ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –45-46-47-48–

கூடல் இன்பத்தில் இறைவனைக் களிப்பிக்கின்றாள் பிராட்டி என்கிறார் —

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–ஸ்லோகம் —45 —

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:-மருமத்தை தொடக்கூடிய வைகளான ரச நாடிகளை தாக்கி நடந்தவைகளான
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி: –காதலனுடைய அனுபவத்தின் விலாசங்களினாலே கசங்கின கொம்பு போன்ற திருமேனி யுள்ளவளாய்-
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–ரசிக்க வல்ல வண்டினாலே அனுபவிக்கப் பட்ட
பூ வரிசை மாலை போலே நீ கணவனான முகுந்தனை எபோழுதும் களிப்பிக்கின்றாய்
சுரும்பு துளையில் சென்றூத அரும்பும் -போலே இறைவனும் இலக்குமியின் இன்பம் தரும் நரம்புகளைத் தாக்கி நலந்துய்க்கின்றனன் —

புஷ்பாவளி -பூ மாலை -முக்தாவளி -முத்து மாலை போலே –
தெய்வ வண்டு துதைக்கும் பூந்தொடையல் பிராட்டி -இதனால் போகத்தில் இறைவனது திறமையும்
பிராட்டியினது தளர்வின்மையும் தோற்றுகின்றன
புஷ்பாவளி -என்கையாலே இவள் இறைவனுக்கேயாய் இருத்தல் தோற்றுகிறது
தான் களிப்பதாக கூறாமல் அவனை களிப்பிப்பதாக -பதியின் போகத்தையே முக்யமாக கொள்ளுதல் –
புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிரகர்ஷியாமி -ஆளவந்தார் -நித்ய கைங்கரயம் செய்து களிப்பிப்பேன் –
ஏற்புடைய மாலையாகி மார்பினை அலங்கரிக்கிறாள் என்பதில் தான் தவறு –
மாலை போலக் களிப்பிப்பதாக கூறுவதில் தவறு இல்லை போலும் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

சுவை தரு நரம்பு மர்மம் தொடுவன தொட்டுத் தாக்கி
நவையற லீலை நாதன் நடத்த நீ துவண்டு மேனி
சுவை யறி சுரும்பு சேர்ந்து துதித்த பூந்தொடையல் போல
உவகையில் முகுந்தனை நீ உய்த்தி எந்நாளும் தேவி –45–

நவை யற -குற்றம் அற்ற
உய்த்தி -செலுத்துகின்றனை

———-

திரு ஆபரணச் சேர்த்தி அழகை அனுபவிக்கிறார் –

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–ஸ்லோகம் —46 —

கநகரசநா -தங்க ஒட்டியாணம் என்ன –
முக்தா தாடங்க -முத்துத் தோடுகள் என்ன
ஹார -முத்து மாலை என்ன
லலாடிகா -நெற்றிச் சுட்டி என்ன
மணிசர -மணி மாலை என்ன
துலா கோடி -கார் சிலம்பு என்ன இவைகளை –
ப்ராயைர் -முக்யமாக யுடைய-பல பலவே திவ்ய ஆபரணங்கள்
ஜநார்தன ஜிவிகே -இறைவனுக்கு பிழைப்பிக்கும் மருந்துக் கொடி யானவளே –
பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை – இயற்கையிலே அழகியதான உனது திருமேனி-அழகிய திவ்ய ஆபரணங்களாலே
வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்பலதா யதா —சக்கரைத் துண்டுகளால் பால் போலவும்
பூக்களாலே கல்பகக் கொடி போலவும் விளங்குகிறது –இயற்கையுடன் செயற்கை அழகும் சேர்ந்து சோபிக்கிறது –

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில் பல ஆபரணங்கள் –
தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி, நவரத்ன மணிகளால் ஆன மாலைகள்,
அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

கனகமே கலை முத்தாரம் காதணி சிலம்பு சுட்டி
இன மணிச் சரம் என்றின்ன எழில் இழை யணிந்தி யற்சீர்
உனதுடல் மலரின் கற்ப வொண் கொடி கண்டின் பாலும்
என வொளிர் தரும் சனார்த்தன் இன்னுயிர்க் கேதுவாவாய்–46-

——-

இனி கௌஸ்துபம் வைஜயந்தீ என்னும் திவ்ய அணிகளும்
அவ்வினத்திலே சேர்க்கத் தக்க ஐம்படை முதலியவைகளும்
பிராட்டிக்கே உரியவை யாயினும் அவைகளை இவனே தாங்குவதற்கு ஹேது கூறுகிறார் –

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–ஸ்லோகம் —47 —

சாமான்ய போக்யமாபி -பொதுவாக அனுபவிக்கத் தக்கவை யாயினும் –
கௌஸ்துப வைஜயந்தீ -கௌஸ்துப ரத்னம் என்ன -வனமாலை என்ன –
பஞ்சாயுதாதி -ஐம்படை என்ன -இவை முதலியவற்றை
ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத் -அன்பனான அரங்கன் தானே சுமந்து கொண்டு -காதல் மகிமையால்-இறைவனுக்கு சுமை தெரிவது இல்லை –
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம -அவற்றின் சுமையினாலான வருத்தத்தை உனக்கு இல்லாமல் செய்ய விரும்பினவன் போலே
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி -ஸ்ரீ ரங்க விமானத்தின் ரத்னக் கொத்துப் போன்றவளே –
ஸ்ரீ ரங்க தாம -ஸ்ரீ ரங்க நாதன் என்னவுமாம் –
அழகு ஒளியுடைமை என்பதால் மணி மஞ்ஜரி -என்கிறார்
காஹதே த்வாம் –உன்னை அனுபவிக்கிறான் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்
சுமை யுடைமையின் அழுந்தினன் போலும் -என் சுமையையும் சேர்த்துச் சுமக்கும்படி
இது என்ன காதலோ என்று நீர்ப் பண்டமாய் பிராட்டி உருக -அதிலே இறைவன் அழுந்துகின்றனன்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது என்று கருதினான் போலும்.
அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட
அன்பில் மனம் உருகி நின்றாள். அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

ஏதி யைந்தகல மேந்து மெழில் மணி வைசயந்தி
ஆதி நீ தாங்கின் துன்பமா மெனப் பொது வானாலும்
காதலன் சுமந்து தானே கனம் கருதாத ரங்கம்
போதரு மணிப் பூங்கொத்தே புகு முனைத் துய்ப்பதற்கே–47–

———-

இங்கனம் திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் பிராட்டிக்கே உரியவையே என்றமையால்
திவ்ய தம்பதிகளினுடைய ஆநுரூப்யம் காட்டப்பட்டதாயிற்று –
இவ் வநுரூப்யம் ஏற்கனவே யுள்ள நிலைகளில் மாத்திரம் அன்று –
புதிதாய் எடுக்கும் திரு அவதாரங்களிலும் காணலாம் –
ஆநு ரூயத்துடன் பிராட்டியும் கூட திரு வவதாரிக்கா விடில் இறைவனது திரு வவதாரம் விரசமாய் இருக்கும் என்கிறார் –

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–ஸ்லோகம் –48- —

மலருகிற தாமரையின் பேச்சை யுடையதும்-அழகிய நீண்ட திருக் கண் படைத்த தாயான தேவியே
விளையாட்டினாலே மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் சமமான செயல்களை யுடைய கணவனது திருவவதாரம் தோறும்
தகுந்தவளாக திரு வவதரிக்காது இருந்திருப்பாய் ஆனால்
நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -நாயகனது விளையாட்டு விரஸமாக ஆகி இருக்குமே
இன்னாருக்கு விரசமாய் இருக்கும் என்னாதது–இருவருக்கும் -அடியார்களுக்கும் என்றபடி
க்ரீடேயம் கலு நான்யதாசஸய ரசதா ஸ்யாத்-என்றார் பெருமாள்-

ப்ரஹ்மசாரிக் குறளாய் திருவவதரித்த போதும் சிறிய திருமேனியுடன் திரு மார்பில் விளங்கும் இலக்குமியை
மான் தோல் உபவீதத்தால் மறைத்துக் கொண்டான்
பூ மேய செம்மாதை நின்மார்பில் செர்வித்துப் பாரிடந்த அம்மா -நம்மாழ்வார் —
ஸ்ரீ வராஹாவதாரத்திலும் பிராட்டி திருமார்பில் இருந்தமை தோற்றுகிறது
பரிபாடலிலும் -செய்யோள் சேர்ந்த நின் மாசி லகலம் உள்ளுனர் உருப்போர் உரையொடு சிறந்தன்று –

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயி நீ -ஸ்ரீ பராசரர் –
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை -வாலி
துல்ய சீல வயோவ்ருத்தாம் –ராகவோர்ஹதி வைதேஹீம் —
அநு ஜனு ரனுரூப ரூபசேஷ்டா ந எதி சமாகம மின்த்ரா கரிஷ்யத் அசரச மதவாப்ரியம் பவிஷ்ணு த்ருவ
மகாரிஷ்யத ரங்கராஜ நர்ம-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

உபேந்த்ரனாய்-தேவ யோநியிலும் இராம கிருஷ்ணனாய் மனிதப் பிறப்பிலும் மத்ச்யாதியாய் திர்யக் யோனியிலும்
மாமரமாய் -ஸ்தாவரப் பிறப்பிலும்-இஷ்டப்படி திருவவதரித்ததால் -லீலையா -மநுஜ திரச்சாம் என்கிறார் –
அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற துல்ய வ்ருத்தே -மானமிலாப் பன்றியாயின் கோரைக் கிழங்கைப் புசிப்பது துல்ய வ்ருத்தி அன்றோ –

பிராட்டி திருவவதரிப்பது -விழையாடும் இயல்பினாலும் -தேவி
தாய்மை உறவினாலும் -மாதா
நிறைந்த கருணையினாலும் -காந்த ஆயதாஷி –கண்ணுக்கு அணிகலம் -கண்ணோட்டம் -கருணை
இந்தக் கண்ணைக் கண்டதும் போலியான தாமரையின் பேச்சு எழுதலின் பேச்சை யுடையதாயிற்று இக்கண் –
உதந்த -சமாசாரம் பேச்சு-உள் இதழை லஷிக்கும்–உள் இதழ் போன்ற அழகாய் நீண்ட திருக் கண்கள் -என்றபடி –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக
அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின் போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவை யற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹா லக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்த போதும் அப்படியே ஆகும்.ராம க்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரிய பிராட்டியைத் தரித்தே உள்ளான்

வேண்டியே விளையாடற்கு விளங்கு மானிடப் பிறப்பைப்
பூண்டிடும் தோறும் ஏற்பப் போந்து நீ தோன்றிடாயேல்
யாண்டு நின்னன்பன் தாயே இன்பனாம் சிறிதலர்ந்து
காண்டகு கமலம் போலும் கவினுறு கண்ணாய் தேவி –48-

————-———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: