ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-போக்த்ராபத்ய அதிகரணம் : 2-1-5 –(ஒரே ஸூ த்ரம் -2-1-14)

இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்–
நான்காவது-சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம்-1 ஸூத்ரம் —
ஐந்தாவது -போக்த்ராபத்த்யதிகரணம் –1 ஸூத்ரம் —

———–

போக்த்ராபத்ய அதிகரணம் : 2-1-5 :

சரீரம் இருந்தாலும் கூட சரீர நிபந்தனமான ஸுக துக்கங்கள் பிரஹ்மத்துக்கு கிடையாது என்பது அதிகரண சாரம்.
புனரபி ஸாங்கிய : பிரத்யவதிஷ்டதே. மீண்டும் சாங்கியர்களின் ஆக்ஷேபம் இங்கு.
என்னவென்றால் சரீரத்தித்துடன் கூடிய ஜீவாத்மாவுக்கு எப்படி ஸுக துக்க அனுபவங்கள் உண்டோ,
அப்படியே அவைகளை சரீரமாக உடைய பிரஹ்மத்துக்கும் ஸுக துக்கங்கள் தவிர்க்கப் போகாது.
அத்தாலேயே கர்மானுபந்தம் பிரஹ்மத்துக்கு வந்து சேரும். ஆகாகையால் பிரஹ்ம காரியமான சேதநாசேதங்கள்
அந்த பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்பதாக பூர்வ பக்ஷம் –

காரியாவஸ்தையில் உள்ள சிதசித் விசிஷ்ட பிரஹ்மமும் ,
காரணாவஸ்தையில் உள்ள சிதசித் விசிஷ்ட பிரஹ்மமும் வேறு வேறு என்பது இத்தால் பொருந்தாது என்பதாக அவர்களுடய ஆக்ஷேபம்.

சூத். 2-1-14 :: போக்த்ராபத்தே: அவிபாகஸ்சேத் ஸியாத் லோகவத் ::

ந ஹ வை ஸசரீரஸ்ய ஸத : பிரியாப்ரியயோ :அபஹதி: அஸ்தி |
அசரீரம் வா வஸந்தம் பிரியாப்ரியே ந ஸ்ப்ருசத : (சாந் .8-12-1)

எதுவரையில் சரீர சம்பந்தம் உண்டோ அதுவரையில் ஸு க துக்கங்கள் அழிவதில்லை.
ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் மூன்றும் கழிந்த போதே ஸுக துக்கங்கள் தொடுவதில்லை.
என்பதாக முதல் அத்யாயம் 2ஆம் பாதத்தில் ஆத்மாவை சரீரமாகவும் அதற்கு அந்தர்யாமியான பரமாத்ம உபாசனத்தைப் பற்றி
விசாரிக்கும்போது ஸுக துக்க தோஷங்களால் அவனுடைய உபாஸ்யத்துக்கு ஊறு இல்லை என்பதாக
தெளிவு படுத்திய விஷயத்தை மீண்டும் பூர்வ பக்ஷம் இங்கு சொல்வதற்கு காரணம்

சரீரத்தில் பால்யம், யவ்வனம், மூப்பு, நரை, திரை போன்ற விகாரங்கள் ஆத்மாவுக்கு இல்லையானாலும்,
கர்ம நிபந்தமான ஸுக துக்கங்கள் சரீரத்துக்கு இல்லையாய் ஆத்மாவுக்கு உண்டுபோலே ,
காரண பிரஹ்மமும், காரிய பிரஹ்மமும் வேறு என்ற போதிலும், சரீரமான ஆத்மாக்களுக்குண்டான
சுக துக்க உபபோக்த்ருத்வம் சரீரியான பிரஹ்மத்துக்கு இல்லை என்பது சேராது.

சரீரத்தோடு கூடிய பிரஹ்மம் காரணம் என்று சொன்னால் , ஸுக துக்க தோஷம் தட்டும்.
சரீரமல்லாத (கேவல) பிரஹ்மம் காரணம் என்று சொன்னால், ஜகத்தில் உள்ள அபுருஷார்த்தங்கள் , பிரஹ்மத்துக்கும் வந்து சேரும்,
எப்படி ஆபரண தங்கத்தில் (காரியத்தில்) உள்ள தோஷம் செப்பு கலந்த கட்டி தங்கத்தால் (காரணத்தால்) வந்ததோ அதுபோல.
ஆகவே பிரஹ்ம காரண வாதம் அநுசிதம். பிரதான காரண வாதமே தர்க சம்மதமானது என்பதாக சாங்கியர்களுடைய பக்ஷம்..

போக்த்ராபத்தே :அவிபாக :
சரீரத்தோடு கூடிய பிரஹ்மம் காரணம் என்று சொன்னால் ,
ஸுக துக்க அனுபவ வாசி அற்ற பிரஹ்மமும் ஆத்மாவும் வேறு ஆக முடியாது.

இதிசேத் ஸியாத் லோகவத் –
சரீரம் இருப்பதனாலேயே ஸுக துக்க போக்த்ருத்வம் உண்டாகிறது என்பது தவறு.
காரணம் – ஸுக துக்க அனுபவத்துக்கு புண்ய பாப கர்மா காரணம் அன்றி சரீரம் இருக்கிறபடியால் அல்ல.
பரமாத்மாவுக்கான சரீரம் கர்ம கிருதமான சரீரம் அல்ல. இச்சா கிருஹீத அபிமத உரு தேக : என்று ஸ்வேச்சா கிருஹீத சரீரம்.

ஸயதி பித்ரு லோக காமோ பவதி – சாந். 7-26-2
ஸஏகதா பவதி த்ரிதா பவதி – சாந். 8-2-1
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந் ரமமாண : சாந். 8-12-3
என்றபடி ஆவிர்பூத ஜீவாத்மாவுக்கே துக்கமாகிற அபுருஷார்த்தம் கலசாத ஸ்வேச்சா சரீரம் பிராப்தமாக,
பாபங்கள் இல்லாத தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ள பரமாத்மாவுக்கு
ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபத்தில் சேதனாசேதன விசிஷ்ட சரீரத்தோடு கூடி இருப்பினும், அவனுக்கு கர்மபந்தம் சிறிதும் இல்லையாய் ,
அபுருஷார்த்தம் கலச வழி இல்லை.
எதுபோல என்றால், ராஜ ஆணையை மீறுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் வரும் துக்கம் ,
தவறு செய்கிற பிரஜைக்கொழிய , ராஜாவும் சரீரத்தோடு இருந்தானாயினும்,
தோஷித பிரஜையின் துக்கம் ராஜாவுக்கு லோகத்தில் அந்வயியாது போலே கொள்க.

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே–3-4-10-

தோய்வு இலன்–சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மதயா வியாபித்து நின்றால்
தத் கத தோஷை அஸம்ஸ்ப்ருஷ்டன் -அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.

அசித் கத பரிணாமாதிகளும் சேதன கதமான துக்கித்தவாதிகளும் தட்டாதென்கிற இதுவும் ஸர்வேஸ்வரன் பக்கலிலே கூடலாம் .
இப் பாட்டில் பக்தி உடையார்க்கு அவனைக் கிட்டலாவது என்பாருண்டு.
இதர விஷய சங்கமற்றார்கு அவனைக் கிட்டலாவது. என்பாருண்டு.
அந்திம ஸ்ம்ருதியுடையார்க்கு கிட்டலாம் என்பாருண்டு.
ஸர்வாத்ம பாவம் சொல்லி நிற்கையாலே அவற்றின் பக்கல் தோஷம் தட்டாதான் ஒருவன் என்னுமிடம் சொல்ல வேணும்.
அத்தைச் சொல்லுகிறது என்பர் – எம்பெருமானார்.– 24000 படி.

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

One Response to “ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-போக்த்ராபத்ய அதிகரணம் : 2-1-5 –(ஒரே ஸூ த்ரம் -2-1-14)”

  1. Arunkumar S Says:

    2-1-6 mudhal post panna paduma?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: