ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்–

ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்

இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார்
என பல பெயர்களால் வழிபடப்படுகிறார்.
அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார்.
இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார்.
வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில்,
ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி
மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஸூந்தரனையும் ஸூந்தரியையும் ஸூந்தரனான திருவடி சேர்த்து வைத்த விவரணமான
ஸூந்தர காண்டத்தில் எது தான் ஸூந்தரமாக இல்லாமல் உள்ளது
சுந்தர காண்டம் 2885 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
சமஸ்கிருத வார்த்தையான சுந்தர என்பதற்கு தமிழில் அழகான என்று பொருள்.
இராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் மகிமை மிகவும் முக்கியமானதாகும்.
கடலானது சம்சார சாகரத்தைக் பிரதிபலிக்கிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், பரமாத்மாவையும்,
பூமா தேவியின் அம்சமான சீதாபிராட்டியையும், ஜீவாத்மாவுடன் ஒப்பிட்டு கூறுகிறார்.
ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியை குரு அல்லது தெய்வீக ஆசிரியராக குறிப்பிடுகிறார்.

தேவ பாஷை சமஸ்க்ருதத்தில் பேசாமல் மானுஷ மதுர பாஷையில் திருவடி ஸ்ரீ சீதாபிராட்டி இடம் பேசினார் -வால்மீகி
இவர் நவ வியாகரண பண்டிதர்
அகஸ்தியர் இடம் கற்றாள் பிராட்டி
பிராட்டி விக்ரமத்தில் திருவடி போலவும் சாமர்த்யத்தில் நரசிம்மர் போலவும் ஞானத்தில் ஹயக்ரீவர் போலவும்
பலத்தில் வராஹர் போலவும் ராம பக்தியில் தானாகவும் -இருக்கிறாய் -ஸூந்தர காண்ட ஸ்லோகம் உண்டே
பஞ்ச முக ஆஞ்சநேயாராகவே பிராட்டி கண்டாள்

த்ருஷ்டா ஸீதா -கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால் –
களி நடம் புரியக் கண்டேன்
கற்பு -நல் பிறப்பு -பாரதந்தர்யம் –
சீதா கண்களால் பார்த்தேன் -காட்டவே கண்டார்
ராம தூதனாக வாலில் நெருப்பு பெற்றார்
சீதா தூதனாக ராம ஆலிங்கனம் பெற்றாரே –

ஆச்சார்ய பரம் -முக்குணங்கள் ராவணன் கும்பகர்ணன் விபீஷணன் -மனஸ் தச ஞான கர்ம இந்திரியங்கள் –
சீதா ஜீவ -ராமர் பரமாத்மா -கடகர் -திருவடி –
சம்சாரம் -இலங்கை -அசோகவனம் சரீரம் ஒன்பது வாசல் –
கணையாழி -பஞ்ச சம்ஸ்காரம்
உப நயனம் – ஆச்சார்யர் அருகில் அழைத்து செய்வது
உப ந்யாஸம் -அருகில் நல்ல கருத்துக்களை சமர்ப்பித்தல்

அஞ்சிலே ஓன்று பெற்று அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி -(ஆர் உயிருக்காக ஏகி -ஆர் உயிர் காக்க ஏகி )
அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
பஞ்ச பூதங்கள் பரமாக சாதாரணமான அர்த்தம்
தாப -தீயில்
திருமண -ஆகாசம்
மந்த்ர உபதேசம் -காற்று
தாஸ்ய நாமம் சேவிக்க பூமி
திருவாராதனம் -நீர்
ஸம்ப்ரதாய அர்த்தமாக -அர்த்த பஞ்சகம் -சரணாகதி மார்க்கம் –

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம்
பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இராம – இராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான்.
ஹனுமார், இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார்.
ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாள லோகம் கூட்டிச் சென்றான்.

அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாள லோகம் சென்றார்.
அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான்,
மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார்.
உடனே, தன் முகத்துடன்,
ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும்
கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார்.
இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான். பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.

மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார்.
அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது.
அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையே, மாதிரி வடிவமாக எடுத்து கொள்ளப்பட்டு, இந்த தலத்தில், மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயரத்தில்
வடிவமைக்கப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில்
மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது,
பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அறக்கட்டளையின் நிறுவனர்,
குருதேவ் பூஜ்யஸ்ரீ மந்த்ரமூர்த்தி தாசன் S. வெங்கடேச பட்டாச்சாரியார் சுவாமிகளால்,
2004 –ம் வருடம் ஜூலைத் திங்கள் 6 –ம் நாள் மகாபிரதிஷ்டை, செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மையை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,
மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகத்திலேயே, இங்கு மட்டும் தான் மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால்,
இத்தலம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.

குருதேவ் தனது குருவின் மூலம், தனக்கு கிடைத்த, சக்தி வாய்ந்த பஞ்ச முகங்களான,
ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீமஹாவீர கருட சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீஹயக்ரீவ சுவாமி
ஆகியோரின் மூல மந்த்ரங்களின் பலனானது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற
அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவே, இங்கு ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

மந்த்ர சாஸ்த்ரத்தில் வல்லவரான குருதேவ், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடைந்த துயர்களை,
சிறப்பு பரிகாரங்களைச் செய்து களைந்துள்ளார்.
அவர், காஞ்சி மகாபெரியவாளிடமிருந்து, மந்த்ரமூர்த்தி பட்டம் பெற்ற ஸ்ரீ ரெங்கசுவாமி பட்டாச்சாரியாரை
தனது குருவாக அடைந்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மண்டபம் கட்டி முடித்த பிறகு, மூல மந்த்ரங்களை, பஞ்ச முகங்களுக்கு எதிரே, சுவற்றில் செதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், பக்தர்கள் எவரும், இந்த மூல மந்த்ரங்களை உரிய முறையில் ஜெபித்து, அதற்கான பலனை எளிதில் அடையலாம்.
இது சாத்தியமாவதற்கு, குரு பரம்பரை மகா சக்தியானது அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பஞ்சமுகங்களின் முக்கியத்துவம்
கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது,
நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.

தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது,
நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.

மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர கருட சுவாமி முகமானது,
தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன்,
கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.

வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது,
நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன்,
அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.

மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து
காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது

மகா பிரதிஷ்டையின் சிறப்பம்சங்கள்
மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயர விஸ்வரூப வடிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது,
ஒரே கல்லில் (பச்சை நிற கிரானைட் நிறம் மற்றும் 36’ X 20’ X 10’ அளவு) கர்நாடக மாநிலத்திலுள்ள
ஹசன் என்ற இடத்தில் செதுக்கப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டது.
ஒட்டு மொத்த உலகத்திலேயே மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே தலம்
மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடமானது புராண காலங்களில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும், அகத்தியர் முதலான மாமுனிவர்கள் தவம் செய்த இடமாகவும் அறியப்படுகிறது.

அறக்கட்டளையின் முக்கிய பணிகள்
அன்னதானம்
வேத பாடசாலை அமைத்தல்/ பராமரித்தல்
மந்த்ர, யந்த்ர மற்றும் தந்த்ர சாஸ்த்ரங்களை பரவலாக்கல்
தேவைப் படும் ஏழை எளியோர்க்கு கல்வி பயில உதவி செய்தல் மற்றும் உரிய மருத்துவ வசதி செய்து கொடுத்தல்
கோசாலை அமைத்தல்/ பராமரித்தல்
முதியோர் மற்றும் அனாதை இல்லங்கள் அமைத்தல்/ பராமரித்தல்

ஆலய அமைவிடம்
திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மிகவும் புகழ் பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலிருந்து திருவள்ளூர் நகரை அடைவதற்கு புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையமாகும்.
ஆயில் மில் நிறுத்தத்திலிருந்து பக்தர்கள் ஆசிரமத்தை எளிதாக அடைவதற்கு ஆங்காங்கு அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆலய முகவரி
10, தேவி மீனாட்சி நகர், இராஜாஜிபுரம் பகுதி – III, பெரிய குப்பம், திருவள்ளூர் – 602 001. தமிழ் நாடு
தொலைபேசி : +9144-27600641.

—————-

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராம தூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

————-

பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!
1.கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

2.தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

3.மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

4.வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

5.மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

———-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லக்ஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் ஸமேத சீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: