ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6-

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

——-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் -ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும் ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப்பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ -பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்யதம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்குபோல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ச்லோகத்தில், ஆதிகுருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்
வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ச்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்த வர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ராவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே

ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –
குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூத்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத்துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால்
பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர்.
குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து,
மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்து கொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.
அவரோ,கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.

மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது,
ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
அதாவது,
சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து,
தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது,
ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,
ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது .
இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப் பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,
அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,
திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.

அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்து போன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள் ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள்
எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .
ஸ்ரீ நம்மாழ்வார் அருள் செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய
மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.
புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு
உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால்,
மணக்கால் நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம்.
மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல
அன்று முதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,
ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி,
கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு விளையாடி,
இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும்
யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் ,
யமுனைக்குக் கருணை செய்ததைப் போல,
ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச் சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் -பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .
இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி,
பொய் என்றும் சொல்லி ,அழுக்கை ஏற்றிவிட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற
வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,உண்மையான ரூப கல்யாண குண விசேஷங்களை உடைய
பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

யதிராஜ ஸப்ததி

யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்; அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள் இதுவே, யதிராஜ ஸப்ததி
ஸப்ததி—-எழுபது என்று சொன்னாலும், 74 ச்லோகங்கள் அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிச் ச்லோகம் இயற்றத் தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ உடையவர் 74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து,
விசிஷ்டாத்வைதத்தை வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள் இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !

ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

நபஸ்ய மாசி ஸிஸ்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம் |
ஸ்ரீவேங்கடேச கண்டாம்சம் வேதாந்தகுரு மாஸ்ரயே ||

ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||- ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர் .

தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||–ஸ்ரீ பெரிய நம்பிகள்

விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||–ஸ்ரீ ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்

அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ மணக்கால் நம்பி

நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||–ஸ்ரீ உய்யக்கொண்டார்

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||– ஸ்ரீமந்நாதமுநிகள்

யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ நம்மாழ்வார்

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||–ஸ்ரீ விஷ்வக்ஸேநர் .

ஸஹ தர்மசரீம் சௌரே : ஸம்மந்த்ரித ஜகத்திதாம் |
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத நிக்ரஹாம் ||–10. ஸ்ரீ பெரிய பிராட்டி –ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

கமபி ஆத்யம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதிநம் |
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய : ஸ்வயம் || ஸ்ரீ பகவான்-ஸ்ரீமன் நாராயணன்–ஆதிகுரு . .

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: