ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –57-58-59-60-61–

நம் போல்வாரைப் புருஷகாரமாய் இருந்து காப்பதற்குத் தேவையான குணங்கள் யாவும்
திரு வரங்கத்திலேயே சிறப்புறுகின்றன -என்கிறார் —

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–ஸ்லோகம் —57 —

ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத –
தாயே -வள்ளன்மை கருணை -அடியாரிடம் வாத்சல்யம் இவற்றை முன்னிட்ட நற் குணங்களுள்
புருஷகாரம் ஆவதற்குத் தேவையான குணங்கள் யாவும் –
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா —
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில்
அத்ர-ஸ்ரீ ரங்க நாச்சியாராய் இருக்கும் இந்த நிலையில்
அதிசாயிதம் -சிறப்பிறுத்தப் பட்டுள்ளன –
மேலும் -அன்யத் -இவ்வர்ச்சை நிலையின் நின்றும் வேறுபட்ட யாதொரு சீதாவதாரம் முதலியவற்றை
உதா ஹரந்தி -கீழ்ச் சொன்ன குணங்கள் விளங்கும் இடமாக இதிஹாச புராணம் வல்லோர் எடுத்து இயம்புகின்றனரோ
இந்த சீதாவதாரங்கள் முதலியதும் -அமுஷ்ய -இவ்வர்ச்சை நிலைக்கு -யோக்யா -பயிற்சி செய்வதேயாம் –

ஔதார்யம் -தனது நலப் பற்று இன்றி பிறர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தல் –
சித்த உபாயமான தன்னையே கொடுத்தல் என்றுமாம் –
உலகை உய்விக்கக் கருதி பிராட்டி பல கால் திருவவதரித்து பயின்றனள்-

இறைவனும் அர்ச்ச்சை நிலையில் கோயில் முதலிய ஸ்தலங்களில் பயின்றதாக பூதத் தாழ்வார் –
பயின்றது அரங்கம் -பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள்
ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திரு அவதாரம் செய்தபோதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ள வேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில்
இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத் தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வண்மையும் கருணையும் வாத்சலம் முதலன
உண்மையில் அரங்குறை யுனக்கொர் ஒப்பிலையனாய்
பெண்மணி சானகி போலுந பிறவிகள்
எண்ணிடல் இந்நிலைக்கு என்ற நற் பயிறலே –57-

அனாய் -தாயே
பாரதந்த்ர்யம் தலை சிறந்து விளங்க நின்றமையின் பெண் மணி சானகி என்று அடை மொழி கொடுக்கப் பட்டது-

—————–

அக் குணங்களுள் ஔதார்யம் அளவுகடந்த அதிசயம் உடையது -என்கிறார் —

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–ஸ்லோகம் —58 —

ஐஸ்வர்யம் அஷரகதிம் பரமம் பதம் வா கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஞ்ஜலி பரம் -தொழுகைச் சுமையை -சுமக்கின்ற
கச்மைசித் -யாரானும் ஒருவனுக்கு -அவன் அதிகாரத்திற்கு ஏற்ப
ஐஸ்வர் யத்தை யாவது
கைவல்யம் என்னும் பயணியாவது
மோஷத்தை யாவது
விதீர்ய -கொடுத்து
இன்னமும் –

அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ: —
இவனுக்கு சுமைக்குத் தகுந்தது -உசிதம் –
ஒன்றும் செய்யப்பட வில்லையே என்று வெட்க்கப் படுகின்றாய்
இந்த வண்மைக் குணம் -க கத்ய- எத்தகைத்து சொல்லு-

நேர்வதோர் எளியதோர் அஞ்சலி மாத்ரம்-பெறுவதோ பெரும் பயன்கள் –
ஸ்ரேயோ ந்ஹ்யரவிந்த லோசநமந காந்தா பிரசா தாத்ருதே சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்வச
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஆளவந்தார்
தேஹாத்மாபிமானிக்கு பயன் ஐஸ்வர்யம்
ஸ்வதந்த்ராபிமானிக்கு பயன் கைவல்யம்
அடிமையாய் அநந்ய பிரயோஜனனுக்கு பயன் பரமபதம் –

ஒரு மலையைச் சுமத்து போலே நாம் அஞ்சலி பண்ணுவதை பிராட்டி கருதுகிறாள் –
அதற்க்கு ஏற்ப சுமையாக அஞ்சலியைக் கூறினார் –
தே பூயிஷ்டாம் நம உக்திம் -என்றும் –
அது சுமந்தார்கட்கே -என்றும் ஸ்ருதிகள் ஓதுமே –
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –
உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ என்றபடி
தான் கொடுக்கும் மோஷமும் அற்பமாய்த் தோற்றுவதால் நாணி இருப்பதால் இது என்ன ஔதார்யமோ என்று வியக்கின்றார் –
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் உதாராம் -சுருதி உதாரா சப்தம்
உதாரா சப்தத்துக்கு மோஷ ப்ரதத்வ ரூபமான உபாயத்வமும் பிராட்டிக்கு உண்டு என்பர் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் ஆதலின்
இறைவன் வாயிலாக மோஷ பரதத்வம் சொல்லுகிறது என்பர் மற்றைய ஆசார்யர்கள் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி
வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும்,
அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும்,
உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58-

அம் சிறப்பு -அழகிய மோஷம்
அக்கரம் -கைவல்யம் -அஷர கதி
ஆக்கம் -ஐஸ்வர்யம்-

———-

மேல் இரண்டு ஸ்லோகங்களினால் தம் நைச்யத்தை யனுசந்திக்கிறார் —

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–ஸ்லோகம் —59 —

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம் இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
பயன் பெற வேண்டும் என்ற ஆசையையும்
அப் பயனுக்காக விதித்த வற்றைச் செய்யுமாறு ஏவப் படுகிற யோக்யதையையும்
சகந -செய்வதற்கு சக்தியையும்
அநு சயா -விதித்ததை இது காறும் செய்யாது இருந்தோமே என்ற அனுதாபத்தையும்
அநபிஜ்ஞ -அறியாதவனும் -ஆதலின் –
ஞான யோகம் என்ன
கர்ம யோகம் என்ன
பஜந -பக்தி யோகம் என்ன
இவைகள் ஆகிற செல்வத்தினால்
அகிஞ்சனனான நான்
யுவயோ அபி -இறைவனும் இலக்குமியுமான உங்களுக்கும் கூட

ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி —
பொறுக்க ஒண்ணாத -ஆகாம்சி -பிழைகளை
பத்த்நாமி -சேர்க்கின்றேன்
கெட்ட நடத்தை யுடைய நான் உனக்கு தாங்க இயலாதவனாக இருக்கின்றேன் –

முற்கூற்றால் ஆநு கூல்யம் இல்லாமையும் பிற்கூற்றால் ப்ராதிகூல்யம் உடைமையும் கூறப் பட்டன –
இச்சை -மோஷ ருசி -முமுஷூத்வம்
அதிகாரம் -அனலை யோம்பும் அந்தண்மை முதலியன
சகநம் -விதித்தவற்றை அறிந்து அனுஷ்டிக்கும் திறம் –
இவை எனக்கு இல்லை என்பது மட்டும் இல்லை -இங்கனம் சில உண்டு என்ற அறிவும் இல்லை
மேலும் தீமைகள் எல்லாவற்றையும் சேர்த்த வண்ணமாய் உள்ளேன்
குற்றத்தை நற்றமாக கொள்ளும் இயல்பு கருதி யுவரோபி -என்கிறார் –
ஷாந்தி ஸ்தவா கஸ்மிகீ -எனச் சிறப்பித்துக் கூறப் படும் உனக்கும் நான் பரிகரிக்க முடியாதவன் ஆனேன்
அஹமசம் யபராதா நாமாலய -குற்றங்களுக்கு கொள் கலம்
துர்ப ரோஸ்மி-எங்கனம் ஆயினும் நீ என்னைக் காத்து அருள வேணும் –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும்,
அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

சற்றமே யறிவு கன்மம் பத்தி யாம் சம்பத்தில்லை
கற்றிலே னிச்சை பெற்றி கவுசல மிரங்கல் தேவி
குற்றமே புரியா நிற்பன் கொதிக்க நும் மிருவீ ருள்ளும்
முற்றுமே மூர்க்கனேனை முடியுமோ தாங்க நீ தான் –59-

பெற்றி -அதிகாரம் –
கவுசலம் -சாமர்த்தியம்
இச்சை -பெற்றி -கவுசலம் -இரங்கல் -கற்றிலேன் -இவற்றைப் படித்தும் அறியேன்
முற்றும் மூர்கனேனை நீ தான் தாங்க முடியுமோ –

————

இங்கனம் நைச்ய அநு சந்தானம் செய்வதும் மனப் பூர்வமாய் அன்று –
முன்னோர்களைப் பேச்சளவிலே பின்பற்றின மாத்திரமே –
ஆதலின் நினது இயல்பான கருணையினால் என்னைக் காத்தருள்க -என்கிறார்-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–ஸ்லோகம் —60 —

இத் யுக்தி கைதவசதேந விடம்பயாமி தாநம்ப சத்ய வசச புருஷான் புராணான்-
அம்பா -தாயே
இதி -கீழ்ச் சொன்ன முறையிலே-
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
தான் -பிரசித்தர்களும்
சத்ய வசச -உண்மையையே உரைப்பவர்க்களுமான
பழம் காலத்து ஆசார்யர்களை
விடம்பியாமி -அநு கரிக்கின்றேன் –

யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–
யத்வா -அல்லது
நினது திருவடித் தாமரைகளைப் பெறுவதில் எனக்கு
புஜ பலம் -கைம் முதல் சாதனம் இல்லை
விதித -கருணையால் த்வ மேவ -நீயே
சரணம் க்ருதா அஸி-தஞ்சமாக செய்யப் பட்டு இருக்கிறாய் –

பொய்யே யாயினும் முன்னோர்களை பின் பற்றினமையாலும் இழக்க வேண்டும் படியோ உமது நிலை
நிர் ஹேதுக கிருபை ஒன்றே தஞ்சம் –
விதி -விதி வாய்க்கின்றது காப்பாரார்-கரை புரண்ட கருணையை –
பிராட்டி சரணம் ஆவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதே -அதாவது புருஷகாரம் ஆதலே யாம் –
சரணமாகச் செய்யப் பட்டாய் -என்று -சரணம் ஆனாய் என்று சொல்லாமல் –
நிர்ஹேதுக கிருபையை விதி என்றதால் -விதியை யாரால் வெல்ல முடியும் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து, நூற்றுக்கணக்கான தவறுகள்
உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய
ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

தொல்லவர் மெய்யே சொல்லும் தூ நெறி தொடருவேன் போல்
எல்லை யிலாமல் இங்கன் இயம்பினான் சலங்கள் அந்தோ
அல்லது தாயே உன் தன அடி மலர்ப் பெற என் கையில்
வல்லமை இலையதற்கு வல்லை நீ விதியினானாய் –60-

————-

நிகமத்தில் பலன்களை ஆஸாசித்து இவ் வருமந்த ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார்-

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–ஸ்லோகம் —61 —

ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ்கண்டகம்
திருவரங்கத்தில் நூறு வருஷங்கள் நண்பர்களோடு கூட இடையூறு இன்றியும்

நிர்துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம் –
துன்பம் இன்றியும் -மிகவும் ஸூகமாகவும்
அடிமை இன்பம் கொண்ட சிறந்த வளத்தை துய்த்து -ப்ருஷ ஆயுஸ் நூறு -என்பர்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவுடன் இசைந்து இருந்து நுகர்ந்து –
ஸ்ரீரங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய -என்றதாயிற்று

யுஷ்மத் பாத சரோருஹ அந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா –
உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி

ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
நீயே அன்னை அப்பன் -இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-

சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் —
நீயே எனது எல்லா தர்மமுமாக ஆக வேண்டும் -மறுமை பயன் தருவதற்கு ஹேது-
கர்ம யோகாதி உபாய அனுஷ்டானம் எம்மிடத்து இல்லை யாயினும்
அவற்றின் ஸ்தானத்தில் புருஷகாரமாக நீயே இருந்து இறைவனால் எமது விருப்பத்தை நிறைவேற்றி அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையை -அங்கனம் அருள்வதும் நிர்ஹேதுக கிருபை அடியாக –
எனது யோக்யதையைப் பார்த்து அருளினால் உன் கிருபைக்கு ஏற்றம் இராதே என்பதால்
ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் -என்கிறார் –
சர்வஞ்ச த்வமஸி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் -என்றும் பாடம்
எல்லா உறவும் நீயே ஆகிறாய்
எமக்கு நீயே உபாயம் உபேயம் ஆகுக –

முன் ஸ்லோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளையும்
இது உத்தர கண்டத்தின் பொருளையும் கூறும் என்பர்
நித்ய முக்தரும் இங்கே வந்து கைங்கர்யம் செய்வதாலும்
இது பிரத்யஷமான பரமபதம் ஆதலாலும்
பரமபதத்தையும் முறித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லும்படி போக்யமாக தமக்கு இருத்தலாலும்
இம்மையோடு மறுமையும் இங்கேயே வேண்டிக் கொண்டு தலைக் கட்டி அருளுகிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ள போது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

கத்யத்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று,
தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார்-
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளாக் காட்சி

திருவரங்க நகர் தனிலே நண்பரோடே சேர்ந்து இடையூர் உறு துயரமின்றி நூறு
வருடங்கள் சுகமாக வடிமை இன்பம் வாய்ந்த பெரு வளம் துய்த்து வாழ்ந்த பின்னர்
இரு வருமா முமதுபத மலர்த் தூளாவோம் ஈன்றோயும் எந்தையும் நீ செய்யும் எல்லாத்
தருமும் நீ எம் தமக்குத் தானே யாகிச் சாதனம் அற்று இயல்பான தயை செய்வாயே –61–

————————————————————————

திருவினை நவிலும் பட்டர் தே மொழி தம்மில் காணும்
திருவினை யமைத்து நன்னர்த் திருமலை நல்லான் யாத்த
திருவினை இதனை யோர்ந்தே யின்ற தமிழ் வல்லீர் உள்ளத்
திருவினை நீங்கும் வண்ணம் எண்ணி நீர் இயம்புவீரே —

சீர் பராசர பட்டர் செகத்துக் கீந்த ஸ்ரீ குண ரத்ன கோசம் திறப்பதற்குப்
பார் புகழும் திருமலை நல்லான் உரைத்துப் பண்ணின விப் பொற்றிறவு கோலைப் பாரீர்
சீர் மேவு மரதனங்கள் செழிக்கப் பெற்றுச் சிதறாமல் அணிந்து உய்வீர் செப்புகின்றேன்
கார் மேகக் கண்ணன் அருள் கமலச் செல்வி கண்ணின் அருள் கரை புரளும் காண்மின் நீரே —

————-——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: