல ,இப்போது , நாம்
எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கும்போது ,நம்மை
அடைகின்றன.

ஆனால், ஒரு கேள்வி வரலாம் —
மோக்ஷம் மட்டுமே விரும்பியோர்க்கு ஏன் மற்ற செல்வங்கள் கிட்டுவதில்லை ?
இதற்கு காரணம், மோக்ஷம் மட்டுமே விரும்பியோர் செய்த , ஒருவகைத் ”த்யானம் ”
அல்லது பழைய ஜன்மங்களில் ஏற்பட்ட விருப்பம் ,அல்லது பின்பற்றிய
ஒருவகை வித்யை —

17. அதிகாரத்திலிருந்து
————————————
பகவானுக்கும் பிற தேவதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்–
ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளில்

இப்படி ஸர்வேச்வரனுக்கும் ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் உண்டான விசேஷங்களை

எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவரல்லாதார் தாமுளரே என்றும்

நான்முகனை நாராயணன் படைத்தான் ,நான்முகனும் தான்முகமாய்ச்
சங்கரனைத்தான் படைத்தான் என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் நாவிக்கமல
முதற்கிழங்கு என்றும் ,
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமஞ்சேர்த்தி அவையே
சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான்
பெருமை என்றும்,
வானவர் தம்மை ஆளுபவனும் நான்முகனும் சடை முடியண்ணலும்
செம்மையானவன் பாதபங்கயம் சிந்தித்தேத்தித் திரிவரே என்றும் ,
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே என்றும்
ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே என்றும்,
எருத்துக் கொடியுடையானும் ,பிரமனும்,இந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை என்றும்
பலமுகங்களாலே அருளிச் செய்தார்கள்

17. வ்யாக்யானம்
——————————–

இப்படியாகப் ப்ரஹ்மா ருத்ரன் முதலானோர்க்கும் பகவானுக்கும் உள்ள
வேறுபாடுகளை, ஆழ்வார்கள்,அருளிச் செய்துள்ளதைப் பார்ப்போம்

பெரிய திருமொழி ( 11–6-2 )

நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து, அன்று
எல்லாரும் அறியாரோ ? எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே ?அவன் அருளே உலகாவது அறியீர்களே !

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் கூறுகிறார்
யுகப்பிரளயம் —எல்லாக் கடல்களும் கொந்தளித்து
நீள்விசும்பின் மீதோடி =ஆகாயத்தையும் தொட்டு அதன்மீது ஓடி,
நிமிர்ந்து நின்ற சமயம் —-பகவான் தன் தடக்கையால் அண்டபகிரண்டம்
எல்லாம் எடுத்து அதை வாயில்வைத்து உண்டு , பிறகு வயிற்றில் வைத்துக்
காத்து ,மறுபடியும் ஸ்ருஷ்டிக்கச் ஸங்கல்பிக்கும்போது ,வெளியே
உமிழ்கிறான். ஆக ,அண்டபகிரண்டம் எல்லாம் அவன் எச்சில்.
இப்படிச் செய்யும் அகடிதகடினா ஸாமர்த்யம் உள்ள தேவர் வேறு யார்
இருக்கிறார்கள் !ஒருவரும் இல்லை.இவ்வுலகங்கள் எல்லாம் அவன் அருள் —

நான்முகன் திருவந்தாதி ( 1 )

நான்முகனை நாராயணன் படைத்தான் , நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்—- யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து

பகவான் ,ப்ரஹ்மாவைப் படைத்தான்; ப்ரஹ்மா தன்னுடையதாகச் சங்கரனைப்
படைத்தான்.அடியேன் ,ஒருமுகமாக இந்த அந்தாதியில் இதைமேலிட்டு
அறிவிக்கிறேன் . ஆழ்ந்த இந்தப் பொருளைச் சிந்தாமல் தேர்ந்து எடுப்பீராக !

திருவாய்மொழி ( 10–10–3 )

கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே

தங்கள் அதிகாரத்தில் விருப்பமுற்று ஆசையுடன் வணங்குகிற பிரமன், சிவன், இந்திரன்
முதலிய தேவர்களுக்கு எல்லாம், நாபியில் இருக்கும் தாமரைப் புஷ்பத்திற்கு
கிழங்கு போன்று உள்ள ஆதி காரணனே ! அதற்கும் மேலான பரமபதத்துக்கும்
கிழங்கு போன்றவனே !என் ஆத்மாவுக்குப் பிடிப்பான,பற்றிக்கொள்ளக் கொம்பாக ,
உன்னைத் தவிர வேறு எவரையும் அறிகிலேன் . எனக்குப் போக்யமான
கருமாணிக்கமே !நீயே வந்து உன் குரலாலே என்னை அழைத்துக் கொள்வாயாக

திருவாய்மொழி ( 2–8–6 )

தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூத்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே

தீர்த்தன் = பரிசுத்தமாக்குகிற கண்ணன்
த்ரிவிக்ரம அவதாரத்திலே உலகம் அனைத்தும் தனதாக்கிக்கொண்ட
செவ்விய திருவடியின் மேலே சேர்க்கப்பட்ட புஷ்பமாலைகள் ,
பிறகு தனக்குத் தர்சனம் அளித்த சிவனார் முடியின்மேல்
இருக்க அர்ஜுனன் கண்டு, மிகவும் திடமாகத் தெளிந்து, சந்தேகம் நீங்கி,
திருத்துழாய் மாலையை அணிந்த பகவானின் ஸர்வேச்வரத் தன்மையை
வேறுபடுத்திப் பேசுவதற்கு வழி இல்லாமல், எந்த விவாதத்துக்கும்
இடமில்லாமல் உணர்ந்தான்.

பிரபந்த ரக்ஷையிலிருந்து —

தீர்த்தன் = பாகவதர்கள் உள்ளத்திலே குடி கொண்டிருக்கிறான்.
பகவானை எப்போதும் தங்களுடைய ஹ்ருதயத்தில் பூஜிக்கிற
பாகவதர்கள் , கங்கை நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள்.
கங்கைநீர் , பகவானும் ஸ்நானம் செய்வதாலே தீர்த்தமாகிறது.
அவை, தீர்த்தங்கள் ; பகவான், தீர்த்தன் .
”தீர்த்தா நா மபி தீர்த்தோஸௌ —-”

தீர்த்தீ குர்வந்தி தீர்த்தாநி ஸ்வாந் தஸ்தேன கதாப்ருதா———
என்று தீர்த்தங்கள் , தீர்த்தன் இவைகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது .

திருவாய்மொழி ( 3–6–4 )

வைம்மின் நும்மனத்தென்றி யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என் ? அதுநிற்க நாடொறும், வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் , சடைமுடி அண்ணலும்
செம்மையால், அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே

உங்கள் மனத்தில் ஸ்திரமாக வையுங்கள் ! என்னால் விரித்து
உரைக்கப்படும் கண்ணனின் ஸௌலப்ய சௌசீல்யாதிகளை ,
என்னைப்போன்ற அநந்ய பக்தர்கள் உரைப்பது எதுவானாலும் உங்களுக்கு அவை, போதாது.
ஆகையால்,அவை அப்படியே இருக்க,ஒவ்வொரு நாளும்
தேவர்கள் யாவரையும் ஆளும் இந்திரனும் ,பிரம்மனும் ,பசுபதியும்
அநந்ய பக்தர்களைப்போல அந்தக் கண்ணனின் –மாயனின்
திருவடித் தாமரைகளைத் த்யானித்து ,ஸ்தோத்தரித்து , நர்த்தித்து ஓடி ஆடுவர் .

திருவாய்மொழி ( 4–10–4 )
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே ,கபாலம் நல் மோக்கத்தில் கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்த அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே

அவரவர்களால் ஈச்வரன் என்று பேசப்படுகிற பரமசிவனுக்கும், அவனுக்கும்
மேலான ப்ரம்மனுக்கும் ,அவர்கட்குக் கீழான தேவர்கட்கும் நாதனாக
இருப்பவன் அகார வாச்யனான நாராயணனே .இதை, சிவன் கபாலத்திலிருந்து
விடுபட்டதன் மூலமாக நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஒளியும் பெருமையும் உள்ள மதிள்களால் சூழப்பட்ட அழகே உருவான
திருக்குருகூர் என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனிடம்
குறைகளைக் கண்டு கோஷிப்பது,அநுமானம் செய்து வாதிடுபவர்களுக்கு
என்ன பயன் அளிக்கும் ? ( ஒரு பயனும் அளிக்காது )

பெரியாழ்வார் திருமொழி ( 4–10–4 )

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே !
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயோ !
அற்றது வாணாள் இவற்கென்றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற
அற்றைக்கு நீயென்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே !

அரங்கத்து அரவணையில் பள்ளிகொண்டவனே !காளை வாகனத்துச் சிவனும்,
பிரம்மனும் அறியாப் பெருமை உடையோனே !எல்லா உலகங்களுக்கும்
நீயே ஆகி, மூன்றெழுத்துக்களால் ஓங்காரமானவனே !எமபட்டார்கள்,
இவனுக்கு ஆயுள் முடிந்தது என்று நினைத்துப் பிடிக்கும்போது அன்று நீ
என்னைக் காத்தருளவேண்டும்.

பெரியாழ்வார் திருமொழி ( 5–3–6 )

எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா ! மறுபிறவி தவிரத்
திருத்தி, உன்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய் !

காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட சிவனும், பிரம்மனும், இந்திரனும்,
ஆகிய யாரும் ஸம்ஸாரம் என்கிற பிறவிப் பிணிக்கு மருந்து அறிந்தவர் அல்லர்

18.அதிகாரத்திலிருந்து
—————————————–
நாராயணனே உயர்ந்த தெய்வம் என்பது ரஹஸ்யத்ரயத்தில் உள்ள இடங்கள்

இப்பரதேவதா பாரமார்த்தம் திருமந்திரத்தில் ப்ரதமாக்ஷரத்திலும் ,
நாராயண சப்தத்திலும் , த்வயத்தில் ஸவிசேஷணங்களான நாராயண
சப்தங்களிலும் ,சரம ச்லோகத்தில் ”மாம் , அஹம் , ” என்கிற சப்தங்களிலும் அநுஸந்தேயம்

18.வ்யாக்யானம்

நாராயணனே உயர்ந்த தெய்வம் என்கிற விஷயமானது,திருமந்திரத்தில்
உள்ள முதல் எழுத்தான ”அ ‘ என்பதிலும்,( ஓம் என்பதில் உள்ள ”அ ” எழுத்து )
நாராயண என்பதிலும் காணலாம்.இதைத் ”த்வய ” மந்திரத்தில் உள்ள
”ஸ்ரீ ” என்பதுடன் கூடிய நாராயண சப்தத்தில் காணலாம். சரம ச்லோகத்தில் ”நான்” என்கிற பதத்தில் காணலாம்.

19. அதிகாரத்திலிருந்து
—————————————
பரதேவதா நிச்யமில்லாதவனுக்கு அநந்ய சரணத்வம் இல்லை

இத்தேவதா விசேஷ நிச்சயமுடையவனுக்கல்லது
”கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே ” என்றும் ,
களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் ” என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் என்றும்
தருதுயரம் தடாயேல் என்கிற திருமொழி முதலானவற்றிலும்
சொல்லும் அநந்ய சரணத்வாவஸ்தை கிடையாது.

19. வ்யாக்யானம்

நாராயணன் மாத்ரமே காக்கவல்லவன் என்கிற நிலையானது
ஆழ்வார் பாசுரங்களில் வெளிப்படுகிறது

திருவாய்மொழி

திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின்மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடனுண்ட , நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே

திண்ணன் = இது திடமானது —–எது ?
வீடுமுதல் முழுதுமாய் =மோக்ஷம் முதலான எல்லாப் புருஷார்த்தங்களுமாக ஆகி ,
எண்ணின் மீதியன் = சிந்தைக்கு மேலான
எம்பெருமான் = எமது ஸ்வாமி
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட = கீழுலகு ,மேலுலகு எல்லாவற்றையும் ஒரேசமயத்தில் உண்டவனான
நம்கண்ணன் =நமக்குப் ப்ரத்யக்ஷமான கண்ணனே நம்மை நிர்வஹிப்பான்
அல்லது இல்லை ஓர் கண்ணே = அவனல்லாது வேறு நிர்வஹிப்பாரில்லை

திருவாய்மொழி

களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப்படையாய் ! குடந்தைக் கிடந்த மாமாயா ! ,
தளராவுடலும் எனது ஆவி சரிந்து போம்போது ,
இளையாது உனதாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

எங்கும் சூழ்ந்து கூர்மையான சக்ரத்தை ஆயுதமாக உடையவனே !
திருக்குடந்தையிலே சயனத்திருக்கோலத்திலே இருக்கும் ஆச்சர்யமான திருமேனி உடையவனே !
நீ , எனது துன்பங்களைப் போக்கினாலும் ,போக்காமலே இருந்தாலும்
துன்பத்தைப் போக்கிக்கொள்ளும் இடம் அடியேனுக்கு வேறொன்றும் இல்லை.
எனது சரீரம் தளர்ந்து, அதிலுள்ள என் ப்ராணன் நிலைகுலைந்து போகும்போது,
நான் மேலும் பலவீனமாகாமல் உடனே உன் திருவடிகளை உறுதியாகப்
பிடித்திருக்கும்படி நீயே அருள வேணும் ( இசைய வேணும் ) என்கிறார்

திருவாய்மொழி ( 10–=10–3 )

திருவாய்மொழி ( 10–10–3 )

கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே

தங்கள் அதிகாரத்தில் விருப்பமுற்று ஆசையுடன் வணங்குகிற பிரமன், சிவன், இந்திரன்
முதலிய தேவர்களுக்கு எல்லாம், நாபியில் இருக்கும் தாமரைப் புஷ்பத்திற்கு
கிழங்கு போன்று உள்ள ஆதி காரணனே ! அதற்கும் மேலான பரமபதத்துக்கும்
கிழங்கு போன்றவனே !என் ஆத்மாவுக்குப் பிடிப்பான,பற்றிக்கொள்ளக் கொம்பாக ,
உன்னைத் தவிர வேறு எவரையும் அறிகிலேன் . எனக்குப் போக்யமான
கருமாணிக்கமே !நீயே வந்து உன் குரலாலே என்னை அழைத்துக் கொள்வாயாக

பெருமாள் திருமொழி

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரை குழுவு மலர்பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே !
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் , மற்றவள்தன்
அருள் நினைந்தேயழும் குழவியதுவே போன்றிருந்தேனே

என் கர்மாக்களுக்கு ஏற்றபடி எனக்கு ஏற்படும் துன்பங்களைத் தடுக்க ,
உன் திருவடி சரணம் என்பதைத் தவிர வேறு சரண் இல்லை.
பகவானே சரணம், அவன்தான் ரக்ஷகன், பகவானைத் தவிர வேறு ரக்ஷணம்
கிடையாது, என்கிற விஷயத்தை,ஸ்ரீ குலசேகரர் இப்பாசுரத்தில் சொல்கிறார்.
தான்பெற்ற குழந்தையைத் தாயானவள் கோபத்தால் உதைத்துத் தள்ளினாலும்
அந்தக் குழந்தை, தாயின் காலையே பிடித்துக்கொண்டு அழுவதைப்போல ,
நீ, எனக்குப் பலதுன்பங்களைக் கொடுத்து விரட்டினாலும் ,உன் திருவடியையே
பிடிப்பேன். எனக்கு வேறு உபாயம் இல்லை என்பதை இப்பாசுரத்தின் மூலம் சொல்கிறார்.

இது மாத்திரமல்ல—ஆழ்வார் , இதைப்போன்றுப் பல உதாரணங்களை
இத்திருமொழிப் பாசுரங்களில் சொல்கிறார்
1. பத்தினிப் பெண், தனக்குப் பிரியனான கணவன் ,தன்னைக் கண்டவர்கள்
இகழும்படி அடித்து, உதைத்துத் தள்ளினாலும், அவள், அவனைஅன்றி , மற்றோருவனைச் சரணம் என நினைக்கமாட்டாள்.
2. நாட்டில், அரசன், எவ்வளவு கொடுமை செய்தாலும் , குடிமக்கள்,அரசனின் நன்மையையே விரும்புவர்.
3.கட்டி முதலியவற்றை,வைத்யன் , கத்தியால் அறுத்தாலும் , நோயாளி வைத்யனிடம் அன்பு செலுத்துவான்
4.நங்கூரம் ஆகியிருந்த பெரியகப்பலின் உயர்ந்த கம்பத்தில் உட்கார்ந்த காகம்
கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்குச் சென்றதை அறியாமல், அப்போது,அங்கிருந்து
கரைசேரக்கருதி நான்குபுறமும் பறந்து சென்று கரையைக் காணாமல்,
மீண்டும் கப்பலின் கொடிக்கம்பத்துக்கு வருகிறது.
5. மிக மென்மையானது தாமரை புஷ்பம். ஆனால்,ஸுர்யனோ மிகுந்த வெப்பம்
உள்ளவன் . உதிக்கும்போது உஷ்ணத்தை அள்ளிவீசிக்கொண்டே உதிக்கிறான் .
தண்ணீரின்மேல் கூம்பி இருக்கும் தாமரை , இப்போது மலர்கிறது.குளிர்ந்த
கிரணங்களை உடைய சந்த்ரனைக் கண்டால் மலர்வதில்லை.
6.ஆகாயத்தில் மேகமே இல்லாமல் மழைபெய்யத்து இருந்தாலும்
பூமியில் உள்ள பயிர்கள்,ஆகாயத்தில் கருத்த மேகங்களை எதிர்பார்த்திருக்கும்.
7.நதிகள், பெரியன—சிறியன —எல்லாம், ஸமுத்ரத்தில்தான் சேரும் .
8. செல்வத்துக்கு ஒரு இயல்பு. தன்னை விரும்பாமல் பகவானையே பெறவிரும்பி
இருப்பானை, செல்வம் விரும்பும்.செல்வம் தன்னை வேண்டாதவனை விரும்பும்.
அடியேனும்,என்னை விரும்பாத உன்னையே அண்டி நிற்கிறேன்

இதுவே ”அநந்ய சரணத்வா அவஸ்தை ” என்பது. அதாவது, பரதேவதா விச்வாஸம்
வேண்டும்;பரதேவதை நாராயணன் என்கிற உறுதி வேண்டும்.

20 அதிகாரத்திலிருந்து

பகவத் சேஷத்வம்–தேவதாந்த்ர த்யாகம்

இந்தப் பரதேவதா பாரமார்த்தத்தைத் திருமந்த்ரத்திலே கண்டு ததீய
பர்யந்தமாக தேவதாந்த்ரத் த்யாகமும் ததீய பர்யந்தமாக பகவச்சேஷத்வமும்
ப்ரதிஷ்ட்திமானபடியை மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை என்கிற பாட்டிலே
ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்தக்ரஹணம் பண்ணின ஆழ்வாரருளிச்செய்தார் .

இவர் ”பாருருவி நீரெரிகால் ” என்கிற பாட்டிலே பரிசேஷ க்ரமத்தாலே விவாதவிஷயமான
மூவரை நிறுத்தி, அவர்கள் மூவரிலும் ப்ரமாநு ணானுஸந்தாநத்தாலே இருவரைக்
கழித்துப் பரிசேஷித்த பரஞ்ஜ்யோதிஸ்ஸான ஒருவனை ”முகிலுருவம்
என் அடிகளுருவம் ” என்று நிஷ்கர்ஷித்தார் . இந்த ரூபவிசேஷத்தையுடைய பரமபுருஷனே
ஸர்வவேத ப்ரதிபாத்யமான பரதத்த்வமென்னும் இடத்தை ஸர்வவேத ஸார பூத ப்ரணவ
ப்ரதி பாத்யதையாலே ”மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை
உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் –” என்று பெரியாழ்வார்
அருளிச் செய்தார்.

20. வ்யாக்யானம்

இதில் ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் —
என்று திருமங்கை ஆழ்வாரைச் சிறப்பித்துக் கூறுகிறார், ஸ்வாமி தேசிகன்.
ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம்—என்றால் என்ன ?
ஆழ்வார், எம்பெருமானிடமிருந்து ஸகல அர்த்தங்களையும் க்ரஹித்தார் ;அறிந்தார்;
பெற்றுக்கொண்டார் . பகவானே இந்த ஆழ்வாருக்கு ஆசார்யனாக இருந்து
ஸகல அர்த்தங்களையும் உபதேசித்தார். இது மஹாபாக்யம் .

திருவாலி க்ஷேத்ரத்துக்கு அருகே ,பகவான் பிராட்டியோடு விவாஹக்கோலத்தோடு
எழுந்தருள்கிறார். ஆழ்வாரைப் பணிகொள்ள இப்படி ஒரு சந்தர்ப்பத்தைஏற்படுத்திக்கொள்கிறார்.
பகவத் ஆராதனத்துக்குப் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்ட ஆழ்வார்,
வழியில் பதுங்கி இருக்கிறார் ;இரவு நேரம்;கல்யாண கோலத்தில் வரும் பகவானையும்
பிராட்டியையும் –சாதாரண மநுஷ்யர்கள் என்று எண்ணி வாளைக்காட்டி ,
அவர்களைத் தடுத்து நிறுத்தி ,மிரட்டி எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொள்கிறார்.
கடைசியில் பகவானின் திருவடி விரலில் அணிந்திருந்த ”பீலி ” என்கிற மோதிரத்தைப்
பறிக்க முயற்சிக்கிறார். மோதிரத்தைக் கரத்தால் கழட்ட முடியவில்லை. தன்னுடைய
வாயால், எம்பெருமானின் திருவடி விரலில் உள்ள மோதிரத்தைக் கவ்வி இழுக்கிறார்.
அப்போது, எம்பெருமான், ஆழ்வார் முன்பாகப் ப்ரஸந்நமாகிறார் .
திருமந்த்ரம் —–அதன் அர்த்தம்——–இவற்றை ஆழ்வாருக்கு உபதேசிக்கிறார்.
லௌகீகமான திருவாபரணம் முதலான அர்த்தங்களையும் ( -பொருள்—செல்வம் )
திருமந்த்ரமான வைதீக அர்த்தங்களையும் எம்பெருமான் பக்கலிலே இருந்து
க்ரஹிக்கிறார் –இதுவே ”பரதேவதா பாரமார்த்யத்தைத் திருமந்திரத்தில் கண்டு ”

ததீய பர்யந்தமாக தேவதாந்தர த்யாகம்

ததீய பர்யந்தம் =எம்பெருமானைப் பற்றுவது அவனை அர்ச்சிப்பது ; அவனின்
அடியார்களைப் பற்றுவது.
இதற்கு விரோதமாக இருக்கும் –தேவதாந்தரத்தைத் தியாகம் செய்வது—
தேவதாந்தரம்—மற்ற தேவதைகள் –பிரம்மா, ருத்ரன் ,இந்த்ரன் போன்றவர்கள்
இவற்றை நாடாமல் இருப்பது.இவர்களுடைய பக்தர்களையும் நாடாமலிருப்பது
இது, ததீய பர்யந்தமாக தேவதாந்த்ர த்யாகம் .
ததீய பர்யந்தமாக பகவத் சேஷத்வம்—–எம்பெருமானைப் பற்றுவது;அவன்
அடியார்களைப் பற்றுவது.

———————————————————–

பகவானிடமிருந்து ,நேரிடையாகவே உபதேசம் பெற்ற திருமங்கை ஆழ்வார்,
பகவானைப் உண்மையைத் ”திருமந்திரம் ” மூலம் உணர்ந்தார்.இவர், மற்ற தேவதைகளை
விட்டுவிட்டு,பகவானுக்கு மட்டுமே அடிமை என்கிற நிலையை அடைந்தார்.
பெரியதிருமொழியில்
மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் , உற்றதும் உன்னடியார்க்கடிமை ,
மற்றெல்லாம் பேசினும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ணபுரத்துறையம்மானே

ஹே –கண்ணபுரத்து அம்மானே ! உன்னைத் தவிர உபாஸிக்க வேறு தெய்வம்
இருக்கிறதென்று எண்ணுகிறவர்களுடன் நான் சேரமாட்டேன்.நான் விரும்பி
ஏற்றுக்கொண்டதும், உன் அடியார்களுக்கு அடிமையாய் இருப்பதே.

இதே ஆழ்வார், திருநெடுந்தாண்டகத்தில் கூறுகிறார் :–

பாரருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற நீ
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஒருவரும் பொன்னுருவம் ஒன்று செந்தி ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே

மூன்று தெய்வமே முக்கியம் எனப்படும் பிரமன், சிவன், விஷ்ணு இவர்களில்,
பிரமன் திருமேனி பொன் போன்றதென்றும், சிவனின் திருமேனி
சிவந்த நெருப்பு போன்றதென்றும் விஷ்ணுவின் திருமேனி
பெரிய கருங்கடல் போன்றதென்றும், சொல்வர். இவைகளைப்
ப்ரமாணங்களைக் கொண்டு ஆராயும்போது, பஞ்சபூதங்களையும் , பல
வரையறைகளை உடைய உலகைப் படைத்து, அதனுள் அந்தர்யாமியாய்
நிற்கும் பரஞ்ஜோதி என ஓதப்படும் ஸ்ரீமந் நாராயணனின் திருமேனிகாளமேகம் போல் இருக்கும்.

பெரியாழ்வார் கூறுகிறார்

மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினை உள்ளெழவாங்கி
காலுங்கையும் விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன் முன்னம்
”மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே

வேதங்களுக்கு மூலமான ஒரு எழுத்தான ப்ரணவத்தை ,மூன்று
மாத்ரையுடன் ஒருவருக்கும் காதில் கேட்காதபடி சொல்லி,கடல்வண்ணனான
பகவானைப் ப்ரீதியுடன் த்யானித்தால் பரமபதம் ஏகலாம்

மூலமாகிய ஒற்றை எழுத்தை —-”ஓம் ”—-
இது ப்ரணவம்.இதில் மூன்று எழுத்துக்கள் . ”அ , உ , ம ” எழுத்துக்கள்.
மஹரிஷிகள் ,ரிக் வேதத்தை ,புத்தியாகிய மத்தால் கடைந்தார்கள் .
எட்டு அக்ஷரங்கள் கிடைத்தன.இதைப்போலக் கடைந்தபோது,யஜுர்
வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களும், ஸாம வேதத்திலிருந்து
எட்டு அக்ஷரங்களும் கிடைத்தன. 3 x 8 =24 எழுத்துக்கள் .இதுவே
காயத்ரி மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்
ரிக்வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து, ”பூ ”—இதிலிருந்து ”அ ”காரம்
யஜுர் வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”புவ :”. இதிலிருந்து ”உ ”காரம்
ஸாம வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”ஸுவ : ”.இதிலிருந்து ”ம ”காரம்
இந்த மூன்று அக்ஷரங்களையும் இன்னும் சுருக்கி ஒன்றாக்கினார்கள் —
”இப்பத்து,ஓம் ” காரம் பிறந்தது.

இது ப்ரணவம். வேதமூலம் ; வேதஸாரம் ஒற்றை எழுத்து.
கண்ணுறக்கம் ஆவதன் முன்னம் =மரணம் நெருங்குவதற்கு முன்பாக
கண்ணுறக்கம் =மரணம் ; மீண்டும் உயிர் பெற இயலாத உறக்கம்
இந்த உடல் அவ்வளவுதான்
மூன்று மாத்ரை = கண் இமைக்கும் நேரம் ;நொடிப்பொழுது.
மாத்ரை என்கிற கால அளவு .
உரக்கச் சொல்லாமல் உச்சரிக்கவேண்டும்.
ப்ரணவத்தை உச்சரிக்கும்போது ”ம் ” என்கிற எழுத்து வருகிறதே ,
அது சேர்க்காமல்,மூன்று மாத்ரை
ஓ ———ம் என்று உச்சரிக்கும்போது ”ம் ” என்கிற எழுத்து
உதட்டை இணைப்பதால் வெளியே அவ்வளவாக சப்தம் கேட்காது.
இப்படி உச்சரித்து கடல்நிறவண்ணனை உபாஸிக்கவேண்டும்.
இவன் பெரியபிராட்டியாருடன் இருப்பவன்.ஸ்ரீ ய :பதி. இவன்தான்
பரமபுருஷன்.பரதேவதை. இப்படித் திவ்ய தம்பதியரே அனைத்துமாக உள்ளனர்

21. அதிகாரத்திலிருந்து
————————————–

அனைத்தும் திவ்யதம்பதியர்

தைத்திரீயத்தில் ஸ்ரீய: பதித்வ சிஹ்நத்தாலே மஹாபுருஷனுக்கு வ்யாவ்ருத்தி
ஓதினபடியே நினைத்துத் ” திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் ”
என்று உபக்ரமித்துச் ” சார்வு நமக்கு ” என்கிற பாட்டிலே ப்ரதிபுத்தரான
நமக்குப் பெரிய பிராட்டியாருடனே இருந்து என்றும் ஒக்கப் பரிமாறுகிற
இவனையொழிய ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமுமில்லை .
இத்தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும் என்று நிகமிக்கப்பட்டது .

இவ்வர்த்தத்தை தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்
புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி என்று புலஸ்த்ய வஸிஷ்ட
வரப்ரஸாதத்தாலே பரதேவதா பாரமார்த்ய ஞானமுடையனாய் ,
பெரியமுதலியார் தஸ்மை நமோ முநிவராய பராசராய என்று
ஆதரிக்கும்படியான ஸ்ரீ பராசரப்ரஹ்மர்ஷி பரக்கத் பேசி தேவ திர்யங்
மநுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி : ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய
நாநயோர்வித்யதே பரம் என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு உபதேசித்தான்.

இத்தை மயர்வற மதிநலமருளப் பெற்று ஆத்யஸ்ய ந : குலபதே : என்கிறபடியே
ப்ரபந்நஸந்தாந கூடஸ்தரான நம்மாழ்வாரும் ”ஒண்டொடியாள் திருமகளும்
நீயுமே நிற்பக்கண்ட சதிர்கண்டு ” என்று அருளிச் செய்தார்.
இவ்விஷயத்தில் வக்த்வ்யமெல்லாம் சது :ச்லோகீ வ்யாக்யானத்திலே
பரபக்ஷ ப்ரதிசேஷப்பூர்வகமாகப் பரக்கச் சொன்னோம். அங்கு கண்டுகொள்வது .

21. வ்யாக்யானம்

தைத்திரீய உபநிஷத்தில் நாராயண அநுவாகத்தில் சொல்லியிருப்பது–
குறைவில்லா வீர்யமுடைய பூமிப்பிராட்டியும், எல்லா லக்ஷணங்களும்
உடையவளும் அனைவராலும் ஆச்ரயிக்கத் தக்கவளுமான பெரியபிராட்டியும்
அனைவரையும் காப்பது என்கிற யாகத்துக்குத் தீக்ஷிதனான உனக்கு
கூடவே இருந்து உதவுவதில் அவர்களும் தீக்ஷிதர்களாக உள்ளனர்.
இந்த அநுவாகம் ஸ்ரீ ய : பதியே உயர்ந்த தத்வம் என்று கோஷிக்கிறது.

மூன்றாம் திருவந்தாதி —பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் , திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் —-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

மஹாலக்ஷ்மியைக் கண்டேன்; ஸ்வர்ணம் போன்ற அழகியத் திருமேனி கண்டேன்;
பகவானைக் கண்டேன்; சக்ரம் சங்கமும் கண்டேன்
என்றெல்லாம், திருக்கோயிலூர் தேஹளீசனைத் தர்ஸித்துப் பாடுகிறார்.

இப்படித் தொடங்கியவர்,
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் , தண்துழாய்த்
தார்வாழ்வரைமார்பன் தான் முயங்கும் —காரார்ந்த
வானமருமின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு .-என்று முடிக்கிறார்.

சக்கரக்கையன்; துழாய்மாலை அணிந்த மலைபோன்ற திருமார்பை
உடையவன்;இவன் எம்பெருமான். இவனே மோஹித்து ,அதனால்
எப்போதும் கூடவே இருப்பவளாய் ஆகாசத்தில் நிலைத்து நிற்கும்
மின்னலைப் போன்றுள்ளவளாய் ,பங்கஜநேத்ரமுள்ளவளாய் ,
தேன் நிறைந்த தாமரைப் புஷ்பத்தில் வசிப்பவளாய் உள்ள
பெரியபிராட்டியார் நமக்கு இலக்கும் சரணமும் ஆவார் .

இந்த மிக உசந்ததான தத்வத்தை ஸ்ரீ பராசர மஹரிஷி , தன்னுடைய சிஷ்யனுக்கு உபதேசித்தார்.
தேவ திர்யங் மநுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி : ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய நாநயோர்வித்யதே பரம்”

மைத்ரேயரே—தேவர்கள், மிருகங்கள், மனிதர்கள், இப்படியாக உள்ள
பலவற்றில் ஆண்வர்க்கம் எல்லாமும் எம்பெருமானுக்கும்
பெண்வர்க்கம் எல்லாமும் மஹாலக்ஷ்மிக்கும் அடங்கியவை.
என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு( மைத்ரேயனுக்கு )
சொன்னார்.இந்த ரஹஸ்யம் , யாவும் , புலஸ்த்யர் ,வசிஷ்டர் மூலமாக இவர் அடைந்தார்.

விஷ்ணு புராணம்
தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்

புலஸ்த்யர் , பராசரருக்குச் சொன்னது—-
பரதேவதையைப் பற்றியா உண்மையை நீ தெரிந்துகொள்

வசிஷ்டர், பராசரருக்குச் சொன்னது—
புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி
புலஸ்த்யர் உனக்கு உபதேஸித்தது எல்லாமே உனக்குக் கைகூடும்

ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில்
தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ போகாபவர்க ததுபாயகதீருதார :
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய

எந்த மஹரிஷி , சித் , அசித் , ஈச்வரன் , இம்மூன்றின் தன்மைகள்,
இவற்றின் அநுபவங்களான கைவல்ய,ஐச்வர்ய,புருஷார்த்தம் ,
மோக்ஷம் , இவற்றுக்கான உபாயம், இவற்றையெல்லாம் தெளிவாகச்
சொல்லும் புராண ரத்னத்தை இயற்றினாரோ அந்த பராசரருக்கு வந்தனம் —என்கிறார்

நமக்கு லக்ஷ்யமாக , நாம் சரணம் அடையுமிடமாக ,பகவானுடன் சேர்ந்து
பெரியபிராட்டியும் இருக்கிறாள் என்பதை,ப்ரபத்தி பரம்பரையில்
முதலாவதாக உள்ளவரும் பகவானிடம் இருந்து தடுமாற்றமில்லாத
ஞானத்தைப் பெற்றவருமான நம்மாழ்வார், திருவாய்மொழியில் சொல்கிறார்

கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் ,
உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக்
கைங்கர்யம் செய்யும்படியான –இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாக்ஷாத்கரித்தேன்

ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான
ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் ) இன்பத்தை
அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால்
மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து, அவை அற்பமாய் துயரமாகவே
இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப்
பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும்,
அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

22. அதிகாரத்திலிருந்து

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறைகுலையைச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித்தனியே
ஆதி எனாவகை ஆரணதேசிகர் சாற்றினார் —நம்
போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே

ஜநபத புவநாதி ஸ்தாந் ஜைத்ராஸநஸ்தேஷு
அநுகத நிஜவார்த்தம் நச்சரேஷு ஈச்வரேஷு
பரிசித் நிகமாந்த : பச்யதி ஸ்ரீ ஸஹாயம்
ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்துரேக :


வ்யாக்யானம்

தவறான வாதம் செய்பவர்கள் தங்களுடைய தர்க்கம் செய்யும் திறமை
காரணமாக முயற்சி செய்தது யாதெனில்,
வேதங்கள் நடுங்கும்படியாக, பகவானின் அடியவர்கள் நடுங்கும்படியாக
அவரவர் எண்ணப்படி பிரம்மன் ,சிவன் முதலானோர் தாம் இவ்வுலகின் காரணம்
என்று கூறத் தொடங்கினர் . ஆனால், அவர்கள் அவ்விதம் கூற இயலாதபடி
வேதாந்த ஸாஸ்த்ர நிபுணர்களான நமது ஆசார்யர்கள் , தாமரை மலரில்
அமர்ந்துள்ள பெரியபிராட்டியின் நாயகனான ஆதி புருஷனான
நாராயணனே இவ்வுலகின் காரணம் என்பதை நிரூபித்தனர்

கர்மவசப்பட்ட உலகில், ஞானம் முழுமையாக இல்லாத உலகில்,
ஜயம் மற்றும் சுகம் இவை சூசகங்களாக உள்ள சிம்மாசனத்தில்
அமர்ந்த ஈச்வரர்கள் தங்களுடைய கதைகளும் தங்களுடன்
நாசமடையும்படி போகும்போது , வேதாந்தங்களை அடிக்கடி
படிக்கிற ஒரு ப்ராணி , ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷகனாக அறிகிறான்

அதிகாரம் 6—–பரதேவதாபாரமார்த்த்யாதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: