ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –41-42-43-44–

வருணிக்க இயலாதவையே யாயினும் தமது அவா அடங்காமையின் பிராட்டி கடாஷங்களின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை வருணித்துக் கொண்டு அவற்றால் தம்மை ரஷித்து அருள வேணும் என்கிறார் –

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–ஸ்லோகம் —41 —

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல –
இன்ப வடிவங்களையும் -இறைவனையும் மூழ்கடிப்பதால் உண்டான மகிழ்ச்சியினால் மதம் பிடித்து அலசி -சோம்பினவைகளாயும்
ஆகல -கழுத்து வரையிலும் -பிராட்டி கடாஷங்கள் யாவருக்கும் அனுகூலம் ஆனவை யாதலின் ஆனந்தம் விளைப்பன –
அனுகூலமாய்த் தோற்றும் அறிவே ஆனந்தம்–இறைவனை பூரணமாய் விஷயீ கரிக்கின்றன
அபாங்கா பூயாம்சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத் -என்று கீழே அருளிச் செய்தார்
இறைவனை மூழ்கடித்ததனால் என்னாது இறைவன் மூழ்கியதால் வந்த மதம் என்றுமாம் –
கழுத்து வரை அன்பு நனைத்ததாக கூறவே கடாஷங்கள் பரிபூர்ணமாக அன்பை உள்ளே அடக்கி
வைத்துக் கொண்டு இருத்தல் தெரிகிறது –

ப்ரேமார்த்ரை ரபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவிதா ச்மாத்ருசை –
அன்பினாலே ஆர்த்ரை -நனைந்தவை களாயும்-மேலும் கரை புரண்டு ஓடுகிற அருளினாலே
சம்ப்லாவித-குளிப்பாட்டப் பெற்ற -அச்மாத்ருசை -எம் போன்றாரை யுடையவைகளாயும் -கழுத்து வரை உள்ளடங்கினதாக
அன்பை சொல்லி கிருபை கரை புரண்டு உள் அடங்காமல் அருளிச் செய்தது அருள் பெருக்கின் மிகுதி காட்டியவாறு –
விரிவடைந்த அன்பே அருள் –
தொடர்புடையார் மாட்டே அமைவது அன்பு -இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்லுவது அருள் -இயல்பான
அருளினால் தாம் ஆளானமாய் தோற்ற அச்மாத்ருசை -என்கிறார்
கேவல க்ருபா நிர்வாஹ்யவர்கே வயம் -என்றார் கீழே
எம் போன்றார் என்றது பக்தி முதலிய தொடர்பின்றி இயல்பான அருளுக்கு இலக்காமாறு ஆகிஞ்சன்யம் உடையோர்களை –

பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை –
திவலை தோறும் செய்யப் பட்ட கலகத்தை உடையவர்களான ப்ரஹ்மாதிகளை உடையவைகளாயும்

ஐஸ்வர் யோத்க மகத்கதை ரசரணம் மாம்பால யாலோ கிதை–
ஐஸ்வர் யத்தினுடைய உத்பத்தியாலே-கத்கதை – இடறி நடப்பவைகளாயும்
ஆலோகித -உள்ள நோக்கங்களினாலே –
அசரணம் மாம் பாலய -சரண் அற்ற என்னைக் காத்து அருள வேணும்-

என்னைக் காப்பதற்கு இறைவன் போலே படை எடுக்க வேண்டாமே –உனது கடாஷமே போதுமே –
எவ்வாறு வருணிப்பது என்றவர் அடுத்த ஸ்லோகத்திலே நேராக கடாஷங்களுக்கு ஓர் உருவம் கொடுத்து
அவற்றின் ஸ்வரூபத்தையும்
ஸ்வ பாவங்களையும்
செயல்களையும்
அழகு பட வருணித்து இருப்பது வியக்கத் தக்கது
எவ்வாறு வருணிப்பது எனபது பிறருக்குத் தான் போலும்-

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்து விட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்க வல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் –
தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன். என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழவேண்டும், இன்னார் மீது விழக்கூடாது”, என்று பாரபட்சம் பார்ப்பதில்லை.
ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

இன்பவடி வாயிறைவன் தனை முழுக்கும் எக்களிப்பின் திமிர்த்து மடிந்தீரமாகி
அன்பின் மிடறளவாக வளவு மீறும் அருள் வெள்ளம் தனில் எம்மனாரை யாட்டி
முன்பிடம் கொள் அயன் முதலோர் திவலை தோறும் முற்றி நசை கலகமிட மூளும் செல்வா
வன் பொறையினடை யிடறு நோக்கிக் காப்பாய் மறு புகலில் அடியேனை மலரினாளே–41-

மடிந்து -சோம்பி
முன்பிடம் கொள் -அக்ர ஸ்தானத்தை பெறுகின்ற முக்கியரான என்றபடி
எனக்கே இந்நோக்கு எனக்கே இந்நோக்கு -என்று கலகமிட –
செல்வன் பொறையின்-ஐஸ்வர்யம் என்னும் பெரிய சுமையினால்
இன்ப வடிவாய் -திமிர்த்து மடிந்து ஈரமாகி ஆட்டி
கலகமிடும்படியாக மூளும் –பொறையினால் -நடை இடறும் நோக்கு -என்றபடி –

———

திரு மேனியின் மென்மை பேசும் திறத்தது அன்றி என்கிறார் —

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்தக்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரிபுஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–ஸ்லோகம் —42 —

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜச்-தாமரைத் துகள் உன்னுடைய திருவடித் தலத்தை உறுத்தக் கூடியதாகவே ஆகின்றது –
சேடீப்ருசா லோகிதை -பனிப் பெண்களின் உற்றுப் பார்த்தல்களினாலேயே
அங்கம் லாநி -திரு மேனிக்கு வாட்டம் ஆகின்றது -தொட்டால் வாடும் ஒரு பச்சிலை
மோப்பக் குலையும் அனிச்சம் -காணக் குழையும் இந்த திருமேனி -மென்மைக்கு ஈடு எது இவ்வுலகத்தில்
ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ -மேலும் உனது விளையாட்டுத் தாமரையை ஏந்துதல் சாஹாசமான கார்யம் ஆகின்றது –
இறைவன் சோலை சூழ் குன்று எடுத்ததினும் இவள் கையில் தாமரைப் பூ தாங்கி இருப்பது அரிய செயலாய்த் தோற்றுகிறது இவருக்கு –
டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம்- இறைவனது தோளின் புறத்திலே வைஜயந்தி என்னும் வனமாலை யாலே ஊஞ்சல் ஆடுதல்
ஐயோ கஷ்டம் என்னும் சொற்களுக்கு இடமாக ஆகின்றது –
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –மிகவும் மெல்லிய இந்த திரு மேனி எந்தக் காரணத்தினால்
வாக்குகளுக்கு விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத இத் திருமேனி பேச்சைப் பொறுக்குமோ
இந்த மெல்லிய திரு மேனியை வன் சொற்களால் வலிந்து துதிடுதல் தகாது
இழிவு படுத்தியதாகும் -கசக்கியது போலே என்கிறார் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள், உனது திருவடிகளை
உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி, அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது (தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”, என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக்கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

பங்கயத்தூள் படுமேனும் பாதம் துன்பப் படுவதுவே சேடிமாருற்றுப் பார்க்கில்
அங்கமதப் பொழுதன்னாய் வாடிப் போகும் அரும் செயலே விளையாடு மலர் சுமத்தல்
தொங்கு மரி தோளில் வனமாலையால் நீ துயர் அந்தோ எனற்கிடமாம் ஊஞ்சலாடல்
எங்கனமா இம் மிக மெல்லியலுடம்பை இலக்குமியே வாசகத்தால் கசக்க லாகும் –42-

மெல்லியலுடம்பிறகு -நேர்மாறாக வல்லியல் வாசகம்-

————–

திரு மேனியின் மென்மையைக் கூறினவர் பருவம் கூறுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–ஸ்லோகம் —43 —

ஆமர்யாத மகண்டகம் ஸ்தனயுகம் நாத்யாபி -இரு கொங்கைகளும் எவ்வளவு வரை வேணுமோ
அவ்வெல்லை வரையிலும் இப்பொழுதும் தடங்கல் இல்லாதனவாக இல்லை –

நாலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச -நோக்குதல் –
புருவ நெறிப்புக்கள் – புன் முறுவல்கள் இவற்றின் விலாசங்களும்
இயற்கையால் விளைந்தவை என்னும் தன்மையால் உண்டான பழியை இப்பொழுதும் விட்டுவிட வில்லை

ஸூதே சைசவ யௌவன வ்யதிகர காத்ரேஷூ தே சௌரபம் போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண காஹஷம் –
அனுபவ வெள்ளத்தில் காதலனாகிற ஆசிரியனுடைய திருக்கையைப் பிடித்தலினால்
காஹ -இறங்குவதில் -மூழ்குவதில் தகுதி பெற்ற
குழந்தைத் தனம் என்ன
யௌவனம் என்ன
வ்யதிகர -சேர்க்கையானது உன்னுடைய திரு அவயவங்களிலே மணத்தை -சௌரபம் -ஸூதே –உண்டு பண்ணுகிறது –

கநகநக த்யுதீ -ஸ்லோகத்தில் சொல்லப் பட்ட தாருண்யம் இங்கே விளக்கப் படுகிறது –
பால்யத்தின் இறுதியிலும் யௌவனத்தின் தொடக்கமும் கூடும் பருவம் -யுவா குமாரா வுக்கு ஒத்த பருவம் –
கொங்கைகள் வளர்ப்பது யௌவனம் -அது முற்ற வளர்ச்சியும் முடியும் -தொடங்கும் யௌவனத்தால் வளரும்
தொடரும் இளமை முற்றும் வளர ஒட்டவில்லை
ஆமர்யாதம் -எல்லை எனபது வளர்ச்சியின் முடிவு நிலையைக் குறிக்கும்
அகண்டகம் ந -இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாட்டை வற்புறுத்தும்
அத்யாபி -உம்மை தொகை இன்று போலே நாகைக்கும் வளர்ச்சிக்கு தடங்கல் -உள்ளதே –
இதே போலே நோக்கம் முதலிய விலாசங்கள் –
போகஸ் ரோதஸ்-அனுபவ வெள்ளம் -அளவிறந்த போகம் –
இரண்டு பருவங்களும் கலந்து -பொற்றாமரை மணம் பெறுவது போலே திரு மேனி சிறப்புறுகிறது
சங்கீர்ணே கல்வியம் வயலி வர்த்ததே -என்று முராரியும் இரு பருவங்களின் கலப்பு நிலையைக் கூறியது –

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு, உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை
ஆகியவற்றைக் காணும் போது நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப் பருவமும், யௌவநப் பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறு மணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குருபரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

முழுவதும் கொங்கை முற்ற முடிந்தில திடைஞ்சலின்னும்
விழி நகை புருவ லீலை விட்டில இயற்ப் பழியை
குழவு யௌவனங்கள் கூடும் வாசமுன் மேனி கூறும்
இழிதி நீ போக வெள்ளத்து ஏந்தலின் கரம் பிடித்தே –43-

————–

மணம் குளிர்ச்சி அழகு முதலிய நற்குணங்கள் வாய்ந்த பிராட்டி திரு மேனியை ஒரு பூ மாலையாக உருவகம் செய்து –
அதனை இறைவன் திரு மார்புக்கு அலங்காரமாக வருணித்து
மெல்லிய திரு மேனியை இங்கனமோ வருணிப்பது -எனத்
தம்மை நிந்தித்துக் கொள்கிறார் —

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–ஸ்லோகம் —44 —

ஆமோதாத்புதசாலி -வாசனையால் ஆச்சர்யமாக விளங்குவதும் -ஆச்சர்யமான வாசனை என்றுமாம் –
யௌவன தசா வ்யாகோச -யௌவனப் பருவம் ஆகிற மகர்சியை யுடையதும்
அம்லா நிமத் -வாடாததும்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம் -சௌந்தர்யம் ஆகிற அம்ருதத்தைக் கொண்டு நனைத்தலால் குளிர்ந்தும் –
லாவண்யம் ஆகிற நூலில் கோக்கப் பட்டதுமான இந்த உன்னுடைய
ஸ்ரீ ரங்கேச்வரி கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே –மெல்லிய உறுப்புக்கள் ஆகிற பூக்களினுடைய தொடையலானது
காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மா ம காண்டாகுலம் —காதலனுடைய மார்பிற்கு அலங்காரமாதலை ஏற்கும்
அகாண்ட -தகாத வழியில் ஆகுலம் கலங்கின கவியான என்னை
திக் -நிந்திக்க வேணும்-

திருமேனி முழுவதும் வியாபித்த லாவண்யம் ஆகிற நூலால் தொடுக்கப் பட்ட பூம் தொடையல்
ஆங்காங்கே சௌந்தர்யம் என்னகும் திரு அவயவ அழகு என்னும் அமுத நீரினால் நனைக்கப் பட்டு குளிர்ந்து உள்ளது
வாடாது ஆச்சர்யமாக மணம் கமழ்கிறது –
மார்வத்து மாலை நங்கை அன்றோ இவள்-
காதலன் திரு மார்புக்கு இம்மாலை அலங்காரம் -அவனது திரு மார்பு இம்மாலைக்கு அலங்காரம் -என்றுமாம் –
பூக்களின் மகரந்தப் பொடியே திருவடிகளை உறுத்தும் என்றும்
திருக்கையில் மலர் சுமத்து சாஹாச கார்யம் என்றும்
பூவினும் மெல்லியதாக வருணித்த தாமே திருமேனியை மலர் மாலையாக வருணிப்பது முரண்படாதா –
அதற்கும் மேலே அம்மாலை- அரக்கர் அசுரர்கள் அம்புகளுக்கு இலக்காகி வடுப்பட்ட இறைவனது
கடினமான மார்புக்கு ஏற்கும் என்றது எவ்வளவு சாஹாசம் –
மதி கலங்கியே செய்தோம் என்று தம்மை தாமே வெறுத்து கவிம் திங்மா மகாண்டாகுலம் -என்கிறார்
தனது மேன்மைக்கு மிகவும் இசையாதே யாயினும்
அவன் பால் உள்ள அன்பாலும்
அவன் ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனர்களின் அபராதத்தையும் கண்டு அகலமாட்டாமையாலும்
திருமார்பை விட்டு பிராட்டி சிறிதும் பிரிவது இல்லை —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்; உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது; உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள்
அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன – ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின் திருமார்பிற்கு,
மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன? ஸ்லோகம் 42ல்,
மலரின் மகரந்தப் பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ஸ்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல், திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார்.
இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு, இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் –
என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

அங்கம் எனும் மென்மலர்கள் அரிய கந்தம் ஆச்சரியமாய்க் கமழ வாடாதென்றும்
தங்கிய யௌவன மலர்ச்சி யுடனுறுப் பேர் தண்ணமுதால் குளிர்ந்து மிக விலாவணீயம்
என்கின்ற நூல் தன்னில் இயையக் கோத்த இன் தொடையல் என வன்பன் மார்புக்கு ஏற்பத்
தங்கினை சீ ரரங்கத்தின் தலைவி தேவி தகவின்றிக் கலங்கி யிங்கன் சாற்றினேனே –44-

————–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: