ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ நாம அமுதம் –ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ராமானுஜ நாம அமுதம்
ஒன்பது கோணங்கள்
1-கற்பகமாய்
2-கார் முகிலாய்
3-காவலாய்
4-சேம வாய்ப்பு
5-அற்புதமாய் ஆரமுது
6-ஆளுமை
7-உறு துணை
8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
9-பரம கதி -உபாய உபேயம்

நவ தானியங்கள் நவ நிதி நவ கிரந்தங்கள் நவ ரத்தினங்கள் -நவ துவாரம் போக்கி

108-1-2-3-ஓன்று மடங்கு ஓன்று பெருக்கி இரண்டு மடங்கு இரண்டு பெருக்கி மூன்று மடங்கு மூன்று

——–

1-கற்பகமாய் –53- அத்புதம் -என்னை ஆளவந்த கற்பகம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

சகல அபேக்ஷிதங்களையும் அபேஷா நிரபேஷமாக
ராமானுசா சொல்லிக் கொண்டே இருந்தாலே தானே அளிக்கும்
வந்த கற்பகம் -நித்ய விபூதியில் இருந்து லீலா விபூதிக்கு எழுந்து அருளி தேடி வந்த கற்பகம்
மோஷ பிரதம் -உபய விபதி உடையவர்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32—பட்டியல் –

பொருந்திய தேஜஸ் -ஸ்வரூப அனுரூப பராபிபவன தேஜஸ்ஸூ
பொறை -ஷமா
திறல் -சாமர்த்தியம் -பகவத் பாகவத ஆச்சார்யர் விஷய அஹம் சர்வம் கரிஷ்யாமி செய்ய மனா வலிமை
புலன் அடக்கம்
நல்ல திருந்திய ஞானம் –
செல்வமும் சேரும் -வேத வேதாந்த பாண்டித்யம் கைங்கர்ய ஸ்ரீ –

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43—இன்னும் பல

சுரக்கும் திருவும் உணர்வும் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும்
அமுதினிலும் ஆற்ற இனியன்
அண்ணிக்கும் அமுதூறும் நன் நாவுக்கே -பக்தாம்ருதம்
இருவினை பற்று அற ஓடம்
ராம -ரா இரண்டாவது -ம ஐந்தாவது -ராம பத்து -மூன்று தடவை 1000
ஆறு எழுத்துக்கள் வேண்டாம் ராமானுஜ சதுர அக்ஷரீ

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தவம் தரும் -ஸத்யமே -அதுக்கும் மேல் தபஸ் தமம் சமம் தானம் வர்ணாஸ்ரம அனுஷ்டானம்-
மக்கள் பேறு -அதிகம் கூடாதே -அக்னி ஹோத்ரம் -திருவாராதனம் -மானஸ ஆராதனம் -மாதவன் தெய்வம் நாட்டி –
தஸ்மாத் நியசம் அதிரிக்த -சமர்ப்பித்தல் – இத்யாதி -ஆருணர்
ப்ரபன்னன் கரைந்து அஞ்சினால் நாஸ்திகனாம் அத்தனை
ப்ரபந்ந காயத்ரி -மனப்பக்குவம் வளர்க்கும்
செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ
தாகவும் த்வரையும் தரும்
பாற்றி தரும் -கர்மாக்களை பொடி பொடி ஆக்கும்
பரம் தாமம் பரம ஆகாசமும் தரும் –

————–

2-கார் முகிலாய்
வசிஷ்டர் சண்டாள விபாகம் அல்லாமல்
கற்பகம் தேவர்களுக்கு மட்டும் என்று இல்லையே
25- காரேய் கருணை ராமானுசா
26-விளங்கிய மேகம்
82-ராமானுஜன் என்னும் சீர் முகிலே

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

அருள் மழை
வேதக்கடல் அருளிச் செயல்கள் கடல்
மும்மாரி
ரஹஸ்ய தத்வ த்ரயம்
கைம்மாறு கருதாமல் -ஆசை உடையாருக்கு வரம்பு அறுத்தார்
முக்தி -தமிழ் நாடு தவம் ஈன்றதே பாரதி தாசன்
பல்கலையோர் தாம் மன்னா -முத்துக்கள் பூஷணம்
மேகம் பயிர் விளைய வானம் பார்த்த பூமி -நான் வானம் நீ பூமி தாரணி தேவி ஆகாச ராஜன் -கல்யாண மந்த்ரம்
கணவன் அன்பு மனைவிக்கு பெரியது –
சரணாகதி பயிர் முளைக்க
பக்தி உழவன் -கார்யகரம் ஆக இந்த மேகம்

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

அத் தானம் கொடுப்பது -சரண் கொடுத்தே –
ஞானம் கனிந்த நலம் -பக்தி முத்த அவன் –
இவரோ தகவு என்னும் சரண் -கருணையே ஒரே புகல்
கஷ்டம் வேண்டாம் இஷ்டம் பட்டாலே போதும்
வண்ணான் -இவனுக்காக அவனைப் பொறுத்து அருள வேணும் –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

—————–

3-காவலாய்
வந்தாய் போல் வாராதாய் ஆகுமே
வெள்ளக்கேடும் உண்டாக்கும்
காவலான மேகம் –
21-முகில் என்று -ராமானுஜன் என்னைக் காத்தனனே

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

அஸ்மத் சரீர -மட்டம் -அந்த ஸ்ரீ வைகுண்டம் -நீசனான அடியேனையும் -என்று கூட சொல்லத்தெரியாத
அதிகாரம் இல்லாதாருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் –மயலே பெருகும் ராமானுசன் –
அருவினை எவ்வ்வாறு என்னை அடர்க்கும்-சிம்மம் கண்ட ஸூத்ர மிருகம் போல் ஓடுமே -ராமானுச நாம மஹிமை

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-

அரங்கனும் தன் சரண் தந்திலன் -தான் அது தந்து -வந்து எடுத்தனன் அன்றோ
ந கர்மணா ந ப்ரஜயா தனேந த்யாகேன –அம்ருதத்வம் -ஸ்ருதி -ஸந்யாஸத்தால் -மட்டுமே
அந்தணர் ஆண் மட்டுமே சந்நியாச அதிகாரி –
ஸூய ரக்ஷணம் பொறுப்பு துறப்பதே சிறந்த துறப்பு – சம்யக் நியாசம் -நன்றாக விடுவதே சன்யாசம் -சர்வாதிகாரம் –
அனைத்து உலகும் வாழப்பிறந்த ராமானுசா -ஜெகதாசார்யர் –

———–

4-சேம வாய்ப்பு
ஆபத்தனம் -சரியான காலத்தில் ரக்ஷணம் -fixed deposit

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ராமானுஜன் என் தன் சேம வைப்பே
பாணன் த்ருஷ்டாந்தம் –
மனம் வங்கி நாக்கு நாமம் சொல்லி slip -deposit வைக்க

———

5-அற்புதமாய் ஆரமுது
ஆபத்து வந்தால் சொல்லுகிறோம் -யாதானும் சொல்லி நீங்கும் விரதம்
ஆரா அமுது அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-எனக்கு ஆரமுதே

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

————-

6-ஆளுமை
சுவை -இன்பம் -வழி நடத்துமா
ஆளுமையாகவும்

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

உன் வண்மை -முக்கரணங்களையும் ஈடுபத்தி அருளி –
நா இருந்து எம் ஐயன் ராமானுசா என்று அழைக்கும் -சத்தைக்காக –
கையும் தொழும் -கண் கருதிடும் –
அழகைக் காட்டி –

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

——–

7-உறு துணை
எங்கோ இருந்து ஆளாமல்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

வேதம் பாற்கடல் -திருவாய் மொழி பக்தாம்ருதம் -பெரியவர் மதுர கவி சீரை

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

ஆச்சார்ய நிஷ்டை யையே -உயிர்கள் எல்லாம் உய்வதற்கு கொடுத்து அருளிய -ருசி உடையோருக்கு எல்லாம் -உபதேசித்து அருளி –
இதுவே உற்ற துணை -கைப்பிடித்து அழைத்து செல்வார்
விபீஷண -அது ராமர் கோஷ்ட்டி இது ராமானுஜர் கோஷ்ட்டி என்றாரே பிள்ளை உறங்கா வல்லி தாஸர் –
திடமான ஸஹாய புத்தர் -ஸ்ரீ வைகுண்டம் அருளும் வரை பர்யந்தம்

——————-

8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
எக்காலத்திலும் வழித் துணை

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

மா நிதி
பிரளயத்தில் அழியாத நிதி -வி லக்ஷணம் -அப்ராக்ருதம் -அத்ர பரத்ர சா அபி

————

9-பரம கதி -உபாய உபேயம்
ஒன்றை அறிந்தால் ஒன்பதையும் அறியலாம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
முதலிலும் முடிவிலும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: