ஸ்ரீ ரெங்கம் -வேர்ப்பற்று
முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையாழ்வார் முதல் முதலில்
மங்களா சாசனம் செய்து அருளியதால் முதல் திவ்ய தேசம் ஸ்ரீ ரெங்கம்-
ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை –6-
இது ஒன்றே ஸ்ரீ ரெங்கத்துக்கு இவர் அருளிச் செய்தது
ஸ்ரீ திருவேங்கடத்துக்கு -10 -பாசுரங்கள் –
முதல் பதிகம் பெற்ற பெருமை -பாடல்கள் வேறே வேறே இடங்களில் இருந்தாலும்
26-37-38-39-40-68-76-77-82-99-தொகுத்தால் 10 ஆகிறன்றனவே
இவற்றுள் முதலான பாசுரம் திவ்ய தேசத்துக்குத் தான் ஒழிய அங்கே எழுந்து அருளியவனுக்கு அல்ல
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-
ப்ராப்ய பிராப்பகம் ஸ்ரீ திரு வேங்கடமே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ
அவனும் இதில் ஏக தேசமே -பொன் மலையில் ஏதேனும் ஆவேனே -என்னும் படி அன்றோ
நின்று அருளி சேவை சாதிக்கிறான்
———-
ஸ்ரீ பூதத்தாழ்வார் ஸ்ரீ திருவேங்கடத்துக்கும் ஸ்ரீ திருப்பாற் கடலுக்கும் -12 -பாசுரங்கள் சமமாக மங்களா சாசனம்
ஓன்று அர்ச்சாவதார கந்த திவ்ய தேசம்
ஓன்று விபவாதார கந்த திவ்ய தேசம்
திருவேங்கடம் நேராக ஒன்பதும் -மறை முகமாக மூன்றும் –
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-
கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து
வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் –
நின்றதும் வேங்கடமே –அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று
அவர்கள் விரோதியைப் போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –
பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
வந்து –தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –
ஸ்ரீ வேங்கட ராகவனுக்கு மங்களா சாசனம் இது-
பின்பு சக்ரவர்த்தி திருமகன் இங்கே பிரதிஷ்டையாகப் போவதை அறிந்து அருளிச் செய்கிறார்
கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
ஸ்ரீ திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –
வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-
படி யமரர் வாழும் பதி –பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற ஸ்ரீ திரு மலை –
அவர்கள் அனுபவித்து வாழுகிற ஸ்ரீ திருமலை-
———————-
அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே
இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ் ஸ்ரீ திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு -என்கிறார் –
பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்—-27-
கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-ஸ்ரீ சர்வேஸ்வரனை
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் தேடி ஓடா நின்ற நெஞ்சு-
பதி -ஸ்ரீ திருப்பதி பிரசித்தமாக இருப்பதற்கு வித்திட்ட பாசுரங்கள் இவரது இந்த பாசுரங்கள் தான்
——–
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-
சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-
அதே போல் ஸ்ரீ திருமலை -பத பிரயோகத்துக்கு வித்திட்டவர் பேயாழ்வார் -இந்த பாசுரங்கள் மூலமே –
பெரும் பாலும் ஸ்ரீ திருவேங்கடம் என்றே மற்ற அருளிச் செயல்கள் பாசுரம் இருக்கும்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலைக்கு திருமலை பதப் பிரயோகம் பல இடங்களில் உண்டு
————-
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-
கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுக்கும் அமைந்த ஒரே அருளிச் செயல் பாசுரம் இது ஒன்றே
மா கடலான் முன்னொரு நாள்-மாவாய் பிளந்த மகன்
மா கடலான் வேங்கடத்தான்
மா கடலான் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்
மா கடலான் தேவாதி தேவன் எனப்படுவான்
மா கடலான் முன்னொரு நாள்-மனத்துள்ளான்-இது அவனுக்கு சித்திக்க -கீழ் எல்லாம் அவனது சாத்தியம் –
நம்மாழ்வார் தம்முடைய முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் (28, 60, 26) இம்மூன்று திவ்ய தேசங்களை மட்டுமே
மங்களாசாஸனம் செய்துள்ளார் என்பதை வைத்து, எல்லா திவ்ய தேசங்களுள்
இம்மூன்று இடங்கள் ஏற்றம் பெற்று விளங்குவதாக பிரபந்தம் அறிந்த பெரியோர் கூறுவர்
பொதுவாக திவ்ய தேசங்களில் காலை திருவாராதனத்தில் பெருமாள் திருப்பாவை திருச்செவி சாத்தியருளுவது வழக்கம்.
ஆயினும், காஞ்சியின் தேவப் பெருமாளோ அருளிச் செயல் முழுவதையும் படிப்படியாக செவியுற்று சாத்தியருளுகிறார்.
ஒவ்வொரு நாளும் திருவாராதனத்தில் ஐம்பது ஐம்பது பாசுரங்கள் பாடப்படுகின்றன.
இவ்வாறாக, வருடத்தில் நான்கைந்து முறை திவ்ய பிரபந்தம் முழுவதும் நிறைவு பெறுகிறது.
பிரபந்த பித்தன்
———–
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-
நின்றது எந்தை ஊரகத்து-பிரணவ அர்த்தம்
த்ரைவிக்ரமம் பண்ணின தூளி தாநம் தோற்ற திரு ஊரகத்திலே நின்று அருளிற்று –
எனக்கு ஸ்வாமி என்று நான் இசைகைக்காக –நிலை அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து
த்ரிவிக்ரம அபதாநத்தை பிரகாசிப்பித்தது -முறையை உணர்த்துகைக்காக –என்கை
அதவா –
எனக்கு இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் -வந்து நின்று அருளுகிறது –
உடையவன் உடைமையை இழக்க மாட்டாமையாலே நின்று அருளுகின்றான் என்றுமாம் –
இருந்தது எந்தை பாடகத்து –நமஸ்ஸூ ஸப்தார்த்தம்
அந்த நிலை அழகிலும் எனக்கு ஆபிமுக்யம் காணப் பெறாமையாலே –
இருப்பழகைக் காட்டி -குணைர் தாஸ்யம் உபாகதா -என்கிறபடியே –
நீ எனக்கு ஸ்வாமி -நான் அடியேன் -என்னும் முறை உணருகைகாக -திருப்பாடகத்திலே எழுந்து அருளினான் –
அன்று வெக்கணைக் கிடந்தது –நாராயணாயா ஸப்தார்த்தம்
கீழ்ச் சொன்ன இரண்டு திருப்பதிகளிலும் எனக்கு ருசி பிறவாத அன்றாக திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளிற்றும் –
திருமந்திர ஞானம் வந்த பிறவியே ஸ்ரேஷ்டம் -ஒரு பிறவியில் இரண்டு பிறவி ஆனவர் ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவே இவரும் –
———
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-
இரண்டு திருமலைகளையும் சேர்ந்தே அனுபவிப்பவர்கள் ஆழ்வார்கள்
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும் நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல்-54-
அரங்கம் பயின்றதாகவும் இந்த திருமலைகளில் பன்னாள் பயின்றதாகவும் அருளிச் செய்வதால்
இங்கு வந்து தங்கி வடக்குத் திருவாசல் வழியாகவே திருவரங்கம் சென்று பள்ளி கொண்டான் என்பர்
———-
கல் -வெற்பு -பொன்று -என்றே திருவேங்கடத்துக்கு மங்களா சாசன பாசுரங்களும் உண்டே
பேயாழ்வார் -வேங்கட கிருஷ்ணன் அனுபவம் -20 பாசுரங்களால் திரு வேங்கடத்தானையே கிருஷ்ணனாக அனுபவம்
மாட மா மயிலை திருவல்லிக்கேணி அவதாரத்தால் வந்த அனுபவம் –
கோயில் -கோ -சர்வேஸ்வரனை உகந்து நித்ய வாசம் செய்து அருளும் இல்லம் அன்றோ
——————————-
பூதநா நிரஸனம் -அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளும் ஸ்வ பாவன்
சகடாசூர வதம் -மாறி மாறி பல பிறவிச் சுழலில் இருந்து ரஷித்து அருளும் ஸ்வ பாவன்
த்ருணா வார்த்தாசூர ஸம்ஹாரம் -காம க்ரோதாதிகளைப் போக்கி அருளும் ஸ்வ பாவன்
மருதம் முறித்ததும் -இரட்டைகளைப் போக்கி அருளும் ஸ்வ பாவன் என்பதைக் காட்டி அருளவே
வெண்ணெய் -தூய ஸூ த்த மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஸ்வ பாவன்
ஸ்வ பக்த புஞ்ஜார்ஜிதம் பாப வ்ருந்தம் திவா நிசம் ஸோ ஹரதி ஸ்ம பால -வெண்ணெய் களவு கண்ட
வ்ருத்தாந்தம் கேட்டவர்கள் பாபங்களை அபஹரிப்பவன் அன்றோ
கடிக்கும் பிறை வெவ்வாள் எயிற்றுக் காளியன் மேல்
நடிக்கும் பெரிய பெரிய பெருமாள் திருவரங்கர் நறை கமழ் பால்
குடிக்கும் களவுக்கு மாறு கொண்டு ஓர் கோபிகை பற்றி
அடிக்கும் போது பதினாலு உலகும் அடி பட்டனவே -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
நறை கமழ் பால் -ஏலக்காய் கமழும் பால்
இவனை அடிக்கவே அனைத்து உலகும் அடி பட்டனவே
யஸ்ய ப்ருத்வீ சரீரம் –யஸ்ய ஆத்மா சரீரம் -ஜகத் சர்வம் சரீரம் தே -தானி சர்வாணி தத் வபு
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -அர்த்தங்களைக் காட்டி அருளவே இந்த லீலை
ஸ்ரீ ருக்மிணி தேவி திருமணம் -சிசுபாலாதிகள் உலக ப்ரயோஜனாந்தரங்கள் -இவர்களை அழித்து கைக் கொள்ளுவான்
ஏழு காளைகளை அடக்கியதும் -ஐம்புலன்கள் மனஸ்ஸூ உடல் ஆகிய ஏழையும் அடக்கும் ஸ்வ பாவன் -என்று காட்டவே
கர்ப்பவாசம் பிறப்பு இத்யாதி ஏழு அவஸ்தைகளிலும் பாப புண்ய ரூப கர்மங்களைக் குறிக்கும்
ஏழு எருதுகளும் அவற்றின் கொம்புகளும்
காளியன் -மனஸ்ஸூ சஞ்சலம்-அடக்கி ஆள அவன் திருவடி பலம்
——————————-
பண்டு எல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாருக்குக் கோயில் போல் வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் –மூன்றாம் -61-
நின்ற கிடந்த இருந்த திருக்கோலங்கள் அனுபவம் -முன்பு திவ்ய தேசங்களில் இப்பொழுதோ இவரது திரு உள்ளத்திலே
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-
மேலை இளங்குமரர் நித்ய ஸூரிகள் -நித்ய யுவா -அவர்கள் கோமானும் இளங்குமரன் -ஸாம்யா பத்தி –
குமரன் -ஸப்த பிரயோகம் இங்கு இருப்பதாலேயே
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமாரர் உள்ளீர் புரிந்து -நான்முகன் -44-
—————————-
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்–நான்முகன் திருவந்தாதி 34-
வேங்கடம் -ஸப்தார்த்தமே அருளிச் செய்கிறார் இதில் –
வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள்.
வேங்கடம் என்ற சொல்லுக்கே பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு
—————
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —ஸ்ரீ பேயாழ்வார்–69-
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி –39-
நாயகி பாவமாகவும் இவற்றுக்கு வியாக்கியானங்கள் உண்டே
முதல் முதலில் நாயகி பாபம் இவை என்பர்
—————————
ஸ்ரீ பேயாழ்வார் தம் திருக்கைகளைக் கூப்பி தலைக்கு மேல் வைத்து சேவை –
ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் பெங்களூரில் –
கண்டேன் கண்டேன் என்று ஹர்ஷத்துடன் அருளிச் செய்வதால் –
———–
என் நெஞ்சமேயான்
பூதத்தாழ்வார் -நம்மாழ்வார் போல் திருக்கை நெஞ்சில் வைத்து ஸ்ரீ காஞ்சியில் சேவை
அத்தியூரான் புள்ளையூரான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்
தேவப்பிரானே அரங்கன் –
ஸ்யாம குந்தளம் அநந்த சயம் -கூரத்தாழ்வான் இத்தைக் கொண்டே
————-
மத்ஸ்ய அனுபவம் பாசுரம் திருமங்கை ஆழ்வார் –
அதே மெட்டில் கூரத்தாழ்வான் ஸ்லோகம்
ஒரு வரியிலும் –23- எழுத்துக்கள் –
பொதுவாக ஸம்ஸ்க்ருதம் ஸ்லோகம் இவ்வளவு எழுத்துக்கள் கொண்டு இருக்காதே
ஆழ்வார் அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டு அன்றோ ஆழ்வான் இவ்வாறு அருளிச் செய்கிறார்
————
வேங்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் வாய் வைத்தான் சிலம்பு -பேயாழ்வார் -89-
திரு மலையே சிலம்பு –
மலையே ஆறானதே கூரத்தாழ்வான் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்த்வம் –
————-
ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளிய மாசி தசமி தொடங்கி
ஐந்து நாள்கள் மாசி மகம் உத்சவம் -ஸ்ரீ பெரும் புதூரில் நடக்கும் அத்புத சேவை
——————————
ஆழி மழைக் கண்ணா
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகின்றதென்று சொல்லி (பெரியாழ்வார் திருமொழி 3.4.1)
வானத்தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி (பெரியாழ்வார் திருமொழி 2.10.9)
திரண்டெழுந்த மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே (பெரியாழ்வார் திருமொழி 3.6. 9)
ஒன்றிய திங்களைக் காட்டி ‘ஒளிமணி வண்ணனே’ என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி ‘நெடுமாலே! வா! என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் ‘நாரணன் வந்தான்’ என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே. [திருவாய்மொழி 4.4.4]
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடென் செய் யுங்கொலோ? [திருவாய்மொழி 6.7.3]
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே! [திருவாய்மொழி 7.2.7] .
பேரா யிரமுடைய பேராளன்……நீரார் மழை முகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்…(பெரிய திருமொழி 8.1.6)
தருமான ‘மழை முகிலை’ப் பிரியாது தன்னடைந்தார், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை (பெரிய திருமொழி 8.9.2)
மன்னும் மழை தழும் வாலா நீண் மதி தோய், மின்னின் ஒளி சேர் விசும்பூரும் மாளிகை மேல்,
மன்னும் மணி விளக்கை மாட்டி- மழைக் கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப் படுத்த பள்ளி மேல்…….[பெரிய திருமடல் ]
அழைக்கும் கருங்கடல் வெண் திரைக் கை கொண்டு போய் அலர் வாய்
மழைக் கண் மடந்தை அரவணை யேற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேல் நின்றும்
ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே! [திருவிருத்தம்-52]
———–
திருவாய் மொழிக்கு உரை சொல்லும் ஈடு,
“பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலேயாகையாலே….” என்று கூறிப் பண்டைய மரபைச் சுட்டுகிறது:
போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி;
ஆக்கஞ்சேர் ஊடல் அணி மருதம்;
நோக்குங்கால் இவ்விருக்கை முல்லை;
இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருக்கும் ஐம்பால் தொகை”
————————
சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்
துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?
உளவோ பெருமான் உனக்கு?–(திவ்யப் பிரபந்தத்தில் சேராத தனிப் பாடல்கள்-
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்வார் திருநகரி (பழைய திருக்குருகூர்) என்னும் ஊரில்
தாயவலந்தீர்த்தான் கவிராயர் வீட்டில் இரா.இராகவய்யங்கார் அவர்கள் இந்த அகவலைக் கண்டு எடுக்கிறார்கள்
இத்தனை சிறப்புப் பெற்ற பாடல் முந்தைய தொகுப்பாசிரியர்களால் காணக் கிடைக்காமல் 1934ம் வருடம் வெளியிடப் பெறுகிறது
நான்காம் சங்கம் அமைந்த காலத்தில் வாழ்ந்த பேரறிஞரான நம்மாழ்வார் சங்கப் புலவர்கள் தம்மை
பெரிதும் மதிக்கும் படி ஒரு அகவல் செய்வித்த செய்தி கூடற்புராணத்தில் வருகிறது.
இதை “அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்” என்னும் குறிப்பால் அறியலாம்.
சடகோபர் அந்தாதியில் “சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலையானை” என்னும் வரிகளால் இதைப் பதிவு செய்கிறார்.
——–
அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது (குறள் 8).
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே (திருநெடுந்தாண்டகம் 4)
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”–தொல்காப்பியரும்,
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர் (778)-அரசாளும் மன்னனை “இறைவன்” என்ற பதத்தால் விளிக்கிறார். அக்குறள்
திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே”
———–
இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்
—————-
மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை
நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!
குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற நம்மாழ்வார் பாதங்கள்
கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால் நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி,
இதுவறை செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன் வாக்கால்.
திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார்.
அது அப்படியே திருவாய்மொழிக்குப் பொருந்துவதுதான் ஆச்சர்யம்!
‘செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே–செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.’
அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின் பொருளும்,
திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின், செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு
என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப் போனது.
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply