ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-4-பகுதி -2-ஸ்வயம் ஜோதி பிரமாணம்-பகுதி -2 /சப்தான்ன பிராமணம்/உக்தம் பிரமாணம்/சாரீரக பிரமாணம்/வம்ச பிரமாணம்–

ஸ்லோகம்-21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டது. மோக்‌ஷம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு
காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டு.
மோக்‌ஷ ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலை.
உறக்கம் என்பது ஞானிக்கும் அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும்.
மோக்‌ஷத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.

இந்த மந்திரம் மோக்‌ஷ லக்ஷணத்திற்கு பொருந்தும். ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம்
ஆனால் அதுவே மோக்ஷமாகாது. ஒன்பது லக்ஷணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மோக்ஷத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.

तद्वा अस्य – இந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.

अतिच्छन्दः – காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன். ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.
அதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லக்ஷணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்.
தியானத்தில் ஒவ்வொரு லக்ஷணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,
अपहतपाप्मा – பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன். பாவத்தின் விளைவு துயரம். ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லை.
எனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான்.
முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான். பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது

தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்
अभयँ रूपम् : நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன். நமக்கு வேறாக உள்ள ஒன்றூ என்னை தாக்கி விடும், அழித்து விடும்
என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான்,
அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.

விசேஷ ஞான அபாவாத் – தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லை.
விழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரிதான்.
ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம்.
ஒரே ஞானமான அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம். விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லை.
ஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்தக் காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை.
உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையில் அனுபவிப்பான்.

மோட்சம்: ஞானி எல்லா வேற்றுமைகளுக்கும் ஒரு பரமாத்வை ஆதாரமாக பார்க்கிறான்.
எல்லா பானைகளை பார்க்கும் போது ஆதாரமாக உள்ள களிமண்ணை மட்டும் பார்ப்பது போல
எல்லா வேற்றுமைகளிலும் நாம ரூபங்களினால் பாதிக்கப்படாமல் அவைகளை நீக்கி விட்டு
அவைகளுக்கு ஆதரமாக உள்ள பிரம்மத்தின் மீது இருக்கிறது.
சமதிருஷ்டி, சர்வாத்மபாவம். ஞானிக்கு சுபாவமாக இருக்கிறது. விசேஷங்கள் எல்லாம் நிர்விஷயம்.

சைதன்ய ஸ்வரூபம்: ஞானி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திலும் சேதனமாக இருக்கின்றான்,
ஞானத்துடன் இருக்கின்றான் சைதன்யம் அவித்யை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. சாமான்ய ஞானத்துடன் இருக்கின்றான்.
ஞானிக்கு அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம் என்றா சாமான்ய ஞானமாக இருக்கின்றது.
சைதன்யம் அனைத்துமே மித்யா என்று விளக்கிக் கொண்டிருக்கின்றது.

आप्त कामँ – அனைத்து ஆசைகளும் அடையப்பட்டு விட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்து ஆசைகளும்
அடையப்பட்டது போன்ற நிலை. ஞானிகளுக்கு எல்லா விஷயங்களும் நீக்கப்பட்டு விட்ட நிலையில் இருப்பான்.
आत्म कामँ – எல்லா பொருட்களும் ஆத்மாவாகி விட்டது, நானேயாகி விட்டது. எப்பொழுது அடைய நினைக்கிற பொருட்களெல்லாம்
வேறாக இருக்கிறதோ அது வரையில் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஆனால் அவைகள் எல்லாம் நானேதான் என்று நினைக்கும் போது ஆசைகளே வராது.
अकामँ रूपँ – காமத்துக்கு ஆதாரமாக இல்லாதது, ஆசைக்கு இருப்பிடமாக இல்லாதது. ஆசை எப்போதும் மனதைத்தான் சார்ந்திருக்கிறது.
शोकान्तरँ – சோகம் முற்றிலும் இல்லாதது, மனதில் காரணமில்லாமல் ஏற்படும் துன்பம், துயரம், வெற்றிடம் ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்

ஸ்லோகம்-22
अत्रः पिता अपिता भवति माता अमाता भवति– ஆழ்நிலை உறக்கத்தில் / முக்தி நிலையில் தந்தையாக இருந்தும் அப்படி இருப்பதில்லை,
தாயாக இருந்தும் அப்படி இருப்பதில்லை. எந்த உறவுமற்று இருத்தல், நான் தனியானவன் என்ற மனப்பான்மை ஒழிந்து
எல்லாமே நான் என்ற பாவம். வியக்தி அபிமானம், ஜீவ-ஜீவ சம்பந்த நிமித்தமாக சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.
ஞானிக்கு தன் தாய், தந்தையாக இருந்து செய்யும் கடமைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் அதனால் வரும் பாவ-புண்ணியங்கள் வந்து சேராது.
ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவனுக்கு எந்த உறவுகளும் அவனுக்கில்லை.

लोकाः अलोकाः – கர்மபல பூதம் – கர்மத்தின் பலனாக் கிடைத்த லோகத்திலுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.
பெரிய செல்வந்தனும், ஏழையும் தூங்கியவுடன் ஒரே அனுபவம்தான் இருக்கும். ஞானி எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பான்.
எந்த சூழ்நிலையும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் கொடுக்க முடியாது. நாம் உருவாக்கியிருக்கும் பிராரப்த கர்மத்தினால்
அடைந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறோம்.
देवाः अदेवाः – தேவர்கள் நமக்கு அனுக்கிரகம் செய்பவர்கள் அவர்களும் நமக்கு உறக்கத்தில் அனுகிரகம் செய்வதில்லை.
ஞானிக்கு எந்த தேவதைகளுடைய அனுக்கிரகமும் தேவையில்லை. எந்தவித பிரார்த்தனையும் செய்வதில்லை,
எந்த கர்மமும் செய்வதில்லை, தேவதைகளுக்கு ஆஹுதிகளும் கொடுப்பதில்லை. தேவதைகளின் உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டான்.
वेदाः अवेदाः – உறக்கத்தில் வேதமானது அப்பிரமாதாவாக மாறிவிடுகிறான். ஞானி எப்பொழுதும் அப்பிரமாதாவாக இருக்கிறான்.
கர்ம காண்டமும், ஞான காண்டமும் வெறும் ஆத்மாவாகத்தான் இருக்கிறான்.

ஆழ்நிலை உறக்கமானது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஞானிக்கும், ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவர்களும் தந்தை என்ற உறவின் மீதுள்ள அபிமானம் துறக்கப்படுகிறது.
பிதா என்ற அபிமானம் இல்லாததால், குற்ற உணர்வும், கர்த்ருத்வம் கிடையாது. பித்ரு சம்பந்த சம்சாரங்கள் கிடையாது.
ஒவ்வொரு உறவுமுறைக்கு சில கடமைகள் அதனால் அடையும் சுக-துக்கங்கள் இருக்கிறது.
இவைகளின் மீதுள்ள அபிமானமற்றவன் ஞானி, ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவன் அறியாமையால் அவ்யக்தத்தில் இருப்பான்.

லோகஹ: கர்மபலன், சூழ்நிலையில் இருத்தல்
தேவாஹ: சக்தியை கொடுக்கும் தேவர்களின் சக்தி இழக்கப்படுகிறது
வேதா: வேதங்களின் சப்த பிரமானத்திற்கு பிரமாதாவாக இல்லாத நிலை

अत्रः மேலும் ; स्तेनः अस्तेनः भवति – ; திருடன் திருடனாக இருப்பதில்லை
भ्रूणह अभ्रूणह भवति: கொலைகாரன் கொலையாளியாக இருப்பதில்லை
चाण्डाल अचाण्डालः भवति: சண்டாளன் சண்டாளனாக இருப்பதில்லை
पौल्कस अपौल्कसः भवति பண்பாடற்றவன், கொடூரமானவன் அது மாதிரி இருப்பதில்லை
श्रुमणः अश्रुमणः भवति சந்நியாசி சந்நியாசியாக இருப்பதில்லை
तापसः अतापसः भवति தவம் செய்து கொண்டிருப்பவன் அதை செய்யாமல் இருத்தல்

இவைகளெல்லாம் செய்யும் கர்மத்தை பொறுத்து அமைந்துள்ள குணங்கள். கர்ம நிமித்தமான அபிமானங்கள் எல்லாம் சென்று விடுகின்றன.
ஞானி தவம் செய்யும் போது நான் தபஸ்வி என்ற அபிமானமற்று இருப்பான். சந்நியாசியாக கர்மம் செய்து கொண்டிருக்கும் போது
சந்நியாசி என்ற அபிமானமற்றிருப்பான். ஞானி என்பவந்தான் ஞானி என்று தெரியாத நிலையில் இருப்பான்.
(குழந்தைகளின் செய்கைகள் மகிழ்ச்சி தருவதற்கு காரணம், தான் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று அபிமானம் கொள்ளாமல் இருப்பதனால்தான்.

अनन्वागतँ – ஒட்டிக்கொள்ளாது ; अन्वागतँ – ஒட்டிக்கொள்ளுதல்
अनन्वागतँ पुण्येन; अनन्वागतँ पापेन: பாவ புண்ணியத்தினால் தீண்டப்படாதவனாகிறான்.
புண்ணியத்திலிருந்து விடுதலையடைதல் – புருஷார்த்தம்
புண்ணியம் சித்தஸுத்தி; சுகமும், மனநிறைவும் அடைந்த ஞானிக்கு புண்ணியம் தேவையில்ல்லை, அதன் பலனையும் அனுபவிப்பதில்லை.
அவன் ஞானத்தாலே என்றும் மனநிறைவுடனும், சுகமாகவும் இருக்கின்றான். இவனுக்கு சஞ்சித கர்மத்திலுள்ள பாவங்களும்,
ஆகாம கர்மத்தில் உள்ள பாவங்களும் அழிந்து விடுகின்றன. பிராரப்தத்தில் அனுபவிக்கும் பாவங்களாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.
பிராரப்தம் பலனை கொடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறது. இவன் உடலுக்கு வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.
ஆழ்நிலை உறக்கத்திலிருப்பவனுக்கும் இந்த இரண்டும் தொடுவதில்லை

तीर्णो तदा सर्वान शोकान ह्रुदयस्य भवति – இந்த நிலையில், ஆசையின் விளைவாக வரும் எல்லா துன்பங்களிலிருந்தும் கடந்தவனாக இருக்கிறான்.

நிதித்யாஸனம் செய்ய வேண்டிய கருத்துக்கள்:
· நமக்கு எந்த உறவிலிருந்து துன்பம் வருகின்றதோ அதிலிருந்து அபிமானத்தை நீக்கி விட வேண்டும்
· நம்மிடையே இருக்கும் தீய குணங்களையும் உதாசீனப்படுத்த வேண்டும்
· பாவ-புண்ணியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும்
· இதயத்திலுள்ள ஆசைகளையும், இன்ப-துன்பங்களையும் கடந்தவன் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.

விசாரம்:
கேள்வி ஆசைகளும், துயரங்களும் ஆத்மாவை சார்ந்திருக்கின்றன?
திரவ்ய ஆஸ்ரயஹ குணஹ – எல்லா உணர்வுகளும் குணத்தை சார்ந்து இருக்கிறது.
மனமானது அவைகளை வெளிப்படுத்துவதற்கு கரணமாக, உதவியாக இருக்கிறது.
ஆஸ்ரயம் – ஆத்மா; கரணம் – மனம்,சூட்சுமசரீரம்.
இதயத்தை சார்ந்திருக்கும் ஆசைகளெல்லம் போய் விடுகிறது? வலது கண்ணால் பார்த்தேன் என்று சொன்னாலும்
இடது கண்ணும் சேர்ந்துதான் பார்க்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பதில் இங்கு ஹ்ருதஸ்ய சொல்வதற்கு காரணம்; ஆத்மாவை பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு இந்த ஸ்ருதஸ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
ஆஸ்ரயமும், கரணமும் – அந்தக்கரணம் (மனம், சித்தம், புத்தி)
சித்தம்: எண்ணங்களின் நினைவகம். கர்மபலன்கள் பதிவாகி இருக்கும் இடம்
மனம்: சித்தத்திலிருந்து எண்ணத்தையோ, கர்மபலனையோ எடுத்துக் கொண்டு ஸ்தூல உடம்பை அனுபவிக்க வைக்கிறது.
ஆத்ம த்ருக் ஸ்வரூபம்; த்ருஷ்ய ஸ்வரூபம் அல்ல.
எல்லா சுக-துக்கங்களும், ஸம்ஸ்காரங்களும், காம-க்ரோதாதிகள் சூட்சும சரீரத்தை சாரிந்திருக்கின்றன.
எனவே சூட்சும சரீரம் உறங்கும்போது சம்சாரம் இல்லாத நிலை, அதுவும் உறங்குகின்றது.
இது விழிக்கும்போது அக்ஞானி சம்சாரத்தை அனுபவிக்கின்றான். ஞானி விழிப்பு நிலையிலே சம்சாரத்தை நீக்குகிறான்.
இது அடைந்த ஞானத்தின் பலனாக விளைகின்றது.

ஸ்லோகம்-23-30
மந்திரம் 23லிருந்து 30வரை ஒரே மாதிரியாகத்தான் இருப்பதால் ஒரு மந்திரம்-23 மட்டும் விளக்கப்படுகிறது.
மற்றதெல்லாம் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

சாராம்சம்: ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் வேறுவிதமாக உபதேசிக்கப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தா விசாரம்: இந்த நிலையில் உபதேசிக்கப்படும் கருத்துக்கள்
· ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்: இந்த நிலையில் நாம் ஜடமாக இருக்கின்றன.
· ஆத்மா நித்ய ஸ்வரூபம்: ஆத்மா வந்து போகின்ற மாதிரியாக எண்ணம் தோன்றலாம்
· நிர்விகார ஸ்வரூபம்: நித்யமான பொருள் மாற்றமடையாததாகத்தான் இருக்கும்
· ஏகம்: இது ஒன்றுதான்
· அத்வைதம்: இரண்டற்றது. இது ஒன்றுதான், தனக்கு நிகராக வேறொன்றில்லாமலும் இருக்கின்றது
· பாவ-அபாவ சாக்ஷி – இருக்கும் பொருளையும், இல்லாமையையும் காட்டுகிறது. கண் எப்படி வெளிச்சத்தையும் இருட்டையும் காண்பிப்பது போல

ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்
यद्वै – நினப்பது தவறு ; तत्रः – அங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) ;
न पश्यति – ஆத்மா எதையும் பார்ப்பதில்லை, உணர்வற்று ஜடமாக இருக்கிறது என்று
पश्यन्वे – அங்கு பார்த்துக் கொண்டுதான், அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு, விழித்து கொண்டு;
ब पश्यति – பார்க்காமலும் இருக்கிரது.
சுஷுப்தியில் அது பார்த்துக் கொண்டுமிருக்கிறது, பார்க்காமலும் இருக்கிறது.
ते पश्यन – பார்த்துக் கொண்டிருப்பது எப்படி? (உறக்கத்தில்) அதனுடைய ஸ்வரூபத்தின் திருஷ்டிப்படி

द्रुष्टिः ஸ்வரூப சைதன்யத்திற்கு
द्रष्टः பார்ப்பவனுடைய, அனுபவிப்பனுடைய
नहि विपरिलोपः – தன்மை மாறுதலடைவதில்லை. அறிபவனுடைய அறிவுக்கும் எந்த மாற்றமும் இல்லை, ஜடமாவதில்லை, அழிந்து விடுவதுமில்லை.

ஆகவே ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். காரணம்
अविनाशित्वात् – தனுடைய ஸ்வரூபமே அழியாத தாக இருப்பதால் அது நாசத்தை அடையாத ஸ்வரூபமாக இருக்கிறது.

கேள்வி எப்படி பார்க்காமலும் இருக்கிறது?
பதில் சாமான்ய சைதன்யம் இருக்கிறது; விசேஷ சைதன்யமாக இல்லை. அது விதவிதமான் பொருட்களை பார்க்காமல் இருக்கிறது.
விழிப்பு நிலையில் கண் மூடிக் கொண்டால், ஒன்றுமே தெரியவில்லை என்பது விசேஷமானவற்றை பார்க்கவில்லை, சாமான்ய இருப்பத்தான் பார்க்கிறோம்.

விசேஷ தரிசனம் பெற மூன்று விஷயங்கள் தேவை. அவைகள்,
1. த்வீதயம்: பிரமாதா என்ற ஒருவன், சிதாபாஸன் இரண்டாவது சைதன்யம் ஒடுங்கிய நிலையில் இருக்கிறது
2. அனயது: கண், காது போன்ற இந்திரியங்களும் கிடையாது. இது பிரமானம்
3. விபக்தம்: பிரமேயம். அறியப்படுகின்ற பொருட்களும் கிடையாது
இவைகள் இருந்தால்தான் அவன் பார்க்க முடியும், இல்லாமல் எப்படி பார்க்க முடியும்

இதேப் போன்று கேட்டல் (24), தொட்டுணர்தல் (25), நுகர்தல் (26), பேசுதல் (27), அறிதல்(28), சுவைத்தல்(29),சிந்தித்தல்(30),
ஆகிய செயல்களை மேலே கூறிய கருத்துக்களோடு சேர்த்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-31
இதில் ஜாக்ரத-ஸ்வப்ன அவஸ்தை விசாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சம்சாரத்தை விளக்க உதாரணமும்,
உதாரிக்கப்படுவதும் ஜாக்ரத் அவஸ்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது. த்வைதத்தினுடைய மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.
சுஷுப்தியில் த்வதம் வெளிப்படாமல் இருக்கிறது ஆகவே அது வெளிப்படும் ஜாக்ரத், கனவு நிலயை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
एव என்ற சொல் கொடுக்கும் ”போல” என்ற அர்த்தம் மித்யாவை குறிக்கிறது. “போல” என்ற அனுபவத்தில் இருப்பது ஆனால் அறிவுக்கு இல்லாதது

கேள்வி ஆத்மா என்ற சைதன்ய ஸ்வரூபம் விசேஷமானதா அல்லது சாமான்யமானதா?
விசேஷமானதென்றால் சுஷுப்தி அவஸ்தையே வராது. சாமான்யமென்றால் ஜாக்ரத், கனவு நிலையில் விளக்க முடியாது.
எனவே ஆத்மா விசேஷ, சவிசேஷ சைதன்யமாக இருக்கலாமல்லவா? ஆத்மா நிர்விசேஷமாக இருப்பதால் ஜாக்ரட், ஸ்வப்ன அவஸ்தை எப்படி தோன்றுகிறது?
பதில் இரண்டு ஸ்வரூபம் ஒரு பொருளுக்கு இருக்கலாம் அவையிரண்டும் ஒத்துப்போனால்.
இங்கு உன்னால் இரண்டு விருத்தமான தன்மையை ஸ்வரூபமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இது நடக்காது, கற்பிக்க முடியாது.
கேள்வி ஆனால் அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரிகிறது?
பதில் இரண்டு விருத்தமான தர்மங்கள் ஒரெ பொருளில் காணலாம். அவைகள் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாகவும் இருக்குமேயானால்.
இங்கே த்வைதம் இருக்கின்ற இடத்தில்தான் மித்யா என்ற குறிக்கும் சொல் एव (போல) என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாமான்ய சைதன்யத்தை சத்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

एत्र – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தையில்
अन्यत इव स्यात् – ஆத்மாவுக்கு வேறாக ஒன்று (பிரமாத, பிரமானம், பிரமேயம் (அறியப்படும் பொருள்)
இப்படி ஒரு கற்பணையாக தோன்றுகிறதோ, பொய்யான விஷயங்கள் தோன்றுகிறதோ
तत्र – அந்த வேளையில்
अन्यः – பிரமாதா என்ற ஒருவன் ஆத்மாவுக்கு வேறாக
अनयति – தனக்கு வேறாக
கண்கள் என்ற பிரமானத்தால் அறியப்படும் பொருள் தோன்றிவிட்டால் அவன் அனுபவிக்கின்றான்.
இதேமாதிரி கேட்டல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை அனுபவிக்கின்றான். ஆத்மா உண்மையில் நிர்விசேஷம் மற்றதெல்லாம் மித்யா.

ஸ்லோகம்-32
இந்த மந்திரத்தில் ஆத்மாவின் ஸ்வரூபம், மோக்‌ஷத்தின் ஸ்வரூபம் கூறப்படுகிறது. ஆனந்த்த்தின் ஸ்வரூபம் அறிமுகப்படுத்தபடுகிறது. ஆத்மாவானது அனைத்து விதமான வேற்றுமைகளும் அற்றதாக இருக்கிறது. இதை அறிந்தவன் அனைத்து செல்வங்களையும் அடைந்தவனாகிறான்.

सलिलः – (நீர்) – நீரைப்போல தூய்மையானது. ஒரு பொருள் அசுத்தத்தை அடைவதற்கு காரணம் தனக்கு வேறாக ஒன்று
வந்து அதனிடல் சேரும்போதுதான். ஆத்மாவுக்கு (விஜாதீய பேதம்) முரணான, வேறாக ஒன்றும் இல்லை.
எனவே அது என்றும் தூய்மையானது. பொதுவாக அந்தக்கரணத்தோடு சம்பந்தம் ஏற்பட்டு அதனால்தான் அசுத்தம் வரும்.
அந்தக்கரணத்திற்கு ஆத்மாவுக்கு நிகராக இல்லாததால் அதனால் அசுத்தபடுத்த முடியாது.
एकः – ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ஒவ்வொரு ஆத்மா இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
எவ்வளவு அந்தகரணங்கள் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஆகாசம் பலவாக அறியப்பட்டாலும்
(குட ஆகாசம், ஜலாகாசம், மஹா ஆகாசம்) ஆகாசம் என்பது ஒன்றுதான் அதுபோலதான் ஆத்மாவும் இருக்கிறது.
द्रष्टाः – அந்தக்கரணத்தில் மூலம் இந்த பார்ப்பவன்
अद्रष्टाः – தன்னுடைய ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடைவதில்லை, எதையும் பார்ப்பதில்லை
अद्वैतः – இந்த ஆத்மா இரண்டற்றதாக இருக்கிறது. தான் ஒன்றாக இருக்கிறது அதே சமயத்தில் தனக்குள்ளே எந்த வேற்றுமைகளும் இல்லாமல் இருக்கிறது.
இதுவரை சொல்லப்பட்டது ஆத்மாவின் ஸ்வரூபம்.

एषः ब्रह्म लोकः – ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாக இருத்தலே மோக்ஷமாகும், பிரம்மனாக இருத்தலே மோக்ஷம்
யாக்ஞவல்கியர் இவ்விதம் ஜனகருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
अनुशशानँ – உபதேசம் செய்தல்

एषः अस्य परमागतिः –. ஒருவனுடைய இறுதி லட்சியமானது என்னவென்றால் மோக்ஷத்தை அடைவதுதான்.
एषः अस्य परमासँपतः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய இறுதியான மிகமேலான செல்வம், மற்ற செல்வங்களெல்லாம்
காலவரையறைக்குட்பட்டது, அழியக்கூடியது. இதுதான் அழிவில்லாத சுகத்தை கொடுக்க முடியும்.
एषः अस्य परमालोकः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய மிக மேலான இடம்
एषः अस्य परमानन्दः .இதுதான் ஒருவன் அடையக்கூடிய பரமானந்தம். இதற்கு மேலானது வேறெதுவும் கிடையாது.
வேறொருவன் சுகமாக இருக்கிறான் என்று பார்க்கும்போதுதான் பொறாமை என்பதே வருகிறது.
இந்த பரமானந்தத்தை அடைந்தவனுக்கு வேறெந்த ஆனந்தமும் ஒரு துளிதான் அதனால் இவனுக்கு பொறாமை என்பது வரவே வராது.
एतस्य एव आनन्द्स्य – மோக்‌ஷத்திலிருக்கின்றா ஆனந்தமானது
अन्यानि भुतानि – ஞானியை தவிர்த்து மற்ற ஜீவராசிகள்
मात्राम उपजीवन्ति – அதில் ஒரு சிறு துளியைத்தான் அனுபவிக்கிறார்கள்.

ஸ்லோகம்-33 – ஆனந்தத்தைப் பற்றிய விசாரம்
பூர்வமீமாஸிகளின் சித்தாந்தம்:
1. பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்: நாம் ஒரு விஷயத்தினால் இந்திரியங்கள் மூலமாக அனுபவிக்கும் ஆனந்தம் விஷயானந்தம்.
விஷயானந்தம் பிரம்மானந்தத்திற்கு வேறானதும் அல்ல. ஏனென்றால் அது பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்.
2. இந்த விஷயானந்தம் வேற்றுமைகளுடன் (தாரதம்யத்துடன்) கூடியது. ஏற்றத்தாழ்வுகளை உடையது. ஆனந்தத்தின் அளவு வேறுபாடுடையது.
3. இது எதன் நிமித்தமாக வருகின்றது. மேலோட்டமாக பார்க்கும்போது விஷயமே நிமித்தமாக இருக்கிறது
ஆனால் விஷயம் சூட்சுமமாக ஆக சுகமும் அதிகமாகிறது. நம்முடைய உபாதிகள் (இந்திரியங்கள்) உண்மையான காரணமாக இருக்கிறது.
ஒரே விஷயம் ஒருவனுக்கு இன்பத்தை கொடுக்கும் மற்றொருவனுக்கு துன்பத்தை கொடுக்கும்.
இதற்கு நம்முடைய இந்திரியங்களிடத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுதான் உண்மையான காரணம்.
இசையை மனிதன் ரசிக்கின்றான், நாய்கள் அனுபவிப்பதில்லை. விருத்தியானது சூட்சுமாகும் போது ஆனந்தமும் அதிகமாகின்றது.
அவரவர்களிடையே ஏற்படும் விருத்தியைப் பொறுத்துத்தான் ஆனந்தத்தின் அளவும் இருக்கின்றது.

எண்ணங்களுக்கு தடை வரும்போது ஆனந்த த்தின் அளவு குறைகின்றது. எப்படி விருத்தியை சூட்சுமபடுத்தி ஆனந்தத்தை அதிகரிக்க செய்வது?
எந்த விஷயத்தில் ஆனந்தத்தை அடைகிறாயோ அந்த விஷயத்தில் வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடையலாம்.
காரணம் அந்தப் பொருள் நிமித்தமாக ஆசை வந்து அடையும்போது சுகத்தை அனுபவிக்கிறோம்.
அந்தப் பொருள் மீது வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்போம்.
ஒரு விஷயத்தில் உள்ள ஆனந்தமானது எதையாவது இழக்க வைத்து விடும். போகத்தை விக்ஷேபத்துடன் (எதிர்ப்பார்ப்புடன்) அனுபவிப்போம்.
இங்கு விருத்தியானது அதி சூட்சுமமாகி விடுகிறது எனவே ஆனந்தமும் அதிகரிக்கிறது.
வைராக்யம் விவேகம் மூலமாக வந்தால்தான் வைராக்யம் நிரந்தரமாக இருக்கும்.
अकाम हतः – ஆசையினால் தாக்கப்படாமல்;
श्रोत्रियँ: சாஸ்திரத்தின் மூலம் விவேகத்தை அடைந்தவன், சாஸ்திர விசாரம் செய்து அதன் மூலம் விவேகத்தை அடைந்தவன்.
अव्रुजिनः – பாவமற்றவன், பாவத்தை போக்கியவன்.
இந்த மூன்றும் உடையவன் அதிக அளவு ஆனந்தத்தை அடைகிறான்.

· பிரதிபிம்ப ஆனந்தத்தை பயன்படுத்தி அதற்கு பிரதிபிம்பமாக இருப்பது பிரம்மானந்த ஸ்வரூபம்.
· வைராக்யத்தால் பிரதிபிம்ப ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பாவத்தை தவத்தினால் நீக்க முடியும், விவேகமும் தவமும், சேர்ந்திருந்தால்தான் வைராக்யத்தை அடைய முடியும்.

மந்திர விளக்கம்:
सः यः मनुष्याणाँ राद्धः सम्रुद्धोः எந்த மனிதன் போகத்திற்கு தேவையான எல்லா அவயவங்களும் உடையவனாகவும்,
அனைவருக்கும் அதிபதியாகவும் இருப்பான், மனிதனால் அனுபவிக்கப்-படுகின்ற அனைத்து இன்பங்களை
கொடுக்கக்கூடிய பொருட்களை உடையவன் உடையவன். இதுதான் மனிதன் அனுபவிக்கும் அதிகபட்ச இன்பம்.
பித்ருலோகத்தில் இருப்பவர்கள் மனிதலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் பித்ருலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கர்மத்தினால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கந்தர்வலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
பிறப்பால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கர்மதேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்), अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன்
பிரஜாபதி லோகத்தை அடைவான். இது விராட் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட
நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள். யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்),
अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரம்ம லோகத்தை அடைவான்.
இது ஹிரண்யகர்ப்பன் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

பிரதிபிம்ப ஆனந்தத்தை வைத்து பிம்ப ஆனந்த ஸ்வரூபத்தை அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை நாடுதல் சம்சாரம்,
அதன் ஸ்வரூபமே நாந்தான் என்று அறிந்து கொள்வது மோட்சம். சாஸ்திர ஞானத்தின் மூலம் வைராக்யத்தை அடைய வேண்டும்.
வைராக்யத்தின் மூலம் பிரதிபிம்பானந்தத்தின் அளவு அதிகமாகி தவத்தின் மூலம் பாவத்தையெல்லாம் நீக்கி பிம்பானந்தத்தை அடைய வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

ஆத்மஞானத்தை அடைவதனால் என்ன பலன்?
एषः एव परम आनन्दः – பிரம்மன் என்கிற பிரம்ம ஸ்வரூபம் மிகவும் மேலான, உயர்வான, முழுமையான ஆனந்தமுடையது.
இது ஏற்றத்தாழ்வு அற்ற ஆனந்தம். இவ்விதம் யாக்ஞவல்கியர் ஜனக மன்னருக்கு விளக்கினார்.
மேலும் எனக்கு விளக்குங்கள் என்று ஜனகர் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஜனகரின் வேண்டுகோள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
அறிவாளியான ஜனகர் என்னிட்த்திலிருந்து எல்லாம் அறிவை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகிறார்.

ஸ்லோகம்-34
வைராக்யத்திற்காக மரண வர்ணனை, சம்சார வர்ணனை
சுஷுப்தி அவஸ்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது. ஜாக்ரத்-கனவு சம்சாரத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
எந்த ஒரு அவஸ்தையிலும் நிலையாக இருப்பதில்லை. அதில் அவனுக்கு சோர்வு, சலிப்பு ஏற்படுகிறது.
ஏனென்றால் கனவுகள் முழுமையாக, நிபந்தனையற்ற இருப்பதில்லை. உண்மையான ஸ்வரூபமல்ல.
ஒரே அவஸ்தையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. எனவே அது சம்சாரத்தை குறிக்கிறது.

ஸ்லோகம்-35
கிராமங்களில் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரத்தை வெளி சுற்றில், பட்டையான இரும்பு அடிக்கப்பட்டிருக்கும்.
இதனால் இந்த வண்டி மிகவும் சப்தம் போட்டுக்கொண்டு செல்கிறதோ.

असमाहिदम्: வண்டி நிறைய பொருட்கள்
उत्सर्जद्यायात्: ஒலியை எழுப்பிக் கொண்டு செல்லும்

அதே போல இந்த ஜீவன் இறக்கும்போது புலம்பிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டே செல்கின்றான்.
மிகவும் வேதனையோடு துடிக்கின்றான அதன்பிறகு இறக்கின்றான்.
अयँ शरीरः आत्मा à இந்த சரீரத்தில் இருக்கின்ற ஜீவாத்மா
பிராக்ஞேன ஆத்மனா – ஈஸ்வரனால் (கர்மபல தாதா) ஸ்வயம் ஜோதியாக இருக்கின்ற முக்கிய ஆத்மாவை அதிஷ்டானமாக கொண்ட இந்த ஜீவாத்மா.
अन्वारूढः – அழைத்துச் செல்கிறார்
उत्सर्जनः – வித விதமாக புலம்பிக்கொண்டே
ऊर्ध्वाच्छासि: – எப்பொழுது உதானன் தயாராகிறதோ
उदाणन् – உதாணன் உயிரோடிருக்கும்போது உதவி செய்து கொண்டிருப்பது, இறக்கும்போது
எல்லா இந்திரியங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற உதவி செய்யும்

ஸ்லோகம்-36
· எப்பொழுது உதானன் தயாராகிறது?
· எதனால் தயாராகிறது?
· எப்படி ஒருவன் இறக்கின்றான்? ஏன் உதானன் வெளியே செல்கிறது?
· எதற்காக ஜீவன் இறக்கின்றான்?

எப்பொழுது இந்த ஸ்தூல சரீரம் எல்லா சக்திகளையும் இழந்து பலவீனமாகிறதோ ( अणिमानँ ),
வயோதிகத்தினாலும், நோயினாலும் உடல் இளைத்து, சக்தியற்றதாகி விடும்போது
நம்முடைய சூட்சும சரீரமானது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்குகிறது அதுவே மரணம். எப்படி பழுத்த பழமோ, காய்ந்த இலைகளோ
மரத்தை விட்டு தானே விழுந்து விடுவது போல ஜீவாத்மா இந்த ஸ்தூல உடலை விட்டு வெளியே செல்கிறது.
பிறகு மீண்டும் வேறொரு சரீரத்தை எடுக்கிறது.

ஸ்லோகம்-37
ஒருவன் பிறக்கும்போது எப்படி வரவேற்கப்படுகிறான்?
எவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா பயணம் செய்யும் போது, அங்கே இருப்பவர்கள் அவருக்காக எல்லா வசதிகளையும்
செய்து விட்டு அவர் நன்கு வறவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அது மாதிரி மற்ற ஜீவராசிகள்
புதிய ஜீவாத்மாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவ புண்ணியங்களின்படி பிறக்கப்போகும் இடம்,
சூழ்நிலைகளை தயாரானவுடன் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்லோகம்-38
ராஜா தாம் தங்கியிருந்த இட்த்திலிருந்து அரண்மனைக்கு செல்லும்போது அவர் வரும்போது வரவேற்று
எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள், அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்புகிறார்கள்.
அதுபோல இறக்கப்போகும் உடலிலுள்ள பிராணன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உதாணனுடன் வெளியே செல்ல தயாராக உள்ளது.

பகுதி தொகுப்பு
இந்த உடலுக்கு ஜோதியாக இருப்பது எது? இந்த ஜீவனுடைய விவகாரத்திற்கு காரணம் எது? இந்த ஜீவன் ஜடமாக இருப்பதால்,
அதனால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. ஜடமான பொருட்கள் வேறொன்றை சார்ந்துதான் விவகாரம் செய்ய முடியும்.
பானை நகர்கிறது என்றால் அதை நகர்த்துவதற்கு ஏதோ ஒன்று காரணாமாக இருக்க வேண்டும்.
அது போல இந்த உடலுக்கு ஜோதியாக சூரியன் என்று ஆரம்பித்து பின் சந்திரன், அக்னி, சப்தம் இறுதியில் ஆத்மாதான் என்று பதிலளிக்கிறார்.

ஆத்மா உடலுக்கப்பாலும் இருந்து கொண்டு பிரகாசிக்கிறது. உள்ளேயும் இருந்து கொண்டும் பிரகாசிக்கிறது.
இதன் ஸ்வரூபம் ஸ்வயம் ஜோதி – தானாக பிரகாசித்துக் கொண்டும் மற்றவற்றால் விளக்க முடியாததாகவும் இருக்கிறது.
இது அப்பிரமேயம். எந்தப் பிரமானத்தினாலும் நேரிடையாக விளக்க முடியாது. இது அபௌதிகம் – பூதங்களால் உருவானதில்லை.

ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன?
அது சைதன்ய ஸ்வரூபம், சேதனமாக இருப்பது ஆத்மா. இந்த ஆத்மா எப்படி தன்னை வெளிப்படுகிறது,
இவ்வாறு வெளிப்படுத்துகின்ற ஆத்மா தன்னை புத்தியில் பிரதிபலிக்க செய்து சிதாபாஸனாக செயல்படுகிறது.

தியாயதி இவ, லேலாயதி இவ
ஞான விவகாரம் – சூட்சும சரீரம்; கர்ம விவகாரம்- இந்திரியங்களின் உதவியோடு செய்வது
இவைகளை ஆத்மா செய்வதில்லை. பொதுவாக நாம் ‘நான்’ என்று சூட்சும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் நினைப்பதால்,
இந்த கர்ம, ஞான விவகாரங்களை நான் செய்கிறேன் என்று நினைக்கிறோம் அஹ்டனால் சஞ்சலம், துக்கம் அடைகிறோம்.

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது இவன் பிறக்கின்றான். பிறகு இந்திரியங்களின் சம்பந்தத்தால் பாவ-புண்ணியங்களை சம்பாதிக்கின்றான்.
ஒரு பொருளை தியாகம் செய்யும் போது அந்தப்பொருள் இறந்ததற்கு சமமாகிறது. அதேமாதிரி ஒரு பொருளின்மீது
ஆசை வைக்கும்போது அந்த பொருள் பிறப்பதற்கு சமமாகிறது.

தர்ம-அதர்மங்களின் இருப்பிடமாக இருப்பது சரீரம். கனவு பிறவிகளை உறுதிப்படுத்துகிறது.
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜோதி. கனவு நிலையில் இந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருப்பதை உணரலாம்.
ஜாக்ரத் அவஸ்தையில் ஆத்மாவும், மனமும் அறியும் ஜோதியாக இருக்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில் எதுவும் நடக்காததால் அங்கே ஆத்மா உணரமுடியாமல் இருக்கிறது.
கனவுகள் மனதினுடைய விகாரங்கள், மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது.
இதைப்பார்ப்பவனாக ஆத்மா இருக்கிறது என்பதை அறியலாம்.

கனவு வாஸனாமயம், ஜாக்ரத் நிலையின் தொடர்ச்சியல்ல, உருவாக்குவதும் உபாதான காரணமாகவும் இருப்பது வாஸனைகள்,
நிமித்த காரணம் கர்மபலன்.

ஹிரண்மயஹ புருஷஹ (கரணங்களை வியாபித்துள்ளவன்) ஏக அம்ஸஹ சிதாபாஸ ரூபமாக இருக்கின்ற ஒருவன் சைதன்ய ஸ்வரூபம்.
எல்லோரும் பொய்யைதான் நாடுகிறார்கள். அவஸ்தாதிரய விவேகம், ஆத்மா அஸங்கஹ என்று கூறுதல்-
அஸங்கோஹ அயம் புருஷஹ- எந்த அவஸ்தையோடும் சம்பந்தம் வைக்காதவன்.
மீன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று வருவது போன்ற சம்பந்தத்தை உடையது ஆத்மா ஒரு அவஸ்தையிலிருந்து
மறு அவஸ்தைக்கு சென்று வருவது. சுஷுப்தி அவஸ்தையில் அனுபவிப்பது மோக்ஷ நிலைக்கு ஒரு உதாரணமாக கருதலாம்.

அத்ர பிதா-அபிதா, மாதா-அமாதா ஒருவன் தந்தையாகவும் இருக்கின்றான், ஆனால் தந்தையாக இல்லாமலும் இருக்கின்றான்,
தாயாகவும் இருக்கின்றாள், இல்லாமலும் இருக்கின்றாள். பாவத்தாலும் புண்ணியத்தாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்.
ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும் பொருட்களெல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமை பார்க்கும்போதுதான் த்வைதம் வந்து விடுகிறது. பிரதிபிம்ப ஆனந்தத்தை கொண்டு பிம்ப ஆனந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அத்யாய தொகுப்புரை
குணவாதம்: பிரத்யக்ஷ பிரமாணத்தில் வராதது. அனுபவத்திற்கு எதிரானது
பூதார்த்தவாதம்: இந்திரன் கையில் வஜ்ராயுதம் என்ற வாக்கியத்தில் வஜ்ராயுதம் இருந்ததா இல்லையா என்று முடிவு செய்ய முடியாதது,
நிரூபிக்க முடியாது ஆனால் ஏற்றுக் கொள்கிறோம்.

புருஷவித பிரமாணம்: ஒருவன் அடையும் மேலான பதவி ஹிரண்யகர்ப்பன் என்ற பதவிதான்.
பயம் நீங்காத, தன்னிறைவு இல்லாமல் இருத்தல், உலகத்தில் உள்ள எந்தப்பொருளும் பயத்தைப் போக்காது.
எதை அடைந்தாலும் தன்னிறைவுடன் இருக்க முடியாது. மந்திரங்கள் 7லிருந்து 10வரை வேதாந்தத்தை விளக்குகிறது.
சம்சாரம் வரையறுக்கப்பட்டது, வித்யா சூத்திரம், பிரம்மத்தை ஆத்மா என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ப்ரவேஸ ஸ்ருதி விசாரம். சரீரத்திற்குள் சென்றவர் யார்? பரமாத்வாவா அல்லது ஜீவாத்மாவா என்று விசாரம் செய்தல்.
இறுதியில் பரமாத்மாதான் என்று நிரூபிக்கப்படுகிறது. பிரவேசம் என்பதற்கு இருக்கிறது என்பதுதான் தாத்பர்யம்.
ஆத்மா இத்யேவ உபாஸீத – யார் சொல்லியும் நாம் எந்தக் காரியமும் செய்வதில்லை.
நாம் எதை செய்ய வேண்டுமென்று நினக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம்.
நாம் ஆத்மாவைத்தான் உண்மையாக நேசிப்பதால் அதை அடைவதைத்தான் லக்ஷியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரம்மன் அனைத்துமாக இருக்கிறது. அது தன்னையே தெரிந்து கொண்ட அதிகாரித்வம் பேசப்பட்டது.
விக்ன அபாவம் விசாரம். யாரும் நாம் ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்க முடியாது.
ஆனால் நம் கர்மபலன்கள்தான் தடைகளைக் கொடுக்க முடியும். அவித்யா சூத்திரம் பற்றிய விளக்கம்.

————–

பகுதி-5- சப்தான்ன பிராமணம்:
இதில் ஜீவன் கர்த்தவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றான் என்று விளக்கப்பட்டது. சாதன-சாத்திய விளக்கயிருக்கிறது.
புத்திரனால் பித்ருலோகமும், கர்மத்தால் பிரம்மலோகமும், ஞானத்தால் மோக்ஷமும் அடையலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஜீவனுடைய போக்த்ருத்வம்- ஜீவன் அனுபவிப்பவன், செயலின் விளைவை அனுபவிப்பவன்.
ஸ்ருஷ்டியை நாம-ரூப-கர்ம என்று மூன்று விதமாக ஏற்றுக் கொள்ளுதல்.
சம்சாரத்தில் ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கின்றான். நாம் இந்த உலகத்தை அனுபவிக்கும்போது போக்தா,
இந்த உலகம் நம்மை அனுபவிக்கும்போது போக்யமாகவும் இருக்கிறோம்.

சம்பந்தபாஷ்ய விசாரம்: கர்ம காண்டமும், ஞானகாண்டமும் பிரமானமே. கர்மகாண்டம்-சாதனம்,
ஞான காண்டம் – சாத்தியம்; கர்மமே மோக்ஷத்தை கொடுக்காது.

பகுதி-1 அஸ்வ ப்ராமனம்: சத்திரியன் அஸ்வமேத யாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.
பிராமணன் இந்த யாகத்தை தியானம் செய்து அதே சொர்க்கத்தை அடையலாம்.
குதிரையை ஆலம்பனமாக வைத்து இந்த பிரபஞ்சத்தை பார்த்து தியானித்தல்.
இதன் மூலம் சித்தஸுத்தி அடையலாம். உபாஸனை-அத்யாரோபம்; சாதனம்-பிரபஞ்சம்

பகுதி-2 அக்னி பிராமனம்: அக்னியை ஆலம்பனமாக வைத்து, விராட் தத்துவத்தை உபாஸனை செய்தல்.
ஸ்ருஷ்டிக்கு முன்பு காரணம் இருந்ததா, காரியம் இருந்ததா என்ற கேள்விக்கு காரணமும் இருந்தது, காரியமும் இருந்தது என்று நிரூபித்தல்

பகுதி-3 உத்கீத பிராமனம்: பிராண உபாஸனை விளக்கப்பட்டது. இதனுடைய சுத்தஸ்வரூபம் விளக்கப்பட்டது.
இந்திரியங்கள் நல்லது, கெட்டதை இரண்டையும் அனுபவிக்கும். பிராணன் எப்பொழுதுமே தூய்மையாக இருக்கிறது.

பாஷ்ய விசாரம்: விதி வாக்கியமும், நிஷேத வாக்கியமும், வேத வாக்கியமும் பிரமானம்.
வேதத்தில் உள்ள சில வாக்கியங்கள் அர்த்தவதமாக எடுத்துக் கொள்ளலாம். அனுவாதம்: தெரிந்ததை சொல்லுதல்.

—————

பகுதி-6 உக்தம் பிரமாணம் —
அனைத்து நாமங்களுக்கும் சாமான்யமான சப்தமாக எடுத்துக் கொண்டு வாக் என்று அழைக்கப்படுகிறது.
அதுதான் உபாதான கரணமாக இருக்கிறது. அதில் விதவிதமான சப்தங்கள் ஏற்றி வைக்கப்படுகிறது.
இவையனைத்தும் நாமத்தில் ஒடுக்கப்படுகிறது. சாமான்யமான ரூபம் சத்யம், விதவிதமான ரூபங்கள் மித்யா.
சரீரம் சாமான்யம். இதிலிருந்து தோன்றும் கர்மங்கள் அனைத்துக்கும் ஆதாரம் சரீரம்.
இந்த மூன்றையும் சரீரத்தில் ஒடுக்கி, சரீரத்தை நீக்கிவிட்டால் உலகத்தையும் நீக்குவது போல் ஆகும்.
நாம-ரூபம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது -இதரேத்ர ஆஸ்ரயம்.
ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழிந்துவிடும் — இதரேத்ர பிரளயம்
அதனால் இவைகளும் மித்யா.

அத்யாரோபம்-ஏற்றி வைத்தல்; அபவாதம்-நீக்குதல்
அத்யாரோபம் – அனாத்மாவை ஏற்றுக்கொள்ளுதல்; திருஷ்ய பிரபஞ்சம் நாம் பார்த்து அனுபவிக்கும் அனாத்மா அஸத்.
அபவாதம் – ஏற்றுக்கொண்ட அனாத்மாவை நீக்குதல். எனவே இதை ஸத் என்றும் கூற முடியாது.
அனாத்மா ஸத்தும் அல்ல; அஸத்தும் அல்ல; எனவே மித்யா என்று உணரலாம்.
எட்டு விதமாக உலகத்தின் மீது அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1. சாதன பிரபஞ்சம்: சிலவற்றை சாதனமாக பயன்படுத்தி வேறொன்றை அடைகின்றோம்.
விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள் சாதனமாக, கர்மரூபமாக கூறப்பட்டுள்ளது.
சப்தான்னத்தில் இருக்கும் முதல் நான்கும் சாதனங்களாக இருக்கின்றன.
2. சாத்தியபரபஞ்சம்: ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட பலன்கள் எல்லாமே சாத்திய பிரபஞ்சம்.
மனிதலோகம், பித்ருலோகம், தேவலோகம், சாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
3. அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா)- மேலே சொன்ன இரண்டு அத்யாரோபங்களுக்கு காரணமாக இருப்பது.
4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவன் கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.. இப்படி ஏற்றுக் கொண்டால்தான் கர்ம காண்டமே பயன்படும்.
ஜீவ ஸ்ருஷ்டியும் இருக்கிறது

—————

பகுதி-4 : சாரீரக பிரமாணம்
ஜீவாத்மாவினுடைய தன்மையை விளக்கும் பிரமாணம் – ஜீவன் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களைக் கூறி
ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் விளக்கப்படுகிறது. ஜீவன் எந்தவிதத்தில் சம்சாரியாக இருக்கிறான்,
பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலை இவைகளையும் விளக்குகிறது

ஸ்லோகம்-1 (மரண அவஸ்தையில் உள்ளவனின் நிலை)
सः – ஜீவாத்மா ; यत्र् – மரணத்தறுவாயில்; अबल्यँ न्येत्य – அனைத்து பலத்தையும் இழந்து ;
सँमोहँ इव न्येति – புத்தியில் எதுவும் செயல்படாத நிலை
अथ एनँ एते प्राणाः – இந்நிலையில் இந்திரியங்கள் காரண சரீரத்தை நோக்கி செல்கின்றன.
सः एताः तेजो मात्रा –
समभ्याददानः அந்தந்த இந்திரியங்கள் தத்தம் ஸ்தானத்திலிருந்து விலகி
ह्रुदयम एव अन्व – காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
स यत्र् – एष चाक्षुः पुरुष – இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவதையானது
पराङ पर्यावर्तते – வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றது.
अथ रूपाञाने – பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறது.

ஸ்லோகம்-2
ஜீவாத்மாவில் உள்ள இந்திரியங்கள் காரண சரீரத்தில் ஒடுங்கி அந்தந்த தேவதைகளுடன் ஐக்கியமாகின்றது.
பார்க்கும் சக்தியானது காரண சரீரத்தில் ஒடுங்குவடால் மற்றவர்கள் இவனால் பார்க்க முடியவில்லை, வாசனைகளை நுகர முடியவில்லை.
சுவைப்பதில்லை, பேச முடியவில்லை, கேட்கும் சக்தியை இழந்து விட்டான், வலியை உணரும் சக்தியையும்,
தொட்டுணரும் சக்தியையும், சிந்திக்கும் திறனும் இழந்து விட்டான்.

அக்ஞானியுடைய ஜீவன் ஸ்தூல சரீரத்திலிருந்து எப்படி வெளியேறுகிறது?
ஜீவன் வெளியேறுகின்ற அந்த நாடி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் வழியே சென்று பிறகு உடலிலிருந்து வெளியேறுகிறது.
கண் வழியாகவோ, தலை உச்சியின் வழியாகவோ, சரீரத்திலிருக்கும் ஒன்பது துவாரங்களிலிருந்து
ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ வெளியேறுகின்றது. இப்படி வெளியேறும்போது பிராணனனுடன்
எல்லா இந்திரியங்களும் தொடர்ந்து செல்கின்றன. இந்த ஜீவன் வெளியே செல்லும்போது வேறெந்த ஞானமும் இல்லை.
உடலிலிருந்து வெளியே செல்லும் நிலை மட்டும்தான் தெரிகின்றது.
இந்த ஜீவனத் தொடர்ந்து செல்பவைகள் அவன் செய்த பாவ-புண்ணியங்கள், ஸம்ஸ்காரங்கள் (வாஸனைகள்) ஆகியவைகளாகும்.

ஸ்லோகம்-3
ஜீவன் சரீரத்தை விடும் போது, வேறொரு சரீரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுகின்றான்.
எப்படி ஒரு புழுவானது ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு போகும் போது அந்த இலையை பிடித்த பிறகுதான்
முந்தைய இலையிலிருந்து தன் கால்களை எடுக்கும். இந்த ஸ்தூல சரீரத்தை விடுவதற்கு முன்
வாஸனாமய சரீரத்தை பற்றிக் கொண்டுதான் இதை விட்டு விடுகின்றான்.

ஸ்லோகம்-4
ஜீவனுக்கு இந்த சரீரம் பழையதாகி விட்டதால் புதிய சரீரம் எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.
எப்படி தங்கநகை விற்கும் வியாபாரி பழைய நகைகளை எடுத்துக் கொண்டு புதிய நகைகளை கொடுக்கிறானோ
அது போல ஜீவன் எந்த உலகத்திற்கு செல்கின்றானோ அதற்கேற்ற ஒரு சரீரத்தை அடைகிறான்.
இந்த சரீரத்தை ஜடமாக்கி விட்டு, பித்ரு லோம, கந்தர்வ லோகம், தேவலோகம், பிரஜாபதிலோகம், பிரம்மலோகம்
இதைப்போன்ற எந்த லோகத்திற்கு செல்கின்றானோ அந்த லோகத்திற்கேற்ற சரீரத்தை அடைகிறான்.

ஸ்லோகம்-5
இந்த ஜீவாத்மா ஸ்வயம் பிரகாசமாகவும், நமக்கு மிக அருகில் இருக்கின்ற தத்துவாமாகவும் இருக்கின்றது
அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம்.
இந்த ஜீவாத்மா அவித்யாவால் சம்சாரத்தை அனுபவிக்கின்றான். இந்த சம்சார அவஸ்தைதான் இதில் விளக்கப்படுகிறது.
அந்தந்த உபாதியில் அபிமானம் வைக்கும் போது அதற்குதகுந்த சம்சாரத்தை அனுபவிக்கிறான்.
புத்தியில் அபிமானிக்கும்போது விக்ஞானமய சம்சாரத்தையும், மனோமய கோசத்தில் அபிமானிக்கும்போது சுக-துக்கங்களை,
பிராணனில் அபிமானிக்கும்போது அதுவாகவே மாறி உணவின் மீது பற்று போன்றவைகளை,
கண்ணில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், கேட்கும் திறனில் அபிமானிக்கும்போது
அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், ஸ்தூல சரீரத்தில் அபிமானிக்கும் போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.

நீர் பிரதான, வாயு பிரதான,அ ஆகாசப்பிரதான, தேஜோ பிரதான, அதேஜோமய (பிசாசாக இருத்தல்),
காம-மய, அகாம-மய, க்ரோதமய-அக்ரோதமய, தர்மமய-அதர்மமய இப்படி எல்லாமுமாம இருந்து சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.
இவன் எப்படிபட்ட செயலை செய்கின்றானோ, எப்படிபட்ட நடத்தையுடையவனாக இருக்கின்றானோ அப்படிபட்டவனாக இருக்கின்றான்.
நல்லதை செய்பவன் நல்லவனாக இருக்கின்றான், அதர்மமான செயல்களை செய்பவன் கெட்டவனாகின்றான்.
புண்ணியத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதை அடைகின்றான். பாவத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதையே அடைகின்றான்.
எப்படிபட்ட ஆசையுடையவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே இருக்கின்றான்.
நமக்குள்ளே இருக்கிற ஆசைகளின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள் வெளிப்படுகின்றன.
ஒருவனுக்கு எப்படிப்பட்ட ஆசையானது ஆழ்மனதில் இருக்கின்றதோ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியடையும்,
அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வான். அந்த ஆசையை அடையக் கூடிய செயலை செய்கின்றான்.
இவன் எந்தக் கர்மத்தை செய்கின்றானோ அதன் பலனை அனுபவிக்கின்றான். எனவே தர்மப்படி வாழ்ந்தால்
புண்ணியத்தை அடைந்து அதன்மூலம் சித்தஸுத்தி அடைந்து அதைத் தொடர்ந்து மோக்ஷத்தையடைவான்.
அதர்மப்படி வாழ்ந்தால் சம்சாரத்தில்தான் இருந்து துன்பத்தை அனுபவிப்போம்.

ஸ்லோகம்-6
எந்தப்பொருள் மீது அளவற்ற ஆசையுடன் இந்த சூட்சுமசரீரம் இருக்கிறதோ அதே பொருட்கள் உள்ள சுழ்நிலையில்தான்
அடுத்த பிறவியில் பிறக்கின்றான். இந்த ஜீவன் செய்கின்ற அனைத்து செயலகளினுடைய பலனை அன்பவித்து
அந்த லோகத்திலிருந்து மீண்டும் திரும்புகின்றான். இதே லோகத்திற்கு வந்து கர்மத்தை தொடர்கின்றான்.
இவையெல்லாம் யார் ஆசையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த கதி.

இனி முக்திக்கு வருபவனைப்பற்றிய விளக்கம்:
अकामन மனதிலிருக்கும் ஆசைகளால் செயலில் ஈடுபடாது இருத்தல்
निष्कामन மனதிலிருக்கின்ற வாஸனையான ஆசைகளை நீங்கிவிட்டவன்
आप्तकामन நிறைவேறிய ஆசையை உடையவன்
இப்படிபட்ட ஜீவனுடைய சூட்சும சரீரம் எந்தப்பயணத்தையும் மேற்கொள்வதில்லை.
பிரம்மனாக வாழ்ந்து (ब्रह्म एवसन्) கொண்டு ப்ராரப்தம் முடிந்தவுடன் பிரம்மத்தை அடைகிறான் (ब्रह्म अप्येति)
अत्म कामह – ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையுடையவன் முதலில் ஆத்ம காமனாக இருக்க வேண்டும்.
அனாத்மா கானமாக இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கி ஆத்மாவைத்தான் அடைய வேண்டும் என்ற லட்சியமாக கொள்ள வேண்டும்.
இதைத்தான் முமுக்ஷுத்வம், ஜிக்னாஸு என்று கூறுவர். அநித்ய வஸ்து மீது இருக்கின்ற காமம் அனாத்மா காமம்.
அனாத்மாவான பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது அடையாதது போல்தான் ஏனென்றால் அது அழியும் தன்மையுடையது.
நித்தியமான பொருளை அடைந்தால்தான் அவன் ஆத்மகாமனாக இருப்பவன்தான் ஆப்தகாமனாக மாறுகின்றான்.
இவன் ஆசைப்பட்ட்த்தை அடைந்தவந்தான் ஆப்தகாமன் என்றழைக்கப்படுகின்றான். இவன் ஆத்மாவை அடைந்துவிட்டான்.
தன்னையடைந்து விட்டான். மனதிலிருக்கின்ற வாஸனையாக இருக்கின்ற ஆசைகள் நீங்கிய நிலையை உடையவன்தான் நிஷ்காமன்.
எந்த ஸம்ஸ்காரத்திற்கும் சம்சாரத்தை கொடுக்கும் அளவுக்கு சக்தியற்ற நிலையில் உள்ளவன்தான் நிஷ்காமன்.
அனாத்மா ஆசைகளெல்லாம் வறுக்கப்பட்ட விதைப்போன்று எரிக்கப்பட்டுவிட்டது. நமக்குள் இருக்கும் பல ஆசைகளால்
நம்மை செயல்படுத்தும் அளவுக்கு சக்தி இருக்காது. இவன் எந்தச் செயல் செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்,
பாவ –புண்ணியங்களும் வந்து சேராது. ஆசைகள் எல்லாம் பொய்யாகிவிட்டிருக்கும். ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
அதனால் பதிக்கப்படாமல் இருப்பான். நிதித்யாஸனத்தால் உள்ளிருக்கும் வாஸனைகளெல்லாம் சக்தியற்றதாகி விடும்.
எனவே அனாத்மாவிலிருக்கும் ஆசைகளை நீக்கிவிட்டு ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையை அடையவேண்டும்,
ஆத்ம ஞானத்தை அடைந்தவனுக்கு எதையும் செய்ய வேண்டியதில்லை என்று சாஸ்திரமும் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது.

சங்கரர் விசாரம்:
கேள்வி: கர்ம காண்ட்த்தை இவன் விடமுடியாது, நித்திய கர்மத்தை செய்ய வேண்டாம், இல்லையென்றால் பிரத்யஹாரம் பாவம் வந்து விடும்.
பதில் யாருக்கு பிராப்தி-பரிகாரம்-இதை அடைய வேண்டும், இதை விட வேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளும்
இல்லையென்றல் அவன் எந்த கர்மமும் செய்ய வேண்டியதில்லை. ஞானிக்கு இந்த இரண்டு ஆசைகளும் இல்லை.
மேலும் அவன் பிரம்மத்தை அடைந்துவிட்ட்தால்ய்ம் அவன் எந்தக் கர்மமும் செய்ய தேவை இல்லை. ( अप्येति – அடைகின்றான்)
கேள்வி देशान्द्रः अप्येति मोक्षः – ஒரு தேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு செல்வது போல இந்த லோகத்தில் இருக்க்ன் வரை மோக்ஷம் இல்லை,
வேறு உலகத்துக்கு செல்வதுதான் மோக்ஷம். வேதத்தில் க்ருஷ்ணகதி, சுக்லகதி என்ற விதவிதமான கதிகள் விளக்கப்பட்டிருக்கின்றது.
பிரம்மத்தை அடைகின்றான் என்ற வாக்கியம் வேறொரு இடத்தை அடைதல் என்றுதான் பொருள் கொடுக்கிறது.
பதில் இது ஸ்ருதி விரோதாத் – ஸ்ருதியின் கருத்துக்கு எதிரானது. அப்யேதி என்ற சொல்லின் முன்னால்
சொல்லப்பட்ட வாக்கியத்தில் ஞானிகளுக்கு இந்த கதிகள் கிடையாது என்று வேதமே சொல்லியிருக்கிறது.
ஆகவே மோக்ஷத்தை எங்கு வேண்டுமானாலும் அடையலாம்.
கேள்வி बावन्त्रा अप्येति मोक्षः – ஜீவன் பாவத்திலிருந்து பிரம்ம பாவத்திற்கு மாறுவதே மோட்சம்.
உதாரணமாக புழுவானது பட்டாம்பூச்சியாக மாறுவது போல. விசேஷமான சர்மத்தாலும், உபாஸனையாலும் பிரம்ம நிலைக்கு மாறுவது.
பதில் இதனால் மோட்சமானது கர்மத்தின் பலனாகி மாறிவிடும். ஞானத்தால் மட்டும்தான் மோக்ஷத்தை அடையும் நிலை ஏற்படாது.
எது கர்மத்தால் அடையப்படுகிறதோ அது அழிந்துவிடும் எனவே மோக்ஷமானது அநித்தியமானது என்றாகிவிடும்.
இல்லாத ஒன்றை அடைவதற்கு கர்மம் தேவை ஆனால் என்றும் நித்தியமாக இருக்கின்ற பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும்.
இந்த உபாஸனைகள் கர்மங்கள் எல்லாம் சித்தத்தின் தூய்மைகளாக பயன்படும். பாவந்திரபத்தி மனதுக்குத்தான் பொருந்தும் ஆத்மாவுக்கல்ல.
கேள்வி செயலினால் ஒன்று உருவாகி அது நித்யமாக இருக்கும் தன்மை உடையதானால்,
உதாரணமாக பானையை உடைத்து விட்டால் அது அழிந்து விடும். இந்த கர்மத்தால் அடைந்த அழிவு நித்யமானது அல்லவாம்
பதில் இந்த உதாரணம் வெறும் கற்பணையில்தான் இருக்கிறது. அது விவகாரத்தில் உபயோகப்படுத்த முடியாது.
அந்த இடத்தில்தான் உன்னுடைய தர்க்கம் ஒத்து வரும்
கேள்வி பிரம்மம் என்பது எப்பொழுதும் இருக்கிறதென்றால் கர்மத்தால், தியானத்தினாலும் ஏன் வெளிப்படக்கூடாது.
நெருப்பை ஏதாவது ஒரு செயலால் வெளிக்கொண்டு வருவதுபோல்
பதில் கர்மத்தினால் நெருப்பை தோற்றுவிக்கவில்லை. அது இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சரியான உதாரணம் எப்படி வெளிச்சம் இருட்டில் இருக்கும் பொருளை காட்டிக் கொடுக்கிறதோ அது போல
கேள்வி பந்தநிவிருத்தி மோட்சம் என்றால், மோட்சம் என்பது அபாவ ரூபம் அதாவது துயரம், பந்தம் இல்லாமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
பதில் பிரம்மனாக இருத்தல் என்றுதான் உபநிஷத் கூறுகின்றது. மோக்ஷம் என்பது பாவரூபம், அதாவது பிரம்ம ஸ்வரூபமாக ஆனந்த ஸ்வரூபமாக இருத்தல்
கேள்வி நாம் விஷயானந்தத்தை அனுபவிக்கிறோம் இதற்கு வேறான ஒரு புதிய ஆனந்த அனுபவம் மோக்ஷம்.
பதில் புதிய ஆனந்தம் தோன்றுகிறதா அல்லது ஏற்கனவே இருக்கிறதா? தோன்றுவது எல்லாம் அழியக்கூடியது/
கேள்வி ஆனந்த ஸ்வருபமாயுள்ள பிரம்மானந்தம் அதர்மவினால் மறைக்கப்பட்டிருக்கிறது. இதை நீக்கினால் பிரம்மானந்தத்தை அடையலாம்.
பதில் நீ சொல்வது பிரதிபிம்ப ஆனந்த த்திற்கு சரியாக இருக்கும் ஆனால் பிம்பானந்தம் என்று நம்மிடத்திலிருப்பது
எனவே அது புதிய அனுபவம் இல்லை. இது நமது சுபாவமாக இருப்பதால் உன்னுடைய கருத்து சரியில்லை.
அவித்யையினுடைய காம-க்ரோதிகள் நீங்கி இவன் பிரம்மனாகி இருப்பது, பிராரப்தம் கர்ம நீங்கியவுடன் பிரம்மமாகவே மாறி விடுகின்றான், கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-7
காம நிவிருத்தி (ஆசைகளை விடுதல்), அம்ருதத்வ பாவம் (மரணமற்ற நிலை) பிரம்ம பிராப்தி (பிரம்மத்தை அடைதல்).
சரீரத்தில் நான் என்கின்ற ஆத்ம புத்தியை விடுதல்.
यदा – அறிவானது எப்பொழுது பழுத்து விட்டதோ, முதிர்ந்த நிலையில்
सर्वे कामाः – எல்லா ஆசைகளும்
प्रमुच्यन्ते – தன்னிடத்திலிருந்து நீங்கி விடுகிறதோ, ஆசைக்கு காரணமாக உள்ளதும் நீங்கி இருத்தல்.
ये अस्य ह्रुदि श्रिताः – மனதைச் சார்ந்திருக்கும் ஆசைகள் (இகலோக, பரலோக ஆசைகள், பார்க்கும் பொருட்களின் மீதுள்ள ஆசை,
காதில் கேட்ட பொருட்களின் மீதுள்ள ஆசை, நம்மை கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசைகள்
வாஸனை ஸ்வரூபமாக இருப்பவைகள் புத்திரன், வித்தம், லோகம் இவைகளிலுள்ள ஆசைகள் எல்லா அனாத்மாக்களும் ஆசைகள்தான்.
இவைகளெல்லாம் நம்மை விட்டு சென்று விட்டால்.
अथ मर्त्यः பிறகு மரணத்திற்குட்பட்டவன்
अम्रुतः भवति – மரணமற்றவனாகிறான், அழிவற்றவனாக இருக்கிறேன் என்று
अत यत्र् ब्रह्म समश्नुतः इति – இங்கேயே, இப்பொழுதே பிரம்மத்தை அடைகின்றான்.
तद्यथा अहिनिल्वयनि – எவ்விதம் பாம்பின் தோல் சட்டை
वल्मीक – எறும்பு புற்றின் மீது; म्रुता – உணர்வற்ற ஜடமான பாம்புசட்டை
प्रतियस्ता सयीत इथि – பாம்பால் உரித்துபோடப்பட்டு இருக்கின்றதோ
एवम एतम इदम शरीरँ – அதுபோல ஞானிக்கு இந்த சரீரம் இருக்கின்றது.
நகமும் தலைமுடியும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு அது கீழே விழுந்து விட்டால் அருவெறுப்பை தருபவைகளாக இருக்கும்.
अथ अयम असरीरः अम्रुतः प्राणः ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
ब्रह्म एव तेजः एव : அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது
वैदेह – தேகத்தின் மீது அபிமானமற்றவன்.

நம் மனதிலிருக்கும் ஆசைகளனைத்தும் நீங்கி விட்டால் மரணமற்ற நிலையை அடைந்து விடலாம் அதனால் பிரம்மத்தை அடைந்து விடலாம்.
இந்த நிலையில் உடம்பானது, உதிர்ந்து விட்ட பாம்பு சட்டையை போல போன்று ஜடமாக தோன்றும்,
ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.

ஸ்லோகம்-8 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
வித்வத் அனுபவ பிரமானம்- ஞானியடைந்த அனுபவமே பிரமானம்
ஞானியின் கூற்று – எனக்கு யாருக்கும் கிடைக்காத பாதையில் பயணம் செய்வது.
अणुः पन्था माँ स्प्रुष्टो – சூக்ஷும மான ( இதுதான் சரியான பாதையென்று புரிந்து கொள்வதே கடினமானதாக இருப்பது ) மோட்சப் பாதை என்னை வந்தடைந்தது.
विततः पन्थाः – இந்த பாதை வெகுதூரம் செல்லும், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய பாதை அதிகமான காலம், பொறுமை, முயற்சி தேவைப்படுகின்ற பாதை
पुराणः – குரு-சிஷ்ய பரம்பரையாக வந்த ஞானம்.
अनुवित्तः मया – இந்தப்பாதையில் பயணம் செய்தால் அடையும் பலனானது என்னால் அடையப்பட்டுவிட்டது
तेन धीराः अपियन्ति ब्रह्मविदः – இந்த பாதையில் யாரெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தை அறிந்தவர்களாக ஆகிறார்கள்.
स्वर्ग लॊकम अपियन्ति – சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள்.
इतः ऊर्ध्वँ विमुक्ताः भवन्ति – அவர்கள் சரீரத்தை விட்டபிறகு விதேக முக்தனாகிறார்கள்.

ஸ்லோகம்-9 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
இந்த மோட்ச மார்க்கத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றது.
तस्मिन – இந்த மோட்ச மார்க்கத்தில் இப்படிபட்ட
छुक्लँ – வெண்மையான நாடியின் வழியாக பயணம் செய்து
पिङ्गलम – சாம்பல் வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
नील – நீல வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
हरितँ – பச்சை வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
लोहितँ – சிவப்பு வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
அந்தந்த தேவதையை அடைந்து பிறகு மோக்ஷத்தை அடைகிறார்கள் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
एषः पन्था இந்தப்பாதையானது
ब्रह्मणा हानुवित्तः தகுதியுடையவர்களுக்குத்தான் (சித்தஸுத்தி உடையவர்களுக்குத்தான்) இந்த பாதை புலப்படும்
तेन ऐति पुण्यक्रुत இந்த மார்க்கத்தில் வருபவர்கள் முதலில் கர்மயோகத்தினால் புண்ணியத்தை அடைகிறார்கள்,
தர்மத்தை கடைப்பிடித்து உயர்வடைகிறார்கள். இதுதான் முதல்படி
तैजसन ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான, ஒளி பொருந்திய மனதை அடைகிறார்கள். இது இரண்டாவது படி.
ब्रह्मवित ஞானயோகத்தின் மூலமாக மூன்றாவதுப்படியான ஞானத்தை அடைகிறான்.
ऐति இறுதியாக பிரம்மத்தை அடைகிறான். பாதையின் முடிவை அடைகின்றான்.

ஸ்லோகம்-10
மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று நினைத்து தவறான பாதையில் செல்வோரிகளின் நிலைய விவரிக்கிறது.
யாரெல்லாம் அவித்யை வழியாக (அவித்ய உபாஸதே) செல்கின்றார்களோ அவர்கள் அடர்ந்த இருளைத்தான் அடைகிறார்கள்.
மோக்ஷம் அடையும் என்று நினைத்து தவறான அறிவை அடைந்தவர்கள் இதைவிட மோசமான இருளை அடைகிறார்கள்.
யாரெல்லாம் காம்ய கர்மத்தில் ஈடுபட்டு எந்த லோகத்தை அடைந்தாலும் அங்கே குறைவான சுகத்தைத்தான் அடைவார்கள்.
அதனால் வைராக்யம் அடையும் வாய்ப்பு அதிகம். உபாஸனையில் கிடைக்கும் பலனில் அதிக சுகம் கிடைக்கும்
ஆனால் வைராக்யத்தை அடையும் வாய்ப்பு குறைவு.

இந்த மந்திரத்தில் உள்ள அவித்யா என்ற சொல் காம்ய கர்மம், தியானம் செய்தல் போன்றவற்றை குறிக்கிறது.
வித்யா என்ற சொல் அபரா வித்யா அதாவது மோட்சத்தை அடையும் அறிவைத் தவிர மற்ற அறிவை அடைவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
அடர்ந்த இருள் என்பது கீழ்மையான பிறவியை அடைந்து துன்பத்தை அடைதல், ஆத்ம ஞானத்தை அடைய முடியாத நிலையை அடைதல்.

ஸ்லோகம்-11
अनन्दा नाम ते लोका – மகிழ்ச்சியற்ற உலகத்தையோ, சரீரத்தையோ அடைகின்றான் ( புழு, பூச்சி மற்றும் விலங்குகளாக பிறத்தல்)
तमस आव्रुतः – அறியாமையால் மூடப்பட்டவனாக , ஆத்மஞானம் அடையும் வாய்ப்பே இல்லாமல் இருத்தல்
अविद्वाँसः अबुधो – ஆத்மாவை அறியாதவர்கள், ஆத்மாவை அடையும் பாதையை அறியாதவர்கள், கீழான லோகத்தை அடைகிறார்கள்.

ஸ்லோகம்-12
இந்த மந்திரத்தின் விளக்கத்தை வித்யாரண்யர் அவர்கள் தனது பஞ்சதசி என்னும் நூலில்
திருப்தி தீபம் என்னும் அத்யாயத்தில் 290 ஸ்லோகங்களில் எழுதியிருக்கிறார்..
पुरुषः – சாதகன்; अयँ – அந்த பரமாத்மா; अस्मि इति – நானாக இருக்கிறேன்
आत्मानँ विजानीयात चेदि – தன்னை அறிவானே என்றால்
किमिच्छन् कस्य कामाय – எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக
शरीरम् अनुसँज्वरेत् – தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?

ஒருவன் தன்னை பரமாத்மாவாக என்று அறிந்துகொண்டால் அவன் எதை விரும்புவான்,
யாருடைய விருப்பத்திற்காக தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
சொல் விளக்கம்
1. புருஷஹ – ஜீவாத்மா / மனிதன் / சாதகன்
ஜீவன் என்ற சொல்லில் மூன்று தத்துவங்கள் உள்ளது. அவைகள் 1.கூடஸ்தன் – மாறாத சைதன்யம்,
2. சிதாபாஸன் – பிரதிபிம்ப சைதன்யம் (மாற்றத்திற்குட்பட்ட பொய்யான சைதன்யம்), 3. சூட்சும சரீரம் – அந்தக்கரணம்.

கூடஸ்தனை ஏன் ஜீவனுடன் சேர்க்க வேண்டுமென்றால் சிதாபாஸன் இருக்கும்போது அதற்கு ஆதாரமான கூடஸ்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடஸ்தனை சேர்க்கவில்லை என்றால் மோட்சம் என்பது தன்னையே அழித்துக் கொள்கின்றா மாதிரி இருக்கும்.
இப்போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டால்தான்
இரண்டும் அழிந்தாலும் கூடஸ்தன் இருந்து கொண்டிருக்கும். ஜீவன் முக்தி நிலைவரை ஜீவாத்மாவை புருஷன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

2. சேத்: இங்கு இந்த சொல் ஆத்மாவை அதிக அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் குறிக்கிறது
3. ஆத்மானம்: தன்னை என்று பொருள். நான் என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
a. வாச்யார்த்தம்: முக்கிய அர்த்தம், எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் அகங்காரம் அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம்.
b. ஞானியின் அகங்காரம்: ஞானத்தை அடைந்தவனுக்கு நன்றாக தெரியும் நான என்பது கூடஸ்தனை குறிக்கின்றது.
ஆனால் விவகாரம் செய்யும் போது அகங்காரத்தைத்தான் பயன்படுத்துவான். இவனது அகங்காரம் பொய்யாக கோபப்படுவது போன்றதுதான்.
சாதாரண மனிதர்களிடத்தில் இது காண்பது மிகவும் துர்லபம் (அரிது)
c. ஞானி பயன்படுத்துவது: மஹாவாக்கிய உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது நான் என்ற சொல்லுக்கு கூடஸ்தனைத்தான் எடுத்துக் கொள்வார்.
பிறகு தன்னுடைய நிதித்யாஸனத்தின் போதும் நான் என்பதை தன் ஆத்மாவாகத்தான் எடுத்துக் கொள்வார்.
4. விஜானீயத்: நான் பிரம்மன் என்று அறிபவன் யார்? கூடஸ்தனா, சிதாபாஸனா, சூட்சும சரீரமா. பிரம்மன் நான் என்று
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூட்சும சரீரமோ ஜடம் அதனால் அறிய முடியாது.
எனவே சிதாபாஸனோ அல்லது ஜீவனோதான் அறிபவன் என்று சொல்லலாம். அஹம் பிரம்மாஸ்மி என்று அறிபவன் சிதாபாஸன்.
பிரதிபிம்பமானது நிஜமான பொருளை விட வேறொன்றா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்று ஆராயும்போது எப்படி
பிரதிபிம்ப சூரியன் முழுமையாக வேறும் அல்ல முழுமையாக ஒன்றும் அல்ல அதேபோல புத்தியில் பிரதிபிம்பிக்கும் சைதன்யமான சிதாபாஸன்.
இவன் தன் மூலமான பிரம்மத்தில் அபிமானிக்கும் போது அறிபவனாகிறான்.
5. அயம்: பிரம்மன் என்னிடத்தில் நன்றாக பிரகாசிக்கின்றது, பிரம்மமே என்னுடைய ஆத்மாதான்.
இந்த மாதிரி புரிந்து கொள்கிறான் இதுவே அபரோக்ஷ ஞானம் (அயம்) இது அபரோக்ஷ வஸ்து – அருகில் இருக்கின்ற ஒரு பொருள்.
6. கிமிச்சன்: அனுபவிக்கப்படும் பொருள் இல்லை அதனால் ஆசை இல்லை. இவன் எதை அடைய ஆசைப்படுவான்?
இவனுக்கு ஆசைப்படும் விஷயங்கள், பொருட்கள் எதுவுமே இல்லை ஏனென்றால் எல்லாமும் மித்யாவாக தெரிவதால்,
அனுபவிக்க வேண்டிய பொருளோ, விஷயமோ இல்லை. ஜகத் மித்யா என்ற ஞானத்தினால் இவன் இவ்வாறு நினைக்கின்றான்.
7. கஸ்ய காமாய: யாருடைய பயனுக்காக இவன் துயரப்படுவான்? போக்த்ரு நிஷேதம் – அனுபவிப்பவன் இல்லை என்று தீர்மானித்தல்.
இந்த அறிவு ஆத்மாவினுடைய அஸங்கத்தை அறிந்து கொள்வதனால் வருகிறது. நான் யாருடனும் சங்கம் வைத்து கொள்ள மாட்டேன்
அனுபவிக்கப்படும் பொருளோடு உள்ள இந்திரியங்களின் சங்கத்தை விட்டு விடுவதால். நான் அஸங்கம், ஆத்மா அஸங்கம் என்ற
அறிவால் அனுபவிப்பவன் இல்லாமல் போய் விடுகிறான். தன்னுடைய இன்பம் அனுபவிப்பதற்குத்தான் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது
என்று அத்யாரோபம் செய்து பிறகு அதை நீக்கி விடுகிறது.
8. சரீரம் அனுசம்ஜ்வரேத்: ஸ்தூல சரீரத்தில் எண்ணற்ற நோய்களால் தாக்கப்படுகிறது.
சூட்சும சரீரத்தில் காம-க்ரோதங்களினால் அனுபவிக்கும் சம்சாரம், சம-தமாதிகளை அடையாத நிலையில் ஏற்படும் சம்சாரம்.
காரண சரீரம்- துக்கத்டிற்கு விதையாக இருக்கிறது. நோயை நீக்க வேண்டுமென்றால் சரீரத்தைத்தான் நீக்க வேண்டும்.
சம்சாரம் போக வேண்டுமானால் மூன்று சரீரத்தையும் நீக்க வேண்டும். அதில் உள்ள அபிமானத்தை நீக்க வேண்டும்.
இப்படிபட்ட நிலையில் துயரம் நீங்கி மனநிறைவு வந்தடையும்.

வித்யாரண்யரின் விளக்கம்:
சம்சாரத்திலிருந்து மோக்ஷம வரை ஏழு படிகள் உள்ளதாக விளக்கியுள்ளார். அவைகள்
1. அக்ஞானம் – அறியாமை
2. ஆவரணம் – அக்ஞானத்தை வெளிப்படுத்துதல், இது எனது அறியாமை என்று தெரிந்து கொள்ளுதல்
3. விக்க்ஷேபம் – சோகரூபம் – துயரப்படுதல்
4. பரோக்ஷ ஞானம்
5. அபரோக்ஷ ஞானம்
6. சோகநிவிருத்தி
7. திருப்தி – மனநிறைவு
பத்தாவது மனிதன் கதையில் இந்த ஏழு சொற்களின் விளக்கத்தைப் பொருத்தி காட்டுகிறார்.
1. அக்ஞானம் – பத்தாவது மனிதன் காணவில்லை
2. ஆவரணம் – எண்ணியவுடன் பத்தாவது மனிதன் இல்லையென்று அறிதல்
3. விக்க்ஷேபம் – பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்ற துயரம்
4. பரோக்ஷ ஞானம் – வேறொருவன் பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்று சொல்லும்போது அறிந்து கொள்வது
5. அபரோக்ஷ ஞானம்- அவனை வரிசையில் நிற்க வைத்து எண்ணியவுடன், தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கின்றான்.
6. சோகநிவிருத்தி – மனதிலடைந்த சோகம் நீங்குதல்
7. திருப்தி – அதனால் மனநிறைவு அடைதல்
இதேபோல எல்லோருக்கும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றார்கள். இதே ஜீவன் நான் யார் என்று தெரியவில்லை என்று குழம்புகின்றான்.
இதுவே விக்ஷேபம். சம்சாரம் என்பது விக்ஷேபம், பரோக்ஷ ஞானத்தினால் நித்தியமான பிரம்ம இருக்கின்றது என்று அறிகின்றான்.
பிரம்மனாக நான் இருக்கின்றேன் என்ற ஞானம் அபரோக்ஷ ஞானம் அதனால் துயரங்கள் நீங்கி மனநிறைவை அடைகின்றான்.
இதில் முதல் மூன்று நிலைகள் சம்சாரத்தை விளக்குகின்றது. 4 & 5 நிலைகள் மோக்ஷ சாதனமாகவும், 6 & 7 மோக்ஷ பலனையும் விளக்குகிறது.

பரோக்ஷ ஞானம் – உபநிஷத்தினுடைய உபதேசத்திலிருந்து கிடைக்கின்றது. பிரம்மத்தைப் பற்றி இருப்பை சொல்கின்ற வாக்கியத்திலிருந்து கிடைக்கிறது.
அபரோக்ஷ ஞானம் – மஹா வாக்கியத்திலிருந்து இந்த அறிவை அடைகிறோம். பதார்த்த ஞானம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில்
உள்ள பதங்களின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளுதல்.
லட்சியார்த்தம் – த்வம் – இரண்டு அர்த்தம் – அனாத்மாவை நீக்கி புரிந்து கொள்வது.
தத் பதத்தில் உலகத்தை நீக்கி அதற்கு ஆதாரமான பிரம்மத்தை எடுத்துக் கொள்ளுதல். அஸி – இரண்டையும் ஐக்கியப்படுத்தி ஞானம் பெறுவது.

ஸ்லோகம்-13
अस्मिन सँदॆह्यॆ – இந்த உலகமானது அக்னியால், வாயுவால், நீரால், ப்ருதிவியால் துயரப்படுத்தப்படுகிறது.
गहनँ – அனர்தத்தை கொடுக்கின்ற, விவேகத்திற்கு எதிராக இருக்கின்ற, துயரத்தை அடையும் நிலையிலுள்ள சரீரம்
आत्मा प्रविष्टः – ஆத்மா இந்த சரீரத்தில் நுழைந்து தங்கியுள்ளது.
यस्य – இந்த அதிகாரி
अनुवित्तः – கஷ்டமான இந்த உடலில் நுழைந்த ஆத்மாவுக்குள் இவன் நுழைந்து விட்டான். அதை அடைந்தும் விட்டான். ஞானத்தால் ஆத்மாவை அடைந்து விட்டான்.
प्रतिबुद्धः – மனதில் எழும் எண்ணங்களுக்கு எல்லாம் ஆத்மாவே சாட்சியாக இருப்பதை அறிந்துள்ளான்.
இப்படிபட்ட சரீரத்திற்குள் இருக்கும் ஆத்மாவை இப்படியாக அறிந்து கொண்டவன்.
सः विश्वक्रुत् – அவன் அனைத்தும் செய்து முடித்தவனாகிறான்
सः सर्वस्य कर्ता – இந்த ஞானியே பரமாத்வாகின்றான். அனைத்துக்கும் கர்த்தாவாகிய ஈஸ்வரனேதான் நான் என்ற நிலையை அடைகிறான்.
तस्य लोकः – அவனுடைய உலகம் பிரம்மமேதான். இந்த பொய்யான உலகம் அவனுடைய-தாக இருக்காது. அவன் தன்னை பிரம்மாகவே நினக்கின்றான்
स उ लॊक एव – அவனே உலகம், அவனே அனைத்துமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்-14
மனித ஜென்மத்தின் உயர்வை இந்த மந்திரம் உரைக்கிறது. ஞானி நான் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்ற மனநிறைவுடன் இருக்கின்றான்.
इह एव सन्तः – இந்த பிறவியில் இந்த சரீரத்தில் இருந்துக் கொண்டு
अथ विद्मः – எப்படியோ அறிந்துகொண்டும்
तद वयँ – அந்த பிரம்மத்தை நாங்கள்
न चेद् अवेदिः – ஒருவேளை நாங்கள் அறியாமல் இருந்திருந்தால்
महति विनष्टि – அதனால் அடையும் இழப்பு மிகப்பெரியது.
ये तद् विदुः – யாரெல்லாம் இந்த ஆத்மாவை அறிகிறார்களோ
ते अम्रुतस्य भवन्ति – அவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்
अत तत्रे दुःखमेव अपियन्ति – அதை அறியாதவர்கள் துயரத்தைத்தான் அடைகின்றார்கள், சம்சார வலைக்குள் இருப்பவர்கள் பிறவி சக்கரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

ஸ்லோகம்-15
यदा एतम आत्मानँ – எப்பொழுது இந்த ஆத்மாவை
देवँ अनुपश्यति – ஈஸ்வரனாக அறிகின்றார்களோ குருவினுடைய துணைக்கொண்டும், பிரமானத்தின் மூலமாக வந்த ஞானம்
अञ्जसा – அபரோக்ஷமாக, நேரிடையாக சந்தேகமில்லாமல் அறிந்து
ईशानँ – ஈஸ்வரனாக இருக்கின்ற தேவன்
भुतभव्यस्य – மூன்று காலத்திலும் அனுபவிக்கும் விஷயங்களை தருகின்ற ஈஸ்வரன்
न ततो विजुगुप्सते – இப்படிபட்ட ஈஸ்வரனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
அவரிடம் பயம் கொள்ள மாட்டான். காரணம் அவர் தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்று நினைக்காததினால் இவனுக்கு இந்த நிலை.
न ततो विजुगुप्सते – யாரையும், தன்னையும் சேர்த்து நிந்திக்க மாட்டான். யாரையும் குறைக்கூற மாட்டான். யார் மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டான்.

ஸ்லோகம்-16
இதில் ஈஸ்வர ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காலத்தை வென்றவர். காலமே அவரின் ஆணைக்கு கட்டுபட்டு இருக்கிறது. அவருக்கு கட்டுபட்டு செயல்படுகிறது.
यस्माद् – எந்த ஈஸ்வரனுக்கு; अर्वाक् – கீழே பணிந்து, கட்டுபட்டு
सँवस्तरः परिवर्तते – கால தத்துவம் செயல்பட்டு வருகின்றது
ज्योतिषाँ ज्योतिः – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கின்றார்
अम्रुत्वँ – நித்தியமானவராக இருப்பவர்
तद दॆवाः – இப்படிபட்ட ஈஸ்வரனை தேவர்கள்
आयुहो उपासते – ஆயுள் என்று உபாஸிக்கிறார்கள்.
ஈஸ்வரனை ஆயுள் கொடுப்பவர் என்று உபாஸனை செய்தால் நீண்டநாள் வாழலாம்.

ஸ்லோகம்-17

அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மா, நான் அதுவாக இருக்கிறேன்.
யஸ்மின் – எந்த பிரம்மனிடத்தில்;
பிரதிஷ்டிதா – தாங்கியிருப்பது; சார்ந்திருப்பது;
ஆகாஷஹ – அந்த மாயா, அவ்யாக்ருதம். வெளித்தோற்றத்டிற்கு வராத பிரபஞ்சம்.
பஞ்ச, பஞ்ச ஜனாஹ – வெளித்தோற்றதிற்கு வந்தவைகள், இது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள்,
1. ஆதித்ய முதலிய ஜோதிகள்.
2. பிராண தத்துவம்
3. கண்
4. ஸ்ரோத்ரம்
5. மனம்
வித்துவான் – இப்படி என்னை நான் அறிந்து காரணத்டினால்
அம்ருதஹ _ நான் மரணமற்றவனாக இருக்கிறேன், நித்தியமான பிரம்மனாக இருக்கின்றேன்.

ஸ்லோகம்-18
தே – யார், நிசித்யுஹ – நிச்சயம் செய்கிறார்களோ, புராணம் – அனந்தம், நித்தியம், ஸனாதனம்;
அக்ரியம் – அநாதி, ஆதி-அந்தம் இல்லாத பிர்ம்மத்தை பிராணனுக்கு பிராணனாக, கண்ணுக்கு கண்ணாக, காதுக்கு காதாக,
மனதுக்கு மனதாக யார் அறிகிறார்களோ அவர்கள் பிரம்மத்தை நிச்சயமாக உறுதியாக அடைந்தவகளாகிறார்கள்.
இந்திரியங்கள், மனம் சுபாவமாக ஜடம், ஆனால் இவைகளிட்த்தில் சேதனதன்மை இருப்படை பார்க்கிறோம்.
எனவே இவைகள் செயலுக்கு இவைகளுக்கும் வேறாக ஒன்று இருப்பதை அறிய முடிகிறது அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ளலாம்,
இதுவே இவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.

ஸ்லோகம்-19
ஆத்மஞானத்துக்கு பொதுவாக இருக்கின்ற கரணம் எது? \
ஜகத் மித்யா, இந்த மித்யாத்வ ஞானம் இல்லையென்றால் சம்சாரத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மனஸா ஏவ அனுத்ரஷ்டவ்யம் – இந்த ஆத்மாவானது மனதால்தான் அறிய முடியும். எனவே இதுதான் பொதுவாக கரணமாக இருக்கிறது.
ஆத்மா ஞானமும், அனாத்மா ஞானமும் மனதினாலேதான் அடைவதால் இது பொதுவாக இருக்கிறது.
இந்த மனதை தூய்மையாக்க வேண்டும். அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.
சாஸ்திரம், குரு பிரமானம் மூலம் ஆத்மாவை மனதினால்தான் அடைய முடியும்.
நேஹ நாநா அஸ்தி கிஞ்சன – த்வைத (வேற்றுமைகள்) கொஞ்சமும் இல்லாமலிருக்கின்ற
இஹ – இந்த பிரம்மனிடத்தில்

பிரத்யக்‌ஷ பிரமானம் ஒரு பொருளினுடைய தோற்றத்தை மட்டும்தான் காட்டுகிறது. மனதுதான் இது சத்யமா இல்லையா என்று தீர்மானிக்கும்.
பிரத்யக்‌ஷ பிரமானம் இருப்பைக் காட்டுகிறது. சாஸ்திரம் அந்தப்பொருளின் சத்யத்வத்தை உபதேசிக்கிறது.

யார் இந்த பிரம்மனிடத்தில் விதவிதமான வேற்றுமைகளை பார்க்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து விடுதலையடைவதில்லை,
பிறப்பு-இறப்பு சுழலில் சிக்கிக் கொண்டு சம்சாரத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-20
ஏகதா – அத்வைத (இரண்டற்ற) தன்மையுடையதாக ஆத்மாவை அறிய வேண்டும்.
ஏவ அனுதிரஷ்டவ்யம் – இதற்குள்ளும் வேற்றுமையில்லை.
ஏதத் அப்ரமேயம் – இதை அளவிடமுடியாது. குணங்களைத்தான் அளக்க முடியும். ஆத்மா குணங்களற்றது. எந்தப்பிரமானத்தினாலும் அறிய முடியாது.
த்ருவம் – என்றும் இருப்பது; நித்தியமானது
விரஜஹ – தூய்மையானது (ரஜஹ – அசுத்தமானது) தர்மமும்-அதர்மமும் அற்றது.
பரஹ-ஆகாஸாத் – வெளித்தோற்றதிற்கு வராத மாயைக்கு அப்பாற்பட்டது.
அஜஹ – பிறப்பற்றது; மாற்றங்களற்றது.
மஹான் – பரிணாம வளர்ச்சியற்றது.
த்ருவஹ – மரணமற்றது.
இப்படிப்பட்ட லட்சணங்களையுடையது என்று ஆத்மாவை அறிய வேண்டும்.

ஸ்லோகம்-21
தீரஹ – சத்துவகுண பிரதானமாக கொண்ட சாதகன்’
தம் ஏவ – முன்னால் சொல்லப்பட்ட அந்த ஆத்மாவை
விக்ஞாய – சந்தேகமில்லாமல், தெளிவாக அறிந்து (சிரவணம், மனனம்)
ப்ரக்ஞாம் குர்வீத – நிதித்யாஸனத்தில் ஈடுபட்டு உறுதியான ஞானத்தை அடைய வேண்டும்,
ப்ராஹமணன் – பிரம்மத்தை அறிந்தவன்
ஜிக்ஞாஸா – ஞானத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை
பரிஸமாப்தி – அந்த ஆசையை நிறைவேற்றி விட வேண்டும்,
குர்வீத – ஈடுபட வேண்டும்,
நிதித்தியாஸத்தினால் பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீங்கி விட வேண்டும். ஆத்மா வெளிப்பட்டுள்ள நிலையை அடைய வேண்டும்.
ந அனுத்யாயாதி பஹூஞ்சப்தான் – மற்ற சாஸ்திரங்களை, த்வைதத்தை பற்றி பேசுகின்ற சாஸ்திரங்களை தியானித்துக்கொண்டோ,
ஆழ்ந்து படித்துக்கொண்டோ இருக்க கூடாது. அப்படி செய்து கொண்டிருந்தால் ஜகத் மித்யா என்ற அறிவு ஏற்படாது.
மற்ற சாஸ்திரங்களை அளவாக படிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற சப்தங்களை கேட்பதை நிறுத்தி விட வேண்டும்,
வாச்ஷ் விக்லாபனம்(சிரமம்) – அப்படி செய்யாவிட்டால், உன்னுடைய வாக்கு இந்திரியத்திற்கு
கஷ்டத்தைத்தான் கொடுத்து சோர்வை ஏற்படுத்தி விடும், காலமும் வீணாகி விடும்.

ஸ்லோகம்-22
இந்த மந்திரத்தில் 5 வகையான கருத்துக்கள் அடங்கியுள்ளது.
1. ஜீவ-பிரம்ம ஐக்கியம்.
2. ஈஸ்வரனுடைய, ஞானியுடைய பெருமை,
3. சாதனங்கள்
4. நிஷேதத்தின் மூலமாக பிரம்ம ஸ்வரூப விளக்கம்
5. ஜீவன் முக்தி
சங்கரரின் அறிமுகம்
பந்தமும், மோக்‌ஷமும் ஹேதுவுடன் விளக்கப்படுகிறது. பந்தமும் அதற்குக் காரணமும்,
மோக்‌ஷமும் அதற்கு காரணமும் விளக்கப்பட்டுள்ளது.
பந்த த்திற்கு காரணம் அவித்யா இதுவே ஆசையை தூண்டிவிட்டு அதை அடையும் செயலிலும் ஈடுபடுத்துவதால்
அதனால் விளையும் சுக-துக்கங்களை அனுபவிப்பதுதான் சம்சாரம் எனப்படும்.
மோக்‌ஷத்திற்கு காரணமாக இருப்பது ஜீவ-பிரம்ம ஐக்கிய அறிவும், ஜகத் மித்யா என்ற அறிவும்தான்.

விசாரம்:
முழு வேதமே ஜீவ-பிரம்ம ஐக்கியம் என்ற ஞானத்தை (மோக்‌ஷம்) அடைவதற்கு உருவாக்கப்பட்டது. விஜியுக்தஹ – உருவாக்கப்பட்டது.

பூ.ப – உபநிஷத் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் கர்ம காண்டம் அப்படி இல்லை.
பதில் கர்ம காண்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் உள்நோக்கத்தை பார்த்தால் மோட்சத்தை உபதேசிக்க வேண்டும் என்பதில்லை.
கர்ம காண்டம் ஒரு சாதனமாக பாதையாக சொல்லப்பட்டுள்ளது. மோட்சம் என்ற ஒன்றுதான் புருஷார்த்தம், மற்றதெல்லாம் இதை அடைவதற்கான படிகள்

மந்திர விளக்கம்:
ஸ்ஹவா – அவனே; ஏஷ – இவன், பிரம்மமே இந்த ஜீவன்.
மஹான், அஜஹ – பூர்ணமானவன், பரிச்சேதமற்றவன் (தேச காலத்தால் வரையறுக்கப்-படாதவன்), பிறப்பு-இறப்பற்ற, எந்தவிதமாற்றமுமடையாதவன்
ஆத்மா – நித்தியமான, சத்ய வஸ்து
யோ அயம் விக்ஞானமய – இது சைதன்ய மயம் – சைதன்ய ஸ்வரூபம்.
பிரானேஷு- இந்திரியங்களுக்கு அருகிலிருந்துக் கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது.
யஹ ஏஷஹ அந்தக் ஹ்ருதய – நம்முடைய சூட்சும சரீரத்திற்குள் எந்த ஆகாசம் (எல்லா இடத்திலும் வியாபித்து,
ஒளிந்து கொண்டிருப்பவன்) இருக்கிறதோ அதனுள்ளே ஒடுங்கி உறங்குகின்றான்.

ஸர்வஸ்ய வஷி – எல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
ஸர்வஸ்ய ஈஷனா – எல்லாவற்றையும் இவனே ஆள்பவன்.
ஸர்வஸ்ய அதிபதி – எல்லோரையும் விட சக்திமானாக, பலசாலியாக இருக்கிறான்.
ஸஹ ந ஸாதுநா கர்மனா – இப்படிபட்ட ஞானியானவன் புண்ணிய கர்மத்தினால் புதியதாக வேறெந்த பலனும் தேவையில்லை.
இப்போது இவன் உயர்ந்த நிலையில் இருப்பதால்.
அஸாதுனா- பாவ கர்மத்தினர்; கன்னியான – கீழான நிலைக்கும் வருவதில்லை
மேலே கூறிய குணங்களனைத்தும் ஈஸ்வரனுக்கும், ஞானிக்கும் பொருந்தும்.
ஏஷஹ சர்வேஸ்வரன் – ஞானியும், ஈஸ்வரனும் ஸர்வம் சக்தியுடையவர்கள்
ஏஷஹ பூதாதிபதி – அனைத்து பூதங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான், எல்லோருக்கும் இருப்பக் கொடுத்தவராகிறார் ஈஸ்வரன்.
பூதபாலஹ – அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். இவன் தன்னையும் துயரப்படுத்தப்படுத்தமாட்டான்;
மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுக்கமாட்டான். ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பவர்.
ஏஷ ஸேது (பாலம், அணைக்கட்டு, வரப்பு ) – விதரனஹ – பாதுகாத்தல்
லோகானாம் அஸம்பேதாய – இந்த உலகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தத்தம் நியதிகளை பின்பற்றி வாழச்செய்வது,
உலகம் சீராக இயங்குவதற்கு பாலமாக இருப்பவர்.

சாதன சதுஷ்ட சம்பத்தியை உபதேசிக்கும் மந்திரப்பகுதி.
ஸ்வதர்ம அனுஷ்டானம் (கர்மயோகம்) – கர்ம அனுஷ்டானம், கர்மத்தை சரியான பாவனையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.
பிராமணாஹா – பிராமணர்கள், சான்றோர்கள், மனத்தூய்மையுடையவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
விவிதி3ஷந்தி – அறிய ஆசைப்படுக்கின்றார்கள்.
தம் ஏதம் – அந்த இந்த – பரமாத்வான ஜீவாத்மாவை
ஆத்மாவை அறிய வேண்டும் என்ற ஆசை திடமாகும் போது நம்மை செயலுக்கு தூண்டி விடும்.
சாமான்யமக இருக்கின்ற ஆசைய விசேஷமானதாக உறுதிப்ப்டுத்த வேண்டும். இதற்கு எது சாதனம்?
வேதிதம் – அறிய வேண்டும்; இச்சா – ஆசை
அறிவதற்கு எது சாதனம்? ஆசைக்கு எது சாதனம்?
இந்த ஆசையே அறிவதற்கு முக்கிய சாதனமாக இருக்கிறது. குருவும் சாதனமாகின்றார். சாஸ்திரமும் சாதனமாகிறது.
சூழ்நிலைகளும் சாதனமாகின்றது. ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசைய வளர்த்துக் கொள்ள உதவும் சாதனங்கள்
வேத அனுவசனம், யக்ஞம், தானம், தபஹ.
வேத அனுவசனம் : பிரம்மாச்சர்ய ஆசிரமத்தில் உள்ளவர்களின்
ஸ்வதர்மம் : வேத சாஸ்திரத்தை படிக்க வேண்டும் (ஸ்வாத்யாயம்)
படிப்பது மாணவனது ஸ்வதர்மம். வேத சாஸ்திரத்தை குருவின் உபதேசம் மூலம் அறிந்து கொண்டு அந்த ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்,
தர்ம மீமாம்சம் என்று அறிந்து கொள்ளுதல். வேதத்தை படித்தல், ஓதுதல் வேதம் உரைக்கும் தர்மத்தை விசாரம் செய்தல்.
யக்ஞம், தானம் – இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பிரம்மத்தை பூரணமாக அறிய வேண்டும் என்ற ஆசையா நிலைநிறுத்த வேண்டுமானால்
யக்ஞம், தானம் செய்ய வேண்டும்.
வானபிரஸ்தாசிரமம் – அவர்கள் தவத்தினால் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
கிரகஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு யக்ஞம், தானம் இவைகள் முக்கிய சாதனங்களாக இருக்கின்றது.
யக்ஞம் – இஷ்டா, பூர்த்தம், தத்தம்.
இஷ்டா – வைதிக கர்மங்கள் – யாகம், ஸ்மார்த்தம் (ஸ்மிருதியில் கூறப்பட்ட கர்மங்கள்), ஸ்ரௌத்தம் (ஸ்ருதியில் கூறப்பட்ட கர்மங்கள்).
பூர்த்தம் – சமுதாய சேவை
தத்தம் – மற்றவர்களுக்கு உதவி செய்தல் (அபயம் கொடுத்தல்)
யக்ஞமானது தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பித்ருயக்ஞம், மனிதயக்ஞம், விலங்குகளுக்கு செய்யும் யக்ஞம் என்று ஐந்து வகையாக உள்ளது.
தானம் – தன்னிடம் இருக்கும் பொருளை பகிர்ந்து கொடுத்தல் (லோபம் நீங்கிவிடும்)
கர்மயோகப்படி வாழ்வது
இவைகள் யாவும் கிரகஸ்த ஆசிரமத்தினருடைய கடமைகள்.

வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்களின் பிரதான கடமை தவம் செய்து கொண்டிருப்பது-தான்.
அநாஸ கேன – நம்மை அழிக்காது செய்யும் தவம். தவத்தின் முடிவில் சக்தி அதிகமாக வேண்டுமேயொழிய குறையக்கூடாது.
எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் அதிக காலம் தவத்தில் ஈடுபட வேண்டும்.
இந்த கடமைகள் மூலம் மோட்சத்தை அடைய என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
யக்ஞ, தானம், தவம் நிதித்தியாஸனம் வரை நம்மை கொண்டு செல்லும்.
ஏதம் ஏவ விதி3த்வா – இந்த ஆத்ம தத்துவ ஞானத்தை அறிந்தவன்
முனிஹி பவதி – முனிவனாக உயர்வடைகிறான்.
ந கர்மி – செயலில் செய்வதிலிருந்து அமைதியடைகின்றான்.
ஏதம் ஏவ – இதை அறிய விரும்புபவர்கள்; ப்ரவ்ரஜினஹ – தியாகத்திற்கு தயாரானவர்கள்
லோகம் – ஆத்ம தத்துவத்தை; இச்சந்தி – அதையே லட்சியமாக கொண்டவர்களாக,
ப்ரவ்ராஜினஹ – தியாகத்திற்கு தயாராக இருப்பவர்கள்,
ப்ரவிரஜந்தி – சந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்று விடுவார்கள்.
சந்நியாஸத்தை இரண்டு வகையாக அடைகின்றனர்.
1. கிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à வானபிரஸ்தம் à சந்நியாஸம் என்ற படிகளின் வழியே அடைவது.
2. அகிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à சந்நியாஸம் அல்லது பிரம்மச்சர்யம் சந்நியாஸம் என்று
இருவகையாக சந்நியாஸத்தை அடைவார்கள்

சந்நியாஸம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் 1. விவிதிஷா சந்நியாஸம், 2. வித்வத் சந்நியாஸம்.
விவிதிஷா சந்நியாஸம் – விவேகம், வைராக்கியம் போன்ற ஞானத்திற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்வது.
வித்வத் சந்நியாஸம் – சிரவண, மனனத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்வது/ இவர்கள் பிரதான கடமை நிதித்தியாஸனம் செய்வதுதான்.
நிதித்தியாஸனத்தை முடிந்து ஞானத்தை அடைந்தாலும் பிராரப்த கர்மத்தை கழிப்பதற்காக எடுத்துக் கொள்வது.

ஏதத்தஸ்ம வை பூர்வே விதிவாம்ஸ – இதற்கு முன் வாழ்ந்த ஞானத்தில் ஆசை கொண்டவர்கள், உலகத்தின் நிலையற்ற
தன்மை தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்தவர்கள்.
பிரஜாம் எ காமயந்தே – இல்லறத்தை விரும்புவதில்லை,
கிம் ப்ரஜயா கரிஷ்யாமே – இவர்கள் ஆசையற்றவர்கள், இந்த பிரஜைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
யேஷாம் நோ அயம் ஆத்மானாம் லோக இதி – நமக்கு இந்த ஆத்மாதான் லட்சியம், அதை அடைவதுதான் பரம் லட்சியம்
என்று நினைத்து சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். அனாத்மா ஆசைகளான புத்திரன், சொத்து, உலகம்
போன்றவைகளிலிருந்து விட்டு விலகி சந்நியாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். புத்திரன் மீதுள்ள ஆசையானது
சொத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது, பிறது உலகத்திலிருகின்ற இன்பத்தை தருகின்ற பொருட்களை
அடைய வேண்டும் என்று செல்கிறது, இவ்வாறு சாத்தியத்தின் மீதுள்ள ஆசை, சாதனத்தின் மீதுள்ள ஆசை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

ஸஹ ஏவ ஆத்மா நேதி நேதி – அனைத்து அனாத்மாக்களும் நீக்கப்பட்டு, நீக்கமுடியாமல் மீதி இருப்பதுதான் ஆத்மா.
இந்திரியங்களால் கிரகிக்கமுடியாதது, எதனோடும் ஒட்டாது, அழிக்க முடியாததாக இருப்பது.

ஞானியானவன் ப்ராரப்தம் இருக்கின்றவரை இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்.
இரண்டுவிதமான எண்ணங்கள் அவனை பாதிப்பதில்லை. இதனால் தூண்டப்பட்டு தேகத்தின் அபிமானத்தால்
நான் பாவத்தை செய்தேன் என்கின்ற எண்ணமே வருவதில்லை. நான் புண்ணியத்தை செய்தேன் என்றும் நினைப்பதில்லை.
இவன் புண்ணிய-பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றான். இவனால் செய்யப்பட்டதும், செய்யப்படாததும் அவனை பாதிக்காது.
சாஸ்திரம் விதித் த நித்ய கர்மங்களை செய்யாமல், செய்து கொண்டிருப்பதாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பிரம்மவிதி அகர்ம சம்பந்தி – பிரம்மத்தை அடைந்தவனுக்கு எந்த கர்மத்தில்லும் சம்பந்தமில்லை.
கர்மபலனிலும் சம்பந்தமில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாதிருப்பான். ந தபத் – வாட்டுவதில்லை.

ஸ்லோகம்-23
ஏஷஹ மஹிமா – இந்த பெருமையானது அவன் முக்தியுடன் இருப்பதே. இது ஆசையற்றது, அழிவில்லாதது, என்றும் நிலையாக இருப்பதுதான்.
ந வர்ததே கர்மனா – இந்த பெருமையானது செயலினால் மேலும் பெருகுவதில்லை, ஏனெனில் அவன் அடைந்திருப்பது
மிகவும் உயர்ந்த நிலை அதற்கு மேலே ஒன்றும் இல்லை.
நே கனியான் – அது செயல் செய்வதினாலும் குறைவதில்லை. அவன் அடைந்திருக்கின்ற நிலை ஜீவன் முக்தநிலை,
அதுவே அவனது சுபாவமாகவே மாறியிருக்கிறது. இதுவே ஒருவன் அடைய வேண்டிய செல்வம், தனது ஸ்வரூபத்திலிருப்பதுதான், அதுதான் நிலையானது.
தஸ்ய ஏவ – மேற்கூறிய பெருமையுடைய முமுக்‌
நமக்கு லட்சியத்தில் பெருமை தெரிந்தால்தான் அதை அடைய வேண்டுமென்ற ஆசை, உற்சாகம் உண்டாகும்.
தம் விதித்வா – இந்தப்பெருமையை உணர்ந்த நிலையானது நம்மை அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும்.
எஸிப்யதே கர்மணா பாபகேன – அவனும் பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மங்களிலிருந்து விடுபடுவான்.

சாதனப்பகுதி:
தஸ்மாத் ஏதம் விது3: எந்தக்காரணத்தால் இங்கு சொல்லப்பட்ட பெருமையை அடைய வேண்டுமோ அதை உணர்ந்து
முமுக்‌ஷுயுடையவன் விவேகம், வையாக்கியம், முமுக்‌ஷுத்வத்தை அடைவான்.
சாந்தஹ – மனக்கட்டுப்பாடு, அந்தக்கரண கட்டுப்பாடு. அந்தக்கரணத்தை அமைதிபடுத்த வேண்டும். சஞ்சலங்களை நீக்கி அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
தாந்தஹ பத்து இந்திரியங்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
உபரதஹ தேவையற்ற செயல்களிலிருந்து விலகுதல், பொறுப்புக்களிலிருந்து விலகுதல், முறைப்படி
சந்நியாஸம் எடுத்துக்கொள்ளுதல், ஸ்வதர்ம அனுஷ்டானம்.
திதிக்‌ஷா இருமையை சகித்துக்கொள்ளுதல், இருமையினால் நாம் தாக்கப்படாதவனாக் இருத்தல், அதை ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளுதல்.
சமாஹித: எடுத்துக் கொண்ட லட்சியத்தில் நிலையாக நிற்றல், அதில் பொருந்தி செயல் படுதல்,
இதற்கு தடையாக இருப்பவைகள் சோம்பல், உறக்கம், செய்வதறியாது இருத்தம் (மனோரதம்)
பூத்வா இவ்விதமான இருப்பவனாக செயல்பட்டு
ஸ்ரத்தா வித்தா – சிரத்தையுடைய்வனாக இருக்க வேண்டும்,. குரு, வேதாந்த வாக்கியங்களில் உள்ள நம்பிக்கை.
ஆத்மனி ஏவ ஆத்மானாம் பஷ்யதி: தன்னுடைய ஸ்தூல சூட்சும சரீரத்திற்குள்ளேதான் சைதன்ய ஸ்வரூபத்தை ஞானி பார்க்கின்றான்.
ஸர்வம் ஆத்மானம் பஷ்யதி: தன்னையே அனைத்துமாக பார்க்கின்றான். தன்னிலே அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கின்றான்
நைனம் பாப்மா ந தரதி ஆப்னோதி:. இந்த ஞானியை பாவ-புண்ணியங்கள் வந்தடையாது. இந்த ஞானியை பிராரப்தம், சஞ்சிதம்
ஆகியவற்றில் உள்ள கர்மபலன்களான பாவ-புண்ணியங்கள் ஒன்றும் செய்யாத நிலையை அடைந்து விடும்.
இவன் அடைந்த ஞானத்தால் பாவ-புண்ணியத்தினால் விளையும் இன்ப-துன்பங்களை எரித்து விடுகின்றான்.
விபாபஹ: அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் சென்று விடுகின்றன.’
ஸர்வம் பாப்மான தரதி: அனைத்து பாவ-புண்ணியங்களையும் கடந்து விடுகின்றான். இங்கே பாப்மானம் என்ற சொல் பாவத்தையும், புண்ணியத்தையும் சேர்த்து கூறப்படுகின்றது.
விரஜஹ: அசுத்தத்திலிருந்து வெளி வந்தவன்; அறியாமையிலிருந்து வெளியே வந்தவனாக இருக்கின்றான்.
அவிசிகித்ஸஹ: அனத்து விதமான சந்தேகங்களும் நீங்கியவனாக இருக்கின்றான்.

இப்படிபட்ட லட்சணங்களை உடையவனாக இருப்பவன் பிரஹ்மனாக, முக்தனாக இருக்கின்றான். இதுதான் பிரஹ்மத்தின் ஸ்வரூபம்.

ஏனம் பிராபிதஹ அஸீத் என் உபதேசங்களின் பலனை நீ அடைந்து விட்டாய். அந்த பிரஹ்மத்தை அடைந்து விட்டாய்
என்று ஜனகரை பார்த்து, யாக்ஞவல்கியர் கூறினார்.

ஜனகர், “பகவானே! சம்சாரியாக இருந்த நான் முக்தனாகி விட்டேன். இதற்கு கைம்மாறாக இந்த விதேஹ நாட்டையே
தங்களுக்கு காணிக்கையாகி கொடுக்கிறேன். என்னையும் இந்த நாட்டுடன் தங்களுக்கு சேவை புரியும் சேவகனாக கொடுக்கிறேன்.
இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் ஞானத்தை அடைந்து விட்டார் என்று குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்-24
ஸஹ வை ஏஷஹ : அந்த நிர்குண பிரம்மமே இந்த ஜீவாத்மா
மஹான் அஜஹ : பூரணமானது, பிறப்பற்றது
நானே பிரம்மன் என்பதை கிரகிக்க முடியவில்லையென்றால் சகுண பிரம்மத்தை தியானத்தை பரிந்துரை செய்யப்படுகிறது.
அனாதஹ: அந்த பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளுக்குள் இருந்து கொண்டு உணவை உட்கொண்டு இருக்கிறது.
நானே அனத்து ஜீவராசிகளுக்குளிருந்து கொண்டு உணவை உண்ணுகிறேன்.
வஸ்தானஹ: கர்ம பலனை தருபவர் ஈஸ்வரந்தான் என்று தியானிக்க வேண்டும்.
ய ஏவம் வேத: யார் இவ்வாறு ஈஸ்வரனை உபாஸனை செய்கிறார்களோ
விந்ததே வஸீ : அவர்கள் செல்வம், பொருள், ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கப்பெறுவார்கள்.
வஸ யோக்யதா – அருட்செல்வம், மனத்தூய்மையடைவார்கள்..
மோக்‌ஷத்தை லட்சியமாக கொண்டவர்கள் ஞானத்திற்கு தகுதியடைகிறார்கள்.

ஸ்லோகம்-25
இந்த மந்திரத்தில் பிரம்ம ஸ்வரூத்தைக் கூறி பிரம்மத்தை அடைதல், மோட்சத்தை அடைதல் என்ற இரண்டுமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.
ஸஹ வை ஏஷஹ: அந்த பரமாத்மாவே இந்த ஜீவாத்மா
அஜரஹ: மாற்றமில்லாதது;
அமரஹ: மரணமற்றது,
அம்ருதஹ: என்றும் உள்ளது;
அபயஹ: பயமற்றது
வர்ஜிதஹ: இப்படிபட்ட ஆத்ம ஸ்வரூபம்தான் பிரம்மம்.
அபயம் வை பிரஹ்மா: சம்சாரமற்றது பிரம்மம், பயம்தான் தலையாய சம்சாரம்; பயமற்ற நிலையான ஸ்வரூபம்.
பகவான் எப்பொழுதும் ஐஸ்வர்யத்துடன் பயத்தையும் சேர்த்துக் கொடுப்பார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது
எந்த வகையான ஐஸ்வர்யத்தையும் அடைந்தாலும் அதனுடன் பயத்தையும் சேர்த்துதான் அடைகிறோம்.
ய ஏவன் வேத: யார் இந்த ஞானத்தை அடைகிறார்களோ
அபயம் வை பிரம்ம பவதி: அவர்கள் அபயமான பிரம்மத்தையே அடைகிறார்கள்.

பகுதி-5 :மைத்ரேயி பிராமனம்
இந்தப்பகுதியானது மிகமுக்கியமானது எனவே ஏற்கனவே இது விளக்கப்பட்டாலும் மீண்டும் இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகிறது.
இதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. நமக்கு சாத்தியம் போல் தெரிவதெல்லாம் பொய் என்று விளக்கப்படுகின்றது.
2. சாத்திய தரிசனம் – ஆத்மாதான் நாம், எனவே நம்மைத்தான் அடைய வேண்டும்.
3. சாதனம்: ஆத்மாவை அறிவதற்கு உதவும் வழிகளான, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளைக் கொண்டு ஆத்மாவை அடையலாம்.
4. மோட்ச ஸ்வரூப விளக்கம்
5. ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பவர்
6. ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது
7. சிதாபாஸத்தினுடைய ஸ்வரூப விளக்கம்
8. சித் நித்யம், சிதாபாஸன் வெறும் தோற்றம் (பிரதிபிம்பம்) என்று விளக்கப்பட்டு இருமை நீக்கப்படுகிறது

சந்நியாஸ விசாரத்தின் சாரம்.
* சந்நியாசத்தை அந்தரங்க சாதனமாக கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கின்ற சாதனம்.
இதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதற்கும், ஞானத்தை அடைவதற்கும் உதவியாக இருப்பது.
* கர்மயோக பகிரங்க சாதனம் – மனதை தூய்மையாக்கி ஞானத்தை அடைவதற்கு தகுதிப்படுத்துகிறது
* மோட்சத்திற்கு ஞானமானது சாக்‌ஷாத் சாதனம். நேரிடையான சாதனம்
* வேதங்கள் சில கர்மங்கள் விதித்துள்ளது. சந்நியாஸத்தில் இவைகளை விடவேண்டிய நிலை வரும்போது
குற்ற உணர்வு வரும் போது வேதமே இவ்வாறு சொல்லி இருப்பதால் நாம் அந்த உணர்வு அடைய தேவையில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

விசாரம்:
கேள்வி: உயிரோடு இருக்கும்வரை அக்னிஹோத்ர யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். இவன் இறந்து புதைக்கும்போது
அவன் பயன்படுத்திய யாக பாத்திரங்கள் அந்த உடலோடு சேர்த்து புதைக்க வேண்டும்.
எனவே ஒரேயொரு ஆஸ்ரமம்தான் இருப்பதுபோல் தோன்றுகிறது. சந்நியாஸ ஆஸிரமத்தை விட்டுவிடலாம்.
பதில்: அவ்வாறு செய்ய முடியாது. சந்நியாஸ ஆசிரமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டும் சமமாக இருக்கட்டும்
கேள்வி: யாருக்கு கர்ம்ம் செய்ய தகுதியில்லையோ அவர்கள் சந்நியாஸத்திற்கு செல்லலாம்.
பதில்: யார் மோட்சம் என்ற லட்சியத்தை அடைய உறுதி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆசிரமம்.
கர்மத்தை விட்டுவிடுபவர்களுக்கு அல்ல, அதிக சாதனையை செய்ய வேண்டிய ஆசிரமம் இது.
கர்மத்தை செய்ய தகுதியுடையவர்கள்தான் சந்நியாசி ஆகின்றான். கர்மகாண்டம் அவித்யாவில் ஆசை உடையவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது.
வைராக்யம் வந்தவுடன் சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளலாம். சந்நியாசத்தையும், இல்லறத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது.
இரண்டும் வெவ்வேறு தர்மத்தை பிரதானமாக உடையது. சந்நியாஸம் யம பிரதானமானது, இல்லறம் நியம பிரதானமானது.

இரண்டு வகையான சந்நியாசம் இருக்கின்றது. அவைகள் வித்வத் சந்நியாசம், விவிதிஷா சந்நியாசம்.
முதல் வகையானது அபரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு, அடுத்த வகையானது பரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு என்று கூறப்பட்டிருக்கிறது.

————

பகுதி-6 : வம்ச பிரமாணம்
இதில் மூன்று மந்திரங்கள் இருக்கிறது. இவைகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் பெயர்களை கூறுகிறது.
இந்த பெயர்களை உச்சரிப்பதாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: