கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்——ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி—11-
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி –55-
————
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன
இப்படி செய்வார் உண்டோ என்னில்-
அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்———11-
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
அவர்களை நாள் தோறும் தொழுது
மத்யம புருஷார்த்தமான சுகத்தைப் பெறுவர் –
புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அவர் –
எங்கும் புக்க நின்ற நீரை உடைத்தான கடலிலே நிறத்தை உடைய சர்வேஸ்வரனே
ப்ராப்யமான உன்னுடைய திருவடிகளை அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் ஆர்
————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-
நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்———11-
அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப் பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து
சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய கால்களை –
துராராதரானவர்கள் இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து-
அங்கே வந்து உன்னை அனுபவித்தல் –
இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல் –
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற
ஸ்வர்க்காதி ஸூகத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –
சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே –
இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி -ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –
அன்றிக்கே
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –
———————————————
ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் –
தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-
கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –
கடை நின்று –
அவ்வோ தேவதைகளின் வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –
அமரர் கழல் தொழுது நாளும்-
நாள்தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து
அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –
கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –
நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக மாகவும் பெறாது ஒழிவதே
உபாயங்களால் பெருத்து –
உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே
இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் –
அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்
அதாகிறது
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே
சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறுகிறிலோம் என்றும்
அவற்றால் வந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-
அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –
புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –
நெடுமாலே-
அபரிச்சேத்யனாவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –
நின்னடியை யாரோத வல்லாரவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
———————————————————
ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை-வியாக்யானம்-
கடை -மனை வாசல்
தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து என்றுமாம்
அல்ப பலங்களை பெற்று போகிறார்களே சம்சாரிகள்
இடை நின்ற இன்பம் –ஸ்வர்க்காதிகள்
இன்பம் என்றதும் பிரமித்தவர்களின் கருத்தால் –
——————————
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர் -55-
ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை-வியாக்யானம்-
தேவதாந்தர பஜனம் செய்து
அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து
உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூகமும் இன்றி –
நிரதிசய மோக்ஷ ஸூகமும் இன்றிக்கே –
ஸ்வர்க்க ஸூகத்தை யுடையவர் என்றவாறு –
——————————————————————
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று சர்வேஸ்வரன் பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை
யவர்கள் பக்கலிலே பண்ணும் சம்சார சுகமும் இன்றிக்கே-
நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இருக்க-
ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –
—————————
ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-
இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து –
ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் –
உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-
கடை நின்று இத்யாதி –
இதர தேவதைகள் வாசலிலே நின்று அந்த தேவதைகள் காலை நாள் தோறும் தொழுது
பரிமித ஸூகங்களைப் பெறுவர் –
புடை இத்யாதி –
பூமியைச் சூழ்ந்து இருந்துள்ள நீரோதம் போலே இருக்கிற திருமேனியை யுடைய சர்வேஸ்வரனே –
உன்னைப் பேச வல்லார்கள் யார் –
இடை நின்ற இன்பம் –
நடு முறியும் ஸூகத்தை யுடைராவர் –
இடமுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற திரு மேனியையும்
அபரிச்சேத்யமான மஹிமாவையும் யுடைய சர்வேஸ்வரனே
சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை சத்த கீர்த்தனம் பண்ணி ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்றுமாம் –
அவர் என்றது
சர்வ கந்த ரஹிதராய்-ரஜஸ் பிரக்ருதிகளாயும் தமஸ் பிரக்ருதிகளாயும் உள்ளவரை –
————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திரு மழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply