இரு கை மா அல்
முக்கை முனிவ
நாற்கை அண்ணல்
ஐங்கை ம் மைந்த
அறு கை நெடு வேள்
எழு கையாள
எண் கை ஏற்றல்
ஒன் பதிற்றுத் தடக்கை மன் பேராள
பதிற்றுக்கை மதவலி
நூற்றுக்கை ஆற்றல்
ஆயிரம் கை விரித்த கைம்மாய மள்ள
பதினாயிரம் கை முது மொழி முதல்வ
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை
நின்னைப் புரை நினைப்பின் நீ அலறு உணர்த்தியோ
முன்னை மரபின் முது மொழி முதல்வ –மூன்றாம் பரி பாடல் –
ஆசான் முன்னோத சீடன் பின்னோதும் முதல் இல்லா முது மொழியான வேதத்தாலே ஒதப்படுபவன்
தன் பெருமை தன்னாலும் அறிந்து பேச முடியாதே –
நான் மறை -அரு மறை -மறை மொழி -முது நூல் -செய்யா மொழி –
எழுதாக் கற்பு -வாய் மொழி -ஸ்ருதி -கேள்வி -ஆரணம் -வேதங்கள்
மறை -மறைக்கும் நூல்
வேதம் -வேதத்தை -அறிவை ஏற்படுத்தும் நூல்
ஒதல் -வேட்டல் -அவை பிறர்ச் செய்தல் -ஈதல் ஏற்றல் -என்று ஆறு புரிந்து ஒழுகல் ஆறு அறம் புரி அந்தணர் -பதிற்றுப் பத்து
அந்தணர் நூற்றும் அறத்திற்றும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் –திருக்குறள் –543
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் –நெய்தல் கலி -9-
அந்தணர் அரு மறைப் பொருள் -பரிபாடல் -1.3-
வேத அங்கங்கள்
1-சிஷை -எழுத்து இலக்கணம்
2-வியாகரணம் -சொல் இலக்கணம் –
3-சந்தஸ் -பா இலக்கணம் –
4-நிருத்தம் -அகராதி –
5-ஜ்யோதிஷம் -வானியல்
6-கல்பம் -சடங்கு முறை
உப அங்கங்கள்
1-மீமாம்ஸை
2-நியாய சாஸ்திரம்
3-புராணம்
4-தர்ம சாஸ்திரம்
5-ஆயுர் வேதம்
6-தனுர் வேதம்
7-காந்தர்வ வேதம்
8-அர்த்த சாஸ்திரம்
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் -பதிற்றுப்பத்து
ஆடு தலையாக விண் ஊர்பு திரி தரும் வீங்கு செலல் மண்டிலம் -நெடு நல் வாடை
ஆடு எனும் சேஷ ராசி தொடங்கி 12 ராசிகளில் சஞ்சரிக்கும் ஆதவனை -ஜ்யோதிஷ ஸாஸ்த்ரம் சொல்லும்
எழுத்து சொல் பொருள் மூன்று இலக்கணங்களையும் தொல்காப்பியம் சொல்லும்
திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல் காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே —
பாண்டிய பேரவையில் அதங்கோட்டு ஆசான் தலைமையில் ஐந்தரம் வட மொழி நூலைக் கற்ற
தொல்காப்பியர் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்
———————
தாமரை மலர்ந்தது -உலகம் பிறந்தது –
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ’ என பொழியுமால், அந்தணர் அரு மறை.-பரிபாடல் – 2– 15
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல
கரு வளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும் –இரண்டாம் பரிபாடல்
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்
நா மா இருவரும் தருமனும் மடங்கலும்
மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயின் பிறந்தவை உரைத்தேம் –மூன்றாம் பரிபாடல் –
அனைத்துமாய் விரிந்த அண்ணல்
வளை நரம் பவ்வம் உடுக்கை ஆக விசும்பு மெய்யாக திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப தீது அற விளங்கிய திகிரியோனே -நற்றிணை
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் நிலனும் நீடிய இமயமும் நீ -முதல் பரிபாடல்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னுயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனைய நின் புகழொடும் பொலிந்தே –முதல் பரிபாடல்
மா அயோயே மா அயோயே மறு பிறப்பு அறுக்கும்
மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மா அயோயே –பரிபாடல் –3-
———
ஐம்படைத்தாலி –சக்கரம் சங்கு கதை வில் வாள் -பஞ்சாயுதங்களைக் கோத்து ஐம்படைத்தாலி சிறுவர்களுக்குக் காப்பு –
நீல நிறத்து அழகார் ஐம்படையும் –பெரியாழ்வார் -1-5-9-
மங்கல ஐம்படையும் -பெரியாழ்வார் -1-5-10-
தாலிகள் ஐந்தும் -புறநானூறு
தாலி ஐம்படை தழுவு மார்பிடை -கம்பர்
——–
முக்கோல் பிடித்த முனிவர்
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய -தொல் காப்பியம்
உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசை இ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல்
செயல் மாலைக் கொளை நடை அந்தநீர் வெவ்விடைச் செலன் மலை ஒழுக்கத்தீர் -கலித்தொகை
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை முக்கோல் கொள்
அந்தணர் முது மொழி நினைவார் போல் -நெய்தற் கலி –
———–
தைந் நீராடல்
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
—————–
கடும் தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலிந்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறா அ அரு நகை இனிது பெற்றிகுமே -புறநானூறு –
அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே–பரிபாடல்-
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும் செங்கண் மா அல்
ஓ எனக் கிளக்கும் கால முதல்வனை
ஏ எ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம் -பரிபாடல் -கருடன் ஸூ முகன் -விருத்தாந்தம்
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால் வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறி கடல் வைத்து நிறுத்து
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இரு வயின் நாண் ஆகி
மிகா அ இரு வடம் ஆழியான் வாங்க –பரிபாடல் -அமுதம் கடைந்த ஆரா அமுதன் –
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்து ஆங்கு -சீவக சிந்தாமணி –
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல நிற வண்ணனும் -கலித்தொகை –
ராகு கேது இடம் இருந்து சந்திரனை விடுவித்த அழகன்
அன்று அமரில் சொற்ற அறவுரை வீழ் தீக் கழுது மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின் -பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட அறம் பொருள் கேட்டு அல்லல்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு –இன்னிலை நூல் பாடல் -ஸ்ரீ கீதாச்சார்யன் உரையே நல் நெறி –
——————
ஓங்கு உயர் வரை இமயத்து உச்சி வா அன் இழி தரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழி தரும் சிறை அடு
கடும் புனல் அன்ன -நற்றிணை –369–கங்கை வினை தீர்க்கவே இறங்கினாள்
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டு அரக்கன்
போரில் அகப்பட்டான் நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல் -பழ மொழி நானூறு –174-தர்மமே உருவான ராமர் -அதன் வலிமையாலே இராவண வதம்
பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து இலங்கைக் கிறைவற்கு இளையான் –
இலங்கைக்கே போந்து இறை யாவதூ உம் பெற்றான் பெரியாரைச் சார்ந்து கெழீ இயலார்
இல் -பழ மொழி நானூறு –327-நல்ல அரக்கனும் உண்டே
அமர முனிவன் அகத்தியன் தனது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை –மணிமேகலை
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப –தொடித்தோள் செம்பியன் விண்ணவர் தலைவனை
வணங்கி முன்னின்று –மணி மேகலை –கமண்டலம் கவிழ்ந்தது காவிரி பொங்கியது
அகத்தியர் அறிவுரை பெற்று சோழ மன்னன் தொடித்தோள் செம்பியன் இந்திர விழா எடுத்ததை சொல்லும் –
ஏந்திய கொள்கையார் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வெந்து கெடும் -திருக்குறள் –899
சந்த்ர வம்ச அரசன் நஹுஷன் -அகஸ்தியர் குள்ள வடிவைக் கேலி செய்ய பாம்பாகப் பிறக்க அகஸ்தியர் சபித்தார் –
அரசு தலை நீங்கிய அரு மறை அந்தணன் இரு நீல மருங்கின் யாங்கனும் திரிவோன் –மணிமேகலை –5-
பிறப்பால் க்ஷத்ரியர் -கௌசிக மன்னன் தவத்தால் சிறந்து ப்ரஹ்ம ரிஷி -உலகம் முழுவதும் திரிந்தார் –
———-
ஆகூழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி -குறள் -371-
ஊழ் -முற்பிறவி வினைகள் -ஆகூழ் -புண்ணியம் போகூழ் பாவம் –
வினைப்பயனாலே மறு பிறவி -இரு வினை அலைகளாலே பிறவிச் சுழல் –
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவானாம் இல் இறப்பான் கண் -குறள் -145-
குடம்பை தனித்து ஒழியப் புள் பரந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு–குறள் -338-ஆத்மாவுக்கு உடல் தங்கு வீடு தான் -தன் வீடு அல்லவே
முட்டையும் குஞ்சும் ஓன்று அல்ல -முட்டைக்குள் வளருமத்து காலம் வந்தால் பறந்து போகும் –
வினை ஒழிய உடலில் இருந்து ஆத்மாவும் பறந்து விடுவாரே
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மாற்று ஈண்டு வாரா நெறி -குறள் -356-உண்மையை உபதேசிக்கும் ஆச்சார்யர்
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு –குறள் –5-தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது -குறள் –377-ஒரு ஆத்மாவின் வினைகளின் பயனை அவனே அனுபவிக்கும் படி வைத்தான்
வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் -நாலடியார்
சாதலும் பிறத்தல் நானும் பயத்தின் ஆகும் -சீவக சிந்தாமணி –
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால் நேமியும் வளையும் ஏந்திய கையால் —
நின் திருவரை அகலம் –தொழுவோர்க்கு உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைந்து –பரிபாடல் –
சங்கு தங்கும் முன் கை நங்கையைப் பற்றி
சக்கரக்கையனை சரண் அடைந்து
பரம புருஷார்த்த ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவோம்
துறக்கம் -என்று வினைகளையும் பிறப்பு இறப்புகளையும் துறந்த முக்தியைக் குறிக்கும் –
———
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை –மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி அடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்
மண்ணுறு திரு மணி புரையும் மேனி விண் உயர் புட் கொடி விறல் வெய்யோனும்
மணி மயில் உயரிய மாறா வென்றி பிணி முக ஊர்தி ஒண் செய்யோனும் -என
ஞாலம் காக்கும் கால முன் பின் தோலா நல் இசை நால்வர் உள்ளும்
கூற்று ஒத்தியே மாற்று அரும் சீற்றம் வலி ஒத்தியே வாலியோனைப்
புகழ் ஒத்தியே இகழநர் அடு நனை முருகு ஒத்தியே முன்னி யது முடிந்த லின் –புறநானூறு –56-
பாண்டிய மன்னா -எருது வாஹனன் விரி சடை மழு உடையவன் சம்ஹரிக்கும் சிவனை உனது சினத்தால் ஒத்தும்
நாஞ்சில் பனைக் கொடி கொண்ட பலராமனை உனது வலிமையால் ஒத்தும்
நீல மேனி கருடக் கொடியோன் திருமாலை உன் புகழால் ஒத்தும்
நினைத்த கார்யங்களை செய்து முடிப்பதில் மயில் வாஹனன் முருகனை ஒத்தும் உள்ளாய்
இறைவன் அருளாலே அரசர்கள் என்று சொல்லுமே
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு
மாயோன் அன்ன உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற –புறநானூறு –57-
பால் நிற வுருவின் பனைக் கொடியோனும் நீல் நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெரும் தெய்வமும் உடன் நின்றா அங்கு உரு கெழு தோற்றமொடு உட் குவர விளங்கி –புறநானூறு –58-
இணை பிரியா இரு மன்னர் -சோழ மன்னனும் பாண்டிய மன்னனும்
பலராமன் கண்ணன் போன்று நெருக்கமான நட்புக் கொண்டதாக புலவர் பாராட்டு –
திரு மகள் அருளால் அன்று இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் முந்நீர் வண்ணன்
பிறங்கடை அந்நீர்த் திரை தரு மரபின் உரவோன் உம்பல்
உலகு அளந்த ஸ்ரீ யபதி யான சக்ரவர்த்தி திருமகன் வம்சம் சோழ குலம் -பெரும் பாணாற்றுப் படை
காஞ்சியில் அரசாண்ட தொண்டைமான் இளந்திரையனைப் பற்றிக்
கடியலூர் உருத்திரன் கண்ணனார் அருளிச் செய்கிறார்
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை
ஓடியா மைந்த நின் பண்பு பல நயந்தே -பதிற்றுப்பத்து
சேர மன்னன் இமய வரம்பன் நெடும் சேரலாதனைப் பற்றி புலவர்
—————-
மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும் வருணன் மேய பெரு மணல் உலகமும் –தொல் காப்பியம்
முல்லை -காடு பிரதேசம் -திருமால் –
குறிஞ்சி -மலை பிரதேசம் முருகன்
மருதம் -வயல் பிரதேசம் -வருணன் -ஆகியோர் வணங்கப் பட்டனர்
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் —
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் பாடும் வகையே
எம் பாடல் தாம் அப்பாடுவார் பாடும் வகை –மூன்றாம் பரிபாடல் –முப்பத்து மூவர் தேவர்களைக் கூறும் –
——————-
சோழர் இன் கடும் கள்ளின் உறந்தை ஆம்கண் வரு புனல் நெரி தரும் இரு கரைப் பேரி யாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போலே -அக நானூறு -137-
பங்குனிப் பெரு விழாவில் அரங்கன் சோழப் பெரு நகரான உறந்தை என்னும் உறையூருக்கு எழுந்து அருளுவதைச் சொல்லும்
இவ்விழா முடிந்ததும் காவேரியின் இரு மருங்கிலும் தங்கிய பக்தர்கள் ஊர் திரும்பும் போது
அரங்கமே பொலிவு இழந்தது என்கிறது இப்பாடல்
நீல மகம் நெடும் பொன் குன்றத்துப் பால் விரிந்து அகலாது படிந்தது போல்
ஆயிரம் விரித்தெழு தலை உடை யாரும் திறல் பாயல் பள்ளிப் பலர் தொழுது ஏத்த
விரி நீரைக் காவிரி வியன் பெரும் துருத்தித் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் –சிலப்பதிகாரம்
இரண்டு ஆற்றுக்கு இடைப்பட்ட தளத்தில் பொன் மலையில் நீல மேகம் போல் பெரிய பெருமாள்
கண் வளர்ந்து அருளுவதை விவரிக்கும் பாடல் –
கண் பொரு திகிரி கமழ் குரற் துழாய் அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர –மணி நிற மை இருள் அகல நிலா விரிபு கோடு
கூடு மதியம் இயலுற்றாங்கு –பதிற்றுப்பத்து -நான்காம் பத்து –அரசர்கள் வணங்கும் திருவனந்த புரம் –
பக்தர்கள் உண்ணா நோன்பு இருந்து விடியற்காலை கோயில் மணி அடிக்கும் போதே நீராடி
கிடக்கும் திருமாலை வழி பட்டு இரவில் தம் இருப்பிடம் திரும்பினார்
அவர்களுக்குத் துணையாக நிலவு இருளை அகற்றி ஒளி தருகிறது
திருமகளைத் திரு மார்பில் கொண்டு துழாய் மாலை அணிந்த திருமால்
திரு விதாங்கோடு எனப்படும் திரு அநந்த புரத்தே சயனித்து இருக்கிறார் –
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த —
ஆடக மாடத்து அரவணைக் கிடந்தோன் -சிலப்பதிகாரம் -வஞ்சிக் காண்டம்
ஆடக மாடம் என்பது பொன் மாடத்தைக் குறிக்கும்
அநந்த பத்ம நாப ஸ்வாமி பொன் மாடத்தில் பொன் மையமாக ஆதி சேஷன் மேல்
கிடந்து அருளுவதை சங்கப் புலவர் அன்றே அறிந்து இருந்தனர் –
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்
அகத்து அனைய தெருவம் இதழ் அகத்து அரும் பொருட்டு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள் தாது உண் பறவை அனையர் பரிசில் வாழ் நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இந்த
துயில் எழுதல் -பரிபாடல் திரட்டு –5-சங்கத் தமிழ் இறைவனே அழகர்
திரு உந்திப்பூ போல் மதுரை -மொட்டைப் போல் அழகர் -இனிய தமிழ் பேசும் மக்கள் மகரப் பொடிகள்
பரிசு பெற வரும் வேற்று நாட்டு மக்கள் வண்டு போல்வர் –
திரு நாபியில் நான்முகன் நான்மறை ஓதுவதைக் கேட்டே பாண்டிய நாட்டு மக்கள் துயில் எழுகிறார்கள் –
மக முயங்கு மந்தி வரை வரை பாய –நா நவில் பாடல் முழவு எதிர்ந்தது அன்ன சிலம்பின் சிலம்பு இசை ஓவாது —
ஒன்னார்க் கடந்து அட்டான் கேழ் இருங்குன்று –பரிபாடல் –15–கள் அழகர் நித்ய வாஸம் செய்யும் மாலிருங்குன்றம்
குட்டிக்குரங்கால் தழுவப் பட்ட பட்ட தாய்க் குரங்கு தாவ -குயில் கூவும் எதிரொலி கேட்க –
மயில் அகவ -மாலிருங்குன்றம் திருமாலின் நிறம் ஒக்கும்
நலம் புரீஇ அம் சீர் நாம வாய் மொழி இது என உரைத்தலின் –எம் உள் அமர்ந்து இசைத்து இறை —
இரும் குன்றத்து அடி உறை இயைக என பெரும் பெயர் இரு வரைப் பரவதும் தொழுதே -பரிபாடல் –15-
வேதங்களால் புகழப்பட்ட திரு மாலே -திருமாலிருஞ்சோலை திருமலை அடிவார வாழ்வு
பொருந்தி இருக்க புலவர் பிரார்திக்கிறார் –
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply