ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –49-50-51-52–

திரு அவதாரம் தோறும் ரசிப்பதற்காக உடன் திரு அவதரிப்பது மாத்ரம் அன்றி
இறைவனது ஸ்ரமத்தை தீர்ப்பதற்காகவும் திரு அவதரிப்பது உண்டு என
திருப் பாற் கடலில் பிராட்டி அவதரித்தத்தை அனுசந்திக்கிறார் –

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–ஸ்லோகம் —49 —

ஸ்கலித கடக மால்யைர் -நழுவின -தடங்கலான கை அணி என்ன -மாலைகள் என்ன -இவைகள் யுடைய –
தோர்பி ரப்திம் -கைகளினாலே அப்திம் -கடலை –
பகவதி -நற்குணம் வாய்ந்த இலக்குமியே
ததிமாதம் மத்ந்தச் -தயிர் கடைவது போலே கடைகின்ற முராரே இறைவனுடைய –
ஸ்ராந்தி சாந்த்யை-களைப்பு நீங்குவதற்காக

ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –புன்னகை என்ன -பார்வை என்ன இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்த்ரிகை போலே –
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ-சுழலும் அமுத அலைகளுடைய சுழியில் இருந்து தோன்றினை-

கடல் கடைவதையும் அலஷ்யமாகக் கருதிக் கடகம் மாலை முதலியவற்றைக் கழற்றாமையின் அவை தடங்கல் ஆயின –
தோர்பி -பஹூ வசனம் -ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்த பாரிப்பு தோற்றுகிறது –
தயிர் கடைந்தது போலே இருந்தாலும் பரிவின் மிகுதியால் அதுவும் ஸ்ரமமாகத் தோற்றவே
அதனை நீக்கவே சந்த்ரிகை போன்றவள் -என்கிறார் இலக்குமியை –
அமுதத்தின் சாரமே பிராட்டி -அமுதில் பெண்ணமுது -அன்றோ –
மதுர ரசேந்திரா ஹவஸூ தா ஸூந்தர தோ பரிகம் -கூரத் ஆழ்வான்
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின்
திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன்,
தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக
எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

கடகமும் தொடையலும் கழலக் கைகளால்
கடையிறை தயிர் எனக் களைப்பு நீங்கிடப்
படு நில வென நகை பார்வையில் பகவதி
கடலமு தலைச் சுழி காண வந்தனை –49-

—————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–ஸ்லோகம் —50 —

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

————-

இங்கனம் பொறுமையில் சிறப்பு எய்திடலின் பிராட்டியைச் சேர்ந்தவர்களே நாம்
இறைவனை நாம் வேண்டுவதோ பிராட்டியின் தொடர்பு கொண்டே என்கிறார் –

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–ஸ்லோகம் —51 —

மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தேநாதவநா தேவயம் –தாயான லஷ்மி இலக்குமியே
உனக்கு மிதிலை மக்கள் எப்படியோ -அந்த வழியாலேயே நாங்களும் உன்னைச் சேர்ந்தவர்களே –
மிதிலை மக்கள் தங்கள் அரசன் ஜனகன் மருமகன் என்றும்
ஜானகியின் கணவன் என்றும் தொடர்பு கொண்டே இராமனைக் கண்டு உவப்பது போலே
யாமும் இலக்குமியின் தொடர்பு கொண்டே இறைவனைக் கண்டு உவப்போம் -என்றவாறு
ப்ரபன்ன ராஜராகிய பெரியாழ்வார் மருமகன் என்றும் கோதையின் கொழுநன் என்றும் அரங்கனைப் பார்க்கின்றோம் –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச-உனது அடிமையில் முக்ய ப்ரீதி முக்ய அபிமானங்களாலே
அழகிய அபிப்ராயங்களோடு இங்கும் -லீலா விபூதியிலும் -அங்கும் -பரம பதத்திலும் –

ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் -பச்யேம பிரதியாம யாம ச பரீசாரான் ப்ரஹ்ருஷ்யேமச
மணமகன் உன் கணவன் -என்று உனது தொடர்பு உணர்ச்சி கொண்டே இறைவனைப் பார்க்கக் கடவோம் –
சரண் அடையக் கடவோம்
பணி விடைகளை பெறவும் கடவோம் –
களிக்கவும் கடவோம் –
பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா -என்பது சிந்திக்கற்பாலது
பவதீ பாதலா ஷார சாங்கம்-ஸ்ரீ ஸ்துதி
பவதீ பிரசாதாத் -தேவி மஹாத்ம்யம்

அந்தப் புரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிழை புரிந்தாலும் அரசர்கள் ஒரு வியாஜ்யத்தை யிட்டு பொறுப்பது போலே
நம் பெரும் பிழைகளையும் பொறுத்து அருள்வான் –

பிராட்டிக்கு புரிந்த பணி என்றே-ப்ரீதியும் நினைவும் உண்டாக வேண்டும் –
தாஸ்யம் ஒன்றிலுமே ரசமாய் இருக்கும் அபிமானம் கொள்ள வேண்டும்
பிரதியாம -பிரதிபத்தி பண்ணக் கடவோம் -அத்யவசாயம் ஒன்றே -கிட்டக் கடவோம் என்றபடி
பரிசாரான்யாம -பணிவிடை புரியக் கடவோம்
ப்ரஹ்ருஷ்யேமச-பணிவிடை புரிந்ததும் நீ உவக்க வேண்டும் -அதனைக் கண்டு நாங்கள் இன்புற வேண்டும்
நின் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-நம் ஆழ்வார் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத் தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில்
மட்டும் அல்லாமல் பரம பதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான
உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

தாயாகும் இலக்குமியே சனகனூரில் சனங்கள் என யாமுனையே சார்வோம் ஆவோம்
நீயேற்கும் பணி விடையின் இன்பம் ஒன்றே நினையு மனத் திலகு கருத்தொடு நிலத்தும்
சேயாம் விண் வத்து மணமகன் நினக்குத் திருக் கணவன் என்னவும் உன் தொடர்பில் காண்போம்
மாயோனை வணங்கிடுவோம் இன்னும் ஏவல் புரிந்திடுவோம் மனம் மிகவும் மகிழுவோமே–51

சேயாம் விண் வத்தும்-பரமாகாசத்திலும் -பரமபத்திலும் என்றபடி -விண் அத்து விண் வத்து –

———-

பிராட்டி சம்பந்தத்தை முன்னிட்டு நாம் இறைவனைப் பற்றுவதற்குக் காரணம்
தாய்மையே என்று அதனை உபபாதிக்கிறார் –

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வ ஜநயஸி மாதா தத் அஸி ந:–ஸ்லோகம் —52 —

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே–தாயே நின் அன்பன் குற்றம் நிறைந்த ஜனத்தினிடம் தகப்பன் போலே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ –ஹிதத்தின் தொடர்ச்சியில் இருத்தலால் எப்பொழுதேனும்
கலங்கின திரு உள்ளதனாக ஆகவும் செய்கின்றான் –
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: –என்ன இது -இந்த உலகத்தில் குற்றம் அற்றவன் எவன் என்று தகுந்த –
உபாயைர் விச்மார்ய ஸ்வ ஜனயசி மாதா தத் அஸி ந:– உபாயங்களினாலே அவனை அக்குற்றங்களை மறக்கும்படி செய்து
எம்மை தன மக்கள் ஆக்குகின்றாய்–ஆதலால் எமக்கு தாயாக இருக்கிறாய் –

பிரியம் ஒன்றிலே தாய்க்கு நோக்கம்-பிதாவுக்கு ஹிதம் -பாவம் செய்தால் சீறவும் கூடும்
அன்பன் ஆதலால் எளிதில் சீற்றத்தை மாற்ற முடிகிறது -ப்ரேயான் -என்கிறார்
நீரிலே நெருப்புக் கிளருமா போலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும் அதனைப் பிராட்டி மாற்றி விடுகின்றாள்
நிர்தோஷ கே இஹ ஜகதி -இருள் தரும் மா ஞாலம் அன்றோ -உன்னையும் அறிவிலியாக்கும் இந்நிலத்தின் பொல்லாங்கு தெரியாதோ
குற்றம் குறை அற்ற ஒருவனை இங்கே காண முடியுமோ -மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
உசிதை உபாயை -கண்ணைக் காட்டல் கச்சை நெகிழ்தல் முதலியன
ஸ்வ ஜன யசி–பிராட்டியை புருஷகாரம் எனபது அவன் தன்னைச் சேர்ந்தவன் என்று அபிமாநிக்கும் படி செய்வதால் தானே –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல்,
அவர்கள் மீது கோபம் கொள்வான்.
அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய்.
இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல்
என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்து விடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.
அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே
வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்க மாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அப்பன் போலுன தன்பனாய் குற்றம் ஆர்ந்துள்ள மக்களிதம் தொடர்ந்து நாடி
வெப்புறவே திரு உள்ளம் என்றைக்கேனும் வெகுண்டிடுமேல் அன்றவனை இஃது என் சீற்றம்
தப்பரவே செய்யாதார் சகத்திலார் தான் சாற்றிடுவாய் எனத் தக்க விரகினாலே
அப் பிழைகள் மறக்கச் செய்து அவனோடு எம்மை அணைத்திடலா நீ என்னை யாகின்றாயே –52–

————-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: