ஸ்ரீ ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய ஸாஸ்த்ர ஏக ஸமதிகம் யஸ்ய -அசிந்த்ய -அப்ரமேய -அத்புத -ஸக்தி -யுக்தஸ்ய -பரஸ்ய -ப்ரஹ்மண -ஸ்ரீ சர்வேஸ்வரேஸ்வரனது – ஸர்வ சக்தி -அத்புத சக்தி –

ஸ்ரீ ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய ஸாஸ்த்ர ஏக ஸமதிகம் யஸ்ய -அசிந்த்ய -அப்ரமேய -அத்புத -ஸக்தி -யுக்தஸ்ய -பரஸ்ய -ப்ரஹ்மண
ஸ்ரீ பாஷ்ய தீப சாராதி களிலே நூற்றுக் கணக்கான இடங்களில் ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் இவை –

ஸ்ரீ வேதத்தாலே மட்டும் அறியப்படுபவன்
சாஸ்த்ர ஞானம் பஹு கிலேசம் புத்தேஸ் சலன காரணம் உபதேசாத் ஹரிம் புத்தவா -என்று
தத்வ தர்ஸிகள் வெண்ணெய் திரட்டி ஊட்டுமா போல் ஸூ லலிதமாக பூர்வாச்சார்யர்களையுடைய
ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே தத்வ நிர்தேசம் செய்வதே ராஜ மார்க்கம் –

அந்தர் பஹிஸ்த தத் ஸர்வம் -உள்ளும் வெளியிலும் கரந்து எங்கும் பரந்துளன் –
அணு பதார்த்தங்களும் உள்ளே தன்னுடைய விபுவான ஸ்வரூபம் அடங்க வியாபித்திறகு உள்ளான் –
ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி உள்ளான் –
இந்த வியாப்தி விஷயமே அத்புத அகடி கடநா ஸாமர்த்யம்

வஹஸி ணிமித்தணம் வி அப்புய சத்தீ வஹஸி நிமித்த த்வம் அபி அத்புத ஸக்தி —
உபாதான நிமித்த ஸஹகாரி -த்ரிவித -காரணத்வம்

ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய ஸாஸ்த்ர ஏக ஸமதிகம் யஸ்ய -அசிந்த்ய -அப்ரமேய -அத்புத -ஸக்தி -யுக்தஸ்ய -பரஸ்ய -ப்ரஹ்மண
ஸ்ரீ பாஷ்ய தீப சாராதி களிலே நூற்றுக் கணக்கான இடங்களில் ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் இவை –

பரா அஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே –ஸ்ருதி வாக்யம்

விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை ஸ்ரீ திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார்.
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே–6-3-1-
ஸம்பத் தாரித்ய பாவாத் -அகடி தகடநம் ப்ராஹ கிருஷ்ணம் சடாரி -தாத்பர்ய ரத்னாவளி சுருக்கம் இத்திருவாய் மொழிக்கு –

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-
இப்படி நல்லாருக்கு நல்லனாய் தீயோர்க்குத் தீயனாய் இருக்க அகடி தகடநா சாமர்த்தியம் வேண்டாவே
இத்திருவாய் மொழியில் -ஸர்வ நியந்த்ருத்வம் -என்று ஸ்ரீ பிள்ளான் வழியில்
ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்திகள் இல்லாமல் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளை அடி ஒற்றியே அருளிச் செய்துள்ளார் –

பகவத் ஸ்வரூபம் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களிலும் பரிபூர்ணமாக வியாபித்து உள்ளது –
பக்தஸ்ய தா வசிதோ பரிபாலயா –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து -அனைத்து தூண்களிலும் வியாபித்து இருந்தான் என்பது அதி வாதம் இல்லையே –
வஸ்து தோறும் பரி ஸமாப்தி ஸ்வரூபம் உண்டே –
நியாய ஸித்தாநஞ்சத்திலும் -ஸர்வத்ராபி பூர்ண ஏவ என்று சாதித்த உடனே
ஓர் இடத்தில் பரிபூர்ண ஸமாப்தியாய் இருக்க வேறே ஓர் இடத்தில் எவ்வாறு இருக்க இயலும் என்ற ஆஷேபம் பிறக்க
அதற்கும் சமாதானம் அருளிச் செய்கிறார் அன்றோ –

ஸ்ருதியும் ஆத்மநி திஷ்டந் -என்ற அளவுடன் நில்லாமல் ஆத்மநி அந்தர இத்யாதிகளை சொல்லிற்றே –
எள்ளில் எண்ணெய் இருக்கிறது என்றால் எள்ளின் உள்ளே இருப்பத்தைச் சொல்லிற்றே அன்றி வெளியில் இருப்பத்தைச் சொல்லிற்று இல்லையே —
தீ திண்ணையில் இருக்கிறது என்றால் திண்ணை மேல் இருப்பதையே சொல்லிற்றே அன்றி உள்ளே இருப்பத்தைச் சொல்லிற்று ஆகாதே –
எனவே ஆத்மநி திஷ்டந் – ஆத்மநி அந்தர -இரண்டு படியாகவும் ஸ்ருதி ஓதிற்று –

ஜாதி வியக்தி தோறும் பரி சமாப்யா வர்த்திக்குமா போல் எல்லாவற்றிலும் தனித்தனியாகக் குறைவற வியாபித்து நிற்கும் என்றால்
அசேதனத்துக்கு அது கூடும் -பரம சேதனனுக்கு அது கூடுமோ என்று சங்கித்து விப்ரதிபத்தி பண்ணிப் போருவார்கள்
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றினில் பரி சாமாப்யமாக வர்த்தித்தால் மற்ற ஒன்றில் அது காண முடியாது என்பது
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தது என்று ஆகுமே –
ஸ்ருதி ப்ரகாசரும் -ஏகஸ்மின் ஸர்வ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா
நரசிம்ஹத்வம் -விருத்தே வையாக் ஸூ கடித சமா நாதி கரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ர-ஸ்ரீ பராசர பட்டர்

ஸர்வத்திலும் சிறியனான ஜீவாத்மாவுக்கு உள் என்று ஒரு பிரதேசம் இல்லை –
விபுக்களான காலாதிகளுக்கு புறம்பு என்ற ஒரு பிரதேசம் இல்லை –
இப்படி இருக்க ஈஸ்வரன் உள்ளும் புறமும் வியாபித்து நிற்கிறான் என்பது கூடுமோ என்னில்
இப்படிச் சொல்லுகிற வாக்யங்களுக்கு சர்வ த்ரவ்யங்களிலும் ஈஸ்வரன் இல்லாத பிரதேசம் இல்லை என்கையிலேயே தாத்பர்யம் –
சர்வ வியாப்தி சொன்ன இடத்தில் -அந்தர் வியாப்த்தியாவது -நிர் அவயவங்களோடே ச அவயவங்களோடே
வாசி அற அவை உள்ள இடத்தில் இவன் இல்லை என்னாத படி பிரதிகாதம் அற்று நீங்காதே நிற்கை

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: