ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -11-20—

பாடம் -11-யாகத்தின் அறிமுகம்

யாகம் என்றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை ஸமர்பித்தல் / த்யாகம் செய்தல் .
ஆகையால், எந்த ஒரு யாகத்திற்கும்
அதில் கொடுக்கப்படும் த்ரவ்யமும் வணங்கப்படும் தேவதையும் தான் முக்கியமான பகுதிகள்.
• த்ரவ்யம் – பால் (பயஸ்), தயிர் (ததி), நெய் (ஆஜ்யம்), ப்ருஷதாஜ்யம் (தயிர் கலந்த நெய்),
ஆமிக்ஷா (கொதிக்கும் பாலில் தயிரைச் சேர்த்தால் கிடைக்கும் கெட்டியான த்ரவ்யம்),
வாஜிநம் (அதே செயலில் கிடைக்கும் த்ரவமான த்ரவ்யம்), புரோடாசம் (தோசை போன்றது),
சரு (கஞ்சி வடிக்காத சோறு), யவாகூ (அரிசிக்கஞ்சி), ஸோமம் என்ற கொடியின் ரஸம் என்று
பல த்ரவ்யங்களால் செய்யப்படும் யாகங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன
• தேவதை – அக்நி, இந்த்ரன், ஸோமன், வருணன், வாயு, மித்ரன்,
ருத்ரன், ப்ரஜாபதி, விஷ்ணு போன்ற பல தேவதைகள் வேதங்களில் சொல்லப் பட்டுள்ளனர்.
• சில இடங்களில் இரண்டு தேவதைகள் சேர்ந்து ஒரு த்ரவ்யத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
எடுத்துக்காட்டு –
இந்த்ராக்நீ (இந்த்ரனும் அக்நியும் சேர்ந்து), அக்நாேிஷ்ணூ (அக்நியும் விஷ்ணுவும் சேர்ந்து), முதலானவை .
• சில யாகங்களில் இரண்டு தேவதைகளுக்கு தனித்தனியே ஆகுதிகளைக் கொடுக்க வேண்டும்.

யாகம் செய்ய யோக்யதை

ஒருவன் யாகம் செய்ய வேண்டும் என்றால் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்
• (1) வித்யை – அத்யயநம் செய்து, அதன் மூலம் வேதத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும்
• (2) அக்நி – ஆதாநம் என்ற வைதிகச் செயலைச் செய்து, அதன் மூலம் மூன்று அக்நிகளைப் பெற்றிருக்க வேண்டும்
• (3) ஸாமர்த்யம் – யாகத்தைச் செய்வதற்கு வேண்டிய பொருள், பண வசதி, உடல் ஆரோக்யம், உதவிக்கு மக்கள், முதலியவை –

ஆதானம்

ஒருவனுடைய விவாஹத்தில் (கல்யாணத்தில்) உபயோகிக்கப்பட்ட அக்நிக்கு வைவாஹிகாக்நி என்று பெயர்.
அதை விவாஹம் முதல் ரக்ஷித்து வைத்து, அதில் சில ஹோமங்களை
தினமும் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.
ஸ்மார்த்த அக்னி ஸ்ம்ருதியில் சொல்லிய அக்னி
அத்தை ஸ்ருதியில் சொன்ன அக்னியாக மாற்றி உயர்ந்த ஆதானம் செய்ய வேண்டும்

• அந்த அக்நிக்கே ஆதாநம் என்ற ஒரு ஸம்ஸ்காரத்தைச் செய்தால், அது உயர்வு பெற்று யாகம் செய்வதற்குத்
தகுந்த அக்நியாக ஆகிறது. அந்த அக்நியில் தான் ஒருவன் வேதம் கூறிய யாகங்களைச் செய்ய வேண்டும்.
• ஒருவன் தவறாமல் செய்ய வேண்டிய வைதிகச் செயல்களுள், அக்நி ஹோத்ரம் என்ற ஹோமமும்,
தர்சபூர்ணமாஸம் என்ற யாகமும், அக்நிஷ்டோமம் (வருஷத்துக்கு ஒரு தடவை )என்ற யாகமும் உள்ளன.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஹோத்ரம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஹோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக தர்சபூர்ணமாஸம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
இஷ்டிபூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தைச் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஸோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.

மூன்று அக்நிகள்
ஸ்ரவ்த அக்னி மூன்று -த்ரேத அக்னிகள் -குளித்து மூன்று அனலை ஓம்பும் –

ஆதாநம் செய்வதன் மூலம் ஒருவனுக்கு மூன்று அக்நிகள் ஸித்திக்கின்றன –
கார்ஹ பத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி
• (1) கார்ஹபத்யம் – இது மேற்கு திசையில் வட்டமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் யாகத்தில் தேவதைக்குக் கொடுக்கப் போகும் த்ரவ்யத்தை சமையல் செய்ய வேண்டும்.
• (2) ஆஹவநீயம் – இது கிழக்கு திசையில் சதுரமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் அநேகமாக யாகங்களிலும் ஹோமங்களிலும் ஆஹுதிகளைக் கொடுக்க வேண்டும்.
• (3) தக்ஷிணாக்நி – இது தெற்கு திசையில் அர்த்த-சந்த்ரம் வடித்திலுள்ள குண்டத்தில் வைக்கப் பட வேண்டும்.
இதில் தான், யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு இடப் போகும் அன்னத்தை ஸமைக்க வேண்டும்.
• இவற்றில், கார்ஹபத்யம் தான் தினமும் வீட்டில் ரக்ஷிக்கப்பட வேண்டும்.
ஆஹவநீயம்-தக்ஷிணாக்நி-இதில் சேர்த்து விடலாம் -பின்பு இதில் இருந்து எடுத்து இவற்றைத் தொடங்கலாம்
அதில் தான் தினமும் செய்ய வேண்டிய அக்நி ஹோத்ரம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்.
எப்பொழுது வேறு யாகங்களைச் செய்கிறோமோ , அப்பொழுது கார்ஹபத்யத்திலிருந்து
தணல்களை எடுத்துச் சென்று ஆஹவநீயத்தையும் தக்ஷிணாக்நியையும் மூட்டிக் கொள்ள வேண்டும்.

அக்நி ஹோத்ரம்

ஆதாநம் செய்து, மூன்று அக்நிகளை உடைய ஒருவன், தினமும் காலையிலும் மாலையிலும்
அக்நி ஹோத்ரம் என்ற ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
இன்று மாலையும், நாளை காலையும் செய்யும் ஹோமங்கள் சேர்ந்து ஒரு
அக்நி ஹோத்ரம் என்று அழைக்கப் படுகின்றன.
• அக்நிஹோத்ரத்தை பால், தயிர், நெய், கஞ்சி முதலான பல த்ரவ்யங்களைக் கொண்டு செய்யலாம்.
ஆனால், முதன் முதலில் எந்த த்ரவ்யத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ , அதைத் தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
• இந்த அக்நி ஹோத்ரத்தில், மாலைப் பொழுதில், அக்நி தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்யவேண்டும்.
காலைப் பொழுதில், ஸூர்ய தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்ய வேண்டும்-

சாயங்காலம் தொடங்கி அடுத்த நாள் காலை செய்வது தான் ஒரு அக்னி ஹோத்ரம் –
காலையில் தானே ஆதாயம் பண்ணி மாலையில் தொடங்குவதால் –

தர்ச பூர்ண மாஸம்

ஆதாநம் செய்து கொண்டு மூன்று அக்நிகளை உடைய ஒவ் வொருவனும், பர்வ காலங்களில்
(பௌர்ணமி மற்றும் அமாவாஸை காலங்களில்) ஒரு கர்மத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு தான் தர்ச-பூர்ணமாஸம் என்று பெயர்.-தர்சம் என்றால் அமாவாஸை.
• இந்த தர்சபூர்ணமாஸம் என்பது 6 யாகங்களின் கூட்டம். அதில்
• பௌர்ணமியில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• நெய்யைக் கொண்டு விஷ்ணுவுக்கோ , ப்ரஜாபதிக்கோ , அக்நீஷோமீயர்களுக்கோ செய்வது – உபாம்சு யஜம் என்று பெயர்
• ஏகாதச கபாலம் (பதினொரு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நீ ஷோமர்கள் என்ற தேவதைக்காகச் செய்யும் யாகம்
• அமாவாஸையில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• பாலைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் பய
• தயிரைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் தயி
• இந்த ஆறு யாகங்களுக்கு ப்ரதான யாகங்கள் என்று பெயர், ஏன் என்றால் அவை தான் நாம் ஆசைப்படும்
பயனைப் பெற்றுத் தரப் போகின்றன.

பவுர்ணமி தொடங்கி பிரதமை காலை பண்ண வேண்டும்
அமாவாசை தொடங்கி இதுவும் பிரதமை காலை பண்ண வேண்டும்

எட்டு கட்டுகள் தர்ப்பம் பரப்பி வைக்க
பரித்ராணாம் -சுற்றி வைப்பது
ஆதார சமித்துகள்
21 சமித்துகள்

நெல்லை எடுத்து ப்ரோக்ஷணம் உலூகலம் குத்தி பத்னி கார்யம்
அம்மியில் அரைப்பது பேஷனம்
வறுத்து தீர்த்தம் வைத்து பிண்டம் கபாலத்தில் வைத்து புரோடாசம் பண்ணும் முறை

அத்வர்யு
ஆக்னீஸ்வரன் உதவி
ஹோதா மந்த்ரம் சொல்லி
ப்ரம்மா மேற்பார்வை அனுமதி
நால்வரும் எஜமானுக்கு வேண்டும்

தர்சபூர்ண மாஸத்தின் அங்கங்கள் –

இந்த தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்திற்கு அங்கமாக பல யாகங்களும் ஹோமங்களும் விதிக்கப்பட்டுள்ளன
ப்ரதான யாகங்களைச் செய்வதற்கு முன்னால் செய்யப் பட வேண்டியவை
1. ஆகார ஹோமங்கள் – மந்த்ரம் சொல்லாமல் ப்ரஜாபதி தேவதைக்கும் மந்த்ரம்
சொல்லி இந்த்ரனுக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு ஹோமங்கள்
2. ப்ரயாஜங்கள் – அக்நி முதலான தேவதைகளுக்காக நெய்யைக் கொண்டு
செய்யும் ஐந்து யாகங்கள். மீதமிருக்கும் நெய்யை ப்ரதான யாகங்களின் ஹவிஸ்ஸூகளில் சேர்க்க வேண்டும்.
3. ஆஜ்ய பாகங்கள் – அக்நி தேவதைக்கும் ஸோமன் என்ற தேவதைக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு யாகங்கள்

ப்ரதான யாகங்களைச் செய்த பிறகு சேய்யப்பட வேண்டியவை .
1. ஸ்விஷ்டக்ருத் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸூகளிலிருந்து சிறு சிறு
துண்டுகஸள எடுத்து, அக்நி தேவதை க்காகச் செய்யப்படும் ஒரு யாகம்
2. அநுயாஜங்கள் – பர்ஹிஸ், நராசம்ஸன், ஸ்விஷ்டக்ருத் என்ற மூன்று தேவதை களுக்காக நெய்யைக் கொண்டு செய்யும் மூன்று யாகங்கள்
3. பத்நீ ஸம்யாஜங்கள் – ஸோமன், த்வஷ்டா, தேவ பத்நிகள், க்ருஹபதி என்ற அக்நி ஆகிய நால்வருக்கும் செய்யப் படும் நான்கு யாகங்கள்
4. பார்வண ஹோமம் – பௌர்ணமி அல்லது அமாவாஸை தேவதைக்காகச் செய்யும் ஒரு ஹோமம்
5. நாரிஷ்ட ஹோமம் – யாகம் செய்பவனின் வயிற்றில் இருக்கும் ஜாடராக்நியும்,
அவனது ப்ராண வாயுவும் சிறப்பாக இருப்பதற்காகச் செய்யும் ஏழு ஹோமங்கள்
6. ஸமிஷ்டயஜு: – ஒரு ஹோமம்
7. ப்ராயச்சித்த ஹோமங்கள் – வ்ரதத்தில் தவறுதல்களுக்காகவோ மந்த்ரங்களில் தவறுகளுக்காகவோ செய்யப்படும் ப்ராயச்சித்தங்கள்

பிரதிபத்தி கர்மங்கள் –

யாகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீதமில்லாமல் கௌரவத்வதோடு செலழிப்பதற்காக
வேதமே ப்ரதிபத்தி கர்மங்களை விதிக்கிறது.
• ப்ரதான யாகங்களைச் செய்து முடித்தவுடன், அந்த ஹவிஸ்ஸின் மீதமிருக்கும் பகுதியைச் செலழிப்பதற்காக
ஸ்விஷ்டக்ருத் யாகம் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இந்த யாகம் செய்யவேண்டும்.
• ஒவ் வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் ஒரு துண்டை எடுத்து, அதை ப்ரஹ்மா என்ற ருத்விக் உண்ணவேண்டும்.
இதற்கு ப்ராசித்ரம் என்று பெயர்.
• ஒவ்வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் இரண்டிரண்டு துண்டுகளை எடுத்து அதை ப்ரஹ்ம, அத்வர்யு, ஹோதா, ஆக்நீத்ரன் என்ற நால்வரும்
உண்ணவேண்டும். இதற்கு இடா பக்ஷணம் என்று பெயர்
• அக்நிக்காக செய்யப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, நான்கு ரித்விக்குகளும் உண்டு விடவேண்டும்.
• நெல்லிலிருந்து நீக்கப்பட்ட உமியை , கபாலத்தில் வைத்து, ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இது ராக்ஷைர்களுக்காக
• நெல்லின் தவிடை நெய்யில் சேர்த்து, கார்ஹபத்யம் என்ற அக்நியில் ஹோமம் செய்யவேண்டும்
• அரிசியை அரைக்கப் பயன்பட்ட அம்மியிலும் குழயியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவைச் சுரண்டு, அதை நெய்யில் சேர்த்து,
பிஷ்டலேபம் / பலீகரணம் என்ற ஹோமத்தைச் செய்யவேண்டும்.
• ப்ரஸ்தரம் என்ற தர்பக்கட்டை நெருப்பில் இடகேண்டும்
• அரிசி மாவை பிண்டமாக்கப் பயன்படுத்திய ப்ரணீதா என்ற ஜலத்தைக் கொண்டு யஜமாநன் முகம் துடைக்க வேண்டும்.
இது தான் இந்த யாகத்தின் அவப்ருத ஸ்நானம் ஆகிறது.

எஜமானன் செய்ய வேண்டிய கர்மங்கள்

ஒரு யாகத்தில் யஜமாநன் அவசியம் செய்ய வேண்டிய கர்மங்களுள் சில:
• தேவதைகளை ஸ்வீகரித்து வரவேற்றல்
• ருத்விக்குகளைத் தேர்ந்தெடுத்து, யாகத்திற்கு அழைத்து, வரித்தல்
• வ்ரதமிருத்தல், அதைத் தொடங்கவும் முடிக்கவும் தேவையான கர்மங்களைச் செய்தல்
• யாகத்தின் முக்கியப் பகுதி – தேவதையைக் குறித்து த்ரவ்யத்தைத் த்யாகம் செய்தல்.
சொத்து அவனதானபடியால், யஜமாநன் தான் இதைச் செய்யவேண்டும். ரித்விக்குகளைக் கொண்டு செய்ய முடியாது
• ருத்விக்குகளுக்கு தக்ஷிணையை வழங்குதல்
• இவற்றைத் தவிர்ந்த மற்ற செயல்களை எல்லாம் ருத்விக்குகளைக் கொண்டு யஜமாநன் செய்யலாம்

———————

நான்காம் அத்யாயம் –
பிரமாணங்கள் -பேதங்கள் -அங்கங்கள் கீழே பார்த்தோம்
சேஷ சேஷித்வம் அறிந்து ஏது பிரயோஜனம் எதிர் பார்ப்பு வருமே –
ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கம் ஆகும் -எது பிரயோஜனம் என்ற கேள்வி வருமே
இதுவே -ப்ரயுக்தம்-இத்தை விவரித்து சொல்லும் இதில் –
இவற்றைப் பார்க்கும் முன்பு அங்கங்களின் வகைகளைப் பற்றி அறிய வேண்டுமே
அவற்றைப் பார்ப்போம்

பாடம் -12-அங்கங்களின் வகைகள்

மூன்றாம் அத்யாயத்தில் ஒரு வைதிக கர்மத்தின் அங்கங்களை எப்படி அறியலாம் என்று பார்த்தோம்.
அந்த அங்கங்கள் இரண்டு வகைகளாக உள்ளன.
• (1) ஸித்த ரூபம் – ஸித்தமாக (தயாராக) இருக்கும் பொருள்கள்.எடுத்துக்காட்டு –
பால், தயிர், நெய், கரண்டி, புரோடாசம், ரித்விக், புரசக்கிளை , தர்பம், காலம், தேசம், முதலானவை ,
• (2) க்ரியா ரூபம் – செயல் வடிவமான அங்கங்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷித்தல், உலக்கையால் குத்துதல், அரைத்தல், சமைத்தல்,
அங்கமான யாகங்கள், அங்கமான ஹோமங்கள், முதலானவை

• க்ரியை வடிமான அங்கங்களை மறுபடியும் இரண்டாகப் பிரிக்கலாம் –
• (1) ஸந்நிபத்ய உபகாரகம் – ஒரு யாகத்தின் அங்கமான த்ரவ்யம் முதலானவற்றுக்கு அங்கமாக இருந்து
உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணம், உலக்கையால் குத்துதல் முதலியவை யாகத்தின் அங்கமான நெல்லினுடைய அங்கங்கள்.
ஸ்விஷ்டக்ருத் என்ற அங்க யாகம், ப்ரதான யாகத்திற்கு அங்கமான ஹவிஸ்ஸை சரியாகச் செலவழிப்பதற்காக
உள்ளபடியால் அது அந்த ஹவிஸ்ஸின் அங்கம்.
• (2) ஆராத் உபகாரகம் – த்ரவ்யம் முதலானவை மூலமாக அல்லாமல் நேரடியாக
அத்ருஷ்டம் / அபூவர்ம் / புண்யம் வழியாக ஒரு யாகத்திற்கு உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் முதலானவை

ஸந்நிபத்ய உபகாரங்களின் வகைகள்
ஸந்நிபத்ய உபகாரகங்களான செயல்கள் மூன்று வகைப்படும் –
• (1) த்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்கு புலப்படும்) ஒரு நன்மையைக் / பயனைக் கொடுக்கக் கூடியவை .
எடுத்துக்காட்டு
– உலக்கையால் குத்துதல் என்பது நெல்லின் அங்கம். அது, உமியை நீக்குதல் என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்திற்காகத் தான்
செய்யப்படுகிறது.
அதே போல் அரிசியை அரைத்தல் என்பதும் த்ருஷ்டார்த்தம்,
அரைக்காவிட்டால் யாகத்திற்குத் தேவையான புரோடாசத்தைச் செய்ய முடியாதே .
• (2) அத்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான பலன்களை ஏற்படுத்தாமல்,
அத்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்குப் புலப்படாத) அபூவர்ம் / புண்யம் என்ற பயனை ஏற்படுத்தக்கூடியவை .
எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணாம் செய்வதால் நெல்லில் எந்த மாற்றமும் தெரியவில்லை , ஆனால் அதில் ஒரு அத்ருஷ்டம் / அபூர்வம் /
புண்யம் உண்டாகியிருக்கும். அந்த அபூர்வத்வதாடு கூடின நெல்லை அரைத்து, புரோடாசம் செய்து
தேவதைக்குக் கொடுத்தால்தான் பயன் கிடைக்கும்.
ப்ரோக்ஷணத்தால் ஏற்படும் அபூர்வம் இல்லாத நெல்லை யாகத்தில் பயன்படுத்தினால் பயனில்லை
• (3) த்ருஷ்டாத்ருஷ்டார்த்தம் – ஒரே ஸ்விஷ்டக்ருத் யாகம் என்ற செயல், ப்ரதான யாகத்தில்
உபயோகித்த நெல்லை அக்நியில் சேர்த்து ’செலவழித்தல்’ /
’ப்ரதிபத்தி’ என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உடையபடியால் த்ருஷ்டார்த்தமாயும்,
அதை வேறே ஒரு தேவதைக்குக் கொடுக்கிறபடியால் அந்த யாகம் என்ற அம்சம் அத்ருஷ்டார்த்தம் தான்.
ஆகையால், இந்தச் செயல் இரண்டு வகையான பலன்களையும் ஏற்படுத்துகிறது.

யாகத்தில் இருந்து அபூர்வங்கள்
இப்பொழுது நாம் செய்யும் யாகம் தானம் முதலான செயல்கள் அனைத்தும் சில வினாடிகளில்
முடிந்துவிடக்கூடியவை , அழிந்துவிடக்கூடியவை .
ஆனால், ஸ்வர்கம் முதலான பயன்கள் பல காலம் கழித்துக் கிடைக்கின்றன. ஆகையால், யாகம் ஸ்வர்த்துக்குக்
காரணம் என்பதை மெய்ப்பிப்பதற்காக, அபூர்வம் என்று ஒன்றைக் கல்பிக்கிறோம். யாகம் முடிந்துவிட்டாலும், யாகத்திலிருந்து
உண்டான அபூர்வம் நிலைத்திருந்து பயனைக் கொடுக்கும். இதற்கு ப்ரதான அபூர்வம் அல்லது உத்பத்தி அபூர்வம் என்று பெயர்.
• அதே போல் அங்கங்கள் விஷயத்திலும் அபூர்வங்கள் தேவை
ப்ரோக்ஷணம் செய்து பல நேரம் கழித்து தான் ப்ரதான யாகம் செய்யப்படிகிறது. ஆனால், ப்ரோக்ஷணம் என்பது யாகத்திற்கு
உபகாரகம் (உதவி செய்வது) என்று கூறியுள்ளோம். ஆகையால், ப்ரோக்ஷணம் ஒரு அபூர்வத்தை ஏற்படுத்திவிட்டு தான்
முடிந்துவிடும். அந்த அபூர்வம் தான் தேவையான காலம் இருந்து உபகாரத்தைச் செய்துேவிட்டு அழியும்.
இவற்றுக்கு அங்க-அபூர்வங்கள் என்று பெயர்.
• ஸந்நிபத்ய உபகாரகங்கள், ஆராத் உபகாரகங்கள் இரண்டிலிருந்தும் அபூர்வங்கள் தோன்றி ப்ரதான யாகத்திற்குத் துணை புரிகின்றன.
ஆனால், அவை உதவி செய்யும் முறை வேறு

அங்க அபூர்வங்களின் உதவிகள்

பிரதான யாகத்துக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய ஆராத் உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள்
இவை உண்டாக்குவதால் உதவியால்
பிரதான யாகத்துக்கு முன் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் -உதவியால் -பிரதான யாகம்
ப்ரதான யாகம்–உத்பத்தி அபூர்வம் (ப்ரதான யாகம் செய்வதனால் தோன்றுவது )–பரம அபூர்வம் -முழு யாகமும் முடிந்த உடன் ஏற்படுவது –ஸ்வர்க்கம்
பிரதான யாகத்துக்கு பின் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் – பாது காத்தலில் உதவும்

———————–

பாடம் -13-ப்ரயோஜகத்வம்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்களும்,
இரண்டாவது அத்யாயத்தில் தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகளையும்
மூன்றாவது அத்யாயத்தில் எந்த கர்மம் எந்த கர்மத்துக்கு அங்கம் என்பதையும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
ஸ்ரீ ஜைமினி நியாய மாலை -அத்யாய சங்கதி –

• அடுத்ததாக நான்காவது அத்யாயத்தில் ப்ரயோஜகத்வம் என்ற விஷயம் கூறப்படுகிறது.
• ஒரே செயல் / பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்.
ஆனால் அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஒன்று தான் அந்த கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்,
அதாவது அநுஷ்டாபகமாக இருக்கும்.
• ஒருவர் பல செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவரது முக்கியமான கடமை என்று ஒன்று இருக்கும்.
அதைச் செய்வதற்காகத் தான் அவர் இருக்கிறார், அவர் அதிகப்படியாக வேறு பொருப்புகளையும் பார்க்கலாம்
ஆனால் அந்த முக்கிய காரியம் இல்லை என்றால் அவர் இருக்கமாட்டார்.
• அதே போல் தான், யாகங்களில் ஒரே பொருள் / செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்
ஆனால் அவற்றுள் ஒன்று தான் அதற்கு ப்ரயோஜகமாக (செய்விப்பதாக) இருக்கும்.
அதற்கு தான் ப்ரயோஜகம் என்று பெயர். இந்த கர்மத்துக்கு ப்ரயோஜ்யம் என்று பெயர்

• எடுத்துக் காட்டு –
தர்ச பூர்ணமாஸம் என்ற யாகத்தில் புரோடாசம் (தோசை ) என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு ஸமர்பிக்க வேண்டும்.
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
இஸத வேதம் “கபாலங்களில் புரோடாசத்தை சமைக்கவேண்டும்” என்ற விதியில் சொல்லுகிறது.
• அதே கபாலங்களைக் கொண்டுதான், நெல்லிலிருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்கவேண்டும் என்றும் கூறுகிறது வேதம்,
“புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும்” என்ற கட்டளையால்.
• கபாலத்தைச் செய்வது புரோடாசத்தைச் சமைக்கத் தான்.
அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அவ்வளவே. ஆகையால்,
புரோடாசம் செய்வது ப்ரயோஜகம் + அங்கி,
கபாலம் ப்ரயோஜ்யம் + அங்கம்.
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிற ப்ரயோஜகம் ஆகாது.
• இதன் விளைவு என்ன வென்றால், ஒரு யாகத்தில் புரோடாசம் இல்லை என்றால், அந்த யாகத்தில்
கபாலங்களைச் செய்யத் தேவையில்லை
. அந்த யாகத்தில் சரு (கஞ்சி வடிக்காத அரிசிச் சோறு), யவாகு (அரிசிக் கஞ்சி) முதலானவற்றுக்காக நெல்லைக் குத்தி உமி
உண்டாகியிருந்தாலும், அது நீக்கப்பட் வேண்டும் என்றால் வேறே ஓரு முறையில் தான் நீக்க வேண்டும்,
கபாலங்களை உபயோகிக்க முடியாது

க்ரத்வர்த்தமும் புருஷார்த்தம்
க்ரது -வைதிக கர்மங்களுக்காக செய்பவை க்ரத் அர்த்தம்
புருஷனுக்காக செய்பவை புருஷார்த்தம்
பலம் இச்சா -அடைவிக்கும் வழி -அதில் இச்சை –
புருஷார்த்தம் -க்ரத் அர்த்தம் -இரண்டும் உண்டே

அங்கங்கள் இரண்டு வகைப்பட்டுள்ளன – க்ரத்வர்தம் என்றும் புருஷார்தம் என்றும்.
• புருஷனுடைய ஒரு பயனுக்காக எந்தச் செயல் செய்யப்படுகிறதோ , அது புருஷார்த்தம் என்று
அழைக்கப்படுகிறது, எடுத்துக்காட்டு –
ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகம் செய்யப்படுகிறது,
மழைக்காக காரீரீ என்ற யாகம் செய்யப்படுகிறது.-இவை புருஷார்த்தங்கள்.
தானாக எந்த ஒரு பொருளில் ஆசை ஏற்படுமோ , அதற்கு ஸாதநமாக (உபாயமாக /
வழியாக) விதிக்கப்பட்ட செயல் புருஷார்த்தம் ஆகும்.
• க்ரது என்றால் யாகம் முதலான வைதிகச் செயல்கள்.
அந்த க்ரதுவின் பூர்த்திக்காகச் (முழுமைக்காகச்) செய்யப்படுவது க்ரத்வர்த்தம் ஆகும். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள் போன்ற பல யாகங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கமாகச் செய்யப்படுகின்றன.
அவற்றுக்குத் தனியாகப் பலம் எதுவும் கிடையாது. தர்சபூர்ணமாஸத்தின் பூர்த்தி தான் பலம்.
இந்த அங்கங்களைச் செய்யா விட்டால் தர்சபூர்ணமாஸம் என்ற யாகம் முழுமை பெறாது, அதாவது,
அது தன் பலத்தைக் கொடுக்கும் சக்தி உடையதாக ஆகாது.

கோதோஹநம் புருஷார்த்தம்
தர்சபூர்ணமாஸ யாகம் ஒருவனுக்கு நித்ய கர்மமாக (தவறாமல் செய்ய வேண்டிய கர்மமாக) விதிக்கப்பட்டுள்ைது.
அதில், தண்ணீரை ப்ரணயனம் செய்ய (ஓரிடத்திலிருந்து மற்ற ஓரிடத்திற்கு எடுத்துச் செல்ல) சமஸம் என்ற பாத்திரம்
பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யாகத்துக்கு ப்ரணயனம் அங்கம், ப்ரணயனத்துக்கு சமஸம் என்ற பாத்திரம் அங்கம்.
ஆகையால், சமஸம் க்ரத்வர்த்தம் அதாவது யாகத்தின் முழுமைக்காகப் பயன்படும் பொருள் தான்.
• அதே யாகத்தைச் செய்பவன், பசுக்களைப் பெற ஆசைப்பட்டால், சமஸத்திற்கு பதிலாக கோதோஹநம் என்ற
(மாட்டைக் கறப்பதற்கான) பாத்திரத்தால் ப்ரணயனம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது.
ஆனால், அந்த கோதோஹநம் என்ற பாத்திரம் யாகத்தின் அங்கம் அல்ல.
பசுவிற்காகச் செய்யப்படும் முயற்சியில் ஒரு கருவியாக விதிக்கப்பட்டபடியால்
கோதோஹநம் நேரடியாக பசு என்ற பலத்துக்கு தான் அங்கம். ஆகையால், அது புருஷார்த்தம் ஆகும்.
• ஆகையால், பசுவை அடைய யாகம் ஸாதநம் அல்ல, பாத்திரம் தான் ஸாதநம்.
ஆனால், தனியாக இருக்கும் பாத்திரம் எந்தப் பயனையும் ஏற்படுத்த முடியாது என்பதால் அதை
தர்சபூர்ணமாஸத்தில் ப்ரணயனத்தில் பயன்படுத்தினால் பசுமாடு கிடைக்கும்.
இத்தை-கோதோஹநத்தை- உபயோகித்தால் நித்ய கர்மம் ஆகாரம் மாறி காம்ய கர்மம் ஆகுமே –

உதிக்கும் ஸூர்யனைக் காணாமை -புருஷார்த்தம்
• வேதத்தில், குருகுலத்தில் வேத அத்யயநம் முடித்துப் புறப்படும் மாணவனின் வ்ரதங்களைச் சொல்லுகிறது.
அதில் “ந ஈவேத உத்யந்தம் ஆதித்யம்” என்று ஒரு கட்டளை உள்ளது.
• பூர்வ பக்ஷம் –
“உதிக்கும் ஸூர்யனைக் காணுதல் என்ற செயலைச் செய்யாதே ” என்று இந்த வாக்கியம் கூறுகிறது.
செய்யாதே என்று சொல்கிறபடியால் இது நிஷேதம் (மறுப்பு) ஆகும்.
ஒரு செயல் நடக்கும் வாய்ப்பு இருந்தால் தான் அதை மறுக்க முடியும்.
ஆகையால், எந்த யாகத்தில் ஸூர்யனைக் காண வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ , அதே யாகத்தில் ஸூர்யனைக் காணாதே
என்று இந்த விதி கூறுகிறது. வேதமே ஒரு செயலைச் செய் என்றும் செய்யாதே என்றும் கூறினால்,
இரண்டு வேத வாக்கியங்களும் தவறாக இருக்க முடியாதபடியால், இரண்டு அநுஷ்டானமுமே சரி தான்.
காண்பதோ காணாமலிருப்பதோ நம் விருப்பத்தைப் பொருத்தது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு விகல்பம் என்று பெயர். இந்த மறுப்பு (நிஷேதம்) யாகத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டபடியால் க்ரத்வர்த்தம் ஆகும்.
• ஸித்தாந்தம் –
இந்த ப்ரகரணம் வ்ரதத்தைச் சொல்ல வந்த்து. வ்ரதம் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் தான்.
ஆகையால், அந்த ஸந்தர்பத்தில், ஒரு மறுப்பைச் செய்து, “இதைச் செய்யாமலிரு” என்று வேதம் சொல்வது ஒட்டாது.
ஆகையால், இங்கும் ஒரு விதி (கட்டளை ) தான் இருக்க வேண்டும், நிஷேதம் (மறுப்பு) அல்ல.
• ஆகையால், “உதிக்கும் ஆதித்யனைக் காணாதே ” என்று பொருள் அல்ல.
“உதிக்கும் ஆதித்யனைக் காணாமையைச் செய்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
ஆனால், காணாமையை எப்படி ஒருவர் செய்ய முடியும்?
அதனால், “ஆதித்யனைக் காணாமையை ஸங்கல்பம் செய்” என்று பொருள் கிடைக்கிறது.
• அப்படிச் செய்யும் ஸங்கல்பமும், யாகத்துக்காகச் செய்யும் க்ரத்வர்த்தம் அல்ல.
அருகிலிருக்கும் அர்த்தவாதத்தில் ஆதித்யனைக் கண்டால் பாபம் ஏற்படும் என்று சொல்லப்பட்டபடியால்,
பாபம் விலகுவது தான் இதற்கு ப்ரயோஜநம் ஆகும்.
ஆகையால், ஆதித்யனைக் காணாமலிருக்கும் ஸங்கல்பம் புருஷார்த்தம் தான்.

ப்ரபத்தியைக் காட்டிலும் ஸம்ஸ்காரம் சிறந்தது
• ஸோம யாகத்தில் யஜமாநன் சில நியமங்களைக் கடைப்பிடிப்பதாக தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது யஜமாநனிடம் ஒரு தண்டம் (தடி) கொடுக்கப்படும். ஸோம லதையை வாங்கிய உடன் அந்த
தண்டத்தை அவர் மைத்ராேருணன் என்ற ரித்விக்கிடம் கொடுக்க வேண்டும் என்றும்.
அந்த ஸமத்ராேருணர், தண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு தான் யாகத்தில்
அவரது கார்யங்களைச் செய்ய வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது
• ஸந்தேஹம் – யஜமாநன் தான் உபயோகித்த தண்டத்தை ஸமத்ராேருணனுக்கு தானம் செய்தல் என்பது,
உபயோகிக்கப்பட்ட தண்டத்திற்கு ப்ரதிபத்தி கர்மம் (நல் வழியில் செலவழிக்கும் கர்மம்) ஆகுமா?
அல்லது தண்டத்துக்கு ஸம்ஸ்காரமா?
• பூர்வபக்ஷம் – யஜமாநனுக்கு தண்டத்தின் பயன் முடிந்து விட்டபடியால், அந்த தண்டம் சிறந்த வகையில்
செலவழிக்கப் பட வேண்டும் என்ற தேவை உள்ள படியால், தானம் செய்வது ப்ரதிபத்தி கர்மம் தான்.
ஆகையால்,எத்தனை யஜமாநர்கள் உள்ளார்களோ , அத்தனை தண்டங்களை தானம் செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் – சம்ஸ்காரம் காரியத்துக்கு யோக்யம் தர பரிஷ்காரம் செய்வது தானே –
ஸம்ஸ்காரம் என்றாலே , மேலே நடக்க இருக்கும் ஒரு செயலுக்குத் தகுதி உடையதாக
ஒரு பொருளை ஆக்குவது தான். ஆகையால், யஜமாநனால் உபயோகப் படுத்தப்பட்ட தண்டத்துக்கு
தானம் ப்ரதிபத்தி வடிவமான ஸம்ஸ்காரம் என்று சொல்வதைக் காட்டிலும்,
ஸமத்ராவருன் உபயோகப் படுத்தப்போகிற தண்டத்திற்கு தானம் என்பது ஸம்ஸ்காரம் என்று கொள்ளுதல் சிறந்தது.
ஆகையால், எத்தனை யஜமாநர்களிடம் எத்தனை தண்டங்கள் இருந்தாலும், ஸமத்ராவருணன்
ஒருவனானபடியால் ஒரு தண்டத்தை அவருக்கு தானம் செய்தால் போதும்.

அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் பிரதிபத்தி உயர்ந்தது
ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையைக் கொடுத்த பிறகு,
மான் கொம்பை சாத்வாலம் என்ற குழியில் எரிய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• ஸந்தேஹம் – இப்படி மான் கொம்பை எரிவது ப்ரயாஜங்கள் போல் அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மமா,
அல்லது மான் கொம்பின் ப்ரதிபத்தி கர்மமா?
பிரதிபத்தி கர்மா என்பது யாகத்தில் உபயோகிக்கப் பட்டவற்றை சரியாக பயன்படுத்த செய்வது
• பூர்வபக்ஷம் – இது அபூர்வத்துக்காகச் செய்யப்படும் கர்மம் தான்.
இப்படி எரிவதன் மூலம் அபூர்வம் உண்டாகி, யாகத்திலிருந்து புத்ரன், பசு போன்ற பலன்கள் உண்டாக உதவும்.
இல்லை எனில், இந்தச் செயல் பயனற்றதாகப் போகும்.
• ஸித்தாந்தம் – இது ப்ரதிபத்தி கர்மம் தான். யஜமாநனுக்கு யாகத்தின் போது அரிப்பு ஏற்பட்டால்
சொறிந்து கொள்ளவே மான் கொம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், யாகத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மான் கொம்பு, தான் நல்ல முறையில் செலவழிக்கப் பட வேண்டும்
என்று எதிர்பார்க்கும், அதாவாது, அதற்கு ஒரு ப்ரதிபத்தி கர்மம் தேவைப்படுகிறது.
ஆகையால், மான் கொம்பைக் குழியில் எரிவது அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மம் அல்ல,
ப்ரதிபத்தியாகச் செய்யும் கர்மம் தான்.
அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் ப்ரதிபத்தி உயர்ந்த்து-
சம்ஸ்காரம் பிரதிபத்தியை விட உயர்ந்தது

சமமான இடத்தில் யாகம் செய் -பவ்ர்ணமி அன்று செய் -இவற்றை உண்டாக்கி செய்ய வேண்டாம் –
இவை சித்தம் அன்றோ –
முதல் இரண்டு பாத அர்த்தம் பார்த்தோம்

—————

பாடம் -14-

அங்கம் அங்கி சம்பந்தம் -மூன்றாவது அத்யாயம்
பிரயோஜகத்வம் விசாரம் நான்காவது அத்யாயம் –
அனுஷ்டாபகத்வம் -செய்வித்தல் -கீழே பார்த்தோம் -கபாலம் உண்டு செய்விப்பது புரோடாசம் செய்வதுக்காகவே –
தண்ட தானம் -பிரபத்தி காரியமா -ஸம்ஸ்கார காரியமா -எஜமானன் கொடுத்த தண்டத்தை வைத்துக் கொண்டே
மைத்ரா வருணன் யாகம் இத்தை வைத்து செய்வதால் ஸம்ஸ்காரமே பிரதானம் –
அபூர்வம் இப்பொழுது தான் வரும் -கார்யம் ச பலமாகும் –
விஷயம் விசயம் பூர்வ பக்ஷம் சித்தாந்தம் பலம் ஐந்தையும் அதிகரணத்துக்கு உண்டே –

மூன்றாவது பாகம் -பல சிந்தனை –
தர்ச பூர்ண மாசத்தால் சுவர்க்கம்-பலனைச் சொல்லி -யார் உபகாரம் எதிர் பார்ப்பு -இருப்பதால்
ப்ரயாஜா யாகங்கள் ஐந்தும் இதுக்கு அங்கம்
பிரதான கர்மமே அங்கீ -மற்றவை அங்கம் –

அங்கங்களுக்கு தனி பலன் கிடையாது

• வேதங்களில் ஸ்வர்கம், புத்ரன், பசு, மழை , செழிப்பு போன்ற பல பலன்களை நமக்கு அளிக்கக்கூடிய
பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.அவற்றுக்குப் ப்ரதான கர்மங்கள் என்று பெயர்.
அந்த கர்மங்களுக்கு அங்கமாகவும் பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
• அங்கம் என்பது, ப்ரதான கர்மம் முழுமை பெரிவதற்காக மட்டுமே இருக்கும் ஒன்று.
ஆகையால், ப்ரதான கர்மத்தின் பூர்த்தியைத் தவிர்ந்த வேறோரு பலன் அங்கத்துக்கு இருக்க முடியாது.
• ஆனால் வேதத்தில் சில அங்கங்கஸள உபதேசித்து விட்டு, அவற்றுக்குப் பலனும் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டு – “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய். எவன் ஒருவன் பர்ண மரத்தால்
ஜுஹூவைச் செய்கிறானோ அவன் இழிவான -வசைப் பேச்சை கேட்க வில்லை போன்ற வாக்கியங்கள்.
• பூர்வ பக்ஷம் – தனியாகப் பலன் இருக்கிறபடியால் இவை அங்கங்கள் அல்ல-
•ஸித்தாந்தம் – “பர்ண மரத்தால் ஜுஹூவைச் செய்” என்பது விதி (கட்டளை ). அதில் “வாக்யம்” என்ற
ப்ரமாணத்தால் பர்ண மரம் ஜுஹூவிற்கு அங்கம் என்று உடனடியாகத் தெரிந்து விடுகிறது.
ஆகையால், அடுத்து இருக்கும் வாக்கியம் பலத்தைச் சொல்ல முடியாது, தேவை இல்லாதபடியால்.
எனவே அது வெறும் அர்த்தவாதம் தான், பர்ண மரத்தைப் புகழ்ந்து பேசுகிறது.
மேலும், “வசைச் சொல் கேட்க மாட்டான்” என்று வருங்காலத்தில் சொன்னால் தான் அது பலம்
ஆகும், “கேட்கவில்லை” என்று நிகழ் காலத்தில் வேதம் சொல்லி யுள்ள படியால் அது பலம் ஆகாது –

விநியோக ப்ருதக்த்வம் நியாயம்

உத்பத்தி வாக்கியம் -அக்னி ஹோத்ரம் செய்
பலம் -சுவர்க்கத்தில் ஆசை இருந்தால் இத்தைச் செய்
சுவர்க்கம் -பலம் -கரணம்-அக்னி ஹோத்ரம் – –
எதற்க்கா எப்படி எத்தைக் கொண்டு -மூன்றும் உண்டே
தயிரைக் கொண்டு செய் பாலைக் கொண்டு செய் இதி கர்தவ்யம் -விகல்பம் -தனித்தனி வாக்கியம் –
ஆசைப்படி ஏதாவது ஒன்றை வைத்து செய்யலாம்
எதை வைத்து செய்கிறோமோ வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும்
இந்திரியங்கள் நன்றாக இருக்க ஆசை கொண்டவன் தயிரைக் கொண்டு ஹோமம் -இதுவும் ஒரு வாக்கியம் உண்டே

தர்ச பூர்ண மாச யோகம் சமஸம் கொண்டு நித்ய பிரயோகம்
காம்ய -கோதோஹனம் கொண்டு -இப்படி இருப்து வேறே அங்கே
ஆனால் இங்கு தயிரை வைத்தே நித்ய காம்ய இரண்டுக்கும் சொல்கிறது
சன்யோக ப்ருதக்த்வம்-விநியோக ப்ருதக்த்வம் -இதுவே

அங்கம் என்று போதித்தலுக்கு விநியோகம் செய்தல் என்று பெயர்.
ஒரே செயல் அல்லது பொருள் பல விதி வாக்கியங்களால் பலவற்றுக்கு அங்கமாக விதிக்கப்படலாம்.
இதற்கு விநியோக ப்ருதக்த்வம் என்று பெயர்.
அந்தப் பொருள் அவை அனைத்துக்கும் உதவும் ஸாமர்த்யம் உடையதாக ஆகும்.
• எடுத்துக் காட்டு – அக்நி ஹோத்ரம் என்பது நித்ய கர்மம்.
அதைச் செய்ய தயிர் என்ற த்ரவ்யத்ஸத அங்கமாக விதிக்கிறது வேதம்
“தயிரால் ஹோமம் செய்” என்ற கட்டளையால். ஆகவே, எந்த பலத்திலும் ஆசை இல்லாத போதும்,
நித்ய கர்மமாக அக்நி ஹோத்ரத்தை ஒருவன் செய்யும் போது, தயிர் அந்த ஹோமத்திற்கு அங்கம் ஆகும்.
• அதே சமயம், “அக்நி ஹோத்ரத்தில் உபயோகிக்கப்பட்ட தயிரால் இந்த்ரியங்களின் நலனை அடையலாம்” என்று
மற்ற ஓரு வேத வாக்கியம் கூறுகிறது. இதில், இந்த்ரியங்களின் நலனைக் குறித்துச் செய்யும் முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்டபடியால், தயிர் அந்த பலனுக்கு அங்கம் ஆகிறது.
இங்கு அக்நி ஹோத்ரம் பலத்தைக் கொடுக்கவில்லை , தயிர் தான் பலத்தைக் கொடுக்கும் கருவி ,
ஆனால் வெறும் தயிருக்கு அது ஒட்டாத காரணத்தால் அக்நி ஹோத்ர ஹோமம் அதன் வ்யாபாரமாக / ஆச்ரயமாக உள்ளது.
• இங்கு, இந்த்ரியங்களுக்காக ஒருவன் தயிரால் ஹோமம் செய்தால், தனியாக நித்ய கர்மமாக மறுபடியும்
ஹோமம் செய்யத் தேவையில்லை . சங்கல்பத்தில் தான் வேறு பாடு உண்டு இதில் –
இந்த்ரியங்களுக்கு அங்கமான தயிரே ஹோமத்துக்கும் அங்கமானபடியால் அதற்கும் உதவி விடும்.

அக்னி ஹோத்ரம் நித்யம் செய்து பாபங்களை போக்கி கொள்ளலாம்
பக்தி ஆரம்ப விரோதிகள் போக்க இவை உதவும்
ஒரே கார்யம் பாப ஷயத்துக்கும் பக்தி வளர்க்கவும் -விநியோக பிருத்தக்த்வம் இதுவே –
அதுவே ஸ்வர்க்கத்துக்கும் செய்தால் காம்ய கர்மா ஆகும்
வேதாந்த விசாரத்திலும் அங்க அங்கி பாவங்கள் -விநியோக பிருதக்த்வம் போன்றவை உபயோகிப்போம்
ஆகவே இது அடிப்படையான-தேவையான – ஞானம் தான் –

விஸ்வஜித் நியாயம்

வேதத்திலிருக்கும் விதிகள் (கட்டளைகள்) மனிதனின் முயற்சியை விதிக்கின்றன என்று பார்த்தோம்.
முயற்சி என்றால் அதற்கு மூன்று அம்சங்கள் இருக்கவேண்டும் –
இலக்கு (பலம்), கருவி (கரணம்), செயல்முறை (இதி கர்தவ்யதா).
வேதத்திலும் ஸ்வர்கம் முதலான பயன்களுக்குக் கருவியாக ஜ்யோதிஷ்டோமம் முதலான
யாகங்களையும், அவற்றின் செயல்முறையான அங்கங்களையும் விதிக்கிறது.
• ஆனால், சில இடங்களில், வேதம் ஒரு கர்மத்தைச் சொல்லி விட்டு, எந்த பலனையும் சொல்லாமல் விட்டுள்ளது.
அந்த கர்மங்களுக்கு எந்த பயன் இருக்கும் என்று மீமாம்ஸையில் சிந்திக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – “விஸ்வஜித் யாகத்தைச் செய்” என்று கட்டளை உள்ளது.
ஆனால் இந்த யாகத்துக்கு எந்தப் பலமும் சொல்லப்பட வில்லை
• அந்த கர்மத்துக்கு புத்ரன், பசு, அந்நம், ஆரோக்யம் போன்ற எந்த பலத்தைக் கல்பித்தாலும் அதை
ஆசைப்படுபவர்கள் குறைவான படியால் இந்த யாகத்தைச் செய்யும் அதிகாரிகள் சிலரே ஆவர்.
• ஸ்வர்கம் தான் பலம் என்று கல்பித்தால் அதிகமாக அதிகாரிகள் கிடைக்கிறபடியால் யாகம் உயர்ந்தாகும்.
• ஆகையால், பயன் சொல்லப்படாத வைதிக கர்மங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பலம் என்று முடிவாகிறது.
• இதற்கு விஸ்வஜித் ந்யாயம் என்று பெயர்.

ராத்ரி ஸத்ர நியாயம்

முன் சொன்ன விஸ்வஜித் ந்யாயத்துக்கு ஓர் அபவாதம் (விதி விலக்கு) இங்கு கூறப்படுகிறது.
• விதி வாக்கியத்தில் பலம் சொல்லப்படா விட்டாலும், அருகிலுள்ள அர்த்தவாதத்தில் ஒரு பலன்
பேசப்பட்டிருந்தால், அது வெறும் புகழ்ச்சிச் சொல்லாக இருந்தாலும் அந்த பலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தான் இந்த விதி விலக்கு.
• எடுத்துக்காட்டு – ஜ்யோ தி:, கௌ:, ஆயு: என்ற முன்று யாகங்கஸள வேதம் விதிக்கிறது.
இவற்றுக்கு ராத்ரி சத்ரம் என்று பெயர்.
ஆனால், அவற்றுக்குப் பலத்தைச் சொல்லும் எந்த விதி வாக்கியமும் காணப்படவில்லை .
ஆனால், இந்த யாகங்களைப் புகழ்ந்து பேசும் அர்த்த வாதத்தில் “யார் எல்லாம் இந்த ராத்ரி சத்ர யாகத்தைச்
செய்கிறார்களோ அவர்கள் நிலை பெறுவார்கள்-ப்ரதிஷ்டிந்தி ” என்ற கூறப்படுகிறது.
ஆகையால், ராத்ரி சத்ர யாகத்திர்கு நிலை பெறுவது தான் பயன் என்று ஏற்கப்படுகிறது.
• இதற்கு தான் ராத்ரி சத்ர ந்யாயம் என்று பெயர்

விதி வாக்கியத்தில் பலனைச் சொல்லா விட்டாலும் அர்த்தவாதத்தில் சொல்லப்பட்ட பலனை
ஏற்றுக் கொள்வது தான் இந்த நியாயம்
அர்த்த வாதத்திலும் சொல்லப்படா விட்டால் சுவர்க்கம் பலன் என்று முந்திய விஸ்வஜித் நியாயம் படி கொள்ள வேண்டும்
பர்ண மரம் -அர்த்தவாதம் பலனைப் புறக்கணித்தோமே -யாகம் முழுமை பெறவே என்றோம்
அங்கு அங்கத்தவத்தைப் போதிக்கும் பிரமாணம் உண்டே -பர்ணம் ஜுஹுவுக்கு அங்கம்
இங்கே இப்படி இல்லாமல் மூன்று யாகங்களைச் செய் என்றதே

யோக சித்தி நியாயம்

தர்சபூர்ணமாஸம் என்பது ஆறு யாகங்களின் கூட்டம். அது நித்ய கர்மமாக விதிக்கப்படுகிறது –
“உயிரிருக்கும் வரை தர்சபூர்ண மாஸங்களைச் செய்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸம், ஸ்வர்கத்திற்கு ஸாதநமாகவும் (வழியாகவும்) விதிக்கப்படுகிறது –
“ஸ்வர்கத்தில் ஆசை யிருப்பவன் தர்ச பூர்ண மாஸத்தைச் செய்யக்கடவன்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸத்தைப் பற்றி மற்ற ஓரு விதி கூறுகிறது –
“தர்சபூர்ணமாஸம் ஆசைப்பட்ட பலன்கள் அனைத்துக்கும் ஸாதநம்” என்று.
இதனால், புத்ரன் பசு மழை ஆரோக்யம் போன்ற எந்த பலனுக்காகவும் தர்சபூர்ண மாஸம் செய்யலாம் என்று அறிகிறோம்.
இப்படி மூன்று வேத வாக்கியங்கள் இருப்பதால் சங்கை எழுமே –
• கேள்வி – பொதுவாக, ஒரு பொருள் பலவற்றுக்குக் காரணாமாக இருந்தால், அது அவை அனைத்தையும்
ஒரே காலத்தில் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டு –
ஒரு செடி இலைக்கும் பூவுக்கும் காரணமான படியால் இரண்டையுமே ஒரே காலத்தில் ஏற்படுத்தலாம்.
அதைப்போல், ஒரு முறை தர்சபூர்ண மாஸங்களைச் செய்தால் புத்ரன், பசு போன்ற பலன்கள் அனைத்தையும் பெறலாமா?
• பதில் – ஒரு முறை தர்சபூர்ண மாஸம் செய்த்தற்காக, புத்ரன் பசு என்ற அனைத்துப் பலன்களையும் பெற்றுவிட முடியாது.
வேதம் “ஆசைப்பட்ட பயனுக்கு ஸாதநம்” என்று சொன்னபடியால், எதை ஆசைப்பட்டு அம் முறை
தர்சபூர்ண மாஸத்தைச் செய்கிறோமா அந்த பலன் மட்டும் தான் கிடைக்கும்.
• இதற்கு தான் யோக ஸித்தி ந்யாயம் என்று பெயர்.

தர்ச பூர்ண மாஸங்கள் எவை -நான்காம் பாதம் -12 அதிகரணம் விஷயம் இது –

வேதம் “தர்சபூர்ண மாஸங்களால் ஸ்வர்கத்தை அடை யலாம்” என்று கூறி யுள்ளது.
இதில், தர்சபூர்ண மாஸம் என்ற சொல் எவற்றைக் குறிக்கிறது என்று சிந்திக்கப்படுகிறது.
• பூர்வபக்ஷம் – தர்சம் என்றால் அமாவாஸை , பூர்ணமாஸம் என்றால் பௌர்ணமி. அந்தந்தக் காலங்களில்
செய்யப்படும் அனைத்து யாகங்களையும் அந்தந்தச் சொல் குறிக்கிறது,
அவற்றுக்குள் வேறுபாடு ஒன்றும் இல்லாதபடியால். ஆகையால், அக்நிக்கான புரோடாச யாகங்கள் இரண்டு,
இந்த்ரனுக்கான தயிர் யாகம், இந்த்ரனுக்கான பால் யாகம், உபாம்சுயாஜம், அக்நீஷோமர்களுக்கான
புரோடாசயாகம் என்ற ஆறு மட்டுமல்ல, ப்ரயாஜங்கள் அநுயாகங்கள் ஆஜ்யபாகங்கள் என்று எவை எல்லாம்
அமாவாஸை அல்லது பௌர்ணமியன்று செய்யப்படுகின்றனவோ அவை அனைத்துமே தர்சபூர்ணமாஸம்
என்று அழைக்கப் படுகின்றன. -ஆகையால், இவை அனைத்தும் சேர்ந்து தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன.
இதில் உள்ள 17 யாகங்களும் அங்கி அங்க பாவம் இல்லை -அனைத்தும் சம ப்ராதான்யம் என்பர் பூர்வ பக்ஷி –
• ஸித்தாந்தம் – தர்சம் பூர்ணமாஸம் என்ற சொற்களைக் கேட்டவுடன், அந்தந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
அதிலிருந்து, எந்த எந்த கர்மங்களுக்கு உத்பத்தி விதியிலேயே அமாவாஸை பௌர்ணமி என்ற காலம் சொல்லப்பட்டுள்ளதோ
அவை தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அவை எவை எனில் – முன் சொன்ன ஆறு ப்ரதாந யாகங்கள் தான்.
ப்ரயாஜங்கள் முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்களில் காலம் சொல்லப்பட வில்லை .
ஆகையால், ஆறு யாகங்கள் தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன. மற்றவை அவற்றுக்கு உதவி செய்கின்றன
ஆறு தான் புருஷார்த்தம் -சுவர்க்கம் பலன்
மற்ற 11 க்ருத்யர்த்தம் யாகம் முழுமை பெறவே -அங்கங்களே என்று சித்தாந்தம் –

————-

பாடம் -15-
க்ரமத்தைப் போதிக்க அடுத்த ஐந்தாவது அத்யாயம் –

தர்மத்தைப் பற்றிக் கூறும் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பிறகு, மூன்று அத்யாயங்களால்
ஜைமிநி மஹரிஷி தர்மத்தைப் பற்றி விளக்கினார்.
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களின் வேறுபாடு என்னும் பேதத்தையும்,
மூன்றாம் அத்யாயத்தில் அங்கத்வம் என்பதையும்,
நான்காவது அத்யாயத்தில் ப்ரயுக்தி என்பதையும் கூறுவதன் மூலம்,
அநுஷ்டேயம் அதாவது செய்யப்பட வேண்டிய செயல்களைக் கூறினார்.
• இனி, அநுஷ்டிக்கப் பட வேண்டிய செயல்கள் தெரிந்தவுடன், அடுத்து ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும்?” என்பது தான்.
ஆகையால், அடுத்திருக்கும் ஐந்தாம் அத்யாயத்தில், அந்தச் செயல்களை எந்த க்ரமத்தில்
(வரிசையில்) செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

• ஒவ்வொரு வைதிகச் செயலிலும் க்ரமத்தைச் சொல்லித் தலைக் கட்ட முடியாதபடியாலும்,
அப்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்குத் தானாகச் சிந்திக்கும் திறமை ஏற்படாது என்பதாலும் ,
ஜைமிநி மஹரிஷி நேரடியாக செயல்களின் வரிசையைத் தெரிவிக்காமல்,
க்ரமத்தைக் காட்டிக் கொடுக்கும் ஆறு ப்ரமாணங்களையும்,
அவற்றின் வலிமைகளையும் காட்டுகிறார் இந்த அத்யாயத்தில்.

பிரயோக விதி –

• கீழ் பாடங்களில் உத்பத்தி விதி, அதிகார விதி, விநியோக விதி மற்றும் ப்ரயோக விதி என்று
நான்கு வகையான விதிகளைப் பார்த்தோம்.
அதிகார விதி, -ப்ரயோஜனங்களைச் சொல்லும் இது மேல் ஆறாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
விநியோக விதி -அங்கங்களைப் போதிக்கும் –
• அதில் முதல் மூன்று வகையான விதிகள் புதிதான கர்மங்களையும்,
அவற்றின் பயன்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிவிக்கின்றன, ஆனால் செய்விப்பதில்லை .
நான்காவதான ப்ரயோக விதி தான் “அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று நமக்கு
விதிப்பதன் மூலம் ப்ரயோகம் என்று அழைக்கப்படும் அநுஷ் டானத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் இதற்குப் ப்ரயோக விதி என்று பெயர்.
• ப்ரயோக விதி என்று ஒன்று தனியாகக் கிடையாது. அங்கங்களைப் போதிக்கும் அனைத்து வாக்கியங்களோடும்
சேர்ந்த ப்ரதான வாக்கியம் தான் ஒரு மஹா வாக்கியமாக ஆகி ப்ரயோக விதி என்று அழைக்கப் படுகிறது.
• தர்சபூர்ணமாஸம் என்ற ப்ரதானத்தை விதிக்கும் வாக்கியம் – “ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன்
தர்சபூர்ணமாஸத்தைச் செய்யக்கடவன்” என்பது.
அதன் அங்கங்களான ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள், ஸ்விஷ்டக்ருத்,
முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்கள் தனித்தனியாக உள்ளன.
• இவை அனைத்தும் சேர்ந்து, “ப்ரயாஜங்களைச் செய்து, அநுயாஜங்களைச் செய்து
ஸ்விஷ்டக்ருத் செய்து, ப்ராசித்ர பக்ஷணம் செய்து, இடா பக்ஷணம் செய்து, பலீகரண ஹோமம் செய்து,
ப்ராயச்சித்த ஹோமங்கள் செய்து, இவ்வாறு தர்சபூர்ணமாஸங்களைச் செய்து ஸ்வர்கத்தை அடைவாய்” என்ற
மஹாவாக்யம் தான் அங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்யும்படி விதிக்கிறபடியால் ப்ரயோக விதி ஆகிறது.

க்ரமம் என்றால் என்ன

• இப்படி அங்கங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது,
அந்த கூட்டு / சேர்க்கை என்பது ஒரே காலத்தில் அவை அனைத்தையும் அநுஷ்டித்தால் தான் ஏற்படும்,
தனித்தனியாகச் செய்யப்பட்ட செயல்களைச் சேர்ந்து செய்யப்பட்டன’ என்று உலகில் சொல்லாதபடியால்.
ஆகையால், அங்கங்களையும் ப்ரதானங்களையும் ஒரே நொடியில் செய்ய வேண்டும் என்று ஆகிறது.
•ஆனால் இது அஸாத்யமான செயல் ஆகும். ஆகையால், சற்று தளர்த்தி, “இடைவிடாமல் செய்யவேண் டும்”
என்று இந்த ப்ரயோக விதி நமக்குக் காட்டுகிறது.
ஆகையால், வைதிக கார்யங்களைச் செய்யும்போது இடையில் லௌகிக கார்யங்களைச் செய்வது தவறு.
• இடைவிடாமல், தாமதமில்லாமல் செயல்களை அடுத்தடுத்துச் செய்யவேண்டும் என்றால்,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையை நாம் முன்னமே முடிவு செய்திருக்க வேண்டும்,
இல்லை என்றால் ஸந்தேகத்தால் தாமதம் ஏற்படும். ஆகையால் தான் ப்ரயோக விதி க்ரமத்தையும் விதிக்கிறது.
• க்ரமம் என் றால் பௌர்வாபர்யம் – முன் பின் தன்மை . “இந்தச் செயலுக்கு அடுத்து இந்தச் செயல்
செய்யப்பட வேண்டும்” என் பது தான் க்ரமம்/ வரிசை என்று அதழக்கப்படுகிறது.
• க்ரமத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் ஆறு –
(1) ச்ருதி (2) அர்த்தம் (3) பாடம் (4) ஸ் தாநம் (5) முக்யம் (6) ப்ரவ்ருத்தி என்பவை தான் அவை

ஸ்ருதி க்ரமம்

க்ரமத்தை நேரடியாகக் கூறும் சொற்கள் தான் க்ரமத்தை போதிக்கும் முதல் ப்ரமாணமான
’ச்ருதி’ என்று அழைக்கப்படுகின்றன.
’இது முதலாவது’, ’இது பத்தாவது’ என்று தனிச் சொற்களாலும் க்ரமம் சொல்லப் படலாம்.
அல்லது, “இதைச் செய்துவிட்டு இதைச் செய்” என்பது போல் ’விட்டு’ என்ற ஒரு விகுதியாலும் கூறப்படலாம்.
ஏதோ ஒரு வகையில் ஒரு வரிசையைக் காட்டும் எந்தச் சொல்லும் ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• இந்த ச்ருதி இரண்டு வகைப்படும் –
• (1) முன்னமே தெரிந்த செயல்களின் க்ரமத்தை மட்டும் போதிப்பவை –
வேதம் என்ற தர்ப்ப-கட்டைச் செய்ய வேண்டும் என்பதும்,
கார்ஹபத்யத்துக்கும் ஆஹவநீ யத்துக்கும் இடையிலுள்ள்ள வேதி என் ற
பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்பதும் தனித்தன வாக்கியங்களால் விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் அவை நமக்குத் தெரிந்த செயல்கள். இப்படி இருக்க, “வேதத்ததச் செய்துவிட்டு வேதியைச் செய்”
என்ற வேத வாக்கியம் அவற்றுக்குள் இருக்கும் க்ரமத்தை மட்டும் போதிக்கிறது.
• (2) க்ரமத்தோடு கூடின ஒரு புதுச் செயலை போதிக்குமவை –
ஸோம யாகத்தில் யாகம் முடிந்தவுடன் மீதமிருக்கும் ஸோம ரஸத்தை ரித்விக்குகள் பருக வேண்டும்.
அதில், யாகம் செய்யும் போது யார் ’வௌஷட்’ என்று வஷட்காரம் சொன்னாரோ , அவரும் அந்த ரஸத்தைப்
பருக வேண்டும் என்றும், அவர்தான் முதலில் பருக வேண் டும் என்றும் ஒரே வாக்கியம் கூறுகிறது
“வஷட்காரம் செய்தவருக்கு முதல் பக்ஷணம்” என்று.
• இந்த ச்ருதி ப்ரமாணம் மற்றவற்றைக் காட்டிலும் வலியை யுடையது, அவற்றை
எதிர்பார்க்காமல் க்ரமத்தை போதிக்கிறபடியால்

அர்த்த க்ரமம்

அர்த்தம் என்றால் ப்ரயோஜநம் என்று பொருள். ஒரு செயலின் ப்ரயோஜநத்தைக் கருதி அதன் க்ரமத்தை
முடிவு செய்தால் அதற்கு அர்த்தக்ரமம் என்று பெயர்.
• “அக்நி ஹோத்ர ஹோமத்தைச் செய்” என்று ஒரு வேத வாக்கியம் விதிக்கிறது. அதற்குப் பிறகு உள்ள ஒரு வாக்கியம்
“அரிசிக்கஞ்சியை சமைப்பாய்” என்று கூறுகிறது. “அரிசிக் கஞ்சியால் அக்நி ஹோத்ரம் செய்ய வேண் டும்” என்ற
வேறு ஓரு வாக்கியம், அக்நிஹோத்ரத்தில் கஞ்சியைப் பயன் படுத்த வேண் டும் என்று கூறுகிறது.
• வாக்கியங்களின் வரிசையைப் பார்த்தால், அக்நி ஹோத்ரத்தைச் செய்து விட்டு தான் கஞ்சியைச் சமைக்கவேண் டும்.
ஆனால் அப்படிச் செய்தால், கஞ்சியால் அக்நிஹோத்ரத்துக்கு எந்த ஒரு த்ருஷ் டமான பயனும் இருக்க முடியாதபடியால்,
கஞ்சி சமைப்பதால் ஏற்படும் புண்ணியம் அக்நி ஹோத்ரத்துக்கு உதவுகிறது என்று அத்ருஷ்டத்தை
/ அபூர்வத்தை / புண்ணியத்தைக் கல்பித்தே ஆக வேண்டும்.
• கஞ்சியை முன்னால் சமைத்து, அக்நிஹோத்ரத்தைப் பின்னால் செய்தால், அக்நிஹோத்ரம் செய்ய ஒரு த்ரவ்யம்
தேவைப்படும் போது இந்தக் கஞ்சியையே பயன் படுத்தலாம் ஆகையால் த்ருஷ் டமான
ப்ரபயோஜநம் கிடைக்கும் கஞ்சிக்கு. இதுதான் சிறந்தது.
• ஆகையால், கஞ்சியின் ப்ரயோஜநத்தை மனதில் கொண் டு,
“கஞ்சியைச் சமைத்த பிறகு அக்நிஹோத்ரம் செய்ய வேண் டும்” என்று க்ரமத்தை முடிவு செய்கிறபடியால்
இதற்கு அர்த்த க்ரமம் என்று பெயர்.

பாட க்ரமம்

பாடம் என்றால் படித்தல். செயல்களைப் பபோதிக்கும் வாக்கியங்கள் வேதத்தில் எந்த வரிசையில் படிக்கப் பட்டுள்ளனவோ
அதே வரிசையில் அந்தச் செயல்களைச் செய்வதற்கு பாட க்ரமம் என்று பெயர்.
• இது இரண்டு வகைப்படும் – (1) ப்ராஹ் மண பாட க்ரமம் (2) மந்த்ர பாட க்ரமம்.
வேதத்தை ப்ராஹ் மணம் என்றும் மந்த்ரம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.
ப்ராஹ்மணம் என்றால் “இத்தைச் செய்” என்று கட்டளையிடும் வாக்கியம்.
மந்த்ரம் என்றால், ப்ராஹ் மணத்தால் விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யும் போது நாம் உச்சரிக் வேண்டிய வாக்கியம்.
• (1) ப்ராஹ் மண பாட க்ரமம் – எந்த வரிசையில் ப்ராஹ்மண வாக்கியங்களால் செயல்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ ,
அதே வரிசையில் அவற்றைச் செய்தல்.
• எடுத்துக்காட்டு – “ஸமித் யாகத்தைச் செய்”, “தநூநபாத் யாகத்தைச் செய்”, “இட் யாகத்தைச் செய்”, “பர்ஹிஸ் யாகத்தைச் செய்”,
“ஸ் வாஹாகார யாகத்தைச் செய்” என்ற ஐந்து ப்ராஹ் மண வாக்கியங்கள் (கட்டளைகள்) ப்ரயாஜங்கள் என்று அழைக்கப்படும்
ஐந்து யாகங்களை விதிக்கின்றன. அவற்றை எந்த க்ரமத்தில் செய்ய வேண் டும் என்ற கேள்வி எழும் போது, எந்த வரிசையில்
கட்டளைகள் படிக்கப்பட்டுள்ளனவோ அதே வரிசையில் செய்வது உசிதமானபடியால், ஸமித் தநூநபாத் இட் பர்ஹிஸ் ஸ்வாஹாகாரம்
என்ற இந்த வரிசையில் தான் யாகங்கள் செய்யப்பட வேண்டும்.-இதற்கு ப்ராஹ் மண பாட க்ரமம் என்று பெயர்.

மந்த்ர பாட க்ரமம்

(2) மந்த்ர பாட க்ரமம் – ப்ராஹ்மண வாக்கியங்களைக் காட்டிலும் மந்த்ரங்கள் அநுஷ்டானத்துக்கு
நெருக்கமானவை – (அந்தரங்கமானவை ).
• ப்ராஹ்மண வாக்கியங்கள் “இத்தைச் செய் ” என்று கட்டளை இட்டுவிட்டு விலகி விடுகின்றன.
அநுஷ்டான வேளையில் அவற்றுக்கு உபயோகம் இல்லை –
ஆனால் மந்த்ரங்கள்தான் அநுஷ்டானம் செய்யும் போது எப்பொழுதும் உச்சரிக்கப்படுகிறபடியால் மிகவும் நெருக்கமானவை .
• ஆகையால், ப்ராஹ்மண வாக்கியங்களில் செயல்கள் கட்டளை யிடப்பட்ட வரிசைக்கும்,
அந்தச் செயல்களுக்கான மந்த்ரங்கள் படிக்கப்பட்டுள்ள வரிசைக்கும் விரோதம் இருந்தால்,
அநுஷ்டானத்துக்கு நெருக்கமான மந்த்ரங்களின் வரிசையில் (க்ரமத்தில்) தான் செயல்களைச் செய்ய வேண்டும்.
இதற்கு தான் மந்த்ர பாட க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் பௌர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம்
என்று மூன்று யாகங்கள் செய்யப்பட வேண் டும்.
அதில், வேதம் கட்டளையிடும் போது, முதலில் “அக்நீ ஷோமீயத்தைச் செய்” என்றும்
பின்னால் ஒரு வாக்கியத்தில் “ஆக்நேயத்தைச் செய்” என்றும் சொல்லியுள்ளது.
ஆனால், அந்தந்த யாகத்தைச் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்த்ரங்களைச் சொல்லும் போது,
முதலில் ஆக்நேய யாகத்தின் மந்த்ரமும் பிறகு அக்நீ ஷோமீயத்தின் மந்த்ரமும் படிக்கப்பட்டபடியால்
ஆக்நேயம் செய்த பிறகு தான் அக்நீஷோமீயம்.

————

பாடம் -16-ஸ்தான க்ரமம் –

ஐந்தாம் அத்யாயத்தில்
முதல் பாதத்தில் ஆறு பிரமாணங்கள் க்ரமத்தைப் போதிக்கும்
இரண்டாம் பாதம் -அவற்றின் சிறப்பு விசேஷங்கள் -சங்கை போக்க –
மூன்றாம் பாதம் -வ்ருத்தி அவர்த்தனம் -செயல் வளர்ச்சி குறைவு பற்றி –
நான்காம் -பலம் பொருந்தியவை எவை என்று சொல்லும்

க்ரமத்தைப் போதிக்கும் பிரமாணங்களுக்குள் நான்காவது ஸ்தாநம்–
ஸ்தாநம் என்றால் உபஸ்திதி / நினைவு என்று பொருள். பல செயல்களை ஒரே காலத்தில் செய்ய வேண்டிய போது,
எது தவறாமல் முதலில் நினைவுக்கு வருகிறதோ அதை முதலில் செய்வதற்குத் தான் ஸ்தாந க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – ஸோம யோகம் ஐந்து நாட்கள் செய்யப் படுவது.
அதில் தைக்ஷம் என்ற யோகம் நான்காவது நாளிலும், ஸவநீயம் என்ற யாகம் ஐந்தாவது நாள் நடுவிலும்,
ஆநு பந்த்யம் என்ற யாகம் ஐந்தாம் நாள் இறுதியிலும் செய்யப்பட வேண்டும்.
• மற்ற ஓரு ஸோம யாகத்தில் இந்த மூன்று யாகங்களையும் சேர்த்து ஒரே காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அப்பொழுது எந்த யாகத்தின் இடத்தில் மூன்றையும் செய்யலாம் என்று பார்த்தால், பிரதாந யாகமான ஸோம யோகத்துக்கு
அருகிலுள்ள படியாலும், ஸ்தாந அதிக்ரமம் (தங்கள் தங்கள் இடத்தை விட்டு நகருதல்) குறைவாக உள்ள படியாலும்,
நடுவான ஸவநீயம் என்ற யாகத்தின் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
• அப்படி ஸவநீய யாகத்தின் இடத்தில் மூன்று யாகங்களையும் செய்யும் போது எதை முதலில் செய்ய வேண் டும்
என்ற கேள்வி எழும் பொழுது, அவ்விடத்தில் முதலில் ஸவநீயம் தான் நினைவுக்கு வரும் –
ஆகையால் அதைச் செய்து விட்டு, பிறகு தைக்ஷத்தையும் ஆநு பந்த்யத்தையும் செய்ய வேண்டும்.
இது தான் ஸ்தாந க்ரமம் –

முக்ய க்ரமம் –
•முக்யம் என்றால் பிரதாநம் என்று பொருள் .
சேர்த்து செய்யப்படும் பிரதாந யாகங்களின் வரிசையில் அவற்றின் அங்கங்களைச் செய்வதற்கு முக்ய க்ரமம் என்று பெயர்.
•பிரயோக விதியில் ’அங்கங்களோடு கூட பிரதாந யாகத்தைச் செய் ’ என்று சொன்ன படியால்
அங்கங்களையும் பிரதாநத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். அது முடியாத படியால் இடைவிடாமல் செய்ய வேண்டும்.
அதுவும் முடியா விட்டால் ஸமமான ஆனால் குறைவான இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும்.
அதற்காகத் தான் முக்ய க்ரமம் பின் பற்றப் படுகிறது.
• பிரதாநம் 1 பிரதாநம் 2 என்று இரண்டு பிரதாநங்களும், அவற்றுக்கு அங்கம் 1 அங்கம் 2 என்று இரண்டு அங்கங்களும் இருந்தால்,
அங்கம் 1 – அங்கம் 2 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்ற வரிசையில் செய்தால் தான் ஒவ்வொரு அங்கத்துக்கும் அதன் பிரதாநத்துக்கும்
ஸமமான இடைவெளி இருக்கும். இது தான் முக்ய க்ரமம்.
• இதை மாற்றி, அங்கம் 2 – அங்கம் 1 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்று செய்தால் ,
முதல் அங்கத்துக்கும் முதல் பிரதாநத்துக்கும் இடைவெளியே இல்லாமலும், இரண்டாம் அங்கத்துக்கும் இரண்டாம் பிரதாநத்துக்கும்
அதிக இடைவெளியும் உள்ள படியால், பிரயோக விதியில் சொல்லப் பட்ட இடைவிடாமையைத் தகர்த்த தாகும்–
எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ணமாஸத்தில் பிரயாஜங்கள் செய்து மீதமிருக்கும் நெய்யை மூன்று பிரதாந யாகங்களின்
ஹவிஸ்ஸுகளிலும் சேர்க்கும் போது, அந்த பிரதாந யோகங்களைச் செய்யப் போகும் க்ரமம் எதுவோ
அதே க்ரமத்தில் செய்ய வேண்டும்.
• இந்த முக்ய க்ரமத்தில், பிரதாநங்களின் க்ரமத்தை அறிந்தால் தான் அங்கங்களின் க்ரமத்தை அறியலாம் என்பதால்
இது நேரடியாக அங்கங்களின் க்ரமத்தைச் சொல்லும் பாட க்ரமத்தைக் காட்டிலும் துர் பலமானது.
• எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ண மாஸத்தில் பவ்ர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம் என்ற மூன்று
யாகங்கள் இதே வரிசையில் செய்யப் படுகின்றன. ஆகையால்,முக்ய க்ரமத்தின் படி பார்த்தால் இதே வரிசையில் தான்
அந்தந்த யாகத்துக்கு வேண்டிய த்ரவ்யத்தை (நெல், நெய், நெல்) நிர்வாபம் செய்ய வேண்டும்
(மூட்டை / பாத்திரத்திலிருந்து யாகத்துக்குத் தேவையான அளவை மட்டும் எடுத்து வைத்தல்) நிர்வாபம் ஆகும்).
ஆனால், மந்த்ரங்களைப் படிக்கும்பொழுது ஆக்நேயத்துக்கும் அக்நீ ஷோமீயத்துக்கும் நிர்வாபம் செய்வதை அடுத்தடுத்து
வேதம் சொல்லியுள்ள படியால், பாட க்ரமத்தால் ஆக்நேயத்துக்கு, பிறகு அக்நீ பஷோமீயத்துக்கு, பிறகு உபாம்சுயாஜத்துக்கு
என்று தான் நிர்வாபம் செய்யவேண்டும்.

ப்ரவ்ருத்தி க்ரமம்
ஒரே காலத்தில் பல யாகங்கள் செய்யப்படும் போது அனைத்து ஹவிஸ்ஸுகளுக்கும் ஒரே ஸம்ஸ்காரங்களைச்
செய்யும் பொழுது, முதல் ஸம்ஸ்காரத்தை த்ரவ்யங்களின் எந்த க்ரமத்தில் செய்தோமோ அதே
க்ரமத்தில் தான் இரண்டாவது முதலான ஸம்ஸ் காரங்களையும் செய்யவேண்டும். இதுவே பிரவ்ருத்தி க்ரமம்.
• எடுத்துக்காட்டு – பிரஜா பத்யம் என்ற கர்மத்தில் பிரஜாபதி என்ற தேவதைக்கு
ஒரே ஸமயத்தில் 17 யாகங்கள் செய்யப் பட வேண் டும்.
ஒவ்வொரு யாகத்திற்கும் தனித்தனியாக ஒரு த்ரவ்யத்தை தயார் செய்யவேண்டும்.
அவற்றுக்குச் செய்யும் ஸம்ஸ் காரங்களையும் தனித்தனியாக செய்யவேண்டும்.
• அதில், முதல் த்ரவ்யத்துக்கு அனைத்து ஸம்ஸ் காரங்களையும் முடித்துவிட்டு பிறகு அடுத்ததுக்கு அனைத்ததையும்
செய்தால் சில அங்கங்கள் தங்கள் பிரதாநங்களிலிருந்து வெகு தொலைவிலும் ,
சில வெகு அருகிலும் இருக்குமாகையாலே அப்படி செய்யாமல், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்து த்ரவ்யங்களுக்கும்
செய்துவிட்டு, பிறகு இரண்டாவது ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும்.

இது முக்ய க்ரமம் விட துர்லபம்
தயிர் தயார் பண்ண முன்பே தொடங்க வேண்டும்
ப்ரவ்ருத்தி க்ரமம் படி தயிருக்கு உள்ளவற்றை எல்லாம் பண்ணி தோசை பால் செய்யாமல் இல்லாமல்
தயிர் உண்டு செய்ய வேண்டியதை மட்டுமே செய்து விட்டு
அக்னிக்கு தோசை -இந்திரனுக்கு தயிர் -இந்திரனுக்கு பால் -இந்த க்ரமத்திலே செய்ய வேண்டும்

• அப்படி இரண்டாவது ஸம்ஸ்காரம் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வரிசையில் 17 த்ரவ்யங்களுக்கு அதைச் செய்தால்,
மறுபடியும் அந்தந்த த்ரவ்யத்தின் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்களுக்குல்ள் உள்ள இடைவெளி மாறிவிடும்.
ஆகையால், த்ரவ்யங்களின் எந்த வரிசையில் முதல் ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதோ அதே வரிசையில் தான்
இரண்டாவதையும் செய்ய வேண்டும். இது தான் பிரவ்ருத்தி க்ரமம் ஆகும்

உத்கர்ஷம் அபகர்ஷம்
வேதத்தில் சில இடங்களில், ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை சற்று
தாமதித்து, பின் ஒரு காலத்தில் செய்யச் சொல்கிறது. இதற்கு உத்கர்ஷம் என்று பெயர்.
•அதே போல் , ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை முன்னால் இழுத்து,
முன் ஒரு காலத்திலேயே செய்யச் சொல்கிறது – இதற்கு அப கர்ஷம் என்று பெயர் –

பதார்த்த அநு சமயம் -காண்ட அநு சமயம்
பல த்ரவ்யங்களுக்கு ஒரே ஸம்ஸ்காரத்தைச் செய்யும் இடத்தில், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்துக்கும்
செய்துவிட்டு, பிறகு அடுத்த ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும் என்று பார்த்தோம்.
• பவ்ர்ணமி அன்று இரண்டு புரோடாசங்கள் தேவைப்படுகின்றன .
முதலுக்கு நெல்லை எடுத்தல், இரண்டாவதுக்கு நெல்லை எடுத்தல், முதலுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல்,
இரண்டாவதுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல், முதலுக்கு நெல்லைக் குத்துதல், இரண்டாவதுக்கு
நெல்லைக் குத்துதல் என்ற வரிசையில் தான் செய்யவேண் டும்.
இதற்கு பதார்த்த அநுஸமயம் என்று பெயர்.
பதார்த்தம் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு செயலையும் அனைத்துக்கும்
செய்துவிட்டு அடுத்த செயலைச் செய்கிற படியால்.

• நெல்லைக் குத்துதல் என்ற ஒரு செயலுக்குள் மான் தோலை விரித்தல் -உரலை வைத்தல் நெல்லைச் சேர்த்தல்
என்று பல கார்யங்கள் உள்ளன. அவற்றையும் பதார்த்த அநுஸமயமாகச் செய்ய வேண்டுமோ? என்றால் – அல்ல.
நெல்லைக் குத்துவது என்ற ஒரு முழுமையான செயல் ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது,
ஆகையால் அதத முழுவதுமாக ஒரு த்ரவ்யத்துக்கு முடித்துவிட்டு தான் அடுத்ததுக்குச் செல்லலாம்.
இதற்கு காண்ட அநுஸமயம் என்று பெயர்.
ஒரு காண் டத்தில் சொல்லப் பட்டது போலே ஒரே செயலின் பகுதிகளான அங்கங்கள் அனைத்தையும்
சேர்த்துத் தான் செய்யவேண்டும்.

விவ்ருத்தி
• சில இடங்களில் கர்மங்களை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லும்.
வளர்ப்பது மீண் டும் மீண் டும் அநுஷ்டிப்பதால் தான்.இதற்கு ஆவ்ருத்தி என்று பெயர்.
• தர்ச பூர்ண மாஸங்களில் 5 பிரயாஜங்கள் சொல்லப்பட்டு உள்ளன –
வேறே ஒரு . யாகத்தில் 11 பிரயாஜங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப் படுகிறது
ஐந்தை வைத்துக் கொண்டு பதினொன்று என்ற எண்ணை எப்படிச் செய்வது என்றால் ஒவ்வொரு
பிரயாஜத்தையும் இரு முறை செய்து, கடைசி பிரயாஜத்தை மட்டும் மும்முறை செய்தால் 11 முறை
பிரயாஜம் செய்ததாக ஆகும்
• அப்படி செயல்களை ஆவ்ருத்தி செய்யும் பொழுது, ஒரு முறை ஐந்தையும் முடித்துவிட்டு, பிறகு
ஐந்தையும் செய்தால் அதற்கு தண்ட-கலிதவத்-ஆவ்ருத்தி என்று பெயர்.
அதோவது 1 2 3 4 5 1 2 3 4 5 5 என்ற வரிசையில் பிரயாஜங்களைச் செய்தல்.
•ஆனால் இப்படிச் செய்தால் ’முதல் பிரயாஜத்துக்கு அடுத்து இரண்டாவது பிரயாஜம்’ என்ற க்ரமம் பாதிக்கப்படும்.
ஆகையால், இப்படிச் செய்யாமல் தன் தன் இடத்திலேயே அந்தந்த பிரயாஜத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.
அதாவது 1 1 2 2 3 3 4 4 5 5 5 என்ற வரிசையில் செய்ய வேண்டும்.
இதற்கு ஸ்வ-ஸ்தாந விவ்ருத்தி என்று பெயர்.

——–

பாடம் –17-ஆறாம் அத்யாயம் -அதிகாரம்

கீழ் ஐந்து அத்யாயங்களில் அநுஷ் டிக்கப்படவேண்டிய கர்மங்ள் எல்லாம் சொல்லப்பட்டன,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையும் சொல்லப்பட்டன. அடுத்து இயற்கையாக ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றைச் செய்யப்போகுமவர்(அநுஷ் டாதா) யார்?” என்ற கேள்வி எழுகிறபடியால், அதிகாரம்
என்பதை அடுத்திருக்கும் ஆறாவது அத்யாயத்தில் கூறுகிறார் மஹர்ஷி ஜைமிநி
• அதிகாரம் என்றால் பல-ஸ் வாம்யம் அதாேது பலத்தை அநுபவித்தல் என்று பொருள்.
ஒரு யாகத்தின் பலத்தை அநுபவிப்பவன் தானே அதைச் செய்ய முயற்சிப்பான்.
ஆகையால், பலத்தை அநுபவிப்பது தான் அதிகாரம் ஆகும்.
•ஆனால் இப்படிச் சொன்னால் , மகன் செய்யும் ஸ்ரார்தத்தின் பலத்தை அநுபவிக்கும் பித்ருக்களுக்கு
அதிகாரம் கிடைத்து விடும், மகனுக்குக் கிடைக்காது. ஆகையால், பலத்தின் அநுபவமும், யாகம்
என்கிற செயலும் எவரிடம் உள்ளதோ அவரே அதிகாரி என்று மாற்றிக் கொள்ள வேண் டும்.
•ஆனால், அப்படிக் கொண்டாலும், மகனின் நலனுக்காக செய்யப்படும் ஜாதேஷ்டி என்ற யாகத்தில்
தந்தைக்கு அதிகாரம் இல்லாமல் போகும், அவர் பலத்தை அநுபவிக்காதபடியால்.
ஆகையால், யாகத்தில் முயற்சிக்குக் காரணமான பலத்தைப் பற்றின ஆசையும்,
யாகம் என்கிற செயலும் எவரிடத்திலுள்ளனவோ அவரே அதிகாரி ஆவார்.

சொல்லப் படாத அதிகாரங்கள்

யாகம் முதலான வைதிக கர்மங்ளைச் செய்ய, மூன்று அடிப்படையான தேவைகள் உள்ளன.
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படாத போதும், இவை இல்லாமல்
கர்மங்களைச் செய்ய முடியாதபடியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1. வித்யை – அத்யயநம் செய்து, வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்றிருக்க வேண்டும்.
இது இருந்தால் தான், அடுத்தடுத்து என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதையும்,
சொல்லவேண்டிய மந்த்ரங்களையும் அறிய முடியும்.
2. அக்நி – யாகம் ஹோமம் முதலானவற்றில், ஒரு த்ரவ்யத்தை அக்நியில் சேர்க்க வேண்டும் என்பதால்,
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்நி
என்ற மூன்று அக்நிகளும் ஒருவனிடத்தில் இருந்தால் தான், அவன் யாகம் முதலானவற்றைச் செ ய்ய முடியும்
3. ஸாமர்த்யம் – யாகம் முதலானவற்றைச் செய்யும் திறமையும், பண வசதியும், உடல் ஆரோக்யமும்,
நன்கு செயல்படக்கூடிய புலன் களும் இருந்தால்தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்.
ஆகையால், பார்க்கமுடியாதவர்கள், பேச முடியாதவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலானவற்றில் அதிகாரம் கிடையாது.

பெண்ணின் அதிகாரம்

• பூர்வபக்ஷம் – யாகம் முதலான வைதிக கர்மங்களில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது, ஏன் என்றால்
1. யாகங்களைச் சொல்லும் விதிகளில் “இந்த பலத்தில் ஆசை யிருப்பவன் இந்தக் கர்மத்தைச் செய்ய வேண்டும்”
என்று ஆண்பால் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பெண்களுக்கு அத்யயநம் மூலம் பெற்ற ஞாநம் இல்லை , அதாநம் மூலம் பெற்ற அக்நிகள் இல்லை, சொத்து
இல்லாதபடியால் ஸாமர்த்யமும் இல்லை -அதனால்
• ஸித்தாந்தம் – பெண் களுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு.
1. “தர்மத்திலும், செல்வத்திலும் விஷய அநுபவத்தில் மனைவியைக் கணவன் மீறக்கூடாது” என்றும்
“பாணிக்ரஹணம் செயததால் தர்ம கார்யங்களிலும் அவற்றின் பலன்களிலும் சேர்ந்து தான் பங்கு உள்ளது”
என்றும் ஸ்ம்ருதிகள் சொல்கிறபடியால் அதிகாரம் நிச்சயம் உண்டு. இரண்டு பால்களில் ஏதோ
ஒன்றைச் சொல்ல வேண் டியபடியால் வேதம் ஆண் பாலால் சொன்னது.
2. பெண் களுக்குத் தனியாக வேத ஞாநமோ அக்நிகளோ தேவையில்லை -கணவனின் ஞாநமும் அக்நிகளும் போதும்.
கணவனின் செல்வமும் அவனது மட்டுமல்ல, மனைவிக்கும் சொந்தமானது என்று வேதம் சொல்கிற படியால் அவளிடம் பணமும் உள்ளது

தம்பதியின் அதிகாரம்

ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு, பெண்ணுக்கும் உண்டு என்று பார்த்தோம்.
ஆனால், அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது.
• வேதம், ஒரே யாகத்தில் கணவன் செய்யவேண்டிய சில செயல்களையும், அவனுடைய மனைவி செய்ய வேண்டிய
செயல்களையும் சொல்கிறது. கணேவனோ மனைவியோ தனியாக யாகம் செய்தால், மற்ற ஒருவர் செய்ய வேண் டிய செயல்களைச்
செய்ய முடியாதபடியால், யாகத்தின் சில அங்கங்களைச் செய்யாதபடியால் யாகம் நிறைவு பெற முடியாது, பலம் கிடைக்காது.
• ஆகையால், இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண் டும்.
• ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போதோ , வேறு சில ஸந்தர்பங்களிலோ மட்டும், கணவன் அல்லது மனைவியின்
ஸ்தாநத்தில் வே றே ஒருவரை வைத்து யாகம் செய்யலாம் என்று வேதம் அநுமதிக்கிறது.
• யாகம் செய்யும் புருஷனுக்கு ’யஐமாநன்’ என்ற பெயரையும், யாகம் செய்யும் மனைவிக்கு ’பத்நீ’ என்ற பெயரையும் வேதம்
கொடுத்துள்ளது. ஆகையால், பத்நீ என்ற சொல்லில் இருந்தே அறியலாம் – பெண்களுக்கு யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு என்று.

அத்யாயம் -6- பாதம் -2-
தொடங்கியதை முடித்தல்

•ஒரு பலத்தில் ஆசையால் ஒரு கர்மத்தைத் துவங்கிவிட்டு, அந்த கர்மம் முடிவதற்குள் அந்த ஆசை விலகிவிட்டால்,
தொடங்கப்பட்ட கர்மத்தை முடிக்க வேண்டுமா, அப்படியே நிருத்த வேண்டுமா என்று கேள்வி.
•முயற்சிக்குக் காரணம் ஆசை , அது இல்லாதபடியால் யாகத்தைத் தொடர்ந்து செய்யத் தேவையில்லை என்பது பூர்வ பக்ஷம்.
•முதலில் இருந்த ஆசையால் யாகத்தைத் தொடங்கி விட்டபடியால், அழைக்கப்பட்ட தேவதைகளுக்கு
ஹவிஸ்ஸை அளிக்காமல் அனுப்புவது தவறாகும்.
ஆகையால், மீதமிருக்கும் யாகத்தை ஆசை இல்லாவிட்டாலும் செய்து முடிக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.
•அப்படி ஒருவன் யாகத்தை முடிக்கத் தவறினால், அவன் தேவதைகளிடம் அபசாரம் செய்தவன் ஆவான் , ஆகையால்
த்ரைதாதவீயம் என்ற யாகத்தை ப்ராயச்சித்தமாகச் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது.

அங்க குண விரோத நியாயம்
இது ஐந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது

ஒரு ப்ரதாந கர்மத்துக்குப் பல அங்கங்கள் இருக்கலாம். அந்த அங்கங்களுக்கும் எத்தனையோ குணங்கள் / அங்கங்கள் இருக்கலாம்.
ஒரு ப்ரதானத்தின் அங்கத்துக்கும், ஒரு அங்கத்தின் அங்கத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால் எதைச் செய்ய வேண்டும்?
•ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகம் ஐந்து நாட்கள் செய்யப்படுவது.
அதில் ஐந்தாவது நாளில் தான் ஸோம ரஸத்தை வைத்து ப்ரதாந யாகத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு முன் இருக்கும் நான்கு நாட்களில் வேறு சில அங்க யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டுக்கு
முதல் நாள் தீக்ஷணீயா என்ற ஒரு யாகம் சொல்லப்பட்டுள்ளது.
• வேதத்தில் ஒரு விதி வாக்கியம் “எந்த யாகத்தைச் செய்தாலும் அதை பர்வ காலத்தில்
(பௌர்ணமி அன்றோ அமாவாஸை அன்றோ ) செய்ய வேண்டும்” என்றுவிதிக்கிறது.
• ஆகையால், ஜ்யோதிஷ்டோமம் என்ற ப்ரதாந யாகமும், தீக்ஷணீயா என்ற அங்க யாகமும் பர்வ காலத்தில்
செயப்படவேண்டும். ஆனால் இது அஸாத்யமானது. தீக்ஷணீயா யாகத்தை பர்வ காலத்தில் செய்தால்,
ஜ்யோஷ்டோம யாகத்தைச் சதுர்த்தி அன்று தான் செய்ய முடியும். ஸோம யாகத்தை பர்வ காலத்தில் செய்ய வேண்டும்
என்றால் தீக்ஷணீயா யாகத்தை ஏகாதசி அன்று தான் செய்ய வேண்டும்.
• இப்படி ப்ரதாந கர்மத்தின் ஒரு குணத்துக்கும் அங்கத்தின் குணத்துக்கும் விரோதம் ஏற்பட்டால், ப்ரதாநத்தின் குணத்தைத் தான்
செய்ய வேண்டும், அங்கத்தின் குணத்தை விட்டுவிட வேண்டும், ஏன் என்றால் அங்கம் இருப்பதே ப்ரதாநத்துக்காகத் தான்,
அங்கத்தைக் குறைவில்லாமல் செய்து, ப்ரதாநத்தைக் குறையோடு செய்தால் எந்தப் பலனும் கிட்டாது.

அத்யாயம் -6- பாதம் -3-
யதா சக்தி நியாயம்

• ஒரு யாகத்தைச் செய்யும் பொழுது அனைத்து அங்கங்களையும் செய்து தான் ஆக வேண்டுமா என்று கேள்வி.
• ஒரு பலனில் ஆசையால் செய்யப்படும் கர்மங்களுக்கு காம்ய கர்மங்கள் என்று பெயர்.
• அப்படிப்பட்டவையை விதிக்கும் ஸாஸ் த்ரம் “இந்த கர்மத்தால் இந்த பலனை அடையலாம்” என்று சொல்லும் பொழுது,
தனியாக அந்த யாகத்துக்கு மட்டும் அந்தப் பலனை ஏற்படுத்தும் சக்தி இல்லாதபடியால், அனைத்து அங்கங்களோடு கூடிய இந்த
யாகத்தால் இந்த பலனை அடையலாம் என்று தான் கூறவேண்டும்.
ஆகையால், காம்ய கர்மங்கள் ஒரு அங்கத்தில் குறை ஏற்பட்டாலும் பலன் கிடைக்காது.
• வேறு சில கர்மங்களை ஒருவன் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன.
அவற்றுக்கு நித்ய கர்மங்கள் என்று பெயர்.
• அவ்விடங்களில், அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதாந கர்மத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று வேதம் சொல்ல
முடியாது, ஒருவனுக்கு அப்படி செய்ய சக்தி இல்லாமல் போகலாம் ஆகையால்.
ஆகையால், ப்ரதாநங்களைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும், அங்கங்களை அவரவர் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்
என்று தான் வேதம் கூறுகிறது. இதற்கு தான் யதா சக்தி ந்யாயம் என்று பெயர் –

யாவத் ஜீவன் அக்னி ஹோமம்
ஸ்வர்க்க காம ஜோயிதிஷ்டோமேன யஜேதே ஸ்ருதி வாக்கியங்கள் -இந்த வேறுபாட்டை உணர்த்தும்
மூன்றாம் வேற்றுமை -ஆல் -என்றாலே உப கரணங்கள் தானாகவே சேரும் –
ஆகவே எல்லா அங்கங்களும் சேர்ந்து செய்தால் தான் பலன் கிட்டும்
விட்டால் பிராயச்சித்தங்கள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்

பிரதிநிதி நியாயம்

யாகம் என்றால் ஒரு தேவதைக்கு ஒரு த்ரயத்தை த்யாகம் செய்வது .
ஆகையால், யாகம் என் றாலே ஏதோ ஒரு த்ரவ்யம் வேண்டும் என்று நாம் அறிந்தபடியால், ஒரு யாகத்தின்
விதியைப் பார்த்தவுடன் தானாகவே நாம் அதில் உபயோகிக்கக்கூடிய அனைத்து த்ரவ்யங்களையும் நினைப்போம்.
அப்பொழுது, வேறே எந்த த்ரயத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது
என்பதற்காக வேதமே ஒரு த்ரவ்யத்தை விதிக்கும் “நெல்லால் யாகத்தைச் செய் ” என்பது போல்.
• ஆனால், ஒரு வேளை அந்த த்ரவ்யம் நமக்குக் கிடைக்காவிட்டால், அதற்காக யாகத்தையே செய்யாமல் இருப்பது சரி அல்ல –
ஓர் அங்கம் இல்லாததுக்காக ப்ரதாநத்தை விடுவது சரியல்ல. ஆகையால், அதற்கு பதிலாக உபயோகிக்கூடிய த்ரவ்யங்களையும் வேதமே சொல்லும்.
அவற்றுக்குப் ப்ரதிநிதி என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்பூர்ணமாஸத்தில் நெல் கிடைக்காவிட்டால் நீ வாரம் என்ற காட்டு அரிசியைப் பயன் படுத்தலாம் என்று வேதம் சொல்கிறது.
• விதிவிலக்கு –
ஒரு தேவதைக்குப் பதிலாக மற்ற ஓரு தேவதையையோ ,
கார்ஹபத்யம் முதலான மூன்று அக்நிகளுக்கு பதிலாக ஸாதாரண அக்நியையோ ,
வேதம் அந்த யாகத்துக்காகச் சொன்ன மந்த்ரத்தை விட்டு வேறே ஓரு மந்த்ரத்தையோ ,
ப்ரயாஜம் முதலான ஆராதுபகாரகங்களுக்கு பதிலாக வேறு ஆராதுபகாரகங்களையோ செய்ய இயலாது,
அதாவது அவற்றுக்குப் ப்ரதிநிதி கிடையாது. ஏன் என்றால்,
இவற்றால் வரும் பயன் மற்ற வற்றைச் செய்தால் ஏற்படும் என்பதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை ,
இவை அனைத்தும் அத்ருஷ்டம் / அபூர்வம் / புண்ணியம் மூலம் யாகத்திற்கு உதவுகின்றன.
ஆனால், நெல் இல்லாவிட்டால் நீ வாரம் அதே போல் பயன் படுத்தலாம் என்பது தெரிந்தது.
• ஒரு த்ரவ்யம் கிடைக்காவிட்டால், அதற்கு பதிலாக வேறு எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
என்பது கிடையாது. அந்த த்ரவ்யத்துக்கு ஒப்பான வேறே ஒன்றைத் தான் உபயோகிக்க வேண்டும்.
• “நெல்லால் யாகம் செய்” என்ற கட்டளையில் நெல் தன்மை என்ற ஸாமாந்யம், நெல் மணி என்ற அவயவி,
அதன் அவயவங்கள் என்ற மூன்றுக்கும் யாகத்தைக் குறித்து ஸாதநத்வம் (காரணத்வம்) தெரிகிறது.
• ஒரு வேளை நெல் கிடைக்காமல் போனால், சாமான்யத்தையோ அவயவியையோ யாகத்தில் உபயோகிக்க முடியாமல் போனாலும்,
நெல்லின் அவயங்களை மட்டுமாவது பயன் படுத்த வேண்டும்.
• நெல் இல்லாமல் நெல் அவயவங்களை எப்படி உபயோகிப்பது? நெல்லை போன்ற வேறே ஒரு தானியத்தை எடுப்பதன் மூலம் தான் –
ஸத்ருஸமான அதாவது ஒப்பான பொருட்களில் பொதுவான அவயவங்கள் இருக்கவேண்டும்.
ஆகையால், நீவாரம் போன்ற தான்யங்களில் நெல்லின் சிறு அவயவங்கள் இருக்கும்.
•ஆகையால், நாம் நீவாரத்தை உபயோகித்தால் அதிலிருக்கும் நெல் அவயவங்களை உபயோகித்ததாக ஆகிறபடியால்,
“நெல்லால் யாகம் செய்” என்ற விதியை குறைந்த பக்ஷம் கடைப்பிடித்து விட்டோம் என்று ஆகும்.
•ஆகையால், ஒரு த்ரவ்யம் கிடைக்காத போது, அதற்கு ஸத்ரு ஸமான (ஒப்பான) வேறே ஓரு த்ரவ்யத்தைத் தான் பயன் படுத்தவேண்டும்

————–

பாடம் -18–

ஆறாம் அத்யாயத்தின் எட்டு பாதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் –
•(1) அதிகாரீ– யாகத்தைச் செய்யத் தகுதி உடையவன் யார் என்பது
•(2) தர்மா: – அந்த அதிகாரியின் சில தர்மங்கள்
•(3) ப்ரதிநிதி: – ஒரு அங்கம் இல்லாதபோது அதற்கு ப்ரதிநிதியை உபயோகித்தல்
•(4) அர்த்தலோபநம் – சில யாகங்களில் சில கர்மங்கள் இல்லாமல் போகுதல்
•(5) தீக்ஷா – ஸோம யாகத்தில் செய்யப்பட வேண்டிய தீஷை யைப்பற்றி
•(6) ஸத்ரம் – பலர் சேர்ந்து செய்யும் சத்ரம் என் ற ஒரு யாகத்தில் அதிகாரத்தைப்பற்றி
•(7) தேயம் – யஜமாநன் ரித்விக்குகளுக்குக் கொடுக்கும் தக்ஷிணையைப்பற்றி
•(8) வஹ்நி – கார்ஹபத்யம் முதலான அக்நிகளைப்பற்றி சில விசாரங்கள்-

அத்யாயம் -6- பாதம் -4-

யாகத்திற்காகச் செய்யப்பட்ட ஹவிஸ்ஸிலிருந்து இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இதற்கு அவதாநம் என்று
பெயர். அவதாநம் செய்யப்பட்ட துண்டுகளில் நெய் சேர்த்து அக்நியில் போட வேண்டும். ஒரு வேளை அவதாநம்
செய்யப்பட்ட துண்டுகள் அழிந்துவிட்டாலோ , தொலைந்து விட்டாலோ , கெட்டுவிட்டாலோ , அந்த த்ரவ்யத்துக்கு
ப்ரதிநிதியாக நெய்யைப் பயன் படுத்த வேண்டும்
அவத்த ஹவிஸ்ஸூ -அவதானம் செய்யப்பட்டது –
• த்ரவ்யம் என்பது யாகத்துக்கு அங்கம், அங்கம் இல்லாததற்காகப் ப்ரதாந கர்மமான யாகத்தை விடக்கூடாது.
ஆகையால், நெய்யால் செய்ய வேண்டும்
• நேர் மாறாக, யாகத்தில் உபபயாகப்படுத்திய ஹவிஸ்ஸின் மீதத்தை செலவழிப்பதற்காக இடாமக்ஷணம்
ப்ராசித்ரபக்ஷணம் முதலான உண்ணும் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான த்ரவ்யம் ஒரு வேளை
அழிந்துவிட்டால், வேறே ஒரு த்ரவ்யத்தை உண்ண வேண்டும் என்ற தேவை இல்லை .
•இந்த செலவழிக்கும் கர்மங்கள் தான் ஹவிஸ்ஸில் மீதமிருக்கும் பகுதிக்கு அங்கங்கள், ஆகையால் ப்ரதாநமான
அந்த த்ரவ்யமே இல்லாதபோது இவற்றைச் செய்யத் தேவையில்லை

ஹவிரார்த்தி நியாயம்

• தர்ஸ பூர்ணமா ஸத்தில் அமாவாஸை அன்று பாலாலும் தயிராலும் இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும்.
அப்பொழுது, பால் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும், தயிர் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும்
செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு “யாருக்கு இரண்டு ஹவிஸ் ஸூகளும் கெட்டுவிடுகின்றனவோ அவன்
இந்த்ரனுக்காக ஐந்து பாத்திரங்கள் அளவுள்ள அரிசிச் சோறால் யாகம் செய்ய வேண்டும்”
என்று ப்ராயச் சித்தம் சொல்கிறது வேதம்.
•ஹவிஸ்ஸின் அழிவு என்ற நிமித்தம் ஏற்பட்டால், இந்த ப்ராயச் சித்தம் என்ற நைமித்திக கர்மத்தைச் செய்ய வேண்டும்.
• இங்கு நிமித்தம் என்ன என்று விசாரிக்கப்படுகிறது.
இரண்டு ஹவிஸ் ஸூகளும் அழிதல் தான் நிமித்தம் என்று பூர்வ பக்ஷம்.
•ஸித்தாந்தம் – குறைந்த பஷமான நிமித்தம் கிடைத்தவுடன், அதற்கு மேலும் சிறப்பிக்கக்கூடாது.
• வெறும் ’அழிவு’ நிமித்தம் ஆக முடியாது, ஏன் என்றால் ஏதோ ஒரு பொருள் எப்பொழுதுமே உலகில் அழிந்து
கொண்டுதான் இருக்கும், ஆனால் நிமித்தம் என் பது அவ்வப்போது ஏற்படும் ஒன்றாக இருக்க வேண்டும்.
• ’ஹவிஸ்ஸின் அழிவு’ என்று கொண்டால் அது அவ்வப்போது ஏற்படுவதுதான், ஆதகயால் அது தான் நிமித்தம்.
அதற்கு ஒரு படி மேல் சென்று ’இரண்டு ஹவிஸ் ஸூகளின் அழிவு’ என்று கொள்ளுதல் சரி அல்ல.
ஆகையால், இரண்டு ஹவிஸ்ஸூகளில் எது அழிந்தாலும் இந்த ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும்.

மூன்றாம் அத்யாயம்
கிரஹம் சோமா யாகத்துக்கு கொண்ட பாத்திரம் –
கிரஹம் தொடைக்க வேதம்
பூர்வ பக்ஷம் ஒரு பாத்திரம்
சித்தாந்தம் -ஒன்றை மட்டும் அல்ல -ஒருமையை கணிசிக்காமல் அனைத்தையும் என்றே கொள்ள வேண்டும்
அதே போல் இங்கு ஹவிஸ்ஸூ அழிவு -ஏதோ ஓன்று அழிந்தாலும் செய்ய வேண்டும்

ஹவிரார்த்தி நியாயத்தின் விதி விலக்கு

யாருக்கு மூன்று அக்நிகளும் அழிந்து விடுகின்றனவோ ,அவன் மறுபடியும் ஆதாநம் செய்து கொள்ளுதல்
ப்ராயச் சித்தம்’ என்று வேதம் கூறுகிறது.
•முன் சொன்ன ஹவிரார்தி ந்யாயத்தின் படி பார்த்தால், ’மூன்று’ என்ற சொல்லைக் கணிசிக்கக் கூடாது,
கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்தி என்ற மூன்று அக்நிகளில் ஏதோ ஒன்று அழிந்தாலும் மறுபடியும்
ஆதாநம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
•ஆனால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மை யாதெனில் – மூன்று அக்நிகளையும் உருவாக்குவது. ஆகையால், ஒரு
அக்நி அழிந்தவுடன் இதைச் செய்தால், தேவையில்லாமல் மற்ற இரண்டு அக்நிகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
•ஆகையால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மையைப் பார்த்து, ஹவிரார்தி ந்யாயத்ததயும் மீறி, மூன்று என்ற
சொல்லையும் சேர்த்து தான் நிமித்தத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகையால், மூன்று அக்நிகளும்
அழிந்தால்தான் மறுபடியும் ஒருவன் ஆதாநம் செய்து கொள்ள வேண்டும்.

உபக்ரம நியாயம் –

மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஒரு ந்யாயம் – உபக்ரம ந்யாயம்.
உபக்ரமம் என்றால் தொடக்கும்.உப ஸம்ஹாரம் என்றால் முடிவு.
• வேதத்தில் ஓரிடத்தில், “அக்நியிடமிருந்து ரிக்வேதம் தோன்றியது” என்ற ஒரு அர்த்தவாதமும்,
அதற்குப் பிறகு “உரத்த குரலில் ரிக்கால் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
• தொடக்கத்தில் ரிக்வேதம் சொல்லப்பட்டபடியால் முடிவிலிருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம்
என்று பொருளா? அல்லது முடிவில் ரிக் மந்த்ரம் சொல்லப்பட்டபடியால் தொடக்கத்திலும் ரிக்வேதம் என்ற சொல்
ரிக் மந்த்ரத்தைத் தான் சொல்லுகிறதா?
• பூர்வபக்ஷம் – தொடக்கத்திலிருப்பது அர்த்தவாதம், முடிவில் இருப்பது விதி. அர்த்தவாதத்தைக் காட்டிலும்
விதி முக்கியமானது. ஆகையால், விதியில் ரிக் என்ற சொல் உள்ளபடியால், தொடக்கத்திலும் ரிக்வேதம்
என்ற சொல் ரிக்மந்த்ரத்தைத் தான் குறிக்கிறது.
•ஸித்தாந்தம் – தொடக்கத்தில் இருப்பது அர்த்தவாதமாக இருந்தாலும், அது தான் முதலில் படிக்கப்படுகிறது.
அதைப் பார்த்தவுடன் ஏற்படும் அறிவுக்கு முரண்பட்ட எந்த அறிவும் நம்மிடம் இல்லை .
பின்னாலிருக்கும் வாக்கியம் விதியாக இருந்தாலும், அதைப் படிக்கும் பொழுது,
அர்த்தவாதத்தால் முன் ஏற்பட்ட அறிவுக்கு முரண்படாத
பொருளாகத்தான் அதற்குக் கொள்ள வேண்டும்.
ஆகையால், அஸஞ்சாத விரோதம் வராமைக்காக -இறுதியில் இருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம் என்று பொருள்.
• முதலில் இருப்பது அதிக பலமுடையது என்பது தான் உபக்ரம ந்யாயம்-

சேஸ்வர மீமாம்ஸை
தேவதை ஒத்துக் கொள்ளாதவர்களும் உண்டு
அக்னி என்ற சொல்லையே வேதம் சொல்லும் -தேவதையை அல்ல என்பர்
ஜைமினி சேஸ்வர மீமாம்சகர் என்றும் பின்னால் வந்தவர் மாற்றினார்கள் என்பாரும் உண்டு
இதன் விசாரம் ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்ப்போம்

அபச்சேத நியாயம் –
இது ஸ்ரீ பாஷ்ய காரர் முதலிலே எடுத்து காட்டிய நியாயம் –
மூன்றாம் அத்யாயத்தில் சொல்லப் பட்ட உபக்ரம ந்யாயத்திற்கு விதிவிலக்காக அபச்சேத ந்யாயம் என்ற
மற்ற ஓரு ந்யாயம் சொல்லப் படுகிறது–ஆறாம் அத்யாயத்தில்
• ஸோம யாகத்தில் பஹிஷ் பவமாநம் என்ற ஸ்தோத்ரம் பாடும் பொழுது, உத்காதா ப்ரஸ் தோதா ப்ரதிஹர்தா
ஆகியவர்கள் மண்டபத்தைச் சுற்றி நடந்து வர வேண்டும். அப்பொழுது, முன்னால் செல்பவரின் கச்சத்தைப்
பின்னால் செல்பவர் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நடக்கும் பொழுது ஒருவர்
அந்த கச்சத்தை விட்டு விட்டால், அதற்கு ப்ராயச் சித்தம் சொல்லப்படுகிறது.
• உத்காதா கச்சத்தை விட்டால் – அந்த யாகத்தை முடித்து, ரித்விக்குகளுக்கு எந்த தக்ஷிணையும் கொடுக்காமல்,
மறுபடியும் அதே யாகத்தைச் செய்து, அது முடியும் பொழுது முன் கொடுக்க இருந்த தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும்.
• ப்ரதிஹர்தா கச்சத்தை விட்டால் – யஜமாநன் தன்னிடமிருக்கு செல்வம் அனைத்தையும் ரித்விக்குகளுக்குக் கொடுத்து விட வேண்டும்.
• இருவரும் ஒரே ஸமயத்தில் கச்சத்தை விட்டால் – இரண்டு நிமித்தங்களும் உள்ளபடியால், இரண்டு ப்ராயச்சித்தங்கதளயும்
செய்ய வேண்டும். ஆனால், (1) செய்து கொண்டிருக்கும் யாகத்தில் தக்ஷிணை கொடுக்காமலிருப்பது
(2) தன்னிடமிருக்கும் அனைத்தையும் கொடுப்பது என்ற இரண்டையும் சேர்த்து செய்யவே முடியாது.
ஆகையால், விகல்பம் ஏற்படுகிறது – இரண்டு ப்ராயச்சித்தங்களில் ஏதோ ஒன்றை நம் இஷ்டப்படி செய்து கொள்ளலாம்

ஒரே யாகத்தில் வரிசையாக இருவரும் கச்சத்தை விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று விசாரம் செய்யப்படுகிறது.
• பூர்வபக்ஷம் –
உபக்ரம ந்யாயத்தின் படி பார்த்தால், முதலில் எதை அறிகிறோமோ அது ப்ரபலமானது,
ஏன் என்றால் அப்பொழுது அதற்கு முரணாக நம்மிடம் எந்த அறிவும் இல்லை . ஆகையால், முதலில் ஒருவர்
கச்சத்தை விட்டவுடன், அதற்காக விதிக்கப்பட்ட ப்ராயச்சித்தத்தை நாம் அறிந்து விடுகிறோம்.
அது முதலில் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு இரண்டாவதாக ஒருவர் கச்சத்தை விட்டால், அப்பொழுது முன் அறிவுக்கு
முரண் இல்லாதபடி தான் நடக்க வேண்டும் என்பதால், முன் ப்ராயச் சித்தத்தை விட்டு இரண்டாவது ப்ராயச் சித்தத்தைச்
செய்ய முடியாது. ஆகையால், முதலில் யார் கச்சத்தை விடுகிறாரோ , அவருக்காக விதிக்கப்பட்ட
ப்ராயச் சித்தத்தைத்தான் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
உபக்ரம ந்யாயம் என்பது முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்கள் ஒன்றை ஒன்று எதிர்பார்த்து அறிவை உண்டு
செய்யும்போது மட்டும் தான் செயல்படும். விதியும் அர்த்தவாதமும் அப்படிப்பட்டவை
ஆனால் இங்கு, முதல் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும் இரண்டாம் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும்
ஒன்றை ஒன்று எதிர்பார்க்க வில்லை .ஆகையால், உபக்ரம ந்யாயம் இங்கு செயல்படாது.
• முதலில் ஒருவர் கச்சத்தை விட்டவுடன் , அதற்கான ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றும்.
பிறகு, இரண்டவதாக ஒருவர் கச்சத்தை விடும் பொழுது அதற்கான ப்ராயச் சித்தத்தைப் பற்றின அறிவு
ஏற்படும் பொழுது, முன் ஏற்பட்ட ஜ்ஞாநத்தைத் தவறாக்கிக் கொண்டு தான் உண்டாக முடியும்.
ஆகையால், பின்னால் ஏற்படும் அறிவு தான் ப்ரபலமானது என்பது அபச்சேத ந்யாயம்

அத்யாயம் -6- பாதம் -6-

ஆறாம் அத்யாயத்தின் ஆறாவது பாதத்தில் சத்ரம் என்ற ஒரு வகையான யாகத்தைப் பற்றி விசாரம் செய்யப் படுகிறது.
• சத்ரம் என் பது பல யஜமாநர்கள் சேர்ந்து செய்யும் ஒரு யாகம். இந்த யாகத்தில் ரித்விக்குகள் கிடையாது.
யஜமாநர்களே தான் ரித்விக்குகளின் கார்யங்களைச் செய்ய வேண்டும்.
• அந்த சத்ரம் என்ற கர்மத்தில் அங்கமாக ப்ரயாக்ஜங்கள் செய்யப் படுகின்றன.
ப்ரயாஜங்கள் என்பவை தர்ஸ பூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளன.
ஸமித், தநூநமாத், இடா, பர்ஹி ஸ் , ஸ்வாஹாகாரம் என்ற ஐந்து தேவதைகளுக்காகச் செய்யப்படும் ஐந்து
யாகங்கள் தான் ப்ரயாஜங்கள்.
• ஸத்ரத்தைப்பற்றிச் சொல்லும் பொழுது வேதம், “வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் நாராஸம்ஸம் என்பது
இரண்டாவது ப்ரயாஜகமாகச் செய்ய வேண்டும். மற்றவர்கள் தநூநபாத் என்பதைச் செய்ய வேண்டும்” என்று.
• ஸத்ரத்தில் சில யஜமாநர்கள் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவராகவும், சிலர் மற்றவராகவும் இருந்தால்,
சிலருக்காக நாராஸம்ஸத்தைச் செய்தால் மற்றவரால் செய்யப்பட வேண்டிய அங்கம் விட்டுப்பபோகும்.
பலருக்காக தநூநபாத் ப்ரயாஜத்தைச் செய்தால், சிலருக்காகச் செய்யப்பட வேண்டிய
தநூநபாத் ப்ர்பயாஜம் செய்யப் படாமல் போகும்.
• ஆகையால், துல்யமான கல்பத்தில் இருப்பவர்களுக்கு தான் ஸத்ரத்தில் அதிகாரம் உண்டு. அதாவது,
அனைவரும் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மற்ற கோத்ரத்தைச் சேர்ந்தவராகவோ தான்
இருக்க வேண்டும்.

அத்யாயம் -6- பாதம் -7-
• விஸ்வஜித் என் ற யாகத்தில் யஜமாநன் தன்னிடமிருக்கும் சொத்து அனைத்தையும் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்
என்று வேதம் கூறுகிறது. சொத்து என்னும் சொல் எவற்றைக் குறிக்கிறது என்று விசாரம் செய்யப் படுகிறது
• ’யஜமானம் தன்னுடையது அனைத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று கட்டளை உள்ளது.
’தன்னுடையது’ என்ற சொல் யஜமாநனான தன்னையும், தனது தந்தை முதலானவர்களையும், பங்காளிகளையும், தன்னுடைய
சொத்தையும் குறிக்கக்கூடிய சொல். ஆகையால், இவை அனைத்தையும் கொடுக்க வேண்டுமா? அல்ல. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால்,
ஒரு முறை உச்சரிக்கப்பட்ட போது ஒரு பொருளைத்தான் அது குறிக்கும். ஆகையால், இங்கு தக்ஷிணை கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறபடியால்,
தக்ஷிணை பொதுவாக சொல்வத்தைக் கொண்டு கொடுக்கப் படுகிறபடியால், இங்கு யஜமாநன் தன் செல்வத்தைத் தான் கொடுக்க வேண்டும்.
• ராஜா யாகம் செய்தால், தன் சொத்தான ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டுமா? இல்லை . ராஜ்யம் என்ற பரந்து பூமி
ராஜாவினுடைய சொத்து அல்ல, அவரிடம் காப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால், அதைக் கொடுக்கக் கூடாது
• கடந்த காலத்திலிருந்த சொத்தையோ வருங்காலத்தில் வரப் போகும் சொத்தையோ கொடுக்கத் தேவையில்லை ,
யாகம் முடிந்து தக்ஷிணை கொடுக்கும் சமயத்தில் என்ன உள்ளதோ , அதைக் கொடுக்க வேண்டும்.
• யாகம் தொடங்கும் பொழுது, யஜமாநன் தன் சொத்தை (1) தன் வாழ்கைக்காக (2) யாகத்துக்காக (3) தக்ஷிணைக்காக
என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஸர்வ ஸ்வ தாநம் என்றால் தக்ஷிணைக்காக வைக்கப் பட்ட
செல்வம் முழுவதையும் கொடுப்பது தான். அனைத்தையும் அல்ல.

அத்யாயம் -6- பாதம் -8-

இந்த பாதத்தில் இருக்கும் ந்யாயங்களில் முக்கியமானது – ஸாமாந்ய விசேஷ ந்யாயம் என்றும்
ஸாக-பசு-ந்யாயம் என்றும் சொல்லப் படுகிறது.
• ஒரு பொதுச் சொல்லை உபயோகித்து விட்டு, பின் ஒரு சிறப்புச் சொல்லை உபயோகித்தால், அந்தப் பொது சொல்லுக்கும்
அந்த சிறப்புச் சொல்லின் பொருள் மட்டும் தான் பொருள் ஆகும்.
• எடுத்துக்காட்டு – “அந்த விலங்கை அழைத்து வா” என்று சொல்லி விட்டு, பிறகு “பசுவை அழைத்து வா”
என்று சொன்னால், முதலில் ’விலங்கு’ என்று சொல்லப்பட்டது வேறொரு விலங்கு,
இப்பொழுது பசு சொல்லப்படுகிறது என்று பொருள் அல்ல.
பொதுவாக உள்ள விலங்கு என்று சொல்லும் இவ்விடத்தில் பசுதவத் தான் குறிக்கிறது. இதற்கு
தான் ஸாமாந்ய விபஷ ந்யாயம் என்று பெயர் –

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா-சிறப்புச் சொற்கள் -சொல்வதையே -நாராயண பொதுச் சொல் குறிக்கும்
உபதேச ஷட்கம் பார்த்தோம்
அதி தேச ஷட்கம் -மேல் ஆறும் –

————–

பாடம் -19-அத்யாயம் -7

•மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் ஆறு அத்யாயங்களால் தர்மத்தின் ப்ரமாணங்கள், தர்மங்களுக்குள் வேறுபாடு,
அங்கத்வம், ப்ரயுக்தி, க்ரமம், அதிகாரம் ஆகிய ஆறு விசாரங்களின் மூலம் தர்மங்களளப் பற்றி வேதத்தில்
இருக்கும் உபதேசங்கள் (நேரடியான கூற்றுகள்) காண் பிக்கப்பட்டன.
இனி, அதிதேசம் என்பது ஏழாவது அத்யாயம் தொடங்கி கூறப்படுகிறது.
•அதிதேசம் என்றால் ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஒற்றுமை யுடைய மற்ற இடங்களில்
தருவித்துக் கொள்ளுதல். ஆகையால், உபதேசம் செய்யப்பட்டதை தான் அதிதேசம் செய்ய இயலும்
என்றபடியால் அதிதேசம் என்றுமே உபதேசத்தை நம்பியே இருக்கக் கூடியது.

ப்ரக்ருதி விக்ருதி
• வேதத்தில் நூற்றுக்கணக்கான யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அவை அனைத்துக்கும் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வேதம் தனித்தனியாக மறுபடியும் மறுபடியும்
சொல்லவில்லை . ஓரிடத்தில் அனைத்து அங்கங்களளயும் உபதேசம் செய்துவிட்டு, மற்ற யாகங்களிலும்
இதே போல் செய்யவேண்டும் என்று சொல்லி நிருத்தியுள்ளது.
• எந்த கர்மங்களினுடைய அங்கங்கள் அனைத்தும் விரிவாக நேரடியாக வேதத்தால் போதிக்கப்பட்டுள்ளனவோ, அவற்றுக்கு
ப்ரக்ருதி என்று பெயர். எடுத்துக்காட்டு – அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம், தர்சபூர்ணமாஸம் என் ற யாகம், ஜ்யோதிஷ்டோமம்
என்று அழைக்கப்படும் ஒரு ஸோம யாகம் ஆகிய மூன்று யாகங்களுக்குமுள்ள அங்கங்களை வேதமே நேரடியாக
உபதேசிக்கிறது.ஆகையால் இவை ப்ரக்ருதிகள்.
• எந்த கர்மங்களின் அங்கங்கள் அனைத்தையும் வேதம் உபதேசிக்காமல், “முன்னால் சொல்லப் பட்ட கர்மத்தைப் போல்
இதுவும் செய்யப்படவேண்டும்” என்று வேதம் சொல்கிறதோ , அவை விக்ருதிகள் ஆகின்றன. எடுத்துக்காட்டு – ஸூர்யனுக்காக சருவை
(வடிக்காத அரிசிச் சோற்றை) கொடுக்கும் யாகமானது, தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் எட்டு கபாலங்களில்
சமைக்கப்பட்ட புரோடாசத்ளத அக்நிக்கு தானம் செய்யும் யாகத்தின் விக்ருதி ஆகும்.

அதிதேசம்
அதி என்றால் மீதூர்ந்து / கடந்து / தாண்டி என்று பொருள்.
தேசம் என்றால் போதித்தல் / அறிவித்தல்.
ஆகையால், அதிதேசம் என்ற சொல், “கடந்து போதித்தல்” என்ற பொருளைக் குறிக்கிறது.
• ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை , அதைக் கடந்து, மற்ற விக்ருதி யாகங்களுக்கும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதிதேசம் என்று பெயர்.
• வேறு ஓரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் (இதி கர்தவ்யதா / செயல்முறை ) தான் செய்யும் உபகாரத்தின்
வயிலாக வேறு இடங்களளச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்
• எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த (ஸத்ருசமான /
ஒற்றுமையுடைய) மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ அந்தச் சொல் தொடர்
அதிதேசம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரக்ருதியும் விக்ருதியும் அங்கத்தை ஏற்கும் முறை
முதலில் ப்ரக்ருதி யாகம் வேதத்தால் விதிக்கப்படுகிறது.
• அதே யாகத்துக்கு தனக்கு உதவக்கூடிய அங்கங்ளின் தேவை ஏற்படுகிறது
• அப்பொழுது அருகிலேயே ப்ரயாஜம் முதலானவை உபதேசிக்கப்பட்டு, தங்களுக்கு ஒரு பயனை எதிர்பார்க்கின் றன.
•ஆகையால், ஒன்றுக்கு ஓன்று எதிர்பார்ப்பு இருப்பதால், இதே ப்ரக்ருதி யாகத்துக்கு ப்ரயாஜம் முதலானவை அங்கங்கள் ஆகின் றன.
• அடுத்து, விக்ருதி யாகம் ஒன்று விதிக்கப்படுகிறது. அதற்கும் தனக்கு உதவக்கூடிய அங்கங்களின் தேவை ஏற்படுகிறது
• அதே விக்ருதிக்கு அருகிலேயே சில அங்கங்கள் உபதேசிக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாக்யங்களை நாம் இன்னும்
அடையாதபடியால் அவை எந்த வகையில் உதவக்கூடியவை என்று நமக்குத் தெரியாது.
ஆகையால், முன்னமே உதவியாளர்கள் என்று பெயர் எடுத்த ப்ரக்ருதியின் அங்கங்கள் தான்
முதலில் விக்ருதி யாகத்தால் க்ரஹிக்கப்படுகின்றன.
அப்பொழுதும், ப்ரயாஜம் முதலானவைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபடியால், ஒரு பக்ஷமான எதிர்பார்ப்பால் தான் ப்ரயாஜம்
முதலானவை விக்ருதி யாகத்துக்கு அங்கங்கள் ஆகின்றன. இதுதான் அதிதேசம் ஆகும்
• இறுதியாக, விக்ருதிக்கு அருகில் படிக்கப்பட்ட அங்கங்கள், தாங்கள் பயனை எதிர்பார்க்கிற படியால், விக்ருதிக்கு
அங்கங்கள் ஆகின்றன.இப்பொழுது அந்த விக்ருதிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை –

அதிதேசம் இரண்டு வகைப்படும் – வசன அதிதேசம் என்றும் நாம அதிதேசம் என்றும்.
அதில் வசன அதிதேசமானது ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்றும்
கல்பித வசன அதிதேசம் என்றும் மேலும் இரண்டு வகைப்படும்

ஏழாம் அத்யாயத்தின் நான்கு பாதங்களில் சொல்லப்படும் விஷயங்கள்:
•முதல் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசம்
•இரண்டாம் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசத்தின் ஒரு வகையான ஸாம அதிதேசம்
• மூன்றாம் பாதம் – நாம அதிதேசம்
•நான்காம் பாதம் – கல்பித வசன அதிதேசம்

ப்ரத்யக்ஷ வசநம் என்றால் நாம் வேதத்தில் காணக்கூடிய / படிக்கக்கூடிய சொல் தொடர். அப்படிப்பட்ட சொல் தொடர்
நேரடியாக ஒரு யாகத்தின் அங்கத்தை மற்ற ஓரு யாகத்துக்கும் அங்கமாக்க வேண்டும் என்று
அதிதேசத்தை போதித்தால் அதற்கு ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்று பெயர்
• எடுத்துக்காட்டு – ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகம் தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் ப்ரக்ருதியானது.
ச்யேநம் என்ற ஒரு யாகமும் இஷு என்ற மற்ற ஓரு யாகமும் அதன் விக்ருதிகள். ஆகையால்,
ஜ்யோதிஷ் டோமத்தின் அங்கங்கள் அனைத்தும் ச்யேநத்தையும் இஷுவையும் சென்று அடைகின்றன.
• அப்படி ப்ரக்ருதியிலிருந்து அங்கங்களைப் பெற்ற பிறகு, ச்யேந யாகத்தில் சில சிறப்பு அங்கங்களும் விதிக்கப்படுகின்றன –
ரித்விக்குகள் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து கொண்டு கார்யம் செய்யவேண்டும், முதலானவை .
• அதே போல் இஷு என்ற யாகத்திலும் ப்ரக்ருதியில் இருந்து அங்கங்கள் வந்து அடைந்த
பிறகு சில சிறப்பு அங்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
• அதற்குப் பிறகு – “மற்றவை ச்யேந யாகத்தோடு ஒக்கும்” என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இதன்மூலம்,
இஷு என் ற யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு அங்கங்களளத் தவிற, ச்யேந யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு
அங்கங்களும் இஷு யாகத்தில் சேர்த்துக் கொள்ளப் பட வேண் டும் என்று தெரிகிறது.
• ஆக, “மற்றவை ச்யேந யாகத்வதாடு ஒக்கும்” என்ற சொல் தொடர் , ச்யேந யாகத்தின் அங்கங்களள இஷு யாகத்தில்
சென்று சேர்க்கிற படியால் ப்ரத்யஷ வசந அதிதேசம் ஆகும் –

ஸாமத்தின் அதிதேசம்
ப்ரத்யக்ஷ வசன அதி தேசத்தில் மற்ற ஓரு வகை தான் ஸாமங்களின் அதிதேசம்.
•ஸாமம் என் பது இசை வடிவ மானது. ஸாம வேதத்தில் ஸாமங்கள் படிக்கும் பொழுது, வெறும் இசையைப் படிக்க முடியாத படியால்,
ருக் என்ற ஸாஹித்யத்தோடு சேர்த்து தான் படிக்கப்பட்டுள்ளன. ஒரு ஸாமம் முதன்முதலில் வேதத்தில் உபதேசிக்கப் படும் பொழுது எந்த
ருக்கோடு சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளதோ அது யோனி ருக் என்று அழைக்கப் படுகிறது –
• அதற்குப் பிறகு, இதே ஸாமத்தை மற்ற ருக்குகளோடும் சேர்த்து பாட வேண்டும் என்று வேதம் சொல்கிறது, ஆனால் மறுபடியும்
மறுபடியும் இதே ஸாமத்தை அந்தந்த ருக்கோடு சேர்த்து பாடிக்காட்டு வதில்லை .
• “கவதி என் ற ருக்குகளில் ரதந்தரம் என் ற ஸாமத்தைப் பாடவேண்டும்” என் ற கட்டளையின்மூலம், ஒரு ருக்கோடு
படிக்கப்பட்ட ஸாமத்தை மற்ற ஓரு ருக்கோடு சேர்க்கிறது. ஆகையால், இதற்கு ஸாமத்தின் அதிதேசம் என்று பெயர்.
• அதே போல், “யோநி ருக்கில் படிக்கப்பட்ட ஸாமத்ளத உத்தரா என்ற பெயருளடய இரண் டு ருக்குகளோடும் சேர்த்தும் படிக்க வேண்டும்”
என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இவை எல்லாம் ஸாமத்தின் அதிதேசத்தைக் கூறுகின் றன

நாமத்தால் அதிதேசம்

பெயரைக் கொண்டும் அதிதேசம் ஏற்படுவதுண்டு. பொதுவாக , ஒருவருக்குப் ப்ரபலமாக இருக்கும் பெயரை இட்டு மற்ற ஓருவரை
அழைத்தால், அவருக்கும் இவருக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது என்று நாம்அறிந்து கொள் வோம்.
• எடுத்துக்காட்டு – ஒருவரைப் பார்த்து, “இவர் ஹநுமான்” என்று சொன்னால், அவர் ஹநுமானைப் போல் மிகுந்த் ராம பக்தி உடையவர்
என்று பொருள். ஆகையால், நாம் ஒருவருக்கு இடும் பெயரை வைத்து , அவரது தன்மை களை அறியலாம்.
• அதே போல் தான் வேதத்திலும் ஒரு கர்மத்தின் பெயரை வைத்து அது எந்த கர்மத்தோடு ஒற்றது என்று அறியலாம்.
• எடுத்துக்காட்டு – நாம் தினமும் செய்யவேண் டிய ஒரு ஹோமத்துக்கு அக்நி ஹோத்ரம் என்று பெயர்
என்று முன்னால் படித்தோம். அதே பெயரை உடைய வேறே ஒரு கர்மமும் விதிக்கப்படுகிறது –
“ஒரு மாதத்திற்கு அக்நி ஹோத்ரம் செய்யவேண்டும்” என்று. ஆகையால், ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தின் பெயரால் இந்த புது
ஹோமம் குறிக்கப்படுவதால் நாம் அறியலாம் – “ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தைப் போன்ற தன்மைகளை உடையது இந்த
ஹோமம்” என்று. ஒரு வைதிக கர்மத்தின் தன்மைகள் என்ன ? அதன் அங்கங்கள் தான். ஆகையால், இந்த புது கர்மமானது ப்ரஸித்தமான
அக்நி ஹோத்ரத்தின் அங்கங்களையே அங்கங்களாக உடையது என்று இந்தப் பெயரைக் கொண் டு அறிகிறோம். இதுவே நாம அதிதேசம் –

கல்பித வசன அதிதேசம்
இப்படி ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களைக் கொண்டு வந்து விக்ருதி யாகத்தில் சேர்க்கக்கூடிய
ஒரு கட்டளை ஒருவேளை ஒரு விக்ருதி யாகத்தில் இல்லை என்றால்,நாமாக அப்படி ஒரு வசனதைக்
கல்பிக்க வேண்டும். ஏன் என்றால், இதி கர்தவ்யதா / செயல் முறை / உதவியாளர்கள் /
அங்கங்கள் இல்லாமல் ஒரு யாகத்தால் மட்டும் எந்த பயனயும் கொடுக்க முடியாது.
•இப்படி கல்பிக்கப்படும் வாக்யத்துக்கு கல்பித வசன அதிதேசம் என்று பெயர்.
•“ஆக்நேய யாகத்தைப் போல் ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்”, “ப்ரக்ருதி யாகத்தைப் போல்
விக்ருதி யாகத்தைச் செய்ய வேண்டும்”என்பது போல் இந்த வசனம் கல்பிக்கப்படுகிறது-

————–
பாடம் -20-
•ஏழாவது அத்யாயத்தில் கடைசி பாதத்தில் கல்பித வசந அதிதேசம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது –
பொதுவாக விவரிக்கப் பட்டது. அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சிறப்பு அம்சங்கள் இந்த எட்டாவது அத்யாயத்தில்
சொல்லப்படுகின்றன.
•அதிலும் நான்கு பாதங்களில் –
•முதல் பாதம் – ஸ்பஷ்டமான அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•இரண்டாவது பாதம் – ஸ் பஷ்டம் அல்லாத அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•மூன்றாவது பாதம் – பல அறிகுறிகள் இருந்தால் அவற்றில் எதைக் காட்டிலும் எது பலம் பொருந்தியது என்பதையும்
•நான்காவது பாதம் – அதிதேசம் ஏற்படாது விதி விலக்குகளையும் கூறுகின்றன

கல்பித வசன அதிதேசத்தின் முறை –
• ஸூர்யனுக்காக சரு என்று அழைக்கப்படும் கஞ்சி வடிக்காத அரிசி சோற்றைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
என்று ஒரு வேத வாக்கியம் கூறுகிறது. இதற்கு ஸௌர்ய யாகம் என்று பெயர்
• இந்த யாகத்தின் செயல்முறை முழுமையாக சொல்லப் படவில்லை , ஆகையால் இந்த யாகம் அங்கங்களை
எதிர்பார்க்கிற படியால் அதிதேசம் கல்பித்து அங்கங்களைக் கொண்டு வர வேண்டும்.
• ஒரு நியதி இல்லாமல் ஏதோ ஒரு யாகத்திலிருந்து ஏதோ ஒரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யலாம் என்பது சரியல்லை .
சாஸ்த்ரத்தின் பொருள் என்பது ஒரு ந்யாயத்தோடும் நியமத்தோடும் தான் இருக்க வேண்டும்.
ஆகையால், ஏதோ ஒரு யாகத்தின் அங்கங்கள் தான் இங்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அந்த யாகம் ஸௌர்ய யாகத்ததாடு ஒற்றுமை யுடையதாக இருந்தால் எளிது.
• ஸௌர்ய யாகத்தை விதிக்கும் வேத வாக்கியத்தைப் பார்த்தவுைன் நமக்குத் தெரியும் விஷயங்கள்:
• இதில் ஒரு தேவதை தான்
• இது நெல்லைக் கொண் டு செய்யப் படுகிறது
• இதில் தத்திதம் என்ற ப்ரத்யயம் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது
(தாசாரதி -தசரதன் தொடர்பு -ஜனகன் -ஜானகி -இவை தத்வித ப்ரத்யயங்கள் )
• இதில் நிர்வாபம் என்ற செயல் உள்ளது
• இவற்றைப் பார்த்தவுடன் நமக்கு சடக்கென முதலில் நினைவுக்கு வரக் கூடியது தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் ஆக்நேய யாகம் தான்.
ஏன் என்றால் மேற் சொன்ன நான்கு தன்மைகளும் அதற்கும் உள்ளன.
• ஆகையால், ஸௌர்ய வாக்கியத்தைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஆக்நேய யாகத்தின் அங்கங்களையே தான்
ஸௌர்ய யாகத்திலும் செய்ய வேண்டும் என்று ஒரு விதியை கல்பிக்கிறோம். இது தான் கல்பித வசந அதிதேசம் ஆகும் –

தர்ச பூர்ண மாச ஆறு யாகங்களை இஷ்டிகள் என்றும் அழைப்பர் –

ஸோம யாகங்கள்
ஸோம யாகங்கள் அனைத்துக்கும் ஜ்யோதிஷ் டோமம் என்ற ஸோம யாகம் தான் ப்ரக்ருதி,
அதிலிருந்து தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் அங்கங்கள் சென்று அடைகின்றன.
• “விச்வஜித் யாகத்தைச் சேய்”,”அபிஜித் யாகத்தைச் செய்”, “எதிரிகளைக் கொலை செய்பவன் ச்யேந யாகத்தைச்
செய்ய வேண்டும்” என்று பல விதிகளால் பல யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் எங்கிருந்து
அங்கங்களைக் கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
• இவற்றின் விதி வாக்கியத்தைப் பார்த்தால் ஒன்று தெரியும் – எந்த தேவதைக்காக இந்த யாகம் செய்யப்படுகிறது என்று இந்த
வாக்கியத்தில் இல்லை .-அதே போல் வேறே யாகம் உள்ளதா என்று பார்த்தால் – “ஸோமேந யஜேத” / “ஸோம லதையைக் கொண்டு
யாகம் செய்” என்று ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகத்தை விதிக்கும் வாக்கியத்திலும் தேவதை சொல்லப்டவில்லை , ஆனால்
ஜ்யோதிஷ் டோமத்தின் அனைத்து அங்கங்களும் விவரிக்கப் பட்டுள்ளன.
•ஆகையால், உத்பத்தி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என்ற ஒற்றுமையைக் கொண்டு விச்வஜித், அபிஜித், ச்யேநம்
முதலான யாகங்கள் ஜ்யோதிஷ் டோமத்தின் விக்ருதிகள் தான் என்று முடிவு செய்து, அதன் அங்கங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கும்
அதிதேச வாக்கியத்தைக் கல்பிக்கலாம். ஆகையால், இவையும் ஸோம ரஸத்தால் செய்யும் யாகங்கள் ஆகின்றன

அதி தேசம் ஆகாதவை
• ஒரு யாகத்திலிருந்து மற்ற ஓரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது,
கீழ்க் கண்டவற்றை அதிதேசம் செய்யக் கூடாது :
• (1) பலம் – ப்ரக்ருதி யாகத்துக்கு என்ன பலம் வேதத்தால் சொல்லப் பட்டதோ , அதையும் விக்ருதிக்கு எடுத்துச் சென்று,
விக்ருதிக்கும் அதே பலம் தான் என்று சொல்லக் கூடாது, ஏன் என்றால் விக்ருதியை போதிக்கும் வாக்கியத்திலேயே
அதற்குத் தனியாக பலம் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், ஆக்நேயம் என்ற ப்ரக்ருதி யாகம் ஸ்வர்கத்துக்காக செய்யப்பட்டாலும், அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகத்துக்கு ப்ரஹ்ம வர்சஸம் என்ற பலம் இருக்கலாம்
• (2) நியமம் – தர்சபூர்ணமாஸம் என் ற கர்மம் வாழ்நாள் முழுவதும் செய்யப்பட வேண் டும் என்று வேதம் உபதேசிப்பதால்
அது நித்ய கர்மம் ஆகிறது. ஆனால், அதிலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது,
’வாழ்நாள் முழுவதும் செய்தல் வேண்டும்’ என்ற நியமத்தை எடுத்துச் செல்லக் கூடாது. ஸௌர்ய யாகத்தை ஒரு முறை செய்தாலே
ப்ரஹ் மவர்சஸம் என்ற பலம் கிட்டும்.
• (3) கர்த்தா – தர்சபூர்ணமாஸத்தைச் செய்பவன் ஸ்வர்ககாமன், அதாவது ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன் என்று வேதம் கூறுகிறது.
அந்த கர்த்தாவை அதிதேசம் செய்து, ஸௌர்ய யாகத்தையும் ஸ் வர்கத்தில் ஆசை இருப்பவன் தான் செய்ய வேண் டும் என்று கூற முடியாது.
ஸௌர்ய யாகத்தின் பலத்தில் ஆசை இருப்பவன்,அந்த யாகத்தின் கர்த்தா ஆவான்.
• (4) ஸங்கம் – ஸங்கம் என் றால் சேர்க்கை என்று பபாருள். ஆக்நேய யாகம் தனியாக ஸ்வர்கத்தைக் கொடுக்காது,
தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் மற்ற ஐந்ததோடு சேர்ந்து தான் கொடுக்கும். ஆனால் அதே போல் அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகமும் வேறு ஐந்து யாகங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று தேவை இல்லை
, அதாவது ப்ரக்ருதி யாகத்துக்கு இருக்கும் சேர்க்கைகளை அதிதேசம் செய்யக்கூடாது.

அதே போல் ப்ரக்ருதியில் காம்யமாக விதிக்கப்பட்ட குணங்களுக்கும் அதிதேசம் கிடையாது.
• தர்சபூர்ணமாஸ யாகத்தை நித்ய கர்மமாகச் செய்யும் பொழுது, தீர்த்தத்தை ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்கு
மாற்றும் ப்ரணயநம் என்ற கார்யத்துக்காக சமஸம் என்ற பாத்திரத்தை உபயோகிக்க வேண்டும்.
ஆனால், நித்ய கர்மமாக இல்லாமல், பசுக்கள் வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதத ப்ரணயநத்தை கோதோஹநம்
என் ற பாத்திரத்தால் செய்ய வேண்டும் என்று பார்த்திருக்கிறோம்.
இதில் சமஸம் என்பது தர்சபூர்ணமாஸ யாகத்தின் அங்கம், அதற்கு உதவுகிறபடியால். கோதோஹநம் என்பது நேரடியாக
பசு என்ற பலத்தின் அங்கம், தர்சபூர்ணமாஸத்தின் அங்கம்அல்ல.
• அதிதேசம் என் பது, ஒரு விக்ருதி யாகத்துக்கு அங்கங்களின் எதிர்பார்ப்பு, அதைத் தீர்ப்பதற்காக வேறே ஒரு ப்ரக்ருதி
யாகத்திலிருந்து அங்கங்களைக் கொண் டுவந்து சேர்ப்பது தான்.
ஆகையால், ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை மட்டும் தான் அதிதேசம் செய்யமுடியும்.
• கோதோஹநம் என்பது தர்சபூர்ணமாஸத்தின் அங்கமே அல்ல, பசு என்ற பலத்தின் அங்கம். ஆகையால், கோதோஹநத்தை
ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்ய முடியாது. சமஸத்தை மட்டும் தான் அதிதேசம் செய்ய முடியும்.
• ஆகையால், ஸௌர்ய யாகத்தில் சமஸத்தால் மட்டும் தான் ப்ரணயநம் செய்யலாம்.
ஸௌர்ய யாகத்தில் கோதோஹநத்தால் ப்ரணயநம் செய்தால் பசுக்களைப் பெற முடியாது

எது எதற்கு விக்ருதி
பதிதனாரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் விதிக்கிறது.
இப்பொழுது இந்த யாகம் எந்த யாகத்தின் விக்ருதி, அதாவது, எந்த யாகத்தின் அங்கங்களை இதில்
கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற ஸந்தேஹம் எழுகிறது.
• நேரடியாக அதிதேசத்தைப் போதிக்கும் எந்த வாக்கியமும் இல்லாதபடியால், இந்த யாகத்துக்கு வேறு எந்த யாகத்ததாடு
ஒற்றுமை உள்ளது என்று பார்த்து தான் அதிதேசம் செய்ய வேண்டும்.
• (1) இந்தனுக்காகச் செய்யப்படுதல் என்ற ஒற்றுமையை வைத்து தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும்
பால் அல்லது தயிர் யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• (2) பதினொரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு செய்யப் படுதல் என்ற ஓற்றுமையை வைத்துப் பார்த்தால்,
தர்சபூர்ணமாஸத்தில் பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடாசத்தைக் கொண்டு
செய்யப்படும் அக்நீ ஷோமீயம் என் ற யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• பூர்வ பக்ஷம் –
யாகத்தில் ப்ரதானமானது தேவதை தான், அவருக்காக யாகம் செய்கிறபடியால். ஆகையால், தேவதையில் ஒற்றுமையைக் கொண்டு தான்
அதிதேசம் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
யாகம் என் றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தைத் த்யாகம் செய்வது. த்ரவ்யம் கண் முன் உள்ளது,
த்யாகத்துக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. தேவதையோ மனதால் நினைக்கப் படுகிறார்,
அவ்வளவுதான், ஆகையால் த்யாகத்திற்கு நெருக்கமானவர் அல்ல. ஆகையால், த்யாகம் என்ற யாகத்துக்கு தேவதையைக் காட்டிலும்
அந்தரங்கமானது த்ரவ்யம் தான். ஆகையால், மேற் பசொன்ன இரண் டாவது பக்ஷத்தைத் தான் பின் பற்ற வேண்டும்

வேதத்தில் “தயிர், தேன், நெய், நீர் , சோளம், அரிசி, இவற்றால்
ப்ரஜாபதிக்கு யாகம் செய்ய வேண்டும்” என்ற வாக்கியம் 6 யாகங்களை விதிக்கிறது.
• இதில் தயிர் யாகம் தர்ச பூர்ண மாஸத்திலிருக்கும் இந்த்ரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி என்பதையும்,
நெய் யாகம் தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்று நெய்யை வைத்து செய்யப் படும்
உபாம்சுயாஜத்தின் விக்ருதி என்பதையும், சோளம் மற்றும் அரிசியை வைத்துச் செய்யும் யாகங்கள் தர்சபூர்ணமாஸத்திலிருக்கும்
ஆக்நேய யாகத்தின் விக்ருதிகள் என்பதையும் எளிதில் அறியலாம்.
• ஆனால் தேன் யாகமும் நீ ர் யாகமும் எவற்றின் விக்ருதிகள் என்று ஆராய வேண்டும்.
• பூர்வபக்ஷம் –
த்ரவமான த்ரவ்யத்தைக் கொண்ட து என்ற ஒற்றுமையைக் கொண் டு தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச்
செய்யப் படும் பால் அல்லது தயிர் யாகத்தின் விக்ருதிகள் தான் இவை
•ஸித்தாந்தம் –
நெய்யும் நெருப்பின் ஸம்பந்தத்தால் த்ரவமாக ஆகக் கூடியதான படியால் அதோடும் இவை இரண் டுக்கும் ஒற்றுமை
உள்ளது. மேலும், நெய்யோடு மற்ற ஓரு ஒற்றுமையும் உள்ளது -தேனுக்கு நீருக்கும் – அவற்றின் வழியே ஒளி புக முடியும் என்பது.
ஆகையால், மிகுந்த ஒற்றுமை இருக்கிறபடியால், தேன் யாகமும் நீ ர் யாகமும்,
தர்சபூர்ணமாஸத்தில் நெய்யால் செய்யப்படும் உபாம்சுயாஜத்தின் விக்ருதிகள் தான்.

• வேதத்தில் ஆமிக்ஷா என் ற த்ரவ்யத்தைக் கொண்டு செய்ய வேண்டிய யாகம் விதிக்கப்பட்டுள்ளது. அது எதன் விக்ருதி?
எந்த யாகத்தின் அங்கங்களை இதில் கொண்டு வர வேண்டும் என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.
• ஆமிக்ஷா என்ற த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தோடு தொடர்பு / ஒற்றுமை உடையதோ , அந்த த்ரவ்யத்தால் செய்யப்படும் யாகத்தின்
விக்ருதியாகத் தான் இந்த ஆமிக்ஷா யாகம் இருக்க வேண்டும்.
• கொதிக்கும் பாலில் தயிரை சேர்த்து அதைத் திரிய வைத்தால் கிடைக்கும் கெட்டிப் பகுதிக்கு தான் ஆமிக்ஷா என்று பெயர்.
• பூர்வ பக்ஷம் 1 –
பால் தயிர் இரண் டிலிருந்தும் ஆமிக்ஷா தோன்றுகிற படியால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனைக் குறித்து
தயிராலும் பாலாலும் செய்யப் படும் யாகங்களின் அங்கங்களைத் தான் இந்த ஆமிக்ஷா யாகத்தில் சேர்க்க வேண்டும்
• பூர்வ பக்ஷம் 2 –
ஆமிக்ஷா என் பது தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், ஆமிக்ஷா கெட்டியாக இருக்கிறபடியால் அதற்கும்
தயிருக்கும் தான் மிகுந்த ஒற்றுமை உள்ளது. ஆகையால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காக செய்யப்படும் தயிர் யாகத்தும் விக்ருதி தான் இது
•ஸித்தாந்தம் –
ஆமிக்ஷா தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், பால் தான் முக்கியமானது. கெட்டி பாகம் த்ரவமான
பாகம் என்ற பிரிவை ஏற்படுத்த மட்டுமே தயிர் உதவுகிறது. ஆகையால் ஆமிக்ஷா யாகத்தில் பால் யாகத்தின் செயல் முறையைத்தான்
பின் பற்ற வேண்டும்-

அக்நாவிஷ்ணு என்ற தேவதைக்கு பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடசத்தாலும் , ஸரஸ்வதி என்ற
தேவதைக்கு சரு என்ற த்ரவ்யத்தாலும், ப்ருஹஸ்பதி என்ற தேவதைக்கு சரு என் ற த்ரவ்யத்தாலும்
யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது .
• பூர்வ பக்ஷம் –
இங்கு மூன்று யாகங்கள் உள்ளன.
தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்றும் மூன்று யாகங்கள் உள்ளன. ஆகையால், இங்கிருக்கும் முதல் யாகம்
தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
•ஸித்தாந்தம் –
யாகங்களின் இடத்தில் ஒற்றுமையைக் காட்டிலும் அவற்றின் தேவதைகளின் ஒற்று மையைப் பார்ப்பது முக்கியம்.
இவ்விடத்தில் முதல் யாகம் அக்நி விஷ்ணு என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாக உடையது. தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான
ஆக்நேய யாகம் ஒரே ஒரு அக்நியை மட்டும் தேவதையாக உடையது.
ஆகையால் தேவதைப் பொருத்தம் இல்லை . தர்சபூர்ணமாஸத்தில் மூன் றாவது யாகம் ஆக்நீ ஷோமீயம், அதாவது அக்நி ஸோமன்
என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாகவே உடையது. ஆகையால், அது தான் இங்கு சொல்லப்பட்ட யாகத்ததாடு அதிகமான ஒற்றுமை
உடையது. ஆகையால் இந்த முதல் யாகம் அங்கிருக்கும் மூன்றாவது யாகத்தின் விக்ருதி தான்

யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் -அதுக்கு அங்கமாக -அக்னியில் ஒரு பகுதியை சேர்ப்பது
ஹோமம் -அங்க அங்கி பாவம் இல்லை -மூன்றுக்கும் சமமான ப்ராதான்யம்

தர்வி ஹோமங்கள்
இது வரை அதிதேசம் ஏற்படும் இடங்களைப் பார்த்தோம். எட்டாவது அத்யாயத்தின் கடைசி பாதத்தில்
அதிதேசமே இல்லாத இடமான தர்வி ஹோமங்களைப் பற்றிச் சொல்லப் படுகிறது
• ‘ஜுஹோதி’ / ’ஹோமம் செய்ய வேண்டும்’ என்ற சொல்லால் விதிக்கப்படுபவை தர்வி ஹோமங்கள்.
பல தர்வி ஹோமங்கள் ஸ்ம்ருதி நூல்களிலும் ச்ருதி என்ற வேதத்திலும் சொல்லப் பட்டுள்ளன.
• பூர்வ பக்ஷம் –
தர்விஹோமங்களை விதிக்கும் வாக்கியங்களிலும் தேவதை சொல்லப் படாதபடியால், இவை ஸோம யாகத்தின் விக்ருதிகள்
•ஸித்தாந்தம் –
விதி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என் ற ஒற்றுமை இருந்தாலும், ஸோம யாகங்கள் யாகங்கள், இவை ஹோமங்கள்.
யாகங்களுக்கும் ஹோமங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
யாகங்களில் “வௌஷட் ” என்று சொல்ல வேண்டும், ஹோமங்களில் ஸ்வாஹா என்று சொல்ல வேண்டும். மேலும், தர்வி ஹோமங்களில்
“ப்ருதிவிக்கு ஸ்வாஹா அந்தரிக்ஷத்துக்கு ஸ்வாஹா” போன்ற மந்த்ரங்கள் சொல்லப் படுகிறபடியால், இவற்றில் தேவதைகள் உள்ளன, ஆகையால்
ஸோம யாகத்ததாடு ஒற்றுமையும் இல்லை .
• ஆகையால், ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமைகள் அதிகமாக உள்ளபடியால் எந்த யாகத்தின் செயல்முறையையும் இவற்றில் அதிதேசம்
செய்ய முடியாது.
• ஆகையால், தர்வி ஹோமங்களில் அதி தேசமே செய்ய முடியாது.
அவ்விடத்தில் எந்த அங்கங்கள் சொல்லப் பட்டுள்ளனவோ அவற்றை மட்டும் தான் செய்ய வேண்டும்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: