ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—

பாடம் -22
அத்யாயம் -9-ஊகம்
•ஏழாவது அத்யாயத்தில் அதிதேசம் பொதுவாக சொல்லப்பட்டு, எட்டாவது அத்யாயத்தில்
அதி தேசத்தைப் பற்றின சில சிறப்பு விசாரங்கள் செய்யப் பட்டன.
•அதற்கு அடுத்ததாக, ஒன்பதாவது அத்யாயத்தில், ஊஹம் என்பது ஆராயப் படுகிறது.
• ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப் பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறு ஒன்றைக் குறித்து
செய்யப் படுதலுக்கு ஊஹம் என்று பெயர்.
• ப்ரக்ருதி யாகத்திலிருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அந்த அங்கம்
விக்ருதியில் வேறே ஒரு பொருளைக் குறித்தும் செய்யப் படலாம். இதற்கு ஊஹம் என்று பெயர்.
•இதுமூன்று சைகைப்படும்
•(1) ஸம்ஸ் காரத்தின் ஊஹம்
•(2) மந்த்ரத்தின் ஊஹம்
•(3) ஸாமத்தின் ஊஹம்

ஸம்ஸ்கார ஊகம்
தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஒரு யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
ஸௌர்ய யாகம் என்று எட்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.
• தர்சபூர்ணமாஸத்தில் ’ நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ’ என்று ஒரு கட்டளை உள்ளது. இந்தக்
கட்டளையில் ப்ரோக்ஷணம் என்ற செயல் எதைக் குறித்து விதிக்கப் படுகிறது, அதாவது,
ப்ரோக்ஷணத்தின் குறிக்கோள் என்ன என்று ஆராய வேண்டும்.
• ப்ரோக்ஷணம் என்பது நெல் உண்டாவதற்காக என்று சொல்ல இயலாது, ப்ரோக்ஷணம்
இல்லாமல் நெல் உண்டாகிற படியால். ஆகவே , ப்ரோ க்ஷணம் என்பது நெல்லில் ஒரு
தகுதியை ஏற்படுத்துவதற்காக என்று கொள்ள வேண்டும்.
• தகுதி ஏற்படுவதாவது – “ப்ரோக்ஷிக்கப் பட்ட நெல்லைக் கொண்டு புரோடாசத்தை சமைத்து
யாகம் செய்தால் தான் அந்த யாகத்திலிருந்து பயன் கிடைக்கும்,இல்லை என்றால் வெறும் நெல்லால்
புரோடாசத்தைச் செய்து யாகம் செய்தால் பயன் கிடைக்காது” என்பது தான்.
• அந்தத் தகுதி ஒரு வகையான அபூர்வம் / அத்ருஷ் டம் / புண்ணியம். ப்ரோக்ஷணம்
செய்வதால் நெல்லில் ஒரு அபூர்வம் உண்டாகிறது.
அது இருந்தால் தான் அந்த நெல்லால் செய்யப்பட யாகத்துக்கு பலன் கிடைக்கும்.

• ஆகவே , ப்ரோக்ஷணம் என்பது நெல் நெல்லாக ஆவதற்காக அல்ல. யாகத்தில்
பயன் படக்கூடிய த்ரவ்யமாக நெல்லை ஆக்குவதற்காகத் தான்.
ஆகையால், “நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ” என்ற கட்டளைக்கு உண்மையான பொருள் “அரிசி
உண்டாக்குவதன் மூலம் எந்த பொருள் யாகத்துக்கு உதவுகிறதோ , அந்த ப்ரோக்ஷணம்
செய்ய வேண்டும்” என்பதுதான். அது நெல்லா மற்ற ஓன்றா என்பது முக்கியம் அல்ல.
• இப்படி இருக்கிற படியால், இந்த ப்ரோக்ஷணம் என்கிற ஸம்ஸ்காரத்தை ஒரு விக்ருதி
யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அங்கு நெல் இல்லாமல் வேறே ஓரு
தான்யத்தால் ஹவிஸ் செய்யப்படவிருந்தாலும் அந்த தாந்யத்துக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
•ப்ரக்ருதியில் நெல்லுக்கு செய்யப்பட்ட ஸம்ஸ்காரம் விக்ருதியில் ச்யாமாகம் முதலான
த்ரவ்யங்களுக்குச் செய்யப்படுகிறடியால் இது ஊஹம் ஆகும்

மந்த்ர ஊகம்
யாகங்களில் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும் மந்த்ரத்தை உச்சரிக்கிறோம்.
அந்த மந்த்ரங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை நமக்கு நினைவூட்டுகின்றன.
• ப்ரக்ருதியான ஆக்நேய யாகத்தில் நாலு கைப்பிடி அளவு நெல்லை யாகத்துக்காக எடுக்கும் பொழுது,
’இந்த நெல் அக்நிக்கு பிரியமானதாக ஆகும் படி இதத நிர்வாபம் செய்கிறேன்” என்ற
மந்த்ரம் சொல்ல ப்படுகிறது
• இந்த மந்த்ரத்தை ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, ஸூர்யனுக்காக செய்யப்படும் யாகத்தில் இந்த
மந்த்ரத்தை அப்படியே உச்சரித்தால் அது தவறாகும்,
ஏன் என்றால் இந்த யாகத்தில் ஸூர்யனுக்காக தான் நெல், அக்நிக்காக அல்ல.
• பிரக்ருதியில் அக்நியைப் பற்றி பேசிய மந்த்ரம் விக்ருதியில் ஸூர்யனைப் பற்றப் பேசுகிற டியால் இது மந்த்ரத்தின் ஊஹம் ஆகும்.
•ஆனால், அக்நிக்கு பதிலாக ஸூர்யன் இந்த யாகத்தில் தேவதையாக இருக்கிற படியால், மந்த்ரத்தில் அக்நி என்ற சொல்லை எடுத்துவிட்டு
அவ்விடத்தில் ’ஸூர்யன்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டு,
“இந்த நெல் ஸூர்யனுக்கு பிரியமானதாக ஆகும் படி இதை நிர்வாபம் செய்கிறேன் ” என்று தான் சொல்ல வேண்டும்.
• இது தான் மந்த்ரத்தின் ஊஹம்

சாம ஊகம்
•ஸாமம் என்பது இசை . ருக் என்பது ஸாஹித்யம் / பாடல் வரிகள் போல். ஒரு ஸாமத்தோடு சேர்த்து ஒரு ருக் மந்த்ரத்தைப் பாடி,
அதன் மூலம் ஒரு பொருளின் குணங்களைப் புகழ்ந்ததால் அதற்கு ஸ்தோத்ரம் என்று பெயர்.
•ஸாமம் என்ன செய்கிறது என்றால் – ருக்கில் இருக்கும் எழுத்துகளை விஸ்லேஷம் அதாவது விரித்தல் / நீட்டிப்பு செய்கிறது. எடுத்துக்காட்டு
– ருக் மந்த்ரத்தில் ’எ’ என் ற எழுத்து இருந்தால், அதை இசையாகப் பாடும் பொழுது ’ஆஇ’ என்று பிரித்துப் பாட வேண்டும்
• பிரக்ருதியில் ஒரு ருக் மந்த்ரத்தில் மூன்றாவது இடத்தில் ’எ’ என்ற எழுத்து இருந்திருந்தால், அவ்விடத்தில் ’ஆஇ’ என்று பாடி யிருப்போம்.
• அதத ஸாமத்தை வேறே ருக்கில் அதிதேசம் செய்து, அந்த ருக்கோடு சேர்த்து பாடும் பொழுது, அதிலும் மூன்றாவது இடத்தில்
’எ’ என்ற எழுத்து இருக்கும் என்று சொல்ல இயலாது. ஏழாவது இடத்தில் இருக்கலாம்.
• அப்பொழுது, ’ஆஇ’ என்ற இதை ஏழாவது இடத்திலிருக்கும் ’எ’ என்ற எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிறது.
•ஆக, பிரக்ருதியில் மூன் றாவது ஸ்தாநத்திலிருந்த எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் பட்ட ஸாமம் விக்ருதியில் ஏழாவது
இடத்திலிருக்கும் எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிற டியால் இது ஸாமத்தின் ஊஹம் ஆகும்.

—————-

பாடம் -23-அத்யாயம் -10-பாதம்
மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், எட்டாவது அத்யாயத்தில் அதிதேசத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, ஒன்பதாவது
அத்யாயத்தில் ஊஹமும் பத்தாவது அத்யாயத்தில் பாதமும் சொல்லப்பட்டுள்ளன.
•ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறே ஒன்றைக் குறித்து
செய்யப்படுதலுக்கு ஊஹம் என்று பெயர் என்று சென்ற பாடத்தில் பார்த்தோம்.
•ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்.
•அதிதேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம். அந்தச் செயலை முழுவதுமாகக்
கை விடுவது பாதம். ஆகையால், அதிதேசத்தைச் சொன்னவுடன், அதில் சிறு மாற்றத்தை மட்டும் சொல்லும்
ஊஹத்தை முதலில் சொல்லிவிட்டு, கை விடுதல் என்ற பெரிய மாற்றத்தைச் சொல்லும் பாதம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது.

பாதம் ஏன் ஏற்படுகிறது
•விக்ருதி யாகம் நேரடியாக ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை . ’எனக்கு உதவி வேண்டும்’ என்ற தேவை
முதலில் ஏற்பட்டு, அதன் பின் தான் ’அந்த உதவியைச் செய்யக் கூடிய செயல்கள் / பொருள்கள் எவை ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
•ஆகையால், ப்ரயாஜம் அநுயாஜம் ஆஜ்யபாகம் முதலான அங்கங்களை ஆக்நேய யாகத்திலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு
அதிதேசம் செய்யும் பொழுதும், அவற்றை மற்றும் அதிதேசம் செய்யக் கூடாது. எனவே , ’ப்ரயாஜம் செய்து, அநுயாஜம் செய்து,
ஆஜ்யபாகம் செய்து ஸௌர்ய யாகம் செய்ய வேண்டும்’ என்று அதிதேசத்தை ஏற்க முடியாது.
• ’ப்ரயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, அநுயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, ஆஜ்யபாகத்தால் இந்த உதவியைச் செய்து,
ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்’ என்று உதவிகளின் பின்னால் தான் செயல்கள் வர வேண்டும்.
•ஆகவே , ப்ரக்ருதி யாகமான ஆக்நேய யாகத்தில் தேவைப்பட்ட ஓர் உதவி விக்ருதியான ஸௌர்ய யாகத்தில் தேவைப்படாவிட்டால்,
அந்த உதவியையோ அதைச் செய்யும் செயலையோ அதிதேசம் செய்யத் தேவை இல்லை –
•ஆகவே , ப்ரக்ருதிக்கு அங்கமான ஒன்று விக்ருதிக்கு அங்கமாக இல்லாமல் போனபடியால் அந்தச் செயலுக்கு / பொருளுக்கு பாதம்
ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது –

அர்த்த லோபத்தால் பாதம் –
• அர்த்தம் என்றால் ப்ரயோஜனம்/ பயன். லோபம் என்றால் மறைதல் .
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஆக்நேய யாகம் உள்ளது. அந்த யாகத்தைச் செய்ய நெல்லை உலக்கையால்
குத்தி, உமியை நீக்கி,அரிசியை எடுக்க வேண்டும்.
• மற்ற ஓரு யாகம் – “நீண் ட ஆயுஸ் வேண்டும் என்று ஆசைப்படுபவன்,ப்ரஜாபதி என்ற தேவதைக்காக நூறு தங்கத்தகடுகளை நெய்யில்
சேர்த்து சரு செய்து யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக்நேய யாகத்தின் விக்ருதி ஆகும்.
•ஆக்நேய யாகத்திலிருந்து இந்த யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது, உலக்கையால் குத்துதல் என்ற செயலை
அதிதேசம் செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை , ஏன் என்றால் தங்கத் தகடுகளை உலக்கையால் குத்தி உமியை நீக்க முடியாது.
•ஆக, இவ்விடத்தில், ப்ரக்ருதியில் ஒரு செயலால் ஏற்படும் பயன் விக்ருதியில் தேவைப்படாமல் போகிறபடியால்,
ப்ரயோஜனமில்லாதமயால் ’உலக்கையால் குத்துதல்’ என்ற செயலுக்கு அதிதேசம் கிடையாது, அதாவதி, அதற்கு பாதம் ஏற்படுகிறது.
• அதே போல் ஒரு யாகத்தில் ’தானாக வெட்டப்பட்ட தர்பத்தைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், தர்மத்தை வெட்டுதல் என்ற செயலை ப்ரக்ருதியிலிருந்து இந்த யாகத்துக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை –

பிரதி ஆம்நாநத்தால் பாதம் –
ப்ரதி என்றால் எதிர்மறை என்று பொருள். ஆம்நாநம் என்றால் உபதேசம்.
• ப்ரக்ருதியில் ஒரு அங்கத்தை உபதேசித்துவிட்டு, விக்ருதியில் அதற்கு முறண் பட்ட வேறே ஒரு அங்கத்தை
வேதமே உபதேசித்தால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்தை விக்ருதிக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை .
ஆகையால், அந்த அங்கத்துக்கு விக்ருதியில் பாதம் ஏற்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ப்ரக்ருதி யாகத்தில் ’குசம்’ என்ற புல்லை தர்பமாகப் பயன் படுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆனால், ஒரு விக்ருதியில், ’சரம்’ என்ற மற்ற ஓரு புல் வகையை தர்பமாகப் பயன் படுத்தச் சொல்கிறது.
ஆகையால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட குசம் விக்ருதிக்கு அங்கமாக அழைத்து வரப் படக் கூடாது. ஆகையால்,
அந்த ’குசம்’ என்ற புல்லுக்கு விக்ருதி யாகத்தில் பாதம் ஏற்படுகிறது.
• ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் விக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் ஒரே ப்ரயோஜனம் இருந்தால் தான் இப்படி பாதம்
ஏற்படும். நக்ஷத்ர இஷ்டி என்று ஒரு யாகம் உள்ளது. அதற்கு நாரிஷ்ட ஹோமம் என்ற ஒரு ஹோமம் அதிதேசத்தால் வந்து அடைகிறது.
புதிதாக இந்த யாகத்தில் உபஹோமம் என்ற ஒரு ஹோமமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், நாரிஷ் டஹோமம்
உண்டாக்கும் அதே அபூர்வத்தைத் தான் உபஹோமம் உண்டாக்கும் என்பதற்கு எந்த ப்ரமாணமும் இல்லாததால், இரண்டையுமே
செய்ய வேண்டும். ஒன்று மற்ற ஒன்றைப் பாதிக்காது.

பிரதி ஷேதத்தால் பாதம்
ப்ரதிஷேதம் என்றால் ஒன்றைச் செய்யாதே என்ற உபதேசம்.
ஒன்றைத் தவிற மற்றவற்றைச் செய் என்ற கட்டளைக்கு பர்யுதாஸம் என்று பெயர்.
• பொதுவாக யாகங்களின் யஜமாநன் சில ரித்விக்குளை அவனுக்குத் துணையாக அழைத்து, அவர்களை வரிக்க வேண்டும்.
ஆனால், மஹாபித்ரு யஜ்ஞம் என்று அழைக்கப்படும் விக்ருதியில் ’ஹோதா என் ற ரித்விக்கை வரிக்காதே ’ என்று கட்டளை உள்ளது.
• பூர்வபக்ஷம் – ப்ரக்ருதியில் ஹோதாவை வரிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. எனவே அதிதேசத்தால் ஹோதாவை வரித்தல்
என்ற செயல் இந்த விக்ருதியை வந்து அடையும். ஆனால் விக்ருதியில் ’ஹோதாவை வரிக்காதே ’ என்று ப்ரதிஷேதம் / நிஷேதம் உள்ளது.
ஆகையால், சாஸ் த்ரமே ஹோதாவை வரிக்க வேண்டும் என்றும் வரிக்க வேண்டாம் என்றும் சொல்கிறபடியால் இரண்டுக்கும்
விகல்பம் தான், நம் ஆசைப்படி ஏதோ ஒன்றைச் செய்யலாம்.
• ஸித்தாந்தம் – விகல்பம் ஒப்புக் கொண்டால் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், பர்யுதாஸம் சொல்வது தான் சிறந்தது.
பர்யுதாஸம்-இதைத்தவிர வேறே ஒன்றைச் செய்யாதே -சொல்வது தான் சிறந்தது.-
எனவே , இந்த கட்டளைக்கும் நாம் கல்பித்த கட்டளைக்கும் தொடர்பைக் கல்பித்து, ’மஹாபித்ரு யஜ்ஞத்தில் ஹோதாவை
வரித்தலைத் தவிற மற்ற அங்கங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகையால்,
இங்கு ஹோதாவை வரித்தல் என்ற செயல் பாதிக்கப்படுகிறது, ஆனால் பர்யுதாஸத்தின் மூலம், ப்ரதிஷேதத்தால் அல்ல.

தர்ச பூர்ண மாஸங்களில் ஆறு ப்ரதான யாகங்கள் சொல்லப் பட்டுள்லன. அவற்றின் அங்கங்களில்
ஆஜ்யபாகங்கள் என்று இரு யாகங்கள் உள்ளன. அவற்றை உபதேசித்துவிட்டு, ’இவற்றை ஒரு விக்ருதி யாகத்தில்
செய்யக்கூடாது’ என்று ஒரு கட்டளை உள்ளது.
• இங்கும் முன் சொன்னது போல் ப்ரதிஷேதம் ஒப்புக் கொண்டால் விகல்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பர்யுதாஸம் தானா?
’அந்த விக்ருதியில் ஆஜ்யபாகங்கள் தவிற மற்ற அங்கங்களைத்தான் அதிதேசம் செய்ய வேண்டும்’ என்று பொருளா?
என்று பார்த்தால், அல்ல. ஏன் என்றால்,
எங்கோ இருக்கும் விக்ருதியின் அதிதேச வாக்யத்துக்கும் இங்கிருக்கும் வாக்யத்துக்கும் தொடர்வை கல்பிக்க இயலாது.
• ஆகையால், தவறு வழி இல்லாமல் இது ப்ரதிஷேதம் தான். ஆகையால், அந்த விக்ருதி யாகத்தில் ஆஜ்யபாகங்களுக்கு பாதம் ஏற்படுகிறது

————

பாடம் -24- அத்யாயம் -11-
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பத்தாவது அத்யாயத்தில் பாதம் என்பது விசாரிக்கப்பட்டது.
ஆக பத்து அத்யாயங்களால் ப்ரக்ருதி கர்மங்களிலும் விக்ருதி கர்மங்களிலும் எவை எல்லாம் அங்கங்கள் ஆகின்றன என்பது
முடிவாகியுள்ளது. இப்படி அந்தந்த யாகத்தில் ப்ரயோஜ்யமான அங்கங்கள் முடிவான பிறகு, அவற்றின் ப்ரயோகத்தைப் பற்றின விசாரம்
செய்யப் படுகிறது, தந்த்ரம் என்பதை விசாரிப்பதன் மூலம்.
• தந்த்ரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரே முறை அநுஷ்டித்தல்.
• ப்ரயோக விதியானது அங்கங்களையும் ப்ரதாநங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து ஒரு சேர்க்கை நமக்குத் தோற்றுகிறது.
அச் சேர்க்கை , ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும். ஆனால், எங்கு அது இயலாதோ அங்கு இடை விடாமல்
அடுத்தடுத்து அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது .
• ஆனால், எங்கு எங்கு முடியுமோ அங்கு சேர்த்தே அநுஷ் டிக்க வேண்டும், அதற்கு தான் தந்த்ரம் என்று பெயர்.
• (1) ப்ரதாந யாகங் களில் தந்த்ரம் –
வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களை ஒரே நொடியில் சேர்த்துச் செய்ய முடியாவிட்டாலும்,
ஒரே தேவதைக்காகச் செய்யப் படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்துச் செய்யலாம்.ஆகையால், இது தந்த்ரம் ஆகும்.
• (2) அங்கங்களுக்குள் தந்த்ரம் –
பல யாகங்களுக்கு அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது, அவற்றுக்குள் காலத்தாலோ தேசத்தாலோ
எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால், வேறுபாடு அறியாதபடியாலேயே அந்தச் செயலை ஒரே முறை செய்வதன் மூலம்
அனைத்து யாகங்களுக்கும் உதவலாம். இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும்

தந்திரம் ஏற்படுமா
• பூர்வபக்ஷம்
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உள்ள ஆறு ப்ரதாந யாகங்கள் தனித் தனி விதி வாக்கியங்களால் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், அவை ஒவ் ஓன்றும் தங்கள் தங்கள் பலனை உண்டாக்க தனித் தனியே ஸாமர்த்யம் படைத்தவை என்று அறிகிறோம்.
• அடுத்து, ஒரு வேத வாக்கியம், இந்த யாகங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பயன் என்று சொல்கிறது.
ஆகையால், தனித்தனியே ஒவ் ஓரு யாகத்தைச் செய்வதாலும் ஸ்வர்கம் பெறலாம்.
• ஆகையால், ஒன்றைச் செய்யும் பொழுது மற்ற ஓரு யாகத்தைச் செய்யும் ஆசை இருக்கத் தேவையில்லை .
எனவே அவற்றினிடையே ஒரு எத்ர்பார்ப்பு இல்லாத படியால் ஒரே ப்ரயோக விதிக்கு அவை இலக்கு ஆக மாட்டா.
• ஆகையால், அவற்றைச் சேர்த்து அநுஷ்டிக்க வேண்டும் என்று வேதம் சொல்லாத படியால், தந்த்ரம் என்பதே கிடையாது.
•ஸித்தாந்தம்
• முதலில் தனித்தனியே யாகங்கள் போதிக்கப் பட்டிருந்தாலும் அவை அனைத்துக்கும் சேர்த்து ஸ்வர்கம் என்ற ஒரே பயன் வேதத்தால்
சொல்லப் பட்டுள்ளது. ஆகையால், அவை ஒவ் ஓன்றும் மற்ற 5 யாகங்களை எதிர்பார்த்து தான் பலத்தைக் கொடுக்கின்றன.
• ஆகையால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு உள்ளபடியால் அனைத்துக்கும் சேர்த்து ஒரே ப்ரயோக விதி தான் உள்ளது.
ஆகையால், ஆறு ப்ரதாந யாகங்களையும் அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் சேர்த்தே செய்ய வேண்டும் என்பது வேதத்தின் எண்ணம்.
• ஆகையால், பல ப்ரதாநங்களைக் குறித்து ஒரு செயலை ஒரே முறை செய்யும் தந்த்ரம் என்பது ஏற்படலாம்.

கபிஞ்ஜல அதிகரணம் -உத்தர அதிகரணம்
• கபிஞ்ஜலாதிகரணம்
• வேதத்தில் ’வஸந்தம் என்ற தேவதைக்காக கபிஞ்ஜலங்களைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’
என்று ஒரு வாக்கியம் விதிக்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கு ’கபிஞ்ஜலங்கள்’ என்று பன்மை இருக்கிற படியால், பன்மை யானது மூன்று தொடங்கி இருக்கும் அனைத்து
எண்ணிக்கைகளையும் குறிக்கும் என்பதனால் யஜமாநனின் இஷ்டப்படி இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை
கபிஞ்ஜலங்களை வேண் டுமானாலும் பயன் படுத்தலாம்
•ஸித்தாந்தம் –
பன்மையைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்மை தான். மேலும், நான்கு ஐந்து என்ற
எதை எடுத்தாலும் அதில் மூன்றும் அடங்கும் என்பதனால் மும்மை என்பது தவிர்க்கமுடியாதது.
ஆகையால், மூன்று கபிஞ்ஜலங்களைப் பயன் படுத்தினாலே சாஸ்த்ரம் சொன்னது நிறைவேறி விடும்
என்பதால் பன்மைக்கு மும்மை தான் பொருள்
• உத்தராதிகரணம்
• தர்சபூர்ணமாஸத்திலுள்ள பால் யாகத்துக்காக மாடுகளைக் கறக்கும் போது
’மூன்று மாடுகளைக் கறந்து விட்டு மேலுள்ள மாடுகளைக் கறக்க வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கும் பன்மைக்கு மும்மை தான் பொருள். ஆகையால், மேலுள்ள மாடுகளில் மூன்றை மட்டும் கறக்க வேண்டும்.
•ஸித்தாந்தம் –
இங்கு ’அன்று இரவு குழந்தைகளுக்கும் பால் கிடைப்பதில்லை , பாலால் இவன் அக்நி ஹோத்ரமும் செய்ய முடியாது’ என்று
வேதம் சொல்கிற படியால், அந்த யஜமானனிடம் எத்தனை மாடுகள் உள்ளனவோ அவை அனைத்தையும்
கறக்க வேண்டும் என்று தெரிகிறது–மூன்றோடு நிறுத்தக் கூடாது –

ஆதாநம் ஒரு முறை தான்
•ஒரு யாகத்தைச் செய்ய அத்யயநம் செய்து பெற்ற வித்யை ,
ஆதாநம் செய்து பெற்ற அக்நிகள், ஸாமர்த்யம் ஆகியவை தேவை என்று பார்த்தோம்.
•ஒவ்வொரு யாகத்துக்கும் அக்நிகள் தேவைப்படுகிறபடியால், ஒவ்வொரு யாகத்துக்கு
முன்னாலும் ஆதாநம் செய்ய வேண்டுமா என்பது கேள்வி.
•பதில் – ஆதாநத்தால் கிடைக்கும் அக்நிகள் அனைத்து யாகங்களிலும் பயன்பட்டாலும், ஆதாநம் எந்த ஒரு
யாகத்தின் ப்ரகரணத்திலும் சொல்லப் படவில்லை .
அநாரப்யாதீதமாகச் சொல்லப் பட்டபடியால் அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது. மேலும், ’வஸந்த காலத்தில்
ஆதாநம் செய்ய வேண்டும்’ என்று தனியே ஆதாநத்துக்கு என்று ஒரு காலம் சொல்லப்பட்டபடியால்,
அவனத்து யாகங்களுக்காகவும் சேர்த்து ஒரே முறை ஆதாநம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
•ஆகவே ,ஆதாநம் செய்வதும் தந்த்ரம் தான்

விதிக்கப் பட்டதும் விதிக்கப் படாததும்
• ஸோம யாகத்தில் காலையில் இருந்து தொடங்கி மதியம் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்கும் வரை
யஜமாநனுக்கு அரிப்பு ஏற்பட்டால், சொரிந்து கொள்வதற்காக ஒரு மான் கொம்பு விதிக்கப்பட்டுள்ளது சாஸ்த்ரத்தால்.
• மதியம் தக்ஷிணை கொடுத்த பிறகு மான் கொம்பை ஒரு குழியில் எறிந்துவிட வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், மதியம் யாகத்தைத் தொடரும் போது அரிப்பு ஏற்பட்டால் கையால் தான் சொரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த யாகத்தின் விக்ருதியாக பல நாட்கள் செய்யும் ஸோம யாகங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொரு நாளும் மதியும் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
• கேள்வி – முதல் நாள் தக்ஷிணை கொடுத்த பின்பு மான் கொம்பை எறிய வேண்டுமா?
கடைசி நாள் தக்ஷிணையைக் கொ டுத்த பின்பு எறிய வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நம் இஷ்டப்படி செய்யலாம். முதல் நாள் மதியம் அதை எறிந்துவிட்டால், இரண்டாம் நாள் தொடங்கி காலையில் யாகம்
செய்யும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ள மான் கொம்பு இல்லாதபடியால் சாஸ்த்ரத்தை மீறினவராவோம்.
கடைசி நாள் எறிந்தால், முதல் நாள் தொடங்கியே மதியம் கையால் சொரிய வேண்டும் என்று வேதம்
சொன்னதை மீறினராவோம்.ஆகையால், ஒரு வேறுபாடும் இல்லை .
•ஸித்தாந்தம் –
கடைசி நாள் தான் எறிய வேண்டும். தினமும் காலையிலும் மான் கொம்பால் சொரிந்து கொள்ளுதல் என்பது விதிக்கப்பட்டதே
தவிற மதியம் கையால் சொரிந்து கொள்வது வேதத்தில் விதிக்கப்படவில்லை ,
நாமாக அறிந்து கொண்டது தான்.ஆகையால், அதற்கு பாதம் ஏற்பட்டால் தவறில்லை

————

பாடம் -25- அத்யாயம் -12-பிரசங்கம் –
• பதினோராவது அத்யாயத்தில் தந்த்ரம் என்பதை விசாரித்து, கடைசியாக பன்னிரண்டாம்
அத்யாயத்தில் ப்ரஸங்கம் என்பதைப் பற்றி ஆராய்கிறார் மஹர்ஷி ஜைமிநி.
• ப்ரஸங்கம் என்றால் – ஒரு யாகத்துக்குத் தன் அங்கம் ஒன்றிலிருந்து கிடைக்க வேண்டிய உதவியானது
வேறே ஓரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது.
• எடுத்துக்காட்டு –
அக்நீ ஷோமீயம் என்று ஒரு யோகம் உள்ளது. அது தர்ச பூர்ண மாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின்
விக்ருதி ஆகும். அந்த அக்நீ ஷோமீய யோகத்துக்கு அங்கமாக புரோடாச யோகம் ஒன்று உள்ளது.
அதுவும் தர்ச பூர்ண மாஸத்தின் விக்ருதிதான் .
தர்ச பூர்ண மாஸங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிற படியால், அதி தேசத்தின் மூலம்,
இந்த அக்நீஷோமீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கும் கூட ப்ரயாஜங்கள் அங்கம் ஆகின்றன .

பிரசங்கம்
• இந் நிலையில், அக்நீஷோமீயம் என்ற யாகத்தின் பிரயோகம் -அனுஷ்டானம் பெரியது. அதற்கு
அங்கமான புரோடாச யோகத்தின் ப்ரயோகம் (அநுஷ் டானம் ) சிறியது.
ஆகையால், புரோடாச யாகத்தின் அநுஷ்டானம் அக்நீஷோமீய அநுஷ்டானத்துக்குள் அடங்கியது தான் .
• உதாஹரணத்துக்காக,
அக்நீ ஷோமீய யாகத்தின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் .
அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை காலை 7 மணிக்கு செய்ய வேண்டும். அதே போல், புரோடாச யாகத்தை
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செய்கிறேன் -அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை மதியம் 12:30 மணிக்கு செய்ய வேண்டும்.

• இந் நிலையில் காலை 7 மணிக்கு அக்நீ ஷோமீயத்துக்கு அங்கமாக நான் ப்ரயாகங்களைச் செய்தவுடன்
அதிலிருந்து அபூர்வம்/ அத்ருஷ்டம்/புண்ணியம் உண் டாகிறது. அந்த அபூர்வம் யோகத்தின் ப்ரயோகம் முழுவதும்
முடிந்து பரம அபூர்வம் உண்டாகும் வரை இருக்க வேண்டும் என்ற படியால் மாலை 6 மணி வரை இருக்கப் போகிறது.
• இந் நிலையில், மதியம் நான் புரோடாச யோகத்தைச் செய்யும் பொழுது, அந்த யாகத்துக்கும் ப்ரயாஜங்களால்
உண்டான உதவி (அபூர்வம்) தேவைப்படும் பொழுது, நான் காலை செய்த ப்ரயாஜங்களால் உண்டான
அபூர்வம் ஸித்தமாக (தயாராக) இருக்கிற படியால் அதுவே புரோடாச யாகத்துக்கும் உதவி செய்து விடும். ஆகையால்,
தனியான புரோடாச யாகத்துக்கு அங்கமான ப்ரயோஜங்களை அநுஷ்டிக்கத் தேவை யில்லாமல் போகிறது –
• அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமான ப்ரயாஜங்களில் இருந்தே புரோடாச யோகத்துக்கு தேவையான உதவியும்
கிடைத்து விட்ட படியால், புரோடாச யாகத்துக்கு எனத் தனியாக ப்ரயோஜங்களைச் செய்யத் தேவையில்லை
இதுவே ப்ரஸங்கம் ஆகும்.

மற்ற அங்கங்கள்
• ப்ரஸங்கம் ஏற்படும் இடத்தில், ஒரு யாகத்துக்குத் தன் அங்கத்திடம் இருந்து வர வேண்டிய உபகாரம் வேறே ஒன்றிலிருந்து
கிடைக்கிற படியால், அதற்கு என எந்த அங்கங்களும் தேவையில்லை -ஆகையால் அதிதேசமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது
• அதிதேசம் என்பது நாம் வேதத்தைக் கற்று ஆராயும் போது நாம் மனசால் ஏற்படும் ஒன்று.
அதன் மூலம் புரோடாச யாகத்துக்கும் அங்கமாகப் ப்ரயாஜங்கள் கண்டிப்பாக வந்து சேர்கின்றன
• அதற்குப் பிறகு, எப்பொழுது ப்ரயோக விதியால் ப்ரயோகம் என்ற அனுஷ்டானத்தை விதிக்கிறதோ,
அப்பொழுது தான் இந்த யாகத்துக்குத் தேவையான ஒரு உதவி வேறே ஓரு வழியில் கிடைக்கிற படியால், இதற்கு
அங்கமோ ப்ரயாஜங்களைச் செய்ய வேண்டாம் என்ற காரணத்தால், ப்ரயோக விதி ”ப்ரயாஜங்களைச் செய் ” என்று கட்டளை இடாது
• இப்படி இருக்கும் நிலையில், அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமாக இல்லாத ஒரு செயல் புரோடாச யாகத்துக்கு அங்கமாக இருந்தால்,
அப்பொழுது ப்ரஸங்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் புரோடாச யாகத்தின் அங்கமாக அந்தச் செயலைச் செய்தே
ஆக வேண்டும்.
• எடுத்துக் காட்டு – அக்நீ ஷோமீயத்தில் ஆஜ்ய பாகங்கள் என்ற அங்கங்கள் கிடையாது
ஆனால் புரோடாச யாகத்தில் அவை அங்கங்கள் தான் . ஆகையால் , ப்ரஸங்கம் ஏற்பட முடியாததால்,
புரோடாச யகத்துக்காக ஆஜ்ய பாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் –

பலருக்காக சிலரை விடலாம்
• இந்த அத்யாயத்தில் “பூயஸாம் ஸ்யாத் ஸ்வ தர்மத்வம்” என்று ஒரு ந்யாயம் சொல்லப் படுகிறது.
ஒரு கூட்ட த்தில், சிலருக்கு ஒரு தேவையும் பலருக்கு வேறே ஓரு முரண் பட்ட தேவையும் இருந்தால்,
பலரின் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்வதே சரியானது என்பது தான் அந்த நியாயம் –

• வேதத்தில், கீழ்க் கண்ட ஏழு யாகங்கள் சேர்த்து ஒரு பலனுக்காக விதிக்கப் பட்டுள்ளன .
இவற்றில் ஒவ் வொரு யாகமும் தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் 6 யோகங்களுள் ஏதோ ஒன்றின் விக்ருதி ஆகும்.
எந்த யாகத்தின் விக்ருதியாக எந்த யாகம் உள்ளதோ, அது அதன் தன்மைகளைக் கொண்டு இருக்கும்

1-அக்னிக்கு புரோடாசம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி
2-இந்திரனுக்கு புரோடாசம் -ஐந்த்ராக்னி யாகத்தின் விக்ருதி
பிரஜாபதி தேவதைக்காக ஐந்து
1-தயிர் -இந்திரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி
2-தேன் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
3-நெய் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
4-நீர் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
5- தான்யம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி

தர்ச பூர்ண மாஸத்தில் ஆக்நேய யோகம் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படுகிறபடியால்,
அதன் விக்ருதிகளும் (யோகம் 1 மற்றும் யோகம் 7) இரண்டுக்கும் பொது வானவை .
• ஐந்த்ரோக்ந யோகமும் இந்த்ரனுக்கான தயிர் யாகமும் அமாவாஸையில் மட்டும் உள்ளபடியால் அவற்றின்
தன்மைகள் தான் அவற்றின் விக்ருதிகளுக்கும் (யாகம் 2 மற்றும் யாகம் 3)
• உபாம்சு யாஜம் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால், அதன் விக்ருதிகளுக்கு
(யாகம் 4,5,6) பௌர்ணமியின் தன்மைகள் தான் –

சமமானவர்களுள் முதலாவது
பலருக்கு ஒரு விருப்பமும் சிலருக்கு வேறே ஓரு விருப்பமும் இருந்தால் பலரின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.
•ஸமமான எண்ணிக்கையக் கொண்ட இரண் டு பக்ஷங்களுக்குள் முரண் பாடு வந்தால் முதலில் சொல்லப் பட்டத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் உபக்ரம ந்யாயம் என்ற விஷயத்திலும் முன்னமே பார்த்தோம் .
• வேதத்தில், புரோடாசத்தை வைத்து செய்யப்படும் ஆக்நா வைஷ்ணவம் என்ற ஒரு யாகமும்
ஸரஸ்வதிக்காக நெய்யைக் கொண்டு செய்யப்படும் யாகமும் சேர்ந்து ஒரே பயனுக்கக விதிக்கப் பட்டுள்ளன .
இதில் முதல் யாகம், தர்ச பூர்ண மாஸத்தில் அமாவாசை யன்று செய்யப்படும் ஐந்த்ராக்ந யாகத்தின் விக்ருதி.
இரண்டாம் யாகம் பவுர்ணமி அன்று செய்யப்படும் உபாம்சு யாஜத்தின் விக்ருதி.
•ஆகையால் முதல் யாகத்துக்கான ஆஜ்ய பாகங்கள் வ்ருதந்வதீ மந்த்ரங்களோடும்
இரண்டாவதற்கான ஆஜ்ய பாகங்கள் வார்த்ரக்நீ மந்த்ரத்தோடும் செய்யப் பட வேண்டியவை –
ஆனால் தந்த்ரமாக ஒரே முறை செய்கிற படியால் ஏதோ ஒன்றைத் தான் செய்ய முடியும்.
•ஸித்தாந்தம் – முதலில் சொல்லப் பட்ட படியால் ஆக்நா வைஷண யாகத்தால் எதிர் பார்க்கப்படும்
வ்ருதந்வதீ மந்த்ரத்தத்தைத் தான் சொல்ல வேண்டும்

காம்ஸ்ய போஜி நியாயம்
• ஒரு கூட்டத்தில் , பலருக்கு எந்த சிறப்பு எதிர்பார்ப்பும் இல்லை , ஆனால் சிலருக்கு ஒரு விசேஷ எதிர்பார்ப்பு
உள்ளது என்றால் , அந்த சிலரின் எதிர் பார்ப்பு தான் செய்யப்பட வேண்டும் –
• வேதத்தில் ஆக்ரயணம் என்ற ஒரு கர்மத்தில் ஐந்த்ராக்நம்,
வைச்வதேவம் , த்யாவா ப்ருதிவ்யம் என்று மூன்று யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன
. இவற்றில் முதல் இரண்டு யாகங்களில் இந்தப் புல்லைத் தர்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற
எந்த நியமமும் வேதத்தில் சொல்லப்பட வில்லை –
ஆனால் மூன்றாவதில் ப்ரஸூநமயமோ (பூவோடு கூடின / வெட்டப்பட்டு மறுபடியும் வளர்ந்த) புல்லைக் கொண்டு
செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது
•ஆகையால், முதல் இரண்டு யாகங்களுக்கும் எந்த விசேஷ எதிர்பார்ப்பும் இல்லாத படி யாகையால் ,
மூன்றாவது யாகத்தின் தேவைப்படியே மூன்றையும் செய்ய வேண்டும்
• இதற்கு அடிப்படை காம்ஸ்ய போஜி ந்யாயம் ஆகும் – குரு என்பவர் சிஷ்யரை விட உயர்ந்தவர்.
குருவிற்கு ’இந்த பாத்திரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் இல்லை -.
ஆனால் சிஷ்யன் ’பித்தளை பாத்திரத்தில் மட்டும் தான் உண்பேன் என்ற நியமம் கொண்டவர் –
இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உண்ணும் பொழுது, குரு உயர்ந்தவராக இருந்தாலும்
சிஷ்ய விஷயத் தேவைக்கு ஏற்பத் தானும் பித்தளை பாத்திரத்தில் தான் உண்ண வேண்டும்.
அதே ந்யாயம் தான் இங்கும் சொல்லப்படுகிறது.

விகல்பமும் சமுச்சயமும் –
ஒரு த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்காக்க இரண்டு பொருள்கள் விதிக்கப் பட்டால் அவற்றில்
ஏதோ ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் / செய்ய முடியும்.
ஆகையால் அவ்விடத்தில் அவ்விடத்தில் விகல்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு – புரோடாசத்தை செய்வது என்ற
த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்கு நெல் மற்றும் யவம் என்ற இரண்டு தானியங்கள் வேதத்தால் போதிக்கப் பட்டுள்ளன
ஆகையால் அவற்றில் ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் என்ற விகல்பம் ஏற்படுகிறது.
• அத்ருஷ்டத்துக்காக -அதாவது -அபூர்வம் என்ற புண்யத்துக்காக சில செயல்கள் விதிக்கப் பட்டால்
அதில் ஒரு செயலில் இருந்து வரும் அபூர்வம் மற்ற ஒன்றில் இருந்து வராது என்பதால்
ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று வீணாகாது ஆகையால் அவற்றைச் சேர்த்தே செய்ய வேண்டும் –
இதற்கு சமுச்சயம் என்ற பெயர் -. எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் அநுயாஜங்கள் என்ற அங்கங்களுக்கு ஸமுச்சயம் தான் –
•அத்ருஷ்டமான ப்ரயோஜனங்கள் இருந்தால் எந்த இடத்தில் பிரயோஜனம் ஓன்று என்று முடிவு
செய்ய முடியுமோ அங்கு விகல்பம் தான் -எடுத்துக்காட்டு
– தர்ச பூர்ண மாஸம் செய்ய வேண்டிய ஒருவன் அமாவாசை அல்லது பௌர்ணமியைத் தெரியாமல் விட்டு விட்டால்
அதற்கு இரண்டு ப்ராயச்சித்த யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன .
அவை அத்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உண்டு செய்தாலும் தர்ச பூர்ணமாஸம் செய்யயாதலால் வந்த ஒரே பாபத்தைப் போக்க
இரு யாகங்களும் என்று நாம் அறிவோம்.ஆகையால் ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று தேவையில்லை என்ற விகல்பம் ஏற்படுகிறது –

————–

சங்கர்ஷ தேவதா காண்டம் மேலே நான்கு அத்யாயங்கள்
மேலே மீமாம்ஸா தர்சனம் பார்ப்போம்

பாடம் –26-மீமாம்சையில் பிரமாணங்கள்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பன்னிரண்டு அத்யாயங்களின் பொருளையும் நாம் படித்தோம்.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு தான் வேதத்தின் பொருள் நிச்சயிக்கப்படுகிறது.
இப்படி வேதத்தின் உபாங்கமாக விளங்கும் மீமாம்ளஸ, ஒரு தனி தர்சநமாகவும் வளர்ந்துள்ளது.
அந்த தர்சநத்தின் சிறப்பம்சங்களைத் தான் நாம் மேல் வரும் சில வகுப்புகளில் படிக்கப் போகிறோம்.
• ஒவ்வொரு தர்சநமும் அவர்கள் ஏற்கும் ப்ரமாணங்களையும், அவற்றால் அறியப்படும் விஷயங்களான
ப்ரமேயங்களளயும் நிர்ணயிக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம், சப்தம், உபமாநம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, ஸம்பவம் ஐதிஹ்யம் என்ற எட்டு ப்ரமாணங்கள் வெவ்வேறு
சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் சார்வாகர்கள் முதல் ப்ரமாணத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.
பௌத்தர்களும் வைஸேஷிகர்களும் முதலிரண்டு ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாஸவஜ்ஞர் முதலான சில நையாயிகர்களும், ஸாங்க்ய மதத்தாரும் முதல் மூன்று ப்ரமாணங்களை ஏற்றார்கள்.
நையாயிகர்களில் பலர் முதல் நான்கு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
ப்ராகாரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்கள் முதல் ஐந்து ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாட்டர்கள் என்ற மீமாம்ஸகர்களும், அத்வைத தேதாந்திகளும் முதல் ஆறு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
இறுதியாக, பௌராணிகர்கள் என்பவர் எட்டு ப்ரமாணங்களையும் ஆதரித்தார்கள்.

• ந்யாய மதத்தில், ஒரு பொருளை உள்ளபடி காட்டிக்டுக்கும் ஜ்ஞாநம் ப்ரமா (யதார்த்த ஜ்ஞாநம்) என்று சொல்லப்பட்டது.
குமாரில பட்டரின் சிஷ்யர்களான பாட்ட மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை
• “முன்னால் அறியப்படாத விஷயத்தை உள்ளபடி காட்டிக் கொடுக்கும் அறிவு தான் ப்ரமா ” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
• ’முன்னால் அறியப்படாத’ என்று சொன்னபடியால், ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் நினைவுக்கு ப்ரமா என்ற பெயர் கிடையாது என்று
அறியலாம், ஏன் என்றால் நிளனவு எப்பொழுதுமே முன்னால் அறியப்பட்ட விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

• ’உள்ளபடி’ என்று சொன்னபடியால், ப்ரமம் ஸந்தேகம் முதலானஅறிவுகளுக்கும் ப்ரமா என்று பெயர் கிடையாது என்று தேருகிறது.
• கேள்வி – தாராவாஹிக ஜ்ஞாநம் (அறிவுத் தொடர்) என்று ஒன்று உண்டு. நீண்ட நேரத்துக்கு நான் என் கண்ணால் ஒரு குடத்தைப் பார்த்தால்,
’இது குடம்’, ’இது குடம்’ என் ற அறிவு பல முறை ஏற்படும். இவை அனைத்துமே ப்ரத்யக்ஷம் என்ற அறிவு தான், ஸ்மரணம் அல்ல.
அறிவு என்பது சில வினாடிகள் மட்டுமே இருக்கும் ஒன்று, ஆகையால், நீண்ட காலத்துக்குள் அந்தக் குடத்தைப் பற்றின பல அறிவுகள் ஏற்பட வேண்டும்.
அதில் முதல் அறிவானது, நான் இதுவரை அறியாத குடத்தைக் காட்டிக் கொடுத்தபடியால் ப்ரமா ஆகும்.
அதற்குப் பிறகு, அதே குடத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் ஏற்படும் மற்ற ஜ்ஞாநங்கள் ப்ரமா ஆகுமா?
• பதில் – தாராவாஹிக ஜ்ஞாநத்தில் முதல் அறிவி லேயே குடம் அறியப்பட்டுவிட்டாலும், அது ’அந்தந்த வினாடியில் உள்ளது’ என்ற
புது புது அம்சம் அந்தந்த ஜ்ஞாநத்தில் புதிதாக அறியப்படுகிறபடியால் அவற்றையும் ப்ரமா என்று கூறலாம்.

ப்ராபகர மாதத்தில் ஞானம்
பாட்டர்களின் மதத்தில், கயிற்றை பாம்பு என்றும், கிளிஞ்சலை வெள்ளி என்றும், சங்கத்தை மஞ்சளானது என்றும்
காட்டிக் கொடுக்கும் தவறான அறிவுகள் உண்டு.
ந்யாய மதத்தில் அயதார்த்த ஜ்ஞாநம் எப்படி சொல்லப்பட்டதோ அதே போல்தான் பாட்ட மதத்திலும்.
• ப்ராபாகரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்களின் மதத்தில் வேறான அறிவு என்று ஒன்றே கிடையாது.
ஜ்ஞாநம் அனைத்துமே சரியானதுதான்.
• கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிகிறோமே , எப்படி அது சரியாக இருக்க முடியும்? அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
• கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறியும் இடத்தில் தோன்றுவது ஒரு ஜ்ஞாநமே அல்ல, இரண்டு ஜ்ஞாநங்கள்.
கண் முன் இருக்கும் பொருள் நீளாமானது, வளைந்தது , பச்சையானது என்று கண்ணால் அறிகிறேன்.
இது புலன்களால் ஏற்படும் ப்ரத்யக்ஷம் ஆகும்.
கயிற்றிலுருக்கும்’கயிற்றுத் தன்மை ’ என்ற ஸாமாந்யத்தை (ஜாதியை ) மட்டும் க்ரஹிக்க வில்லை .
இல்லாத ஒரு தன்மையை உள்ளது என்று நினைத்தால் தான் ப்ரமம் ஆகும்.
இருக்கும் தன்மையை க்ரஹிக்காதது குற்றமல்ல.ஆகதே, இந்த ஜ்ஞாநம் சரியானது தான்.
• அதே ஸமயத்தில், இதே தன்மைகளை உடைய ஒரு பாம்பை நான் முன் ஓரு நாள் கண்டிருந்தபடியால் பாம்பின் நிளனவு ஏற்படுகிறது.
இதிலும் எந்த பொய்யான தன்மையும் தோற்றவில்லை . இதுவும் சரி தான்.
• நினைவுக்கு வந்த பாம்புக்கும் கண் முன் இருக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டை அறியாத படியால் அதைக் கண்டு பயந்து விட்டேன்.
• ஆகவே , ஒரு பொருளின் ப்ரத்யக்ஷம், மற்ற ஓரு பொருளின் ஸ்மரணம், அவற்றுக்குள் வேறுபாட்டை அறியாமை
என்ற மூன்று தான் உள்ளன. ப்ரமம் இல்லை

ஞானம் ப்ரத்யக்ஷமா அல்லவா –
ஆத்மாவினுடைய குணமான ஜ்ஞாநம் என்பதை புலன்களால் அறிய முடியுமா முடியாதா என்ற விஷயத்திலும் வாதமுள்ளது.
• ந்யாய மதத்தில், மனது என்ற புலனைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மாவின் குணங்களான ஜ்ஞாநம், இச்சை , த்தேஷம், ஸுகம்,
துக்கம் முதலானவற்றை அறியலாம் என்று படித்துள்ளோம்.
• ந்யாய மதத்தில் ஒரு பொருளை நான் பார்த்தவுடன் ’இது குடம்’ என்ற அறிவு ஏற்படுகிறது. இதற்கு வ்யவஸாயம் என்று பெயர்.
அதற்குப் பிறகு, ’நான் குடத்தை அறிகிறேன்’ என்ற ஜ்ஞாநம் உண்டாகிறது. இதற்கு அநுவ்யவஸாயம் என்று பெயர்.
இதுதான் ஜ்ஞாநத்தைப் பற்றின ப்ரத்யக்ஷம்.
• ப்ராபாகர மதத்தில், முதலில் ஏற்படும் ஜ்ஞாமே பொருள், அறிவு, ஆத்மா என்று மூவரையும் காட்டிக் கொடுக்கும்,
அதாவது “நான் குடத்தை அறிகிறேன்” என்று தான் முதலிலேயே ஜ்ஞாநம் உண்டாகும்.
ஆகவே , ஜ்ஞாநம் புலன்களால் அறியக் கூடியது தான்.
• பாட்ட மதத்தில் ஜ்ஞாநம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. நமக்கு ஒரு ஜ்ஞாநம் ஏற்பட்டாலும், அதை நாம் மனதால் அறிய இயலாது.
நாம் அறிந்த விஷயத்தில் ’அறியப்படுதல்’ என்ற ஒரு தன்மையை முதலில் பார்த்து, இந்தப் பொருளில் அறியப் படுதல் என்ற தன்மை
உள்ளபடியால் நான் என்ற ஆத்மாவிடம் அறிவு இருக்க வேண்டும்’ என்று அநுமானம் செய்து தான் அறிவு உள்ளது என்றே அறிய முடியம்

த்ரிபுட ப்ரத்யக்ஷம் -குடத்தை நான் அறிகிறேன் குடமும் நான் அறிவு மூன்றுமே ப்ரத்யக்ஷம் –
மூன்றுமே அறியலாம் -ப்ராபகரர்கள் -ஞானம் ப்ரத்யக்ஷம்
பாட்ட மதத்தில் அனுமானத்தாலே அறிகிறோம் -குடம் அறியப்பட்டது என்றால் அறிவு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள வேண்டும் –

ஞானம் சரியானது என்று எப்பொழுது அறியலாம் –
ந்யாய மதத்தில் ஒரு ஜ்நாநம் சரியானதா தவறானதா என்பதை உடனடியாக அறிய முடியாது.
’இது ஜலம்’ என் றஅறிவு ஏற்பட்டவுடன் அதை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
குடத்தால் ஜலத்தை எடுக்க முடிந்தால், நமக்கு வந்த ஜ்ஞாநம் சரியானது என்று முடிவு செய்யலாம்.
குடத்தில் நீர் வராமல் மண் மட்டுமே வந்தால், நாம் கண்டது கானல்நீர், ஆகையால் நமக்கு ஏற்பட்ட
அறிவு தவறானது என்று அறியலாம்.
ஆகவே , ஒரு ஜ்ஞாநம் சரியானது என்றோ தவறானது என்றோ முயற்சி செய்த பிறகு தான் அறிய முடியும்.
இதற்கு ’பரத: க்ராஹ் யத்வம் ’ (வேறே ஒன்றின் மூலம் க்ரஹிக்கப் படுதல்) என்று பெயர்.
• மீமாம்ஸையில் (ப்ராபாகர மதத்திலும் பாட்ட மதத்திலும் பொதுவாக ) ஒரு ஜ்ஞாநம் ஏற்படும் பொழுதே அது சரியானது தான்
என்று அறியப்படுகிறது. இதற்கு ஸ்வத: க்ராஹ் யத்வம் (தானாக /இயற்கையாகவே அறியப்படுதல்) என்று பெயர்.
ஆனால், முயற்சி செய்த பிறகு, முயற்சி வீணாகப் போனால், நமக்கு ஏற்பட்ட அறிவு தவறானது என்று மட்டும் பின்னால் அறிகிறோம்.
ஆகையால், ஜ்ஞாநம் சரியானது என்று உடனே அறியலாம், தவறானது என்பதை பிற்காலத்தில் தான் அறியமுடியும்.

—————

பாடம் -27-மீமாம்ஸையில் பிரமாணங்கள்
•பாட்ட மதத்ததச் சசர்ந்த மீமாம்ஸகர்களால் ஆறு ப்ரமாணங்கள் ஒப்புக் கொள்ளப் படுகின் றன. அவையாவன –
1. ப்ரத்யக்ஷம்
2. அநுமானம்
3. சப்தம்
4. உபமாநம்
5. அர்த்தாபத்தி
6. அநுபலப்தி
இதில் முதல் ஐந்து ப்ரமாணங்கள் ப்ராபாகர மதத்தைச் சேர்ந்த மீமாம்ஸகர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ப்ரத்யக்ஷம்
• புலன்களுக்கும் ஒரு பொருளுக்கும் ஏற்படும் தொடர்பால் உண்டாகும் ஜ்ஞாநம் ப்ரத்யக்ஷம் ஆகும்.
• சக்ஷுஸ் , க்ராணம், ஸ்ரோத்ரம், ரஸநம், த்வக் மற்றும் மனஸ் ஆகியதை ஆறு புலன்களில்.
இதில் முதல் ஐந்தும் வெளிப் புலன்கள் வெளி விஷயங்களைக் க்ரஹிக்க உதவுகின்றன.
மனது உட்புலன். ஆத்மாவையும் அதன் பண்புகளையும் அறிய உதவுகிறது.
• இந்த்ரியத்துக்கும் பொருளுக்கும் ஏற்படும் தொடர்பு ஸந்நிகர்ஷம் என்று அழைக்கப் படுகிறது.
ந்யாய மதத்தில் ஆறு ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் பட்டன.
ஆனால், மீமாம்ஸையில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் தான் தேவைப் படுகின்றன.
• ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட ஸமவாயம் என்ற ஸம்பந்தம் மீமாம்ஸையில் ஏற்கப் படவில்லை .
ஆகையால், குணத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும், செயலுக்கும் அது இருக்கும் த்ரவ்யத்துக்கும்,
ஸாமாந்யத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும் இடையில் ஸமவாயம் கிடையாது,–தாதாத்ம்யம் என்ற ஸம்பந்தம் தான் உண்டு.
• தாதாத்ம்யம் என்றால் ஐக்யம். குணமானது, தானிருக்கும் த்ர்வ்யத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதே அல்ல
என்பது மீமாம்ஸகர்களின் ஸித்தாந்தம். ஆகையால், கண்ணுக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யோகம்.
கண்ணுக்கும் குடத்திலிருக்கும் நிறத்துக்கும் / செயலுக்கும் / ஸாமாந்யத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யுக்த தாதாத்ம்யம்.
நிறத்திலிருக்கும் நிறத் தன்மையும் நிறத்தைக் காட்டிலும் வேறுபட்டதே அல்ல,
ஆகையால் அங்கும் தாதாத்ம்யம் இருப்பதால் ஸம்யுக்த தாதாத்ம்யமே ஸந்நிகர்ஷம்.

• ஒரு பொருளை மற்ற த்ரவ்யம் / குணம் / க்ரியை / ஸாமாந்யம் / பெயர்-ஆகியவற்றோடு சேர்த்து க்ரஹிக்கும்
ஜ்ஞாநத்துக்கு ஸவிகல்பகம் என்று பெயர். விகல்பம் என்றால் வேறுபாடுகள்.
இந்த ஜ்ஞாநத்தில் பல வேறுபாடுகள் தோற்றுகிற படியால் இது ஸ விகல்பகம் ஆகும்.
• கையில் தடி பிடித்த, வெள்ளையான, தேவதத்தன் என்ற பெயரை உடைய மனிதன் நடக்கிறான்” என்ற ஒரு
சொல் தொடரில் த்ரவ்யம் , குணம், பெயர், ஸாமாந்யம், செயல் ஆகிய ஐந்து விகல்பங்களை யுமே நாம் அறியலாம்.
• இந்த ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு முன்பு,வெறுமனே ஒரு பொருளைப் பற்றின அறிவு ஏற்படும்.
அதற்கு நிர்விகல்பகம் என்று பெயர். அதில் ஸாமாந்யம், குணம், க்ரியை என்று எல்லாம் பிரித்து அறிய முடியாது.
ஸம்முக்தமாக / ஒன்றாகத் தான் அனைத்தும் தோற்றும்.
• ஒரு மாட்டை முதன் முதலில் காணும் பொழுது அதைப் பற்றின நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் ஏற்படும்.
அப்பொழுது என் கண்ணுக்கும் மாட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டவுடன், மாடு, அதன் அங்கங்கள், தன்மைகள், குணங்கள்
அனைத்தையும் நாம் க்ரஹிக்கிறோம்.
ஆனால் முதன் முதலில் ஏற்படும் நிர்விகல்பகத்தில் எது அனைத்து மாடுகளுக்கும் பொதுவான அம்சம், எது
இந்த மாட்டின் தனித்தன்மை என்பது எல்லாம் தெரியாது.
அந்த தன்மைகள் மட்டுமே அறியப்படுகின்றன.
• இந்த நிர்விகல்பக ப்ரத்யக்ஷத்துக்கு ஆலோசநா ஜ்ஞாநம் என்றும் பெயர் உண்டு.

அனுமானம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் அநுமானம் ஏற்கப் படுகிறது.
• ஒரு பொருள் மற்ற ஓரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதற்கு வியாப்தி என்று பெயர்.
இப்படி வியாப்தி உடைய ஒரு பொருளை நாம் ஓரிடத்தில் கண்டால், மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹம் செய்யலாம்.
இதற்கு தான் அநுமானம் என்று பெயர். எடுத்துக் காட்டு –
புகை என்றுமே நெருப்பைப் பிரிந்து இருக்காது என்பதால் ஒரு மலையின் மேல் புகையைக்
கண்டால், அங்கு நெருப்பு உள்ளது என்று நான் முடிவு செய்யலாம்.
• வியாப்தியை க்ரஹிப்பதற்கு நாம் பல இடங்களில் புகையையும் நெருப்பையும் சேர்த்துப் பார்த்திருக்க வேண்டும்,
ஓரிடத்தில் கூட நெருப்பில்லாமல் புகையைக் கண்டிருக்கக் கூடாது.
• ந்யாய மதத்துக்கும் மீமாம்ஸா மதத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு அநுமானத்தை அடி ஒற்றி உள்ளது.
ந்யாய மதத்தில் பரார்த்த அநுமானம் ( வேறு ஒருவருடைய பயனுக்காகச் செய்யப்படும் அநுமானம்) என்று நாம் படித்தோம்.
அதில் ஐந்து அவயவங்கள் சொல்லப்பட்டன –
“மலையில் நெருப்பு உள்ளது” என்று ப்ரதிஜ்ஞா;
“புகை இருக்கிறபடியால்” என்று ஹேது;
“எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும், அடுப்படியில் போல்” என்று உதாஹரணம்;
“அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத புகை இந்த மலையில் உள்ளது” என்பது உபநயம்;
“ஆகையால் இந்த மலையில் நெருப்பு உள்ளது” என்பது நிகமநம்.
• மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை .
இதில் சொன்னதையே சொல்கிறோம் என்று அபிப்ராயப்பட்டு 3 அவயவங்கள் போதும் என்கிறார்கள், அதாவது –
முதல் மூன்று அவயவங்களையோ கடைசி மூன்று அவயவங்களையோ ப்ரயோகம் செய்தாலே போதும் என்பது அவர்கள் கூற்று.

சப்த பிரமாணம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் சப்த ப்ரமாணம் ஏற்கப் படுகிறது.
• முதலில் நாம் சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இந்தத் தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
• அடுத்து, நாம் “ராமன் ராவணனைக் கொன்றான்” என்ற ஒரு சொல் தொடரைக் கேட்கிறோம்
. இதைக் கேட்டவுடன், இதிலிருக்கும் ஒவ்வொரு சொல்லின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு பொருளை நினைவு படுத்துகிறது –
ராமன், ராவணன், கொலை , ஒருமை , கடந்த காலம், ஆண் பால் என்பது போல். இது தான் பதார்த்த ஸ்மரணம்
• பிறகு, அந்த பதார்த்தங்கள் (பொருள்கள்) எல்லாம் சேர்ந்து, வாக்யார்த்த ஜ்ஞாநம்
(சொல் தொடரின் பொருளைப் பற்றின அறிவை ) என்பதை உண்டாக்குகின்றன.
• இதில் ஆகாங்க்ஷா (சொற்களுக்கு இடையில் இருக்கும் எதிர்பார்ப்பு), யோக்யதா (சொல்லப் படும் அர்த்தத்தின் ஏற்புடமை ),
ஸந்நிதி (சொற்களை தாமதமில்லாமல் உச்சரித்தல்),
தாத்பர்ய ஜ்ஞாநம் (பேச்சாளர் எந்த எண்ணத்தோடு இந்தச் சொல் தொடரைச் சொன்னார் என்ற அறிவு) ஆகியவை உதவுகின்றன.
• சப்தம் இரண்டு வகைப்படும் – (1) லௌகிக சப்தம் – மனிதர்களால் சொல்லப்பட்டது. இது ப்ரமாணமாகவும் இருக்கலாம், அப்ரமாணமாகவும்
இருக்கலாம். பேச்சாளரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது அது.
(2) வைதிக சப்தம் – வேதம் என்னும் நூல் எப்பொழுதுமே முழுமையாக ப்ரமாணம் தான். அது
யாராலும் இயற்றப் படாதபடியால் மனிதனின் குறைகளால் ஏற்படும் சொற் குற்றங்ககளோ பொருட்குற்றங்களோ
வேதத்தில் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் அது ப்ரமாணமே
• சொல் தொடரின் பொருளை அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன –
(1) கலே கபோத ந்யாயம் – அந்தந்த சொற்களால் நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்கள்
அனைத்துமே சேர்ந்து ஒரே ஸமயத்தில் ஒரு கூட்டுப் பொருளை உணர்த்துகின்றன
(2) கண்ட வாக்யார்த்த போதம் – ஒரு சொல் தொடரின் சிறு பகுதிகளின் பொருளை
முதலில் அறிந்து, அதற்குப் பிறகு முழு சொல் தொடரின் பொருளை அறிதல்.

உபமானம்
• ந்யாய மதத்தில் சபோல் மீமாம்ஸையிலும் உபமாநம் எனற ப்ரமாணம் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆனால், இரண்டு மதங்களிலும் சிறு வேறுபாடும் உள்ளது.
• நகரத்திலிருக்கும் என்னிடம் காட்டிலிருந்து ஒருவர் வந்து “மாட்டைப் போல் இருப்பது கவயம்” என்று கூறினார்.
பிறகு நானே ஒரு முறை காட்டிற்குச் சென்று மாடு போன்ற ஒரு ப்ராணியைப் பார்த்தேன்.
பார்த்தவுடன் அந்த மனிதர் எனக்குச் சொன்ன சொல் தொடரின் பொருள் ஞாபகம் வந்தது.
அதனால் “இது கவயம் என்று அழைக்கப் பட வேண்டும்” என்று அறிந்தேன்.
இப்படி சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிவு தான் உபமிதி.
இதற்குக் காரணமாக ஸாத்ருச்யம் என் ற ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம் தான் உபமாநம் – இது ந்யாய மதத்தின் படி உபமாநத்தின் விளக்கம்.
• மீமாம்ஸையில் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றின ஜ்ஞாநம் உபமிதி என்று ஏற்கவில்லை .
“மாடு போல் உள்ளது இந்த ப்ராணி” என்று எனக்கு ஏற்பட்ட ஸாத்ருஸ்ய ஜ்ஞாநம் (ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம்) தான் உபமானம்.
அதிலிருந்து தோன்றக் கூடிய “இந்தப் ப்ராணியைப் போல் தான் என்னுடைய மாடு உள்ளது” என்ற அறிவு தான் உபமிதி ஆகும்.
• அதாவது, கண் முன் இருக்கும் பொருளில் மாட்டின் ஒற்றுமையைக் காண்பது உபமாநம்.
நினைவுக்கு வரும் பொருளில் கண் முன்னாலிருக்கும் பொருளின் ஒற்றுமையைக் காட்டுவது உபமிதி.
• இது அதிதேசம் செய்யும் பொழுது மீமாம்ஸையில் உபயோகப்படும். ஸௌர்ய யாகத்தின் விதி வாக்கியத்ததப் பார்த்ததும்
“இதைப் போல்தான் ஆக்நேய யாகமும் உள்ளது” என்று நாம் அறிந்து உபமாந ப்ரமாணத்தால்.
இதை அறிந்தால் தான் ஆக்நேய யாகத்தின் அங்கங்களை ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்து நம்மால் கொண்டு வர முடியும்.

அர்த்தா பத்தி

• பொருந்தாத இரண்டு ப்ரமாணங்களைப் பொருந்த வைப்பதற்காகக் ஒரு விஷயத்தைக் கல்பிப்பதற்குத் தான் அர்த்தா பத்தி என்று பெயர்.
எது பொருந்தாமலிருக்கிறதோ அதற்கு உபபாத்யம் என்று பெயர்.
அதைப் பொருந்த வைக்க எது கல்பிக்கப்படுகிறதோ அதற்கு உபபாதகம் என்று பெயர்.
• எடுத்துக் காட்டு 1 – தேவதத்தன் பருத்துள்ளான் என்று ஒரு ப்ரமாணத்தால்
அறிந்தேன். ஆகையால், பொதுவாக அவன் சாப்பிடுவான் என்று அறிந்தேன். அதே
ஸமயத்தில், வேறே ஓரு ப்ரமாணத்தால், அவன் பகலில் உண்பதே இல்லை என்று
அறிந்தேன். தேவதத்தன் உண்கிறான் என்னும் ப்ரமாணத்துக்கும், பகலில்
உண்பதில்லை என்னும் ப்ரமாணத்துக்கும் விரோதம் தோற்றி, அதைப் போக்குவதற்காக
“தேவதத்தன் இரவில் உண்கிறான்” என்று கல்பிக்கிறோம்.
• எடுத்துக் காட்டு 2 – ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தைக் கொண்டு தேவதத்தன் நூறு வயது வரை வாழ்வான் என்று நான் அறிந்தேன்.
ஆகையால், அவன் வீட்டிலோ அல்லது வேறே எங்கோ கண்டிப்பாக இருக்கிறான் என்று அறிவேன்.
அதே ஸமயம், அவன் வீட்டில் பார்த்த பொழுது அவன் காணப் படவில்லை .
இப்பொழுது “வீட்டிலோ வெளியிலோ இருக்கிறார்” என்னும் பொதுவான ப்ரமாணத்துக்கும் “வீட்டில் இல்லை ” என்ற
சிறப்புப் ப்ரமாணத்துக்கும் முறண்பாட்டைப் போக்குவதற்காக, வெளியிலே இருக்கிறான்” என்று கல்பிக்கிறோம். இதுவும் அர்த்தாபத்தி தான்.
• இது இரண்டு வகைப்படும் –
(1) த்ருஷ்ட அர்த்தா பத்தி – நாம் கண்ட ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது
(2) ச்ருத அர்த்தா பத்தி – நான் கேட்ட ஒரு விஷயத்தைப் பொருந்தத வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது.
எடுத்துக்காட்டு – ஸ்ம்ருதி நூல் ப்ரமாணம் ஆவதற்காக ச்ருதியைக் கல்பிப்பது, ப்ரயாஜங்கள் தர்ச பூர்ண மாஸத்தின்
ப்ரகரணத்தில் படிக்கப் பட்டதைப் பொருந்த வைப்பதற்காக ச்ருதியைக் கல்பித்து ப்ரயாஜங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கம் என்று அறிதல்.

அநுப லப்தி
பாவ பதார்த்தங்களை (இருக்கும் பொருள்களை ) க்ரஹிப்பதற்கு உதவும் ஐந்து ப்ரமாணங்ளைப் பார்த்தோம்.
ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்பது அபாவத்தை (ஒரு பொருளின் இன்மையை ) க்ரஹிப்பதற்கு உதவுகிறது.
• முதல் ஐந்து ப்ரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளைப் பற்றின அறிவு ஓரிடத்தில் நமக்கு ஏற்படவில்லை என்றால்,
அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று நாம் அறிகிசறாம்.
உபலப்தி என்றால் அறிவு. அநுபலப்தி என்றால் அறிவு தோன்றாமை -.
ஆகவே , அறியக் கூடிய ஒரு பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருப்பது தான் அநுபலப்தி ஆகும்.
• இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன –
(1) பொருள் அறியப்பட முடிந்ததாக இருக்க வேண்டும். பிசாசு முதலானவை ஓரிடத்தில் இருந்தாலும் நம்மால் காண
முடியாது. ஆகையால், காணாமையைக் கொண் டு அது இல்லை என்று முடிவு செய்ய இயலாது
(2) அந்தப் பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருக்க வேண்டும்.
• இதில் இரண்டாவதாகச் சொல்லப் பட்ட ’அறிவு தோன்றாமை ’ என்பது ஸத்தயா காரணம், அதாவது,
தன் இருப்பாலேயே அது காரணமாகும்.
யோக்யதை / அறியப்படும் தகுதி என்பது அந்தப் பொருளில் இருந்தால் போதாது, நம்மால் அறியப்பட வேண்டும்.
• ஓர் இருட்டு அறையில் மோதிரத்தைத் தொலைத்து விட்டுத் தேடினேன் .
அறை முழுவதும் தேடா விட்டாலும், தேடினேன் என்று நான் நம்பினேன் என்றால், “இங்கு
மோதிரம் இல்லை ” என்ற அறிவு (அபாவத்தைப் பற்றினது) வந்து விடும்.
முழுவதுமாகத் தேடியிருந்தாலும் “சரியாகத் தேடவில்லை ” என்று தோன்றினால்,
அங்கு உண்மையில் மோதிரம் இல்லா விட்டாலும், நமக்கு “இங்கு மோதிரம் இல்லை ”அறிவு ஏற்படாது.

சம்பவம் ஐதிஹ்யம்
• மீமாம்ஸகர்கள் இந்த ஆறு ப்ரமாணங்களைத் தான் ஏற்கிறார்கள். இதற்கு மேல் ப்ரமாணங்கள் இல்லை என்கிறார்கள்.
ஆனால் பௌராணிகர்கள் ஸம்பவம் என்றும் ஐதிஹ்யம் என்றும் இரண்டு அதிகமான ப்ரமாணங்களை ஏற்கிறார்கள்.
அவற்றைப் பற்றி மீமாம்ஸகர்களின் கருத்து இவ்வாறு உள்ளது :
•ஸம்பவம் – நூறு ரூபாய் ஒருவரிடம் உள்ளது என்று அறிந்தால், அவரிடம் ஐம்பது ரூபாய் உள்ளது என்று அறிகிறோம்.
இது தான் ஸம்பவம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதைத் தனி ப்ரமாணம் என்று சொல்லத் தேவையில்லை .
இதை அநுமானத்திலேயே அடக்கி விடலாம் என்பது மீமாம்ஸகர்களின் அபிப்ராயம்.
எங்கு எல்லாம் நூறு ரூபாய் உள்ளது அங்கு எல்லாம் ஐம்பது ரூபாய் உள்ளது என்ற வியாப்தியைக் க்ரஹித்த ஒருவனுக்கு
இந்த அறிவு அநுமானத்தாலேயே வரக் கூடும்.
• ஐதிஹ்யம் – “’மரம் தோறும் குபேரன் உள்ளார்” போன்ற சொல் தொடர்களை நாம் கேள்விப் படுகிறோம்.
இதை சரியா தவறா என்று சொல்ல எந்த வழியுமில்லை . இது தான் ஐதிஹ்யம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இதை சப்த ப்ரமாணத்திலேயே அடக்கலாம் என்பது மீமாம்ஸகர்களின் கூற்று.
சொன்னவர் யார் என்று தெரியாத சொல் தொடர் இது. ஆகவே சப்த ப்ரமாணம் தான்.

————-

பாடம் –28-மீமாம்ஸையில் ப்ரமேயங்கள்

•பாட்ட மீமாம்ஸகர்கள் ஐந்து பதார்த்தங்கைள ஏற்கிறார்கள். அவை யாவன –
1. த்ரவ்யம்
2. ஜாதி / ஸாமாந்யம் என்கிற பொதுத் தன்மை
3. குணம் என்கிற பண்புகள்
4. க்ரிையை என்கிற செயல்
5. அபாவம் என்கிற இன்மை
ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட விசேஷம் என்ற பதார்த்தத்தையும் ஸமவாயம் என்ற பதார்த்தத்தையும் இவர்கள் ஏற்க வில்லை –

த்ரவ்யங்கள்
• “பரிமாணம் என்ற குணத்துக்கு ஆதாரமாக எது உள்ளதோ அதுவே த்ரவ்யம் ”
என்று த்ரவ்யங்களின் பொதுவான லக்ஷணம் சொல்லப் படுகிறது.

உண்டாகும் க்ஷணத்தில் குணம் இருக்காதே -நியாய மாதத்தில் ஓன்று மற்ற ஒன்றுக்கு காரணம் -சமவாயம் –
மீமாம்சையில் இத்தை கொள்ளாமல் தாதாத்ம்யம் என்று குணத்தை பிரித்துப் பார்க்க முடியாது
உண்டாகும் பொழுதே குணம் நிறம் பரிமாணம் உண்டு -என்பர் –

• மீமாம்ஸையில் 11 த்ரவ்யங்கள் சொல்லப்படுகின்றன.-அவையாவன –
1. ப்ருதிவீ – மணத்தை உடையது ப்ருதிவீ. மூக்கிலிருக்கும் க்ராண இந்த்ரியம் ப்ருதிவியால் ஆனது.
ப்ருதிவியால் ஆன சரீரம் ஜராயுஜம் (கர்ப்பையிலிருந்து தோன்றியது),
அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியது),
ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து வந்தது)
மற்றும் உப்பிஜ்ஜம் (முளையிலிருந்து வந்தது) என்று நான்கு வகைகளில் உள்ளது
2. ஜலம் – இயற்கையான த்ரவத்வம் -நீர்மையை -உடையது –
3. தேஜஸ் – வெப்பத்தை உடையது -. இதன் ரூபமும் ஸ்பர்சமும் உத்பூதம் (வெளிப் பட்டது),
அநுத்பூதம் (வெளிப் படாதது), அபிபூதம் (மறைக்கப் பட்டது) என்று மூன்று நிலைகளில் இருக்கும் .
A. இரும்பைக் காய்ச்சினால் தெரியும் தேஜஸ்ஸின் ரூபமும் ஸ்பர்ஸமும் உத்பூதமாக (வெளிப்பட்டு) இருக்கின்றன.
B. தீபத்தின் ஒளியில் ரூபம் உத்பூதமாகவும் ஸ்பர்ஸம் அநுத்பூதமாகவும் உள்ளது.
C. வெந்நீரிலுள்ள தேஜஸ்ஸில் ஸ்பர்ஸம் உத்பூதமாகவும் ரூபம் அநுத்பூதமாகவும் உள்ளது.
D. சஷுர் இந்த்ரியம் தேஜஸ்ஸால் ஆக்கப் பட்டபடியால் ரூபத்தையும் வெப்பத்தையும் கொண்டது தான்,
ஆனால் அவை இரண்டுமே அதில் அநுத்பூதமாக இருக்கிறபடியால் நமக்குத் தோற்றுவதில்லை .
E. தங்கம் தேஜஸ்ஸால் ஆனது, எனவே வெப்பத்தையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
ஆனால் அருகிலுள்ள ப்ருதிவீ பாகத்தின் மஞ்சள் நிறத்தாலும் ஸ்பர்சத்தாலும் அவை மறைக்கப் படுகின்றன
4. வாயு – ரூபம் அற்றது ஆனால் ஸ்பர்சம் உடையது . த்வக் இந்த்ரியத்தால் க்ரஹிப்படுவது.
5. தமஸ் –ஸ்பர்சம் அற்ற்து ஆனால் ரூபம் உடையது. இது தனி த்ரவ்யம் அல்ல,-
தேஜஸ்ஸின் அபாவம் தான் தமஸ் என்று ந்யாய மதத்தில் சொல்லப் படுகிறது.
ஆனால் அது சரி அல்ல. கருமை நிறமுடைவதாக தோற்றுகையாலும், செயலுடைய தானபடியாலும்,
’இருட்டு உள்ளது’ என்று பாவ பதார்த்தமாக(இருக்கும் பொருளாக) தோற்றுைகையாலும், தேஜஸ்ஸின் நினைவு இல்லாத பொழுதும்
தமஸ் க்ரஹிக்கப் படுகிறபடியால் அதன் அபாவமாக இது இருக்க முடியாத படியாலும் தமஸ் கருப்பு நிறத்தை உடைய தனி த்ரவ்யம் தான்.

• மேல் சொல்லப்பட்ட ஐந்து த்ரவ்யங்களுக்கும் அவயவங்கள் உண்டு.அவயவங்கள் சேர்ந்து அவயவியை உண்டாக்குகின்றன.
• அவற்றின் கடைசி அவயவம் தான் பரமாணு, அது கண்ணுக்குப் புலப்படாது,
அணுவானது என்று ந்யாய மதத்தில் சொல்லப்படுகிறது. மீமாம்ஸா தர்சனத்தில் ஜன்னல் வழியாக ஸூர்ய ஒளி
வரும் பொழுது கண்ணுக்குத் தெரியும் மிக மிக நுண்ணிய பொருட்கள் தான் பரமாணுக்கள்,
அதை விட சிறிய பொருள் கிடையாது என்று சொல்லப் படுகிறது.
• இப்படி அவயவங்களைச் சேர்த்து உலகத்தைப் படைப்பது ஈச்வரன் என்று ந்யாய மதம்.
எந்த ஒரு உண்டாகும் பொருளுக்கும் உண்டாக்கிய ஒருவர்
தேவைப் படிகிறபடியால் இந்த உலகை உண்டாக்கியவர் ஈஸ்வரன் என்று அநுமானம் செய்கிறார்கள் அவர்கள்.
அது மீமாம்ஸையில் ஏற்கப்படவில்லை .
ஈஸ்வரன் ஒரு உடலோடு படைத்தார் என்றால் நாம் பார்த்திருப்போம், உடல் இல்லாமல் படைக்க முடியாது.
ஆகையால் இந்த உலகம் படைக்கப்படவே இல்லை , எப்பொழுதும் இப்படியே தான் இருந்தது, வருங்காலத்திலும் இருக்கும்.

6. ஆகாசம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
7. காலம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
8. திக்- நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
9. ஆத்மா – ஜ்ஞாநம் உடையவர். மநஸ் என்ற உட்புலனால் க்ரஹிக்கப் படுபவர்.
• உடலையும், இந்த்ரியங்கைளயும் காட்டிலும் வேறு பட்டவர், அவற்றை இயக்குபவர்.
• அறிவு வடிவானவர் அல்ல, அறிவை உடையவர், அறிவாளி.
• ஸுகமே வடிவானவர் அல்ல,ஸுகத்தை உடையவர்,ஸுகீ.
• ஒவ்வொரு சரீரத்திலும் வெவ்வேறு ஆத்மா உள்ளார், அவரவரின் இன் பம்
துன்பம் விருப்பு வெறுப்பு முதலியவை வேறுபடிகிறபடியால்.
• விபுவானவர். நித்யமானவர்.
• போகம் என்று அழைக்கப்படும் இவ்வுலக இன்பத்தையும், ஸ்வர்கம் எனப்படும் இன்பத்தையும்,
முக்தி என்று அழைக்கப்படும் நிகரற்ற இன்பத்தையும் அநுபவிப்பவர்.
• முக்தி என்ற நிலையில் ஆத்மாவின் துக்கங்கள் எல்லாம் நீங்கி, இயற்கையாக ஆத்மாவிடம் இருக்கும் ஸுகத்தை
அவர் அநுபவிக்கிறார்,தன்னுைடய மனதைக் கொண்டு.
10. மநஸ் – ஸுகம் துக்கம் முதலிய குணங்கைள ப்ரத்யக்ஷமாக அறிகைக்கான கருவி. இது மீமாம்ஸா தர்சனத்தில் விபுவானது.
11. சப்தம் – மீமாம்ஸா தர்சனத்தில் சப்தம் என்பது ஆகாசத்தின் குணம் அல்ல. தனி த்ரவ்யம் .
அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வொரு சப்தமும் நித்யமானது, விபுவானது (எங்கும் பரந்திருப்பது).
நாம் வாயால் சில வியாபாரங்களைச் செய்தால் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு இடத்தில் மட்டும் அந்த சப்தம் வெளிப் படுகிறது.
வியாபாரம் அழிந்தவுடன் அந்த சப்தத்தின் வெளிப் பாடும் அழிந்து விடும், சப்தம் உண்டாவதும் இல்லை – அழிவதும் இல்லை

ஜாதி சாமான்யம் பொதுத்தன்மை .
• மீமாம்ஸையில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் ஸாமாந்யம் என்று ந்யாய மதத்தில் அழைக்கப் படும் பொதுத் தன்மை .
• அனைத்து குடங்களிலும் குடத் தன்மை என்று ஒரு பொதுத் தன்மை உள்ளது.
அனைத்து மாடுகளிலும் மாட்டுத் தன்மை என்ற ஒரு பொதுத் தன்மை உள்ளது.
• இந்த பொதுத் தன்மை நித்யமானது, விபுவானது. மாடு இருக்கும் இடத்தில் மட்டும் தான் மாட்டுத் தன்மை உள்ளது என்றல்ல.
மாட்டுத் தன்மை உலகு எங்கும் பரந்திருக்கும் ஒன்று.
• எங்கு ஒரு மாடு தோன்றுகிறதோ , அங்கு அந்த மாட்டுக்கும், முன்னமே இருந்த மாட்டுத் தன்மைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
• மாடு இல்லாத போது ஏன் மாட்டுத் தன்மையை அறிய முடிய வில்லை என்றால், மாட்டுத் தன்மையை வெளிப் படுத்துவது (அபிவ்யங்ஜகம்)
மாடு தான். எப்படி ஒரு விளக்கு இல்லாமல் ஒரு குடம் வெளிப்படாதோ ,அதே போல் மாடு இல்லாத போது
ஓரிடத்தில் மாட்டுத் தன்மை இருந்தாலும் அது வெளிப் படாது.
• ’த்ரவ்யம் உள்ளது’, ’குணம் உள்ளது’, ’க்ரியை உள்ளது’, ’ஜாதி உள்ளது’ என்று இந்த நாலு பதார்த்தங்கைளப் பற்றியும்
’உள்ளது’, ’உள்ளது’ என்ற அறிவு ஏற்படுகிறபடியால், இந்த நான்குக்கும் பொதுவான
’ஸத்தா’ /’இருத்தல்’ என்ற ஒரு பொதுத் தன்மை ஒப்புக் கொள்ளப் படுகிறது –

குணங்கள் –
• மீமாம்ஸா தர்ஸநத்தில் 24 குணங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவை –
(1) ரூபம் = நிறம் (2) ரஸம் = சுவை (3) கந்தம் = மணம்
(4) ஸ்பர்சம் = குளிர்ச்சி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு வுணர்ச்சி
(5) ஸம்க்யா = ஒன்று, இரண்டு முதலான எண்ணிக்கை (6) பரிமாணம் = அணு, மஹத், விபு என்ற அளவுகள்
(7) ப்ருதக்த்வம் = வேறுபாடு (8) ஸம்யோகம் = சேர்க்கை (9) விபாகம் = பிரிவு
(10, 11) பரத்வம் அபரத்வம் = தொலைவில் இருத்தல் -அருகில் இருத்தல்-காலத்தால் முதுமை இளமை
(12) குருத்வம் = எடை (13) த்ரவத்வம் =நீர்மை (14)ஸ்நேஹம் = பசை

சப்தம் குணம் இல்லை த்ரவ்யம் இவர்கள் தர்சனத்தில்
தர்மம் அதர்மம் இவற்றையும் கொள்ள வில்லை
த்வநி சக்தி ப்ராகட்யம் இந்த மூன்றும் இவற்றுக்குப் பதில் இங்கு

மேலே ஆத்மாவின் குணங்கள் -ஆறும்
(15) புத்தி = அறிவு. இது ந்யாய மதத்தில் ப்ரத்யக்ஷமானது அதாவது மனதால் அறியப் படுவது.
ஆனால் மீமாம்ஸையில் இதை அநுமானம் தான் செய்யலாம்.
(16) ஸுகம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ்மிகம் (ஸ்வர்க இன்பம்), அபவர்கம் (மோக் ஷஇன் பம்) என்று மூ வகைப் பட்டது
(17) துக்கம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ் மிகம் (நரகத் துன்பம்) என்று இரண்டு வகைப் பட்டது
(18) இச்சை = ஆசை (19) த்வேஷம் = வெறுப்பு (20) ப்ரயத்நம் = முயற்சி
(21) ஸம்ஸ்காரம் = இது மூ வகைப்படும் – வேகம், பாவனை , ஸ்திதி ஸ்தாபகம் என்று.

(22) த்வநி = இது வாயுவின் குணம். நம் தொண்டை /வாயின் வியாபாரத்தால்
வாயுவில் இந்த குணம் ஏற்பட்டு, இது தான் சப்தத்தை வெளிப் படுத்துகிறது.
(23) ப்ராகட்யம் = ஒரு பொருளில் உண் டாகும் ’அறியப் படுதல்’ என்ற குணம்.
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்பட்டதை நாம் அநுமானம் செய்யலாம்.
(24) சக்தி = திறமை . இது இரண்டு வகைப்படும்
(1) லௌகிக சக்தி –நெருப்புக்கு எரிக்கும் சக்தி, நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி முதலியவை
(2) வைதிக சக்தி – ஜ்யோதிஷ் டோமம் முதலான வற்றுக்கு ஸ்வர்க்கத்தை ஏற்படுத்தும் சக்தி.
அபூர்வம் என்ற ஒன்றைக் கல்பிக்கிறார்கள்

கர்மம் அபாவம்
• மீமாம்ஸா தர்ஸநத்தில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் கர்மம் எனப்படும் க்ரியை / செயல் ஆகும்.
• இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும், ஏன் என்றால் விபு த்ரவ்யங்களால் நகர இயலாது.
• இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது.
• உத்ஷேபநம் (மேலே செல்லுதல்)முதலான வடிவங்களில் இருக்கும்
• ஸம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது

• மீமாம்ஸா தர்ஸநத்தின் ஏற்கப்பட்ட ஐந்தாவது பதார்த்தம் அபாவம்.
• இது ப்ராபாகரர்கள் என்ற மீமாம்ஸகர்களால் ஏற்கப்பட வில்லை . ஆனால் பாட்டர்களால் ஏற்கப் பட்டுள்ளது.
• ஒது ப்ராகபாவம் (ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் இருக்கும் அதன் அபாவம்),
ப்ரத்வம்ஸா பாவம் (ஒரு பொருளின் அழிவு), அத்யந்தா பாவம் (ஒரு பொருள் இருக்கவே முடியாத இடத்தில் இருக்கும் அதன் அபாவம்) மற்றும்
அந்யோந்யா பாவம் (பொருட்களுக்கு இடையுள் இருக்கும் வேறுபாடு) என்று நான்கு வகைப்படும்.

• ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்ற ப்ரமாணத்தால் இந்த அபாவம் க்ரஹிக்கப் படுகிறது என்று பாட்ட மீமாம்ஸகர் களின் கூற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: